பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.
தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.
மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
கேள்வி – நாங்கள் மோதி பக்தர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள். தடைவிதிக்கப்பட்ட 14 ஊடகவியலாளர்களில் நாங்கள் இருவரும் உண்டு.
பதில் –14 பேர் பட்டியலுக்கு ஒரு அர்த்தம் உண்டு. 2014ஓடு தொடர்புடையது 14. சிரிப்பு. ஆகையால் 2024இலே மேலும் 10 இணையும். சிரிப்பு.
கேள்வி– எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது பிரதமர் அவர்களே. உங்களை எதேச்சாதிகாரி என்பவர்களும் கூட சுதந்திரமாகத் திரிகிறார்கள் எனும் போது நீங்கள் என்ன மாதிரியான எதேச்சாதிகாரி? சிரிப்பு. இறந்து போ மோதி என்பவர்களும் கூட சுதந்திரமாகவே திரிகிறார்கள். என்ன மாதிரியான எதேச்சாதிகாரம் இது?
பதில்– நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என் தாயைக் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை என் குடும்பத்தைத் திட்டித் தீர்த்து விட்டார்கள் மிக மோசமான சொற்களைப் பயன்படுத்தினார்கள், ஆனால், அவர்கள் ஏற்படுத்திய எதேச்சாதிகாரி பிம்பத்தில் எல்லா கெட்ட வார்த்தைகளும் போய் அடங்கி விடும். என்ன செய்தாலும் நீங்கள் எதேச்சாதிகாரியே.
தாயில்லாக் குறையைத் தீர்த்து வைத்த நாட்டின்கோடானுகோடி தாய்மார்கள்
நான் வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றபோது… முதன்முறையாக, தாயின், ஆசிகளைப் பெற்றுச் செல்வோம் என்று சென்றேன்.
நான்.. என் சகோதரன் வீடு சென்றேன். அம்மா எனக்கு வெல்லம் கொடுத்தாள். அப்போதிலிருந்து எத்தனை முறை வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறேனோ, அனைத்திற்கு முன்பாகவும் தாயின் பாதம் பணியச் சென்றிருக்கிறேன். வேட்புமனு தாக்க, செய்திருக்கிறேன்.
அவர்களும் வெல்லம் அளிப்பார்கள். என் வாழ்க்கயின் முதல் தேர்தல் இது, இப்போது நான், தாயின் தாள் பணியாமல் செல்கிறேன். ஆனால், மனதில் ஒரு உணர்வும் ஏற்படுகிறது. இன்று 140 கோடி மக்களின் கோடானுகோடி தாய்கள் இருக்கின்றார்கள்.
அவர்கள், என் மீது நிறைய அன்பைப் பொழிந்திருக்கிறார்கள், ஆசிகள் அளித்திருக்கிறார்கள், அவர்களை நினைத்துக் கொண்டு, அதன் பிறகு, அன்னை கங்கை இருக்கவே இருக்கிறாள், அன்னை கங்கை இருக்கிறாள்.
குறை என்னவோ இருக்கிறது!!! அதே சமயம் கோடிக்கணக்கான தாய்களையும் பார்க்கிறேன். ஒருவேளை, உணர்வுரீதியாக, எனக்கு எப்போதுமே, சக்தியை அளித்து வருகிறாள்.
2014 வரை எல்லை தாண்டி இந்தியா வந்து இந்தியர்களையும் பாதுகாப்புப் படையினரையும் போட்டுத் தள்ளுவது பாக். அமைதி மார்க்கத்தவருக்கு பொழுது போக்கு. அவர்களுக்கான யுபிஏ அரசு அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தது அப்போது.
யுபிஏ-2வின் 2011இல் குப்வாரா பகுதிக்குள் நுழைந்த பாக் இராணுவத்தினர், இந்திய இராணுவத்தினரைத் தாக்கியதோடு ஆறு இராணுவத்தினரை முடித்தனர். தங்கள் வெற்றியின் ‘சின்னமாக’ இரு இராணுவ வீரர்களின் தலைகளை வெட்டி பாக் எடுத்துச் சென்றனர்.
எனவே… இராணுவத்துக்கு இருக்கும் ‘சிறு’ அதிகாரத்தை உபயோகிக்க முடிவெடுத்தது குப்வாரா டிவிஷனில் இருந்த இராணுவம்.
உடனே பதிலடி கொடுப்பார்கள் என்று காத்திருந்தது பாக். அதை உணர்ந்த டிவிஷன், காலதாமதம் செய்தது. மூன்று பாக் கிராமங்களை தேர்ந்தெடுத்தது டிவிஷன். நிதானமாக செப்டம்பர் 2011இல் அங்கு பல குழுக்களாகப் பிரிந்து, நுழைந்தது. கிராமத்தை சுற்றியும் கன்னி வெடிகளை பதித்தனர் சில பிரிவினர். மற்ற பிரிவினர் கிராமங்களுக்குள் நுழைந்தனர்.
அவர்களைத் தாக்க வந்த பாக் இராணுவத்தினரை துவம்சம் செய்தனர் நம் வீரர்கள். ‘திட்டத்தோடு வந்திருக்கிறார்கள். ஓடி விடுவோம்’ என்று ஓடத் துவங்கிய பாக் இராணுவத்தினர் கன்னி வெடியில் சிக்கி 72 கன்னியரை நோக்கிப் பயணம்! மொத்தம் 11 பேர் ஜன்னத். அந்த 11 பேரில் நால்வரின் தலையை வெ*ட்*டி பாரதம் எடுத்து வந்தனர் நம்மவர்கள்.
தன் இராணுவத்தினர் தாக்கப் பட்டதற்கு உடனே பதிலடி கொடுக்க முடிவெடுத்து பாய்ந்தனர் குப்வாரா பகுதியில் பாக் இராணுவத்தினர். அவர்கள் வருகைக்காக தயாராக இருந்த நம்மவர்கள் பாக் ஆட்களை போட்டுத் தள்ளினர்.
ரொம்ப அசிங்கப் பட்ட பாக், விவகாரத்தை ஐ.நா எடுத்துச் சென்றது…. இதன் காரணமாக, அந்த ஆப்பரேஷனுக்கு காரணமான இந்திய இராணுவ அதிகாரிக்கு பதவி உயர்வை தடுத்தது யுபிஏ! கொண்டாடப்பட வேண்டியவரை தண்டித்தது கேடுகெட்ட காங்!
இந்த ஆப்பரேஷனுக்கு இஞ்சி (OP GINGER) என்று பெயரிட்டிருந்தனர் நம் இராணுவத்தினர்!
சிவகாசி, மே 9: சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் தனியா பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5பெண் தொழிலாளர்கள் உட்பட 9 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
சிவகாசி அருகே உள்ளது செங்மகலப்பட்டி கிராமம். இங்கு, திருத்தங்கலை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது.
இத்நிலையில், வியாழன்று காலை வழக்கம் போல் பணிக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேதிப் பொருட்களில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வு மற்றும் வெயிலின் சீற்றம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் இருந்த 8 அறைகள் உடைந்து நொறுங்கியது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பொது மக்களின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
வெடி விபத்து நடைபெற்ற அறையிலிருந்து தீயானது , அருகில் உள்ள பல்வேறு அறைகளுக்கும் கண் இமைக்கும் நேரத்தில் பரவியது. இதனால், தொடர்ந்து பட்டாசுகள் வெடித்துச் சிதறிக் கொண்டே இருந்தன. இதன் காரணமாக யாரும் விபத்து நடைபெற்ற இடத்திற்கு நீண்ட நேரமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது . இதனால், மீட்பு பணியிலும் சில மணி நேரம் தொய்வு ஏற்பட்டது
9 பேர் உயிரிழப்பு
பட்டாசு வெடிப்பது நின்றவுடன், தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியும் உடல் சிதறியும் கிடந்த 5 பெண் தொழிலாளர்கள் உட்பட 9 தொழிலாளர்களின் உடலை மீட்டனர்.
