Home Blog Page 206

ஸ்ரீமாத்ரே நமஹ

ambal dev - 2026
  • K.G. ராமலிங்கம்

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால் அன்னையை போற்றுகிறார், நாமும் துதிக்கிறோம்….

இன்று பகவத்பாதளின் அவதார தினம்.

“பந்தங்களில் மிக உயர்ந்தது தாய் எனும் பந்தம். அதனை எவராலும் உதற இயலாது. இதற்கு விதிவிலக்கு என்பதே கிடையாது. உலக பற்றை துறந்த பரமேஸ்வரனின் ஸ்வரூபமான ஆதி சங்கரரையும் விட்டு வைக்கவில்லை.

தன் தாயின் தகனத்தை முடித்த மஹான் அப்பொழுது தான் தன் தாயிற்கு அவர்களின் மரணத் தருவாயில் தான் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்றை கூட செய்யவில்லை என்பதை உணர்கிறார். அந்த வேதனையின் வடிகாலாக கங்கையென பிரவாகிக்கிறது மாத்ருகா பஞ்சகம் எனும் ஐந்து ஸ்லோகங்கள்.

இவற்றால் தான் செய்ய தவறிய செயல்களை சுட்டி காட்டி தாயிடம் மன்னிப்பை கோருகிறார். இந்த ஸ்லோகங்களால் ஓர் தாய் தன் கர்பகாலத்திலும், பிரசவிக்கும் தருணத்திலும், அதற்கு பின்பு குழந்தையை ஆளாக்கும் நேரத்திலும் ஏற்கும் துன்பங்களை அழகாக விளக்கி, அவற்றிற்கு தான் பிரதியுபகாரமாக எதுவும் செய்யவில்லை என்று கூறி அதனை மன்னித்து தன்னை ரக்ஷிக்குமாறு வேண்டுகிறார். அவரின் பாதங்களை சரணடைகிறார்.”

மாதா பிதா குரு தெய்வம் – முதல் வணக்கம் தாய்க்குத்தான் – ஒரு மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க அவரிடம் உங்கள் தாய் மொழி என்ன என்று தான் கேட்கிறோம் – தந்தை மொழி என்ன என்று கேட்பதில்லை…

“பெண்குழந்தைகள் தகப்பனார் மீதும் ஆண் பிள்ளகள் தாயார் மீதும் ஆராதித்திருப்பது இப்பவும் தொடர்கிறதா இது தப்பானதா?”

கிராமத்தில் உள்ள ஒரு சொலவடை ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று, அந்த வகையில் பெண் குழந்தை தந்தையிடமும் ஆண் குழந்தை தாயிடமும் அன்பையும் பாசத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள், சில குடும்பங்கள் இருவரையும் ஒரே பார்வையிலே பார்க்கிறது….

அன்னையும் தந்தையும் முன்னறி தெய்வம். அதன்பிறகு தான் ஆலயம் தொழுவது சாலவும் நன்று. உதட்டளவு மட்டுமல்ல உள்ளத்தளவும் உயிரளவும் அம்மா/அப்பா நமது ஒரே உதிரம் தான். ஆனால் ஒரு சில வேறுபாடுகள் சில இடங்களில் குடும்பங்களில் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு தாய் எப்போது தான் பிறந்த பிறவிப்பயனை அடைகிறாள் என்றாள் அவளுக்கு ஒரு ஆண் மகவை பெற்ற பின்னர் தான் என்பது கண்கூடாக தெரிகிறது அல்லது அதைக் காணலாம்.

நீங்கள் கேட்கலாம் பெண் குழந்தை பிறந்தால் மகிழ்ச்சி இல்லையா என்று, ஆம், மகிழ்ச்சி அந்த தாய்க்கு இருக்கத்தான் செய்யும், ஆனாலும் சில வேளைகளில் பெண்ணாகப் பிறந்து தான் அனுபவித்த கஷ்டங்களை இவள் எப்படி எதிர் கொள்ளப்போகிறாளோ என்ற ஏக்கம் அவளது அடிமனதில் அடிக்கடி ரீங்காரம் செய்வதை யாரும் அறியமுடியாது, அவளாக பகிர்ந்தாலொழிய….

தாய் தன் பிள்ளையை அது ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலும் பத்திரமாக இருக்கணும்னு என்று மார்பில் அரவனைத்துக் கொள்வாள். இதை நாம் நம் கண்ணெதிரே காணலாம்.

ஆனால் எதோ ஒரு அந்நோந்யமான அபரிமிதமான அன்பும் பாசமும் அன்னைக்கு தன் மகன் மீது எப்போதும் இருக்கத்தான் செய்யும். அவனும் அவளிடம் தான் தனது அபிலாஷைகளை பகிர்ந்து கொள்வான், அவளும் தன் மணவாளனிடம் மகனுக்காக சிபாரிசு செய்வாள்.

பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம் பெயரும் தருணம் உணர்வு பூர்வமானது. ஆனால் அதே வேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது.

அவள் எப்போதுமே எனக்கு பாரமாக இருந்ததில்லை. ஏனெனில், என் சுவாசம் இயல்பாக இருப்பதற்கும், என் இதழ்களில் புன்னகை பூப்பதற்கும் காரணம் அவளே. இருந்தும் அவளை நான் திருமணம் செய்து கொடுக்கிறேன். ஏனென்றால் அது ஓர் நியதியாக இருக்கிறது. கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டே அவளை புகுந்த வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயம். என் வீட்டின் மகிழ்ச்சிப் பேழை உங்கள் வீட்டில் ஒளி வீச வருகிறது. எனது உலகத்தை உங்களுக்கு தாரை வார்த்துத் தருகிறேன். அவள் உங்கள் வீட்டின் ராணியாக திகழ்வாள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனது ரத்தமும், வியர்வையும் அவளை ஆளாக்கியிருக்கிறது…..

இந்த வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது உங்களுக்கு புரியாமல் போகலாம். ஆனால், நாளை நீங்கள் ஒரு மகளைப் பெற்றெடுக்கும் பாக்கியவான் ஆகும்போது எனது வார்த்தைகளின் அர்த்தம் புரியும். அப்பொழுது உங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் ‘என் மகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்’ என்றே சொல்லும்.

எனவே, தயவு செய்து என் மகளை மகவைப்போல் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆனால் தந்தை தான் பார்க்காத உலகத்தையும் என் பிள்ளை பார்க்க வேண்டும் என்று தன் தோளின் மேல் தூக்கி நான் பார்க்காத உலகத்தை நீ பார் என்பவனே தந்தை.

ஆனால் தற்போதய சூழ்நிலையில் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கிறார்கள் அது ஆணோ அல்லது பெண்ணோ எதுவானாலும் சரி.

அவர் உன்னுடைய அருகில் இருக்கும் போது பயன் படுத்திக் கொள்.
தந்தையை போல் உண்மையான நண்பன் இந்த உலகத்தில் யாரும் இல்லை. ஆனால் தாயைப் போல ஒரு ஆசான் ஆசிரியர், ஆண்டவன் அகில உலகிலும் கிடையாது – இது உண்மை… சத்தியம்.

மனதாலும் நினைவாலும் தாயும் அவள்தான் மடிமீது விளையாடும் சேயும் அவள் தான்.

இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் வணக்கங்கள்..

ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்

ramanujar - 2026

இராமானுசர் தாம் இவ்வுலகை விட்டுச் செல்லும் நேரம் என்று அறிவித்த போது, சீடர்கள் யாவரும் மனம் தளர்ந்து சோர்ந்து தம் வேதனைகளை வெளியிட்டனர்;  இராமானுசர் அவர்களைத் தேற்றி, ‘இரவு உணவு உண்ட பின்பு, அனைவரும் ஒன்றாக வந்து கூடுங்கள்’ என்று கட்டளையிட்டார். அதன்படியே அவர்கள் வந்து அமர்ந்ததும், அவர் தமது உபதேசங்களின் சாரமாக 74 வாக்கியங்களை இறுதி உபதேசமாக அவர்களுக்கு அருளினார். (அவற்றின் சாரம் பின்வருமாறு)

உங்கள் ஆசாரியரைப் போலவே வைணவர்களை மதித்துப் போற்றுங்கள். பழமையான பெரிய ஆசார்யர்களின் உபதேசங்களில் மனமார்ந்த ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளுங்கள். விஷயபோகங்களுக்கு ஒருபொழுதும் அடிமையாகாதீர்கள். உலக ஞானத்தைக் கொண்டு களிப்படையாதீர்கள். இறைவனுடைய மகிமை பற்றியும் அவனுடைய படைப்பின் அதிசயங்கள் பற்றியும் கூறும் நூல்களையே திரும்பத் கிரும்பப் பயிலுங்கள். ஒருவேளை ஆசாரியர்ன் அருளினால் நீங்கள் உத்தமஞானம் பெறுவீர்களானால், விஷயங்களிலுள்ள பற்று, உங்களை விட்டுத் தானே நீங்கிவிடும். உங்கள் உணர்ச்சிகளைப் பற்றற்று வைத்துக் கொள்ளப் பயிலுங்கள். 

