டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
நடந்தது வெடிகுண்டு….!?!? தான் என்கிறார் சித்தராமையா. சம்பவம் நடைபெற்ற பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குறுகிய காலத்தில் மிகப் பெரிய பெயர் பெற்ற உணவகமாக உருமாறி நிற்கிறது. இங்கு கடந்த ஒன்றாம் தேதி ஓர் வெடிப்பு சம்பவம் நடந்தது…, யார் செய்திருக்கிறார்கள் ஏன் செய்தார்கள் என விசாரணை முடிக்கிவிடப்பட்டுள்ளதாக மாநில அரசும் மத்திய அரசு அதிகாரிகளும் தெரிவித்திருக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க…… மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல்வராக உள்ள சித்தராமையா… தமிழகத்தில் உள்ள முதல்வரை போல் சிலிண்டர் வெடிவிபத்து என சப்பைக்கட்டு கட்டவில்லை….. மாறாக இது குறித்து ஆராய பெரும் முனைப்பு காட்டி வருகிறார். இதன் பின்னணியில் உள்ளவர்களின் நோக்கம் அல்லது அவர்கள் ஏன் இதனை இந்த ராமேஸ்வரம் கஃபே இடத்தில் செய்திருக்கிறார்கள் என்பதை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
அங்கு தமிழகத்தில் உள்ளது போன்ற அடையார் ஆனந்த பவன் ஏ2பி போல் வளர்ந்து நிற்கும் ஒரு உணவகம் தான் இங்கு இந்த ராமேஸ்வரம் கஃபே. கிட்டத்தட்ட அதே பாணியிலான… ஆரம்ப கால சரவணபவன் போல் இதன் தற்போதைய நிர்வாகம் இயங்கி வருகிறது இங்கு. பல தமிழ் பேசும் மக்களை வெகு சகஜமாக இங்கு காணலாம். ஓர் வகையில் சொன்னால் தமிழர்கள் கூடிய குசலம் விசாரிக்கும் இடமாகவே பார்க்கப்படுகிறது.இது வரையில் எல்லாம் சரி……. குண்டு வெடிப்பு நிகழ்த்தும் அளவிற்கு என்ன நடந்தது…..????
பல விசாரணை அமைப்புக்களுக்கு நன்கு அறியப்பட்ட சமாச்சாரம் தான் என்கிறார்கள் ஒரு சாரார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போதே நீறுபூத்த நெருப்பாக இருந்த விஷயம் தான்…,. பிரதமரை கொண்டாட தயங்காத இவர்களுக்கு உள்ளுர் கட்சியினரை கண்டாலேயே ஆகாது…… அந்த அளவிற்கு வீரதீர பராக்கிரமங்களை அவர்களும் இங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலில் பல இடங்களில் இஸ்லாமிய பெருமக்களை….. அவர்களின் சமுகங்களை கொண்டிருந்த பூத்களில் அவர்களுக்கு பதிலாக அங்கு இருந்த ஒரு சில நபர்களே வாக்குகளை பதிவு செய்து இருக்கிறார்கள். இஃது கிட்டத்தட்ட சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதி போலான பாணியில் நடந்தது என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கும்…… இந்த சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம்?????? இருக்கிறது கொஞ்சம் நுட்பமாக அவதானிக்க வேண்டும். சமீபத்தில் நடந்த பாரதப் பிரதமரின் தமிழக வருகையை ஒட்டிய நிகழ்வுகளை இங்கு வைத்து பேசிய ஒரு சாராருக்கு ஆதரவாக இந்த உணவக கிளை சார்பாக நடந்துக் கொண்டார்கள் என்றும்….. அதனை முளையிலேயே கிள்ளி களைவதற்காக இதனை இவர்கள் தான் செய்திருக்கக்கூடும் என முனுமுனுப்பு எழுந்துள்ளது. இஃது பெங்களூரு முழுவதும் ஓர் விதமான அசூசை பார்வையை அவர்கள் மீதே பதிந்துள்ளது.
இஃது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலித்து விடக்கூடாது என்பதில் சித்தராமையா பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும்…. அநேகமாக பல கடுமையான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளக்கூடும் என்கிறார்கள். இதனை நேற்றைய வெள்ளிக் கிழமை கூடிய கூட்டங்களில் பெரும் விவாதப்பொருளாகி இருக்கிறது…… அநேகமாக படிக்கும் உங்களுக்கும் இது புரிந்திருக்கும் என்றே நம்புகிறோம்……. தீப்பொறியை உரசி இருக்கிறார்கள்…. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
எதிர்க் கட்சிகள் என்ற போர்வையில் ஆளும் கட்சிக்கு எதிராக அரசியல் செய்கிறோம் என்பதாக சொல்லிக்கொண்டு, தேசத்தையும் தேசத்தின் நலனையும் குழி தோண்டி புதைத்து, எதிரி நாடுகளுடன் கள்ள உறவாடும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக., போன்ற கட்சிகளின் செயல்பாடுகளால் நம் தேசத்தை ஆபத்து வெகுவாக சூழ்ந்திருப்பது நன்றாகவே தெரிகிறது.
அண்மைய இரு சம்பவங்கள் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் பிரிவினைவாதிகள் கரங்கள் எப்படி ஓங்கி இருக்கின்றன என்பதை நாட்டுக்கு எடுத்துக்காட்டுகின்றன.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், இஸ்ரோ ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிக்காக அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அவரை வரவேற்று, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வைத்திருந்த வரவேற்பு பேனரில் இடம்பெற்றிருந்த ராக்கெட்டின் முகப்பில் இந்திய தேசியக் கொடிக்கு பதிலாக சீன தேசியக் கொடி இடம்பெற்றிருந்தது.
இந்த விளம்பரம் அன்று காலையிலேயே பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. காரணம் அதற்கு முந்தைய நாள் தான் திருவனந்தபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இடம்பெறப் போகும் நான்கு பேரை அறிமுகப்படுத்திவிட்டு இஸ்ரோவின் சாதனைகளை பறைசாற்றி விட்டு வந்தார்.
பிரதமர் கலந்து கொள்ளப் போகும் நிகழ்ச்சியும் கூட பாரதத்தின் விண்வெளி வலிமையை உலகுக்குப் பறைசாற்றிய இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதள அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி. ஆனால் விளம்பரத்தில் இடம்பெற்றிருந்ததோ அண்டை நாடான ஆக்கிரமிப்பு வெறியில் அலைந்து கொண்டு, நம் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டு வரும் சீனாவின் ஏவுகணை மற்றும் கொடியுடன் கூடிய படங்கள். குறிப்பாக அந்த படத்திற்கு அருகில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் படம் வேறு!
சுய சார்பு, நாட்டின் வளர்ச்சி, சுதேசி சிந்தனை என தனது மன் கி பாத் உள்ளிட்ட வானொலி நிகழ்ச்சிகளின் மூலமும் மேடைப் பேச்சுகள் வாயிலாகவும் வலியுறுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடியின் படம், சீன கொடி போடப்பட்ட விளம்பரத்தில் இடம்பெற்று இருந்த காரணத்தால் அது குறித்து தனது அதிருப்தியை தெரிவிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.
எனவே, இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்தார்கள். இதை அடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. ஏற்கனவே இலங்கை வழியாகவும், தமிழகத்திலேயே இருக்கின்ற ஆதரவாளர்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் சீன ஆதரவு பிரச்சாரம் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஆளும் கட்சியின் தரப்பிலேயே சீன ஆதரவு நிலை எடுத்து பாரதத்தின் இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் சம்பவங்கள் நடப்பது பெரும் கவலைக்குரியது. இது ஒரு சம்பவம்.
அடுத்து, கர்நாடகாவில் நடந்த, நாடாளுமன்ற மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் உசைன் என்பவர் வெற்றிபெற்றதாக அறிவித்ததும், சட்டசபை வளாகத்தில் கூடியிருந்த அவரது ஆதரவாளர்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டனர். ஏற்கனவே பெங்களூரு, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக அறியப்பட்டதுடன், கடந்த காலங்களில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத சம்பவங்கள், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட இடமாகவே அறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது இன்னொரு சம்பவமாவம பதிவாகியுள்ளது. மேலும் சட்டமன்ற வளாகத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் ஒலித்த ஓரிரு தினங்களில் சரியாக வெள்ளிக்கிழமை மதியம், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளில் நடப்பதைப் போன்று, பெங்களூரு நகரத்தின் ஒயிட்ஃபீல்ட் பகுதியில் ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டுகள் வெடித்தது!
மேலோட்டமாகப் பார்த்தால் இந்த இரு சம்பவங்களுமே திட்டமிட்டு நடந்த தவறுகள் அல்ல என்பது போல் தெரியும். பேனரை டிசைன் செய்யும்போது, டிசைன் செய்பவர் இணையதளத்தில் தேடிக் கிடைத்த படத்தை எடுத்து வைத்து கவனக்குறைவாக நடந்து கொண்டது போல் தோன்றும். ஆனால் அது ஏன் ஒரு அமெரிக்க ராக்கெட் ஆகவோ, ரஷ்ய ராக்கெட் ஆகவோ இல்லாமல் மிகத் தெளிவாக சீன ராக்கெட், சீனக் கொடியுடன் படம் மாட்டுகிறது என்பதை பற்றி நாம் யோசிக்க முடியாதா?
அது போல் கர்நாடக காங்கிரஸ் வேட்பாளரின் ஆதரவாளர்கள் உற்சாக மிகுதியால், வாய்தவறி பாகிஸ்தானை வாழ்த்தி கோஷமிட்டனர் என்பது போல் தோன்றும். அப்படியும் சொல்லிக் கூட காங்கிரஸ் காரர்கள் சமாளித்திருக்கலாம். ஆனால், இந்த தவறுகள் குறித்து சம்பந்தப்பட்ட கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கொடுக்கும் விளக்கங்கள்தான், பேராபத்தின் தன்மையை நமக்கு உணர்த்துகிறது.
திமுக அமைச்சரின் விளம்பரத்தில், இந்திய ராக்கெட்டுக்கு பதில், சீன ராக்கெட் படத்தை வைத்திருந்தார்களே என்ற கேள்விக்கு, ‘‘சீனாவை எதிரி நாடாக இந்தியா இதுவரை அறிவிக்கவில்லை. சீன அதிபரை நம்முடைய பிரதமரே விருந்தினராக தமிழகத்துக்கு அழைத்து வந்துள்ளார். பாஜக.,வினர் பிரச்னைகளை திசை திருப்ப இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்’’ என்கிறார் திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், அந்தக் கட்சியின் எம்பியுமான கனிமொழி.