இறந்தவர்களின் விவரம்:
சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச்சேர்ந்த மச்சக்காளை என்பவர் மனைவி முத்து(57), அதே பகுதியைச் சேர்ந்த மாயாண்டி மனைவி ஆவுடையம்மாள் (80), கல்போது கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (29), மத்தியசேனை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ரமேஷ்(31), சொக்கலிங்காபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் காளீஸ்வரன் (47) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 4 பேரின் முகம் மற்றும் உடல்கள்சிதறி உள்ளதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
13 பேர் காயம் :
மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்த 13 தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்படு, சிவகாசியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். பின்பு, அங்குள்ள நவீன தீக்காய சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
காயமடைந்தோர் விவரம்:
சிவகாசி, ரிசர்வ் லைன் நேருஜி நகரைச் சேர்ந்த மாரீஸ்வரன் மனைவி மல்லிகா(35), அதே பகுதியைச் சேர்ந்த சித்விநாயகர் மனைவி மாரியம்மாள்(50), அய்யமபட்டியைச் சேர்ந்த இராமமூர்த்தி மனைவி நாகஜோதி(35), மத்திய சேனையைச் சேர்ந்த செல்வம் மனைவி இந்திரா (48), அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மனைவி ரெக்கம்மாள் (40), ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் மனைவி சுப்பலட்சுமி (62), ரிசர்வ் லைன் காந்தி நகரைச் சேர்ந்த மூக்கன் மகன் திருப்பதி(47), அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கண்ணன் (30), திருத்தங்கல்லைச் சேர்ந்த ஜெயராஜ் (42), மத்தியசேனையைச் சேர்ந்த பெருமாள் மகன் அழகுராஜா(30), அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி அம்சவள்ளி(32), நாச்சான் மனைவி வீரலட்சுமி(35), அய்யம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் மனைவி செல்வி (39) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
ஆய்வு :
இந்நிலையில், வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையை மதுரை சரக டிஐஜி ரம்யாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.
இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிஐடியு ஆறுதல் : விபத்தில் பாதிக்கப்பட்ட உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்களுக்கு சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சி.பாண்டியன், சிஐடியு நிர்வாகிகள் கே.முருகன், பி.பாலசுப்பிரமணியன், எம்.முத்துச்சாமி, அம்பேத்குமரேசன், மாரிச்சாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கிடுக : சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தாலும், உற்பத்தியாளர்களின் லாப வெறியின் காரணமாகவும், ஆலைகளை சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்யாததாலும் தொடர் விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே, தமிழக அரசு, விதிமுறைகளை பின்பற்றாத பட்டாசு ஆலைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.அர்ஜூனன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மாநில அரசு பதில் தர வேண்டும்: பாஜக.,
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தொடரும் இந்த பட்டாசு தொழிற்சாலை மரணங்களுக்கு காரணம், மாநில அரசின் அலட்சியமே.
உரிமம் இல்லாமல் நடைபெறும் உற்பத்தி, விதிகளை பின்பற்றாமல் அல்லது பாதுகாப்பு விதிகளை மீறி நடைபெறும் தொழிற்சாலைகள் இயங்குவது அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் லஞ்சம், ஊழலினால் தான்.
ஒவ்வொரு முறையும் இது போன்ற மரணங்கள் நிகழும் போது சில லட்சங்களை இழப்பீடாக வழங்கி விட்டு அடுத்த மரணங்களை எதிர் நோக்கி காத்திருப்பது வெட்கக்கேடு. உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். சிவகாசியில் உள்ள பெரிய பட்டாசு நிறுவனங்களை ஆலோசித்து தீர்வு காண முனைய வேண்டும் தமிழக அரசு.
மேலும், இந்த மரணங்களுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது… என்று, பாஜக, மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
இன்று ஹைத்ராபாத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
லக்னோ அணியை (165/4, ஆயுஷ் பதோனி 55*, நிக்கோலஸ் பூரன் 48*, கே.எல். ராகுல் 29, க்ருணால் பாண்ட்யா 24, புவனேஷ் குமார் 2/12) ஹத்ராபாத் அணி (9.4 ஓவரில் 167/0, ட்ராவிஸ் ஹெட் 89*, அபிஷேக் ஷர்மா 75*) 10 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற லக்னோ அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் க்விண்டன் டி காக் (2 ரன்) மூன்றாவது ஓவர் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் மூன்றாவதாகக் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோயினிஸ் (3 ரன்) அவிட்டானார்.
அதன் பின்னர் க்ருணால் பாண்ட்யா (21 பந்துகளில் 24 ரன்) ஆட வந்தார். அவர் கே. எல். ராகுல் (33 பந்துகளில் 29 ரன்), இணைந்து மிக நிதானமாக ஆடினார். க்ருணால் 11.2ஆவது ஓவரிலும், ராகுல் 9.6ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அவர்களுக்குப் பதிலாக ஆடவந்த நிக்கோலஸ் பூரன் (26 பந்துகளில் 48 ரன்), ஆயுஷ் பதோனி (30 பந்துகளில் 55 ரன்) அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 165 ஆக உயர்த்தினர்.
19ஆவது ஓவரில் 15 ரன்னும், 20ஆவது ஓவரில் 19 ரன்னும் அடிக்கப்பட்டது. இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கட்டுகள் இழப்பிற்கு 165 ரன் எடுத்தது.
166 ரன் என்ற எளிய இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய ஹதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் போரல் (28 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 75 ரன், 8 ஃபோர், 6 சிக்சர்) மற்றும் ட்ராவிஸ் ஹெட் (30 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 89 ரன், 8 ஃபோர், 8 சிக்சர்) இருவரும் 9.4 ஓவர்களில் 167 ரன் அடித்து மிக மிக எளிதாக அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தனர்.
லக்னோ அணிக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது எனப் புரிவதற்கு முன் ஆட்டம் முடிந்துவிட்டது. ட்ராவிஸ் ஹெட் 16 பந்துகளிலும் அபிஷேக் ஷர்மா 18 பந்துகளிலும் 50 ரன் அடித்தனர்.
சன்ரைசர்ஸ் அணி பவர்பிளே ஓவர்களுக்குள் 100 ரன் அடித்துவிட்டது. தொடக்கத்தில் பந்துவீசும்போது அவர்களது பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் நாலு ஓவர் வீசி 12 ரன் கொடுத்து 2 விக்கட் வீழ்த்தியதே அணிக்கு ஒரு பெரிய பூஸ்ட் என்றால், பின்னர் ஹெட் மற்றும் அபிஷேக்கின் ஆட்டம் இந்தப் போட்டியின் ஏனைய போட்டிகளில் அவர்களை உயிர்ப்புடன் வைக்கும்.
அவர்கள் சந்தித்த 9.4 ஓவர்களில் ஒவ்வொரு இரண்டாவது பந்தும் சிக்சாகவோ ஃபோராகவோ இருந்தது. ஆனால் சோகம் என்னவென்றால் ட்ராவிஸ் ஹெட் ஆஸ்திரேலிய அணியில் வருகின்ற டி20 உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படவில்லை.
