Home Blog Page 214

IPL 2024: அதிர்ச்சி கொடுத்த குஜராத் அணி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இருபத்தியேழாம் நாள்: ஐபிஎல் 2024 – 17.04.2024

குஜராத் டைடன்ஸ்
vs டெல்லி கேபிடல்ஸ்

          குஜராத் அணியை (17.3 ஓவர்களில் 89 ரன், ரஷீத் கான் 31, முகேஷ் குமார் 3/14, இஷாந்த் ஷர்மா 2/8, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 2/11) டெல்லி அணி (8.5 ஓவரில் 92/4, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 20, ஷாய் ஹோப் 19, ரிஷப் பந்த் 16*, அபிஷேக் போரல் 15) 67 பந்துகள் மீதியிருக்கையில் 6 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. குஜராத் அணியில் இன்று தொடக்க வீரர் ஷுப்மன் கில் (8 ரன்) இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்க வீரர் விருத்திமான் சாஹா (2 ரன்) 3.5ஆவது ஓவரில் அவுட்டானார். அவருக்குப் பிறகு சாய் சுதர்ஷன் (6 பந்துகளில் 12 ரன்), டேவிட் மில்லர் (2 ரன்), அபினவ் மனோகர் (8 ரன்), ராகுல் திவாத்தியா 15 பந்துகளில் 10 ரன்), ஷா ருக் கான் (ரன் எதுவும் எடுக்கவில்லை, கோல்டன் டக்) என குறைந்த அளவில் ரன்களே எடுத்தனர்.

டெல்லி அணியின் பந்து வீச்சாளர்களான முகேஷ் குமார் மற்றும் இஷாந்த் ஷர்மா இருவரும் சிறப்பாக பந்துவீசினர். 17.3 ஓவர் முடிவில் குஜராத் அணி 89 ரன்னிற்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.

          90 ரன் என்ற எளிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த டெல்லி அணியின் தொடக்க வீரர் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (10 பந்துகளில் 20 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) நன்றாக விளையாடினார் ஆனால் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ப்ருத்வி ஷா 6 பந்துகளில் 7 ரன் அடித்து 2.4ஆவது ஓவரில் அவுட்டானார்.

 அவருக்குப் பின்னர் அபிஷேக போரல் (7 பந்துகளில் 15 ரன்) மற்றும் ஷாய் ஹோப் (10 பந்துகளில் 19 ரன்), ரிஷப் பந்த் (11 பந்துகளில் 16 ரன்), சுமித் குமார் (9 பந்துகளில் 9 ரன்) அடித்து டெல்லி அணியை 8.5 ஓவரில் 4 விக்கட் இழப்பிற்கு 92 ரன் அடித்து அணியை வெற்றிபெறச்செய்தனர்.

          டெல்லி கேபிடல்ஸ் அணியின் அணித்தலைவர் ரிஷப் பந்த் இரண்டு கேட்ச் பிடித்தார்; இரண்டு ஸ்டம்பிங் செய்தார்; அற்புதமாக தன்னுடைய அணித்தலைவர் பணியைச் செய்தார். இதற்காக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

நாளை முல்லன்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.      

17.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்761120.667
கொல்கொத்தா64281.399
சென்னை64280.726
ஹைதராபாத்64280.502
லக்னோ63360.038
டெல்லி7356-0.074
குஜராத்7346-1.303
பஞ்சாப்6234-0.218
மும்பை6244-0.234
பெங்களூரு6152-1.124

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!

pmk ramadoss - 2026

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

இந்தியாவை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆளப் போகிறவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதற்கான 18&ஆம் மக்களவைத் தேர்தல்களின் முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு & புதுவையில் நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில், யாருக்கு வாக்களிப்பது என்பதை நீங்கள் சிந்தித்து செயல்படுத்துவதற்கான 48 மணி நேர கெடு இன்று மாலை 6.00 மணிக்கு தொடங்குகிறது. இந்தக் காலத்தில் நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

2024&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி எதிர்கொள்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அவர்களை மூன்றாவது முறையாக பிரதமராக்க வேண்டும் என்று இக்கட்சிகள் உறுதி பூண்டுள்ளன.

வழக்கமாக மக்களவைத் தேர்தல்கள் மத்திய ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தல் தான் என்றாலும் கூட, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நடப்பு மக்களவைத் தேர்தல் சற்றே வேறுபட்டது. மத்தியில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள்? என்பதை தீர்மானிப்பதைக் கடந்து, தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் மக்கள்விரோத ஆட்சிக்கு கடிவாளம் போடுவதற்கும் இந்தத் தேர்தல் உதவும் என்பது தான் நடப்பு மக்களவைத் தேர்தலின் சிறப்பு என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளுக்கு பரப்புரை சென்று வந்ததன் மூலம் மோடி ஆதரவு அலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்கள் தங்களின் வாக்கு யாருக்கு? என்பதை முடிவு செய்து விட்டார்கள். இதுவரை முடிவெடுக்காத வாக்காளர்கள் எதற்காக பாட்டாளி மக்கள் கட்சியை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறேன்.

பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை சமூகநீதியை வளர்த்தெடுப்பதையும், தமிழக உரிமைகளை வென்றெடுப்பதையும் மிக முக்கியமானதாக கருதுகிறது. சமூகநீதியை வளர்த்தெடுப்பதற்கு அடிப்படை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான். சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது 70 ஆண்டு கனவு என்றாலும் கூட, தொடுவானத்தைப் போல நமது கைகளில் இருந்து நழுவிக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது. மக்களவையில் பாட்டாளி மக்கள் கட்சி எப்போதெல்லாம் அதிக பிரதிநிதித்துவம் பெறுகிறதோ, அப்போதெல்லாம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை கிட்டத்தட்ட சாத்தியமாக்க முடிந்திருக்கிறது. ஆனாலும், பா.ம.க. இல்லாத சூழல்கள் அதை சீரழித்திருக்கின்றன. இந்த முறை பா.ம.க. அதிக பிரதிநிதித்துவம் பெற்றால் சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக சாத்தியமாகும். அதைத் தொடர்ந்து இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும் என்ற பெருங்கனவும் நனவு ஆகும்.

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவை கட்டமைக்கப்பட்டதில் தமிழகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதனால், அதற்கேற்ற அளவில் அவற்றில் மாநில ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டிற்கான தொடர்வண்டித் திட்டங்கள், கட்டமைப்பு வசதிகள், வேளாண் கட்டமைப்புகள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசிடமிருந்து தான் நாம் பெற்றாக வேண்டியுள்ளது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் 2014&ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த 37 உறுப்பினர்களும், 2019&ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அணியைச் சேர்ந்த 38 உறுப்பினர்களும் சமூகநீதிக்காகவோ, தமிழக நலன்களுக்காகவோ குரல் கொடுக்கவில்லை.

சமூகநீதிக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுப்பதையே முதல் கடமையாகக் கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, அதிகபட்சமாக அது போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தின் குரல் நாடாளுமன்றத்தில் வலிமையாக ஒலிக்கும்; உரிமைகள் கிடைக்கும்.

மற்றொருபுறம் ஆபத்தான திசையிலும், அழிவுப் பாதையிலும் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசை கட்டுப்படுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. திமுக கூட்டணியை வீழ்த்துவதன் மூலமாக மட்டுமே இது சாத்தியமாகும். மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் விளையவில்லை. மாறாக, மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு, மோட்டார் வாகன வரி உயர்வு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, 10 முறை பால் விலை உயர்வு ஆகியவை தான் வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு அளித்த பரிசு ஆகும். திமுக அரசின் சாதனை என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்று கூட இல்லை.

2021 தேர்தலில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக செய்து முடிப்போம் என்று 510 வாக்குறுதிகளை திமுக அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆகியும் 50 வாக்குறுதிகள் கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இளைஞர்கள், மகளிர், அரசு ஊழியர்கள் ஆகியோரின் நலன் சார்ந்தும், கல்வி, சுகாதாரம், வேளாண்மை, வேலைவாய்ப்பு ஆகியவை சார்ந்தும் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்த பல்வேறு தரப்பினருக்கும் ஏமாற்றம் மட்டுமே பரிசாகக் கிடைத்தது.

  1. ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
  2. தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
  3. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்.
  4. தற்காலிகப் பணியாளர்கள் அனைவருக்கும் பணி நிலைப்பு வழங்கப்படும்.
  5. மின்பயன்பாட்டு கணக்கீடு மாதம் ஒரு முறை நடத்தப்பட்டு, கட்டணம் குறைக்கப்படும்.
  6. பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படும்.
  7. நெல் குவிண்டாலுக்கு ரூ.2500, கரும்பு டன்னுக்கு ரூ.4000 கொள்முதல் விலையாக வழங்கப்படும்.
  8. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்.
  9. சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்.
  10. மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும்.
  11. ரூ.2000 கோடியில் 200 தடுப்பணைகள் கட்டப்படும். ரூ.3000 கோடியில் கொள்ளிடத்தின் குறுக்கே 5 தடுப்பணைகள் கட்டப்படும்.
  12. பல்வேறு சமூகங்களின் உள் இட ஒதுக்கீட்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மீனவர்களை பழங்குடியினராக அறிவிக்க சட்டம் இயற்றப்படும்.
  13. 100 நாள் வேலைத் திட்டம் 150 நாட்கள் வேலைத் திட்டமாக மாற்றியமைக்கப்படும்.
  14. மத்திய அரசு பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் எட்டாம் வகுப்பு வரை தமிழ்க் கட்டாயப் பாடமாக்கப்படும்.
  15. மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மேம்படுத்தப்படும்.

திமுகவால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் மேற்கண்டவை மிகவும் முக்கியமான வாக்குறுதிகளாகும். ஆனால், இந்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை என்பதிலிருந்தே மக்களை திமுக அரசு மதிக்கவில்லை என்பது தெளிவாகிறது. மக்களை மதிக்காத திமுகவுக்கு மக்கள் அளிக்க வேண்டிய சரியான தண்டனை தோல்வி தான். அதை திமுகவுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.

தமிழக வாக்காளர்களுக்கு ஒரே தேர்தலில் இரு இலக்குகளை சாதிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான நல்லாட்சியை மீண்டும் ஏற்படுத்துவது, தமிழ்நாட்டில் மக்களை வாட்டும் திமுக அரசை தண்டிப்பது ஆகியவை தான் அந்த இரு இலக்குகள். இந்த இலக்குகளை சாதிக்க நாளை மறுநாள் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பா.ம.க., பாஜக மற்றும் அவற்றின் கூட்டணிக் கட்சிகளுக்கு மாம்பழம், தாமரை, சைக்கிள், குக்கர், பலாப்பழம் ஆகிய சின்னங்களில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்; அதன்மூலம் தமிழ்நாட்டை தீமைகளில் இருந்து மீட்டெடுக்கவும், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுக்கவும் வகை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சூரிய குலத் தோன்றல் ராமனுக்கு சூரிய அபிஷேகம்!

surya thilak in ramalla - 2026
#image_title

இன்று நண்பகலில் அயோத்தி ராம பிரான் ஆலயத்தில் சூரிய கதிர்கள் ஸ்வாமியின் திரு நெற்றியில் படுகிற மாதிரியான அமைப்பு பற்றிய செய்திகள் வீடியோ காணக் கிடைக்கிறது ..

சூரிய திலகம் என்பது கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்கள் கொண்ட ஒரு புதுமையான விஞான ஏற்பாடு ஆகும், இன்றும், ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று ராம் லல்லா சிலையின் நெற்றியில் சூரியக் கதிர்கள் ஒளிரும் வகையில் இது அமைக்கப்பட்டு இருக்கிறது

பகவான் ராமர் பிறந்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா (நமது சித்திரை ) மாதத்தின் ஒன்பதாம் நாளில் இந்த நிகழ்வுகள் நடக்கும்.

‘சூர்ய திலகம்’ பின்னால் உள்ள அறிவியல்:- இது நமது தமிழக கோவில்கள் மாதிரி நேரிடையான சூரிய ஒளி அமைப்பு இல்லை கண்ணாடி மற்றும் லென்ஸ் மற்றும் கியர் பாக்ஸ் அமைப்புகள் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு விஷயம்

இதை உருவாக்கிய டாக்டர் எஸ் கே பானிக்ரஹி, சிஎஸ்ஐஆர்-சிபிஆர்ஐ ரூர்க்கியின் விஞ்ஞானி-

“சூர்ய திலக் திட்டத்தின் அடிப்படை நோக்கம் ஒவ்வொரு ஸ்ரீராம நவமி நாளிலும் ஸ்ரீராமர் சிலையின் நெற்றியில் ‘திலகம்’ – சூரிய ஒளி தோன்ற வைப்பதாகும்.

இத்திட்டத்தின் கீழ், ஸ்ரீராம நவமி அன்று நண்பகலில் ராமரின் நெற்றியில் சூரிய ஒளி கொண்டு வரப்படும். ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மாதத்தில்,

ஒவ்வொரு ஆண்டும் சூரியனின் நிலை மாறுகிறது என்றும், விரிவான கணக்கீடுகளின்படி, ராம நவமி தேதி ஒவ்வொரு 19 வருடங்களுக்கும் மீண்டும் அதே நாளில் நிகழும்…

சிலையின் நெற்றியில் தோன்றும் வகையில் அமைக்கப்பட்ட திலகத்தின் திட்டமிடப்பட்ட அளவு 58 மிமீ ஆகும். திலகம் ராம் லல்லாவின் நெற்றியில் சுமார் மூன்று முதல் மூன்றரை நிமிடங்கள், இரண்டு நிமிடங்கள் முழு வெளிச்சத்துடன் தெரியும்.