பரமனுடைய திருநாமங்களையும் மகிமைகளையும் கேட்டு மகிழ்வது போலவே, பரமனுடைய அடியார்களின் திருநாமங்களையும் மணிமொழிகளையும் செவியுற்று மகிழுங்கள். பரமனுடைய அடியார்களுக்குத் தொண்டு செய்கிறவர்கள் விரைவில் பரமனை அணுகுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, நீங்கள் எவ்வளவு அறிவாளிகளாக இருந்தாலும், பரமனுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் தொண்டு இயற்றினாலன்றி, உய்வு பெற முடியாது. 

ஒரு வைணவனுடைய வாழ்வு ஏதேனும் தன்னலம் பெறுவதற்காக இருக்கிறது என்று ஒருபொழுதும் கருதாதீர்கள். நீங்கள் எப்பொழுதும் ஆதரிச வாழ்வை நடத்த வேண்டும்.

நாள்தோறும், குறைந்த பட்சம் ஒரு மணி நேரமாவது, உங்கள் ஆசார்யருடைய பெருமை பற்றி தியானம் செய்யுங்கள். நாள்தோறும் சிறிது பொழுதாவது ஆழ்வார்கள் அல்லது ஆசாரியர்களின் அமுத வாக்குகளைப் படியுங்கள். பரமனைச் சரணடைந்த வழியில் செல்லும் பெரியோர்களுடன் பழகுங்கள்.

முக்திக்கு வேறு, வழிகளும் உண்டு என்று சொல்பவர்களின் கூட்டுறவைத் தவிருங்கள். அற்ப லாபங்களுக்கும் சுகபோகத்துக்கும் எப்போதும் பாடுபடுபவர்களுடன் சேராதீர்கள்… என்றார். 

இராமானுசர் இவ்வளவு உபதேசித்த பின், அவருடைய சீடர்கள் தாங்கள் உலகில் வாழும்போது, உடலிலிருந்து உயிர் பிரியும் வரையில், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதுபற்றி நல்லுரை வழங்க வேண்டினர். அதற்கு இராமானுசர் சொன்னார்… 

ஸ்ரீபாஷ்யத்தைப் பயின்று அதைப் பிறருக்கும் ஈற்பியுங்கள். இது பரமனுக்கு உகந்த நல்ல தொண்டு. இது முடியாதென்றால் நம்மாழ்வாரும் மற்ற ஆழ்வார்களும் அருளிய திவ்யப் பிரபந்தங்களை நன்கு கற்று, அவற்றை உரிய சீடர்களுக்குக் கற்பியுங்கள். இது முடியாதென்றால், ஆழ்வார்கள் பாடிய திவ்யதேசங்களில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள எம்பெருமான்களுக்குத் தொண்டு செய்து வாழுங்கள். இது முடியாதென்றால், திருநாராயணபுரத்தில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு அங்கே அமைதியுடன் வசியுங்கள். இதுவும் முடியாதென்றால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து கொண்டு, உங்கள் முழு பளுவையும் பரமனிடமோ உங்கள் ஆசார்யரிடமோ ஒப்படைத்துவிட்டு, த்வய மந்திரத்தை உச்சரிப்பதிலேயே ஆழ்ந்திருங்கள். 

இவற்றில் எதுவுமே முடியவில்லை என்றால், ஞானமும் பக்தியும் நிறைந்து பற்றற்றவனாக விளங்கும் ஒரு வைணவனைத் தேடிக் கண்டு, அவன் உங்களுக்கு மனமுவந்து அருள் செய்யும்படி நடந்து கொள்ளுங்கள்; உங்கள் அகங்காரத்தை அறவே துறந்து அவன் சொற்படி நடந்துகொள்ளுங்கள். இதுவே உங்கள் முக்திக்கு வழி.

‘இந்த உலகில் வாழும் காலத்தில், உங்கள் நண்பன் யார், பகைவர் யார் என்பதை விவேகத்துடன் அறிந்து கொள்ளுங்கள். வைணவர்களே உங்கள் நண்பர்கள்: பரமனைப் பகைப்பவர்கள் உங்கள் எதிரிகள்; உலகியல் வழியில் வாழ்பவர்களைப் பொருட்படுத்த வேண்டாம். 

சுவையான தளிர் வெற்றிலையும், நறுமணமுள்ள மலர்களையும், குளிர்ந்த சந்தனத்தையும் பெற்றார்போல, உங்கள் நண்பர்களைக் கண்டு வரவேற்று மகிழுங்கள்.

உங்கள் எதிரிகளைக் காணும்போது, பாம்பையும் புலியையும் நெருப்பையும் எதிர்கொண்டாற்போலக் கருதி, அவர்களிடமிருந்து ஒதுங்குங்கள். உலகியல் வழியினரைக் காணும்போது, கல்லையும் புல்லையும் கண்டாற் போலே. அசட்டையாக இருங்கள். பரமனிடம் சரணடைந்தவர்கள் வாழ வேண்டிய முறை இது. நண்பர்களான வைணவர்களுடன் பழகுவது, உங்களுக்கு ஆன்ம ஒளியை உண்டாக்கும். எதிரிகளிடமிருந்து ஒதுங்கியும், உலகியல் வழியினரிடம் அசட்டையாக இருந்தும் அவர்களுடன் பேசாமலும், அவர்களால் கிடைக்கக்கூடிய உலகியல் இலாபத்துக்காக அவர்களிடம் மதிப்புக் கொள்ளாமலும் வாழுங்கள். ஏனென்றால், இந்த இலாபங்கள் உங்களை விரைவில் பரமனுக்கு எதிரிகளாக்கிவிடும். 

நீங்கள் வேண்டும் எதையும் தாராளமாக அளிக்க, கருணைக் கடலான பரமன் எப்போதும் சித்தமாக இருக்கிறான் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் பகைவரிடம் எதையுமே யாசிக்காதீர்கள்.!

இவ்வாறு 74 வாக்கியங்களை அளித்த பின், எது தகாது என்றும் ஆறு வாக்கியங்களைக் கொடுத்தார். 

  1. பரமனின் தூய விக்கிரகங்களை வெறும் கற்கள் என்று நினைப்பது
  2. தம் ஆசார்யரைச் ‘சாதாரண மனிதன்’ என்று நினைப்பது
  3. பரமனின் அடியார்களை அவர்கள் பிறந்த சாதிக்கு ஏற்றபடி உயர்ந்தவர் அல்லது தாழ்ந்தவர்’ என்று நினைப்பது (வைணவனின் சாதியை ஆராய்வது), 
  4. எல்லாப் பாவங்களையும் நீக்கி மாந்தரைத் தூயவராக்கும் பகவத் பாகவதர்களுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தை ‘வெறும் தண்ணீர் என்று நினைப்பது
  5. எல்லாப்  பாவங்களையும் போக்கி கலியின் வேதனை தீர்க்கும் உபாயமான பகவத் பாகவதர்களின் திருநாமங்களையும் மந்திரங்களையும் வெறும் சப்தங்களாக நினைப்பது,
  6. உலகமனைத்துக்கும் நாதனான திருமகள் கேள்வனான நாரணனை ‘மற்ற தெய்வங்களுடன் ஒத்தவன் என்று எண்ணுவது  
  7. இத்தகைய எண்ணங்களை உடையவன் கொடும் நரகையே அடைவான். 

பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக! 