அதாவது சீனாவை எதிரி நாடாக இந்தியா அறிவித்தால் மட்டுமே, சீனாவின் நயவஞ்சகத்தனம் வெளிப்படும் என்பது போல் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் பேசுவது வெட்கக்கேடு. நாட்டில் உள்ள நடப்பு நிலைகளை நாட்டைச் சுற்றி நடக்கும் வெளிநாட்டு ஊடுருவல்களை எல்லாம் ஒவ்வொரு நாளும் பார்த்து அரசியலைத் தெரிந்து புரிந்து பேச வேண்டிய ஒரு நபர், இப்படி மிகக் கேவலமாகப் பேசுவது, அறிவீனத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, குதர்க்கமான, உள்நோக்கம் கொண்ட, பச்சை தேசவிரோத கருத்து மட்டுமே!
பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் என்ற விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்சி ஹரிபிரசாத் என்பவர், சட்டசபையில், ‘‘பாஜக.,வினருக்குத்தான் பாகிஸ்தான் எதிரி நாடு. எங்களைப் பொருத்தவரை பாகிஸ்தான் அண்டை நாடு தான்’’ என்று விளக்கம் கொடுக்கிறார். அவர் விளக்கம் கொடுத்த மறுநாளே பெங்களூரில் பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெடிகுண்டு சம்பவம் என்றால் நாட்டின் பாதுகாப்பு குறித்து கவலைப்படுபவர்கள் என்ன யோசிக்க முடியும்?!
அதாவது, இஸ்ரோ திட்ட விழாவுக்கு வந்த பிரதமரை வரவேற்க சீன ராக்கெட் படத்தை பயன்படுத்தியது தங்களது கவனக்குறைவு அல்லது தவறு என்று ஒப்புக்கொண்டு சொல்லி இருந்தால் இந்த பிரச்சனை எழுந்திருக்காது.
காங்கிஸ் வேட்பாளர் வெற்றிபெற்றபோது பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிட்டதும் தவறு என்பதை மாநில முதல்வர் ஒப்புக் கொண்டிருந்தால், மறுநாள் பெங்களூரில் குண்டு வெடித்தது ஒருவேளை தடுக்கப்பட்டு இருக்கலாம் அல்லது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம்! ஆனால் நடந்த தவறுகளை நியாயப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகள் பொதுவெளியில் பேசுவது மட்டுமல்ல, தவற்றை நியாயப்படுத்தவும் செய்கிறார்கள் என்றால், நடந்த தவறு எதேச்சையாக, கவனக்குறைவால் நடந்ததல்ல. திட்டமிட்டு வேண்டுமென்றே செய்ததே என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.
பாஜக.,வை எதிர்ப்பதாகக் காட்டிக் கொண்டு, இந்த நாட்டிற்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தேசவிரோத செயல்களை எதிர்க்கட்சியினர் செய்வதாகவே சிந்திக்கும் திறன் உள்ள இந்தியர்கள் தெளிவாக வெளிப்படுத்துகிறார்கள். வாக்கு வங்கிக்காக, சிறுபான்மை தாஜா அரசியல் என்ற நிலைப்பாடு எடுத்து, அதை தேச விரோத சக்திகளை தோள்களில் சுமந்து கொண்டு திரியும் கேவலமான நிலைக்கு அரசியல் கட்சிகள் வந்துள்ளது, இந்த தேசத்தை, குறிப்பாக தென்னகத்தை சூழ்ந்துள்ள மிகப்பெரிய ஆபத்து என்பதை மட்டும் நாம் உறுதிபட கூறுகிறோம்!
நமது நாட்டின் கலாச்சார தலைநகரமான சென்னை, திமுக ஆட்சியில் போதைப்பொருள் தலைநகரமாக மாற்றப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார் தமிழக பாஜக., தலைவர் கே.அண்ணாமலை.
அண்மையில் தில்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டதும், அதில் சென்னையைச் சேர்ந்த திமுக., நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர் மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டின் கலாசாரத் தலைநகர் என்று கொண்டாடட்ப் படும் சென்னையை, திமுக., அரசு போதைப்பொருள் தலைநகர் ஆக்கி விட்டது என்று குற்றம் சாட்டியிருக்கிறார் அண்ணாமலை. இது குறித்து அவர் சமூகத் தளத்தில் வெளியிட்ட கருத்துகள்….
நமது நாட்டின் கலாச்சார தலைநகரமான சென்னை, திமுக ஆட்சியில் போதைப்பொருள் தலைநகரமாக மாற்றப்பட்டுள்ளது.
2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய, திமுக நிர்வாகியும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான ஜாபர் சாதிக் என்பவரும் அவரது சகோதரர்களும் கைது செய்யப்படுவதில் இருந்து தப்பியோடி வருகின்றனர்.
நேற்றைய தினம், குஜராத் கடல் பகுதியில், தமிழகப் படகு மூலம் எடுக்கப்படவிருந்த ₹1200 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் கைப்பற்றியுள்ளது.
தமிழக முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், போதைப்பொருள் வியாபாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வேன் என்று கூறினார். ஆனால் அதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை என்பது, அவரது ஆட்சியில் பல மடங்கு அதிகரித்துள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்கள் மூலம் தெரிய வருகிறது.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக, கோபாலபுரம் இளவரசருக்கு நெருக்கமான திமுக பிரமுகர் சிற்றரசு என்பவருக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தை, தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் சோதனையிட்டதைப் படம்பிடித்த பாலிமர் செய்திகள் ஊடகவியலாளர்கள் மீது திமுக குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சஹாரா கூரியர்ஸ் நிறுவனம்தான், ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் விநியோக மையப்புள்ளியாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.
திமுகவினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை தமிழக பாஜக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். திரு முக ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பு வகிப்பது தமிழக மக்களுக்கு உழைப்பதற்காகவே தவிர போதைப்பொருள் வியாபாரிகளுக்காக அல்ல என்பதை நினைவுபடுத்துகிறோம்.
தமிழகம் முழுமையாக இந்தியாவின் போதைப்பொருள் தலைநகரமாக, மாறியிருக்கிறது. போதைப்பொருள் கடத்தல்காரர்களின் புகலிடமாக, நமது மாநிலத்தை மாற்றியதற்காக, திரு முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கூட்டத்தின் தலைவனும், திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவர் ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுக நிர்வாகிகளின் நிறுவனங்களில் தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தி வருகிறது, தமிழகத்துக்குக் கடத்தப்படவிருந்த ரூ.1200 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்கள் குஜராத் கடற்பகுதியிலும், இன்று ரயிலில் கடத்தப்பட்ட 30 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப் பொருள், நுண்ணறிவுத் துறையால் மதுரையிலும் கைப்பற்றப்பட்டுள்ளது.
திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் போதைப் பொருள் கடத்தல் தொடர்புகள் அம்பலமாகிக்கொண்டிருக்கும் வேளையில், திரு முக ஸ்டாலின் இது குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார். இனிமேலாவது அவர் விழித்தெழுந்து நடவடிக்கை எடுப்பாரா அல்லது வழக்கம்போல மக்களின் கவனத்தை இதிலிருந்து முக்கியமற்ற பிரச்சினைகளுக்குத் திசைதிருப்ப, தனது கூட்டத்தை பயன்படுத்தப் போகிறாரா?
சென்னைப் பட்டினத்தில் இருந்து குலசேகரன் பட்டினம் வரை…
நேற்றைய தினம் நம் பாரதப் பிரதமர் இஸ்ரோவின் மற்றொரு ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டும் வேளையில்…… அங்கே இருந்து தான் சீனாவின் ராக்கெட்டையே நம் இந்திய தேசம் தான் ஏவ இருப்பதாக ஓர் தொலைநோக்கு பார்வையை ஆளும் திராவிடம் தனது சிந்தனா சக்தியை வெளிப்படுத்தியது.
அட இதென்ன பிரமாதம்…… எதிர் காலத்தில் மட்டுமல்ல…, கடந்த கால சம்பவத்திலும் மாற்றம் செய்து காண்பிப்போம் என்கிற ரீதியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தன் தகப்பன் தான் இதற்கான முன் முயற்சி எடுத்தார் என எடுத்துச் சொல்லி தன் பிரதாபங்களை எல்லாம் வெளிப் படுத்தி இருந்தார்.
ஓர் விஷயத்தை சுலபமாக இவர்கள் மறந்து விட்டார்கள்….. வரலாற்று பக்கங்களில் அவை இன்னமும் ஆழமாக பொதிந்து கிடக்கிறது ….
முதன் முதலில் இந்தியாவிற்கான செயற்கை கோள் ஏவுதளத்தை கண்டறிய அன்றைய இந்திய விண்வெளி ஆய்வு திட்டங்களின் தலைவர் திரு விக்ரம் சாராபாய் தலைமையில், அவரது வழி காட்டுதலின்படி அவரது சக நன்பரும்… ஆகச் சிறந்த புவியியல் வல்லுநரான சிட்னிஸிடம் இந்த பணி ஒப்படைக்கப்படுகிறது. நன்கு கவனியுங்கள்….இது நடந்தது 1968 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்…… கழகம் ஆட்சி பொறுப்பை ஏற்ற காலத்தில் என்பதாக புரிந்து கொள்ளுங்கள்…..
சிட்னிஸ் அதாவது ஏக்நாத் வசந்த் சிட்னிஸ், கிழக்கு கடற்கரை முழுவதும் அலைகிறார்…. அவரது முதல் தேர்வே இன்றைய அதே குலசேகர பட்டிணம் தான். இதற்கு அவருக்கு இரண்டு பிரதான காரணங்கள் இருந்தன…. ஒன்று மகேந்தர கிரி மற்றும் இஸ்ரோவின் முதல் ராக்கெட் ஏவதளம் அமைந்துள்ள திருவனந்தபுரம் அருகே வருகிறது. இரண்டாவது குலசேகர பட்டினத்தின் நில அமைப்பு. ஒப்படர்த்தி அதிகமாக உள்ள பாறைகள் சூழ் மண் பரப்பு. இவை எல்லாவற்றையும் விட பூமி மத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ள இடம் என்பதாலும் தான்……
ஆனால் நடந்தது வேறு.
இந்த இடத்தை குறித்து தமிழக அரசின் கவனத்திற்கு மூன்று முறை கடிதப் போக்குவரத்து நடந்து, துறை ரீதியான அமைச்சரை பார்க்க வந்த போதும் அதன் பின்னரான காலகட்டத்திலும் கூட….. முறையான ஒத்துழைப்பு இல்லை….. அதனை அவர்கள் என்னவென்று புரிந்து கொள்ள கூட ஆளில்லாமல் இருந்திருக்கிறார்கள் என்றே பதிவுகள் சொல்கிறது.இதன் பிறகே திருப்பதி மாவட்டத்தில் வரும் சூலூர்பேட்டைக்கு அருகில் உள்ள இன்றைய ஸ்ரீஹரிக்கோட்டா தேர்ந்தெடுக்கப்பட்டது.