ராமர் கோயிலுக்குள் நுழையும் சூரியக் கதிர்கள் முதலில் கோயிலின் மேல் தளத்தில் நிறுவப்பட்டுள்ள கண்ணாடியில் விழும் என்று CSIR-CBRI விஞ்ஞானி விளக்கினார்.

பின்னர் மூன்று லென்ஸ்கள் மூலம் கோவிலின் இரண்டாவது மாடியில் உள்ள மற்றொரு கண்ணாடிக்கு கதிர்கள் செலுத்தப்படும்.

ராம நவமியின் போது சூரிய அபிஷேகத்திற்காக ராம் லல்லா சிலையின் நெற்றியில் தோன்றும் சூரிய ஒளி மற்றொரு கண்ணாடியைப் பயன்படுத்தி இரண்டாவது தளத்தின் வழியாக ராம் மந்திரின் கருவறைக்கு செலுத்தப்படும்.

சூரிய திலக் கருவி தயாரிக்க பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்களால் ஆனவை, அவற்றின் நீடித்த தன்மை மற்றும் கால மாற்றத்தால் ஏற்படும் அரிப்பை எதிர்ப்பதற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி நாளில் சூரியன் துல்லியமாக நிலைநிறுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், சந்திர நாட்காட்டியுடன் சீரமைக்கும் வகையில் கியர்பாக்ஸ் கொண்டு இதை நுட்பமாக வடிவமைததுள்ளார்கள் .

தமிழகத்தில் நமது முன்னோர்கள் இந்த கண்ணாடி கியர் பாக்ஸ் போன்ற விஞஞானகள் இல்லாமல் தானே நேரிடையாக சூரிய ஒளி லிங்கத்தின் மீது படும் படி கோவிலை அமைத்து இருந்தார்கள் .. அது வேற லெவல் விஞஞானம் ..

அவற்றில் சில

ஏகாம்பரேஸ்வரர் கோவில்:-

பங்குனி மாதமான மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு 19, 20, 21 ஆகிய தேதிகளில் கோயிலின் உள்சுவரில் உள்ள 1,008 சிவலிங்கங்கள் மீது சூரியக் கதிர்கள் விழுகின்றன. இக்கோயிலின் பங்குனி உத்திரம் திருவிழாவில் மிக முக்கியமான திருவிழாவாகும்.

ஸ்ரீ கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில்:-

சூரியனின் கதிர்களின் தீவிரத்தின் அடிப்படையில் லிங்கம் ஒரு நாளைக்கு ஐந்து முறை நிறத்தை மாற்றுகிறது.

தேனுபுரீஸ்வரர் கோவில்:-

கபில நாதர் லிங்கம் ஏப்ரல் 20, 21, 22 ஆகிய தேதிகளில் சூரியக் கதிர்களால் நேரடியாகப் படுகிறது.

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில்:-

சூரியனின் கதிர்கள் காலை 6:20 மணிக்கு கோயிலின் கருவறைக்குள் நுழைகின்றன, சூரியன் உயரும் போது படிப்படியாக தெய்வத்தை நோக்கி நகர்கிறது.

இது கூகிள் இல் தேடியது – இன்னும் பல பல கோவில்கள் உள்ளன !!!

ராம பிரானுக்கு 21 ஆம் நூற்றாண்டில் நமக்கு தெரிந்த விஞஞானத்தை கொண்டு கட்டி இருக்கிறோம் – மேலும் வட நாட்டில் பெரிதாக இந்த கோவில் கட்டும் விஷயங்கள் இருந்த மாதிரி தெரியவில்லை !!

  • விஜயராகவன் கிருஷ்ணன்

பாஜக.,வுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

BJP 2022 10 29 - 2026
#image_title

பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? – 1

அன்பான வாக்காள பெருமக்களே, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இனிய வணக்கங்கள்.

சுதந்திர பாரதத்தின் வரலாற்றிலேயே உலகை திரும்பி பார்க்க வைத்த தசாப்தம், நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசின் சதாப்தம் தான்.

எவை எல்லாம் சாத்தியமற்றது என நினைத்தார்களோ அவற்றை எல்லாம் சாதித்து ஆக்கியிருக்கிறது.

கனவாக இருந்த பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தியது இந்த அரசு.

முத்தலாக் கொடுமையிலிருந்து சிறுபான்மையின பெண்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

காஷ்மீருக்கு சிறப்பு சலுகை வழங்கிய 370 பிரிவை யாராலும் தொட முடியாது என மார்தட்டி வந்த நிலையில் அதனை நீக்கி இது ஒரே தேசம் என உறுதிபட உணர்த்தியது இந்த அரசு. இன்று காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் இல்லை. ஏன் நாடு முழுவதுமே குண்டுவெடிப்புகளில் இல்லை.

500 ஆண்டு கனவான அயோத்தியில் ராமருக்கு ஆலயம் சுமுகமாக நிறுவப்பட்டுள்ளது

நம் நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எல்லாம் எப்படி சாத்தியப்படும் என்று எள்ளி நகையாடியவர்களுக்கு மத்தியில் பட்டி தொட்டி எங்கும் அதனை எடுத்து சென்று டிஜிட்டல் புரட்சியில் சாதனை படைத்துள்ளது இந்த அரசு. 

இதனால் பணப் பரிமாற்றத்தில் ஒழுக்கம் ஏற்பட்டுள்ளது. 51 சதவிகித ஏழை இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு உருவாக்கப்பட்டு, சுரண்டலுக்கு வழியில்லாமல் பயனாளிகளுக்கு பணம் போய்ச் சேருகிறது.

பாரதப் பிரதமரின் வெளிநாட்டு பயணங்கள் காரணமாக இந்தியாவின் அங்கீகாரம் உலகளவில் மிகவும் உயர்ந்துள்ளது. பாம்பாட்டிகளின் தேசம் என்று அழைக்கப்பட்ட இந்தியாவின் தலைமையை இன்று உலகின் வலிமையான நாடுகள் எதிர்பார்க்கின்றன. தனது பொருளாதார விஞ்ஞான வளர்ச்சியால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது இந்தியா.

2014 இல் நொறுங்கி இருந்த நமது பொருளாதாரம் மீட்கப்பட்டு உலகின் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. விரைவில் மூன்றாவது பொருளாதாரமாக நமது தேசத்தை உருவாக்கி வருகிறது இந்த அரசு.

முன்னே எப்போதும் இல்லாத அளவில் தேசிய மற்றும் கிராமப்புற சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வர்த்தகம் ஓங்கி உயர்ந்துள்ளது. பத்து ஆண்டுகளில் சாலை அமைத்தலின் வேகம் இரண்டு முதல் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.

பத்து ஆண்டுகளில் விமான நிலைய எண்ணிக்கை 74ல் இருந்து 149 ஆக உயர்ந்துள்ளது.

சிறப்புமிக்க ரயில்வே உட்கட்டமைப்பு திட்டங்கள். உலக தரத்தில் வந்தே பாரத் ரயில் சேவை.

