டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் ஞாயிற்றுக் கிழமை நேற்று காலமானார். அவரது மறைவு பற்றி அவரது குடும்பத்தினர் தெரிவித்த தகவல்…
எங்களது தகப்பனார் தெ.ஞா என அன்புடன் அழைக்கப்படும் ‘முனைவர் தெ.ஞானசுந்தரம்’ அவர்கள் நேற்று மாலை (25.1.26) 3.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரது இறுதி ஊர்வலம் 28.01.2026 புதன்கிழமை காலை 8.30 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு வேலங்காடு தகன பூமியில்(RTO அலுவலகம், New Avadi Road, கீழ்பாக்கம் Water tank அருகில்) 10.00 மணியளவில் தகனம் செய்யப்படும். இங்ஙனம்- தி.மணிமேகலை (மனைவி), ஞா.அருண்மொழி(மகன்), ஞா.மாதவன்(மகன்).
தெ. ஞானசுந்தரம் 1941 செப்டம்பர் 24ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்தின் தேரழுந்தூரை அடுத்த குழையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். தமிழ்ப் பேராசிரியர், நூலாசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர் என பல தளங்களில் முத்திரை பதித்தவர். கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பொருளியல் இளங்கலைப் பட்டம் பெற்றவர் பின்னாளில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். வைணவ உரைவளம் என்னும் பொருண்மையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாராய்ச்சி மணிப்ரவாள நடையில் அமைந்த திவ்யப் பிரபந்த உரைகளைப் பற்றியது. பேராசிரியர் மு. வரதராசனாரின் மாணவராகத் திகழ்ந்தவர்.
பச்சையப்பன் கல்லூரி, பரமத்தி வேலூர்க் கந்தசாமிக் கண்டர் கல்லூரி, சென்னைக் கந்தசாமி நாயுடு கல்லூரி ஆகியவற்றிலும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அரிய கையெழுத்துச் சுவடித் துறையிலுமாக 37 ஆண்டுகள் தொடர்ந்து பணிசெய்துள்ளார். 1993ல் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவரானார். மாலைக் கல்லூரிப் பொறுப்புப் பேராசிரியராகவும் அதே கல்லூரியில் பொறுப்பு முதல்வராகவும் பதவி வகித்து 2000ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார்.
புதுவை நடுவண் பல்கலைக்கழக கம்பன் இருக்கையின் முதல் பேராசிரியர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன துணைத்தலைவர் என பொறுப்புகள் வகித்தார். நூல்கள் பல எழுதியுள்ளார். விருதுகள் பல இவரை அலங்கரித்துள்ளன.
பேராசிரியர் தமிழறிஞர் தெ.ஞானசுந்தரம் குறித்த அடியேனது நினைவலைகள்…
வயதில் மூத்த நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார்… ‘உன்னோட ஃபேஸ்புக் போஸ்ட்ல பெரும்பாலும் இரங்கல் குறிப்புதான் பெரிதா இருக்கு. ஆனா மனதின் ஆழத்தை வெளிப்படுத்தும் விதமா இருக்கு, படிக்கும் போதே கண்கள் கலங்குகிறது’ என்றார். 12 வருடம் முன் அண்டை வீட்டுக்காரரான செங்கோட்டை வி. ஜனார்த்தனன் ஐயா காலமான போது அவருடனான அனுபவங்களை எழுதியிருந்தேன். அதைப் படித்து விட்டு கண்கலங்கியதாக தெரிவித்த தெ. ஞானசுந்தரம் ஐயா, ‘தங்கள் கட்டுரையைப் படித்தேன். கடைசிப்பகுதியில் இழையும் சோகம் கண்களைக் கலங்கச் செய்தது. நான் அவரைச் சென்று பார்த்த வீடு நீங்கள் சிறுவயதில் .ஓடியாடியது என்பதை அறிய மகிழ்ச்சி’ என்றார் தனிப்பட்ட தகவலில்! காரணம், அவர்கள் அந்நாளைய பட்டிமன்றம், இலக்கியக் கூட்டங்களில் ஒன்றாகப் பங்கெடுத்தவர்கள்.
உரையாடலில் தெ.ஞா. ஐயாவும் விளையாட்டாகச் சொன்னார், உங்கள் இரங்கல் குறிப்பைப் படிக்கும் போது, தன்னைப் பற்றியும் இப்படியான உள்ளந்தொடும் அனுபவங்களைக் கேட்டுவிட்டு, மனநிறைவுடன் உலகை விட்டுப் போகணும்னு ஒருத்தருக்குத் தோன்றும் என்றார். ஐயா இது அடியேனை கலம்பகம் பாடுநர் என்று குறிப்பிடுமாப் போலே தோன்றுதலால், அடியேனுக்குள் கலக்கம் அதிகமாகி விட்டது என்றேன்! சிரித்தபடியே கடந்தார்.
அவருடனான பழக்கம் ஏற்பட்டது 2002ல். அப்போது சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சார்பில் ஒரு கருத்தரங்கு. சென்றிருந்தேன். அதில் பேசிய அறிஞர்களில் இவருடைய பாணி என்னை வெகுவாய் ஈர்த்திருந்தது. அந்த வருட கலைமகள் தீபாவளி மலரில் அறிஞர்களின் உரைகளைத் தொகுத்து எழுதினேன். அப்போதுதான் அவருடன் முதல் சந்திப்பு. பார்த்த மாத்திரத்தில் உள்ளத்தால் அணைத்துக் கொண்டார். (கலைமகள் தொகுப்பை இங்கே ஏற்கெனவே பதிவிட்டிருக்கிறேன். சுட்டி… https://www.facebook.com/share/1BknVMpLJp/ )
பின்னாளில் நான் தினமணி பணியில் இருந்த போது, அடிக்கடி பேசிக் கொள்ளும் வாய்ப்பு இருந்தது. சொல் விளையாடல் மட்டுமல்ல, அவர் தினமணிக்காக நிறைய எழுதினார். தினமணியின் மீது தனித்துவமான விருப்பு அவருக்கிருந்தது. குறிப்பாக தமிழ் மணி கட்டுரைகள், நடுப்பக்க கட்டுரைகள் இவை மீது! சில கட்டுரைகள் குறித்து, அல்லது சில சொற்கள் குறித்து விளக்கமோ விமர்சனமோ தனிப்பட்ட வகையில் பேசிக் கொள்வோம். எனினும் அவர் எவரைக் குறித்தும் தனிநபர் விமர்சனமாக எதையும் முன்வைத்ததில்லை! அவை அடியேனுக்கு மேலும் பாடம் எடுப்பது போலிருக்கும். இறுதி மூச்சு உள்ள வரை நான் கற்கும் மாணவனே என்ற எண்ணம் எனக்குள் உண்டு. சார்ந்திருக்கும் துறை மட்டுமல்லாது வேறு துறைகளிலும் கவனம் செலுத்துவேன். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு துறை சார்ந்து கற்றல் இருக்கும். தொழில்நுட்பம், மென்பொருள், வலைத்தள நுப்டம் இப்போது ஏஐ- செயற்கை நுண்ணறிவு சார் நுட்பங்கள் என…! இருந்தாலும், அடிப்படையை நாம் மறந்துவிடலாகாது என்பதற்கான ஊன்றுகோல்தான் தெ.ஞா. போன்ற அறிஞர்களின் நட்பும் தொடர்பும்!
தெய்வச் சேக்கிழார் மேடையில் அவரை முதலில் சந்தித்திருந்தாலும், வைணவ இலக்கியங்களில் கரை கண்டவர் தெ.ஞா. என்பதை அவருடனான பழக்கம் அடியேனுக்குப் புரிய வைத்தது. குறிப்பாக, மணிப்ரவாள நடை, வைணவ உரை நடை இவை குறித்து அடிக்கடி பேசிக் கொள்வோம். அவர் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதும் இந்தத் தலைப்பில் தான் என்பதால், நமக்குக் கூடுதலாக இவை குறித்த தகவல்கள் அவரிடம் இருந்து வந்து சேர்ந்தன.
கல்கியின் தீபம் இதழ்ப் பணியில் இருந்த போது, நம் இதழ்களிலும் நீங்கள் எழுதலாமே! என்றேன். அப்போது தன் ஆசையை இப்படிப் பகிர்ந்து கொண்டார்… “நூல் எழுதும் பணியில் உள்ளேன். திவ்வியப் பிரபந்த மலர்கள் என்னும் பெயரில் ஆழ்வார்கள் பாசுரங்களில் சிலவற்றைக் குறித்து எழுத வேண்டும் என்னும் வேட்கை உண்டு. பெருமாள் திருக்குறிப்பு இருக்குமேல் நிறைவேறும். |தங்களுக்கு இசைவாயின் இம் முயற்சியை மேற்கொள்வேன். அவ்வப்பொழுது எழுதித் தருகிறேன்.” – என்றார். ஆனால் அது நிறைவேறவில்லை. அதற்குள் காலம் பல மாறுதல்களை அவரவர் வாழ்க்கையில் தோற்றுவித்து விட்டது.
பேஸ்புக் தொடர்பில் வந்த பின் என் பதிவுகளுக்கு அடிக்கடி பதில் போடுவார். ஒரு முறை நேர்மறை – எதிர்மறை – உடம்பாடு – என்பது குறித்த சொற்களில் விவாதம் வந்தபோது, ஐயா, எதிர்மறையைத் தவறு என்று சொல்லவில்லை. உடம்பாடு என்பதை நேர்மறை என்று சொல்வது தான் தவறு என்று தெரித்துள்ளேன் – என்று பதில் விளக்கம் அளித்தார்.
அதுபோல், பிறந்த நாள் வாழ்த்தை பேஸ்புக் உள்டப்பியிலும் வாட்ஸ்அப்பிலும் தெரிவிப்பதில் அவர் தவறியதில்லை. ஒருமுறை தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதத்தில் என அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். பதிலுக்கு அவரும் அதே பாணியில் நன்றி தெரிவித்தார். எம்மொழியும் எனக்கு இனிய மொழியே! என்ற குறிப்புடன்! ஆக ஒரு சிறந்த தேசியச் சிந்தனையாளர் அவர். இப்போது பத்ம விருதுகள் பற்றி செய்தி எழுதிக் கொண்டிருந்த நேரத்தில் தெ.ஞானசுந்தரம் ஐயா பரமபதித்த செய்தி எட்டியது. அப்போது அடியேனுக்குத் தோன்றியது, இவரின் தெய்வத் தமிழ்ப் பணிக்காக மத்திய அரசு பத்ம விருது கொடுத்திருக்க வேண்டும்; முயற்சி செய்திருக்கலாம்! தவற விட்டுவிட்டோமே! என்று!
இன்னும் அவரைப் பற்றி நிறையக் குறிப்பிடலாம்தான். ஆனால் இரங்கல் குறிப்புகளை இனியும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க எனக்கு விருப்பம் இல்லை. இப்போதோ, எனக்கு நானே கலம்பகம் படித்துக் கொள்ளும் இயலா நிலைக்கு உடலும் உள்ளமும் தள்ளப்பட்டுவிட்டதால், அவர் நினைவுகளை உள்ளத்தில் இருத்தி வெறுமனே அசைபோடுகிறேன்!
நியூசிலாந்து கிரிக்கட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் ஐந்து டி20 ஆட்டங்கள் ஆடவுள்ளது. இந்திய ஒருநாள் அணியில் ஷுப்மன் கில் அணித்தலைவராக இருந்தார். ரோஹித் ஷர்மா, விராட் கோலி அணியில் விளையாடினர்.
முதல் ஒருநாள் ஆட்டம் வதோத்ராவில் ஜனவரி 11ஆம் நாள் நடந்தது. நியூசிலாந்து அணி முதலில் ஆடி 50 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 300 ரன் எடுத்தது. இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 306 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் விராட் கோலி (93 ரன்), ஷுப்மன் கில் (56 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (49 ரன்), கே.எல். ராகுல் (29 ரன்), ஹர்ஷித் ராணா (29 ரன்), ரோஹித் ஷர்மா (26 ரன்) நன்றாக விளையாடினர்.
இரண்டாவது ஒருநாள் ஆட்டம் ஜனவரி 14இல் ராஜ்கொட்டில் நடந்தது. இந்திய அணி முதலில் விளையாடி 50 ஓவர் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 284 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி 47.3 ஓவரில் 3 விக்கட் இழப்பிற்கு 286 ரன் எடுத்து வெற்றிபெற்றது. இந்திய அணியில் கே.எல். ராகுல் 112 ரன் எடுத்தார். நியூசிலாந்து அணியில் டேரியல் மிட்சல் ஆட்டமிழக்காமல் 131 ரன் எடுத்தார்.
மூன்றாவது ஒருநாள் ஆட்டம் ஜனவரி 18இல் இந்தூரில் நடைபெற்றது. நியூசிலாந்து அணி முதலில் விளையாடி 50 ஓவர்களில் 8 விக்கட் இழப்பிற்கு 337 ரன் எடுத்தது. இந்திய அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 296 ரன் மட்டுமே எடுத்ததால் ஆட்டத்தில் தோல்வியுற்றது. நியூசிலாந்து அணியில் டேரியல் மிட்சல் 137 ரன்னும் கிளன் பிலிப்ஸ் 106 ரன்னும் எடுத்தனர். இந்திய அணியில் விராட் கோலி 124 ரன், நிதீஷ் குமார் ரெட்டி 53 ரன், ஹர்ஷித் ராணா 52 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.
டி20 ஆட்டங்கள்
முதல் டி20 ஆட்டம் ஜனவரி 21இல் நாக்பூரில் நடைபெற்றது. இந்திய அணி முதலில் விளையாடி 7 விக்கட் இழப்பிற்கு 238 ரன் எடுத்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கட் இழப்பிற்கு 190 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. அபிஷேக் ஷர்மா 35 பந்துகளில் 84 ரன், ரிங்கு சிங் 20 பந்துகளில் 44 ரன் எடுத்தனர்.
இரண்டாவது டி20 ஆட்டம் ஜனவ்ரி 23இல் ராய்ப்பூரில் நடந்தது. நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கட் இழப்பிற்கு 208 ரன் எடுத்தது. இந்திய அணி 15.2 ஓவர்களில் 3 விக்கட் இழப்பிற்கு 209 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணியில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்னும் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் 82 ரன்னும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
மூன்றாவது ஆட்டம் இன்று (25. ஜனவரி 2026) கௌஹாத்தியில் நடைபெற்றது. பூவாதலையாவில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஹர்ஷித் ராணாவின் முதல் ஓவரில் டேவன் கான்வாய் ஆட்டமிழந்தார். கிளன் பிலிப்ஸ் (48 ரன்), மார்க் சாப்மன் (32 ரன்), மிட்சல் சாண்ட்னர் (27 ரன்), டேரியல் மிட்சல் (14 ரன்), டிம் செய்ஃபெர்ட் (12 ரன்) எடுத்தனர். பும்ரா 3 விக்கட் வீழ்த்தினார்.
இரண்டாவதாக விளையாடிய இந்திய அணியில் முதல் ஓவர் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் அபிஷேக் ஷர்மா (68 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் (28 ரன்) ஜோடி அதிரடியாக ரன் எடுத்தது. ஷ்ரேயாச் ஆட்டமிழந்தபோது ஆடவந்த சூர்யகுமார் யாதவும் (57 ரன்) அதிரடியாக ஆடினார். இதனால் நியாசிலாந்து அணி 20 ஓவர்களில் சேர்த்த 153 ரன்னை இந்திய அணி 10 ஓவர்களில் எட்டியது. இதனால் டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
நாலாவது டி20 ஆட்டம் ஜனவரி 28இல் விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது. ஐந்தாவது டி20 ஆட்டம் திருவனந்தபுரத்தில் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் பாணியில் அதிரடி காட்டி விரைவான பந்துகளில் அரை சதம் அடித்து கலக்கினார் அபிஷேக் சர்மா.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி ஒரு நாள் போட்டிகளைத் தொடர்ந்து தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இன்று மூன்றாவது டி20 போட்டி கௌஹாத்தியில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில்பந்துவீசத் தீர்மானித்து, நியூஸிலாந்தை பேட்டிங் செய்யப் பணித்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக பும்ரா, ரவி பிஷ்னோய் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இதன்படி, பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளக்க முடியாமல் திணறியது. தொடக்க வீரர் கான்வே, 3வது பந்திலேயே ஆட்டமிழந்தார். 2வது ஓவரில் ரச்சின் ரவீந்திராவும் ஆட்டமிழக்க, 17 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியில் பிலிப்ஸ் (48), சாப்மேன் (32), சான்ட்னர் (27) ஓரளவுக்கு தாக்குப் பிடித்து ரன்களை சேர்த்ததால், அந்த அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன் சேர்த்து இந்திய அணிக்கு 154 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அடுத்து பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணியில், சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே அவுட்டானார். ஆனால் அவர் ஆட்டம் இழந்த தாக்கம் தெரியாத அளவில் அதிரடி காட்டினர் அபிஷேக் ஷர்மாவும், இஷான் கிஷானும்! இருவரும் சேர்ந்து3.2 ஓவர்களில் 53 ரன்களைச் சேர்ததனர். அதாவது முதல் 20 பந்தில் 53 ரன் சேர்ந்தது. அந்நிலையில் இஷான் கிஷான் (28) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் கடந்த போட்டிகளில் ஆடியது போல் அதிரடி ஆட்டத்தை தொடக்கம் முதலே வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் அடுத்தடுத்த பந்துகளில் சிக்சர் மழை பொழிந்ததால் ரன் ஜெட் வேகத்தில் எகிறியது.
அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்திய வீரர் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதம் அடித்து குறைந்த பந்தில் அரை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவரைப் பின் தொடர்ந்து அபிஷேக் சர்மா சாதனையை நிகழ்த்தியது இந்திய ரசிகர்களை பெரிதும் உத்ஸாகத்தில் தள்ளியது.
தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் அரைசதம் அடிக்க இந்திய அணி 10 ஓவர்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. அபிஷேக் ஷர்மா 20 பந்துகளில் 68 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 26 பந்தில் 57 ரன்னும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் 20 பந்தில் 53 ரன்னும் அடுத்த 40 பந்தில் 102 ரன்னும் சேர்த்து இந்திய அணி சாதித்தது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்த போட்டி வரும் 28ம் தேதி நடைபெறுகிறது.
‘மனதின் குரல் (130ஆவது பகுதி)’ ஒலிபரப்பு நாள் : 25.01.2026 தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
இந்த செய்தி / கட்டுரையின் உள்ளே…
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். 2026ஆம் ஆண்டின் முதல் மனதின் குரல் இது. நாளை ஜனவரி மாதம் 26ஆம் தேதியன்று நாமனைவரும் குடியரசுத் திருநாளைக் கொண்டாட இருக்கிறோம். இந்த நாளன்று தான் நமது அரசியலமைப்புச் சட்டம் அமல் செய்யப்பட்டது. ஜனவரி 26ஆம் தேதி என்ற தினம் குறிப்பாக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களை நினைவுகூரக்கூடிய சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது.
வாக்காளரே ஜனநாயகத்தின் ஆன்மா!
இன்று ஜனவரி மாதம் 25ஆம் தேதியும் கூட மிகவும் மகத்துவம் வாய்ந்தது. இன்று தேசிய வாக்காளர் தினம். வாக்காளர் தான் ஜனநாயகத்தின் ஆன்மா.
நண்பர்களே, பொதுவாகவே யாருக்கு 18 வயதாகிறதோ, அவர் வாக்காளர் ஆகி விடுகிறார், இது வாழ்க்கையின் ஒரு பொதுவான நிலையாகக் கருதப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்றால் எந்த ஒரு இந்தியரின் வாழ்க்கையிலேயும் இது வாழ்க்கையின் மிகப்பெரிய மைல்கல்லாகும். ஆகையால், நாம் தேசத்தின் வாக்காளராக ஆவதை ஒரு கொண்டாட்டமாகவே கொண்டாடுவோம். எப்படி நாம் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாடுகிறோமோ, அதே போல எந்த ஒரு இளைஞரும் முதன்முறையாக வாக்காளராக ஆகிறார் என்றால், அந்தப் பகுதி, கிராமம் அல்லது நகரம் முழுவதும் அவரை வரவேற்று இனிப்புக்களை வழங்க வேண்டும். இதனால் மக்களிடம் வாக்குரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்படும். இதோடு கூடவே, வாக்காளர் ஆவது எத்தனை மகத்துவமானது என்ற உணர்வு மேலும் வலுவடையும்.
நண்பர்களே, தேசத்திலே தேர்தல் நடைமுறையோடு இணைந்திருப்போர் யாராக இருந்தாலும், அவர்கள் நமது ஜனநாயகத்தை உயிர்ப்போடு வைத்திருக்க கள அளவில் பணியாற்றி வருகின்றார்கள். நான் அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். இன்று வாக்காளர் தினத்தன்று நான் நமது இளைய நண்பர்களிடம் மீண்டும் வேண்டிக் கொள்கிறேன், உங்களுக்கு 18 வயதான உடனேயே நீங்கள் உங்களை வாக்காளராகக் கண்டிப்பாக பதிவு செய்து கொள்ளுங்கள். அரசியல் அமைப்புச் சட்டமானது எந்த கடமையுணர்ச்சியை அனைத்து வாக்காளர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறதோ, நீங்கள் பதிவு செய்து கொண்டு வாக்களிப்பதன் வாயிலாக அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுவதோடு, பாரதத்தின் ஜனநாயகமும் பலமடையும்.
ஸ்டார்ட் அப் இந்தியா நினைவலைகள்
எனதருமை நாட்டுமக்களே, இப்போதெல்லாம் சமூக ஊடகத்திலே ஒரு சுவாரசியமான போக்கு காணப்படுகிறது. 2016ஆம் ஆண்டின் தங்களுடைய நினைவுகளை மக்கள் மீண்டும் பசுமையாக்கிக் கொள்கிறார்கள். இந்த உணர்வுடனே கூட, இன்றும் கூட, உங்களோடு நான் என்னுடைய ஒரு நினைவலையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பத்தாண்டுகள் முன்னால், ஜனவரி மாதம் 2016ஆம் ஆண்டிலே, நாம் ஒரு சாகஸமான பயணத்தைத் தொடங்கினோம். எங்களுடைய முயற்சி சிறியதாக இருக்கலாம் ஆனால், நமது இளைய சமூகத்தின் எதிர்காலத்திற்கு இது மிகவும் முக்கியமானது என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம். அப்போது யாருக்கும் இதுபற்றி புரிந்து கொள்ள முடியவில்லை. நண்பர்களே, நான் எந்தப் பயணம் குறித்துப் பேசுகிறேன் தெரியுமா?
நண்பர்களே, நான் எந்தப் பயணம் பற்றி பேசுகிறேன் என்றால், அது தான் ”ஸ்டார்ட் அப் இண்டியா”வின் பயணம் அது பற்றித்தான். இந்த அற்புதமான பயணத்தின் நாயகர்கள் நமது இளைய நண்பர்கள் தான். தங்களுடைய சொகுசான வாழ்க்கையை விடுத்து வெளியேறி, அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் நூதனங்கள் எல்லாம் வரலாற்றில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
நண்பர்களே, பாரதத்திலே இன்று உலகின் 3ஆவது மிகப்பெரிய ஸ்டார்ட் அப் சூழலமைப்பு உருவாகி விட்டது. இந்த ஸ்டார்ட் அப்புகள் வாடிக்கையானவற்றை விட்டு சற்று விலகி, பத்தாண்டுகளுக்கு முன்னால் வரை கற்பனைகூட செய்து பார்க்க முடியாத துறைகளில் எல்லாம் பணியாற்றி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு, அணுசக்தி ஆற்றல் குறைகடத்திகள், இடப்பெயர்வு, பசுமை ஹைட்ரொஜன், உயிரி தொழில்நுட்பம் என நீங்கள் கூறுவது எதுவாக இருந்தாலும், ஏதாவது ஒரு இந்திய ஸ்டார்ட் அப் அந்தத் துறையில் பணியாற்றி வருவதை நீங்கள் காணலாம். ஏதோ ஒரு ஸ்டார்ட் அப்போடு தொடர்புடைய அல்லது ஸ்டார்ட் அப் தொடங்க நினைக்கும் அனைத்து இளைய நண்பர்களுக்கும் நான் வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்.
