spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryபாரத பாரம்பரியமும் ... பெண்கள் பாதுகாப்பும்!

பாரத பாரம்பரியமும் … பெண்கள் பாதுகாப்பும்!

- Advertisement -

கிருஸ்தவத்தில் மறைக்கப்பட்ட “சாத்தான் குறி”(Witch Mark) என்று அழைக்கப்படும் பெண் வேட்டை

   ????கிறிஸ்தவ கோட்பாடுகளின் படி உலகத்தில் உள்ள அனைத்துத் துன்பங்களுக்கும் சாத்தானே காரணம். 

 ????பெண்களின் உடம்பில் மச்சம் , மரு, தழும்புகள் , தடிப்புகள் ஆகியவை இருந்தால் அப்பெண் சாத்தானிடம் இரவில் உறவு கொண்டு, அத்தழும்புகள் வாயிலாக அவனுக்கு இரத்தம் வழங்கி அவனை இவ்வுலகில் வாழ வைப்பதாகவும் , சாத்தானை ஒழிக்க வேண்டுமென்றால் இத்தகைய பெண்கள் கொல்லப்பட்ட வேண்டும் என்றும் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் அன்றைய போப்பாண்டவர் இன்னோசென்ட் உத்தரவின் பேரில் தீவிரப் பிரச்சாரம் செய்யப்பட்டது. 

   ???? சாத்தானுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண்களாகிய சூனியக்காரிகளை ஒழிக்க வேண்டுமானால் அனைத்து ஆண்களும் ஒன்று சேரவேண்டும் என்று போப் ஆண்டவர் ஆணையிட்டார். 

   ????நாட்டில் உள்ள நோய், பஞ்சம், பசி பட்டினி ஆகியவற்றிற்கு சூனியக்காரிகளாகிய பெண்களே  காரணம்  என்று கருதப்பட்டது. 

   ????1484 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 300 ஆண்டுகள்  " பெண்வேட்டை " அரங்கேற்றப்பட்டது. 

    ????மனைவியை ஏற்றுக்கொள்ளாத கணவன் , அவளைச் சூனியக்காரி என்று குற்றம் சுமத்தி பகிரங்கமாகக் கொன்றான்.  தனக்கு இணங்காதப் பெண்களைச் சூனியக்காரிகள் எனக் கூறி கொலைக் களத்திற்கு கொண்டு போன கொடியோர் பலர். 

 ???? யாரேனும் ஒரு அழகான பெண் மீது இவள் சாத்தானின் நட்புடையவள் எனக்கூறி அவள் மேனியில் எங்கேனும் மச்சம் அல்லது தழும்புகள் உள்ளனவா என நடுவீதியில் நிறுத்திவைத்து நிர்வாணப்படுத்தி ஆராய்ச்சி செய்து அவமானப்படுத்திய கொடுமைகள் ஏராளமாக நடை பெற்றன. இத்தகைய தழும்புத் தேடலுக்குப்பின் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட பெண்கள் அநேகம். 

  ????சூனியக்காரிகள் என சந்தேகப்பட்டுப் பெண்களையெல்லாம் கூட்டம் கூட்டமாகப் பிடித்து வந்து நடுத்தெருவில் உயிரோடு எரித்து அழித்தனர்.  150 அடி நீளத்திற்கு நீண்ட பள்ளங்களை வெட்டி அதில் உள்ளே தள்ளி எரியூட்டினர் . அப்படிப்பட்ட எரிகுழிகளில் ஒன்று அன்மையில் ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான  " மாட்ரிட் " ல் கண்டுபிடிக்கப்பட்டது. 

   ????இவ்வாறு சுமார் 300 ஆண்டுக்காலம் நடத்தப்பட்ட பெண் வேட்டையில் சுமார் 90 லட்சம் பெண்கள் கொல்லப்பட்டனர். இது ஒரு வரலாறு காணாத கொடுமை.

????பெண்களைப் போற்றிய இந்து மதம்.    

இந்த இடத்தில் இந்து மதத்தில் பெண்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டார்கள் என்பதையும் சேர்த்து சிந்தித்து பார்ப்பது நல்லது.

????பெண்களை தெய்வமாக தொழுவது இந்துமதம்

????தங்களது பிள்ளைகள் ஒருவர்மேல் ஒருவர் பகைக் கொண்டு போர்க்களத்தில் கொடூர யுத்தம் புரிந்து மாண்டு ஒழிந்த போதிலும் காந்தாரியும் , குந்திதேவியும் அருகருகே அமர்ந்திருந்து ஆற்றாது அழுதனர். இருதரப்பு வீரர்களும் இருவரையுமே இராஜமாதா என்றுதான் வணங்கினர். இருவர் மீதும் துரும்பு கூட விழவில்லை.

   ????ராட்சசியாகிய தாடகையை , பிணம் தின்னும் பேய் போன்றவளை , பெண் என்ற ஒரே காரணத்தால் அவளை வதைக்க முடியாது என்று வாதிட்டான் ஸ்ரீராமன்.

 ????சுக்ரீவன் மீது அடங்காத சினத்தோடு சென்ற லட்சுமணன் குறுக்கே தாரை வந்து நின்றதால் தலைகுனிந்தபடி அமைதியானான். 

   ????தன்னை அழிக்க வந்துள்ள சிகண்டி அலியாகிய பாதிபெண் என்றதும் , ஆயுதம் ஏந்தாது, அமைதி காத்து , அம்புகளை மார்பில் ஏற்று மண்ணில் சாய்ந்தார் பிதாமகர் பீஷ்மர். 

    ???? போர்க்களம் புகுந்த பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியும் , மதுரையைத் தகனம் செய்த கண்ணகியும் பெண்களைப் பாதுகாக்க தவறவில்லை. உரிய பாதுகாப்பளித்தனர். 

????சத்ரபதி சிவாஜியின் படை வெற்றி கொண்டு அடிமையாக பிடித்து வந்த பேரழகியான சுல்தானின் மனைவியை “தாயே” என்று விளித்து கைகூப்பி வணங்கி அவரை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்தார் வீர சிவாஜி.

    ????இப்படிப்பட்ட பாரம்பரித்திற்குச் சொந்தக்காரர்களான இந்தியர்கள் 90 லட்சம் பெண்களைக் கொன்று குவித்த பெண்வேட்டையைப் பற்றிய செய்திகளை மனதை கல்லாக்கிக் கொண்டுதான் ஜீரணிக்க முடியும் !

  ????பெண்கள் சாத்தானின் வடிவமல்ல. பெண்களை கர்த்தரின் பேரால் கொன்றவர்கள்தான் சாத்தான்கள்.
  • வாட்ஸ்அப் பகிரல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe