Home Blog Page 152

வருமான வரி சலுகை, இளைஞர் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு… மத்திய பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்!

nirmala seetharaman - 2026

இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது – என்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரிச் சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்

விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ₹3 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்படும்

மக்கானா உற்பத்தியை அதிகரிக்க மக்கானா வாரியம் அமைக்கப்படும்

நாடு முழுவதும் வேளான் உற்பத்தியில் சற்று பின் தங்கியுள்ள 100 மாவட்டங்களில் விவசாய மேம்பாட்டிற்காக புதிய திட்டம்

வேலை வாய்ப்புக்காக பிற இடங்களை தேடி செல்லாத சூழலை ஏற்படுத்தும் வகையில் மக்கள் அவர்கள் வாழக்கூடிய இடங்களிலே தொழில்துறையை உருவாக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளும்

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயத்து அரசு செயல்படுகிறது

வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியாக உயர்த்தப்படுகிறது

தாமரை விதைகளுக்கு புதிய வாரியம்! : தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும்

கிரெடிட் கார்டு உச்ச வரம்பு உயர்வு : கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது

அசாமில் யூரியா உற்பத்தி செய்ய ஆலை அமைக்கப்படும்

இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும்

ஆறாண்டுத் திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, மைசூரு பருப்புகளின் உற்பத்திற்கு முக்கியத்துவம்

தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

  • பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கை
  • பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ₹2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்
  • லாஜிஸ்டிக் மையமாக மாற்றமடையும் இந்திய அஞ்சல்துறை
  • ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும்!
  • ஏ ஐ தொழில்நுட்பத்தை விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு பயன்படுத்தும் வகையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்
  • அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்
  • உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்
  • அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்
  • ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு
  • பாரத் நெட் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைய வசதி
  • முதல் முறையாக பெண்கள், எஸ்சி மற்றும் எஸ்டி தொழில்முனைவோர் 5 லட்சம் பேருக்கு ரூ.2 கோடி கடன் திட்டத்தை தொடங்க உள்ளோம்
  • 120 புதிய இடங்களுக்கு உள்ளூர் விமான இணைப்பை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட UDAAN திட்டம் தொடங்கப்படும்; அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி கூடுதல் பயணிகளை உருவாக்கத் திட்டம்
  • பீகாரில் உள்ள ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது

அடுத்த வாரம் புதிய வருமான வரி சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

  • காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு வரம்பு 100% ஆக உயர்த்தப்படும்
  • புதுப்பிக்கப்பட்ட மத்திய KYC பதிவேடு 2025 இல் வெளியிடப்படும்.

ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை மறுஆய்வு செய்ய உயர் மட்டக் குழு அமைக்கப்படும்.

வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்க்க தனி அமைப்பு உருவாக்கப்படும்

  • சர்வதேச வர்த்தகத்திற்கான பாரத் டிரேட்நெட் அமைக்கப்படும்.

நகரங்களை சிறப்பான மையங்களாக மாற்றக்கூடிய வகையில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசு திட்டத்தை தொடங்க உள்ளது

  • அணுஉலைகள் மூலம் 2047- ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்ய இலக்கு
  • 52 சுற்றுலாத் தலங்கள் மாநில அரசின் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும்
    மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
  • பிகாருக்கு 3 புதிய விமான நிலையங்கள்
  • ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது ஒன்றிய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது 2025- 26 நிதி ஆண்டில் நாட்டில் 200 புற்றுநோய் மையங்கள் அமைக்கப்படும்
  • 37 உயிர்காக்கும் மருந்துகளுக்கு முழுவதுமாக அடிப்படை சுங்கவரி விலக்கு
  • Gig Workers என அழைக்கப்படும் உணவு டெலிவரி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள்
    இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிடிபி கொண்டு ஒப்பிடும் போது மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது.

  • பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் அமைக்கப்படும்.
  • AI மையங்கள் அமைக்க ₹500 கோடி ஒதுக்கீடு.
  • பொம்மைகள் தயாரிப்பில் இந்தியாவை, சர்வதேச கேந்திரமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில் AI மையம் அமைக்கப்படும்.
  • உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ₹1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்.
  • பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு தொழிற்கடன். நடுத்தர மக்களின் சுமையை குறைக்கும் விதமாக புதிய வருமான வரி சட்ட மசோதா இருக்கும்

புதிய சட்ட மசோதாவில் பழைய சட்டத்தின் 50% விதிகள் இருக்கும்

  • ”வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
    கோல்நோக்கி வாழுங் குடி.” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
  • மாணவர்களுக்கு தாய்மொழியில் டிஜிட்டல் பாடங்கள் வழங்க திட்டம்
  • முதியோருக்கான வட்டி வருவாயில் ₹1 லட்சம் வரை வருமான வரி கிடையாது
  • சட்டப்பேரவைத் தேர்தல் எதிரொலி – பட்ஜெட்டில் பீகாருக்கு குவியும் திட்டங்கள்!
  • பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவுபடுத்தப்படும்
  • பீகாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும்
  • பீகார் மாநிலத்திற்கு என்று பிரத்யேக நீர்ப்பாசன திட்டங்கள்
  • பாட்னாவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்படும்
  • லித்தியம் பேட்டரிக்கான இறக்குமதி சுங்கவரி ரத்து

எல்.இ.டி. திரைக்கான இறக்குமதி சுங்கவரி 20% ஆக அதிகரிப்பு

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு

ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு – நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

இனி மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை

  • தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் ஆண்டு வாரியாக

2005: ₹1 லட்சம்
2012: ₹2 லட்சம்
2014: ₹2.5 லட்சம்
2019: ₹5 லட்சம்
2023: ₹7 லட்சம்
2025: ₹12 லட்சம்

  • ஆண்டு வருமானம் ரூ.24 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்களுக்கு 30% வரிவிதிப்பு
  • வரி மாற்றங்களால் நேரடி வரிகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படும்
  • மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:

  • மூத்த குடிமக்களுக்கு வருமானவரி கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1,00,000 ஆக உயர்வு.
  • வாடகை மீதான வரி தள்ளுபடி ரூ.2.4 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்வு.
  • ஆண்டுக்கு ரூபாய் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை.

2023ல் 7 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருமானம்- வரி விகிதம்

  • ரூ.24 லட்சத்திற்கு மேல் – 30 சதவீதம்
  • ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை- 25 சதவீதம்
  • ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை- 20 சதவீதம்
  • ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை- 15 சதவீதம்
  • ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை – ரூ.5 சதவீதம்
  • ரூ.4 லட்சம் வரை- வரி இல்லை.

புதிய வருமான வரி முறையில் ரூ.7 லட்சம் வரை வருமான வரி இல்லை என்பது தற்போது ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. கூடுதலாக ரூ.75 ஆயிரம் வரை நிலைக்கழிவும் கிடைக்கும். இது நடுத்தர வாழ் மாத ஊதியம் பெறும் மக்களுக்கு மிக பெரிய வரப்பிரசாதம் ஆகும்

💥 சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி ₹30,000 -ஆக அதிகரிப்பு

₹0-4 lakh – Nil
₹4-8 lakh – 5%
₹8-12 lakh – 12%
₹12-16 lakh – 15%
₹16-20 lakh – 20%
₹20-24 lakh – 25%
Above 24 lakh – 30%

“கொண்டு வரப்பட உள்ள புதிய வரி சீர்திருத்தத்தில் நடுத்தர வருமான வகுப்பினருக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்”

TDS முறையில் மாற்றம் செய்யப்படும்

  • TCS இன் வரம்பு ₹7 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
  • வாடகையில் TDS வரம்பு ₹6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
  • கல்வி கடன்களில் TCS ஐ ₹10 லட்சம் வரை நீக்குவதற்கான திட்டம்
  • புதிய வரி மசோதா வரி செலுத்துவோருக்குப் புரியும் வகையில் எளிமையாக இருக்கும்

புதிய வருமான வரி மசோதாவில் பழைய சட்டங்களில் உள்ள சரத்துகளில் 50 சதவிகிதம் இடம்பெறும் என்று மத்திய பட்ஜெட்டில் வருமான வரி மாற்றங்கள் குறித்து நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய விஷயங்கள் இவை.

