பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
நண்பர்களே, கர்நாடகத்திலே, காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அவர்கள் செய்திருக்கின்ற பாவச்செயல் என்ன? உங்களுக்கு அதிர்ச்சியே ஏற்படும்.
இப்போது நீங்களே சொல்லுங்கள். உங்கள் கிராமத்தில் ஒரு நாள் ஒருவர் வந்து உங்களிடம் சொல்கிறார், இப்போது இந்த கிராமத்திலே, அனைவரும் இனி இந்த மாதிரி இல்லை வேறாகி விட்டார்கள்.
இது உங்களுக்குச் சம்மதமா? காங்கிரஸ் அரசாங்கம், கர்நாடகத்திலே, எத்தனை முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்களோ, உயர்மட்டமாக இருக்கலாம், செல்வர்களாக இருக்கலாம், வியாபாரிகளாக இருக்கலாம் தொழிலதிபராக இருக்கலாம் நீதிபதியாக இருக்கலாம். யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் முஸ்லிமாக இருந்தால் மட்டும் போதும்.
அவர்கள் முஸ்லிமாக இருந்தால், இவர்கள், இரவோடு இரவாக, ஒரு காகிதத்தில் எழுதிக் கையொப்பமிட்டு, அவர்கள் அனைவரையும், ஓபிசி என்று அறிவித்து விட்டார்கள். இவர்களை ஓபிசி என்று அறிவித்த பிறகு பெரிய புயல் வெடித்துக் கிளம்பியது.
அதாவது, அங்கே காங்கிரஸானது, கல்வி, மற்றும் அரசு வேலைகளில், முதலில் யாருக்கு ஓபிசி இடஒதுக்கீட்டின்படி கிடைத்து வந்ததோ, அந்த ஓபிசி சமூகத்தில் இத்தனை பேரையும் நுழைத்ததால், ஓபிசி சமூகத்துக்குக் கிடைத்துவந்த இடஒதுக்கீட்டை, அவர்களிடமிருந்து பறித்து விட்டார்கள். திருட்டுத்தனமாகப் பறித்து விட்டார்கள்.
மேலும், எந்த முஸ்லீம்களை புதிய ஓபிசியாக ஆக்கினார்களோ, சட்டவிரோதமாக ஏற்படுத்தினார்களோ, அரசியல் சட்டத்திற்குப் புறப்பாக ஏற்படுத்தினார்களோ, பாபாசாகேப் ஆம்பேட்கரின் உணர்வுகளுக்கு விரோதமாக ஏற்படுத்தினார்களோ, அந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு, ஓபிசிக்குக் கிடைத்து வந்ததை, அதைக் களவாடிக் கொடுத்து விட்டார்கள்.
உங்களனைவருக்கும் நன்கு தெரியும், தேசத்தின் அரசியல் சட்டம் உருவான வேளையில், மாதக்கணக்கில் ஆழமான கருத்தாய்வுகள் செய்யப்பட்டன. விவாதங்கள் நடந்தன. தேசத்தின் மதிப்புமிக்க சான்றோர்கள் இதன் மீது விவாதங்கள் செய்தார்கள்.
பாபா சாகேப் ஆம்பேட்கர் அவர்கள், இந்த விவாதங்களின் அடிப்படையில் அரசியல் சட்டத்தை அமைத்துக் கொடுத்தார். அனைவரும் நன்கு ஆய்ந்து புரிந்து ஒரு முடிவை மேற்கொண்டார்கள். நம் தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்காக, தேசத்தின் அரசியல்சட்டம், எந்த ஒரு காரணத்திற்காகவும், மதத்தின் அடிப்படையிலே, இடஒதுக்கீட்டை அளிக்காது என்றார்கள்.
பாபா சாகேப் ஆம்பேட்கர் கூறினார், மதத்தின் பெயரால் இடஒதுக்கீட்டை கொடுக்க முடியாது என்றார். ஆகையினால் தான் காங்கிரஸார், ஏமாற்று வேலையில் இறங்கினார்கள்.
பின்வாசல் வழியாகக் கொடுத்தார்கள். பாபாசாகேப் ஆம்பேட்கருடைய முதுகினிலே, கத்தியால் குத்தி விட்டார்கள். ஆனால் வாக்குவங்கி, மற்றும் திருப்திப்படுத்தலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ், கர்நாடகத்தின் இதே மாதிரியை, நாடு முழுவதிலும் அமல்படுத்த விரும்புகிறது.
பிரதமர் மோடியின் உரைகள் தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
உலகப்புகழ் பெற்ற சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிட முடியாத சூழலில் கேரள அரசும் திருவாங்கூர் தேவஸம் போர்டும் இனி ஆன்லைன் புக்கிங் முறையில் மட்டும் தினசரி 80ஆயிரம் பக்தர்களை மட்டும் தினசரி அனுமதிக்கவும் ஸ்பாட் புக்கிங் முறையை ரத்து செய்து பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்பதிவு மூலம் தரிசன முறையை திருமலை மாதிரி நடைமுறைப் படுத்த நினைக்கும் தேவஸம் போர்டு சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருமலை போல் வசதிகளை செய்து தருவதில்லை.இதனால் மீண்டும் ஆன்லைன் முன் பதிவு முறையை கேரள அரசு காவல்துறையிடம் ஒப்படைத்து தினசரி சபரிமலை வரும் பக்தர்கள் அனைவரையும் தரிசனம் செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்க பக்தர்கள் விரும்புகின்றனர்.
