இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
செங்கோட்டையில் நவராத்திரி திருவிழா முப்புடாதி அம்மன் திருவீதி உலா.
செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமுப்புடாதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்தாண்டு நவராத்திரி திருவிழா கடந்த அக்டோபா் மாதம் 03ஆம் தேதி துவங்கியது விழாவில் 4ஆம் தேதி மாபெரும் திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. அதனைதொடா்ந்து நாள்தோறும் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
10ஆம் திருநாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மலர் சப்பரத்தில் வாணவேடிக்கை மேளதாளம் முழங்கிட கோவில் முன்பிலிருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.
விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினா், சமுதாய பெரியோர்கள், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள், இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத் நிகழ்த்திய நாகபுரி விஜயதசமி (2024 அக்டோபர் 12) விழா பேருரை…. தொடர்ச்சி…
நல்லிணக்கமும் நல்லெண்ணமும்
சமுதாயம் ஆரோக்கியமாக வலுவுடன் திகழ்கிறது என்பதற்கு அடையாளம், நல்லிணக்கம் நிலவுவதுடன், பலதரப்பட்ட மக்கள் பரஸ்பர நம்பிக்கையின் பேரில் நல்லெண்ணத்தை பரிமாறிக் கொண்டு வாழ்வார்கள். நாடகபாணியில் சில நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலம் இந்த நிலை வந்து விடாது. சமுதாயத்தின் எல்லா பிரிவினர், எல்லா நிலையினர் இடையேயும் நட்புறவு நிலவ வேண்டும். குடும்பங்கள் குடும்பங்களுடனும் தனிநபர் தனிநபருடனும் அன்போடு பழகி வந்தால்தான் தான் சாத்தியமாகும். தனி மனித அளவிலும் குடும்ப அளவிலும் இந்த முன்னெடுப்பில் நாம் அனைவருமே ஈடுபட வேண்டும். ஒருவர் பண்டிகையில் மற்றவர் கலந்து கொள்வது, என்று பரஸ்பர மதிப்பளித்து கலந்துறவாடி எல்லா பண்டிகைகளையும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் திருவிழாகள் ஆக்கிவிட வேண்டும்.. கோவில், நீர் நிலைகள் மயானம் ஆகியவை அனைவருக்கும் பொது என்றும், அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்கும் உரியவை என்ற சூழல் வரவேண்டும்.
சூழ்நிலைகளைப் பொறுத்து ஒரு பிரிவினருக்கு என்னென்ன தேவைகள் இருக்கும் என்று சமுதாயத்தில் எல்லா பிரிவினரும் புரிந்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் எப்படி வலுவானவர்கள், பலவீனர்களுக்கு கூடுதல் சௌகரியம் செய்து கொடுப்பார்களோ, தன் வலியையும் பாராமல் ஆதரவாக இருப்பார்களோ, அதுபோலவே நம்மவர் என்ற அதே உணர்வுடன் சமுதாயத்திலும் வலியவர்கள் வறியவர்களுக்கு உதவவேண்டும். சமூகத்தில் அனைத்து சாதிகளுக்கும் அவரவர் சாதி சங்கமும் அவர்கள் நடத்தும் நிறுவனங்களும், சமுதாயக் கூடங்களும் இருக்கும். அந்தந்த சாதிகளின் நலன்களை பேணி அவர்களுக்குத் தேவையான விஷயங்களை செய்வதே இந்த சங்கங்களின் தலையாய கடமை. சாதி சங்கங்கள் கூடிப்பேசும் போது கூடுதலாக இரண்டு விஷயங்களை பற்றி அவர்கள் தொடர்ந்து விவாதிப்பார்களேயானால் சமுதாயத்தை பிளவுபடுத்தும் எந்த சக்தியும் வெற்றிபெற வாய்ப்பில்லாமல் போகும். அதில் முதல் விஷயம், நாட்டின் நலனையும், சமூக நலனையும் கருதி அனைத்து சாதிக் குழுக்களையும் இணைத்து நாம் என்னென்ன விஷயங்கள் செய்யலாம், எப்படி அவற்றை திட்டங்கள் அமைத்து செயல்படுத்தலாம் என்று விவாதிக்கவேண்டும். இரண்டாவது, நம்மில் நலிந்த மக்களுக்காக, சாதிகளுக்காக, நாம் அனைவரும் இணைந்து என்னென்ன செய்யலாம் என்பது பற்றிய ஆலோசனை செய்யவேண்டும். இது போன்று தொடர்ந்து எண்ணி, செயல்பட்டும் வந்தால் சமுதாயம் ஆரோக்கியமாக விளங்குவதுடன் நல்லெண்ணமும் மலரும்.
சுற்றுச்சூழல்
நாலாபுறமும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த செய்திகளை காண்கிறோம். உலகு தழுவிய அந்த பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாகநமது நாட்டிலும் பாதிப்பு ஏற்படுத்திவருகிறது. இயற்கை சீற்றத்தின் தாக்கத்தை பார்க்கிறோம். சமீப காலமாக இவை நடக்கின்றன பருவநிலை சீற்றம் மிகுந்ததாக மாறிவிட்டது. பொருளாதார முன்னேற்றம் என்ற பேரில் போகம், நகரமயமாதல் ஆகியவற்றை அடிப்படை சித்தாந்தமாக கொண்டு, அனைத்து படைப்பையும் அழிவின் பாதையில் அழைத்துச் செல்லும் வேலையை செய்கிறது மனிதகுலம். நமது பாரத தேசத்தின் பாரம்பரிய வழியில், அனைத்து உயிர்கள் மற்றும் இயற்கை வளங்களை, ஒரே உயிர் என்ற உணர்வின் அடிப்படையில் கொண்டு வளர்ச்சிப் பாதையை வகுத்திருக்க வேண்டும் ஆனால் நாம் அப்படி செய்யவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இது பற்றி பேச்சு அடிபடுகிறது. மேலோட்டமாக சில விஷயங்க.ள் ஏற்கப்பட்டுள்ளன. நிலவரமும் மாறி வருகிறது. செயலில் அதிகம் காணோம். வளர்ச்சி என்ற பேரில் போட்ட அழிவுப் பாதையின் கொடிய தாக்கத்தை நாமும் அனுபவிக்கிறோம். அதிக வெயில், வறட்சியை தருகிறது. மழை வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கிறது, குளிர்காலம் உறைந்து விடுவதைப் போல் காண்கிறோம். காலநிலையின் தீவிரத்தை நாம் அனுபவிக்கிறோம்.
காட்டில் மரம் வெட்டப்படுவதால் பசுமை குறைகிறது, நதிகள் வறண்டு விட்டன, ரசாயன உரங்களால் நமது உணவு, நீர், காற்று, விஷம் தோய்ந்தவைகளாகி விட்டன, மலைகள் சரிவதை காண்கிறோம், பூமி பிளக்கிறது, இவை யாவும் சமீப காலமாக நாம் காண்கிறோம், ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் நமது பாரதிய சித்தாந்தத்தின் அடிப்படையில் இவற்றை சரி செய்யும் வழிமுறை அமைப்பது தான் ஒரே தீர்வு. தேசத்தின் வெவ்வேறு பகுதியின் தேவைகளை உணர்ந்து, அவற்றிற்கு ஏற்றாற்போல் ஒட்டுமொத்த செயல் திட்டத்தை அமைத்து அதை அந்தந்த பகுதியில் செயல்படுத்தினால், வெற்றி கிடைக்கும், சாதாரண மக்களாகிய நாம் நமது வீட்டில் மூன்று விஷயங்களில் சிறிய அளவு தொடக்கத்தை ஏற்படுத்தலாம்.
