December 6, 2025, 3:32 PM
29.4 C
Chennai

சினிமா ஷூட்டிங் எடுக்கவா… கோயில்? என்ன அக்கிரமம்?! மனம் வெதும்பும் மயிலாப்பூர் அன்பர்கள்!

mylapore temple shooting - 2025

சென்னை மயிலாப்பூரில் உள்ள பழைமை வாய்ந்த கேசவப் பெருமாள் கோயிலில் சினிமா ஷூட்டிங் எடுக்கிறார்கள் என்பது கேள்விப் பட்டு, மிகவும் மனம் வெதும்பி புகார் தெரிவித்துள்ளனர் அன்பர்கள். இந்தக் கோயில் தனியார்களால் நிர்வகிக்கப் பட்டு வந்தாலும், அறநிலையத்துறைக்கு கணக்கு காட்டும் கோயிலாகவே இருந்துவருகிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து திருக்கோயில் பாதுகாப்புப் பேரவையின் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்தவை…!

500 வருடங்கள் பழமையான மயிலாப்பூர் ஸ்ரீ கேசவப் பெருமாள் திருக்கோயிலில் சினிமா படமெடுக்கின்றனர் எனச் சில பக்தர்கள் இன்றுக் காலை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். கோயிலுக்குச் சென்று பார்த்ததில் கோயில் மேலக் கோபுரம் அருகில் மதிலை உடைத்து உருவாக்கிய வாயில் வழியாகச் சென்று ஒரு மிக நீண்ட பஸ் கோயில் உள்ளே நின்று கொண்டு இருந்தது.

அந்தப் பஸ்ஸில் இருந்து மின்சாரம் கொடுக்கப்பட்டு கோயில் உள்ளேயும் வெளியேயும் ஷூட்டிங் நடக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்தக் கோயில் தென்கலைச் சம்பரதாயக் கோயில். உத்தமர்கள் துறை கண்காணிக்க மட்டுமே செய்யலாம் என்ற உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு உள்ளது. அந்த அருமையானத் தீர்ப்பைத் மிகத் தவறாகப் பயன்படுத்தும் சில அறங்காவலர்கள்.

விரல் விட்டு எண்ணக்கூடிய சேவார்த்திகள் மட்டுமே படபிடிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை இணை ஆணையர் திரு. சுதரசன் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். அவர் விரைந்து சென்னை இணை ஆணையர் மூலம் நடவடிக்கை எடுத்தார். படபிடிப்பிற்கு வந்த கூட்டம் பஸ்ஸை எடுத்துக்கொண்டு கோயிலை விட்டு வெளியேறியது.

கோவிலில் பாடப்பிடிப்பு என்பது “தமிழ்நாடு கோயில் நுழைவுச் சட்டம் 1947″ன் கீழ் இயற்றப்பட்ட விதிகள் 8,9ற்கு விரோதமானவை என்பதைப் பக்தர்கள் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொண்டு, திருக்கோயில்களில் படப்பிடிப்பு காண நேரிட்டால் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…. என்கிறார்..!

இந்தச் சம்பவம் மயிலாப்பூர் அன்பர்களை பெரிதும் எரிச்சலடையச் செய்துள்ளது.

கோயிலுக்குள் அறநிலையத்துறை ஈ.ஓ.,க்களும் அதிகாரிகளும் தாங்கள் கார்களில் நேராக வந்து கோயிலுக்குள் இருக்கும் அலுவலகத்துக்கு வாசலில் இறங்கும் வகையில் கோயில் மதில் சுவரை இடித்து, அல்லது வாசல் படிகளில் மாற்றங்கள் செய்து வைத்திருக்கிறார்கள். அதற்கே பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், இப்படி கோயிலுக்குள் சினிமா ஷூட்டிங் பஸ் வந்து, பிராகார வலம் வரும் பாதையில் ஷூட்டிங் பஸ்ஸை நிறுத்தி, பொருள்களை இறக்கி வைக்க அனுமதித்து என்று… கோயில் நிர்வாகம் ஈடுபட்டதைக் கண்டு தங்கள் மனக்குமுறலை பக்தர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories