பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
கேள்வி– அயல்நாட்டு உறவுகளைப் பற்றிப் பேசும் போது, வளைகுடா நாடுகளோடு குறிப்பாக நமது உறவுகள் பலப்பட்டிருக்கின்றன. இது உங்களுடைய தனிப்பட்ட ஆர்வம் மற்றும் உறவு மட்டுமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. உங்களுக்கு விருதுகளும் வழங்கி கௌரவித்தார்கள். கிழக்கு ஆசியாவாகட்டும், மேற்கு ஆசியாவாகட்டும், இதிலே ஆளுமைரீதியான விஷயங்கள் எத்தனை முக்கியமானவை, தனிப்பட்ட ரீதியில் அந்த நாடுகளின் தலைவர்களோடு நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட உறவுகள் எந்த அளவுக்கு ஆளுமைரீதியான அரசியல் இதில் இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்கள்?
பதில் – நான் என்ன நினைக்கிறேன் என்றால், இதிலே….. வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருக்கலாம்…. அவை சரியாகவும் இருக்கலாம் கருத்துக்கள் உறுதியானவை. அதை ஆளுமை எனலாம், அல்லது, தனிப்பட்ட உறவுகள் எனலாம். இதிலே மிக அதிகமாக, நான் கவனம் செலுத்துவதில்லை ஆனால் உறவுகள் பலமாக இருக்கின்றன.
என்னுடைய கருத்து என்னவென்றால், நமது ராஜதந்திரம் நெறிமுறைகளில் சிக்கியிருந்தால், நம்மால் செயல்படவே முடியாது. ராஜதந்திரத்தின் பலமும் கூட, நெறிமுறைக்கப்பாற்பட்டும் இருக்கிறது, நெறிமுறைகளில் மட்டுமே என்று இல்லை. நெறிமுறைகளில் பொருத்தமான நிலை அதிகம் இருக்கும் முதலில் யார் வருவார்கள் எதை யார் கொண்டு வருவார்கள் இவற்றைச் சுற்றியே அமைந்திருக்கும்.
நான் துவக்கம் முதலிலேயே என்ன பார்த்தேன்… என்றால், நான் சபதமேற்ற வேளையிலே, மிக சுவாரசியமான விஷயம். நான் ஏழு சார்க் நாடுகளையும் அழைப்பேன் என்று தீர்மானித்தேன்.
ஆமாம் 2014இலே முதன்முறையாக நான் பதவியேற்ற போது. ஏழு நாடுகளையும் அழைக்க வேண்டும் என்ற கருத்து என் மனதில் தோன்றியது. இதற்கான காரணம் தேர்தல் பிரச்சாரங்களின் போது என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன என்றால், மோதி மாநிலத்திலிருந்து வந்திருக்கிறார், இவருக்கு ராஜதந்திரம் ஒன்றும் தெரியாது, அயலுறவு என்ன தெரியும் என்பது தான். மோசம் என்று நினைத்தார்கள்.
தேர்தல் பிரச்சாரங்களில் எனக்கு எதிராக பேசப்பட்ட விஷயங்களில் இது முக்கியமான ஒன்று என்னை கேலி செய்தார்கள். என்னுடைய முக்கிய செயல்பாடு மூலம் பதில் சொல்ல வேண்டும் என்று எனக்குப் பட்டது, பேசத் தேவையே இல்லை. (சிரிப்புடன்) ஆக நான் சபதமேற்பு விழாவிலே, ஏழு நாடுகளை அழைத்தேன். அதற்கு முன்பாக நான் திரைக்குப் பின்னால் அவர்களிடத்தில், சம்மதம் வாங்கி விட்டேன்.
திடீரென்று ஒன்றும் எல்லாம் நடந்து விடவில்லை. அனைவரும் வந்தார்கள். நான் சபதமேற்றேன். அயலுறவுத்துறை அமைச்சர் அப்போது பதவி ஏற்கவில்லை. எனக்கு இந்த அனைத்து விஷயங்களுமே மிகவும் புதியவை. அவை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் அனைவரோடும் பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
நாங்கள் ஹைதராபாத் இல்லம் சென்ற போது, ப்ரோடோகால் தெரிந்தவர்கள் அவர்கள் வருவார்கள் இப்படிச் செய்யுங்கள் என்று எல்லாம் எனக்கு வழிகாட்டினார்கள். அவர்கள், வருகை நேரம் ஆன போது அவர்களை அழைக்க நான் வெளியே செல்கிறேன் என்றேன். அப்போது அமைப்பு முழுவதும் ஆடிப் போனது, நம்முடைய பிரதம மந்திரி, அழைக்க வாசலுக்குச் செல்வதா?
அயலுறவுத் துறையின் ப்ரோட்டோகால் உலகைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்கு முதல் நாளே மிக விசித்திரமாக அமைந்தது. ஆனால் எனக்கோ அந்த ஒரு செயல்பாடு, அனைத்துக் கதவுகளையும் திறந்து விட்டது.
ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன். அதில் எனக்கு வெற்றியும் கிடைத்திருக்கிறது.
சென்னை அணியை (162/7, ருதுராஜ் கெய்க்வாட் 62, அஜிங்க்யா ரஹானே 29, சமீர் ரிஸ்வி 21, மொயீன் அலி 15, தோனி 14, ஹர் பிரீத் ப்ரார் 2/17, ராஹுல் சாஹார் 2/16) பஞ்சாப் அணி (17.5 ஓவர்களில் 163/3, ஜானி பெயர்ஸ்டோ 46, ரிலீ ரோஸ்கோ 43, சாம் கரண் 26*, ஷஷாங்க் சிங் 25*, பிர்ப்சிம்ரன் சிங் 13) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் சென்னை அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான அஜிங்க்யா ரஹானே (24 பந்துகளில் 29 ரன், 5 ஃபோர்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (48 பந்துகளில் 62 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். ரஹானே 8.2ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதற்கடுத்த பந்தில் ஷிவம் துபே அவுட்டானார். அதற்கடுத்த பந்தில் ஷிவம் துபே கோல்டன் டக் வாங்கி அவுட்டானார்.
அவருக்குப்பின்னால் விளையாட வந்த ஜதேஜா 4 பந்துகளில் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ஆடவந்த சமீர் ரிஸ்வி (23 பந்துகளில் 21 ரன்), மொயீன் அலி (9 பந்துகளில் 15 ரன்), எம். எஸ். தோனி (11 பந்துகளில் 14 ரன்) ஆகியோர் சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சென்னை அணி இதனால் 20 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 162 ரன் எடுத்திருந்தது.
163 ரன் என்ற சற்றே கடின இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான பிரப் சிம்ரன் சிங் மூன்றாவதுஓவரின் முதல் பந்தில் 13 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜானி பெயர்ஸ்டோ (30 பந்துகளில் 46 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்) மூன்றாவதாகக் களம் இறங்கிய ரிலீ ரோஸ்கோ (23 பந்துகளில் 43 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.
அதன் பின்னர் ஆடவந்த ஷஷாங்க் சிங் (ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 25 ரன்) மற்றும் சாம் கரண் (ஆட்டமிழக்காமல் 20 பந்துகளில் 26 ரன்) இருவரும் நன்றாக ஆடி பஞ்சாப் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். அந்த அணி 17.5 ஓவரிலேயே 3 விக்கட் இழப்பிற்கு 163 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்ட்களில் சென்னை அணியை தொடர்ந்து ஐந்தாவது முறையாக பஞ்சாப் அணி வென்றிருக்கிறது.
பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிரார் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா தமிழில் – ராஜி ரகுநாதன்
தம் நாட்டின் வரலாறு, பாரம்பரியம், கலாசாரம், விஞ்ஞானம் போன்றவை பற்றி உலக நாட்டவர் பலரும் கர்வமும் பாசமும் கொண்டு காப்பாற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் அப்படி எதுவும் நம் தேசத்தில் பலருக்கும் இருப்பதில்லை. அலட்சியம், வெறுப்பு, உதாசீனம் போன்ற குணங்களால் வயிறு எரிபவர்களே அதிகம்.
