Home Blog Page 234

மல்லிகார்ஜுன கார்கே… ஓட்டுக்காக என்னல்லாம் பேசுறாரு?

write thoughts - 2026
#image_title

“மக்களே! மறக்காம என் மறைவுக்கு வந்துருங்க!” – மல்லிகார்ஜுன் கார்கே வினோத அழைப்பு!

— ஆர். வி. ஆர்

காதுகுத்தல், கல்யாணம், கிருஹப் பிரவேசம் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை நீங்கள் சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பீர்கள். ஆனால் ஒரு நிகழ்ச்சிக்கு யாரும் வழங்காத அழைப்பை, ஒரு அரசியல் தலைவர் சமீபத்தில் ஊர் மக்கள் அனைவருக்கும் விடுத்திருக்கிறார். அவர்தான் மல்லிகார்ஜுன் கார்கே. அவர் கட்சிதான் இன்று சிரிப்பாய்ச் சிரிக்கும் காங்கிரஸ் கட்சி.

சமீபத்தில் கர்நாடக மாநிலம், கலபுர்கி லோக் சபா தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்துவந்தார் கார்கே. அப்போது மேடையில் நின்று மக்களை நோக்கி, “நீங்கள் என் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்கிறீர்களோ இல்லையோ, எனது இறுதி ஊர்வலத்துக்கு வந்து விடுங்கள்” என்று தத்தக்கா பித்தக்கா என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பேசினார்.

ஒருவேளை கலபுர்கியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜெயிக்க வாய்ப்பில்லை என்று கார்கே நினைத்திருக்கலாம். அதற்காக, இப்படி உணர்ச்சி பூர்வமாக – அதுவும் இறப்பு நிகழ்ச்சி என்றெல்லாம் – பேசினால் மக்கள் பரிதாபத்தில் உருகி சற்று அதிகமானவர்கள் தனது கட்சி வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவார்கள், காங்கிரஸ் கட்சி அங்கு ஜெயிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம். எதுவானாலும் இது வடிகட்டின அசட்டுப் பேச்சு.

ஒரு வருடம் முன்பு திமுக மாநில அமைச்சர் துரை முருகன், முதல்வர் ஸ்டாலினை அருகில் வைத்துக்கொண்டு, “நான் மறைந்த பிறகு, என் கல்லறையில் ‘கோபாலபுரத்தின் விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என்று எழுதுங்கள்” என்று பேசி, கட்சியிலுள்ள மற்ற தலைவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு ஸ்டண்ட் அடித்தார். அதை மனதில் வைத்து, ‘இப்போது அரசியலில் பல தலைவர்களும் மலிவாகப் பேசுகிறார்கள். மல்லிகார்ஜுன் கார்கேயின் பேச்சும் அது மாதிரித்தான்’ என்று நாம் சாதாரணமாக நினைக்கும் விஷயமில்லை இது.

துரைமுருகன் பேசியது, அக்மார்க் திமுக பாணி. இது போன்ற பேச்சு, இந்த அளவிலான மற்ற செயல்கள், திமுக-வுக்கே உரித்தானது.

சுமார் 71 ஆண்டுகளுக்கு முன்பாக, திமுக-வின் மு. கருணாநிதி ஒரு காரியம் செய்தார். அப்போது திமுக நடத்திய ஒரு போராட்டத்தின் பகுதியாக, திருச்சிக்கு அருகில் ‘டால்மியாபுரம்’ என்றிருந்த ஒரு ரயில் நிலையத்தின் பெயரை ‘கல்லக்குடி’ என்று பெயர் மாற்றக் கோரியது அக்கட்சி. அந்த சமயத்தில், அந்த ஊர் ரயில் நிலையத்திற்குள் கட்சிக்காரர்களுடன் சென்று ரயில் தண்டவாளத்தில் படுத்து, அங்கிருந்து கிளம்பவிருந்த ரயில் புறப்படாமல் ஸ்டண்ட் செய்தார் கருணாநிதி – என்ன இருந்தாலும் ரயில் தன் மீது ஏறாது என்ற நிச்சயத்தில். கருணாநிதிக்கு அப்போது வயது 29. இதனால் அரசியலில் சில படிகள் முன்னேறினார் கருணாநிதி.

சமீபத்தில் தனது 84-வது வயதில், துரை முருகன் தன்னால் முடிந்த ஸ்டண்டைத் தன் ‘கல்லறைப் பேச்சு’ மூலமாகவே செய்துவிட்டார் – திமுக வழியில். ஆனால் மல்லிகார்ஜுன் கார்கே பிதற்றியது, தலை சிறந்த காங்கிரஸ் முன்னோடிகளிடம் அவர் கற்ற பாடத்தினால் அல்ல.

திமுக அன்றுபோல் இன்றும் மலிவான பேச்சு, கண்ணியம் குறைந்த செயல்கள், ஸ்டண்ட் நடவடிக்கைகள், என்றுதான் அரசியல் செய்கிறது. ஆனால் திறமைக்கும் கண்ணியத்திற்கும் பொதுவாழ்வில் அர்ப்பணிப்புக்கும் ஒரு காலத்தில் பெயர்போன காங்கிரஸ் கட்சி, இன்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் தலைமையில், எல்லா வகையிலும் தாழ்வுற்று நிற்கிறது. இந்தப் பெரும் சோகத்தின் ஒரு அடையாளம், காங்கிரஸ் கட்சியின் பொம்மைத் தலைவராக (‘பிரஸிடெண்ட்’ என்று) பிடித்து வைக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜுன் கார்கேயும் அவரது பேச்சும் செயல்களும்.

திமுக தலைவர் கருணாநிதி, தன் கட்சிக்குள் தனது மகன் மு. க. ஸ்டாலினை உயர்த்திவிட, ஸ்டாலினுக்கு ஆதரவாகத் தொடர்ந்து பொறுமையாகச் செயல்பட்டு வந்தார். எதிர்பார்த்தபடி அதைக் கட்சியில் அனைவரும் ஏற்றனர். இப்போதைய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், தனது மகன் உதயநிதி ஸ்டாலினை எப்படி வேகவேகமாகக் கட்சிக்குள் முன்நிறுத்துகிறார், ஸ்டாலினின் மாப்பிள்ளை சபரீசன் எப்படி அசாத்தியமாகத் தொழில் செய்கிறார், கட்சிக்குள் இருக்கும் மற்ற தலைவர்கள் அந்த இருவரை எப்படி விழுந்து விழுந்து வரவேற்கிறார்கள், வணங்குகிறார்கள், என்பதும் வெளிப்படை.

காங்கிரஸ் கட்சி இப்போது கௌரவம் இழந்து சீரழிந்து விட்ட நிலையில், அதன் தலைவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகத் தமது பேச்சில் திமுக மாதிரி கட்சிகளின் பாணியைக் காப்பி அடிக்கிறார்கள். இதில் ஸ்டாலினோடு போட்டிபோட்டு அவரை மிஞ்சுகிறார் ராகுல் காந்தி. அதே பொறுப்பற்ற வகையில், ஆனால் ராகுலை மிஞ்சி விடாமல், கலபுர்கியில் பேசி இருக்கிறார் மல்லிகார்ஜுன் கார்கே.

சரி, மல்லிகார்ஜுன் கார்கே இப்படி உணர்ச்சி பூர்வமாகப் பிதற்றுவதற்கு ஏன் கலபுர்கி லோக் சபா தொகுதியைத் தேர்ந்தெடுத்தார்? மனிதர் காரண காரியமாகத் தான், திடீரென உணர்ச்சியில் உருகித் தனது கடைசிப் பயணத்துக்குக் கலபுர்கி மக்களைக் கண்ணில் நீர் மல்க அழைத்துவிட்டார். இதில் திமுக-வின் சாயல் பெரிதும் உண்டு. கலபுர்கி தொகுதியில் காங்கிரஸ் நிறுத்தி இருக்கும் வேட்பாளர் வேறு யாருமல்ல, அவர் மல்லிகார்ஜுன் கார்கேயின் மாப்பிள்ளைதான்!

அடுத்த படியாக, தமிழகத்தில் நோஞ்சானாய் இருக்கும் தமது கட்சியைப் பெரிதாய் வளர்க்க, தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் பேச்சிலும் செயலிலும் என்ன புதுமையைக் கடைப் பிடிப்பார்களோ? மேல்மட்டத்தில் காங்கிரஸ் இப்போது கெட்ட கேட்டில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இனி எப்படியெல்லாம் திமுக வழியில் செல்வார்களோ, அவர்களுக்கு மல்லிகார்ஜுன் கார்கேயின் பேச்சு எப்படி உதாரணமாகத் திகழுமோ, என்றெல்லாம் யாராவது கணிக்க முடியுமா?

Author: R Veera Raghavan, Advocate, Chennai
veera.rvr@gmail.com
https://rvr-india.blogspot.com

பன்முக வித்தகராய் விளங்கிய நீலகண்ட தீட்சிதர்!

neelakanta deekshitar - 2026
#image_title

– மு.ஸ்ரீனிவாஸன்

17 ஆம் நூற்றாண்டின் சம்ஸ்கிருதக் கவிகளிலே தன்னிகரற்று விளங்கியவர் நீலகண்ட தீட்சிதர். அவர் பன்முக வித்தகராக வாழ்ந்தார். பெருங்கவிஞர், நாடகாசிரியர், வசனகர்த்தா, விமர்சகர், அரசியல் நிர்வாகி, உரையாசிரியர், தத்துவமேதை, மாபெரும் பக்தர் என்று புகழ் பெற்றவர். மூன்று பெருங்காப்பியங்கள், எட்டு சிற்றிலக்கியங்கள், ஒரு நாடகம், பல நீதி நூல்கள் என்று ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

ஏறக்குறைய கி.பி.1582 ஆம் ஆண்டில் நீலகண்ட தீக்ஷிதர் பிறந்தார். அவருக்கு முன்னும் பின்னும் ஐந்து தலைமுறைகளுக்கு புகழோடு விளங்கிய ஒரு குடும்பத்தில் அவர் பிறந்தார். தனது வம்சாவளியை அவருடைய நூலான கங்காவதரணம் என்ற காவியத்தில் அவர் இப்படி எழுதியிருக்கிறார்.