தரமே நிரந்தரம்
நண்பர்களே, இன்று மனதின் குரல் வாயிலாக நான் நாட்டுமக்களுக்கு, குறிப்பாக தொழில்துறை மற்றும் ஸ்டார்ட் அப்புகளோடு இணைந்த இளைஞர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். பாரதத்தின் பொருளாதாரம் விரைந்து முன்னேறி வருகின்றது. பாரதத்தின் மீது உலகத்தின் பார்வை இருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் நம்மனைவருக்கும் ஒரு பெரும் பொறுப்பு இருக்கின்றது. அந்தப் பொறுப்பு என்னவென்றால், தரத்தின் மீது கவனம் செலுத்துவது தான். அதுவா நடக்கும், பார்த்துக்கலாம், செஞ்சுக்கலாம் என்ற காலகட்டம் மலையேறி விட்டது. வாருங்கள், நாம் முழு சக்தியோடு தரத்திற்கு முதன்மை அளிப்போம். நம்மனைவரின் மந்திரமும் ஒன்று தான், அது தரம், தரம், தரமாக மட்டுமே இருக்க வேண்டும்.
குறைபாடும் இல்லை, சூழல் பாதிப்பும் இல்லை
நேற்றைய தரத்தை விடச் சிறப்பாக இன்றைய தரம் இருக்க வேண்டும். நாம் எதைத் தயாரித்தாலும், அதன் தரத்தைச் சிறப்பாக ஆக்கும் உறுதிப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். அது நமது ஜவுளித்துறையாக்ட்டும், தொழில்நுட்பத்துறையாகட்டும், மின்னணுத்துறையாகட்டும், ஏன் பேக்கேஜிங்காகட்டும், இந்தியப் பொருட்களின் அடையாளம், தலைசிறந்த தரம் என்றாக வேண்டும். வாருங்கள், நம்முடைய சிறப்பம்சத்தை நாம் நமது அளவுகோலாக ஆக்கிக் கொள்வோம். தரத்திலே எந்த விதமான சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்று உறுதியேற்போம், நான் செங்கோட்டையிலிருந்து உரையாற்றிய வேளையில், Zero Defect Zero Effect, குறைபாடும் இல்லை, சூழல் பாதிப்பும் இல்லை என்று கூறியபடி செயல்பட்டால், வளர்ச்சியடைந்த பாரதத்தின் பயணத்தை மேலும் விரைவாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.
நதிக்கு உயிர்கொடுங்கள்!
என் மனம் நிறை நாட்டுமக்களே, நமது தேசத்தின் மக்கள் மிகவும் புதுமைகள் படைப்பவர்களாக இருக்கிறார்கள். பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடுவது நமது நாட்டுமக்களின் இயல்பிலேயே இருக்கிறது. சிலர் இந்தப் பணியை ஸ்டார்ட் அப்புகள் வாயிலாகச் செய்கிறார்கள், சிலர் சமூக சக்தி என்ற பாதையைத் தேர்ந்தெடுத்து முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இப்படிப்பட்டதொரு முயற்சி தான் உத்தர பிரதேசத்தின் ஆஸம்கட்டிலே தெரிய வந்திருக்கிறது. இங்கே பெருகியோடும் தமஸா நதி மக்களுக்குப் புதிய வாழ்க்கையை அளித்திருக்கிறது. தமஸா வெறும் நதி மட்டுமல்ல, நமது கலாச்சார மற்றும் ஆன்மீக மரபின் உயிர்ப்புடைய பெருக்காகும். அயோத்தியிலிருந்து தொடங்கி கங்கையிலே கலக்கும் இந்த நதி இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையை வளமாக்கி வந்தது. ஆனால் மாசு காரணமாக இதன் தொடர் பெருக்கிலே தடையேற்பட்டது. வண்டல், குப்பை கூளங்கள் மற்றும் மாசு காரணமாக இந்த நதியின் பிரவாகம் தடைப்பட்டுப் போனது. இதன் பிறகு இங்கே இருக்கும் மக்கள் இந்த நதிக்குப் புதியதோர் உயிர்ப்பளிக்க வேண்டி இயக்கம் ஒன்றைத் தொடங்கினார்கள். நதி தூய்மைப்படுத்தப்பட்டது, அதன் கரையோரங்களிலே நிழல்தரும், பழம்தரும் தருக்கள் நடப்பட்டன. வட்டார மக்கள் கடமையுணர்வுடன் இந்தப் பணியில் ஈடுபட்டார்கள், அனைவரின் முயற்சிகளாலும் நதி மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது.
மக்கள் சக்தியாலே சாத்தியம்!
நண்பர்களே, மக்களின் பங்களிப்பு தொடர்பான இப்படிப்பட்ட ஒரு முயற்சி ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூரிலும் காணக் கிடைக்கிறது. இந்தப் பகுதி வறட்சி என்ற தீவிரமான பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்தது. இங்கிருக்கும் மண் செந்நிறம் உடையது, மணல் பாங்கானது. இதன் காரணமாகவே மக்கள் நீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே பல இடங்களிலே நீண்ட காலமாகவே மழை பொழிவதில்லை. பலவேளைகளில் மக்கள் அனந்தபூரை பாலைவன நிலைமையோடு கூட ஒப்பிட்டுக் கூறுவதுண்டு.
நண்பர்களே, இந்தப் பிரச்சினைக்கான தீர்வைத் தேடி வட்டார மக்கள் இணைந்து நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்த உறுதி பூண்டார்கள். பிறகு நிர்வாகத்தின் துணையோடு இங்கே அனந்த் நீரூ சம்ரக்ஷண் ப்ராஜெக்ட் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின்படி, பத்துக்கும் அதிகமான நீர்நிலைகளுக்கு மீளுயிர் வாய்த்தது. அந்த நீர்நிலைகளில் எல்லாம் இப்போது நீர் நிரம்பத் தொடங்கிவிட்டது. இதோடு கூடவே, 7000த்திற்கும் அதிகமான மரங்களும் நடப்பட்டன. அதாவது அனந்தபூரிலே நீர் பாதுகாப்போடு கூடவே, பசுங்கூரையும் அதிகரித்துவிட்டது. இங்கே ஆனந்தமாக நீந்தி மகிழலாம். ஒரு வகையிலே பார்த்தோமென்றால், இங்கே இருக்கும் மொத்த சூழலமைப்பும் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறது எனலாம்.
நண்பர்களே, ஆஸம்கட்டாகட்டும், அனந்தபூராகட்டும், அல்லது தேசத்தின் எந்தவொரு இடமாகட்டும், மக்கள் ஒன்றிணைந்து கடமை உணர்வோடு பெரியபெரிய உறுதிப்பாடுகளையும் சாதித்து வருகிறார்கள். மக்கள் பங்களிப்பும், சமூக செயல்பாடும் என்ற உணர்வுகள் தாம் நமது தேசத்தின் மிகப்பெரிய பலம்.
ஜென்ஸீ தலைமுறையின் பஜன் க்ளப்பிங்
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நமது தேசத்திலே பஜனை மற்றும் கீர்த்தனைகள் எல்லாம் பல நூற்றாண்டுகளாகவே, நமது கலாச்சாரத்தின் ஆன்மாவாகவே இருந்து வந்திருக்கின்றன. நமது ஆலயங்களில் நாம் பஜனைப்பாடல்களைக் கேட்டிருப்போம், கதாகாலக்ஷேபத்தைக் கேட்டிருப்போம், ஒவ்வொரு காலத்திலும் நாம் பக்திக்கு என ஒரு வேளையை நம் வாழ்கையில் ஒரு பங்கினை அளித்திருக்கிறோம். இன்றைய தலைமுறையும் கூட சில புதிய அதிசயங்களைச் செய்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் பக்தி உணர்வைத் தங்களுடைய அனுபவம் மற்றும் தங்களுடைய வாழ்க்கைமுறையால் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இந்த எண்ணம் காரணமாக ஒரு புதிய கலாச்சார வழிமுறை வெளியாகி வந்திருக்கிறது. இப்படிப்பட்ட காணொளிகளை நீங்கள் சமூக ஊடகங்களிலே கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள்.
தேசத்தின் பல்வேறு நகரங்களில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் திரண்டு வருகிறார்கள். அலங்கரிக்கப்பட்ட மேடை, ஒளிவெள்ளம், இசைப்பெருக்கு, எல்லாம் தடபுடலாக இருக்கிறது, சூழல் எல்லாம் ஏதோ பெரிய இசைக்கச்சேரிக்கு சற்றும் குறைந்தது கிடையாது. ஏதோ பெரிய இசைக்கச்சேரி நடப்பது போல இருக்கும், ஆனால் அங்கே என்ன நடக்கிறது என்றால் முழு ஈடுபாட்டோடு, பக்தி சிரத்தையோடு, லயம் நிறைந்த பஜனைப் பாடல்கள் எதிரொலிக்கின்றன. இந்தச் செயல்பாட்டை இன்று பஜன் க்ளப்பிங் என்று அழைக்கிறார்கள்; குறிப்பாக இதை ஜென்ஸீ என்று அழைக்கப்படும் புதிய தலைமுறையினருக்கு இடையே இது விரைவாக விரும்பப்படு பொருளாக ஆகி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் பஜனைப் பாடல்களின் கண்ணியம் மற்றும் தூய்மையின் மீது கவனம் செலுத்தப்படுவது மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கிறது. பக்தி லேசாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை, சொற்களுக்கான மரியாதை விடுபடுவதில்லை, பாவமும் குறைபடுவதில்லை. ஆன்மீகத்தின் தொடர் பிரவாகத்தை அங்கே அனுபவிக்க முடியும்.
மலேஷிய தமிழ்ப் பள்ளிகளின் சேவை
என் உளம்நிறை நாட்டுமக்களே, இன்று நமது கலாச்சாரம் மற்றும் பண்டிகைகள், உலகம் முழுவதிலும் தங்களுடைய அடையாளத்தை ஏற்படுத்தி வருகின்றன. உலகெங்கிலும் பாரதத்தின் பண்டிகைகள், பெரும் உல்லாசம்-உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டு வருகின்றன. அனைத்து வகையான கலாச்சார அதிர்வினை போற்றிப் பாதுகாப்பதில் நமது அயல்நாடுவாழ் சகோதர சகோதரிகளுக்கு விசேஷமான பங்களிப்பு இருக்கின்றது. அவர்கள் எங்கே இருந்தாலும், அங்கே தங்களுடைய கலாச்சாரத்தின் அடிப்படை உணர்வைப் பாதுகாத்து, அதை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். இது தொடர்பாக மலேஷியாவிலும் நமது பாரத சமூகத்தினர் மிகவும் போற்றுதலுக்குரிய பணியை ஆற்றி வருகின்றார்கள். மலேஷியாவில் 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இருக்கின்றன என்பது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும். இவற்றிலே தமிழ் கற்பிக்கப்படுவதோடு, பிற விஷயங்களையும் கூட தமிழிலேயே கற்பிக்கின்றார்கள். இதைத் தவிர, இங்கே தெலுகு-பஞ்சாபி மொழிகளோடு சேர்த்து, பிற பாரதநாட்டு மொழிகளின் மீதும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மலேஷிய வாழ் பாரதீயருக்கு நன்றி
நண்பர்களே, பாரதம் மற்றும் மலேஷியாவுக்கு இடையே வரலாற்றுரீதியான, கலாச்சார உறவுகளை பலப்படுத்துவதிலே ஒரு சொஸைட்டி-சங்கத்தின் பெரிய பங்களிப்பு இருக்கின்றது. இதன் பெயர் Malaysia India Heritage Society. பல்வேறு நிகழ்ச்சிகளோடு கூடவே, இந்த அமைப்பு ஒரு மரபுசார் நடைபயணத்திற்கும் ஏற்பாடு செய்கிறது. இதிலே இரு நாடுகளையும் பரஸ்பரம் இணைக்கும் கலாச்சார இடங்கள் இடம் பெறுகின்றன. கடந்த மாதம் மலேஷியாவிலே லால் பாட் சாடீ (लाल पाड़ साड़ी), மரபுசார் நடைபயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சாடிக்கும் நமது வங்காளி கலாச்சாரத்திற்கும் சிறப்பானதொரு தொடர்பு இருந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலே அதிக எண்ணிக்கையில் இந்த புடவையை அணிந்ததற்கான பதிவு ஏற்படுத்தப்பட்டது, இது மலேஷியன் சாதனைகள் புத்தகமான Malaysian Book of Recordsஇல் பதிவு செய்யப்பட்டது. இந்த சந்தர்ப்பத்திலே ஒடிஸீ நடனமும், பவுல் இசையும் மக்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டன. நான் என்ன சொல்கிறேன் என்றால் –
ஸாயா பர்பாங்கா / தேங்கான் டீயாஸ்போரா இண்டியா / தி மலேஷியா // மேரேகா மம்பாபா / இண்டியா தான் மலேஷியா / ஸேமாகின் ராபா //
மலேஷியாவாழ் பாரதநாட்டவரை நினைத்து எனக்கு பெருமிதம் ஏற்படுகிறது. பாரதத்திற்கும் மலேஷியாவிற்கும் இடையே இவர்கள் தாம் நெருக்கத்தை ஏற்படுத்துகிறார்கள், என்பதே இதன் பொருள். மலேஷியாவாழ் பாரதநாட்டவருக்கெல்லாம் எனது பலப்பல நல்வாழ்த்துக்கள்.