இங்கு இருந்து நம் எஸ் எல் வி ரோகிணி தான் முதலில் புறப்பட்டது.
சரியாக இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் குலசேகர பட்டினத்தின் நில அமைப்பின் சாதகங்களை உணர்ந்து மீண்டும் ஒரு முறை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர ……… இந்த முறை முழு தீர்த்தத்தில் இருந்த அமைச்சர் பெருமான் தனக்கு எவ்வளவு கிடைக்கும் இதில்..என நேரிடையாகவே கேட்டு அதிரடத்திருக்கிறார். அதாகப்பட்டது திராவிடம் நன்றாக வேரூன்றி தவறுகளை கூட விகல்பம் இல்லாமல் மிக நேர்த்தியாக செய்யும் இடத்திற்கு வந்திருக்கிறார்கள். தலை தலையாய் அடித்துக் கொண்டு சென்றவர்கள் பத்து ஆண்டுகளுக்கு பிறகு சந்திராயன் -1 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறார்கள். காலக் கணக்கை நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்.இதோ சந்திராயன் -3 அதே ஏவுதளத்தில் இருந்து ஏவ நாள் பார்த்து வருகிறார்கள்.
நம் இந்தியர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டம் தான் ககண்யான். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு…. இதில் இடம் பெறும் வீரர்கள் வரை தேர்வு செய்து இருக்கிறார்கள். இவர்களை தான் நாட்டுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார் நமது பிரதமர் இந்த வருகையின் போது…. ககண்யான் திட்டத்தின் பெரும் நோக்கம், இவர்களோடு முதலில் சந்திரனுக்கு மேலாக பறப்பது…… பிறகு நிலவில் தரையிரங்குவது., என இரண்டு கட்டமாக இதனை செயல்படுத்த இருக்கிறார்கள். இதனோடு கூடவே விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை ஏற்படுத்துவதும்…..அதனை முழுக்க முழுக்க நம்மவர்களைக்கொண்டே உருவாக்குவதும் என்பதையே பிரதானமாக கொண்டு இருக்கிறார்கள். இதனை அனைத்தும் இங்கு குலசேகர பட்டினத்தின் அமையவுள்ள ஏவுதளத்தில் இருந்தே செயல்படுத்த இருக்கிறார்கள்.
பூர்வாங்க பணியில் 30% நம்மவர்கள் முடித்து விட்டு இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இதில் இவர்கள் எங்கே வந்தார்கள் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.நேற்றைய தினமே நமது ரோகிணியை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இருக்கிறார்கள்.
இவர்களால் உக்ரைனில் இருந்து எல்லாம் பயணிகளை மீட்டெடுத்து வர முடியுமே தவிர இங்கு உள்ள ஊரப்பாக்கத்தில் ஒரு பேருந்து முணையத்தை கூட முறையாக இயக்க தெரியாது. நூற்றாண்டு கொண்டாடுபவரின் பெயரை வைத்து விட்டு வெறும் நூறு நாட்களுக்கு கூட அந்த பெயரில் அழைக்க…. அடையாளப் படுத்த தயங்கும் சூரர்களை கண்டவர்கள் தான் இவர்கள் என்பதை புரிந்து கொண்டால் போதும்.
நம் விஷயத்திற்கு வருவோம்…..
ஏற்கனவே உலக அளவில் புகழ் பெற்ற முதல் தரமான ஏவுதளம் எனப் பெயர் பெற்றது அமெரிக்க கென்னடி விண்வெளி ஏவுதளம் தான். அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது நம் இந்திய இஸ்ரோவிற்கு சொந்தமான ஸ்ரீஹரிக்கோட்டா. அப்படி இருக்க எதற்காக மற்றோர் ஏவுதளம்…..?
அதற்கு காரணம் உண்டு.
தற்சமயம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவுப்படும் போது புவி வட்ட பாதையை அடைய நாம் இலங்கையை தவிர்க்க வேண்டி கிழக்கில் ஏவி பிறகு அதன் பாதை மாற்ற வேண்டி வருகிறது. குலசேகர பட்டிணத்தில் இருந்து அப்படி அல்ல…… நேரிடையாக நம்மால் விண்ணில் ஏவ முடியும். அடுத்ததாக அதி சக்தி வாய்ந்த ஏவலின் போது பூமி அதிக அளவில் அதிர்வு கொள்ளும்.இதனை தாங்கும் அளவுக்கு அந்த நிலப்பரப்பு இருத்தல் அவசியம்…… அது நமது குலசேகர பட்டிணத்தில் இருக்கிறது. தவிர கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நில அமைப்பை அந்த இடம் கொண்டுள்ளதால் நம்மால் சுலபமாக பல பாதுகாப்பு தொழில்நுட்ப விஷயங்களை சாதிக்க முடியும் என்கிறார்கள்.
மிக முக்கியமாக சீனாவின் கொட்டத்தை இந்த பிராந்தியத்திலேயே இல்லாத வகையில் பாதுகாப்பு முறைமைகள் கையாள முடியும் என்கிறார்கள்.
இலங்கையை தொட்டு மாலத்தீவு வரை தனது அக்டோபஸ் கரங்களால் விழுங்க காத்திருக்கும் ஒரு தேசத்திற்கு…… இங்கு உள்ள சில கூமுட்டைகள் கூடிகுலாவி ….. தன் சுயநலத்திற்காக இங்குள்ள நம்மை அடகு வைக்க சமயம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள்….. அதன் வெளிப்பாடே நேற்றைய விளம்பரம். இந்த லட்சணத்தில் இவர்களுக்கு வாய் காது வரை நீள்கிறது. இவர்களுக்கு எல்லாம் அம்மையார் பாணி அரசியல் தான் சரி….. அவராக இருந்திருந்தால் விழா தொடங்குவதற்கு முன்பாக தேசத் துரோக வழக்கு பாய்ந்து கம்பி எண்ணிக் கொண்டு இருந்திருப்பார்கள் இவர்கள். எம்பி, எம் எல் ஏ பதவி வரை நீதிமன்றத்தால் கேள்விக்கு உள்ளாகி இருக்கும். அவர்களிடம் போய் கண்ணே… கனியே… என்றால் ஆகுமா????
திருக்கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடங்கள் கோவில் உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கை…
தமிழகத்தில் அறநிலையதுறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் இருந்து கல்லூரிகள் துவக்குவது மற்றும் கோயில் நிதியை தவறாக பயன்படுத்துவது போன்றவற்றை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட பொதுநல வழக்கு விசாரனையின்போது புதிதாக கல்லூரிகள் துவங்க தடை விதித்தும் ஏற்கனவே துவங்கி நடக்கும் கல்லூரிகள் வழக்கின் இறுதி உத்தரவுக்கு கட்டுபட்டது என்ற அடிப்படையில் தொடர்ந்து நடத்த அனுமதித்து மாண்புமிகு சென்னை உயர்நிதிமன்றம் உத்திரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கோயில் நிலங்களில் அரசு நிதியை பயன்படுத்தி கல்லூரி கட்டபட்டிருந்தால் அத்தகைய நிலங்களை பயன்படுத்த நியாயமான வாடகை நிர்ணயம் செய்வது குறித்து அறநிலைய துறை மற்றும் மாநில அரசின் கருத்தை நிலைப்பாட்டை அறிவிக்குமாறும் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
வழக்கு விசாரனையின்போது கல்வி நோக்கத்துக்காக அரசு கோயில் நிலங்களை வாடகைக்கு பெற்று கல்லூரி கட்டுவதால் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாப்படும் என்றும் கோயிலுக்கும் வருவாய் கிடைக்கும் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் நோக்கம் நல்லதாக இருந்தாலும் நடைமுறையில் மாறாக இருப்பதே கண்கூடு.
அந்த வகையில் இரண்டு வகையாக இந்த விஷயத்தை அணுகவேண்டும். கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கல்வி நிறுவனங்கள் அமைப்பது. கோயில் நிலத்தை வாடகைக்கு பெற்று அரசு செலவில் கல்வி நிறுவனம் அமைப்பது.
இதில் முதலாவதாக உள்ள கோயில் நிலத்தில் கோயில் நிதியில் கல்வி நிறுவன்ங்கள் அமைப்பதன் மூலம் இந்து பக்தர்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் நடத்தபடும் கல்லூரிகளில் பிற மதத்தினரும் பயன்பெறுகிறார்கள். ஆனால் பிற மதத்தினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் அவர்கள் மத மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதை போல கோயில் நிதியில் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் இந்துமதத்தை சார்ந்த மாணவர்களுக்கு முன்னுரிமை கிடைப்பதில்லை
மேலும், அரசு நிர்வாகம் அல்லது அரசு கட்டுபாட்டில் உள்ள அறநிலையதுறையின் நிர்வாகம் என்ற அடிப்படையில் பிற மதத்தை சார்ந்த கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களை அந்த கல்வி நிறுவனங்களில் நியமிப்பதன் மூலம் அவர்கள் மத ரீதியாக பாரபட்சமாக செயல்படுவதும் சர்ச்சைகளும் ஏற்கனவே திருக்கோயில் நடத்தும் கல்வி நிறுவனங்களில் நடந்துள்ள நிலையில் கோயில் நிதியும் சொத்துகளும் பிற மதத்தினருக்கு மடைமாற்றம் ஆகும் என்ற வகையில் சிறிதும் ஏற்புடையதல்ல.
கல்வி அனைத்து தரப்புக்கும் கிடைக்க செய்வது அரசின் கடமை அதை ஒரு மத வழிபாட்டு தலங்களின் வருவாயை கொண்டு செய்வது பாரபட்சமானது என்பதுடன் அரசின் கடமையை கோயில் நிதியில் நிறைவேற்றுவது சிறிதும் ஏற்புடையதல்ல.
கோயில் நிலங்களை வாடகைக்கு பெற்று அரசு நிதியில் கல்வி நிறுவனங்கள் அமைப்பது கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யபடுவது தடுக்கும் என்று நல்ல நோக்கத்தில் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆனால் அரசின் கல்வி துறையும் அறநிலைய துறையும் எந்தளவுக்கு நியாயமான வாடகை நிர்ணயிப்பார்கள் என்பதும் வாடகை உரிய முறையில் நிலுவை இல்லாமல் செலுத்துவார்கள் என்பதும் உறுதி செய்யமுடியாது, அரசு துறைகள் என்ற அடிப்படையில் வாடகை செலுத்தபடாவிட்டாலும் ஒரு நடவடிக்கையும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் எடுத்ததில்லை.
