Home Blog Page 210

வருவாய்க்கு ஒண்ணும் குறைச்சலில்ல! ஆனாலும் இங்கே மதுரை கோட்ட அதிகாரிகளின் புறக்கணிப்பு ஏன்?

railway news - 2026
#image_title

ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரூ.130 கோடியுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.

அதிக வருவாய் ஈட்டும் மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில் வழித்தடமான கொல்லம் திருநெல்வேலி,கொல்லம் செங்கோட்டை மதுரை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் கொல்லத் தில் இருந்து இயங்கிய கொல்லம்-திருநெல்வேலி, கொல்லம் -கோவை, கொல்லம் -சென்னை மெயில் செங்கோட்டை ராமேஸ்வரம் ரயில்களை மீண்டும் இயக்க மதுரை கோட்ட ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்ற 2023-2024 நிதியாண்டிற்காண ரயில்வே வருவாய் தரவினை இந்திய ரயில்வேயானது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள கோட்டவாரியான வருவாய் விவரத்தில் மதுரை கோட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

மதுரை கோட்டத்தில் மதுரை ரயில் நிலையம் முதலிடத்தையும், திருநெல்வேலி ரயில்நிலையம் இரண்டாம் இடத்தையும், திண்டுக்கல் ரயில்நிலையம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது.

விருதுநகர் ரெயில்நிலையத்தினை பொறுத்த வரை ₹25,17,78,990 வருமானம் ஈட்டி ஆறாம் இடத்தில் உள்ளது.

மதுரை ரெயில்வே கோட்டத்தில் ரூ.215 கோடி வருமானத்துடன் மதுரை ரெயில் நிலையம் முதலிடத்திலும், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் ரூ.130 கோடியுடன் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது. தென்காசி ரெயில் நிலையம் ரூ.21.60 கோடி வருமானத்துடன் 9-வது இடத்தில் உள்ளது.

இதில் நெல்லை-தென்காசி ரெயில் வழித்தடத்தில் பாலருவி எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-தாம்பரம் எக்ஸ்பிரஸ், ஈரோடு எக்ஸ்பிரஸ், நெல்லை-செங்கோட்டை 4 ஜோடி பயணிகள் ரெயில்கள், நெல்லை-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் ஆகியவற்றால் தென்காசி ரெயில் நிலையத்தின் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது.

மதுரை கோட்டத்தில் மொத்தம் 132 ரெயில் நிலையங்கள் உள்ளன. இதில் நூற்றாண்டு பழமை கொண்ட நெல்லை-தென்காசி வழித்தடம் அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை செங்கோட்டையில் சென்னைக்கு பகல் நேர தினசரி ரெயில் இல்லை.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்க அறிவிக்கப்பட்டு ரயில்வே கால அட்டவணையில் இடம்பெற்ற செங்கோட்டை தாம்பரம் செங்கோட்டை தினசரி பகல் நேர ரயில் சில நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

கொல்லம் திருநெல்வேலி,கொல்லம் செங்கோட்டை மதுரை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் கொல்லத் தில் இருந்து இயங்கிய கொல்லம்-திருநெல்வேலி, கொல்லம் -கோவை, கொல்லம் -சென்னை மெயில்ரயில்கள் தற்போது அகல ரயில் பாதையாக போடப்பட்டபின் மீண்டும் இயங்கவில்லை.

மேலும் தென்காசி மக்களவைத் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெங்களூரு கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு ரெயில் வசதி கிடையாது.

எனினும் இந்த வழித்தடத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்கள் மதுரை கோட்டத்தின் வருமானத்தில் முதல் 50 இடத்திற்குள் வந்துள்ள நிலையில் இந்த வழித்தடங்களில் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை வலுத்துள்ளது.

தற்போது செங்கோட்டை-தாம்பரம், செங்கோட்டை சென்னை சிலம்பு அதிவிரைவு ரயில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே ரெயில் இயக்கப்படுகிறது. இந்த இரு ரயில்களை தினமும் இயக்க வேண்டும்.

