2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் மார்ச் 11 இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. 2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.
இந்தச் சட்டத்தில், குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நாடு முழுவதும் முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தூண்டிவிடப்பட்டன. இந்தப் போராட்டங்களின் பின்னணியில் பிரிவினைவாதிகள், எதிர்க்கட்சிகளின் கைகள் இருந்தன. குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள், எம்.பி., ஆகியோர் தில்லியில் இதன் பின்னணியில் இருந்து பெரும் கலவரங்களை கட்டவிழ்த்து விட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர்.
இதை அடுத்து அந்நேரத்தில் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. கடும் எதிர்ப்பு கிளம்பியதாலும், புதிய விதிகள் வெளியிடப்படாததாலும் குடியுரிமை திருத்த சட்ட (சி.ஏ.ஏ.) மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் இந்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வரவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு இப்போது அமல்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் இன்று (மார்ச் 11) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் முஸ்லிம்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ.,வில் வழிவகை இல்லை. அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை ஹிந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர், புத்த மதத்தினருக்கு மட்டுமே இந்தியக் குடியுரிமை அளிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
ஓட்டு வங்கி அரசியல் லாபத்திற்காக திமுக தமிழர்கள் உரிமையை நசுக்குகிறது. இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
நேற்று முஸ்லிம்களுக்கான சாதி சான்றிதழ் பற்றிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது அப்பட்டமான சந்தர்ப்பவாதம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து எடுக்கப்பட்ட முடிவு.
அதேசமயம் இந்துக்கள் ஏமாளிகள் தான் அவர்களுக்கு தங்கள் உரிமை பறிபோவதை பற்றிய உணர்வு இல்லாமல் சாதிவாரியாக பிரித்தும், காசுகொடுத்தும் அவர்களின் வாக்குகளை பெற்று விடலாம் என்ற தைரியத்தில் திமுக இந்துக்களுக்கு இந்த துரோகத்தை செய்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு சலுகையில் உள் ஒதுக்கீடாக 3.5 சதவீதம் ஏற்படுத்தி, அந்த இடங்களை நிரப்ப மாநில அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பை திமுக திட்டமிட்டு நடைமுறைப் படுத்துகிறது என்பதை இந்து சமுதாயம் உணர வேண்டும். இந்த உள் ஒதுக்கீட்டைத்தாண்டி பிற பி.சி. இடங்களிலும் மற்றவர்களுக்கான இடங்களிலும்கூட முஸ்லிம்கள் அரசு வேலைவாய்ப்பை பெறலாம்.
மேலும் லப்பை, ராவுத்தர் என்ற முஸ்லிம்களில் உள்ள சாதிபிரிவு குறிப்பிடாமல் பி.சி. என்று சான்றளிக்க இந்த அரசாணை கூறியுள்ளது. இத்தகைய மறைமுக செயலால் அனைத்து முஸ்லிம்களும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் வருவதற்கு வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என சந்தேகம் ஏற்படுகிறது. முஸ்லிம்களில் உள்ள சாதிபிரிவினையை மறைக்க திமுக அரசு முனைகிறது.
ஆக இந்த அரசாணையின் படி திமுகவின் நோக்கம் ஓட்டு வங்கி அரசியல் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. மேலும் இந்துவாக இருப்பவர்கள் முஸ்லிமாக மதம் மாறினாலும் பிற்படுத்தப்பட்ட சமூகம் என்ற பி.சி. சான்றிதழ் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்துக்களை மதம் மாற தூண்டும் செயல் என்று இந்து முன்னணி குற்றம் சாட்டுகிறது.
அதே சமயம், அருந்ததியர், காட்டுநாயக்கர்கள் என பல சமூகங்களுக்கு சாதி சான்றிதழ் தராமல் அரசு அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள் என்பதை செய்திகளில் பார்க்கிறோம். இந்துக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கிட அலட்சியமாகவும், மெத்தனமாகவும் நடந்துகொள்ளும் அதிகாரிகளை எதிர்த்து போராடி அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு உரிமையை பெற்று தர இந்து முன்னணி சென்ற காலங்களில் போராட்டம் நடத்தி பெற்றுத் தந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தாய் தன் வாரிசுக்காக சாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படிப்பை தொடர முடியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இப்படி பல பிரச்சினைகளை இந்து சமுதாயம் சந்தித்த போதிலும் இவற்றிற்கு திமுக அரசு தீர்வுகாண துடிக்கவில்லை. காரணம் இந்துக்கள் ஒட்டுமொத்தமாக ஒரு கட்சிக்கு வாக்களிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் கிறித்தவர்கள் அவர்கள் மதத்தலைவர்கள் ஆதரிக்கும் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதற்காக திமுக, அவர்கள் நலனுக்காக சிந்திக்கிறது. அந்த மதத்தலைவர்கள் கோரிக்கையை ஏற்று செயல்படுகிறது. இத்தகைய போக்கு ஜனநாயக விரோதமானது.
இந்துகளும் சாதி, அரசியல் கட்சி முதலானவற்றை தாண்டி இந்து சமுதாய நலனுக்கு உறுதி அளிப்பவர்களுக்கு வாக்கு அளிப்பதுடன், இந்துக்களின் நலனுக்கு எதிராக செயல்படுபவர்களை தேர்தலில் தோற்கடிக்கவும் வேண்டும்.
இந்துக்கள் விழிப்புணர்வு பெறவில்லை என்றால் இந்த திராவிட அரசியல்வாதிகள் இந்துக்களுக்கு உரிமையே இல்லாமல் செய்து, வாழ்வாதாரத்தையே சீர்குலைத்து விடுவார்கள் என்று இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசாணையை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் மார்ச் 15, 16, 18 ஆகிய தேதிகளில் மீண்டும் தமிழகத்துக்கு வருகிறார்.
‘மீண்டும் மோடி வேண்டும் மோடி’ என்ற பிரசார உத்தியுடன் பாஜக., தமிழகத்தில் பிரதமர் மோடியை அழைத்து பிரசாரக் கூட்டங்களை நடத்துகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, 15ஆம் தேதி சேலத்திலும், 16ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 18ஆம் தேதி கோவையிலும் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மாதம் 4ம் தேதி (மார்ச் 4) சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பாஜக., பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அது முழுக்க அரசியல் கூட்டமாகவே நிகழ்ந்தது. அக்கூட்டத்தில், திமுக.,வுக்கு முடிவுரை எழுதப்படும் என்று உறுதிபடக் கூறினார். அதற்கு முன்னதாக கடந்த மாதம் தமிழகம் வந்த பிரதமர் மோடி தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார். அது முழுக்க அரசு சார்பிலான நிகழ்ச்சியாகவே ந்டைபெற்றது.