உடையவர் திருநக்ஷத்திரம் இன்று: சித்திரை திருவாதிரை!

sriramanuja - 2026

ஸ்ரீராமாநுஜாச்சாரியரின் 1007 வது திரு நட்சத்திரம் இன்று. #ஸ்ரீவைஷ்ணவ_லட்சணம் என ஒன்று இன்று இருக்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த மஹாபுருஷர் தான். ஸ்ரீ பாஷ்யம் சமைத்த பவிஷதாச்சார்யரும் இவரே.

பலருக்கும் ஒரு சந்தேகம் இருக்கிறது…… அத்வைதம் ஸ்தாபித்த ஆதி சங்கரரும் பரம பவித்ர விஷட்டாத்வைதம் பேசின இந்த ஆதிஷேச அம்சமான இலட்சுமண முனிக்கும் ஒரே நட்சத்திரமா என்று…

ஆம். நம் ஆச்சாரிய மஹநீயர் இருவருக்கும் ஓரே நட்சத்திரம் தான். ஆனால் ஆதிசங்கரருக்கு விசாக (வைகாசி) மாதத்தில் வரும் சுக்லபட்ச திருவாதிரை. இவருக்கு சித்திரை மாதத்தில் வரும் திருவாதிரை.அவர் ஜனித்து இவ்வாண்டோடு 1236 ஆண்டுகள் ஆகுவதாக ஓர் கணக்கு உண்டு.இவருக்கு இது 1007 ஆம் ஆண்டு. அவர் பேசினது… ஸ்தாபித்தது…. #அத்வைதம் என்றால் இவர் ஸ்திரமாக நின்றது #விஷ்டாத்வைதம்.
முன்னது விதை என்ற பின்னது அந்த விதை வெடித்து, கிளர்ந்து விருட்சமாக வளர்ந்து அதில் பூத்துக் குலுங்கிய மலர்.

இங்கு நம்மில் பலரும் ஆதிசங்கரரை சைவம் என்கிற சிறு கோட்பாட்டு வட்டத்தினுள் அடக்கி விடுகிறோம். ஆனால் அது தவறு .அவர் ஆகச் சிறந்த அத்வைத ஏகாங்கி. பல வைணவ குருமார்களும் அத்வைதிகளாக இருந்திருக்கிறார்கள்…… மடங்கள் எல்லாம் அந்நாளில் இருந்திருக்கிறது.

பஜ கோவிந்தம் பேசியதும் ஆதி சங்கரர் தான். கனகதாரா மற்றும் கராவலம்பம் ஸ்தோத்திரம் சமைத்ததும் ஆதிசங்கரர் தான்.கீதா பாஷியத்தை முன்னெடுத்து அன்றிருந்த நாஸ்தீகவாதிகளை நைய புடைத்ததும் ஆதி சங்கரர் தான்.அதன் பொருட்டே ஸ்ரீமத் பாகவத புராணத்தில் மத்தியில் உள்ள மஹாபாரதத்தில், நடுநாயகமாக விளங்கும் கீதைக்கு ……… அந்த உதேசத்திற்கான வியாக்கியானத்திற்கு….., பகவத் கீதை என்று பெயர். ஆதிசங்கர பகவத் பாதர் என்கிற பெயரை அடியொற்றி.

அவருக்கு சற்றேறக்குறைய 180 ஆண்டுகளுக்கு பிறகு ஜனித்த நம் ஜகதாசாரியருக்கு, பவிஷ்யதாச்சாரியர் என்கிற திருநாமம் உண்டு. இஃது காலத்தால் மூத்தவரான நம்மாழ்வார் அவர் தம் மதுரகவி ஆழ்வாருக்கு பொருநை ஆற்றின் கரையில் (தாமிரபரணி) வார்த்த திருவுருவச்சிலையை கொடுத்தது, ஸ்ரீராமாநுஜரின் வருகையை கட்டியம் கூறுவது போல் அமைந்ததெல்லாம் பெறும் வரலாறு.

சம்பிரதாயத்தில் பல ஏற்றமிகு காரியங்களை சாதித்துக் கொடுத்து இருக்கிறார் என்பதை எல்லாம் விட ஆகச் சிறந்த நிர்வாகியாக திகழ்திருக்கிறார். அன்று அவர் ஏற்படுத்தின பத்துக் கொத்து பரிவாரங்கள் இன்றளவும் ஸ்ரீரங்கத்து நிர்வாக செயல்பாடாக இருக்கிறது என்றால்…….. இன்றைய நவீன உலகின் நிர்வாகவியலை அன்றே கையாண்டு வெற்றி கண்டிருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.

அவரது வாழி திருநாமத்தின் ஓர் வரி…… தென்னரங்கத்து செல்வம் முற்றும் திருத்தி வைத்தோன் வாழியே… என்பதை அனுபவித்து அந்வயக்கவேண்டும். இதன் பொருட்டே அழகிய மணவாளன் அவருக்கு #உடையவர் என்கிற திருநாமத்தை தந்தருளினார்.

இங்கு பின்னாளில் உடையார் என்பதே ராஜ ராஜ சோழனுக்கு உரித்தான பட்டப் பெயர் என்றெல்லாம் கிளம்பினார்கள். கல்வெட்டு ஆதாரங்களை கொண்டு வந்து கொட்டினார்கள். திருவாளர் திரு பாலகுமாரன் எழுதிய ஒரு புத்தகத்திற்கு உடையார் என்பதே பெயர். ஆனால் அது பரகேஸரி உடையார் எனும் முழுப்பெயரை தாங்கி நிற்கிறது. இதன் பொருள் #பர என்பதற்கு எதிரி எனும் பொருளில் கேஸரி என்பது சிங்கத்தை குறிக்கும் சொல்லோடு சேர்த்து எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவன் என்கிற ரீதியில் அழைத்திருந்தார்கள்.

ஆனால் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் இதற்கு அர்த்தம் வேறு. தவிர ராஜராஜனுக்கு பிறகு மூன்று ஆண்டுகள் கழித்தே இவரது ஜனனம் அமைந்தது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உடையவரின் நிர்வாகத் திறனுக்கு இந்த பெயர் பொருந்தும் என்றாலும் அவரது திருவுள்ளம் எத்தகையது என்பதை அறிவதற்கு சில பல சம்பவங்களை அந்வயக்கவேண்டும். அழகிய மணவாளனுக்கு இரவு பொழுதில் பால் அமுது செய்விக்க நல்ல தரமான பசுக்களை கொண்டு வந்து கொட்டிலில் கட்டி வைத்து பராமரித்து வந்தனர்…. வீதியுலா செல்ல நேர்ந்த சமயத்தில் இதனை கவனித்த நம் ராமாநுஜ முனி அந்த மாட்டிற்கு கருபஞ்சாரு கலந்த நுனி பசும்புல்லை மாத்திரமே உண்ணக் கொடுக்க வேண்டும் என்றும்… பால் கறக்கும் மூன்று நாழிகைக்கு முன்பாக நன்கு குளிர்ந்த நீரில் குளிப்பாட்டிட வேண்டும் என்று அறிவுரை வழங்கி அது சரிவர நடக்கிறதா என கண்காணித்து வந்தார்.

ஏன்…..?

அப்படி நன்கு பராமரிக்கப்பட்ட மாடுகள் மனம் குளிர்ந்து அதிக இனிப்பு சுவை கூடின பாலை தரும் என்பது அவரது உள்ளக்கிடங்க இருந்தது. அந்த பாலை நன்கு காய்ச்சி ஆறவைத்து அழகிய மணவாளனுக்கு இரவில் பாலமுது செய்வித்து வந்திருக்கிறார் என்றால்…. எப்பேர்ப்பட்ட பாவனை அது. இதற்காகவே ஏழு பிரகாரங்களை கொண்ட திருவரங்கத்தில்……, ஏழாவது பிரகாரத்தில் வட கிழக்கில் கொட்டகை அமைத்து அதில் பசுக்களை வைத்து பராமரித்து வந்திருக்கிறார். அந்த இடம் தான் இன்றைய கீழ சித்திரை வீதியின் வட கோடியில் உள்ள கோரத மூலை. இன்றைக்கும் சித்திரை தேர் இந்த இடத்தில் இடத்தில் இருந்து தான் புறப்பாடு கண்டருளப்பண்ணப்படுகிறது.