சபரிமலையில் ‘ஸ்பாட் புக்கிங்’ வசதியை இந்த ஆண்டு முதல் ரத்து செய்து தேவசம் போர்டு, கேரள அரசு கூட்டு முடிவு எடுத்துள்ளது.
சபரிமலை மண்ட, மகர விளக்கு சீசனில் கடந்த ஆண்டு போல நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் சிரமப்படாமல் இருப்பதற்காக, ‘ஸ்பாட் புக்கிங்’ ரத்து செய்யப்படுகிறது. தினம், 80,000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்க கேரள அரசும், தேவசம் போர்டும் முடிவு செய்துள்ளன.
கடந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனில் கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு, 24 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. காடுகளிலும், மலைகளிலும் சிக்கிய பக்தர்கள் தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் தரிசனம் முடிக்காமல் இருமுடி கட்டுகளை காட்டுகளுக்குள்ளே விட்டு திரும்பினர்.
சபரிமலையில், 14 ஆண்டுகளுக்கு முன், ‘விருச்சுவல் கியூ’ என்ற ஆன்லைன் முன்பதிவு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் துவக்கப்பட்டது. கொரோனாவுக்கு பின் முழுமையாக அனைத்து பக்தர்களும் ஆன்லைன் முன்பதிவு வாயிலாக வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாத பக்தர்களுக்காக நிலக்கல், பம்பை, எருமேலி மற்றும் கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டது. ஏற்கனவே, 80,000 பக்தர்கள் முன்பதிவு வாயிலாக தினமும் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஸ்பாட் புக்கிங் வாயிலாகவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்ததால் பெரும் சிக்கலானது.
தொடர்ந்து, நவம்பர் மாதம் துவங்க உள்ள மண்டல, மகர விளக்கு கால சீசனில் ஸ்பாட் புக்கிங் வசதியை முழுமையாக ரத்து செய்ய திருவிதாங்கூர் தேவசம் போர்டும், கேரள அரசும் முடிவு செய்துள்ளன.
தினசரி முன்பதிவு, 80,000 ஆக தொடரவும், சீசனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைன் முன்பதிவை துவங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அதன் தலைவர் பிரசாந்த் கூறினார்.
இந்த நிலையில் ஆன்லைன் முன்பதிவு எதற்கு கேரளாவில் தரிசனம் செய்ய வர அனைத்து பக்தர்களும் அனைத்து கோவில்களிலும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதா சட்டம் ஏதாவது உள்ளதா என ஐயப்பா சேவை சங்கங்கள் மற்றும் பக்தர்கள் கேள்வி கேட்கின்றனர்.
திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு இதே நடைமுறையை திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு கண்ட்ரோலில் உள்ள அனைத்து கோவிலிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா ஒரு நாளைக்கு எவ்வளவு பேர் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்று எந்த நடைமுறையும் இல்லை
பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத தேவஸ்தானம் உண்டியல் வருமானத்தை மட்டும் எப்படி கணக்கெடுக்கிறார்கள்.என பக்தர்கள் புகார் கூறுகின்றனர்
சபரிமலை நிர்வாகத்தை வேறு ஒரு தேவஸ்தானத்திடம் திருவாங்கூர் தேவஸ்தானம் ஒப்படைக்க வேண்டும் எங்களால் சபரிமலை நிர்வாகத்தை நிர்வாக படுத்த முடியவில்லை என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்
குருவாயூரில் தினமும் பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள் அங்கு எந்த ஒரு பிரச்சனையும் நடைபெறவில்லை..சோட்டானிக்கரை தினமும் பல்லாயிரம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்.
60 நாட்கள் இவர்களால் சமாளிக்க முடியாததால் திருவாங்கூர் தேவஸம் போர்டு தற்போதைய நிர்வாகக்குழு நிர்வாகத்தை விட்டு விலக வேண்டும்
இதற்கு முன்பு பல வருடங்களுக்கு முன்பெல்லாம் இதைவிட அதிகமான கூட்டம் எல்லாம் இருந்த போதும் எந்த ஒரு பிரச்சினையும் நடைபெறவில்லை தற்போது தான் இந்த பிரச்சனை இந்த ஆண்டுதான் அதிகப்படியான பிரச்சனை தொடங்கியுள்ளது.
இதற்கு முழு காரணம் திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தோல்வியே அவர்கள் நிர்வாகத்தை விட்டு விலகி வேறு நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் முடியாது என்று சொல்பவர்களிடம் நிர்வாகம் எதற்கு.என்று உலகம் முழுவதும் உள்ள ஐயப்ப பக்தர்கள் கூறுகின்றனர்.
ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணக்கிட முடியாத சூழலில் கேரள அரசும் திருவாங்கூர் தேவஸம் போர்டும் இனி ஆன்லைன் புக்கிங் முறையில் மட்டும் தினசரி 80ஆயிரம் பக்தர்களை மட்டும் தினசரி அனுமதிக்கவும் ஸ்பாட் புக்கிங் முறையை ரத்து செய்து பக்தர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்பதிவு மூலம் தரிசன முறையை திருமலை மாதிரி நடைமுறைப் படுத்த நினைக்கும் தேவஸம் போர்டு சபரிமலை வரும் பக்தர்களுக்கு திருமலை போல் வசதிகளை செய்து தருவதில்லை.