மேலும் மும்பை, மங்களூரு ஆகிய ஊர்களுக்கு தென்காசி ராஜபாளையம் வழியாக ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்டிகை காலங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் பெங்களூரு சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும்.

திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் அதிகரித்து வருவதால் திருவனந்தபுரம் செல்வதற்கு திருவனந்தபுரம்-புனலூர் கன்னியாகுமரி புனலூர் ரயில்கள் செங்கோட்டை திருநெல்வேலி வரை நேரடி ரெயில் சேவையாக இயக்க வேண்டும் – என நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அயோத்திக்கு விமானத்தில் அழைத்துச் செல்வதாக மோசடி; மதுரையில் பரபரப்பு!

madurai travels ayodhya issue - 2026
  • மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லி வழியாக அயோத்தியா அழைத்து செல்வதற்காக 106 பேரிடம் விமான டிக்கெட் புக் செய்து மோசடி!
  • பயணிகள் – டிராவல் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் 106 பயணிகளுக்கும் வரும் 18ம் தேதி அயோத்தியா செல்ல ஏற்பாடு.

மதுரையில் இருந்து ஆன்மீக சுற்றுலா மூலம் அயோத்தி செல்வதற்காக இண்டிகோ விமானம் மூலம் 100 பயணிகளை அழைத்துச் செல்வதற்காக கூறி சேலம் ஜே.பி. டிராவல்ஸ் நிறுவனம் தலா 1 நபருக்கு விமான கட்டணம் தங்கும் வசதி உள்பட பணம் 29 ஆயிரம் வசூல் செய்து செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு இன்டிகோ விமானம் மூலம் மதுரையில் இருந்து டெல்லி சென்று அங்கிருந்து அயோத்தியா செல்வதற்காக 106 பயணிகள் விமான நிலையம் வந்தடைந்தனர்.

106 பயணிகள் அனைவரும் டெல்லி செல்ல இண்டிகோ விமான நிறுவனத்தில் கேட்டனர் . அப்படி எதுவும் புக் செய்யப்படவில்லை என, அதிகாரிகள் கூறியதையடுத்து, பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சேலம் ஜே.பி. டிராவல்ஸ் மேலாளார்
ராஜா பயணிகளிடம் கலந்து பேசி, வரும் 18ம் தேதி 106 பயணிகளையும் அயோத்தி அழைத்துச் செல்வதாகக் கூறியதை அடுத்து, பயணிகள் சமாதானம் அடைந்தனர்.

பின்னர் டிராவல்ஸ் நிறுவன ஏற்பாட்டின் படி, 106 பயணிகளும் சேலம் புறப்பட்டுச் சென்றனர்!

காங்கிரஸ் என்ற வாஷிங் மெஷின்

selvaperunthagai ks alagiri edited - 2026

என் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகையை ரவுடி என்று அண்ணாமலை சொல்லி விட்டார் அவரை ஒரு பிடி பிடிக்காமல் விடமாட்டேன் – சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் MP – இது செய்தி

இனி நம் கற்பனை உரையாடல்!

நிருபர் : ரவுடித்தனம் செய்ததற்காக ஜெயலலிதா ஆட்சியில் ஒரு முறை குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தார்களே அப்ப ஒரு ரவுடி கிடையாதா?

சசி : அது அவர் புரட்சி பாரதம் கட்சியில் பயணம் செய்த போது நடந்தது அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : சரி அவரை இன்னொரு முறை அதே ஜெயலலிதா குண்டர் சட்டத்தில் தூக்கி உள்ளே வைத்தாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : உங்க கட்சி அலுவலகத்தை அடியாள்களோடு வந்து அடித்து நொறுக்கிறாரே அப்ப அவர் ரவுடி கிடையாதா ?

