Home Blog Page 151

பக்தி பகல் வேஷம் போடுவது யார்? தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி கேள்வி!

kadeswara subramaniam hindu munnani - 2026

பக்தி பகல் வேஷம் போடுவது யார்? தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு பயன்படுத்துகின்றனர் என்று சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

இந்தக் கோவில் மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் கடவுள் படம் எதுவும் வைக்கப்படவில்லை, கோயில் உண்டியல் பணத்தில் திருமணச் செலவுகள் செய்யப்படுகின்றன. ஆனால் விளம்பரம் மட்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு? இது என்ன வேஷம் என்பதை முதல்வர் தான் விளக்க வேண்டும்

கோயிலில் நடக்கும் எந்த ஒரு ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கலந்து கொள்வதில்லை. அமர்ந்த இடத்தில் இருந்தே காணொளி காட்சி மூலம் மட்டுமே கலந்து கொள்வது எந்தவிதமான பக்தி என்பது முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.!

கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று பேசிய ஈவேரா தான் எங்கள் தலைவர் என்று ஒருபுறம் கூறுவது, மறுபுறம் நான் அறநிலையத்துறை சார்பாக நடக்கும் நிகழ்ச்சிகளில் தான் அதிகம் கலந்து கொள்கிறேன் என பசப்புவது தான் முதல்வரின் பகல் வேஷ அரசியலாகும்.

கோயிலுக்குச் சென்று திருநீறு கொடுத்தால் அதை நெற்றியில் பூசாதது. அப்படி பூசினாலும் அது மீடியாவில் செய்தியாக வந்து விடக்கூடாது என்பதால் அதை அழிப்பது பகல் வேஷ அரசியலா? பசப்பு அரசியலா? என்பதை முதல்வர் ஸ்டாலின் விளக்க வேண்டும்.

முருகப்பெருமானின் கந்த சஷ்டி கவசத்தையும் வேல் வழிபாட்டையும் இழிவுபடுத்திப் பேசியவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையோ, கண்டனமோ தெரிவிக்காமல் பழனியில் முருக பக்தர்கள் மாநாடு நடத்துவது யாரை ஏமாற்றப் போடும் பகல் வேஷ அரசியல் நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள்.

தமிழகத்தில் 2000 கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக வெற்று விளம்பரம் செய்யும் திராவிட மாடல் அரசு, இதில் கும்பாபிஷே விழாவிற்கு அறநிலையத்துறை, தமிழக அரசு செய்த செலவு எவ்வளவு என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிடத் தயாரா ?

ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின் பல கோவில்கள் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகவும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து இருப்பதாகக் கூறி இடித்துத் தரைமட்டமாக்கினார்களே! கோவில் நிலத்தில் பேருந்து நிலையம், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளதே! இவைகளை இடித்து அப்புறப்படுத்த துணிவு உண்டா?

நாத்திகர்களும், நக்சல்களும் நடத்தும் கூட்டத்தில் கலந்துகொண்டு இந்து சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவதும் ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது பக்தி வேஷம் போடுவதும் சந்தர்ப்பவாத பகல்வேஷ அரசியலா? இரவு வேஷ அரசியலா? என முதல்வர் ஸ்டாலின் தான் விளக்க வேண்டும்.

36 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற்ற நியூசிலாந்து!

ind vs nz test series - 2026
#image_title

இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் –  பெங்களூரு – ஐந்தாம் நாள் – 20.10.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா அணி (முதல் இன்னிங்க்ஸ் – 46,ஹென்றி 5-15, ஓ ரூர்க் 4-22, இரண்டாவதுஇன்னிங்க்ஸ் (462, ஸர்ஃப்ராஸ் கான்  150, ரிஷப்பந்த் 99, விராட் கோலி 70, ரோஹித் ஷர்மா 52, ஜெய்ஸ்வால் 35, மேட் ஹென்றி 3/102, ஓ ரூர்கே3/92, அஜாஸ் படேல் 2/100); நியூசிலாந்துஅணி (402, கான்வே91 ரன், ரச்சிந்த்ரா 134, டிம்சௌதீ 65, வில் யங் 33, ஜதேஜா 3/72, குல்தீப் 3/99, சிராஜ் 2/84, பும்ரா 1/41, அஷ்வின்1/94); இரண்டாவது இன்னிங்க்ஸ்110/2; நியூசிலாந்து அணி8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் முதல் டெஸ்ட் வெற்றியைப் பெற நியூசிலாந்து அணிகடுமையாக உழைத்ததன் மூலம் உற்சாகமான பெங்களூரு டெஸ்ட் தகுதியான உச்சத்தை அடைந்தது. மேகமூட்டமான வானத்தின் கீழ், பந்து சிறப்பாக ஸ்விங் ஆனது. ஜஸ்பிரித்பும்ரா ஒவ்வொரு இரண்டாவது பந்திலும் ஒரு விக்கெட் எடுப்பது போல அச்சுறுத்தினார், மேலும் பார்வையாளர்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு பந்திற்கும் அவுட் என  முறையிட்டனர்,ஆனால் நியூசிலாந்து எல்லாவற்றையும் எதிர்த்து 107 என்ற இலக்கை எட்டியது.