ஹைதராபாத் அணியின் ட்ராவிஸ் ஹெட் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
பெருந்துறையை அடுத்துள்ள ஸ்லேட்டர் நகர் பகுதியில் எதிரே வந்த பைக் மோதிய விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருந்துறையை அடுத்துள்ள கணக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சென்னிமலை கவுண்டர் மகன் கந்தசாமி (65). விவசாயியான இவர், நேற்று மாலை தனது சொந்த வேலையாக துடுப்பதிக்கு தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவருக்கு எதிரே வந்த ஒரு பைக் எதிர்பாராத விதமாக இந்த ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கந்தசாமி, உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஈரோடு தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வந்த அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்
காவேரி ஆற்றின் கரையில் மயிலாடுதுறைக்கும் இடையில் இருக்கும் அந்த ஆலயம் மகா சிறப்பானது, அதனாலே அங்கிருக்கும் லிங்கம் மகாலிங்கம் என வணங்கபடுகின்றது, காவேரி கரையின் மகா தொன்மையானதும் மாபெரும் சக்தி கொண்டதுமான அவ்வாலயம் காலத்தால் யுகங்களால் பழமையானது
அதன் மூலம் பிரம்ம தேவன் ஊழிகாலத்தில் செய்த காரியத்தில் இருந்து தொடங்குகின்றது, யுகமுடிவின் ஊழிகாலத்தில் பிரம்மன் அமுதத்தை ஒரு கலயத்தில் வைத்து மூடி மிதக்கவிட , பின் வெள்ளம் வடியும் போது அந்த அமுதம் சிந்திய இடங்களில் இதுவும் ஒன்று
அதாவது அந்த புராண கதையின் மூலம் அமுதம் உண்ட பலனை அதாவது நல்ல புண்ணிய பலனை தந்து தேவர்கள் போல் வாழும் வரம் அருளும் ஆலயம் என பொருள்
இதன் வரலாறும் பெருமையும் நீண்டது , ஒரு தனி புத்தகமாக வரகூடியது என்றாலும் முடிந்தவரை சுருக்கமாக காணலாம்
காவேரிகரையில் காசிக்கு சமமான புண்ணியங்களை தரும் ஆலயங்கள் ஆறு உண்டு, திருவையாறு, திருசாய்க்காடு (சாயாவனம்), திருவெண்காடு, திருவாஞ்சியம் மற்றும் மயிலாடுதுறை என உண்டு இதில் முக்கியமானது இந்த திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி ஆலயம்
இதன் பெருமையும் தொன்மையும் பழைய சுவடிகளில் நிரம்ப உண்டு
சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.
மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன , அந்த அளவு இது பழமையானதும் முக்கியமான ஆலயமுமாகும்
இந்த ஆலயத்தை ஸ்தாபித்த வரலாறு அகத்திய முனிவரில் இருந்து தொடங்குகின்றது, அகத்தியர் தென்னகம் வந்து காவேரியினை திருப்பி சோழநாட்டிற்கு அனுப்பி அதன் கரையெல்லாம் சிவாலயம் ஸ்தாபித்ததில் இருந்து தொடங்குகின்றது
அவர் பிரம்மன் அனுப்பிய அமிர்த துளிகள் அடையாளம் காட்டிய இடம், சக்திமிக்க இடம் இது என அறிந்து அங்கே அமர்ந்து ஈசனை வேண்டினார், இங்குவரும் மக்களெல்லாம் தங்கள் கர்மம் அழிய, தங்கள் பிணி அழிய, தேவ்ர்களை போல பெருவாழ்வு வாழும் வரம் பெற தவமிருந்தார்
அவரின் வேண்டுதலுக்கு ஏற்ப ஈசனே வந்து வரமருளினார், ஈசனே ஜோதிலிங்கமாக இங்கு அமர்ந்தார், அத்தோடு மட்டுமல்ல எப்படி வழிபாடுகளை செய்யவேண்டும் என சிவனே வழிபட்டு சொல்லி கொடுத்தார்
சிவனே சிவபூஜை செய்த தலம் இது, அதாவது சிவனே “காமிகா ஆகமம்” எனும் மகா முக்கிய ஆகமத்து விதிகளை இங்கே போதித்து அதை தானே செய்துகாட்டி போதனையே நடத்தினார்
ஆகமங்கள் மொத்தம் 28, அதில் முக்கியமானது இந்த காமிகா ஆகமம், சைவ ஆகமங்களில் தலையாயது
ஆகமங்கள் என்றால் எப்படி ஆலயம் அமைய வேண்டும், என்னென்ன அம்சம் கொண்டிருக்க வேண்டும், எப்படியான அளவுகளில் எல்லாம் அமைய வேண்டும் சிற்பம் கருவறை விதி என்ன? பூஜை விதி என்ன? காலம் என்ன? என எல்லாமும் சொல்லி விளக்கும் போதனை தொகுப்பு
இது வித்யா பாதம் அல்லது ஞான பாதம், கிரியா பாதம். யோக பாதம், சரியா பாதம் என நான்கு பிரிவுகளை கொண்டிருக்கும், காமிகா ஆகமம் சிவவழிபாட்டை முழுமையாக போதிக்கின்றது
“காமிகம்” எனும் சொல்லுக்கு விரும்பியதை அடைவது என பொருள், அதாவது தான் விரும்பிய ஒன்றை பெற்று தவிப்பில் இருந்து விடுதலை அடைவது என பொருள்
ஆத்ம விடுதலையினை குறிக்கும் தத்துவம் இது, ஆம் இந்த காமிகா ஆகமம் முழுக்க முறையான வழிபாட்டால் ஆத்ம விடுதலை அடைவது எப்படி என்பதை சொல்கின்றது அதன் தாத்பரியம் இதுதான்
இப்படியான பெரும் அற்புதம் நடந்த ஆலயம் இது, இங்கிருந்துதான் இதன் வரலாறு தொடங்குகின்றது, அப்படி அகத்தியர் அழைத்து வந்த சிவபெருமானால் ஸ்தாபிக்கபட்டு மக்களுக்காக மக்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காக கொடுக்கபட்டது
மருதமரங்கள் இடையில் லிங்கம் வந்ததாலும், இரு அர்ஜூனங்களுக்கு இடையில் அமைந்த அர்ஜுனம் என்பதாலும் அது இடைமருதூர் என்றாயிற்று, பின் திருஇடை மருதூர் என அழைக்கபட்டு பின் திருவிடை மருதூர் என்றாயிற்று
சண்பகாரணியம், சத்திபுரம், தபோவனம், ஜோதிநகர், சர்வதீர்த்தபுரம், வில்வாரணியம், தருமவிருத்திபுரம், முத்திபுரம், பூலோக சிவலோகம், வீரசோழநகரம் ஆகிய பெயர்களையும் இது பெற்றது
மூவேந்தர்களும் ஏகபட்ட சிற்றரசர்களும் கட்டிவளர்த்த இந்த ஆலயம் தேவாரம் பாடிய மூவராலும் மாணிக்க வாசகராலும் பாடபட்டது
