தமிழகத்தில் பயன் இல்லாத அதிமுக அரசாங்க ஆட்சி : தேர்தல் நேரத்தில் மக்கள் கவனித்து செயல்படகருணாநிதி அறிவுரை

Reporters Diary

தமிழகத்தில் மக்களுக்கு பயன் இல்லாத அதிமுக அரசாங்க ஆட்சி நடைபெறுவதாக திமுக தலைவர் கருணாநிதிகூறியுள்ளார்.

சட்ட மன்றத்தில் போலீஸ் மானியத்துறை கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா மற்ற மானியத்துறை மீதான விவாதத்தில் பங்கேற்கவில்லை.
பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவற்றிற்கு பணம் எங்கிருந்து வரும் என தெரிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் பல இடங்களில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் நல்லது நடக்கும் என மக்கள் தேர்தல் நேரத்தில் கவனித்து செயல்பட வேண்டும் என அறிவுரை கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.