இதனால் மீண்டும் ஆன்லைன் முன் பதிவு முறையை கேரள அரசு காவல்துறையிடம் ஒப்படைத்து தினசரி சபரிமலை வரும் பக்தர்கள் அனைவரையும் தரிசனம் செய்ய அனுமதிக்க நடவடிக்கை எடுக்க பக்தர்கள் விரும்புகின்றனர்.
தாம்பரம் —திருவனந்தபுரம் கொச்சுவேலி இடையே விருதுநகர் ராஜபாளையம் செங்கோட்டை கொல்லம் வழியாக வாரம் இரு முறை கோடைகால விடுமுறை சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. இந்த ரயில்கள் முழுமையான 16 எல் ஹெச்பி பெட்டிகளுடன் முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும்.
விருதுநகர் செங்கோட்டை புனலூர் கொல்லம் வழியாக மலைவழிப்பாதையில்இரு வழிகளிலும் இயக்கவுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரத்தில் வியாழன் சனிக்கிழமைகளில் இரவு 07.30 க்கு புறப்பட்டு வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09.45 க்கு திருவனந்தபுரம் கொச்சுவேளி ரயில் நிலையத்தை சென்றடையும். திரும்பும்போது வெள்ளி ஞாயிறு தினங்களில் திருவனந்தபுரம் கொச்சுவேலி ரயில் நிலையத்தில் பகல் 12.30 க்கு புறப்பட்டு சனி திங்கள் கிழமைகளில் காலை 04.15க்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும்.
மேற்காணும் தகவல்களின்படி இந்த ரயில்கள் 16/05/24 முதல் 29/06/24 வரை தாம்பரத்திலிருந்தும் 17/05/24 முதல் 30/06/24 வரை திருவனந்தபுரம் கொச்சுவேலி யிலிருந்தும் இயக்கப்படும்.
இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது. 14 பிளஸ் 2 மூன்றடுக்கு ஏசி எகானமி எல் எச் பி பெட்டிகளோடு இவை இயங்கும்.
இன்று மும்பை வான்கடெ மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
ஹைதராபாத் அணியை (173/8, ட்ராவிஸ் ஹெட் 48, பேட் கம்மின்ஸ் 35, நித்தீஷ் குமார் ரெட்டி 20, ஹார்திக் பாண்ட்யா 3/31, பியூஷ் சாவ்லா 3/33) மும்பை அணி (17.2 ஓவரில் 174/3, சூர்யகுமார் யாதவ் 102*, திலக வர்மா 37*, புவனேஷ் குமார் 1/22, மார்கோ ஜான்சென் 1/45, பேட்கம்மின்ஸ் 1/35) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடவந்தது. ஹைதராபாத் அணியில் இன்று ட்ராவிஸ் ஹெட் (30 பந்துகளில் 48 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) வழக்கம்போல அதிரடியாக ஆட அடுத்த தொடக்க வீரர், அபிஷேக் ஷர்மா (16 பந்துகளில் 11 ரன்) 5.5ஆவது ஓவரில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதற்குப் பின்னர் மாயங்க் அகர்வால் (5 ரன்) 7.4ஆவது ஓவரில் இன்று புதிதாய் ஆடவந்த அன்ஷுல் காம்போஜ் பந்தில் அவுட்டானார். நிதீஷ் குமார் ரெட்டி இதன் பின்னர் ஹார்திக பாண்ட்யாவும் பியுஷ் சாவ்லாவும் தலா மூன்று விக்கட் எடுத்து சன்ரைசர்ஸ் அணியை 20 ஓவரில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 173 ரன் கள் என்ற நிலையில் இன்னிங்க்ஸை முடித்தனர்.
174 ரன் என்பது அடையக்கூடிய சற்றே கடினமான இலக்கை அடைய மும்பை அணி களம் இறங்கியது. ஆனால் பவர்பிளே முடிவதற்குள் ரோஹித் ஷர்மா (4 ரன்), இஷான் கிஷன் (9 ரன்) மற்றும் நமன் தீர் (பூஜ்யம் ரன்) மூவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் சூர்ய குமார் யாதவ் (51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ரன், 12 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் திலக் வர்மா (32 பந்துகளில் 37 ரன், 6 ஃபோர்) அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றனர். இதனால் அந்த அணி 17.2 ஓவரில் 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை டெல்லியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை; எனவே இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை அணி (167/9, ரவீந்தர ஜதேஜா 43, ருதுராஜ் குய்க்வாட் 32, டேரில் மிட்சல் 30, ராஹுல் சாஹார் 3/23, அர்ஷ்தீப் சிங் 2/42, ஹர்ஷல் படேல் 3/24) பஞ்சாப் அணியை (139/9, பிரப்சிம்ரன் சிங் 30, ஷஷாங்க் சிங் 27, ஹர்பிரீத் ப்ரார் 17, ராஹுல் சாஹார் 16, ரவீந்தஜதேஜா 3/20, துஷார் தேஷ்பாண்டே 2/35, சிமர்ஜீத் சிங் 2/16) 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று தர்மசலாவில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் சென்னை அணி முதலில் மட்டையாடவந்தது.
வெற்றிக்குத் தேவையான 168 ரன்களை அடைய ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி சுமார் 45 நிமிடங்களில் தங்களின் மிகச் சிறந்த மற்றும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸிடம் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், அவர்களது ஆட்டத்தில் கெட்டது நல்லதை விட அதிகமாக இருந்ததைக் காண்பித்தது.