IND Vs ENG T20: தொடரை வென்ற இந்திய அணி!

eng vs ind t20 2025 - 2026

இந்தியா இங்கிலாந்து நான்காவது டி-20 ஆட்டம்- புனே-31 ஜனவரி 2025

இந்திய அணி தொடரை வென்றது

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (20 ஓவர்களில் 181/9, ஷிவம் துபே 53, ஹார்திக் பாண்ட்யா 53, ரிங்கு சிங் 30, அபிஷேக் ஷர்மா 29, மகமூத் 3/35, ஓவர்டன் 2/32, கார்சே, அதில் ரஷீத் தலா 1 விக்கட்) இங்கிலாந்து அணியை (19.4 ஓவர்களில் 166, ஹாரி ப்ரூக் 51, பென் டக்கட் 39, பில் சால்ட் 23, ஓவர்டன் 19, ஆர்ச்சர் 10, ரவி இஷ்னோய் 3/28, ஹர்ஷித் ராணா 3/33, வருண் 2/28, அர்ஷதீப் சிங், அக்சர் படேல் தலா 1 விக்கட்) 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் ஜாஸ் பட்லர் இந்திய அணியை மட்டையாடப் பணித்தார். இன்றைய ஆட்டத்தில் முகமது ஷமிக்கு  பதிலாக அர்ஷதீப் சிங் ஆடினார். துருவ் ஜுரலுக்குப் பதிலாக ரிங்கு சிங் விளையாடினார்.

வாஷிங்க்டன் சுந்தருக்குப் பதிலாக ஷிவம் துபே விளையாடினார். இந்திய அணி பந்து வீச வரும்போது ஹர்ஷித் ராணா concussion substitute – காயமடைந்தவருக்குப் பதிலாக விளையாடுபவர் – ரூபத்தில் விளையாடி மூன்று விக்கட்டுகளும் எடுத்தார்.

          இந்திய அணியின் தொடக்கம் மிக மோசமாக இருந்தது. இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் (ஒரு ரன்), இரண்டாவது பந்தில் திலக் வர்மா (பூஜ்யம் ரன்), கடைசி பந்தில் சூர்யகுமார் யாதவ் (பூஜ்யம் ரன்) ஆகிய மூவரும் ஆட்டமிழந்து இந்திய அணி 12/3 என்ற ரன் கணக்கில் இருந்தது. இன்று இங்கிலாந்து அணி சார்பில் புதிதாக விளையாடிய மகமூத் மூன்று விக்கட்டுகளையும் தனது முதல் ஓவரிலேயே எடுத்தார்.

அதன் பின்னர் அபிஷேக் ஷர்மா (19 பந்துகளில் 29 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) எட்டாவது ஓவரிலும் ரிங்கு சிங் (26 பந்துகளில் 30 ரன், 4 ஃபோர், ஒரு சிக்சர்) 11ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஷிவம் துபே (34 பந்துகளில் 53 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ஹார்திக் பாண்ட்யா (30 பந்துகளில் 53 ரன், 4 ஃபொர், 4 சிக்சர்) இருவரும் சிறப்பாக அடி இந்திய அணியை 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுக்க வைத்தனர்.

          அதன் பின்னர் ஆட வந்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட் (23 ரன்) மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கட் (19 பந்துகளில் 39 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். இந்த சமயத்தில் பந்து வீச வந்த இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்தி, விக்கட்டும் எடுத்தனர்.

அணித்தலைவர் ஜாஸ் பட்லர் (2 ரன்), ஹாரி ப்ரூக் (26 பந்துகளில் 51 ரன்), லிவிங்க்ஸ்டோன் (9 ரன்), ஜாக்கப் பெதல் (6 ரன்), ப்ரைடன் கார்ஸ் (பூஜ்யம் ரன்),  ஓவர்டன் (19 ரன்), ஆர்ச்சர் (பூஜ்யம் ரன்),  அதில் ரஷீத் (10ரன்), மகமூத் (1 ரன்) எடுத்தனர். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணியால் 166 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

          ஆட்ட நாயகனாக ஷிவம் துபே அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 3-1 என்ற ஆட்டக் கணக்கில் வென்றுள்ளது. அடுத்த, ஐந்தாவது டி20  ஆட்டம் பிப்ரவரி 2ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும்.   

பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளிய டிராமா மாடல் திமுக: அண்ணாமலை காட்டம்!

annamalai bjp tn leader - 2026

பள்ளிக் கல்வித் துறையை படுகுழியில் தள்ளியுள்ளது, டிராமா மாடல் திமுக என்று, பாஜக., தமிழக மாநிலத் தலைவர் கு.அண்ணாமலை காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது…

கிராமப்புறப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்த, ASER (Annual Status of Education Report – Rural) அறிக்கை வெளியாகியிருக்கிறது. இந்த அறிக்கையின்படி, தமிழகம் பல பிரிவுகளில், நாட்டின் பிற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக, விளம்பரம் செய்வதில் மட்டுமே நம்பர் ஒண்ணாக இருக்கும் டிராமா மாடல் திமுக அரசு, தமிழகத்தின் கல்வித் தரம் குறித்து கூறி வருவதற்கு நேர்மாறாக, இந்த அறிக்கையின் புள்ளி விவரங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அரசுப் பள்ளி மாணவர்களை, கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைப்பதும், பாத்திரங்களைக் கழுவ வைப்பதும், அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் சுமை தூக்கும் தொழிலாளர்களைப் போல பயன்படுத்துவதும் எனத் தொடர்ந்து மிகவும் தரக்குறைவான முறையில் நடத்தி வரும் பள்ளிக் கல்வித் துறையின் செயலிழந்த தன்மையால், தமிழகப் பள்ளி மாணவர்கள் கற்றல் திறன் இழந்து வருவது, இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.

ASER அறிக்கை தமிழகத்தில், 30 மாவட்டங்களில், 876 கிராமங்களில், 17,337 வீடுகளில், 28,984 குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட பள்ளிக் ஆய்வின்படி வெளியிடப்பட்டுள்ளது. இவற்றில் குறிப்பிடத்தக்க புள்ளி விவரங்கள் பின்வருமாறு.

கடந்த 2018 ஆம் ஆண்டு, 59.9% பள்ளிகளில், மாணவர்களுக்குப் போதுமான அளவுக்கு ஆசிரியர்கள் இருந்தனர். ஆனால் தற்போது, மாணவர் ஆசிரியர் விகிதத்தில், தமிழகத்தில் வெறும் 51.8% பள்ளிகளாகக் குறைந்து, இந்தியாவிலேயே கடைசி வரிசையில் இருக்கிறது. குஜராத்தில் 78.7%, உத்திரப்பிரதேசத்தில் 64.2%, மகாராஷ்டிராவில் 76.5% என, அனைத்து மாநிலங்களுமே, தமிழகத்தை விட அதிகமான மாணவர் ஆசிரியர் விகிதத்தைப் பெற்றுள்ளன.

அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் 68.7% மட்டுமே. 2022ஆம் ஆண்டு 75.7% ஆக இருந்த சேர்க்கை 2 ஆண்டுகளில் 7 சதவீதம் குறைந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இரண்டாம் வகுப்பு பாடத்திட்டம் – எழுத்து தமிழக மூன்றாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 13.2% மாணவர்களே, இரண்டாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் உள்ள எழுத்துக்களைப் படிக்கும் திறன் பெற்றிருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில், 27.9%, குஜராத்தில் 24.7%, மகாராஷ்டிராவில், 37%, பீகாரில், 20.1% என, பல வட இந்திய மாநிலங்களும், தமிழகத்தை விட முன்னணியில் இருக்கின்றன.

