Home Blog Page 212

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

kadeswara subramaniam hindu munnani - 2026
  • பழமையான பூண்டி வெள்ளியங்கிரி மலையில் சுகாதார சீர்கேடு !
  • குப்பைக்கிடங்காக மாறிப்போன அடிவாரம்.
    அலட்சியப் போக்கில் அதிகாரிகள் !
  • மாலை 6:00 மணிக்கே கோவிலுக்கு பூட்டு.!
  • உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் !

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை :

தென் கைலாயம் என அழைக்கப்படும் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் திருக்கோவிலுக்கு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை லட்சக்கணக்கான மக்கள் மலையேறுகிறார்கள். பூண்டி அடிவாரத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
அப்படிப்பட்ட இத்திருக்கோவிலில் அடிப்படை வசதிகள்
ஏதுமின்றி பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

வாகன நிறுத்துமிடம் ,கழிப்பிட வசதி என ஏதும் கிடையாது. போதாக்குறைக்கு குப்பைகள் அள்ளப் படாமல் கால் படும் இடமெல்லாம் சாப்பிட்டு போட்ட இலைகளும் வாட்டர் பாட்டில்களும் குப்பைகளும் என குப்பைக் கிடங்காகவே காட்சியளிக்கிறது.

இதுபற்றி பணியாளர்களிடம் கேட்டால் காலை 6:00 மணிக்கு வர வேண்டிய சுகாதாரப் பணியாளர்கள் 10 மணிக்கு மேல் தான் வருவதாக சொல்கிறார்கள். ஆனால் வந்தபாடில்லை என அலட்சியமாக பதில் சொல்கிறார்கள்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பே இந்துமுன்னணி பேரியக்கம் சார்பில் கோவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என மனு தந்த போதிலும் அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருவிழா காலங்களில் மலையேறும் பக்தர்களுக்கு எந்த விதமான மருத்துவ வசதியும் செய்து தராமல் அலட்சியம் காட்டியதால் கடந்த மூன்று மாதத்திற்குள் மட்டும் மூன்று பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் .

பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை நிர்வாகம் சார்பாக எந்த ஒரு ஏற்பாடும் இல்லை,
பக்தர்கள் கொண்டுவரும் உடமைகளை வைப்பதற்கான பாதுகாப்பு அறைகள் ஏதும் இல்லை.

பக்தர்கள் தங்கள் காலணிகளை விடுவதற்கு கூட போதிய இடம் ஒதுக்கப்படவில்லை. கோவிலை பராமரிக்க ஆட்கள் பற்றாக்குறை தன்னார்வலர்கள் உழவாரப்பணி செய்ய நினைத்தாலும் ஆயிரம் விதிமுறைகளை அடுக்குகின்றனராம்.

வெள்ளிங்கிரி கிரி மலையேறினால் மூச்சு திணறாது ஆனால் அடிவார கோவில் பக்கம் வந்தாலே மலைபோல் குவிந்து குப்பை கிடங்கின் துர்நாற்றத்தால் மூச்சு திணறல் ஏற்படும் நிலையுள்ளது. குறிப்பாக பெண்கள் மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை இருப்பினும் பல நூறு பெண்கள் இப்போதுவரை ஏறி உள்ளனர் அதை கண்டும்காணாமல் நிர்வாகம் செயல்படுகிறது.

மலையேறிய பக்தர்கள் ஓய்வெடுக்க எந்தஒரு ஏற்பாடும் செய்து தரப்படுவதில்லை. மலை ஏறிய பக்தர்கள் ஓய்வின்றி தங்கள் வாகனங்களை ஒட்டிச் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு பல நபர்கள் உயிரிழந்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் பூண்டி அடிவாரத்தில் தினம் தோறும் மூன்று வேளை அன்னதானம் கொடுக்கிறார்கள்.

பூண்டி கோவில் நிர்வாகமும் தினமும் 100 நபர்களுக்கு அன்னதானம் கொடுப்பதாக சொல்கிறார்கள் ஆனால் முறையாக பக்தர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இது தவிர இருசக்கர வாகனம் திருட்டு பெட்ரோல் திருட்டு தொடர்ந்து குற்றச் செயல்களும் நடைபெற்று வருகிறது.

இப்படி பூண்டி கோவில் முழுக்க அறநிலையத் துறையின் அலட்சியப் போக்கு தொடர்கிறது . பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும்
பெரிய அளவில் வைத்திருக்கிறது.

பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவிலில் நடைபெறும் இந்த நிர்வாக சீர்கேட்டை இந்து முன்னணி பேரியக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மலையேறும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அனைத்து விதமான வசதிகளையும் உடனடியாக செய்து தர வேண்டும். இல்லையேல் பொதுமக்களையும் பக்தர்களையும் திரட்டி இந்து முன்னணி பேரியக்கம் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தும்.

காங்கிரஸின் அபாயகர கொள்கை; பிரதமர் மோடியின் எச்சரிக்கையும் பின்னணியும்!

jugalbandi rahul yatra - 2026

“நாட்டு மக்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் நாட்டு மக்களின் சேமிப்பு மற்றும் சொத்துக்களை குறி வைத்துள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், யார் எவ்வளவு வருவாய் ஈட்டுகிறார்கள், யாருக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பதை விசாரணை செய்வோம் என்று காங்கிரஸ் இளவரசர் சொல்கிறார்.

நம் தாய்மார்களிடமும், சகோதரிகளிடமும் தங்கம் உள்ளது. திருமணத்திற்கு முன்னர் தன் தாய் வீட்டிலிருந்து எடுத்து வந்த ‘ஸ்ரீதனம்’ புனிதமாக கருதப்படுவதோடு, சட்டத்திற்கு உட்பட்ட ஒன்றும் கூட. இப்போது சிலரின் கண்கள் திருமாங்கல்யத்தின் மீது உள்ளது. தாய்மார்களிடமிருந்தும், சகோதரிகளிடமிருந்தும் தங்கத்தை கொள்ளையடிப்பதே அவர்களின் நோக்கம்.