மேலை நாட்டவர் நம்மை ஆண்ட போது, தேசியமான, நமக்கே உரித்தான உள்நாட்டு மருத்துவம், யோகம், சிற்பக்கலை, வான்வெளி அறிவியல் போன்ற சாத்திரங்களை உபயோகமற்றவை என்று சித்திரித்தார்கள். மேல் நாட்டவர் கண்டறிந்தவையே விஞ்ஞானம் என்று அறிவித்தார்கள். அடிமைத்தனம் பழக்கமாகிப்போன இந்தியர்கள் அவர்களுக்கு ஜால்ரா போட்டார்கள். அவர்களே அதிகம் படித்தவர்களாக மதிக்கப்பட்டு விடுதலைக்குப் பிறகும் அதே அடிமை புத்தியைத் தொடர்ந்தார்கள். அங்கங்கே ஏதோ கண்துடைப்பாக ஆயுர்வேதம் போன்ற சாத்திரங்களின் ஒரு சில பயிற்சி நிலையங்களை அமைத்தார்களே தவிர பண்டைய தேசிய சாத்திரங்களின் உயர்வை நிலைநாட்டும் முயற்சிகள் சொல்லும்படியாக நிகழவில்லை.
அண்மையில் ஹைதராபாத் கல்வி நிலையங்களில் சம்ஸ்கிருத மொழிப் பயிற்சிக்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்க முன்வந்த போது சில கும்பல்கள் அதனை எதிர்த்தன. அதோடு தம் முடிவில் பின் வாங்கிவிட்டது அரசாங்கம். தேசமெங்கும் பல சாஸ்திரங்களையும் அழியாத காவியங்களையும் வெளியிட்டு அனைத்து மாநிலங்களும் அங்கீகரித்த சமஸ்கிருத மொழியின் மேல் இந்த துவேஷம் எதற்காக? இதற்கு அரசாங்கம் தலை வணங்குவது ஏன்? என்பது புரியாத கேள்வி. கேள்விகளுக்கு மதிப்பளிக்காத அரசு.
அதே போல் ஆயுர்வேத மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைப் பிரிவு அமைக்க முன்வந்த போது, நவீன அலோபதி மருத்துவ நிபுணர்கள் அனைவரும் ஒன்று கூடி கண்டனம் தெரிவித்தார்கள். உண்மையில் அறுவை சிகிச்சை என்ற முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே ஆயுர்வேதம். சுஸ்ருதர் போன்ற மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்கள் இடம் வகித்த ஆயுர்வேதத்தின் மீது இத்தகைய வெறுப்பை காட்டுவதில் ஏதாவது பொருள் உள்ளதா? ரஷ்யா போன்ற நாடுகளின் நவீன மருத்துவ நூல்களில் முதலாவதாக சரகர், சுஸ்ருசர் போன்றோர் எழுதிய மருத்துவ நூல்கள் பற்றி உயர்வாகக் குறிப்புட்ட பின்னரே பிற குறிப்புகள் உளளன. ஆனால் நம் தேசத்தில் குறைந்த அளவு கௌரவம் கூட அளிக்கப்படுவதில்லை.
உலக மேதைகள் பலரையும் ஆச்சர்யத்திலாழ்த்தும் கணிதம், வானவியல் போன்றவை வேதங்களின் ஆதாரமாக நிரூபிக்கப்பட்ட சாஸ்த்திரங்கள். ஆனால் இவை நம் தேசத்தில் உபயோகமற்றவையாகக் கருதப்படுகின்றன. இவற்றைப்பற்றி இந்தத் தலைமுறைக்கு தெரியச் செய்யலாம் என்றாலும் செய்யவிடாமல் தடுக்கும் தேச விரோதிகளுக்கும், அவர்களுக்கு ஆமாம் போடும் அரசியல்வாதிகளின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை. ஆயுர்வேதத்தை ‘சூடோ சயின்டிஃபிக்’ என்றும் ‘ஃப்ராட்’ என்றும் எழுதும் புத்திசாலிகள் அதிகம் தென்பட்டாலும் அவர்களை யாரும் கண்டிப்பதாகத் தெரியவில்லை.
மருத்துவ முறைகள் அனைத்துமே மதிக்கப்பட வேண்டியவை. ஆனால் மத வெறி போல குறுகிய மனப்பான்மை மக்களிடையே வளர்ந்து வருகிறது. பாரத தேசத்தைச் சேர்ந்த சில ஊடகங்களும் அமைப்புகளும் இத்தகைய தவறான எண்ணங்களை உலகில் பரப்புகின்றன.
நவீன மருத்துவக் கல்வியின் வளர்ச்சி தேவைதான். அதே நேரத்தில் நம் தேசத்தின் மிகப் பழமையான மருத்துவத்தையும் அதன் மூலம் இன்றைக்கும் பலர் பயனடைந்து வரும் உண்மையையும் கவனிக்காமல் அலட்சியப்படுத்துவது முட்டாள்தனம். விசாலமான இதயம் தேவையல்லவா.
சற்றும் ஆராயாமல் தவறான முடிவுக்கு வருவது விஞ்ஞான முறை அல்ல. சிறிது காலத்திற்கு முன் வரை யோகாவை ஏளனம் செய்தவர்கள் இப்போது சிறிது சிறிதாக அதன் பயனை அங்கீகரித்து வருகிறார்கள்.
ஜோதிட விஞ்ஞானத்தை கல்லூரிகளில் ஒரு பாடமாக வைத்த போது அதை எதிர்த்து ஒரு கும்பல் கூச்சல் போட்டது. நம் தேசத்தின் மொழியையும் சாத்திரங்களையும் கல்வி நிலையங்களும் ஏற்காமல், மக்களும் அவை தோன்றிய தேசத்திலேயே கௌரவிக்காமல் போவதென்பது மன்னிக்க முடியாத குற்றம்.
தேசியம், பண்டைய வைபவம், நம் தேச சரித்திம், நம் கலாச்சாரம் எலலாவற்றையும் மதக் கண்ணோட்டத்தோடு பார்த்து கேவலமாக விமர்சிப்பது என்பது போலி மேதாவிகளின் வழக்கமாகி விட்டது. விஞ்ஞானம் என்பது விசாலமான உள்ளத்தோடு பயிற்சி செய்ய வேண்டிய ஒன்று. அதற்கு பழமை, புதுமை என்ற வேறுபாடோ, தேசியம் வெளிநாடு என்ற எல்லைகளோ கிடையாது. பரவி வரும் உலக மயமாக்கலில் குறுகிய மனப்பான்மையை விட்டு விட்டு ஞானம் பெரும் கண்ணோட்டத்தோடு பயிற்சி பெற வேண்டும். ஆழமாகப் படித்தறிய வேண்டும். சமன்வயம், சமரசம் என்ற குணங்களைக் கைக்கொண்டு எல்லாவற்றிலும் இருக்கும் நன்மைகளை உணர்ந்து, மானுட இனத்தின் நலனுக்காக உயர்ந்த வெளியீடுகள் வெளிவரவேண்டும்.
அன்னியரின் ஆட்சி ஒழித்தாலும், பாரத தேசத்தை வளரவிடக் கூடாது என்று பலவித சதித் திட்டங்களைத் தீட்டி, மேலை நாட்டவரின் பரிபாலனையைப் போற்றித் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, தேசத்தையும், தேசியத்தையும் அடக்கி ஒடுக்க வேண்டும் என்று எண்ணும் சுதேசிகளை பாரத தேசத்தில் மட்டுமே பார்க்க முடியும்.
கேளிக்கைகள், இஷ்டம் வந்தாற்போல வாழ்வது என்பதை மட்டுமே இயல்பாகக் கொண்ட பெரும்பாலான பாரத தேசத்தவருக்கு தேசம் பற்றியும் அதன் பழமை பற்றியும் அதன் உயர்ந்த பாரம்பரியம் பற்றியும் புரிதலோ விருப்பமோ கௌரவமோ துளியும் இல்லை. அவற்றை ஏற்படுத்துவதிலும் வளர்ப்பதிலும் பெற்றோரும் கல்விக் கூடங்களும் முயற்சிப்பதில்லை. ஏதாவது நல்ல முயற்சியை அறிஞர்கள் செய்ய முன்வந்தால் அவற்றைத் தடுப்பவரே அதிகம். பாரதிய பாரம்பரியச் செல்வங்களான கலைகளை வளர்க்கும் அமைப்புகள் இருந்தாலும் அவற்றுக்குத் தடைகளும் மறுப்புகளும் நீதிமன்றங்களில் இருந்து கூட அதிகம் வருகின்றன.