“பரத்வாஜர் என்று மூவுலகிலும் புகழ்பெற்ற ஒரு மகரிஷி உண்டு. அவருடைய சொல்லைக் கேட்டு, ராமன் காட்டில் திரிந்து கொண்டிருப்பதை நிறுத்தினான். அவருடைய வம்சத்தில், பாற்கடலிலிருந்து நிலா தோன்றியது போல், முதலாம் அப்பய்ய தீக்ஷிதர் தோன்றினார். அவர்
பெரும் சிவபக்தர். அவரது தம்பி ஆச்சான் தீக்ஷிதர். அவரும் தமையனைப் போலவே எல்லாம் கற்றறிந்தவர். அவருடைய
பிள்ளை நாராயண அத்வரி. அவருக்கு அன்பினால் இணைந்த ஐந்து புதல்வர்கள். அவர்கள் தாயின் கருவில் இருக்கும்போதே சிவபக்தியை சொத்தாகப் பெற்றவர்கள். அவர்களுள் தாய் பூமிதேவிக்கு இரண்டாவதாகப் பிறந்த மகன் நான்.”

அவரது முன்னோர்கள் பலரும் அரசர்களால் மதித்துப் போற்றப்பட்டவர்கள். அப்பய்ய தீக்ஷிதரின் தாத்தா ஆசார்ய தீக்ஷிதர் விஜய நகரம் கிருஷ்ண தேவராயரின் அவையை அலங்கரித்தவர். அப்பய்ய தீக்ஷிதர் வேலூர், பெனுகொண்டா மன்னர்களால் கொண்டாடப்பட்டவர். மிக உயர்ந்த நூறு நூல்களுக்கும் அதிகமாக எழுதியவர் அப்பய்ய தீக்ஷிதர். எழுபத்திரண்டு ஆண்டுகள் வாழ்ந்த அவரைக் கனகாபிஷேகம் செய்து மன்னர் கௌரவித்ததாகவும், அவர் சிதம்பரத்தில் முக்தியடைந்ததாகவும் வரலாறு. அவரது
ஆதரவில் வளர்ந்தவர் நீலகண்டன்.

கோவிந்த தீக்ஷிதரின் புதல்வரும் சதுர் தண்டிப்ரகாசிகா நூலின் ஆசிரியருமான வேங்கட மகியிடம் அவர் கல்வி கற்றார். கிருஷ்ணானந்த யதி, கீர்வாணேந்த்ர சரஸ்வதி, தந்தையான நாராயணாத்வரி முதலியவர்களிடம் சாஸ்திரங்களையும், குறிப்பாக அத்வைதத்தையும் கற்றுத் தேர்ந்தார். அவரது பன்னிரெண்டாவது வயதில் அப்பய்ய தீக்ஷிதர் காலமானார். பெரிய தாத்தாவின் சொத்தாக தேவி மகாத்மியத்தையும் ரகுவம்சத்தையும் பெற்றுக் கொண்ட அவரை, “நீ தேவியின் அருளால் மகாகவியாவாய்’ என அப்பய்ய தீக்ஷிதர் ஆசிர்வதித்தாராம்.

பின்னாளில் சுமார் முப்பதாண்டுகள் நீலகண்ட தீக்ஷிதர் மதுரையரசர் திருமலைநாயக்கனது அமைச்சராக இருந்தார். அது பற்றிய சுவையான வரலாறு உண்டு. மதுரையில் ஆற்று மணலில் தீக்ஷிதர் தேவி மகாத்மியப் பிரவசனங்கள் செய்து வந்தார். அதை மறைந்திருந்து கேட்டு அதனால் பெரிதும் கவரப்பட்ட திருமலை நாயக்கன் ஒரு புலவர் சபையைக் கூட்டி ஒரு போட்டி வைத்தவன். அதில் கேட்கப்பட்ட கேள்வி காக்கைக்குக் காகம் என்று எப்படிப் பெயர் வந்தது என்பதாகும். அவ்வளவு பெரிய சபையில் ஒரே நிசப்தம். பதில் சொல்ல யாரும் முன்வரவில்லை.

சபையைக் கலைக்க வேண்டியது தான் என்று அரசன் நினைத்த நேரத்தில் ஒருவர் எழுந்தார். ஒரு விளக்கமும் அளித்தார். இந்திரகுமாரன் ஜயந்தன் காக்கையுருவில் சீதையின் மார்பைக் கொத்திய போது ராமன் வெகுண்டான். ஆனால் சீதை ஜயந்தனை பொறுமையாய் மன்னிக்க, ராமனும் தன் கருணையால் அவனை மன்னித்தான்.
அதைக் கண்டு சுற்றியிருந்த காகங்கள் “”இவ்வுலகில் பொறுமை, மன்னிக்கும் இயல்பு இவற்றில் சீதையை ஒத்தவள் யார்?

( கா). இவ்வுலகில் தயையில் ராமனை ஒத்தவன் யார்? (: க)? என்று “காக’ என்று குரலெழுப்பி ஆர்ப்பரி
த்தன. அதனால் “காக” என்ற பெயர் வந்தது. (யார் என்பதற்கு “கா’ என்பது பெண்பால் சொல், “க’ என்பது ஆண்பால் சொல் சம்ஸ்கிருதத்தில்). அப்படி விளக்கமளித்தவர் நீலகண்ட தீக்ஷிதர். அவரை உடனேயே தனது மந்திரியாக்கினான் திருமலை நாயக்கன்.

மதுரையின் அமைச்சராக நீலகண்ட தீக்ஷிதர் நல்ல பல சீர்திருத்தங்களைச் செய்தார். மீனாக்ஷியம்மன் கோவிலில் செய்யப்பட வேண்டிய தினசரி பூஜை பல்வேறு உற்சவங்கள் முதலியவற்றை நிர்ணயம் செய்து ஒழுங்குபடுத்தினார். நிர்வாக அலுவல்களுக்கு நடுவில் ஏராளமான நூல்களை எழுதினார். தான் கற்ற கல்வியை பிறருக்கும் போதித்து ஒரு நல்ல சிஷ்ய பரம்பரையை உருவாக்கினார்.

கடைசியில் ஒரு நாள் அரசுப் பணியும் சலித்தது. இறையருளிலே திளைக்க விரும்பிய அவர் பட்டம் பதவிகளைத் துறந்து விட்டு, திருநெல்வேலிக்கருகில் தாம்பிரவருணியின் கரையிலமைந்த பாலாமடை கிராமத்தில் துறவியாகத் தனது எஞ்சிய நாட்களைக்
கழித்து இறைவனடி சேர்ந்தார். அவர் மதுரையை விட்டுஅகன்றது பற்றியும் ஒரு கதை உண்டு.

மதுரைக் கோவிலின் புதுமண்டபம் 1626 முதல் 1633 வரை திருமலை நாயக்கனால் கட்டப்பட்டது. அங்கே ஒரு தூணில் திருமலை நாயக்கன் தன் ஏழு பத்தினிகளுடன் இருக்கும் பெரிய சிற்பம் உள்ளது. சுந்தரமூர்த்தி ஆசாரி என்ற தலைமைச் சிற்பிக்கு ஒரு சோதனை ஏற்பட்டது.

பட்டமகிஷியின் சிலையைச் செய்யும்போது, இடது துடையில் சில்லுப் பெயர்ந்து விட்டது. மீண்டும் புதிதாகச் செய்தான், மீண்டும் அதே இடத்தில் சில்லுப் பெயர்ந்தது. அப்போது அப்பணியை மேற்பார்வை பார்க்க அங்கு வந்த தீக்ஷிதர் விஷயத்தைக் கேட்டு, சற்றே கண்மூடி யோசித்துவிட்டு, “”அதை அப்படியே விட்டுவிடு. மீண்டும் செய்து பயனில்லை. ஏனெனில் அந்த இடத்தில் மகாரா
ணிக்கு ஒரு பெரிய மச்சம் இருக்கிறது” என்று சொல்லிவிட்டுப் போனார்.

ஆசாரியும் அதை அப்படியே விட்டு விட்டான். பின்னால் அங்கு வந்த அரசன் நடந்ததைக் கேள்விப்பட்டான். தன் தே
வியின் துடையில் மச்சமிருப்பது தெரிந்த அவனுக்கு சந்தேகம் பிறந்தது. அதுவே பெருங்கோபமாக மாறியது. அரண்மனை சென்றதும் தீக்ஷிதரை அழைத்து வரச் சொல்லி அதிகாரியை அனுப்பினான். தீக்ஷிதர் அப்போது அம்பாளது பூஜையில் இருந்தார்.

அரசன் ஆளனுப்பியது அவருக்குப் புதிய அனுபவம். உடனே கண்மூடி தியானித்தார். அரசனின் மடமை அவருக்குப் புரிந்தது. உடனே கையில் ஏற்றியிருந்த கற்பூரத்தை அம்பிகைக்குக் காட்டிவிட்டு அதனாலேயே தன் கண்களையும் அவித்துக் கொண்டார்.

“அரசன் அளிக்கவிருந்த தண்டனையைத் தானே விதித்துக் கொண்டதாகச் சொல்’ என்று அதிகாரியைத் திருப்பியனுப்பினார். பிறகு அம்பிகையைத் தன் உள்ளமுருக்கும் பாடல்களால் துதிக்கத் தொடங்கினார். பாடல்கள் முடிவதற்குள் அவரது கண்பார்வை மீண்டது.

நடந்ததையறிந்த திருமலை நாயக்கன் ஓடோடி வந்து தீக்ஷிதரிடம் மன்னிப்பு வேண்டினான். அரசனை பெருந்தன்மையுடன் மன்னித்த தீக்ஷிதர் தன் பதவியை உடனே துறந்து பாலாமடை சென்றார். திருமலை நாயக்கன் பாலாமடை கிராமத்தை அவருக்கே வழங்கினான். அதற்கு நீலகண்ட ஸமுத்ரம் என்ற பெயரும் வழங்கலாயிற்று. அப்போது தீக்ஷிதர் பாடிய பாடல்களே “ஆனந்த ஸாகரஸ்தவம்.’

நீலகண்ட தீக்ஷிதரின் மிகப் பிரசித்தி பெற்ற காவியம் சிவலீலார்ணவம். சிவ லீலைகளாகிய பெருங்கடல் என்று பொருள்.

ஹாலாஸ்ய மகாத்ம்யத்தையட்டி சிவனது 64 லீலைகளும் பேசப்படும் நூல். 22 காண்டங்களில் இரண்டாயிரத்துக்கு இரண்டு பாடல்கள் குறைவாக இயற்றப்பட்ட மகாகாவியம்.
1907 ஆம் ஆண்டு முதன் முதலாக மகாமகோபாத்யாய தருவை கணபதி சாஸ்திரிகளால் திருவனந்தபுரத்தில் அச்சிடப்பட்டது.