இந்த உலகில் வேறெங்கேனும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் ஓர் விஷயம் வழிவழியாக சம்பிரதாயமாக நடைபெறுகின்றனவா என்பதை நினைத்து பாருங்கள்.இதன் வீர்யம் புரியும்.

ராமாநுஜரின் தயையும், தாஸ்ய பாவத்தையும் எத்தனை தூரம் எடுத்து சொன்னாலும் தகும் எனும்மாப்போலே….. அவரது நிர்வாகம் ஸ்ரீரங்கத்தில் எப்படி இருந்திருக்கிறது ஓர் உதாரணம்….. உன் அதிகாரம் என்ன #கிள்ளாக்கு பறக்கிறதா என இன்றளவும் ஒருவரை பகடி செய்ய அங்கு பயன்படுத்துவர்.

அது என்ன கிள்ளாக்கு?????

ராமாநுஜர் திருவரங்கத்தின் சந்தன மண்டப கொரட்டில் (படிக்கட்டு)அமர்ந்து கொண்டு ஓர் அரசரை போல் நீதிபரிபாலனம் நிர்வகித்த காலத்தில் பத்துக்கொத்து பரிவாரங்கள் ஏற்படுத்தி வைத்திருந்தார்.இதிலும் இரண்டு பத்துக்கொத்து இருந்தது.உள்துறை, வெளித்துறை என இரண்டு. இந்த உள்துறை கவனித்தவர் வசித்து வந்ததால் தான் ஆறாம் பிரகாரத்திற்கு உள்துறை வீதி என்றே பெயர். (இன்றைக்கு அது உத்தர வீதி என்பர்)

மற்ற கோவில்களை போல் பராமரிப்பு செய்ய பிரம்மோற்சவம் விழாவின் முன்னதாக என வருடத்திற்கு ஒரு முறை பார்த்து கொள்ளலாம் என்பதெல்லாம் ஸ்ரீரங்கத்தில் நடவாது. நித்தியப்படி அமுது பண்ணி வைக்க நித்தம் நித்தம் மண்பாண்டங்கள் பண்ணிக்கொண்டே இருப்பதில் தொடங்கி பராமரிப்புக்கு என்றே தனியே ஒரு காலவரை ஏற்படுத்தாமல் அப்போதுக்கு அப்பொழுதே வேலை நடக்கும் அங்கு. வருடம் முழுவதும் திருவிழா நடைபெறும் இடமாக இருப்பதால் சவாலான இந்த பணியினை மேற்கொள்ள இவ்வாறான விஷயங்களை முன்னெடுத்து அதனை வகைப்படுத்தி வைத்திருந்தார்.

இவர்களுக்கான உத்தரவு என்பது வெற்றிலையில் …, வெற்றிலைக்காம்பு கிள்ள பயன்படுத்தப்படும் குறளியால், அடையாளம் ஏற்படுத்தி செய்தி அனுப்பி வேலை வாங்கி இருக்கிறார் ராமானுஜர். அந்த குறளிக்கு கிள்ளாக்கு என்று பெயர். உள்துறை வேலைகளில் வெற்றிலையின் இடது புறத்திலும்……, இதுவே வெளி வேலை என்றால் அதனை வலது பக்கத்தில் கிள்ளாக்கு கொண்டு செய்தி அனுப்பி இருக்கிறார்.

அதன் பொருட்டே உன் அதிகாரம் கிள்ளாக்கு பறக்கிறதா என சொல்லடவு ஏற்பட்டுள்ளதாம் இங்கு. இதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் எல்லாம் காணக்கிடைக்கின்றன. சமையல் குறிப்புகள் எல்லாம் அந்த கல்வெட்டில் இருக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த உலகிலேயே சமையல் குறிப்புகள் கல்வெட்டில் இருப்பதும் இங்குதான்,அதிகப் படியான எண்ணிக்கையில் கல்வெட்டுகள் இருப்பதும் ஸ்ரீரங்கத்தில் தான்.

எரிதுரும்பு…. விறகிற்கான பெயர். விடாய் பருப்பு…. மொச்சையை குறிக்கும் சொல் என்பது போன்ற பல சுவையான சுவாரஸ்யமான தகவல்களும் இங்கு கல்வெட்டில் உண்டு என்பது கூடுதல் தகவல்.

என்ன….. சாப்பிடுவதற்கெல்லாமா கோவிலில் முக்கியத்துவம் கொடுத்தார்களா என்றால்… அதற்கும் பதில் இருக்கிறது கல்வெட்டில்…

ஓர் ஆவணி மாத மழை நேரத்தில்….. கோவிலில் மத்யான நேரத்தில் அழகிய மணவாளனுக்கு நாவல் பழங்களோடு ததியமுதம் என்கிற தயிர் சாதம் கண்டருளப்பண்ணி இருக்கிறார்கள். இதற்கு மறுநாள் அவரது திருமேனி வாட்டமுடன் இருப்பதை கண்டு ராமானுஜர், பதற்றம் கொண்டு நேற்றைய தினம் என்ன அமுது செய்வித்தீர்கள் கேட்க மடப்பள்ளியில் இருந்து பதில் வந்திருக்கிறது இது போல கண்ணணுக்கு மிகவும் பிடித்தமான நாவல் பழங்களோடு கூடின ததியமுது என்று.

உடனே விஷயத்தை ஊகித்து அறிந்த அவர், அதன் பொருட்டே ஜலதோஷம் பிடித்து மணவாளன் வாட்டமுடன் இருப்பதை உணர்ந்த அவர் கோவிலினுள்ளே எழுந்தருளியுள்ள தன்வந்திரி சன்னதியில் வைத்து சுக்கு மிளகு திப்பிலி கஷாயம் வைத்து அதனை கண்டருளப்பண்ணிவிட்டு அழகிய மணவாளனுக்கு சமர்ப்பிக்க…… மறுநாள் புதுபொலிவோடு விளங்கினார் என குறித்து வைத்துக்கிறார்கள்…..

எப்பேர்ப்பட்ட பாவனை அது. வேறு எங்கேனும் இப்படியான ஒன்றை அந்வயக்க முடியுமா !!??

விஷயம் அத்தோடு நிற்கவில்லை…, அதன் பின்னான காலத்தில் தன்வந்திரி சன்னதியில் வைத்து கஷாயம் தயாரித்து அதனை அழகிய மணவாளனுக்கு வாரத்தில் ஒரு நாள் கொடுப்பதை வழக்கமாகவே கொண்டிருந்தனர்.மற்ற சன்னதிகளை காட்டிலும் கொஞ்சம் உயர்த்தியே கட்டுவித்து இருக்கிறார்கள். ஏனெனில் பக்தர்கள் புழங்கும் இடத்தை விட சற்று உயரமான இடத்தில் இருந்தால் நோய் தாக்கம் குறையும் என்பதால்… என்கிறார்கள்.

இன்றைய அறிவியலும் இதைத் தான் சொல்கிறது என்றால் எப்பேர்ப்பட்ட ஞானம் இது.

நாம் கோவில்களை…… கோவில் ஊடான அறிவியலை எல்லாம் உணர்ந்து கொள்வதே இல்லை. விஞ்ஞானத்தை ஏற்கும் மனது மெய்ஞானத்தை தள்ளுபடி செய்கிறது. மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அபத்தமாக தெரியக்கூடும். அதில் பொதிந்து கிடக்கும் அர்த்தபாவத்தை காண்பித்து கொடுக்கவேயில்லை …..

நாம் நம் கற்றலை போதித்தல் என்கிறோம். கொஞ்சம் நுட்பமான ஆராய்ந்தால் போதை என்கிற வேர் சொல்லிருந்தே போதனை,போதித்தல் என்கிற வார்த்தை வருவதை உணர முடியும். அப்படி என்றால் கற்றுக் கொள்வதென்பது வேறு … கற்றல் எங்கிற பாவனை வேறு.
இவ்வளவு நுணக்கமாக பதம் பிரித்து சொன்னவர்கள் நமது முன்னோர்கள்…. இதில் உச்சம் கண்டவர் நம் ராமாநுஜர்.