கைகொடுக்கும் சமூக சமையல்கூடம்!
எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, நாம் பாரதத்தின் எந்தவொரு பகுதிக்குச் சென்றாலும், அங்கே ஏதாவது அசாதாரணமான, இதுவரை காணாத ஒன்று கண்டிப்பாக கண்ணில் படும். பல வேளைகளில் ஊடகங்களின் பகட்டு-பளீரொளியில் இந்த விஷயங்கள் எடுபடாமல் போவதுண்டு. ஆனால் நமது சமூகத்தின் மெய்யான சக்தி யாது என்பது இவற்றிலிருந்து நமக்குத் தெரியவரும். இவற்றிலிருந்து ஒற்றுமை உணர்வு அனைத்திலும் உயர்வானதாகக் கருதும் நமது நன்மதிப்புகள் பற்றிய ஒரு காட்சியும் நமக்குக் கிடைக்கிறது. குஜராத்திலே பேச்ராஜீ பகுதியின் சந்தன் கிராமத்தின் பாரம்பரியம் மிகவும் விசித்திரமானது. இங்கே இருக்கும் மக்கள், குறிப்பாக மூத்தவர்கள் தங்களுடைய வீடுகளில் உணவு சமைப்பதில்லை என்று நான் சொல்லும் போது நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். கிராமத்திலே இருக்கும் சமுதாய சமையற்கூடம் தான் இதற்குக் காரணம். இந்த சமுதாய சமையற்கூடத்திலே ஒரே நேரத்தில் கிராமம் முழுவதில் இருக்கும் அனைவருக்கும் உணவு சமைக்கப்படுகிறது, மக்களும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக இந்தப் பாரம்பரியம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது மட்டுமல்ல, யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் அவர்களுக்கான டிஃபன் சேவையும் இங்கே உண்டு, அதாவது வீட்டுக்கே சென்று அளிக்கவும் அனைத்து ஏற்பாடுகளும் தயார். கிராமத்தின் இந்த சமூக சாப்பாடு, மக்களிடம் ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த முன்னெடுப்பு, மக்களை பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் இணைப்பதோடு, இதனால் குடும்பரீதியான உணர்வுக்கும் ஊக்கம் கிடைக்கிறது.
உலகம் வியக்கும் நம் குடும்ப முறை
நண்பர்களே, பாரதத்தின் குடும்பமுறை நமது பாரம்பரியத்தின் இணைபிரியா அங்கமாகும். உலகின் பல நாடுகளில் இது மிகவும் ஆர்வத்தோடு பார்க்கப்படுகிறது. பல நாடுகளில் இப்படிப்பட்ட குடும்பமுறை தொடர்பாக மிகவும் மதிப்பு அளிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான், என்னுடைய சகோதரர், ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியரசுத் தலைவர் மாண்புமிகு ஷேக் மொஹம்மத் பின் ஜாயத் அல் நாஹயான் பாரதம் வந்திருந்தார். ஐக்கிய அரபு அமீரகம் 2026ஆம் ஆண்டினை குடும்ப ஆண்டாகக் கொண்டாடுவதாக அவர் என்னிடம் கூறினார். அதாவது அங்கே இருப்போருக்கு இடையே சகோதரத்துவம் மற்றும் சமூக உணர்வு மேலும் உறுதிப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். உள்ளபடியே இது மிகவும் பாராட்டுதற்குரிய முன்னெடுப்புத் தான்.
புகையிலைப் பொருள் எதிர்ப்பில் விழிப்பு
நண்பர்களே, குடும்பம்-சமூகம் ஆகியவற்றின் பலம் கிடைக்கும் வேளையில், நம்மால் பெரியபெரிய சவால்களையும் தோற்கடிக்க முடியும். அனந்தநாகின் ஷேக்குண்ட் கிராமம் பற்றிய தகவல் கிடைத்தது. இங்கே போதைப்பொருள், புகையிலை, சிகரெட் மற்றும் மதுபானம் ஆகியவற்றோடு தொடர்புடைய பல சவால்கள் அதிகரித்திருந்தன. இவை அனைத்தையும் பார்த்த பிறகு, இந்தப் பகுதியைச் சேர்ந்த மீர் ஜாஃபர் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளானார், இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கட்டியே ஆக வேண்டும் என்று உறுதி பூண்டார். இவர் கிராமத்தின் இளைஞர்கள் முதல் முதியோர் வரை அனைவரையும் ஒன்றிணைத்தார். இவருடைய முன்னெடுப்பு எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், இங்கே இருக்கும் கடைகள் தாங்கள் புகையிலைப் பொருட்கள் விற்பதையே நிறுத்தி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த முயற்சியால் போதைப் பொருட்கள் அபாயம் பற்றியும் மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது.
விவேகானந்த லோக் சிக்ஷா நிகேதனின் சேவை
நண்பர்களே, நமது தேசத்திலே இப்படி அநேக அமைப்புகளும் இருக்கின்றன, இவை பல ஆண்டுகளாகவே சுயநலமில்லா வகையிலே சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக மேற்கு வங்கத்தின் கிழக்கு மேதினிபூரின் ஃபரீத்பூரிலே இருக்கும் ஒரு அமைப்பைச் சொல்லலாம். இதன் பெயர் விவேகானந்த் லோக் சிக்ஷா நிகேதனம். இந்த அமைப்பு கடந்த நான்கு பத்தாண்டுகளில் குழந்தைகள் மற்றும் மூத்தவர்களைப் பராமரிப்பதில் ஈடுபட்டு வருகிறது. குருகுல முறைப்படி கல்வியும், ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படுவதோடு, இந்த அமைப்பு சமூக நலனுக்காக வேண்டி பல நேரிய காரியங்களில் ஈடுபட்டு வருகிறது. தன்னலமற்ற சேவை என்ற இந்த உணர்வு, நாட்டுமக்கள் மத்தியில் தொடர்ந்து மேலும்மேலும் வலுப்பெற வேண்டும் என்பதே என் ஆசை.
தூய்மையே லட்சிய வாழ்க்கை!
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் நாம் தொடர்ந்து தூய்மை விஷயம் பற்றி அடிக்கடி பேசி வருகிறோம். நமது இளைஞர்கள் தங்களுக்கருகே தூய்மை தொடர்பாக மிகவும் விழிப்போடு இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பெருமிதம் ஏற்படுகிறது. அருணாச்சல பிரதேசத்தில் நடந்த ஒரு விநோதமான முயற்சி பற்றி எனக்குத் தெரிய வந்தது. அருணாச்சலத்தின் மண்ணின் மீதுதான் தேசத்தில் முதலில் சூரியன் உதிக்கிறது. இங்கே மக்கள் ஜய் ஹிந்த் என்று சொல்லித் தான் ஒருவருக்கொருவர் வாழ்த்துகிறார்கள். இங்கே ஈடாநகரின் இளைஞர்களின் குழு அதிக கவனம் செலுத்த வேண்டிய பகுதிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் தூய்மைப்பணியில் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்கள் பல்வேறு நகரங்களிலே பொதுவிடங்களிலே தூய்மைப்பணியை தங்களுடைய பெருநோக்கமாகவே ஆக்கிவிட்டார்கள். இதன் பிறகு ஈடாநகர், நாஹர்லாகுன், தோயிமுக், ஸேப்பா, பாலின், பாஸீகாட் ஆகிய இடங்களிலும் இவர்கள் இந்த இயக்கத்தைச் செயல்படுத்தினார்கள். இந்த இளைஞர்கள் இதுவரை கிட்டத்தட்ட 11 இலட்சம் கிலோவுக்கும் அதிகமான குப்பைகளை அகற்றி இருக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே, இளைஞர்கள் இணைந்து 11 இலட்சம் கிலோ எடையுடைய குப்பைக் கூளங்களை அகற்றியிருக்கிறார்கள்!!
நண்பர்களே, இன்று பல நகரங்களில் இப்படிப்பட்ட குழுக்கள், பள்ளங்களை இட்டுநிரப்பும் மறுசுழற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னையில் இப்படிப்பட்ட ஒரு குழுவானது மிகச் சிறப்பான பணியைச் செய்திருக்கிறது. இப்படிப்பட்ட உதாரணங்களால் என்ன தெரிய வருகிறது என்றால், தூய்மையோடு தொடர்புடைய அனைத்து முயற்சிகளுமே முக்கியமானவை தாம். நாம் தூய்மைக்காக தனிப்பட்ட முறையிலேயோ, குழுவாகவோ இணைந்து நம்முடைய முயற்சிகளை அதிகரிக்க வேண்டும், அப்போது தான் நமது நகரங்கள் மேலும் சிறப்பாக ஆகும்.
பசுமையைப் படரச் செய்வோம்!
என் இதயம்வாழ் நாட்டுமக்களே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் வேளையிலே நமது மனதிலே பெரிய திட்டங்கள், பெரிய இயக்கங்கள், பெரியபெரிய அமைப்புகள் பற்றியே சிந்தனை எழும். ஆனால் பல வேளைகளில் மாற்றத்தின் தொடக்கம் மிகவும் சாதாரணமான முறையிலே நடக்கிறது. ஒரு தனிநபரால், ஒரு பகுதியால், ஓர் முன்னெடுப்பால், மேலும் தொடர்ந்து செய்யப்பட்டுவரும் சின்னச்சின்ன முயற்சிகளாலும் மாற்றம் ஏற்படுகிறது. மேற்கு வங்கத்தின் கூச் பிஹாரில் வசிக்கும் பேனாய் தாஸ் அவர்களின் முயற்சி இதற்கான எடுத்துக்காட்டு. கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் தங்களுடைய மாவட்டத்தைப் பசுமையாக்கும் பணியை தனியொரு மனிதனாக செய்திருக்கிறார். பேனாய் தாஸ் அவர்கள் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டிருக்கிறார். பலமுறை மரங்களை வாங்குவது முதல் அவற்றை நடுவது, பராமரிப்பது என அனைத்துவகையான செலவினங்களையும் தானே மேற்கொண்டும் இருக்கிறார். எங்கே தேவையோ, அங்கெல்லாம் வட்டார மக்கள், மாணவர்கள், நகர நிர்வாகத்தினரோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார். இவருடைய முயற்சிகள் காரணமாக சாலையோரங்களில் பசுமை மேலும் அதிகரித்து வருகிறது.