முதலில் தண்ணீர் சிக்கனம் மிகவும் அவசியம். இரண்டாவது பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை குறைப்பது, அதிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் முற்றிலும் தவிர்த்தல், மூன்றாவது நம் வீடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் மரம் நடுதல், செடி வளர்த்தல், காடுகளை காத்தல், நம் நாட்டு மரங்களை வளர்த்தல். சுற்றுச்சூழல் சம்பந்தமான கொள்கை ரீதியான பிரச்சினை தீர நாள் பிடிக்கும். ஆனால் நாம் நமது வாழ்வில் தினசரி கடமையாக உடனடியாக தொடங்க முடியும்
பண்பின் அவசியம்
பண்பின் அவசியம் குறித்து மூன்று இடங்களில் கவனம், செயல் தேவை. முதலில் கல்விக்கூடங்களில் பண்பு பாடங்கள், பழக்கங்கள் நல்ல முறையில் கிடைக்கச் செய்ய வேண்டும். கல்வி என்பது வெறும் வயிற்றை நிரப்பும் கருவியாக இருப்பதுடன், மாணவர்கள் பண்பில் மேம்படும் அவசியத்தையும் கவனத்தில் கொள்வதாக இருக்க வேண்டும். நம் நாட்டில் பண்பாட்டின் அருமையை சுருக்கமாக சொல்லும் சுபாஷிதம் ஒன்று உண்டு:
(பெண்களை தாயாக பார்ப்பது. மற்றவர் செல்வத்தை தூசுக்கு சமமாக பார்ப்பது; அதாவது சொந்தமாக உழைத்து நல்ல வழியில் பொருள் சேர்த்தல்; எல்லா உயிரினங்களும் தன் போல என்று உணர்ந்து, பிறருக்கு துன்பமோ கஷ்டமோ தரக்கூடிய செயல் செய்யாமல் இருத்தல் … இவை போன்ற நற்குணங்கள் நிரம்பியவராக வாழ்பவரே தன்னைப் படிப்பாளியாக கருதலாம்).
புதிய கல்விக் கொள்கையில், பாடத்திட்டத்தின் வழியே பண்புக் கல்வி தர வர முயற்சிகள் தொடங்கியுள்ளன. ஆனால் தொடக்கக் கல்வி முதல் மேற்படிப்பு வரை ள ஆசிரியர்கள் அதற்கு உதாரணங்களாக திகழாத வரை பாடத்திட்டங்கள் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆதலால் ஆசிரியர்களின் பயிற்சிக்கு புதிய முறையை ஏற்படுத்துவது அவசியம்.
இரண்டாவது, சமுதாய சூழ்நிலை. ஊரில் சில பிரமுகர்கள்; அவர்களின் புகழ் காரணமாக மற்றவர்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள். அந்த பிரமுகர்களின் வாழ்க்கையிலும் இந்தப் பண்புகள் அனைத்தும் விளங்க வேண்டும். அவர்களும் பண்புகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லிவர வேண்டும். இவ்வாறு ஊரில் பண்பு பரவ வேண்டும். சமூக ஊடக செயற்பாட்டாளர்களான அன்பர்கள் (Social Media influencers) அனைவருமே, “ஊடகம் இருப்பது சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்த; உடைப்பதற்கு அல்ல; ஊடகம் நற்பண்புகளைப் பரப்ப வேண்டுமே அல்லாமல் தீயவற்றைப் பரப்பக் கூடாது’ என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆனால் குழந்தை மூன்று முதல் 12 வயது வரை கல்வியின் முதல் படி ஏறுவதும் அதனால் சுபாவம் செம்மை ஆவதும் வீட்டில்தான். வீட்டில் பெரியவர்கள் நடந்து கொள்ளும் விதம், வீட்டின் சூழ்நிலை, வீட்டில் ஒருவருடன் ஒருவர் பரிவுடன் பேசிக்கொள்கிற பேச்சு இவை மூலம் இந்த படிப்பு நல்லபடியாக நிறைவேறுகிறது. நம்மில் ஒவ்வொருவரும் நமது வீட்டின் சூழலை கருத்தில் கொண்டு வாரம் ஒரு முறையாவது சந்திப்பு நடத்த தொடங்க வேண்டும். நம்முடைய விஷயங்கள் பற்றிய பெருமிதம், தேச பக்தி, அறவழி வாழ்க்கை, உயரிய கருத்துக்கள், கடமை உணர்வு போன்ற பண்புகள் இந்த சந்திப்புகளால் நாளாவட்டத்தில் நம்மில் படிந்து வரும்.
குடிமக்கள் கடமை
சமுதாயத்தில் நாம் நடந்துகொள்ளும் விதம் பண்பாட்டின் மற்றுமொரு வெளிப்பாடு. நாம் சமுதாயத்தில் ஒன்றாக வாழ்கிறோம், இணக்கமாக இருக்க சில சட்ட திட்டங்கள் உண்டு. காலத்திற்கு ஏற்றாற்போல் அவற்றில் மாற்றங்களும் நடக்கின்றன. ஆனால் இணக்கமாக வாழ அந்த சட்ட திட்டங்களை முழு மனதோடு கடைப்பிடிப்பது அவசியம். ஒன்றாக வாழ வேண்டுமெனில், நாம் அனைவரும் அடுத்தவர் விஷயத்தில், நன்னடத்தையும் கட்டுப்பாடும் கடைபிடிப்பது அவசியமாகிறது. சட்டங்களும் அரசியல் சாஸனமும் சமுதாய அளவிலான கட்டுப்பாடுதான். ஒன்றாக சுகமாக .வாழ்ந்து உயர்வடைய வேண்டும், சிதறிப் போகக் கூடாது என்பதற்கான விதிமுறையாக அரசியல் சாஸனத்தை பாரதத்தின் குடிமக்களாகிய நாம் நமக்கு நாமே வழங்கிக் கொண்டுள்ளோம். நாம் அனைவருமே அரசியல் சாஸனத்தின் முன்னுரையில் உள்ள இந்த வாக்கியத்தின் பொருளைப் புரிந்து கொண்டு, அது சொல்லும் கடமைகளை நிறைவேற்றி சட்டங்களை சரியானபடி பின்பற்றுவோம். சிறிதோ பெரிதோ எந்த விஷயத்திலும் சட்டப்படி நடப்போம். டோல் கட்டணம் இருக்கும். நமது வரிகளை நேரத்திற்கு செலுத்துவோம். தனிப்பட்ட, பொது கணக்கு வழக்குகளில் பொருளாதாரத்தில் வெளிப்படைத் தன்மையும், நேர்மையும் தேவை. இதுபோன்ற பல தரப்பட்ட சட்டங்களை சரியாக கடைபிடிக்க வேண்டும். சட்டங்களை வாசகப் படியும் சாரப் படியும் (லெட்டர் அண்ட் ஸ்பிரிட்) கடைபிடிப்போம்.
அரசியல் சாசனத்தில் முன்னுரை, வழிகாட்டிக் கோட்பாடு, குடிமக்கள் கடமை குடிமக்கள் உரிமை ஆகியவை உள்ளன. இவை பற்றி அனைத்து தரப்பிற்கும் எடுத்துச் சொல்லி வர வேண்டும்..
தனிநபர் ஒழுக்கம், தேசிய ஒழுக்கம் இரண்டும் சிறக்க வேண்டும். அதற்கு குடும்பம் தரும் பரஸ்பர நல்லுறவால் வாய்க்கும் கட்டுப்பாடு வேண்டும்; பரஸ்பர உறவில் புனிதம், மங்கலம், நல்லெண்ணம் தேவை. சமுதாயத்துடனான உறவில் தேசபக்தி, நம் சமுதாயம் என்ற உணர்வு ஆகியவற்றுடன் அரசியல் சாஸனத்தையும் சட்டங்களையும் மதிப்பது … இவை எல்லாமாக சேர்ந்து தனிநபர் ஒழுக்கம், தேசிய ஒழுக்கம் ஆகியவை அமைகின்றன. தேசத்தின் ஒற்றுமை, தேசப் பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை நிலைநாட்ட இந்த இரண்டும் ஒழுக்கங்களும் குறை ஏதுமின்றி முழுமை பெறுவது முற்றிலும் முக்கியமான விஷயம். தனிநபர் ஒழுக்கமும் தேசிய ஒழுக்கமும் அடையும் முயற்சியில் நாம் அனைவரும் விழிப்புடன் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.