இன்றைய தேதியில் #ஸ்ரீ என்கிற எழுத்தை.. வார்த்தையோடு சேர்த்தெழுதுவதை யாரேனும் கண்டால்…. அதற்கு நம் ராமானுஜரே முழு முதல் காரணம். சித்,அசித், ஈஸ்வர தத்துவமாகட்டும், பின்நாளைய பசு, பதி, பாசம் என்பதாகட்டும் இவை எல்லாவற்றிற்குமான மூலம் #ஸ்ரீராமாநுஜர். ஸ்ரீ எனும் பதம் ஜீவக்கோடியில் முதன்மையானவளும்….. ஈஸ்வரக்கோடியில் கடைசியாக இருப்பவளை குறிக்கும் என்பதை காண்பித்து கொடுத்தவர் தான் இந்த யதிராஜர். உயிர்ப்புள்ள ஒன்றை குறிக்க ஸ்ரீ என்கிற பத பிரயோகம் பின்னாளில் வழக்கத்தில் வந்தது. #திரு இதன் தமிழ் உருப்பு.

இதுவே…..
இவையே நம் தமிழ் சமூகத்தின் வார்ப்புரு. மேற்சொன்ன விஷயங்கள் எல்லாம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் அளவில் சின்னஞ்சிறு விஷயத்தை மாத்திரமே இந்த நந்நாளில் உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறோம். இன்னமும் தெரிந்துகொள்ள… அதில் அமிழ்ந்து அனுபவிக்க ஏராளம் இருக்கின்றது.

❣எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

  • ‘ஜெய் ஹிந்த்’ ஸ்ரீராம்

IPL 2024: மீண்டும் சொதப்பிய மும்பை; கொல்கத்தா வெற்றி

ipl 2024 - 2026

52ம் நாள்: ஐபிஎல் 2024 – 11.05.2024

  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்

இன்று கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

கொல்கொத்தா அணி (16 ஓவர்களில் 157/7, வெங்கடேஷ் ஐயர் 42, நிதீஷ் ராணா 33, ரசல் 24, ரிங்கு சிங் 20, ரமன்தீப் சிங் 17, பும்ரா 2/39, பியுஷ் சாவ்லா 2/28) மும்பை அணியை (16 ஓவர்களில் 139/8, இஷான் கிஷன் 40, திலக் வர்மா 32, ரோஹித் ஷர்மா 19, நமன் தீர் 17, சூர்யகுமார் யாதவ் 11, ஹர்ஷித் ராணா 2/34, வருண் சக்ரவர்த்தி 2/17, ரசல் 2/34) 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னால் மைதானத்தில் மழை பெய்தது. இதனால் டாஸ் 2045 மணிக்குத்தான் போடப்பட்டது. ஆட்டம் அணிக்கு 16 ஓவர்களாகக் குறக்கப்பட்டது.

இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் கொல்கொத்தா அணி முதலில் மட்டையாட வந்தது. இந்த அணியின் அதிரடியாக விளையாடும் தொடக்க வீரர்கள் பில் சால்ட் (6 ரன், முதல் பந்தில் ஒரு சிக்சர்) மற்றும் சுனில் நரேன் (பூஜ்யம் ரன்,கோல்டன் டக்) முதல் ஏழு பந்துகளில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

பும்ரா வீசிய முதல் ஓவரின் முதல் பந்து; இது சுனில் நரேனுக்கு ஆஃப் ஸ்டம்பில் வீசப்பட்டது. நரேன் பந்து வெளியில் செல்கிறது என எண்ணி எந்த ஸ்ட்ரோக்கும் ஆடவில்லை; ஆனால் பந்து இன்ஸ்விங் ஆகி ஆஃப் ஸ்டம்பை தாக்கியதால் நரேன் கிளீன் போல்டானார்.

நான்காவதாகக் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் (7 ரன்) ஐந்தாவது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் வெங்கடேஷ் ஐயர் (21 பந்துகளில் 42 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்), நித்தீஷ் ராணா (23 பந்துகளில் 33 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் ஆண்ட்ரு ரசல் (14 பந்துகளில் 24 ரன்) ஆகியோர் கொல்கொத்தா அணியின் ஸ்கோரை சற்று நிலை நிறுத்தினர்.

இதற்குப் பிறகு ஆடவந்த ரிங்கு சிங் (12 பந்துகளில் 20 ரன்), ரமன்தீப் சிங் (8 பந்துகளில் 17 ரன்), மிட்சல் ஸ்டார்க் (2 ரன்) ஆகியோரால் ரன்ரேட்டை அதிகப்படுத்த முடியவில்லை.

இதனால் கொல்கொத்தா அணி நிணயிக்கப்பட்ட 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 157 ரன் எடுத்தது. 

158 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய  மும்பை அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் (22 பந்துகளில் 40 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் ரோஹித் ஷர்மா (24 பந்துகளில் 19 ரன்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (11 ரன்) சொற்ப ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் 10 ஓவர் முடிவில் மும்பை அணி 81/2 என்ற நிலையில் இருந்தது,

இச்சமயத்தில் கொல்கொத்தா அணியின் ஸ்கோர் 97/4 என்பதாகும். இதற்குப் பின்னல் வந்த மும்பை அணியின் வீரர்கள் அதிரடி ஆட்டக்காரர்கள்தான்; இருந்தாலும் இன்று அவர்களின் ஆட்டம் எடுபடவில்லை.

ஹார்திகபாண்ட்யா (2 ரன்), டிம் டேவிட் (பூஜ்யம் ரன்), நெஹல் வதேரா (3 ரன்), நமன் தீர் (17 ரன்) என அனைவரும் வெற்றியைப் பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லமல் ஆடினார்கள். இதனால் மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 16 ஓவர்களில் 8 விக்கட்டு இழப்பிற்கு 139 ரன்எடுத்து 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

கொல்கொத்தா அணியின் சுழல் பந்துவீச்சாள்ரும் தமிழக வீரருமான வருண் சக்ரவர்த்தி தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

நாளை ஞாயிற்றுக்கிழமையாதலால் இரண்டு ஆட்டங்கள் நடைபெறும். முதல் ஆட்டம் சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே பகலிரவு ஆட்டமாக நடைபெறும்.

இரண்டாவது ஆட்டம் பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும்.  

11.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1293181.428
ராஜஸ்தான் 1183160.476
ஹைதராபாத்1275140.406
சென்னை1266120.491
டெல்லி126612-0.316
லக்னோ126612-0.769
பெங்களூரு1257100.217
குஜராத்125710-1.063
மும்பை13498-0.271
பஞ்சாப்12488-0.423

IPL 2024: சென்னைக்கு எதிராக குஜராத் அணி வெற்றி

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணிமன்

51ம் நாள்: ஐபிஎல் 2024 – 10.05.2024

குஜராத் டைடன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்

இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

குஜராத் அணி (231/3 ஷுப்மன் கில் 104, சாய் சுதர்ஷன் 103, துஷார் தேஷ்பாண்டே 2/33) சென்னை அணியை (196/8, டேரில் மிட்சல் 61, மொயீன் அலி 48, தோனி 26*, ஷிவம் துபே 21, ரவீந்தர ஜதேஜா 18, மோஹித் ஷர்மா 3/31, ரஷீத் கான் 2/38) 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் குஜராத் அணி முதலில் மட்டையாட வந்தது. இந்த அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் (51 பந்துகளீல் 103 ரன், 5 ஃபோர் 7 சிக்சர்) மற்றிம் ஷுப்மன் கில் (55 பந்துகளில் 104 ரன், 9 ஃபோர், 6 சிக்சர்) இந்த ஜோடி முதல் விக்கட்டுக்கு 210 ரன் சேர்த்தது. இன்று பல சாதனைகளைப் படைத்தனர் அல்லது உடைத்தனர்.

ஐ.பி.எல்-இன் 100ஆவது சதம் இன்று கில் மூலம் அடிக்கப்பட்டது. கில் இன்று ஐ.பி.எல்-இல் தனது 1000ஆவது ரன்னை அடித்தார். அதனை 25 இன்னிங்க்ஸில் அவர் அடித்துள்ளார். இது ஒரு சாதனையாகும்.

எந்த ஒரு விக்கட்டிற்கும் ஒரு ஜோடி அடித்த அதிக பட்ச ரன் 229 ஆகும். இது ஏ.பி. டி வில்லியர்சும் கோலியும் 2016இல் இரண்டாவது விக்கட்டிற்காக அடித்தனர். அடுத்த அதிக பட்ச ரன் 215 ஆகும். இது ஏ.பி. டி வில்லியர்சும் கோலியும் 2015இல் இரண்டாவது விக்கட்டிற்காக ஆட்டமிழக்காமல் அடித்தனர்.