பலனளிக்கும் மருத்துவ தாவரங்கள்
நண்பர்களே, மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஜகதீஷ் பிரஸாத் அஹிர்வார் அவர்களுடைய முயற்சியும் கூட மிகவும் பாராட்டுக்குரியது. இவர் காடுகளிலே beat-guard, அதாவது குறிப்பிட்ட பகுதியின் காவலாளியாக தனது சேவைகளைப் புரிந்து வருகிறார். காட்டில் இருக்கும் பல மருத்துவத் தாவரங்கள் குறித்த தகவல்கள் எங்குமே கூட முறையான வகையிலே பதிவு செய்யப்படவில்லை என்ற எண்ணம் ஒருமுறை பணியின் போது அவருக்கு உதித்தது. ஜகதீஷ் அவர்கள் இந்தத் தகவல்களை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பினார். ஆகையால் அவர் மருத்துவத் தாவரங்களை அடையாளம் கண்டு அவற்றின் பதிவுகளை ஏற்படுத்துவதைத் துவக்கினார். அவர் 125க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவரங்களை அடையாளம் கண்டார். ஒவ்வொரு தாவரத்தின் படம், பயன்கள், அவற்றின் இருப்பிடம் பற்றிய தகவல்களைத் திரட்டினார். அவரால் திரட்டப்பட்ட தகவல்களை நெறிப்படுத்தி, புத்தக வடிவிலே வனத்துறை வெளியிட்டிருக்கிறது. இந்தப் புத்தகத்திலே கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் இப்போது ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் வன அதிகாரிகளுக்கு மிகவும் உபயோகமானதாக இருந்து வருகிறது.
நண்பர்களே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற இந்த உணர்வு தான் இன்று பெரிய அளவில் வெளிப்பட்டு வருகிறது. இந்த நோக்கத்தோடு தான் நாடெங்கிலும் ஒரு மரம் தாயின் பெயரில் இயக்கமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தோடு நாடெங்கிலும் கோடானுகோடி பேர் இணைந்திருக்கிறார்கள். இதுவரை தேசத்திலே 200 கோடிக்கும் அதிகமானோர் மரங்களை நட்டிருக்கின்றார்கள். சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயத்தில் இப்போது மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள் என்பதையே இது உணர்த்துகிறது. மேலும் ஏதோ ஒரு வகையில் தங்களுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதையும் அவர்கள் விரும்புகிறார்கள்.
தேசத்துக்கு வழிகாட்டும் கள்ளக்குறிச்சி பெண்கள்
என் கனிவான நாட்டுமக்களே, நான் உங்கள் அனைவரையும் மேலும் ஒரு விஷயத்திற்காக பாராட்ட விரும்புகிறேன். ஸ்ரீ அன்னம் அதாவது சிறுதானியங்கள் தான் அதற்கான காரணம். சிறுதானியங்களின் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. 2023ஆம் ஆண்டினை சிறுதானிய ஆண்டாக நாம் அறிவித்திருந்தோம். ஆனால் இன்று மூன்று ஆண்டுகள் கழிந்த பிறகும் கூட, இது தொடர்பாக நாட்டிலும் சரி, உலகிலும் சரி, இருக்கின்ற பேரார்வமும், அர்ப்பணிப்பும் மிகவும் உற்சாகத்தை அளிக்கின்றது.
நண்பர்களே, தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விவசாயிகளின் ஒரு குழு உத்வேகக் காரணியாக ஆகிவிட்டது. இங்கே பெரியகல்வராயன் சிறுதானிய எஃப்பிசியுடன் கிட்டத்தட்ட 800 பெண் விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள். சிறுதானியங்களின் மீது அதிகரித்துவரும் விருப்பத்தை உணர்ந்து இந்தப் பெண்கள் சிறுதானியப் பதப்படுத்தும் அலகை நிறுவினார்கள். இப்போது இவர்கள் சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை நேரடியாக சந்தைவரை கொண்டு சேர்த்து வருகிறார்கள்.
கோயில் பிரசாதமான சிறுதானிய சூப்பர் உணவு!
நண்பர்களே, ராஜஸ்தானின் ராம்ஸரிலும் கூட விவசாயிகள் சிறுதானியங்கள் தொடர்பாக நூதனக் கண்டுபிடிப்பை செய்து வருகிறார்கள். இங்கே இருக்கும் ராம்ஸர் கரிம விவசாயிகள் உற்பத்தியாளர் நிறுவனத்தோடு 900க்கும் அதிகமான விவசாயிகள் இணைந்திருக்கிறார்கள். இந்த விவசாயிகள் முக்கியமாக கம்பு தானியத்தைப் பயிர் செய்கிறார்கள். இங்கே கம்பு பதப்படுத்தப்பட்டு, உண்ணத் தயாரான லட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. இதற்கு சந்தையிலே அதிக தேவை இருக்கிறது. இது மட்டுமல்ல நண்பர்களே, இப்போதெல்லாம் பல ஆலயங்கள் பிரசாதங்களை பக்தர்களுக்கு அளிக்கும் போது அதிலே சிறுதானியங்களை மட்டும் பயன்படுத்துகிறார்கள். இந்த முன்னெடுப்பிற்காக, நான் இப்படிப்பட்ட ஆலயங்களின் அனைத்து நிர்வாகிகளுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.
நண்பர்களே, சிறுதானியங்களால் அன்னமிடும் விவசாயிகளின் வருவாய் அதிகரிப்பதோடு கூடவே மக்களின் உடல்நலமும் மேம்பாடு அடைவதற்கான உத்திரவாதமும் ஆகிறது. சிறுதானியங்களில் ஊட்டச்சத்துக்கள் செறிவாக இருக்கின்றன, இவை சூப்பர் உணவாக இருக்கின்றன. நமது தேசத்திலே குளிர்காலம் என்பது உணவுக்கான உகந்த பருவமாகக் கருதப்படுகிறது. அந்த வகையிலே இந்த நாட்களில் நாம் சிறுதானியங்களை உட்கொள்வது அவசியமானது.
செயற்கை நுண்ணறிவில் சிறக்கும் பாரதம்
எனதருமை நாட்டுமக்களே, மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை வேறுபட்ட பல விஷயங்கள் குறித்து உரையாடும் ஒரு சந்தர்ப்பம் நமக்கு வாய்த்தது. நமது தேசத்தின் சாதனைகளை அனுபவிக்கவும், கொண்டாடவும் ஒரு சந்தர்ப்பத்தை இந்த நிகழ்ச்சி நமக்கு அளிக்கிறது. ஃபிப்ரவரியிலே இப்படிப்பட்ட மேலும் ஒரு சந்தர்ப்பம் நமக்கு வருகிறது. அடுத்த மாதம் India AI Impact Summit நடைபெற இருக்கிறது. இந்த உச்சிமாநாட்டிலே உலகெங்கிலும் இருந்தும், குறிப்பாக, தொழில்நுட்பத் துறையோடு இணைந்த வல்லுநர்கள் பாரதம் வருவார்கள். இந்த மாநாடு செயற்கை நுண்ணறிவு உலகிலே பாரதத்தின் முன்னேற்றம் மற்றும் சாதனைகளை முன்னிறுத்தும். இதிலே பங்கெடுக்கவிருக்கும் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். அடுத்த மாதம் மனதின் குரலில் இந்த India AI Impact Summit குறித்து நாம் கண்டிப்பாக பேசுவோம். இதோடு கூடவே நாட்டுமக்களின் வேறுசில சாதனைகள் குறித்தும் உரையாடி மகிழ்வோம். அதுவரை மனதின் குரலிலிருந்து எனக்கு ஓய்வு தாருங்கள். நாளை குடியரசுத் திருநாளுக்காக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள். நன்றி.
கேரளா கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி 20 கோடி சபரிமலை பக்தர்களுக்கு அடித்ததா யோகம். பம்பரில் நீடிக்கும் மர்மம் பலரை வியப்படைய செய்து வருகிறது.
கேரள சேட்டன்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி சீட்டு குலுக்கல் முடிந்த நிலையில் கோட்டயத்தில் டிக்கெட் வாங்கிய நபர் 20 கோடி பரிசை தட்டி தூக்கியுள்ளார்.
கோட்டயம் கஞ்சிரப்பள்ளி பகுதியில் சபரிமலை பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் இடம் என்பதால் அவர்களில் யாருக்கேனும் தான் பரிசு கிடைத்து இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கேரள கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர் லாட்டரி டிக்கெட்டில் முதல் பரிசாக ரூ.20 கோடி XC 138455 என்ற எண்ணுக்கு அடித்தது. முதல் பரிசாக ரூ.20 கோடி வழங்கப்படும் இந்த லாட்டரி டிக்கெட்டில் வெற்றியாளருக்கு 63 சதவீத தொகை கையில் கிடைக்கும்.
கோட்டயத்தில் விழுந்த ரூ.20 கோடி
அதாவது 20 கோடியில் சுமார் 12 கோடி தான் வெற்றியாளருக்கு கிடைக்கும். மீதமுள்ள தொகை வருமான வரி மற்றும் கமிஷன் தொகையாகவும் பிடித்துக்கொள்ளப்படும். ஏஜெண்ட் கமிஷன் மட்டும் 12 சதவீதம் பிடிக்கப்படுகிறது. இதனால், லாட்டரியை விற்ற ஏஜெண்டிற்கு கிட்டதட்ட ரூ.2 கோடி கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், லாட்டரியை விற்ற சுதிக் என்ற லாட்டரி ஏஜெண்ட் இன்ப வெள்ளத்தில் உள்ளார்.
அதேநேரத்தில் குலுக்கல் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்ட போதிலும் தற்போது வரை வெற்றியாளரை கண்டுபிடிக்க முடியவில்லை. கோட்டயம் மாவட்டத்தில் காஞ்சிரப்பள்ளி என்ற இடத்தில் விற்கப்பட்ட டிக்கெட்டிற்குதான் முதல் பரிசு அடித்துள்ளது. 30 ஆண்டுகளாக லாட்டரி விற்பனை செய்து வரும் சுதிக்கிற்கு விற்ற டிக்கெட்டில் ஓணம் பம்பரில் இரண்டாவது பரிசு கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக அடித்தது.
சபரிமலைக்கு வந்த பக்தர்கள்
தற்போது முதல் பரிசு பெற்ற டிக்கெட்டையே விற்பனை செய்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார் சுதிக். இந்த ஆண்டு 5 ஆயிரம் டிக்கெட்டுகளை வாங்கி விற்பனைக்கு வைத்து இருந்தாராம். விற்பனை பிரதிநிதிகளுக்கும் இந்த டிக்கெட்டுகளை அளித்துள்ளார். இதனால் பரிசு விழுந்த தொகையை யார் வாங்கியது என்பதால் சுதிக்கால் யூகிக்க முடியவில்லை.
லாட்டரி விற்பனை தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே டிக்கெட் விற்பனை செய்யப்படு இருக்கலாம் என்று சுதிக் கூறினார். வெற்றியாளர் யார் என்று தனக்கு தனிப்பட்ட முறையில் நியாபகம் இல்லை எனவும் அவர் கூறினார். முதல் பரிசு வென்ற டிக்கெட் விற்பனை செய்யபப்ட்ட இடமான கஞ்சிரப்பள்ளி சபரிமலை பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாகும்.
குலுக்கல் முடிந்து 3 நாட்கள் ஆகியது
இதனால், சபரிமலைக்கு வந்த பக்தர்களில் யாரேனும் திரும்பி செல்லும் போது வாங்கிய டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்து இருக்கலாம் என்ற யூகமும் கேரள சேட்டன்கள் மத்தியில் எழுந்துள்ளது. லாட்டரி குலுக்கல் நடைபெற்று இன்றோடு (திங்கள்கிழமை) மூன்றாவது நாள் ஆகிறது.
ஆனால் இதுவரை வெற்றியாளர் தெரியாததால் சேட்டன்கள் தங்கள் லாட்டரியை ஒன்றுக்கு இரண்டு முறை பார்த்து எண்களை செய்து வருகிறார்களாம். சனிக்கிழமை முதல் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் வங்கியில் சமர்ப்பிக்க ஒருவேளை வெற்றியாளர் திட்டமிட்டு இருந்தால் அவரை கண்டுபிடிக்க வெற்றியாளர் தெரிய மேலும் சில நாட்கள் ஆகும் என்பதே கேரள லாட்டரி பிரியர்களின் கருத்தாக உள்ளது.