நம்மவற்றில் பெருமிதம்
இவை அனைத்தும் தொடர்ந்து பின்பற்ற பட தேவையான உத்வேகம் நமது (ஸ்வ) என்ற பெருமிதத்தால்தான் கிடைக்கும். நாம் யார்? நமது பாரம்பரியம் மற்றும் நமது வாழ்வின் லட்சியம் என்ன? பாரதியர்களாக, நம்மிடையே பல்வேறு வேற்றுமைகள் இருந்தபோதிலும், பண்டைய காலந்தொட்டு தொடரும் ஒரு பெரிய, அனைத்தையும் உள்ளடக்கிய, மனித குல அடையாளத்தின் தெளிவான வடிவம் என்ன? இவற்றையெல்லாம் அனைவரும் தெரிந்து கொள்வது அவசியம். இந்த அடையாளத்தின் மிகவும் நல்ல குணங்களை ஏற்றுக் கொண்டு பின்பற்றுவதத்தின் மூலம், அதன் பெருமை மனதிலும் புத்தியிலும் ஆழமாக பதிகிறது. இதுவே நம்முடையது என்ற பெருமிதத்தின் அடிப்படை. இந்த சுயபெருமிதம் தரும் உத்வேகமே நமது தன்னம்பிக்கைக்கும், உலகில் நாம் முன்னேறுவதற்கும் ஆவன செய்ய தூண்டுகோல். இதைத்தான் நாம் சுதேசி என்கிறோம். தேசியக் கொள்கையில் அதன் வெளிப்பாடு, பெருமளவில் சமூகத்தின் அன்றாட வாழ்வில் தனிநபர்களின் நடத்தையைச் சார்ந்தே அமைகிறது.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத் நிகழ்த்திய நாகபுரி விஜயதசமி (2024 அக்டோபர் 12) விழா பேருரை
இன்றைய விஜயதசமி நன்னாளில், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தனது பணியின் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கடந்த ஆண்டு இதே தினத்தில் நாம் மஹாராணி துர்காவதியை, அவர்களது ஒளிமயமான தியாக வாழ்வின் 500வது ஜெயந்தியை நினைவு கூர்ந்தோம். இந்த ஆண்டினை, ராணி அஹில்யாபாய் ஹோல்கர் அவர்களின் 300வது பிறந்த ஆண்டாக கொண்டாடி வருகிறோம். ராணி அஹில்யாபாய் திறன்மிக்க ஆளுகை தந்தவர். மக்கள் நலன் கருதும் கடமையுணர்வு பூண்ட அரசி.
நமது தர்மம் – கலாச்சாரம் – தேசம் குறித்து பெருமிதம் கொண்டவர். ஒழுக்கத்தின் மேன்மையை லட்சியமாக கொண்டவர். அரசியல் தந்திரம், போர்த்திறன் நன்கு அறிந்த ஆட்சியாளர். இக்கட்டான சூழ்நிலையிலும் கூட அற்புதமான திறமை காட்டி, நாட்டையும், வீட்டையும், சுயமாக காத்து, பாரதத்திற்கே உரிய பண்பின் அடிப்படையில், தனது ஆட்சி எல்லைக்கு வெளியேயுள்ள பல திருக்கோயில்களையும் புனர்நிர்மாணம் செய்தார், புதிதாகவும் ஆலயங்கள் எழுப்பினார். அதன் மூலம் சமுதாயத்தில் சமத்துவம், பண்பாடு ஆகியவற்றை அவர் காப்பாற்றியது, மாத்ரு சக்திக்கு இன்று வரை ஊக்கமளித்து வருகிறது. அத்துடன் அவரின் பணி, மாத்ருசக்தியின் திறமை மற்றும் தலைமை பண்பிற்கு ஒரு தலைசிறந்த உதாரணம்.
இது ஆரிய சமாஜத்தின் நிறுவனர் மகரிஷி தயானந்த சரஸ்வதியின் 200வது ஜெயந்தி ஆண்டும் கூட. அவர், நம் மக்கள் அன்னிய ஆதிக்கத்திலிருந்து விடுபடவும், கால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நமது ஒழுக்கம், பண்பாடு மற்றும் சமுதாய பழக்க வழக்கங்களில் ஏற்பட்ட சிதைவுகளை சீர் செய்து, சமுதாயத்திற்கு அதன் அடிப்படை ஆதாரம் எது என்று புரிய வைத்து, நிலை நிறுத்தினார். பாரதத்தின் எழுச்சி வரலாற்றின் உந்து சக்தியாக விளங்கியவர்களில் அவர் பெயர் பிரதான இடத்தில் இருக்கிறது.
ராம ராஜ்யம் போன்ற சூழலை உண்டாக்க மக்களின் குணம், ஒழுக்கம், சுயதர்மத்தில் உறுதி போன்றவை அவசியம். அவ்வாறான பண்புகளையும், சமுதாய பொறுப்பையும் எல்லோரிடத்திலும் ஏற்படுத்த சத்சங்கம் நடத்த, பூஜனீய ஸ்ரீ அனுகூல சந்திர தாகூர் அவர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இன்றைய வங்கதேசம் (அன்றைய வடக்கு வங்கம்) பாபனா என்ற இடத்தில் பிறந்த ஸ்ரீ அனுகூல் சந்திர தாகூர் ஹோமியோபதி மருத்துவர். தனது தாயிடமே ஆன்மிக சாதனாவுக்கான தீட்சை பெற்றவர். தனிப்பட்ட சொந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண தன்னை நாடி வருபவர்களிடம் இயல்பாக அவர் ஏற்படுத்திய மாற்றம், சேவை மனப்பான்மை ஏற்படுத்துதல் போன்றவை பின்னாளில் சத்சங்கமாக மாறியது. பிறகு 1925-ல் ஒரு தொண்டு நிறுவனமாக பதிவு செய்யப்பட்டது. 2024 – 25 ஆண்டில் அந்த சத்சங்கத்தின் தலைமையிடமான தேவ்கரில் (ஜார்க்கண்ட் மாநிலம்) அதன் நூற்றாண்டு கொண்டாடப்படவுள்ளது. சேவை, பண்பாடு முன்னேற்றம் உள்ளிட்ட பல முன்னெடுப்புக்களோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
வரும் நவம்பர் 15 அன்று பகவான் பிர்சா முண்டாவின் 150-ம் ஆண்டு துவங்குகிறது. பட்டியல் சமூக, மலைவாழ், பழங்குடியின மக்களை அந்நிய சக்திகளின் அடிமைத்தனம், சுரண்டல், தாக்கத்திலிருந்து மீட்டு, இனத்தையும், பண்பாட்டையும் சுயதர்மத்தையும் பாதுகாக்க பாடுபட்ட, பகவான் பிர்சா முண்டாவை நினைவுகூர்வோம். தியாகமயமான அவரது வாழ்க்கைதான், பழங்குடியின மக்கள் தன்மான வளர்ச்சி, தேசியம் ஆகியவற்றில் பங்கேற்க முக்கிய காரணமாக அமைந்தது.
தனிப்பட்ட ஒழுக்கம், தேசிய ஒழுக்கம்
இவர்களை போன்று, சுயநலமின்றி, உறுதியோடு, தேசம், தர்மம், பண்பாடு, சமுதாயம் இவற்றின் நன்மைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்களை, நாம் அவர்களின் பொது நல சேவைகளுக்காக மட்டும் நினைவுக்கூர்வதில்லை. மாறாக முன்னுதாரணமாக வாழ்ந்து, நமக்கெல்லாம் வழிகாட்டியிருக்கிறார்கள் என்பதற்காகவும் தான். வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு பகுதியில் பணியாற்றிய இத்தகைய மாமனிதர்களின் வாழ்வில் சில ஒற்றுமைகள் உள்ளன. பிறர் மீது வெறுப்பின்மை, பகையின்மை, பயமின்மை போன்றவை இவர்களது இயல்பாக இருந்துள்ளது. போராடும் கட்டாயம் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் முழு ஆற்றலுடன், எதிர்த்து போராடினர். எனினும் ஒருபோதும் வெறுப்போ, பகைமையோ பாராட்டியதில்லை. அப்பழுக்கற்ற ஒழுக்கமே அவர்கள் வாழ்வின் இலக்கணமாக இருந்தது. அதன் காரணமாக தீயவர்களுக்கு அச்சுறுத்தலாகவும், நல்லவர்களுக்கு நம்பிக்கையளிப்பவர்களாகவும் இருந்தனர். நாமும் இன்றைய சூழ்நிலையில் அத்தகைய மனப்பாங்கை அடைய முயற்சி செய்ய வேண்டும். சூழ்நிலை சாதகமாக இருந்தாலும், பாதகமாக இருந்தாலும், தனிமனித ஒழுக்கம், தேசிய ஒழுக்கம் குறித்து அத்தகைய உறுதிப்பாடுதான், மங்கலத் தன்மை நல்லதன்மை இவற்றி வெற்றிக்கான அடித்தளம்.