ஏற்கனவே பல அரசு அலுவலகங்கள் கோயில் நிலங்களை சொற்ப தொகைக்கு கையகபடுத்தி அமைக்கபட்டுள்ளது அதன் மூலம் கோயில் நிலங்களை அரசே பறித்துகொண்டதும் கோயிலுக்கு சொற்ப வருவாயே கிடைத்துள்ளதும் வரலாறு.
அரசுக்கு சொந்தமான ஏராளமான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில் அவற்றை மீட்டு கல்வி நிலையங்களை அரசு நிலங்களிலேயே அரசு நிதியில் அமைக்கலாம்
கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க உயர்நீதிமன்றம் பல கடுமையான உத்தரவுகள் பிறபித்தும் அவற்றை இதுநாள் வரையிலும் மாநில அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை, ஏராளமான சொத்துகள் மீட்கபடாமல் இருக்கிறது.
எனவே கோயில் நிலங்களை ஆக்கிரமிப்புக்கு உள்ளாவதை தடுக்கவும் விரைவாக மீட்கவும் எளிதான சட்ட நடைமுறைகள் கொண்ட சிறப்பு சட்டங்கள் உருவாக்குவது இப்போதைய அவசிய, அவசர தேவையாகும்
மாறாக கோயில் நிலங்களை வாடகைக்கு பெற்று அரசு செலவில் கல்லூரிகள் அமைப்பது கோயில் நிலங்களை அரசு அபகரிக்கவே ஏதுவாகும்.
ஏற்கனவே உயர்நீதிமன்றம் கோவில் இடங்களை கோவில் உபயோகத்தை தவிர மற்ற உபயோகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்ற வழிகாட்டுதலை தந்துள்ளது. கல்லூரி துவக்குவது நடத்துவது மாநில அரசின் கடமை. அதனை கோவிலின் மீது சுமத்துவது ஏற்க முடியாது.
எனவே மாநில அரசும் அறநிலைய துறையும் கோயில் சொத்துகளின் பாதுகாப்பை பிரதானமாக கொண்டு சரியான முறையில் ஆலய சொத்துக்களை பாதுகாப்பது பராமரிக்க வேண்டிய தீர்வை நீதிமன்றத்துக்கு தெரிவிக்கவேண்டும். கோயில் சொத்துக்ளை பாதுகாப்பது மீட்பது குறித்து சிறப்பு சட்டங்களை உருவாகிட நீதிமன்றம் வழிகாட்ட வேண்டும் என்றும் இந்து முன்னணி பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.
காலனி நாடுகள் என்ற பெயர் இந்தியா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு வருவதற்கான காரணம், நானூறு வருடங்களுக்கு முன் ஐரோப்பாவில் ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்களால் தான்! ஐரோப்பாவில் தொழில் புரட்சி தொடங்கியிருந்த காலங்களில் இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மன் ஸ்பெயின் என ஒவ்வொரு நாடும் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் நிறுவனங்களை தொடங்கி இந்தியாவில் வர்த்தகங்களை செய்து வந்தார்கள். அந்த நிறுவனங்கள், தங்களின் கடல் பயண பாதுகாப்புக்காக சொந்த படைகளை வைத்துக் கொண்டார்கள். அந்தப் படைகளே பிற்காலத்தில் நாடுகளைப் பிடித்து, அடிமையாக்கி, கொடூரமான வர்த்தக லாப நோக்கில் பல்வேறு நாடுகளின் மக்களைச் சீரழித்தன.
இப்போது அந்தக் கதை மீண்டும் திரும்பி இருக்கிறது சீனாவின் உருவில்! சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தியும் இதுதான். சீனாவைச் சேர்ந்த பதினாறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு என போர் படைகளை உருவாக்கிக் கொண்டுள்ளன என்ற செய்தி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. இதன் காரணம் என்ன? பின்னணி என்ன? இது ஏற்படுத்தப் போகும் உலகளவிலான தாக்கம் என்ன என்பது குறித்து பலரும் இப்போது விவாதித்து வருகிறார்கள்!
மற்ற ஐரோப்பிய நாடுகளின் போட்டிகள் ஊடாக, 1608 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் மசாலா வர்த்தகர்களாக வந்து இறங்கியது. ஆனால், அதன் இராணுவத்துடன், அது ஆதிக்கம் செலுத்தும் உலகளாவிய ராணுவமாக வளர்ந்தது. நாடுகளின் சொந்த அதிகாரபூர்வ ராணுவங்களை அவமானப்படுத்தக்கூடிய ஒரு பேரரசையே உருவாக்கி விட்டது என்பது வரலாறு.
ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சீன நிறுவனங்கள் தங்கள் சொந்த தன்னார்வப் படைகளை இப்போது அதே பாணியில் உருவாக்கி வருகின்றன.
கடந்த ஆண்டில், தனியார் நிறுவனங்கள் உட்பட 16 பெரிய சீன நிறுவனங்கள், மக்கள் ஆயுதப் படைத் துறைகள் எனப்படும் ஆயுதமேந்திய போராளிகளை அமைத்துள்ளன. அவைகள், தன்னார்வ மக்கள் தொண்டர்களை உள்ளடக்கிய, உலகின் மிகப்பெரிய இராணுவமான பிஎல்ஏ எனப்படும் மக்கள் விடுதலை ராணுவத்தின் பின்னணியிலேயே செயல்படுகின்றன.
ஊடக செய்திகள் படி, இதுவரை, போராளிகள் சீனாவுடன் இயைந்து செயல்படுவதாகவும், அமெரிக்காவின் தேசிய போலீஸைப் போன்றதாகவும் சுட்டிக்காட்டப் படுகின்றன. அவர்கள் இயற்கை பேரிடர் காலங்களில் நிர்வாகத்தின் உதவிக்கு வருகிறார்கள், போரின் போது “சமூக ஒழுங்கை” பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர் எனப்படுகிறது.
ஆனால், வெளிநாடுகளில் சீனாவின் கட்டுக்கடங்காத எழுச்சி எதிர்ப்புகளைக் காணும் இந்த நேரத்தில் இது போன்ற தனியார் படைகள் அமைக்கப்பட்டு வருகிறது கவனம் பெற வைத்திருக்கிறது. மேலும் பல முக்கியமான அம்சங்கள் முழு அளவிலான கொந்தளிப்பாக இங்கே வெடிக்கக் காத்திருக்கின்றன. சீனாவின் உள்நாட்டு பொருளாதார வீழ்ச்சி, சமூக அமைதியின்மையைத் தூண்டி விட்டிருக்கிறது. சமூகத்தின் மீது கம்யூனிஸ்ட் கட்சியின் கடிவாளத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் இறுக்குவதையும் சில நிபுணர்கள் குறிப்பாகக் காட்டுகிறார்கள்.
“எல்லோரும் ஒரு சிப்பாய்” என்ற மாவோவின் முழக்கத்தை இப்போது சீனாவில் மீண்டும் செயல்படுத்திப் பார்க்கிறார்கள். அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் போர்க் குழுக்களில் குடிமக்களை ஆட்சேர்க்கை செய்து வருகிறது சீனா. இது, தைவான் மீதான ஒரு சாத்தியமான மோதலுக்கு சீனா தயாராகி வருவதையே காட்டுவதாகக் கூறுகிறார்கள்.
2022 இல் சீன விண்வெளி ஆய்வுகள் நிறுவனத்தின் தரவுகளின்படி, போர்க் குழுக்கள், சீன ராணுவத்தில் தங்கள் பங்கை மேம்படுத்த பெரிய சீர்திருத்தங்களைச் செய்துள்ளனர். அதன் மூலம், போருக்கான ஒரு முன்தயாரிப்பில், தெளிவான பார்வையை நிறுவுவதில் கவனம் செலுத்துவதை வெளிப்படுத்தியுள்ளனர். “போருக்கான பயிற்சி மைதானத்திற்கும் போர்க்களத்திற்கும் இடையிலான தொலைவைக் குறைத்து, பயிற்சி மைதானமே ஒரு ‘போர்க்களத்தின் பாசறைக் களமாக செயல்படட்டும்” என்பதே இத்தகைய யோசனையின் பின்னணியாம்!
சைனா ஏரோஸ்பேஸ் ஸ்டடீஸ் இன்ஸ்டிடியூட்டுக்காக புளூபாத் லேப்ஸ் எடுத்த சமீபத்திய தகவல் தரவுகள், போர்க் குழுக்கள் தொடர்பான இரண்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. முதலாவதாக, PLA விமானப் போக்குவரத்துக்கு, போராளிகள் குழு மிகவும் முக்கியமான ஆதரவை வழங்குகிறது. இரண்டாவதாக, தங்கள் குடிமக்களின் சொத்துக்கள் மீதான நீடித்த மோதலில் போராளிகள் முக்கியமான பங்காற்றுவர் என்று சீனாவின் மூத்த ராணுவத் தலைவர்கள் நம்புகின்றனர்.
மெதுவான பொருளாதார வளர்ச்சி, தொழிலாளர் வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் ஒரு திடீர் ரக உயர்வைக் கண்டுள்ளது. ஹாங்காங்கை தளமாகக் கொண்ட ஒரு லாப நோக்கற்ற அமைப்பான சைனா லேபர் புல்லட்டின் வெளியிட்ட தகவலின்படி, 2023ல் 1,794 போராட்டங்கள் நடந்தன. இது, 2022 இல் பதிவான போராட்டங்களை விட இரண்டு மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளது.
இத்தகைய நிலையில் தான், தங்கள் போராளிகள் குழுக்களை அறிவித்த நிறுவனங்கள், ஒன்று அரசுக்கு சொந்தமானவை, அல்லது மத்திய அல்லது மண்டல அரசாங்கங்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வருபவை.
டிசம்பர் 2023ல், உலகின் பெரிய பால் உற்பத்தியாளரும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சீன நிறுவனமான யிலி குழுமமும் மக்கள் ஆயுதப் படைத் துறைப் பிரிவை அமைத்தது. ஆனால் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், உள்புற மங்கோலியாவில் உள்ள PLA காரிஸனின் நேரடி நிர்வாகத்தின் கீழ் யிலியின் போராளிகள் உள்ளனர். அங்கு அதன் நிறுவனம் அமைந்துள்ளது. மேலும் அது பிராந்திய அரசின் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் இடமாகவும் விளங்குகிறது.
இந்தப் போராளிகள் தன்னார்வ ஆண்களாக உள்ளனர். சீனாவின் ராணுவ சேவை சட்டத்தின்படி, 18 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள், போராளிகளின் ஒரு பகுதியாக இருக்கத் தகுதியுடையவர்கள். சிறப்புத் திறன் கொண்டவர்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. பெண்களும் சேர தகுதியுடையவர்கள், ஆனால் அவர்களின் வயது உள்ளிட்டவை குறிப்பிடப்படவில்லை!
