இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்
ஒரு காலத்தில் இந்தியாவின் பகுதியாக இருந்து, பின்னர் மதத்தின் காரணமாக துண்டாடப்பட்டு தனி தேசங்களாக மாறிய நிலப்பகுதிகளில் மதவெறியைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் பெயரளவுக்குக் கூட காணப்படவில்லை. நாட்டின் வளர்ச்சி, அமைதி, சமரசம் ஆகியவை அந்த மதத்தவருக்கு பிடிக்காது. பிறரோடு கலந்து வாழவும் மாட்டார்கள். பிறரை வாழ விடவும் மாட்டார்கள். இந்த உண்மை தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.
நம் தேசத்திலிருந்து பிரிந்த பங்களாதேஷில் கடந்த சில காலமாக ஹிந்துக்களின் மேல் நடத்தப்படும் வன்முறைகளும், கொலைகளும் செய்திகளாக சில தெரிய வந்தாலும், பல வெளியில் வராமலே தொடர்கின்றன. எங்கோ அமெரிக்கா போன்ற தொலை தூர நாடுகளில் வசிக்கும் ஹிந்துக்கள் சிலர் இது பற்றி கண்டனம் தெரிவித்தார்கள். ஆனால் ஹிந்துக்கள் அதிகமாக வாழும் பாரத தேசத்தில் இன்று வரை தகுந்த அளவு எதிர்வினை எழவில்லை. அரசியல் கட்சிகளுக்கு இதெல்லாம் கண்ணில்படாது எனபது தெரிந்ததே.
ஹிந்துக்கள் மீது கரிசனம் காட்டினால் ஓட்டு வங்கிகளுக்குக் கோபம் வரலாம் என்றும், என்றுமே ஒன்றுபடாத ஹிந்து சமுதாயத்தால் எந்த பயனும் இல்லை என்றும் அரசியல் கட்சிகளுக்கு திடமான அபிப்பிராயம் உள்ளது. இந்து சங்கங்கள், இயக்கங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும்படியாகவோ, தாக்கம் ஏற்படுத்தும் அளவிற்கோ எதிர்வினையோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.
ஆனால், எங்கோ ஏதோ வெளிநாட்டில் யாரோ ஒரு தீவிரவாதி கொல்லப்பட்ட போது, அந்த தீவிரவாதியின் மதத்தைச் சேர்ந்தவர் கூட்டம் கூடி டில்லியில் கண்டன ஊர்வலம் நடத்தினார்கள். அதுவும் ‘ஒரே ஒரு’ தீவிரவாதி கொல்லப்பட்டதற்காக. அப்படியிருக்கையில் பாமர ஹிந்துக்கள் பலியாக்கப்பட்டலும் அனுதாபமோ, உதவிக்கரமோ அவர்களுக்குக் கிட்டவில்லை. உதாசீனம், அலட்சியம், கவனக் குறைவு இவையே உள்மூச்சு, வெளிமூச்சாக வாழும் ஹிந்துக்களின் இத்தகு விட்டேத்தியான இயல்பு, பாரத தேசத்திலும் ஹிந்து எதிர்ப்பாளர்களுக்கு ஊக்கத்தை அளித்து வருகிறது.
இந்திய விடுதலைக்கு முன்பு இந்தியாவை ஆண்டு, வன்முறையைத் தூண்டிவிட்டு நாகரிகம், கலாசாரம், ஒழுக்கம் ஆகியவற்றுக்கு இருப்பிடமாக இருந்த பாரதத்தின் பண்பாட்டை தரைமட்டமாகச் செய்த வன்முறையாளர்களின் கொடுமைக்கு பலியாகி துயரமடைந்த ஹிந்துக்கள், உதவியற்ற நிலையில் இருந்தபோதிலும் சனாதன தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய்தார்கள். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு சிறிது சிறிதாக ஹிந்து எதிர்ப்பு அரசுகளின் துணையால் கல்வி, நீதி அமைப்புகள் போன்ற அனைத்தும் ‘ஹிந்து அல்லாத பிற மதத்தினரை திருப்திப்படுத்துதல்’ என்ற திசை நோக்கி நகர்ந்தன. வரலாற்றையும் கலாசாரத்தையும் வக்கிரமாக சித்திரித்து, ஹிந்துக்களின் தன்னம்பிக்கையையும், தன்மானத்தையும் சீரழித்தார்கள். அதனால்தான் எத்தனை தாக்குதல்கள் நடந்தாலும், ‘நமக்கென்ன?’ என்று ஹிந்து சமூகம் உறங்கிக் கிடக்கிறது. குலம், ஜாதி என்ற அபிமானத்தால் கூட்டம் சேரும் சக்தி வாய்ந்தவர்கள், தர்மத்தைக் காப்பாற்றும் விஷயத்தில் பலவீனமானவர்களாகவே உள்ளார்கள்.
இந்தப் பின்னணியில் பங்களாதேஷின் அருகில் இருக்கும் இந்திய மாநிலத்திலும் ஹிந்துக்களின் மீது கொடூரங்கள் நடந்த வண்ணம் உள்ளன. பெண்களின் மீது மானபங்கமும் கொடுமைகளும் தாக்குதல்களும் அழிவுகளும் நடக்கின்றன. இவை, கொடுங்கோன்மை, ஹிம்சை, மதவெறி ஆகியவற்றைக் கையாளும் ஹிந்து எதிர்ப்பு வாதிகளின் தீய செயல்களே என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், மனிதநேய வாதிகளோ, மனித உரிமைப் போராளிகளோ, சுதந்திரவாதிகளோ வாய் திறப்பதில்லை. ஹிந்துக்களுக்கு எதிரான அரசு ஆட்சி செய்யும் மேற்கு வங்காளம், கர்நாடகா, தெலங்காணா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஹிந்துகளின் மீது தாக்குதல்களும், ஹிந்து ஆலயங்களைஅழிப்பதும் தடையின்றி நடந்து வருகின்றன.
அதுமட்டுமல்ல, கேதார்நாத்திலிருந்து கேரளா வரை ஒவ்வொரு ஹிந்து ஆலயத்தைச் சுற்றிலும் பிற மத பிரார்த்தனை நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. அதோடு பல ஆலயங்களின் சொத்துக்கள் அந்நியர்களின் கைகளுக்குச் சென்றுள்ளன. மறுபுறம் இமயம் முதல் குமரி வரை கோவில்களைச் சுற்றிலும் அதிக எண்ணிக்கையில் ஹிந்துவல்லாத பிறரே கடை வைத்திருகிறார்கள். ஹிந்து தெய்வங்களை சைத்தான்கள் என்று வெறுத்தும், விக்ரஹங்களை துவம்சம் செய்வது தங்களின் மத நோக்கம் என்று அறிவித்தும், ஹிந்துக்களை காபிர்கள் என்று பழித்தும் தூற்றியும் அலையும் இந்த அந்நியர்கள், ஹிந்து கோவில் விக்ரஹங்களுக்கு பூக்களும் பழங்களும் பூஜை சாமான்களும் விற்கும் கடைகளுக்கு உரிமையாளர்களாக உள்ளார்கள். அவர்களின் வாழ்வாதாரம் ஹிந்து கோவில்களைச் சார்ந்தே இருந்தாலும், ஹிந்து கோவில்களின் மீதும், ஹிந்துக்களின் மீதும் ஹிம்சையும் நாசமும் செய்யும் கண்ணோட்டம் அவர்களிடம் நிரந்தரம் இருப்பதைப் பார்க்க முடிகிறது, கேதாரநாத், ஸ்ரீசைலம், சபரிமலை என்று… ஒன்றல்ல பல இடங்களில் நம் கோவில்களைச் சார்ந்து வாழ்ந்தாலும் அவற்றின் அழிவிற்காகக் காத்திருக்கும் ராட்சசக் கும்பலே இவர்கள் அனைவரும். இவர்களைக் கொஞ்சி, கெஞ்சி, சலுகைகளும் சௌகர்யங்களும் ஏற்படுத்திக் கொடுத்து, நம் கோவிகளின் சொத்தை அக்கிரமமாகத் தின்று, உத்தரவாலும் அக்கிரமத்தாலும் கோவில்களை தொல்லைக்குட்படுத்தும் அரசுகள் செய்யும் அநியாயமும் அநீதியும் இமயம் முதல் குமரி வரை வெளிப்படையாகவே தெரிகிறது.
நம் தேசத்தில் சமீபத்தில் நவராத்திரி நாட்களில் பல மாநிலங்களில் துர்காதேவி மண்டபங்களை நாசம் செய்து, சிலைகளைக் காலால் மிதித்து உதைத்து, நீக்கிய செய்திகள் சமூக ஊடங்கங்களின் மூலம் ஓரளவிற்கு வெளிச்சத்திற்கு வந்தன. எந்த ஒரு அரசியல் கட்சியும் இதற்குத் தகுந்த வகையின் எதிர்வினையாற்றவில்லை. ஹிந்து சமூகத்தைப் பற்றி கேட்கவும் வேண்டுமா?
இந்தியாநியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் – புனே – இரண்டாம்நாள் – 25.10.2024
நியூசிலாந்தின்சுழல்பந்து ஜாலம்
முனைவர்கு.வை. பாலசுப்பிரமணியன்
நியூசிலாந்துஅணி (முதல் இன்னிங்க்ஸ் 259, டெவன் கான்வே 76, ரச்சின் ரவீந்த்ரா 65, மிட்சல் சாண்ட்னர்33, வாஷிங்க்டன் சுந்தர் 7/59, அஷ்வின் 3/64, இரண்டாவது இன்னிங்க்ஸ் 198/5, டாம் லேதம்86, டாம் புளண்டல் 30, வாஷிங்க்டன் சுந்தர் 4/56, அஷ்வின் 1/64); இந்தியா அணி (முதல் இன்னிங்க்ஸ் 156, ஜெய்ஸ்வால் 30,கில் 30, ஜதேஜா 38, மிடஸ்ல்சாண்ட்னர் 7/53, கிளன் பிலிப்ஸ் 2/26, டிம்சௌதீ 1/4) நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
ஒரு விக்கட் இழப்பிற்கு 16 ரன் என்ற ரன்கணக்கில் இன்று ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி மிக மோசமாக விளையாடியது. பேட்டர்கள்வரிசையில் ஜெய்ஸ்வால் (30 ரன்) மற்றும் கில் (30 ரன்) இருவர் மட்டுமேசொல்லிக்கொள்ளும்படி ரன் அடித்தார்கள். இன்று ஆடிய விராட் கோலி (1 ரன்), ரிஷப்பந்த் (18 ரன்), சர்ஃபராஸ் கான் (11 ரன்) என சொற்ப ரங்களுக்கு ஆட்டமிழந்தனர்.பின் வரிசையில் ஜதேஜா (38 ரன்) வாஷிங்க்டன் சுந்தர் (ஆட்டமிழக்காமல்18 ரன்) இருவர் மட்டுமே சற்று நேரம் பிட்சில் நின்று ஆடினர். மற்ற வீரர்களான அஷ்வின்(4 ரன்), ஆகாஷ்தீப் (6 ரன்), பும்ரா (பூஜ்யம் ரன்) ஆகியோர் வந்தார்கள்போனார்கள் ரகம். தாங்கள் விரித்த வலையில் தாங்களே மாடிக்கொண்டது போல அனைவரும் சுழப்பந்துவீச்சிற்கே விழுந்தனர். 45.3 ஓவர்கள் மடுமே விலையாடி 3.42 ரன் ரேட்டுடன் 156 ரன்னுக்குஇந்ஹ்டிய அணி ஆட்டமிழந்தது.
முதல் இன்னிங்க்ஸ் லீடாக 103 ரன் இருந்தநிலையில் நியூசிலாந்து அணியின் டாம் லேதம் (133 பந்துகளில் 86 ரன்) நிதானமாகஆடினார். அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய டேவன்கான்வே (17 ரன்), வில் யங் (23 ரன்), ரச்சின் ரவீந்த்ரா (9 ரன்)மிட்சல் (18 ரன்) ஆகியோர் அவசரமாக ஆடி விக்கட் இழந்தனர். இந்திய சுழல் பந்துவீச்சளர்கள் அஷ்வின் 1 விக்கட்டும் வாஷிங்க்டன் சுந்தர் 4 விக்கட்டும்எடுத்தனர். இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் அனுபவம் மிக்கவர்கள்; இவர்களேடு ஒப்பிடும்போதுநியூசிலாந்தி அனியின் சுழல் பந்துவீச்சாளர்கள் அனுபவம் குறைவு. சாண்ட்னர் மற்றும்கிளன் பிலிப்ஸ் இருவரும் இதுவரை ஒருமுறை கூட டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 விக்கட்டுகள்எடுத்ததில்லை. இருப்பினும் அவர்கள் இருவரும் அற்புதமாக பந்துவீசினர்.
301 ரன் லீட் என்பது மிக அதிகம். இன்னமும்மூன்று நாள்கள் ஆட்டம் மீதி உள்ளது. நாளை மதிய உணவு இடைவேளைக்குள் நியூசிலாந்து500 ரன்கள் லீடுடன் இரண்டாவது இன்னிங்க்ஸைமுடித்துக்கொண்டால் இந்திய அணிக்கு சுமார் 225 ஓவர்கள் ஆடுவதற்கு கிடைக்கும் ஓவருக்கு3 ரன் எடுத்து ஐந்தாம் நாள் வரை ஆடினால் இந்திய அணி மகத்தான வெற்றிபெறும். இல்லையேல்நாளை மாலைக்குள் நியூசிலாந்து அணி வெற்றி பெறுவதர்கு அதிக வாய்ப்புகள் உள்ளன்.
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்,ஓய்வு பெற்ற வானிலையாளர்,எண் 2, முதல் மாடி, கண்ணபிரான் கோயில் தெரு, பெரம்பூர், சென்னை 11
Dr.K.V.Balasubramanian,M. Sc.(Physics), M.A. (Tamil &History), M. Phil.,Ph. D.Meteorologist (retd.),
No. 2, I Floor, Kannabiran Koil Street, Perambur, Chennai-11Mobile: +919884715004
இந்தியா நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் – புனே – முதல்நாள் – 24.10.2024
சுந்தரமான சுழல்பந்து வீச்சு
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
நியூசிலாந்து அணி (முதல் இன்னிங்க்ஸ்259, டெவன் கான்வே 76, ரச்சின் ரவீந்த்ரா 65, மிட்சல் சாண்ட்னர் 33, வாஷிங்க்டன் சுந்தர்7/59, அஷ்வின் 3/64); இந்தியாஅணி (முதல் இன்னிங்க்ஸ்16/1, ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 6, கில் ஆட்டமிழக்காமல் 10, டிம் சௌதீ 1/4) நியூசிலாந்து அணி 243ரன் கள் முன்னிலையில் உள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு,வாஷிங்டன் சுந்தர் இந்த டெஸ்ட் அணியில்இடம் பெறவில்லை. அதற்கு பதிலாக ரஞ்சி டிராபியில் டெல்லிக்கு எதிராக ஒரு சதம் அடித்ததோடுஅல்லாமல் இரண்டு மூன்று முறை நான்கு விக்கட்டுகளும் எடுத்தார்.அணியில் உள்ள தற்போதைய சுழற்பந்து வீச்சாளர் (குல்தீப் யாதவ்) மற்றும் பேக்-அப் சுழல்பந்துவீச்சாளர் (அக்சர் படேல்) ஆகியோரைத் தவிர்த்து லெவன் அணியில் சேர்க்கப்பட்ட அவர், ஒரு டெஸ்டின் முதல்நாளில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திநியூசிலாந்தை 259 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். பந்துவீச்சில், ஒரு எல்பிடபிள்யூ மற்றும்ஒரு கேட்ச் பிடித்தார். அவர் மூன்று விக்கெட்டுகளைதமிழக அணி வீரர் அஷ்வின்எடுத்ததைத் தொடர்ந்து கடைசி ஏழு விக்கெட்டுகளை எடுத்தார்.இது வாஷிங்டனின் முதல் டெஸ்ட் ஐந்து விக்கட். மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் அவரதுசிறந்த பந்துவீச்சு.
அஷ்வின்சாதனை
அஷ்வின் தான் எடுத்த மூன்று விக்கட்டுகள்மூலம், நாதன் லியானின்530 விக்கட்டுகள் என்ற சாதனையை,25 டெஸ்ட்கள் முன்னதாகவேஎடுத்தார். இந்த ஆண்டின்பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவில் இருவரும் சிறப்பான பந்துவீச்சில் ஈடுபடலாம்,ஆனால் இப்போது இந்தியா சொந்த மண்ணில் 18-தொடர் வெற்றிகளைப் பெறுகின்ற போராட்டத்தில் இந்திய அணிஈடுபட்டுள்ளது. இந்த விஷயத்தி வாஷிங்டன் சுந்தர் ஒருநல்ல துணை என நிரூபித்துள்ளார்.
இடது கை பேட்டர்கள்சிறப்பாக ஆடமுடியும் என்ற நிலை இருந்தபோதிலும் இந்திய அணி வெளியில் இருந்துஇரண்டாவது ஆஃப் ஸ்பின்னரை அணியில் சேர்த்தது. ஆனால் டாப் ஆர்டரில் இருந்தஇரண்டு இடது கை பேட்டர்கள்- டெவோன் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா – இன்றும் அரைசதம் அடித்து மிரட்டினர். டெஸ்டில் கடைசி நாளன்று பேட்டிங்செய்வது வேடிக்கையாக இருக்காது என்ற எண்ணத்தில், டாஸ் வென்றநியூசிலாந்தை ஒரு பெரிய டோட்டலைப்பெற முதலில் மட்டையாட முடிவுசெய்தது. நியூசிலாந்து2 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஷ்வின் கான்வேயின் விக்கட்டை எடுத்தார்; வாஷிங்டன் ரவீந்திராவை ஆட்டமிழக்கச் செய்தபோது அந்தஅணி 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்திருந்தது.
பெங்களூரில் இருந்து புனேவுக்கு தொடர் நகர்ந்தபோது, மேகங்கள், சீம் மற்றும் கூடுதல்பவுன்ஸ் அனைத்தும் மறைந்துவிட்டன. இங்கே டாஸ் தோற்றால் நல்லது என்றகருத்து இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் எதுவும் எளிதானது அல்ல, ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல்ஏழு ஓவர்களில் 30 ரன்கள் எடுத்ததன் மூலம் ஒரு இன்னிங்ஸின் எளிதானதொடக்கங்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் அஷ்வின் ஆரம்பத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டார், மேலும் டாம் லாதம் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச்செய்யஅவருக்கு ஐந்து பந்துகள் மட்டுமே தேவைப்பட்டன.
ஆடுகளத்தின் நல்ல பகுதியிலிருந்து பந்து திரும்பத்தொடங்கியது. ஆனால்சீராக இல்லை. கான்வே மற்றும் வில் யங் இடையேயான கூட்டணி அச்சுறுத்தலாகத் தெரிந்தது, ஆனால் ஷார்ட் லெக் இடத்தில் ஃபீல்டிங் செய்தசர்ஃபராஸ் கான் கோரிய ஒரு கூர்மையான மறுஆய்வு,யங்கைத் திருப்பி அனுப்பியது. அவரது கையுறையின் லேசான தொடுதலால் அவர் ஆட்டமிழந்தார். இதன் பின்னர்அஷ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா பேட்டர்களை தொந்தரவு செய்தார்கள்: அவர்கள் இணைந்து வீசிய 11 ஓவர்களில், அவர்கள் 24 தவறான ஷாட்களை ஆடவைத்து, 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.
மதிய உணவுக்குப் பிறகு,ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வாஷிங்டனுடன் இந்தியா தொடங்கியபோது, ரன் சுதந்திரமாக வந்தது:எட்டு ஓவர்களில் 35. அஸ்வின் முதலில் கட்டுப்பாட்டை கொண்டு வந்தார், பின்னர் கான்வேயின் விக்கெட்டை வீழ்த்தினார். மீண்டும் பந்து திரும்பியது, ஆனால் இந்த முறை டிரிஃப்ட்மற்றும் டிப் தான் கான்வேயைஅவுட் ஆக்கியது. மேலும்அந்தத் திருப்பம் அவர் விளையாடத் தேவையில்லாதபந்தைத் தள்ளுவது போல் தோற்றமளித்தது.
பெங்களூருவில் நடந்த போட்டியின் ஆட்ட நாயகரான ரவீந்திரா,நியூசிலாந்துக்கு மிகவும் தேவையான திடத்தை கொண்டு வந்தார். ஏனெனில் டேரில் மிட்செல் தனது இன்னிங்ஸின் தொடக்கத்தில்மிகவும் நிச்சயமற்றவராக இருந்தார். அவர் அம்பயரின் அழைப்பின்பேரில் ஒரு எல்பிடபிள்யூவில் இருந்துதப்பினார், இரண்டு வகையான அபாயகரமான ஸ்வீப்புகளையும் விளையாடினார், மேலும் 20 பந்துகளுக்குப் பிறகு மட்டுமே அவர் வசதியாகத் தெரிந்தார்.ரவீந்திரர், பந்துவீச்சாளர்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. ஆகாஷ் தீப் அவரை ஷார்ட் மிட்விக்கெட்டில்பெறுவதற்கு நெருங்கிவிட்டார், ஆனால் ஒரு பீல்டர் பிடிக்கமுடியாத அளவுக்கு ஹிட் கடுமையாக இருந்தது.இரண்டு பவுன்சர்களுக்குப் பிறகு ஒரு வெளிப்புற எட்ஜ்ஸ்லிப்பை அடித்து அவர் தனது அரைசதத்தை எட்டினார்.
தேநீருக்கு பத்து நிமிடங்களுக்கு முன்பு, இப்போது அவரது மூன்றாவது ஸ்பெல்லில், வாஷிங்டன் பந்துவீச்சு சரியாக மாறத் தொடங்கியது. இந்த ஸ்பெல்லின் முதல்பந்து மிடில் மற்றும் ஆஃப் ஆகிய இடங்களிலிருந்துதிரும்பிய ரவீந்திராவின் மட்டையைத் தாண்டி மேலே சென்றது. பந்துகள்நேராகச் சென்றது அல்லது அதே இடத்திலிருந்து திரும்புவதுபோன்ற விஷயங்கள் இப்போது நடக்கத் தொடங்கின. தேநீருக்கு முன் வந்த இறுதிப்பந்து டாம் ப்ளூண்டலின் வெளிப்புறவிளிம்பைத் தொட்டது. கடைசியாக மெதுவாகவும் அகலமாகவும், கேட் வழியாக மீண்டும்உள்ளே திரும்பி நடு விக்கட்டில் அடித்தது.
தேநீருக்குப் பிறகு, வாஷிங்டன் தனது எல்லாப் புகழையும்பெறும் வண்ணம் பந்து வீசினார்.ஒரு உத்வேகமான மதிப்பாய்வு மிட்செல் ஆட்டமிழக்கக் காரணமாக இருந்தது. க்ளென் பிலிப்ஸ் தனது போராட்டத்தை 31 ரன்களில்9 ரன்களை பெற்றதன் மூலம் அனுபவித்தார்.
மிட்செல் சான்ட்னர் தனது 33 ரன் ஆட்டத்தில் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். ஆனால் வாஷிங்டன் மறுமுனையில் ஸ்டம்பைத் தொடர்ந்து அடித்தார். டிம் சவுத்தி, அஜாஸ் படேல் சான்ட்னர் மூவரும் அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
ஆட்ட நேர முடிவுக்கு முன்னர் 10 ஓவர்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்தியாதனது கடைசி இரண்டு டெஸ்டில் இருந்து அவர்களின் தீவிர-ஆக்ரோஷ அணுகுமுறையை கைவிட்டது. ஆனாலும், சவுத்தி ஸ்விங் செய்து ரோஹித் ஷர்மாவை ஆட்டமிழக்கச் செய்தார். கடினமானஅமர்வின் முடிவில் நியூசிலாந்துக்கு ஒரு சிறிய மகிழ்ச்சி.9 பந்துகள் மட்டுமே ஆடி ரன் எதுவும்எடுக்காமல் ஆட்டமிழந்த ரோஹித் ஷர்மாவின் ஃபார்ம் கவலையளிக்கிறது. ஒரு கேப்டனாகஅவர் சிறப்பாக ஆடினாலும் தொடக்க வீரராக அவர் சொதப்பி வருவது டீமில் அவரது சேர்க்கையைகேள்விக்குரியதாக்குகிறது.
மதுரையில் அதிமுக எம்எல்ஏ., ராஜன் செல்லப்பா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறீயவை…
மதுரை, திருப்பரங்குன்ற கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வரும் 7,8 திருமணங்கள் நடத்துவதற்கு வேறு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் கோவிலிலே, திருமணம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
திருப்பரங்குன்றம் கோவிலில், கும்பாபிஷேகம் மிக விரைவில் நடத்த இந்த அரசு ஏற்பாடு செய்யும் என நம்புகிறேன். திமுக ஆட்சியின் சிறப்பாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
தேவருக்கு ஒரு பூஜையை முன்னிட்டு அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. சிறப்பாக வரவேற்க உள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அதிகாரப்பூர்வமான தகவலை அனுமந்தராவ் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக கடிதம் நான் அனுப்பியுள்ளேன். எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து முறையாக அறிவிப்புகளை வழங்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.. சரியான தகவல்களை தற்போது வரை கொடுக்கவில்லை.
தென்கால் கண்மாயில் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.. விபத்துக்கான சாலையாகவே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தென்கால் கண்மையில் இருந்து விவசாய பாசனத்திற்கான மடையையும் முழுமையாக அடைத்துள்ளனர். கண்மயிலிருந்து மணல் கடத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினருக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் இடையே, பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. வழக்குப் பதிவு உள்ளது.
திருப்பரங்குன்றம் கோவிலுக்கான ரோப் கார் திட்டம் இன்னும் ஆரம்பிக்கவில்லை.. பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதால், சாலைகளின் மோசமான நிலை ஏற்பட்டு வருகிறது.
திமுக உருவாக்கிய கலைஞர் படிப்பகம் மற்றும் ஜல்லிக்கட்டு மைதானம் பயனற்று கிடைக்கிறது. தினகரன் ஓபிஎஸ் சசிகலா இணைவதால் மீண்டும் குழப்பம் தான் வரும் இரட்டை தலைமை வருவதால் மீண்டும் பிரச்சனைதான் வரும்.
அமலாக்கத் துறையினருக்கு புதிய தகவல் கிடைத்திருப்பதால் தான், வைத்தியலிங்கம் வீட்டிற்கு சோதனை செய்திருக்கலாம் என்றார்.
அய்யூர் வடக்கு தெருவில் ஸ்ரீ மதுரைவீரன், நைனார் சாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அய்யூர், வடக்கு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரைவீரன், நொண்டிச்சாமி, ஆண்டிச்சாமி, பட்டவர்சாமி, நைனார்சாமி, அக்காயி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அதனை தொடர்ந்து முதல் கால யாகவேள்வி ஆரம்பமாகி மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டு இரண்டு கால யாகபூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை வடக்கு தெரு, நைனப்பன் அம்பலம் வகையறா பங்காளிகள் செய்திருந்தனர்.
ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு குறைந்த செலவில் செல்ல அருமையான வாய்ப்பை ஐஆர்டிசி பாரத் கௌரவ் ஆன்மீக சுற்றுலா ரயில் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.ஐயப்ப பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் தென் மாநிலங்களில் இருந்து செங்கோட்டை புனலூர் வழி ஐயப்பனின் படை வீடு கோவில்களை காண வசதியாக ரயில் இயக்க பக்தர்கள் விரும்புகின்றனர்.
சபரிமலை யாத்திரைக்கு ஐஆர்டிசி சிறப்பு ரயில் ஏற்பாடு செய்துள்ளது. நவம்பர் 16 முதல் 20 வரை இந்த பயணம் நடைபெறும். தொகுப்பில் உணவு அடங்கும், நுழைவு கட்டணம் இல்லை.
சபரிமலைக்கு செல்ல விரும்பும் ஐயப்த பக்தர்களுக்கு இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. சுற்றுலா ரயில்களின் ஒரு பகுதியாக சபரிக்கு சிறப்பு ரயிலை பாரத் கௌரவ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜில் எந்தெந்த பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன? தொகுப்பு எவ்வளவு செலவாகும்?
