பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
பெங்களூரு அணி (206/7, விராட் கோலி 51, ரஜத் படிதர் 50, காமரூன் கிரீன் 37*, டியு பிளேசிஸ் 25, ஜெயதேவ் உனக்தத் 3/30, நடராஜன் 2/39) ஹைதராபாத் அணியை (171/8, ஷபாஸ் அகமது 40*, அபிஷேக் ஷர்மா 31, பேட் கம்மின்ஸ் 31, கிரீன் 2/12, கரண் ஷர்மா 2/29, ஸ்வப்னில் சிங் 2/40) 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி (43 பந்துகளில் 51 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் டியு பிளேசிஸ் (12 பந்துகளில் 25 ரன்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர்.
டியு பிளேசிஸ் 3.5ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ஆடவந்த வில் ஜேக்ஸ் (9 பந்துகளில் 6 ரன்) சிறப்பாக ஆடவில்லை. ஆயினும் ரஜத் படிதர் (20 பந்துகளில் 50 ரன், 2 ஃபோர், 5 சிக்சர்) சிறப்பாக ஆடி 12.4ஆவது ஓவரில் அவுட்டானார். அவருடன் காமரூன் கிரீன் (20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 37 ரன், 5 ஃபோர்) இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மஹிபால் லோமர் (4 பந்துகளில் 7 ரன்), தினேஷ் கார்த்திக் (6 பந்துகளில் 11 ரன்), ஸ்வப்னில் சிங் (6 பந்துகளில் 12 ரன்) ஆகியோர் இன்று சிறப்பாக விலையாடவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுத்திருந்தது.
207 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ட்ராவிஸ் ஹெட் (1 ரன்) முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா 3.4ஆவது ஓவர் வரை ஆடி 31 ரன் சேர்த்தார்.
ஆனால் அடுத்தடுத்து வந்த பேட்டர்களான ஐடன் மர்க்ரம் (8 பந்துகளில் 7 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (13 பந்துகளில் 13 ரன்), கிளாசன் (3 பந்துகளில் 7 ரன்) ஆகியோர் இன்று சோபிக்கவில்லை. அதன் பின்னர் ஆடவந்த ஷாபாஸ் அகமது (37 பந்துகளில் 40 ரன்), அப்துல் சமது (6 பந்துகளில் 10 ரன்), பேட் கம்மின்ஸ் (15 பந்துகளில் 31 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), புவனேஷ்வர் குமார் (13 பந்துகளில் 13 ரன்) ஜெய்தேவ் உனக்தத் (10 பந்துகளில் 8 ரன்) ஆகியோரால் 20 ஓவர்களில் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியவில்லை.
இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 171 ரன் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
பெங்களூரு அணியின் ரஜத் படிதர் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
இராமர் கோயில், பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அழைப்பை, கொடுக்க வந்தார்கள். எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டார்கள். எனக்கு இத்தனை பெரிய பொறுப்பை அளிக்கிறார்களே, என்று நான் யோசிக்கத் தொடங்கினேன். என்னை நானே இதற்கு உகந்தவனாக ஆக்க என்ன செய்வது, தகுதியுடையவனாய் ஆவது எப்படி என்று சிந்தித்தேன். நான் சிலருடைய ஆலோசனைகளைக் கேட்டேன் சில புனிதர்களின்…… அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டேன். என்னுடைய ஆன்மீக வாழ்வோடு தொடர்புடைய சிலரிடமும் நான் வினவினேன். நான் இதை எல்லாம், ஒரு பிரதமர் என்ற வகையில எல்லாம், அணுகறதா இல்லை. ஒரு இராமபக்தன்ங்கற முறையில செய்ய விரும்பறேன். நான் என்ன செய்யட்டும்? அதில எனக்கு ஆலோசனைகள் வந்திச்சு. நிறையவே வந்திச்சு. அவற்றை நான் ஆய்வும் செஞ்சு பார்த்தேன்.
நான் பிறகு எனக்குள்ளே 11 நாள் அனுஷ்டானத்தைக் கடைப்பிடிக்கறதுன்னு தீர்மானிச்சேன். கட்டாந்தரையில உறங்கினேன். இளநீர் மட்டுமே பருகி வந்தேன். நான் தீர்மானிச்சேன், பிரபு ஸ்ரீ இராமன் எங்க எல்லாம் போனாரோ, அங்க எல்லாம் போவேன் போக நான் முயற்சி செய்வேன்னு தீர்மானிச்சேன்.
அந்த வகையில நான், அதாவது, திருவரங்கம் கோயிலுக்கு போனப்ப, தெற்கு பாரதத்தில, அங்க கம்ப ராமாயணம் படிக்க கேட்டேன். அப்ப அங்க இருந்தவங்க சொன்னாங்க…… அது 800 ஆண்டுகளுக்கு முன்பாக, கம்ப இராமாயணம் இயற்றப்பட்ட போது இந்த இடத்தில தான் அது முதன்முதலா அரங்கேற்றப்பட்டிச்சாம். அங்க எல்லார் கண்கள்லயும் கண்ணீர் இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த ஒரு….. அனுபவம் எனக்குக் கிடைத்ததே குறிப்பாக தென்னிந்தியாவில், இங்கே இருப்போருக்கு இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியாது.
என்ன ஒரு நம்பிக்கை என்ன ஒரு சமயப்பற்று!!! மேலும் அதில் எத்தனை புனிதத்தன்மை இருக்கிறது!! என்னுடைய நிகழ்ச்சியில் பெரிய திட்டமிடல் இல்லை அது தனிப்பட்டதாக இருந்தது. ஆனால், சாமான்ய மக்களினுடைய, ஒருவகையில் பார்த்தால், அவர்களுடைய உணர்வை என்னால் அனுபவிக்க முடிந்தது. என்னைப் பொறுத்த மட்டிலே, என்னுடைய ஆன்மீகப் பயணத்தின் ஒரு மிக மகத்துவமான காலகட்டமாக இந்த 11 நாட்களை நான் பார்க்கிறேன். நான் இராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டையை மிகத் தீவிரமாகக் கருதினேன். அதை ஒரு நிகழ்வாகவே நான் பார்க்கவில்லை. சாதாரண விஷயமல்ல அது.
கேள்வி: – அது உங்களைப் பொறுத்த மட்டிலே ஒரு ஆன்மீகக் கணம், இல்லையா?
பதில்: – 500 ஆண்டுக்காலப் போராட்டம் 140 கோடி நாட்டுமக்களின் சிரத்தை என் கண்களின் முன்பாக விரிந்தது. அவர்களின் கனவுகள், மேலும் தேசத்தின் பரம ஏழைகளும் கூட, கைக்காசு கொடுத்து ஆலயம் அமைந்திருக்கிறது அம்மா. இந்த ஆலயத்தில், 3 விஷயங்களை நான் காண்கிறேன். ஒன்று, 500 ஆண்டுக்கால, இடைவிடாத, தொடர்ந்த, ஒரே முனைப்பான போராட்டம். இலட்சக்கணக்கானோர் இதற்காகவே உயிர் இழந்திருக்கிறார்கள்.