மதுரை மீனாக்ஷி பிறப்பு, வளர்ப்பு, ஆட்சி, திக்விஜயம், சுந்தரேச்வரருடன் திருமணம், திருவாதவூரர் கதை, ஈசன் நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது, அரிமர்தன பாண்டியனிடம் பிரம்படி பட்டது, நக்கீரர் அகந்தை அடக்கியது, கூன் பாண்டியன் நோய் நீக்கியது, சம்பந்தரும் சமணரும், அனல் வாதம், புனல் வாதம், பிறகு வந்த பாண்டிய மன்னர்களுக்கு அருளிய செயல்கள் அனைத்தும் கொண்ட காவியம்.

எட்டு காண்டங்கள் கொண்ட “கங்காவதரணம்’ (கங்கை கீழிறங்கியது) பகீரதன் கதை. “நீலகண்ட விஜய சம்பு’ திருப்பாற்கடலைக் கடைந்த நிகழ்ச்சியும், பிரபஞ்சத்தைக் காக்க சிவன் ஆலகால விஷத்தைக் குடித்து நீலகண்டனாக ஆன கதை உரை நடையும், பாடலும் கலந்த சம்பு இலக்கியம்.

“நள சரித நாடகம்’ 6 வது அங்கத்தோடு நின்று விடுகிறது. “கலி விடம்பனம்’ என்ற 102 பாடல்களைக் கொண்ட நூல் கலியுகத்தின் தீய பழக்க வழக்கங்களைக் காட்டும் நையாண்டிப் பாடல்கள். பர்த்ரு ஹரியின் நீதி சதகத்தைப் போலமைந்த 105 பாடல்களமைந்த “சபாரஞ்ஜன’.
ஒன்றைச் சொல்லி ஆனால் உள்ளே ஆழ்ந்த வேறு பொருள் உள்ள “அன்யபதேச சதகம்’ என்ற 101 பாடல்கள். “ஆனந்த
ஸாகரஸ்தவ’ காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அம்பாளைப் பற்றிப் பாடிய 108 பாடல்கள்.

பர்த்ருஹரியைப் போல 101 பாடல்களில் ஒரு “வைராக்ய சதகம்.’ வாழ்க்கையை அனுபவித்து அதன் இன்ப துன்பங்களைக் கண்டு களைத்து, அமைதியை விரும்பும் ஒரு முதிய உள்ளத்தின் “சாந்தி விலாசம்’ என்ற சிந்தனைகள். “சிவோத் கர்ஷ மஞ்சரி’, “சிவ தத்வ ரஹஸ்ய’, “சண்டி ரஹஸ்ய’, “குரு தத்வ மாலிகா’, “ஸெளபாக்ய சந்த்ராதபா’ என்ற சாக்த மத விளக்கம்…

இப்படி மேலும் பல நூல்கள். சிவனைப் பற்றியே பாடிய அவர், கண்ணனது குழந்தைப் பருவம் பற்றிய “முகுந்த விலாசம்’ என்ற நூலையும், “ரகு வீரஸ்தவ’ அல்லது “ராமாயண ஸாரஸங்க்ரஹ’ என்று ராமன் மேல் 33 பாடல்களையும் பாடியிருக்கிறார்.

அவரது கரைகாணாக் கல்வித் தேர்ச்சியும், கவிதைத் திறனும், அனுபவ அறிவும் ஒருங்கே துலங்கும் அவரது பாடல்கள் சிலவற்றைப் பார்க்கலாம்.

மாறிவரும் பருவங்களைப் பற்றிப் பேசுமிடத்தில் ஒரு பேருண்மையைக் காட்டுகிறார். சில பருவங்களில் சில பூக்கள் கிடைப்பதில்லை. அதனால் என்ன? வேறு பூக்கள் உண்டே.

போதவிழ் தாமரை இல்லையெனில்
புதிய தாழம் பூஇலையோ?
சோதியாம் நிலவு இல்லையெனில்
சுந்தர மன்மதன் இங்கிலையோ?
ஏதும் அன்னங்கள் இல்லையெனில்
எழில்மிகு மயில்கள் இங்கிலையோ
ஏதோ ஒரு பொருள் இல்லையென
ஏங்கித் தவிப்பது எதற்காக?

கவிதைக்கு மக்களிடையே ஆதரவு இல்லையென்பது அவரது மனக்குறை. அவர் சொல்லுகிறார்:

“வீணை இசையை எழுப்புகிறது; அங்ஙனமே தான் குழலும். குழந்தைகளும் ஊமைகளும் கூட அந்த இசையைக் கேட்கிறார்கள். ஆனால் கவிதையைக் கேட்பதற்கோ அதன் இனிமையைச் சுவைப்பதற்கோ ஓரிருவர் இருக்கலாம்; அல்லாது இல்லாமலும் இருக்கலாம்.”

அந்தக் கவிதையும் துஷ்பிரயோகம் ஆகிறது என்று அங்கலாய்க்கிறார். “சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லுவன்’ என்று நம்மாழ்வார் சொன்னபடி மானிடரைப் புகழ்ந்து பாடாதே என்றும், கொடுப்பவனின் குறைகளையும்
கவி காட்டுவதில்லை என்றும் கூறுகிறார்:

கவிதை யென்பது கலைகளின் சிகரம்
கவிதா தேவியின் கருணைப்ரசாதம்
மனிதரைப் புகழ்ந்து பாடுவதாலே
மாண்பு குறைந்து மதிப்பை இழக்கும்.
அனைவர் விருப்பமும் அள்ளியே தந்திடும்
அற்புதக் காமதேவனுவாம் பசுவை
ஏரில் பூட்டி உழுவதை ஒக்கும்.
கொடுப்பவர் குறைகளைக் கவியும் கூறான்.
கார் மேகத்தைக் கருதிப் பார்த்தால்
நீரைப் பொழியும் என்பத னாலதன்
கருமைக் குறையைப் பேசுவார் யாருளர்?
தாம்ரவருணி ஆற்றைப் பற்றி புலமை நிறைந்த ஒரு கற்பனை.

“தாம்ரபர்ணி கடலில் கலக்குமிடத்தில் கடல் அலைகளால் முத்துக்கள் வாரி இறைக்கப்படுகின்றன. அகஸ்திய கோத்திரத்தில் பிறந்தவள் என்ற மரியாதையுடன் கடலரசன் புஷ்பங்களை வாரி இறைத்து தாம்ரபர்ணியை எதிர்கொண்டு அழைத்துச் செல்வது போலிருக்கிறது இது.”

கலி விடம்பன நூலில் கலிகாலத்தில் கூட்டத்தில் வேண்டிய குணங்கள் என்று கிண்டலாக அவர் எழுதுகிறார்:

“கூட்டத்தில் வேண்டிய குணங்கள் குருட்டு தைரியம், வெட்கமின்மை, எதிரியிடம் அலட்சியம், இகழ்ச்சிப் பார்வை, கேலி செய்தல், கூச்சலிடுவது. எதிரி சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பதோ, புரிந்து கொள்வதோ கூடாது. எதிரி சாதுவாக இருந்தால், தன் கட்சி ஜயித்து விட்டதாகக் கத்தவேண்டும். எதிராளி படித்தவனாக இருந்தால், அவன் பாரபட்சமாகப் பேசுவதாகக் குற்றம் சாட்ட வேண்டும்.
மன்னனைப் (பதவியில் இருப்பவரை) புகழவேண்டும்.”

இன்றைய அரசியல்வாதிகளையும் அவர்களை அண்டிப் பிழைக்கும் “ஜால்ரா’க்களையும் பற்றிய உண்மையான கேலிச் சித்திரம், ஆனால் சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது.

ஆனந்த ஸாகரஸ்தவத்தில் பக்திப் பரவசத்தோடு தேவியைப் பாடுகிறார். அர்த்தநாரி வடிவத்தைப் பற்றிப் பேசும் போது சமத்காரமாகக் கேள்வி எழுப்புகிறார்:

“”நெற்றியின் மத்தியில் உள்ள கண்ணால் மன்மதனை எரித்ததில் சிவனுக்குப் பாதிப்பங்கு தான் உண்டு. அக்கீர்த்தியை அவர் முழுதும் எடுத்துக் கொண்டார். போனால் போகட்டும். ஆனால் இடது காலால் உதைத்து யமனை வென்றதில் அவருக்கு என்ன சம்பந்தம்?”

“சாந்தி விலாச’த்திலே நம்மை சிந்திக்க வைக்கிறார் ஒரு பாடலில்:

அகண்ட கடலை அகத்தியர் குடித்தார்
விசுவா மித்ரரோ விச்வமே படைத்தார்
அவரது அஸ்திரம் அனைத்தையும் தனது
பிரும்ம தண்டத்தால் பிளந்தார் வசிஷ்டர்
ஆற்றலில் தவத்தில் அவர்க்கிணை உண்டோ?
ஆயினும் ஒருநாள் அவர்களும் மறைந்தனர்
காலத்தின் பிடியில் கருகி மடிந்தனர்.
சகத்துள நாமோ சாச்வதமென்று
எண்ணி யிருத்தல் எத்தனை மடமை?
புத்தியின் துணையால், புலன் வசப்பட்ட
மனத்தை விட்டு மாட்சிமை பெறுவோம்.

இறுதியில் சரணாகதியே வழியென்று தேர்கிறார். அம்பிகையோடு தொடர்பில்லாத எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்குகிறார்.

ஆனந்த ஸாகரஸ்தவத்தில் அவரது பாடல்களில் இந்த மன நிலையைக் காண்கிறோம்:

உனக்கொரு கோவில் இல்லாத
ஊரில் இருக்க நான்விரும்பேன்:
உன்னைப் பற்றிப் பேசாத
உயர்ந்த வித்தை நான்வேண்டேன்:
உந்தன் பொன்னடி போற்றாத
ஒருவம் சத்தை நான்வேண்டேன்:
உன்னைப் பற்றிய நினைவில்லா
ஒருவாழ்க் கையையும் நான்வேண்டேன்.

பேயாய் உழலும் சிறுமனத்தின்
பிதற்றல் எதையும் கேளாது
தாயாம் சக்தித் தாளினிலே
தள்ளுவாய் வாழ்க்கைச் சுமையெல்லாம்.
சேயாம் உனக்குப் பிறவிக்கடல்
சிறியதோர் குட்டையாய் ஆகிவிடும்.
நீயும் எளிதில் அதைத் தாண்டி
நிர்மல சுகத்தைப் பெற்றிடலாம்.