உங்கள் ஊரில் பூர்வீக சொத்து இருந்து, நீங்கள் தற்போது வாழும் இடத்தில் சொந்தமாக ஒரு வீடும் இருந்தால், இரண்டில் ஒன்றை பறித்து கொண்டு விடுவார்கள். இது தான் மாவோயிஸ சிந்தனை, இது தான் கம்யூனிஸ்டுகளின் சிந்தனை. இப்படி செயல்பட்டே பல நாடுகளை அழித்து விட்டார்கள். இதே சிந்தனையை, செயல்பாட்டை இந்தியாவிலும் அமல்படுத்த காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணியும் விரும்புகிறது” என்று கூறியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

அப்படி கூறியதை தவறு என்கிறார்கள் சில நடுநிலையாளர்கள்(?) மற்றும் எதிர்க்கட்சியினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் சொத்துக்களை மதிப்பீடு செய்து அதை சமமாக எல்லோருக்கும் பிரித்துக் கொடுப்போம் என்று காங்கிரஸ் கட்சி குறிப்பிட்டுள்ளதோடு, அக்கட்சியின் இளவரசர் ராகுல் காந்தி அவர்கள் சில நாட்களுக்கு முன்னர் பேசும் போது, நாடு முழுதும் ஜாதி ரிதியான கணக்கெடுப்பு நடத்தி, சிறுபான்மையினர் குறித்த விவரங்களை அறிந்த பின்பு, யாரிடம், எந்த நிறுவனத்திடம் அதிக நிதி மற்றும் சொத்துக்கள் உள்ளது, எங்கு வைத்திருக்கிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகளை செய்து சொத்துக்களை அனைவருக்கும் பிரித்துக் கொடுப்போம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு மூர்க்கத்தனமான கொள்கை இந்தியாவை அழித்து விடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் தினம் ரூபாய் 400 கொடுப்போம் என்று கூறும் காங்கிரஸ் கட்சி, ஒரு நாளைக்கு 1000 ரூபாய் வருவாய் ஈட்டுபவர்களிடமிருந்து ரூபாய் 600 ஐ அடித்து பிடுங்குவோம் என்றே இந்த கொள்கையின் மூலம் சொல்கிறது.

தொழிற்சாலைகளை அழித்து தொழில் முன்னேற்றத்தை தடுக்கும் கோர அரசியல் கொள்கையை கடைபிடித்தால், வேலை வாய்ப்புகள் பறிபோகும், வசதி வாய்ப்புகள் பறிபோகும், வறுமை நம் நாட்டை வாட்டும், பஞ்சம் தலைவிரித்தாடும். மீண்டும் கற்கால நிலைக்கு நம்மை தள்ளி விடும் அபாயத்தை அரங்கேற்றப் போவதாக காங்கிரஸ் கூட்டணி சொல்வது அராஜகத்தின் உச்சக்கட்டம். இருப்பவர்களிடத்திலிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு கொடுப்போம் என்ற கொள்கை, ‘வழிப்பறி’ கொள்கை. பல நாடுகளை வீழ்ச்சியில் தள்ளிய அலங்கோல சிந்தனை.

ஆனால், இயற்கை வளங்களை பயன்படுத்தி, கட்டமைப்புகளை பெருக்கி, நிதி முதலீட்டை அதிகரித்து, தொழில் முன்னேற்றத்தை அடைய வைத்து, தனி மனித வருவாயை அதிகரிக்க வைக்கும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் ஒரு நாட்டை முன்னேற வைக்கும். எல்லோரையும் வருவாய் ஈட்ட வைப்போம், அனைவரையும் முன்னேற்றுவோம், எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்வது தான் வளர்ச்சி. அதை தான் பாரதிய ஜனதா கட்சியின் பத்து ஆண்டு கால அரசு செய்து வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை INDI கூட்டணியின் கொள்கை முடக்குவாதத்தை உணர்த்துவதோடு, இந்தியாவின் பொருளாதாரத்தை நாசமாக்கும் எண்ணம் என்பதால் தான் தெளிவாக மக்களிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தீய எண்ணத்தை, அபாயகரமான கொள்கைகளின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை தான் பிரதமர் தெளிவாக கூறியுள்ளார்.

  • நாராயணன் திருப்பதி.

அழகர்மலையில் இருந்து மதுரை நோக்கி… கள்ளழகர்!

kallalagar in alagar malai - 2026
#image_title

மதுரை:  சித்திரை திருவிழா முன்னிட்டு, கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதற்காக கள்ளழகர் அழகர், மலையிலிருந்து   புறப்பட்டார்.

 அவர் , மதுரை தல்லாகுளத்தில் திங்கள் இரவு எதிர் சேர்வை நடைபெறும். அதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை  மதுரை வைகை ஆற்றில் அலை இறங்குகிறார். இதற்காக, மதுரை வைகை ஆற்றில்  அழகர் இறங்கும் இடத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பும், பந்தல்களம் அமைக்கப் பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, வைகை ஆற்றில் தண்ணீர் திறந்த பட்டுள்ளது. 

விழாவினை ஒட்டி, மதுரை நகரம் விழா கோலம் பூண்டுள்ளது. கள்ளழகரை வரவேற்க மதுரை மக்கள் தயாராகிவிட்டனர்.

இதே போல மதுரை மாவட்டம் சோழவந்தானில் வைகை ஆற்றில் ஜனநாராயணப் பெருமாள் கள்ளழகர் திருக்கோவில் இறங்குகிறார். மற்றும் அணைப்பட்டி கிராமத்தில் அழகர் இறங்கி பக்தருக்கு காட்சி அளிக்கிறார். இதை ஒட்டி கிராமங்கள், விழாக்கோலம் பூண்டுள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருத்தோராட்டம்:

முன்னதாக இன்று காலை மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய தேரோட்டம் நடைபெற்றது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில், சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. அதையடுத்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், மீனாட்சியம்மன் தேராட்டத்தை கண்டு தரிசித்தனர். விழாவையொட்டி, பக்தர்கள் நீர் மோர், பானகம் வழங்கினர்.

அழகர் திருவிழாவுக்கு, துருத்தி விற்பனை:

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் பொழுது சாமி மீது தண்ணீரை பீச்சி அடிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தி விற்பனை தொடங்கப்பட்டது.

மதுரை சித்திரை திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி நேற்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து இன்று மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மற்றும் நாளை காலை தேரோட்டமும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது . அதனைத் தொடர்ந்து நாளை இரவு எதிர்சேவை நடைபெற உள்ளது. பின்னர் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் காலை நடைபெற உள்ளது. அப்போது கள்ளழகர் சுவாமிக்கு விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் பொழுது ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தியை வைத்து தண்ணீரை சுவாமி மீது பீய்ச்சி அடிப்பார்கள்.