இரண்டாவதாக, மிகநீண்ட நீதிமன்ற நடவடிக்கைகள். ஏகப்பட்ட ஆண்டுகள் நீதிமன்றச் செயல்பாடுகள். இப்படிப்பட்ட நீதிமன்றச் செயல்பாடுகளின் அனைத்துச் சோதனைகளிலும் சரிபார்க்கப்பட்டு வெளிவந்த தீர்ப்பு இது. அடுத்ததாக தொழில்நுட்பப் பயன்பாடு. ஏ எஸ் ஐ வாயிலாக….. புரியப்பட்ட அகழ்வாய்வு, ஆதாரங்கள், இது பெரிய விஷயம்.
மேலும் நான்காவதாக, இந்தியாவின் கோடானுகோடி குடிமக்களும் தங்களாலான பணத்தை அளித்து அனைவரின் பங்களிப்போடும், இந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் அரசுக் கருவூலத்திலிருந்து உருவாக்கப்பட்டது அல்ல. இது… இது எப்படிப்பட்ட முன்னெடுப்பு என்றால், இது நம் பாரதத்தினுடைய சுயமரியாதைக்கு பாரதத்தின் திறமைக்கு பாரதத்தின் கனவுகளுக்கு பாரதத்தின் சங்கல்பங்களுக்கு, மேலும் பாரதத்தின் வருங்காலத் தலைமுறைகளுக்கு, மிகப்பெரிய உத்வேகம் அளிக்கவல்லதாக இருக்கும்.
ஒரு தேசம் ஒரே தேர்தல் எங்களுடைய இலக்கு
நாட்டுமக்களிடமும் முதன்முறை வாக்காளர்களிடமும் என் வேண்டுகோள். நீங்கள் தேசத்திற்காக வாக்களியுங்கள். அரசியல் காரணங்களுக்காக அல்ல, தேசத்தின் பெயரால் வாக்களியுங்கள். உங்களுடைய அடுத்த 25 ஆண்டுக்கால எதிர்காலத்தின் பெயரால் வாக்களியுங்கள். இதுவே உங்களிடம் என் வேண்டுகோள். அடுத்து நான் நாட்டுமக்களிடம் கூற விரும்புவது மேலும், அனைத்து அரசியல்கட்சித் தொண்டர்களிடமும் கூற விரும்புவது, வெப்பம் மிகவும் தகிக்கிறது, இந்த வெப்பத்தில் அனைத்துக் கட்சித் தொண்டர்களும் பணியாற்றுகிறார்கள். அவர்களிடமெல்லாம் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன் நிறைய தண்ணீர் குடியுங்கள். நிறைய அலைந்தாலும் கூட நிறைய தண்ணீர் பருகுங்கள். இந்தக் கோடையில் இந்த வெப்பத்தில், வாக்காளர்களிடமும் விண்ணப்பிக்கிறேன். எத்தனை தான் வெப்பம் இருந்தாலும், நீங்கள், கண்டிப்பாக வாக்களியுங்கள். முடிந்தால்….. காலையில் சீக்கிரமாகவே சென்று வாக்களியுங்கள். மேலும் ஜனநாயகத்தின் உற்சவத்தைப் போலவே தேர்தல்களைக் கொண்டாடுங்கள். இதுவே நாட்டுமக்களிடம் என்னுடைய வேண்டுதல்கள்.
வினா – அடுத்த தேர்தல்களை நீங்கள் வசந்த காலத்தில் ஒரு தேசம் ஒரே தேர்தல்களின் போது செயல்படுத்துங்களேன்!!
விடை – நீங்கள் சரியான விஷயத்தை முன்வைத்திருக்கிறீர்கள். ஒரு தேசம் ஒரே தேர்தல், எங்களுடைய செயல்திட்டமாகும். நாங்கள் நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கிறோம். நாங்கள் குழுவையும் அமைத்திருக்கிறோம் அதன் அறிக்கையும் வந்து விட்டது. ஒரு தேசம் ஒரே தேர்தல் விஷயத்திலே, தேசத்திலே, பலர் உடன்பட்டிருக்கின்றார்கள். அனைத்துக் கட்சிகளும், பல பேர் இதிலே, குழுவுக்கு… அவர்கள், ஆலோசனைகள் அளித்திருக்கிறார்கள். மிகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள். மிக நூதனமான ஆலோசனைகள். நம்மால் இந்தக் குழுவின் பரிந்துரையை அமல் செய்ய முடிந்தால் தேசத்திற்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும்.
குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 1ஆம் தேதி மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்
குருவித்துறை குருபகவான்கோவில் குருபெயர்ச்சி விழா மே 1ம் தேதி குரு பகவான் மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு 29ஆம் தேதி திங்கள்கிழமை முதல் 1ஆம் தேதி புதன்கிழமை முடிய நடைபெற உள்ளது.
மதுரைமாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும்சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திரரதவல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார்.அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.
குரு பெயர்ச்சி விழா
ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்று ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது முன்னிட்டு குரு பெயர்ச்சி விழா சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெறும்.
இவ்விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகைபுரிந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள். இந்த ஆண்டு வருகிற 29ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30அளவில் லட்சார்ச்சனை தொடங்குகிறது 1 ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.அன்று மதியம் 3மணி அளவில் யாகசாலை தொடங்கி.5.21மணிக்குள் பரிகார மகாயாகம், மஹாபூர்ணாஹுதி, திருமஞ்சனம், சிறப்புபூஜைகள் நடைபெறுகிறது.
பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:
குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், மிதுனம்,சிம்மம், துலாம்,தனுசு,கும்பம் மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும்.
குரு பெயர்ச்சி முன்னிட்டு லட்சார்ச்சனைமற்றும் பரிகார செய்ய விரும்பும் ராசிக்காரர்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரூபாய் 200 மட்டும் செலுத்தும் பக்தர்களுக்கு மே 1ஆம் தேதி யாக சாலையில் முன் மதியம் 2 மணிக்கு மேல் 3 மணிக்குள் பெயர் ராசிக்கு சங்கல்பம் செய்யப்படும்.
இவர்களுக்கு மஞ்சள், குங்குமம், லட்டு, அதிரசம், முறுக்கு,சிறிய படம் பிரசாதமாக வழங்கப்படும். ரூபாய் 500 செலுத்தும் பக்தர்களுக்கு மே 2ம் தேதி முதல் மே 16ஆம் தேதி முடிய காலை 6 மணி முதல் 7:00 மணிக்குள் சிறந்த முறையில் குரு பகவான் சன்னதி முன்னிலையில் குரு பகவானுக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி செய்து பரிகார ராசிகளுக்கு தனித்தனியாக அர்ச்சனை செய்யப்படும்.
