Home Blog Page 155

Ind Vs Eng T20: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

eng vs ind t20 2025 - 2026

இந்தியா இங்கிலாந்து முதல் டி-20 ஆட்டம்- கொல்கொத்தா-22 ஜனவரி 2025

போட்டியை வெற்றியுடன் இந்திய அணி தொடங்கியது

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இங்கிலாந்து அணியை (20 ஓவர்களில் 132 ரன், ஜாஸ் பட்லர் 68, ஹாரி ப்ரூக் 17, வருண் சக்கரவர்த்தி 3/23, அர்ஷதீப் சிங், ஹார்திக் பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கட்) இந்திய அணி (12.5 ஓவர்களில் 133/3, அபிஷேக் ஷர்மா 79, சஞ்சு சாம்சன் 26, திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 19, ஹார்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 3, ஆர்ச்சர் 2/21, அதில் ரஷீத் 1/27) ஏழு விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இந்திய அணியில் சஞ்சு சாம்சன் விக்கட் கீப்பராக இடம்பெறுவதால், துருவ் ஜுரல் விளையாடவில்லை; முகம்மது ஷமி, வாஷிங்க்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா ஆகியோரும் விளையாடவில்லை. அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகிய மட்டையாளர்கள்; ஹார்திக் பாண்ட்யா, நிதீஷ் ராணா இருவரும் பந்துவீசும் ஆல்ரவுண்டர்கள்; ரிங்கு சிங் இறுதியில் அடித்து ஆடும் ஒரு ஆட்டக்காரர்; அர்ஷதீப் வேகப்பந்து வீச்சாளர்; வருண், அக்சர், பிஷ்னோய் மூவரும் சுழல் பந்து வீச்சாளர்கள்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (பூஜ்யம் ரன்) மற்றும் பென் டக்கட் (4 ரன்) இருவரும் அர்ஷதீப் பந்து வீச்சில் மூன்று ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஜாஸ் பட்லர் (44 பந்துகளில் 68 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) ஹாரி ப்ரூக் (14 பந்துகளில் 17 ரன்) இருவரும் வேகமாகவே ரன் சேர்த்தனர். எட்டாவடு ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் ஹாரி ப்ரூக்கும் லியன் லிவிங்க்ஸ்டோனும் ஆட்டமிழந்தனர். ஆட்டம் இந்திய அணியின் கைகளில் வந்தது. அதன் பின்னர் இந்திய அணிக்கு ஏறுமுகம்ந்தான். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 132 ரன் எடுத்திருந்தது.

          133 என்ற எளிய இலக்கை அடைய இந்திய அணி அதிக கஷ்டப்படவில்லை. தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தபோதும் 20 பந்துகளில் 26 ரன் அடித்து அணியை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார். அதன்பின்னர் அபிஷேக ஷர்மா (34 பந்துகளில் 79 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) அதிரடியாக ஆடினார். திலக் வர்மா (16 பந்துகளில் 19 ரன்) அவருக்குத் துணை நின்றார். 12.5 ஓவரில் 133 ரன் அடித்து இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. ஐந்து ஆட்டங்கள் கொண்ட தொடரை வெற்றியுடன் தொடங்கி 1-0 என்ற நிலையில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.

          அடுத்த ஆட்டம் சென்னையில் 25ஆம் தேதி நடைபெற உள்ளது,   

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

kadeswara subramaniam hindu munnani - 2026

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக MLA அப்துல் சமது ஆய்வு குறித்து இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று, அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

முருக பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மலையை வைத்து முஸ்லிம்கள் மதக்கலவரத்தை தூண்டிட ஆளும் திமுக கட்சி சதி செய்கிறது என இந்து முன்னணி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது. மணப்பாறை தொகுதி திமுக எம்எல்ஏ அப்துல் சமது, எஸ்டிபிஐ கட்சியின் பொறுப்பாளர்களுடன் திருப்பரங்குன்றத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளார்.

இது அப்துல் சமதுவின் தொகுதி இல்லை. அவர் அமைச்சரும் இல்லை. அதுமட்டுமல்லாது பயங்கரவாத அமைப்பினரை உடன் அழைத்து வந்துள்ளார். இது திட்டமிட்ட சதி என்பது அப்பட்டமாக தெரிந்தும் காவல்துறை அதிகாரிகள் அவர்களை அனுமதித்துள்ளனர்.

சமீபத்தில் எஸ்டிபிஐ கட்சியின் பொறுப்பாளர்கள் சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள முஸ்லிம் சமாதியை வைத்து திருப்பரங்குன்றம் மலையை முழுவதுமாக கையகப்படுத்திட வேண்டும் என்றும் இதன்மூலம் தமிழகம் முழுவதும் பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்று பேசியதாக தகவல்கள் தெரிகிறது.

இவர்களின் மனநிலை இவர்களின் சதிச் செயலை வெளிப்படுத்துகிறது. திருப்பரங்குன்றம் மலை முருகனின் மலை என்பதற்கு தமிழ் இலக்கியங்களில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. மேலும் தமிழ் மன்னர்கள் ஆட்சியில் இருந்து இன்றைய ஆட்சியாளர்கள் வரை நிர்வாக ரீதியான ஆவணங்களும் இது முருகன் வீற்றிருக்கும் புனித மலை என்பதற்கான ஆவணங்களும் பல உள்ளன.

மேலும் லண்டன் நீதிமன்றம் முதல் சென்னை உயர்நீதிமன்றம் வரை அது முருகனின் மலை என்று உறுதி கூறியுள்ளன. மேலும் அம்மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இத்தகைய சமாதி கட்டும் சதிச் செயல்களை, கோவில்களை ஆக்கிரமிக்க முகலாயர் காலத்தில் இருந்தே செய்யப்பட்ட உத்தி என்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. உதாரணமாக எட்டுக்குடி முருகன் கோவில் தான் ஏர்வாடி தர்காவாக மாற்றப்பட்டது என்பது வரலாறு.

அதுபோல கர்நாடகாவில் உள்ள ஶ்ரீ ரங்கபட்டினம் ரங்கநாதர் கோவிலின் உள்ளேயே முஸ்லிம் சடலம் புதைக்கப்பட்டு உள்ளது. அதேசமயம் இஸ்லாம் மதத்தின் படி சமாதி கட்டுவது, தர்கா வழிபாடு தடை செய்யப்பட்டது. அது இஸ்லாமிய மத விரோதம் ஆகும்.

அப்படி இருக்கையில் இது மதக்கலவரத்தை தூண்டுகிற செயல் தானே. புனிதமான மலை மீது முஸ்லிம்கள்சட்டவிரோதமாக உள்ள முஸ்லிம் சமாதியில் வழிபட சபாநாயகர் அப்பாவு அவர்களிடம் அப்துல் சமது மனு அளித்தார். அப்போதே முதல்வர் தலையிட்டு கண்டித்திருக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் அமைப்புகளின் ஒவ்வொரு அமைப்பும் போட்டி போட்டு கொண்டு இதனை பிரச்சினையாக்க முயல்கின்றன என்பது வெளிப்படையாக தெரிந்தும் தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.

தமிழகத்தில் மத கலவரத்தை தூண்டும் செயலுக்கு தமிழக ஆளும் கட்சி துணைபோகிறது.முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதற்கு உரிய முக்கியத்துவத்தை ஏற்படுத்தவில்லை.

அதுபோல மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் பகுதியின் மேம்பாட்டிற்கு உரிய நிதியை அளித்து மேம்படுத்த வேண்டும்.எனவே இத்தகைய போக்கு ஒட்டுமொத்த முருக பக்தர்களை அவமதிக்கும் செயல். ஒருபுறம் உலக முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் நாடகம் நடத்திய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழக அரசு உடனடியாக இந்த சதி செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மேலும் இதனை திமுக தொடர நினைத்தால் உலகம் முழுவதிலும் இருக்கும் முருக பக்தர்கள் மற்றும் ஒட்டுமொத்த இந்து சமுதாயத்தை ஒருங்கிணைத்து மாபெரும் போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்பதை இந்து முன்னணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

cow 1 - 2026

கோமயம் என்பது மாட்டின் சாணம். கோ மூத்ரம் என்பதுதான் மாட்டின் சிறுநீர். இதற்கே வித்யாசம் தெரியாமல் கத்திக் கதறி உருட்டிக் கொண்டும், உளறிக்கொண்டும் இருப்பவர்களிடம் வெறும் இந்து மத வெறுப்பைத் தவிர வேறு எதையும் பார்க்க முடியவில்லை. பொதுவாக பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தை ‘கோமூத்ரா மற்றும் கோமியம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் அழைத்து வந்தனர்.

