Home Blog Page 120

IPL 2025: குஜராத் அதிர்ஷ்ட வெற்றி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – மும்பை vs குஜராத் –  வாங்கடே, மும்பை – 06.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணியை (155/8, வில் ஜேக்ஸ் 53, சூர்யகுமார் யாதவ் 35, கார்பின் போஷ் 27, சாய் கிஷோர் 2/34, சிராஜ், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா, ரஷீத் கான், ஜெரால்ட் கோயட்சி தலா ஒரு விக்கட்) குஜ்ராத் டைடன்ஸ் அணி (19 ஓவர்களில் 147/7, ஷுப்மன் கில் 43, ஜாஸ் பட்லர் 30, ரூதர்ஃபோர்ட் 28, பும்ரா 2/19, போல்ட் 2/22, அஷ்வினி குமார் 2/28, தீபக் சாஹார் 1.32) டக்வொர்த் லூயிஸ் முறையில் 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. பொதுவாக மட்டையாடுவதில் சிறந்து விளங்கும் மும்பை அணி இன்று தொடக்கம் முதலே சொதப்பியது. தொடக்க வீரர்கள் ரியன் ரிக்கிள்டன் (2 ரன்), ரோஹித் ஷர்மா (7 ரன்) இருவரும் முதல் நாலு ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.

அடுத்த ஜோடியான வில் ஜேக்ஸ் (35 பந்துகளில் 53 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் சூர்யகுமார் யாதவ் (24 பந்துகளில் 35 ரன், 5 ஃபோர்) இருவரும் 12ஆவது ஓவர் வரை விளையாடி அணிக்கு வேகமாக ரன் சேர்த்தனர். ஆனால் அதற்குப் பின் வந்த திலக் வர்மா (7 ரன்), ஹார்திக் பாண்ட்யா (1 ரன்), நமன் திர் (7 ரன்), ஆகியோர் இன்று ஏமாற்றினர்.

கோர்பின் போஷ் (22 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இறுதியில் சற்று ஆறுதல் தந்தார். இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

          156 ரன் எடுத்தால் வெற்றி, என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்ஷன் (5 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் (46 பந்துகளில் 43 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), ஜாஸ் பட்லர் (27 பந்துகளில் 30 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ரூதர்ஃபோர்ட் (15 பந்துகளில் 28 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து நிதானமாக ரன் சேர்த்தார்.

மும்பையின் பந்துவீச்சாளர்கள் குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். 18ஆவது ஓவர் முடிந்தபோது குஜராத் அணி 6 விக்கட் இழப்பிற்கு 136 ரன் எடுத்திருந்தது. அச்சமயத்தில் மழை குறுக்கிட்டது.

இரவு 1229க்கு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி குஜராத் அணிக்கு ஆட்டம் 19 ஓவராகக் குறைக்கப்பட்டு, இலக்கு 147 என மாற்றியமைக்கப்பட்டது. அதாவது கடைசி ஓவரில் அந்த அணி 15 ரன் எடுக்க வேண்டும். தீபக் சாஹர் கடைசி ஓவரை வீசினார்.

ராகுல் திவாத்தியா மற்றும் கோயட்சி இருவரும் குஜராத் அணிக்காக விளையாடினர். முதல் பந்தில் 4, இரண்டாவது பந்தில் சிங்கிள், மூன்றாவது பந்தில் சிக்சர், நாலாவது பந்தில் 1 ரன்; அது நோபாலாகப் போனது. மீண்டும் வீசப்பட்ட நாலாவது பந்தில் 1 ரன். ஐந்தாவது பந்தில் கோயட்சி ஆட்டமிழந்தார்.

ஆறாவது பந்தில் ஒரு ரன் அடித்தால் வெற்றி. மிட்-ஆஃப் திசையில் அடிக்கப்பட்ட பந்தை எடுத்த பாண்ட்யா பந்துவீச்சாளர் ஸ்டம்பில் வீசினார்; ஆனால் அது ஸ்டம்பை அடிக்க வில்லை. அதனால் குஜராத் அணி வெற்றி பெற்றது.

ஆட்டநாயகனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டார்.  