துருத்தி என்பது ஆட்டு தோலால் செய்யப்பட்ட தண்ணீர் பை, இந்த துருத்தி தற்போது மதுரை அவனியாபுரம் பகுதியில் ரூபாய் 500 முதல் 600 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஏராளமான கள்ளழகர் பக்தர்கள், விரதம் இருப்பவர்கள் ஆவலுடன் இந்த ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தியை வாங்கி செல்கின்றனர். ஒருபுறம் சித்திரை திருவிழாவையொட்டி மதுரையே களைகட்டி உள்ள நிலையில் மறுபுறம் இந்த துருத்தி வியாபாரம் சூடு பிடித்து வருகிறது.

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

1746440 mkstalin - 2026

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு – விழிக்குமா திமுக அரசு? என்று கேள்வி எழுப்பி, பாமக., தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில்…

சென்னை கண்ணகி நகரில் உமாபதி என்ற கஞ்சா வணிகரை கைது செய்வதற்காக சென்ற இரு காவலர்களை கஞ்சா போதையில் இருந்த உமாபதியும், அவரது நண்பரும் இணைந்து கண்மூடித்தனமாக தாக்கியதில் இரு காவலர்களும் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகின்றனர்.

அதேபோல், கும்பகோணம் பாலக்கரையில் கஞ்சா போதையில் இருந்த 8 பேர் கொண்ட கும்பல் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரையும், அதை படம் பிடித்த இரு செய்தியாளர்களையும்  கொடூரமாகத் தாக்கியுள்ளனர். கஞ்சா அடிமைகளால் காவல்துறையினர்,  போக்குவரத்துத் தொழிலாளர்கள், செய்தியாளர்கள், பொதுமக்கள் என எந்தத் தரப்பினருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை  ஏற்பட்டிருப்பது பெரும் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

கண்ணகி நகரைச்  சேர்ந்த உமாபதி கஞ்சா வணிகம் செய்வதையே முழு நேரத் தொழிலாகக் கொண்டவர். இதற்காக பல முறை கைது செய்யப்பட்ட போதிலும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு விடுவதால் அவருக்கு சட்டத்தின்  மீது எந்த அச்சமும் இல்லை.  அவர் கஞ்சா வணிகம் செய்வது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்த இருவரைப் பற்றிய விவரங்களை காவல்துறையினரிடமிருந்து பெற்ற உமாபதி அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார். அவர்களும் ஆபத்தான நிலையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இது குறித்த வழக்கில் கைது செய்யச் சென்ற போது தான் காவலர்களை அவர் தாக்கியுள்ளார்.

உமாபதி உள்ளிட்ட கஞ்சா வணிகர்கள், கஞ்சா போதைக்கு அடிமையானவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக கண்ணகி நகர் மக்கள் தெரிவித்துள்ளனர். கண்ணகி நகர் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான் காணப்படுகிறது. மது போதையைக் கடந்து கஞ்சா போதைக்கு சிறுவர்கள் கூட அடிமையாகிக் கிடக்கின்றனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கூட கஞ்சா போதையில் செல்வதும், அதைக் கண்டித்து எச்சரிக்கும் ஆசிரியர்களைத் தாக்குவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.  கஞ்சா போதைக்கு செல்லாமல் இளைய தலைமுறையினரைத் தடுப்பதும், போதைக்கு அடிமையாவதைத் தடுப்பதும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

சென்னை உட்பட  தமிழ்நாடு  முழுவதும் கஞ்சா, அபின், ஹெராயின், கோகைன், எல்எஸ்டி என, அனைத்து வகையான போதைப் பொருட்களும் கிடைக்கின்றன. 24 மணி நேரம் வரை போதையில் மிதக்க வைக்கும் போதைப்பொருட்கள் கூட சென்னையில் தாராளமாகக் கிடைக்கின்றன. தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டமும், கடத்தலும் கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன. உலக அளவிலான போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் கடத்தல் மையமாக தமிழகம் மாறி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

 தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டமும், பயன்பாடும் அதிகரித்து வருவது குறித்தும், அவற்றை ஒழிக்க வேண்டியதன் தேவை குறித்தும் பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வருகிறேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த போதும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும்படி வலியுறுத்தினேன். ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. அதன் விளைவு தான் தமிழகத்தில் போதைப்பொருட்கள் தலைவிரித்தாடுகின்றன.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகரிக்கும் போதெல்லாம் கஞ்சா வேட்டை என்ற பெயரில் காவல்துறையினர் சில ஆயிரம் பேரை கைது செய்வார்கள். ஆனால், அடுத்த நாளே அவர்கள் வெளியில் வந்து மீண்டும் கஞ்சா வணிகத்தைத் தொடங்கி விடுவார்கள். ஆட்சியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் மறைமுக ஆதரவுடன் தான் தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் நடைபெறுகிறது என்று வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படா விட்டால், இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதே உண்மை.

தமிழ்நாடு இன்று எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினையே போதைப் பொருட்கள் நடமாட்டமும், அதனால் இளைஞர்கள் சீரழிவதும் தான். தமிழ்நாடு அரசு இனியாவது விழித்துக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழகத்தை போதையில்லாத மாநிலமாக மாற்ற வேண்டும்.


சீர்கெட்டுப் போயிருக்கும் சட்டம் ஒழுங்கு – எடப்பாடி பழனிசாமி காட்டம்

இபிஎஸ் X தளப் பதிவு: கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன.

அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையினருக்குமே பாதுகாப்பற்ற நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது.

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதாக பத்திரிக்கையாளர்களும் பொதுமக்களும் என்னிடத்தில் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த போதைப்பொருட்கள் புழங்குவது மிகுந்த கவலையளிப்பதும், கண்டணத்துக்கு உரியதாகும், சீர்கெட்டு போயிருக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி: பிள்ளை பிடிக்கும் ராகுல் காந்தி!

jugalbandi rahul yatra - 2026

— ஆர். வி. ஆர்

“ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வருடம் லட்ச ரூபாய் தருவோம்” – பிள்ளை பிடிக்கும் ராகுல் காந்தி!

கோணல் பேச்சு, கோமாளி வாக்குறுதி – இவற்றின் அடையாளம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. ஒரு உதாரணம்: நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவர் பொதுவெளியில் அறிவித்த ஒரு வாக்குறுதி.