தமிழக ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 37% மாணவர்களே, இரண்டாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் உள்ள எழுத்துக்களைப் படிக்கும் திறன் பெற்றிருக்கின்றனர்.

குஜராத்தில் இது 44.6%, மகாராஷ்டிராவில் 57.9%, உத்திரப் பிரதேசத்தில் 50.5%, பீகாரில் 41.2% என, ஐந்தாம் வகுப்பு கல்வித் தரத்திலும், வட இந்திய மாநிலங்களை விட பின்தங்கி இருக்கிறது தமிழகம்.

தமிழக எட்டாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 62.2% மாணவர்களே, இரண்டாம் வகுப்புப் பாடத் திட்டத்தில் உள்ள எழுத்துக்களைப் படிக்கும் திறன் பெற்றிருக்கின்றனர். குஜராத்தில் இது 74.7%, மகாராஷ்டிராவில் 70.9%, உத்திரப் பிரதேசத்தில் 67.3%, பீகாரில் 71.7% ஆக இருக்கிறது.

தமிழக மூன்றாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 27.6% மாணவர்களே கணக்குப் பாடத்தில், கழித்தல் பற்றித் தெரிந்துள்ளனர். உத்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் 31.6%, பீகாரில் 28.2% ஆகவும் இந்த விகிதம் இருக்கிறது.

தமிழக ஐந்தாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 20.2% மாணவர்களுக்கு மட்டுமே, கணக்குப் பாடத்தில், வகுத்தல் தெரிந்திருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் 31.8% மாணவர்களுக்கும், மாணவர்களுக்கும், 26.1% மகாராஷ்டிராவில் பீகாரில் 32.5% மாணவர்களுக்கும், வகுத்தல் கணக்கு தெரிந்திருப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழக எட்டாம் வகுப்பு மாணவர்களில், வெறும் 37.8% மாணவர்களுக்கு மட்டுமே, கணக்குப் பாடத்தில், வகுத்தல் தெரிந்திருக்கிறது. உத்திரப் பிரதேசத்தில் 45.6% மாணவர்களுக்கும், பீகாரில் 62% மாணவர்களுக்கும் வகுத்தல் கணக்கு தெரிந்திருக்கிறது.

பள்ளி அடிப்படை வசதிகள்

அரசுப் பள்ளிகளில், 77.7% பள்ளிகளில் மட்டுமே, பயன்படுத்தத் தகுந்த குடிநீர் வசதி உள்ளது என்றும், 81.4% பள்ளிகளில் மட்டுமே கழிப்பறை வசதிகள் உள்ளன என்றும், 77.5% பள்ளிகளில் மட்டுமே பெண் குழந்தைகளுக்குத் தனியாக கழிப்பறைகள் உள்ளன என்றும், 64.3% பள்ளிகளில் மட்டுமே, நூலக வசதியை மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றும், வெறும் 58.7% பள்ளிகளில் மட்டுமே, கணினி வசதி பயன்பாட்டில் உள்ளது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தையும், நாட்டையும் அடுத்த ஐம்பது ஆணடுகளுக்கான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லவிருப்பது, இன்று பள்ளியில் பயிலும் நம் குழந்தைகளே. அவர்களுக்கான கற்றல் அடித்தளம் எத்தனை வலிமையாக அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்?

ஒரு திறமையான, தகுதியான, தொலைநோக்குப் பார்வை கொண்ட அமைச்சரை பள்ளிக் கல்வித்துறைக்கு நியமித்திருந்தால்தான் இவை எல்லாம் சாத்தியப்பட்டிருக்கும். ஆனால், முதலமைச்சரின் நண்பரின் மகன், முதலமைச்சர் மகனின் ரசிகர் மன்றத் தலைவர் என்பவை எல்லாம் தகுதிகள் என்று, பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக்கியதன் விளைவு, தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

உண்மையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தனது துறையின் முக்கியத்துவம் தெரிந்துதான் செயல்படுகிறாரா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. பழுதடைந்த பள்ளிக் கட்டிடங்களை சரிசெய்யவில்லை. அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை. அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் செயல்பாடுகள் இல்லை. பள்ளி மாணவர்களுக்குப் புதுமையான கல்வி முறைகளையோ, திட்டங்களையோ அறிமுகப்படுத்தவில்லை. இவை எதையுமே செய்யாமல், நாட்டிலேயே கல்வித் தரத்தில் முன்னணியில் இருக்கிறோம் என்று பொய்யாகப் பீற்றிக் கொள்ள வெட்கமாக இல்லையா?

ஆண்டாண்டு காலமாக, எதற்கெடுத்தாலும் பீகார் மாநிலத்தையும், பீகார் மக்களையும், பின்தங்கி இருப்பதாகக் குறை கூறி அரசியல் நடத்தி வந்த திமுக, இன்று இந்த அறிக்கையின்படி, பள்ளிக் கல்வித் துறையின் பல புள்ளிகளில், பீகார் மாநிலம், தமிழகத்தை விட முன்னேறியிருப்பதைக் கண்டு வெட்கித் தலைகுனிய வேண்டும்.

திமுக அரசு மற்றும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்தச் செயல்படா போக்கு தொடருமேயானால், அடுத்த இருபது வருடங்களில், தமிழகம் நமது நாட்டில், கல்வியில் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றாக வரிசைப் படுத்தப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை”

யோகி அரசின் மஹாகும்பமேளா ஏற்பாடுகள் சிறப்பு; பாதுகாப்பாக உணர்கிறோம்: வெளிநாட்டு பக்தர்கள் சிலிர்ப்பு! 

mahakumbamela 2025 crowd foriegn devotees praised - 2026

மஹாகும்பமேளா 2025க்கு வந்திருக்கும்  வெளிநாட்டு பக்தர்கள் யோகி அரசின் கூட்ட மேலாண்மையை பாராட்டுவதாகவும், தாங்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். 

மஹாகும்பமேளா பாதுகாப்பாகவும், நன்கு ஒழுங்கமைக்கப் பட்டதாகவும், தடையின்றி நடைபெறுவதையும் உறுதி செய்ய உத்தரவ் பிரதேச அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு நாளும், கோடிக்கணக்கான பக்தர்கள் புனித ஸ்நானத்திற்காக திரிவேணி சங்கமத்தில் கூடி, பரவலான பாராட்டைப் பெறுகிறார்கள்.

2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவின் பிரம்மாண்டமான மற்றும் தடையற்ற நிர்வாகம் வெளிநாட்டு பயணிகளை பிரமிக்க வைத்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் யோகி அரசு செய்த முன்மாதிரியான ஏற்பாடுகள் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளன. புனித நீராடலுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள பக்தர்கள் நன்கு திட்டமிடப்பட்ட உள்கட்டமைப்பு மற்றும் தடையற்ற கூட்ட மேலாண்மையைப் பாராட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் ஹவாயைச் சேர்ந்த ஒரு பயணி, “இந்த ஆன்மீக சங்கமத்திற்காக இவ்வளவு பெரிய கூட்டம் எவ்வாறு ஒன்று சேர்ந்துள்ளது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஏராளமான அளவில் மக்கள் வருகையை எதிர்பார்த்து உள்கட்டமைப்பின் அளவைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் எல்லாவற்றையும் எவ்வளவு சீராகக் கையாளுகிறது என்பது நம்ப முடியாதது” என்று கூறி தனது ஆச்சரியத்தைப் பகிர்ந்து கொண்டார்.

பக்தர்களிடையே ஒத்துழைப்பு உணர்வும் இந்த நிகழ்வின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும், மக்கள் ஒருவருக்கொருவர் தன்னலமற்ற வகையில் சிறப்பாக உதவுகிறார்கள்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த மரியா, 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பமேளாவைப் பார்க்க வந்திருந்ததாகவும், அந்த அனுபவம் தனக்கு மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதை மீண்டும் காணத் திரும்பியதாகவும் பகிர்ந்து கொண்டார். 