          பும்ரா, டாம் லாதமை தனது இரண்டாவது பந்தில் ஆட்டமிழக்கச்செய்த பின்னர், வில்யங் அமைதியான ஆடினார். ஆனால் டெவோன் கான்வே அதிரடியாக ஆட  தனதுமுயற்சியைச் செய்தார். சுற்றி குதித்து, உடலில் அடிகளை வாங்கி, மோசமான ஷாட்களை விளையாடாமல்,ஆடினார். இறுதியில் பும்ரா கான்வேயைப் (39 பந்துகளில் 17 ரன்கள்) பெறுவதற்குள், அவர் ஸ்பெல்லின் முடிவில்இருந்தார், நியூசிலாந்து ஏற்கனவே 35 ரன்கள் எடுத்திருந்தது. அதற்குள் குறைந்த பட்சம் 11 ரன்களையாவது சேமித்திருந்த பீல்டர்கள் தங்களால் முடிந்ததைச் செய்தனர்.

          ஆனால் மீண்டும் இந்தியாஆடுகளத்தை தவறாகப் படித்தது அவர்களை காயப்படுத்தியது. நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள அவர்களிடம் மூன்றாவது சீமர் இல்லை, மேலும் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா மீதமுள்ள ரன்களை ஒப்பீட்டளவில் எளிதாக வீழ்த்தினர். முதல் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தவிர,நாங்கள் மிகவும் சிறப்பாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினோம்’ என்று ரோஹித் கூறினார்.

          பும்ரா பந்துவீசும்போது, ​​​​அடுத்த ரன்எங்கிருந்து வரும் என்பதைப் பார்க்க அனைவரும் சிரமப்பட்டார்கள். அவர் எட்டு ஓவர்களில்22 தவறான ஷாட்களை ஆடவைத்தார். தொடர்ந்து மேற்பரப்பில் இருந்து ஸ்விங் இயக்கத்தைக் கொண்டுவந்தார். லாதம்துல்லியமான இன்ஸ்விங்கரைக் முழுமையாக கவர் செய்துவிட்டோம் என நினைத்திருந்தபோதுபந்து பிட்சாகி,அவரைத் தாண்டி உள்ளே நுழைந்தது. கான்வே விக்கெட்டைச் சுற்றியிருக்கும் கோணத்தை மூடிக் கொண்டு விளையாடியதாக நினைத்தார்,ஆனால் இது பிட்ச்சிங் முடிந்தபிறகு ஸ்விங் ஆனது, பிட்ச் மற்றும் கான்வேயை அடைவதற்கு இடையில் பாதியிலேயே அதன் பாதையை மாற்றத்தொடங்கியது, வெளிப்புற விளிம்பில் பட்டு கேட்ச் ஆனது.

          பும்ரா இப்போது தனதுஏழாவது ஓவரில் இருந்தார், முதல் இன்னிங்சில் சதம் அடித்த ரவீந்திரா,அவர் சந்தித்த முதல் மூன்று பந்துகளில் இரண்டு பவுண்டரிகளைப் பெற்றபோது அவர் தனது ஸ்பெல்லை முடித்தார்.

          யங் பின்னர் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜாவை தனது முதல் ஓவரிலேயே பவுண்டரிகளுக்கு அடித்தார். மதிய உணவுக்குப் பிறகுபெங்களூரு வானிலையை நம்பாமல், இரண்டு பேட்டர்களும் சுழற்பந்து வீச்சாளர்களைத் தாக்கி விளையாடினர். இந்திய ஸ்பின்னர்கள்எதிர்பார்த்தது போல பந்து சுழலவில்லை.