ஊழல்களே தலைப்புச் செய்தியாக இருந்த காலம் மாறி இன்று வளர்ச்சியே தலைப்பு செய்தி என மாற்றியுள்ளது இந்த அரசு.

எளிதில் தொழில் துவங்க வழிவகை செய்வதில் இரட்டிப்பு முன்னேற்றம் அடைந்துள்ளது இந்த அரசு. 41,000 தேவையற்ற சட்ட விதிகள் நீக்கப்பட்டு, ஐந்து சதவீதம் வரிச் சுமை குறைக்கப்பட்டுள்ளது.

54 லட்சத்துக்கு அதிகமான சாலைய�ோர வியாபாரிகளுக்கு எளிய கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

12 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுத�ோறும் ரூபாய் 6 ஆயிரம் வழங்கி ஊக்கமளித்து வருகிறது இந்த அரசு. 49 கோடி விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்துள்ளனர்.

18 வகையான கைவினைக் கலைஞர்களுக்கு 13 ஆயிரம் கோடியில் விஸ்வகர்மா கடன் திட்டம்.

ராணுவ வீரர்களுக்கு ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்்ஷன் எனும் ஒரு பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது..

  • ஏழைகளுக்கான வீடு,
  • அனைவருக்குமான வங்கி கணக்கு,
  • அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர்,
  • அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை,
  • பெண்களுக்கு இலவச எரிவாயு திட்டம்,
  • ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள்,
  • என சமூக புரட்சியில் முன் நிற்கிறது இந்த அரசு.
  • இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி,
  • தொழில் துவங்க முத்ரா கடன்,
  • சுத்தமான எரிசக்திக்காக சூரிய மின் சக்தி திட்டம்,
  • பொது மக்களுக்கு எளிய பிரீமியம் தொகையில் ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு,
  • பெண் குழந்தைகளின் பொருளாதார பாதுகாப்புக்கு,
  • செல்வமகள் சேமிப்பு திட்டம் என மக்கள் நலனின் சாதனை படைத்திருக்கிறது.

சிறந்த கொரோனா மேலாண்மையில் உலகின் பாராட்டை பெற்றது. சொந்த நாட்டில் 210 கோடி தடுப்பூசிகள் 110 உலக நாடுகளுக்கு இலவச தடுப்பூசிகள் என உலகைக் காக்கும் நாடாக உயர்ந்தது.

இவ்வாறு அனைத்து துறைகளிலும் தேசத்தை சுயசார்பு தேசமாக மாற்றுவதில் ஒரு புதிய பாதையை நமக்குக் காட்டியுள்ளது நரேந்திர மோடி தலைமையிலான இந்த அரசு.

எனவே மீண்டும் மோடி தலைமையிலான இந்த அரசு அமைவதற்கு பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும் தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும் அமுமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும் பாஜக ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

வெல்லட்டும் பாரத அன்னை!
ஜெய் ஹிந்த்!
வந்தே மாதரம்!

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ பிரசார உரையில் இருந்து…


modi in kanyakumari - 2026

அன்பான வாக்காள பெருமக்களே, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இனிய வணக்கங்கள்.

மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு, தமிழகத்துக்கு என்ன செய்தது என்பதை வாக்காளர்களுக்கு சுருக்கமாக இங்கே பதிவிடுகிறோம்.

கடந்த பத்து ஆண்டுகளில், இன்றைய மத்திய அரசால் 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிலான நிதி தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது 2004 – 14 காங் – திமுக கூட்டணி காலகட்டத்தில் பெறப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகம்.

முந்தைய ஆட்சி காலங்களை விட தமிழகத்தின் உள்கட்டமைப்பிற்கு அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது மோடி அரசு.

3536 கிலோ மீட்டருக்கான தேசிய நெநெடுஞ்சாலைக்சாலைக்சாலைக்சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் புதியதாக 3719 கில􀀠ோ மீட்டருக்கு கிராம சாலைகள் போடப்பட்டுள்ளன.

தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களை புதுப்பிக்க ரூபாய் 3500 கோடி மத்திய அரசு செலவிட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்திற்காக ரூபாய் 1260 கோடி.

கோவையில் தொழிலாளர் நல மருத்துவமனைக்காக 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே எங்கும் இல்லாமல் 14 மாவட்ட தலைநகரங்களில் மருத்துவக் கல்லூரிகள்.

ஒட்டு மொத்த நாட்டிலேயே இரண்டு பாதுகாப்பு வழித்தடங்கள் மட்டுமே உள்ளன. அதில் ஒன்று தமிழகத்தில் துவக்கப்பட்டுள்ளது. அது தான் திருச்சி கோவை சென்னை பாதுகாப்பு தளவாட உற்பத்தி வழித்தடம்.

நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகப்படியாக 12 நகரங்களை ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் இணைத்துள்ளது மத்திய அரசு.

49 லட்சம் விவசாயிகளுடைய வங்கிக் கணக்கில் பிரதம மந்திரி விவசாய ஊக்க உதவி திட்டத்தின் மூலம் ஆண்டுத�ோறும் ரூபாய் 6000 செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 14700 கோடி வழங்கப்பட்டுள்ளது.

61 லட்சம் வீடுகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மருத்துவ சிகிச்சைக்காக ரூபாய் 5 லட்சம் வரை செலவு செய்து கொள்ளும் வகையில் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில் 52 லட்சம் குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர்.

திறந்தவெளி மலம் கழிப்பதை தடுக்கவும், சுகாதாரத்தைப் பேணி காக்கவும் தமிழ்நாட்டில் சுமார் 62 லட்சம் கழிவறைகளை இந்த அரசு கட்டிக் கொடுத்துள்ளது.

இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 36 லட்சம் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

ஜன்தன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 1 கோடியே 43 லட்சம் மக்களுக்கு புதிதாக வங்கி கணக்கு துவக்கப்பட்டுள்ளன. எனவே சுரண்டலுக்கு வழியின்றி பயனாளிகள் நேரடியாக பணம் பெறுகிறார்கள்.

இலவச ரேஷன் அரிசியால் தமிழகத்தில் 3.64 கோடி பேர் பயனடைந்திருக்கிறார்கள்.

எட்டரை கோடி ஜனத்தொகை உள்ள தமிழகத்தில், ஒரு நபருக்கு இரண்டு முறை என 12 கோடியே 75 லட்சம் கொரோனா தடுப்பு ஊசி இலவசமாக போடப்பட்டுள்ளது.

நீட் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கி வருகிறது மோடி அரசு.

நிரந்தரமாக முடக்க திட்டமிட்ட ஜல்லிக்கட்டை மீட்டு தந்தது மோடியின் ஆட்சி.

முந்தைய ஆட்சிக்காலத்தில் பக்கத்து நாட்டுக்கு தாரைவாக்கப்பட்ட கட்ச தீவை மீட்கவும் போராடி வருகிறது இந்த மத்திய அரசு.