சசி : அப்ப அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தார் .

நிருபர் : ஆடிட்டர் பாண்டியன் வழக்கில் போலீஸ் பிடிக்க சென்றபோது சுவர் ஏறி குதித்ததில் கால் முறிந்து விட்டது அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் புதிய தமிழகம் கட்சியில் இருந்தார் எங்க கட்சியில் கிடையாது.

நிருபர் : நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தியதற்காக போலீசார் ஒருமுறை அவரை கைது செய்தார்களே, அப்ப அவர் ரவுடி கிடையாதா?

சசி : அப்பதான் அவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நீக்கி இருந்தார்கள் அந்த நேரம் அவர் எந்த கட்சியிலும் இல்லாமல் இருந்தார் அப்ப அவர் காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

நிருபர் : ஏழாவது வகுப்பு பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது சாதி சண்டை போட்டு சக மாணவர்களின் சட்டையை கிழித்து போட்டாரே அப்ப ஒரு ரவுடி கிடையாதா?

சசி : அப்ப அவர் எந்த கட்சியிலும் சேரவில்லை மாணவராக இருந்தார் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் கிடையாது.

அப்படி என்றால் ஒருவன் எத்தனை கொலை செய்தாலும் பரவாயில்லை, எத்தனை வெடிகுண்டு சம்பவங்களை நடத்தினாலும் பரவாயில்லை?

எத்தனை ரூபாய் கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை,

எத்தனை முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்றாலும் பரவாயில்லை,

அதோடு உங்கள் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை அடித்து உடைத்தவன் என்றாலும் பரவாயில்லை,

ஏன் உங்கள் கட்சி தேசிய தலைவர் ராஜீவ் காந்தியை போட்டு தள்ளிய விடுதலைப் புலிகளோடு தொடர்பில் உள்ளவன் என்றாலும் பரவாயில்லை,

அவன் காங்கிரஸ் கட்சிக்கு வந்து விட்டால் அவனுக்கு தலைவர் பதவி கொடுத்து விடுவீர்கள் அப்படித்தானே?

நீங்க பாஜகவை வாஷிங் மெஷின் என்று சொன்னீங்க பாஜகவை விட பெரிய வாஷிங் மெஷின் காங்கிரஸ் தான்.

–சமூகத் தள வைரல் பகிர்வு–

சங்கரன்கோவில் ஆடித் தபசு – நம் தினசரி பேஸ்புக் பக்கத்தில் இன்று முதல் நேரலை!

sankarankoil adi thapasu annct - 2026

2024 ஆம் ஆண்டு சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா வருகிற 11.07.24 முதல் 22.07.24 வரை மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முழுவதுமாக 12 நாட்களும் நமது “Dhinasari Tamil News” ஃபேஸ்புக் பக்கத்தில் https://www.facebook.com/dhinasarinews “நேரலையாக” (LIVE) காணலாம்.

மதுரை கோயில்களில் பஞ்சமி – வாராஹி சிறப்பு வழிபாடு!

vaarahi special pooja in madurai temples - 2026

மதுரை: மதுரை கோயில்களில் வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, வராஹி அம்மனுக்கு, சிறப்பு பூஜை நடைபெற்றது.

மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், வளர்பிறை பஞ்சமி முன்னிட்டு, இக்கோயில் அமைந்துள்ள வராகி அம்மனுக்கு, சண்டி ஹோமம், ருத்ர ஹோமம், நவகிரக ஹோமம் ஆகியவை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, பக்தர்களால் வராகி அம்மனுக்கு, பால், தயிர், மஞ்சள் பொடி, பன்னீர், சந்தனம் போன்ற திரவியங்களால், அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமாகி,
சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு, விளக்கேற்றி வராஹி அம்மனுக்கு மஞ்சள் மாலை அணிவித்து சிறப்பு
பூஜைகள் செய்தனர் .