இந்த ஆண்டு ரதசப்தமி – ஞாயிற்றுக்கிழமை 25-01-2026 இன்று கொண்டாடப்படுகிறது.
ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டி ருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் ”பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு” என்று கேட்க, ” இரு கொண்டுவருகிறேன்” என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள் .
”ஏன் லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்” என கோபித்து சாபமிட்டான்.
பிராமணனிரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல, ”நீ இதற்கெல்லாம் வருந்தாதே, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்” என்று வாழ்த்த ஒளி பிரகாசமான சூரியன் மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று, கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம். காலை 6.00 லிருந்து 7.30 க்குள் ஸ்நானம் பண்ண வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.
ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.
ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும். . ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ரத சப்தமி அன்று பெருமாள் கோவில்களில் சூரிய பிரபையுடன் கூடிய ரத சப்தமி உற்சவம் நடைபெறும். அதை தரிசித்தால் முன்னோர்கள் திருப்தியடைவர். திருப்பதி திருமலையில் நடக்கும் ரத சப்தமி உற்சவம் மிக விசேஷம். இன்று நவக்கிரகங்களில் சூரியனுக்கு சிகப்பு வஸ்திரம் அணிவித்து சிகப்பு மலர்களால் அர்ச்சனை செய்து ஒரு நெய்விளக்கு வைத்துவர சூரிய தோஷம் விலகும்.
பீஷ்மருக்கு விரும்பிய நேரத்தில், விரும்பியபடி மரணம் நேரும் என வரமிருந்தது. ஆனால் அவர் விரும்பியது போல் மரணம் ஏற்படவில்லையே ஏன்? மனதுக்குள் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார் பீஷ்மர். அப்போது அங்கே வந்தார் வேத வியாசர்.
வியாசரைக் கண்டதும் அவரிடம் பீஷ்மர், ”நான் என்ன பாவம் செய்தேன். நான் விரும்பியபடி ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை? என்று வருந்தினார். அதற்கு வியாசர், ”பீஷ்மா, ஒருவர் தன் மனம், மொழி, மெய்யால் இன்னொருவருக்குத் தீமை, அநீதிகளை செய்வது மட்டுமல்ல, செய்பவர்களைத் தடுக்காமல் இருப்பதும், செயலற்றவன்போல் காட்சி தருவதும்கூட பாவம்தான். அதற்கான தண்டனையையும் அவர் அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதியாகும். அந்த வகையில்தான் இப்போது தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். உடல் அளவில் அவஸ்தைப்பட்டாலும், அதை விட உள்ளம் படாத பாடுபடும். அந்த வேதனையே பெரும் தண்டனைதான்” என்றார்.
பீஷமருக்கு வேதவியாசர் சொன்ன உண்மை புரிந்தது. துரியோதனன் அவையில், பாஞ்சாலியை துச்சாதனன் துகில் உரிந்தபோது, அந்த அவையிலிருந்த யாருமே அவளுக்கு உதவ முன்வரவில்லை. இது அநீதி என்று குரல் கொடுக்கவில்லை. அந்த அவையில் பீஷ்மரும் இருந்தார். ஒரு மாபெரும் அநியாயம் நடந்தும் அதைத் தடுக்கக்கூடிய நிலையில் இருந்தும், அதைத் தடுக்காமல் போனதன் காரணமாகத்தான் இப்போது அம்புப் படுக்கையில் உயிர் பிரியாமல் தவிப்பதை உணர்ந்தார் பீஷ்மர்.
வேதனைப்பட்ட பீஷ்மர் வியாசரிடம், ”இதற்கு என்ன பிராயச்சித்தம்?” என்று கேட்டார்.
”யார் ஒருவர் தான் செய்தது மகாபாவம் என்று உணர்ந்து வருந்துகிறார்களோ அப்போதே அந்தப் பாவம் அகன்றுவிடும் என்று வேதம் கூறுகிறது. எனவே, பீஷ்மா, நீ எப்போது உன்னுடைய பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது உன்னிடமிருந்து அகன்றுவிட்டது. இருந்தாலும் திரவுபதி “கண்ணா, என்னைக் காப்பாற்றமாட்டாயா என்று துரியோதனன் அவையில் கதறியபோது, கேட்கும் திறன் இருந்தும் அதைக் கேளாமல் இருந்த உன் செவிகள், கூர்மையான பார்வையிருந்தும் பார்த்தும் பாராததுபோல் இருந்த உன் கண்கள், நீ சொன்னால் அனைவரும் கேட்பார்கள் என்ற நிலையிலும் தட்டிக்கேட்காத உன் வாய், உன்னிடமிருந்த அளப்பரிய தோள் வலிமையை சரியான நேரத்தில் உபயோகிக்காமலிருந்த உன் வலுவான தோள்கள், வாளையெடுத்து எச்சரிக்கைவிடாத உன் உறுதியான இரு கைகள், ஆரோக்கியமுடன் அமர்ந்திருந்தபோது இருக்கையிலிருந்து எழாமல் இருந்த உன் இரு கால்கள், நல்லது எது? கெட்டது எது என்று யோசிக்காத உன் புத்தி இருக்கும் இடமான உன் தலை ஆகியவற்றுக்கும் தண்டனை கிடைத்தே தீரவேண்டும் என்பது விதி” என்றார்.
”அப்படியென்றால் என்னுடைய இந்த அங்கங்களையும் பொசுக்கக்கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியன்தான். சாதாரண அக்னியின் சூடு போதாது. என் அங்கங்களைத் தீய்க்க சூரியசக்தியைப் பிழிந்து தாருங்கள்” என்று தன்னிலை உணர்ந்து வேதவியாசரிடம் வேண்டினார் பீஷ்மர்.
பீஷ்மர் உடனே வேதவியாசர் முன்கூட்டியே கொண்டு வந்திருந்த எருக்கன் இலைகளை பீஷ்மரிடம் காண்பித்து, ”பீஷ்மா, இந்த எருக்கன் இலைகள் சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்கபத்ரம். அர்க்கம் என்றால் சூரியன் என்றே பொருள். சூரியனின் முழுச் சக்தியும் இதில் உள்ளது. ஆகவே இந்த இலைகளால் உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கப் போகிறேன். அவை உன்னைப் புனிதப்படுத்தும்” என்றவர், அதன்படி பீஷ்மரின் அங்கங்களை, எருக்கன் இலைகளால் அலங்கரித்தார் வியாசர். அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மன அமைதியடைந்தார் பீஷ்மர். அப்படியே தியானத்தில் ஆழ்ந்தார். தியான நிலையிலேயே முக்தியும் அடைந்தார்.
‘பீஷ்மர் நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்துவிட்டாரே, அவருக்கு யார் பித்ருக் கடன் செய்வது?’ என்று தர்மர் வருந்தினார். தர்மருடைய வருத்தத்தைத் தெரிந்துகொண்ட வியாசர், ”தர்மரே வருந்த வேண்டாம் ஒழுக்கம் தவறாத நேர்மையான பிரம்மச்சாரிக்கும், தூய்மையான துறவிக்கும் பித்ருக் கடன் என்பது அவசியமே இல்லை. அவர்கள் மேம்பட்ட ஓர் உயர்நிலைக்குப் போய்விடுகிறார்கள். சொல் ஒன்றும் செயல் ஒன்றுமாகத் திகழ்பவர்கள்தான் பாவிகள். ஆனால் பீஷ்மர் தன் வாக்கு தவறாத தூய்மையானவர். இனி வருங்காலத்தில் பாரத தேசமே பீஷ்மருக்காக நீர்க்கடன் அளிக்கும் ரத சப்தமி அன்று தங்கள் உடலில் எருக்கன் இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வார்கள். அதோடு பீஷ்மருக்கு நீர்க்கடன் அளித்த புண்ணியமும் அவர்களுக்குக் கிடைக்கும்” என்று வியாசர் கூறினார்.
எனவே ரத சப்தமி அன்று விரதம் மேற்கொண்டு, எருக்கன் இலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு சாஸ்திரத்தில் சொல்லியபடி நீராடினால் தெரிந்தோ, தெரியாமலோ, செய்த பாவங்கள் நீங்கும் அதற்காக மேன்மேலும் பாவங்கள் செய்து, அடுத்து வரும் ரத சப்தமியில் போக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கக்கூடாது, தவிர ரத சப்தமிக்கு அடுத்த நாள் அஷ்டமி திதி. இந்த அஷ்டமி திதியை பீஷ்மாஷ்டமி என்பர். அன்று புனிதநீர் நிலைக்குச் சென்று பீஷ்மருக்கான தர்ப்பணமும் நம்மில் வாழ்ந்த முன்னோர்களுக்காக பித்ரு பூஜையும் செய்தால், சுகமான வாழ்வு நிரந்தரமாகக் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்
அச்சன்கோவில் தர்மசாஸ்தாவுக்கு புஷ்பாஞ்சலி வழிபாடு இந்த ஆண்டு ஜன25 ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெறுகிறது.
புஷ்பாஞ்சலி நடத்த 2 டன் பூக்கள் தமிழகம் கேரளா பக்தர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டு நீண்ட நேரம் புஷ்பாஞ்சலி தர்மசாஸ்தாவுக்கு நடைபெறும்.
செங்கோட்டையில் இருந்து 25 கி.மீ. தூரத்தில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற ஐயப்பன் படை வீடு கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பலர் சென்று வருகிறார்கள்.
இந்த கோவில் பரசுராமரின் கைகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.பகவான் விக்ரகம் தீ சேதம் ஏற்பட்டு புதிய சிலை மறு பிரதிஷ்டை தை மாதம் ரேவதி நட்சத்திரம் அன்று பிரதிஷ்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. எனவே தை மாதத்தில் ரேவதி நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் புஷ்பாஞ்சலி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் இந்த ஆண்டும் ஜன25ல் புஷ்பாஞ்சலி நடைபெறும். இதனை முன்னிட்டு காலையில் கணபதி ஹோமம், கலசாபிஷேகம், அஷ்டாபிஷேகம் ஆகியன நடைபெறும். மதியம் களபாபிஷேகம் நடைபெறும். மாலையில் யானை மீது 2 டன் பூக்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பின்னர் அந்த பூக்களை கொண்டு புஷ்பாஞ்சலி நடைபெறும் தொடர்ந்து அன்னதானமும் நடைபெறும்
மறு பிரதிஷ்டை தினம்: பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தில், சுவாமி விக்ரகம் மறு பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமே புஷ்பாஞ்சலி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
மலர் அபிஷேகம்: இந்த விழாவின் போது ஐயப்பனுக்கு சுமார் 2 டன் மலர்களால் மெகா புஷ்பாஞ்சலி (மலர் அபிஷேகம்) செய்யப்படுகிறது. இது தென்னிந்தியாவிலேயே அதிக அளவிலான பூக்களைக் கொண்டு செய்யப்படும் ஒரு வழிபாடாகக் கருதப்படுகிறது.
பக்தர்கள் வருகை: இந்த விழாவில் கேரளா மட்டுமின்றி தமிழகத்தின் தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
கோவில் நடை திறக்கும் நேரம் புஷ்பாஞ்சலி விழா நாட்களில் வழிபாடுகள் அதிகாலை முதலே தொடங்குகின்றன. பொதுவான கோவில் நேரங்கள்: காலை: 5:00 AM முதல் 12:00 PM வரை மாலை: 5:00 PM முதல் 8:00 PM (அல்லது 9:00 PM) வரை
அச்சன்கோவில் ஆலயத்தின் தனித்துவம்
மகா வைத்தியர்: இங்குள்ள ஐயப்பன் விஷப் பூச்சிகள் மற்றும் பாம்பு கடியைக் குணப்படுத்தும் “மகா வைத்தியராக” போற்றப்படுகிறார். சுவாமி சிலையின் வலது உள்ளங்கையில் உள்ள சந்தனம் தீராத நோய்களையும் தீர்க்கும் மருந்தாக நம்பப்படுகிறது.
குடும்பக் கோலம்: சபரிமலையில் பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பன், இங்கு தனது மனைவிகளான பூர்ணா மற்றும் புஷ்கலா ஆகியோருடன் குடும்பத்தோடு (கிரகஸ்த வடிவில்) காட்சியளிக்கிறார்.