சாம் கரனின் வீரர்கள் டாஸில் இருந்தே ஆதிக்கம் செலுத்தினர். ஐந்தாவது மற்றும் ஏழாவது ஓவர்களுக்கு இடையில் 18 பந்துகளில் 6 பவுண்டரிகள் அடித்து அவர்கள் விளையாடிய போது, 168 ரன்களை எளிதில் அடித்துவிடுவார்கள் எனத் தோன்றியது.
அப்போது சமன்பாடு 78 பந்துகளில் 112 ரன்கள் தேவை என்பதாகும். அச்சமயம் அவர்களிடம் எட்டு விக்கெட்டுகள் கைவசம் இருந்தது. இது சரிவதற்கான நேரம் அல்ல, ஆனால் பஞ்சாப் அணி சரிந்தது. அவர்களின் செட் பேட்டர்கள், அவர்களின் கேப்டன் மற்றும் அவர்களின் ஃபினிஷர் இருவரையும் இழந்தனர். அவர்கள் 62/2வில் இருந்து 7 விக்கெட் இழப்புக்கு 78 ரன்களுக்குச் சரிந்தனர்.
சென்னை அணியில் இன்று ருதுராஜ் கெய்க்வாட் (21 பந்துகளில் 32 ரன்), டேரில் மிட்சல் (19 பந்துகளில் 30 ரன்), ரவீந்தர ஜதேஜா (26 பந்துகளில் 43 ரன்) மூவர் மட்டுமே சிறப்பாக ஆடினர். அஜிக்யா ரஹானே (9 ரன்), ஷிவம் துபே (பூஜ்யம் ரன்), மொயீன் அலி (17 ரன்), மிட்சல் சாண்ட்னர் (11 ரன்), தோனி (கோல்டன் டக், பூஜ்யம் ரன்) என மற்ற வீரர்கள் இன்று சரியாக ஆடவில்லை. இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 167 ரன் மட்டுமே அடித்தது.
168 ரன் என்பது எளிய இலக்கு எனச் சொல்ல முடியாது; இருப்பினும் அடையக்கூடிய இலக்கு. பஞ்சாப் அணியின் ஜானி பெயர்ஸ்டோ (7 ரன்) மற்றும் ரிலீ ரோஸ்கோ (பூஜ்யம் ரன்) இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் பிரப்சிம்ரன் சிங் (23 பந்துகளில் 30 ரன்) மற்றும் ஷஷாங்க் சிங் (20 பந்துகளில் 27 ரன்) அணியின் ஸ்கோரை உயர்த்தினர். அதன் பின்னர் சாம் கரண் (7 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (பூஜ்யம் ரன், கோல்டன் டக்), அஷுத்தோஷ் ஷர்மா (10 பந்துகளில் 3 ரன்), ஹர்பிரீத் பிரார் (13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 17 ரன்), ஹர்ஷல் படேல் (12 ரன்), ராஹுல் சாஹர் (16 ரன்) ரபாடா (ஆட்டமிழக்காமல் 11 ரன்) ஆகிய வீரர்கள் நிலைத்து ஆட முயற்சிக்கவில்லை. இதனால் அந்த அணி 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.
சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜதேஜா தனதுசிறப்பான பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
கொல்கொத்தா அணி (சுனில் நரேன் 81, பில் சால்ட் 32, அங்க்ரிஷ் ரகுவன்ஷி 32, ரமந்தீப் சிங்க் 25*, ஷ்ரேயாஸ் ஐயர் 23, நவீன் உல் ஹக் 3/49) லக்னோ அணியை (16.1 ஓவரில் 137, மார்கஸ் ஸ்டோயினிஸ் 36, கே.எல். ராகுல் 25, ஆஷ்டன் டர்னர் 16, ஆயுஷ் பதோனி 15, ஹர்ஷித் ரானா 3/24, வருண் சக்ரவர்த்தி 3/30, ஆண்ட்ரு ரசல் 2/17, சுனில் நரேன் 1/22) 98 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று லக்னோவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் கொல்கொத்தா அணி முதலில் மட்டையாடவந்தது.
இந்த ஆட்டம் முழுவதும் கொல்கொத்தா அணியின் ஆதிக்கம்தான். அந்த அணியின் ரமந்தீப் சிங் 416.7 என்றா ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தார். குறைந்த ஸ்ட்ரைக் ரேட் வெங்கடேஷ் ஐயருடையது. அவர் ஒரு பந்தில் ஒரு ரன் எடுத்ததால் ஸ்ட்ரைக்ரேட் 100. இருநூறுக்கும் மேல் ஸ்ட்ரைக்ரேட் கொண்டவர்கள் இருவர். 100க்கும் 200க்கும் இடையே ஸ்ட்ரைக் ரேட் கொண்டவர்கள் நால்வர். பந்து வீசும்போது சுனில் நரேனைத்தவிர மற்ற சுழல் பந்துவீச்சாளர்கள் அனைவரும் தலா மூன்று விக்கட் எடுத்தார்கள். இதனால் கொல்கொத்தா அணி சூப்பர் வெற்றி பெற்றது. இதன் மூலம் நல்ல் நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளது.