இதை அடுத்து, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தருக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதே போல, மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் ஆலயத்திலும் மதுரை அண்ணாநகர், யானைக்
குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்திலும், வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதே போல மதுரை ஆலயத்தில், வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக பக்தர் குழுவினர் செய்திருந்தனர்.

கப்பலூர் டோல்கேட்ட எப்பதான் அகற்றுவீங்க?

madurai kappalur tolgate protest - 2026

கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் என்று தேர்தல் வாக்குறுதி குறித்து விட்டு 3 ஆண்டுகள் ஆகியும் முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார் . டோல்கேட் விவகாரத்தில் எடப்பாடியாரின் ஆணை பெற்று மக்களுக்காக களம் இறங்கி போராடுவோம் என்று, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறினார்.

திருமங்கலத்தில் டோல்கேட் பிரச்சனை தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.பி உதயகுமாரிடம் பல்வேறு அமைப்பு சேர்ந்தவர்கள் மனு அளித்தனர் இதனைத் தொடர்ந்து, ஆர்.பி. உதயகுமார் செய்தி
யாளர்களிடம் கூறியதாவது:

தென்தமிழகத்தில் நுழைவுப் பகுதியான திருமங்கலம் தொகுதி கப்பலூர் டோல்கேட் விதிமுறை அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்றப்பட வேண்டும் என்று மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஸ்டாலின் நான் கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பாடுபடுவேன் என்று கூறினார். அதனுடைய வீடியோ குறிப்பு தற்போது வலை
தளங்களில் பரவி வருகிறது மூன்று ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை பற்றி தற்போது வாய் திறக்க மறுத்து வருகிறார்.

இது குறித்து நாங்கள் போராடினால் எங்கள் மீது பொய் வழக்கு தொடுத்து கைது செய்யும் சூழ்நிலை உள்ளது.

தற்போது, உள்ளூர் வாகன ஒட்டிகளுக்கு 2 லட்சம் முதல் 12 லட்சம் வரை அபதாரம் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. தற்பொழுது, உள்ளூர் வாகனங்கள் 50% கட்டணத்துடன் செல்ல வேண்டும் என்று செய்தி வெளிவந்தது இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அனைத்து மக்களும் போராட தூண்டும் வகையில் உள்ளது.
இதே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மத்திய அரசிடம் பேசி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது .
தற்பொழுது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மக்களிடத்தில் அரசு அக்கறை செலுத்தவில்லை.

இதன் மூலம் கடையடைப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது . ஏற்கனவே, உள்ளூரில் சாலைகளை அடைத்தார்கள் மக்கள் போராட்டத்தின் பின்பு அது திறக்கப்பட்டது. இந்த அரசு மக்கள் பிரச்சனைக்கு அக்கறை செலுத்தவில்லை.

மத்திய அரசு ஏற்கனவே, 60 கிலோமீட்டர் உள்ள டோல்கேட்டை அகற்றப்படும் என்று கூறியுள்ளார்கள் அதை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செய்திருக்க வேண்டும். ஆனால், அதை அரசு செய்யவில்லை

எடப்பாடியார் இருக்கும்பொழுது, டோல்கேட்டில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் மக்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது, அந்த போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை. இதனால், தினந்தோறும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

மக்களுக்கு சேவை செய்யாமல் லாப நோக்கத்துடன் தான் தற்போது இயங்கி வருகிறது. கப்பலூர் டோல்கேட் அகற்ற
பலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

கப்பலூர் டோல்கேட் பிரச்சனையில் நாங்கள் மக்களுக்கு உறுதுணையாக எடப்பாடியாரிடம் அனுமதி பெற்று மக்களுடன் இணைந்து போராட்டங்களுக்கு, நாங்கள் இணைந்து தீர்வு காண போராடுவோம் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என்பது போல உள்ளது.