கிராமம் விட்டு கிராமம்; சாமியாடி அருள்வாக்கு கூறும் திருவிழா!

samiyadi in madurai - 2026

அலங்காநல்லூர் அருகே வினோதமாக ஒரு கிராமத்தினர் மற்றொரு கிராமத்திற்கு சென்று சாமி ஆடி அவர்களுக்கு அருள் வாக்கு கூறும் திருவிழா: ஆண்டுதோறும் திருவிழா அன்று அதிசயமாக பசுமாடு கன்று ஈன்று பசுவின் (முதல் பால்) சீம்பால் சாமி ஆடிகளுக்கு பிரசாதமாக வழங்கும் நிகழ்வு:

மதுரை மாவட்டம் , சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான வைகை ஆற்றல் கள்ளழகர் இறங்கும் நிகழ்வாகும். இந்த திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வலசை கிராமத்தில் பெருசு பட்டி பங்காளிகள் முத்து கருப்புசாமி வணங்கும் கிராமத்தினர் திரிப்பந்தம் எடுத்து சாமி ஆடி சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் உள்ள அழகாபுரி என்னும் கிராமத்திற்கு சென்று அழகாயி சாமிக்கு பாத்தியப்பட்ட கவுண்டர் 48 பங்காளிகள் குடும்பத்தினரும் அழகர்சாமி. கன்னியப்பன்.ஜெகநாதன் பாரதிதாசன், இளையராஜா / புகழேந்தி. பிரேம்குமார். ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். இணைந்து பழமை மாறாமல் இங்கு வந்து சாமி அடி அருள் வாக்கு கூறுவது வழக்கம்.
மேள தாளங்கள் முழங்க கோவில் முன்பு வலசை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு சாமியாடி அருள் வாக்கு கூறும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், முக்கிய நிகழ்வாக பல ஆண்டுகளுக்கு முன்பு அழகாபுரி கிராமத்தில் ஒரே வீடு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த வலசை கிராமத்தை சேர்ந்தவர் ஒருவர் உங்கள் குழந்தைகள் இல்லையா என கேட்டு அவர்களுக்கு அருள்வாக்கு கூறி அவர்களுக்கு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

அந்த நிகழ்வை சுட்டிக் காட்டும் வகையில் இந்த சித்திரை மாதம் வலசை கிராமப் பகுதி மக்கள் இங்கு அழகாபுரி 48 பங்காளி குடும்பத்தினரும் இணைந்து இந்த வினோதமான திருவிழாவில் சாமியாடி குழந்தை இல்லாதவர்களுக்கு அருள் வாக்கு . குழந்தை வரம் மற்றும் பல்வேறு வரங்களை பொதுமக்களுக்கு சாமி அடிகள் அருள்வாக்காக வழங்குவார்கள்.

இதில் , அதிசிய நிகழ்வாக சாமியாடிகள் ஆண்டுதோறும் வந்து அருள்வாக்கும் கூறும் திருவிழா அன்று இந்த அழகாபுரியை சேர்ந்த 48 பங்காளிகளின் ஒருவர் குடும்பத்தில் உள்ள பசு மாடு கன்று பிறந்து , அதன் (முதல் பால்). சீம்பால் கொண்டு வந்து இந்த சாமியாடிகளுக்கு வழங்குவது தொன்று தொட்டு நடைபெறுவது வழக்கமாக உள்ளது .

அதுபோன்று, இந்த வருடமும் பசு மாடு கன்று ஈன்று அதனுடைய பசுவின் (முதல் பால்)சீம்பாலை சாமி ஆடிகளுக்கு வழங்கினார்கள். இந்த வினோத திருவிழா ஆண்டு தோறும் இந்த பகுதியில் நடைபெறுகிறது. இதில், ஏராளமான ஊர் கலந்து கொண்டு அருள்வாக்கு பெற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் காண கட்டணக் கொள்ளை: இந்து முன்னணி கண்டனம்!

kadeswara subramaniam hindu munnani - 2026
hindumunnani

“எல்லாருக்கும் எல்லாம்” என்பது திராவிட மாடலின் வெற்று கோஷமாக இருக்கிறது. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் காண கட்டண கொள்ளையா? இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று, இந்துமுன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: சித்திரை திருவிழாவின் விசேஷ அம்சம் மீனாட்சி திருக்கல்யாணம். இதனை தரிசனம் செய்ய தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டணம் அறிவித்துள்ளது. கோவில் விசேஷ நாட்களில் விஐபி தரிசனம், கட்டணங்கள் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் சமீபத்தில் அமைச்சர் அறிவித்தார்.

ஆனால் சினிமா ரீலீஸ் அன்று கள்ளத்தனமாக டிக்கெட் விலையை ஏற்றி சுரண்டுவது போல மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மக்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை பயன்படுத்தி, இப்போது கட்டணத்தை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த முரண்பாடு சந்தர்ப்பவாதமாகும்.

இத்தகைய செயல் இறைவன் முன்னால் ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி, பாமர மக்களை இறைபக்தியில் இருந்து விலக்கி வைக்கும் சதியாகவே கருதுகிறோம். ஏழை எளிய சாமானிய மக்கள் மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை அருகில் இருந்து காண முடியாதா? பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பக்தியை வியாபாரம் செய்வதா? இத்தகைய பொருளாதார தீண்டாமையை இந்து கோவில்களில் திணிக்கப்படுவது சாபக்கேடு ஆகும்.