அதிகாலையில், வீட்டு வாசலில் சாணம் கரைத்த நீர் தெளித்து, மெழுகித் தூய்மை செய்வார்கள். இதைக் “கிருமிநாசினி” என்பார்கள். இது இன்றும் எங்கள் ஊர்ப்பகுதியில் வழக்கில் உள்ளது. அதோடு பசுவின் மூத்ரத்தை சிமென்ட், டைல்ஸ் போன்ற தரைப் பதிப்பான்கள் வருவதற்கு முன்பு கிருமிநாசினியாக வீடுகளில் தெளிப்பது வழக்கத்தில் இருந்தது. பசுஞ்சாணத்தைக் கெட்டியாகத் தட்டை வடிவில் தட்டி, காய வைத்து, வரட்டியாக்கி சமைப்பதற்கான எரிபொருளாகவும், ஹோமங்களிலும், யாகங்களில் நெருப்பை வளர்க்கப் பயன்படுத்துவது நம் முன்னோர்களின் வழக்கம்.

பசுவின் பால், மற்றும் அதிலிருந்து தயாரிக்கப்படும் தயிர், நெய்யுடன் பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றைக் கலந்தே “பஞ்சகாவ்யம்” என்ற மருந்து தயாரிக்கப்படுகிறது. இது மூளை தொடர்பான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மிக முக்கியமாக இந்த மருந்து இன்றும் நடைமுறையில் உள்ளது. பசுவிடம் இருந்து உருவாகும் ஐந்து பொருள்களால் தயாராகும் இந்த பஞ்சகவ்யம் வாதம், பித்தம், கபம், தோல் நோய்,நீரிழிவு நோய்,சிறுநீரகப் பிரச்சினை போன்ற நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது. மேலும் நினைவாற்றலை அதிகரிக்கவும் இது பயன்படுகிறது..!

சித்தர்கள் இந்த பஞ்சகவியத்தினைக் கொண்டு “பஞ்சகவ்ய கிருதம்” என்ற மருத்தினைத் தயாரித்தனர். இதையே தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படும் “நம்மாழ்வாரும்” முன்மொழிந்தார். மேலும், பசுவின் சிறுநீரைக் கொதிக்கவைத்து, அதன் நீராவியைச் சேகரித்து, அதிலிருந்தும் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வேதிப்பொருள்களைச் சுத்திகரிக்க பசுவின் சிறுநீர் பயன்படுத்தப்படுகிறது. இனிமாவாகவும்(Enema) பயன்படுத்தப்படுகிறது.

பசுவின் சிறுநீரில் மருத்துவ குணங்கள் இருப்பதாக “அஷ்டாங்க ஹ்ருதயம்” என்ற ஆயுர்வேத நூலில் குறிப்புகள் இருக்கின்றன.பசுவின் சிறுநீருடன் கடுக்காய் சேர்த்துத் தயாரிக்கப்படும் “கோமூத்ரா ஹர்தகி” என்ற மருந்து வயிற்று உப்புசம், கல்லீரல் பிரச்னைகளுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இது 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட இலவச மருத்துவமனைகளில் இருந்த மருந்து வகைகளில் ஒன்றாகும். கோமூத்ரம் மற்றும் கடுக்காய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த மருந்துக்கு 1000 ஆண்டுகால வரலாறு உண்டு. இதற்கு தகுந்த கல்வெட்டு சான்றுகளே உண்டு.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவர் என்ன மருந்து பயன்படுத்தி தனது கேன்சர் வியாதியை குணப்படுத்தியதாக ராஜ்யசபாவில் சொல்கிறார் என்பதை நீங்களே கேளுங்கள். அவரையும் மூடநம்பிக்கை உடையவராக எண்ணினால் உங்கள் அறிவை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

https://www.facebook.com/groups/457194128421352/permalink/678440626296700

இந்துக்களின் நம்பிக்கைகள் நன்மையே தருமாயினும் வீண் விமர்ச்சனங்களை அள்ளி வீசும் மாற்று மதத்தவர்களைக் காணும்போது சிரிப்புதான் வருகிறது. ஏனெனில் என்னிடம் இந்த கேள்வியை வைத்த இஸ்லாமிய நண்பர் ஒருவருக்கு நான் ஒன்றை கூற கடமைப்பட்டுள்ளேன். இம்மண் சார்ந்த ஆயுர்வேத மருத்துவ முறைகளை விமர்ச்சிப்பீர்களேயானால் நானும் உங்களுக்கு ஒன்றை சொல்ல கடமைப்பட்டுள்ளேன். அதாவது,

மாட்டு மூத்திரத்தில் மருத்துவ பயன்கள் உள்ளது என்பதை கண்டுபிடித்து அதனுடன் கடுக்காய் சேர்த்து கோமூத்ர ஹரிதஹி என்ற பெயரில் நமது மக்களுக்கு இலவசமாக கொடுத்த நமது முப்பாட்டன் இராஜராக சோழனிடம் மாட்டு மூத்ரம் வாங்கி குடித்தவர்கள் இன்று உங்கள் வம்சாவழிகளிலும் வந்திருக்கலாம் என்பதை கூறிக்கொண்டு ஏதோ ஹதீஸாம் அதில் ஒட்டக மூத்திரத்திற்கு மருத்துவ குணம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இதன் உண்மைத்தன்மையை ஆய்ந்து எனக்கு விளக்கியபின் கோமூத்ரம் குடிப்பவர்களை ஏளனம் செய்யுங்கள்.

புஹாரி 1501ஆவது ஹதீஸ்:

அனஸ்(ரலி) அறிவித்தார். உரைனா எனும் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் மதீனா வந்தபோது மதீனாவின் பருவநிலை ஒத்துக் கொள்ளாமல் நோயுற்றனர். எனவே ஸகாத்தாகப் பெறப்பட்ட ஒட்டகம் இருக்குமிடத்திற்குச் சென்று அதன் பாலையும் சிறுநீரையும் குடிப்பதற்கு அவர்களை நபி(ஸல) அவர்கள் அனுமதித்தார்கள். ஆனால், அவர்கள் அங்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவரைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றனர். செய்தியறிந்த நபி(ஸல்) அவர்கள், அவர்களைப் பிடித்துவர ஆள் அனுப்பினார்கள். அவர்கள் பிடித்து வரப்பட்டதும் அவர்களின் கைகளையும் காகளையும் வெட்டினார்கள்; கண் (இமை)களின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர்களைக் கருங்கற்கள் நிறைந்த ஹர்ரா எனுமிடத்தில் (பற்களால்) கற்களைப் (பற்றிப்) பிடித்துக் கொண்டிருக்கும்படிவிட்டுவிட்டார்கள்.

ஆதாரம் : www.tamililquran.com

ஆதாரம் : https://youtu.be/-HeTlCHOKdk

இறுதியாக மாட்டின் சிறுநீரை நேரடியாக பயன்படுத்தவேண்டும் என்று எந்த சித்த வைத்திய குறிப்புகளிலும் இல்லை என்பதையும், இதை இதை நேரடியாக அருந்தினாலோ, பசுஞ்சாணத்தை நேரடியாக உடம்பில் பூசிக்கொள்வதாலோ நோய்கள் குணமாகும் என்பதெல்லாம் எந்த அடிப்படை ஆதாரமும் அற்ற அவரவர் நம்பிக்கை சார்ந்த விசயங்களாகும். இதைச்செய்பவர்களே இதைப்பற்றி கவலைப்படாதபோது இதை பெரிதுபடுத்தி உங்கள் மத வெறுப்புகளை உமிழாதீர்கள் என்பதை கூறிக்கொள்கிறேன்.

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

  • – பா இந்துவன்

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

IMG 20250121 WA0007 - 2026

விக்கிரமங்கலம் கிராமத்தில் ஐந்து பேர் ஆண்டித்தேவர் வகையறா, நமச்சிவாயம் பிள்ளைகள் வகையறா, நல்ல பிள்ளைத்தேவர் வகையறா ஆகியோருக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அருள்மிகு கருப்புசாமி மற்றும் பரிவார தேவதைகள் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் மூன்று நாட்கள் நடைபெற்றது.

மகா கும்பாபிஷே விழாவை முன்னிட்டு கடந்த வாரம் எட்டூர் கிராம பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். இந்த கோவிலைச் சேர்ந்த பங்காளிகள் ராமேஸ்வரம்,அழகர் கோவில், கொடுமுடி உட்பட 11 ஊர்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து யாகசாலை அன்று புனித நீர் குடங்களில் தீர்த்தங்களை நிரப்பி வைத்து யாகசாலை மண்டபம் ஜோடித்து வைத்தனர்.