அதன் பின்னர் திருநெல்வேலியில் கட்சி சார்பிலான பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். இதை அடுத்து அரசியல் களம் சூடுபிடித்தது. திமுக., அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தித் தாளில் கொடுத்த விளம்பரத்தில், சீன கொடியுடன் ராக்கெட்டும் அதன் அருகே பிரதமர் மோடியின் படமும் இடம் பெற்றதால் அப்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதை அடுத்து அந்த கூட்டத்திலும் கடுமையான அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவின் நிர்வாகி ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் பிடிபட்டார். நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த செய்தி மேலும் அரசியல் சூட்டை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் 3வது முறையாக வரும் மார்ச் 15ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். 15ஆம் தேதி சேலத்திலும், 16ஆம் தேதி கன்னியாகுமரியிலும், 18ஆம் தேதி கோவையிலும் பிரசாரத்தில் அவர் ஈடுபடுகிறார். நாடாளுமன்றத்திற்கு மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எங்கள் கிராமத்தில் ஒவ்வொரு கோடைகாலத்திலும் சிறுவர்களுக்கான “தர்பூசணி சாப்பிடும் போட்டிகள்” நடைபெறும். எந்தக் குழந்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
கோடைகாலம் வந்தாலே எங்களுக்கு கொண்டாட்டம் தான். சில வருடங்கள் கழித்து நான் மும்பை ஐஐடிக்குப் படிக்கப் போய்விட்டேன். ஆறரை ஆண்டுகளுக்குப் பிறகே கிராமத்திற்குத் திரும்பினேன்.
இப்பொழுதெல்லாம் தர்பூசணிகள் சாப்பிடும் போட்டிகள் மிகவும் குறைந்து போயிடுச்சுனு கேள்விப்பட்டேன். மார்கெட்டுகளிலும் தர்பூசணி மிகவும் சிறுத்துப் போயிருந்தன.
வழக்கமா போட்டி நடத்தும் பெரியவரைப் போய் பார்க்கலாம்னு போனா, இப்ப அவர் மகன் விவசாயத்தைப் பார்த்துக் கொள்வதாகவும், பெரியவர் ஓய்வில் இருப்பதாகவும் சொன்னார். தர்பூசணிப் போட்டிகளை நன்றியுடன் அவரிடம் நினைவுபடுத்திய பொழுது, சில விசயங்களை அவர் சொல்லச் சொல்ல எனக்குப் பெரிய ஆச்சர்யம்!
அதாவது, போட்டிக்கு மிகச் சிறந்த மற்றும் பெரிய பழங்களைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பார். இரண்டு நிபந்தனைகள் தான்.
1, விதைகளைக் கடித்து விடக் கூடாது.
2, விதைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் மட்டுமே துப்ப வேண்டும்.
இதன் மூலம்,
1, அடுத்த போகம் விதைப்பதற்கான நல்ல விதைகள் இலவசமாக கிடைத்து விட்டன.
2, கோடைகால கொடுமையிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட்டனர்.
பின்னாளில் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மகன், பெரிய பழங்களையெல்லாம் ஏற்றுமதி செய்யத் தொடங்கி விட்டார். நல்ல வருமானம். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் தர்ப்பூசணி அளவிலும், விளைச்சலிலும் குறைந்தது.
நம் பாரம்பரிய விதைகளையும் முறைகளையும் கைவிட்டதன் பலன் இது.
இதே போல் தான்,உலகமே ஆன்மீகத் தலைமையாக நம் நாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நாம் நம் பண்பாட்டையும், முன்னோர்களின் பழக்க வழக்கங்களையும் நம் அடுத்த சந்ததியினருக்கு கற்றுக் கொடுக்காமல் விட்டு விட்டால், நம் சந்ததியினர் தவறான ஆட்களால், தவறான வழிகளில் திசை திருப்பப்படுவார்கள். இது நம் நாடு! நம் பொறுப்பு!
தெய்வத்திரு. மனோகர் பாரிக்கர் , தேசிய பாதுகாப்புத் துறையின் முன்னாள் அமைச்சர் அவர்களின் அனுபவப் பேச்சு இது.
சுமார் மூன்று மணி நேரம். மனசுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சுங்க… நேரம் போனதே தெர்ல… இப்படித்தான் சொன்னார்கள் பலரும்! இது நமது தமிழ் தினசரியின் பத்தாம் ஆண்டு விழாவில் கேட்ட வாசகங்கள்!
நிகழ்ச்சி பற்றி அடியேனிடம் கருத்து சொன்ன சிலர் முக்கியமாக குறிப்பிட்டது… எந்த பரபரப்பு படபடப்பு துரத்தல்கள் டென்ஷன் எதுவும் இல்லாமல் மிக இயல்பாக அமைதியாக தியான மன நிலையில் அமர்ந்து ஒரு சத்தான நிகழ்ச்சியை பார்ப்பது போல் மனம் ஒன்றி இருந்தது என்று கூறினார்கள். நாங்கள் எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு சென்று இருக்கிறோம் சில நிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் அலைந்து சிலர் ஒரு பரபரப்பை ஏற்படுத்துவார்கள் மேடை பரபரப்பு இருக்கும் சில இடங்களில் நேரமாகிவிட்டது என்று துரத்துவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையை பார்க்கும் நமக்கும் ஒரு பார்வையாளராக படபடப்பு தொற்றிக் கொள்ளும் அதுவெல்லாம் இல்லாமல் ஆற்றொழுக்கான அமைதியான நீரோடை போல நிகழ்ச்சி அமைந்திருந்தது என்று கூறினார்கள்.
அதற்கு காரணம் முகப்பிலேயே நாம் வைத்திருந்த ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகளின் முகம் என்பதை உறுதியாக சொல்வேன். வீட்டிலேயே ஏதாவது சத்தம் போட்டு கலகலவென்று இருந்தால் என் தாயார் சொல்வார்கள்… “சுவாமியின் திருமுகத்தை பார் உள்ளத்தில் அமைதி குடிகொண்டு விடும்” என்பதாக! அது உண்மைதான் என்பதை உணர்ந்த தருணம் அது.