“இடைமருதில் மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே” என பாடுகின்றார் சம்பந்தர்
“இடைமருதுமேவிய ஊசனாரே” என்பார் அப்பர் சுவாமிகள்
“இடைமருதுறை எந்தை பிரானே” என பாடுகின்றார் சுந்தரர்
இம்மூவரும் ஏகபட்ட பாடல்களை இந்த வரியோடு பாடினார்கள், இங்கு வந்து பாடினார்கள் அவ்வகையில் இது தேவாரம் பாடபெற்ற ஸ்தலம்
“எந்தையெந்தாய் சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய பந்தம் அறுத்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான் அந்த இடைமருகில் ஆனந்தத் தேனிருந்த பொந்தைப் பரவி நாம் பூவல்லி கொய்யாமோ”
பட்டினத்து அடிகள் இங்கேதான் தன் பிரசித்தியான மும்மணிகோவையினை இயற்றி பாடினார்
அருணகிரி நாதர், கவி காளமேகமெல்லாம் வந்து பாடிய தலம் இது, கருவூர் சித்தரின் விருப்பமான தலம் இது
மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்து வரமருளினார்
பட்டினத்தாரின் சீடரான உஜ்ஜைனியின் மகாராஜா பதிருஹரியார், காசியில் பட்டினத்தாரோடு சன்னியாசம் ஏற்ற அந்த பத்ருஹரியார், பெரும் சிவனடியாராகி பெரும் தத்துவபாடல்களை கொட்டிய அந்த பத்ரஹரியார் சமாதி கொண்ட தலம் இதுதான்
இப்படி ஏகபட்ட பெருமைகளை கொண்ட ஆலயம் இது
சுவாமி மலை உள்பட மகா பிரசித்தியான தலங்கள் சுற்றி அமைய இந்த ஆலயம் மகாலிங்கம் என வீற்றிருக்கின்றது, திருவலஞ்சுழி, சுவாமிமலை, திருவாரூர், சிதம்பரம், ஆலங்குடி ,திருவாவடுதுறை – நந்திகேஸ்வரர், திருசேய்நலூர், சீர்காழி,சூரியனார்கோவில் என மகா முக்கிய கோவில்கள் இந்த ஊரை சுற்றி உண்டு
அப்படி பெரும் ஆலயங்கள் ஊருக்கு வெளியில் இருந்தாலும் இந்த ஆலயத்தை சுற்றி ஊருக்குள் இருக்கும் ஆலயங்களும் பிரசித்தியானவை
“திருவாரூர் தேர் அழகு திருவிடைமருதூர் வீதி அழகு” என்பார்கள், அந்த ஊரின் வீதிகள், இந்த மகாலிங்கம் இருக்கும் வீதிகள் அவ்வளவு அழகானவை புனிதமானவை
காரணம் அந்த தேரோடும் வீதிகளில் அமைந்திருகும் ஆலயங்கள் அப்படி
அந்த தேரோடும் நான்கு வீதிகளின் மூலைகளிலும் நான்கு விநாயகர் கோயில்கள் உள்ளன. தேரடியில் விநாயகர் கோயிலும், கீழவீதியில் விசுவநாதர் கோயிலும், மேல வீதியில் ரிஷிபுரீஸ்வரர் கோயிலும், தெற்கு வீதியில் ஆத்மநாதர் கோயிலும், வடக்கு வீதியில் சொக்கநாதர் கோயிலும் அழகுற ண்டு
இவற்றிற்கு மத்தியில் மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கின்றார். எனவே இத்தலத்தை “பஞ்ச லிங்கத்தலம்” என்றும் வணங்குவார்கள்
இந்த கோவிலின் வடக்குக் கோபுர வாயிலில் அகோர வீரபத்திரர் கோயிலும், மேற்குக் கோபுர வாயிலில் குமரன் கோயிலும் உள்ளன. கிழக்கு வாயிலில் படித்துறை விநாயகரும் பட்டினத்தாரும், மேல் வாயிலில் பர்த்ருஹரியாரும் தரிசனம் தருகின்றனர்.
அதாவது இங்கு சிவன் ஜோதி வடிவாகவும் இதனை சுற்றியுள்ள நான்கு திசைகளிலும் மற்ற நான்கு பூதங்களுக்குரிய கோயில்களும் அமைந்திருக்கின்றன.
இங்குள்ள சொக்கநாதர் கோயிலில் உள்ள மூர்த்திக்கு அபிஷேகம் செய்து மேகராகக் குறிஞ்சி பண்பாடினால் மழைபெய்யும் என்பது ஐதீகம், இந்த நம்பிக்கை எல்லா வறட்சி காலங்களிலும் பொய்த்ததில்லை, மிக கொடியவறட்சியில் இங்கு குறிஞ்சிபண்ணில் சரியாக பாடினால் மழை கொட்டும், அது வாடிக்கை
இந்த ஆலயத்தில் எங்குமில்லா சிறப்பாக ஆலய பிரகாரங்கள் அமைந்திருக்கின்றன
இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
வெளிப் பிரகாரமாம் என்பது அஸ்வமேதப் பிரகாரம் என அழைக்கபடுகின்றத் இந்த்ப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும்
இரண்டாம் பிரஹாரம் முடிப் பிரகாரம், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
மூன்றாம் பிரகாரம் ப்ரணவப் பிரகாரம், இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும்
இந்த ஆலயம் கர்மம் தீர்க்கும் ஆலயம் , ஒருவனின் கர்மம் தீர்த்து அவனின் பாவகர்மத்தினை தீர்த்து புதுவாழ்வு அருளும் ஆலயம்
இந்த மூன்று அர்ஜூன தலங்களும் மும்மலங்களை, ஆணவம், கண்மம், மாயை எனும் மும்மலங்களை போக்கும் என்பது தாத்பரியம், அவ்வகையில் நெல்லை தாமிரபரணி கரையில் உள்ள புடார்ஜனம் எனும் கடையார்ஜூனம் மாயையினை போக்குவது
இந்த ஆலயம் கர்மத்தை அழிப்பது
அப்படி கர்மம் அழிந்து நன்மை பெற்றவர்கள் ஏராளம் உண்டு, இந்த ஆலயமே அதற்குத்தான் சிவனால் உருவாக்கபட்டு, கர்மம் அழிக்கும் காமிகா ஆகமபடி உருவாக்கபட்டு ஆன்ம விடுதலையினை கொடுக்கும்படி ஸ்தாபிக்கபட்டு கர்மத்தை அழித்து ஆன்ம விடுதலையினை முக்தியினை கொடுப்பது
உமாதேவியார், விநாயகர், சுப்பிரமணியர், கோடி உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரமாதி தேவர்கள், லட்சுமி, சரஸ்வதி, மூன்று கோடி முனிவர்கள் இங்குதான் தங்கள் கர்மம் தொலைத்தார்கள்
காசியிலிருந்து ஞானம் தேடி ஆத்ம விடுதலை தேடி அலைந்த பத்ரஹரியார் இங்குதான் ஞானமடைந்து முக்தியடைந்து சமாதி அடைந்து இன்றும் அரூபியாக நிற்கின்றார்
இந்த ஆலயம் ஞானம் வழங்கும் ஆலயம் கர்மம் அழிக்கும் ஆலயம் புதுபிறப்பு கொடுக்கும் ஆலயம்
