Breaking News
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி தொடங்குகிறது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 31-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது.கந்தசஷ்டி திருவிழாமுருகபெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றுள்...
நேரடி கேஸ் மானியம்; ஆதார் எண் பதிவுக்கான காலக்கெடு நவம்பருடன் முடிகிறது
சென்னை :இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.), பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் (பி.பி.சி.) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் (ஹெச்.பி.சி.) ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் இந்த ஆண்டு, கடந்த ஜூலை மாதத்திற்குள் ஆதார் எண்கள்...
திமுகவில் இணைந்த அதிமுகவினர்
அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் முதல்வர் நலம் பெற வேண்டி பால்குடம்,தீச்சட்டி ,மண்சோறு,மற்றும் விளக்கு பூஜை ஆகிவற்றை செய்துவருகின்றனர் இந்நிலையில்...
வண்ண புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமா?
தமிழகத்தில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, 'இ - சேவை' மையங்களில், கைக்கு அடக்கமான, பிளாஸ்டிக் வண்ண வாக்காளர் அடையாள அட்டை, உடனுக்குடன் கிடைக்கும்; அதில், தேவைப்பட்டால், உங்கள் அழகான முகத்தைப் பதிந்து பெற்றுக்...
தொடரும் தாக்குதல்கள்; காவல்துறையும் அரசும் என்ன செய்கிறது?: ராம.கோபாலன் கேள்வி
சென்னை:இந்து அமைப்பினர்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், அரசும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார்இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:வேலூரில் துவங்கிய...
உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை! : உயர் நீதிமன்றம்
சென்னை:உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதுமுன்கூட்டியே தகவல் இல்லாமல் திடீரென தேதி அறிவித்த காரணத்தால் இந்த உத்தரவினை உயர் நீதிமன்றம் அறிவித்தது.திமுக அமைப்பு செயலாளர் R.S. பாரதி தொடர்ந்த வழக்கில்...
தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர்
மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திருநெல்வேலி அண்ணா தொழிற்சங்க மண்டல தலைவர் இளவரசு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியனுடன் இணைந்து தனது வாக்கு சேகரிப்பை திரவியநகரில் துவக்கினார்...
பாடலாசிரியர் அண்ணாமலை காலமானார்
தமிழ்சினிமாவுக்கு இது ஆகாத காலம் போலிருக்கிறது. நா.முத்துகுமார் மறைந்த துக்கம் கூட இன்னும் ஆறவில்லை. அதற்குள் மறைந்துவிட்டார் கவிஞர் அண்ணாமலை. விகடன் குழுமத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி பின்பு சினிமா பாடல் ஆசிரியராக தன்னை...
தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்.17, 19ம் தேதிகளில்! : அறிவிப்பு வெளியானது
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19-ம் தேதிகளில் இருகட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.வேட்பு...
‘தமிழ் ஐகான்ஸ்’ கேட்லாக் வெளியீட்டுவிழா !
மறைந்த இசைமேதை எம் எஸ் என்கிற எம் எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ஆர்ட் கேலரியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கண்ணப்பன் மற்றும் வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் சீனிவாசராவ். ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு'கேட் லாக்' கை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் பேசும் போது,
"நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். இங்கே எம்.எஸ் அவர்கள் பற்றிய ஓவியக் கண்காட்சியைச் சுற்றிப் பார்த்தேன். மிக அருமையாக இருந்தது. எம்.எஸ். அம்மா எனறாலேஅவரது அழகிய தோற்றமும், மூக்கின் இரு பக்கமும் ஜொலிக்கும் வைரமுக்குத்தியும் ,காதுகளில் மின்னும் வைரத்தோடும் , நெற்றியில் பளிச்சிடும் குங்குமப் பொட்டும் மனதில் வரும். அவரது் தோற்றமேஇந்தியப் பெண்ணின் அடையாளமாக இருந்தது.
அவர் சினிமாவிலும் பெரிய வெற்றி பெற்று இசையுலகிற்காகத் தன்னை அர்ப்பணித்துப் புகழ் பெற்று விளங்கினார். அவருக்குக் கிடைக்காத விருதுகளும் இல்லை . பெருமைகளும் இல்லை எனலாம். .அப்படிப்பட்ட எம், எஸ். அம்மா அவர்களின் பலவித முக பாவங்கள் கொண்ட ஓவியங்கள், பலவித தோற்றத்திலான ஓவியங்கள் என அரிய முயற்சியாக இருந்தது.