தேசத்தின் முன்னேற்றப் பாய்ச்சல்
இன்று மனித குலம் படுவேகப் பாய்ச்சலால் உலகியல் வளர்ச்சி காணும் காலம். அறிவியல், தொழில்நுட்பம் இவற்றின் உதவியுடன் வாழ்க்கையை வசதிகள் நிரம்பியதாக ஆக்கி விட்டோம். ஆனால் மறுபுறம் நமது சுயநலத்தால் ஏற்பட்ட குழப்பம், நம்மை வீழ்ச்சிப் பாதையில் தள்ளுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் இஸ்ரேல், ஹமாஸ் படைகளுக்கு இடையேயான மோதல் இன்று எந்த அளவுக்குப் போயுள்ளது என்பதக் கண்கூடாகப் பார்க்கிறோம். நமது நாட்டிலும் நம்பிக்கைகள், அபிலாஷைகள் ஆகியவற்றுடன் சவால்களும், பிரச்சினைகளும் கூட தென்படுகின்றன.
சங்கத்தின் விஜயதசமி உரையில் இந்த இரு விஷயங்கள் குறித்து இயன்ற அளவு விரிவாக பேசப்படுவதுண்டு. ஆனால் இன்று நான் சில சவால்களை பற்றி மட்டும் பேச விரும்புகிறேன். ஏனெனில் நம்பிக்கை, அபிலாஷை இவற்றை நிறைவேற்றுவதில் தேசம் வேகமெடுத்துள்ளது. அது தொடரும். கடந்த சில ஆண்டுகளாக உலக அரங்கில் பாரதம் ஒரு சிறந்த உறுதியான நாடாக நிலை பெற்றுள்ளதை பார்க்கிறோம். உலகம், நமது முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. இயல்பாகவே பல துறைகளில் நம் பாரம்பரிய உணர்வுகளில் இழையோடும் சிந்தனைக்கு மரியாதை கூடியுள்ளது. “உலகம் ஒரு குடும்பம்” என்ற நமது உணர்வுக்கும், சுற்றுச்சூழல் பற்றிய நமது பார்வைக்கும் வரவேற்பு கிடைக்கிறது. யோகா போன்றவற்றை உலகம் தயக்கமின்றி ஏற்கிறது. சமுதாயத்தில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஸ்வ – (சுயம்) பற்றிய பெருமிதம் கூடியுள்ளது. பல துறைகளில் மெல்ல மெல்ல முன்னேறி வருகிறோம்.
ஜம்மு காஷ்மீர் உள்பட எல்லா இடங்களிலும் அமைதியாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேசத்தில் இளைஞர் சக்தி, மாத்ரு சக்தி, தொழில் முனைவோர், விவசாயிகள், உழைப்பாளிகள், ராணுவ வீரர்கள், ஆட்சி அதிகாரம் – நிர்வாகம் போன்றவை அனைத்தும் உறுதியுடன், கடமையுணர்வுடன் தங்களது பணிகளில் ஈடுபடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் தேச நலனை முன்வைத்து இவர்கள் அனைவரும் செய்த சாதனையால்தான், உலகத்தின் பார்வையில் பாரத தேசத்தின் கீர்த்தி, வலிமை, புகழ், அனைத்தும் தொடர்ந்து ஓங்கி வருகின்றன. ஆனால் நமது மனோதிடத்தை சோதிக்க சில ரகசிய சதிவேலைகளும் நடைபெறுகிறது. நம் முன் உள்ள சதிகளை நாம் சரிவர புரிந்து கொள்ள வேண்டும். தேசத்தின் இன்றைய சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்தால், அத்தகைய சவால்கள் நன்றாக விளங்கும். நாட்டின் நாலாபுறமும் அமைதியற்ற, கொந்தளிப்பான நிலையை தோற்றுவிக்கும் முயற்சி வேகமெடுப்பது தெரிய வரும்.
தேச விரோத கொடுஞ்செயல்கள்
உலக அளவில் பாரதம் முக்கியத்துவம் பெற்றுள்ளதை அடுத்து சில சக்திகளின் சுயலாப வேட்டை அடிவாங்குகிறது. அந்த சக்திகள் பாரதத்தின் வளர்ச்சியை முடக்கி கட்டுப்படுத்த முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது போலவே நடக்கிறது. தங்களை தாராள மனப்பான்மை உள்ளவர்களாகவும், ஜனநாயகவாதிகளாகவும், உலக அமைதிக்காக முனைவோர் எனவும் கூறிக்கொள்ளும் நாடுகளின் இந்த முனைப்பு அவர்களின் பாதுகாப்பு, சுயநலம் பற்றி கேள்வி எழுந்தவுடனேயே மாயமாகி விடுகிறது. பின்னர் அவர்கள் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவோ அல்லது அந்நாடுகளின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை சட்டவிரோத அல்லது வன்முறை வழிகளில் தூக்கியெறியவோ தயங்குவதில்லை. பாரதத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நடக்கும் நிகழ்வுகளைக் கவனித்தால், இவற்றை அனைவரும் புரிந்து கொள்ள முடியும். பொய்யும் புரட்டுமாக நடந்துகொண்டு பாரதத்தின் நன்மதிப்பைக் கெடுப்பதற்காக திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படுவது தெளிவாகத் தெரிகிறது.
பங்களாதேஷில் இப்போது நடந்த புரட்சி, வன்முறை சம்பவங்களில், இது போன்ற முயற்சிகளுக்கும் பங்குள்ளது. ஆனால் ஹிந்து சமுதாயத்தின் மீது காரணமேயில்லாமல் கொடுமைகள் மீண்டும் கட்டவிழ்த்து விடபட்டுள்ளது. அந்த அட்டூழியங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அங்குள்ள ஹிந்து சமுதாயம் இந்த முறை ஒன்றிணைந்து, தங்களைத் தற்காத்துக் கொள்ள வீட்டை விட்டு வெளியே வந்ததால், ஓரளவு பாதுகாக்கப்பட்டது. ஆனால் இந்த கொடுமையான மதவெறி இருக்கும் வரை அங்குள்ள ஹிந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை சமூகத்தினருக்கு ஆபத்து காத்திருக்கத்தான் செய்யும். அதனால்தான், அந்த நாட்டிலிருந்து பாரதத்திற்குள் சட்ட விரோதமாக ஊடுருவுவதும், அதனால் ஏற்படும் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வுகளும், நாட்டில் சாமானியர்களிடையே ஆழ்ந்த கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இந்த சட்டவிரோத ஊடுருவல் காரணமாக, பரஸ்பர நல்லிணக்கமும் நாட்டின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. வங்கதேசத்தில் சிறுபான்மையினராக மாறியுள்ள ஹிந்து சமுதாயத்திற்கு, பெருந்தன்மை, மனிதநேயம் நல்லெண்ணத்தை ஆதரிக்கும் அனைவரின் உதவியும் தேவைப்படும்; குறிப்பாக நமது அரசு உதவியும் உலகெங்கிலும் உள்ள ஹிந்துக்களின் உதவியும் தேவைப்படும்.
ஒற்றுமையில்லாமல் பலவீனமாக இருப்பது கொடூரக்காரர்களின் அட்டூழியங்களுக்கு அழைப்பு விடுப்பதாகும் என்ற பாடத்தையும் உலகெங்கும் உள்ள ஹிந்து சமுதாயம் கற்க வேண்டும். ஆனால் விஷயம் இத்துடன் நிற்கவில்லை. இப்போது பாரதத்திடமிருந்து தப்பிக்க பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இத்தகைய தோற்றத்தை உருவாக்குவதன் மூலம் எந்தெந்த நாடுகள் பாரதத்திற்கு அழுத்தம் கொடுக்க விரும்புகின்றன என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இவை அரசு சம்பந்தமான விஷயங்கள். இடர்ப்பாடுகளை சந்தித்து வரும் சமுதாயத்தினருக்கு மிகவும் கவலையளிப்பது, சட்டத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி, அதிருப்தியை அராஜகமாக மாற்றும் முயற்சிகள் அதிகரித்து வருவது தான்.