மூன்றாவது அதிக பட்ச ரன் 210 ஆகும். இது க்விண்டன் டி காக்கும் கே.எல். ராகுலும் 2022இல் முதல் விக்கட்டிற்காக அடித்தனர். இன்று இதனை கில்லும் சாய்சுதர்ஷனும் சமன் செய்தனர். சாய் சுதர்ஷன் 17.2ஆவது ஓவரிலும் கில் அதே ஓவரின் கடைசிப் பந்திலும் ஆட்டமிழந்தனர்.

19ஆவது மற்றும் 20ஆவது ஓவரில் ஷர்துல் தாகூர், சிம்ரஜீத் சிங் இருவரும் சிறப்பாக பந்துவீசி தலா 6 மற்றும் 12 ரன்னும் கொடுத்தனர். இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுகள் இழப்பிற்கு 231 ரன் எடுத்தது. 

232 ரன் என்ற கடின இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய  சென்னை அணியின் தொடக்க வீரர்கள் அஜிங்க்யா ரஹானே (5 பந்துகளில் 1 ரன்) மற்றும் ரச்சின் ரவீந்த்ரா (2 பந்துகளில் 1 ரன்) இருவரும் மோசமான தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் (பூஜ்யம் ரன்) மேலும் ஒரு அதிர்ச்சியைத் தந்தார்.

இதனால் சென்னை அணி மூன்று ஓவர் முடிவதற்குள் 10 ரன்னுக்கு மூன்று விக்கட்டுகள் இழந்து ஒரு மோசமான நிலையை அடைந்தது. அதன் பின்னர் டேரியல் மிட்சல் (34 பந்துகளில் 63 ரன், 7 ஃபோர், 3 சிக்சர்), மற்றும் மொயீன் அலி (36 பந்துகளில் 56 ரன், 4 ஃபோர், 4 சிக்சர்) நன்றாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அதன் பின்னர் ஷிவம் துபே (13 பந்துகளில் 21 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), ரவீந்தர ஜதேஜா (10 பந்துகளில் 18 ரன், 2 ஃபோர், 1 சிக்சர்), எம்.எஸ். தோனி (ஆட்டமிழக்காமல் 26* ரன்) மற்றும் சாண்ட்னர் (பூஜ்யம் ரன்), ஷர்துல் தாகூர் (ஆட்டமிழக்காமல் 3 ரன்)

இதனால் சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டு இழப்பிற்கு 196 ரன்எடுத்து 35 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

குஜராத் அணியின் அணித்தலைவர் ஷுப்மன் கில்  தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

நாளை கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

10.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1183161.453
ராஜஸ்தான் 1183160.476
ஹைதராபாத்1275140.406
சென்னை1266120.491
டெல்லி126612-0.316
லக்னோ126612-0.769
பெங்களூரு1257100.217
குஜராத்125710-1.063
மும்பை12488-0.212
பஞ்சாப்12488-0.423

Lucknow Super Giants 12

கோடை வெயிலின் உச்சம்: மழையின்றி வறண்டு கிடக்கும் ஐயனார் கோவில் ஆறு!

ayyanar koil river near rajapalayam - 2026
#image_title

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஐயனார் கோவில் ஆறு. விருதுநகர் மாவட்டப் பகுதியில் சுற்றுலாத் தலமாகத் திகழும் இங்கே, போதிய மழை இல்லாமல் ஆற்றுப் பகுதி தொடர்ச்சியாக வறண்டே காணப்படுகிறது

தமிழகம் முழுவதிலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியிலும் எப்போதும் இல்லாத அளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று ராஜபாளையம் பகுதியில் இரவு சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. எனினும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் போதிய மழை இல்லாமல் ஐயனார் கோவில் ஆற்றுப்பகுதி வறட்சியாக பாறைகள் மட்டுமே வெளித் தெரிந்து, வறண்டு காணப்படுகிறது.

இதே நிலை நீடித்தால் இராஜபாளையத்திற்கு குடிநீர் ஆதாரம் வழங்கக்கூடிய ஆறாவது மைல் நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் இல்லாமல் பொதுமக்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அவல நிலை ஏற்படும் என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

சிறிது மழை பெய்தாலும் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் ஆறாவது மைல் நீர்த் தேக்கத்திற்கு திருப்பி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி- ஐடி., அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி: திமுக.,வைச் சேர்ந்த இருவர் உள்பட 4 பேர் கைது!

sivakasi income tax fake persors arrested - 2026
#image_title

சிவகாசி அருகே பட்டாசு ஏஜென்டிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (வயது45) பட்டாசு ஏஜென்ட்டாக உள்ளார். இவரிடம் தாயில்பட்டி கோட்டையூரைச் சேர்ந்த கருப்பசாமி (55) சாத்தூர் அருகே இருக்கன்குடியைச் சேர்ந்த ரமேஷ் ( 38 ) சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் ( 40 )கார் டிரைவர் சாத்தூர் அருகே இராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் (47) ஆகியோர் கடந்த 6 ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ.10 லட்சம் வாங்கியுள்ளனர் .

கடந்த மூன்று நாட்களாக கூடுதலாக 10 லட்சம் கேட்டு சௌந்தரராஜனை மிரட்டி வந்துள்ளனர்.

இது குறித்து சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்தில் சௌந்தரராஜன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கருப்பசாமி தாயில்பட்டி கோட்டையூர் கிளை திமுக., பிரதிநிதியாகவும், ரமேஷ் சாத்தூர் திமுக., இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளனர்.

குறைந்து வரும் இந்துக்களின் ஜனத்தொகை; ஏற்படும் ஆபத்துகள்: இந்து முன்னணி எச்சரிக்கை!

kadeswara subramaniam hindu munnani - 2026

அச்சுறுத்தும் தகவல்- குறைந்து வரும் இந்துக்களின் ஜனத்தொகை; ஏற்படும் ஆபத்துகள்… குறித்து இந்து முன்னணி எச்சரிக்கை செய்வதாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

பாரதப் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு சமீபத்தில் 167 நாடுகளில் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. 1950 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெரும்பான்மையான சமூகத்தின் ஜனத்தொகையை பற்றிய ஆய்வு மேற்கொண்டது. அதில் இந்தியாவில் பெரும்பான்மையாகிய இந்துக்களின் ஜனத்தொகை 8% சரிந்துள்ளது என்ற விவரம் தெரிய வந்துள்ளது.

அதேசமயம் பிற சமூகத்தினர் ஜனத்தொகை அபரிமிதமாக நினைத்து பார்க்க முடியாத அளவு உயர்ந்துள்ளது.

குறிப்பாக முஸ்லிம்களின் மக்கள் தொகை 43% அதிகரித்துள்ளது. கிறித்துவர்களின் மக்கள் தொகை 5.38 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மதமாறிய பிறகும் இந்துக்களின் பட்டியலில் போலியாக தொடரும் கிறிப்டோ கிறித்துவர்கள் அடக்கமா என்பது தெரியவில்லை.

இந்த ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் என்னவெனில், ஒட்டுமொத்த உலக சமூகங்களில் கடந்த 65 ஆண்டுகளில் எல்லா நாடுகளிலும் இந்துக்கள், ஜைனர்கள், பார்சிகள் எண்ணிக்கை சரிவை சந்தித்துள்ளது கவலை அளிக்கும் விஷயம்.

பெரும்பான்மையான இந்துக்களின் ஜனத்தொகை 8 சதவீதம் குறைவது என்பது எண்ணிக்கையில் பெரிய சரிவு என்பதை இந்துக்கள் உணர வேண்டும். இது தேசத்தின் மக்கள் சமநிலையை பெரிதும் பாதிக்கும். ஜனநாயகத்தில் இந்துக்களின் பிரதிநிதித்துவம் இழக்க நேரிடும் என்ற அபாயத்தை கவனிக்க வேண்டும்.