அடுத்து, நிகழ்ச்சியை அமைத்த விதம். நம் நண்பர், கலைம்கள் பதிப்பாளர் பிடி ராஜன் முன்னதாகவே வந்து, மேஜையில் யாருக்கெல்லாம் சால்வை அணிவிக்க வேண்டும், என்ன அணிவிக்க வேண்டும், யாருக்கு புத்தகம் பரிசு, விருது பெறுவபவர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை மொத்தமாக ஒவ்வொரு செட்டாக எடுத்து வைத்து, கலைமகள் அலுவலகத்தின் சார்பில் அங்கே பணி புரியும் திரு. அசோக் அவர்களை அதற்கு பொறுப்பாளராக அமர்த்தி, வழிகாட்டினார். மேடையில் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூரும், மேடைக்குக் கீழே கலைமகள் பதிப்பாளர் திரு. பி.டி. ராஜனும் இருந்து கவனித்துக் கொண்டதால், நிகழ்ச்சி இன்னும் எளிதாக, தொய்வின்றி சென்றது என்பதை, நிகழ்ச்சி குறித்து கருத்துரைத்தவர்களுக்குத் தெரிவித்துக் கொண்டேன்.
அடுத்து இது ஒரு குடும்ப நிகழ்ச்சி மாதிரி அமைந்தது தான்! ஆம் இது நம் தினசரி குழுவின் குடும்பம். உறவுகளைப் பேணும் விதமாக நட்பு உறவுகளைப் பேணிய விதமாக வந்திருந்ததுதான்! சுமார் நூறு பேர் அந்த அரங்கில் நிறைந்திருந்து நல் விருந்து பெற்றார்கள்!
இத வருடம் தெய்வத் தமிழர் விருது பெற நாம் தேர்வு செய்தவர்கள் …
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இயற்பியலில் முது அறிவியல், தமிழ், வரலாற்றில் முதுகலைப் பட்டங்கள், ஆய்வியல் நிறைஞர் பட்டம், மற்றும் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்.
வானிலை ஆய்வுத் துறையில் 39 ஆண்டுகள் பணிபுரிந்து வானிலையாளராக ஓய்வு பெற்றவர். வானிலை தொடர்பான கட்டுரைகள் பல எழுதியுள்ளார். 21 நூல்கள் எழுதியுள்ளார்.
பிரதமர் மோதி, அமித் ஷா ஆகியோரின் பேச்சுகளை தொலைக்காட்சி நேரலையாக தமிழில் மொழிபெயர்க்கிறார்,
தினசரி தளத்தில் ‘திருப்புகழ் கதைகள்’, பாரதியின் கண்ணன் பாட்டு, விநாயகர் நான்மணிமாலை பற்றி தொடர் கட்டுரைகள் எழுதியவர், விளையாட்டு, ஆன்மீகம், வானிலை என தினசரியில் செய்திக் கட்டுரைகளை எழுதி வரும்…
டி.எஸ். வேங்கடேசன்
40 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல், ஊடகப் பணியில் தன்னை கரைத்துக் கொண்டவர், வணிகவியல் பட்டதாரி, இதழியலில் மேற்படிப்பு படித்தவர்,
தி ஸ்டேட்ஸ்மென், ஷிப்பிங் டுடே, டெக்ஸ்காட் கூரியர், கேபிடல் மார்க்கெட், சதர்ன் கேபிடல் நியூஸ், சென்னை நூன் டைம், நியூஸ் டுடே, என ஆங்கிலப் பத்திரிகைகளிலும், சன் நியூஸ், சத்யம் டிவி, ஜி டிவி, இமயம் டிவி என டிவி.,க்களிலும், தினகரன், தினமணி இதழ்களிலும் பணியாற்றியவர்,
ஆர்கனைசர் வார இதழிலும், தளத்திலும் தொடர்ந்து அரசியல் சமூக வணிகக் கட்டுரைகளை எழுதி வருபவர்,
தினசரி தளத்தின் செய்தியாளர்களில் ஒருவருமான …
பி. ஜெகந்நாத்
சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர், சநாதனப் பற்றுடன் போராளி, பொதுநல வழக்கினால் தமிழகத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அமையக் காரணமானவர்,
திருப்போரூர் முருகன் கோயில், ஆளவந்தார் நாயக்கர் கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரங்களில் பொது நல மனுக்களின் மூலம் தீர்வு கண்டவர்,
ஆலயங்கள், ஆலய இடங்கள் தொடர்பு பிரச்னைகளில் வென்று நல்ல தீர்ப்புகளை சமுதாயத்துக்கு பெற்றுத் தந்தவர்,
சட்டப் பிரச்னைகள் ஏற்படும் போது தேசியக் கண்ணோட்டத்தில் அணுகி தமிழகத்தின் தேசியக் கருத்தோட்டத்தை வலுவாக வெளிப்படுத்துபவர்,
ஜெயந்தி ஐயங்கார்
பொருளாதாரம், சமூகவியல், தகவல் தொழில்நுட்பங்களில் முதுகலையும் பொருளாதாரத்தில் எம்.பில்., பட்டமும் பெற்றவர்.
80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நுண்திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புக்கு உதவியவர்.
பல்வேறு நிகழ்ச்சிகளை வழிநடத்தியும் தொகுத்தும் கொடுத்து மெருகேற்றுபவர்.
கம்ப ராமாயணம், ஆழ்வார் பாசுரங்களில் விருப்பம் கொண்டு ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்துபவர்..
ஓவியர் ஜெ.பிரபாகர்
அசோக் லேலண்ட், டிசிஎஸ் உள்ளிட்டவற்றில் பணியாற்றி, தொடக்க காலத்தில் நல்லோர் வட்டம் அமைப்பின் மூலம் சமூக சேவைகளில் களம் இறங்கியவர்,
என்டிஎஸ்ஓ., தன்னார்வத் தொண்டு அமைப்பு மூலம் தமிழகம் முழுக்க கல்வி, மருத்துவ, ஏழைகளுக்கான சேவைப் பணிகளை செய்து வருபவர்,
அவற்றின் ஒருங்கிணைப்புத் தளமாக ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பை சிறப்பாக நடத்தி வருபவர்,
கோட்டோவியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டு, தேசத் தலைவர்கள், ஆலயங்கள், இறை உருவங்கள், திருமேனிகளை அழகாகக் காட்சிப்படுத்துபவர்…
விழாவில் கலந்து கொண்ட நம் தினசரி குழுவின் அன்பர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்
இந்த முறை விருந்தினர்களுக்கும் விருது பெறுபவர்களுக்கும் என்ன பரிசளைக்கலாம் என்று யோசித்த போது, அயோத்தி பால ராமரே முதலில் மனத்தில் உதித்தார். படம் அல்லாமல் வேறு என்ன செய்யலாம் என்று நினைத்த போது, அமேசானில் இந்த ராமனின் 2டி கட் அவுட் சிறப்பாக இருந்தது. அதுவே 15 ஆர்டர் செய்து வரவழைத்தேன்.
நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு என்ன கொடுக்கலாம் என்று யோசித்த போது, சரியாக, வெள்ளிக்கிழமை மாலை 5.30க்கு தான் ஒரு யோசனை. மதுரையில் இருக்கும் என் தங்கை கணவர் சம்பத் வேங்கடேஷை தொடர்பு கொண்டேன். 100 பாக்கெட் சைஸ் ராமர் படம் லேமினேட் செய்து வேண்டுமே… எப்படி தயார் செய்வது என்று கேட்டேன்.
நீர் படத்தை அனுப்பும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி, 5.45க்கு மெயில் பெற்று, மதுரை டவுன் போய் பிரிண்ட் அவுட் எடுத்து, வீட்டுக்கு வந்து (லேமினேஷன் மெஷின் வீட்டிலேயே இருப்பதால்) அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் தயாரித்து, இரவு மதுரை பாண்டியன் ரயிலில் கிளம்பிய ஸ்ரீனிவாசன்ஜியிடம் கொடுத்து … எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டார்.
ஆகவே தான், அயோத்தி குழந்தை ராமர் நம் தெய்வத் தமிழர் விருது வழங்கும் விழாவில் அனைவருக்கும் ஒவ்வொரு விதத்தில் வந்து அமர்ந்து, தெய்வாம்சம் பொருந்தியதாக நிகழ்ச்சியை மாற்றி விட்டார். அன்று, அயோத்தியில் ப்ராணப்ரதிஷ்டை ஆகி, மண்டல பூஜை நிறைவு பெற்ற தினம் வேறு! அவ்வகையில், மண்டல பூஜை நிறைவு நாளில் நம் அன்பர்களின் கைகளில் ராமபிரான் வந்து அமர்ந்து கொண்டதாகவே தோன்றியது.
நிகழ்ச்சி, முன்னதாகவே மனத்தில் யோசித்து திட்டமிட்ட வகையில், அதன்படியே சிறப்பாகச் சென்றது. அதன்படி, முதல் பகுதியின் இறுதியில் சிலருக்கு ஷால் அணிவித்து சிறப்பு செய்ய, நானும் PT ராஜன் ஜியும் எண்ணியிருந்தோம். அவர்களில் ஒருவர், எங்கள் ஊரைச் சேர்ந்த, சொல்லப் போனால் அடுத்த தெருவைச் சேர்ந்த சம வயது நண்பர் – துரை சூரிய பாண்டியன். சிறுவயதுப் பழக்கம். தற்போது, நெற்கட்டான்செவல் மாமன்னர் பூலித்தேவர் வாரிசுதாரர்கள் அறக்கட்டளை அமைத்து, சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பூலித்தேவன் பிறந்த நாளில் நெற்கட்டாஞ்செவல் சென்று பூஜைகள் செய்வது, இதர நிகழ்ச்சிக்களுக்கு ஏற்பாடு செய்வது என! ஆலய ஈடுபாடு அதிகம் கொண்டவர். தென்காசி கோயிலில் பராக்கிரம பாண்டியனுக்கு அண்மையில் சிறப்பு செய்தார். அவரது தொண்டினை எடுத்துச் சொல்லி, அவருக்கு கௌரவம் கொடுக்க வேண்டும் என்பது விருப்பம்.
அடுத்து, குழுவில் அண்மையில் நண்பர் ஜேகே மூலம் இணைந்த விஜய். இவர், @ArchivesofHindustan என்ற யுடியூப் சேனல் நடத்தி வருகிறார். ஒரு மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கிறார்கள். ஆலய வீடியோக்கள் அழகாக எடுத்துப் பதிவு செய்திருக்கிறார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஜேகேயைப் பார்த்தேன். இவர்கள் பின்னர் வந்து சேர்ந்ததால், கவனிக்கத் தவறிவிட்டேன். இடையில் அடியேனுக்கு காட்டாங்குளத்தூர் ரகுநாதன் ஸ்வாமியும், அறந்தை மணியன் அவர்களும் பொன்னாடை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியின் நடுவே அருகிலேயே நின்று கொண்டு அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆயினும், நிகழ்ச்சி முடிந்த பிறகு தான் நண்பர்கள் இருவரும் கண்ணில் பட்டார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது.
இந்த நிகழ்ச்சியே, தமிழ் தினசரி தளத்துக்கு உதவுபவர்கள், குழுவில் பயணிப்பவர்கள், நண்பர்களுக்கு சிறப்பு செய்து கௌரவப் படுத்தத்தான். அப்படி இது குடும்ப விழா போன்று நட்பு விழாவாக அமைந்தது என்பதுதான் வந்திருந்த அனைவரின் ஈர்ப்புக்கும் ஈடுபாட்டுக்கும் காரணம்.
குழுவில் உள்ள மதுரை கணபதி சுந்தரம் சார், இப்போதான் வெளிநாடு சென்ற ஆறுமுக கனி ஆகியோர் ஒரு தொகை அனுப்பி நிகழ்ச்சிக்கு உதவியாக வைத்துக் கொள்ளுமாறு சொன்னார்கள். முக்கியமாக இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட போதே, முன்னதாகவே ஹால் புக் செய்து, அது என் சார்பிலானது என்று சொல்லி ஊக்கமூட்டிய கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள், ஷால் பொறுப்பு என்னுடையது என்று சொல்லி மதுரையில் இருந்து நம் நிகழ்ச்சிக்காகவே வந்து இரு நாட்கள் தங்கி, உற்சாகமூட்டிய நா.ஸ்ரீனிவாசன்ஜி (பொதுவாக ஞாயிறு வெளி நிகழ்ச்சிக்கு வரமாட்டார். குடும்பத்துக்காக ஒதுக்குவார். நாமும் ஒரே குடும்பம் என்பதாலோ என்னவோ நமக்கும் ஒதுக்கி வந்திருக்கிறார்.) அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
அடுத்த வருட விழாவை மேலும் சிறப்பாக திட்டமிட ஊக்கமும் உற்சாகமும் பெற்றேன். முக்கியமாக, இந்த தினத்தில் என் 50ம் அகவையு தொடங்க, என் பத்திரிகை உலக வாழ்வின் 25ம் ஆண்டும் தமிழ் தினசரியின் 10ம் ஆண்டும் என முப்பெரும் விழாவாக இது அமைந்துவிட்டது. எனவே ஆன்மிக ரீதியாக நிகழ்ச்சியை நடத்த எண்ணம் கொண்ட போதுதான், தபோவனம் ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் இசைச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்வோம் என்று தோன்றியது.