முன் பதிவு செய்யும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த தேதியில் நேரடியாக குருபகவான் சன்னதியில் பிரசாதம் வழங்கப்படும். குரு பகவான் சக்கரத்தாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி டாலர்1, மஞ்சள், குங்குமம்,பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
விழா ஏற்பாடுகள்
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி,சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ்,மற்றும் சுகாதாரத்துறை ஆகியோர் குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்துஆய்வு செய்து வருகின்றனர். குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி கோவில் பணியாளர்கள் நாகராஜன் மணி நித்தியா,ஜனார்த்தனன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது கூடுதலாக குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. குரு பெயர்ச்சி விழாவை பக்தர்கள் காணும் வண்ணம் எல்இடிதிரை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தரிசனத்திற்கு கூடுதல் நேரம்
குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அன்று இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி காலை 8 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பகல் 3.30மணி முதல் மாலை 6 மணி வரையும், வியாழக்கிழமை அன்று காலை 7.30மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 3:30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களுடைய வசதிக்காக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டி. குகேஷ் அல்லது தொம்மராஜு குகேஷ் (Dommaraju Gukesh, பிறந்த நாள் 29 மே 2006) இந்திய சதுரங்கப் பேராதன் ஆவார். சதுரங்க மேதையான இவர், வரலாற்றில் பேராதன் (கிராண்ட்மாஸ்டர்) பட்டத்திற்குத் தகுதி பெற்ற மூன்றாவது-இளையவர் ஆவார். அதுமட்டுமல்ல, 2700 என்ற சதுரங்க மதிப்பீட்டை எட்டிய மூன்றாவது-இளையவர்; 2750 மதிப்பீட்டை எட்டிய முதலாவது இளையவர் ஆவார். குகேஷ் 2024ஆம் ஆண்டின் வேட்பாளர் போட்டியில் (candidates Championship) வென்று, உலக சதுரங்க வாகையாளர் (World Chenns Championship) பட்டத்திற்காகப் போட்டியிடும் இளைய போட்டியாளர் ஆனார்.
குகேஷ் சென்னையில் 2006 மே 29 அன்று பிறந்தார். இவரது குடும்பத்தினர் ஆந்திரப் பிரதேசம், கோதாவரி வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தந்தை ரஜனிகாந்த் ஒரு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்; தாயார் பத்மா ஒரு நுண்ணுயிரியலாளர் ஆவார். குகேஷ் தனது ஏழு வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார். சென்னை மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்தியாலயத்தில் படிக்கிறார்.
குகேசு 2015ஆம் ஆண்டு 9 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியப் பள்ளிகளின் சதுரங்க வாகைப் போட்டியில் வென்றார், 2018இல் 12 அகவைக்குட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க வாகையை வென்றார். அத்துடன் 2018 ஆசிய இளையோர் வாகைப் போட்டிகளில், 12 வயதிற்குட்பட்டோருக்கான தனிநபர் மின்வல்லு, விரைவுவல்லு, தனிநபர் மரபு வல்லு வடிவங்களில் (U-12 team rapid and blitz, and the U-12 individual classical formats) ஐந்து தங்கப் பதக்கங்களையும் வென்றார். மார்ச் 2018 இல் 34-ஆவது கேப்பல்-லா-கிராண்டே திறந்த சுற்று பன்னாட்டுப் பேராதன் பட்டத்திற்கான தேவைகளை நிறைவு செய்தார்.
குகேஷ் 2019 சனவரி 15 அன்று 12 ஆண்டுகள், 7 மாதங்கள், 17 நாட்களில் வரலாற்றில் இரண்டாவது இளைய சதுரங்கப் பேராதன் ஆனார். 2021 சூனில், யூலியசு பேயர் சேலஞ்சர்சு (Julius Baer Challengers Chess Tour, Gelfand Challenge) சுற்றில், 19 இல் 14 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், குகேஷ் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியை 8/8 என்ற நேர்த்தியான மதிப்பெண்களுடன் தொடங்கினார், 8-ஆவது போட்டியில் இந்தியா-2 அணியை தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவைத் தோற்கடிக்க உதவினார். குகேசு 11 க்கு 9 மதிப்பெண்களுடன் முடித்து, முதலாவது பலகையில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
செப்டெம்பர் 2022 இல், குகேசு முதற்தடவையாக 2700 என்ற தரவுப்புள்ளியைத் (2726) தாண்டி, வெய் யி, அலிரெசா பிரூஜா ஆகியோருக்குப் பிறகு 2700 தரவுப்புள்ளியைக் கடந்த மூன்றாவது இளைய வீரராக ஆனார். அக்டோபர் 2022 இல், ஏம்செஸ் விரைவு வல்லுப் போட்டியில் உலக வாகையாளரான மாக்னசு மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளைய வீரர் ஆனார்.
பெப்ரவரி 2023இல், குகேஷ் தியூசல்டார்ஃபில் நடந்த WR மாசுட்டர்சு போட்டியின் முதல் பதிப்பில் பங்கேற்று, 5½/9 புள்ளிகளுடன், லெவன் அரோனியன், இயன் நெப்போம்னியாச்சியுடன் முதல் இடத்தைப் பிடித்தார். சமன்முறியில் அரோனியனுக்கு அடுத்தபடியாக குகேசு வந்தார். ஆகத்து 2023 தரவரிசைப் பட்டியலில், குகேஷ் 2750 மதிப்பீட்டை எட்டிய இளம் வீரர் ஆனார்.
குகேசு சதுரங்க உலகக் கோப்பை 2023 சுற்றில் பங்கேற்று, மாக்னசு கார்ல்சனிடம் தோல்வியடைவதற்கு முன்னர் காலிறுதிக்கு வந்தார். செப்டம்பர் 2023 தரவரிசைப் பட்டியலில், குகேசு அதிகாரப்பூர்வமாக விசுவநாதன் ஆனந்தை முந்தி முதலிடத்தில் உள்ள இந்திய வீரராக இருந்தார்.
திசம்பர் 2023இல், 2023 பிடே சர்க்கியூட் சுற்றின் முடிவில் குகேஷ் 2024 உலக வாகையாளருக்கான வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெற்றார். குகேஷ் சர்க்யூட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், ஆனால் வெற்றியாளரான பாபியானோ கருவானா ஏற்கனவே 2023 உலகக் கோப்பையின் மூலம் வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். குகேஷ், பாபி ஃபிஷர், மாக்னசு கார்ல்சன் ஆகியோருக்குப் பிறகு, வேட்பாளர் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளைய வீரர் ஆனார்.