சபரிமலையில் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வது என்பது ஐயப்ப பக்தர்களுக்கு உள்ள பெரிய கனவாகும். இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அத்தகையவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. சபரிமலை யாத்திரையை எந்தவித பதற்றமும் இன்றி முடிக்க இது வாய்ப்பளித்துள்ளது என்றே கூறலாம்.
பாரத் கௌரவ் டூரிஸ்ட் ரயில்கள் மூலம் இந்த சுற்றுலாத் தொகுப்பிற்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 16 முதல் 20 வரை தொடரும் இந்தப் பயணத்திற்கான அறிவிப்பை தென் மத்திய ரயில்வே ஜிஎம் அருண்குமார் ஜெயின் வெளியிட்டார்.
இந்த சிறப்பு ரயில் செகந்திராபாத்தில் இருந்து நவம்பர் 16ம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும். இரவுப் பயணம் இருக்கும். இரண்டாவது நாள் காலை 7 மணிக்கு கேரள மாநிலம் செங்கனூரை சென்றடையும். அதன் பிறகு அங்கிருந்து சாலை வழியாக நீலக்கல்லை அடைய வேண்டும். பின்னர் ஆர்டிசி பேருந்தில் பம்பாவிற்கு பயணம். அங்கே இரவு தங்குங்கள். மேலும் மூன்றாம் நாள் தரிசனம் மற்றும் அபிஷேகத்தில் பங்கேற்பார்கள்.
பின்னர் நிலக்கலில் இருந்து பிற்பகல் 1 மணியளவில் சோட்டானிக்கரா/எர்ணாகுளம் சென்றடையும். அங்கே இரவு தங்குவீர்கள். 4ம் நாள் காலை 7 மணிக்கு சோட்டானிக்கரை அம்மாவாரி கோவிலை வலம் வருதல். பின்னர் உள்ளூர் ரயில் நிலையத்தை அடையுங்கள். அங்கிருந்து திரும்பும் பயணம் தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு ரயில் புறப்பட்டு, அதே நாளில் இரவு 9.45 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும் போது சுற்றுப்பயணம் முடிவடைகிறது.
பேக்கேஜ் கட்டணங்களைப் பொறுத்த வரையில், எகானமி (SL) பிரிவில் உள்ள ஒவ்வொரு டிக்கெட்டின் விலையும் ரூ.11,475 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 முதல் 11 வயதுடைய பெண்களுக்கு ரூ. 10,655 நிர்ணயிக்கப்பட்டது.
அதே தரநிலை (3ஏசி) வகையைப் பொறுத்தவரை ரூ. 18,790 மற்றும் 5-11 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு ரூ.17,700. ஆறுதல் (2ஏசி) பேக்கேஜின் விலை ரூ.24,215 ஆகவும், 5 முதல் 11 வயது குழந்தைகளுக்கு ரூ. 22,910 நிர்ணயிக்கப்பட்டது.
காலை தேநீர், காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவை தொகுப்பில் உள்ளன. ஆனால் நுழைவு கட்டணம் தொகுப்பில் இல்லை.! கூடுதல் விவரங்களுக்கு ஐஆர்சிடிசி இணையதளத்தை அணுகலாம். மேலும் சென்னையில் இருந்து மதுரை செங்கோட்டை வழி சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஐ ஆர் டி சி தனி ரயிலை இயக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்
ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனின் படை வீடு கோவில்களை காண விரும்புகின்றனர் கோவில்கள் செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் இருந்து அருகருகில் உள்ளது அச்சன்கோவில் ஆரியங்காவு குளத்துப்புழா இருமேனி போன்ற ஐயப்பனின் படை வீடு ஸ்தலங்கள் இங்கு உள்ளதால் இந்த வழியில் ஒரு சுற்றுலா ரயில் ஐ ஆர் டி சி பெங்களூர் ஹைதராபாத்தில் இருந்து கொல்லம் வரை இயக்கம் தென் மாநில ரயில் பயணிகள் விரும்புகின்றனர்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட முக்கிய வழிபாட்டு ஸ்தலங்கள் இந்த வழித்தடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது
ஹூப்ளி இருந்து கொல்லம் வரும் 26/10/24 இயக்கப்படுகிறது வழி கரூர் திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் தென்காசி செங்கோட்டை வரை கொல்லம் செல்கிறது. மீண்டும் மறுமார்க்கமாக வரும் 27/10/24 கொல்லத்திலிருந்து புறப்பட்டு ஹூப்ளிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது
விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை வழியாக கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஹுப்ளி மாநகரங்களுக்கு தீபாவளி சிறப்பு இரயில் முதன்முறையாக மூன்று மாநிலங்களுக்கு ஒரே ரயிலில் நேரடி இணைப்பு கிடைக்கிறது
தீபாவளிப் பண்டிகைக்கு மதுரை விருதுநகர் தென்காசி கொல்லம் மாவட்டம் வந்து,செல்ல இந்தச் சிறப்பு ரயில் சேவையைப் பயன்படுத்தலாம்.
முன்பதிவு நாளை(24.10.24) காலை 08.00 மணிக்கு துவங்குகிறது
ஹுப்ளி-கொல்லம்-ஹுப்ளி தீபாவளி சிறப்பு இரயில்(07313/07314) வழி: பெங்களூரு, மதுரை விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை
இயக்க நாள்கள்:* ஹுப்ளி-கொல்லம்(07313) (26.10.24/சனி) கொல்லம்-ஹுப்ளி(07314) (27.10.24/ஞாயிறு)நேரம்: ஹுப்ளி-கொல்லம்(07313) ஹுப்ளி புறப்பாடு: மாலை 15.15(26.10.24/சனி) பெங்களூரு SMVB நிலையம் புறப்பாடு: இரவு 23.15(26.10.24/சனி)*
கொல்லம் வருகை: மாலை 17.10(27.10.24/ஞாயிறு)
கொல்லம்-ஹுப்ளி(07314) கொல்லம் புறப்பாடு: இரவு 20.30 (27.10.24/ஞாயிறு)
பெங்களூரு SMVB நிலையம் வருகை: பகல் 11.30 (28.10.24/திங்கள்)* ஹுப்ளி வருகை: இரவு 20.45 (28.10.24/திங்கள்)
பதறச் செய்த பதினாறாவது மாநாடு. #பிரிக்ஸ் பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது. முன் எப்போதும் இல்லாத அளவிற்கு உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது…. தற்சமயம் ரஷ்யாவில் நடைபெறும் இந்த பிரிக்ஸ் மாநாடு.
#ஏன்…????
இன்றைய முன்னணி பொருளாதார வளர்ச்சி விகிதாச்சாரத்தை கொண்ட ஆனானப்பட்ட அமெரிக்காவின் செல்வாக்கை இது அசைத்து பார்த்து இருக்கிறது. அதன் அஸ்திவாரத்தை… உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அவர்களால் கட்டமைப்பு செய்து வைத்திருக்கும் #டாலரை, காலப் போக்கில் இது மாற்றீடு செய்து விடும் என அஞ்சுகின்றனர் மேற்கு உலக வாசிகள்.