“மத்தியில் அமையும் காங்கிரஸ் அரசு, இந்தியாவின் ஒவ்வொரு ஏழ்மைக் குடும்பத்திலும் ஒரு பெண்ணுக்கு வருடம் தோறும் அவரது வங்கிக் கணக்கில் லட்ச ரூபாய் செலுத்தும். மாதம் அது கிட்டதட்ட எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் ஆகிறது.”

“நீங்கள் ஒரு வேலை பார்க்கலாம். இருந்தாலும் உங்கள் குடும்பம் ஏழ்மைக் குடும்பமாக இருந்தால், உங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மாதம் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய் என்ற வகையில் வருடம் தோறும் லட்ச ரூபாயை வங்கிக் கணக்கில் அரசு செலுத்தும். வறுமைக் கோட்டிற்குக் கீழ் நீங்கள் எந்த நாள் வரை இருக்கிறீர்களோ, அந்த நாள் வரை உங்கள் வங்கிக் கணக்கில் மாதம் எட்டாயிரத்து ஐநூறு ரூபாய், அதாவது வருடத்திற்கு லட்ச ரூபாய், டாண் டாணென்று வந்து கொண்டிருக்கும். இப்படியாக ஒரே வீச்சில் நாங்கள் நாட்டின் வறுமையை ஒழித்துவிடுவோம்.”

சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த ஒரு பெரிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி இந்த வார்த்தைகளை ஹிந்தியில் பேசினார். அதன் வீடியோ இன்டர்நெட்டில் இருக்கிறது. முன்னதாகக் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் வெளியிட்டது. அதில் இந்த ‘ஒரு லட்ச ரூபாய்’ வாக்குறுதியும் சொல்லப்பட்டிருந்தது.

ராகுல் காந்தியைத் தவிர, இந்த வாக்குறுதியை இப்படித் தம்பட்டமாக, தடபுடலாக, ஜிகினா அலங்காரங்கள் செய்து, மற்ற காங்கிரஸ் தலைவர்கள் சொல்லக் காணோம். இந்த வாக்குறுதியை ராகுல் விளக்கிய விதத்தில் உள்ள பைத்தியக் காரத்தனமும் அரசியல் பிராடும் ராகுல் காந்திக்கு விசேஷமாக உரித்தானவை.

ஒரு நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகள் எப்போது அதிகரிக்கும்? அவர்களின் வருமானம் நிஜத்தில் எப்போது கூடும், அவர்களின் பொருளாதார நிலை எப்போது உயரும்? ஒரு நாடு சிறந்த பொருளாதாரத் திட்டங்களை வகுத்து, அவற்றை முறையாகச் செயல்படுத்தி, நாட்டில் தொழில் பெருகி உற்பத்தியும் சேவைகளும் அதிகரித்தால் தவிர – அரசு மட்டத்தில் லஞ்ச ஊழலைக் கட்டுப் படுத்தி, பொதுச் சொத்து விரயம் ஆவதையும் தடுத்தால் ஒழிய – மக்களுக்கு அந்தப் பயன்கள் கிடைக்காது.

ராஜஸ்தானில் பேசிவிட்டு மறுநாள் இன்னொரு மாநிலத்தில் மேடை ஏறிய ராகுல் காந்தி, இந்தியாவில் வேலை இல்லாமல் இருப்பவர்களில் 83 சதவிகிதம் பேர் இளைஞர்கள் என்று சொன்னார். அப்படியானால், திருமண வயதை அடைந்தவுடன், ஏதோ வேலை இருக்கிறதோ இல்லையோ, எல்லா ஆண்களும் டும்டும் செய்து கொள்ள வேண்டியதுதான், புதுப்புது குடும்பங்களுக்கு மாதம் சுமார் 8,500 ரூபாய் கிடைக்கும் என்கிறார் ராகுல் காந்தி. இந்த வாக்குறுதி அரசைப் போண்டி ஆக்குவது மட்டுமல்ல, வேறு வகைகளிலும் விபரீதம் செய்யும்.

ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்த வருடங்கள் கூட்டாக 38. ஒரு பிரதமரின் சிண்டைப் பிடித்து அவர் கையைக் கட்டி மத்தியில் சோனியா காந்தி அதிகாரம் செலுத்திய வருடங்கள் 10. ஆக மொத்தம் 48 ஆண்டுகள் நேரு குடும்பம் மத்திய அரசில் கோலோச்சியது. ராகுல் காந்தி சொல்லும் மிக எளிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை சிந்திக்காத மண்டூகங்களா அவரது அம்மா, அப்பா, பாட்டி, கொள்ளுத் தாத்தா?

இந்த லட்ச ரூபாய்ப் பணத்தை உத்தேசமாக எத்தனை குடும்பங்களுக்கு மத்திய அரசு இனாமாக அளிக்க வேண்டி இருக்கும், எத்தனை வருடங்கள் தரவேண்டி இருக்கும், அதற்கான ஆண்டுச் செலவு எவ்வளவு, அந்தப் பணத்திற்கான மூல ஆதாரம் என்ன, என்று ஒரு விவரமும் காங்கிரஸ் கட்சியோ ராகுல் காந்தியோ தரவில்லை.

உலகில் பல நாடுகளில் பெரும்பான்மை மக்கள் ஏழ்மையில் தவிக்கின்றன. அவை எல்லாம் தங்கள் குடிமக்களுக்கு ஒரு லட்சம், ரண்டு லட்சம் என்று ஒவ்வொரு வருடமும் பணம் கொடுத்து வந்தால் உலகத்தின் எல்லா மூலைகளிலும் ஏழ்மை விரட்டி அடிக்கப் படுமே?

கடந்த 45 வருடங்களாகச் சீனா அந்நிய முதலீடுகளை ஈர்த்து, உற்பத்தியைப் பெருக்கி, ஏற்றுமதியை அதிகரித்து, பொதுக் கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வருகிறது. அந்த நாடு ஏன் ராகுல் காந்தி பார்மூலவைப் பின்பற்றாமல் திடமான கடின வழியில் முன்னேறுகிறது?

எப்படிப் பார்த்தாலும் ராகுல் பேசியது குப்பை என்பதை சாதாரண மக்களும் புரிந்து கொள்ள முடியும். இது நிஜத்தில் நடக்காது என்று அவர்களும் நினைப்பார்கள். இருந்தாலும், தலைக்கனம் ஏறிய ஒரு பணக்காரன் ஒரு பிச்சைக்காரனிடம், “அடுத்த மாதம் உன் திருவோட்டில் ஆயிரம் ரூபாய் போடுகிறேன்” என்று சொன்னால், அதை நம்ப முடிக்கிறதோ இல்லையோ அதைத் தேமே என்று கேட்டுப் போவான் அந்தப் பிச்சைக்காரன். அப்படித்தான் ராகுல் பேச்சைக் கேட்ட சாதாரண மக்கள் இருப்பார்கள். அந்த நிலையில்தான் அவர்களை நீடித்து வைத்திருக்கிறார்கள் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள்.