“இது என் வாழ்க்கையின் மிகவும் மறக்கமுடியாத அனுபவம். கடந்த 26 ஆண்டுகளாக நான் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவுக்கு வருகிறேன், அதன் கலாச்சாரத்தை நான் விரும்புகிறேன். காவல்துறை கூட்டத்தை நிர்வகிக்கும் விதம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது,” என்றார் அவர். 

ரஷ்யாவின் மாஸ்கோவைச் சேர்ந்த ஜூலியா, இந்த ஏற்பாடுகளைப் பாராட்டினார். “மஹாகும்பமேளாவுக்கு இது எங்கள் முதல் முறை பயணம், இங்குள்ள சூழலால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டோம். இங்குள்ள சூழல் பாதுகாப்பானது மற்றும் ஆன்மீகமானது. நிர்வாகம் இவ்வளவு பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்த விதம் நம்பமுடியாதது, ஆச்சரியகரமானது” என்று அவர் கூறினார்.

கஜகஸ்தானின் அல்மாட்டியைச் சேர்ந்த அலீனா, தனது பயணம் பற்றிக் குறிப்பிடுகையில், ‘எனது கனவு நனவானது’ என்று ஆச்சரியத்துடன் விவரித்தார். “கும்பமேளாவில் கலந்துகொள்வது எனது கனவு. பகவான் சிவனின் அருளால், நான் இங்கே இருக்கிறேன், இந்த அனுபவத்தை வார்த்தைகளில் விவரிக்க கடினமாக உள்ளது,” என்றார் அவர்.

பஞ்சாபின் பதான்கோட்டைச் சேர்ந்த அஞ்சு, யாத்ரீகர்களுக்கு உதவுவதில் நிர்வாகத்தின் முயற்சிகளை எடுத்துரைத்தார். “அதிகாரிகள் பக்தர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறார்கள். வதந்திகளில் நாம் கவனம் செலுத்தக்கூடாது,” என்று அவர் அறிவுறுத்தினார்.

பயணிகளுக்கான பாதுகாப்பையும் வசதியையும் மேம்படுத்த, அரசாங்கம் நவீன தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்தியுள்ளது. கூட்டத்தை நிர்வகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அதிகாரிகள் நிலைமையைக் கண்காணிக்கவும், எந்தவொரு அவசர நிலையிலும் விரைவாகச் சென்று உதவவும் முடியும்.

சம்ஸ்க்ருத ந்யாயமும் விளக்கமும்: கபி முஷ்டி ந்யாய:

samskrita nyaya - 2026

ஸம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் – 48  – கபி முஷ்டி ந்யாய:

தெலுங்கில் – பி,எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

கபி முஷ்டி ந்யாய: – கபி – குரங்கு, முஷ்டி – கை முஷ்டி 
குரங்கு பானையில் கை விட்டதைப் போல..

நம் முனிவர்கள் இயற்கையை ஆழ்ந்து கவனித்து, ஆச்சர்யப்படும் நியாயங்கள் பலவற்றை அளித்துள்ளார்கள். அவற்றில் இந்த ‘கபி முஷ்டி ந்யாயமும்’ ஒன்று. இது   தொடர்பான கதை ஒன்று உள்ளது.

குரங்கு ஒன்று இருந்தது. ஒரு ஜாடியில் சுவைமிக்க உணவைப் பார்த்து, தின்ன ஆசை கொண்டது. அந்த ஜாடியின் வாய் மிகக் குறுகியது. குரங்கு தன் கையை அதில் நுழைத்து    உணவைக் கையில் எடுத்து, இறுக்கப் பிடித்துக் கொண்டது. குரங்கால் கையை வெளியில் எடுக்க முடியவில்லை. இழுத்துப் பார்த்தது. கையில் இருக்கும் உணவை உதறி விட்டால், கை வெளியே வந்து விடும். ஆனால் அந்த அறிவு குரங்குக்கு இல்லை.

இந்தக் கதையை ஆதாரமாகக் கொண்டு, ‘கபி முஷ்டி’ ந்யாயத்தை சான்றோர் அளித்தனர். இந்தக் கதையில் ஒரு சிறந்த கருத்து உள்ளது. குரங்கு, உணவு அல்லது தானியத்தைத் தின்ன ஆசை கொண்டு, கைப்பிடியை உதறாததால், கையை வெளியில் எடுக்க முடியாமல் இன்னலுக்கு உள்ளானது. அதே போல், ஆசை காரணமாக செல்வத்தைத் துறக்க இயலாமல், இன்னல் படுகின்றனர் மனிதர்கள் என்பது செய்தி.

அந்த கூஜா அல்லது ஜாடியின் சிறிய வாயில் கையை நுழைத்த போது இல்லாத தொல்லை, கையை வெளியில் இழுக்கும் போது ஏன் ஏற்பட்டது? அந்த வானரம், அந்த கூஜாவில்தான் குறை இருக்கிறது என்று எண்ணி, அதனை நிந்தித்தது. இதுவே இந்த நியாயத்தில் உள்ள சிறப்பு.

குரங்கு கூஜாவின் மேல் குறையை ஏற்றியது போலவே, நம் போராசை காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு, நாம் பிறரைக் குறை கூறுகிறோம். நம்  குறைகளை நாம் உணர்வதில்லை. இதுவே ‘கபி முஷ்டி’ ந்யாயம்’.

சுக போகங்கள், உறவுகள் என்று எதைப் பிடித்துக் கொண்டாலும் துயரமே மிஞ்சும். துறந்து விட்டால் மோட்சம். இதுவே இந்த கதையின் உட்பொருள். பிடிப்பு, விடுப்பு என்ற இரண்டையும் சார்ந்தே வாழ்க்கை உள்ளது.

ஒன்றைப் பெற வேண்டும் என்றால், ஒன்றை விட வேண்டும். வாழ்க்கையில் பிடித்துக் கொள்ள வேண்டியவை சில உண்டு. துறக்க வேண்டியவை சில உண்டு. இதைக் கூறும் நியாயமே இது.

விட வேண்டியவற்றை விட்டு விட்டால் துன்பம் நீங்கி விடும். குரங்கின் கதையில் கைப்பிடியின் அளவு பெரியதானதால் இன்னல் ஏற்பட்டது. வெளியில் இருந்து எஜமானி கம்பால் அடித்துத் துன்புறுத்தினாலும், அது கைப்பிடியை விடவில்லை. பாவம். விடத் தெரியவில்லை. விட விரும்பவில்லை. வாழ்க்கையில் இதனால்தான் மனிதனுக்கு கஷ்டம் வருகிறது. ஏதேதோ முட்டாள்தனமான யோசனைகள், விருப்பு, வெறுப்பு, உறவு பகை, இவற்றை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டால், கஷ்டப்படுவார்கள் என்பது செய்தி.

வானரம் என்றால் சஞ்சலமான மனம். அது, பார்க்கும் பொருளின் மேல் எல்லாம் ஆசைப்பட்டு அதைத் தொடவும், சொந்தம் கொண்டாடவும் நினைக்கிறது. அதனால் இக்கட்டில் சிக்கித் தவிக்கிறது.

பர்த்ருஹரி, மனத்தின் இயல்புக் கிரமத்தை விவரிக்கையில், ‘சிருங்கார சதகத்தில்’ இவ்விதம் கூறுகிறார்.

ஸம்ருதா பவதி தாபாய,
த்ருஷ்டா சோன்மாதகாரிணீ
ஸம்ருஷ்டா பவதி மோதாய…

பொருள் – எண்ணிய உடனே தவிப்பை ஏற்படுத்தும். பார்த்தவுடனே பைத்தியம் பிடிக்கச் செய்யும். தொட்டவுடன் மோகத்தை ஏற்படுத்தும்… என்று இந்த நியாயத்தின் கதைக்கு விளக்கம் கூறுவது போல் உள்ளது இந்த சுலோகம்.