இன்றைய தேதியில் அமெரிக்கா முன்னணி பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாக….உலக அளவில் முதன்மை பெற்ற நாடாக…. காட்சிப் படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அவை பெரும்பாலும் பொய் தோற்றம், கட்டமைக்கப்பட்ட பிம்பம் என்கிறார்கள்.இதனை வைத்து இல்லாத அழிச்சாட்டியம் எல்லாம் செய்து கொண்டு இருக்கிறது அமெரிக்கா., என்பது இவர்களின் வாதம்.
#எப்படி…???
அமெரிக்கர்களுக்கு,
அதன் அகங்காரத்திற்கு தீனி போடுகிறது அதன் கரன்சி தான். ஆனால் அதனை சகட்டு மேனிக்கு அச்சடித்திருக்கிறார்கள். உலகளாவிய வர்த்தகத்திற்கு தங்கம் அந்நாளில் பொதுப் பயன்பாட்டில் இருந்த காலத்தில்…. உலக பொருளாதார பங்களிப்பில் சுமார் 22% நம் இந்திய தேசம் கொண்டிருந்தது.அது போல் சீனா உச்ச பட்சமாக 24.8% பங்களிப்பை கொண்டிருந்தன.ஆனால் இன்று நம் இந்திய தேசம் வெறும் ஒற்றை இலக்க எண்களில் துவண்டு நிற்கிறது. சீன தேசம் 13.2% எனும் அளவில் திணறிக்கொண்டிருக்கிறது.
ஆக சுலபமாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் முன் ஒரு காலத்தில் உலக அளவிலான பொருளாதார பங்களிப்பில் மேற்சொன்ன இரண்டு நாடுகளும் சேர்ந்து சுமார் 45% வைத்திருந்த நிலையில் இன்று இந்த இரண்டு நாடுகளும் சேர்ந்தே இருபது சதவிகிதத்திற்கும் கீழே துவண்டு நிற்கிறது.
பல்லுள்ளவன் பகோடா திம்பான் என்கிற பம்மாத்தை ஓரம் தள்ளிவிட்டு பார்த்தால்…… இன்றைய தேதியில் உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் இந்த இரு நாடுகளில் அடங்கி விடும் நிலையில்…. நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர் அதிகம் கொண்ட நாட்டின் உலக பொருளாதார பங்களிப்பு வெறும் இருபது சதவிகிதத்திற்கும் கீழே இருப்பது…… ஏதோ இடிக்கவில்லை.!!
மேற்சொன்ன விஷயம் உதாரணத்திற்கு மட்டுமே.
இதில் அமெரிக்கா எங்கே வருகிறது.?????
இரண்டாவது உலகப் போரின் கடைசி கட்டத்தில் உள்ளே வந்த அமெரிக்கா….. தனது ராணுவ மற்றும் ஆயுத பலத்தை பிரகடனம் செய்து பெரும் பணக்கார தேசமாக பறை சாற்றி கொண்டது பின்னாளில். அதனை தக்கவைத்துக் கொள்ள அவர்களின் கரன்சியை உலக நாடுகள் ஏற்கும் படி செய்து வைத்திருக்கிறார்கள். இதற்கு உலக அளவிலான பயன்பாட்டில் முதல் இடத்தை பெறும் பெட்ரோலியத்தை…. கச்சா எண்ணெய் வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டு அதனை டாலரில் வர்த்தகம் செய்ய கண்களுக்கு தெரியாத வலைப் பின்னல் ஒன்றையும் ஏற்படுத்தி வைத்து அதில் வெற்றி கண்டுயிருக்கிறார்கள்.
நம்மில் பலருக்கு தெரியாத சங்கதி ஒன்று உள்ளது இங்கு.
உலகளாவிய கச்சா எண்ணெய் கிடைக்கும் நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது இன்று நாம் பார்க்கும் மத்திய கிழக்கு நாடுகள் அல்ல. அது மாத்திரமல்ல முதல் நான்கு இடத்திலும் கூட மத்திய கிழக்கு நாடுகள் ஏதும் வரவில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.???? ஆனால் அமெரிக்கா அந்த முதல் நான்கு இடத்தில் ஒரு நாடாக இருக்கிறது.
அடுத்த அதிர்ச்சி தரும் விஷயம்… அமெரிக்கா தான் மத்திய கிழக்கு நாடுகளின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முதல் இடத்தில் வரும் நுகர்வோர்.
அவர்கள் நாட்டிலேயே அதிகப் படியான எண்ணெய் வளம் இருக்கும் போது ஏன் வெளியே எண்ணெய் வாங்க வேண்டும்….???
காரணம் உற்பத்தி செலவு. மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் விஷயம் அமெரிக்காவில் எட்டு ரூபாய்க்கு மேல் என்றால்..!!!
சரி… அதற்கும் டாலருக்கும் என்ன சம்பந்தம்!!!
அமெரிக்கா தனது அதிநவீன தொழிற்சாலை மற்றும் தொழில்நுட்ப பண்புகளை கொண்டே மத்திய கிழக்கு நாடுகளில் பெருமளவு எண்ணெய் வயல்களை வளைத்து பிடித்து வைத்திருக்கிறார்கள். அது மூலம் டாலரில் வியாபாரம் செய்கிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்தால் அது தவறு.
இதில் மறைமுகமாக சூதாட்டம் ஒன்று நடக்கிறது.
எப்போதெல்லாம் டாலர்களின் தேவை, தட்டுப்பாடு அங்கு அமெரிக்காவில் நிலவுகிறதோ அப்போதெல்லாம்….. அமெரிக்க அரசாங்கம் வங்கிகள் மூலம் கடனுக்கு டாலர்களை அச்சடித்து புழக்கத்தில் இறக்கி விடும். மேலோட்டமாக பார்த்தால் இதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியாது.
ஆனால் டாலருக்கு நிகரான தங்கம் இருப்பு இருப்பதற்கு பதிலாக திரவ தங்கமான கச்சா எண்ணெய் மீது இருப்பாக காண்பித்து பூச்சாண்டி காட்டி விடுகிறார்கள்.
இப்படி சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறதா பாருங்கள்…
நீங்கள் ஒரு இடத்தை…. ஒரு கிரவுண்ட் இடத்தை வாங்குவதாக எடுத்துக் கொள்ளுங்கள்.அதன் மதிப்பு நீங்கள் வாங்கும் போது இரண்டு லட்சம். பிறகு உன் பணத் தேவைக்காக அதனை அடகு வைத்து மூன்று லட்சம் கேட்டால்….. கிடைக்குமா என்றால் இடத்தின் மதிப்பு உயர்ந்திருந்தால் இது சாத்தியப்படும். இருபது லட்சம் கேட்டால்…… அப்போதும் அதே கதை தான்., அந்த இடம் அதீத வளர்ச்சி கண்டு இருந்தால் அதுவும் சாத்தியமே.
இங்கு அதீத வளர்ச்சி என்பது அதிக நுகர்வோருக்கான தேவையாக புரிந்து கொண்டு மேற்சொன்ன பெட்ரோலியத்தை பார்த்தால்…. அப்படி ஒரு நரித்தந்திர வேலையை தான் காலங் காலமாக அமெரிக்கா பார்த்து கொண்டு இருக்கிறது.
கச்சா எண்ணெய் வர்த்தகத்தை விலை ஏற்றம் மற்றும் உற்பத்தி குறைப்பு என ஏகத்திற்கும் புகுந்து விளையாடி வருகிறது.