அதனாலே மூகாம்பிகைக்கு கொல்லூரை அடுத்து இங்கு மட்டும்தான் தனி சன்னதி அமைந்துள்ளது
மூகாம்பிகை கர்மம் களைபவள், கர்மவிதியினை அழித்து புதிய விதி புதிய வாழ்க்கை தருபவள், அவள் கொல்லூரை அடுத்து குடிகொண்ட ஒரே ஒரு ஆலயம் இது என்பதிலே இதன் சிறப்பு விளங்கிவிடும்
இந்த ஆலயத்தின் மாபெரும் தாத்பரியத்தை , இது கர்மம் அழிக்கும் என்ற பெரும் உண்மையினை ஒரு பக்தனை கொண்டே உலகுக்கு ஒரு நாடகம் மூலம் சொன்னார் சிவன்
அந்த பக்தனின் பெயர் வரகுண பாண்டியன். ஆம், பாண்டியரில் புகழ்பெற்ற மன்னன்
நின்றசீர் நெடுமாறன் எனும் நாயான்மாரும் பாண்டிய மன்னனுமானவரின் கொள்ளு பேரன், எல்லா தமிழக மன்னர்களை போல் அவனும் அப்பழுக்கற்ற சிவபக்தன்
அந்த சிவபக்தனுக்கு ஒரு பெரும் சோதனை வந்தது, அவன் ஒருமுறை குதிரையில் செல்லும் போது கட்டுபாட்டை இழந்த குதிரை ஒரு அந்தணனை கீழே தள்ளி மிதிக்க அவன் இறந்துவிட்டான்
அவன் தவவலிமை மிக்க அந்தணன் அதனால் அவன் ஆவி உக்கிரமாக இருந்தது , பிரம்மகத்தி தோஷத்தில் சிக்கிய வரகுண பாண்டியனை அந்த தோஷமும் இந்த ஆவியும் பிடித்து ஆட்ட தொடங்க்கிற்று
மன்னனுக்கு மாந்ரீகம் பலனளிக்கவில்லை, யாகம் பலனளிக்கவில்லை, எந்த பரிகாரமும் பலனளிக்கவில்லை
பிரம்மகத்தி தோஷம் என்பது அப்படியானது, எல்லோரும் நினைப்பது போல் அது பிராமணனை கொன்றால் மட்டும் வருவது அல்ல, எவன் தவத்தில் சிறந்தவனோ எவன் பக்தியில் உயர்ந்தவனோ எவன் வேத ஞானத்தில் மகா உயர்ந்த அறிவில் இருப்பவனோ அவனை கொல்வது எல்லாமே பிரம்மகத்தி தோஷம்
ஒருவனுக்கு அறிவும் தவமும் வாய்ப்பது அரிது, அதை கொண்டு அவன் பல்லாயிரகணக்கான மக்களை வழிகாட்டமுடியும், ஞானம் கொடுக்கமுடியும்
அப்படிபட்ட ஒருவனை கொல்வதால் ஏராளமான மக்களை அறியாமையில் தள்ளும் பாவத்தை ஒருவன் செய்வதாலே அந்த தோஷம் தீர்க்கமுடியா பிரம்மஹத்தி என்றாயிற்று
வரகுண பாண்டியனும் அதில்சிக்கினான், உடல் தளர்ந்தது அவ்வப்ப்போது குழப்பம் வந்தது, முக்கியமாக அவனால் உறங்கமுடியவில்லை, பிரம்மஹத்தி தோஷமும் அந்தணன் ஆவியும் அவனை பாடாய் படுத்தின
பாண்டிய மன்னர்கள் சிவனடியார்கள், ஆலவாய் நாதன் முதல் ராமேஸ்வரம் நெல்லை தென்காசி குற்றாலம் என பெரும் பெரும் சிவாலயங்களை கட்டியவர்கள், அப்படிபட்ட பாண்டியர்களின் மன்னன் கடைசியில் சிவனிடமே அடைக்கலமானான்
சிவபெருமான் அவனுக்கு இறங்கிவந்து சொன்னார், “பாண்டியா இது கர்மவினை, உன் கர்மத்தை மாற்றும் சக்தி திருவிடைமருதூர் ஆலயத்துக்கே உண்டு, அங்கே சென்று உன் கர்மம் தீர்ப்பாய்”
பாண்டிய மன்னன் ஆழ்ந்த சிந்தனையில் அமர்ந்தான், காரணம் பாண்டிய நாட்டில் இல்லா சிவாலயங்கள் இல்லை ஆனால் சிவனோ சோழநாட்டு சிவாலயத்துக்கு செல்ல சொல்கின்றார்
சோழநாடோ பகைநாடு, தன்னை நிச்சயம் சோழமன்னன் அனுமதிக்கபோவதில்லை என்பதால் மிக மிக குழம்பினான்
அப்போதுதான் செய்திவந்தது, சோழமன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்துவரும் செய்தி அது
அதாவது பாண்டிய மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷத்தால் ஆரோக்கியம் சிந்தை கெட்டது, மனமும் சிந்தையும் பாதிக்கபட்டது இப்போது போர் தொடுத்தால் வெற்றி என சோழமன்னன் திட்டமிட்டு வந்தான்
ஆனால் போரில் சோழமன்னன் தோற்றான் பாண்டியனே வெற்றிபெற்றான், அது சிவனருளால் நடந்தது
பின் வரகுண பாண்டியன் திருவிடை மருதூருக்கு சென்றான், அந்த அந்தணன் ஆவியும் தோஷமும் அவனோடே சென்றது
“பாண்டியா முன்வாசல் வழியாக வந்து காசிநோக்கி இருக்கும் வடக்கு வாசல் வழியாக செல்” என அவனுக்கு உத்தரவும் வந்தது
பாண்டிய மன்னன் ஆலயத்தில் நுழையும் போது அவனை பிடித்திருந்த ஆவியால் நுழையமுடியவில்லை அது வெளியில் நின்று மன்னன் வரட்டும் என காத்திருந்தது
மன்னனோ சிவனை வணங்கினான், உருகினான் பெரும் வழிபாடுகளை நடத்தினான், பலமணிநேரம் அவன் அங்கே அமர்ந்தபின் அவன் வடக்குவாசல் வழியாக வெளியேறி பாண்டிநாட்டுக்கு வந்தான்
கோவில் வாசலில் நின்றிருந்த ஆவிக்கு சிவன் நற்கதி அருளினார், அந்த தோஷமும் நீங்கிற்று
அவன் அங்கே கர்மம் நீங்கி புதுபிறப்பை அடைந்தான், பின் அவன் மாபெரும் சிவபணிகளை செய்து பெரும் புகழுடன் எதிரிகளே இல்லாத மன்னனாக வாழ்ந்து முடிந்தான்
பாண்டிய மன்னர்களில் அவனுக்கென பெரும் இடம் உண்டு, அப்படியான பெருநிலையினை இந்த திருவிடை மருதூர்தான் கொடுத்தது
ஆம், அக்கோவிலில் கிழக்குவாசல் வழியாக சென்று காசியினை நோக்கிய வடக்குவாசல் வழியாக வந்தால் கர்மம் கழியும் என்பது அந்த காட்சியில் சிவன் சொன்ன போதனை
அந்த வழமை இன்றுவரை உண்டு, இன்றுவரை பின்பற்றபடும் நடைமுறை அது
ஆம் , அந்த ஆலயம் ஒருவரின் கர்மபலன்களை கழிக்கும், அழிக்கும், அவர்களை புதுபிறப்பாக மாற்றி வாழவைக்கும்
இந்த இடையார்சுனம் எனும் திருவிடைமருதூர்தான் ஆண்மம், கர்மம், மாயை எனும் மும்மலத்தின் இடையில இருக்கும் கர்மத்தை அழிக்கும் சக்தி கொண்டது
இந்த ஆலயத்துக்கு சென்றுவழிபட்டால் கர்மம் கழியும், இங்கே , 27 நட்சத்திரங்கள் வழிபட்டு அருள் பெற்றதால் நட்சத்திரத் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.