மூன்று நாட்கள் கணேச சாஸ்திரிகள் கும்பகோணம் 13 முரளி கிருஷ்ண சாஸ்திரிகள் குழுவினர்கள் யாக பூஜை நடத்தினர். நேற்று அதிகாலை முதல் விக்கிரமங்கலம் உட்பட எட்டூர் கிராம மக்கள் மேளதாளத்துடன் வானவேடிக்கையுடன் பெண்கள் குடத்தில் மஞ்சள் நீர் நிரப்பி வேப்பிலை எடுத்து வந்தனர்.

இவர்களுடன் ஆண்கள் ஒவ்வொருவரும் சோகையுடன் கரும்பு கொண்டு வந்தனர். எட்டுர் பக்தர்கள் கொண்டு வந்த மஞ்சள் நீர் பொது மக்களுக்கு தெளிக்கப்பட்டது யாக சாலையில் இருந்து வானவேடிக்கை மேள தாளத்துடன் சாஸ்திரிகள் புனித நீர் குடங்களை எடுத்து கோபுர கலசத்திற்கும், குதிரையில் இருந்த கருப்புசாமிக்கும், அங்காள ஈஸ்வரிக்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தினர.

சுப நிகழ்ச்சிகளுக்கு மாமன் சீர் கொண்டு வருவது போல் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தில் கச்சிராயிருப்பு கிராமத்தில் இருந்து வானவேடிக்கை மேளதாளத்துடன் கொடி பிடித்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.இவர்களை திருப்பணி குழுவினர் எட்டூர் கிராம மக்கள் வரவேற்றனர்.

சீர்வரிசை கொண்டு வந்த மாமன் மச்சான் கிராமத்தினருக்கு விழா குழுவினர் மரியாதை செய்தனர். சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் தேனிநாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், முன்னாள் எம்எல்ஏ கதிரவன், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் மகேந்திரன், திண்டுக்கல் மேயர், இளமதி ஜோதி பிரகாஷ் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாலாஜி, செல்லம்பட்டி ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் சுதாகரன், செல்லம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா உள்பட எட்டூர் கிராம பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார், செக்கானூரணி இன்ஸ்பெக்டர் திலகரணி, விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

thiruparankundram vel edukkum vizha - 2026
#image_title

வைகாசி விசாகத்துக்கு ஒரு கோயில்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விசாக திருவிழா நேற்று துவங்கியது. திருவிழா தொடக்கமாக நேற்று மாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிவாச்சார்யார்களால் காப்பு கட்டப்பட்டது.

வசந்த உற்சவம்: இரவு ஏழு மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புஷ்ப அலங்காரத்தில், வசந்த மண்டப மேடையில் எழுந்தருளினர். மேடையின் அடிப்பாகத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு, மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பலகையில் சுவாமி எழுந்தருளினார். அங்கு வசந்த உற்சவம் முடிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வசந்த உற்சவம் ஜூன் 2 வரை நடக்கும்.

பால்குட திருவிழா: ஜூன் 3 அதிகாலை ஐந்து மணிக்கு சண்முகர், வள்ளி,தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகம் முடிந்து, காலை 7 மணிக்கு சுவாமி கம்பத்தடி மண்டபம் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருள்வார். பாதயாத்திரை பக்தர்கள் சுமந்துவரும் குடங்களில் உள்ள பால், சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காலை 9 முதல் 2 மணிவரை அபிஷேகம் செய்யப்படும்.

மொட்டையரசு திருவிழா: ஜூன் 4ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, தங்க குதிரை வாகனத்தில், தியாகராஜர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எழுந்தருள்வர். அங்கு மொட்டையரசு திருவிழா முடிந்து, இரவு பூப்பல்லக்கில் கோயில் திரும்புவர். தங்கரதம் புறப்பாடு இல்லை: மே 25 முதல் ஜூன் 4வரை நடக்கும் வைகாசி விசாக திருவிழாவில், உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பங்கேற்று அருள்பாலிப்பர். இந்த நாட்களில் தங்க ரதம் புறப்பாடு இல்லை, என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்


நக்கீரர் சன்னதி :சிவபக்தரான நக்கீரர், சிவனை எதிர்த்து வாதம் செய்த பாவம் நீங்க, திருப்பரங்குன்றத்தில் தவம் செய்தார். அப்போது அருகிலிருந்த குளத்தில் இலை ஒன்று பாதி மீனாகவும், மீதி பறவையாகவும் இருந்ததைக் கண்டு அதிசயித்தார். இதனால் அவரது தவம் கலைந்தது. அச்சமயத்தில் பூதம் ஒன்று சிவ வழிபாட்டிலிருந்து தவறிய 999 பேரை சிறை பிடித்திருந்தது. நக்கீரரின் தவம் கலையவும் அவரையும் பிடித்து குகையில் அடைத்தது. நக்கீரர், பூதத்திடம் சிக்கியவர்களை காப்பதற்காக திருமுருகாற்றுப்படை பாடினார். அவருக்கு காட்சி தந்த முருகன் பூதத்தை சம்ஹாரம் செய்து, தனது வேலால் குகையை தகர்த்து அனைவரையும் காத்தருளினார். அப்போது நக்கீரர் முருகனிடம் தன்னை பூதம் தீண்டியதால் கங்கையில் நீராடி பாவத்தை போக்கிக்கொள்ள வேண்டும் என்றார். முருகன் வேலால் பாறையில் ஊன்றி கங்கை நதியை பொங்கச்செய்தார். நக்கீரர் அதில் நீராடி பாவம் நீங்கப்பெற்றார். வற்றாத இந்த காசி தீர்த்தம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கிறது. இதற்கு அருகில் மேற்கு நோக்கிய காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதியும், எதிரே சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. இந்த சன்னதியில் நக்கீரர் இருக்கிறார். தீர்த்தத்தை ஒட்டியுள்ள பாறையில் நான்கு லிங்கங்களும், ஒரு சிவ வடிவமும், காசிவிஸ்வநாதர், சுப்பிரமணியர், அம்பிகை, பைரவர், கற்பகவிநாயகர் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. நக்கீரர் அடைக்கப்பட்ட பஞ்சாட்சர குகை சரவணப்பொய்கை அருகில் இருக்கிறது.

சூரபத்மனை வெற்றிகொண்ட முருகப் பெருமானுக்கு இந்திரன் தன் மகளான தெய்வானையைத் திருமணம் செய்து தருவதாக வாக்களித்தான். அதன்படி திருப்பரங்குன்றத்தில் அவர்களது திருமணம் கோலாகாலமாக நடைபெற்றது. நாரதர் முன்னிலையில் தெய்வங்களும் ரிஷி முனிவர்களும் தேவர்களும் புடை சூழ முருகனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. இந்தக் கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி இந்தத் தலத்தே எழுந்தருளினார். 

இந்தத் தலத்தை நக்கீரர், அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் பாடியுள்ளனர்.

பிரார்த்தனை: திருமண, புத்திர தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்: வைகாசிவிசாகம், ஆடிக் கிருத்திகை, புரட்டாசியில் வேல் திருவிழா, கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கே முக்கியத் திருவிழாக்கள்.

இருப்பிடம்: மதுரையில் இருந்து திருமங்கலம் செல்லும் வழி.

திறக்கும் நேரம்:  காலை 5.30-1 வரை; மாலை 4-9 வரை

போன்: 0452-2482248 / 2482648


அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. இங்கு சத்தியகிரீஸ்வரர் (சிவன்), பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும் மூலஸ்தானத்தை ஒட்டி ஒரே குடவரையில் அருளுகின்றனர்

திருமண கோலத்தில் முருகன்: அறுபடை வீடுகளில் இத்தலம் முதல் படை வீடு. மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்த படி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். சுப்பிரமணியருக்கு கீழே அவரது வாகனமான யானை, ஆடும் உள்ளது. முருகன் குடவரை மூர்த்தியாக இருப்பதால் புனுகு மட்டும் சாத்தப்படுகிறது.

திருப்பரங்குன்றம் முருகன் குடைவறைக் கோயிலில் உள்ளதால், அவருக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.

அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

கோயில் ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது.

பரம்பொருளாகிய சிவன் குன்றுவடிவில் அருளுவதால் சுவாமி, “பரங்குன்றநாதர்’ என்றும், தலம் “பரங்குன்றம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

கோயில் மண்டப முகப்பில் நந்திகேஸ்வரர், மனைவி காலகண்டியுடன் காட்சி தருகிறார்.