ராகுலின் ராஜஸ்தான் பேச்சு டுபாக்கூர் பேச்சு என்பது எல்லா காங்கிரஸ் தலைவர்களுக்கும் தெரியும். அவர்களின் முதல் பெரிய பிரச்சனை ராகுல் காந்தியும், பிள்ளைப் பாசம் மிக்க சோனியா காந்தியும்தான்.

திறமையும் தேசப் பற்றும் சுய மரியாதையும் உள்ள இளைஞர்கள் எவரும் காங்கிரஸுக்கு வரமுடியாமல், கட்சிக்குள் வளர முடியாமல், ஒதுங்கிப் போகிறார்கள். அதற்குக் காரணம், இந்த இருவரின் ராஜ தோரணை, எதேச்சாதிகாரம், மற்றும் தீராத பதவி மோகம். இந்த இருவருக்குச் சாமரம் வீசி, சலாம் போட்டு, கைகளும் தட்டி, தங்களின் ஆதாயத்தைக் கவனித்துச் சுகிக்கிறார்கள் கட்சியின் அடுத்த கட்ட சீனியர் தலைவர்கள்.

சரி, காங்கிரஸ் கட்சியின் தலைவிதியை அந்தக் கட்சி பார்த்துக் கொள்ளட்டும். ஆனால் ராகுல் காந்தியின் ராஜஸ்தான் பேச்சின் போது அவர் நெஞ்சோடு நெஞ்சாக வைத்திருந்த துருப்புச்சீட்டைக் கவனித்தீர்களா?

ராகுல் காந்தி அறிவித்த லட்ச ரூபாய் வாக்குறுதியை, மத்தியில் அமையும் ‘காங்கிரஸ்’ அரசு நிறைவேற்றும் என்றார் அவர். ஆனால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களில் வென்று மத்தியில் ‘காங்கிரஸ்’ அரசை நிச்சயம் அமைக்கப் போவதில்லை. அந்தக் கட்சி போட்டியிடப் போவதே மொத்தம் சுமார் 330 இடங்கள்தான் என்றும் செய்திகள் வருகின்றன.

சமீபத்தில் பேசிய காங்கிரஸ் முன்னணித் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உ. பி ஆகிய மூன்று மாநிலங்களில் நாங்கள் போட்டியிடும் இடங்களைக் குறைத்துக் கொண்டோம். காரணம், நாங்கள் வலுவான ‘இண்டி’ கூட்டணி அமைக்க விரும்பினோம். காங்கிரஸும் இண்டி கூட்டணியும் மக்களின் தெளிவான தீர்ப்பைப் பெறும்” என்று, மத்தியில் அமையப் போகும் ஆட்சி இண்டி கூட்டணியின் ஆட்சிதான், காங்கிரஸ் ஆட்சி அல்ல, என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்டத்தை அவர் அறிவித்துவிட்டார்.

காங்கிரஸ் கட்சியே தனது ஆட்சி அமையாது என்று அறிந்து, இண்டி கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்பட்டுக் காத்திருக்கிறது. அப்படி இருக்கும்போது, “காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால், ஏழைக் குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு வருஷா வருஷம் லட்ச ரூபாயைக் காங்கிரஸ் அரசு செலுத்தும். இவ்விதமாக வறுமையை ஒழிப்போம்” என்று ஓட்டுக்காகப் பொது மக்களிடம் ராகுல் காந்தி பேசினால் என்ன அர்த்தம்? பிள்ளை பிடிக்க அலைபவன், கிடைக்கிற சிறுவர்களிடம் பேசும் ஆசை வாரத்தைதானே இது?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
email: veera.rvr@gmail.com
blog: https://rvr-india.blogspot.com

IPL 2024: ஒரு ரன்னில் பெற்ற வெற்றி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முப்பத்தியின்றாம் நாள்
ஐபிஎல் 2024 – 21.04.2024
இரண்டு ஆட்டங்கள்

இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டம் கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது.

இரண்டாவது ஆட்டம் முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ்

பெங்களூரு – கொல்கொத்தா மயிரிழையில் வெற்றி

கொல்கொத்தா அணி (222/6, பில் சால்ட் 48, ஷ்ரேயாஸ் ஐயர் 50, ஆண்ட்ரே ரசல் 27*, ரமன்தீப் சிங் 24*, சிங்கு சிங் 24, யஷ் தயால் 2/56, காம்ரூன் கிரீன் 2/35 ) பெங்களூரு அணியை (221, வில் ஜேக்ஸ் 55, ரஜத் படிதர் 52, தினேஷ் கார்த்திக் 25, கரன் ஷர்மா 20, விராட் கோலி 18, ரசல் 3/25, ஹர்ஷித் ராணா 2/33, சுனி நரேன் 2/34) 1 ரன் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (14 பந்துகளில் 48 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் சுனில் நரேன்  (10 ரன்) இருவரின் அதிரடி ஆட்டத்தால் கொல்கொத்தா அணி பவர்பிளே ஓவர்களில் மூன்று விக்கட் இழப்பிற்கு 75 ரன் கள் எடுத்தது.

          பத்தாவது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 158/4 ஆக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் ரன்ரேட்டைக் குறைக்கும் வண்ணம் பந்துவீசினர். ட்ராவிஸ் ஹெட் (32 பந்துகளில் 89 ரன், 11 ஃபோர், 6 சிக்சர்) அபிஷேக் ஷர்மா (12 பந்துகளில் 46 ரன், 2 ஃபோர், 6 சிக்சர்), மர்க்ரம் (1 ரன்), கிளாசன் (15 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (27 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ஷபாஸ் அகமது (29 பந்துகளில் 59 ரன், 2 ஃபோர், 5 சிக்சர்), அப்துல் சமது (8 பந்துகளில் 13 ரன்) என அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடியதால் கொல்கொத்தா அணி 20 ஓவர் முடிவில் 222 ரன் எடுத்தது.

          223 ரன் என்ற கடின இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான விராட் கோலி (7 பந்துகளில் 18 ரன்) 2.1ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.  3.1ஆவது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான ட்யு பிளேசிஸ் ஆட்டமிழந்தார்.