பக்தர்கள் எத்தனை கோடி காணிக்கைகளை அள்ளி கொடுத்தாலும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு திருப்தி ஏற்படவில்லை. கோவிலை காட்சி பொருளாக்கி பக்தர்களிடம் சுரண்டி கஜானாவை நிரப்பவே திட்டம் தீட்டப்படுகிறது. இந்த அவலத்தை எதிர்த்து இந்து முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மீனாட்சி திருக்கல்யாணம் வைபவத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ள தரிசன கட்டணத்தை தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக அதனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பக்தர்களும் பொருளாதார வேறுபாடின்றி மீனாட்சி அன்னையின் திருக்கல்யாணம் கண்டு ஆனந்தப்பட தக்க ஏற்பாடுகள் செய்யவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்…

பஹல்காம் சம்பவம்! பாடம் கற்குமா இந்தியா?

kashmir bahalkam terrorist attack - 2026

— ஆர். வி. ஆர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு சுற்றுலாத் தலம், பஹல்காம்.

மூன்று வாரம் முன் நமது நாட்டின் ஹிந்து சுற்றுலாப் பயணிகள் பலர் பஹல்காமில் பரவி இருந்தனர். அது வெட்ட வெளி, பகல் நேரம். அப்போது நான்கு முஸ்லிம் பயங்கரவாதிகள் அந்த மக்களை அணுகி, அவர்களிடம் பேசி, அவர்கள் ஹிந்துக்கள் என்பதை ஊர்ஜிதம் செய்து அவர்களில் 24 ஆண்களை சுட்டுக் கொன்றனர். பலியானவர்கள் இந்தியாவின் 14 மாநிலங்களைச் சார்ந்தவர்கள். ஒரு நேபாளி ஹிந்து சுற்றுலாப் பயணியும் அவ்விதம் மாண்டார். அவர்களில் பலர் தம் மனைவி குழந்தைகள் முன்னிலையில் ரத்தம் சொட்ட உயிரிழந்தனர்.

அருகில் உள்ள அடர்ந்த வனப் பகுதிக்குள் தப்பி ஓடிய அந்தப் பயங்கரவாதிகளை இந்தியா வெறியுடன் தேடுகிறது.

இந்த பயங்கரவாதத்திற்குப் பின்னால் பாகிஸ்தான் இருக்கும் என்பது பத்தாம் கிளாஸ் பிள்ளைக்கும் தெரியும்.

நமது நாட்டில் பாதகம் செய்து தப்பித்தவர்களை உயிருடனோ உயிர் இல்லாமலோ பிடிக்க வேண்டும். அவர்களை அனுப்பி வைத்தவர்களைக் கனமாகக் கவனிக்க வேண்டும். தேசப் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய வேண்டும். இதில் நமது ராணுவ வீரர்கள் மற்றும் இரு நாட்டு அப்பாவி மக்களின் அனாவசிய உயிரிழப்பைத் தவிர்க்க வேண்டும். இதற்காகப் பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் சரியான முடிவுகள் எடுப்பது இந்தியப் பிரதமருக்கு எளிதல்ல. அவரவர் நலன்களைப் பேணும் உலக நாடுகளையும் கூடியவரை நமது நடவடிக்கைகளை ஏற்கச் செய்யவேண்டும். இதுவே பெரிய காரியம்.

நம்முள் முன்பு முனகிய சில கேள்விகள் இப்போது உரத்து எழுகின்றன.

பற்பல நூற்றாண்டுகளாக ஹிந்துக்களின் அதிமுக்கியப் பிரதேசமாக இருக்கும் பாரதத்தின் ஹிந்துக்களுடன், இந்திய முஸ்லிம்கள் உள்ளார்ந்த நன்றியுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறார்களா? எப்படி என்றால் இந்திய பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளது போல். வெளி தேசத்திலிருந்து பாரதத்திற்கு வந்து தலைமுறைகளாக இங்கு வாழும் பார்சிக்களைப் போல். எதற்காக அந்த நன்றி? வேறு தேசங்களில் அப்படி நடக்கிறதா?

இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்று கல்லூரிகளில் படித்து நல்ல வேலையுடன் குடும்பங்களாக அந்த நாட்டில் வாழும் ஹிந்துக்கள் இருபத்தி ஐந்து லட்சத்துக்கு மேல். அமெரிக்காவில் அவர்களுக்குக் கிடைத்த வாய்ப்பிற்காக மனதிற்குள் நன்றியுடன் அந்த நாட்டு மக்களுடன் இணக்கமாக இருக்கிறார்கள் ஹிந்துக்கள். அதனால் அமெரிக்கர்களால் பொதுவாக விரும்பப் படுகிறார்கள்.