          இந்தியா முதல் இன்னிங்ஸில்46 ரன்களுக்கு ஆட்டமிழந்ததில் இருந்து குறிப்பிடத்தக்க மறுபிரவேசம் செய்தது, ஆனால் இறுதியில், நியூசிலாந்து இந்தியாவில் அவர்களின் மூன்றாவது டெஸ்ட் வெற்றியையும் 1988க்குப் பிறகு அவர்களின் முதல் வெற்றியையும் மட்டுமே அடைய நீண்ட நேரம்விளையாடியது.

வீட்டின் அருகே பட்டாசு தயாரித்தவர் கைது; வெள்ளைத் திரி வைத்திருந்தவர் கைது!

crime scene - 2026

வீட்டின் அருகே பட்டாசு தயாரித்தவர் கைது

வெம்பக்கோட்டை அருகே வீட்டின் அருகே பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் கீழச் செல்லையாபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்(31) என்பவர் வீட்டின் அருகே 60 சாட் வெடிக்கான குழாய்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளைத் திரி வைத்திருந்தவர் கைது

வெம்பக்கோட்டை அருகே அனுமதியின்றி வெள்ளைத்திரிகளை வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் தா.கோட்டையூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, தவிட்டுராஜ் என்பவர் வீட்டில் அனுமதியின்றி பட்டாசுக்கான வெள்ளைத் திரி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

குடும்பத் தகராறு; 4 பெண் குழந்தைகளுக்கு அரளி விதை கொடுத்து தாய் தற்கொலை முயற்சி!

விருதுநகர் அருகே அரளி விதைகளை 4 பெண் குழந்தைகளுக்கு கொடுத்து தானும் உண்ட தாய் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஜமீன் சல்வார்பட்டியைச் சேர்ந்த மாரீஸ்வரன் மனைவி கடல்மணி(29). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளன. கணவன் மனைவி இடையே குடும்பத் தகராறு அடிக்கடி ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் தகராறு ஏற்படவே, மனமுடைந்த கடல் மணி, வீட்டில் இருந்த ஆட்டோவில் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு ஆவுடையாபுரம் இரயில்வே கேட் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு யாரும் இல்லாத இடத்தில் குழந்தைகளுக்கு அரளி விதையை கொடுத்ததோடு, தானும் அதை உண்டுள்ளார். இதனால் சிறிது நேரத்தில் குழந்தைகள் மயக்கமடைந்தனர்.

இந்நிலையில், அவர் வீட்டில் இல்லாததை அறிந்த அவரது சகோதரர் ஈஸ்வரன், கடல்மணியை செல்போனில் அழைத்துள்ளார். அவரிடம் நடந்தவற்றை கடல்மணி கூறியுள்ளார். இதையடுத்து, விரைந்து வந்த ஈஸ்வரன் 5 பேரையும் மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

இந்நிலையில், மேல் சிகிச்சைக்காக கடல்மணியை மதுரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறா. இச்சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஸ்ரீ பிச்சையம்மாள் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை!

poolampatti thiruvilakku poojai - 2026
#image_title

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 64.பூலாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பிச்சையம்மாள் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடந்தன. கோவில் வளாகப் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு புதுப்பட்டி ராஜேஸ்வரி அவர்களின் அம்மன் பாடல் கச்சேரியுடன் உலக நன்மை வேண்டியும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் எராளமான பெண்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பூஜை பொருட்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பிச்சையம்மாள் கோவில் பங்காளிகள் செய்து இருந்தனர்.

திருப்பரங் குன்றத்தில் விநாயகர் கோயில் இடித்து அகற்றம்! போராடிய இந்து இயக்கத்தினர் கைது!

madurai temple destroyed - 2026
#image_title

மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை அகற்ற முயன்ற அரசு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் முன்னணி மற்றும் ஹனுமன் சேனா கட்சியை சேர்ந்த 7 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கிரிவலம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாக ஆக்கிரமிப்பு கிரிவலப்பாதை மற்றும் சுற்றுப் பகுதிகளில் எடுத்து வந்த நிலையில், இன்று சன்னதி தெருவில் உள்ள திருப்பரங்குன்றம் நுழைவாயில் உள்ள கல்யாண விநாயகர் திருக்கோவிலை அகற்ற மதுரை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இன்று காலை முற்பட்டனர்.