தமிழகத்தில் போதை கலாச்சாரம்,கள்ளச்சாரயம் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளச் சாராயத்தால் குடித்து 68 பேர் பலியாகினர் ஆனால், கலெக்டர் மாற்றி விட்டோம் காவல்துறையை மீது நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று தீர்வு காணப்பட்டதாக கூறுகிறார்.

இன்றைக்கு தேசிய கட்சி தலைவர் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார். ஆனால்,
இதற்கு கமிஷனரை மாற்றம் செய்ய விட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டோம் என்ற தோற்றத்தை முதலமைச்சர் ஏற்படுத்துகிறார் .

அரசியல் கட்சித் தலைவருக்கு இந்த நிலைமை என்றால், சாமானிய மக்கள் உயிருக்கு என்ன பாதுகாப்பு அரசு கொடுக்கும் தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை. இது எல்லாம் இரும்புகரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.
சட்ட ஒழங்கு குறித்து, சட்டமன்றத்தில் கடந்தாண்டு எடப்பாடியார் பேசினார் அதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது இந்த பிரச்சனை இருந்திருக்காது.

பிரச்சனை நடந்து பின்பு அரசு இப்போதுதான் தூங்கி எந்திரித்து இருக்கிறது. சட்டசபையில் கள்ளச்சார சம்பவம் குறித்து கவனம் ஈர்ப்பு தீர்மானம் விதி 55 படி கொண்டு வந்தோம். ஆனால், ஜீரோஹவரில் பேச வேண்டும் என்று சபாநாயகர் கூறுகிறார் . அதனைத் தொடர்ந்து, விதி எண் 56 படி பேச நாங்கள் வாய்ப்பு கேட்டோம். ஆனால், மறுக்கப்பட்டது.

ஏற்கனவே, விதி எண் 56 படி இதுபோன்ற விவாதம் எடுக்கப்பட்டது. எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது ஆனால், ஜால்ரா போடுவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சியின் குரல் நசுக்கப்படுகிறது. மக்களின் பிரதிநிதியாக உள்ள நாங்கள் மக்கள் குரலாக நாங்கள் பேசுவதற்கு மறுக்கப்படுகிறது.

இது ஜனநாயகமா சர்வாதிகாரமா? எங்களுக்கு பேச வாய்ப்பளித்து விட்டு அது தவறு என்றால் விதிமீறல் என்று அவை குறிப்பிட்டு நீக்கலாம் அதையும் செய்யவில்லை என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அன்பழகன், ராமையா, ராமசாமி, கண்ணன், பிரபு சங்கர், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் சரவணபாண்டி, மாவட்ட கலைபிரிவு செயலாளர் சிவசக்தி உட்பட பலர் இருந்தனர்.

மாநில விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன ரக பஸ்கள்!

new buses tnstc setc - 2026

தமிழகத்தில் யாரும் செய்யாத சாதனையாக பழைய பஸ்களை புதிதாக பாடி கட்டி மஞ்சள் பெயிண்ட் அடித்து தமிழக சாலைகளில் பவனி வரச்செய்து வரும் நிலையில் புதிதாக பிஎஸ்‌6ரக பஸ்களைவாங்கி கூண்டு கட்டி அதற்கு மஞ்சள் பெயிண்ட் அடித்து இயக்கி வருகிறது.

இந்த நிலையில் தொலைதூர பயணிகளுக்கு சேவை செய்ய எஸ்இடிசிக்கு புதிதாக 200 பஸ்கள்‌வாங்கப்பட்டு கூண்டு கட்டி இளம் பச்சை கலர் அடித்து வந்துள்ள பஸ்களை விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சில் இவ்ளோ வசதிகள் இருக்கிறது.

எஸ்இடிசி எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 200 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. விரைவில் இந்த பேருந்துகள் வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. புதிய பிஎஸ் 6 தொழில் நுட்பம் கொண்ட இந்த பஸ்களில், பயணிகளுக்கும் பல்வேறு சொகுசு வசதிகள் உள்ளன.

தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தொலை தூரங்களுக்கு பேருந்துகளையே இயக்கி வருகிறது. எஸ்.இ.டிசி எனப்படும் இந்த பேருந்துகள் சென்னையில் இருந்து நெல்லை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, கோவை, சேலம், திண்டுக்கல், திருச்செந்தூர் என தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களுக்கும் எஸ்.இ.டி.சி சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக அரசு பஸ்களும் உள்ளன. அந்த வகையில், புதிதாக பிஎஸ் 6 ரக பேருந்துகளும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன. படுக்கை மற்றும் இருக்கை வசதிகள் கொண்டதாக இந்த பேருந்துகள் உள்ளன.

கீழ் தளத்திலும் படுக்கை வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி பயணம் செய்ய முடியும். தற்போது அரசு பேருந்துகளில் ஸ்லீப்பர் வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலும் கீழே இருக்கைகளும் மேல் பகுதியில் படுக்கை வசதிகள் கொண்டதாகவே உள்ளது.

இதனால், வயதான பயணிகள், குழந்தைகளுடன் பயணம் செய்யும் பயணிகள் படுக்கைகளில் ஏறி இறங்க மிகவும் சிரமப்படும் நிலை இருந்தது. இந்த நிலையில் தான் புதிதாக இயக்கப்பட இருக்கும் பேருந்துகளில் சிலவற்றில் கீழ் தளத்திலும் படுக்கை வசதி உள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேனிக் பட்டன் வசதிகள் உள்ளது.

அதேபோல் மின்விசிறி மற்றும் மொபைல் போன் சார்ஜர், ரீடிங்க் லைட் போன்றவை உள்ளன. இதன் மூலம் தொலை தூரம் செல்லும் பயணிகள் தங்கள் செல்போனை சார்ஜ் செய்து கொள்ள முடியும். விரைவில் வழித்தடத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் பேருந்துகள் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படடங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அதேபோல பிஎஸ் 6 தொழில் நுட்பம் கொண்ட இந்த பேருந்துகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதாகவும், காருக்கு நிகரான தொழில்நுட்பம் கொண்டதாகவும் புதிய பேருந்துகள் உள்ளதாக ஒட்டுனர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமண விழாவில் ரூ.1.71 லட்சம் மொய் பணம் திருடிய பெண்கள் கைது!

sivakasi crime news - 2026

ரூ. 25 ஆயிரம் லஞ்சம்: விஏஓ உட்பட 2 பேர் கைது

காரியாபட்டியில் ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட இருவரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கீழ உப்பிக்கூண்டு பகுதியைச் சேர்ந்தவர் நக்கீரன். இவர் தனக்கு சொந்தமான இடத்தை அளந்து கொடுப்பதற்காக, நில அளவயரை சந்தித்துள்ளார். அப்போது கடம்பன்குளம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் செல்வராஜ் (48), அந்த இடத்தை நாங்கள் அளந்து கொடுக்கிறோம் என நக்கீரனிடம் தெரிவித்துள்ளார்.

அதற்கு ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதற்கு ரூ. 25 ஆயிரம் மட்டுமே தன்னால் வழங்க முடியும் என நக்கீரன், கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நக்கீரன், விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் மீது லஞ்ச புகார் அளித்தார்.

இந்த சூழலில் காரியாபட்டியில் அலுவலகத்ல் இருந்த கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜிடம், ரூ. 25 ஆயிரத்தை நக்கீரன் கொடுக்க சென்றுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர், அருகே உள்ள பக்கம் ஒன்றைச் சேர்ந்த தையல் கடைக்காரர் மோகன் தாஸிடம், அந்தப் பணத்தை கொடுக்க கூறியுள்ளார்.