சிவன் கிழக்கு பார்த்து தனிக்கருவறையில் இருக்கிறார். இவருக்கு நேரே மகாவிஷ்ணு, பவளக்கனிவாய் பெருமாளாக மகாலட்சுமியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அருகில் மதங்க மகரிஷியும் இருக்கிறார். பொதுவாக சிவனுக்கு நேரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். இது அபூர்வமான அமைப்பாகும். எனவே இக்கோயிலை “மால்விடை கோயில்’ (மால் – திருமால், விடை – நந்தி) என்கின்றனர். பெருமாள் தன் மைத்துனராகிய சிவனுக்கு சேவை செய்வதற்காக நந்தியின் இடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணத்தின்போது, இவரே பார்வதியை தாரை வார்த்துக் கொடுக்கச் செல்கிறார்.

சத்தியகிரீஸ்வரர் :

மகிஷாசுரன் எனும் அசுரன் தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிக்க அம்பாள், நவநாயகிகளாக வடிவம் எடுத்து ஒன்பது நாட்கள் அவனுடன் போரிட்டாள். ஒன்பதாம் நாளில் அவள் துர்க்கையம்மனாக மாறி அவனை வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க சிவனை வணங்கினாள். அவளுக்கு காட்சி தந்த சிவன், தான் இத்தலத்தில் மலையின் வடிவில் இருப்பதாகவும், இங்கு தன்னை வணங்கிவர சாபம் நீங்கப்பெறும் என்றார். அதன்படி துர்க்கையம்மன் இங்கு வந்து லிங்க வடிவ மலையாக இருக்கும் சிவனை தவம் செய்து வணங்கினாள். மேலும் மலையிலேயே ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து பூஜித்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் தோஷத்தை போக்கியருளினார்.

அம்பாள் ஆவுடைநாயகி தனிச் சன்னதியில் தெற்கு பார்த்தபடி இருக்கிறாள். கொடிமரத்தின் அருகே மலையை நோக்கி, அதன் அளவிற்கேற்ப பெரியநந்தி இருக்கிறது. இதற்கு அருகிலேயே மூஞ்சூறு, மயில் வாகனங்களும் உள்ளது. மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், தன் மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். மகாமண்டபத்தில் நடராஜர், சுற்றிலும் ரிஷிகளுடன் பார்வதியின் அம்சத்தில் அன்னபூரணி, சிவசூரியன், சந்திரன் ஆகியோர் இருக்கின்றனர். குடவறைக்கு வலது புறத்தில் பஞ்சலிங்கங்கள், அம்பாள்களுடன் திருமணக்கோலத்தில் இருக்கிறது. அருகில் கார்த்திகை முருகன், வள்ளி, தெய்வானையுடன் இருக்கிறார். இவருக்கு அருகில் கருடாழ்வார் நின்றகோலத்தில் இருப்பது விசேஷ தரிசனம். இக்கோயிலுக்கென மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன. தோல் வியாதிகள் உள்ளவர்கள் லட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக்கொள்கின்றனர். இக்கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை. பவுர்ணமி தோறும் கிரிவலம் செல்கின்றனர்.

நேர்த்திக்கடன்: இக்கோயிலில் அதிகளவில் அன்னதானம் செய்து நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

முருகன் அருகில் கருடாழ்வார் : சிவன் கோயில்களில் நந்தி, விநாயகர் தலங்களில் மூஞ்சூறு, முருகன் சன்னதியில் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள்தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால் இத்தலத்தில் சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு. மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார்.

தெட்சிணாமூர்த்திக்கு ருத்ராபிஷேகம்: இங்குள்ள தெட்சிணாமூர்த்தி, இடது கையை தன் காலுக்கு கீழே உள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளபடி இருக்கிறார். ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்கள், நீண்டநாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இவரது சன்னதி முன்பாக “ருத்ராபிஷேகம்’ செய்து வழிபடுகின்றனர். இதற்காக ஒரு “வெள்ளிக்குடத்தில்’ சுவாமியை ஆவாகனம் (சுவாமியை குடத்தில் எழுந்தருள வைத்து) செய்து 11 வேத விற்பன்னர்கள் சிவனுக்குரிய உயர்ந்த மந்திரங்களாகிய ருத்ரம், சமஹம் ஆகிய மந்திரங்கள் சொல்லி வழிபடுகின்றனர். இது விசேஷ பலன்களைத் தரக்கூடிய அபிஷேகம் ஆகும்.

மால்விடை கோயில்: இக்கோயிலில் ஒரே குடவறையில் சிவன், பவளக்கனிவாய் பெருமாள், கற்பகவிநாயகர், சுப்பிரமணியர் மற்றும் துர்க்கை ஆகிய ஐந்து பேரும் அருள்கின்றனர். துர்க்கையம்மன் ராஜகோபுரத்திற்கு நேரே வடக்கு பார்த்து, காலுக்கு கீழே மகிஷாசுரனுடன் நின்றகோலத்தில் இருக்கிறாள். இவளுக்கு இடப்புறத்தில் கற்பக விநாயகர் கையில் கரும்பு ஏந்திக்கொண்டு தாமரை மலர் மீது அமர்ந்து வித்தியாசமான கோலத்தில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றி பல ரிஷிகள் வணங்கியபடி இருக்கின்றனர். துர்க்கைக்கு வலது புறம் தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் சுப்பிரமணியர் வடக்கு நோக்கி இருக்கிறார். இவருக்கு அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் உள்ளனர்.

தவறுக்கு பரிகாரம்

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார். பிரணவ மந்திரத்தை குரு மூலமாக கற்பதுதான் முறை. தற்செயலாக முருகன் மந்திர உபதேசம் கேட்டுவிட்டாலும் அதை தவறாகவே கருதி பரிகாரத்திற்காகவும், சிவனே தனக்கு குருவாக இருந்து மந்திரம் உபதேசிக்க வேண்டுமென்றும் வேண்டி இத்தலத்தில் தவமிருந்தார். சிவன், அவருக்கு ஒரு தைப்பூசத்தன்று காட்சி தந்து மன்னித்தார். இவர், சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றத்திற்கு செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.

தந்தைக்கு பதில் மகன்

திருப்பரங்குன்றம் கோயிலில் விழாக்களின்போது, சிவனுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், முருகன் வீதியுலா செல்கிறார். முருகன், சிவ அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாக சொல்கிறார்கள். இங்கு முருகனுக்கு “சோமசுப்பிரமணியர்’ என்று பெயர். சோமன் என்பது சிவனின் ஒரு பெயர்.

துர்க்கை சன்னதி

கோயில்களில் துர்க்கை, பரிவார தெய்வமாகவே இருப்பாள். ஆனால், திருப்பரங்குன்றத்தில் துர்க்கையம்மன் கொடிமரமும், ராஜகோபுரத்துடன் இருக்கிறாள். ஆம்! இவளது சன்னதி எதிரிலேயே கொடிரம், கோபுரம் இருக்கிறது. மகிஷாசுரனை வதம் செய்த பின்பு, துர்க்கை இங்கு சிவனை வழிபட்டதோடு, ஒரு லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து மனம் அமைதியடைந்தாள். சிவனும் இங்கேயே அவளை தங்கும்படி அருள் செய்தார். எனவே, இத்தலத்தில் அவளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

சபரிமலையில்… காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

sabarimala coin counting - 2026

சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் முக்கியமான ஒன்று ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் பத்து ரூபாய் 20 ரூபாய் நாணய நிலையாகும் இந்த நாணயங்களை எண்ணுவதில் கடந்த ஆண்டு திருவாங்கூர் தேவசம் போர்டு பெரும் பிரச்சனையை சந்தித்து மிகப் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது இந்த நாணயங்களை இந்த ஆண்டு மிகச்சரியாக எண்ணி கணக்கு காட்ட முன்கூட்டியே சரியான வழிமுறைகளை கண்டுபிடித்து நடை அடைக்கும் இன்று காணிக்கைகளும் அனைத்தும் எண்ணப்பட்டு காணிக்கை பாதுகா ப்பு அரை என்னும் வரை அனைத்தும் தற்போது திருமாங்கூர் தேவசம்போர்டு மூடியுள்ளது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக இருக்கும் கருவூலத்தில் உள்ள கடைசி சில நாணயங்கள் கூட முழுமையாக எண்ணப்பட்டுவிட்டது .

கடந்த வருடம் இதே நேரத்தில், மூன்று அறைகளில் நாணயங்கள் குவிந்து கிடந்தன, எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி, வரவிருக்கும் பூஜை மாதத்தையொட்டி, சுமார் 300 ஊழியர்கள் 22 நாட்கள் அயராது உழைத்து காணிக்கை எண்ணினர். இதில் ஏற்பட்ட நிதி இழப்பும் மனித முயற்சியும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தின.