அன்று அன்னியர் ஆட்சியில் இருந்ததை விட சுதந்திர இந்தியாவில் பாரதியத்தை சேதப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ளது. அதுமட்டுமல்ல. இந்தியாவின் பாரம்பரியச் செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்க முன்வருபவர்களை ‘ஹிந்துமத பாரபட்சம்’ என்று முத்திரை குத்தி யாரையோ திருப்தி படுத்துவதற்காக தடை கூறுவது வழக்கமாகிவிட்டது.
இப்போது இன்னுமொரு தேசிய இயக்கம், மீண்டுமொரு சுதந்திரப் போராட்டம் நிகழ வேண்டும். அதற்குத் தேவையான விவேகமும் அறிவுக் கூர்மையும் முன்னோக்குப் பார்வையும் இந்திய இளைஞர்களிடம் விழித்தெழும் என்று எதிர்பார்ப்போம்.
“ஒரு பந்தைக் கீழே அடித்தால் அது எழும்பி மேலே வருவது போல” என்ற பொருளில் பயன்படுத்தும் நியாயம் இந்த “கந்துக நியாயம்”.
கீழே விழுந்தாலும் அசாதாரண மனிதர்கள் சமாளித்துக் கொண்டு எழுந்து நிற்பார்கள். தரையை நோக்கி அடித்த பந்தைப் போல உடனே மேலே எழுவார்கள். சாதாரண மனிதர்கள் ஏதோ ஒரு காரணத்தால் கீழே விழுந்தால் மண் உருண்டை போல நசுங்கிப் போவார்கள். இதுவே கந்துக நியாயம் கூற வரும் செய்தி.
பொருள் – தரையில் அடித்த பந்து மீண்டும் எழும்பி வருவது போல தீரம் நிறைந்தவன் தோல்வியடைந்தாலும் மீண்டும் காரிய சாதனைக்கு முன்வருவான். அதில் வெற்றியும் பெறுவான். மண் உருண்டையைப் போல கீழ் விழுந்து அப்படியே அடங்கிவிடுபவன் சிறந்தவன் அல்ல.
வாழ்க்கையில் எதிர்வரும் கஷ்டங்களைக் கண்டு துவண்டு விடக் கூடாது என்ற செய்தி இந்த நியாயத்தில் உள்ளது. ஏதோ சிறிது துன்பம் எதிர்ப்பாட்டாலும், ஐயோ என்று புலம்பி வாழ்க்கையே முடிந்து விட்டது என்றெண்ணும் பயங்கொள்ளிகள் சிலர் இருப்பார்கள். நோய்கள், அவமதிப்பு, பொருளாதார சிரமங்கள் போன்றவை சிலரை பலவீனப்படுத்தும். நல்ல உற்சாகமும் நல்ல சங்கல்பமும் இல்லாத மனிதர் கீழே விழுந்தால் மீண்டும் எழ மாட்டார். இவர்கள் இந்த நியாயத்தை அறிந்து முன்னேறவேண்டும்.
பந்தை போல் கீழே விழுந்தாலும் மேலெந்த மனிதர்கள், நாடுகள், கட்சிகள், விளையாட்டு வீரர்கள் போன்றோர் வரலாற்றில் பலர் உண்டு. அவர்கள் பிறருக்கு ஊக்கமூட்டுபவர்களாக உள்ளனர். எதிர்கொண்ட ஆபத்துகளைத் தாங்கிக் கொண்டு நின்ற ராஜா ஹரிச்சந்திரன் பல யுகங்களாக ஆதரிசமாக நிற்கிறான்.
சத்துவ குணத்தைப் பிரதானமாகக் கொண்ட மனிதர்கள் உயர்ந்த சிகரங்களை எட்டிய பின்னும் ஏதோ காரணத்தால் கீழே விழவேண்டி வந்தாலும், மீண்டும் பந்து போல மேலே எழுந்து வந்த தலைமைப் பண்பு மிக்கவர்கள் நம் புராணங்களில் பலர் உள்ளனர்.
யுதிஷ்டிரன் –
சிறந்த ராஜ்ஜியத்திலிருந்து பிரஷ்டம் செய்யப்பட்டதற்கு வருந்திய பாண்டுவின் புதல்வன் யுதிஷ்டிரனுக்கு ஆறுதல் கூற வந்த வியாச பகவான் இவ்வாறு எடுத்துரைத்தார்,
பொருள் – ஒரு சக்கரத்தில் இருக்கும் ஆரங்கள் கீழும் மேலும் சென்று வருவது போல மனிதனுடைய வாழ்க்கையில் சுகத்திற்குப் பிறகு துக்கம் வருவதும், துக்கத்திற்குப் பிறகு சுகம் வருவதும் இயல்பு. இந்த உண்மை அனைவருக்கும் நினைவில் இருக்க வேண்டும் என்பர் அறிஞர்கள்.
“ஒரு நாள் இந்த துயரங்கள் அனைத்தையும் தாண்டி நீயும் உன் ராஜ்யத்தைப் பெறுவாய்” என்று கூறிய வியாசபகவான், “யுதிஷ்டிரா, தவம் செய். மீண்டும் நல்ல நாட்கள் வரும்” என்று ஆசிர்வதித்தார்.
நள மகாராஜா –
“என்னைப் போன்ற துரதிருஷ்டசாலியோ துயரமே உருவானவனோ வேறு யாரவது இருப்பாரா?” என்று வேதனையோடு கேட்ட தர்மராஜனுக்கு ப்ருஹதஸ்வர் என்ற முனிவர் இவ்விதம் தைரியம் கூறினார்.
“மஹாராஜா, உன் கஷ்டம் ஒன்றும் பெரியதல்ல. பராக்கிரமம் நிறைந்த தம்பிகள், மனைவி, உனக்கு நலன் விளைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் அந்தணர்கள் உன்னோடு உள்ளார்கள். துணை யாருமின்றித் தனியாகத் தவித்த நள மகாராஜாவின் கதையைக் கூறுகிறேன் கேள்” என்று கூறி நளதமயந்தி கதையை விவரமாகத் தெரிவித்தார். நளன் அனுபவித்த துன்பங்களின் முன்னால் நீ படும் கஷ்டம் ஒன்றுமேயில்லை” என்று உற்சாகப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி, காட்டில் வசித்த பாண்டவர்களுக்கு, மார்கண்டேய மகரிஷி, பேரிடி போன்ற கஷ்டங்களையும் தைரியமாக எதிர்கொண்ட ஸ்ரீராமரின் வரலாற்றை விவரித்தார். இத்தகைய மாமுனிவர்கள் அளித்த ஊக்கத்தால் கீழே அடித்த பந்து மேலே எழுவது போல பாண்டவர்கள் தவம் செய்து சக்தி பெற்று எதிரிகளை அழித்து மீண்டும் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்தார்கள். கந்துக நியாயத்திற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும்?
மகநீயர் யல்லாப்ரகட சுப்பாராவு –
இன்றைய தலைமுறையில், கந்துக நியாயத்திற்கு எடுத்துக்காட்டாகக் கூறத் தகுந்த மனிதர், பாரத தேசத்தின் விஞ்ஞானிகளில் இமயமலை போன்று உயர்ந்தவர் டாக்டர். யல்லாப்ரகட சுப்பாராவு அவர்கள். (1895-1948). ஏழ்மை காரணமாக கல்வியறிவு புகட்டுவதற்குப் பின்வாங்கிய குடும்பத்தில் பிறந்தாலும், கஷ்டப்பட்டு மெட்ரிக் பரீட்சைக்கு பணம் கட்டினார்கள். ஆனால் அதில் தோல்வியடைந்தார். தந்தையின் மரணம் மேலும் கஷ்டத்தைக் கூட்டியது. ஆனால் தாயார் சளைக்காமல் தான் அணிந்திருந்த தங்கநகைகளை விற்று மகனை பீமாவரத்திலிருந்து மதராசுக்கு அனுப்பிப் படிக்க வைத்தார்.