தற்போது, சீனாவின் போராளி அமைப்பில் எட்டு மில்லியன் பணியாளர்கள் உள்ளனர். இது அதன் அதிகாரபூர்வ சீருடை அணிந்த ராணுவ சேவையை விடப் பெரியதுதான்! அவர்களின் உள்ளூர் பிஎல்ஏ தளத்துடன் ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட, அணி திரட்டப்பட்ட படைவீரர்கள், மற்றும் குடிமக்கள் அமைப்புகளை அதிக அளவில் இது பயன்படுத்துவால் இந்த எண்ணிக்கை பெரிதாக உள்ளது.
அவசர காலங்களில், இந்தப் பணியாளர்கள் உள்ளூர் PLA படைக்கு ஆதரவாக நிறுத்தப்படுவார்கள். உதாரணத்துக்கு, ஜூலை 2023 இல் 400க்கும் மேற்பட்ட போராளிக்குழு உறுப்பினர்கள் சோங்கிங்கில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெள்ளத்தின் போது PLA பணியாளர்களுக்கு உதவினார்கள்.
ஜூன் 2023 இல், ஹுனான் மாகாணத்தில் ஒரு பயிற்சி நடைபெற்றது. அதில் சீனாவின் போராளிகள் குழுவின் உறுப்பினர்கள் ஆளில்லா விமானங்களை இயக்குதல், தாக்குதல் படகுகளை ஓட்டுதல், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வாகனங்களை நிர்வகித்தல் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று செயல்பட்டனர்.
உள்புற மங்கோலியா தன்னாட்சி பிராந்தியத்தின் நிர்வாக துணைத் தலைவர் ஹுவாங் ஜிகியாங் கூறுகையில், “அமைதிக் காலத்தில் பணியாற்றவும், அவசரநிலைகளைச் சமாளிக்கவும், போர்க்காலத்தில் பதிலடி கொடுக்கவும்” யிலியை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசிய பாதுகாப்புப் படையை உருவாக்க இந்தப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது” என்றார்.
பிராந்திய தலைநகரான ஹோஹோட்டில் நடந்த ஒரு விழாவில், பிராந்தியத்திற்கான மூத்த பிஎல்ஏ இராணுவ அதிகாரியும் நகரின் கட்சி செயலாளரும் கலந்து கொண்டனர். இதற்கு முன்னதாக, அரசுக்கு சொந்தமான சொத்து மேம்பாடு மற்றும் கட்டுமான நிறுவனமான ஷாங்காய் முனிசிபல் இன்வெஸ்ட்மென்ட் குரூப், செப்டம்பர் 2023 இல் தனது, சொந்த மக்கள் ஆயுதப் படைத் துறைப் பிரிவை நிறுவியது.
இது PLA இன் ஷாங்காய் படைத்தளத்தினால் கட்டுப்படுத்தப்படும். இந்தப் படைத் தளத்தின் தளபதியான லியு ஜீ, “ராணுவம் தளர்த்தப்பட்ட படைவீரர்களுக்கு வேலை வழங்குவது அல்லது ராணுவத்திற்கு வீரர்களைச் சேர்ப்பது போன்ற பணிகளில் இது ராணுவத்திற்கு உதவும்” என்று கூறியது, நகரிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளான ஜிஃபாங் டெய்லியில் மேற்கோளிட்டு வெளியானது.
குடிமக்களின் சொத்துக்கள் விலை சரிவு, மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. நவம்பர் 2022 இல், Zhengzhou இல் உள்ள உலகின் மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் தொழிலாளர்களின் போராட்டம் வன்முறையாக மாறியது. அவர்கள் காவல்துறையுடன் மோதினர். தொற்றுநோய்க்குப் பிந்தைய தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் பலன்களை அதிகரிப்பதற்கான வாக்குறுதியை Foxconn நிறைவேற்றுவதை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
அக்டோபர் 2023ல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் போராளிகளை அமைப்பதற்கான உந்துதல் “தேசிய பாதுகாப்பு வளர்ச்சியை வலுப்படுத்துவதாகும்” என்று கூறினார்.
மீண்டும் திரும்பிய ‘சீன போராளிகள்’ தத்துவம்!
‘குடிமக்கள் போராளிகள்’ என்ற நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது சீனா. சீனப் புரட்சித் தலைவர் மாவோ சேதுங், ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக நாட்டைப் பலப்படுத்தும் ஒரு வழியாக அதைக் கருதினார். ஆனால் அது கம்யூனிஸ்ட் தலைவருக்கு அதிகாரத்தை உறுதிப்படுத்தவே உதவுகிறது.
1949க்குப் பிறகு, ராணுவம் அரசாங்கங்கள், பள்ளிகள் மற்றும் நிறுவனங்களில் உள்புகுத்தப்பட்டது. 1950 களின் பிற்பகுதியில், தைவான் தொடர்பாக அமெரிக்காவுடன் ராணுவ பதற்றம் அதிகமாக இருந்தபோது, போராளிகள் 220 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டிருந்தனர். நாட்டின் பாதுகாப்புச் சட்டத்தின்படி, போராளிகள் PLA இல் துணைப் பங்கு வகிக்கின்றனர். 1970களில் நாடு பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தியபோது போராளிகள் வெகுவாகக் குறைந்தனர்.
தொற்றுநோய்க்குப் பிறகு சீனாவில் அதிகரித்து வரும் சமூக மற்றும் அரசியல் கொந்தளிப்பு, தைவான் தொடர்பாக அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றம் ஆகியவை நெருக்கடியாகும் இந்நேரத்தில், போராளிகளின் மீள் வருகை பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
நிறுவனங்களின் தனிப்பட்ட ராணுவமான – ‘கார்ப்பரேட் போராளிகள்’ என்ற தத்துவம் மீண்டும் திரும்புவது, நாட்டின் மெதுவான வளர்ச்சி மற்றும் உயர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியின் கடினமான எதிர்காலத்தை நாடு எதிர்கொள்வதால், பொருளாதார வளர்ச்சியை தேசிய பாதுகாப்புடன் சிறப்பாக ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தில் ஷி ஷின்பிங்கின் அதிகரித்து வரும் கவனத்தை அது பிரதிபலிப்பதாக, சீனா பகுப்பாய்விற்கான கொள்கை நிறுவனத்தின் மையம் ஆசியா சொசைட்டியில் சீன அரசியலுக்கான சக உறுப்பினரான நீல் தாமஸ் கூறினார்.
“ராணுவத் தலைமையின் கீழ் உள்ள கார்ப்பரேட் போராளிகள், நுகர்வோர் எதிர்ப்புகள் மற்றும் பணியாளர் வேலைநிறுத்தங்கள் போன்ற சமூக அமைதியின்மை சம்பவங்களை, இன்னும் திறம்பட தணிக்க, கம்யூனிஸ்ட் கட்சிக்கு உதவ முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.
கார்ப்பரேட் துறைக்கு வெளியே, போராளிப் பிரிவுகள் பெரும்பாலும் உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களால், போராளிகளின் பணி விதிகளின்படி ஒழுங்கமைக்கப்படுகின்றன.
ஜேம்ஸ்டவுன் அறக்கட்டளையின் மூத்த உறுப்பினரான வில்லி லாம், தேஜா வூவின் உணர்வை சுட்டிக்காட்டுகிறார். “மாவோவின் முக்கிய முழக்கங்களின் மறுமலர்ச்சியை நாங்கள் காண்கிறோம் – ‘மக்கள் போர்’, அதனுடன் ‘பொது மக்கள் மற்றும் ராணுவத் துறைகளின் இருப்பு” என்பதை CNNல் மேற்கோளிட்டுக் காட்டியுள்ளார்.
தைவான் மீதான படையெடுப்பிற்கு வெகுகாலமாகவே ஷி ஷின்பிங் தயாராகி இருக்கலாம். அப்போது “சீனாவின் பெரும்பகுதி ராணுவ மயமாக்கப்படும்” என்று லாம் கூறினார். பெரிய நகரங்களை “ராணுவ மயமாக்கப்பட்ட மண்டலங்கள்” அல்லது “துறைமுகங்கள்” ஆக மாற்றலாம் என்கிறார் அவர்.
1962ல் இந்தியாவுக்கு எதிரான போரில் ஈடுபட்ட அதே நேரத்தில் நடந்த கொரியப் போர் உட்பட பல்வேறு மோதல்களில், சீனா ராணுவத்தை விரிவாகப் பயன்படுத்தியுள்ளது. இந்தியா-சீனா இடையிலான போர் குறுகியதாகவும் தீவிரமாகவும் இருந்தது. எனவே, மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) 600 மைல்களுக்கு அப்பால் உள்ள இரண்டு முக்கிய தளங்களில் 80,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை நிலைநிறுத்தியபோது, இந்தியாவுக்கு எதிராகவும் சீனா தனது போராளிகளைப் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த இரண்டு தளங்கள், அக்சாய் சின் (காஷ்மீரின் பகுதி) மற்றும் வடகிழக்கு எல்லை ஏஜென்சி (NEFA) (தற்போது அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதி) ஆகியன.
இந்தப் போரின் போது, உள்ளூர் திபெத்திய மக்கள் குழுக்கள் சீனப் படைகளுக்கு தளவாட ஆதரவளித்ததாக, சில நேரங்களில் சீன ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இது, சீனாவின் போராளிகளின் ஈடுபாட்டின் ஒரு வடிவமாகக் கூட இருந்திருக்கலாம்.
அந்த வகையில் பார்க்கும் போது, சீனா தற்போது உருவாக்கி வரும் ’போராளிகள்’ என்ற மீளுருவாக்கம், உள்நாட்டு மக்களை நசுக்குவதற்கு மட்டுமல்ல, அண்டை நாடுகளுக்கு மீண்டும் தலைவலியையும் அமைதியின்மையையும் உருவாக்கும் ஒட்டுமொத்த முயற்சியின் வெளிப்பாடே என்பது தெளிவாகத் தெரியும்.
இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பேச்சு வார்த்தை ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, பூடானுடனான சர்ச்சைக்குரிய பகுதியில் எல்லைக் கிராமங்களை அமைக்க சீனா அழுத்தம் கொடுத்து வருகிறது. இரண்டு நாடுகளையும் பிரிக்கும் மலைப் பகுதியில் குறைந்தது மூன்று கிராமங்கள் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனை ஹாங்காங்கைச் சேர்ந்த சௌத் சைனா மார்னிங் போஸ்ட் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
வறுமை ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் தான் இத்தகைய விரிவாக்கம் இவ்வளவு விரைவாகத் தொடங்கியுள்ளது. ஆனால், இது தேசியப் பாதுகாப்பு தொடர்பானது என்று ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, அதிகாரிகளை மேற்கோள் காட்டி கூறுகிறது.