கொல்கொத்தா அணி முதலில் பேட்டிங் செய்த்டபோது சுனில் நரேன் (39 பந்துகளில் 81 ரன், 6 ஃபோர், 7 சிக்சர்) லக்னோ அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் துவம்சம் செய்தார். அவருடன் தொடக்க வீரராக இறங்கிய பில் சால்ட் (14 பந்துகளில் 32 ரன்), அங்க்ரிஷ் ரகுவன்ஷி (26 பந்துகளில் 32 ரன்), ரசல் (8 பந்துகளில் 12 ரன்), ரிங்கு சிங் (11 பந்துகளில் 16 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (15 பந்துகளில் 23 ரன்), ரமன் தீப் சிங் (6 பந்துகளில் 25 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), வெங்கடேஷ் ஐயர் (1 ரன்) எடுத்ததால் கொல்கொத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 235 ரன் எடுத்தது.
236 ரன் என்ற கடினமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய லக்னோ அணியில் அதிக பட்ச ஸ்கோரே 36 ரன் தான். ஒற்றை இலக்க ஸ்கோர் எடுத்தவ்ர்கள் ஆறு பேர். கே.எல். ராகுல் (25 ரன்), அர்ஷின் குல்கர்ணி என்ற மற்றொரு தொடக்க வீரர் (9 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (21 பந்துகளில் 36 ரன்), இந்த ஐபிஎல்லின் மெகா ஃபெயிலியரான தீபக் ஹூடா (5 ரன்), நிக்கோலஸ் பூரன் (10 ரன்). ஆயுஷ் பதோனி (15 ரன்), ஆஷ்டன் டர்னர் (16 ரன்), க்ருணால் பாண்ட்யா (5 ரன்), யுத்வீர் சிங் (7 ரன்), ரவி பிஷ்னோய் (2 ரன்), நவீன் உல் ஹக் (பூஜ்யம்) என அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்ததால் லக்னோ அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 137 ரன் மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.
கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர் ஆல்ரவுண்டர் சுனில் நரேன் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை டெல்லியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
குஜராத் அணியை (19.3 ஓவரில் 147, ஷாருக் கான் 37, ராஹுல் திவாத்தியா 35, டேவிட் மில்லர் 30, ரஷீத் கான் 18, விஜய் ஷங்கர் 10, சிராஜ் 2/29, யஷ் தயால் 2/21, விஜயகுமார் வைஷாக் 2/23) பெங்களூரு அணி (டியு பிளேசிஸ் 64, விராட் கோலி 42) 152/6 நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது.
இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் குஜராத் அணி முதலில் மட்டையாடவந்தது.
குஜராத் அணியில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக் கான் (24 பந்துகளில் 37 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) டேவிட் மில்லர் (20 பந்துகளில் 30 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்), ராகுல் திவாத்தியா (21 பந்துகளில் 35 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய மூவரும் சிறப்பாக ஆடினார்கள். இவர்களைத் தவிர மற்றவர்கள் – விருத்திமான் சாஹா (1 ரன்), ஷுப்மன் கில் (2 ரன்), சாய் சுதர்ஷன் (6 ரன்), ரஷீத் கான் (18 ரன்), விஜய் ஷங்கர் (10 ரன்), மானவ் சுத்தர் (1 ரன்), மோஹித் ஷர்மா (பூஜ்யம் ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை.
இதனால் குஜராத் அணி இன்று 20 ஓவர் வரை விளையாடவில்லை. 19.3 ஓவரில் 147 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் அந்த அணி இழந்தது.
148 ரன் என்ற மிக எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணி இடையில் சற்று சொதப்பியது. பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் ஃபேஃப் டியு பிளேசிஸ் (23 பந்துகளில் 64 ரன், 10 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் விராட் கோலி (27 பந்துகளில் 42 ரன் 2 ஃபோர், 4 சிக்சர்) இருவரும் ஏறத்தாழ வெற்றியை உறுதி செய்துவிட்டனர்.
இருப்பினும் டியு பிளேசிஸ் 5.5ஆவது ஓவரில் அட்டமிழக்க அவருக்குப் பின் 7ஆவது ஓவரில் வில் ஜேக்ஸ் (1 ரன்), எட்டாவது ஓவரில் ரஜத் படிதர் (2 ரன்) மற்றும் கிளன் மேக்ஸ் வெல் (4 ரன்), பத்தாவது ஓவரில் கேமரூன் கிரீன் (1 ரன்) என பெங்களூரு வீரர்கள் வரிசையாக ஒருவர் ஒருவராக ஆட்டமிழந்தனர்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக விராட் கோலி 10.4ஆவது ஓவரில் அவுட்டானார். வெற்றி உறுதி என இருந்த நிலையில் இருந்து தோல்வி பெறுவார்கள் என்ற நிலைக்கு வந்தனர். ஆனால் தினேஷ் கார்த்திக் (12 பந்துகளில் 21 ரன்) ஸ்வப்னில் சிங் (15 ரன்) இருவரும் இணைந்து ஆடி வெற்றிய 13.4ஆவது ஓவரில் பெற்றுத் தந்தனர். இதனால் அந்த அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை ஞாயிற்றுக்கிழமை; எனவே இரண்டு ஆட்டங்கள் நடைபெறும்.