கடந்த ஆண்டு நிலைமை மீண்டும் நிகழாமல் இருக்க இந்த முறை ஆரம்பத்திலிருந்தே திருவாங்கூர் தேவஸ்தானம் ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கார்த்திகை முதல் நாளிலிருந்து நாணயங்களை எண்ணுவதற்கு 150 தினசரி கூலி தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். தினசரி கூலி தொழிலாளர்களும் தேவஸ்தானம் ஊழியர்களும் ஒன்றிணைந்தபோது, ​​இந்த விஷயம் வரலாறாக மாறியது.

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.

காணிக்கை எண்ணுவதில் ஹரிபாடு துணை ஆணையர் திலீப் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கு வகித்தனர்.

சபரிமலை கோயில் நடை அடைப்பு!

sabarimala nada adaippu - 2026

உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று காலை பந்தள மன்னர் ராஜ ராஜ வர்மா சுவாமி தரிசனம் செய்ததும் சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டது.

சபரிமலையில் மண்டல-மகரவிளக்கு விழா நிறைவடைந்த நிலையில் சபரிமலை கோயில் மூடப்பட்டது. திருவபிராண அணியினர் ஐய்யனை வணங்கி திருவாபரன் கலசங்கள் அடங்கிய பெட்டிகளுடன் அனுமதி பெற்று மீண்டும் பந்தளம் அரண்மனைக்கு நடை பயண ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் ராஜபிரதிநிதி சோபானம் வந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். பின்னர் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஐயப்பன் சிலைக்கு விபூதியாபிஷேகம் செய்து கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவித்து, கையில் யோக குச்சியும் அணிவித்தார். ஹரிவராசனம் படித்து முடித்த மேல்சாந்தி சன்னதியை விட்டு வெளியேறி சாவியை அரச பிரதிநிதியிடம் ஒப்படைத்தார்.

18வது படியில் இறங்கிய பந்தள அரச பிரதிநிதி, தேவசம்பிரதிநிதிகள் மற்றும் மேலசாந்தி முன்னிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ வி நாத்திடம் சாவியை ஒப்படைத்தார். மாதாந்திர பூஜைச் செலவுக்கு பண உதவித்தொகையும் வழங்கப்பட்டது. பின்னர் அரச பிரதிநிதியும் அவரது குழுவினரும் பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து வழிபாடுகள் நடைபெற்றன. விழாவின் உச்ச நிகழ்வாக கடந்த 14-ம் தேதி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவித்து, மகரவிளக்கு பூஜை நடைபெற்றது. மாலையில் பொன்னம்பலமேட்டில் தெரிந்த ஜோதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து மகர சங்கராந்தி வழிபாடுகள் நடைபெற்றன.

மகரவிளக்கு பூஜைகள் முடிந்த நிலையில் நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பம்பையில் இருந்து மாலை 6 மணிக்குள் பக்தர்கள் மலையேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்னோட்டமாக, சத்திரம், எருமேலி உள்ளிட்ட பாதயாத்திரை பக்தர்களுக்கான வனப்பாதைகள் மூடப்பட்டன. சபரிமலையில் இன்று (சனி) காலை 10.30 மணியுடன் நெய் அபிஷேகம் நிறைவடைகிறது.

இதற்கிடையே, சபரிமலை சந்நிதானத்துக்கு நேற்று முன்தினம் பந்தள மன்னரின் பிரதிநிதி ராஜராஜவர்மா உள்ளிட்டோருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த கார்த்திகை ஒன்று முதல் 41 நாட்கள் நடந்த மண்டல பூஜை வழிபாடும் அதன் பின் ஜனவரி 30 துவங்கிய மகரஜோதி வழிபாடும் முடிவடைந்த நிலையில் தற்போது சபரிமலை கோவில் பக்தர்கள் இல்லாமல் அமைதியின் மொத்த உருவமாக காட்சியளிக்கிறது

இனி சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாத பூஜைக்காக நடை திறக்கப்படும் சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி மகர விளக்கு காலங்களில் வருகை தந்த பக்தர்கள் எண்ணிக்கை மொத்த வருவாய் போன்ற விவரங்களை விரைவில் தேவசம்போர்டு வெளியிடும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

திருமுருகாற்றுப் படையில் திருப்பரங்குன்றம்!

thiruparankundram vel edukkum vizha - 2026
#image_title
  • கி.வா.ஜகந்நாதன்

திருப்பரங்குன்றம்

முதலில் திருப்பரங்குன் றமாகிய படைவீட்டைப் பற்றிச் சொல்கிறார். முருகப்பெருமான் ஆறு படைவீடு களில் எழுந்தருளியிருக்கிறான் என்ற வழக்கு, பலகால மாகத் தமிழ் நாட்டில் இருக்கிறது. அந்த வழக்குக்கு அடிப்படை திருமுருகாற்றுப்படையே. பிற்காலத்தில் அருணகிரிகாத சுவாமிகளுடைய திருப்பாடல்களிலும், முருகனைப் பற்றிய துதி நூல்களிலும் ஆறுபடை வீடுகளைப் பற்றிய செய்திகள் நிரம்ப வருகின்றன. நக்கீரர் படைவீடுகள் என்று குறிப்பிட்டுச் சொல்லாவிட்டாலும் ஆறு இடங்களைத் தனியே வைத்துச் சுட்டிக்காட்டுவதால் ஆறுபடை வீடுகள் என்ற அமைப்பு உண்டாயிற்று. வேறு பல இடங்களிலும் முருகன் இருந்தாலும் ஆறு என்ற எண்ணிக்கைக்கும் அவனுக்கும் தொடர்பு மிகுதி. ஆகையால் ஆறு படைவீடு என்ற வழக்கு நிலையாக நின்றுவிட்டது. அந்தப் திருப்பரங்குன் றம். படைவிடுகளில் முதலாவது

பரங்குன்றின் பழம் பெருமை

திருப் பரங்குன் றத்தைப்பற்றிச் சொல்ல வருகிறார் நக்கீரர். அதைப் பற்றிய செய்தி சுருக்கமாகவே இருக் கிறது. மதுரையைப் பற்றிய வருணனையே முதலில் இருக் கிறது. ஏதேனும் ஓர் ஊரைப் பிறருக்குச் சுட்டிக்காட்ட வேண்டுமானால் அது சிற்றூராக இருந்தால், அதன் அருகி லுள்ள பேரூரைச் சொல்லிப் பின்பு அதனைச் சொல்வது ஒரு வழக்கம். அவ்வாறு திருப்பரங்குன்றத்தை நேரே சொல்லாமல் அதன் அருகிலுள்ள மதுரை மாநகரைச்  சொல்லி, அப்பால் திருப்பரங்குன்றத்தைச் சொல்கிறார் நக்கீரர்.

மதுரை மாநகருக்கு மேற்கே இருப்பது திருப்பரங் குன்றம், அந்தக் காலத்தில் திருப்பரங்குன் றம் தனி ஊராக இல்லை. மதுரை மாநகரிலுள்ள மக்கள் பேரன்போடு திருப்பரங்குன் றத்திற்குச் சென்று வழிபட்டு வந்தார்கள். பரிபாடல் என்ற சங்க நூலில் அதைப்பற்றிய செய்திகள் வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் அந்தக் காலத்தில் இருந்த இயற்கை எழிலையும், மதுரை மாநகரிலுள்ள மக்கள் திரளாகச் சென்று முருகனை வழிபட்ட செய்தியையும் அதில் காணலாம். குகைகளில் பல வகையான சித்திரங்கள் எழுதி இருந்தார்கள் என்பதை அந்த நூல் சொல்கிறது; அவ்விடத்தை எழுதெழிலம்பலம் என்று சொல்வார்கள். தொன்றுதொட்டே திருப்பரங்குன்றம் புகழுடையதாக நிலவுகிறது. முருகப்பெருமா னுக்குரிய முதல் படைவீடு என்பதோடு, அது ஒரு சிவத்தலமு மாகும். பரங்குன்றம் என்ற பெயரே பரனாகிய சிவபெருமான் இருக்கின்ற குன்று என்ற பொருளுடையது; அந்தத் தலத்துக்குத் தேவாரம் உண்டு. ஆகவே சிவத்தலமும், முருகன் திருப்பதியும் ஒன்றாக இணைந்து அமைந்தது அவ்விடம் முருகப் பெரு மானின் புகழ் அங்கே மிகுதியாக இருப்பதனால் பலருக்கு அது பாடல் பெற்ற சிவத்தலம் என்பது தெரியாது. சிவத்தலம் என்பதை அதன் பெயரே நன்கு காட்டு கிறது.