தற்போது தபோவனத்தில் கும்பாபிஷேகத்தை ஒட்டிய பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் மாதம் 16ம் தேதி அங்கே கும்பாபிஷேகம். இது குறித்துச் சொன்னபோது, தபோவன நிர்வாகிகள் திரு. கே.அமர்நாத அவர்களும், திரு. ஸ்ரீகுமார் அவர்களும் ஆசி அளித்து அடியேனுக்கு உதவிகரமாக முன்வந்தார்கள்.
அதன்படி, ஸ்வாமிகள் பற்றி, ஹரிகதை சிந்துஜா சிறப்பாக, இசைச் சொற்பொழிவு நடத்தி அனைவரையும் ஸ்வாமிகளின் எண்ணத்தில் லயிக்கச் செய்திருந்தார். குறுகிய நேர அவகாசம் என்றாலும் சிறப்பாக ஸ்வாமிகள் பற்றிய சம்பவங்களை இசையுடன் கலந்து கொடுத்து கட்டிப் போட்டார். இரவு எட்டு மணி ஆன பிறகுதான் பலர் தன்னுணர்வு பெற்றதை உணர முடிந்தது. அவருக்கும் நம் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டோம். அன்பர்கள் அனைவருக்கும் நம் அயோத்தி ராமனின் அருள் நீங்காது இருக்கட்டும்!
மார்ச் 10ம் தேதி இன்று, சென்னை மயிலாப்பூர் – கோகலே சாஸ்திரி ஹாலில், நம் தினசரி இணையத்தின் 10ம் ஆண்டு விழா நடைபெறுகிறது. அன்று, நம் தினசரி தளத்தில் கட்டுரைகள் எழுதி வரும் எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள், ஆன்மிகத் தொண்டர்களைத் தேர்ந்தெடுத்து தெய்வத் தமிழர் விருதுகளை வழங்கி வருகிறோம். இந்த வருடம்,
திரு. கு.வை. பாலசுப்பிரமணியன் அவர்கள் (எழுத்தாளர், வானிலையாளர்) திரு. பி. ஜகந்நாத் அவர்கள் (வழக்குரைஞர்) திரு. டி.எஸ். வேங்கடேசன் அவர்கள் – (ஊடகவியலாளர்) உடன், 4. ஓவியரும் எண்ணங்களின் சங்கமம் அமைப்பை நடத்திக்கொண்டு வரும் சமூக சேவகருமான ஜெ.பிரபாகர், 5. திருமதி ஜெயந்தி ஐயங்கார் ஆகியோருக்கு தெய்வத் தமிழர் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறோம்.
விருது பெறுபவர்கள் குறித்து…
முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இயற்பியலில் முது அறிவியல், தமிழ், வரலாற்றில் முதுகலைப் பட்டங்கள், ஆய்வியல் நிறைஞர் பட்டம், மற்றும் தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்.
வானிலை ஆய்வுத் துறையில் 39 ஆண்டுகள் பணிபுரிந்து வானிலையாளராக ஓய்வு பெற்றவர். வானிலை தொடர்பான கட்டுரைகள் பல எழுதியுள்ளார். 21 நூல்கள் எழுதியுள்ளார்.
பிரதமர் மோதி, அமித் ஷா ஆகியோரின் பேச்சுகளை தொலைக்காட்சி நேரலையாக தமிழில் மொழிபெயர்க்கிறார்,
தினசரி தளத்தில் ‘திருப்புகழ் கதைகள்’, பாரதியின் கண்ணன் பாட்டு, விநாயகர் நான்மணிமாலை பற்றி தொடர் கட்டுரைகள் எழுதியவர், விளையாட்டு, ஆன்மீகம், வானிலை என தினசரியில் செய்திக் கட்டுரைகளை எழுதி வரும்…
டி.எஸ். வேங்கடேசன்
40 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல், ஊடகப் பணியில் தன்னை கரைத்துக் கொண்டவர், வணிகவியல் பட்டதாரி, இதழியலில் மேற்படிப்பு படித்தவர்,
தி ஸ்டேட்ஸ்மென், ஷிப்பிங் டுடே, டெக்ஸ்காட் கூரியர், கேபிடல் மார்க்கெட், சதர்ன் கேபிடல் நியூஸ், சென்னை நூன் டைம், நியூஸ் டுடே, என ஆங்கிலப் பத்திரிகைகளிலும், சன் நியூஸ், சத்யம் டிவி, ஜி டிவி, இமயம் டிவி என டிவி.,க்களிலும், தினகரன், தினமணி இதழ்களிலும் பணியாற்றியவர்,
ஆர்கனைசர் வார இதழிலும், தளத்திலும் தொடர்ந்து அரசியல் சமூக வணிகக் கட்டுரைகளை எழுதி வருபவர்,
தினசரி தளத்தின் செய்தியாளர்களில் ஒருவருமான …
பி. ஜெகந்நாத்
சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர், சநாதனப் பற்றுடன் போராளி, பொதுநல வழக்கினால் தமிழகத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு அமையக் காரணமானவர்,
திருப்போரூர் முருகன் கோயில், ஆளவந்தார் நாயக்கர் கோயில் நில ஆக்கிரமிப்பு விவகாரங்களில் பொது நல மனுக்களின் மூலம் தீர்வு கண்டவர்,
ஆலயங்கள், ஆலய இடங்கள் தொடர்பு பிரச்னைகளில் வென்று நல்ல தீர்ப்புகளை சமுதாயத்துக்கு பெற்றுத் தந்தவர்,
சட்டப் பிரச்னைகள் ஏற்படும் போது தேசியக் கண்ணோட்டத்தில் அணுகி தமிழகத்தின் தேசியக் கருத்தோட்டத்தை வலுவாக வெளிப்படுத்துபவர்,
ஜெயந்தி ஐயங்கார்
பொருளாதாரம், சமூகவியல், தகவல் தொழில்நுட்பங்களில் முதுகலையும் பொருளாதாரத்தில் எம்.பில்., பட்டமும் பெற்றவர்.
80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நுண்திறன் பயிற்சி அளித்து வேலைவாய்ப்புக்கு உதவியவர்.
பல்வேறு நிகழ்ச்சிகளை வழிநடத்தியும் தொகுத்தும் கொடுத்து மெருகேற்றுபவர்.
கம்ப ராமாயணம், ஆழ்வார் பாசுரங்களில் விருப்பம் கொண்டு ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்துபவர்..