ஹிந்துக்களின் எண்ணிக்கை மொரிஷியஸ் நாட்டில் 48 சதவிகிதம், பிஜியில் 28 சதவிகிதம், கயானாவில் 23 சதவிகிதம், சுரினாமில் 19 சதவிகிதம். மலேஷியாவில் ஐந்தரை, நியூஜிலாந்தில் இரண்டரை. இன்னும் சில தேசங்களில் ஹிந்துக்கள் சுமாரான, கணிசமான அளவில் சிறுபான்மையினர். சட்டம் சமத்துவம் பேசினாலும், அந்த நாடுகளில் பெரும்பான்மையினர் மனதளவில் தங்களை ஏற்றால்தான் அங்கு தாங்கள் மகிழ்ச்சியாக வாழமுடியும் என்ற சாதாரண உண்மையை உணர்ந்து, அதற்கு ஏற்ப அந்தப் பெரும்பான்மை மக்களிடம் சினேகமாக இணக்கமாக இருந்து வாழ்கிறார்கள் ஹிந்துக்கள்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 80 சதவிகிதப் பெரும்பான்மையாக இருக்கும் ஹிந்துக்களிடம், முஸ்லிம்கள் உள்ளார்ந்த நன்றியுடன் – அதாவது ஒரு மனிதப் பண்பு என்ற அளவிலான நன்றியுடன் – உளமார்ந்த நட்புணர்வுடனும் இணக்கமாகவும் இருக்கிறார்களா? இதற்கு ஆம் என்ற பதில் உடனடியாகக் கிடைக்காது. விதிவிலக்குகள் வேறு விஷயம். இன்னொரு புறம், இந்தியாவில் பெரும்பான்மை மதத்தினாரான ஹிந்துக்களில் பெரும்பாலோர் தமது நாட்டில் முஸ்லிம்களிடம் ஒருவிதத் தயக்கத்துடன் சற்று விலகி இருக்க நினைக்கிறார்கள். அதற்கான காரணம் சாதாரண முஸ்லிம் மக்களிடம் இல்லை. அது அந்த மக்களைக் கட்டுப் படுத்தும் முஸ்லிம் மதத் தலைவர்களிடமும் மதப் பெரியவர்களிடமும் இருக்கிறது.

சாதாரண முஸ்லிம் மக்கள் நல்லவர்கள்தான். ஆனால் முஸ்லிம் மதத் தலைவர்களின், மதப் பெரியவர்களின், போக்கு இப்படி இருக்கிறது. அதாவது, சமூகத்தில் பிற மதத்தவரும் தமக்குச் சரி சமம் என்று முஸ்லிம் மக்கள் பிற மதத்தவரை உளமாற மதித்து ஏற்பதை அந்தத் தலைவர்களும் பெரியவர்களும் விரும்புவதில்லை. காலத்துக்கு ஒவ்வாத ஏதோ காரணம் வைத்திருக்கிறார்கள்.

முஸ்லிம் மதத் தலைவர்களுக்கும் மதப் பெரியவர்களுக்கும் சாதாரண முஸ்லிம்களிடத்தில் பெரும் செல்வாக்கும் அவர்கள் மீது ஆதிக்கமும் உண்டு. அதனால் மத அடிப்படையில் ஒரு உரசல் என்று வந்தால், சாதாரண முஸ்லிம்கள் தங்கள் மதத் தலைவர்கள் மற்றும் மதப் பெரியவர்களின் உத்தரவுகளைத் தான் ஏற்று செயல்படுவார்கள்.

ஹிந்துக்களை அவ்வாறு ஹிந்து மதத் தலைவர்களும் ஹிந்து மதப் பெரியவர்களும் கட்டுப் படுத்துவதில்லை – அந்த வழக்கம் ஹிந்து மதத்தில் இல்லவும் இல்லை. அதனால் ஹிந்துக்களின் இயற்கையான சாந்தமும் சகிப்புத் தன்மையும், பிற மதத்தவருடன் இணக்கமாக இருக்கும் குணமும் என்றும் மாறாது. ஆனால் தம்மை முஸ்லிம்கள் பெரிதும் மதிப்பதில்லை, அவர்களின் மதத் தலைவர்களின் சொல் கேட்டு தம்மை அவர்கள் ஆள நினைக்கிறார்கள், என்ற உணர்வில் ஹிந்துக்கள் முஸ்லிம் மக்களிடம் பொதுவாகத் தயக்கம் காட்டித் தள்ளி நிற்கிறார்கள். வேறு வகையில் எதிர்ப்புக் காட்டத் தெரியாதவர்கள் ஹிந்துக்கள்.