பிடித்துக் கொண்டால் பந்தம். விட்டு விட்டால் மோட்சம். இதுவே இந்த நியாயம் கூறும் சூட்சும செய்தி. விட்டு விட வேண்டியவர்களை விடாமல் இருந்ததால் எத்தனை நஷ்டம் ஏற்பட்டது என்று கூறும் சம்பவங்கள் இராமாயண, மகாபாரதத்தில் பல உள்ளன.

புத்திரப் பிரேமை

துரியோதனன் பிறந்த உடனே, கழுதை கத்துவது போல அழுதான். அதைக் கேட்ட கழுதைகளும் நரிகளும் பெரிதாக ஊளையிட்டன. சில அபசகுனங்கள் தென்பட்டன. அந்த தீய சகுனங்களைப் பார்த்து விதுரரும், பிறரும், ‘இந்த மூத்த புதல்வன் பிறந்த உடனே அபசகுனங்கள் காணப்படுகின்றன. உனக்கும் உன் குலத்திற்கும் அமைதி கிடைக்க வேண்டுமென்றால் இந்த ஒரு மகனைத் துறந்து விடு. இன்னும் உனக்கு தொண்ணூற்று ஒன்பது புதல்வர்கள் பிறப்பார்கள்’ என்று எடுத்துச் சொன்னாலும் திருதராஷ்டிர மகாராஜா கேட்கவில்லை. புத்திரப் பிரேமை என்ற மோகத்தின் காரணனமாக, விட வேண்டியை குறித்து விதுரன் கூறிய இந்த சுலோகம் புகழ் பெற்றது.

த்யஜேதேகம் குலஸ்யார்தே, க்ராமஸ்யார்தே குலம் த்யஜேத் |
க்ராமம் ஜனபதஸ்யார்தே ஆத்மார்த்தே ப்ருதிவீம் த்யஜேத் ||

(மகாபாரதம் – ஆதிபர்வம் – 114/38)

பொருள் – குலத்தின் நலனுக்காக ஒரு மனிதனைத் துறக்க வேண்டும். கிராமத்தின் நலனுக்காக குலத்தை விட்டு விட வேண்டும். தேசத்தின் நலனுக்காக கிராமத்தையே துறக்க வேண்டும். தன் ஆத்ம நலனுக்காக பூமியையே துறக்க வேண்டும். ஆனால் மோகம் அத்தனை எளிதாக விடக் கூடியதா?

காமாசுரன்

சீதா தேவியை சிறையில் அடைத்த ராவணனுக்குப் பலர் அறிவுரை கூறினர். ‘தவறு செய்கிறாய். அந்த மகா சாத்வியை விட்ட விடு’ என்றனர். அவன் கேட்கவில்லை. கண் முன்னால் படைத் தளபதிகளும் அன்பான சகோதரர்களும், உயிருக்குயிரான புதல்வர்களும் மாண்ட போதிலும், அவனுடைய கண்களை மூடிய காமப் புரை விலகவில்லை.

ராம பாணத்தால் அடிபட்டு வீழ்ந்த ராவணனின் அருகில் வந்த மனைவி மண்டோதரி, ‘சீதாவை விட்டு, ராமனோடு நட்பு கொள் என்று நான் கூறிய சொற்களைக் கேட்டகாமல் போனாயே’ என்று அழுது புலம்பினாள்.

‘சீதையின் மேல் நீ கொண்ட மோகமே உன்னைக் கொன்றது. உண்மையில் அந்த பதிவிரதையின் தவம் உன்னை எரித்தது’ என்று புலம்பினாள்.

‘கபி முஷ்டி’ ந்யாயத்திற்கு எடுத்துக்காட்டாக, விட்டுக் கொடுக்காத பிடிவாதமான காம, மோக அசுரர்களின் கதைகளை ஆய்வாளர்கள் எடுத்துரைக்கின்றனர். இவற்றின் செய்தி –புலனின்பங்களும், தளைகளும் பிடித்துக் கொண்டால் துக்கம், விடாவிட்டால் அழிவு, விட்டால் மோட்சம்.

பிடிப்பும் விடுப்பும்!

ஸ்ரீசைலம் காடுகளில் ஒரு சாது வசித்தார். தன்னை தேடி வரும் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கூறி உதவினார். ஒரு நாள் அவருடைய  தரிசனத்திற்காக ஒரு ஜமீன்தாரின் மனைவி வந்தாள். தன் கணவனின் உடல்நலக் குறைவு பற்றிக் கவலையோடு கூறினாள்.

‘அவருக்கு நுரையீரல் கோளாறு. மருத்துவர்கள் சிகிச்சை செய்கின்றனர். சிக்கல் என்னவென்றால், ஜமீன்தார் புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர். அவரால் அதை விட முடியவில்லை. மருத்துவர்கள் எடுத்துரைத்தாலும், தீய பழக்கம் என்னை விடாமல் பிடித்துக் கொண்டது என்கிறார்’ என்று வருத்ததோடு கூறி அறிவுரை கேட்டாள். 

சாது சற்று யோசித்து, அவரை அழைத்து வரச் சொன்னார். மறு நாள் காலை ஜமீந்தார் வரும் நேரத்தில், அந்த சாது, ஆசிரம வாயிலில்  இருந்த ஒரு தூணை இறுகப் பிடித்து  அணைத்தவாறு நின்றிருந்தார்.

‘ஜமீந்தார் அவர்களே, உங்களுக்கு வரவேற்பு கூறக் கூட என்னால் முடியவில்லை.   இந்தத் தூண் என்னைப் பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்கிறது’ என்றார் சாது.

ஜமீந்தாருக்கு வியப்பு ஏற்பட்டது. ‘சுவாமி, அது எப்படி சாத்தியம்? நீங்கள் அல்லவா   தூணைப் பிடித்து அணைத்துக் கொண்டுள்ளீர்கள்?” என்று கேட்டார்.

அதைக் கேட்டு சாது சிரித்து, ‘ஜமீந்தார் அவர்களே, உங்களை புகைப் பழக்கம் பிடித்துக் கொண்டு விட மாட்டேன் என்கிறது என்று நீங்கள் கூறினீர்களே… அதே போலத்தான் இதுவும்’ என்றார்.

அந்த கிண்டலைப் புரிந்து கொண்ட ஜமீந்தார், புகைப் பழக்கத்தை விட்டார். உடல் நலத்தைப் பெற்றார். 

ஹைந்தவ சங்கராவம்: சனாதன தர்ம மீட்பின் விடிவெள்ளி!

telangana haindava sangaravam - 2026

சங்கொலியில் இருந்து லட்சியத்தை நோக்கி…

தெலுங்கில் : பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்
 

அண்மையில் தெலுங்கு மாநிலத்தில் ஹைந்தவ சங்கராவம் என, ‘ஹிந்து சங்கராவம்’ என்ற பெயரில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு, ஹிந்துக்களின் ஒற்றுமையை அறிவித்தார்கள். அதில் பங்குகொண்ட பேச்சாளர்களும் பிரமுகர்களும் அற்புதமான கருத்துக்களைப் பகிர்ந்தார்கள். அதனை ஒரு வெற்றிகரமான, மகிழ்வான நிகழ்வாக   வர்ணிக்கலாம்.

இதன் பின்னணியில் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, ஆலயங்களின் நிர்வாகம் அரசாங்கத்தின் கைகளுக்கு ஏன் சென்றது? அந்த நேரத்தில் அரசாங்கம் அன்றி வேறு யாரும் கோவில்களை நிர்வாகம் செய்ய இயலாமல் போனார்களா? மீண்டும் அந்தக் குறைகள் எதுவும் எழாமல் தனியார் அமைப்புகள் நிர்வாகம் செய்ய இயலுமா?