இதையடுத்து, ரூ. 25 ஆயிரத்தை நக்கீரனமிடமிருந்து மோகன்தாஸ் பெற்ற போது, விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான ஆய்வாளர்கள் பூமிநாதன், சாலமன் துரை கையும் களவுமாக பிடித்தனர். இதை தொடர்ந்து, மோகன்தாஸ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரான செல்வராஜை கைது செய்தனர்.


திருமண விழாவில் ரூ.1.71 லட்சம் மொய் பணம் திருடிய இரு பெண்கள் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருமண விழாவில் நூதன முறையில் மோசடி செய்து மொய்ப்பணம் ரூ.1.71 லட்சம் பணத்தை திருடிய உசிலம்பட்டியைச் சேர்ந்த இரு பெண்களை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சமுத்திரக்கனி. இவரது மகன் சக்திவேலுக்கு கடந்த ஞாயிறன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது திருமணத்திற்கு வந்த மொய்ப்பணம் ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் காணவில்லை என வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் சக்திவேல் என்பவர் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் மண்டபத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரு பெண்கள் மொய்ப்பணத்தை திருடி செல்வது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரின் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் பணத்தை திருடிய மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்கோவில்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் மனைவி முத்துச்செல்வி(54), அமாவாசை மனைவி பாண்டியம்மாள்(42) ஆகிய இருவரை ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, ரூ.1.71 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்: முத்துச்செல்வி, பாண்டியம்மாள் இருவரும் திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் போல் சென்று உள்ளனர். அங்கு மொய் எழுதுபவரிடம் சில்லறை வாங்குவது போல் அவரது கவனத்தை திசை திருப்பி அங்கிருந்த பணத்தை திருடி உள்ளனர். இவர்கள் பல்வேறு இடங்களில் சில்லரை வாங்குவது போல் கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் திருடி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றனர்.


சிவகாசியில் ஸ்டேஷனரி குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் கிருஷ்ணமூர்த்தி என்பதற்கு சொந்தமான லாமா & கோ என்ற பெயரில் ஸ்டேஷனரி கடை இயங்கி வருகிறது. இது பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இன்று அதிகாலை குடோனில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் சிவகாசி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் பேரில் நிலைய அலுவலர் வெங்டேஷன் தலைமையில் சம்பவத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குடோனில் பற்றி எரியும் தீயை அணைத்தனர். அதனால் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

தீ விபத்தில் குடோனில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்தில் பல லட்ச மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. மேலும் இது குறித்து உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி அளித்த புகார் பேரில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


புதுச்சேரியில் பள்ளிகளுக்கான நேரத்தில் மாற்றம்!

school exams - 2026

புதுச்சேரியில்‌ அரசுப் பள்ளிகளுக்கான நேரம் மாற்றம் – வருகிற‌ 15ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு இடைவேளை விடப்படுகிறது.

அதன் பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன.

இந்த புதிய நடைமுறை வருகிற 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்., சீனாவை எதிர்கொள்ள நவீன ரக லேசான பீரங்கி!

light tank by drdo - 2026

உயரமான மலை பிராந்தியங்களில், சீனாவின் சவாலை முறியடிக்கும் வகையில், ‘ஜோராவார்’ என்ற இலகு ரக போர் பீரங்கியை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இரண்டே ஆண்டுகளில், குஜராத்தின் ஹசிரா பகுதியில் உள்ள ‘எல் அண்டு டி’ ஆலையில் இந்த பீரங்கியை, டி.ஆர்.டி.ஓ., மற்றும் ‘எல் அண்டு டி’ நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன.

ரஷ்யா – உக்ரைன் போரில் நடக்கும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, மலைப்பகுதிகள் மற்றும் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் வேகமாகச் செயல்படும்படி இந்த பீரங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 25 டன்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் தனியார் நிறுவனமான Larsen & Toubro (L&T) ஜோராவார் லைட் டேங்கின் முதல் முன்மாதிரியை வெளியிட்டது. குஜராத்தின் ஹசிராவில் உள்ள L&Tல் இந்த டேங்க் ஏற்கெனவே அதன் உள்மட்ட சோதனைகளை நிறைவு செய்துள்ளது.