 அதன் பின்னர் வில் ஜேக்ஸ் (32 பந்துகளில் 55 ரன், 4 ஃபோர், 5 சிக்சர்) மற்றும் ரஜத் படிதர் (23 பந்துகளில் 52 ரன், 3 ஃபோர், 5 சிக்சர்) இருவரும் அணியின் ஸ்கோரை 138 ரன் என்ற அளவிற்கு உயர்த்தினர். 12ஆவது ஓவர் முதல் பந்தில் வில் ஜேக்ஸும் நாலாவது பந்தில் ரஜத் படிதரும் ஆட்டமிழந்தனர். இதற்குப் பிறகு காமரூன் கிரீன் (6 ரன்), மஹிபல் லோமர் (4 ரன்), சிராஜ் (பூஜ்யம் ரன்), ஃபெர்கூசன் (1 ரன்) ஆகியோர் சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். ஆயினும் சுயேஷ் பிரபுதேசாய் (24 ரன்), தினேஷ் கார்த்திக் (25 ரன்), கரண் ஷர்மா (20 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 221 ரன் எடுத்தது.

இதனால் கொல்கொத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றது. ஏறத்தாழ வெற்றியை அடையும் நிலைக்கு வந்து பின்னர் துரதிருஷ்டவசமாக 1 ரன்னில் தோல்வியை பெங்களூரு அணி சந்தித்தது. ஆண்ட்ரு ரசல் 3 ஓவர் வீசி 25 ரன் கொடுத்து 3 விக்கட் எடுத்தார்.

          ஹைதராபாத் அணியின் ஆண்ட்ரு ரசல் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காகவும் சிறப்பான பந்துவீச்சிற்காகவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைடன்ஸ்

          பஞ்சாப் அணியை (142, பிரப்சிம்ரன் சிங் 35, ஹர்பிரீத் பிரார் 29, சாம் கரன் 20, ஹரபிரீத் சிங் 14, சாய் கிஷோர் 4/33, மோஹித் ஷர்மா 2/32, நூர் முகம்மது 2/20) குஜராத் டடன்ஸ் அணி (19.1 ஓவரில் 146/7, ஷுப்மன் கில் 35, ராகுல் திவாத்தியா 36*, சாய் சுதர்ஷன் 31, ஒமர்சாய் 13, விருத்திமான் சாஹா 13, ஹர்ஷல் படேல் 3/15, லிவிங்க்ஸ்டோன் 2/19) 3 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவா தலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் இன்றும் விளையாடவில்லை. அதனால் அணித்தலைவராகச் செயல்பட்ட சாம் கரன் (20 ரன்) தொடக்கவீரராக பிரப்சிம்ரன் சிங் (35 ரன்) உடன் களமிறங்கினார்.

இவர்கள் இருவரைத்தவிர ஹர்பிரீத் பிரார் (29 ரன்), ஜித்தேஷ் ஷர்மா (13 ரன்), ஹர்பிரீத் சிங் (14 ரன்) ஆகிய வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தனர். ரிலீ ரோஸ்சௌ (9 ரன்), லிவிங்க்ஸ்டோன் (6 ரன்), ஷஷாங்க் சிங் (8 ரன்), அஷுத்தோஷ் ஷர்மா (3 ரன்) ஹர்ஷல் படேல் (பூஜ்யம் ரன்) ஆகியொர் இன்று நிலைத்து ஆடவில்லை. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 142 ரன் எடுத்தது.

          143 என்ற சுலபமான இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரர்கள் விருத்திமான் சாஹா (13 ரன்), விராட் கோலி (29 பந்துகளில் 35 ரன்) இருவரும் நல்ல தொடக்கம் தந்தனர். சாய் சுதர்ஷன் 31 ரன் எடுத்து அசத்தினார்.

டேவிட் மில்லர் (4 ரன்), அசமத்துல்லா ஒமர்சாய் (13 ரன்), ஷாருக் கான் (8 ரன்), ரஷீத் கான் (3 ரன்) ஆகியோர் இன்று சிறப்பாக ஆடவில்லை. ராகுல் திவாத்தியா ஆட்டமிழக்காமல் 36 ரன் எடுத்ததனால் குஜராத் அணி 19.1 ஓவரில் 7 விக்கட் இழப்பிற்கு 146 ரன் எடுத்து 3 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சிறப்பாக பந்து வீசிய குஜராத் அணியின் சாய் கிஷோர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். நாளை ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

21.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்761120.677
கொல்கொத்தா752101.206
ஹைதராபாத்752100.914
சென்னை74380.529
லக்னோ74380.123
குஜராத்8448-1.055
மும்பை7346-0.133
டெல்லி8356-0.477
பஞ்சாப்8264-0.292
பெங்களூரு8172-1.046

மதுரை அழகருக்கு ஆண்டாள் சூடிக் களைந்த மாலை!

andal maalai in srivilliputhur to azhagar - 2026
#image_title

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை பட்டு வஸ்திரம் மதுரை கள்ளழகருக்கு சென்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் களைந்த மலர்மாலை, கிளி, பட்டு வஸ்திரம் ஆகிய மங்களப்பொருட்களை சித்திரா பெளர்ணமி அன்று மதுரை வைகை ஆற்றில் தங்கக் குதிரையில் இறங்கும் கள்ளழகர் அணிந்து கொண்டு இறங்குவார்.

அதே போல் இந்த ஆண்டு மதுரை வைகை ஆற்றில் சித்ரா பௌர்ணமி அன்று தங்க குதிரையில் அமர்ந்து ஆற்றில் இறங்கும் கள்ளழகர் அணிவதற்காக ஆண்டாள் சூடிக் களைந்த பட்டு, கிளி ,மலர்மாலை ஆகியவை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நேற்று கொண்டு செல்லும் வைபவம் நடைபெற்றது.