2024 வேட்பாளர் சுற்றில் “குகேசு எதிர் பிரூசா”
சனவரி 2024இல், குகேஷ் 2024 டாட்டா ஸ்டீல் சதுரங்கப் போட்டியில் பங்கேற்று, 13 ஆட்டங்களில் (6 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி) 8.5 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தைப் பிடித்தார். 12-ஆவது சுற்றில், ர. பிரக்ஞானந்தாவுக்கு எதிராக வெற்றிபெறும் நிலையைப் பெற்றார், ஆனால் மூன்று முறை மீண்டும் மீண்டும் தவறு செய்தார். சமன்முறிகளில் (tie-breakers) குகேசு அரையிறுதியில் அனிஷ் கிரியைத் தோற்கடித்தார், ஆனால் இறுதிப் போட்டியில் வெய் யியிடம் (Wei Yi ) தோற்றார்.
2024 வேட்பாளர் சுற்று
இந்த வருடம் இந்த ஏப்ரலில், குகேஷ் கனடா, தொராண்டோவில் நடைபெற்ற 2024 உலக வாகையாளருக்கான வேட்பாளர் சுற்றில் பங்கேற்றார். குகேஷ், சக நாட்டு வீரர்களான ரமேஷ்பாபு, பிரக்ஞானந்தா, விதித் குசராத்தி ஆகியோருக்கு எதிராகக் கறுப்புக் காய்களுடனும், அலிரேசா பிரூச்சாவுடன் (Alireza Firouzja) வெள்ளைக் காய்களுடனும், நிசாத் அபாசோவுடன் (Nijat Abasov) வெள்ளைக் காய்களுடனும் விளையாடி வெற்றி பெற்றார். பிரூச்சாவுடன் கறுப்புக் காய்களுடன் விளையாடியதே அவரது ஒரே இழப்பு. இது அவருக்கு 5 வெற்றிகள், 1 தோல்வி, 8 சமன்களைக் கொடுத்து, 9/14 என்ற மதிப்பெண்ணுடன், சுற்றை வென்றார். இதன் மூலம், 2024 நவம்பரில் நடக்கும் உலக வாகையாளர் போட்டியில் நடப்பு வாகையாளர் திங் லிரேனுடன் மோதுவதற்குத் தகுதி பெற்றுள்ளார். உலக சதுரங்க வாகையாளர் போட்டியில் விளையாடும் இளைய வீரர் இவர் ஆவார்.
கேண்டிடேட் செஸ் தொடரின் போக்கு
உலக சாம்பியனுடன் விளையாட உள்ள வீரரை தேர்வு செய்யும் கேண்டிடேட் செஸ் தொடர் கனடாவின் டொராண்டா நகரில் நடைபெற்றது. 14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் தனது கடைசி சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 71ஆவது காய் நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார்.
இதன் மூலம் 9 புள்ளிகளுடன் குகேஷ்முதலிடத்தில் இருந்தார். எனினும் அவர்,பட்டம் வெல்வது என்பது ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் மோதிய ஆட்டத்தின் முடிவை பொறுத்தே இருக்கும் என்ற சூழ்நிலை இருந்தது.
ஏனெனில் இவர்களில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றாலும் அவர், 9 புள்ளிகளுடன் முதலிடத்தை குகேஷுடன் பகிர்ந்து கொள்ளக்கூடும். இந்த நிலை உருவானால் வெற்றியாளர் யார்? என்பதை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்படும்.
இதனால் நெபோம்னியாச்சி, ஃபேபியானோ கருனா ஆட்டம் மிகுந்தபரபரப்பை உருவாக்கியது. குகேஷ் ஆட்டம் முடிவடைந்த பின்னர் மேற்கொண்டு 15 நிமிடங்கள் வரை நெபோம்னியாச்சி, ஃபேபியானோ கருனா மோதிய ஆட்டம் தொடர்ந்தது. பலமுறை ஃபேபியானோ கருனா வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்தார்.
ஆனால், 39-வது காய் நகர்த்தலின் போது அவர், செய்த தவறால் நெபோம்னியாச்சி தனது நிலையை தக்கவைத்தார். இதன் பின்னர் மீண்டும் தனது ஆட்டத்தை கட்டியெழுப்பிய ஃபேபியானோ கருனா வெற்றிக்கு அருகே நெருங்கினார். ஆனால் அதற்குள் நேரம் கடந்துவிட்டது. முடிவில் ஆட்டம் டிரா ஆனது.
இதனால், 17 வயதான டி.குகேஷ் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சுமார் ரூ.78.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.
40 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதற்கான ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ள இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்துள்ளார். இந்த வகையில் 1984ஆம் ஆண்டு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் தனது 22 வயதில் உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடி இருந்தார். தற்போது குகேஷ் தனது 17ஆவது வயதில் உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடுவார்.
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றுள்ளதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான ஆட்டத்தில் குகேஷ், சீனாவின் டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் மோத உள்ளார். இந்த போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
சாதிக்க வித்திட்ட 7ஆவது சுற்று தோல்வி
கேண்டிடேட்ஸ் தொடரில் பட்டம் வென்ற பின்னர் டி.குகேஷ் கூறியதாவது: ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியதாக நான் உணர்ந்தேன், ஆனால் அலிரேசாவுக்கு எதிரான 7ஆவது சுற்றில் தோல்விடைந்த பிறகு, மிகவும் வருத்தப்பட்டேன். அந்த தோல்வி வேதனையாக இருந்து.
ஆனால் அடுத்த நாள் ஓய்வு இருந்தது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு உதவியாக இருந்தது. மேலும் அந்த தோல்வி எனக்கு ஆற்றலையும் உந்துதலையும் கொடுத்தது. தோல்விக்குப் பிறகு சரியானதைச் செய்தால், சரியான மனநிலையில் இருந்தால் வெற்றி பெற முடியும் என்று உணர்ந்தேன்.
ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றிருந்தாலும் முதலிடத்தை என்னுடன் பகிர்ந்திருப்பார்கள். இதன் பின்னர் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டத்தில் விளையாட வேண்டிய நிலை உருவாகி இருக்கும்.
இதனால் டைபிரேக்கர் ஆட்டத்துக்கு தயாராக இருந்தேன். இதுதொடர்பாக எனது பயிற்றுனருடன் ஆலோசித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் நாங்கள் விவாதிக்கத் தொடங்கிய உடனேயே அது தேவையில்லை என்பதை நாங்கள் அறிந்தோம்.
உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைப் பற்றி சிந்திக்க எனக்கு அதிக நேரம் இல்லை. எனினும் அந்த போட்டிக்கு நாங்கள் மேற்கொள்ள உழைப்புகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். விஸ்வநாதன் ஆனந்த், என்னை வாழ்த்தினார். அவருடன் பேச எனக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் விரைவில் அவரை தொடர்பு கொள்வேன்.