அதனால் 27 நட்சத்திரங்களுக்கும், 27 லிங்கங்கள் ஆடல்வல்லான் மண்டபத்தில் சாட்சியாக அமைந்துள்ளன
இது சந்திரனுக்குரிய தலம், சந்திரன் என்பது மன சம்பந்தபட்ட கிரகம், மனமே எல்லாவற்றுக்கும் காரணம் ஒருவன் கர்மமானது அவன் மன சிந்தனையால் அது கொடுக்கும் வழி நடப்பது
அந்த மனம் தெளிவாக இருத்தல் அவசியம்
வரகுண பாண்டியன் மனதினால் பாதிக்கபட்டான், அவன் சிந்தை பாதிக்கபட்டது ஒருவித இருள் அவன் மனதில் குடிகொண்டது
தீய ஆவி ஆதிக்கம், செய்வினை, பில்லி சூனியம் என்பதெல்லாம் இந்த மனதை முடக்குபவை, மனம் என்பது சந்திரனின் ஆதிக்கம்
இதனாலே மனபாதிப்பு கொண்டவர்கள் பௌர்ணமி அமாவாசைகளில் கொஞ்சம் அதிக உணர்வோடு இருப்பார்கள்
அப்படியான சந்திரன் அருள் வழங்கும் தலம் இது, அங்கே சிவனருளும் சேர்ந்து தன் சாபம் நீங்கி தெளிவு பெற்றான் வரகுண பாண்டியன்
இந்த ஆலயம் கர்மம் போக்கும், அப்படியே சித்தபிரம்மை, மனநோய், பில்லி சூன்யம், ஏவல் போன்ற பாதிப்புகளுக்கு இது ஆக சிறந்த பரிகார தலம்
இங்கே மனவியாதிகள், ஏவல்கள், பேய் பிசாசு பாதிப்புகள், சித்த பிரம்மை, பில்லி சூனியம் என பாதிக்கபட்டோர் வந்து வேண்டினால் பலன் நிச்சயம் உண்டு
21 நாட்கள் அங்கு விளக்கேற்றி அன்னை மூகாம்பிகையிடம் வேண்டி இந்த பிரகாரங்களை சுற்றி சிவனை சரணடைந்து வழிபட்டால் எந்த பில்லிசூனியமும், பேய் பிசாசுகள் சாபமும் , முன்னோர் சாபமும் எல்லா பாவமும் கழியும், சித்த பிரம்மை சீராகும் இது சத்தியம்
இங்கு 32 தீர்த்தங்கள் உண்டு. இவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் மகா பிரசித்தி
அப்படியே இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் ஏராளம் உண்டு
அக்காலத்தில் யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற வாரிசை இங்கு நீராடித்தான் பெற்றான்
சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் இங்கு வந்தே வாரிசை பெற்றுகொண்டான்
தேவவிரதன் என்ற கள்வன் தன் தீய கர்மாவால் இறந்து இங்கே புழுவாய் பிறந்து, இந்த தீர்த்தம் பட்டதால் பாவம் தீர்ந்து முக்தியடைந்தான் என்பது புராண செய்தி
இத்தலம் கர்மா கழிக்கும், பேய் பிசாசு ஏவல் பில்லி சூன்யங்களை ஒழிக்கும், சித்தபிரம்மை மனநோய்களை குணபடுத்தும், இன்னும் மகப்பேற்றை அருளும்
ஜாதகத்தில் சந்திரனால் பாதிப்பு இருந்தால்,சந்திர புத்தி பாதிப்பு இருந்தால் இங்கு வழிபட்டால் தீரும்
இன்னும் பிரம்மஹத்தி தோஷம் முதல் சனிதசா முதல் எல்லா பாதிப்பும் தோஷமும் நீங்கும்
சோழர், பாண்டியர், மராட்டியர், நாயக்கர் என தலைமுறை தலைமுறையாய் கொண்டாடபடும் ஆலயம் இது
இது சிவபெருமானே வந்து ஸ்தாபித்து வழிபட வகைகளும் பூஜை தத்துவங்களும் ஏற்படுத்தி கொடுத்த தலம்
அவரே தேவர்களை வழிபட செய்து மக்களுக்கு வழிகாட்டிய தலம்
மன்னர்களும் சிறந்த ஒருவனை கொண்டே, அந்த வரகுண பாண்டியனை கொண்டே எல்லா மக்களுக்கும் இந்த ஆலயத்தின் பெருமையினை உரக்க சொன்ன ஸ்தலம்
அங்கே சிவன் வரகுண பாண்டியனுக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்கும் அற்புதம் செய்ய காத்து கொண்டிருக்கின்றார், ஒவ்வொருவரின் கர்மமும் துயரமும் குழப்பமும் கஷ்டமும் நீங்க எதிர்பார்த்து கொண்டிருக்கின்றார்
அந்த ஆலய கதவுகள் உங்களுக்காக திறந்துள்ளன, அந்த நடைபாதைகள் உங்களுக்காக காத்திருகின்றன
சிவனருள் உங்களுக்கு கிடைக்குமென்றால் நிச்சயம் செல்லுங்கள், தேடி செல்லுங்கள் உங்கள் கர்மா தீரும், பாவமும் சாபமும் தீரும், கண்ணுக்கு தெரியா சூட்சும சிக்கலெல்லாம் தீரும் வாழ்வு சிறக்கும்
அந்த சிவனோடு கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகையும் உங்களுக்கு ஞானமும் கல்வியும் தெளிவும் அறிவும் திருவும் வழங்க காத்து கொண்டிருக்கின்றாள்
இந்த மூகாம்பிகை மகா விஷேஷமானவள் மூகாசுரனை சம்ஹரித்த சாபம் நீங்க மூகாம்பிகை இங்கு வந்து நிவர்த்தி பெற்றாள்
மாங்கல்ய தோஷம், களத்திர தோஷம் ஆகியவற்றுக்கு இக்கோயிலில் உள்ள ஸ்ரீமூகாம்பிகைக்கு அபிஷேகம் செய்தால் எல்லாம் மாறும் . இந்த அம்பிகையை மனமுருக பிரார்த்தனை செய்யும் திருமணம் ஆன பெண்களுக்கு கர்ப்பம் வாய்க்கும் அப்படியே சுக பிரசவம் அமையும்
இழந்ததையெல்லாம் மீட்டுதரும் ஆலயம் இது
தஞ்சை அரசின் ஆட்சி உரிமையை இழந்த பிரதாப சிம்மன் என்னும் அரசனின் மனைவியான அம்முனு என்பவள், தாங்கள் மீண்டும் ஆட்சியைப் பெறவும் தங்கள் திருமணம் நிறைவேறவும் இங்கு வந்து லட்ச தீபம் ஏற்றினாள், எல்லா மீள பெற்றாள்
பின் தானே எந்த கோலத்தில் பாவை விளக்கைத் தாங்கி நின்று வழிபட்டால்ளோ அதுபோலவே ஒரு திருவிளக்கை செய்து கொடுத்ததும் தன் பிராத்தனையை நிறைவேற்றினாள்.
அந்த விளக்கு இன்றும் அவள் பெற்ற வரத்தையும் சிவனின் அருளையும் சொல்லி ஒளிவிட்டுகொண்டிருக்கின்றது
திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் தன்னை ஜோதிவடிவாக மாற்றி, காயத்தை காற்றில் கரைத்து சிவனோடு ஐக்கியமான தலம் இது
குரு தலங்களில் திருவிடைமருதூர் மிகவும் முக்கியமானது. திருவிடைமருதூர் ஆலயத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி வேறெங்கும் காண முடியாத வித்தியாச கோலம் கொண்டவர்.
அந்த திருவிடை மருதூர் மகாலிங்க நாதனை சென்று வணங்குங்கள், என்னென்ன கஷ்டம் உண்டோ எல்லாமே கரையும், எனென்ன சிரமமும் துயரமும் கண்ணீரும் உண்டோ எல்லாம் மாறும் புதுபிறப்பாய் வாழ தொடங்ங்குவீர்கள் இது முக்கால சத்தியம்
இன்று டெல்லியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது.
டெல்லி அணி (221/8, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 50, அபிஷேக் போரல் 65, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 41, குல்புடீன் நயிப் 19, அக்சர் படேல் 15, ரிஷப் பந்த் 15, அஷ்வின் 3/24) ராஜஸ்தான் அணியை (201/8, சஞ்சு சாம்சன் 86, ரியன் பராக் 27, ஷுபம் துபே 25, ஜாஸ் பட்லர் 19, ரொவ்மன் போவல் 13, கலீல் அகமது2/42, முகேஷ் குமார் 2/30, குல்தீப் யாதவ் 2/25) 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் டெல்லி அணி முதலில் மட்டையாடவந்தது. டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (20 பந்துகளில் 50 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் அபிஷேக் போரல் (36 பந்துகளில் 65 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தனர்.
