
இயற்கை விவசாயம் – அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள்: நபார்டு வங்கி பொதுமேலாளர் வழங்கினார்.
இயற்கை விவசாயம், அதிக மகசூல் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப் பட்டது. விருதுநகர மாவட்டம், மல்லாங்கிணறில் இயங்கி வரும் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் 30 வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, நிறுவனச் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். தலைவர் செல்லம்மாள் முன்னிலை வகித்தார். விழாவில், நிறுவனத்தின 30-வது ஆண்டு ஆண்டு சிறப்பு மலர் வெளியிடப் பட்டது.
விழாவில், இயற்கை விவசாயம், அதிகமான மகசூல், மற்றும் சிறுதானிய உற்பத்தியில் சிறந்த விவசாயிகள் 30 பேருக்கு, நபார்டு வங்கி உதவி பொது மேலாளர்கள் ராஜ சுரேஷ்வரன் , அனுஷா எலிசபெத் ஆகியோர் விருதுகள் வழங்கினார்கள்.
விழாவில், பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சமு நதி மேலாளர் சுரேஷ பாபு, பிரதான் அமைப்பு ஆதிநாராயணன, வலையங்குளம் சந்திரன், அமிர்தவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர். திட்ட மேலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.
நெல் வயலில் இனக்கவர்ச்சி பொறி செயல்விளக்கம்!
மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில்,
இளங்கலை (மேதமை) அறிவியல் பட்டப்படிப்பின் இறுதியாண்டு மாணவி க.கோமளவள்ளி கிராமப்புற விவசாயப்பணி அனுபவ திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் டி.ஆண்டிபட்டி கிராமத்தில் நெல் சாகுபடியில் பாதிப்பை ஏற்படுத்தும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த இனக் கவர்ச்சி பொறி வைப்பது குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.
இந்த பொறி பூச்சி கொல்லிகள் வைப்பதற்கு ஒரு மாற்றாக உள்ளது.
பூச்சிகளை கண்காணிக்க, கட்டுப்படுத்த இது மிகவும் பயனுள்ளது எனக் கூறி நெல் வயலில் ஒரு ஹெக்டேர் அளவில் 12 பொறிகள் வைத்து தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம் என்று கூறி பொறி வைத்துகாட்டி
செயல் விளக்கமளித்தார்.
மேலக்கால் – வைகை ஆற்றில் துப்புரவு பணி; மரக்கன்றுகள் நடல்!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் வைகை ஆற்று பாதையில் மயான முதல் வைகை ஆற்றுப்பகுதி வரை கரையோரம் இருந்த குப்பைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர் வீடுகள் பழனிவேல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூர்ணிமா ஊராட்சி செயலாளர் விக்னேஷ் ஆகியோர் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டனர்.