பாரத பிரதமர், தான் செல்கின்ற இடம் எல்லாம் தமிழையும் தமிழின் பெருமை பற்றியும் விவரித்து வருகிறார். தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத பிரதமரின் தமிழ் சேவை தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளது.

தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் அடையாளமான செங்கோலை பாராளுமன்றத்தில் நிறுவியதன் மூலம் தமிழர் கலாச்சாரத்தை உலகறிய வைத்துள்ளது மோடி அரசு.

காசி தமிழ் சங்கமம் மற்றும் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நடத்தி தமிழர்களின் தொன்மையை பறை சாற்றி இந்திய ஒற்றுமையை உறுதிப்படுத்தி வருகிறது இன்றைய மத்திய அரசு.

மோடியின் மத்திய அரசால் 18 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் திருவள்ளுவரின் படைப்புகளும் பாரதியின் படைப்புகளும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

காசி இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பெயரில் ஓர் இருக்கையை அமைத்துள்ளது இந்த அரசு.

தமிழகத்தில் நிலவும் போதைப் பழக்கத்தில் இருந்து மாநிலத்தை மீட்க சபதம் எடுத்துள்ளது மோடி அரசு.

அதுமட்டுமல்ல மாநிலத்தில் இயற்கை வளங்களை உறிஞ்சுபவர்களின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிக்க சபதம் எடுத்துள்ளன பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள்.

எனவே, தமிழர் கலாச்சாரம், பண்பாடு காத்திட, தமிழர் வாழ்வு செழித்திட, பாஜக வேட்பாளர்களுக்கு தாமரைச் சின்னத்திலும், பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்திலும், தமாக வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னத்திலும், அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்திலும், பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளருக்கு பலாப்பழம் சின்னத்திலும் வாக்களித்து மீண்டும் மோடி ஆட்சி மலர்ந்திட உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

பாரத் மாதா கி ஜெய்!
ஜெய்ஹிந்த்! வந்தே மாதரம்!

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ பிரசார உரையில் இருந்து…

எங்கள் ராமன்!

lord shri rama - 2026
  • மீ. விசுவநாதன்

அங்கே பறக்கிற பூச்சிகளும்
அருகில் நடக்கிற மாடுகளும்
தங்கள் உணவினைப் பிறருக்காய்
தந்து மகிழ்கிற உயிரினமும்
உங்கள் நினைவிலே யாரென்றே
ஊரார் கேட்கிற போதினிலே
எங்கள் ராமனின் உருவென்றே
இன்பம் பொங்கிடச் சொல்வோமே!

ஆத்து மணல்தனில் உருண்டங்கே
அணிலும் செய்ததோர் தொண்டைப்போல்
காத்த டிக்கிற திசையெல்லாம்
காலம் ராமனின் புகழ்பாடும்!
நேத்து இன்றென நாளையென
நிலைத்து வாழ்கிற தத்துவமாம்
ஆத்மா ராமனின் திருவடியில்
அன்புத் தாமரை உளம்தந்தோம்!.

     (17.04.2024  09.47 am)

(இன்று ஸ்ரீ ராம நவமித் திருவிழா)

‘இண்டி’ கூட்டணியில் ஏன் பிரதமர் வேட்பாளர் கிடையாது? ஸ்டாலின் அற்புத விளக்கம்!

stalin press meet - 2026

— ஆர். வி. ஆர்

நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது. “யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மக்கள் முடிவு செய்வதுதான் இந்தத் தேர்தலின் குறிக்கோள் – யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதல்ல” என்று ஒருவர் பிதற்றினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? சிரிப்பீர்கள். அவரே, தமிழக முதல்வர் ஸ்டாலினாக இருந்தால்? சற்றுப் பெரிதாக சிரிப்பீர்கள்.

சமீபத்தில் ‘ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகைக்கு ஸ்டாலின் அளித்த ஒரு பேட்டியில்தான் அவர் இப்படிப் பேசி இருந்தார்.

ஒரு பதவிக்குப் பலர் ஆசைப்படும்போது, அதற்காக அவர்கள் போட்டியிடும்போது, போட்டியாளர்களில் அந்தப் பதவிக்குத் தகுதியானவர் யார் என்பதை சம்பத்தப்பட்டவர்கள் ஓட்டுப் போட்டுத் தேர்வு செய்யும் வழிமுறை தேர்தல். இதை ஆங்கிலத்தில் elect (எலெக்ட்) செய்வது என்றும், இந்த வழிமுறையை election (எலெக்ஷன்) என்றும் சொல்கிறோம்.

ஜனநாயகத்தில் பெரும்பான்மை பெற்ற ஒரு அணியையோ அல்லது கட்சியையோ அரசு ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தும் முறை இருக்கிறது, அந்தப் பெரும்பான்மை தேர்தல் மூலமாகத் தீர்வு செய்யப்படுகிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர் மத்தியில் ஆட்சி அமைக்கிறார்.

மக்கள் ஓட்டுப் போட்டு, தேர்தல் மூலம் ஒரு பதவிக்கு ஓருவர் தேர்வானால் – கவுன்சிலராகவோ, சட்டசபை உறுப்பினாராகவோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினாராகவோ – அதன் மறுபக்கமாக அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மற்றவர்கள் தேர்வாகவில்லை என்று ஆகிவிடுகிறது. ஆனால் தேர்தலின் நோக்கம் என்ன? யார் ஒருவர் தேர்வாகிப் பதவிக்கு வந்து செய்யலாற்ற வேண்டும் என்பதா? அல்லது ஸ்டாலின் சொல்ல வருவது போல், எந்தப் போட்டியாளர் தோற்றுப் போகவேண்டும் என்று முதலில் தீர்மானிக்கப் பட்டு, எஞ்சியவர்களில் ஒருவர் – அந்த மனிதர் எப்படியானவராக இருந்தாலும் – ஜம்மென்று பதவி நாற்காலியில் அமர்ந்து அவருக்குத் தோன்றுகிற, அவரால் முடிகிற, வேலைகளைப் பார்க்கட்டும் என்பதா?

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு இன்னும் புரியவில்லையா? சரி, அவருக்காகத் தேர்தலின் நோக்கத்தை இப்படி விளக்கலாம்.

தேர்தல் என்பது ஒரு வகையில் ஓட்டப் பந்தயம் மாதிரி. ஓட்டப் பந்தயத்திற்கு ஒரு நடுவர் உண்டு. அவர் என்ன செய்வார்? ஓடும் விளையாட்டு வீரர்களில் யார் முதலில் எல்லைக் கோட்டைக் கடந்தார் என்று பார்த்து, எந்த விளையாட்டு வீரர் ஜெயித்தார், இரண்டாவதாக, மூன்றாவதாக வந்த வீரர்கள் யார் யார் என்றும் பார்த்து, போட்டியின் முடிவுகளை நடுவர் அறிவிப்பார்.