அபரிமிதமான செல்வமும், சொத்துக்களும் கொண்ட நம் கோவில்களை, ‘சனாதன போர்டு’ ஒன்று ஏற்பட்டு சரியாக நிர்வாகம் செய்யக் கூடிய நிலை உள்ளதா? ஊழல் காரர்கள் நெருங்கமுடியாமல், பல்வேறு சம்பிரதாயங்களைச் சேர்ந்தவர்கள், கருத்து வேறுபாடுகள் இன்றி, இணக்கத்தோடும், சிநேகத்தோடும் நடத்த இயலுமா? அரசியல் தலையீடு இல்லாமல் தொடர இயலுமா? இவற்றுக்குத் தெளிவான பதிலை ஏற்படுத்திக் கொண்டு திட்டப்படி நடத்த வேண்டும்.

அரசாங்க நிர்வாகத்தில் கோவில் ஒழுங்கு முறை மிகவும் சேதமடைந்தது என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. பிற மதத்தவர் ஊழியர்களாகவும் வியாபாரிகளாகவும் சேர்வது விரும்பத்தகாத செயல். அதோடு பிற மதத்தவருக்கு ஹிந்து மதத்தின் மீதும், ஹிந்து தெய்வங்களின் மீதும் நம்பிக்கை இருக்காது என்பதோடு, வெறுப்பும், மதம் மாற்றும் சுபாவமும் இயல்பாகவே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

அப்படிப்பட்டவர்களின் கையில் கொடுக்கப்படும் கோவில் நிர்வாக முறைகள் குழப்பத்தில் ஆழும் என்பதில் சந்தேகம் இல்லை. அளவுக்கதிகமான அரசியல் தலையீடும், கோவில் நிதிகளின் வெளியேற்றமும் எண்ணிலடங்காதவை. ஆலயங்களின்   வளர்ச்சிக்கும், ஹிந்து தர்மத்திற்கும் அன்றி பிற மதத்தவருக்காகவும், வேறு பல  செயல்பாடுகளுக்காகவும் கோவில் வருமானத்தைப் பயன்படுத்துவது அனைவரும் அறிந்ததே.

அரசாங்கம் மாறும் போதெல்லாம் கோவில் நடைமுறைகளில் ஏற்ற இறக்கங்களும், மாற்றங்களும் ஏற்பட்டு ஆலய அமைப்பு சேதமடைகிறது. அதே போல், மாநிலங்களில் ஹிந்து எதிர்ப்பு அரசுகள் அமைந்தால், ஆலயங்களின் நிலைமை மேலும் மோசமாகிறது. கோவில்களின் நல்லது கெட்டதுகளைக் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதோடு, புதுப்புது தொல்லைகளை உருவாக்குவார்கள்.

இந்தப் பின்னணியில் மிகவும் கவனமாக ‘சனாதன போர்டை’ உருவாக்கி, நடத்துவது என்பது சிக்கலான செயலே. தன்னலமின்மை, நிர்வாகத் திறன், கடவுள் பக்தி, உள்ளத் தூய்மை எல்லாம் நிறைந்த, ஆலய வரலாறு, ஆகம முறைகள் எல்லாம் தெரிந்த, திடமான குழுக்கள் உருவாக வேண்டும்.

பிற மதத்தவர் தம் மத போர்டுகளை ஏற்படுத்திக் கொண்டு, சுயமாக நிர்வாகம் செய்து கொண்டு, தம் மத நிலையங்களின் வருமானத்தைத் தம் மத வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். அத்தகைய ஒன்றுபட்ட உணர்வு இந்து மதத்தவருக்கு சாத்தியமா?

ஜாதிச் செருக்கு, மடாதிபதிகளின் மோதல்கள், சைவ, வைணவர்களின் வேறுபட்ட கருத்துகள் போன்றவை ஆழமாக வேர்விட்ட நிலையில், ஒன்றுபட்ட கூட்டு  இலட்சியத்திற்காக கருத்தொற்றுமையும், சமரசமும் காட்டுவதில் இந்துக்கள் ஒன்றுபடுவர்களா?

பரஸ்பரம் வேறுபட்ட கருத்துகள், அதிகார மோகம், ஊழல் மனப்பான்மை போன்றவை எங்கு பார்த்தாலும் இருக்கத்தான் செய்யும் என்ற விட்டேத்தியான இயல்பில் உள்ளது ஹைந்தவ அமைப்பு. ஆனால், சாமானியர்களிடம் நம்பிக்கையும் ஒற்றுமையும் துளிர்விட்டு வருகிறது.

ஹிந்துக்களின் ஒற்றுமையை சகித்துக் கொள்ள விரும்பாத விரோத சக்திகள் மதவாரியாகவும், அரசியல் வாரியாகவும் சிதைப்பதற்குத் தயாராக உள்ளன. அவர்களின் தீய வியூகங்களில் இருந்தும் இந்த ஆலயப் பேரமைப்பு காப்பாபற்றப்பட வேண்டும்.  

ஒரு பெரிய சுமையை ஒரு தோளில் இருந்து வேறொரு தோளுக்கு மாற்ற வேண்டி வரும்போது, நடுவில் நழுவி விழாமல், புதிய தோள் திடமாகவும், நிலையாகவும் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் அல்லவா?

சில மாநிலங்களில் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் நடக்கும் கோவில்கள் சரியாக நடக்கின்றனவா? நன்கு கற்றறிந்து, புரிதலோடு, முழுமையாக ஹிந்துமதப் பிரிவுகளை அரவணைத்துக் கொண்டு, அந்தந்த ஆகம சம்பிரதாய பாரம்பரியங்களைச் சிதறாமல் முன்னெடுக்கும் பலமான அமைப்பு ஏற்பட வேண்டும். சுயநலனை ஒதுக்கி, பரந்த உள்ளத்தோடு சேவை புரியும் அறிஞர்கள் ஒன்றிணைய வேண்டும்.

ஹிந்து ஆலயங்கள் தூய்மையாகவும், குறைகளின்றியும், சூரிய, சந்திரன் இருக்கும் காலம் வரை க்ஷேமமாகவும், மேன்மையடையும் காலம் விரைவில் வர வேண்டும் என்று பரமேஸ்வரனை பிரார்த்தனை செய்வோம்.

(source – தலையங்கம், ருஷிபீடம், பிப்ரவரி, 2025)

தெருக்களுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர்களைச் சூட்டுக!

gandhi memorial day - 2026

நாட்டுக்குச் சுதந்திரம் வேண்டாம் என்றும், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டுச் செல்லக் கூடாது என்றும், ஆங்கிலேயர் சென்றுவிட்டால் இந்தியர்களால் ஒரு குண்டூசிகூடத் தயாரிக்க முடியாது என்றும் கருத்துகளைத் தெரிவித்து, இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு எதிராக இருந்த ஈ.வே.ரா மற்றும் திராவிட இயக்கத்தவர்களின் பெயர்களை தமிழகத்தில் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும், பொது இடங்களுக்கும் தெருக்களுக்கும் திராவிட மாடல் அரசு சூட்டி வரும் நிலையில், திமுக.,வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், தெருக்களுக்கு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறைந்த சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த தெருக்களுக்கு அவர்கள் பெயர்களைச் சூட்ட வேண்டும் என, அரசுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் வாரிசு நல பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிசுதந்திர போராட்ட வீரர்களின்
வாரிசு நல பிரிவு சார்பாக மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமும் தியாகிகள் தினமும் சென்னை எழும்பூரில் உள்ள ஜீவன் ஜோதி அரங்கில் இயக்கத்தின் பொருளாளர் கே.பொன்னம்பலம் தலைமையில் நடைப்பெற்றது.

நிர்வாகிகள் பா.ஞானவேல் கதர் வி. வெங்கடேசன் ஆருண்ரசித் கோவை எஸ்.முத்துவேல், கே. என் சீனிவாசன்ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எஸ். டேவிட் கே.ஜெயக்குமார். லட்சுமிராஜராம் ராயப்பேட்டை எஸ்.கே. அன்பழகன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்கள்.

கெளரவ ஆலோசகர் பொன் கிருஷ்ணன மூர்த்தி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம.நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு காந்தியடிகள் திருவுரு படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தினர்.