ஓவியர் ஜெ.பிரபாகர்
அசோக் லேலண்ட், டிசிஎஸ் உள்ளிட்டவற்றில் பணியாற்றி, தொடக்க காலத்தில் நல்லோர் வட்டம் அமைப்பின் மூலம் சமூக சேவைகளில் களம் இறங்கியவர்,
என்டிஎஸ்ஓ., தன்னார்வத் தொண்டு அமைப்பு மூலம் தமிழகம் முழுக்க கல்வி, மருத்துவ, ஏழைகளுக்கான சேவைப் பணிகளை செய்து வருபவர்,
அவற்றின் ஒருங்கிணைப்புத் தளமாக ‘எண்ணங்களின் சங்கமம்’ அமைப்பை சிறப்பாக நடத்தி வருபவர்,
கோட்டோவியத்தில் பெரும் ஈடுபாடு கொண்டு, தேசத் தலைவர்கள், ஆலயங்கள், இறை உருவங்கள், திருமேனிகளை அழகாகக் காட்சிப்படுத்துபவர்…
இந்நிகழ்ச்சியில், திருக்கோவிலூர், தபோவனம், ஸற்குரு ஸ்ரீ ஞானானந்தகிரி ஸ்வாமிகள் குறித்த இசைச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஹரிகதை சிந்துஜா சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
நிகழ்ச்சிக்கு தபோவனத்தின் செயலாளரும் புதுச்சேரி ஸற்குரு ஹோட்டல் மேலாண் இயக்குநருமான திரு. கே. அமர்நாத் அவர்கள் தலைமை தாங்கியும், நம் கலைமகள் ஆசிரியர் திரு. கீழாம்பூர் அவர்கள் முன்னிலை வகித்தும் விருதுகளை வழங்குகிறார்கள்.
அடியேனின் பத்திரிகைப் பணியில் உடன் பயணித்த விஜயபாரதம் – தற்போது ஒரே நாடு ஆசிரியர் திரு நம்பி நாராயணன் அவர்கள், விகடனில் இருந்த (நாங்கள் தமிழில் சிவன் என்று அழைக்கும்), எண்ணற்ற நூல்களை மொழிபெயர்த்துள்ள சிவன், இண்டியன் எக்ஸ்பிரஸ், தினமணியின் ஜி.எம்.ஆக இருந்த ஆர்.வீ.யெஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். தளத்துக்கு ஆதரவாக இருந்து வரும் மதுரை வழக்குரைஞர் திரு. நா.ஸ்ரீனிவாசன் அவர்கள் வரவேற்புரை அளிக்கிறார்.
நம் தளத்தின் வாசக அன்பர்கள், சென்னைவாசிகள் அவசியம் குடும்பத்தினர், நண்பர்களுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்து, சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அன்பன், செங்கோட்டை ஸ்ரீராம் நிறுவுனர், தமிழ் தினசரி தளம்
• எனது வியாபார விஷயமாக நிறையப் பள்ளிகளைத் தொடர்பு கொள்பவன் நான். எனவே, தமிழகப் பள்ளிகளின் கள நிலவரம் குறித்துக் கொஞ்சம் விஷயம் தெரியும்.
• போதைப் பழக்கம் சமீப வருடங்களில் பள்ளிகளில் மிகவும் அதிகரித்திருக்கிறது.
• கொரோனா காலத்தில் இது பூதாகாரமாக வளர்ந்தது.
• முன்பெல்லாம் ஏதோ ரேவ் பார்ட்டி, கல்லூரி மட்டங்களில் சிறிய அளவில் இருந்த நிலை மாறி, தற்போது பள்ளிகள் வரை கஞ்சா சகஜமாகப் புழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
• மேல்மட்ட போதைகளை விடவும் கஞ்சா மிக ஆபத்தானது. காரணம், இது விலை குறைவு. எளிதில் கிடைக்கும். எல்லா இடங்களிலும் கிடைக்கும்.
• சமூக வலைதளங்கள் பெருகியுள்ள நிலைமை, மாணவர்களின் கைகளில் பணப்புழக்கம் அதிகரித்திருப்பது, பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வது முதலிய காரணங்கள் அவர்களை சுலபமாக போதைக்கு ஆளாக்கி வருகின்றன.
• பெற்றோர், ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் இருந்து மாணவர்கள் பெருமளவு விலகி வருகிறார்கள். இது பேராபத்து.
• தனியார் பள்ளி மாணவர்களும் கஞ்சா போதைக்கு விதிவிலக்கல்ல.
• காவல்துறை உதவி இல்லாமலோ, பெரிய அளவிலான நெட்வொர்க் இல்லாமலோ இவ்வளவு பெரிய அளவில் கஞ்சா புழக்கம் ஏற்பட வாய்பபே இல்லை.
• ஶ்ரீ அண்ணாமலை இந்த விஷயத்தைக் கையில் எடுத்திருப்பது நம்பிக்கை தருவதாய் உள்ளது.
• பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சலிங் பற்றி அண்ணாமலை பேசியிருக்கிறார். அதுமட்டுமல்ல, மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் அவசியம்.
• ஒவ்வொரு பள்ளிக்கும் ஓர் மனநல ஆலோசகர் நியமிப்பது என்று ஒரு மாமாங்கமாகப் பேசி வருகிறார்கள். அப்படியே நியமித்தாலும் அவர்கள் செயல்பாடும் மெகானிகலாகத்தான் இருக்கும்.
• எனது அறிவுக்கு எட்டியவரை நிலைமை கையை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது.
• இந்த விஷயத்தில் அரசு ஒத்துழைப்பு அறவே கிடைக்காது. ஆனால், பெற்றோர் – குறிப்பாக, தாய்மார்கள் – ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும்.
• கட்சியின் மாநிலத்தலைமை இதுகுறித்து சில நூறு பள்ளி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு விவரங்கள் சேகரிப்பது நல்லது.
• கட்சிக்கு ஒரு கல்வியாளர் அணி உண்டு. அவர்கள் இந்த விஷயத்தை முன்னெடுக்கலாம்.
• போதைப் புழக்கத்தைப் பள்ளிகள் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்துப் பல்வேறு தரப்பினருடன் – ஆசிரியர்கள், மேல் வகுப்பு மாணவர்கள், பள்ளித்தலைமை, பெற்றோர், கல்வியாளர்கள், மனநல மருத்துவர்கள் – விரிவான, ஆழமான விவாதங்கள் மூலம் புரிந்துகொள்வது நல்லது.