தங்களின் மதத் தலைவர்கள் மற்றும் மதப் பெரியவர்களின் ஆதிக்கம் மூலமாக ஒன்றுபட்டிருக்கும் முஸ்லிம்கள் போல், ஹிந்துக்கள் பெரிதாக மத அடிப்படையில் ஒன்றுபட்டு நிற்பதில்லை. அதனால், சொந்த நாடான இந்தியாவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், இங்கு சிறுபான்மையினாரான முஸ்லிம்களிடம் உள்ள கூட்டு பலம் ஹிந்துக்களிடம் இல்லை.

இப்போது மீண்டும் பஹல்காமுக்கு வருவோம்.

பஹல்காம் நிகழ்வைத் தலைகீழாகக் கற்பனை செய்து பாருங்கள். ஒருவேளை பஹல்காமில் நான்கு ஹிந்து பயங்கரவாதிகள் இருபத்தி ஐந்து அப்பாவி முஸ்லிம்களை அடையாளம் கண்டு சுட்டுக் கொன்றிருந்தால் இந்திய ஹிந்துக்களே அதிர்ச்சி அடைவார்கள், அதை ஏற்க மாட்டார்கள். அதோடு, இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் மதத் தலைவர்களும் முஸ்லிம் அமைப்புகளும் அப்பாவி முஸ்லிம்கள் படுகொலையானதைக் கண்டனம் செய்து ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுப்பார்கள். பாகிஸ்தானும் அந்தப் பாதகத்தைக் கண்டித்து நீதி கேட்கும். அப்படி எழும் கண்டனங்கள் சரிதான், நியாயம்தான்.

பஹல்காமில் முஸ்லிம்கள் கையால் அப்பாவி ஹிந்துக்களுக்கு உண்மையில் பாதகம் நேர்ந்தபோது, இந்திய முஸ்லிம்களிடமிருந்து பரவலான உரத்த கண்டனம் எழவில்லை. வந்தது சொற்பம். நடந்த பயங்கரவாதத் தாக்குதலைப் பாகிஸ்தான் கண்டித்ததா என்பதைத் தேடிப் பார்க்க வேண்டும். இதற்கெல்லாம் நேரடிக் காரணம் முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் மதப் பெரியவர்களின் நீண்டகால அணுகுமுறைதான் – சாதாரண முஸ்லிம் மக்கள் அல்ல.

பஹல்காம் படுகொலையில் இந்தியா நடவடிக்கை எடுப்பதில் இத்தனை விஷயங்களையும் கவனத்தில் வைத்து நிதானமாகச் செயல்படவேண்டும். பாகிஸ்தானில் யார் யாரை எப்படிக் குறி வைத்தால், அந்த நாட்டில் என்ன திரைமறைவு வேலைகள் செய்ய முடிந்தால், பாகிஸ்தான் பலவீனப் படும், அடங்கும் என்று திட்டமிட்டு இந்தியா முயற்சிக்க வேண்டிய காரியங்கள் உண்டு. அதை மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். நாம் நன்றியுடன் பொறுமை காக்க வேண்டும்.

இந்தியாவுக்குப் பாகிஸ்தானுடனான பிரச்சனையின் முக்கியக் காரணம் பாகிஸ்தான் அரசோ அதன் ராணுவமோ அல்ல. அந்தப் பிரச்சனையின் மிக முக்கியப் பகுதி நமது நாட்டு மக்களிடம் இருக்கிறது – அவர்களில் பெரும் பகுதியினரின் ஒற்றுமையின்மை ஒழிய வேண்டும்.

யூதர்களின் பலத்த ஒற்றுமையால், இஸ்ரேல் நாட்டைச் சுற்றிப் பல எதிரி நாடுகள் இருந்தும் இஸ்ரேல் அவைகளைச் சமாளிக்கிறது, வெல்கிறது. ஆனால் இந்திய ஹிந்துக்களிடையே ஒற்றுமை இல்லாததால் அவர்கள் நலிவடைகிறார்கள். இனியாவது நமது ஹிந்துக்கள் தாமாக ஒற்றுமைப் பாடம் கற்பது நல்லது. பஹல்காம் சோகம் அதற்கான தொடக்கத்தைத் துரிதப் படுத்துமோ?

