
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா,வடகரை கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 175 பேர் வேலை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று புதன்கிழமை பட்டாசு ஆலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர்.
இதில் தண்டியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (38), கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செளன்டம்மாள் (54) W/o ரவி (40)ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் தண்டியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (40) Wlo முருகன் கணேசன் (50) S/o ஆண்டி முருகன் S/o செல்லப்பன் (45) ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பட்டாசாலை வெடி விபத்து நடந்த இடத்தில் காரியாபட்டி தீயணைப்பு துறையினர் இறந்த நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் சம்பவ இடத்தில் அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.