என் பெற்றோரிடம் பேசினேன், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனது பயிற்சியாளர், ஸ்பான்சர் மற்றும் சில நண்பர்களுடன் சிறந்த முறையில் நேரத்தை செலவிட்டேன். நிறைய பாராட்டுகள் குறுந்தகவல்களாக வந்துள்ளன. அவற்றுக்கு பதிலளிக்கவும், எனது நண்பர்களுடன் பேசவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். தற்போது சில நாட்கள் ஓய்வெடுக்கப் போகிறேன், கடந்த மூன்று வாரங்களாக போட்டி மிகவும் மன அழுத்தத்தை தந்தது.
ஓய்வுக்கு பின்னர் உலக சாம்பியன்ஷிப் போட்டியைப் பற்றி சிந்திப்பேன், விஷயங்களை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்துத் திட்டமிடுவேன். பொதுவான திட்டம் என்பது சிறந்த ஆட்டத்தை விளையாடுவதில் கவனம் செலுத்துவதுதான். மேலும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு குகேஷ் கூறினார்.
தியாகம் செய்த பெற்றோர்
செஸ் உலகில் குகேஷ் சிகரங்களை அடைவதற்கு அவரது பெற்றோர் செய்த தியாகங்களும் நினைகூரப்பட வேண்டியது அவசியம். குகேஷின் தந்தை ரஜினிகாந்த் காது, மூக்கு, தொண்டை நிபுணர், தாய் பத்மா நுண்ணுயிரியலாளர் ஆவார்கள். 2017-18ம் ஆண்டு குகேஷ், கிராண்ட் மாஸ்டர் நார்ம் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் இருந்ததால் உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் பங்கேற்க வேண்டி இருந்தது.
இதனால் ரஜினிகாந்த் தனது பணியை நிறுத்திவிட்டு மகனுடன் பயணிக்கத் தொடங்கினார். இதனால் வீட்டு செலவுகளை அவரது தாய் பத்மா கவனிக்க வேண்டிய நிலை உருவானது. பல நாட்கள் இவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ள முடியாத நிலை கூட இருந்துள்ளது. இவர்களது தியாகங்களின் பலனாக குகேஷ் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு 12 வயது 17 நாட்கள்.
இதன் மூலம் அவர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். மேலும் குகேஷின் பயணத்துக்காக சேமித்து வைத்திருந்த மொத்த தொகையையும் அவரது பெற்றோர் செலவழிக்க நேர்ந்தது.
மேற்கொண்டு நிதி தேவைப்பட்ட நிலையில் விஸ்வநாதன் ஆனந்த் அகாடமி வழியாக அதற்கான உதவியும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து குகேஷின் பயணம் ஏறுமுகமானது. தற்போது உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடும் இளம் சாலஞ்சராக உருவெடுத்துள்ளார்.
பிரதமர் பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை படைத்த டி.குகேஷ் பற்றி இந்தியா பெருமிதம் கொள்கிறது. குகேஷின் சாதனை அவரின் அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. அவரது சிறந்த செயல்திறன், வெற்றியை நோக்கிய பயணம் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
India is exceptionally proud of @DGukesh on becoming the youngest-ever player to win the #FIDECandidates!
Gukesh's remarkable achievement at the Candidates in Toronto showcases his extraordinary talent and dedication.
மகளிருக்கான கேண்டிடேட்ஸ் தொடரில் சீனாவின் ஸோங்ஸி டான் 9 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய கிராண்ட் மாஸ்டர்களான கொனேரு ஹம்பி, ஆர். வைஷாலி, சீனாவின் டிங்ஜேய் லெய் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். கொனேரு ஹம்பி கடைசி சுற்றில் சீனாவின் டிங்ஜேய் லெயையும் ஆர். வைஷாலி, ரஷ்யாவின் கேத்ரினா லக்னோவையும் தோற்கடித்தனர்.
கேண்டிடேட்ஸ் தொடரில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ரஷ்யாவின் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் 2 முதல் 4-வது இடங்களை பிடித்தனர். இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்தார். அவர், தனது கடைசி சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபசோவை தோற்கடித்தார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தார். விதித் குஜராத்தி தனது கடைசி சுற்றில் பிரான்ஸின் ஃபிரோஸ்ஜா அலிரேசாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்திருந்தார். ஃபிரோஸ்ஜா அலிரேசா 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தையும், நிஜாத் அபசோவ் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.
டெல்லி அணி (224/4, ரிஷப் பந்த் 88*, அக்சர் படேல் 66, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 26*, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 23, பிருத்வி ஷா 11, சந்தீப் வாரியர் 3/15) குஜராத் அணியை (220/8, சாய் சுதர்ஷன் 65, டேவிட் மில்லர் 55, விருத்திமான் சாஹா 39, ரஷீத்கான் 21*, சாய் கிஷோர் 13 ரசிக் கான் 3/44, குல்தீப் யாதவ் 2/29) 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. டெல்லிய அணியின் தொடக்க வீரர்களாக ப்ருத்வி ஷா (11 ரன்) மற்றும் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (14 பந்துகளில் 23 ரன்) இருவரும் களமிறங்கினர். ஷா 3.5ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
அவருக்குப் பின்னர் ஆடவந்த அக்சர் படேல் (43 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். ஆயினும் ஷாய் ஹோப் (5 ரன்) 5.4ஆவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் ரிஷப் பந்த் (43 பந்துகளில் 88 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (7 பந்துகளில் 26 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
கடைசி ஓவரில் ரிஷப் பந்த் 4 சிக்சரும் ஒரு ஃபோரும் அடித்தார். அந்த ஓவரில் மொத்தம் 31 ரன் அடிக்கப்பட்டது. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கட் இழப்பிற்கு 224 ரன் எடுத்திருந்தது.
2225 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் (6 ரன்) இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான விருத்திமான் சாஹா 9.4ஆவது ஓவர் வரை ஆடி 39 ரன் சேர்த்தார். அவருடன் சாய்சுதர்ஷன் (39 பந்துகளில் 65 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று டேவிட் மில்லர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் 23 பந்துகளில் 55 ரன் எடுத்தார்; அதில் 6 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள் அடக்கம். அசமத்துல்லா ஒமர்சாய் (1 ரன்), ஷாருக் கான் (8 ரன்), ராகுல் திவாத்தியா (4 ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை. 17ஆவது ஓவர் தொடக்கத்தில் விளையாட வந்த ரஷீத் கான் இறுதி வரை வெற்றிக்கு முயற்சி செய்தார்.
20ஆவது ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஷீத்கான் இரண்டு ஃபோர்கள் ஒரு சிக்சர் அடித்தார். அதனால் கடைசிப் பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்தப் பந்தில் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 220 ரன் மட்டுமே எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
டெல்லி அணியின் அனித்தலைவர் ரிஷப் பந்த் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
கேள்வி – ஒரு வினா தேர்தல் பத்திரங்கள் தொடர்பானது. ராகுல் காந்தி எங்கு சென்றாலும் சரி அனைத்து உரைகளிலும் கூறுகிறார், அதே போல மற்ற எதிரணித் தலைவர்களுமே சரி, இது கோளாறாக இருக்கிறது என்கிறார்கள். உங்கள் கட்சிக்காரர்களுமே கூட இதில் தவறு ஏதும் இருப்பின் இதைச் சரி செய்து கொள்ளலாமே என்கிறார்கள். தேர்தல் பத்திரங்கள் தவறான முடிவா?