Author: R. Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

சபரிமலை கோயிலுக்கு வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

president draupati murmu - 2026
#image_title

பாரத குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இம்மாதம் வைகாசி மாத பூஜை காலத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கேரளா வரும் அவர், மே 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய வரலாம் என்று தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

குடியரசுத்தலைவரின் வருகையை ஒட்டி, சபரிமலை தேவசம் போர்டும், அம்மாநில போலீசாரும் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலையில் குடியரசுத்தலைவர் வரும் நாட்களில் கடுமையான பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சபரிமலையில் மே 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனத்திற்காக சபரிமலை வருவதை ஒட்டி ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் வருவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடக்கும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடக்கும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள், மாதாந்திர பூஜை நடக்கும் போது செல்வார்கள். இதனால் தற்போது மாதாந்திர பூஜை காலத்திலும் சபரிமலையில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்தநிலையில் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்கிறார். அவர் வருகிற 18 அல்லது 19-ந்தேதியில் சபரிமலைக்கு செல்லலாம் என்று தெரிகிறது. ஆனால் இரு நாட்களில் எந்த நாளில் அவர் சபரிமலைக்கு செல்கிறார் என்ற உறுதியான தகவல் தெரிவிக்கப் படவில்லை.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்காக கேரளா வரும் திரௌபதி முர்மு, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நிலக்கல் செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக பம்பைக்கு செல்கிறார். பின்பு பம்பையில் இருந்து நடை பயணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார் என தெரிகிறது.

குடியரசுத்தலைவரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. குடியரசுத் தலைவர் பயணிக்கக் கூடிய இடம் மற்றும் சன்னிதானத்தில் தங்கக்கூடிய தேவசம் விருந்தினர் மாளிகை உள்ளிட்ட இடங்களை பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு நிலக்கல்லில் இருந்து சாலக்காயம் வரை யிலும், சாலக்காயத்தில் இருந்து பம்பை திரிவேணி வரையிலும் சாலை பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பம்பை, மலைப்பாதை, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் தூய்மை மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன என தேவஸ்தான அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லம் ரயில் உள்பட நான்கு ரயில்களில் பெட்டிகள் மாற்றம்!

railway news - 2026
#image_title

செங்கோட்டை தென்காசி ராஜபாளையம் வழி செல்லும் சென்னை-கொல்லம் விரைவு வண்டி(16101/16102) பெட்டிகள் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த ரயிலில் 10 ஸலீப்பர் பெட்டிகள் 9-ஆக குறைக்கப்பட்டு, அதற்கு ஈடாக ஒரு முன்பதிவில்லா பொதுப் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இந்த மாற்றம் 01-ஜூலை-25 முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை – தஞ்சாவூர், கொல்லம் உட்பட நான்கு விரைவு ரயில்களில், கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.

மேலும் சென்னை எழும்பூர் – தஞ்சாவூர் உழவன் விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும், கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, எழும்பூர் – கொல்லம் விரைவு ரயிலில், இரு மாக்கத்திலும், கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை, 1 முதல் இணைக்கப்படும்

நாகர்கோவில் – தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை 5 முதல்; எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை, 2 முதல் இணைத்து இயக்கப்படும்.

மேலும் மதுரை குருவாயூர்-மதுரை விரைவு வண்டி(16327/28) முன்பதிவில்லா பெட்டிகளில் ஏற்கனவே இருந்த வழக்கமான முன்பதிவில்லா பெட்டிகளுக்கு பதிலாக, இன்டர்சிட்டி வகை வண்டிகளில் பயன்படுத்தப்படும் முன்பதிவில்லா சேர் கார் பொதுப் பெட்டிகள் இரண்டு இணைக்கப்பட்டுள்ளன. ஆனால் மொத்த பெட்டிகள்/முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையில் மாற்றமில்லாமல் 14பெட்டிகளுடன் இந்த ரயில் இயங்கி வருகிறது.

மேலும் கோடை விடுமுறை பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் .

திண்டுக்கல் – நாகர்கோவில் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் நாளை திங்கட்கிழமை முதல் 31ம் தேதி வரை புதன், வியாழன் தவிர்த்து வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது .

IPL 2025: சென்னை, ராஜஸ்தானைத் தொடர்ந்து வெளியேறிய மூன்றாவது அணி!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ஹைதராபாத் –  ஹைதரபாத் – 05.05.2025

மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

டெல்லி கேபிடல்ஸ் அணி (133/7, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 41, அஷுதோஷ் ஷர்மா 41, விப்ராஜ் நிகம் 18, கே.எல். ராகுல் 10, பாட் கம்மின்ஸ் 3/19, உநத்கட் 1/13, ஹர்ஷல் படேல் 1/36, ஈஷன் மலிங்கா 1/28) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆடவில்லை. மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது. இரு அணிகளும் தலா ஒரு புள்ளி பெற்றன. 

          பூவாதலையா வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணிக்கு இன்று ஒரு பேட்டிங் கொலாப்ஸ். அந்த அணியின் ஒரு வீரர்கூட இன்று சரியாக விளையாடவில்லை.