இது தொடர்பான செய்தி அறிக்கையின்படி, இமயமலையில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில், சீனா மற்றும் பூட்டானுக்கு இடையே நீண்ட காலமாக சர்ச்சைக்குரிய எல்லை மண்டலமாக விளங்கும் பகுதியில், 18 புதிய சீன குடியிருப்பாளர்கள் அங்கே புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளுக்கு குடிபுகக் காத்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் புதிய உருவப்படத்தை கைகளில் ஏந்தியிருந்தனர்! அவர்களுக்குப் பின் ஒரு பளிச்சிடும் சிவப்பு பேனர், சீன மற்றும் திபெத்திய எழுத்துகளில் எழுதப் பட்டு, அவர்களை வரவேற்றது.
டிச.28ல் சீன ஆக்கிரமிப்பு திபெத்திய நகரமான ஷிகாட்ஸேவில் இருந்து 38 குடும்பங்களைக் கொண்ட முதல் தொகுதி மக்கள் – புதிதாக விரிவுபடுத்தப்பட்ட தமலுங் கிராமத்திற்கு குடிபெயர வைக்கப் பட்டனர். இதனை திபெத் தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
“சர்ச்சைக்குரிய மண்டலத்திற்குள் சீனாவால் கட்டப்பட்ட மூன்றில் இந்தக் கிராமமும் ஒன்றாகும். திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள உள்ளூர் அரசாங்கங்கள் கடந்த ஆண்டு எல்லைக் கிராமங்களின் அதிவிரைவான விரிவாக்கத்திற்கு வழிவகுத்தன. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தமலுங் பகுதியில் நடந்த அளவுக்கு இரண்டு மடங்காக இது இருந்தது” என்றது செய்தியறிக்கை. குறிப்பாக, அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட Maxar டெக்னாலஜிஸ், குடியிருப்பாளர்கள் குடியேறுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு எடுத்த இந்தப் பகுதியின் சாட்டிலைட் படங்கள் – 147 புதிய வீடுகளைக் காட்டியது.
2022 ஆம் ஆண்டின் இறுதியில் வெறும் 70 வீடுகளில் வசித்த 200 பேரைத் தவிர, 235 குடும்பங்களுக்கு இடமளிக்கும் வகையில் இந்த கிராமம் விரிவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பூடான் ஆகிய இரு நாடுகளின் எல்லைகளிலும், எல்லா வசதிகளும் கொண்ட கிராமங்களை அமைக்க சீனா தனது திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பூட்டான்-சீனா எல்லை நிர்ணயம் மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான கூட்டு தொழில்நுட்பக் குழுவின் (JTT) பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் “ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்” இரு நாடுகளும் கையெழுத்திட்ட பின்னர், பூட்டானுடனான சர்ச்சைக்குரிய எல்லையில் சீனா தனது எல்லைக் கிராமத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையிலான 25வது சுற்று எல்லைப் பகுதி தொடர்பான பேச்சுவார்த்தை, இந்தியாவுக்கான முன்னாள் சீனத் தூதர் மற்றும் தற்போதைய துணை வெளியுறவு அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்திய பூடான் வெளியுறவு அமைச்சர், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சீனாவிற்கும் பூட்டானுக்கும் ராஜதந்திர ரீதியான உறவுகள் இல்லை தான். என்றாலும், இரு தரப்பிலும் அதிகாரிகள் அவ்வப்போது வந்து பேசுவதன் மூலம் தொடர்பைப் பேணுகிறார்கள்.
சீனா தனது மற்ற 12 அண்டை நாடுகளுடனான தனது எல்லைப் பிரச்னைகளை ஏதோ வழிகளில் தீர்த்துக் கொண்டாலும், இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளுடன் மட்டும், இன்னமும் எல்லை ஒப்பந்தங்களில் கையெழுத்திடவில்லை. அண்மைய ஆண்டுகளில் பூட்டானுடன் முழு அளவிலான தூதரக உறவுகளை நிறுவுவதற்கும், கொந்தளிப்பான எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்துவதற்கும் சீனா முயற்சி எடுத்தது. இது பூட்டானின் பகுதி என்று பூட்டான் உறுதியாகக் கூறியிருந்தும் டோக்லாம் பகுதி மீதான உரிமையைக் கோரிய சீனாவின் முயற்சிகளால் அந்தப் பேச்சுகள் சிக்கலாயின.
2017ல் டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்க சீனா மேற்கொண்ட முயற்சியின் விளைவாக இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது, அது இரு நாடுகளுக்கு இடையே பதட்டத்தைத் தூண்டியது.
டோக்லாம் முச்சந்திப்பில் சீன ராணுவத்தால் அமைக்கப்படும் சாலை குறித்து இந்தியா கடுமையாக எதிர்த்தது. காரணம் இது கோழியின் கழுத்து – சிக்கன் நெக் என்றும் அழைக்கப்படும் குறுகிய சிலிகுரி காரிடார் அருகே இந்தியாவை அதன் வடகிழக்குப் பகுதியை இணைக்கிறது என்பதால், அதன் ஒட்டுமொத்த பாதுகாப்பையும் கேள்விக் குறியாக்கி, தேச நலன்களை பாதிக்கும் இடத்தில் அமைந்திருப்பது என்பதுதான்!
இதனால், இந்த இடத்தில் சாலை அமைக்கும் திட்டத்தை சீனா கைவிட்ட பிறகு, இந்தியா சீனாவுக்கு இடையிலான மோதல் முடிவுக்கு வந்தது.
அடுத்து, 2020ல், பூட்டானில் உள்ள சக்டெங் வனவிலங்கு சரணாலயத்தின் மீது சீனா உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) கவுன்சிலில், திட்டத்திற்கான நிதியை எதிர்ப்பதன் மூலம், ஒரு கோரிக்கையை முன்வைத்தது. GEF கூட்டத்தில் சரணாலயம் தொடர்பான சீனாவின் உரிமைக் கோரலுக்கு, இந்தியாவில் உள்ள சீன தூதரகத்திற்கு பூட்டான் தனது கோரிக்கையை பதிவு செய்தது.
மக்களுக்கு சிறந்த வாழ்க்கை வசதிகளை வழங்குவதற்காக, சீன அரசின் வறுமை ஒழிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக கிராமங்கள் அமையவிருப்பதாக செய்தி கூறியது. ஆனால் அவை தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் “கோட்டைகளாக” இருப்பதாக அரசு சார்பிலான செய்தி உறுதியாகக் கூறியது.
இதுதொடர்பாக வெளியான செய்திகளில், தமலுங்கின் கிழக்கே, மற்றொரு எல்லைக் கிராமமான கியாலாஃபுக்கில், கடந்த ஆண்டு 16 சதுர கிமீ பரப்பில், 150க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வழிவகுப்பதற்காக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதாகவும், தற்போதுள்ள நான்கு வரிசை குடியிருப்புகளுக்கு அடுத்ததாக புதிய வீடுகள் அமைந்திருப்பதையும், சிறிய நூலகம் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய கம்யூனிஸ்ட் கட்சி சமூக மையம் அமைக்கப் பட்டிருப்பதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டின.
சீனாவின் அரசு ஊடகத்தை மேற்கோள்காட்டும் இந்த செய்தியறிக்கையில், 2007 ஆம் ஆண்டில் இரண்டு வீடுகளுடன், தண்ணீர் அல்லது மின்சாரம் இல்லாமல், இங்கே ஒரு குடியிருப்பு நிறுவப்பட்டது. இது ஷி ஜின்பிங்கின் வறுமை ஒழிப்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக, 2016-18 முதல் ஒரு மாதிரி கிராமமாக மாற்றி அமைக்கப்பட்டது.
ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலான பீப்பிள்ஸ் டெய்லி, 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 620 க்கும் மேற்பட்ட “எல்லை செழிப்பு கிராமங்கள்” உருவாக்கப்பட்டதாக கூறியது. இது, கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு குறிக்கோளுக்கான ஷி ஜின்பிங்கின், நாட்டின் வறுமை ஒழிப்புக்கான காலக்கெடு என்றும், உள்ளூர் அதிகாரிகளும் அரசு ஊடகங்களும் இந்த கிராமங்கள் மக்களுக்கு நவீன வீடுகளை வழங்குதல் மற்றும் எல்லையைக் காத்தல் என்னும் இரட்டை நோக்கத்துடன் கட்சியின் மிக உயர்மட்டத்தில் இருந்து பெறப்பட்டதாகவும் கூறின.
இப்படி, சீன அரசு வெளியில் ஒன்றைச் சொல்லிக்கொண்டு, உள்ளே வேறொரு உள்நோக்கத்துடன் தனது எல்லை கிராமங்களில் அண்டை நாட்டுடனான சமச்சீரற்ற கொதிநிலையை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டே வருகிறது. அதனையே இந்தச் செய்திகள் வெளிக்காட்டுகின்றன.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று, பாஜக., மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட, ‘என் மண் என் மக்கள்’ – நடைப்பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி பல்லடத்தில் நடைபெற்றது. அதில்கலந்து கொண்டு பேசினார் பிரதமர் மோடி. பின்னர் மாலை மதுரைக்குச் சென்று, மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். இரவு மதுரையில் தங்கிய அவர், தொடர்ந்து இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தூத்துக்குடி புறப்பட்டார்.
இன்று காலை மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடி, வ.உ.சி. துறைமுக வளாகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.
பின்னர் தூத்தூக்குடியில் இருந்து பிரதமர் மோடி நெல்லை வந்தடைந்தார். காரின் படிக்கட்டில் நின்று தொண்டர்களைப் பார்த்து கையசைத்தவாறு பிரதமர் மோடி சென்ற போது, வழி நெடுகிலும் தொண்டர்கள், மோடி மோடி என உற்சாக கூச்சலிட்டு அவரை வரவேற்றனர்.
அதன் பின்னர் நெல்லையில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். நெல்லை பாளையங்கோட்டையில் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு பிரதமர் மோடி வந்த போது, பிரதமரைப் பார்த்து தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர். பொதுக்கூட்ட மேடையில் அண்ணாமலை, எல்.முருகன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் அமர்ந்திருந்தனர். பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜான் பாண்டியன், தேவநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பேசத் தொடங்கிய பிரதமர் மோடி, “அனைவருக்கும் வணக்கம்” என தமிழில் கூறி, நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்! அல்வாவை போல நெல்லை மக்களும் இனிமையானவர்கள் என்ற போது, மாநாட்டுப் பந்தலில் இருந்த தொண்டர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.