அதுபோல எங்களுக்கு ஒரு குழந்தை என பெருமை பேசுபவர்கள், தங்களின் குடும்பம் ஒரே தலைமுறையில் 50 சதவீதம் குறைந்து, அதன் அடுத்த தலைமுறை ஒட்டுமொத்தமாக காணாமல் போகும் என்பதை உணர வேண்டும்.

மேலும் தேசத்தின் பாதுகாப்பு அமைப்புகளான இராணுவத்திற்கோ, காவல்துறைக்கோ சேவை செய்ய முன்வருவோரில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் ஆபத்தை உணர வேண்டும்.

அதேசமயம் சிறுபான்மையினரான முஸ்லிம்களின் ஜனத்தொகை 43 சதவிகிதம் உயர்ந்துள்ளதும் ஆபத்தானது. எங்கெல்லாம் முஸ்லிம்களின் ஜனத்தொகை பத்து சதவீதத்தை தாண்டுகிறதோ அந்நாடுகளில் ஏற்பட்டுள்ள அழிவை, ஆபத்தை கவனித்தால் அந்நிலை பாரதத்திற்கும் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது எச்சரிக்கும் செய்தியாகும்.

மக்கள் தொகை குறைந்தால் இந்துக்கள் தங்களது பிரதிநிதித்துவத்தை இழந்து விடுவோம். உதாரணமாக கேரள் மாநிலத்தில் இந்துக்கள் அதிகமாக வாழும் பாலக்காடு மாவட்டத்தில் தொகுதி சீரமைப்பினால் ஒரு தொகுதி குறைந்தது. அதேசமயம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மலப்புரம் மாவட்டத்தில் ஒரு தொகுதி அதிகமாக்கப்பட்டது.

ஒட்டுமொத்த பாரதத்திலும் சுமார் 70 பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் நிலையில் முஸ்லிம்கள் ஜனத்தொகை இருப்பதாக ஒரு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இதனை புரிந்து கொண்டால் வருங்காலத்தில் இதன் ஆபத்து நம் கண்முன் விரிவாக தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

இன்றைய சூழ்நிலையில் பாரத நாட்டின் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்துக்கள் மக்கள் தொகை இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதேபோல் நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் 200 மாவட்டங்களில் இந்துக்களின் ஜனத்தொகை இரண்டாம் இடத்தில் உள்ளது.

அதுபோல உலக அளவிலும் இலங்கை, மியான்மார் (பர்மா), ஆப்கானிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, பூடான் போன்ற அண்டை நாடுகளில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்தனர். குறிப்பாக பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். ஆனால் அந்நாடுகளில் இன்று இந்துக்கள் சிறுபான்மையாகிவிட்டது மட்டும் அல்ல, அதளபாதாளத்தில் போய் கொண்டு இருப்பதை காண முடிகிறது.

இதற்கு காரணம் விழிப்புணர்வு இல்லாத சமூகமாக இந்துக்கள் வாழ்வதுதான் . மேலும், பெருகிவரும் மேற்கத்திய சிந்தனையான மைக்கிரோ ஃபேமிலி(குறுகிய குடும்பம்) மற்றும் லிவிங் டுகெதர் எனும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, தனித்து வாழ்வது, உணவு பழக்கத்தால் ஏற்படும் மலட்டு தன்மை, குடும்பக்கட்டுப்பாடு போன்ற பல காரணங்களால் இந்துக்களின் மக்கள்தொகை வேகமாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் பெருகி வரும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் இதனை நமக்கு புலப்படுத்துகின்றன.

இந்து முன்னணியின் நிறுவனர் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்கள் 1984ஆம் ஆண்டிலேயே இது குறித்து எச்சரிக்கை விடுத்தார். சினிமா நாடகம் போன்றவற்றில் அதிக குழந்தைகள் பெறுவதை அவமானமாக சித்தரித்த காலத்தில் ஒரு புரட்சியாக பத்து குழந்தைகளை பெற்ற தாயை பாராட்டி கௌரவித்து வீரத்தாய் பட்டம் அளித்தார். தேசத்திற்கும் சமூகத்திற்கும் ஜனத்தொகை என்பது இன்றியமையாதது என்பதை அன்றே விளக்கினார்.

குடும்பக்கட்டுப்பாடு நல்லது என்றால் அனைத்து மதத்தினரும் பின்பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்து முன்னணி விடுக்கும் கோரிக்கை. இந்துக்களின் கருவையறுக்க மட்டும் குடும்பக்கட்டுப்பாட்டை பயன்படுத்தக்கூடாது.

மத சமநிலை அழிந்து சிறுபான்மை பெரும்பான்மையானால் மதவாதம் தலை தூக்கும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் உன்னில் ஒருவன் மதமாறி போகிறான் என்றால் உங்களின் எண்ணிக்கை ஒன்று குறைந்தது என்பதுடன் எதிரியில் ஒருவன் கூடிவிட்டான் என்பதை உணர்ந்து கொள் என்று எச்சரிக்கிறார்.

எனவே இந்திய பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் ஆய்வு இந்துக்களின் கண்களை திறக்க வேண்டும். இந்துக்களின் ஜனத்தொகை குறைந்தால் தேசத்தில் மத சகிப்புத் தன்மை, பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, பொருளாதாரம், நமது பாரம்பரிய பெருமைகளான மொழி, இலக்கியம், ஆலயங்கள் என எல்லாம் கேள்வி குறியாகிவிடும்.

இதனை கருத்தில் கொண்டு, ஆன்மீக பெரியோர்கள், சமுதாய தலைவர்கள், குடும்பங்களில் உள்ள மூத்த தலைமுறையினர் ஆகியோர் இளைய தலைமுறைக்கு ஜனத்தொகை பெருக வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூற வேண்டியது கடமையாகும்.

வருங்கால சமூகமும் இந்து மக்களின் தொகை குறைந்தால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இந்து முன்னணி வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் வழிநடத்திய வெற்றிப் பாதையில் இந்துக்களிடம் வேகமாக குறைந்து வரும் ஜனத்தொகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை தொடர்ந்து செய்யும். இந்துக்கள் தேச நலன் மற்றும் இந்து சமூக நலன் கருதி அதற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை நல்க அறைகூவல் விடுக்கிறோம்.

IPL 2024: அபார வெற்றி பெற்றது ஆர்சிபி

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

50ம் நாள்: ஐபிஎல் 2024 – 09.05.2024

பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இன்று தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. 

பெங்களூரு அணியை (241/7, விராட் கோலி 92, ரஜத் படிதர் 55, காமரூன் கிரீன் 46, தினேஷ் கார்த்திக் 18, ஹர்ஷல் படேல் 3/38, வித்வத் கவேரப்பா 2//36) பஞ்சாப் அணி (181, ரிலீ ரோஸ்கோ 61, ஷஷாங்க் சிங் 37, ஜானி பெயிர்ஸ்டோ 27, சாம் கரண் 22, முகம்மது சிராஜ் 3/43, ஸ்வப்னில் சிங் 2/28, லாக்கி ஃபெர்கூசன் 2/29, கரன் ஷர்மா 2/36) 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்றைய ஆட்டத்தில் பூவாதலையா வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் பெங்களூரு அணி முதலில் மட்டையாட வந்தது. தொடக்க வீரர் டியு பிளேசிஸ் 2.2ஆவது ஓவரில் 9 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மூன்றாவதாகக் களமிறங்கிய வில் ஜேக்ஸ் 4.4ஆவது ஓவரில் 12 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால் மற்றொரு தொடக்க வீரர் விராட் கோலி (47 பந்துகளில் 92 ரன், 7 ஃபோர், 6 சிக்சர்) 17.4ஆவது ஓவர் வரை விளையாடினார். அவரும் ரஜத் படிதரும் (23 பந்துகளில் 55 ரன், 3 ஃபோர், 6 சிக்சர்) இணைந்து அதிரடியாக விளையாடினார்கள்.

பத்து ஓவர் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கட் இழப்பிற்கு 119 ரன் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. அரை மணி நேரத்திற்கு மழையும் ஆலங்கட்டி மழையும் பெய்தது.

மழைக்குப் பின்னர் பெங்களூரு அணியின் காமரூன் கிரீன் (27 பந்துகளில் 46 ரன்), தினேஷ் கார்த்திக் (7 பந்துகளில் 18 ரன், 1 ஃபோர், 2 சிக்சர்) சிறப்பாக ஆடினர். இதனால் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 241 ரன் எடுத்தது. 