பிரதமர் மோடியின் பதில் – முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. தேசத்தின் தேர்தல்களை கருப்புப் பணத்திலிருந்து விடுதலை அளிக்கும் விவாதம் பல காலமாகவே நடைபெற்று வருகிறது. தேர்தல்களிலே… செலவு என்னவோ நடக்கத் தான் செய்கிறது. யாரும் இதை மறுக்கவில்லையே!! என் கட்சியும் செய்கிறது அனைத்துக் கட்சிகளும் செய்கின்றன வேட்பாளர்களும் செய்கின்றார்கள்.
இந்தப் பணத்தை, மக்களிடமிருந்து தான் பெற வேண்டியிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் பெறுகின்றன. நான் என்ன விரும்பினேன் என்றால் முயன்று பார்க்கலாமே. அதாவது இந்தக் கருப்புப் பணத்திலிருந்து, நம்முடைய தேர்தல்களை எப்படி விடுவிப்பது? ஒளிவுமறைவற்ற நிலையை ஏற்படுத்துவது. அடிப்படையான பவித்திரமான ஒரு எண்ணம் என் மனதில் ஒலித்தது.
வழிகளைத் தேடிக் கொண்டிருந்தோம். ஒரு எளிய வழி கிடைத்தது… இதுவே நிறைவான வழி என்று நான் அப்போதுமே கூறவில்லை. நாடாளுமன்றத்திலே விவாதங்களின் போது பலர் இதைப் பாராட்டினார்கள். இன்று முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவோர் பலரும் மெச்சினார்கள். நீங்கள் நாடாளுமன்ற விவாதங்களை எடுத்துப் பாருங்கள்.
எங்கள் பணி எப்படி இருந்தது என்றால், நாங்கள் 1000-2000 ரூபாய்களுக்கு முடிவு கட்டினோம். தேர்தல்களிலே இவை தாம் பெரியபெரிய எண்ணிக்கையில், கைமாறுகிறது. ஏன்? இந்தக் கருப்புப் பணத்துக்கு முடிவு கட்ட வேண்டும். நாங்கள், உச்சநீதிமன்றத்திலும் கூறினோம், அதாவது 20000 ரூபாய் வரை, அரசியல் கட்சிகள் ரொக்கமாக பணம் பெறலாம்.
நாங்கள் சட்டமியற்றினோம், விதிமுறை அமைத்தோம், 20000த்தை 2500ஆக ஆக்கினோம். ஏன்? ஏனென்றால் இந்த ரொக்கமாக வாங்குவதை நான் விரும்பவில்லை. அதன் பிறகு தேர்தல் பத்திரம் பற்றிக் கூறினேன். அதாவது… எந்தக் கட்சி அதை, ரகசியமாக வைக்க விரும்புகிறதோ, ஆனால் என்ன நடந்தது என்றால், நாங்கள் முன்பெல்லாம் பாஜகவில், காசோலை மூலமாகப் பணம் பெற்று வந்தோம்.
அப்போது வியாபாரிகள் எல்லாம் வந்து எங்களால் காசோலையில் பணம் தரவே முடியாது என்றார்கள். ஏன் முடியாது என்று கேட்டோம். காசோலையில் அளித்தால் நாங்கல் எழுத வேண்டியிருக்கும். நாங்கள் எழுதினால் அரசாங்கம் அதை கவனிக்கும். அதாவது இவர்கள் எதிரணிக்கு இத்தனை பணம் தந்திருக்கிறார்கள் என்று. எங்களுக்குப் பிறகு அவர்கள், நெருக்கடி தருவார்கள். நாங்கள் என்னவோ….. பணம் தரத் தயாராக இருக்கிறோம் ஆனால் காசோலை மூலம் அல்ல என்றார்கள். எனக்கு நினைவிருக்கிறது அப்போது, 90களில் நடந்த தேர்தலில் எங்களுக்குப் பெரிய சங்கடம் ஏற்பட்டது. பணம் எங்களிடம் இல்லை. நாங்களோ விதிமுறை ஏற்படுத்தி காத்திருந்தோம், நாங்கள் காசோலை மட்டுமே பெறுவோம் என்று. அளிப்பவர் அளிக்கத் தயார் ஆனால் காசோலை மூலம் அல்ல தைரியம் இல்லை.
இந்த விஷயங்கள் அனைத்தையும் நான் அறிவேன். எனக்கு தெரியும். என்ன செய்யலாம்னு யோசிச்சோம். இங்க பாருங்க, தேர்தல் பத்திரம் இல்லைன்னு சொன்னா, பணத்தோட ஆதாரத்தைக் கண்டுபிடிக்க எந்த அமைப்பால முடியும்? அதாவது எங்கிருந்து பணம் வந்திச்சு எங்க போச்சுன்னு? இது தான் தேர்தல் பத்திரத்தோட வெற்றிக் கதை. அதாவது தேர்தல் பத்திரம் இருக்கறதால, பணத்துக்கான ஆதாரம் கிடைக்குது.
எந்தக் கம்பெனி கொடுத்தது, எப்படிக் கொடுத்தார்கள் எங்கே கொடுத்தார்கள்? அது சரியா தவறா என்பது விவாதப் பொருளாக ஆகலாம். இதைப் பற்றி விவாதிக்கலாம். என் கவலையெல்லாம், நான், நான் எப்போதுமே கூறுவதில்லை, தீர்மானத்திலே குறைபாடு உள்ளதென்று. தீர்மானிக்கிறோம், அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்கிறோம், மேம்படுத்துகிறோம். இதிலும் கூட மேம்பாட்டுக்கான பல வாய்ப்புகள் இருக்கின்றது. ஆனால், நாம் இன்று கருப்புப்பணத்தின் பால் தேசத்தைத் தள்ளியிருக்கிறோம்.
ஆகையால் தான் கூறுகிறேன் அனைவரும் வருத்தப்படுவார்கள். நேர்மையாக நாம் நினைத்தோம் என்றால் அனைவருக்கும் வருத்தம் தான் மிஞ்சும். இன்னொரு விஷயம். தேர்தல் பத்திரம் தொடர்பாக பேசப்பட்டு வரும் இன்னொரு பொய்யுரை. தேசத்திலே மொத்தம் 3000 கம்பெனிகள், தேர்தல் பத்திரங்கள் அளித்திருக்கின்றன. அந்த 3000த்திலே, 26 கம்பெனிகள் எப்படிப்பட்டவை என்றால், இவை மீது நடவடிக்கை உள்ளது. ஈடி போன்ற அமைப்புகள் என்கிறார்கள் இல்லையா? 3000 கொடையாளிகளில் வெறும் 26. மேலும் அவற்றிலே, 16 கம்பெனிகள் எப்படிப்பட்டவை? சோதனை நடந்த போது, அப்போது பத்திரங்களை வாங்கினார்கள். இதை இணைத்துப் பார்க்கலாம்.