மங்கல பொருள்களை ராஜா பட்டர் கொண்டு சென்றார் . ஆண்டாளுக்கு முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா கோயில் செயல் அலுவலர் (கூ.பொ) லட்சுமணன் அறங்காவலர் குழு உறுப்பினர் நளாயினி கோவில் ஸ்தானிகர் ரங்கராஜன் என்ற ரமேஷ் கிச்சப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா மற்றும் அறங்காவலர்கள் செயல் அலுவலர் (கூ.பொ) லட்சுமணன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோவில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

வாக்காளர்கள் நீக்கம்: திமுக.,வின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு!

election voting - 2026

வாக்காளர்கள் நீக்கம்.திமுகவின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு. கோவை மாவட்ட ஆட்சியரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று, பாஜக.,வைச் சேர்ந்த ஜி.கே. நாகராஜ் குறிப்பிட்டுள்ளர். அவர் இது குறித்து குறிப்பிட்டதாவது…

கோவையில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவையிலுள்ள 2048 பூத்களிலும் மாற்றத்தை விரும்பக் கூடிய பாஜக.,விற்கு வாக்களிக்கக் கூடியவர்கள் நீக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி 12 மணியளவில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்களிக்க முடியாமல் திகைத்து நின்றபோதே தெரிந்தது. இவர்கள் அனைவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாக்களித்து வருபவர்கள். சொந்த வீட்டில் வசித்து வருபவர்கள். உள்ளூர் திமுக., அதிமுக., நிர்வாகிகளுக்கு நன்கு அறிந்தவர்கள்.

இந்த இரு கட்சிகளுக்குமே வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரிந்திருந்துமே அவர்களை உசார்படுத்தாமல் மௌனம் காத்து கூட்டுசதி செய்துள்ளார்கள். ஏனென்றால் இவர்கள் வாக்குகள் இக்கட்சிகளுக்கு விழாது. இது திமுகவின் விஞ்ஞான முறைகேடு.

அதில் உச்ச கட்டமே கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி எண் 214-ல் அங்கப்பா பள்ளியில் 823 ஓட்டுக்கள் நீக்கப் பட்டிருப்பதுதான். அதில் பெரும்பாலானவர்கள் நல்லாட்சியை விரும்பி வாக்களிக்கக் கூடிய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

அதேபோல் தெப்பக்குளத்தில் வாக்குச்சாவடி எண் 158-ல் 40 ஓட்டுக்களும், 157-ல் 45 ஓட்டுக்களும், 156-ல் 20 ஓட்டுக்களும், 155-ல் 40 ஓட்டுக்களும், 154 –ல் 30 ஓட்டுக்களும், 153-ல் 25 ஓட்டுக்களும் என 200 ஓட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வடஇந்தியர்கள். பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடியவர்கள். இது கோவையில் மட்டும். இதுபோன்று 5% ஓட்டுக்கள். அதாவது 20 இலட்சம் ஓட்டுக்களில் ஏறக்குறைய 1 இலட்சம் ஓட்டுக்கள் deleted என நீக்கப்பட்டுள்ளது.

மௌனம் காத்த மாவட்ட ஆட்சியர்:- இரண்டு மணியளவில் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் சென்று, அவர் இல்லாததால் தொலைபேசி மூலம் புகார் கூறியும், அங்கப்ப பள்ளியில் வாக்காளர்களோடு போராட்டம் நடத்தியும், சேலஞ்ச் ஓட்டு கேட்டும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து கிடைத்த பதில், சட்டத்தில் இடமில்லை என்பதே.

1353 வாக்குகள் இருந்த அங்கப்பா மேல் நிலைப்பள்ளியில் 823 ஓட்டுக்கள் குறைந்தபோது விழித்திருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் மௌனம் காத்து திமுக.,வின் விஞ்ஞான முறைகேட்டிற்கு துணை போயிருக்கிறது.

30 ஆண்டு காலமாக வாக்களித்த மக்கள் தங்கள் வாக்கு நீக்கப்படுமென கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மாவட்ட ஆட்சியர் உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர்கள் பட்டியல் திருத்தப்பட்டது என்பதும், ஆனால் வாக்குச்சாவடி எண் 214-ல் வாக்குகள் மறுக்கப்பட்டு நின்றிருந்த மக்கள் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் 30 ஆண்டுகளாக குடியிருக்கிறோம் என்று கூறியபோது, அங்கு வந்திருந்த ARO திரு.கோவிந்தன் மௌனம் காத்தார். மாவட்ட ஆட்சியர் பதில் சொல்லாமல் இன்னும் மௌனம் காக்கிறார்.

இது சம்பந்தமாக மனுகொடுக்க முற்பட்ட பொழுது, அங்கு காத்திருந்த வழக்குரைஞர்களை நீண்டநேரம் காக்க வைத்து தேர்தல் முடிந்தபின்பு புகார் மனுவை பெற்றுக் கொண்டதே திமுக.,வின் முறைகேட்டிற்கு மாவட்ட நிர்வாகம்(RO) துணை போகிறது என்பதற்கு சாட்சி.

கள்ள ஓட்டு போட்டு அன்று ஆட்சியைப் பிடித்த திமுக., இன்று நல்ல ஓட்டுக்களை நீக்கி, முறைகேடு செய்து தமிழகம் முழுவதும் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது. ஆனால் பாஜக., இதை இத்துடன் விடாது. ஜனநாயக ரீதியாக தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும்.

IPL 2024: ஒன் டே மேட்ச் ஸ்கோர் டி20ல்! இன்னாடா கேம் இது?!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

முப்பதாம் நாள்
ஐபிஎல் 2024 – 20.04.2024

டெல்லி கேபிடல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

          ஹைதராபாத் அணி (266/7, ட்ராவிஸ் ஹெட் 89, ஷபாஸ் அகமது 59, அபிஷேக் ஷர்மா 46, நிதீஷ் குமார் ரெட்டி 37, குல்தீப் யாதவ் 4/55) டெல்லி அணியை (19.1 ஓவரில் 199, ஜேக் ஃப்ரேசர் மகுருக் 65, அபிஷேக் போரல் 42, ரிஷப் பந்த் 44, ப்ருத்வி ஷா 16, நடராஜன் 4/19, மார்கண்டே 2/26, நிதீஷ் குமார் ரெட்டி 2/17) 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களை நாலாபக்கமும் சிதறடித்தனர். முதல் ஓவரில் 19 ரன், இரண்டாவது ஓவரில் 21 ரன், மூன்றாவது ஓவரில் 22 ரன், நாலாவது ஓவரில் 21 ரன், ஐந்தாவது ஓவரில் 20 ரன், ஆறாவது ஓவரில் 22 ரன் என பவர்பிளே ஓவர்களில் விக்கட் இழப்பின்றி 125 ரன் அடித்தனர்.

இது இதுவரையில் செய்யப்படாத சாதனையாகும். இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு பெங்களூரு கொல்கொத்தா ஆடிய ஆட்டத்தில் கொல்கொத்தா அணி விக்கட் இழப்பின்றி 105 ரன் எடுத்ததுதான் சாதனையாக இருந்தது.

