
தினகரனின் அமமுக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் இணையவுள்ளார் என்ற செய்தி உலாவரும் நேரத்தில் அவர் திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவோடு ஏர்போர்ட்டிலிருந்து வெளியில் வரும் புகைப்படம் வெளியாகி பரப்பரப்பை உருவாக்கி யுள்ளது.
“ஏர்போர்ட்டில் அ.தி.மு.க. எம்.பி. குமாரை சந்தித்தார்’ என்ற பரபர தகவல் பரவி சில வாரங்கள்கூட ஆகவில்லை… அதற்குள் “ஹோட்டலில் தி.மு.க. எம்.எல்.ஏ. அன்பில் மகேஷை சந்தித்துப் பேசினார்.
மாவட்ட செயலாளர் பதவி உத்தரவாதத்துடன் தி.மு.க.வுக்குப் போகிறார்’ என்ற தகவல் பரவிவருகிறது. தற்போது அ.ம.மு.க.வின் செந்தில்பாலாஜி..
இதனால் அமமுக., விலிருந்து திமுக முகாமுக்கு செல்லப் போகிறவர்கள் தாவப் போகிறவர்கள் யார் யார் என்று பட்டியல் தயாராகி வருகிறது…