• வரும் தேர்தலிலும் இதைப்பற்றிப் பெரிய அளவில் பேச வேண்டியது அவசியம். மக்கள் மத்தியில் இது பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். காரணம், கொரோனா காலகட்டத்தில் அரசு உத்தரவின் பேரில் பள்ளிகள் மூலம் பெற்றோர் அபிப்பிராயத்தைக் கேட்டார்கள் (பள்ளிகளைத் திறப்பது குறித்து). அப்போது அரசுப்பள்ளிகளில் பெற்றோர் மிக அதிக அளவில் கலந்துகொண்டு, பள்ளிகளைத் திறக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். (கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஆதரவு). அரசுப் பள்ளிகளில் 90 சதவிகிதம் பெற்றோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தது நம்ப முடியாத செய்தி. மாணவர்கள் கல்வி குறித்துப் பெற்றோருக்கு உள்ள பயத்தையும், பள்ளிகள் நல்ல விதத்தில் இயங்கினால் மட்டுமே தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை அமையும் என்ற அவர்களது எதிர்பார்ப்பையும் இது தெளிவாகவே உணர்த்துகிறது.
• எனவே, போதைப்புழக்க விஷயத்திலும் பெற்றோர் ஆதரவு இருக்கும் என நிசசயம் நம்பலாம்.
பெங்களூருவில் நிலவும் கடும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் எப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு கடும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. குடிநீர் கிடைக்காமல் மக்கள் பரிதவிப்பதை தவிர்க்க மாநகர குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
குடிநீர் பஞ்சத்தின் தாக்கம் சாமானிய மக்களுக்கு மட்டுமில்லாமல், முதல்வர் சித்தராமையாவின் அரசு அலுவலக இல்லமான கிருஷ்ணா, துணை முதல்வரின் அரசு இல்லம், சில அமைச்சர்களின் வீடுகளுக்கும் காவிரி குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பெங்களூருவில் 20 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் தனியார் பள்ளிகள் வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவுரை வழங்கி உள்ள நிலையில், பெங்களூருவில் தோட்டம், கார் கழுவுதல், கட்டுமானப் பணிகளுக்கு தண்ணீரை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
கட்டுப்பாடுகளை மீறி தண்ணீரை பயன்படுத்தினால் 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தடையை தொடர்ந்து மீறினால் 5 ஆயிரம் அபராதத்துடன் தினமும் 500 கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கு இடையே ஐந்து டெஸ்டுகள் கொண்ட தொடர் நடைபெற்றுவருகிறது. அதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தர்மசாலாவில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் டெஸ்ட் ஹைதராபாத்தில் நடந்தது. அதில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (இங்கிலாந்து 246 & 420; இந்தியா 436 & 202). இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (இந்தியா 396 & 255; இங்கிலாந்து 253 & 292). மூன்றாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (இந்தியா 445 & 430/4 டிக்ளேர்ட்; இங்கிலாந்து 319 & 122). ராஞ்சியில் நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. (இங்கிலாந்து 353 & 145; இந்தியா 307 & 192/5)
ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்த இந்திய அணி இன்றைய ஐந்தாவது டெஸ்ட் வெற்றியின் மூலம் தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. கடைசியாக கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் சுற்ற்பயணம் மேற்கொண்டபோது, 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இங்கிலாந்து கைப்பற்றியது. அதைதொடர்ந்து நடைபெற்றுள்ள 3 டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் அசத்திய இந்தியா:
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜாக் கிராவ்லி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 79 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சுப்மன் கில் (110) மற்றும் ரோகித் சர்மா (103) அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினர். அதோடு, ஜெய்ஷவால் (57), தேவதத் படிக்கல் (இது அவருக்கு முதல் டெஸ்ட்) (65) மற்றும் சர்ஃப்ராஸ் கான் (56) ஆகியோர் அரைசதம் விளாசினர். குல்தீப் யாதவ் (69 பந்துகள், 30 ரன்) ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆடினார். அவரைப் போலவே பும்ராவும் (64 பந்துகள், 20 ரன்) ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ஆடினார். இதன் மூலம், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் சுருண்ட இங்கிலாந்து
259 ரன்கள் பின் தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஜோ ரூட் அதிகபட்சமாக 84 ரன்களை சேர்த்தார். பேர்ஸ்டோ 39 ரன்களை எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 195 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் குல்தீப் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள்வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. அதோடு, டெஸ்ட் வரலாற்றில் அறிமுகப் போட்டியிலும், 100வது போட்டியிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் தமிழக வீரர் அஷ்வின் படைத்துள்ளார்.
முதல் நாள் ஆட்டத்தில் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு 57.5 ஓவரில் ஆட்டமிழந்தது. அன்றைய தினம் 30 ஓவர்கள் ஆடிய இந்திய அணி ஒரு விக்கட் இழப்பிற்கு 135 ரன் எடுத்திருந்தது. இரண்டாம் நாள் முழுவதும் இந்திய அணி ஆடி, ஆட்டநேர முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 473 ரன் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் காலை இந்திய அணி 4.1 ஓவரில் 4 ரன் மட்டுமே சேர்த்து ஆட்டமிழந்தது. இன்றைய மீதமுள்ள ஆட்ட நேரத்தில் இங்கிலாந்து அணி 195 ரன் எடுத்து, தேநீர் இடைவேளைக்கு முன்னரே ஆட்டமிழந்து தோல்வியைத் தழுவியது. ஐந்து நாள் போட்டிகள் இவ்வாறு மூன்று நாள்களிலேயே முடிவதால்தான் டெஸ்ட் போட்டிகளின் முக்கியத்துவம் குறைகிறது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக.,வைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கிற்கு 7 நாள் என்சிபி காவல் அளித்து, தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று காலை கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கை, தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கோரிக்கையை ஏற்று ஜாபர் சாதிக்கை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
முன்னதாக, போதைக் கடத்தல் மாஃபியா கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்கை ஜெய்ப்பூர் சொகுசு விடுதியில் சுற்றிவளைத்து கைது செய்தது போதைத் தடுப்புப் பிரிவு. அவர் கடந்த இரு வாரங்களில் தமிழகத்தில் இருந்து வடமாநிலம் வரை சென்று, பாகிஸ்தானின் எல்லைப்புற மாநிலமான ராஜஸ்தான் வழியாக, பாகிஸ்தானுக்குத் தப்பிச் செல்லும் வழியில், கைது செய்யப்பட்டது, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரின் வலையில் சிக்காமல் இருப்பதற்காக, திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து ஜாஃபர் சாதிக் பதுங்கியிருந்துள்ளார்.