எந்த ஓட்டப் பந்தயமும் நடப்பது எதற்கு? தோற்பவர் யார், அதுவும் மிகக் கடைசியில் வருபவர் யார், என்று தீர்மானித்து அதை அனைவரும் தெரிந்துகொள்ளவா? அல்லது, எந்த விளையாட்டு வீரர் முதலாவதாக வரப் போகிறார் என்று பார்த்து அவருக்குத் தங்கப் பதக்கம் அளித்து கவுரவிப்பதா?

முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு இதெல்லாம் தெரியாதா? அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் காரண காரியமாகத் தனது பேட்டியில் இப்போது பிதற்றி இருக்கிறார். இதே பிதற்றலை அவரது ‘இண்டி’ கூட்டணியின் மற்ற தலைவர்களும் வேறு வழியில்லாமல் பல சமயங்களில் பேசி இருக்கிறார்கள்.

நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறை மத்தியில் ஆட்சி அமைக்கும், பாஜக-வின் நரேந்திர மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆவார் என்பது நாடு முழுவதும் பரவலான எதிர்பார்ப்பு மற்றும் கணிப்பு. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக ஏற்றிருக்கின்றன. மோடியை எதிர்த்து, பாஜக-வை வென்று, மத்தியில் தாங்கள் கூட்டாக ஆட்சி அமைக்க முடியும் என்று ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் ஒன்றுகூட நம்பவில்லை.

திமுக, காங்கிரஸ் என்று ‘இண்டி’ கூட்டணியில் 28 கட்சிகளோ என்னவோ இருக்கின்றனவாம். அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் நரேந்திர மோடியின் மத்திய அரசாங்கத்தால், அதன் சிறந்த நடவடிக்கைகளால், பத்து வருடங்களாக எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. கஷ்டத்தையாவது தாங்கலாம், நஷ்டத்தைச் சொல்லவும் முடியவில்லை, நீண்ட காலம் தாங்கவும் முடியவில்லை. அவர்களின் நஷ்டம், அவர்களின் வேதனை, அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

தனித் தனியாக மோடியை எதிர்த்து மாளவில்லை என்பதால் கூட்டுசேர்ந்து, கசப்புடன் தமக்குள் தொகுதிகளைப் பங்கீடு செய்துகொண்டு, பாஜக-வை இந்தத் தேர்தலில் எதிர்க்கின்றன ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள். ஆனாலும், இந்தத் தேர்தலில் தங்கள் கூட்டணி ஜெயித்தால் தமக்குள் இன்ன கட்சியின் இன்ன தலைவர்தான் பிரதமராக வருவார் என்று இந்தக் கூட்டணிக் கட்சிகள் எதையும் தங்களுக்குள் ஏற்றுக் கொண்டு அறிவிக்கத் தயாரில்லை. காரணம்: தான் பிரதமராக வந்தால் தனக்கு அதிக லாபம், தனக்கு அதிகப் பயன், என்று அந்தக் கட்சிகளின் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். பிறகு அந்த மகா பெரிய அனுகூலத்தைக் கூட்டணியில் உள்ள மற்ற ஒரு கட்சியின் தலைவருக்கு முன்னதாகவே தாரை வார்த்துவிட அந்தக் கூட்டணித் தலைவர்கள் என்ன மக்குகளா? இப்போது விட்டுக் கொடுத்தால் அடுத்த சான்ஸ் கிடைக்குமா, எப்போது கிடைக்கும் என்று யாருக்குத் தெரியும்?

தமக்குள் பிரதமர் வேட்பாளர் யார் என்று ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அறிவிக்க முடியாததால், அதை நேரடியாகச் சொல்லவும் முடியாமல், ‘இந்தத் தேர்தல் நடப்பது, யார் ஜெயித்து வரக் கூடாது என்பதற்காக’ என்று அந்தக் கூட்டணித் தலைவர்கள் ஏதோ பிதற்றி மகிழ்கிறார்கள். அப்படிப் பேசி, தங்களின் தீராத பரஸ்பரப் போட்டியையும் பொறாமையையும் மறைக்க முனைகிறார்கள். அதுதான் விஷயம்.

‘நமது கூட்டணியோ ஜெயிக்கப் போவதில்லை, நமக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கப் போவதில்லை. நம்மில் எவரும் பிரதமர் ஆகப் போவதில்லை. நம்மில் எவருக்கும் கிடைக்க முடியாத வெற்றிப் பழத்திற்கு நாம் ஏன் முன்னதாக அடித்துக்கொள்ள வேண்டும்?’ என்ற நடைமுறை சிந்தனைதான், ஸ்டாலினும் மற்ற ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவர்களும் ஒற்றுமையாக ஒரே மாதிரிப் பிதற்றி வருவதின் காரணம்.

ஏதோ இந்த வரையிலாவது ‘இண்டி’ கூட்டணித் தலைவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்று நினைத்து நாம் மீண்டும் ஒரு முறை சிரித்துக் கொள்ளலாம். வேறென்ன?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
(veera.rvr@gmail.com)
https://rvr-india.blogspot.com

விருதுநகரில் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவு திரட்டி வாகன பேரணி!

two wheeler rally virudhunagar radhika - 2026
#image_title

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக அருப்புக்கோட்டையில் இருசக்கர வாகன பேரணி; பேரணியை ராதிகா சரத்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

பாவடி தோப்பு பகுதியில் நடைபெற்ற இந்தப் பேரணி துவக்கத்தின் போது அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனும் வேட்பாளர் மாணிக்கம் எதிரே வந்ததால் அமைச்சரை நேருக்கு நேர் சந்தித்து ராதிகா சரத்குமார் நலம் விசாரித்தார்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆதரவாக அருப்புக்கோட்டையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பாவடி தோப்பு பகுதியில் இருந்து துவங்கிய இந்த பேரணியை ராதிகா சரத்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.‌

இந்தப் பேரணி துவக்கத்தின் போது அருப்புக்கோட்டையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனும் வேட்பாளர் மாணிக்கம் விருதுநகர் செல்வதற்காக அவ்வழியாக வந்து கொண்டிருந்தனர்
அப்போது அங்கு ராதிகா சரத்குமாரும் எதிரே வந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது அமைச்சரும் ராதிகா சரத்குமாரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி நலம் விசாரித்தனர். இந்த இருசக்கர வாகன பேரணி புளியம்பட்டி, காந்தி மைதானம், சிவன் கோவில் சந்திப்பு, பஜார், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக காந்தி நகர் வரை சென்று நிறைவுற உள்ளது.‌

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பந்தல்குடி சென்று ராதிகா சரத்குமார் விருதுநகர் செல்ல உள்ளார். பிற்பகல் வேளையில் விருதுநகரில் இதேபோன்று இருசக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது

IPL 2024: ஹீரோக்களான சுனில் நரேன், ஜோஸ் பட்லர்

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இருபத்தியாறாம் நாள்

ஐபிஎல் 2024 – 16.04.2024 

ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கொத்தா நைட் ரைடர்ஸ்

கொல்கொத்தா அணியை (223/6, சுனில் நரைன் 109, அங்கிரிஷ் ரகுவன்ஷி 30, ரிங்கு சிங் 20, ஆவேஷ் கான் 2/35, குல்தீப் சென் 2/46) ராஜஸ்தான் அணி (224/8, ஜாஸ் பட்லர் 107*, ரியன் பராக் 34, ரோவ்மன் போவல் 26 ஹர்ஷித் ராணா 2/45, வருண் சக்ரவர்த்தி 2/36, சுனில் நரேன் 2/36) 2 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று கொல்கொத்தாவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. கொல்கொத்தா அணியில் இன்று தொடக்க வீரர் சுனில் நரேன் மிகச் சிறப்பாக ஆடினார். அவர் 56 பந்துகளில் 13 ஃபோர் மற்றும் 6 சிக்சர்களுடன் 109 ரன் அடித்தார்.