முதல் ஆட்டம் தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
கொல்கொத்தா அணி (19.5 ஓவரில் 169, வெங்கடேஷ் ஐயர் 70, மணீஷ் பாண்டே 42, நுவான் துஷாரா 3/42, பும்ரா 3/18) மும்பை அணியை (18.5 ஓவரில் 145, சூர்யகுமார் யாதவ் 56, டிம் டேவிட் 24, மிட்சல் ஸ்டார்க் 4/33, வருண் சக்ரவர்த்தி 2/22, சுனில் நரேன் 2/22, ரசல் 2/30) 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதனால் கொல்கொத்தா அணி முதலில் மட்டையாடவந்தது. அந்த அணியில் வெங்கடேஷ் ஐயர் (52 பந்துகளில் 70 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்), மணீஷ் பாண்டே (31 பந்துகளில் 42 ரன் 2 ஃபோர், 2 சிக்சர்) அங்க்ரிஷ் ரகுவன்ஷி (6 பந்துகளில் 13 ரன், 2 சிக்சர்) ஆகியோரைத்தவிர எவரும் இரட்டை இலக்க ஸ்கோர் அடிக்கவில்லை. பில் சால்ட் (5 ரன்), சுனில் நரேன் (8 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (6 ரன்), ரிங்கு சிங் (9 ரன்), ரசல் (7 ரன்), ரமன்தீப் சிங் (2 ரன்), மிட்சல் ஸ்டார்க் (பூஜ்யம் ரன்), வைபவ் அரோரா (பூஜ்யம் ரன்) ஆகிய கொல்கொத்தா அணி வீரர்கள் இன்று சரியாக விளையாடவில்லை.
ஜஸ்பிரீத் பும்ரா இன்று அருமையாக பந்துவீசினார். அவர் 3.5 ஓவர் வீசி 18 ரன் கொடுத்து 3 விக்கட்டுகள் வீழ்த்தினார். 20 ஓவர் வரை கொல்கொத்தா அணி இன்று விளையாடவில்லை. 19.5 ஓவரில் 169 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் அந்த அணி இழந்தது.
170 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த மும்பை அணி ஒரு சாம்பியன் அணி போல விளையாடவில்லை. பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் அந்த அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 46 ரன் மட்டுமே எடுத்திருந்தது.
அந்த அணியின் சிறந்த பேட்டர்கள் எனக் கருதப்படும் இஷான் கிஷன் (7 பந்துகளில் 13 ரன் 1 ஃபோர், 1 சிக்சர்), ரோஹித் ஷர்மா (12 பந்துகளில் 11 ரன், 1 சிக்சர்), நமன் தீர் (11 பந்துகளில் 11 ரன், 2 ஃபோர்), திலக் வர்மா (6 பந்துகளில் 4 ரன்), நெஹல் வதேரா (11 பந்துகளில் 6 ரன்), அணித்தலைவர் பாண்ட்யா (3 பந்துகளில் 1 ரன்), கோயட்சி (7 பந்துகளில் 8 ரன்), பும்ரா (1* ரன்) என அனைத்து பேட்டர்களும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.
சூர்யகுமார் யாதவ் (35 பந்துகளில் 56 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் டிம் டேவிட் (20 பந்துகளில் 24 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்) இருவரின் ஆட்டத்தால் மும்பை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 145 ரன் கள் மட்டுமே எடுத்தது. இதனால் அந்த அணி 24 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கொல்கொத்தா அணியின் மட்டையாளர் வெங்கடேஷ் ஐயர் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
ஹைதராபாத் அணி (201/3, நிதீஷ்குமார் ரெட்டி 76*, ட்ராவிஸ் ஹெட் 58, கிளாசன் 42*, ஆவேஷ் கான் 2/39) ராஜஸ்தான் அணியை (200/7, யஸஷ்வி ஜெய்ஸ்வால் 67, ரியன் பராக் 77, ரோக்மென் போவெல் 27, ஷிம்ரொன் ஹெட்மயர் 13, புவனேஷ்வர் குமார் 3/41, பேட் கம்மின்ஸ் 2/34, நடராஜன் 2/35) 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.
இன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான ட்ராவிஸ் ஹெட் (44 பந்துகளில் 58 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் அபிஷேக் ஷர்மா (10 பந்துகளில் 12 ரன், 1 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். அதற்கடுத்த ஓவரில் மூன்றாவதாகக் களம் இறங்கிய அமோல்பிரீத் சிங் ஆட்டமிழந்தார். இச்சமயத்தில் ட்ரவிஸ் ஹெட் உடன் அதற்கடுத்த பேட்டரான நிதீஷ் குமார் ரெட்டி (42 பந்துகளில் 76 ரன், 3 ஃபோர், 8 சிக்சர்) இணைந்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
14.4ஆவது ட்ராவிஸ் ஹெட் ஆட்டமிழந்த பின்னர் விளையாட வந்த ஹென்ரிச் கிளாசன் (19 பந்துகளில் 42 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) நிதீஷ் குமாருடன் இணைந்து ஆடி 20 ஓவரில் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோரை 3 விக்கட் இழப்பிற்கு 201 ரன் என்ற நிலைக்கு கொண்டு வந்தார்.
202 ரன் என்ற கடின இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஜாஸ் பட்லர் முதல் ஓவர் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் சஞ்சு சாம்சன் (பூஜ்யம் ரன்) ஆட்டமிழந்தார். நான்காவதாகக் களமிறங்கிய ரியன் பராக் (49 பந்துகளில் 77 ரன், 8 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். அவருக்குப் பின்னர் வந்த ஷிம்ரன் ஹெட்மயர் (13 ரன்), ரொவ்மன் போவல் (27 ரன்), துருவ் ஜுரல் (1 ரன்), அஷ்வின் (2 பந்துகளில் 2 ரன்) ஆகியோர் இன்னமும் சற்று முனைப்பு காட்டியிருந்தால் ராஜஸ்தான் அணி வென்றிருக்கக்கூடும்.