பல தடைகளையும் பொருளாதார அழுத்தங்களையும் தாண்டிப் படித்து வந்தார் சுப்பாராவு. மூத்த சகோதரனின் மரணம் பேரிடியாக வந்து விழுந்தது. அதைத் தொடர்ந்து மற்றொரு சகோதரனும் மரணமடைந்தார். குடும்பம் மிகுந்த மனக்கவலைக்கு ஆளானது. சகோதரர்களின் மரணத்திற்குக் காரணமான ‘வெப்பமண்டல ஸ்ப்ரூ’ என்ற நோய்க்குச் சரியான மருந்து இல்லாத நாட்கள் அவை. அதற்குத் தீர்வு கண்டறிய வேண்டும் என்று எண்ணி மருத்துவ ஆராய்ச்சியாளராக வேண்டும் தீர்மானித்தார் சுப்பாராவு.
மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வந்தது. தேசபக்தி நிறைந்த சுப்பாராவு கதராடை அணிந்ததால் வெளிநாட்டு பேராசிரியர்கள் பழிவாங்க நினைத்து அவருக்கு எம்.பி.பி.எஸ் டிகிரி கொடுக்காமல் குறுக்கே நின்றார்கள்.
1925 ம் ஆண்டு தொடக்கத்தில் அதிசார நோயான வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு சுப்பாராவு மெலிந்து போனார். மதராசில் அன்றைய நாட்களில் புகழ்பெற்று விளங்கிய ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் ‘ஆச்சண்ட லக்ஷ்மிபதி’ என்பவர் சுப்பாராவுக்கு சிகிச்சை செய்து உயிர் காத்தார். பண்டைய மருத்துவ நூல்களை சுப்பாராவு ஆர்வத்தோடு பயின்றார். ஆராய்ச்சி பரிசோதகராக ‘லீடர்லி’ என்ற கம்பெனியில் சேர்ந்து ‘போலிக் ஆசிட்’ என்ற மருந்தைக் கண்டறிந்தார்.
யானைகால் நோய், டைபாயிடு. பாண்டுரோகம் எனப்படும் வெண் குஷ்டம், கான்சர் போன்ற நோய்களுக்கு மருந்துகளை ஆராய்ந்து கண்டறிந்தார். ஹைட்ரஜன், டெட்ராசைக்ளின், ஆரியோமைசின் போன்ற பல மருந்துகளைக் கண்டறிந்தார் உலகத்தார் அனைவரும் நன்றியோடு நினைத்துப் போற்றத்தகுந்த மனிதராகச் செயலாற்றினார். இவர் அற்புத மருந்துகளின் நாயகன் என்று அறியப்படுகிறார். மனித குலத்திற்கு மிக முக்கியமான மருந்துகளைக் கண்டறிந்து உலகின் சிறந்த விஞ்ஞானியாக அங்கீகரிக்கப்பட்டார். பெயருக்காகவோ பேடென்ட் உரிமைக்காவோ அலையாத நவீன பாரத ருஷி நம்முடைய டாக்டர் யல்லாப்ரகட சுப்பாராவு.
இவரது மகத்தான பணியை கௌரவிக்கும் வகையில் புதிதாகக் கண்டுபிடித்த ஒரு ஃபங்கசுக்கு உலகம் சுப்பாராவின் பெயரைக் கொடுத்து, “சுப்பாராவோமைசஸ்” என்று அழைத்து கௌரவம் அளிக்கும் உயரத்திற்கு இந்தப் பந்து எழும்பியது.
இஸ்ரேல் –
உலக நாடுகளில் பந்தினைப் போல மேலே எழும்பிய தேசங்கள் பல உள்ளன. இஸ்ரேல் அவற்றுள் ஒன்று. யூதர்கள் தம் ராஜ்ஜியத்தை இழந்து, தாக்குதலுக்கு உள்ளானார்கள்.
அங்கங்கே சிதறி, உலகின் பல தேசங்களில் அகதிகளாகக் குடியேறவேண்டி வந்தது. அவமரியாதைக்கு ஆளாக நேர்ந்தது. தேச பக்தியோடும் எதிர்பார்ப்போடும் வாழ்ந்தார்கள். யாரேனும் இரண்டு யூதர்கள் எங்கு சந்தித்தாலும், “அடுத்த முறை ஜெரூசலத்தில் சந்திப்போல்” என்று ஹீப்ரூ மொழியில் பேசிக்கொள்வார்கள். அவ்வாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் காத்திருந்தார்கள். பல தலைமுறைகள் கடந்தன. சிறிய பந்தை தரையில் ஓங்கி அடித்தால் மேலே எழும்புவது போல, இந்தச் சிறிய தேசம் தன்னம்பிக்கையோடும் சுயச்சார்போடும் இன்று பிரபஞ்சத்தில் தனக்கென்று ஒரு பிரத்தியேக இடத்தை சாதித்துள்ளது. 22,145 கி.மீ. பரப்பளவும், 88 லட்சம் மக்கட்தொகையும் கொண்டு 1948 ல் தோற்றமெடுத்தது. இந்தியாவைப் போலவே பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றது.
ஜப்பான் –
அதேபோல் மேலெழுந்த மற்றொரு தேசம் ஜப்பான். அமெரிக்க செய்த மனிதத்தன்மையற்ற கொடூரமான கோரச்செயலுக்கு ஆளான சிறிய தேசம் ஜப்பான். ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மேல் நடந்த அணு ஆயுதப் போரால் சாம்பாலான ஜப்பான், மீண்டும் பந்தினைப் போல மேலே எழுந்தது. தேசபக்தியோடு அனைவரும் ஒன்றிணைந்துப் பணிபுரிந்து உலக நாடுகளுள் ஒரு பிரத்யேக இடத்தைப் பெற்றது
பாரதம் –
பிற நாடுகள் மட்டுமல்ல. நம் பாரத தேசமும் பந்தினைப் போல எழும்பி வளர்ந்த தேசங்களில் முதன்மை இடத்தைப் பெறுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கொள்ளையடிக்கபட்டாலும் அதனைத் தாங்கிக் கொண்டது. லட்சக்கணக்கானோரின் பலிதானத்தையும் மரண ஹோமங்களையும் எதிர்கொண்டது. பட்டினிச் சாவுகளைக் கண்ணால் பார்த்தது. விடுதலை பெற்றுத் தன் பூமியின் பகுதிகளை இழந்தது. மத மாற்றங்களுக்கு ஆளானது. கடந்த ஆட்சியாளர்களின் குள்ளநரித் தந்திரங்களுக்குப் பலியானது.
நிகழ்காலத்தில் தெய்வீக சக்தியாக, பார்வைக்கெட்டாத அளவுக்கு உயரமாக வளர்ந்துள்ளது. உலகத்திற்கே நட்பு நாடாக மாறியுள்ளது. அன்னபூரணியாக மலர்ந்ததோடு உலகிற்கே ஆரோக்கியத்தையும் அளிக்கிறது. பகைவர்கள் நடுநடுங்கும் ஆயுதங்களைத் தாயாரிக்கிறது. நம்முடைய வெற்றிகரமான சுபிக்ஷத்தால் உலகநாடுகள் நம்மிடம் அடக்கத்தோடு நடந்து கொள்ளும்படி உயர்வுற விளங்குகிறது.
கந்துக நியாயத்திற்கு நம் புண்ணிய பாரத தேசத்தை விட மேலான எடுத்துக்காட்டு என்ன இருக்கப் போகிறது?
கிரேக்கம், ரோமானியம் போன்ற பல கலாச்சாரங்கள் மண்ணோடு மண்ணாகிப் போயின. அருங்காட்சியகங்களில் அடங்கிவிட்டன.
ஆனால் எத்தனை முறை தாக்கபட்பாடாலும் மீண்டும் மீண்டும் மேலெழுந்த தேசம் நம்முடையது. காரணம் என்னவென்றால், ஹிந்து தேசத்திற்கு சிறந்த கொள்கை ஒன்றுண்டு. “க்ருண்வந்தோ விஸ்வமார்யம்” என்ற சங்கல்பமும், “வசுதைவ குடும்பகம்” என்ற உயர்ந்த நோக்கமும் இதற்குண்டு.
A3 நமக்களிக்கும் செய்தி –
* கந்துக நியாயதிற்கு எடுத்துக்காட்டாக குறிப்பிடத்தக்க மனிதர்களில் ஆபிரகாம் லிங்கன், அன்னா ஹஜாரே, அப்துல் கலாம் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர்கள் கீழே விழுந்தாலும் அஞ்சவில்லை. பந்தைப் போல எழும்பி வெற்றி மலரைச் சூடினார்கள். கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பிடித்தார்கள். வாழ்க்கையில் ஏற்பட்ட பல சங்கடங்களைத் தாங்கிக் கொண்டு லட்சியத்தை அடைவது நம் கடமை என்பது இந்த A3 நமக்களிக்கும் செய்தி.