பெங்களூரு அணியின் பேட்டர்கள் 19 ஃபோர் மற்றும் 16 சிக்சர்கள் அடித்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த வித்வத் காவேரப்பா இன்று பஞ்சாப் அணியில் விளையாடி தொடக்கத்திலேயே டியு பிளேசிஸ் மற்றும் வில் ஜேக்ஸ் விக்கட்டுகளை எடுத்தார். கடைசி ஓவரில் ஹர்ஷல் படேல் மூன்று விக்கட்டுகளை எடுத்தார். மற்றபடி பெங்களூரு அணியின் பேட்டர்கள் பஞ்சாபின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார்கள்.  

242 ரன் என்ற கடின இலக்கை அடைய இரண்டாவதாக ஆடிய  பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் (4 பந்துகளில் 6 ரன்) மற்றும் ஜானி பெயிர்ஸ்டோ (16 பந்துகளில் 27 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) இருவரும் சுமாரான தொடக்கம் தந்தனர்.

மூன்றாவதாகக் களமிறங்கிய ரிலீ ரோஸ்கோ (27 பந்துகளில் 61 ரன், 9 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் ஷஷாங்க் சிங் (19 பந்துகளில் 37 ரன், 4 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் ரன் ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டனர்.

ஆனால் ஜிதேஷ் ஷர்மா (5 ரன்) மற்றும் லியம் லிவிங்க்ஸ்டோன் (பூஜ்யம் ரன்) இருவரும் இன்று ஜொலிக்கவில்லை. சாம் கரண் (16 பந்துகளில் 22 ரன், 2 ஃபோர்), அஷுத்தோஷ் ஷர்மா (8 ரன்), ஹர்ஷல் படேல் (பூஜ்யம் ரன்), ராஹுல் சாஹர் (ஆட்டமிழக்காமல் 5 ரன்), அர்ஷதீப் சிங் (4 ரன்) ஆகியோரால் இலக்கை எட்ட முடியவில்லை.

இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 181 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 60 ரன் வித்தியாசத்தில் தோல்வியத் தழுவியது. 

பெங்களூரு அணியின் விராட் கோலி தனது சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருதுபெற்றார்.

நாளை அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும். 

09.05.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
கொல்கொத்தா1183161.453
ராஜஸ்தான் 1183160.476
ஹைதராபாத்1275140.406
சென்னை1165120.700
டெல்லி126612-0.316
லக்னோ126612-0.769
பெங்களூரு1257100.217
மும்பை12488-0.212
பஞ்சாப்12488-0.423
குஜராத்11478-1.320

Lucknow Super Giants 12

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

hinduism - 2026

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது, இது நாட்டில் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கு உகந்த சூழல் இருப்பதாகக் கூறுகிறது என்று பிரதமருக்கான ஆலோசனைக் குழு (EAC-PM) பொருளாதாரத்தின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 1950க்கும், 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்து மக்கள்தொகையில் 7.8% சரிந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள்தொகையில் 43.15% உயர்ந்துள்ளதாகவும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

மதச் சிறுபான்மையினரின் பங்கு – ஒரு குறுக்குவெட்டு பகுப்பாய்வு (1950-2015) என்ற தலைப்பில் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஷாமிகா ரவி தலைமையிலான இக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் 1950 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலத்தில் இந்துக்களின் மக்கள்தொகை 7.82% குறைந்துள்ளது. அதே சமயம் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 43.15% அதிகரித்துள்ளது.

சரியும் ஹிந்துக்களின் எண்ணிக்கை

இந்திய மக்கள்தொகையில், 1950ல் 84.68 ஆக இருந்து இந்துக்களின் சதவீதம், 2015ல் 78.06 ஆக குறைந்துள்ளது.

கணிசமாக உயரும் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை

1950ல் 9.84 ஆக இருந்த இஸ்லாமியர்களின் சதவீதம், 2015ல் 14.09 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல், 1950ல் 2.24 ஆக இருந்த கிறிஸ்தவர்களின் சதவீதம், 2015ல் 2.36 ஆக உயர்ந்துள்ளது. இது 5.38% உயர்வாகும்.

1950ல் 1.24% இருந்த சீக்கியர்கள், 2015ல் 1.85% ஆக உயர்ந்திருக்கிறார்கள். இது 6.58% உயர்வு ஆகும்.

சரிவு காணும் சமணர், பார்ஸிகளின் எண்ணிக்கை

சமணர்கள் மற்றும் பார்சிக்களின் சதவீதம் குறைந்துள்ளது. 1950ல் 0.45% ஆக இருந்த சமணர்களின் எண்ணிக்கை, 2015ல் 0.36% ஆக குறைந்துள்ளது. 1950ல் 0.03% ஆக இருந்த பார்சிக்கள், 2015ல் 0.004% ஆக இருக்கிறார்கள். இது 85% சரிவு.

சர்வதேச அளவில், பெரும்பான்மை மக்களின் விகிதம் குறைந்து வரும் போக்கு நிலவுவதாகவும், அதை ஒட்டி இந்தியாவிலும் பெரும்பான்மை மக்களின் விகிதம் 7.82% குறைந்துள்ளது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இது சமூகத்தில் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கு உகந்த சூழல் உள்ளதைக் காட்டுகிறது. அதேநேரம், சாதகமற்ற பிரிவினருக்கு ஏற்ற சூழலையும், ஆதரவையும், கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் முடிய வழங்காத வரை அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படாது என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள அனைத்து வகையான கொள்கை நடவடிக்கைகள், அரசியல் முடிவுகள், சமூக செயல்பாடு ஆகிய அனைத்தும் சமூகத்தில் பன்முகத்தன்மையை அதிகரிப்பதற்கு ஏற்ப இருக்கிறது என்பதையே, பெரும்பான்மை மக்கள்தொகை குறைவு மற்றும் சிறுபான்மை மக்கள் தொகை அதிகரிப்பு காட்டுகிறது.

அண்டை நாடுகளைச் சேர்ந்த மக்கள் நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு வருவதில் ஆச்சரியமில்லை. பெரும்பான்மை மக்கள் தொகை குறைவதும், சிறுபான்மை மக்கள் தொகை உயர்வதும் உலகலாவிய போக்காக உள்ள போதிலும், பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, பூட்டான் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அது பிரதிபலிக்கவில்லை.

இந்த நாடுகளில், பெரும்பான்மை மதப் பிரிவினரின் எண்ணிக்கை அதிகரித்து, சிறுபான்மை மக்களின் எண்ணிக்கை ஆபத்தான முறையில் சுருங்கியுள்ளது.

முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத இந்தியா, மியான்மர், நேபாள் ஆகிய நாடுகளில் பெரும்பான்மை மதத்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு முக்கிய காரணங்களுக்காக 1950 ஆம் ஆண்டு ஒரு அடிப்படை ஆண்டாக முக்கியமானது என்று அறிக்கை குறிப்பிட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் சர்வதேச மனித உரிமைகள் கட்டமைப்பானது சிறுபான்மை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரைப் பாதுகாப்பதற்கான அரசின் பொறுப்புடன் சர்வதேச சட்டத்தில் முக்கிய நீரோட்டத்துடன் வடிவம் பெறத் தொடங்கிய நேரத்தில் இதுவாகும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

1950 மற்றும் 2015 க்கு இடையில் 65 ஆண்டுகளில் ஒரு நாட்டின் மக்கள்தொகையில் மாறிவரும் பங்கின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள சிறுபான்மையினரின் நிலை குறித்த விரிவான குறுக்கு-நாடு விளக்க பகுப்பாய்வு ஆகும்.

பகுப்பாய்வு செய்யப்பட்ட 167 நாடுகளுக்கு, 1950 ஆம் ஆண்டின் அடிப்படை ஆண்டில் பெரும்பான்மை மதப் பிரிவின் பங்கின் சராசரி மதிப்பு 75 சதவிகிதம் ஆகும், அதே சமயம் 1950 மற்றும் 2015 க்கு இடையில் பெரும்பான்மை மதப் பிரிவின் மாற்றத்தைக் கைப்பற்றும் விநியோகத்தின் சராசரி மதிப்பு 21.9 ஆகும்.