பத்திரங்களை வாங்கினார்கள் என்றால், இதை இணைத்துப் பார்க்கிறார்கள். இதன் சிறப்புத்தன்மை என்னவென்றால், இதிலே பத்திரங்களை வாங்கிய 16 கம்பெனிகள், அதிலே 37 பைசா அளவு தொகை, பாஜகவிற்கு கொடையாகக் கிடைத்திருக்கிறது. 37. 63 சதவீதம், பாஜகவின் எதிரணிக் கட்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது.
வினா – அதாவது முழுவதுமாக இணைத்துப் பார்த்தால்?
விடை – அதாவது, இந்த 16 கம்பெனிகள் இவற்றின் மேல், ஈடி சிபிஐ ஆகியவற்றின் நடவடிக்கைகளும் நடந்தன பத்திரங்களும் வாங்கின. 37 சதவீதம் பாஜகவிற்கும் 63 சதவீதம் எதிர்க்கட்சிகளுக்கும்.
ஆமாம், ஈடி சோதனை நடத்தும், ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு தொடர்ந்து நன்கொடை அளிக்கும்? இப்படி பாஜக செய்யுமா? இதன் அர்த்தம் என்னவென்றால், 63 சதவீதம் தொகை எதிர்க்கட்சிகளுக்குச் சென்றது, ஆனால் குற்றச்சாட்டை எங்கள் மீது வீசுகிறார்கள். அவர்களுக்கென்ன தூற்றிவிட்டு ஓடிவிட வேண்டும் அவ்வளவு தானே?
சென்னை அணியை (210/4, ருதுராஜ் கெய்க்வாட் 108*, ஷிவம் துபே 66) லக்னோ அணி (19.3 ஓவரில் 213/4, மார்கஸ் ஸ்டோயினிஸ் 124*, நிக்கோலஸ் பூரன் 34, தீபக் ஹூடா 17*, கே.எல். ராகுல் 16, பதிரனா 2/35) 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்று சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்க்யா ரஹானெ (1 ரன்) மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் (ஆட்டமிழக்காமல்108 ரன்) இருவரும் களமிறங்கினர். ரஹானே முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.
அவருக்குப் பின்னர் ஆடவந்த டாரில் மிட்சல் (11 ரன்) மற்றும் ரவீந்தர் ஜதேஜா (16 ரன்) இன்று சோபிக்கவில்லை. அதன் பின்னர் ஷிவம் துபே (27 பந்துகளில் 66 ரன், 3 ஃபோர், 7 சிக்சர்) ருதுராஜுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
தோனி கடைசி இரண்ட்டு பந்துகள் இருக்கும்போது ஆடவந்தார், கடைசி பந்தில் ஒரு ஃபோர் அடித்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 4 விக்கட் இழப்பிற்கு 210 ரன் எடுத்திருந்தது.
211 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த லக்னோ அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான க்விண்டன் டி காக் (பூஜ்யம் ரன்) முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான கே.எல் ராகுல் 4.4ஆவது ஓவர் வரை ஆடி 16 ரன் சேர்த்தார்.
அதன் பின்னர் ஆடவந்த மார்கஸ் ஸ்டோயினிஸ் கடைசி வரை விளையாடி 124 ரன்கள் (13 ஃபோர், 6 சிக்சர்) அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அவருக்கு தேவதத் படிக்கல் (13 ரன்), நிக்கோலஸ் பூரன் (34 ரன்) மற்றும் தீபக் ஹூடா (17 ரன்) மூவரும் துணைநின்றனர். இதனால் லக்னோ அணி 19.3 ஓவரில் 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வெற்றி கொண்டது.
லக்னோ அணியின் மட்டையாளர் மார்கஸ் ஸ்டோயினிஸ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
மும்பை அணியை (176/9, திலக் வர்மா 65, நெஹல் வதேரா 49, முகம்மது நபி 23, சந்தீப் ஷர்மா 5/18) ராஜஸ்தான் அணி (18.4 ஓவரில் 183/1, யஸஷ்வீ ஜெய்ஸ்வால் 104*, ஜாஸ் பட்லர் 35, சஞ்சு சாம்சன் 38) 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 6 ரன்) மற்றும் இஷான் கிஷன் (பூஜ்யம் ரன்) இருவரும் இரண்டாவது ஓவருக்குள் ஆட்டமிழந்து ஒரு மோசமான தொடக்கத்தைத் தந்தனர். அவர்களுக்குப் பின்னர் அதிரட் ஆட்டக்காரரான சூர்ய குமார் யாதவ் (10 ரன்) 3.1ஆவது ஓவரில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி தந்தார். பவர் பிளே முடிவில் மும்பை அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 45 ரன் எடுத்திருந்தது.
பத்தாவது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 72/4 ஆக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் திலக் வர்மா (45 பந்துகளில் 65 ரன், 5 ஃபோர், 3 சிக்சர்), முகம்மது நபி (17 பந்துகளில் 23 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), நெஹல் வதேர (24 பந்துகளில் 49 ரன், 3 ஃபோர், 4 சிக்சர்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி சற்று நல்ல நிலைக்கு வந்தது. ஆனால், ஹார்திக் பாண்ட்யா (10 ரன்), டிம் டேவிட் (5 பந்துகளில் 3 ரன்), கோயட்சி (பூஜ்யம் ரன்), பியுஷ் சாவ்லா (1 ரன்), பும்ரா (1 ரன்) என மீதமுள்ள அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடாததால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 179 ரன் எடுத்தது.