இதன் மூலம் டாலரின் தேவையை அதன் மதிப்பை சமன் செய்து வருகிறது. இதற்காக எந்த எல்லைக்கும் செல்ல அவர்கள் தயங்கியதே இல்லை. அதற்கு உதாரணம் தான் மேற்சொன்ன மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அதிகாரப் போட்டி. இப்படி நயவஞ்சகமாக கழுத்தை அறுக்கும் வேலையில் கைதேர்ந்த சூராதிசூரர்கள் அமெரிக்க புலனாய்வு பூனைகள்.
அமெரிக்காவில் வீடு இல்லாதவர்களின் எண்ணிக்கை….. தெருவோரம் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வறிக்கை எல்லாம் வெளிவர ஆரம்பித்திறது. இது அவர்கள் மட்டமாக காண்பிக்கும் ஆப்ரிக்க நாடுகளை விட அதிகம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்???
இந்த அமெரிக்க டாலர் சமாச்சாரத்தை அதன் அழிச்சாட்டியத்தை முதலில் கண்டது ஐரோப்பிய நாடுகளில் தான். அதனால் தான் டாலருக்கு எதிராக யூரோ கரன்சியை கொண்டு வந்தனர். வழக்கம் போல் அமெரிக்கர்களின் சில்லுண்டு வேலைகளினால் இன்று அந்த தேசங்களே உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போய் கொண்டு இருக்கிறது.
இதற்கு அடுத்ததாக மின்னணு சாதனங்களைக் கொண்ட தொழிற் புரட்சி காரணமாக பிட்காயின் வளர்ச்சி கண்டது. அமெரிக்கர்கள் வாங்கிய முதல் அடி இதில் தான்.
கிரிப்டோ கரன்சி என்று இதற்கு பெயர்.
எல்லாம் சரி…..
இதில் பிரிக்ஸ் எங்கே வருகிறது….!?!?!
யுரோ கரன்சி குணங்களும் இன்று இருக்கும் மின்னணு உபகரணங்கள் துணைக் கொண்டு மேற்சொன்ன கிரிப்டோ கரன்சி குணங்களையும் ஒரு சேர நம்மவர்கள் முன்னெடுக்கும் மிகப் பெரிய திட்டமிடல் தான் நாளைய பிரிக்ஸ் கரன்சியாக இருக்கப் போகிறது.
அதன் வெள்ளோட்டம் தான் நமது இன்றைய #UPI பேமெண்ட்.
எப்படி சாத்தியமாகும் இது …?
மீண்டும் முதலில் பார்த்த விஷயங்களை கொண்டே…., நிலப்பரப்பில், ஜனத்தொகையில், அதிகப் படியாக உள்ளவர்களின் பங்களிப்பை உலக அளவிலான பொருளாதார பங்களிப்பில் இடப் பெற செய்ய வேண்டும் என்கிற ஸ்லோகனை முன்னெடுத்து வேலை பார்த்து வருகிறார்கள்.
#B பிரேசில்…. நிலப்பரப்பில் இன்றைய அமெரிக்காவுக்கு சமம்.
#R ரஷ்யா அமெரிக்காவுக்கு நிகரான செல்வாக்கு மற்றும் உலக வரைபடத்தில் கிழக்கில் இருந்து மேற்கு வரை அதன் நிலப்பரப்பு.
#I இந்தியா மற்றும் #C சீனா ஆகிய நாடுகளின் மக்கள் தொகை மற்றும் உலகின் மிகப்பெரிய நுகர்வோர் சந்தை மற்றும் உற்பத்தியாளர்கள்.
அடுத்ததாக #S தென் ஆப்ரிக்கா.
இவர்களை ஒருங்கிணைத்தது தான் பிரிக்ஸ்.#BRICS.
இன்றைய தேதியில் 68 ட்ரில்லியன் டாலர்கள் பொருளாதார சந்தை மதிப்பு, மேற்சொன்ன நாடுகளுடையது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் கதி கலங்காமல் என்ன செய்யும்.
பிரிக்ஸ் ஆரம்பித்து….. ஆரம்ப காலத்தில் இத்தகைய வளர்ச்சி திட்டங்கள் ஏதும் அதனிடத்தில் இல்லை. ஆனால் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கிறது. ஒரே காரணம் நம்மவர்கள். ஓயாமல் உழைத்து கொண்டிருக்கிறார்கள்.
சாய்க்காமல் ஓய மாட்டோம் என சத்தாய்த்துக்கொண்டு நிற்கிறது மேற்குலகம்.
மேற்சொன்ன எல்லா நாடுகளிலும் ஏதோ ஒரு பிரச்சினை ஏதோ ஒரு பஞ்சாயத்து. பின்னணியில்… அத்தனையிலும் இருப்பது அந்த ஒற்றை டாலர் தேசம்.
அதனால் இவர்களும் அதனை முடிவிடும் முடிவோடு களமிறங்கி இருக்கிறார்கள். இது அவர்களுக்கும் தெரியும்… யார் இதனை முன்னெடுக்கிறார்கள் என்று. அதனால் கதி கலங்கி நிற்கிறார்கள். என்ன செய்ய…. பண்ணி வைத்து இருக்கும் சேட்டைகள் அப்படி பட்டது.
சரி,
எப்படி செய்யப் போகிறார்கள்…
அதே பழைய டெக்னிக் தான். அவன் பொருள் எடுத்து அவனையே போடுவது.
டாலருக்கு நிகரான தங்கத்தையே தான் இவர்களும்… அதாவது பிரிக்ஸூம் முன்னெடுக்கும். ஆனால் அதனை மின்னணுவில். முதல் முயற்சியாக மேற்சொன்ன நாடுகளில் வர்த்தகம் செய்ய அவரவர் வசதிக்கேற்ப UPI பேமெண்ட் முறையை விரிவு படுத்த இருக்கிறார்கள். பொது கரன்சிக்கு பதிலாக தங்கத்தின் மதிப்பில் கணக்கிட முடிவு செய்து இருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட திரைமறைவில் பிட்காயின் செயல்பாடுகள் போல் தெரிந்தாலும் அதனை அனைவரும் அறிய டிரான்ஸ்பெரட்டாக செய்ய… இதற்கு அரசாங்க பாதுகாப்பும் இருக்கும்., அதேசமயம் அந்தந்த நாடுகளின் வரி வருவாயும் நேர் படும்.
ஒரு வேளை அமெரிக்கா ஏதேனும் தகிடுதத்தம் செய்ய முனைந்தால் …… அவர்களால் இதில் செய்ய முடிந்த விஷயமாக தங்கத்தை கொண்டே இருக்கும். அப்போது மேற்சொன்ன நாடுகளில் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் டாலர்களை புழக்கத்துக்கு கொண்டு வர அமெரிக்க பொருளாதாரமே காணாமல் போகக்கூடும் என்கிறார்கள்.
பார்த்து பார்த்து அசந்து போய் நிற்கிறது உலக நாடுகள். அத்தனை தூரம் மதி நுட்பம் சார்ந்த திட்டமிடல் இது என சிலாகிக்கிறார்கள்.