பாரதிய ஜனதா பார்ட்டி –
* ஒரு உயர்ந்த இலட்சியத்திற்காக நிறுவப்பட்ட ஜனசங்/ பாரதிய ஜனதா பார்ட்டியை கந்துக நியாயத்திற்கு உதாரணமாகக் கூறலாம். டிபாசிட் கிடைக்காமல் தோற்றாலும் பீதியடையாமலும் தம் கொள்கையிலிருந்து விலகாமலும் தேசத்தில் உள்ள தொகுதிகள் அனைத்திலும் போட்டியிட்டு, இரண்டே இரண்டு இடங்களில் வெற்றி பெற்றாலும், தைரியத்தை இழக்காமல் நிலைத்து நின்றது. நிகழ்காலத்தில் தேசத்தையே ஆளும் பலத்தைப் பெற்றது. தேசம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வை அளிக்கும் விதமாக ஆள்கிறது. உயர்ந்த லட்சியத்திற்காக பணி புரியும் அமைப்புகளும் இது போன்ற கட்சிகளும் கந்து நியாயத்திற்கு எடுத்துக்காட்டுகள்.
* ஒரு காலத்தில் நன்றாக வாழ்ந்த தெரிந்த ஒரு குடும்பத்தை சாலை விபத்து வடிவில் விதி கீழே வீழ்த்தியது. குடும்பத் தலைவனின் அகால மரணம் அவர்களை சோகத்தில் ஆழ்த்தி சோர்வடைச் செய்திருக்கும். ஆனால் சுய கௌரவமும் விடாமுயற்சியும் கொண்ட அந்த இல்லாள் தைரியத்தோடும் சங்கல்பம், சாதனை, பண்பாடு என்னும் குணங்களின் உதவியோடும் பிரச்சினைகளை எதிர்கொண்டார். தரையில் அடித்த பந்தைப் போல மேலே எழுந்தது அந்த இல்லத்தரசியின் சிறப்பு. அண்டை அயலாரின் பிள்ளைகளுக்கு டியூஷன் எடுத்தார். தன் குழந்தைகள் இருவருக்கும் கல்வி போதித்து சமுதாயத்தில் சிறந்தவர்களாகச் செதுக்கினார்.
* வியாபாரத்தில் நஷ்டமடைந்த ஒரு மனிதர் நொந்து விழாமல், விடாமுயற்சியும் உழைப்பும் காரணமாக மீண்டும் ஓம் என்று பிள்ளையார் சுழி போட்டு உயர்ந்து நின்றார். இது போன்ற பல உதாரணங்கள் இல்லாமல் இல்லை.
கந்துக நியாயத்திற்கு இவர்களனைவரும் உதாரணங்கள். கஷ்ட, நஷ்டங்களைத் தாங்கித் தரையில் அடித்த பந்தைப் போல மேலே எழுந்த இவர்கள், பிறருக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் ஆதரிச மனிதர்கள்.
தெய்வமும் விதியும் பாதகமாக இருக்கும் போது. மனித முயற்சிகள் சாதகமாக இல்லாத போது வருந்துவது இயற்கை. அத்தகைய சந்தர்ப்பங்களில், “தைரியமாக இரு” என்று தட்டிக்கொடுக்கும் நியாயம் இது.
மும்பை அணியை (143/7, நெஹால் வதேரா 46, டிம் டேவிட் 35*, இஷான் கிஷன் 32, மொஹிஷின் கான் 2/36, மார்கஸ் ஸ்டோயினிஸ் 1/19) லக்னோ அணி (19.2 ஓவர்களில் 145/6, மார்கஸ் ஸ்டோயினிஸ் 62, கே.எல். ராகுல் 28, தீபக் ஹூடா 18, நிக்கோலஸ் பூரன் 14*, ஹார்திக பாண்ட்யா 2/26) 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று லக்னோவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதனால் மும்பை அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 4 ரன்) மற்றும் சூர்ய குமார் யாதவ் (6 பந்துகளில் 10 ரன்) இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த திலக் வர்மா (11 பந்துகளில் 7 ரன்), ஹாதிக் பாண்ட்யா (பூஜ்யம் ரன்), ஆகியோர் இன்று சிறப்பாக விளையாடவில்லை.
மும்பை அணி பவர் பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 28 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இதற்குப் பின்னர் நெஹல் வதேரா (41 பந்துகளில் 46 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) இரண்டாவது தொடக்க வீரரான இஷான் கிஷனுடன் (36 பந்துகளில் 32 ரன், 3 ஃபோர்) இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை சற்று உயர்த்தினார்.
இஷான் கிஷன் ஆட்டமிழந்த பின்னர் டிம் டேவிட் (18 பந்துகளில் 35 ரன்) உடன் இணைந்து விளையாடி அணி ஒரு மதிப்பான ஸ்கோரை அடைய உதவினார். இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கட் இழப்பிற்கு 144 ரன் எடுத்திருந்தது.
145 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த லக்னோ அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான அர்ஷின் குல்கர்னி முதலாவது ஓவரின் நாலாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கே.எல் ராகுல் (22 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) மூன்றாவதாகக் களம் இறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் (45 பந்துகளில் 62 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) உடன் இணைந்து சிறப்பாக விளையாடினார்.
அதன் பின்னர் ஆடவந்த தீபக் ஹூடா (18 ரன்) மற்றும் நிக்கோலஸ் பூரன் (ஆட்டமிழக்காமல் 14 ரன்) இருவரும் கொல்கொத்தா அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். அந்த அணி 19.2 ஓவரிலேயே 6 விக்கட் இழப்பிற்கு 145 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 4 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்தபோது மும்பை அணி மிக மோசமாக பேட்டிங் செய்தது. பின்னர் பந்து வீசியபோது ஹார்திக் பாண்ட்யா பந்துவீச்சாளர்களைக் கையாண்டவிதம் சரியில்லை.
பும்ரா போன்ற பந்து வீச்சாளரின் ஓவர்களை முன்னரே முடித்தது தவறான முடிவு. கடைசி இரண்டு ஓவர்களில் ஒன்றை பும்ரா வீசியிருக்க வேண்டும்.
17ஆவது ஓவரை தனது கடைசி ஓவராக பும்ரா வீசினார்; அந்த ஓவரில் அவர் ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். இனி மும்பை அணி பிளே ஆஃப் ஸ்டேஜுக்கு முன்னேறுவது சற்று கடினம்.
லக்னோ அணியின் மார்கஸ் ஸ்டோயினிஸ் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காவும் பந்துவீச்சிற்காகவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை சென்னையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
“90 சதவிகித மக்களுக்கு அநீதி நடக்கிறது!” — பிதற்றுகிறார் ராகுல் காந்தி!
— ஆர். வி. ஆர்
நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடக்கிறது. அதனால் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஜுரம் ஏறுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே பிதற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய ‘சமூக நீதி மாநாடு’ நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகளில் சில:
“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.”
“ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுத்தால், அப்படியான எக்ஸ்-ரே எடுத்தால், நாட்டில் ஓபிசி, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள்தான் ஏழைகள் என்பது தெரியவரும்.”
“ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது எனது அரசியல் அல்ல, அது என் வாழ்க்கையின் நோக்கம்.”
“இன்று 90 சதவிகித இந்திய மக்களுக்கு அநீதி இழைக்கப் படுகிறது.”
”90 சதவிகித மக்களுக்கு நியாயம் கிடைத்தே தீர வேண்டும்.”
சுருக்கமாக, ராகுல் காந்தி சொன்னது இது: ‘இந்தியாவில் 100-க்கு 90 நபர்கள் ஏழைகள். அந்த 90 பேரும் ஓபிசி, பட்டியலின மற்றும் பழங்குடி ஜாதியினர். மீதி 10 சதவிகித மக்கள் வேறு ஜாதியினர், அவர்கள் ஏழைகள் அல்ல, அவர்களிடம் சொத்து சுகம் உள்ளது. நாட்டின் 90 சதவிகித மக்களுக்கு, அதாவது நாட்டின் ஏழை மக்களுக்கு, அந்த ஏழைகள் சார்ந்த ஜாதியினருக்கு, அநீதி நடக்கிறது. அதற்கான தீர்வின் முதல் படி, ஜாதிவாரிக் கணக்கெடுப்பு.’