ஆனால் கடைசி ஓவரில் 13 ரன் எடுக்க வேண்டிய நிலை. அஷ்வின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்தார். அடுத்த நான்கு பந்துகளில் போவல் 2, 4, 2, 2 என 10 ரன் எடுத்தார்.
கடைசிப் பந்தில் 2 ரன் எடுத்தால் ராஜஸ்தான் அணிக்கு வெற்றி என்ற நிலையில் புவனேஷ் குமார் போவலின் விக்கட்டை வீழ்த்தி ஹைதராபாத் அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார். இதனால் அந்த அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர் புவனேஷ் குமார் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
சோழவந்தான் மற்றும் குருவித்துறை கோவில்களில் குரு பெயர்ச்சி விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவில் மற்றும் குருவித்துறை குருபகவான் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது குருவித்துறை குருபகவான் கோவில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆனார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வைகைஆறு கரை அருகேகுருவித்துறை கிராமம் உள்ளது.இங்கு பிரசித்தி பெற்ற சித்திரரதவல்லபபெருமாள் கோவில் அமைந்துள்ளது.
தவக்கோலத்தில் குரு பகவான்
இந்தக் கோவில் நவக்கிரகங்களில் ஒருவரான சக்தி வாய்ந்த குரு பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.இந்த சன்னதியில் கோடி புண்ணியம் வழங்கும் குருபகவான் பெருமாளை நோக்கி தவக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதே சன்னதியில் சக்கரத்தாழ்வாரும் குடிகொண்டு பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறார்.ஒவ்வொரு குருபெயர்ச்சி தோறும் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது வழக்கம்.இதேபோல் இதுவரை மேஷம் ராசியில் இருந்து வந்த குருபகவான் நேற்று மாலை 5.21மணி அளவில் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இதைத்தொடர்ந்து குருவித்துறை குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா மூன்று நாள் நடந்தது.
பரிகார யாகம்
இந்த விழாவை முன்னிட்டு கடந்த திங்கள் கிழமை காலை 9.30மணி அளவில் லட்சார்ச்சனை ஆரம்பமானது. தொடர்ந்து நேற்று மதியம் வரை லட்சார்ச்சனை நடைபெற்றது.நேற்று பகல் 2 மணிஅளவில் பரிகார மகாயாக பூஜை நடந்தது.இதில் ஸ்ரீதர்பட்டர், சடகோபப்பட்ட,ஸ்ரீ பாலாஜிபட்டர் ,ராஜாபட்டர்,கோபால் பட்டர்உள்பட 10 மேற்பட்ட அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓதி யாகபூஜை நடத்தினர்.இதைத்தொடர்ந்து மகாபூர்ணாஹீதி நடந்து அர்ச்சகர்கள் புனித நீர்க் குடங்களை எடுத்து மேளதாளத்துடன் கோவிலை சுற்றி வலம் வந்தனர்.
ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சியானார்
நேற்று மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர். குருபகவான் சக்கரத்தாழ்வார் சிறப்பு அலங்காரம் செய்து பரிகார ராசிகளுக்கு அர்ச்சனை நடந்தபின்னர். பூஜை நடைபெற்றது.
நீதிபதிகள் சந்திரசேகரன் ரோகினி,மாவட்டகலெக்டர் சங்கீதா, சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத்தலைவர் ஆர். பி. உதயகுமார் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், அதிமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் மாணிக்கம், கருப்பையா, வாடிப்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலாஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் பசும்பொன்மாறன், ரேகா வீரபாண்டி, பேரூராட்சி தலைவர் ஜெயராமன், முன்னாள் துணை சேர்மன் கொரியர் கணேசன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ்,வருவாய் ஆய்வாளர் கிரிஜா, மற்றும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்தனர் பக்தர்கள் குரு பகவானை தரிசித்தனர்.
பக்தர்களுக்கு ஏற்பாடு
மன்னாடிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழு,வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் அறநிலையதுறையினர் ஆகியோர் போலீசாருடன் தடுப்பு வேலி ஏற்படுத்தி பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி சமூக இடைவெளியுடன் வரிசை,வரிசையாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடு
சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்தராஜ்,சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி உள்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.சோழவந்தான் அரசு பஸ் சிறப்பு பேருந்து பக்தர்கள் வசதிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி இல் இருந்து சுகாதார ஏற்பாடு செய்திருந்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் கார்த்திகைசெல்வி, கோவில் பணியாளர்கள் ,நாகராஜ், மணி, நித்தியா, ஜனார்த்தனன்ஆகியோர் செய்திருந்தனர். சோழவந்தான் புறநகர் மின் வாரியத்தில் இன்ஜினியர் ராஜேஷ் தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கண்காட்சி ஏற்படுத்தி இருந்தனர்.
கூடுதல் வசதி
கோவிலைச் சுற்றிபக்தர்கள் வசதிக்காக கூடுதல் சின்டெக்ஸ் குடிநீர் வசதி, கூடுதல் கண்காணிப்பு கேமரா, பக்தர்கள் நேரடியாக தரிசனம் பார்ப்பது போல் திரையில் குருபெயர்ச்சி விழா திரையிடப் பட்டது.