கல்யாண விநாயகர் கோவிலை அகற்ற முயன்ற அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் , இந்து முன்னணி பாஜக மற்றும் ஹனுமன் சேனா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மாநகராட்சி அதிகாரிகளிடமும் , பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடமும், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வெகுநேரம் காவல் துறையினர் மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அவர்களிடம், ஆக்கிரமிப்பு அகற்றுவதாக எடுத்துக் கூறியும் அங்கிருந்து செல்லாததால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஏழுக்கும் மேற்பட்ட பாஜக, இந்து முன்னணி மற்றும் ஹனுமன் சேனா கட்சி நிர்வாகிகளை காவல் துறையினர் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

அதன் பின்னர், ஆக்கிரமிப்பில் உள்ள கல்யாண விநாயகர் திருக்கோவிலை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவிலின் சுற்றுச்சுவர் முழுவதையும் அகற்றினர். திருப்பரங்குன்றம் கோவில் நுழைவாயில் முழுவதும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வாடிப்பட்டி ஐயனார் கோயில் விழா: வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த கோரிக்கை!

vadipatti vadamadu manjuvirattu - 2026
#image_title

மதுரை வாடிப்பட்டியில் ஆதி அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைபெற்று வந்த  வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை மீண்டும் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் காளை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நீரேத்தான் மேட்டுநீரேத்தான் கிராமத்திற்கு பாத்தியப்பட்ட ஆதி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா வருடம்தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை திடலில்,  வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது. .

இந்த நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாப்பு கருதி காவல் துறையினர் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு கொடுத்து வந்த அனுமதியை ரத்து செய்தனர். இதனால் , காளை உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் ஆகியோர் தங்களின் காளைகளை அவிழ்க்க முடியாமல், கவலையில் இருந்தனர் . 

இந்த ஆண்டாவது வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறும் என்ற ஆவலில் இன்று காலை 10க்கும் மேற்பட்ட காளைகளுடன்,  அதன் உரிமையாளர்கள் வாடிப்பட்டி தாதம்பட்டி மந்தை திடலுக்கு காளைகளை கொண்டு வந்தனர் . ஆனால் , வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெறும் மந்தை திடலில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப் பட்டிருந்த நிலையில், காளை உரிமையாளர்களும் மாடுபுடி வீரர்களும் சோகத்துடன் திரும்பி சென்றனர் .

அங்கிருந்த காளை உரிமையாளர் கூறுகையில்  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை முறையாக அனுமதி  பெற்று பொதுமக்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நடைபெற்று வந்தது. ஒரு சிலரின் தனிப்பட்ட காரணங்களுக்காக வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நிறுத்தப் பட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் போட்டியை நடத்துவதற்கு அரசு முன்வர வேண்டும் அதற்காக அமைச்சர் மூர்த்தி மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து அடுத்த ஆண்டாவது வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடு  செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

அக்.24ல் மருது பாண்டியர் 223வது நினைவு தினம்! சிவகங்கையில் கட்டுப்பாடுகள் தீவிரம்!

maruthu brothers - 2026
#image_title

மருதுபாண்டியர் நினைவு தினம். அரசு அலுவலர்கள் ஆலோசனை.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில், மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு தின அரசுவிழா, காளையார் கோவிலில் நினைவு அனுசரிப்பு மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா  ஆகிய  நிகழ்வுகளின் போது, கடைப்பிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக  பின்பற்றுவது குறித்த, கலந்தாலோசனைக்  கூட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமையில் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு தின அரசுவிழா, காளையார்கோவிலில் நினைவு அனுசரிப்பு மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா ஆகிய நிகழ்வுகளின் போது, கடைப்பிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுதல் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், மருது பாண்டியர்களின் 223-வது நினைவு நாள் அரசு விழாவாக ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு வருகின்ற 24.10.2024 அன்று திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச்சிலைகளுக்கு அரசின் சார்பில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, கௌரவிக்கப்படவுள்ளது. 