பிரிக்ஸில் இணைய உலக நாடுகள் வரிசை கட்டி நிற்கின்றன….. பார்த்து பார்த்து பூரித்து போய் நிற்கிறார் ஜிங் பிங். அவரால் முன்னெடுக்கப்பட்ட பிரிக்ஸ் அல்லவா இது.ஆனால் அவரையே அசரடிக்கும் விதத்தில் மாற்றீடு செய்து இருக்கிறார்கள் நம்மவர்கள்.
இதுவெல்லாம் நடக்கிற காரியமா……????? இல்லை பார்த்து கொண்டு அமெரிக்கா தான் சும்மா நிற்குமா…?!?! என விதண்டாவாதம் செய்பவர்களுக்கு, ஒர் தகவல்.
ஏற்கனவே நடைமுறையில் செயல் படுத்தி பார்த்தும் விட்டனர் நம்மவர்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா…..??
ரஷ்யா, இன்று மேற்கு உலக நாடுகளின் பொருளாதார தடைகளை தாண்டி திமிறி நிற்கிறதே…… யாரால்?? எதனால்..??? யார் பேச்சையும் கேட்காத புடினே நம் பாரதப் பிரதமரை கொண்டாடுகிறாரே…. எப்படி??!?!
யுத்திற்கான யுகம் இதவல்ல நேரிடையாக அவர் முகம் பார்த்து இவர் சொல்ல… அவர் அதனை ஏற்கிறார் என்றால்…..
இதில் அத்தனை லாபம் இருக்கிறது என்பதை அவரால் நன்கு அவதானிக்க முடிந்திருக்கிறது என்று பொருள்.
பார்த்து பார்த்து வெம்புகிறார்கள் மேற்கு உலக வாசிகள்….. இது நமக்கு தோன்றாது போயிற்றே….. நாமல்லவா இவற்றை முன்னெடுத்திருக்க வேண்டும் என அலமலந்து நிற்கிறார்கள்.
ஏனெனில் அத்தனை தூரம் சாத்தியமாகும் ….நாளையே நிகழப் போகும் நிதர்சனம் இது. ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் இதற்கு மாறி வருகிறார்கள். நம் இந்திய பொருளாதார முகமே மாறப் போகிறது. தேச எல்லைகள் மாறப் போகிறது. இவையெல்லாம் வெறும் பொய்கள் அல்ல….. வெற்று பொழுது போக்கு வாசகங்கள் அல்ல.. உதாரணமாக கடந்த பத்து ஆண்டுகளில் நம் இந்திய மில்லினியர்களின் கணிசமான அளவிற்கு உயர்ந்திருப்பதே இதற்கு சான்று.
நாம் வாழும் காலத்தில் நம் கண் முன்னே நம் தேசம் திடகாத்திரமாக வளர்ந்து வருகிறது. உலகில் ஆயுத பலத்தால் எழுந்து நிற்கும் தேசமெல்லாம் நிச்சயம் ஒருநாள் பொருளாதார பலத்துடன் ஆன்ம சக்தியோடு எழுந்து நிற்கும் தேசத்திடம் அடி பணிந்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை….. அருள் இல்லார்க்கு எவ்வுலகும் இல்லை….. என சும்மாவா சொல்லிச் சென்றனர் நம் முன்னோர்கள். இந்த இரண்டு உலகையும் கட்டியாள ராஜபாட்டையே போட்டு கொண்டு இருக்கிறார்கள் நம்மவர்கள்….. என்றால் மிகையாகாது.
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகை கால சிறப்பு ரயில்கள் .. மைசூரில் இருந்து..?
தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை தாம்பரத்தில் இருந்து கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் -செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ள நிலையில் மைசூர் செங்கோட்டை சிறப்பு ரயிலை தீபாவளி மற்றும் சபரிமலை சீசனுக்கு மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06001) அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 05 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06002) அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 06 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து மதியம் 02.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.
செங்கோட்டை சிறப்பு ரயில்…
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை சிறப்பு ரயில் (06005) அக்டோபர் 30 மற்றும் நவம்பர் 06 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06006) அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 07 ஆகிய நாட்களில் செங்கோட்டையில் இருந்து இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்று சேரும். இது ரயில்கள் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 15 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் மற்றும் 2 சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும். தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்கள்..
தாம்பரம் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (06049) அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 05, 12 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து நள்ளிரவு 12.45 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். (12.45 மணி என்பது அந்த நாள் துவக்கம் என்பதால் அன்றைய நாளிலேயே சேருமிடம் சேருகிறது. மீண்டும் அதே நாளிலேயே மறு மார்க்கத்தில் புறப்படுகிறது) மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – தாம்பரம் சிறப்பு ரயில் (06050) அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 05, 12 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 03.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். ன்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.
இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு இன்று புதன்கிழமை (அக்டோபர் 23) காலை 8 மணிக்கு துவங்கி விருவிருப்பாக முன்பதிவு நடந்து வருகிறது.
இந்த நிலையில் மைசூர் -செங்கோட்டை சிறப்பு ரயில் கடந்த மாதம் இயக்கப்பட்டது.
இந்த ரயிலை மீண்டும் ராஜபாளையம் மதுரை கரூர் சேலம் வழித்தடத்தில் தீபாவளி மற்றும் சபரிமலை சீசனுக்கு மீண்டும் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் மைசூர் -திருவனந்தபுரம் இடையே மதுரை ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் வழியாக தீபாவளி சபரிமலை சீசனுக்கு இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்
சென்னை சென்ட்ரல் – செங்கோட்டை இடையே அரக்கோணம், காட்பாடி(வேலூர்), சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, தென்காசி வழியாக குளிர்சாதன சிறப்பு ரயில்.
தென்காசி ராஜபாளையம் வழியாக திருநெல்வேலி தாம்பரம் திருநெல்வேலி சிறப்பு சிறப்பு ரயில் மற்றும் சென்னை சென்ட்ரல் -செங்கோட்டை இடையே தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ரயில் பணிகளும் பொதுமக்களும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்கு திரும்பும் வகையில் சிறப்பு ரயிலை இயக்குமாறு தெற்கு ரயில்வேக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே வருகின்ற 03/11/2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னைக்கு திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. இந்த ரயிலானது மாலை 4 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 04 மணி 10 நிமிடங்களுக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும். மறு மார்க்கமாக திங்கள்கிழமை மதியம் 2:30 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலியை செவ்வாய்க்கிழமை காலை 5 மணி 10 நிமிடங்களுக்கு வந்தடையும்.
இந்த ரயில் இயக்கப்படும் இரு மார்க்கங்களிலும் சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம் , ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம் ,அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம் ,திண்டிவனம் மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
30/10/2024 மற்றும் 6/11/24 புதன்கிழமை சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 07:00 மணிக்கு புறப்படும் செங்கோட்டை வண்டி எண் 06005 ஏசி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன 15 மூன்றடுக்கு ஏசி பெட்டிகளாக இயங்கும்.
சென்னையில் இருந்து விருதுநகர் சிவகாசி ராஜபாளையம் சங்கரன்கோவில் தென்காசி வர உள்ள மக்கள் இந்த ரயிலை அதிகமாக பயன்படுத்தலாம்.
சென்னை செண்ட்ரல் – கன்னியாகுமரி சிறப்பு ரயில்
சென்னை சென்ட்ரல் மற்றும் தாம்பரம் முனையத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.