இன்று ‘டீப் ஸ்டேட்’, ‘வோக்கிசம்’, ‘கலாச்சார மார்க்சிஸ்ட்’ பற்றி பேச்சு அடிபடுகிறது. உண்மையில், இவை, அனைத்து கலாச்சார மரபுகளுக்கும் எதிரானவை; பண்புகள், மரபுகள், உன்னதமான அல்லது மங்களகரமானதாகக் கருதப்படும் அனைத்தையும் முற்றிலும் அழிப்பது இந்த கூட்டத்தார் வேலைகளின் ஒரு பகுதியே. கல்வி முறை, கல்வி நிறுவனங்கள், தகவல் தொடர்பு ஊடகங்கள், அறிவுசார் உரையாடல் போன்ற மக்கள் கருத்தை உருவாக்கும் வழிமுறைகள் / நிறுவனங்கள் ஆகியவற்றைத் தங்கள் செல்வாக்கின் கீழ் கொண்டு வந்து, அவற்றின் மூலம் சமுதாயத்தின் எண்ணங்கள், மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளை அழிப்பது, இந்த முறையின் முதல் படியாகும். ஒன்றாக வாழும் ஒரு தேசத்தின் / சமுதாயத்தின், எந்தவொரு பகுதியும் அதன் தேவை / பிரச்சினை அடிப்படையில் உண்மையான அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட தனித்தன்மையை வைத்து பிரிந்திருக்க தூண்டப்படுகின்றன. அவர்கள் மனதில் வஞ்சிக்கப்பட்ட உணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதிருப்தியை வெளிப்படுத்துவதன் மூலம், அவர்கள் மற்ற சமூகங்களிலிருந்து வேறுபட்டவர்கள் என தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. சமுதாயத்தில் நிலவும் சிறிய பிரச்சினைகளை பெரிதாக்கி நேரடி மோதல்கள் உருவாக்கப்படுகின்றன. அமைப்பு, சட்டம், நிர்வாகம், அரசு போன்றவற்றின் மீது அவநம்பிக்கையையும் வெறுப்பையும் தீவிரப்படுத்துவதன் மூலம் அராஜக / பீதி சூழல் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் அந்த நாட்டின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது எளிதாகிறது.
பல கட்சிகளைக் கொண்ட ஜனநாயக ஆட்சி அமைப்பில், கட்சிகள் அதிகாரத்தை அடைய போட்டியிடுகின்றன. பரஸ்பர நல்லெண்ணம் அல்லது தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காட்டிலும் தங்களது சுயநலம் முக்கியமானதாக ஆகிவிட்டால்; கட்சிகளுக்கிடையே நடக்கும் போட்டியில், சமுதாயத்தின் நல்லெண்ணமும், தேசத்தின் பெருமையும், ஒருமைப்பாடும் இரண்டாம் பட்சமாக கருதப்படும், அப்படியான கட்சி அரசியலில், ஒரு கட்சிக்கு ஆதரவாக நின்று, பேரழிவு திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே இவர்களின் செயல் முறை. இது கற்பனைக் கதையல்ல; உலகின் பல நாடுகளில் நடந்த உண்மை. மேற்கத்திய உலகின் முன்னேறிய நாடுகளில் இந்த மர்மப் புரட்சியின் விளைவாக, வாழ்க்கையின் நிலைத்தன்மை, சமூக அமைதி, நாட்டின் வளம், ஆகியவற்றுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதை தெளிவாகக் காணலாம். “அரபு நாடுகள் முதல் அண்டை நாடான வங்காளதேசத்தில் நடப்பது வரையில் இந்த முறையை நாம் காண்கிறோம். பாரதம் முழுவதும் – குறிப்பாக எல்லைப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் இதே போன்ற கொடிய முயற்சிகளை நாம் காண்கிறோம்.
கலாச்சாரம் தரும் ஒருமை உணர்வு, உன்னத நாகரிகம் இவையே நமது தேசிய வாழ்க்கையின் வலுவான அஸ்திவாரம். நமது சமுதாய வாழ்க்கை உன்னதமான பண்புகளால் உந்தப்பட்டு ஊட்டம் பெறுகிறது. இத்தகைய நமது தேசிய வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும் அல்லது அழிக்கும் கொடும் சக்திகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவது அவசியம். விழிப்புணர்வுள்ள சமுதாயமே இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நமது பண்பாட்டு ரீதியான வாழ்க்கைத் தத்துவ நெறியில், அரசியல் சாஸனம் காட்டும் முறையில் ஒரு ஜனநாயகத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். வலுவான கருத்து உருவாக்கி சிந்தனாமுறையில், கலாச்சாரத்தில் மாசு பரப்பும் இந்த சதியிலிருந்து சமுதாயத்தை காப்பது காலத்தின் தேவை.
கலாசார சீரழிவின் தீய விளைவு
பல்வேறு கருவிகளும் அமைப்புகளும் செய்து வரும் விபரீத பிரச்சாரம் பாரதத்தில், குறிப்பாக இளம் தலைமுறையினரின் மனம், சொல், செயலில், மிக மோசமான் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் பெரியவர்கள் கையில் மட்டுமே இருந்த அலைபேசி, இன்று பல சிறார்களின் கைகளை அடைந்துவிட்டது. குழந்தைகள் என்ன பார்க்கிறார்கள், அவர்களால் என்னவெல்லாம் காணமுடியும் என்பதில் கட்டுப்பாடே இல்லை. இன்று அலைபேசி என்பது கண்ணியமற்ற விஷயங்களுக்காக வடிகாலாகிவிட்டது என்று கூறினாலும் மிகையாகாது. ஒலி ஒளி ஊடகங்களில் வரும் விளம்பரங்களும், அருவருக்கத்தக்க படக்காட்சிகளும், பாடல்களும் நமது சமுதாயத்திலும், வீடுகளிலும், குடும்பங்களிலும் ஏற்படுத்தும் தீமைகளைக் கட்டுப்படுத்த உடனடியாக சட்டம் இயற்றுவது அவசியம் என்று தோன்றுகிறது. இளைஞர்கள் மத்தியில் காட்டுத்தீயைப் போல் பரவி வரும் போதை பழக்கமும், சமுதாயத்தை உள்ளூர சூனியமாக்கி வருகிறது. சமுதாயத்தை நன்னெறிப்படுத்தும் பண்புப் பதிவுகளுக்குப் புத்துயிர் அளித்தாக வேண்டும்.
பண்பாடு சிதைக்கப்பட்டதால் “மாத்ருவத் பர தாரேஷு” (பிறர் மனையாளை தாயாக கருதுதல் … “பிறன்மனை நோக்காத பேராண்மை” கொண்ட சமுதாயமாய் இருந்த பலாத்காரங்களும் கற்பழிப்புக்களும் இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் நடப்பதைக் காண்கிறோம். கொல்கத்தாவிலுள்ள ‘ஆர். ஜி. கர்’ மருத்துவமனையில் நிகழ்ந்த விஷயம், நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலைக்குனிவுக்கு ஆளாக்கிய வெட்கக்கேடான சம்பவங்களில் ஒன்று. இது போன்றவை தடுக்கப்படவேண்டும் என்றும், ஆர். ஜி. கரில் நடந்த சம்பவத்தை பாரபட்சமற்ற முறையில் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்றுகோரி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ சகோதர சகோதரிகளுடன் ஒட்டுமொத்த சமுதாயமும் தோளோடு தோள் நின்றது. இது ஒருபுறம் இருக்க, குற்றப் பின்னணி கொண்டோர், அரசியல்வாதிகள் கலாசார சீரழிவு ஆகிய மூன்றுமாக எப்படி நம்மை சீரழிக்கின்றன என்பதற்கு அத்தாட்சி, குற்றத்தில் ஈடுபட்டவர்களை காக்க சிலர் செய்த கேவலமான முயற்சி. பெண்ணை நாம் பார்க்கும் விதம், “மாத்ருவத் பர தாரேஷு” (பிறர் மனையாளை தாயாக கருதுதல்). இந்த கண்ணோட்டம் நம் கலாச்சாரம் நமக்கு அளித்த கொடை. நம் சமுதாயமும், குடும்பத்தினரும் பொழுதுபோக்கு ஊடகங்கள் மூலம் தம்மை அறியாமலே சில தீய விஷயங்களை எடுத்துக்கொண்டுவிடுகிறார்கள். ஆகையால் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படாவிட்டால் அதற்கு சமுதாயம் கொடுக்கும் மிகப்பெரிய விலை, கலாச்சார சீரழிவு. குடும்பம், சமுதாயம், ஊடகங்கள் ஆகிய மூன்றின் மூலமும் நம் கலாச்சாரம் போற்றும் பண்புகளை எடுத்துச் சொல்லும் மரபுக்கு புத்துயிரூட்டவேண்டும்.