அமைவிடம்: இது கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இருந்தாலும், தமிழக எல்லைக்கு (செங்கோட்டை) மிக அருகிலேயே (சுமார் 25-30 கி.மீ) அமைந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 11) சோமநாதர் கோயில் வரலாற்றை பற்றி பேசும்போது, ‘ சோமநாத மகாதேவர் கோயிலில் ஏற்றப்பட்டுள்ள கொடியானது இந்தியாவின் வலிமையையும் செயலாற்றலையும் உலகுக்கு பறைசாற்றுவதாக இருக்கிறது,’ என்று குறிப்பிட்டார். ‘ கால சுழற்சியில் , அடிப்படைவாத ஆக்கிரமிப்பாளர்கள் வரலாற்று பக்கங்களில் புதைந்து போனார்கள் ஆனால் சோமநாதர் கோயில் இன்றும் கம்பீரமாக உயர்ந்து நின்று கொண்டிருக்கிறது,’ என்று அவர் தன் உரையில் கூறினார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு மெக்காலே மனோபாவத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுப்பேன் என்று அவர் உறுதிப்பட தெரிவித்த போது, அவர் சரியாக சொல்கிறார் ஆனால் முழுமையாக சொல்லவில்லையென நான் எழுதியிருந்தேன். இந்தியாவின் அறிவுலக பக்கவாதத்திற்கு காரணம் தாமஸ் மெக்காலேவின் தாக்கம் மட்டுமல்ல அதற்கு இணையான அளவு காரல் மார்க்ஸின் கருத்தியல் வாரிசுகள் நமது அரசியல், கல்வி, சமூக தளங்களை ஆக்கிரமித்துள்ளதும் காரணமாகும்.
இப்போதும் கூட , ‘ சோமநாத் தன்மான பர்வம்’ விழாவில் பிரதமர் மோடி முழு உண்மையையும் கூறாமல் சற்று முன்னதாகவே நின்று விட்டார். அவர், மத அடிப்படைவாத ஆக்கிரமிப்பாளர்கள் வரலாற்று பக்கங்களில் புதைந்து போக சோமநாதர் கோயில் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது, என்று மிகச் சரியாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் பாபர், அவுரங்கசீப் உடல்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட இருந்தாலும் அவர்களது நச்சு மனப்பான்மை அவர்களோடு அகற்றப்பட்டதா ? அல்லது அவர்களது மதவெறியும் வெறுப்புணர்வும் அழுத்தி வைக்கப்பட்டதா ? இதற்கான விடை மறைவாக அல்ல , தற்போதைய உலக நிகழ்வுகளில் வெளிப்படையாக தெரிகிறது.
1993 மும்பாய் தாக்குதல், 2001 ஆப்கானிஸ்தானில் இருந்த பாமியான் புத்த சிலைகள் தகர்ப்பு, அமெரிக்காவில் செப்டம்பர் 9/ 11 (இரட்டை கோபுர தகர்ப்பு), இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகளின் தாக்குதல், மும்பாயை அதிர வைத்த 26/ 11 தாக்குதல் என்று மனித குலத்துக்கு எதிரான பயங்கரவாத குற்ற செயல்களின் நீண்ட பட்டியல் இஸ்லாமிய மதவெறி கருத்தியலால் எழுதப்பட்டுள்ளது.
2024 ஜெர்மனியில் மெக்டெபர்க் தாக்குதல் , 2025 அக்டோபரில் பிரிட்டனில் நடந்த தாக்குதல் (ஜிகாத் – அல் – ஷாமி), 2025 மார்ச் மாதம் பெகல்காம் , 2025 நவம்பர் மாதம் டில்லி தற்கொலை படை தாக்குதல், 2005 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நிகழ்ந்த தாக்குதல் என அண்மை நிகழ்வுகள் எல்லாம் அந்த புற்றுநோய் போல் பரவும் கருத்தியல் இன்னமும் உலகிலிருந்து அகற்றப்படவில்லை என்பதையே காட்டுகிறது.
இஸ்லாத்தின் பெயரால் ஏன் இந்த அர்த்தமற்ற வன்முறைகள் நடக்கின்றன ? இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் ஏன் மீண்டும் மீண்டும் இந்தியாவை தாக்கி , சோமநாதர் கோயில் உட்பட அதன் பிரம்மாண்டமான கோயில்களை தகர்த்து தூளாக்கினார்கள் ? இவை எல்லாம் செல்வத்தை கொள்ளையடிப்பதற்காகத்தான் என்றும் இதில் மதக்கண்ணோட்டம் இல்லை என்றும் இடதுசாரி வரலாற்றாளர்கள் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
1398ல் இந்தியா மீது படை எடுத்த தைமூர் தனது நூலான துசுக் – இ – தைமூரி யில், ‘ நான் இரண்டு நோக்கங்களை நிறைவேற்றவே இந்துஸ்தானத்தின் மீது படையெடுத்தேன். முகமதிய மதத்தின் எதிரிகளான அந்த அவநம்பிக்கையாளர்களுக்கு எதிரான மதப் போர் நடத்துவது. அதன் மூலம் மறுமையில் வெகுமதி பெறுவேன். இரண்டாவது நோக்கம் அந்த அவநம்பிக்கையாளர்களின் செல்வத்தையும் உடைமைகளையும் கொள்ளையிடுவது. ஒரு முகமதியனுக்கு தாய்ப்பாலில் எப்படி உரிமை இருக்கிறதோ அதே போன்ற பிறப்புரிமை அந்த அவநம்பிக்கையாளர்களின் செல்வத்தை கொள்ளையிடுவது புனித போரில் ஈடுபடுபவர்களுக்கு உள்ளது,’ என்று எழுதி உள்ளார்.
வரலாற்றாளர் ஆபிரகாம் எராலி கடும் சீற்றத்தின் காலம் என்ற நூலில், கஜினியின் அரியணையில் முகம்மது அமர்ந்த போது கிலாபத் (இஸ்லாமிய உலகின் தலைவர்) தின் வாழ்த்துக்களும் மரியாதைகளும் அவருக்கு வழங்கப்பட்டன . அப்போது கஜினி முகம்மது , ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் விக்கிரகங்களை வணங்குபவர்களுக்கு (இந்துக்களுக்கு) எதிரான ஜிகாத் செய்வேன் என்று சூளுரைத்தார். அவரது 32 ஆண்டு கால ஆட்சியில் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட முறை இந்தியாவின் மீது படை கொண்டு போர் தொடுத்தார். சுல்தானுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று, விக்ர ஆராதனை செய்பவர்களை கொல்வது. மற்றது, கொள்ளையடிப்பது . இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இரண்டும் பரஸ்பரம் இட்டு நிரப்புபவை மட்டுமின்றி கொடும் போரில் ஈடுபடத் தூண்டுபவை , என்று குறிப்பிட்டுள்ளார்.
கஜினி முகம்மது பலமுறை இந்தியாவை தாக்கியுள்ளார். தோற்கடிக்கப்பட்ட ஹிந்து மன்னன் ஈடாக ஏராளமான செல்வத்தை தர முன்வந்த போது கஜினி முகம்மது சொன்னார் , முகம்மதிய மதத்தின்படி விக்கிரக வழிபாட்டாளர்களின் வழிபாட்டுத் தலங்களை தகர்ப்பது புனித செயலாகும். அவ்வாறு செய்பவர்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளின் போது சிறப்பான வெகுமதி கிடைக்கும். நான் ஹிந்துஸ்தானத்தில் உள்ள எல்லா விக்கிரகங்களையும் முற்றிலுமாக அழித்து அகற்ற முனைந்துள்ளேன்’, என்று கூறியுள்ளார்.
இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியாவின் மக்கள் தொகையில் 95 சதமாக உள்ளார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இங்கு வாழும் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சமமாகவும் சமாதானமாகவும் வாழ்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால் அவர்கள் அப்படி வாழவில்லை. காரணம் வரலாற்று சுமை அவர்களை பிரித்துப் போட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பூர்வ குடிகள் இஸ்லாத்தை தங்களுக்கு இணையான சமயமாக எதிர் கொள்ள முடியவில்லை. மாறாக அரசியல் ஆதிக்கமும் படைவலிமையும் கொண்டவர்களாக, தங்கள் மீது ஆக்கிரமிக்க படையெடுத்து வந்து வெற்றி பெற்று, தங்கள் மானம் மரியாதையை அழிப்பவர்களாக, தங்கள் அடையாளத்தையும் சமய நம்பிக்கையையும் துடைத்தெறிபவர்களாகத்தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தார்கள்.
சுமார் 800 ஆண்டுகள் ஏறத்தாழ இந்தியா முழுமையும் காபீர் , குபுர் போன்ற கோட்பாடுகள் உட்பட இஸ்லாமிய கருத்தியலை ஏற்று செயல்படுத்தும் இஸ்லாமிய அரசை பரம்பரையினரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. கோயில்கள் இடிக்கப்பட்டன. மதமாற மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர். ஜிசியா வரி விதிக்கப்பட்டது. முஸ்லிம் அல்லாதவர்களை திட்டமிட்ட ரீதியில் கொடுமைப்படுத்தும் ஆட்சி முறைமைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டன.
பன்மைத்துவம் கொண்டதாகவும் மதமாற்றம் செய்யாததாகவும் அனைவரையும் அரவணைப்பதாகவும் இந்து நாகரீகம் சீரியதாக உள்ளது. அதற்கு எதிர்மாறாக இஸ்லாம் மதமாற்றம் செய்வதன் மூலம் விரிவடைவதாக , தன்னை மட்டுமே முன்னிறுத்துவதாக, தன்னுடைய மத நம்பிக்கையை ஏற்றுக் கொள்பவர்கள் அல்லாதவர்கள் என்று மனித இனத்தை பிரிப்பதாக உள்ளது.
பல முஸ்லிம்கள் அமைதியாக வாழ விரும்பினாலும் அவர்களது இறையியல் கருத்து இஸ்லாமிய மதத்தை சேராத மற்ற மதத்தினரை தங்களுக்கு சமமாக ஏற்றுக் கொள்வதை தடை செய்கிறது. மற்ற மதத்தினரை சமமாக ஏற்றுக் கொள்வது இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த மதக்கோட்பாடு ஆழமான பிரிவினையை மக்கள் மனதில் ஏற்படுத்துகிறது. தங்கள் மானம் மரியாதையை இழந்து, உயிர் வாழ்வதற்கே போராட வேண்டி இருந்ததை இந்துக்கள் நினைவில் கொண்டுள்ளார்கள் . அதேவேளையில், பல முஸ்லிம்கள் அந்த கொத்தளிப்பான கடந்த காலத்தை பற்றி பெருமை கொள்ளும் தவறை செய்கிறார்கள் . அதனால் அடிக்கடி ஆக்ரோஷமான நிலைப்பாட்டை மேற்கொள்கிறார்கள். வரலாற்றைப் பற்றிய இந்த நுட்பமான வேறுபாட்டை புரிந்து கொள்ளாததால் சேர்ந்து வாழ்வது இயலாததாக உள்ளது.
இந்தியாவில் நல்லிணக்கமும் ஒத்திசைவும் பரஸ்பரம் புரிதலின் அடிப்படையில் இல்லாமல் ஒரு பக்கத்தினரின் சகிப்பு தன்மையாக இருக்கிறது. இடதுசாரிகளின் திருகலான வரலாற்று சித்தரிப்பால் இரு மதத்தினர் இடையே மோதலும் குழப்பமும் தூண்டப்படுகிறது. கடந்த கால அநியாயங்களை மாற்ற முடியாது என்னும்போது அதை பெருமையாக கருதுவதும் கொண்டாடுவதும் ஏன் ?
கடந்த காலமானது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் அழிக்க அனுமதிக்க கூடாது. இந்தியாவில் மட்டுமே இந்த தடுமாற்றம் இருப்பதாக நினைக்க வேண்டாம். உலகில் உள்ள பல நாடுகள் வரலாற்றுச் சுமையால் அழுத்தப்பட்டுள்ளன. அது அவர்களது நிகழ்கால உறவில் நீண்ட கருந்நிழலை ஏற்படுத்தி உள்ளது. பல நாடுகள் சமரசம் செய்து கொள்ள முயன்றுள்ளன . ஆனால் இந்தியா எவ்வாறு செய்யவில்லை.