பாடல்களின் தமிழ்வடிவம்: கட்டுரையாசிரியர்

சிவகாசி, சிவன் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

sivakasi sivan temple kumbabishekam - 2026
#image_title

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பிரசித்தி பெற்ற சிவன் கோவிலின் மகா கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடைபெற்றது.

சிவகாசியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிவன் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததும், புராண சிறப்பு மிக்க இந்த சிவன் கோவிலில், கடந்த ஒரு வருடமாக புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.

கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி, ஸ்ரீவிசாலாட்சி அம்மன், ஸ்ரீநடராஜர், பைரவர் உள்ளிட்ட அனைத்து சுவாமி சந்நதிகளும் முழுமையாக, பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து மகா கும்பாபிஷேக பணிகள் துவங்கியது. கடந்த 5 நாட்களாக மகா யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன.

இன்று அதிகாலை ஆறாம் கால யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு இடங்களிலிருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர், சிவச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி சந்நதி, ஸ்ரீவிசாலாட்சி அம்மன் சந்நதி, பரிவார தெய்வங்களின் சந்நதிகள் மற்றும் கோவில் நுழைவு வாயில் கோபுரங்களில் உள்ள கலசங்களில் சிவச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாாரப் பகுதிகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சிவன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சிவகாசி நகரின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஏப்..26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

petrol diesel price1 - 2026
petrol-crude-oil

சுமார் 22 மாதங்களாக ஏற்ற இறக்கமின்றி, ஒரே விலையில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், மார்ச் 14 அன்று, மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.2 அளவில் குறைப்பதாக அறிவித்தது.

அதன் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி…

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1.88 குறைந்து, ரூ.100.72க்கு விற்பனை செய்யப் படுகிறது.

ஒரு லிட்டர் டீசல் ரூ.1.90 குறைந்து, ரூ.92.34க்கு விற்பனை செய்யப் படுகிறது.

இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. .

சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இந்த விலையில் இருந்து லிட்டருக்கு 50 காசுகள் வரை மாற்றம் இருக்கும் .

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

china construct road in occupied kashmir - 2026
#image_title

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு இந்தியா தன் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.

2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த மோதல் சம்பவத்துக்கு பிறகு சீனா எல்லை பகுதிகளில் புதிய சாலை, பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் படங்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் காஷ்மீரில் சியாச்சின் பனிப்பாறைக்கு அருகே ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா புதிதாக சாலை அமைத்து வருகிறது. இதுதொடர்பாக அந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சாட்டிலைட் படங்கள் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு சியாச்சின் அருகே இதே இடத்தில் சாலை இல்லாத நிலையில் இப்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டிருப்பது படங்களில் காணப்படுகிறது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் இந்த சாலை அமைந்துள்ளது. பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணத்தை சீனாவின் சின்ஜியாங் உடன் இணைக்கவே இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இந்த சாலை இந்திய கட்டுப்பாட்டில் இருந்து 50 கிலோ மீட்டருக்கு வடக்கே சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் அருகே அமைந்திருப்பதால் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் மாதம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 2 முறை இந்த இடத்தை பார்வையிட்டிருந்தார். இந்நிலையில் சீனாவின் புதிய சாலை பணிகள் குறித்த படங்கள் வலைதளங்களில் வெளியாகி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சாலை முற்றிலும் சட்ட விரோதமானது என்றும், இந்தியா இதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பில், தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு அம்சமாக, சியாச்சின் பனிப்பாறைக்கு அருகில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் ஒரு பகுதியில் சீனா ஒரு சாலையை உருவாக்குகிறது – இது உலகின் மிக உயர்ந்த போர்க்களம் என்று செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றன.

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் (PoK) ஒரு பகுதியான ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் உள்ள சாலை 1963 இல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சீனாவின் ஜின்ஜியாங்கில் G219 நெடுஞ்சாலையின் விரிவாக்கத்திலிருந்து தொடங்கி, ஒரு இடத்தில் மலைகளில் மறைகிறது (படம்: 36.114783°, 76.670) இந்தியாவின் வடக்குப் புள்ளியில் இருந்து சுமார் 50 கிமீ வடக்கே, சியாச்சின் பனிப்பாறையில் உள்ள இந்திரா கர்னல் என்ற இந்தப் பகுதியை- மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மார்ச் முதல் இரண்டு முறை பார்வையிட்டார்.

ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியால் கொடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களை மதிப்பாய்வு செய்ததில், சாலையின் அடிப்படை பாதை கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை

சீன சாலை (படம்) அகில் கணவாய் வழியாக செல்கிறது, இது 1947 க்கு முன் திபெத்துடன் இந்தியாவின் எல்லையாக இருந்தது.

இந்த சாலை டிரான்ஸ்-காரகோரம் பாதையில் உள்ளது – வரலாற்று ரீதியாக காஷ்மீரின் ஒரு பகுதி மற்றும் இந்தியாவால் உரிமை கோரப்படுகிறது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு மத்திய அரசால் வெளியிடப்பட்ட சமீபத்திய அதிகாரப்பூர்வ வரைபடத்தில், இந்தப் பகுதி இந்தியப் பகுதி எனத் தொடர்கிறது.

சுமார் 5,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் பகுதி, 1947 போரில் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டு, 1963 இல் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு எல்லை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது – இது இந்தியாவால் அங்கீகரிக்கப்படவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் இந்தப் பகுதியில் இருக்கும் நிலையில் எந்த மாற்றமும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகும் என்று இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் நீண்ட காலமாக வாதிட்டு வருகின்றனர். மேலும் இதுபோன்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள் இந்த மலைப் பகுதியில் இருக்கும் பாதுகாப்புச் சூழலை அச்சுறுத்தும் என்ற கவலையும் உள்ளது.

2021 ஆம் ஆண்டில், பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் மாகாணம் முசாஃபராபாத் மற்றும் முஸ்டாக் பாஸுடன் இணைக்கும் புதிய சாலைக்கான திட்டங்களை அறிவித்தது, இது ஷக்ஸ்காம் பள்ளத்தாக்குடன் பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. செய்தியின்படி, இது சின்ஜியாங்கில் உள்ள யார்கண்டுடன் இணைக்கப்படும் – சீனாவின் தேசிய நெடுஞ்சாலை G219 உடன் இணைக்க ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு வழியாக சாலை செல்லக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புதிய சாலை

ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு சுமார் 4,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. எவ்வாறாயினும், லெப்டினன்ட் ஜெனரல் ஷர்மா போன்ற பலர், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் உள்ள சீன சாலைகள், கில்கிட் பால்டிஸ்தானில் இருந்து சின்ஜியாங்கிற்கு வெட்டப்பட்டதாகக் கூறப்படும் கனிமங்களை, குறிப்பாக யுரேனியத்தை கொண்டு செல்வதற்காக இருக்கலாம் என்று நம்புகின்றனர். ஆயினும்கூட, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் படைகளால் “இராணுவ சூழ்ச்சிகளுக்கு” இந்த சாலைகளை பயன்படுத்துவதற்கு எதிராக தொடர்ந்து விழிப்புடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்துகிறார்.

கடந்த காலத்தில் சீன ஆட்சியாளர்கள் அங்கீகரித்திருந்த திபெத்துடன் காஷ்மீரின் எல்லையாக வரலாற்று ரீதியாக பணியாற்றிய அகில் பாஸில் உள்ள பகுதிக்குள் சாலை நுழைகிறது. 1962 போருக்கு முன்னர் சீனாவுடனான எல்லைப் பேச்சுவார்த்தைகளின் போது அதன் கூற்றை ஆதரித்து இந்தியத் தரப்பு வழங்கிய பேச்சுவார்த்தையில் அகில் கணவாய் மற்றும் ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு இருந்தது.

“இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரைபடங்கள், 1907 ஆம் ஆண்டு இம்பீரியல் கெசட்டியர் ஆஃப் இந்தியா பதிப்பில் இணைக்கப்பட்டவை மற்றும் சர்வே ஆஃப் இந்தியாவால் வெளியிடப்பட்ட அரசியல் வரைபடங்கள் ஆகியவை இந்தியப் பகுதியில் இந்தப் பகுதியைக் காட்டியது” என்று அப்போதைய MEA இயக்குநர் தலைமையிலான இந்தியத் தரப்பு தெரிவித்தது. ஜூன் 1960 இல் பெய்ஜிங்கில் உள்ள சீனாவின் வெளியுறவு அலுவலகத்தில் ஜே.எஸ்.மேத்தா இதனை வலியுறுத்திக் கூறினார்.

“1917, 1919 மற்றும் 1923 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ சீன வரைபடங்கள் இந்த பகுதியை இந்தியாவின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன” என்று பிரபல திபெட்டாலஜிஸ்ட் கிளாட் ஆர்பியின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட வெளியுறவு அமைச்சகத்தின் காப்பகம் கூறுகிறது.

அரசாங்கத்தின் நிலைப்பாடு

நாடாளுமன்றத்தில், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கை ஒரு பகுதியாக இந்தியா கருதும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு-காஷ்மீரின் (PoK) அனைத்து பகுதிகளையும் திரும்பப் பெறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை அரசாங்கம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தைப் பற்றி நான் அவையில் கூறும்போது, PoK மற்றும் அக்சாய் சின் இரண்டும் நாட்டின் ஒரு பகுதியாகும் என்பதை நான் பதிவு செய்ய விரும்புகிறேன். ஜம்மு-காஷ்மீரின் எல்லைகள் நமது அரசியலமைப்பிலும், ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் PoK மற்றும் அக்சாய் சின் ஆகியவை நம் பகுதியில் அடங்கும்” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா 2019ல் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். “இதற்காக என் உயிரைக் கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்,” என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

எல்லைப் பகுதிகளில் இருதரப்பு புரிதல்

பல பத்தாண்டுகளாக நீடித்த கட்டுப்பாடு இருந்தபோதிலும், அப்பகுதியின் சீன ஆக்கிரமிப்பு அரசியல் சட்டபூர்வமான தன்மையைக் கொண்டிருக்கவில்லை. சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 1963 எல்லை ஒப்பந்தத்தின் பிரிவு 6, காஷ்மீர் பிரச்னை தீர்க்கப்படும் வரை – சீனாவுக்கு தற்காலிக கட்டுப்பாட்டை மட்டுமே வழங்குகிறது.

“பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்ட பிறகு, தற்போதைய ஒப்பந்தத்தை மாற்றவும், சம்பந்தப்பட்ட இறையாண்மை அதிகாரம், சீன மக்கள் குடியரசின் அரசாங்கத்துடன், எல்லையில், முறையான எல்லை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன.” என்று அது கூறுகிறது.

1972 சிம்லா ஒப்பந்தத்தின் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்ஓசி) பாகிஸ்தானுடனான இந்தியாவின் பகுதி நிர்வகிக்கப்பட்டாலும், ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கு குறித்து சீன அதிகாரிகளுடன் அத்தகைய ஒப்பந்தம் எதுவும் இல்லை.

இந்திய எதிர்ப்புகள்

சீனா 2017 மற்றும் 2018 க்கு இடையில் காரகோரம் கணவாய்க்கு மேற்கே ஷக்ஸ்காம் பள்ளத்தாக்கில் ஒரு மெட்டல் சாலையை அமைத்தது. பள்ளத்தாக்கில் சீன இராணுவ உள்கட்டமைப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன. இது 2020 இல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல்களைத் தொடர்ந்து 2022 இல் எல்லைப் பேச்சுவார்த்தையின் போது இந்திய இராணுவ அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டு, எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, அக்சாய் சின் பீடபூமியை தனது அதிகாரப்பூர்வ பிரதேசமாகக் காட்டியதற்காக இந்தியாவும் பெய்ஜிங்குடன் கடுமையான இராஜதந்திர எதிர்ப்புகளை தெரிவித்தன. 2015 ஆம் ஆண்டில், வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தில் 46 பில்லியன் டாலர் முதலீடு செய்வதற்கான சீனத் திட்டங்களுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறினார்.

IPL 2024: பெங்களூர் அணியின் குறிப்பிடத்தக்க வெற்றி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

35ம் நாள் : ஐபிஎல் 2024 – 25.04.2024

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

          பெங்களூரு அணி (206/7, விராட் கோலி 51, ரஜத் படிதர் 50, காமரூன் கிரீன் 37*, டியு பிளேசிஸ் 25, ஜெயதேவ் உனக்தத் 3/30, நடராஜன் 2/39) ஹைதராபாத் அணியை (171/8, ஷபாஸ் அகமது 40*, அபிஷேக் ஷர்மா 31, பேட் கம்மின்ஸ் 31, கிரீன் 2/12, கரண் ஷர்மா 2/29, ஸ்வப்னில் சிங் 2/40) 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி  (43 பந்துகளில் 51 ரன், 4 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் டியு பிளேசிஸ் (12 பந்துகளில் 25 ரன்) இருவரும்  சிறப்பான தொடக்கம் தந்தனர்.

டியு பிளேசிஸ் 3.5ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவருக்குப் பின்னர் ஆடவந்த வில் ஜேக்ஸ் (9 பந்துகளில் 6 ரன்) சிறப்பாக ஆடவில்லை. ஆயினும் ரஜத் படிதர் (20 பந்துகளில் 50 ரன், 2 ஃபோர், 5 சிக்சர்) சிறப்பாக ஆடி 12.4ஆவது ஓவரில் அவுட்டானார். அவருடன் காமரூன் கிரீன் (20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 37 ரன், 5 ஃபோர்) இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மஹிபால் லோமர் (4 பந்துகளில் 7 ரன்), தினேஷ் கார்த்திக் (6 பந்துகளில் 11 ரன்), ஸ்வப்னில் சிங் (6 பந்துகளில் 12 ரன்) ஆகியோர் இன்று சிறப்பாக விலையாடவில்லை. இதனால்  20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கட் இழப்பிற்கு 206 ரன் எடுத்திருந்தது.

          207 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ட்ராவிஸ் ஹெட் (1 ரன்) முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா 3.4ஆவது ஓவர் வரை ஆடி 31 ரன் சேர்த்தார். 

ஆனால் அடுத்தடுத்து வந்த பேட்டர்களான ஐடன் மர்க்ரம்  (8 பந்துகளில் 7 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (13 பந்துகளில் 13 ரன்), கிளாசன் (3 பந்துகளில் 7 ரன்) ஆகியோர் இன்று சோபிக்கவில்லை. அதன் பின்னர் ஆடவந்த ஷாபாஸ் அகமது (37 பந்துகளில் 40 ரன்), அப்துல் சமது (6 பந்துகளில் 10 ரன்), பேட் கம்மின்ஸ் (15 பந்துகளில் 31 ரன், 1 ஃபோர், 3 சிக்சர்), புவனேஷ்வர் குமார் (13 பந்துகளில் 13 ரன்) ஜெய்தேவ் உனக்தத் (10 பந்துகளில் 8 ரன்) ஆகியோரால் 20 ஓவர்களில் குறிப்பிட்ட இலக்கை அடையமுடியவில்லை.

இதனால் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 171 ரன் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  

          பெங்களூரு அணியின் ரஜத் படிதர் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை கொல்கொத்தாவில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

25.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்871140.698
கொல்கொத்தா752101.206
ஹைதராபாத்853100.577
லக்னோ853100.148
சென்னை84480.415
டெல்லி9458-0.386
குஜராத்9458-0.974
மும்பை8346-0.227
பஞ்சாப்8264-0.292
பெங்களூரு9274-0.721

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

modyin guarantee - 2026
#image_title

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

இராமர் கோயில், பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அழைப்பை, கொடுக்க வந்தார்கள்.   எதிர்க்கட்சிகள் மறுத்து விட்டார்கள்.   எனக்கு இத்தனை பெரிய பொறுப்பை அளிக்கிறார்களே, என்று நான் யோசிக்கத் தொடங்கினேன்.  என்னை நானே இதற்கு உகந்தவனாக ஆக்க என்ன செய்வது, தகுதியுடையவனாய் ஆவது எப்படி என்று சிந்தித்தேன்.   நான் சிலருடைய ஆலோசனைகளைக் கேட்டேன் சில புனிதர்களின்…… அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டேன்.  என்னுடைய ஆன்மீக வாழ்வோடு தொடர்புடைய சிலரிடமும் நான் வினவினேன்.   நான் இதை எல்லாம், ஒரு பிரதமர் என்ற வகையில எல்லாம், அணுகறதா இல்லை.  ஒரு இராமபக்தன்ங்கற முறையில செய்ய விரும்பறேன்.   நான் என்ன செய்யட்டும்?   அதில எனக்கு ஆலோசனைகள் வந்திச்சு.  நிறையவே வந்திச்சு.  அவற்றை நான் ஆய்வும் செஞ்சு பார்த்தேன். 

நான் பிறகு எனக்குள்ளே 11 நாள் அனுஷ்டானத்தைக் கடைப்பிடிக்கறதுன்னு தீர்மானிச்சேன்.  கட்டாந்தரையில உறங்கினேன்.   இளநீர் மட்டுமே பருகி வந்தேன்.   நான் தீர்மானிச்சேன், பிரபு ஸ்ரீ இராமன் எங்க எல்லாம் போனாரோ, அங்க எல்லாம் போவேன் போக நான் முயற்சி செய்வேன்னு தீர்மானிச்சேன்.    

அந்த வகையில நான், அதாவது, திருவரங்கம் கோயிலுக்கு போனப்ப, தெற்கு பாரதத்தில, அங்க கம்ப ராமாயணம் படிக்க கேட்டேன்.  அப்ப அங்க இருந்தவங்க சொன்னாங்க…… அது 800 ஆண்டுகளுக்கு முன்பாக, கம்ப இராமாயணம் இயற்றப்பட்ட போது இந்த இடத்தில தான் அது முதன்முதலா அரங்கேற்றப்பட்டிச்சாம்.   அங்க எல்லார் கண்கள்லயும் கண்ணீர் இருந்ததை பார்க்க முடிந்தது.   இந்த ஒரு….. அனுபவம் எனக்குக் கிடைத்ததே குறிப்பாக தென்னிந்தியாவில், இங்கே இருப்போருக்கு இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியாது. 

என்ன ஒரு நம்பிக்கை என்ன ஒரு சமயப்பற்று!!!   மேலும் அதில் எத்தனை புனிதத்தன்மை இருக்கிறது!!   என்னுடைய நிகழ்ச்சியில் பெரிய திட்டமிடல் இல்லை அது தனிப்பட்டதாக இருந்தது.  ஆனால், சாமான்ய மக்களினுடைய, ஒருவகையில் பார்த்தால், அவர்களுடைய உணர்வை என்னால் அனுபவிக்க முடிந்தது.   என்னைப் பொறுத்த மட்டிலே, என்னுடைய ஆன்மீகப் பயணத்தின் ஒரு மிக மகத்துவமான காலகட்டமாக இந்த 11 நாட்களை நான் பார்க்கிறேன்.  நான் இராமர் கோயிலின் பிராண பிரதிஷ்டையை மிகத் தீவிரமாகக் கருதினேன்.   அதை ஒரு நிகழ்வாகவே நான் பார்க்கவில்லை.  சாதாரண விஷயமல்ல அது. 

கேள்வி: – அது உங்களைப் பொறுத்த மட்டிலே ஒரு ஆன்மீகக் கணம், இல்லையா? 

பதில்: – 500 ஆண்டுக்காலப் போராட்டம் 140 கோடி நாட்டுமக்களின் சிரத்தை என் கண்களின் முன்பாக விரிந்தது.  அவர்களின் கனவுகள், மேலும் தேசத்தின் பரம ஏழைகளும் கூட, கைக்காசு கொடுத்து ஆலயம் அமைந்திருக்கிறது அம்மா.  இந்த ஆலயத்தில், 3 விஷயங்களை நான் காண்கிறேன்.   ஒன்று, 500 ஆண்டுக்கால, இடைவிடாத, தொடர்ந்த, ஒரே முனைப்பான போராட்டம்.   இலட்சக்கணக்கானோர் இதற்காகவே உயிர் இழந்திருக்கிறார்கள்.  