வலிமையே அவசியம்
இன்றைய பாரதத்தில் எங்கு பார்த்தாலும், பண்பைச் சிதைத்து பிளவு ஏற்படுத்தும் சக்திகளின் ஆட்டம் தென்படுகிறது. பொதுமக்களை சாதி, மதம், மாநிலம் என்று அவரவர் விசேஷத்தன்மையை வைத்து சிறுகூறுகளாக்கி மோத விடும் முயற்சி நடக்கிறது. மக்களை சிறு சிறு அடையாளங்களே முக்கியம் என சிறிய வட்டத்தில் முடங்கி குழம்பச் செய்து, பூதாகாரமாக வந்து அனைவரையும் விழுங்கும் ஆபத்து நம்மை சூழ்கிறது என்பதை நிலவரம் கைமீறிப் போகும் வரை மக்கள் அறியவிடாமல் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதன் தாக்கம் முக்கியமாக பாரதத்தின் வடமேற்கு எல்லையில் அமைத்துள்ள பஞ்சாப், ஜம்மு, காஷ்மீர், லத்தாக் பகுதிகளிலும் கேரளா, தமிழ்நாடு ஆகிய கடல் எல்லை மாநிலங்களிலும் பிஹார் முதல் மணிப்பூர் வரையிலான கிழக்கு மண்டலப் பகுதிகளிலும் பாதித்திருக்கிறது. நான் முன்னே குறிப்பிட்ட எல்லா விஷயங்களின் பாதிப்பையும் இந்த அனைத்துப் பகுதிகளிலும் காணமுடிகிறது.
காரணமே இல்லாமல் தேசத்தில் வெறுப்பும் கசப்பும் தூண்டிவிடும் சம்பவங்கள் திடீரென அதிகரிப்பது தென்படுகிறது. எந்த நிலவரம் அல்லது எந்த கொள்கை பற்றியும் மனதில் அதிருப்தி இருக்கலாம். ஆனால் அதை வெளிப்படுத்த, அல்லது எதிர்க்க ஜனநாயக வரம்புக்குள் பல வழிவகைகள் உண்டு. இவற்றை புறக்கணித்து வன்முறையில் இறங்குவது, காரணமில்லாமல் சமுதாயத்தின் ஒரு சாராரைக் குறிவைத்து தாக்குவது பிதி ஏற்படுத்துதல் இவை எல்லாம் ரௌடித்தனமே அன்றி வேறெதுவும் இல்லை. திட்டமிட்டு தூண்டி விடும் செயலை பெருமதிப்பிற்குரிய டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர், “அராஜகத்தின் இலக்கணம்” (Grammar of Anarchy) என்று கூறுகிறார். சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த விநாயக சதுர்த்தி ஊர்வலங்களில் நடந்த கல்வீச்சு சம்பவங்கள், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழல் ஆகியவை அராஜகத்தின் இலக்கணமே. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பட்டதும், அப்படியே நடந்தால் அதை உடனே கட்டுப்படுத்துவதும், ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உடனே தண்டனை பெற்றுத்தருவதும் ஆட்சியாளர்களின் கடமை அவர்களின் பணி அது. ஆனால் அரசு களத்திற்கு வரும் வரை, தங்கள் உயிர், உற்றார் உறவினரின் உயிர், உடமைகளைக் காப்பது சமுதாயத்தின் பொறுப்பு. இதனால் சமூகம் எப்போதும் விழிப்புடனும் ஆயத்தமாகவும் இருக்கவேண்டும்; இம்மாதிரி தீய செயல் செய்வோரையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் அடையாளம் காண்பது அவசியமாகிறது.
இப்படி நிலவரத்தை சித்தரிப்பது, பயம் கொள்ள வைக்கவோ பயமுறுத்தவோ, மோதவோ அல்ல. சமுதாயம் எப்போதுமே விழிப்போடும் எச்சரிக்கையோடும் இருந்தால், தற்போது சில விஷமிகளால் ஊரில் தூண்டப்படும் கலகங்களை முளையிலேயே கிள்ளி எறிய முடியும். அப்படிச் செய்வதன் மூலம் நாட்டின் ஒற்றுமை பேணி, சூழலை அமைதிகரமாகவும், மகிழ்ச்சியாகவும், வளமாகவும், வலிமையாகவும் மாற்றுவது அனைவரின் ஆசை மட்டுமல்ல, அனைவர் கடமையும் கூட. ஹிந்து சமுதாயத்திற்கு இதில் அதிக பொறுப்பு உண்டு. சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட சூழல் நிலவ வேண்டும்; விழிப்புணர்வு வேண்டும்; எதுவானாலும் ஒருமனப்பட்டு ஒரே திசையில் செயல்பட வேண்டும். சமுதாயம் விழித்துக் கொண்டு, தன் சுய வலிமை கொண்டு தன் விதியை தானே தீர்மானிக்க ஆரம்பித்துவிட்டால் ஆன்றோர்கள், அமைப்புக்கள், சங்கங்கள், அரசு, ஆட்சி நிர்வாகத்தினர் என அனைவரும் நமக்கு உதவிகரம் ஆவார்கள். ஆரோக்கியமான உடலில் அரிப்பு முதலில் வருகிறது, இது ஒரு அபாய அறிவிப்பு மணி. அடுத்து நோய்கள் சுற்றி வளைக்கின்றன.
கடவுள் பலவீனமானவர்களுக்கு உதவ ஒருபோதும் வருவதில்லை என்று ஒரு பழமொழி உண்டு.
(குதிரை, யானை, புலி பலியிடப்படுவதில்லை, இல்லவே இல்லை. ஆட்டுக்குட்டியையே பலி கொடுப்பார்கள்; தேவதைகளும் பலவீனனையே பலியாய் கேட்கின்றன).
ஆகவேதான் நூற்றாண்டு வருடம் நிறைவடைந்த பிறகு, சில விஷயங்களைக் கையிலெடுத்து அதில் அனைத்து அன்பர்களும் விறுவிறுப்புடன் செயல்படச் செய்ய ஸ்வயம்சேவகர்கள் முயற்சி மேற்கொள்ள இருக்கிறார்கள்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு அம்பு எய்தல் நடைபெற்றது
சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவிலில் விஜயதசமி விழாவை முன்னிட்டு அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைகை ஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் நடந்தது. அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.
இதில் கோவில் செயல் அலுவலர் இளமதி, கோவில் பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதே போல் திரௌபதி அம்மன் கோவிலில் அம்மன் புறப்பட்டு வைகை ஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, ஜவஹர்லால்,குப்புசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஜெனகநாராயண பெருமாள் கோவிலில் சுவாமி வைகை ஆற்றுக்கு சென்று அம்பு எய்தல் நடந்தது.
இதில் செயல் அலுவலர் சுதா, பார்த்தசாரதி பட்டர், கோவில் பணியாளர் முரளிதரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவிலில், நடந்தஅம்பு எய்தல் விழாவில் செயல் அலுவலர் கார்த்தியைசெல்வி, ஆலய பணியாளர்கள் நாகராஜன், மணி , திவ்யா,ஜெகநாதன் உள்படஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் நடந்த விஜயதசமி விழாவில் சுவாமி கேடயத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து வழி நெடுக தெருக்கள் உள்ள இடங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை தொடர்ந்து அருகில் உள்ளதச்சம்பத்தில் உள்ள மண்டகப்படிக்கு பகலில் வந்து சேர்ந்தது.
இங்கே சுவாமி குதிரை வாகனத்தில் அலங்காரமாகி பூஜைகள் நடந்தது. பரசுராமபட்டர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.இதைத் தொடர்ந்து இங்கு உள்ள நந்தவனத்தில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது.
பரம்பரை அறங்காவலர்சேவுகன் செட்டியார், செயல் அலுவலர் சரவணன் கோவில் பணியாளர் பழனிகுமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலக்கால் வெங்கடேச பெருமாள் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு பெருமாள் திருவீதி உலா வந்தார் இதில் ஆங்காங்கே பக்தர்கள் பொதுமக்கள் தேங்காய் உடைத்து பெருமாளை தரிசித்து வழிபட்டனர் அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான், காடுபட்டி காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர்
திருச்செந்தூர் – திருநெல்வேலி ரயில் அக்.15 முதல் நவ.22ஆம் தேதி வரை (தீபாவளி நாள் தவிர்த்து) ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூரில் இருந்து மாலை 04.25 மணிக்கு புறப்படும் 06676 திருச்செந்தூர் – திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
16731 பாலக்காடு – திருச்செந்தூர் முன்பதிவிலாத ரயில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் தாழையூத்து – திருச்செந்தூர் ரயில் நிலையங்களுக்கிடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
வரும் மார்க்கத்தில் 16732 திருச்செந்தூர் – பாலக்காடு முன்பதிவில்லாத ரயில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 22 வரை, திங்கட்கிழமைகள் மற்றும் தீபாவளி நாள் (அக்டோபர் 31) தவிர மற்ற நாட்களில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 01.45 மணிக்கு 85 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும்.