ட்ராவிஸ் ஹெட் இன்று 16 பந்துகளில் 50 ரன் அடித்தார். 4.6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 100 ரன் அடித்தது. இது டி20 ஆட்டங்களின் சாதனையாகும். இதற்கு முன்னர் சென்ற ஆண்டு தெ ஆப்பிரிக்க அணி 5.3 ஓவரில் 100 ரன் அடித்தது சாதனையாக இருந்தது. பவர்பிளே ஓவர்களில் 10 ஃபோர் மற்றும் 10 சிக்சர்கள் அடிக்கப்பட்டன.

          பத்தாவது ஓவர் முடிவில் அணியின் ஸ்கோர் 158/4 ஆக இருந்தது. ஆனால் அதற்குப் பின்னர் டெல்லி அணி பந்துவீச்சாளர்கள் ரன்ரேட்டைக் குறைக்கும் வண்ணம் பந்துவீசினர். ட்ராவிஸ் ஹெட் (32 பந்துகளில் 89 ரன், 11 ஃபோர், 6 சிக்சர்) அபிஷேக் ஷர்மா (12 பந்துகளில் 46 ரன், 2 ஃபோர், 6 சிக்சர்), மர்க்ரம் (1 ரன்), கிளாசன் (15 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (27 பந்துகளில் 37 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்), ஷபாஸ் அகமது (29 பந்துகளில் 59 ரன், 2 ஃபோர், 5 சிக்சர்), அப்துல் சமது (8 பந்துகளில் 13 ரன்) என அனைத்து பேட்டர்களும் சிறப்பாக ஆடியதால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 26 ரன் எடுத்தது.

          267 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ப்ருத்வி ஷா (5 பந்துகளில் 16 ரன்) முதல் நாலு பந்துகளையும் ஃபோர் அடித்தார்; ஆனால் ஐந்தாவது பந்தில் ஆட்டமிழந்தார். 

இரண்டாவது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரான டேவிட் வார்னரும் ஆட்டமிழந்தார்.  அதன் பின்னர் அபிஷேக் போரலும் (22 பந்துகளில் 42 ரன், 7 ஃபோர், ஒரு சிக்சர்) ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (18 பந்துகளில் 65 ரன், 5 ஃபோர், 7 சிக்சர்) இருவரும் இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். அதற்குப் பிறகு ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (10 ரன்), லலித் யாதவ் (7 ரன்), அக்சர்படேல் (6 ரன்), அன்ரிக் நோர்ஜே (பூஜ்யம்), குல்தீப் யாதவ் (பூஜ்யம்) என பிற பேட்டர்கள் சரிவர ஆடாததால் ரிஷப் பந்த் (35 பந்துகளில் 44 ரன், 5 ஃபோர், 1 சிக்சர்) 19.1 ஓவர் வரை ஆடியும் டெல்லி அணி வெற்றி பெற முடியவில்லை. 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து அந்த அணி 199 ரன் மட்டுமே எடுத்தது.

          ஹைதராபாத் அணியின் ட்ராவிஸ் ஹெட் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

இரண்டாவது ஆட்டம் முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்.  

20.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்761120.667
ஹைதராபாத்752100.914
கொல்கொத்தா64281.399
சென்னை74380.529
லக்னோ74380.123
மும்பை7346-0.133
டெல்லி8356-0.477
குஜராத்7346-1.303
பஞ்சாப்7254-0.251
பெங்களூரு7162-1.185

IPL 2024: சென்னையை வீழ்த்திய லக்னோ அணி

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இருபத்தியொன்பதாம் நாள்
ஐபிஎல் 2024 – 19.04.2024

சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

சென்னை அணி (176/7, ரவீந்திர ஜதேஜா 57*, அஜிங்க்யா ரஹானே 36, மொயின் அலி 30, தோனி 28, க்ருணால் பாண்ட்யா 2/16) லக்னோ அணியிடம் (கே.எல்.ராகுல் 73*, க்விண்டன் டி காக் 54, கே.எல். ராகுல் 82, நிக்கோலஸ் பூரன் 23) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இன்று லக்னோவில் லக்னோ சூப்ப்ர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. சென்னை அணியில் இன்றும் தொடக்க வீரராக அஜிக்யா ரஹானே களம் இறங்கினார். மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா (பூஜ்யம் ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

அஜிங்க்யா ரஹானே 8.1ஆவது ஓவர் வரை விளையாடி 24 பந்துகளில் 36 ரன் சேர்த்தார். ரச்சின் ஆட்டமிழந்ததும் விளையாடவந்த ருதுராஜ் கெய்க்வாட் 13 பந்துகள் விளையாடி 17 ரன்கள் சேர்த்து 4.2ஆவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர், அதாவது ஐந்தாவது ஓவரில் விளையாட வந்த ஜதேஜா கடைசி ஓவர் வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 57 ரன் எடுத்தார்.

ஷிவம் துபே (3 ரன்) மாற்றும் சமீர் ரிஸ்வி (1 ரன்) இருவரும் இன்று சோபிக்கவில்லை. மொயின் அலி (20 பந்துகளில் 30 ரன்) மற்றும் மஹேந்திரசிங் தோனி (9 பந்துகளில் 28 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் ஜதேஜாவுக்குத் துணை நின்றனர். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கட் இழப்பிற்கு 176 ரன் எடுத்திருந்தது.

          177 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த லக்னோ அணியின் தொடக்க வீரர்கள் க்விண்டன் டி காக் (54 ரன்) மற்றும் கே.எல். ராகுல் (82 ரன்) இருவரும் சிறப்பாக ஆடினர்.

 இவர்கள் இருவரும் அமைத்துக்கொடுத்த அடித்தளத்தில் மேலும் சிறப்பாக விளையாடி நிக்கோலஸ் பூரன் (23 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (8 ரன்) இருவரும் லக்னோ அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். 19 ஓவர்களில் லக்னோ அணி இரண்டு விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்து 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

          லக்னோ அணியின் அணித்தலைவர் கே.எல். ராகுல்  தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நாளை டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.      

19.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்761120.667
கொல்கொத்தா64281.399
சென்னை74380.529
ஹைதராபாத்64280.502
லக்னோ74380.123
டெல்லி7346-0.074
மும்பை7346-0.133
குஜராத்7346-1.303
பஞ்சாப்7254-0.251
பெங்களூரு7162-1.185