இந்நிகழ்வில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களை சார்ந்த பொதுமக்களும் ஆகியோர் கலந்து கொண்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்கள். அதேபோன்று, அக்டோபர் 27-ஆம் தேதி காளையார்கோவில் மருதுபாண்டியர்களின் நினைவு அனுசரிப்பு மற்றும் அக்டோபர் 30-ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை ஆகிய நிகழ்வுகளை முன்னிட்டு, நமது மாவட்டத்திலிருந்து செல்லக்கூடிய பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், இந்நிகழ்வுகள் தொடர்பாக, எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் வராமல், அரசால் வகுக்கப்பட்டுள்ள விதிமுறைக்களுக்குட்பட்டு, அதனை அனைவரும் முறையாக கடைபிடிப்பது தொடர்பாக, இன்றையதினம் கலந்தாலோசனைக்  கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கடந்தாண்டில் எவ்வித இடையூறுமின்றி, நடைபெற்ற நிகழ்வைப் போல் இந்தாண்டும், எவ்வித இடையூறுமின்றி சிறப்பாக நடத்திட அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டும். அதற்கென, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசால் வகுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகள் குறித்து, இக்கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

அதில், சிவகங்கை, இராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள விழாக்களில் கலந்து கொள்பவர்கள் கண்டிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்வதற்கு அனுமதியில்லை. மேலும் சொந்த நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் Own Board  நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்தி செல்லலாம். நான்கு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொள்ள முடியாதவர்கள், அந்தந்தப் பகுதிகளுக்குட்பட்ட மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளரிடம், உரிய தகவல்களை கொடுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அரசு பேருந்துகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் பயணம் மேற்கொள்வதற்கான வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் பயணம் மேற்கொள்பவர்களின் விபரங்கள் ஆகியவற்றை அந்தந்தப் பகுதிகளுக்குட்பட்ட மாவட்ட துணைக்  காவல் கண்காணிப்பாளரிடம், கொடுத்து உரிய அனுமதி பெறவேண்டும். மேலும், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகளில் இந்நிகழ்விற்கு செல்பவர்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பினை பேணிக் காக்கின்ற வகையில், வாகனங்களின் மேற்கூரையில் கண்டிப்பாக பயணம் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு விதிமுறைகளை கடைப்பிடிக்காத நபர்கள் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

பயணங்களின் போது வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டிச்செல்லவோ, கோஷங்கள் எழுப்பவோ கூடாது. போக்குவரத்து வழித்தடங்களில் இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. நடைப் பயணமாகச் சென்று அஞ்சலி செலுத்த அனுமதியில்லை. குறிப்பாக, பொது இடங்களில் விளம்பரங்கள் செய்யக்கூடாது. தனிநபர் வீடுகள் மற்றும் காம்பவுண்டுகளில் சம்பந்தப்பட்ட நபரின் உரிய அனுமதி பெற்ற பின்னரே, விளம்பரம் செய்யலாம். அனுமதிக்கப்பட்ட வழிப்பாதைகளில் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும்  நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்வதற்கு ஏதுவாக, கூடுதலாக கண்காணிப்பு  கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

சட்டம், ஒழுங்கினை பராமரிப்பதற்கான மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அனைத்து சமுதாய அமைப்பினரும் முழு ஒத்துழைப்பினை அளித்து, கடந்தாண்டைப் போலவே இந்த ஆண்டும், அரசு வழிகாட்டுதலை பொதுமக்கள் முறையாக பின்பற்றி, சுதந்திரப் போராட்ட தியாகச் செம்மல்களை போற்றுவதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டும் என,  மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித், தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், அனைத்து சமுதாய அமைப்பினரும் தங்களது கருத்துக்கள் குறித்து எடுத்துரைத்தனர்.  சட்ட விதிகளுக்குட்பட்டிருப்பின், பரிசீலனை மேற்கொள்ளப்படும் என, மாவட்ட ஆட்சித்தலைவர், தெரிவித்தார். 

இக்கூட்டத்தில், தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ்,மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள், சமுதாய அமைப்புக்களைச் சார்ந்த பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் கிருஷ்ணாவின் 23வது படம்! கிராமத்துக் கதையாம்!

actor krishna 23rd film pooja - 2026
#image_title

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் படத்தின் பூஜை இன்று சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

டான் கிரியேசன்ஸ் L. கணேஷ் தயாரிப்பில்  அறிமுக இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா இயக்கும் புதிய படத்தின் துவக்கவிழா சென்னையில் படபூஜையுடன் துவங்கியது.

விழாவில் கழுகு படத்தின் இயக்குனர் சத்யசிவா கலந்துகொண்டு கிளாப் அடித்து துவக்கி வைத்தார். நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படமாக இந்தபடம் துவங்கியிருக்கிறார்கள்.