நிகழ்ச்சியில்,தியாகிகள்இருசாகவுடர், பெருமாள், சித்தா சாமி மற்றும் பண்ருட்டி ஆர்.நிஜார் அகமது, சி.சின்னையா டி. புஷ்பராஜ், இ.ரிச்சர்ட் , மேலூர் ஜெயபால்உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்கள் அலங்கரிப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது. மறைந்த தியாகிகள் வாழ்ந்த தெருவுக்களுக்கு அவர்கள் பெயர்களைச் சூட்டி அவர்களின் தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக., கொடி கட்டிய காரில் வந்து பெண்களைத் துரத்தி மிரட்டிய நபர்கள்; சென்னையில் பயங்கரம்!

dmk goondas in a car tracing girls - 2026

சென்னை அருகே இரவு நேரத்தில் காரில் வந்த பெண்களை, தி.மு.க., கொடி கட்டிய 2 கார்களில் துரத்தி வந்து சிலர் மிரட்டிய வீடியோ காட்சிகள் பெண்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த, முட்டுக்காடு பாலம் அருகே இரவு நேரத்தில் கார் ஒன்றில் சில பெண்கள் பயணித்துள்ளனர். அப்போது அவர்களின் காரை 2 கார்களில் வந்த இளைஞர்கள் சிலர் கண்டுள்ளனர். அதில் ஒரு காரில் தி.மு.க., கொடி கட்டப்பட்டிருந்தது. பெண்களை கேலி செய்த அவர்கள், ஒரு கட்டத்தில் பெண்கள் வந்த காரை துரத்தியுள்ளனர்.

இதைக் கண்ட பெண்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். என்ன நடக்கிறது என்பதே புரியாமல், பயந்து போய், பீதியில் அலறிய பெண்கள் தாங்கள் வந்த காரை நிறுத்தாமல் ஓட்டியுள்ளனர். பின்னால் இரண்டு கார்களில் அதிவேகத்தில் துரத்திக் கொண்டு வந்த அந்த நபர்கள், பெண்கள் வந்த காரை முந்திச்சென்று சாலையின் நடுவழியில் மறித்துள்ளனர். அச்சத்தில் இருந்த பெண்கள், காரை ரிவர்ஸ் எடுக்க முயற்சித்த போதும், விடாமல் துரத்தியுள்ளனர். அந்தப் பெண்கள் காரை நிறுத்த, திமுக., கொடி கட்டிய காரில் இருந்து இறங்கி வந்த ஒருவர் அவர்களை நோக்கி வேகமாக வந்து, ஆவேசமாக தட்டி ஏதோ கூறி மிரட்டியுள்ளார். 

நிலைமையின் முக்கியத்துவத்தை உணர்ந்த பெண்களில் ஒருவர், தமது செல்போனில் நடந்த அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அவர்கள் பயத்தில் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு போன் செய்யும்படி கூறும் உரையாடலும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ இணையதளங்களில் வைரலானது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கானாத்தூர் காவல் நிலையத்தில் இந்தச் சம்பவம் குறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, இளைஞர்கள் வந்த 2 கார்களில் வெள்ளை நிறம் கொண்ட ஒரு காரில் திமுக., கட்சிக் கொடி கட்டப்பட்டு இருந்தததையும், தங்களை மிரட்டிச் சென்றதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களை சாலையில் மிரட்டியதுடன், தங்களின் வீடு வரை பின்தொடர்ந்து வந்து பயமுறுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஜன.25ஆம் தேதி இரவு நடந்ததாகவும் அதில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. 

இந்தப் புகாரின் பேரில்  வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

இந்நிலையில்,  கார் சேஸிங்கில் நடந்தது என்ன? என்பது குறித்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதில், 

கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்து பெண்களின் வீடு வரை காரை துரத்திச் சென்ற இளைஞர்கள் தொடர்பில், முட்டுக்காடு அருகே ஜன.25ம் தேதி தனது காரை 2 கார்கள் இடைமறித்ததாக பெண் புகார் அளித்தார். இரு கார்களில் இருந்தவர்கள் அப்பெண்களின் வீடு வரை துரத்தி வந்ததாக புகாரில் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.  

அந்தப் பெண்கள் தங்கள் காரை ரிவர்ஸ் எடுத்த போது, தங்களின் வாகனத்தை இடித்ததாகவும், ஆனால் அது தொடர்பாக மன்னிப்பு கூட கோரவில்லை என்றும் கூறி அப்பெண்ணின் வீட்டருகே அந்த இளைஞர்கள் வாக்குவாதம் செய்துள்ளதாகவும் போலீஸார் கூறினர். 

ஆனால் அந்த இளைஞர்களின் காரை தாங்கள் இடிக்கவில்லை என்றும், இது தொடர்பான வீடியோக்கள், சிசிடிவி காட்சிகளை ஆய்ந்தால் உண்மை தெரியும் என்றும் புகார் அளித்த பெண் மறுப்பு தெரிவித்து ஊடகத்திடம் பேசியுள்ளார். இருப்பினும், பெண்கள் சென்ற காரை விரட்டியதாகக் கூறப்படும் கார்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் என்ன நடந்தது என ஆய்வு செய்து வருகிறோம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. 

அண்ணாமலை கண்டனம்! 

இந்நிலையில், தி.மு.க. கொடி கட்டிய காரில் அத்துமீறியுள்ளனர் என்று பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை இ.சி.ஆர் சாலையில் பெண்களை இளைஞர்கள் துரத்திய வீடியோ பார்க்கும் போது பதறுகிறது. தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இ.சி.ஆர். சம்பவமும் ஓர் உதாரணம் என்று, அவர் கூறியுள்ளார். 

எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை ஈசிஆரில் காரில் சென்ற பெண்களை சிலர் துரத்திச் சென்ற சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.  பெண்களுக்கு எதிரான குற்றங்களை மேற்கொள்ள திமுக கொடி என்பது லைசன்சா? என்று,  எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். 

அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தள பதிவு: 

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த மகிழுந்தை, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்த சிலர் வழிமறித்து மகிழுந்தில் இருந்த  பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய  காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையில் பயணிக்கும் பெண்களை வழிமறித்து தொல்லை கொடுக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு  துணிச்சல் ஏற்பட்டிருப்பது அச்சமும் கவலையும் அளிக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்த சமூக விரோதிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை மகிழுந்தைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது?  மகிழுந்தில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாலா?  அல்லது  தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக எத்தகைய குற்றங்கள் நடந்தாலும் அதை அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பதாலா?  என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது. கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை வழிமறித்து அத்துமீறிய, திமுக கொடி கட்டப்பட்ட மகிழுந்தில் வந்தவர்கள் மீது  காவல்துரையினர் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூகத் தளத்தில் ஒரு குரல்

இதனிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக சமூகத் தளங்களில் தமிழக போலீஸை விமர்சித்து, பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றன. அதில் ஒருவர் வெளியிட்ட கருத்து… 

ஆனா… காரை துரத்தின குருப்ல ஒருத்தனை கூட பிடிக்காமலேயே “காரை ஏன் துரத்தினார்கள்?”னு காரணத்தை கண்டுபிடிச்சு சொன்னான் பார்த்தியா… உலகத்துலேயே “திராவிட போலீஸை” அடிச்சிக்க ஆளே இல்லய்யா… 

   காரை விரட்டிய குண்டர்களில் ஒருத்தனைக் கூட இன்னமும் பிடிச்சு விசாரிக்கலை…,

   “காரை நாங்க இடிக்கவே இல்லை”ன்னு அந்தப் பெண்கள் தரப்புல சொல்றாங்க…,

    அப்புறம் எப்படி முதல் கட்ட விசாரணையில் “காரை இடித்ததால் பின் தொடர்ந்து விரட்டினார்கள்”னு காவல்துறை கண்டு பிடிச்சிருப்பாங்க…

    இந்தக் கேஸ்ல எத்தனை “சார்” கள் சம்பந்தப்பட்டு இருக்காங்கனு தெரியலையே…

கண் துடைப்பு நாடகம் இல்லாமல், உண்மையாக வசதி செய்து தர இந்து முன்னணி கோரிக்கை!