ராகுல் காந்தி நேராகப் பேசவில்லை.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், நமது ஏழை மக்களுக்குக் கல்வி, குடிநீர், சுகாதாரம், மருத்துவம், சாலைகள், இருப்பிடம், என்று சீராக, படிப்படியாக, அடிப்படை வசதிகளை ஒரு அரசால் திட்டமிட்டு ஏற்படுத்தவே முடியாதா – மக்கள் நலனைக் குறிவைத்தும், பொருளாதார முன்னேற்றத்தின் ஒரு அங்கமாகவும்?
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏதும் நடத்தாமல், உலகமே வியக்க 2021-ல் துவங்கி இந்திய மக்கள் அனைவருக்கும் இரண்டு வருடங்களில் நரேந்திர மோடி அரசு கொரோனா தடுப்பூசி வழங்கியதே? ஏதாவது புரிகிறதா, ராகுல் காந்திக்கு?
ராகுல் இப்படியாவது யோசித்தாரா? இதுவரை மொத்தமாக சுமார் 55 ஆண்டுகள் காங்கிரஸ் பிரதம மந்திரிகள் மத்திய அரசை வழிநடத்தினர். அவர்களில், ராகுல் காந்தியின் அப்பா, பாட்டி, கொள்ளுத் தாத்தா ஆகியோர் உண்டு. 55 ஆண்டுகால காங்கிரஸ் பிரதமர்களும், ஏழை மக்களைக் கைதூக்கிவிட ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியம் என்று புரியாமல், அதை நடத்தாமல், நாற்காலியைத் தேய்த்துவிட்டுப் போனார்களா?
இல்லையென்றால், கடைசி காங்கிரஸ் பிரதமரின் பதவிக் காலமும் முடிந்து, நரேந்திர மோடி 2014-ல் பிரதமர் ஆன பின்புதான் நாட்டில் ஏழைகள் தோன்ற ஆரம்பித்தார்களா, அவர்கள் விர்ரென்று அதிகரித்து 90 சதவிகிதம் ஆகிவிட்டனரா?
90 சதவிகித மக்கள் ஏழைகள், அவர்களுக்கு அநீதி நடக்கிறது, என்று பேசினால் என்ன அர்த்தம்? மீதி 10 சதவிகிதத்தினர் தான் அந்த 90 சதவிகித மக்களுக்கு அநீதி செய்கின்றனர் என்று அர்த்தமா? அல்லது, சுதந்திரம் அடைந்து 77 ஆண்டுகள் ஆனாலும், தங்கள் முயற்சியால், திறமையால் நமது அரசாங்கத்தையும் சகித்து அதோடு போராடி ஏழ்மையிலிருந்து மீள முடிந்தவர்கள் நாட்டில் 10 சதவிகிதத்தினர் தான், அந்த அளவுக்கு இந்திய அரசாங்கம் முன்னர் பல வருடங்களாகவே தூங்கியது, பொதுமக்களை உதாசீனம் செய்தது, என்று அர்த்தமா?
உண்மை என்னவென்றால், வலுவான அரசியல் தலைமை, தொலைநோக்குப் பார்வை, பயனுள்ள பொருளாதாரத் திட்டங்கள், திறமையான நேர்மையான நிர்வாகம், ஆகியவை நமது மத்திய அரசிலிருந்து நடுவில் பல வருடங்கள் காணாமல் போயின. பல மாநில அரசுகள் படு மோசம். இவைதான் நமது மக்கள் பின்தங்கி இருக்க முதன்மைக் காரணங்கள்.
சாதாரண இந்திய மக்கள் நல்லவர்கள், ஆனால் அப்பாவிகள். நமது அநேக அரசியல் தலைவர்களின் பதவிப் பித்தை, சுயலாபக் கணக்குகளை, சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாது. இது ராகுல் காந்திக்கு ஒரு பலம்.
பொதுவாக இந்திய ஹிந்துக்களுக்கு மதத்தை விட, ஜாதியின் மீது பற்று அதிகம். ஜாதி அடிப்படையில் அவர்களிடம் அனுதாபம் காட்டுவது போல் அவர்களை அணுகி, “இந்தியாவில் நீங்கள் 90 சதவிகிதம். உங்களுக்கு அநீதி நடக்கிறது. மற்ற ஜாதியினருக்கு அநீதி நடக்கவில்லை. தேசத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுத்து, உங்கள் ஜாதியினர் அனைவரையும் அநீதியிலிருந்து மீட்டுக் கரையேற்ற நான் இருக்கிறேன்” என்று ஒரு தலைவர் சொன்னால் என்ன அர்த்தம்? அவர் பேசுவதின் அர்த்தம் விலாவாரியாக இதுதான்.
’90 சதவிகித மக்களே! மீதம் 10 சதவிகித மக்களிடம் இருக்கிற சொத்து சுகங்கள், உங்களிடம் இருப்பதை விட மிக அதிகம். அவர்கள் மட்டும் அப்படி முன்னேறியதால், அவர்களை அப்படி வளர விட்டதால், நீங்கள் ஏழைகளாக விடப் பட்டிருக்கிறீர்கள். இது உங்களுக்குச் செய்யப்பட்ட அநீதி.‘
’90 சதவிகித மக்களே! உங்கள் நிவர்த்திக்கான முதல் நடவடிக்கை, நாடு முழுவதுமான ஜாதிவாரிக் கணக்கெடுப்பு. என் தலைமையிலான மத்திய அரசு அதைச் செய்யும். உங்களில் யார் யார் என்ன ஜாதி, நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள், என்பதை ஜாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காண்போம். மற்ற 10 சதவிகித மக்கள் யார் யார், அவர்கள் என்ன ஜாதி, எங்கு வசிக்கிறார்கள், அவர்களின் சொத்து சுகம் என்ன என்பதும் அந்த எக்ஸ்-ரே கணக்கெடுப்பில் தெரியும்.‘
’90 சதவிகித மக்கள், 10 சதவிகித மக்கள், இரு தரப்பினரையும் இப்படி அடையாளம் கண்டபின், இரண்டு பக்கத்து மனிதர்களின் சொத்து சுகங்கள் சமமாக அமையும்படி எனது அரசு தேவையானதைச் செய்யும் – அதாவது, அந்த 10 சதவிகித மக்களிடம் உள்ள சில சொத்துக்கள் உங்களிடம் லபக் என்று வந்து சேரலாம்’
இந்த ரீதியில் தனது பேச்சை அந்த சாதாரண மக்கள் புரிந்து கொள்ளட்டும் என்று அந்தத் தலைவர் நினைப்பதாக ஆகும். ‘மக்கள் எப்படியோ ஏமாந்து என் கட்சிக்கு ஓட்டளித்தால் சரிதான். நான் எப்படித்தான் பிரதமர் ஆவது?’ – என்றும் அந்தத் தலைவர் நினைப்பதாக ஆகும்.
பரிதாப நிலையில் உள்ள சாதாரண மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாமல், அதற்கான நல்லெண்ணமும் திராணியும் இல்லாமல், அவர்களை அந்தத் தலைவர் வஞ்சிக்க நினைப்பதாகவும் அர்த்தம். ராகுல் காந்தி வேறு மாதிரியாகவா நினைப்பார்?
ஆனால் ஒன்று. இந்தியாவில் நீங்கள் ஒரு ஜாதியைச் சேர்ந்தவராக இல்லாமல், ஜாதி ரீதியாக, ஜாதி அடிப்படையில், அந்த ஜாதி மக்களின் மனதை வசீகரிக்க முடியாது, அவர்களை நீங்கள் ஜாதி ரீதியாக அணுகி அவர்களின் ஜாதித் தலைவர் மாதிரி – அதுவும் ஒரே சமயத்தில் ஆயிரக் கணக்கான ஜாதிகளின் தலைவர் மாதிரி – ஆக முடியாது. ஆகையால் ராகுல் காந்தியின் புதிய பித்துக்குளிப் பேச்சு அவருக்கு உதவாது.