வர்ஷா விஷ்வநாத் கதாநாயகியாக நடிக்கிறார். கிராமத்துக் கதையாக உருவாகவிருக்கும் இந்தப்படம்  திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

சஸ்பென்ஸ் ,மற்றும் ஆக்‌ஷன் நிறைந்த கமர்சியல் படமாக அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா. விழாவில் இயக்குனர் அப்பாத்துரை பாரதிராஜா,  ஒளிப்பதிவாளர் நாகர்ஜூன், இசையமைப்பாளர் சாம் cs, கலை இயக்குனர் பாப்ப நாடு C . உதயகுமார். , எடிட்டர் வெற்றிகிருஷ்ணன், மேனேஜர் துரை சண்முகம்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருப்தி – சந்தோஷம் – வாழ்க்கை!

sringeri swamigal - 2026

சந்தோஷமான வாழ்க்கைக்கு திருப்தி அத்யாவசியமானது. எவ்வளவு ஐஸ்வர்யம் அல்லது க்ஷேமங்கள் வந்தாலும் திருப்தியற்ற மனிதனுக்கு சந்தோஷம் கிடைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

இன்ப வஸ்துக்களை விரும்புபவன் அவைகளைப் பெறுவதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்: அது ஒன்றும் இன்பமயம் அல்ல. பிறகு அவைகளை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராட வேண்டும் : அதுவும் இன்பம் தரக்கூடிய காரியம் இல்லை. ஏதேனும் ஒரு காரணத்தினால் கஷ்டப்பட்டு சேகரித்த உடைமைகள் நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டால், இருந்த கொஞ்ச நஞ்ச இன்பமும் போய், முடிவில் வேதனைதான் மிஞ்சும்.

ஆகவே உடைமைகளுக்கு ஆசைப்படுவது நல்லதில்லை. பழங்காலத்தில் வனத்தில் இருந்த ரிஷிகளுக்கென்று சொந்தம் ஏதும் கிடையாது. ஆனால் அவர்கள் சந்தோஷமாக இல்லையா என்ன? திருப்தி என்ற ஒன்றினால் தான் அவர்கள் அவ்வாறு இருந்தார்கள்.

புராணங்கள் பரம சிவபெருமானை ஒரு காளையின் மீது அமர்ந்து இருப்பவராகவும் புலித்தோலை உடுத்தி இருப்பவராகவும் மற்றும் உடலில் விபூதி பூசி இருப்பவராகவும் வர்ணிக்கின்றன. நாம் இந்த்ரியஸுகங்களிலிருந்து மனதை மறக்க வேண்டும் என்பது இதன் தாத்பரியம். நாம் எவ்வளவு செழிப்பாக வாழ்ந்தாலும் எளிய வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு இன்பம் கிடைக்கும்.

தனம் தானாகவே வந்தால் அதை நல்ல அல்லது தார்மீக காரியங்களுக்காக உபயோகப்படுத்தி வாழ்க்கையை சமநிலையில் நடத்தி வரவேண்டும். “இவ்வுலகில் யார் பணக்காரன், யார் ஏழை” என்ற கேள்விக்கு பதில் உண்டு. ஆசைகளற்றவனும் திருப்தி நிரம்பிய மனதுள்ளவனும் தான் பணக்காரன். இந்த குணம் இல்லாத மற்ற எல்லோரும் உண்மையில் ஏழைகள்.

ஆதலால் திருப்தி என்ற லக்ஷியத்தை உயர தாங்கி, இன்பத்துடன் செழிப்பாக வாழ்வது மிக்க நல்லது.

தக்ஷிணாம்னாய சிருங்கேரி சங்கராசார்ய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்.

திருப்பதி கோயில் பட்டு வஸ்திரம் சாற்றி ஸ்ரீவி., ஸ்ரீ ஆண்டாள் காட்சி!

srivilliputhur andal in thirupathi malai - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாளுக்கு, திருமலை திருப்பதி கோவில் பட்டு வஸ்திரம் சாற்றப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கலைந்த மாலை, வஸ்திரம், கைக்கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தில் கருட சேவையின் போது வெங்கடாஜலபதி பெருமாள் அணிவதற்காக கொண்டு செல்லப்பட்டது.

அதற்கு பதில் மரியாதையாக திருப்பதி திருமலை கோவிலில் இருந்து அனுப்பிய மாலை, வஸ்திரம் ஆகியவை ஆண்டாளுக்கு சூட்டப்பட்டடு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர்கள் குழு தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா அறங்காவலர்கள், கோவில் செயல் அலுவலர் செள. சக்கரை அம்மாள் மற்றும் கோவில் அலுவலர்களும், திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.