அதற்குப் பின்னர் ஷாய் ஹோப் (1 ரன்), அக்சர் படேல் (15 ரன்), ரிஷப் பந்த் (15 ரன்)எடுத்து ஆட்டமிழந்தனர். ஆயினும் அவர்களுக்குப் பின்னர் ஆடவந்த ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (20 பந்துகளில் 41 ரன், 3 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் குல்பதீன் நயீப் (15 பந்துகளில் 19 ரன்) எடுத்தனர்.
பின்னர் ரசிக் சலாம் (9 ரன்), குல்தீப் யாதவ் (5 ரன்) எடுத்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 221 ரன் எடுத்தது.
222 ரன் என்பது அடையக்கூடிய சற்றே கடினமான இலக்கு. இந்த இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஸஷ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்தில் நான்கு ரங்கள் அடித்து இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்திய டி20 அணிக்கு தொடக்க வீரராகத் தேர்வாகியிருக்கும் இவரும் ரோஹித் ஷர்மாவும் இதுவரை நல்ல ஆட்டங்களை தொடர்ந்து வழங்கவில்லை. தொடர்ந்து மிகக் குறைவான ஸ்கோரில் ஆட்டமிழக்கிறார்கள் என்பது சற்று கவலைக்குரிய விஷயம்.
மற்றொரு தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் (இம்பேக்ட் வீரராக ஆட வந்தவர்) 19 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனால் வெற்றிக்கான முழுச் சுமையும் சஞ்சு சாம்சனின் தலையில் வ் களம் இறங்கியது. அவர் 15.4 ஓவர் வரை விளையாடி 46 பந்துகளில் 86 ரன் அடித்தார். அதில் 8 ஃபோர், 6 சிக்சர் அடக்கம். அவருக்குத் துணையாக ரியன் பராக் (22 பந்துகளில் 27 ரன்) மற்றும் ஷுபம் துபே (12 பந்துகளில் 25 ரன்) கொஞ்ச நேரம் கம்பனி கொடுத்தனர். சஞ்சு ஆட்டமிழக்கும்போது அணியின் வெற்றிக்கு 60 ரன் கள் தேவையாக இருந்தது. ஆனால் மற்ற வீரர்களால் அதனை எடுக்க முடியவில்லை.
ரொவ்மன் போவல் (13 ரன்), டொனோவன் ஃபெரைரா (1 ரன்), அஷ்வின் (2 ரன்), போல்ட் ஆட்டமிழக்காமல் 2 ரன்) மர்றும் ஆவேஷ் கான் (ஆட்டமிழக்காமல் 7 ரன்) எடுத்தபோதிலும் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 201 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தொல்வியடைந்தது.
டெல்லி அணியின் குல்தீப் யாதவ் தனதுசிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.
நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது. மேலும் ஆட்சிக்கு வந்த பிறகு, முதல் 100 நாட்களின் தீர்மானங்களின் மீது, பணிகள் நடந்து வருகின்றன.
இங்கே இண்டிக்கூட்டணிக்காரர்களும் கூட, தங்கள் தாளம், தங்கள் ராகம், பாடி வருகிறார்கள். இதைக் கேட்டு உங்களுக்குச் சிரிப்புக் கூட வரக்கூடும். பயமும் கூட ஏற்படலாம். சில ஊடக அறிக்கைகளில் வந்திருக்கிறது, இந்த இண்டிக் கூட்டணிக்காரர்களிடம் விவாதம் நடைபெறுகிறதாம். ஏனென்றால் மோதி மீண்டும்மீண்டும் கேட்கிறார், சொல்லுங்க ஐயா, இத்தனை பெரிய தேசம், இதை யார் ஆளுவார்கள். பெயரைச் சொல்ல வேண்டுமில்லையா சொல்லுங்கள்.
பெயரே தெரியாமல் இத்தனை பெரிய தேசத்தை ஒப்படைக்க உஙகளால் முடியுமா? இவர்களோ பெயரைச் சொல்லத் தயாராக இல்லை. இங்கே மோதி இருக்கிறார் நீங்கள் சொல்லுங்கள் என்கிறார்கள் இவர்கள். வாக்களிக்க விரும்புவோர் மோதிக்கு அளியுங்கள் என்கிறார்கள். சொன்னார்களா இல்லையா?
உங்கள் முன்பாக பெயர் இருக்கிறதில்லையா? அந்தப்பக்கத்திலே பெயரே இல்லை. இத்தனை பெரிய தேசம், யாருக்கு அளிக்கிறோம், என்ற விபரம் தெரிந்திருக்க வேண்டுமா இல்லையா? தெரிந்திருக்க வேண்டுமா இல்லையா சொல்லுங்கள்?
யாருக்கு அளிக்க விரும்புகிறார்கள் உங்களுக்குத் தெரியுமா சொல்லுங்கள்? யாருக்காவது தெரியுமா? இப்படி இருட்டில குறிபார்க்க முடியுமா சொல்லுங்கள்? இங்கே தெளிவாக பத்தாண்டுகள் அனுபவம் இருக்கிறது. மோதி உங்கள் முன்பாக இருக்கிறார்.
இங்கே அனைவரும் கூறிவிட்டார்கள், மோதி நம்முடைய வேட்பாளர் என்று. இவர்கள் எல்லாம், இதற்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். விடையோ அவர்களுக்குக் கிடைத்தபாடில்லை.
ஆனால் சில ஊடகங்களில் என்ன வருகிறதென்றால், இந்த மோதி மீண்டும்மீண்டும் கேட்கிறார், உங்கள் தலைவர் யார்……. யாரிடம் பொறுப்பை ஒப்படைக்க இருக்கிறீர்கள்? ஃபார்முலா ஒன்றை ஏற்படுத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
யார் பிரதமர் ஆவார்கள் என்பதற்கு ஒரு ஃபார்முலாவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். என்ன சொல்கிறார்கள் என்றால், இவர்கள், ஓராண்டுக்கு, ஒரு பிரதமர் ஃபார்முலாவை ஏற்படுத்தி வருகிறார்களாம். அதாவது, ஓராண்டுக்காலம் ஒரு பிரதமர், இரண்டாவது ஆண்டு…. இரண்டாவது பிரதமர், 3ஆவது ஆண்டு…. 3ஆவது பிரதமர், 4ஆவது ஆண்டு, 4ஆவது பிரதமர், 5ஆவது ஆண்டு, 5ஆவது பிரதமர், தேசம் என்னவாகும் சொல்லுங்கள்? என்ன ஆகும்? என்ன ஆகும் என்று கூறுங்கள் நண்பர்களே. தேசம் தப்பிக்குமா?
உங்களுடைய கனவுகள் பிழைக்குமா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் தப்பிப் பிழைக்குமா? என்ன அர்த்தம் என்றால் இவர்கள் பிரதமர் நாற்காலியை ஏலத்தில் விட்டுவிட்டார்கள் என்று புரிகிறதா!! யார் பையை நிரப்புகிறார்களோ அவர்கள் ஓராண்டுக்கு அமர்வார்கள். இதன் பிறகு என்ன வேடிக்கை நடக்கும் தெரியுமா?