1783428 palani murugan temple - 2026

கண்துடைப்பு நாடகம் வேண்டாம். பக்தர்களுக்கு உண்மையான வசதியை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று, இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இந்து முன்னணியின் மாநிலத்தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் அவர் கேட்டுக் கொண்டிருப்பதாவது…

தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செய்யவும் லட்சக்கணக்கான முருக பக்தர்கள் அறுபடை வீடு முருகன் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

அவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்துதர வேண்டும். அதுபோல பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனி வழி அமைத்தும், ஒளிரும் குச்சியை அனைத்து பக்தர்களுக்கும் வழங்க வேண்டும். ஆனால் தமிழக அரசு முருக பக்தர்களை அலட்சியப்படுத்துகிறது. முருக பக்தர்களின் கோடிக்கணக்கான காணிக்கை மற்றும் அவர்கள் வாங்கும் பொருட்களால் பல கோடி வருமானம் பார்க்கிறது தமிழக அரசு. ஆனால் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளைக்கூட செய்து தருவதில்லை என்பது மனிதாபிமானமற்ற செயல்.

கும்பமேளா நடக்கும் உத்திரப்பிரதேசத்தில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி எத்தகைய சிறப்பான வசதிகளை செய்துள்ளது அந்த அரசு. இதன்மூலம் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். உலக அளவில் மக்கள் விருப்பத்துடன் வருகை தருவதைக் காண முடிகிறது.

ஆனால் தமிழகத்தில் தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகனின் திருவிழாவிற்கு அரசு எந்த ஏற்பாடும் முறையாக, முழுமையாக செய்வதில்லை. மேலும் பக்தர்கள் பாதுகாப்பில் கவனம் கொடுப்பதில்லை. இந்நிலை மாற வேண்டும்.

பழனியில் பாதயாத்திரை சென்று திரும்பும் பக்தர்களுக்கு இலவச பஸ் வசதி செய்வதாக தற்போது செய்தியில் வந்து உள்ளது. அதனை முழுமையாக பயனடையும் வகையில் செய்ய வேண்டும். அதைவிடுத்து கண்துடைப்பு நாடகமாக இதனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அதுமட்டுமல்லாது பாதயாத்திரை வரும் பக்தர்கள் அனைவரும் திரும்பி செல்லத்தான் பேருந்தில் பயணிப்பாளர்கள். அதற்குத்தக்க பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இது வழக்கமான பேருந்து சேவை இல்லை என்பதை உணர்ந்து செயல்படுத்த அரசு கவனம் கொடுக்க வேண்டும்.

மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதை தடை செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம். திருவிழாக்களில் அன்னதானம் வழங்குவது நேர்த்தி கடனாக தொன்றுதொட்டு நடைபெறுகிறது. அதனை உணவு பாதுகாப்பு என்ற பெயரில் தடுப்பது அநியாயம். இத்தகைய நற்பணி, வியாபாரம் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.

பல லட்சம் பக்தர்களுக்கு அரசு உணவளிக்க போவதில்லை. நல்ல எண்ணத்துடன் தருபவர்களை சட்டத்தை காட்டி மிரட்டுவது சரியான செயல் இல்லை. நமது நாட்டில் அன்னச்சத்திரம் வைத்து பசியாற்றுதல் என்ற வரலாறு உண்டு. அந்த வகையில் மக்களுக்கு சேவை செய்ய வருபவர்களை தடுப்பது கூடாது.

எனவே வருகின்ற காலங்களில் நடைபெற இருக்கின்ற தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற அனைத்து ஆன்மிக விழாக்களுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செய்ய தமிழக அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்ரோ அடித்த செஞ்சுரி! வெற்றிகரமாக ஏவப்பட்ட 100வது ராக்கெட்!

isro 100th launch - 2026

இஸ்ரோ தனது நூறாவது ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவித்தார்.

  • இஸ்ரோ தனது முதல் ராக்கெட்டை கடந்த 1979ம் ஆண்டு ஆக.,10ம் தேதி விண்ணில் ஏவியது.
  • இதுவரை 548 ராக்கெட்டுகள் இந்தியா சார்பில் விண்ணில் பாய்ந்துள்ளன; இதுவரை 6 தலைமுறை ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளன.
  • சந்திரயான், ஆதித்யா போன்ற திட்டங்கள் இஸ்ரோவின் முக்கிய சாதனைகளுள் ஒன்று.
  • GSLV F-15 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட NVS 02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
  • இந்தியா இதுவரை 548 செயற்கைக்கோள்களை வெற்றிகரமான விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

இந்தியாவின் நூறாவது செயற்கை கோள் ஏவு வாகனமான GSLV F15, NVS-02 செயற்கை கோளை சுமந்து கொண்டு இன்று காலை 6:23 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திப்பட்டது என அதன் தலைவர் பெருமதிப்புடன் அறிவித்தார்.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, இவ்வாண்டின் முதல் செயற்கைக்கோளாக, ஜன.29 இன்று, நூறாவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இருக்கிறார்கள்.

பொதுவாக இரண்டு விதமான ஏவு வாகனம் பயன்படுத்தி வருகிறோம். ஒன்று PSLV, மற்றொன்று GSLV. இதில் PSLV என்பது போலார் சாட்டிலைட் லான்ஞ் வெஹிக்கல் என்பதின் விரிவாக்க சுருக்கம் ஆகும்.அதுபோலவே GSLV என்பது ஜியோ சின்க்கரனைஸ் லான்ஞ் வெஹிக்கல் என்பதின் விரிவாக்க சுருக்கம் ஆகும். இதில் இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இஞ்சின் பொருத்தப்பட்ட 11வது ஏவு வாகனம் ஆகும்.

பி.எஸ்.எல்.வி துருவத்தில் நிலைநிறுத்த பயன்படுத்துகிறார்கள்.

ஜி.எஸ்.எல்.வி என்பது புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்த பயன்படுத்துகிறார்கள்.

இப்போது ஏவப்பட்டிருக்கும் இந்த செயற்கைக்கோள் மிக முக்கியமான இரண்டு விதமான பயன்பாடுகளை கொண்டுள்ளது என்கிறார்கள். அதில் பிரதானமானது NaviC . நமது இந்தியாவிற்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட gps போன்ற ஒன்று என்பதாக புரிந்து கொள்ள பாருங்கள். தற்சமயம் புவியீர்ப்பு விசையின் வட துருவம் நகர்ந்து கொண்டே வரும் சூழலில் அதனால் துல்லியமான மற்றும் சரியான ஸ்டாண்டர்ட் பொஸிஷனிங் சிஸ்டம் SPS வழங்க இது அவசியம் ஆகுகிறது. தற்போது உலக அளவில் இயங்கும் 40 m துல்லியம் திறனை தாண்டி இது 20m துல்லியத்திறன் கொண்டு வந்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.

நிச்சயம் இது ஒரு மைல் கல் சாதனையாக பார்க்கப் படுகிறது. ஏனெனில் இது இந்தியாவின் நிலப்பரப்பை தாண்டி கிட்டத்தட்ட 1500 கிலோமீட்டர் சுற்றளவில் இயங்கும் விதத்தில் வடிவமைத்து இருக்கிறார்கள்.

இங்கு NaviC என்பது நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன் என்பதின் விரிவாக்க சுருக்கம் ஆகும்.

நேரம் காலம் துல்லியமாக தர அணு கடிகாரம் ஒன்று இதனுள் அடங்கியிருக்கிறது. மொத்தம் இதனுடன் சேர்த்து ஆறு செயற்கை கோள் இந்த வரிசையில் வருகிறது. ஏற்கனவே ஐந்து விண்வெளியில் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டு இயங்கி வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாண்டில் வெற்றிகரமாக கணக்கை துவக்கிவைத்து இருக்கிறார்கள். இது மென்மேலும் வளரும் என்பதும் நிச்சயம்.