12.1 ஓவர்களில் 6/62 என்ற நிலையில் இருந்த அணியின் ஸ்கோரை 19.4ஆவது ஓவரில் 7/128 என்ற நிலைக்கு கொண்டு வந்தவர்கள் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (36 பந்துகளில் 41 ரன், 4 ஃபோர்), அஷுதோஷ் ஷர்மா (26 பந்துகளில் 41 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) மர்றும் விப்ராஜ் நிகம் (17 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) மூவருமாவர். மற்றாவர்கள் இன்று வந்தார்கள் போனார்கள். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஏழு விக்கட் இழப்பிற்கு 133 ரன் எடுத்தது.

          அதன் பிறகு ஆட்டம் நடைபெறவில்லை. டெல்லி அணியின் இன்னிங்க்ஸ் முடிந்தவுடன் மழை தொடங்கியது. இரவு 11.11க்கு ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போட்டியிலிருந்து வெளியேறும் மூன்றாவது அணியானது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏற்கனவே போட்டியிலிருந்து வெளியேரிவிட்டன.

image 1 - 2026

திருப்பரங்குன்றம் உப கோயில்களில் பாலாலயம்!

thirupparankundram arumuga samy temple palayam - 2026

திருப்பரங்குன்றம் உப கோயில்களில் பாலாலயம்!

மதுரை, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோயில்களில் பாலாலயா பணிகள் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் ஜுன் 14ம் தேதி கும்பாபிஷேக பணிகள் நடைபெறுகிறது. இதனையொட்டி, திருப்பரங்குன்றம் முருகனின் திருக்கோவிலில் , உப கோவில்களான சரவணப்பொய்கை ஆறுமுகசாமி கோவில், பால் சுனை கண்ட சிவன் கோவில்,சப்த கன்னிமார் திருக்கோவில்கள் உள்பட மூன்று உப கோயில்களுக்கு இன்று பாலாலய பூஜைகளுடன் துவங்கியது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஸ்தானிக பட்டர்கள் சாமிநாதன், ரமேஷ், செல்லப்பா ஆகியோர் முன்னிலையில், திருக்கோயில் சிவாச்சாரியார்கள்
வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்க்கப்பட்டு உப கோயில்களில் திருப்பணிக்காக பல ஆலய பூஜைகள் நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் அறங்காவலர்கள் சண்முகசுந்தரம் மணி செல்வன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

IPL 2025: அடிக்க விட்டு சேஸிங்கில் கோட்டை விட்ட அணிகள்!

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – இன்று இரண்டு ஆட்டங்கள் – 04.05.2025

— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா vs ராஜஸ்தான்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி (206/4, ரசல் 57, ரகுவன்ஷி 44, குர்பாஸ் 35, ரஹானே 30, ரிங்கு சிங் 19ஆர்ச்சர், யுத்வீர் சிங், தீக்ஷணா, ரியன் பராக் தலா ஒரு விக்கட்) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (205/8, ரியன் பராக் 95, ஜெய்ஸ்வால் 34, ஹெட்மயர் 29, ஷுபம் துபே 25, மொயின் அலி, ஹர்ஷித் ராணா, வருண் தலா இரண்டு விக்கட், வைபவ் அரோரா 1/50) 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

பூவாதலையா வென்ற கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் சுனில் நரேன் (9 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இரண்டாவது ஓவர் முடிவில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் (25 பந்துகளில் 35 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) அஜிங்க்யா ரஹானே உடன் (24 பந்துகளில் 30 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து வேகமாக அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

அதன் பின்னர் அங்கிரிஷ் ரகுவன்ஷி (31 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர்), ஆண்ட்ரூ ரசல் (25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 57 ரன், 4 ஃபோர், 6 சிக்சர்), ரிங்கு சிங் (6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 19 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) மூவரும் அணி 20 ஓவர்களில் நாலு விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுக்க உதவினர்.

வெற்றிக்கு 20 ஓவர்களில் 207 ரன் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் இரண்டாவதாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர், இளம் வயது வைபவ் சூர்யவம்ஷி (4 ரன்) முதல் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதற்கு அடுத்து குனால் சிங் ராதோர் (பூஜ்யம் ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். பின்னர் மற்றொரு தொடக்கவீரரான யசஸ்வீ ஜெய்ஸ்வால் (21 பந்துகளில் 34 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) ரியான் பாராக் (45 பந்துகளில் 95 ரன், 6 ஃபோர், 8 சிக்சர்) உடன் இணைந்து பவர் பிளே ஓவர்களில் 59 ரன்கள் எடுக்க வைத்தார்.

ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்ததும், துருவ் ஜுரல் மற்றும் வனிந்து ஹசரங்கா இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஷிம்ரன் ஹெட்மயர் (23 பந்துகளில் 29 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஷுபம் துபே (14 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 25, 1 ஃபோர், 2 சிக்சர்), ஆர்ச்சர் (8 பந்துகளில் 12 ரன், 1 ஃபோர்) மூவரும் அணியின் ஸ்கோர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 205 என்ற நிலைக்குக் கொண்டு வந்தனர். இதனால் ராஜஸ்தான் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கொல்கொத்தா அணியின் ஆண்ட்ரூ ரசல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாப் vs லக்னோ

பஞ்சாப் கிங்க்ஸ் அணி (236/5, பிரப்சிம்ரன் சிங் 91, ஷ்ரேயாஸ் ஐயர் 45, ஷஷாங்க் சிங் 33, ஜோஷ் இங்கிலிஷ் 30, ஆகாஷ் சிங் 2/30, திக்வேஷ் ரத்தி 2/46, பிரின்ஸ் யாதவ் 1/43) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை (199/7, ஆயுஷ் பதோனி 74, அப்துல் சமத் 45, ஆவேஷ் கான் 19, ரிஷப் பந்த் 18, எய்டன் மர்க்ரம் 13, அர்ஷ்தீப் சிங் 3/16, ஒமர்சாய் 2/33, மார்கோ ஜென்சன் 1/31, சாஹல் 1/50) 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பூவா தலையா வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அத்னால் முதலில் மட்டையாட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா (1 ரன்) முதல் ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் (48 பந்துகளில் 91 ரன், 6 ஃபோர், 7 சிக்சர்) 18.5ஆவது வரை விளையாடினார்.

அவர், ஜோஷ் இங்கிலீஷ் (14 பந்துகளில் 30 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்), ஷ்ரேயாஸ் ஐயர் (25 பந்துகளில் 45 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்), நெஹல் வதேரா 99 பந்துகளில் 16 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோருடன் இணைந்து பஞ்சாப் அணிக்கு நல்ல ஸ்கோர் அடைய உதவினார்.

இறுதியில் ஷஷாங்க் சிங் (15 பந்துகளில் 35 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (5 பந்துகளில் 15 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இருவரின் ஆட்டத்தால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 236 ரன் எடுத்தது.

237 என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாகக் களமிறங்கிய லக்னே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் ஆயுஷ் பதோனி (40 பந்துகளில் 74 ரன், 5 ஃபோர், 5 சிக்சர்) மட்டுமே சிறப்பாக ஆடினார். பின்னால் அப்துல் சமத் (24 பந்துகளில் 45 ரன், 2 ஃபோர், 4 சிக்சர்) நன்றாக ஆடினார்.

பிற வீரர்களான எய்டன் மர்க்ரம் (13 ரன்), மிட்சல் மார்ஷ் (பூஜ்யம் ரன்), நிக்கோலஸ் பூரன் (6 ரன்), ரிஷப் பந்த் (18 ரன்), டேவிட் மில்லர் (11 ரன்), ஆவேஷ் கான் (ஆட்டமிழக்காமல் 19 ரன்), பிரின்ஸ் யாதவ் (ஆட்டமிழக்காமல் 1 ரன்) ஆகியோர் நிலைத்து ஆடவும் முற்படவில்லை; வேகமாக ரன் சேர்க்கவும் முயலவில்லை.

இதனால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 199 ரன் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் பஞ்சாப் அணி 37 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியின் தொடக்க வீரர், பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

மதுரை கோதண்டராமர் கோயிலில் ராதாகல்யாண பஜனை உத்ஸவம்!

kadayanallur rajagopala bagavathar bajanai in madurai - 2026

கோதண்டராமர் திருக்கோயிலில் ராதாகல்யாண பஜனை உத்ஸவம்!

அருள்மிகு ஸ்ரீ கோதண்ட ராமர் திருக்கோவில் கண்ணன் ராதா கல்யாணம் முன்னிட்டு பஜனை உற்சவம்!

மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பல நூற்றாண்டுகள் பழமையான ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவிலில்
கண்ணன் ராதா கல்யாண மகா உற்சவம் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இன்று மாலை முதல் பஜனை பாடல்கள் பாடப்பட்டு பக்தர்கள் பக்தி வெள்ளப் மிதந்தன பஜனை பாடல்களை கடையநல்லூர் பிரம்ம ஸ்ரீ ராஜகோபாலதாஸ் பாகவதர் குழுவினர் பஜனை பாடல்கள் பாடி பக்தர்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து மறுநாள் காலை ஏழு மணி முதல் ராதா கல்யாணத்திற்கான பூஜைகள் மற்றும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு காலை பதினோரு மணி அளவில் கண்ணன் ராதா திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

பின்னர், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு, திருக்கல்யாணத்தை நேரில் காணும் வாய்ப்பினை வருடா வருடம் ஏற்படுத்தி வரும் மதுரை பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியினரும் மற்றும் ஸ்ரீ ராம பக்தை சபா சார்பாகவும் விமர்சையாக நடைபெற உள்ளது.