இன்னொன்று. ஹிந்துக்கள் பொதுவாக விதியை நம்புகிறவர்கள். அசிரத்தையால் ஒரு அரசாங்கம் தங்களை வாட்டி வதைத்தாலும், யார் எப்படிப் பிழைத்தலும், பணம் சேர்த்தாலும், தங்கள் கஷ்டம், தங்கள் ஏழ்மை, ஆகியவை தங்களின் விதி வசம் என்று பொறுத்துப் போகிறவர்கள். அவர்களிடம் போய், “90 சதவிகித மக்களே! பத்து சதவிகிதம் உள்ள வேறு ஜாதி மக்கள் மட்டும் சொத்து சுகத்தோடு இருக்கிறார்கள். நீங்கள் எனக்கு ஓட்டுப் போட்டால், 90 மற்றும் 10 ஆகிய இரண்டு தரப்பினரையும் சொத்து சுகத்தில் ஒரே அளவுக்கு சமன் செய்கிறேன்” என்று பேசினால் அது எடுபடாது. ராகுல் காந்திக்கு இதுவும் புரியாது
Author: R Veera Raghavan, Advocate, Chennai (veera.rvr@gmail.com)
டெல்லி அணியை (153/9, குல்தீப் யாதவ் 35*, ரிஷப் பந்த் 27, அபிஷேக் போரல் 18, அக்சர் படேல் 15, ப்ருத்வி ஷா 13, ஜேக ஃப்ரேசர் மகுர்க் 12, வருண் சக்ரவர்த்தி 3/16, வைபவ் அரோரா 2/29, ஹர்ஷித் ராணா 2/28) கொல்கொத்தா அணி (16.3 ஓவர்களில் 157/3, பில் சால்ட் 68, ஷ்ரேயாஸ் ஐயர், 33*, வெங்கடேஷ் ஐயர் 26*, சுனில் நரேன் 15, ரிங்கு சிங் 11, அக்சர் படேல் 2/25) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான ப்ருத்வி ஷா (7 பந்துகளில் 13 ரன்) மற்றும் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (7 பந்துகளில் 12 ரன்) இருவரும் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர்.
குல்தீப் யாதவ் மட்டும் 26 பந்துகளில் 35 ரன் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கட் இழப்பிற்கு 153 ரன் எடுத்திருந்தது.
154 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த கொல்கொத்தா அணியின் தொடக்க வீரர்களான பில் சால்ட் (33 பந்துகளில் 68 ரன், 7 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரேன் (10 பந்துகளில் 15 ரன், 3 ஃபோர்) இருவரும் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களம் இறங்கிய ரிங்கு சிங் (11 பந்துகளில் 11 ரன், 1 ஃபோர்) இன்று சோபிக்கவில்லை.
அதன் பின்னர் ஆடவந்த ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் கொல்கொத்தா அணிக்கு ஒரு நல்ல் வெற்றியைத் தேடித்தந்தனர். அந்த அணி 16.3 ஓவரிலேயே 3 விக்கட் இழப்பிற்கு 157 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கொத்தா அணியின் சுழல்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை லக்னோவில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
சகோதர சகோதரிகளே, இப்போதெல்லாம் காங்கிரசை விட்டுவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்களே, அவர்கள் ஒரு விஷயத்தை மிகத் தீவிரமாகக் கூறுகிறார்கள்.
அவர்கள் எல்லாம் கூறுகிறார்கள் – இப்போது காங்கிரஸ் காங்கிரஸாக இல்லை என்கிறார்கள். இப்போது காங்கிரஸ் அர்பன் நக்ஸல்வாதிகள் கைகளில் சென்று விட்டது.
காங்கிரஸ் இப்போது, இடதுசாரிகளின், வலையில் சிக்கி இருக்கிறது. நண்பர் ஒருவர் அவர்களிடம் கேட்டார், இதை எப்படி நீங்கள் சொல்கிறீர்கள் என்று? அவர்களுடைய தேர்தல் அறிக்கையைப் பாருங்கள் என்று அவர் கூறினார்.
இந்த முறை வெளியாகி இருக்கும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள்!!
காங்கிரஸ் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது, கவலையளிப்பது ஆபத்தானது. மேலும் மாவோ சித்தாந்த, எண்ணத்தை பரவலாக்குவது தான் அவர்களுடைய, இந்த முயற்சி.
அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள்? ஒரு வேளை காங்கிரஸின் ஆட்சி அமைந்தால், அனைவரின் சொத்து விவரங்கள் ஆய்வு செய்யப்படும். நம்முடைய சகோதரிகளிடம் எத்தனை தங்கம் இருக்கிறது, இது ஆய்வு செய்யப்படும். அது கணக்கு செய்யப்படும்.
நம்முடைய பழங்குடி குடும்பங்களிடம் வெள்ளி இருக்கும். எத்தனை வெள்ளி இருக்கிறது என்பது கணக்கெடுக்கப்படும்.
அரசு அலுவலர்களிடம் எத்தனை இடம் இருக்கிறது பணம் என்ன எங்கே இருக்கிறது வேலை எங்கே என்ன, இது ஆய்வு செய்யப்படும். இது மட்டுமா மேலும் என்ன கூறியிருக்கிறார்கள் தெரியுமா?
நம் சகோதரிகளிடம் இருக்கும் தங்கம் இருக்கிறதே!! மேலும் இருக்கும் சொத்துக்கள், இவை அனைத்தையும், சமமான வகையிலே பிரித்துக் கொடுத்து விடுவார்களாம். என்ன இது உங்களுக்கு சம்மதமா?
உங்கள் சொத்துக்களைக் கவர அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? உங்களுடைய சொத்துக்களை, கடினமாக நீங்கள் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை, அரசாங்கம் கவர்ந்து கொள்ள அதிகாரம் இருக்கிறதா?
அந்தச் சொத்துக்களை, என் தாய்மார்கள் சகோதரிகளின் வாழ்க்கையிலே, தங்கம், அது வெறும், பகட்டுப் பொருள் மட்டும் அல்ல. அது சுயகௌரவத்தோடு தொடர்புடையது. அவர்கள் அணியும் தாலி, அது பணம் கொண்டு எடை போடும் பொருளல்ல. அவர்களுடைய வாழ்க்கையின் கனவுகளோடு தொடர்புடையது.
அதைப் பிடுங்குவதைப் பற்றியா உங்கள் அறிக்கையிலே எழுதியிருக்கிறீர்கள்?
தங்கத்தை எடுத்துக் கொள்வோம், அனைவருக்கும் பங்களித்துக் கொடுப்போம்.
முன்பு அவர்கள் ஆட்சி நடந்த போது என்ன கூறினார்கள்? இந்த தேசத்தின் சொத்தின் மீது முதல் அதிகாரம், முஸ்லீம்களுடையது. இதன் பொருள் என்ன? இந்தச் சொத்துக்களைச் சேகரித்து யாரிடம் கொண்டு சேர்ப்பார்கள்? யாருக்கு அதிகக் குழந்தைகள் இருக்கிறார்களோ அவர்களுக்கு அளிப்பார்கள். ஊடுறுவல்காரர்களுக்குக் கொடுப்பார்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்துச் சேமித்து வைத்த பணம், ஊடுறுவல்காரர்களுக்கா அளிக்கப்பட வேண்டும்? உங்களுக்கு இதில் சம்மதமா?
இதையே காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. தாய்மார்கள் சகோதரிகளின் தங்கத்தைக் கணக்குப் பார்க்க நினைப்பவர்கள், அதைப் பட்டியலிட்டுத் தகவல் சேகரிப்பவர்கள், அதன் பிறகு, அந்தச் சொத்துக்களைப் பிரித்துக் கொடுப்பார்கள்.
யாருக்குக் கொடுப்பார்கள்? யாரைப் பற்றி மன்மோஹன் சிங் அவர்களின் அரசு கூறியது? சொத்துக்களின் மீது முதல் உரிமை முஸ்லீம்களுக்கு உரியது.
சகோதர சகோதரிகளே, இந்த அர்பன் நக்ஸல் கருத்தியல், என்னுடைய தாய்மார்களே சகோதரிகளே, இது உங்களுடைய, தாலிக் கயிற்றைக் கூட விட்டு வைக்காது. இந்த அளவுக்குக் கொண்டு போகும் என்பதைக் கூறவே வந்திருக்கிறேன்.
ராஜஸ்தான் பன்ஸ்வாராவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியவை… தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றாது.