மதுரையின் சிறப்பு

இனி நக்கீரர் சொல்கின்றதைப் பார்க்கலாம். அவர் முதலில் நமக்கு மதுரையை அறிமுகப்படுத்துகிறார். அவர்  மதுரையில் வாழ்பவரானாலும் நம்மை நோக்கிப் பாடுபவ ராகையால், புறத்திலிருந்து மதுரைக்கு நம்மை அழைத்தும் செல்கிறார் மதுரை மாநகர் பாண்டிய அரசர்கள் அரசாண்ட இடம். பல காலமாகப் பரம்பரை பரம்பரையாகப் பாண்டிய மன்னர்கள் இருந்து தம்முடைய வீரத்தையும், கொடையையும் புலப்படுத்திய இடம் அது. அன்றியும் தமிழ்ச் சங்கத்தில் பல புலவர்கள் இருந்து தமிழ் ஆராய்ச் சியைத் தொடர்ந்து நடத்திவந்த இடமும் அதுதான், பழங் காலத்தில் மன்னர்கள் இருந்து வாழ்ந்து அரசோச்சிய நகரங்களுள் இன்றும் சிறப்புடன் இருப்பவை காஞ்சிபுரமும் மதுரையுமே ஆகும். ஆனால் இந்த இரண்டிலும் மதுரை பழஞ்சிறப்புக் குன்றாமல் மேலும் மேலும் வளர்ச்சி பெற்று வருகிறது. மன்னர் உறைவிடம் ஆதலின் அந்த நகருக்கு. மதில்கள் உண்டு; கோட்டைகளும் உண்டு பழங்காலத்தில் மதிலின் வெளியிலே காவலர்கள் காத்துக்கொண்டிருப் பார்கள். மதிலின்மேல் கொடிகள் ஆடிக்கொண்டிருக் கும். மதுரையில் அடிக்கடி போர் நிகழ்வது இல்லை. அந்தத் திருமதில்வாயில் போர் இல்லாத வாயில் பாண்டியன் மிக்க வீரத்துடன் பகைவர்களை அழித்து ஒடுக்கி விட்ட மையினால் மதுரையை முற்றுகை இடுபவர் யாரும் இல்லை

மதிலின் வாயிலில் பந்தையும், பாவைகளையும் தொங்க விட்டிருப்பார்கள். அது ஒரு குறிப்பையுடையது. பகை வர்கள் இந்த மதிலினூடே புகுந்து வரமுடியாது, அப்படிப் புகுந்துவர வேண்டுமானால் ஆண்மையை இழந்து. தாங்கள் பெண்களைப் போன்றவர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டும். அதற்கு அடையாளமாக மதில்வாயி லிலே கட்டித் தொங்கவிட்டிருக்கும் பந்தையும், பாவை யையும் எடுத்து விளையாடிப் பின்பு உள்ளே போக வேண்டும். பெண்கள் பந்தாடுவதும் பாவையை வைத்துக் கொண்டு விளையாடுவதும் இயல்பு. வீரமுடையவர்கள் வெளியில் நின்று கோட்டையை முற்றுகையிடலாம். பெண் களைப் போன்றவர்கள் வீரம் இழந்து உள்ளே போகலாம். இதுதான் குறிப்பு.

மதிலை நெடுந்தூரத்திலிருந்து பார்க்கும்போது, ‘பகை வர்கள் வேண்டுமானால் முற்றுகையிட்டுப் போர் செய்ய லாம்’ என்று உணர்த்துகின்ற பாண்டியனது கொடி அதன் மேல் உயர்ந்து விளங்குகிறது.

செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி.

[போரை விரும்பி உயர்த்திக்கட்டிய மிக உயரமாக உள்ள நீண்ட கொடிகளை உடைய.]

மதிலைப் பார்த்து, அதன்மேல் உயர்ந்து பறந்து கொண்டிருக்கும் கொடியைப் பார்த்து, பின்னர் வாயிலை அணுகுகிறோம். அங்கேதான் பந்தும் பாவையும் தொங்கு கின்றன. அந்த வாயில் இப்போது மங்கல வாயிலாக இருக்கிறது. திறந்து இருக்கின்ற வாயில் அது. பகைவர்க ளாகிய வீரர்களை அடியோடு அழித்துவிட்ட சிறப்பை உடையவன் பாண்டியன். ஆதலின் அந்த வாயிலில் இப் போது போருக்குரிய அறிகுறிகள் இல்லை.

வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போர் அரூ வாயில்

[வரிந்து புனையப்பட்ட பந்தோடு பொம்மைகள் தொங்க, பகை வீரர்களை அழித்துப் போர் அருமையாகப் போன வாயிலையும் – உடைய மதுரை என்று சொல்ல” வருகிறார்.] 

அந்த வாசலின் வழியே மதுரைக்குள்ளே புகுகிறோம். எங்கே பார்த்தாலும் விசாலமான தெருக்கள்: அழகான அங்காடிகள் இருக்கின் றன. பழங்காலத்தில் மதுரையிலும் காவிரிப்பூம் பட்டினத்திலும் இருந்த அங்காடிகள் மிக்க சிறப்பைப் பெற்றவை; பிற நாட்டி லிருந்து வந்தவர்களும் பண்டங்களைப் பெற்றுத் தம் ஊருக்குச் செல்லும் பெரு மையை உடையவை. மதுரையில் அந்தக் காலத்தில் பகல் நேரத்தில் வியாபாரத்தைச் செய்யும் இடத்தை நாள் அங்காடி என்றும், மாலையில் வியாபாரிகள் வாணிகம் செய்யும் இடத்தை அல்லங்காடி என்றும் கூறுவார்கள். அந்த இரண்டு கடைத் தெருவுகளும் மிக விரிவாக அமைந்திருந்தன என்று பழைய நூல்கள் கூறுகின்றன. அந்த அங்காடிகளில் வஞ்சகம் என்பதே கிடையாது. உள்ளதை உள்ளபடியே சொல்லி வியாபாரிகள் வியா பாரத்தை நடத்துவார்கள்; கொள் முதல் இது, லாபம் இது என்று வெளிப்படையாகச் சொல்லி விற்பனை செய் வார்கள்; போலிச்சரக்கு வியாபாரமோ, அநியாய விலையைச் சொல்கின்ற முறையோ, ஏமாற்றே, திருட்டோ அங்கே இருப்பது இல்லை. அது எந்த வகையான தீமையும் இல்லாத அங்காடி, அதனை நக்கீரர், தீது தீர் நியமம் என்று சொல்கிறார்,

அந்தத் தெருக்களில் எப்போதும் திருமகள் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறாள்; உலகத்திலேயுள்ள பல நாட்டு மக்களும் வந்து சேர்ந்து பண்டங்களைக் கொடுத்தும் கொண்டும் வாணிகம் செய்யும் இடம் அது; மக்கள் கூட்டமும் பொருளின் சிறப்பும் சிறிதும் குறையாமல் நிற்கின்ற இடம்; அங்கே திருமகள் கொலு வீற்றிருக் கிறாள் என்றே சொல்லவேண்டும். ஆகவே,

திருவீற்றிருந்த தீது தீர் நியமத்து

[திருமகள் சிறப்புடன் தீர்ந்த கடைகளையும்,] எழுந்தருளியிருக்கும், தீமை.

என்று சொல்கிறார். தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் மற்ற நகரங்களைவிடச் சிறந்த மாட மாளிகைகள் மதுரையில் அதிகமாக இருந்தன. அதனால் அதை “மாடக் கூடல்” என்று சொல்வார்கள். “நான்மாடக் கூடல்” என்பது மதுரைக்குரிய ஒரு பெயர். ஒரு காலத்தில் இறைவன் தன்னுடைய தலையில் இருந்த நான்கு மேகங்களையே மாடமாக நிறுத்தி, வருணன் இடையறாது பெய்த மழையிலிருந்து அவ்வூரைக் காப்பாற்றினான் என்பது புராண வரலாறு.பொதுவாகவே செல்வம் நிரம்பிய நகரமாதலின் செல்வர்கள் பெரிய மாடங்களை எழுப்பியிருந்தார்கள். அதனால் மாடக்கூடல் என்ற பெயர் வந்தது. ஒவ் வொரு வீதியிலும் பல பல மாடங்கள் இருந்தன.

மாடம் மலி மறுகிற் கூடல்.

[மாடங்கள் மலிந்த தெருக்களையும் உடைய மதுரை.]

வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் கோட்டையும் கொடிகளும். சமாதானத்தை வெளிப்படுத்தும் மதில் வாயிலும், செல்வச் சிறப்பையும் நியாயமான வாணிகச் சிறட்பையும் புலப்படுத்தும் அங்காடிகளும், வளத்தைக் காட்டும் மாடங்களும் உடைய மதுரைமா நகருக்கு மேற்கே திருப்பரங்குன்றம் இருக்கிறது என்று சொல்ல வருகிறார்.

மாடம் மலி மறுகிற் கூடற் குடவயின்.

[மாடங்கள் மலிந்த தெருக்களையும் உடைய மதுரைக்கு, மேற்கே.] 

வண்டுகளின் மகிழ்ச்சி

இனி, திருப்பரங்குன்றத்தைப் பற்றிச் சொல்கிறார். திருப்பரங்குன் றத்தின் அடிவாரத்தில் வயல்கள் இருக் கின்றன. மலையின்மேலே சுனைகள் இருக்கின்றன. வளப்ப முடைய நிலமாதலின் அங்கங்கே உழுது பயிரிட்டிருக் கிறார்கள். வளம் நிரம்பிய வயல்கள் அங்கே உண்டு, வயல் வளம் சேற்றினால் அமைவது. நல்ல பூமி ஆதலால் அந்தச் சேறு கறுப்பாக இருக்கிறது. துண்டு துண்டாக அங்கங்கே சிதறுண்டு கிடக்கும் வயலாக இல்லை. எங்கே பார்த்தாலும் அகன்ற நிலப் பரப்புகள் எல்லாம் கரிய சேற்றையுடைய வயலாகக் காட்சி தருகின்றன.

இருஞ்சேற்று அகல் வயல் – என்று நக்கீரர் பாடுகிறார். வயலின் ஓரங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் தாமரை மலர்கள் மலர்ந்திருக் கின்றன. முள்ளைத் தண்டிலேயுடைய தாமரை வாய் அவிழ்ந்து விரிந்திருக்கிறது.

மலர் இருக்கும் இடத்தில் வண்டு வரவேற்பு இல்லாமல் போய்ச் சேரும். முதல் நாள் இரவிலே வண்டுகள் வந்து ஒரு தாமரை மலரில் புகுந்தன. அது மூடிக்கொண்டது. இரவு முழுவதும் அந்தத் தாமரை மலரையே படுக்கையாகக் கொண்டு அந்த வண்டுகள் அங்கே தூங்கின. ஆண் வண்டும் பெண் வண்டு மாகத்தான் இருக்க வேண்டும். காலையில் வாயில் கதவைத் திறப்பதுபோல அந்தத் தாமரை இதழ்கள் விரிந்தன. அப்போது அங்கு இருந்த வண்டுகள் புறப்பட்டன. முதல் நாள் மாலையில் தாமரைத் தேனை உண்ட வண்டுகள் இன்று காலையில் நெய்தல் மலரை ஊதுகின்றன. வைகறை நேரமாகையால் அது இன்னும் மூடிக்கொள்ளவில்லை. அந்த நெய்தலில் உள்ள கள்ளையும் குடித்து மறுபடியும் பூரிக்கின்றன. காலையில் சுறு சுறுப்பை ஊட்டும் வகையில் இருக்கிறது நெய்தல் தேன்; அதனால் அதைக் கள் என்றே சொல்கிறார்.

இப்போது சூரியன் நன்றாகத் தன்னுடைய கிரணங் களைப் பரப்பிவிட்டான். களிப்பில் மிதந்த அந்த வண்டுகள் மெல்ல மெல்லப் பறந்து மேலே செல்கின்றன. மலையின் மேலுள்ள சுனைகளில் பலவகையான மலர்கள் மலர்ந்திருக்கின் றன. கண் களைப் போன்ற சின்னஞ் சிறிய பூக்கள் அங்கே உள்ளன. அவற்றிலும் தேன் இருக்கின்றது. முதல் நாள் தாமரைத் தேனை நுகர்ந்து விட்டு, விடியற்காலையில் நெய்தல் கள்ளை உண்டு புறப்பட்ட வண்டுகள், நல்ல சிறிய பூக்கள் மலர்கின்ற மலையின் மேலுள்ள சுனைக்கு வந்து விட்டன. அங்குள்ள மலர் களில் புகுந்து அங்கேயுள்ள தேனையும் உண்டு ரீங்காரம் செய்கின்றன. இப்படி வேறு வேறு வண்டுகள் ஒலிக் கின்றன. அழகிய சிறகுகளை உடைய வண்டுக் கூட்டங்கள் சேர்ந்தாற்போல் முரலும்போது ஒருவகை இனிமையான ஒலி எழும்புகிறது. வயிறு நிரம்பத் தேனை உண்ட சிறப் பினாலே அந்த வண்டுகள் இடைவிடாமல் மலையின் மேலே யுள்ள சுனைகளில் ரீங்காரம் செய்கின்றன. அத்தகையது பரங்குன்றம்.

இருஞ்சேற்று அகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த 
முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் 
கள்கமழ் நெய்தல் ஊதி எற்படக் 
கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் 
அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் 
குன்று அமர்ந்து உறைதலும் உரியன். 

[கரிய சேற்றையுடைய அகன்ற வயலில் விரிந்து. மலர்ந்த முள்ளைத் தண்டிலே உடைய தாமரையில் உறங்கி. விடியற்காலையில் கள் மணம் வீசுகின்ற நெய்தல் மலரை ஊதி, பகல் நேரம் வந்தவுடன், கண்ணைப் போல மலர்ந்த அழகிய சுனை களிலுள்ள மலர்களில், உள்ளே சிறகுகளை யுடைய வண்டுகளின் கூட்டம் ரீங்காரம் செய்யும் திருப்பரங் குன்றத்தில் எழுந்தருளியிருப்பதற்கும் உரியவன்.]

இரவிலே தங்கிய வண்டுகள் தாமரையில் தூங்கு. கின்றன என்று சொல்ல வந்தவர்.

முள் தாள் தாமரைத் துஞ்சி – என்றார். இங்கே முள்ளையுடைய தாமரை என்று சொல் வதற்கு ஏதேனும் சிறப்பு உண்டா என்று பார்க்க. வேண்டும். இரவில் தூங்குபவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் அல்லவா? ஆகையால் இயற்கையிலேயே வண்டுகள் துஞ்சுகிற படுக்கையாகிய மலருக்கு முள் பாதுகாப்பாக இருக்கிறது. வேறு எந்தப் பிராணியும் அந்தத் தண்டின் மேல் ஏறித் தாமரையில் புகமுடியாது. தாமரையாகிய வீட்டின் இதழாகிய கதவு தானே காலையில் திறந்து கொள்ளுமேயன்றி வேறு ஒருவராலும் திறக்க. முடியாது.

வண்டுகளுக்கே இத்தனை இன்பமான வாழ்வு அமையும். போது மற்றவர்களுக்கு எவ்வளவு இன்பம் உண்டாகும். என்று நாம் வியக்கிறோம்.

வீரமும். செல்வமும், சமாதானமும் ஒருங்கேயுடைய. மதுரை மாநகருக்கு அருகில் இயற்கையான எழில் லங்கள் நிறைந்த திருப்பரங்குன் றத்தில் முருகப் பெருமான் எழுந்தருளியிருக்கிறான். அடியார்களுக்கு அருள் செய்வதற்காக வந்து அமர்ந்த இடம் ஆகையால் மிக்க விருப்போடு அங்கே தங்கியிருக்கிறான். குன்று அமர்ந்து உறைதலும் உரியன்.

“அங்கே உறைதலும் உரியன்” என்று நக்கீரர் சொன்னார். அந்த ஓர் இடம் மாத்திரம் ஆண்டவனுக்கு உரியது அன்று, இன்னும் பல இடங்கள் உண்டு என்பதை அந்தக் குறிப்புக் காட்டுகிறது. அதுமட்டு மன்று என்று சொல்லி மேலே தொடர்ந்து சொல்கிறார்.

குன்று அமர்ந்து உறைதலும் உரியன்; அதாஅன்று.

[அதாஅன்று – அதுவல்லாமல்,]

திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் முருகனைப். பற்றிச் சொன்ன பிறகு, “அதோடு மட்டுமன்று, இன்னும் சொல்கிறேன்” என்ற குறிப்பை வைத்துப் பேசினார் நக்கீரர். மேலே திருச்சீரலைவாயின் பெருமையைச் சொல்ல வருகிறார். முருகப் பெருமான் ஆறு முகங்களோடும், பன்னிரண்டு திருக்கரங்களோடும் எழுந்தருளும் கோலத்தை அந்தப் பகுதியில் விரிவாக எடுத்துக் காட்டுகிறார்.