180 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான யஸஷ்வி ஜெய்ஸ்வால் (60 பந்துகளில் 104 ரன், 9 ஃபோர், 7 சிக்சர்) ஆட்டமிழக்காமல் 18.1ஆவது ஓவர் வரை ஆடினார். மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் 7.6ஆவது ஓவர் வரை ஆடி 35 ரன் சேர்த்தார். அதன் பின்னர் ஜெய்ஸ்வாலுடன் இணைந்த அணித்தலைவர் சஞ்சு சாம்சன் (28 பந்துகளில் 38 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடி ராஜஸ்தான் அணிக்கு 18.4 ஓவரில் ஒரு விக்கட் இழப்பிற்கு 183 ரன் எடுக்க உதவினார். இதனால் ராஜஸ்தான் அணி 9 விக்கட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை வெற்றி கொண்டது.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் சந்தீப் ஷர்மா தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் ஏப்.19 அன்று நடைபெற்ற முதல்கட்ட மக்களவைக்கான தேர்தலில் ஓட்டுப்பதிவு சதவீதத்தில் 3 முறை மாற்றம் செய்யப்பட்டது அரசியல் கட்சியினரிடமும் ஊடகத்தினரிடமும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட தமிழக அரசுப் பணியாளர்கள் மீது பலரும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசு ஊழியர்கள் திமுக.,வுக்கு ஊழியம் பார்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்தக் குளறுபடிக்கு, ‘ஓட்டுப்பதிவு சதவீதத்தை ஒருசிலரே செயலியில் பதிவிட்டதுதான் காரணம்’ என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ புதிதாக ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், தேர்தல் முடிந்த அதே நாள் மாலை, முதலில் 72 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ அறிவித்தார். இதனால் வாக்குகள் அதிகம் பதிவானதாக ஊடகங்களில் விவாதங்கள் களை கட்டின. இதனால் அது மாநிலத்தில் ஆளும் கட்சி கூட்டணிக்கு பாதகமாக இருக்கக் கூடும் என்றும், மாநில ஆளும் கட்சியான திமுக.,வுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் அதிக அளவில் விழுந்ததுதான் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் 69.46 சதவீதம் ஓட்டுகளே பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இரு வேறு தகவல்களால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்தக் குழப்பம் அடங்குவதற்குள் ஏப்.21 நேற்று மதியம், 69.72 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக 3வது முறையாக தேர்தல் ஆணையம் மாற்றி அறிவித்தது. பொதுவாக, முதலில் அறிவிக்கப்பட்ட வாக்கு சதவீதத்தில் இருந்து 2 சதவீதத்துக்கும் குறைவாகவே பிழைகள் இருக்கும் என்பது நியதி. அவ்வாறு 2 சதத்துக்கும் அதிகமாக பிழை இருக்குமானால் வாக்குப் பதிவு குளறுபடியானதாகவே பார்க்கப்படும்.
இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவில் இவ்வளவு குளறுபடிகள் நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அப்போது அவர் கூறியவை: வாக்குப்பதிவு சதவீதத்தில் ஏற்பட்ட வேறுபாடுக்கு செயலியே காரணம். செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி ஏற்பட்டுள்ளது. செயலியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இதனால் சிலர் மட்டுமே அப்டேட் செய்தனர். தேர்தல் அதிகாரி கையொப்பமிட்ட தகவல் வர தாமதமாகும் என்பதால் செயலி மூலம் கிடைத்த தகவல்களை ஊடகங்களுக்கு அப்டேட் செய்தோம்… என்று சத்ய பிரதா சாஹூ விளக்கமளித்தார்.
அப்படி என்றால், செயலியில் வாக்குப்பதிவு சதவீதத்தைப் பதிவும் முன்னரே, அதாவது ஒருசிலர் வாக்குபதிவு சதவீதத்தை செயலியில் அப்டேட் செய்யும் முன்னரே பெற்ற தகவல்களின் அடிப்படையில் முதலில் அறிவிக்கப்பட்டதென்றால், அது முதலில் குறைவாகவும், செயலியில் அனைத்து வாக்குச்சாவடி தகவல்களும் அப்டேட் செய்யப்பட்ட பின்னர் வாக்குப் பதிவு சதவீதம் அதிகரித்தும் இருப்பதுதானே நியாயமானது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
தேர்தல் முடியும் நேரத்தில் மாலை 5 முதல் 6 மணி வரையிலாக கடைசி ஒரு மணி நேரத்தில், அதிக அளவில் வாக்குப் பதிவு நடந்தது பெரும் சந்தேகத்தை கிளப்பியது. திமுக.,வினர் கள்ள வாக்குகள் பதிவு செய்ததாக பலரும் சந்தேகம் எழுப்பினர். இதனால் வாக்குப் பதிவு சதவீதம் உயர்ந்ததாகவும் கூறப்பட்டது.
தமிழக வாக்குப்பதிவு 69.72% 3வது முறையாக மாறியது!
3வது முறையாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, அதிகபட்சமாக தர்மபுரியில் 81.20%, குறைந்தபட்சம் மத்திய சென்னையில்53.96 % வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளன என இந்திய தேர்தல் ஆணையம் மாற்றி வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வாக்கு சதவீதம் தொகுதி வாரியாக…
தொகுதி- வாக்குப்பதிவு சதவீதம்
* திருவள்ளூர் – 68.59 * வடசென்னை – 60.11 * தென்சென்னை- 54.17 * மத்திய சென்னை – 53.96 * ஸ்ரீபெரும்புதூர் – 60.25 * காஞ்சிபுரம்- 71.68 * அரக்கோணம் – 74.19 * வேலூர் – 73.53 * கிருஷ்ணகிரி – 71.50 * தர்மபுரி – 81.20 * திருவண்ணாமலை – 73.24 * ஆரணி – 75.76 * விழுப்புரம் – 76.52 * கள்ளக்குறிச்சி – 79.21 * சேலம் – 78.16 * நாமக்கல் – 78.21 * ஈரோடு – 70.59 * திருப்பூர் – 70.62 * நீலகிரி – 70.95 * கோவை – 64.89 * பொள்ளாச்சி – 70.41 * திண்டுக்கல் – 71.14 * கரூர் – 78.70 * திருச்சி – 67.51 * பெரம்பலூர் – 77.43 * கடலூர் – 72.57 * சிதம்பரம் – 76.37 * மயிலாடுதுறை – 70.09 * நாகப்பட்டினம் – 71.94 * தஞ்சாவூர் – 68.27 * சிவகங்கை – 64.26 * மதுரை – 62.04 * தேனி – 69.84 * விருதுநகர்- 70.22 * ராமநாதபுரம் – 68.19 * துாத்துக்குடி – 66.88 * தென்காசி – 67.65 * திருநெல்வேலி – 64.10 *கன்னியாகுமரி- 65.44
குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக., வேட்பாளர் முகேஷ் தலாக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தகுதி நீக்கம் ஆன நிலையில், மற்ற அனைத்து சுயேட்சை வேட்பாளர்களும் வாபஸ் பெற்றதால் முகேஷ் தலாக் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.
குஜராத்தில் மொத்தம் உள்ள 26 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் மே மாதம் 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் நிறைவடைந்தது.
மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது சூரத் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியை முன்மொழிந்திருந்த 5 பேரில், மூன்று பேர், அது தங்களது கையெழுத்து இல்லை எனத் தெரிவித்தனர். இதனால் வேட்புமனுவை முன்மொழிந்த நபர்களின் முரண்பாடான தகவல்களால் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது.
இதனால், சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதே நேரம், சூரத் தொகுதியில் மற்ற அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்றனர். இதை அடுத்து பாஜக., வேட்பாளர் முகேஷ் தலாக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் முடியும் முன்பே முதல் எம்.பி.,யை பாஜக., பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.