இரண்டாவதாக, மிகநீண்ட நீதிமன்ற நடவடிக்கைகள்.   ஏகப்பட்ட ஆண்டுகள் நீதிமன்றச் செயல்பாடுகள்.  இப்படிப்பட்ட நீதிமன்றச் செயல்பாடுகளின் அனைத்துச் சோதனைகளிலும் சரிபார்க்கப்பட்டு வெளிவந்த தீர்ப்பு இது.  அடுத்ததாக தொழில்நுட்பப் பயன்பாடு.   ஏ எஸ் ஐ வாயிலாக….. புரியப்பட்ட அகழ்வாய்வு, ஆதாரங்கள், இது பெரிய விஷயம். 

மேலும் நான்காவதாக, இந்தியாவின் கோடானுகோடி குடிமக்களும் தங்களாலான பணத்தை அளித்து அனைவரின் பங்களிப்போடும், இந்த ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது.   இந்த ஆலயம் அரசுக் கருவூலத்திலிருந்து உருவாக்கப்பட்டது அல்ல.   இது… இது எப்படிப்பட்ட முன்னெடுப்பு என்றால், இது நம் பாரதத்தினுடைய சுயமரியாதைக்கு பாரதத்தின் திறமைக்கு பாரதத்தின் கனவுகளுக்கு பாரதத்தின் சங்கல்பங்களுக்கு, மேலும் பாரதத்தின் வருங்காலத் தலைமுறைகளுக்கு, மிகப்பெரிய உத்வேகம் அளிக்கவல்லதாக இருக்கும். 

ஒரு தேசம் ஒரே தேர்தல் எங்களுடைய இலக்கு

நாட்டுமக்களிடமும் முதன்முறை வாக்காளர்களிடமும் என் வேண்டுகோள்.   நீங்கள் தேசத்திற்காக வாக்களியுங்கள்.   அரசியல் காரணங்களுக்காக அல்ல, தேசத்தின் பெயரால் வாக்களியுங்கள்.   உங்களுடைய அடுத்த 25 ஆண்டுக்கால எதிர்காலத்தின் பெயரால் வாக்களியுங்கள்.   இதுவே உங்களிடம் என் வேண்டுகோள்.   அடுத்து நான் நாட்டுமக்களிடம் கூற விரும்புவது மேலும், அனைத்து அரசியல்கட்சித் தொண்டர்களிடமும் கூற விரும்புவது, வெப்பம் மிகவும் தகிக்கிறது, இந்த வெப்பத்தில் அனைத்துக் கட்சித் தொண்டர்களும் பணியாற்றுகிறார்கள்.   அவர்களிடமெல்லாம் நிறைய தண்ணீர் குடியுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன் நிறைய தண்ணீர் குடியுங்கள்.   நிறைய அலைந்தாலும் கூட நிறைய தண்ணீர் பருகுங்கள்.   இந்தக் கோடையில் இந்த வெப்பத்தில்,  வாக்காளர்களிடமும் விண்ணப்பிக்கிறேன்.   எத்தனை தான் வெப்பம் இருந்தாலும், நீங்கள், கண்டிப்பாக வாக்களியுங்கள்.   முடிந்தால்….. காலையில் சீக்கிரமாகவே சென்று வாக்களியுங்கள்.   மேலும் ஜனநாயகத்தின் உற்சவத்தைப் போலவே தேர்தல்களைக் கொண்டாடுங்கள்.   இதுவே நாட்டுமக்களிடம் என்னுடைய வேண்டுதல்கள்.  

வினா – அடுத்த தேர்தல்களை நீங்கள் வசந்த காலத்தில் ஒரு தேசம் ஒரே தேர்தல்களின் போது செயல்படுத்துங்களேன்!! 

விடை – நீங்கள் சரியான விஷயத்தை முன்வைத்திருக்கிறீர்கள்.   ஒரு தேசம் ஒரே தேர்தல், எங்களுடைய செயல்திட்டமாகும்.  நாங்கள் நாடாளுமன்றத்திலும் பேசியிருக்கிறோம்.   நாங்கள் குழுவையும் அமைத்திருக்கிறோம் அதன் அறிக்கையும் வந்து விட்டது.  ஒரு தேசம் ஒரே தேர்தல் விஷயத்திலே, தேசத்திலே, பலர் உடன்பட்டிருக்கின்றார்கள்.   அனைத்துக் கட்சிகளும், பல பேர் இதிலே, குழுவுக்கு… அவர்கள், ஆலோசனைகள் அளித்திருக்கிறார்கள்.   மிகவும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள்.  மிக நூதனமான ஆலோசனைகள்.  நம்மால் இந்தக் குழுவின் பரிந்துரையை அமல் செய்ய முடிந்தால் தேசத்திற்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும்.

மே.1ல் குருவித்துறை கோவிலில் குரு பெயர்ச்சி விழா!

kuruvithurai guru bhagvan - 2026
#image_title

குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி விழா மே 1ஆம் தேதி மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார்

குருவித்துறை குருபகவான்கோவில் குருபெயர்ச்சி விழா மே 1ம் தேதி குரு பகவான் மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு 29ஆம் தேதி திங்கள்கிழமை முதல் 1ஆம் தேதி புதன்கிழமை முடிய நடைபெற உள்ளது.

மதுரைமாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவில் மிகவும்சிறப்பு பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு சித்திரரதவல்லப பெருமாளை நோக்கி குருபகவான் தவக்கோலத்தில் சுயம்புவாக இருக்கிறார்.அருகில் சக்கரத்தாழ்வார் உள்ளார்.

குரு பெயர்ச்சி விழா

ஒவ்வொரு குருபெயர்ச்சி அன்று ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆவது முன்னிட்டு குரு பெயர்ச்சி விழா சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெறும்.

இவ்விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகைபுரிந்து குரு பகவானைத் தரிசித்து செல்வார்கள். இந்த ஆண்டு வருகிற 29ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9.30அளவில் லட்சார்ச்சனை தொடங்குகிறது 1 ஆம் தேதி புதன்கிழமை பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறும்.அன்று மதியம் 3மணி அளவில் யாகசாலை தொடங்கி.5.21மணிக்குள் பரிகார மகாயாகம், மஹாபூர்ணாஹுதி, திருமஞ்சனம், சிறப்புபூஜைகள் நடைபெறுகிறது.

பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்:

குருபெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ரிஷபம், மிதுனம்,சிம்மம், துலாம்,தனுசு,கும்பம் மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகாரம் செய்யவேண்டும்.

குரு பெயர்ச்சி முன்னிட்டு லட்சார்ச்சனைமற்றும் பரிகார செய்ய விரும்பும் ராசிக்காரர்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ரூபாய் 200 மட்டும் செலுத்தும் பக்தர்களுக்கு மே 1ஆம் தேதி யாக சாலையில் முன் மதியம் 2 மணிக்கு மேல் 3 மணிக்குள் பெயர் ராசிக்கு சங்கல்பம் செய்யப்படும்.

இவர்களுக்கு மஞ்சள், குங்குமம், லட்டு, அதிரசம், முறுக்கு,சிறிய படம் பிரசாதமாக வழங்கப்படும். ரூபாய் 500 செலுத்தும் பக்தர்களுக்கு மே 2ம் தேதி முதல் மே 16ஆம் தேதி முடிய காலை 6 மணி முதல் 7:00 மணிக்குள் சிறந்த முறையில் குரு பகவான் சன்னதி முன்னிலையில் குரு பகவானுக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி செய்து பரிகார ராசிகளுக்கு தனித்தனியாக அர்ச்சனை செய்யப்படும்.

முன் பதிவு செய்யும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த தேதியில் நேரடியாக குருபகவான் சன்னதியில் பிரசாதம் வழங்கப்படும். குரு பகவான் சக்கரத்தாழ்வார் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி டாலர்1, மஞ்சள், குங்குமம்,பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விழா ஏற்பாடுகள்

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வாடிப்பட்டி தாசில்தார் மூர்த்தி,சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ்,மற்றும் சுகாதாரத்துறை ஆகியோர் குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்துஆய்வு செய்து வருகின்றனர். குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பஸ் வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் கார்த்திகை செல்வி கோவில் பணியாளர்கள் நாகராஜன் மணி நித்தியா,ஜனார்த்தனன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கூடுதலாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது கூடுதலாக குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. குரு பெயர்ச்சி விழாவை பக்தர்கள் காணும் வண்ணம் எல்இடிதிரை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

        தரிசனத்திற்கு கூடுதல் நேரம்

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அன்று இரவு 10 மணி வரை தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினசரி காலை 8 மணி முதல் பகல் 12:30 மணி வரையும், பகல் 3.30மணி முதல் மாலை 6 மணி வரையும், வியாழக்கிழமை அன்று காலை 7.30மணி முதல் பகல் 2 மணி வரையும், பகல் 3:30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்களுடைய வசதிக்காக தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொம்மராஜு குகேஷ் பெற்ற மாபெரும் வெற்றி

d gukesh - 2026
#image_title
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

டி. குகேஷ் அல்லது தொம்மராஜு குகேஷ் (Dommaraju Gukesh, பிறந்த நாள் 29 மே 2006) இந்திய சதுரங்கப் பேராதன் ஆவார். சதுரங்க மேதையான இவர், வரலாற்றில் பேராதன் (கிராண்ட்மாஸ்டர்) பட்டத்திற்குத் தகுதி பெற்ற மூன்றாவது-இளையவர் ஆவார். அதுமட்டுமல்ல, 2700 என்ற சதுரங்க மதிப்பீட்டை எட்டிய மூன்றாவது-இளையவர்; 2750 மதிப்பீட்டை எட்டிய முதலாவது இளையவர் ஆவார். குகேஷ் 2024ஆம் ஆண்டின் வேட்பாளர் போட்டியில் (candidates Championship) வென்று, உலக சதுரங்க வாகையாளர் (World Chenns Championship) பட்டத்திற்காகப் போட்டியிடும் இளைய போட்டியாளர் ஆனார்.

          குகேஷ் சென்னையில் 2006 மே 29 அன்று பிறந்தார். இவரது குடும்பத்தினர் ஆந்திரப் பிரதேசம், கோதாவரி வடிநிலப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். தந்தை ரஜனிகாந்த் ஒரு காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்; தாயார் பத்மா ஒரு நுண்ணுயிரியலாளர் ஆவார். குகேஷ் தனது ஏழு வயதில் சதுரங்கம் விளையாடக் கற்றுக்கொண்டார். சென்னை மேல் அயனம்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்தியாலயத்தில் படிக்கிறார்.