இந்தியாவில் உள்ள இந்து, முஸ்லிம்கள் நல்லிணக்கம் கொள்ளாமல் தடுப்பது எது ? நல்லிணக்கத்திற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் பிளவு நீடிக்கிறது. அதேவேளையில் , ஐரோப்பாவில் கிறிஸ்துவ மதத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. மதம் கடந்த அரசியல், சுய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மதச் சார்பின்மை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் ஹிந்து மதமும் முன்னகர்ந்துள்ளது. இஸ்லாம் அதுபோன்றதொரு மத கருத்தியல் ஒப்பீட்டையும் வரலாற்று பூர்வமான மறு அவதானிப்பையும் நிகழ்த்தவில்லை.
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அமைப்புகளும் நிறுவனங்களும் மதரீதியான ஆக்கிரமிப்பையும் வெற்றியையும் இன்றுவரை அதிகாரப்பூர்வமாக மறுக்கவில்லை. விக்கிரக உடைப்பு பற்றி மன்னிப்பு கோரவில்லை. இந்தியாவை படையெடுத்து ஆக்கிரமித்த பூமி என்கிறார்களே தவிர இது நாகரிகங்களின் தொட்டில் என்று அங்கீகரிப்பதில்லை. அதற்கு பதிலாக, இஸ்லாமிய மதவெறியர்களும் இடதுசாரிகளும் தொடர்ந்து இந்துக்களையும் சீக்கியர்களையும் உசுப்பேத்தும் விதத்தில் கஜினி முகம்மது, கோரி முகம்மது, பாபர் , அவுரங்கசீப் ,திப்பு சுல்தான் போன்றவர்களை புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நாகரீகம் குறித்த இந்த கேள்விக்கு முடிவு கட்டுவதற்காகத்தான் 1947 இல் பிரிவினை நடந்தது. ஆனால் அதற்கு முடிவு கட்டப்படவில்லை. பாகிஸ்தான் இஸ்லாமிய நாடானது . இந்தியாவில், பிரிவினைக்கு காரணமான , அதே இரு தேச கொள்கை இன்றும் உயிர்ப்புடன் உள்ளது. அதிகாரப்பூர்வமான அரசியலாக இல்லை ஆனால் அந்த பிரிவினை மனப்பான்மை சமுதாய கெட்டிலை இன்னமும் கொதிநிலையிலேயே வைத்திருக்கிறது.
இந்தியாவை துண்டாட வேண்டும் என்ற கருத்தியல் நோக்கம் கொண்ட கம்யூனிஸ்டுகள் இந்த மதவெறியை நியாயப்படுத்தியும் முன்னிறுத்தி வருகின்றனர் . தங்களை ‘செக்யூலர்’ (மதசார்பற்றவர்கள்) என்று சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ் உட்பட மற்ற கட்சிகள் முஸ்லிம்களை வாக்கு வங்கியாக பயன்படுத்திக் கொண்டு, அந்த சமுதாயத்திற்குள் திட்டமிட்ட ரீதியில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை வளர்த்து வருகின்றன. இந்த நிலையில் நல்லிணக்கத்தை எங்கிருந்து தொடங்குவது ? முடிவு கட்டப்படாததால் கடந்த காலம் நிகழ் காலத்துக்குள் ஊடுருவி ரணமாக்கிக் கொண்டுள்ளது.
இஸ்லாமிய நம்பிக்கையாளர் அது அல்லாதவர் என்று மனித இனத்தை பிரித்து வெறுப்பை வளர்க்கும் மதயியல் சிந்தனைகள், இறையியல் கோட்பாடுகள் குறித்து நேர்மையான முறையில் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும். வரலாற்று ரீதியான திரிவுகள் , மறுப்புகள், உண்மைக்கு மாறான சித்தரிப்புகள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள தவறான பிம்பங்கள் அகற்றப்பட வேண்டும்.
நன்றி: பயோனியர் நாளேடு
கட்டுரையாளர் – நூலாசிரியர். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷனின் முன்னாள் தலைவர்.
தமிழக வெற்றிக் கழகத்துக்கு (TVK) ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் கொடுத்திருக்கிறது பாருங்களேன், அது வேற லெவல் மாஸ்டர்ஸ்ட்ரோக்! இது ஏதோ விளையாட்டுக்குக் கொடுத்த மாதிரித் தெரியல, தேர்தல் ஆணையமே தெரியாம ஒரு பயங்கரமான ஆயுதத்தை அவங்க கையில கொடுத்த மாதிரி இருக்கு. நம்ம ஊர் அரசியல்ல சினிமாவுக்கும் தலைமைச் செயலகத்துக்கும் நடுவுல இருக்குற கோடு ரொம்ப மெல்லிசு.
அங்க விசில்ங்கிறது வெறும் சத்தம் போடுற பிளாஸ்டிக் பொம்மை இல்ல; அது ஒரு ரசிகனோட ஆதி உணர்ச்சி! ஒரு பெரிய சினிமா ஸ்டார் பின்னாடி நிக்குறவங்களுக்கு விசில் தான் இருக்குறதுலயே ரொம்ப ஜனநாயகமான கருவி. காசு கம்மி, பேட்டரி போட வேண்டாம், கையில தூக்கிட்டு அலையலாம்… ரெண்டு விரலும், நெஞ்சுல கொஞ்சம் காத்தும் இருந்தா போதும் – சும்மா கிழிச்சுடலாம்!
ஒரு சினிமா ஹீரோ அரசியலுக்கு வரும்போது அவருக்கு விசிலையே சின்னமா குடுக்குறதுன்னா, அவரோட புகழையே ஒரு அங்கீகாரமா மாத்துற மாதிரி. ஒரு பொதுக்கூட்டத்துல தொண்டன் விசில் அடிக்கிறான்னா, அவன் சும்மா சிக்னல் குடுக்கல; எந்த மேனிபெஸ்டோவும் இல்லாமலேயே கெத்தா ஒரு சத்தத்தை எழுப்புறான்.
இந்த டிஜிட்டல் காலத்து ஓட்டர்ஸ்க்கு கூட மத்த பழைய சின்னங்கள் புரியாம இருக்கலாம், ஆனா ஒரு ஷார்ப்பான விசிலோட அர்த்தம் டக்குனு புரியும். இன்டர்நெட் வர்றதுக்கு முன்னாடியே உருவான ஒரிஜினல் ‘வைரல்’ மார்க்கெட்டிங் டூல் இதுதான்.
ஆனா, இதுல நிஜமான காமெடி இப்பதான் ஆரம்பிக்குது. மத்த பெரிய கட்சிகளோட நிலைமையைக் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்களேன்! அவங்க கட்சியில இப்போ ஒரு அவசர மெமோ அனுப்பியிருப்பாங்க: “இனிமே யாரும் வாய் வழியா எந்த ஒரு ஹை-பிரீக்வென்சி சத்தத்தையும் (அதாங்க விசில்) எழுப்பக் கூடாது” அப்படின்னு.
ஒருவேளை எதிர்க்கட்சித் தொண்டன் எதாச்சும் ஒரு குஷியில தெரியாம வாயைக் குமிச்சு விசில் அடிக்கப் போனா, “அய்யோ, நாம எதிரிக்கு ஓட்டு கேட்டுட்டோமோ?” அப்படனு ஒரு நடுக்கம் வரும் பாருங்க… அங்க நிக்குது வெற்றி! இப்ப இருக்கிற ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரு சைலன்ட் டிராப்புக்குள்ள மாட்டிக்கிட்டாங்க. விசில் அடிச்சா தப்பு, அடிக்காம அமைதியா இருந்தா மொக்கை!
இன்னும் கொடுமை என்னன்னா, ரோட்டுல போற டிராஃபிக் போலீஸ் வண்டியை நிறுத்த விசில் அடிச்சா, அது தேர்தல் விதிமுறை மீறல்னு கேஸ் போடுவாங்களோ? பஸ் கண்டக்டர் வண்டியை எடுக்க ரெண்டு விசில் கொடுத்தா, அவர் டிவி-கே வோட நடமாடும் விளம்பரப் பலகைன்னு சொல்வாங்களோ?
இதுக்காகவே அரசாங்கம் புதுசா ஒரு ஆர்டர் போட்டாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல – “இனிமே போலீஸ்காரங்க விசில் அடிக்கக் கூடாது, அதுக்கு பதிலா கையைக் காட்டலாம் இல்லன்னா பரதநாட்டியம் ஆடி சிக்னல் சொல்லலாம்” அப்படின்னு!
தேர்தல் நெருங்க நெருங்க, காத்துல கிளம்புற ஒரு சின்ன சத்தம் கூட இப்போ ஒரு ஓட்டா மாறப் போகுது. எதிர்க்கட்சிகளுக்கு அந்தச் சத்தம் பயத்தைக் கொடுக்குதுன்னா, அரசாங்கத்துக்கு அது எரிச்சலைக் கிளப்புதுன்னா, அந்த விசில் ஆல்ரெடி வேலையை ஆரம்பிச்சுடுச்சுன்னு அர்த்தம். இதை யாராலும் அடக்க முடியாது, ஏன்னா இது காத்துலயே இருக்கு.
இந்த எலெக்ஷன் சீசன் ரொம்ப சுவாரசியமா இருக்கப் போகுது. பெரிய மேடைப் பேச்சை விட, ஒரு சின்ன விசில் சத்தம் தான் தெருவெல்லாம் அதிரப் போகுது.
மியூசிக் ஸ்டார்ட்… சாரி, விசில் ஸ்டார்ட்!
(ஆசிரியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்)
ஜன.26 குடியரசுதினத்தை முன்னிட்டு தாம்பரம்- செங்கோட்டை இடையில் சிறப்பு ரயில் நாளை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி,
[1] தாம்பரம் – செங்கோட்டை சிறப்பு ரயிலின் எண் – 06137. இந்த ரயில் நாளை 24/01/26 சனிக்கிழமை இரவு 11.50 மணிக்கு தாம்பரத்தில் புறப்பட்டு மறுநாள் 25/01/26 ஞாயிற்றுக்கிழமை காலை 11.40 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும்.
[2] செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயிலின் எண் – 06138. இந்த ரயில் 26/01/26 திங்கள்கிழமை பகல் 03.00 மணிக்கு செங்கோட்டையில் புறப்பட்டு மறுநாள் 27/01/26 செவ்வாய்கிழமை அதிகாலை 03.00 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயிலில் 23 ICF பெட்டிகள் இணைக்கப்படும். 1) முதல் வகுப்பு ஏசி பெட்டியும் இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியும் ஒன்றிணைந்த பெட்டி— 1. 2) இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டி -1. 3)மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டி-3. 4) ஏசி இல்லாத இரண்டாம் வகுப்பு மூன்றடுக்கு ஸ்லீப்பர் பெட்டி – 12. 5)முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள் – 4. 6) லக்கேஜ் மற்றும் முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு பெட்டிகள்-2.
முன்பதிவு தற்போது ரயில்வே இணைய தளத்தில் தொடங்கி இருக்கிறது. மேலும் ரயில் நிலைய முன்பதிவு மையங்களில் நாளை 24/01/26 சனிக்கிழமை காலை முன்பதிவு துவங்கும்.
இந்த சிறப்பு ரயில்கள் தாம்பரம் – செங்கோட்டை இடையே செங்கல்பட்டு விழுப்புரம் விருத்தாசலம் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகாசி ஶ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சங்கரன்கோவில் கடையநல்லூர் தென்காசி வழியாக இயக்கப்படும்.
இந்ந்லையில், தெற்கு ரயில்வே தலைமையக அதிகாரிகள், மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் , தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன், தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் அனந்தன் அய்யாசாமி, முன்னாள் தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், தாம்பரம் – செங்கோட்டை மற்றும் செங்கோட்டை- தாம்பரம் இடையே குடியரசு தின விழா சிறப்பு ரயில்களை இயக்க ஆணை பிறப்பித்ததற்காக தமது நன்றிகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.