ஐதராபாத் ரயிலை தென்காசி வழியாக இயக்கக் கோரிக்கை!

railway news - 2026
#image_title

நாகர்கோவில் – ஐதராபாத் – கச்சகுடா இடையே தற்போது இயங்கும் இரண்டு ரயில்களில் ஒன்றை திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்கவும் திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம் ,கொல்லம் -செங்கோட்டை -ராஜபாளையம் செக்கந்ராபாத் சிறப்பு ரயில்களை வாரம் இருமுறை நிரந்தரமாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் – ஐதராபாத் கச்சகுடா இடையே தற்போது இயங்கும் இரண்டு ரயில்களில் ஒன்றை திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் மாற்றி இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் முரளி, செயலர் கிருஷ்ணன், பொருளாளர் DRUCC உறுப்பினர் சுந்தரம், ஊடக மற்றும் மக்கள் தொடர்பாளர் ராமன் ஆகியோர் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே அமைச்சரகம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று ஜன.19ல் மின்னஞ்சலில் அனுப்பிய வேண்டுகோள்.

தற்போது நாகர்கோவில் ஐதராபாத் கச்சகுடா இடையே இரண்டு வாராந்திர ரயில்கள் இயக்கப்படுகின்றன. சனிக்கிழமைகளில் வண்டி எண் 16354ம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வண்டி எண் 07436ம் நாகர்கோவில் சந்திப்பு கச்சகுடா இடையே ஓடுகின்றன.

தற்போது திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் வழியாக ஐதராபாத் கச்சகுடாவுக்கு எந்த ஒரு ரயிலும் இல்லை.
இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்.

மேலும் அம்பை கல்லிடைக்குறிச்சி கீழக்கடையம் பாவூர் சத்திரம் தென்காசி செங்கோட்டை கடையநல்லூர் ராஜபாளையம் சிவகாசி ஊர்களை சேர்ந்த ஏராளமான தமிழக பொறியாளர்கள் ஐதராபாத் சாப்ட்வேர் கம்பெனிகளில் பணி புரிகின்றனர்.

எனவே தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகளும் மதுரை கோட்ட அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுத்து ஒரு நாகர்கோவில் ஐதராபாத் கச்சகுடா ரயிலை திருநெல்வேலி தென்காசி ராஜபாளையம் சிவகாசி விருதுநகர் பாதையில் திருப்பி விட வேண்டும் என வேண்டியுள்ளனர்.

திருவனந்தபுரம் வடக்கு-செங்கோட்டை-மதுரை-தாம்பரம் ,கொல்லம் -செங்கோட்டை -ராஜபாளையம் செக்கந்ராபாத் சிறப்பு ரயில்கள் பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்த இரு ரயில்களை வாரம் இருமுறை நிரந்தரமாக இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

முருக பக்தர்களை திமுக அமைச்சர் சேகர் பாபு அவமதித்த விவகாரம்; இந்து முன்னணி கண்டனம்!

kadeswara subramaniam hindu munnani - 2026

திருச்செந்தூரில் முருக பக்தர்களை திமுக., அமைச்சர் சேகர்பாபு அவமதித்த விவகாரத்தில், இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை:

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம் அங்கு நான்கு மணி நேரமாக தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் அவரிடம் முறையிட்டனர். பக்தர்களுக்கு வசதி செய்யாமல் வரிசையில் நிற்க வைக்கப்பட்டது குறித்து வருத்தப்பட்ட பக்தர்களையும், வயதானவர்களையும் அமைச்சர் ஒருமையில் பேசியதும், திருப்பதியில் கேள்வி கேட்காமல் நிற்பீங்க என கூறியதும் கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக நடக்கிறது. மக்களை மதிப்பதில்லை. கேள்வி கேட்டால் மிரட்டுவது, வழக்கு போடுவது, சிறையில் அடைப்பது என்ற அகந்தையோடு செயல்படுகிறது. அதுவும் பொது இடத்தில் மரியாதை குறைவாக ஒருமையில் பேசுவது அநாகரிகம். இது தொடர்கிறது.

திருப்பதியை பற்றி பேசுவதற்கு முன் அமைச்சர் சேகர் பாபு யோசித்து இருக்க வேண்டும். அங்கு பக்தர்களுக்கு எத்தகைய வசதிகளை தேவஸ்தானம் செய்து தருகிறது? பல லட்சம் பக்தர்கள் வருகின்ற ஐயப்பன் கோவிலில் எத்தகைய ஏற்பாடு இருக்கிறது. இதுபோல தமிழகத்தில் எந்த கோவிலிலாவது இருக்கிறதா? தரிசன கட்டணம் என்ற பெயரில் பக்தர்கள் அவமதிக்கப் படுகிறார்கள். இறைவன் முன் பொருளாதார தீண்டாமையை இந்த அரசு செயல்படுத்துகிறது. கோவிலில் தரிசன கட்டணம் கொள்ளை நடக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளே காரணம்.

இந்நிலையில் அமைச்சர் முதல், கோவிலில் உள்ள காவலாளி வரை பக்தர்களை தாக்கப்படுவதையும் அவமதிப்பதையும் பார்க்கிறோம்.

திருச்செந்தூர் கோவிலில் கடல் அரிப்பு ஏற்படுவது குறித்து இந்து முன்னணி பிரார்த்தனை ஆர்ப்பாட்டம் நடந்ததாலே அமைச்சர் சேகர் பாபு கோவிலை பார்வையிட வந்தார். பல கோடி வருமானம் வருகின்ற கோவிலை பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் திமுக ஆட்சியில் இல்லை. அப்படியே வந்த அமைச்சர் கடல் அரிப்பை தடுக்க நிபுணர்களை அழைத்து வந்து அதற்கு தக்க நடவடிக்கைகளை எடுத்து இருக்க வேண்டும்.

ஆனால் உலக முருக பக்தர்கள் மாநாடு என்று போலி நாடகம் நடத்தி கோவில் நிதியை கரைத்தனர். அதேசமயம் முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என ஆக்கிரமிக்க திமுக எம்எல்ஏ அரசிடம் கோரிக்கை வைத்ததை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் வேடிக்கை பார்க்கிறார்.

முருக பக்தர்கள் அள்ளி கொடுக்கும் உண்டியல் காணிக்கை ஆட்சியாளர்களுக்கு இனிக்கிறது. பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு வேண்டிய எந்த ஏற்பாடும் செய்யாமல் விபத்தில் சிக்கி உயிரிழப்பதை இந்த அரசு கண்டுகொள்வதில்லை. அதுவே வேற்று மதத்தினர் வெளிநாடு யாத்திரை செல்ல கோடிக்கணக்கில் நிதியை அள்ளி தந்து ஓடோடி உதவுகிறது.

விழாக்காலங்களில் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் கூட செய்யாத நகராட்சிகள் இந்துக்களிடம் ஜீசியா வரியை போல இந்துவாக இருப்பதற்காக நுழைவு கட்டணம் வசூலிக்கிறது. இத்தனை கொடுமைகளையும் சகித்துக்கொண்டு இந்துக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டிய நிலை இந்துக்களுக்கு உள்ளது.

அதைவிட கொடுமை விரதம் இருந்து பக்தியோடு தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களை அமைச்சர் ஒருமையில் பேசி அவமதித்தது.

பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர அரசு கடமைபட்டது என்ற உணர்வு அமைச்சருக்கு இருக்க வேண்டும். பொது இடத்தில் வயதானவர்களை மதிக்கும் நாகரிகம் வேண்டும். அமைச்சரே பக்தர்களை அவமதித்தால் அதிகாரிகள் எப்படி நடந்து கொள்வார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. அதனால் தான் ஐயப்பன் மலைக்கு செல்லும் பக்தர்கள் அதிகமாக கோவிலுக்கு வரும் காலங்களில் கைகலப்பு, பிடித்து தள்ளுதல் போன்ற அநாகரிக செயல்கள் நடப்பதை பார்க்கின்றோம்.

எனவே திருச்செந்தூர் வரும் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்யவும், கடல் அரிப்பில் இருந்து கோவிலை பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருப்பரங்குன்றம் முருகன் மலையின் புனிதத்தை காக்க உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். பக்தர்களை அவமதித்த அமைச்சர் மற்றும் திருமதி‌.கனிமொழி எம்பி பகிரங்க மன்னிப்பு கேட்டு, இனி இதுபோல் நடக்காமல் இருக்க உறுதி கூற வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.