அவருக்குப் பிறகு அங்கிரிஷ் ரகுவன்ஷி (18 பந்துகளில் 30 ரன்), ரிங்கு சிங் (ஆட்டமிழக்காமல் 20 ரன்), ரசல் (10 பந்துகளில் 13 ரன்), ஷ்ரேயாஸ் ஐயர் 7 பந்துகளில் 11 ரன்), பில் சால்ட் (13 பந்துகளில் 10 ரன்) என குறைந்த அளவில் ரன் களே எடுத்தனர். ராஜஸ்தான் அணியின் முக்கிய சுழல் பந்து வீச்சாளர்களான அஷ்வின் மற்றும் சாஹாலை சுனில் நரேன் சிக்சர்களாக விளாசினார். 20 ஓவர் முடிவில் கொல்கொத்தா அணி 6 விக்கட் இழப்பிற்கு 223 ரன் எடுத்தது. 

224 ரன் என்ற சற்றே கடினமான இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஸஷ்வி ஜெய்ஸ்வால் (9 பந்துகளில் 19 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) நன்றாக விளையாடினார் ஆனால் இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜாஸ் பட்லர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி 60 பந்துகளில் 107 ரன் அடித்தார். அதில் 9 ஃபோர்களும் 6 சிக்சர்களும் அடக்கம்.

அவருக்குத் துணையாக ரியன் பராக் (14 பந்துகளில் 34 ரன்) மற்றும் ரோவ்மன் போவல் (13 பந்துகளில் 26 ரன்) ஆகிய இருவர் மட்டுமே சற்று நிலைத்து ஆடி ரன் கள் சேர்த்தனர். பிற மட்டையாளர்கள் எவரும் இன்று சோபிக்கவில்லை. இறுதியில் கடைசி பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து கொல்கொத்தா அனி வெற்றிக்கனியை எட்டிப்பிடித்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜாஸ் பட்லர்  தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். நாளை அகமதாபாத்தில் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.      

16.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 761120.667
கொல்கொத்தா64281.399
சென்னை64280.726
ஹைதராபாத்64280.502
லக்னோ63360.038
குஜராத்6336-0.637
பஞ்சாப்6234-0.218
மும்பை6244-0.234
டெல்லி7254-1.185
பெங்களூரு6152-1.124

பதில் சொல்லுங்க ஸ்டாலின்: 20 கேள்விகள் எழுப்பிய பாஜக.,!

BJP Narayanan Thiruppathi - 2026
#image_title

திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாஜகவின் 20 கேள்விகள்!

பதில் சொல்லுங்க ஸ்டாலின்!

  1. தி மு க ஆட்சிக்கு வந்ததும் கடந்த அ தி மு க ஆட்சியில் ஊழல் புரிந்த அமைச்சர்கள் சிறை செல்வார்கள் என்று வாக்குறுதி அளித்தீர்களே? ஊழல் நடக்கவில்லையா? அல்லது வழக்கம் போல் ஊழல்வாதிகளுடன் கை கோர்த்து விட்டீர்களா?

2. வீட்டு எரிவாயு விலையில் ரூபாய்.100 குறைப்பதாக சொன்னீர்களே? ஆனால் வருடங்கள் மூன்றாகியும் இன்னும் குறைக்கவில்லையே, ஏன்?

3.ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்தீர்களே? 50 லட்சம் கையெழுத்து வாங்கியதாக சொல்லியும் இன்று வரை நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லையே? பொய் தானே சொன்னீர்கள்?

  1. பெட்ரோல் வரி விதிப்பில் ரூபாய்.5 ஐ குறைப்பதாக சொன்னீர்களே? ஆனால் செய்யவில்லையே? மக்கள் ஏமாளிகள் என்ற எண்ணம் தானே?

5.தி மு க ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னீர்களே? ஆனால், இன்று வரை செய்யவில்லையே? ஏன்? மாணவர்களின் எதிர்காலம் குறித்து கவலை இல்லாதது தானே காரணம்?