          குகேசு 2015ஆம் ஆண்டு 9 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசியப் பள்ளிகளின் சதுரங்க வாகைப் போட்டியில் வென்றார், 2018இல் 12 அகவைக்குட்பட்டோருக்கான உலக இளையோர் சதுரங்க வாகையை வென்றார். அத்துடன் 2018 ஆசிய இளையோர் வாகைப் போட்டிகளில், 12 வயதிற்குட்பட்டோருக்கான தனிநபர் மின்வல்லு, விரைவுவல்லு, தனிநபர் மரபு வல்லு வடிவங்களில் (U-12 team rapid and blitz, and the U-12 individual classical formats) ஐந்து தங்கப் பதக்கங்களையும் வென்றார். மார்ச் 2018 இல் 34-ஆவது கேப்பல்-லா-கிராண்டே திறந்த சுற்று பன்னாட்டுப் பேராதன் பட்டத்திற்கான தேவைகளை நிறைவு செய்தார்.

          குகேஷ் 2019 சனவரி 15 அன்று 12 ஆண்டுகள், 7 மாதங்கள், 17 நாட்களில் வரலாற்றில் இரண்டாவது இளைய சதுரங்கப் பேராதன் ஆனார். 2021 சூனில், யூலியசு பேயர் சேலஞ்சர்சு (Julius Baer Challengers Chess Tour, Gelfand Challenge)  சுற்றில், 19 இல் 14 புள்ளிகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில், குகேஷ் 44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு போட்டியை 8/8 என்ற நேர்த்தியான மதிப்பெண்களுடன் தொடங்கினார், 8-ஆவது போட்டியில் இந்தியா-2 அணியை தரவரிசையில் முதலிடத்தில் இருந்த அமெரிக்காவைத் தோற்கடிக்க உதவினார். குகேசு 11 க்கு 9 மதிப்பெண்களுடன் முடித்து, முதலாவது பலகையில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

          செப்டெம்பர் 2022 இல், குகேசு முதற்தடவையாக 2700 என்ற தரவுப்புள்ளியைத் (2726) தாண்டி, வெய் யி, அலிரெசா பிரூஜா ஆகியோருக்குப் பிறகு 2700 தரவுப்புள்ளியைக் கடந்த மூன்றாவது இளைய வீரராக ஆனார். அக்டோபர் 2022 இல், ஏம்செஸ் விரைவு வல்லுப் போட்டியில் உலக வாகையாளரான மாக்னசு மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய இளைய வீரர் ஆனார்.

          பெப்ரவரி 2023இல், குகேஷ் தியூசல்டார்ஃபில் நடந்த WR மாசுட்டர்சு போட்டியின் முதல் பதிப்பில் பங்கேற்று, 5½/9 புள்ளிகளுடன், லெவன் அரோனியன், இயன் நெப்போம்னியாச்சியுடன் முதல் இடத்தைப் பிடித்தார். சமன்முறியில் அரோனியனுக்கு அடுத்தபடியாக குகேசு வந்தார். ஆகத்து 2023 தரவரிசைப் பட்டியலில், குகேஷ் 2750 மதிப்பீட்டை எட்டிய இளம் வீரர் ஆனார்.

          குகேசு சதுரங்க உலகக் கோப்பை 2023 சுற்றில் பங்கேற்று, மாக்னசு கார்ல்சனிடம் தோல்வியடைவதற்கு முன்னர் காலிறுதிக்கு வந்தார். செப்டம்பர் 2023 தரவரிசைப் பட்டியலில், குகேசு அதிகாரப்பூர்வமாக விசுவநாதன் ஆனந்தை முந்தி முதலிடத்தில் உள்ள இந்திய வீரராக இருந்தார்.

          திசம்பர் 2023இல், 2023 பிடே சர்க்கியூட் சுற்றின் முடிவில் குகேஷ் 2024 உலக வாகையாளருக்கான வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெற்றார். குகேஷ் சர்க்யூட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், ஆனால் வெற்றியாளரான பாபியானோ கருவானா ஏற்கனவே 2023 உலகக் கோப்பையின் மூலம் வேட்பாளர் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தார். குகேஷ், பாபி ஃபிஷர், மாக்னசு கார்ல்சன் ஆகியோருக்குப் பிறகு, வேட்பாளர் போட்டியில் விளையாடிய மூன்றாவது இளைய வீரர் ஆனார்.

2024 வேட்பாளர் சுற்றில் “குகேசு எதிர் பிரூசா”

          சனவரி 2024இல், குகேஷ் 2024 டாட்டா ஸ்டீல் சதுரங்கப் போட்டியில் பங்கேற்று, 13 ஆட்டங்களில் (6 வெற்றி, 5 டிரா, 2 தோல்வி) 8.5 புள்ளிகளைப் பெற்று 4-வது இடத்தைப் பிடித்தார். 12-ஆவது சுற்றில், ர. பிரக்ஞானந்தாவுக்கு எதிராக வெற்றிபெறும் நிலையைப் பெற்றார், ஆனால் மூன்று முறை மீண்டும் மீண்டும் தவறு செய்தார். சமன்முறிகளில் (tie-breakers) குகேசு அரையிறுதியில் அனிஷ் கிரியைத் தோற்கடித்தார், ஆனால் இறுதிப் போட்டியில் வெய் யியிடம் (Wei Yi ) தோற்றார்.

2024 வேட்பாளர் சுற்று

          இந்த வருடம் இந்த ஏப்ரலில், குகேஷ் கனடா, தொராண்டோவில் நடைபெற்ற 2024 உலக வாகையாளருக்கான வேட்பாளர் சுற்றில் பங்கேற்றார். குகேஷ், சக நாட்டு வீரர்களான ரமேஷ்பாபு, பிரக்ஞானந்தா, விதித் குசராத்தி ஆகியோருக்கு எதிராகக் கறுப்புக் காய்களுடனும், அலிரேசா பிரூச்சாவுடன் (Alireza Firouzja) வெள்ளைக் காய்களுடனும், நிசாத் அபாசோவுடன் (Nijat Abasov) வெள்ளைக் காய்களுடனும் விளையாடி வெற்றி பெற்றார். பிரூச்சாவுடன் கறுப்புக் காய்களுடன் விளையாடியதே அவரது ஒரே இழப்பு. இது அவருக்கு 5 வெற்றிகள், 1 தோல்வி, 8 சமன்களைக் கொடுத்து, 9/14 என்ற மதிப்பெண்ணுடன், சுற்றை வென்றார். இதன் மூலம், 2024 நவம்பரில் நடக்கும் உலக வாகையாளர் போட்டியில் நடப்பு வாகையாளர் திங் லிரேனுடன் மோதுவதற்குத் தகுதி பெற்றுள்ளார். உலக சதுரங்க வாகையாளர் போட்டியில் விளையாடும் இளைய வீரர் இவர் ஆவார்.

கேண்டிடேட் செஸ் தொடரின் போக்கு

          உலக சாம்பியனுடன் விளையாட உள்ள வீரரை தேர்வு செய்யும் கேண்டிடேட் செஸ் தொடர் கனடாவின் டொராண்டா நகரில் நடைபெற்றது. 14 சுற்றுகளை கொண்ட இந்த தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ் தனது கடைசி சுற்றில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் 71ஆவது காய் நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார்.

          இதன் மூலம் 9 புள்ளிகளுடன் குகேஷ்முதலிடத்தில் இருந்தார். எனினும் அவர்,பட்டம் வெல்வது என்பது ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் மோதிய ஆட்டத்தின் முடிவை பொறுத்தே இருக்கும் என்ற சூழ்நிலை இருந்தது.

          ஏனெனில் இவர்களில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றாலும் அவர், 9 புள்ளிகளுடன் முதலிடத்தை குகேஷுடன் பகிர்ந்து கொள்ளக்கூடும். இந்த நிலை உருவானால் வெற்றியாளர் யார்? என்பதை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டம் நடத்தப்படும்.

          இதனால் நெபோம்னியாச்சி, ஃபேபியானோ கருனா ஆட்டம் மிகுந்தபரபரப்பை உருவாக்கியது. குகேஷ் ஆட்டம் முடிவடைந்த பின்னர் மேற்கொண்டு 15 நிமிடங்கள் வரை நெபோம்னியாச்சி, ஃபேபியானோ கருனா மோதிய ஆட்டம் தொடர்ந்தது. பலமுறை ஃபேபியானோ கருனா வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்தார்.

          ஆனால், 39-வது காய் நகர்த்தலின் போது அவர், செய்த தவறால் நெபோம்னியாச்சி தனது நிலையை தக்கவைத்தார். இதன் பின்னர் மீண்டும் தனது ஆட்டத்தை கட்டியெழுப்பிய ஃபேபியானோ கருனா வெற்றிக்கு அருகே நெருங்கினார். ஆனால் அதற்குள் நேரம் கடந்துவிட்டது. முடிவில் ஆட்டம் டிரா ஆனது.

          இதனால், 17 வயதான டி.குகேஷ் 9 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சுமார் ரூ.78.50 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் குகேஷ் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் கடந்த 2014ஆம் ஆண்டு இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.

          40 ஆண்டுகளுக்குப் பிறகு உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதற்கான ஆட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ள இளம் வீரர் என்ற சாதனையையும் குகேஷ் படைத்துள்ளார். இந்த வகையில் 1984ஆம் ஆண்டு ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் தனது 22 வயதில் உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடி இருந்தார். தற்போது குகேஷ் தனது 17ஆவது வயதில் உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடுவார்.

          கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றுள்ளதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான ஆட்டத்தில் குகேஷ், சீனாவின் டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் மோத உள்ளார். இந்த போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

சாதிக்க வித்திட்ட 7ஆவது சுற்று தோல்வி

          கேண்டிடேட்ஸ் தொடரில் பட்டம் வென்ற பின்னர் டி.குகேஷ் கூறியதாவது: ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியதாக நான் உணர்ந்தேன், ஆனால் அலிரேசாவுக்கு எதிரான 7ஆவது சுற்றில் தோல்விடைந்த பிறகு, மிகவும் வருத்தப்பட்டேன். அந்த தோல்வி வேதனையாக இருந்து.

          ஆனால் அடுத்த நாள் ஓய்வு இருந்தது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு உதவியாக இருந்தது. மேலும் அந்த தோல்வி எனக்கு ஆற்றலையும் உந்துதலையும் கொடுத்தது. தோல்விக்குப் பிறகு சரியானதைச் செய்தால், சரியான மனநிலையில் இருந்தால் வெற்றி பெற முடியும் என்று உணர்ந்தேன்.