பிரதமர் மோடியில் பேச்சில் இருந்து…
தமிழ்நாட்டின் அனைத்து மக்களும் பாஜகவின் பக்கம் நிற்பதை நான் பார்க்கிறேன்.
பாஜக அரசு ஒரு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது.
தமிழக மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது.
உங்களின் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும் என்பது மோடியின் உத்தரவாதம்.
தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தமிழர்கள்.
பாஜக தான் தமிழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி.
மாற்று எரிசக்தி துறையில் உலகின் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது.
நாடு ஒரு புதிய எண்ணத்தோடு பணியாற்றி வருகிறது. இதன் பலன் தமிழகத்திற்கு கிடைக்கும்.
உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.
இது மத்திய அரசின் செயல்பாடுகளால் வருகிறது
தமிழக மக்கள் பாஜகவின் பின்னே வர தொடங்கி உள்ளனர்.
பாஜக ஆட்சியில் தமிழகம் டெல்லிக்கு மிக அருகே வந்திருக்கிறது.
5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 21 லட்சம் வீடுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்பட்டது. இன்று அது 1 கோடியாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 40 லட்சம் மகளிருக்கு உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் கிடைக்கிறது.
உஜ்வாலா எரிவாயு சிலிண்டர் மூலம் தமிழக பெண்களின் வாழ்க்கை எளிதாகி உள்ளது. இதனால் எனக்கு தமிழகத்தில் பெண்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.
இன்று நாடு 100 அடி முன்னேறுகிறது என்றால், தமிழகமும் மிக வேகமாக 100 அடி முன்னேறும், இது மோடியின் உத்தரவாதம்.
தமிழகத்தில் 50 லட்சம் பேர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ உதவி பெறுகிறார்கள்.
மக்கள் விருப்பத்திற்கு எதிராக செயல்படும் மாநில அரசிடம் கணக்கு கேட்க வேண்டிய நேரம் இது.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை படுகுழியில் தள்ளிவிட்டார்கள்.
நான் இதை தொடர விட மாட்டேன். இது மோடியின் உத்தரவாதம்.
பல ஆண்டு காத்திருப்புக்கு பின் அயோத்தியில் குழந்தை ராமர் ஆலயம் அமைந்திருக்கிறது.
அயோத்தி ராமர் கோவில் பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் நடந்தபோது திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
காங்கிரசும், திமுகவும் நாட்டை பிரிக்கின்றன.
தமிழகத்தில் இருந்து ஒருவரை நாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக்கி உள்ளோம். அவரை ம.பி.யில் இருந்து தேர்வு செய்துள்ளோம்.
தமிழகத்தின் மீது அதிக அன்பு எங்களுக்கு இருக்கிறது.
கத்தாரில் இருந்து தண்டனை பெற்ற 8 முன்னாள் ராணுவ வீரர்களை இந்தியா அழைத்து வந்துள்ளோம்.
மத்திய அரசுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. தவறானவர்களை திருத்த வேண்டிய நேரம் இது.
மோடியை மீறி இந்தியா மீது யாரும் கை வைக்க முடியாது.
தமிழகத்தில் தி.மு.க. இனி இருக்காது, எங்கு தேடினாலும் கிடைக்காது.
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு, வளர்ச்சியடைந்த தமிழகம் மிக அவசியம்.
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் மூலம் வணிகம் பெருகி இருக்கிறது.
நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய இடங்களில் சூரிய மின்சக்தி திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.
வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்தில் மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.
விருதுநகரில் பிரதம மந்திரி ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது
‛‛ தமிழகத்தில் இனி தி.மு.க.,வைத் தேடினாலும் கிடைக்காது”
தூத்துக்குடி, தமிழ்நாட்டில் பிப்ரவரி 28, 2024ஆம் தேதியன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அரசுநலத் திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டியும், திறந்து வைத்தும், மக்களுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்
Speaking at inauguration and foundation stone laying ceremony of various development works in Thoothukudi.https://t.co/xthaafMBuW
மேடையில் வீற்றிருக்கும் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர் என் இரவி அவர்களே,
என்னுடைய சகாவான சரபானந்த சோனோவால் அவர்களே,
ஸ்ரீபாத் நாயக் அவர்களே, ஷாந்தனு டாகுர் அவர்களே, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்களே, மாநில அரசின் அமைச்சர் அவர்களே, இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களே,ஆன்றோர்களே,
தாய்மார்களே, பெரியோர்களே,
வணக்கம்!!
இன்று தமிழ்நாடு தூத்துக்குடியிலே வளர்ச்சியின் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. பல திட்டங்கள் தொடங்கப்படுகின்றன அல்லது அடிக்கல் நாட்டுவிழாவைக் கொண்டாடுகின்றன. இந்தத் திட்டங்கள் தாம், முன்னேற்றமடைந்த இந்திய வரைபடத்தின் முக்கியமானதொரு பகுதியாகும். அனைவருடனும், அனைவருடைய முன்னேற்றம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டும் கூட இவை. இந்த முன்னேற்றங்களில் ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உணர்வை நம்மால் காண முடிகிறது. இந்தத் திட்டங்கள் வேண்டுமானால் தூத்துக்குடியில் இருக்கலாம், ஆனால் இந்தியாவெங்கும் பல இடங்களில் இவை வளர்ச்சிக்கு உந்துதலாக விளங்கும்.
நண்பர்களே, இன்று தேசம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. நமது இந்த வளர்ச்சியடைந்த பாரதத்திலே, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டின் பங்களிப்பு அதிக மகத்துவம் வாய்ந்தது. ஈராண்டுகளுக்கு முன்பாக நான் கோயமுத்தூருக்கு வந்திருந்த போது, சிதம்பரனார் துறைமுகத்தின் சரக்குகள் கையாளும் திறனை அதிகரிக்கும் பொருட்டு பல திட்டங்களைத் தொடக்கி வைத்திருந்தேன். துறைமுகத்தை, கப்பல் போக்குவரத்தின் ஒரு பெரிய மையமாக மாற்றியே தீருவேன் என்று அப்போதே நான் வாக்களித்துச் சென்றேன். இன்று அந்த உத்திரவாதம், இன்று அந்த கேரண்டி நிறைவேறியிருக்கிறது.
வ உ சிதம்பரனார் துறைமுகம், OUTER HARBOUR CONTAINER TERMINAL – துறைமுகத்திற்கு வெளியேயான சரக்குக் கப்பல் முனையத்திற்காக, வெகுகாலமாகக் காத்திருந்தது, இன்று அதற்கான அடிக்கல் நாட்டப்படுகிறது.
இந்த ஒரு திட்டத்தில் மட்டும் 7000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட இருக்கிறது. 900 கோடி ரூபாய் மதிப்பிலான பல திட்டங்களும் கூட, இன்று மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தவிர, இன்று பல்வேறு துறைமுகங்களில், கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாய் பெறுமானமுள்ள 13 புதிய திட்டங்களுக்கும் இங்கே அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றன. கடல் வாணிபத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் இந்த புத்துயிர் மற்றும் புதுத் தெம்பு காரணமாக, தமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான பேர்களுக்கு ஆதாயம் கிடைக்கும், இங்கே இருக்கும் இளைஞர்களுக்கு வேலைக்கான புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
நண்பர்களே, ஹைட்ரோஜன் மூலம் இயங்கும் பாரதத்தின் முதல் மக்கள் பயணப்படகு இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. காசியின் கங்கையாற்றின் மீதும் இந்தப் பயணப்படகு, வெகு விரைவிலேயே தனது பயணத்தைத் தொடங்கவிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கும் காசிவாசிகளுக்கும் இடையிலான உறவுப்பாலத்தைக் காணும் பேறு சில நாட்கள் முன்பாக காசிதமிழ்ச் சங்கமத்தில் என்னால் காண முடிந்தது. அப்படிப்பட்ட என்னுடைய தொகுதியாம் காசிக்கு, தமிழ்நாட்டு மக்கள் அளிக்கவிருக்கும் இந்தக் கலமானது, இது ஒருவகையிலே, காசிவாசிகளுக்கு, தமிழ்நாட்டு மக்கள் அளிக்கும் கொடையாகும். இது இரு மக்களுக்கு இடையேயான அன்பெனும் உறவை பலப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கும். வ உ சி துறைமுகத்திலே, உவர்நீரைக் குடிநீராக மாற்றும் ஆலை, பசும் ஹைட்ரோஜன் தயாரிப்பு மற்றும் பங்கரிங், அதாவது எரிபொருள் நிரப்பும் வசதிகளும் இன்று தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்தத் திட்டங்களால், தூத்துக்குடியும் சரி, தமிழ்நாடும் சரி, பசுமை ஆற்றல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான ஒரு மிகப்பெரிய மையமாக மாறும். பாதுகாப்பான எதிர்காலத்திற்கான எந்த மாற்றுக்களின் திசைநோக்கி, இன்று உலகம் பார்க்கிறதோ, அவற்றில் தமிழ்நாடு மிகவும் முன்னேறிய நிலையில் பயணிக்கும்.
நண்பர்களே, உண்மை என்பது எப்போதுமே சற்றுக் கசக்கத்தான் செய்யும். ஆனால் அதன் சத்தியத்தன்மை மட்டும் என்றும் மாறாதது, நிலைத்த நீடித்த நன்மையை அது அளிக்கும். இந்த வேளையிலே நான் யுபிஏ அரசின் மீது ஒரு நேரடிக் குற்றச்சாட்டை முன்வைக்க விரும்புகிறேன் நண்பர்களே. இன்று நிறைவேறியிருக்கும் பல திட்டங்கள் பல தசாப்தங்களாகவே கோரிக்கைகளாகவே மட்டும் இருந்து வந்தன, அவை நிறைவேற்றப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுக் கிடந்தன. அந்த அரசு மக்கள் நலன், நலத்திட்டங்கள் பற்றி ஏதும் கவலைப்படாத அரசாக இருந்தது. ஆனால் இன்று நாங்கள் உங்களின் எதிர்பார்ப்புக்களை, உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்து, உங்கள் கனவுகளை நனவாக்கியிருக்கிறோம்.