அக்டோபர் 15, நவம்பர் 17, 20, 21, 22 ஆகிய நாட்களில் 06687 திருநெல்வேலி – செங்கோட்டை முன்பதிவு இல்லாத ரயில் திருநெல்வேலியில் இருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 02.40 மணிக்கு 40 நிமிடங்கள் காலதாமதமாகும் என்று ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை: கல்விக் கடவுளான சரஸ்வதி தேவிக்கு, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இந்துக்களின் முக்கிய விழாக்களில் நவராத்திரி விழாவும் ஒன்று. இந்த ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 3-ம் தேதி தொடங்கி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவின் ஒன்பதாவது நாளான (வெள்ளிக்கிழமை அன்று) ஆயுத பூஜை என்று அழைக்கப்படும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தமிழகத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. அனைத்து இடங்களிலும் கல்விக் கடவுளான சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை அருகே உள்ள ஊமச்சிகுளம் தலைமையாசிரியர் செல்வகுமரேசன் இல்லத்தில், “அசைந்தாடும் மயில் ஒன்று” என்ற பாடலை ஆதிசிவன் அகாடமி நிறுவனர்கள் வினோதினி மற்றும் ஜனனி ஆகியோர் சிறப்பாக பாடினார்கள்.
கொலு என்றால் அழகு என்று பொருள். கொலு என்பது நவராத்திரியை முன்னிட்டு பொம்மைகளை வைத்து செய்யப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். பெரும்பாலும் இந்தியாவின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகம் பகுதிகளில் இவ்வழிபாட்டு முறை நடைபெறுகிறது. கொலு பொம்மைகள் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலை விரித்து அதில் படையலிட்டு வழிபட்டனர்.
இதில் சர்க்கரை பொங்கல், சுண்டல், அவல், பொரி, கடலை மற்றும் பழங்களை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைத்து வழிபட்டனர். (சனிக்கிழமை) விஜய தசமி கொண்டாட்டத்துடன் நவராத்திரி விழா நிறை வடைகிறது. நவராத்திரியின் 9 நாள் வெற்றியை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்பட்டது.
குடும்பநலன்,தேச நலன் காக்க கோபூஜை மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமம்லலிதா சஹஸ்ரநாமம் கூட்டுப்பாராயணம் நடைபெற்றது.
நவராத்திரி தினத்தை முன்னிட்டு கோவை ஹை-டெக் தாமரை தோட்டத்தில் குடும்பநலன், தேச நலன் சிறந்திட, மேம்பட கோபூஜை, விஷ்ணு சஹஸ்ரநாமம் லலிதா சஹஸ்ரநாமம், கூட்டுப் பாராயணம் நடைபெற்றது.
இந்நிகழ்வை துவக்கிவைத்து பேசிய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம். முப்பத்து முக்கோடி தேவர்களும் பசுவில் வசிப்பதாக ஐதீகம். ஒரு நாட்டுமாடு இருந்தால் அந்த தோட்டத்து மண்ணிற்கு செயற்கை உரம் தேவையில்லை. மண்ணை வளப்படுத்துவதால் விவசாயிகள் அதை தெய்வமாக போற்றுகிறார்கள் என்றார்.
பழனி முருகன் அடிமை பாலசுப்ரமணியம் சுவாமி சிறப்புரையாற்ற, பாஜக., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
Legendry Classical Carnatic music singer and recipient of Bharat Rathna, M S Subblakshmi’s grandson V Shrinivasan is against conferring award instituted in her grandmother’s name to controversial singer TM Krishna.
He has filed a civil suit in the Madras High Court seeking an injunction against the Madras Music Academy from honouring controversial singer T M Krishna in the upcoming 98th music conference in Dec 2024 with the “Sangita Kalanidhi M S Subbulakshmi Award” as he had insulted the memory of the great singer over the last decade using slanderous and vitriolic language. In his petition Shrinivasan mentioned that conferring the “Subbulakshmi Award” on Krishna would be tantamount to presenting a “Bhakti” award to an atheist.
M S Subbulakshmi is indeed a national treasure of Bharat. Sarojini Naidu after hearing MS said “I surrender my title of Nightingale of India to you”. MS was the first ever singer to perform in the United Nations in 1966, the first musician to win the Ramon Magsaysay Award in 1974 and the Bharat Ratna in 1998.
No one in their right minds would ever think of disrespecting this legend either directly or indirectly. Yet Krishna launched a personal attack on this immortal singer by referring to her as the ‘greatest hoax in Carnatic Music in the 20th century’ and ‘a saintly Barbie Doll.!’ Krishna further went on to slander by saying that his daughter’s generation would find MS as “sexy” and rhetorically questioned whether we would all enjoy her music if MS was dark in colour. The controversial singer went on to say that MS Amma became a legendary singer only because she “Brahamised” herself and that this was a “tragedy”
After demise of MS Amma, Madras Music Academy and a leading Chennai based English daily instituted an annual award – Sangita Kalanidhi M S Subbulakshmi Award from 2005 onwards to honour the memory of the legend. However when the Music Academy announced in Mar 2024 that they would be honouring T M Krishna with the Sangita Kalanidhi M S Subbulakshmi Award it left the MS family stunned beyond disbelief.
Shrinivasan the son of Radha Viswanathan (daughter of M.S. Subbulakshmi) in his petition has mentioned that the family had never imagined that the Music Academy which was built primarily with the funds generated by MS Amma’s fund raising concerts would honour a person who was the very anti thesis of all the values that MS Amma stood for and therefore they found this decision to be paradoxical.
Krishna is well known for making scandalous and demeaning comments on leading musicians of yester years, living doyens and in this regard even the saint composer Thyagaraja has not been spared. Shrinivasan said Krishna’s statements against his grandmother were rank disgraceful and unjustifiably questioned the credibility of the renowned singer at the altar of cheap politics. He would not have dared to throw such calumny on the late singer during her lifetime. He is making these cheap and third rate canards by using MS Amma as a punching bag to gain publicity and further his hidden agenda. Critics say “he is doing all this at the behest of some sinister forces which are pulling the strings”.
MS Amma has also mentioned in her will executed (dated 03-10-1997) that there should be no foundation or memorial of any kind to perpetuate her name and memory. The award, if viewed in this perspective, is specifically against the mandate of the music legend.
In a counter to the petition, Music Academy denied the allegations made by Shrinivasan and said that the petitioner cannot question the authority of the selection process of the award made by the Academy which was a landmark institution in the history of fine arts. The Academy also said that for almost two decades no objections have been expressed by the applicant or any other family member of the late Ms MS Subbulakshmi . The counter affidavit also mentioned that the executive committee of the Academy decided to confer the “Sangita Kalanidhi Award on TM Krishna in recognition of his musical excellence sustained throughout his long career and for his powerful voice and adherence to tradition.
Critics say “TM Krishna shot to fame for his glorification of EV Ramaswamy Naicker. He has been mainly into making false accusation that Brahmins, who dominate the Music field, are wilfully suppressing musicians from other communities and not giving them prominence. This is a clear lie as we have several musicians from so many other communities too”.
In protest against T M Krishna being honoured with the Sangita Kalanidhi Award this year seven musicians – vocalists Ranjani and Gayatri, Srikrishna Mohan and Ramkumar Mohan (aka Trichur Brothers), Harikatha exponents Dushyanth Sridhar and Vishakha Hari and mridangam Vidwan Arjun Kumar have registered their protest by refusing to be part of the Academy’s ‘Margazhi’ festival line up. According to Raga Sisters, “Krishna has caused immense damage to Carnatic Music world by glorifying an atheist like EV Ramaswamy Naicker (Periyar)”.
Harikatha exponent Dushyanth Sridhar told Organiser ” MS Subbulakshmi is a veteran in the field of Classical Carnatic musi, which is known as Sashtriya Sangeetham. She ruled the minds and hearts of listeners of bakthi music. There would not be single morning in a south Indian households with her rendition of Venkatesa Subrapatham, Baja govindam, Vishnu Sahastranam, Kanagadara Strothram were not heard. Besides rendering such devotional compositions she also was big propagator of compositions of Saint Tyagaraja, Annamacharya, Purandradasa, Muthuswami Dikshedar, Arunachal Kavi and so and so forth. Her depiction of Meera in the movie and subsequently her rendition of Bajans only amplified the Bakthi Koshams in Music.