மேலே அமர்பவர் இருக்கிறாரே, அதிலே நான்கு நபர்கள் நாற்காலியின், கால்களைப் பிடித்துக் கொண்டு அமர்வார்கள். எப்போது இவருடைய ஓராண்டு முடிவடையும் என்ற சந்தர்ப்பத்துக்குக் காத்துக் கிடப்பார்கள். அதை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள்.
சகோதர சகோதரிகளே, இதை எல்லாம் கேட்ட பிறகு என்ன தோணுதுன்னா ஆசை இருக்கு தாசில் பண்ண ஆனா அதிர்ஷ்டம் இருக்கு சிரிப்பு. ஆனால் நண்பர்களே உங்களுக்குள்ளே, விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறேன்.
எச்சரிக்கை அளிக்க விரும்புகிறேன். இது ஆசை இருக்கு தாசில் பண்ண எனும் பழமொழியைச் சொல்லி, உறங்கச் செல்லும் விஷயம் அல்ல. இது மிகவும் பயங்கரமான விளையாட்டு. இது தேசத்தை அழிக்கின்ற விளையாட்டு. இந்த ஆசை அழகானது இல்லை நண்பர்களே.
இந்த ஆசை உங்கள் கனவுகளை எல்லாம் தவிடுபொடியாக்கும் நாசகார ஆசை சொந்தங்களே. ஆகையால் நீங்கள் விழித்துக் கொள்ளுங்கள். விழிப்புணர்வு பெறுங்கள். உங்கள் வாக்குகளின் சக்தியைப் புரிந்து கொள்ளுங்கள்.
எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே, தேசத்தைக் காப்பாற்ற நீங்கள் முன்வாருங்கள். ரீல்களிலே, சமூக வலைத்தளங்களிலே விளையாட்டாக மக்கள் கூறுவதை, அவை பற்றி, இண்டிக் கூட்டணி, மிகவும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறதாம்.
நீங்கள் கூறுங்கள் மக்களே, சரி ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்ற ஃபார்முலா உங்களுக்கு சம்மதமா சொல்லுங்கள்?
ஐந்தாண்டுகளிலே ஐந்து பிரதமர்கள் என்பது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? சரி தேசத்தை இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் விட்டுவிட முடியுமா? சரி உலகமே நம்மைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்குமா சிரிக்காதா?
சரி உலகத்திலே நாம் கஷ்டப்பட்டு சேர்த்திருக்கும் நற்பெயர், மண்ணோடு மண்ணாகிப் போய் விடாதா சொல்லுங்கள்? இதோ சந்திரயான் அனுப்பியிருக்கிறோம், அடுத்து ககன்யான் அனுப்ப இருக்கிறோம், அதை அனுப்ப முடியுமா?
பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
நண்பர்களே, காங்கிரஸ், தாழ்த்தப்பட்டவர்களின், பிற்பட்டவர்களின், பழங்குடியினத்தவர்களின், அதிகாரங்களைப் பறிக்கும், சதிகாரச் செயலை, பலகாலமாகவே செய்து வருகின்றது.
2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் தேதியன்று, அப்போது அவர்களின் ஆட்சி இருந்தது. அப்போதிருந்த காங்கிரசின் மத்திய அரசு, மதத்தின் பெயரால், இடஒதுக்கீட்டை அளிக்கும், ஒரு குறிப்பை, ஒரு நோட், அமைச்சரவையில் முன்வைத்தது.
இந்த அமைச்சரவைக் குறிப்பிலே, என்ன கூறப்பட்டிருந்தது தெரியுமா? நமது ஓபிசி சமுதாயத்திற்கு, 27 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைத்து வருகிறது. மண்டல் கமிஷனின் பரிந்துரைப்படி இட ஒதுக்கீடு கிடைத்து வருகிறது.
அந்த இட ஒதுக்கீட்டின் ஒரு பகுதியை வெட்டியெடுத்து, 27 சதவீதத்திலிருந்து ஒரு பகுதியை பிரித்தெடுத்து, மதத்தின் பெயரால் கொடுக்கப்படும். வெறும் மூன்றே நாட்களில், 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதியன்று, இதற்கான ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.
அதன் பிறகு, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்றம், காங்கிரஸ் அரசின் இந்த ஆணையினை, ரத்து செய்தது. இவர்கள் உச்சநீதிமன்றத்துக்கும் சென்றார்கள். ஆனால் அங்கும் எந்தப் பயனுமில்லை.
அதன் பிறகு 2014இலே, காங்கிரஸ் கட்சி, தேர்தல் அறிக்கையிலே பதிவிட்டது. அதாவது மதத்தின் பெயரால், இட ஒதுக்கீடு செய்வதற்கு, சட்டம் இயற்றப்பட வேண்டுமானால் சட்டமும் இயற்றுவோமென்றார்கள்.
ஆனால் 2014ஆம் ஆண்டிலே, ஓபிசி சமுதாயம் விழித்துக் கொண்டது. தாழ்த்தப்பட்டவர்கள் விழித்துக் கொண்டார்கள். பழங்குடியினச்சமூகம் விழித்துக் கொண்டது. அவர்கள் எல்லாம் தீர்மானம் செய்தார்கள், இவர்கள் வந்து இப்படியெல்லாம் செய்தால், நமது வருங்காலத் தலைமுறையினர் நாசமாகிப் போவார்களே!! நம்முடைய கனவுகள் பொடிப்பொடியாகுமே!!
இதன் பிறகு தான், இந்தச் சமூகங்களெல்லாம் ஒன்றிணைந்து, காங்கிரசின் கனவுக்கோட்டைகளைத் தரைமட்டமாக்கினார்கள், அவர்களை ஆட்சியிலிருந்து துரத்தி விட்டார்கள்.
அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை. இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.
பிரதமர் மோடியின் உரைகள் தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
சுமார் 300 கூட்டுறவு வங்கிகளை இந்த இடதுசாரிகள் நடத்துகிறார்கள். மேலும், சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாயை, கேரளத்தின் ஏழைகளின் சாதாரண மக்களின் பணம் அதில் போடப்பட்டிருக்கிறது.
இப்போது நீங்களே பாருங்கள் இவர்கள் என்ன செய்தார்கள்? இதை நிர்வாகம் செய்யும் நபர்கள், இந்தப் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பெரியபெரிய சொத்துக்களை வாங்கினார்கள்.
நாங்கள் நடவடிக்கை எடுத்த, இப்போது ஒரு வங்கியிலே, அதிலே நாங்கள் சுமார் 90 கோடி ரூபாயை, பறிமுதல் செய்திருக்கிறோம். இப்போது நாங்கள் சட்ட ஆலோசனையைக் கேட்டிருக்கிறோம்.
இப்போது பறிமுதல் செய்த 90 கோடி ரூபாய், யாருடைய பணம் வங்கியில் இருந்ததோ, இவர்களுக்கு, எப்படி திருப்பிக் கிடைக்கச் செய்யலாம்? நான் ஈடியிடமும் கூட வேண்டுகோள் விடுத்திருக்கிறேன், அதை அளிக்கத் தொடங்குவோமே!!! யார் கொள்ளையடித்தார்களோ… அவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யுங்கள்!!
நாங்கள் இதுவரை, 17,000 கோடி ரூபாயை, எப்படி பறிமுதல் செய்தோமோ, அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு அளித்தோம் 17000 கோடி ரூபாய். ஆகையால் கேரளத்திலே 300 வங்கிகளில் இவர்கள் மோசடி செய்திருக்கிறார்களே, பல நூற்றுக்கணக்கான கோடிகள் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய், இது சின்ன ரொக்கமல்ல.
பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள். இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன். எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல. இது சாதாரண மனிதனின் வாழ்க்கை பற்றிய விஷயம்.
பிரதமர் மோடியின் உரைகள் தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்