அது மட்டுமல்ல எம்.எஸ். பற்றிய அரிய புகைப்படங்களின் கண்காட்சியும் இருந்தது. இம் முயற்சியில் வெங்கடேசன், உதயசங்கர் என இரு இளைஞ ர்கள் ஈடுபட்டு செய்து இருப்பது பாராட்டுக்குரியது. இதைநார்வே, ஸ்வீடன், பிரான்ஸ் போன்ற ஏழு நாடுகளிலும் நடத்த இருக்கிறார்கள்.
நம் நாட்டு தொன்மையை கலைப்பெருமையை நாடு கடந்து கொண்டு சேர்க்கும் இம்முயற்சி பாராட்டுக்குரியது. "என்றார்.
வருமான வரித்துறை ஆணையாளர் டாக்டர் சீனிவாசராவ் பேசும் போது,
'"நான் ஆந்திராக்காரர் . இன்று இங்கே கூடியிருப்பவர்களைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். உண்மையிலே இது ஒரு மிராக்கள் தான் வெவ்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் நாம் இங்கே ஒன்றாக இருப்பதேநம்மை இணைத்து இருப்பதே இசையின் எம்.எஸ்ஸின் தெய்வீக சக்தி என்றே சொல்ல வேண்டும். இங்கே கண்காட்சியை பார்த்தேன். பாவங்களில் நவரசங்கள்தான் இருக்கிறது என்பார்கள் ஆனால் இங்குவரையப்பட்டு கண்காட்சியில் வைக்கப்பட்டு இருக்கிற ஓவியங்களில் நவரசங்களைத் தாண்டிய பாவங்களைப் பார்த்தேன்.
இந்த அவசர உலகத்தில் கலையை ரசிக்கவும் கலைஞர்களை மரியாதை செய்யவும் யாருக்கும் தோன்றுவதில்லை. அதற்கு நேரமில்லை. இந்தக் காலத்தில் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ள வெங்கடேசன்,உதயசங்கர் இருவரையும் பாராட்டுகிறேன். இது உலகின் பிற நாடுகளுக்கும் செல்ல இருப்பது மகிழ்ச்சிக்குரியது " என்றார்.
நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கடேசன் பேசும் போது ,
" தமிழ்ச் சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த ஆண்டு எம் எஸ் அம்மாவின் நூற்றாண்டும் கூட.
இதையொட்டி ,'தமிழ் ஐகான்ஸ்' கேட்லாக் வெளியீட்டுவிழா : படங்கள்: கேலரி! என்கிற பெயரில் தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற சிறந்த ஆளுமைகளை மக்கள் முன் கொண்டு சேர்க்கும் பணியை சாய்மீராமீடியாஸ் கொண்டு செல்ல விருக்கிறது. முதலில் எம் எஸ் அம்மாவிடமிருந்து தொடங்குகிறோம். இந்த ஆரட் கேலரி யை நிறைய பேர் பார்த்துப் பாராட்டினார்கள். இம்முயற்சியில் என்னுடன் இணைந்துகொண்டிருக்கிறார் உதயசங்கர்.எங்கள் பணி தொடரும்'' என்றார்.
இந்நிகழ்ச்சியில் 'மியூசி மியூசிக்கல்' ஹரிச்சரன்தாஸ் உள்ளிட்ட இசை ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்துமுன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை: பேருந்து மீது கல்வீச்சு
திருப்பூர் : கோவையில் இந்து முன்னனி பிரமுகர் கொலை செய்யப்பட்ட நிலையில் , திருப்பூரில் அரசு பேருந்துகள் உட்பட 5 பேருந்துகள் மீது கல்வீசித்தாக்குதல் . திருப்பூர் போலிசார் விசாரனை. கோவையில் இந்து...
கோவை இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் படுகொலை
கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். இதனால் பதற்றம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கோவை இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளர் சசிகுமார், தனது பணிகளை முடிந்து நள்ளிரவில்...