  1. தி மு க ஆட்சிக்கு வந்ததும் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து மது விற்பனையை குறைத்து தாய்மார்களின் கண்ணீரை துடைப்பதாக வாக்குறுதி அளித்தீர்களே? ஆனால், மது குடிப்பவர்களும், மது விற்பனையும், மது போதையால் நடைபெறும் கொலைகளும் அதிகமாக பெருகியுள்ளதே? பொய் தானே சொன்னீர்கள்?
  2. உலகெங்கிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க முயற்சி எடுக்கப்படும் என்று சொன்னீர்களே? இது வரை எத்துனை இருக்கைகள் அமைக்கப்பட்டன? எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? தமிழ் மீது உங்களுக்கு ஏன் இந்த வஞ்சனை?
  3. உலகப் புகழ்பெற்ற பிறமொழி நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிட்டு வெளியிடப்படும். இதைப் போலவே மிகச்சிறந்த தமிழ் நூல்கள் உலகமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டு தமிழ் , தமிழர்களின் பெருமை உலக அளவில் பெருகிப் பரவிட அச்சு மற்றும் இணையதள வசதிகளைப் பயன்படுத்தி ஆவன செய்யப்படும் என்று கூறினீர்களே? இந்த மூன்று வருடங்களில் எத்தனை நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன? வெளியிடப்பட்டன? அச்சிடப்பட்டன? தமிழை மொழியை தாங்கள் புறக்கணிக்க காரணம் என்ன?
  4. தனி நிலத்தில் பயிர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்குவதற்கு உரிய காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினீர்களே? ஏன் கொண்டு வரவில்லை? விவசாயிகளை ஏமாற்றுவது நியாயமா?
  5. அதிகமாக மின்கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் பொருட்டு மின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்று உறுதி கூறினீர்களே? மூன்று வருடங்களாகியும் அதை அமல்படுத்த மறுப்பது ஏன்?
  6. செய்யூர் அனல்மின் நிலைய திட்டத்தில் உள்ள சிக்கல்களை அகற்றி, மீண்டும் உடனடியாக செயல்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றீர்களே? ஆனால், அதற்கு நிரந்தரமாக மூடு விழா நடத்தி விட்டீர்களே? ஏன்? அதில் மிக பெரிய முறைகேடு நடந்திருப்பதாக சொல்லப்படுகிறதே? நியாயமா? இது நியாயமா?
  7. சென்னை மாநகரில் ஓடுகின்ற ஆறுகளான அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய், மாம்பலம் கால்வாய், காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா, விராங்கல் ஓடை ஆகிய ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நீரோட்டம் அதிகரிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னீர்களே? ஆனால், குப்பைகள், கழிவுகள் அனைத்திற்குமான இடமாக இதே ஆறுகள் மாறிவிட்ட அவலம் உங்களுக்கு தெரியுமா மு.க.ஸ்டாலின் அவர்களே?
  8. டில்லியில் இயக்கப்படுவது போல் (CNG) எரிவாயுவின் இயங்கும் பேருந்துகள் இனி தமிழகத்தில் இயக்கப்படும் என்றீர்களே? ஆனால், சமீபத்தில் கூட டீசல் பேருந்துகளை தானே கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளீர்களே, ஏன்?
  9. தமிழக சட்ட பேரவை நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று சொன்னீர்களே? ஆனால் இன்று வரை செய்யவிலையையே ஏன்?
  10. சென்னை மெட்ரோ ரயிலில் மாணவர்களுக்கு கட்டண சலுகை என அறிவித்தீர்களே? நினைவில் உள்ளதா?
  11. பால் விலையை குறைப்பதாக சொல்லி விட்டு அளவை குறைத்து, எண்ணிக்கையை குறைத்து தட்டுப்பாட்டை உருவாக்கியது தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக தானே?
  12. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக சொன்னீர்களே? மூன்று வருடங்களில் 30 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது அரசின் நிர்வாகமின்மையால் தானே?
  13. சமூக நீதி காக்கும் திராவிட மாடல் என்று மார் தட்டி கொள்கிறீர்களே? ஆனால், இரு வருடங்களாகியும் இது வரை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்தவர்களை கண்டுபிடிக்காது சமூக அநீதியை இழைத்துள்ளீர்களே?
  14. குட்கா விவகாரத்தில் பெரும் குரல் கொடுத்தீர்களே? குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினீர்களே? ஆனால், தமிழகம் முழுவதும் போதை பொருள் விற்பனை கொடி கட்டி பரப்பதை உங்களால் தடுக்க முடியவில்லையே?
  15. தமிழ் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கவில்லை என்று சதா சர்வகாலமும் சாடுகிறீர்களே? நம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு கடந்த மூன்று ஆண்டு காலம் திராவிட மாடல் அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதை பட்டியலிட்டு வெள்ளை அறிக்கை விட முடியுமா?

பதில்சொல்லுங்கஸ்டாலின்

நாராயணன் திருப்பதி
(மாநில துணைத் தலைவர், பாரதிய ஜனதா கட்சி)

IPL 2024: பாராட்டுகள் பல பெற்ற தினேஷ் கார்த்திக்

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

இருபத்தைந்தாம் நாள்

ஐபிஎல் 2024 – 15.04.2024 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

சன்ரைசர்ஸ் அணி (287/7, ட்ராவிஸ் ஹெட் 102, கிளாசன் 67, அப்துல் சமத் 37, அபிஷேக் ஷர்மா 34, ஐடென் மர்க்ரம் 32, ஃபெர்கூசன் 2/52) பெங்களூரு அணியை (262/7, தினேஷ் கார்த்திக் 83, ட்யு பிளேசிஸ் 62, கோலி 42, அனுஜ் ராவத் 25*, பேட் கம்மின்ஸ் 3/43, மயக் மர்கண்டே 2/46) 25 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று நாளை பெங்களூருவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. ஹைதராபாத் அணியில் இன்று முதல் ஐந்து வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடினர்.

அணியின் தொடக்க வீரர் அபிஷேக ஷர்மா (22 பந்தில் 34 ரன்), ட்ரவிஸ் ஹெட் (41 பந்துகளில் 102 ரன், 9 ஃபோர், 8 சிக்சர்), ஹென்றிச் கிளாசன் (31பந்துகளில் 67 ரன்), மர்க்ரம் (32 ரன்), அப்துல் சமது (37 ரன்) ஆகியோரின் ஆட்டத்தால் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 287 ரன் எடுத்தது.

288 ரன் என்ற கடினமான இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி (20 பந்துகளில் 42 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) மற்றும் டியுபிளேசிஸ் (28 பந்துகளில் 62 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்) நல்ல தொடக்கம் கொடுத்தனர். பவர் பிளே முடிவில் பெங்களூரு அணி விக்கட் இழப்பின்றி 76 ரன் எடுத்திருந்தது. இது சன்ரைசர்ஸ் அணி எடுத்திருந்ததை விட அதிகம்.

விராட் கோலி 7ஆவது ஓவரிலும், அடுத்த வீரர் வில் ஜேக்ஸ் அடுத்த ஓவரிலும் ஆட்டமிழந்தனர். அதற்குடுத்து ஆட வந்த ரஜத் படிதர் (9 ரன்) மற்றும் சௌரவ் சௌஹான் (பூஜ்யம் ரன், கோல்டன் டக்) இருவரும் சொற்ப ரன்னுக்கு அவுட்டாயினர்.  9.3ஆவது ஓவரில் தினேஷ் கார்த்திக் ஆடவந்தார். அப்போது பெங்களூரு நிச்சயத் தோல்வி என்ற நிலையில் இருந்தது.

ஆனால் கார்த்திக் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 35 பந்துகளில் 5 ஃபோர் மற்றும் 7 சிக்சர்களுடன் 83 ரன் அடித்து பெங்களூரு அணியின் வெற்றிக் கனவை உயிரோடு வைத்திருந்தார். அவரோடு ஜோடி சேர்ந்து ஆடிய மஹிபால் லோமர் (11 பந்துகளில் 19 ரன்) மற்றும் அனுஜ் ராவத் (14 பந்துகளில் 25 ரன்) இருவரும் தினேஷ் கார்த்திக் அளவிற்கு ஆடாததால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கட் இழப்பிற்கு 262 ரன் கள் மட்டுமே எடுத்து தொல்வியைத் தழுவியது.  

சன்ரைசர்ஸ் அணியின் ட்ராவிஸ் ஹெட்  தன்னுடைய சிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

நாளை கொல்கொத்தாவில் ராஜஸ்தான் ரயல்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.      

15.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல் 

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான் 651100.767
கொல்கொத்தா54181.688
சென்னை64280.726
ஹைதராபாத்64280.502
லக்னோ63360.038
குஜராத்6336-0.637
பஞ்சாப்6234-0.218
மும்பை6244-0.234
டெல்லி7254-1.185
பெங்களூரு6152-1.124