சோழவந்தானில்…
இதேபோல் சோழவந்தானில் குருபெயர்ச்சி விழா சோழவந்தானில் உள்ள பிரளயநாதசுவாமி கோவிலிலும் நேற்று மாலை பரிகாரயாகம் நடந்தது. இதைத்தொடர்ந்து புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர்
குரு பகவானுக்குசிறப்பு அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை, சிறப்பு பூஜை நடைபெற்றது. அனைவருக்கும் குருபெயர்ச்சி பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் எம்விஎம் குழுமம் தலைவர் மணிமுத்தையா, கவுன்சிலர்கள் வள்ளிமயில், மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குரு பகவானை தரிசித்தனர்.
மதுரை சௌபாக்கிய விநாயகர் குரு பெயர்ச்சி விழா
மதுரை மேலமடை தாசில்தார் நகர் சௌபாக்கியம் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது விழாவை முன்னிட்டு இக்கோவிலில் முன்பாக குரு பெயர்ச்சி முன்னிட்டு குரு பிரதி ஹோமம் நவகிரஹோமம் ருத்ர ஹோமம் ஆகிவை நடைபெற்றது. தொடர்ந்து, குரு தட்சிணா மூர்த்திக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் அர்ச்சனைகள் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, பரிகார அர்ச்சனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக மகளிர் பெண்கள் குழுவினர் செய்திருந்தனர்
மதுரை வைகை விநாயகர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா:
மதுரை அண்ணா நகர் வைகை விநாயகர் ஆலயத்தில், குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, கோவில் முன்பாக குரு பிரதி ஹோமம், நவகிரக ஹோமங்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து , குரு பகவானுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பு அபிஷே அர்ச்சனைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணிமாறன், மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், குரு பெயர்ச்சி விழா:
மதுரை ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. மதுரை சாத்தமாங்கலத்தில் உள்ள ஆவின் பால விநாயகர் ஆலயத்தில், குரு பெயர்ச்சி முன்னிட்டு சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. ஈஸ்வர பட்டர் தலைமையில், வேதியர்கள் சிறப்பாக செய்தனர் . இதை அடுத்து, இக்கோயில் அமைந்துள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அதைத் தொடர்ந்து, பரிகார அர்ச்சனை நடைபெற்றது. இதை அடுத்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் என்ற மைல்கல் மூலம் உத்வேகம் பெற குடிமக்களுக்கு மோதிஜி விடுக்கும் அறைகூவல்
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
கேள்வி –2024 உங்கள் இலக்கு அல்ல 2047 தான் என்று நீங்கள் பல மேடைகளில் முழங்கியிருக்கிறீர்கள். அப்படியென்றால் 2047ற்கு உள்ளாக என்ன நடக்கவிருக்கிறது? மேலும் இந்தத் தேர்தல் உபசாரரீதியாக மட்டுமே கொள்ளக்கூடிய ஒரு தேர்தலா?
பதில் – என்னுடைய கருத்துப்படி 2047ஐ, மேலும் 2024ஐ, இரண்டையும் கூட, ஒன்றாக்கக் கூடாது இரண்டுமே வேறுவேறு. நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்
அப்போதிலிருந்து, ஓரிரண்டு ஆண்டுகள் முன்பாக. நான் என்ன கூறினேன், என்றால், 2047இன் போது, தேசம் சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் ஆகியிருக்கும். இயல்பான வகையிலே, இப்படிப்பட்ட மைல்கற்கள், ஒருவகையிலே, புதிய உற்சாகமேற்படுத்துகின்றன புதிய உறுதிப்பாடுகளுக்கு மனிதர்களை தயார் செய்கிறது.
அந்த வகையிலே இதை நான் ஒரு, வாய்ப்பாகப் பார்த்தேன். 75 ஆண்டுகள் ஆன நிலையில் இருக்கிறோம், 100ஐ எட்ட இருக்கிறோம், இந்த 25 ஆண்டுகளைச் சிறப்பான வகையிலே எப்படி பயன்படுத்தலாம்? ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு குடிமகனும் ஒரு இலக்கை ஏற்படுத்த வேண்டும். சரி நான் ஒரு கிராமத்தலைவர் என்றால், 2047க்குள் என் கிராமத்தில் குறைந்த பட்சம் இதைச் செய்வேன்.
ஆர்பிஐயின் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்….. 90 ஆண்டுகள் நிறைவடைந்த வேளையில். அப்போது கூறினேன் இந்தப் பத்தாண்டுகள் மிக முக்கியமானவை. உங்களுடைய நூற்றாண்டினைப் பற்றி, நீங்கள் இப்போதே சிந்தியுங்கள்! ஆக என்னுடைய மனதிலே 2047 என்பது, இது பாரத சுதந்திரத்தின் 100 ஆண்டுகள். மேலும் தேசத்திலே….. ஒரு உத்வேகம் விழித்தெழ வேண்டும்.
சுதந்திரமடைந்து 100 ஆண்டுகள் என்பதே கூட மிகவும் உத்வேகம் அளிக்கும் தருணம். எந்த ஒரு தனிப்பட்ட விஷயமும் இல்லை. ஒரு பகுதி நிறைவானது. அடுத்து 2024 பற்றியது.
2024 என்பது நம்முடைய தேர்தல் தொடரிலே, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதை ஒட்டி வரக்கூடிய ஒரு விஷயம். என்னைப் பொறுத்த மட்டிலே தேர்தல்கள் என்பவை முற்றிலும் வேறுபட்டவை.