குஜராத் டைடன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
குஜராத் அணியை (200/3, சாய் சுதர்ஷன் 84*, எம். ஷா ருக் கான் 58, டேவிட் மில்லர் 26*, ஷுப்மன் கில் 16) பெங்களூரு அணி (16 ஓவர்களில் 206/1, வில் ஜேக்ஸ் 100*, விராட் கோலி 70*, டியு பிளேசிஸ் 24) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே குஜராத் அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரரான விருத்திமான் சாஹா (4 பந்துகளில் 5 ரன்) முதலாவது ஓவர் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் (19 பந்துகளில் 16 ரன்) 6.4ஆவது ஓவரில் அவுட்டானார். அவருக்குப் பின்னர் ஆடவந்த சாய் சுதர்ஷன் (49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 84 ரன், 8 ஃபோர், 4 சிக்சர்) மற்றும் ஷா ருக் கான் (30 பந்துகளில் 58 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்), டேவிட் மில்லர் (19 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கட் இழப்பிற்கு 200 ரன் எடுத்திருந்தது.
201 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி (44 பந்துகளில் 70 ரன், 6 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் மற்றொரு தொடக்க வீரரான டியு பிளேசிஸ் (12 பந்துகளில் 24 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்) இருவரும் அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர்.
மூன்றாவதாகக் களம் இறங்கிய வில் ஜேக்ஸ் (41 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன், 5 ஃபோர், 10 சிக்சர்) ஆகியொர் பொறுப்பை உணர்ந்து ஆடி பெங்களூரு அணிக்கு ஒரு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தனர்.
அந்த அணி 16 ஓவரிலேயே 1 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியின் வில் ஜேக்ஸ் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். குஜ்ராத் அணியின் சுழல் பந்து வீச்சாளர்களை பெங்களூரு அணி இன்று கையாண்டவிதம் பாராட்டிற்கு உரியது.
குஜராத் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் இன்று 11 ஓவர்கள் வீசினர் அதில் ரஷீத்கான் 51 ரன்கள் கொடுத்தார். நூர் அகமது 43 ரன்கள் கொடுத்தார். சாய் கிஷோர் 30 ரன்கள் கொடுத்தார். குஜராத் அணியில் தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் ஷா ருக் கான் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்தும் வெற்றி கைநழுவிப் போனது.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சென்னை அணி (212/3, ருதுராஜ் கெய்க்வாட் 98, டேரில் மிட்சல் 52, ஷிவம் துபே 39*, அஜிங்க்யா ரஹானே 9, தோனி 5*) ஹைதராபாத் அணியை (199/3, ஐடன் மர்க்ரம் 32, கிளாசன் 20, நிதீஷ் குமார் ரெட்டி 15, அபிஷேக்ச் ஷர்மா 15, துஷார் தேஷ்பாண்டே 3/23, பதிரனா 2/17) 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே சென்னை அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே (12 பந்துகளில் 9 ரன், 1 ஃபோர்) மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் (54 பந்துகளில் 98 ரன், 10 ஃபோர், 3 சிக்சர்) 19.2ஆவது ஓவர் வரை ஆடினார். மூன்றாவதாகக் களமிறங்கிய டேரில் மிட்சல் (32 பந்துகளில் 52 ரன், 7 ஃபோர், 1 சிக்சர்), ஷிவம் துபே (20 பந்துகளில் 39 ரன், 1 ஃபோர், 4 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கட் இழப்பிற்கு 212 ரன் எடுத்திருந்தது.
213 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் (7 பந்துகளில் 13 ரன்) இரண்டாவது ஓவரிலும் அபிஷேக்ச் ஷர்மா (9 பந்துகளில் 15 ரன்,) மூன்றாவது ஓவர் ஐந்தாவது பந்திலும் ஆட்டமிழந்தனர்.
மூன்றாவதாகக் களமிறங்கிய அன்மோல்பிரீத் சிங் (பூஜ்யம் ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் மர்க்ரம் (32 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (15 ரன்), கிளாசன் (20 ரன்), அப்துல் சமது (19 ரன்), ஷப்பாஸ் அகமது (7 ரன்), பேட் கம்மின்ஸ் (5 ரன்), ஜெயதேவ் உனக்தத் (1 ரன்), புவனேஷ் குமார் (ஆட்டமிழக்காமல் 4 ரன்) என பேட்டர்கள் நிலைத்து நிற்காமல் ஆட்டமிழந்துகொண்டே இருந்தனர்.
இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 134 ரன் மட்டுமே எடுத்து 78 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சென்னை அணியின் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
டெல்லி கேபிடல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்
டெல்லி அணி (257/4, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 84, ஷாய் ஹோப் 41, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 48*, அபிஷேக் போரல் 36, ரிஷப் பந்த் 29, அகசர் படேல் 11*) மும்பை அணியை (247/9, திலக் வர்மா 63, ஹார்திக பாண்ட்யா 46, டிம் டேவிட் 37, சூர்ய குமார் யாதவ் 26, இஷான் கிஷன் 20, சசிக் சலாம் 3/34, முகேஷ் குமார் 3/59) 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே டெல்லி அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ஜேக் ஃப்ரேஸர் மகுர்க் (27 பந்துகளில் 84 ரன், 11 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் அபிஷேக் போரல் (27 பந்துகளில் 36 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர்.
மகுர்க் 7.3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். பில் சால்ட் 9.4 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அச்சமயத்தில் அணியின் ஸ்கோர் 127/2. அவருக்குப் பின்னர் ஆடவந்த ஷாய் ஹோப் (17 பந்துகளில் 41 ரன்), ரிஷப் பந்த் (19 பந்துகளில் 29 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (25 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 48 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கட் இழப்பிற்கு 257 ரன் எடுத்திருந்தது.
258 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த மும்பை அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா (8 பந்துகளில் 8 ரன்,) நாலாவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷன் (14 பந்துகளில் 20 ரன்) ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.
மூன்றாவதாகக் களம் இறங்கிய சூர்ய குமார் யாதவ் (13 பந்துகளில் 26 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) நெஹல் வதேர (4 ரன்), முகம்மது நபி (7 ரன்), பியுஷ் சாவ்லா (10 ரன்), ல்யூக் வுட் (9 ரன்) ஆகியோர் சொற்ப ரன்னுக்கு அவுட்டாயினர். திலக் வர்மா (32 பந்துகளில் 63 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (24 பந்துகளில் 46 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்), டிம் டேவிட் (17 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) ஆகியொர் பொறுப்பை உணர்ந்து ஆடியும் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 247 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 10 ரன் கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டெல்லி அணியின் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும். இரண்டாவது ஆட்டம் லக்னோவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்.
இன்று லக்னொவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே இரண்டாவது ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. எனவே லக்னோ அணி மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான க்விண்டன் டி காக் (3 பந்துகளில் 8 ரன், 2 ஃபோர்) முதல் ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் ஃபோர் அடித்தார்; மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரரான கே.எல். ராகுல் (48 பந்துகளில் 76 ரன், 8 ஃபோர், 2 சிக்சர்) 17.2ஆவது ஓவர் வரை ஆடினார். மூன்றாவதாகக் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் இன்று ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அவருக்குப் பின்னர் ஆடவந்த தீபக் ஹூடா (31 பந்துகளில் 50 ரன்), நிக்கோலஸ் பூரன் (11 ரன்), ஆயுஷ் பதோனி (ஆட்டமிழக்காமல் 18 ரன்), க்ருணால் பாண்ட்யா (15 ரன்) ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர் முடிவில் லக்னோ அணி 5 விக்கட் இழப்பிற்கு 196 ரன் எடுத்திருந்தது.
197 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான ஜாஸ் பட்லர் (18 பந்துகளில் 34 ரன்) ஆறாவது ஓவர் ஐந்தாவது பந்திலும் யஸஷ்வி ஜெய்ஸ்வால் (18 பந்துகளில் 24 ரன்,) ஏழாவது ஓவரின் முதல் பந்திளும் ஆட்டமிழந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய சஞ்சு சாம்சன் (33 பந்துகளில் ஆடமிழக்காமல் 71 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்), ரியான் பராக (14 ரன்), துருவ் ஜுரல் (34 பந்துகளில் ஆட்டமிழக்கமல் 52 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு 199 ரன் எடுத்து 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் அணியின் அணித்தலைவர் சஞ்சு சாம்சன் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் ஆட்டம் அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும். இரண்டாவது ஆட்டம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெறும்.