          ரஷ்யாவின் இயன் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்றிருந்தாலும் முதலிடத்தை என்னுடன் பகிர்ந்திருப்பார்கள். இதன் பின்னர் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க டைபிரேக்கர் ஆட்டத்தில் விளையாட வேண்டிய நிலை உருவாகி இருக்கும்.

          இதனால் டைபிரேக்கர் ஆட்டத்துக்கு தயாராக இருந்தேன். இதுதொடர்பாக எனது பயிற்றுனருடன் ஆலோசித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் நாங்கள் விவாதிக்கத் தொடங்கிய உடனேயே அது தேவையில்லை என்பதை நாங்கள் அறிந்தோம்.

          உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியைப் பற்றி சிந்திக்க எனக்கு அதிக நேரம் இல்லை. எனினும் அந்த போட்டிக்கு நாங்கள் மேற்கொள்ள உழைப்புகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். விஸ்வநாதன் ஆனந்த், என்னை வாழ்த்தினார். அவருடன் பேச எனக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனால் விரைவில் அவரை தொடர்பு கொள்வேன்.

          என் பெற்றோரிடம் பேசினேன், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனது பயிற்சியாளர், ஸ்பான்சர் மற்றும் சில நண்பர்களுடன் சிறந்த முறையில் நேரத்தை செலவிட்டேன். நிறைய பாராட்டுகள் குறுந்தகவல்களாக வந்துள்ளன. அவற்றுக்கு பதிலளிக்கவும், எனது நண்பர்களுடன் பேசவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். தற்போது சில நாட்கள் ஓய்வெடுக்கப் போகிறேன், கடந்த மூன்று வாரங்களாக போட்டி மிகவும் மன அழுத்தத்தை தந்தது.

ஓய்வுக்கு பின்னர் உலக சாம்பியன்ஷிப் போட்டியைப் பற்றி சிந்திப்பேன், விஷயங்களை எப்படி முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்துத் திட்டமிடுவேன். பொதுவான திட்டம் என்பது சிறந்த ஆட்டத்தை விளையாடுவதில் கவனம் செலுத்துவதுதான். மேலும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு குகேஷ் கூறினார்.

தியாகம் செய்த பெற்றோர்

          செஸ் உலகில் குகேஷ் சிகரங்களை அடைவதற்கு அவரது பெற்றோர் செய்த தியாகங்களும் நினைகூரப்பட வேண்டியது அவசியம். குகேஷின் தந்தை ரஜினிகாந்த் காது, மூக்கு, தொண்டை நிபுணர், தாய் பத்மா நுண்ணுயிரியலாளர் ஆவார்கள். 2017-18ம் ஆண்டு குகேஷ், கிராண்ட் மாஸ்டர் நார்ம் இறுதிக்கட்டத்தை எட்டும் நிலையில் இருந்ததால் உலகின் பல்வேறு பகுதியில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் பங்கேற்க வேண்டி இருந்தது.

          இதனால் ரஜினிகாந்த் தனது பணியை நிறுத்திவிட்டு மகனுடன் பயணிக்கத் தொடங்கினார். இதனால் வீட்டு செலவுகளை அவரது தாய் பத்மா கவனிக்க வேண்டிய நிலை உருவானது. பல நாட்கள் இவர்கள் நேரில் சந்தித்துக் கொள்ள முடியாத நிலை கூட இருந்துள்ளது. இவர்களது தியாகங்களின் பலனாக குகேஷ் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். அப்போது அவருக்கு 12 வயது 17 நாட்கள்.

          இதன் மூலம் அவர், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார். மேலும் குகேஷின் பயணத்துக்காக சேமித்து வைத்திருந்த மொத்த தொகையையும் அவரது பெற்றோர் செலவழிக்க நேர்ந்தது.

மேற்கொண்டு நிதி தேவைப்பட்ட நிலையில் விஸ்வநாதன் ஆனந்த் அகாடமி வழியாக அதற்கான உதவியும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து குகேஷின் பயணம் ஏறுமுகமானது. தற்போது உலக சாம்பியன்ஷிப்பில் விளையாடும் இளம் சாலஞ்சராக உருவெடுத்துள்ளார்.

பிரதமர் பாராட்டு

          பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை படைத்த டி.குகேஷ் பற்றி இந்தியா பெருமிதம் கொள்கிறது. குகேஷின் சாதனை அவரின் அசாதாரண திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. அவரது சிறந்த செயல்திறன், வெற்றியை நோக்கிய பயணம் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

வைஷாலிக்கு 2-வது இடம்

          மகளிருக்கான கேண்டிடேட்ஸ் தொடரில் சீனாவின் ஸோங்ஸி டான் 9 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்திய கிராண்ட் மாஸ்டர்களான கொனேரு ஹம்பி, ஆர். வைஷாலி, சீனாவின் டிங்ஜேய் லெய் ஆகியோர் தலா 7.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பகிர்ந்து கொண்டனர். கொனேரு ஹம்பி கடைசி சுற்றில் சீனாவின் டிங்ஜேய் லெயையும் ஆர். வைஷாலி, ரஷ்யாவின் கேத்ரினா லக்னோவையும் தோற்கடித்தனர்.

          கேண்டிடேட்ஸ் தொடரில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, ரஷ்யாவின் நெபோம்னியாச்சி, அமெரிக்காவின் ஃபேபியானோ கருனா ஆகியோர் தலா 8.5 புள்ளிகளுடன் 2 முதல் 4-வது இடங்களை பிடித்தனர். இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 7 புள்ளிகளுடன் 5-வது இடம் பிடித்தார். அவர், தனது கடைசி சுற்றில் அஜர்பைஜானின் நிஜாத் அபசோவை தோற்கடித்தார்.

          மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான விதித் குஜராத்தி 6 புள்ளிகள் பெற்று 6-வது இடத்துடன் தொடரை நிறைவு செய்தார். விதித் குஜராத்தி தனது கடைசி சுற்றில் பிரான்ஸின் ஃபிரோஸ்ஜா அலிரேசாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா செய்திருந்தார். ஃபிரோஸ்ஜா அலிரேசா 5 புள்ளிகளுடன் 7-வது இடத்தையும், நிஜாத் அபசோவ் 3.5 புள்ளிகளுடன் கடைசி இடத்தையும் பிடித்தனர்.

IPL 2024: தில்லி அணி நூலிழையில் பெற்ற வெற்றி!

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

34ம் நாள்ஐபிஎல் 2024 – 24.04.2024

டெல்லி கேபிடல்ஸ் vs குஜராத டைடன்ஸ்

          டெல்லி அணி (224/4, ரிஷப் பந்த் 88*, அக்சர் படேல் 66, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 26*, ஜேக் ஃப்ரேசர் மகுர்க் 23, பிருத்வி ஷா 11, சந்தீப் வாரியர் 3/15) குஜராத் அணியை (220/8, சாய் சுதர்ஷன் 65, டேவிட் மில்லர் 55, விருத்திமான் சாஹா 39, ரஷீத்கான் 21*, சாய் கிஷோர் 13 ரசிக் கான் 3/44, குல்தீப் யாதவ் 2/29) 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் குஜராத் டைடன்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெற்றது. பூவாதலையா வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. டெல்லிய அணியின் தொடக்க வீரர்களாக ப்ருத்வி ஷா (11 ரன்) மற்றும் ஜேக் ஃப்ரேசர் மகுர்க் (14 பந்துகளில் 23 ரன்) இருவரும் களமிறங்கினர். ஷா 3.5ஆவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பின்னர் ஆடவந்த அக்சர் படேல் (43 பந்துகளில் 66 ரன், 5 ஃபோர், 4 சிக்சர்) சிறப்பாக ஆடினார். ஆயினும் ஷாய் ஹோப் (5 ரன்) 5.4ஆவது ஓவரில் அவுட்டானார். அதன் பின்னர் ரிஷப் பந்த் (43 பந்துகளில் 88 ரன், 5 ஃபோர், 8 சிக்சர்) மற்றும் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (7 பந்துகளில் 26 ரன், 3 ஃபோர், 2 சிக்சர்) இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

கடைசி ஓவரில் ரிஷப் பந்த் 4 சிக்சரும் ஒரு ஃபோரும் அடித்தார். அந்த ஓவரில் மொத்தம் 31 ரன் அடிக்கப்பட்டது. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கட் இழப்பிற்கு 224 ரன் எடுத்திருந்தது.

          2225 ரன் என்ற அடையக்கூடிய இலக்கை எட்ட இரண்டாவதாக ஆட வந்த குஜராத் அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷுப்மன் கில் (6 ரன்) இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான விருத்திமான் சாஹா 9.4ஆவது ஓவர் வரை ஆடி 39 ரன் சேர்த்தார். அவருடன் சாய்சுதர்ஷன் (39 பந்துகளில் 65 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) இணைந்து விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று டேவிட் மில்லர் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவர் 23 பந்துகளில் 55 ரன் எடுத்தார்; அதில் 6 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள் அடக்கம். அசமத்துல்லா ஒமர்சாய் (1 ரன்), ஷாருக் கான் (8 ரன்), ராகுல் திவாத்தியா (4 ரன்) ஆகியோர் இன்று சரியாக விளையாடவில்லை. 17ஆவது ஓவர் தொடக்கத்தில் விளையாட வந்த ரஷீத் கான் இறுதி வரை வெற்றிக்கு முயற்சி செய்தார்.

20ஆவது ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரஷீத்கான் இரண்டு ஃபோர்கள் ஒரு சிக்சர் அடித்தார். அதனால் கடைசிப் பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்தப் பந்தில் ரன் எதுவும் எடுக்க முடியவில்லை. இதனால் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கட் இழப்பிற்கு 220 ரன் மட்டுமே எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.  

          டெல்லி அணியின் அனித்தலைவர் ரிஷப் பந்த் தனதுசிறப்பான பேட்டிங்கிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நாளை ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

24.04.2024 அன்று நிலவரப்படி புள்ளிப்பட்டியல்

அணிவெதோபுள்ளிநெட் ரன் ரேட்
ராஜஸ்தான்871140.698
கொல்கொத்தா752101.206
ஹைதராபாத்752100.914
லக்னோ853100.148
சென்னை84480.415
டெல்லி9458-0.386
குஜராத்9458-0.974
மும்பை8346-0.227
பஞ்சாப்8264-0.292
பெங்களூரு8172-1.046