It is very disheartening to note that other Carnatic Musician T M Krishna did not have charitable words either towards her contribution or towards upbringing. some of his words on MS Subbulakshmi were not taken in a easy way by many many rasikas (fans). it does not surprise me when I look at the legal case that was filed by Mr Shrinivasan who comes from the lineage of MS Subbulakshmi, Like how rasikas were hurt by the remarks of TM krishna over the years on MS Subbulakshmi , it is obvious that family members would have been equally hurt.
Since there is a case filed against the decision of Music Academy giving away the award that has MS Subbulakshmi’s name to TM Krishna , I would not like comment further. But, in general making remarks against such tall personalities should have been avoided”.
திருச்சியில் இருந்து சார்ஜா நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சியை நோக்கித் திருப்பப் பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக விமானம் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல், ராப்பூசல் உள்ளிட்ட பகுதிகளில் வானில் 21 முறை வட்டமடித்துக் கொண்டிருந்ததாக அங்குள்ளவர்கள் கூறினர்.
141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில், சக்கரங்கள் உள்நோக்கி இயங்கமுடியாதபடி ‘ஹைட்ராலிக் ஃபெய்லியர்’ ஏற்பட்டது. இதை அடுத்து விமானம் தரையிறங்க முடியாமல் போனது. இதனால் விமானத்தின் எரிபொருளைக் குறைக்கும் முயற்சியில் விமானப் பணியாளர்கள் இறங்கினர். நிறைவாக, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
#image_title
Aircraft landed safely at 1444 UTC PAX 150
AXB 613, Trichy to Sharja, REG/VTAYB, POB/150, ATD/1213. After airborne, aircraft informed hydraulic failure. Aircraft still holding at 4000ft south of Trichy for fuel burning. Full emergency Declared at 1235UTC.
விமானத்தில் பயணத்தவர்கள் அனைவரும் பத்திரமாக உள்ளனர். இந்த நிலையில், நடுவானில் வட்டமடித்த விமானத்தில் நடந்த பரபரப்பான நிமிடங்களை பயணிகள் விவரித்தனர். அப்போது பேசிய பயணி ஒருவர், நாங்கள் ஷார்ஜாவை நோக்கி பயணம் செய்வதாகவே நினைத்தோம். என்ன நடந்தது என்றே தெரியவில்லை.”
“விமானத்தில் ஏற்பட்ட கோளாறு பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. அதன் பிறகு தான் விமானம் தரையிறங்குவதில் பிரச்னை உள்ளது என்று கூறினர். மேலும், பதட்டம் அடையாமல் சீட் பெல்ட் அணிந்து கொள்ள அறிவுறுத்தினர்.”
“சிறிது நேரத்திற்கு விமானத்தின் மின் விளக்குகள் பலமுறை அணைந்து, மீண்டும் எரிந்தன. பிறகு விமானம் தரையிறங்கியது,” என்று தெரிவித்தார்.
விமானம் திருச்சி விமான நிலையத்திலேயே பத்திரமாக தரையிறங்கியதில் உறவினர்களும், மக்களும், ஊழியர்களும் ஆராவாரமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அனைத்து பயணிகளும் பத்திரமாக உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நெல்லை தசரா சப்பரத் திருவிழாவை தடுக்கும் நோக்கில் தமிழக மின்சாரத்துறை நடவடிக்கையை கண்டித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது…
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா சப்பரம் வீதி உலா வரும்போது மின்சார கம்பிகளில் பட்டு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அதற்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல என்று மின்சார வாரியம் கடிதம் கொடுத்துள்ளது.
மேலும் பல ஆண்டு காலமாக வரும் சப்பரத்தின் உயரத்தைக் குறைக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழாக்களில் ஒன்றான பாளையங்கோட்டை தசரா திருவிழாவில் 12 கோவில்களை சேர்ந்த சப்பரங்கள் ஒரு சேர திருவீதி உலா வந்து சூரசம்ஹாரம் நிகழ்வு நடப்பது தொன்று தொட்டு நடந்து வரும் திருவிழாவாகும்.
கடந்த ஒன்றாம் தேதி தொடங்கி மிக விமர்சையாக வழக்கம் போல் அனைத்து கோவில்களிலும் திருவிழா நடந்து வரும் சூழலில் நேற்று பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தலைவருக்கு மின்வாரியத்தில் இருந்து கடிதம் மூலம் சப்பரத்தின் உயரத்தை குறைக்க வேண்டும் என்றும் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் அதற்கு எந்த வகையிலும் நாங்கள் பொறுப்பல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.
இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு நடத்தும் திருவிழாக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமையாகும். அரசின் அனைத்து துறைகளும் இணைந்து செய்ய வேண்டிய வேலையை இதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் என்று குறிப்பிடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் இந்துக்கள் ஒற்றுமையாக வழிபடும் திருவிழாவை திட்டமிட்டு மறைமுகமாக அரசு இதுபோல் தடுக்க நினைக்கிறதோ என்ற ஐயமும் மக்களிடையே எழுந்துள்ளது.
இந்து விரோத திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகமெங்கும் பல கோவில் திருவிழாக்களில் சுவாமி தேரும் சப்பரங்களும் விபத்துக்குள்ளாவது அதிகமாக எண்ணிக்கையில் நடைபெற்று வருகிறது.
இதற்கு அரசு இயந்திரங்கள் ஒன்றிணைந்து செயல்படாததே முழுமுதற் காரணமாகும். அதுபோல் ஏதேனும் விபத்துக்கள் நேர்ந்தால் நாங்கள் முன்பே சொல்லி விட்டோம் என்று தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே அரசு அதிகாரிகள் தயாராக உள்ளனர். தவிர எவ்வாறு திருவிழாக்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்று திட்டமிடுவதற்கு தயாராக இல்லையே என்று சந்தேகமும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
பல பகுதிகளில் திருவிழாவின்போது நடக்கும் சிறுசிறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அத்திருவிழாக்களையே தடை விதிக்கும் போக்கும் திமுக அரசிடம் அதிகமாக உள்ளது. சிவகங்கை மாவட்டம் கண்டதேவி திருக்கோவிலில் இரண்டு முறை நீதிமன்றம் சொன்ன பின்பும் திருவிழாவை நடத்துவதற்கு மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் எந்த முனைப்பும் எடுக்காத நிலையில் மாநில அரசை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்த பின்பே அத்திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் முன்னின்று நடத்தினார்.
தமிழகத்தின் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல கோவில் திருவிழாக்களை சட்ட ஒழுங்கு காரணம் காட்டி சாதி ரீதியாக பிரச்சனைகள் உள்ளதாகச் சொல்லி திருவிழாக்களை அனுமதி மறுத்து பின்பு மக்கள் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று திருவிழா நடத்தும் சூழல் நிலவு வருகிறது. மேலும் எந்த சூழ்நிலையிலும் என்ன பிரச்சனைகளாக இருந்தாலும் அதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி திருவிழாவினை நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக கோவிலின் சப்பரம் இதே திருவீதிகளில் தான் உலா வருகிறது. இதுவரையில் எந்த பிரச்சனைகளும் நடக்காத நிலையில் இவ்வாண்டு சப்பரத்தின் அளவை குறைக்கச் சொல்லி மின்வாரியம் நோட்டீஸ் வழங்கி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் படி அங்குள்ள சாலைகளை சீரமைக்கும் போது பழைய சாலைகளை அகற்றாமல் அதற்கு மேலேயே மீண்டும் மீண்டும் புதிய சாலைகள் போடுவதால் தான் சாலையின் உயர்கிறது. இம்மாதிரியான விபத்துக்கள் நிகழும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு சாலையை சுரண்டி விட்டு சாலை போடாமல், சப்பரத்தின் உயரத்தை குறைக்க சொல்லும் திராவிடம் மாடல் அரசினை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
சமீபத்தில் விமானப் படையின் வான் சாகச நிகழ்ச்சியில் அரசு துறை நிர்வாகம் இணைந்து பணி செய்யாமல் 5 பேர் உயிரிழக்க காரணமாக ஆனது என்பதை சுட்டிக் காட்டுகிறோம்.
எனவே அதனை கவனத்தில் கொண்டு இத்திருவிழா வழக்கம் போல் சிறப்பாக நடைபெற அரசின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து ஒத்துழைப்பு வழங்கிட தமிழக அரசு ஆணையிட இந்து முன்னணி வலியுறுத்துகிறது.