இந்த இலகு ரக பீரங்கி சோராவர், மிகக் குறுகிய காலத்தில் – 24 மாதங்கள் அல்லது இரண்டு வருடங்களுக்குள் – உருவாக்கப்பட்டுள்ளதாகவும், லடாக் மற்றும் சிக்கிமின் உயரமான பகுதிகளில் இயக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. சோராவர் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அங்கு அதன் செயல்திறன் மற்றும் திறன்கள் பாலைவன மற்றும் உயரமான பகுதிகளில் அடையாளம் காணப்படும்.

இந்திய இராணுவத்தின் தரமான தேவைகளின் (QRs) படி, டேங்கின் எடை 25 டன் ± 10 சதவீதம் இருக்க வேண்டும். எல்லாம் சரியாக நடந்தால், சோதனைகளை எதிர்கொண்டு தேர்வாகும் பட்சத்தில், ஜோராவார் 2027 ஆம் ஆண்டுக்குள் ராணுவத்தில் பயன்பாட்டுக்கு வரும்.

லடாக் மற்றும் வடக்கு சிக்கிமின் உயரமான பகுதிகளில், ராணுவ நடவடிக்கைகளுக்காக 350 இலகுரக டாங்கிகளை ராணுவம் எதிர்பார்க்கிறது. 2020ல் லடாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு சீனர்கள் ZTQ-15 லைட் டேங்கைப் பயன்படுத்தியபோது ஒரு இலகுவான டேங்கை உருவாக்க வேண்டிய தேவை வந்தது.

இந்திய ராணுவம் டி-72 மற்றும் டி-90 டேங்கிகளை டெம்சோக்கிலும், லடாக்கில் உள்ள டெப்சாங்கிலும் எதிர்ப்புப் போருக்கு ஏற்ற நிலப்பரப்புகளில் இயக்குகிறது. இருப்பினும், T-90 மற்றும் T-72 சராசரியாக 15,000 அடிக்கு மேல் உயரம் கொண்ட உயரமான பகுதிகளில் 40 டன்களுக்கும் அதிகமான எடையைக் கொண்டிருப்பதால் அவை செயல்படத் தகுதியற்றவை என கூறப்படுகிறது.

இந்த கனரக டேங்கிகளின் இயந்திர உருவாக்கப்படும் குதிரைத்திறன் சக்தி, அங்குள்ள காற்றின் காரணமாக குறைகிறது. அங்குதான் ZTQ-15 மற்றும் Zorawar போன்ற இலகுரக டேங்கிகளின் தேவை அதிகரிக்கின்றன.

இந்த லகு ரக பீரங்கியின் உருவாக்கல் காலக்கெடு மிகவும் குறுகியதாகவே இருந்துள்ளது. அதாவது, இரண்டு வருடங்களுக்கும் குறைவானது. 2022 மார்ச் மாதத்தில் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கியது, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த லகுரக பீரங்கி உருவாக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 59 பீரங்கிகள் இந்திய ராணுவத்திற்கு வழங்கப்படுவதாகவும், இரண்டாம் கட்டமாக 295 பீரங்கிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 12 முதல் 18 மாதங்களில் இந்த சோதனைகள் முடிவடையும்.

வெளியிடப்பட்ட படங்களின் டேங்கியில் ஜான் காக்கரில்ஸ், பெல்ஜியத்தை தளமாகக் கொண்ட உற்பத்தியாளரின், 105 மிமீ கோபுரத்தை எடுத்துச் செல்வதைக் காணலாம். இது வெப்பக் காட்சிகள், இரவு நேர சண்டை திறன்களைக் கொண்டிருக்க வேண்டும், அடுத்து, குழாய் மூலம் ஏவப்படும் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணைகளை ஏவ முடியும்.