சென்னையில் உள்ள என்.சி.பி. அதிகாரிகள் கொடுத்த தகவலை அடுத்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தலைமறைவாக இருந்த சர்வதேச போதைக் கடத்தல் மாஃபியா கும்பல் ஜாஃபர் சாதிக்கை சுற்றி வளைத்துப் பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு போதை ரசாயனங்களை வெளிநாடுகளுக்குக் கடத்திய வழக்கில் சிக்கியுள்ள ஜாஃபர் சாதிக், தில்லிக்கு அழைத்துவரப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப் பட்டது. பின்னர் தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் அவரை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது, என்.சி.பி., காவலில் எடுத்து விசாரிக்க 7 நாட்கள் அனுமதி அளித்தார் நீதிபதி.
ஜாஃபர் சாதிக் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் குடோன் அமைத்து தனி நெட்வொர்க் மூலம் சென்னையிலிருந்து தில்லிக்கு சூடோஎஃபிட்ரினை அனுப்பியது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. அதேபோல், ஜாஃபர் சாதிக்கின் பணப் பரிமாற்ற பட்டியலை தயார் செய்துள்ள என்.சி.பி அதிகாரிகள், அவருக்கு உடந்தையாக இருந்த முக்கியப் புள்ளிகள் குறித்தும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
முன்னதாக, போதை கடத்தல் மாஃபியா கும்பல் தலைவன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போதை கடத்தலில் கிடைத்த பணத்தை வைத்து அவர் என்ன வெல்லாம் செய்தார் என்பது குறித்தும் , அவருடன் தொடர்புடையவர்கள் குறித்தும் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரி பரபரப்பு தகவல் வெளியிட்டார்.
2000 ஆயிரம் கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு போலீசாரால் தேடப்பட்டு வந்த கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் என்கிற அப்துல் ரஹ்மான் தில்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். போலீசில் சிக்காமல் இருக்க புது புது சிம்கார்டுகளை பயன்படுத்தினாலும், அவர் பயன் படுத்திய செல்போனின் சிக்னலை வைத்து போலீசார் சாமர்த்தியமாக சுற்றிவளைத்துள்ளனர்.
கைதான ஜாஃபர் சாதிக்கிடம் இருந்து திமுக.,வின் உறுப்பினர் அட்டையையும், எஸ்.டி.பி.ஐ கட்சி பிரமுகரின் விசிட்டிங் கார்டும் கைப்பற்றப்பட்டது. முகத்தை மூடி அழைத்துச் சென்ற ஜாபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன என்று, மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல் பிரிவு உயர் அதிகாரி ஞானேஸ்வர் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை உணவுப் பொருள் எனக்கூறி மெத்தபெடமைன் தயாரிக்க பயன்படும் மூலம் பொருளான சூடோபெட்ரினை ஜாபர் கடத்தி இருப்பதாகவும், தமிழ் நாடு, தில்லி ஆகிய இடங்களில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு 3,500 கிலோ வரை போதைப் பொருளைக் கடத்தியதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
கடத்தல் மூலம் ஈட்டிய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஜாபர் சாதிக் , அரசியல், சினிமா, ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்த அவர், போதைப் பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை முழுமையாக பயன்படுத்தி ‘மங்கை’ என்ற படத்தைத் தயாரித்திருப்பதாகவும், சென்னையில் ஓட்டல்கள் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.
மேலும், போதைக் கடத்தல் பணத்தை அரசியல் பிரமுகர்களுக்கு நிதியாகக் கொடுத்துள்ளார் என்றும், ஏராளமான பிரமுகர்களுடன் ஜாபர் சாதிக் தொடர்பு வைத்திருப்பதாகவும் அவர்களை ஒவ்வொருவராக சம்மன் அனுப்பி விசாரிக்க இருப்பதாகவும் என்சிபி உயரதிகாரி ஞானேஸ்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
போதைப் பொருள் கடத்தல் மூலம் பெற்ற கோடிக்கணக்கான ரூபாய் பணம், திரையுலகிலும், அரசியலிலும் புழங்கி இருப்பதால இது குறித்து அமலாக்கத்துறை விசாரணையை முன்னெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ஜாஃபர் சாதிக் இன்று பிடிபடுவதற்கு முன்பே, ஜாபர் சாதிக் குறித்த தொடர்புகளை அவரது வீட்டில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவுகள், ஆவணங்கள் மூலம் கண்டறிந்துள்ளனர். அப்போது, ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள், ஐஎஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, அரபிக் கல்லூரி முன்னாள் பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு நிதியுதவி அளித்தனரா என்பது குறித்து, என்ஐஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்ட ஜாஃபர் சாதிக்கையும், அவரின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் தில்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வலைவீசித் தேடி வந்தனர். அப்போது, ஜாபர் சாதிக்கின் எட்டு வங்கி கணக்குகள், முகமது சலீம் மற்றும் மைதீனின் ஆறு வங்கிக் கணக்குளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்க, மூவரும் நிதியுதவி செய்ததாக கண்டறியப்பட்டது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அவர்கள் தெரிவித்த தகவலின்படி, கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் 2022ல் குண்டு வெடிப்பு நடத்தி பலியான ஐஎஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின் தலைமையில் 12க்கும் மேற்பட்டோர் தற்கொலைப் படையினராக மாறி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனராம். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, தமிழகம் முழுவதும் பல கட்டங்களாக சந்தேக நபர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ., சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சிக்கிய ஆவணங்களை ஆய்வு செய்ததில், மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு, சென்னை, கோவையில் உள்ள அரபிக் கல்லூரியில் பயங்கரவாத பயிற்சி அளிக்கப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக அரபிக் கல்லூரிகளின் பேராசிரியர், முன்னாள் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில், சில பண பரிவர்த்தனைகள் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. அது பற்றிய விவரத்தை, தில்லி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தோம். அவர்கள் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரின் வங்கிக் கணக்குளை ஆய்வு செய்து, பண பரிவர்த்தனை குறித்து நாங்கள் கொடுத்த தகவல்களுடன் ஒப்பிட்டு பார்த்துள்ளனர்.
அதில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் அரபிக்கல்லூரி பேராசியர் மற்றும் முன்னாள் மாணவர்கள் வாயிலாக, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்க, ஆயுதப் பயிற்சி அளிக்க நிதியுதவி செய்து இருப்பது தெரியவந்தது. இதனால், ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, ஜாபர் சாதிக் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, வெவ்வேறு பெயர்களில் மூன்றுக்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகளை ஜாபர் சாதிக் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.
இதனால் தற்போது, என்சிபி., என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகள் ஜாபர் சாதிக் விவகாரத்தை வைத்து முழு விசாரணையைத் தொடங்கியுள்ளன. இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.