நண்பர்களே, கடல்வாணிபத் துறையோடு கூடவே இன்று இங்கே, ரயில் மற்றும் சாலைகளை இணைக்கும் பல வளர்ச்சித் திட்டங்களும் கூட தொடங்கப்பட்டிருக்கின்றன. ரயில்வழிகளின் மின்மயமாக்கலும், இரட்டைவழி ரயில்பாதைக்கான பணிகளும் தென் தமிழ்நாடு மற்றும் கேரளத்திற்கு இடையேயான இணைப்பை மேலும் சிறப்பானதாக ஆக்கும். இதனால் திருநெல்வேலி-நாகர்கோவில் பகுதியின் மீது படியும் தாக்கமும் குறைவாகும். இதைப் போலவே தமிழ்நாட்டின் சாலைவழி கட்டமைப்பை, மேலும் நவீனமானதாக ஆக்க, 4500 கோடி ரூபாய் செலவில், 4 பெரிய திட்டங்களையும் நான் மக்களுக்கு அர்ப்பணித்திருக்கிறேன். இவற்றால் மாநிலத்தின் சாலைவழி இணைப்புகள் மேலும் சிறப்பானவையாகும், பயணநேரம் குறைவாகும்; அதோடு கூடவே, சுற்றுலாவுக்கும், தொழில்களுக்கும் ஒரு உந்துசக்தி உண்டாகும். ஒரு சேவகனாக, உங்களின் பிரதம சேவகனாக அர்ப்பணிப்போடு இவற்றை நிறைவேற்றி வருகிறோம்.
நண்பர்களே, ஒருங்கிணைந்த, முழுமையான கண்ணோட்டம் கொண்ட அணுகுமுறையோடு இன்று தேசம் பணியாற்றி வருகிறது. ரயில்வே, நெடுஞ்சாலை, நீர்வழி என பல்வேறு துறைகள் ஈடுபட்டாலும் கூட, மூன்று துறைகளின் நோக்கம் என்னவோ ஒன்று தான் – தமிழ்நாட்டைச் சிறப்பாக இணைப்பது, சிறப்பான வசதிகள் அளிப்பது, தொழில்களுக்குச் சிறப்பான சந்தர்ப்பங்களை உருவாக்குவது, இது தான். ஆகையினாலே தான் கடல்வாணிபத் திட்டங்கள், சாலைவழித் திட்டங்கள், ரயில்பாதைத் திட்டங்கள் என இவையனைத்தும், ஒன்றுபோலத் தொடங்கப்பட்டிருக்கின்றன அல்லது நிறைவடைந்திருக்கின்றன.
பல்முனை இணைப்பு என்ற இந்த அணுகுமுறை, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மேலும் விரைவைக் கூட்டும். நவீன கட்டமைப்பை நிர்மாணிக்க வேண்டித் தொடங்கப்பட்டிருக்கும் பிரதம மந்திரி கதிசக்தி தேசிய பெருந்திட்டம் காரணமாகவும் கூட, இதற்குப் பேருதவி கிடைக்கும். இந்தத் திட்டங்கள் அனைத்தின் பொருட்டும், நான் உங்கள் அனைவருக்கும், மேலும் தமிழ்நாட்டின் என்னுடைய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே, தேசத்தின் முக்கியமான கலங்கரை விளக்கங்களை, சுற்றுலா இடங்களாக மேம்படுத்த முடியும் என்று நான் ஒருமுறை மனதின் குரல் நிகழ்ச்சியில் கூட கூறியிருந்தேன். பல்வேறு மாநிலங்களில் அமைந்திருக்கும் 75 கலங்கரை விளக்கங்களில், மேம்படுத்தப்பட்ட சுற்றுலா வசதிகளை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் பெரும்பேறு எனக்கு இன்று கிடைத்திருக்கிறது. வரவிருக்கின்ற காலத்திலே, இவை தேசத்தின் பெரிய சுற்றுலா மையங்களாக மாறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நண்பர்களே, பாரத அரசின் முயற்சியால் நவீன இணைப்புத்திறனில் இன்று தமிழ்நாடு, ஒரு புதிய உயரத்தை எட்டியிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளிலே தமிழ்நாட்டில், 1300 கிலோமீட்டர் நீளம் ரயில் கட்டமைப்பு செயல்பாட்டுக்குவந்திருக்கிறது. 2000 கிலோமீட்டர் அளவிலான ரயில்வழிகள் மின்மயமாக்கப்பட்டிருக்கின்றன. ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதி-பாதுகாப்பிற்காக, பல நூற்றுக்கணக்கான மேம்பாலங்களும், சுரங்கப்பாதைகளும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ரயில் நிலையங்கள், நவீன வசதிகளால் இழைக்கப்பட்டிருக்கின்றன. உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தைப் பெற்றிட, இன்று தமிழ்நாட்டில் 5 வந்தே பாரத் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. சாலை கட்டமைப்பிலும் கூட பாரத அரசு தமிழ்நாட்டிலே கிட்டத்தட்ட ஒண்ணரை இலட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைச் செய்து வருகின்றது. இதன் விளைவாகத் தான் கடந்த பத்தாண்டுகளிலே தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் வலைப்பின்னல் வேகமாக அதிகரித்திருக்கிறது. மத்திய அரசின் சீரிய முயற்சி காரணமாக அதிகரித்து வரும் இந்த இணைப்பு, தமிழ்நாட்டில் வாழ்க்கை வாழ்வதில் சுலபத்தன்மையை அதிகரித்து வருகிறது. நண்பர்களே, இது ஏதோ ஒரு அரசியல்கட்சியின் கொள்கைத் திட்டமோ, தனிமனிதக் கோட்பாடோ கிடையாது. இது வளர்ச்சிக்கான சித்தாந்தம், வளர்ச்சிக் கோட்பாடு. இதையே நாங்கள் முன்னெடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் இவற்றையெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கும் பத்திரிக்கைகள்-ஊடகங்கள் வெளியிடாது, இருட்டடிப்பு செய்து விடும். ஏனென்றால், இங்கே இருக்கும் அரசாங்கம் இவற்றை வெளியிட அவர்களுக்கு அனுமதி அளிக்காது. ஆனாலும் நாங்கள் தடைப்பட மாட்டோம், தங்கிப் போக மாட்டோம், விடாமல் தொடர்ந்து வளர்ச்சிப் பயணத்தில் தமிழ்நாட்டுக்குத் தோள் கொடுப்போம், துணையாய் வருவோம்.
நண்பர்களே, நீர்வழிகள் மற்றும் கடல்வழிவாணிபத் துறையை, பல தசாப்தங்களாகவே நமது தேசம் எதிர்பார்ப்போடு தொடர்ந்து நோக்கி வந்திருக்கிறது. ஆனால், பல எதிர்பார்ப்புக்களைத் தாங்கிக் கொண்டிருந்த இந்தத் துறைகள் தாம், இன்று வளர்ச்சியடைந்த பாரதத்தின் அஸ்திவாரம் ஆகி வருகின்றன. தமிழ்நாட்டிற்கும், தென்னாட்டிற்கும் இதனால் மிகப்பெரிய ஆதாயம் கிடைத்து வருகிறது. தமிழ்நாட்டின்வசம் மூன்று பெரிய துறைமுகங்கள் இருக்கின்றன, ஒரு டஜனுக்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களும் இருக்கின்றன. நமது தென்னாட்டின் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களின் கரையோரப்பகுதிகளும், எல்லையில்லா சாத்தியக்கூறுகள் நிறைந்தவையாக இருக்கின்றன. கடல்வாணிபத் துறை மற்றும் நீர்வழித் துறை ஆகியவற்றின் மேம்பாடு என்பதற்கான நேரடியான பொருள் என்ன தெரியுமா? தமிழ்நாடு போன்ற மாநிலத்தின் வளர்ச்சி. நீங்களே பாருங்கள், கடந்த ஒரு தசாப்தத்திலே மட்டும், வ உ சி துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்து, 35 சதவீதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும், இந்தத் துறைமுகமானது, 38 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டிருக்கிறது. இதன் ஆண்டு வளர்ச்சி வீதம் கூட கிட்டத்தட்ட 11 சதவீதமாக இருந்திருக்கிறது. இதனைப் போன்ற பலன்கள் தாம் இன்று தேசத்தின் பிற பெரிய துறைமுகங்களிலும் கூட காணக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த வெற்றிகளின் பின்னணியிலே, பாரத அரசின் சாகர்மாலா போன்ற திட்டங்களின் ஒரு பெரிய பங்களிப்பு அடங்கியிருக்கிறது.
நண்பர்களே, மத்திய அரசின் முயற்சி காரணமாக, கடல்வாணிபம் மற்றும் நீர்வழித் துறைகளில், இன்று பாரதம் பெரும்புகழ் ஈட்டி வருகிறது. கடந்த பத்தாண்டுகளிலே, ஏற்பாட்டியல் செயல்பாட்டுக் குறியீட்டில், பாரதம் பல புள்ளிகள் உயர்ந்து, 38ஆவது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறது. நம்முடைய துறைமுகத் திறன், இந்த ஓர் தசாப்தத்தில் மட்டும் இரண்டு பங்காகியிருக்கிறது. தேசிய நீர்வழிகளில் 8 மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறது. பாரதத்தில் நீர்வழி உல்லாசப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை நான்கு பங்கு அதிகரித்திருக்கிறது.
கப்பல் பயணிகளின் எண்ணிக்கையும் கூட இரண்டு மடங்கு அதிகரித்து விட்டது. இனிவரும் காலங்களில், கடல்வாணிபத் துறையின் இந்த வளர்ச்சி, பல மடங்கு அதிகரிக்க இருக்கிறது, இதனால் பெரிய ஆதாயம் கரையோர மாநிலமான தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் என்பது உறுதி. வரவிருக்கும் காலத்திலே, தமிழ்நாடு, இந்த வளர்ச்சிப் பாதையில் பயணித்து, மேலும் வேகமாக முன்னேறும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதனால் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். மூன்றாவது முறையாக நாம் ஆட்சியமைக்கும் போது, இங்கே வளர்ச்சி என்பது தொடர்கதையாகும் என்ற உத்திரவாதத்தை, காரண்டியை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம். இன்று தொடங்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற, நாங்கள் எப்போதும் போலவே நிறைவான பலத்தோடு முயற்சி செய்வோம். மேலும், தமிழ்நாட்டு மக்களுக்கு, இது, மோதி அளிக்கும் உத்திரவாதம், மோதியின் கேரண்டி.
நான் கடந்த இரண்டு நாட்களாகவே தமிழ்நாட்டின் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அனைத்து இடங்களிலும் தமிழ் மக்கள் எனக்கு அளித்துவரும் அன்பு, ஆதரவு, பாசம் ஆகியவை என் மனத்தைத் தொடுகின்றன. உங்களின் உற்சாகம், உங்களுடைய ஊக்கம் ஆகியவை என்மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டன. ஒன்றை உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் சகோதர சகோதரிகளே, நீங்கள் காட்டும் இந்த அன்பு, நீங்கள் பொழியும் இந்த பாசம், நீங்கள் அளிக்கும் இந்த நல்லாசிகள் – இவையனைத்தையும் நான் பலபங்காக்கி உங்களுக்கே திருப்பித் தருவேன் என்பதை மட்டும் இந்த வேளையிலே நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
உங்கள் அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை, பலப்பல நல்வாழ்த்துக்கள்!! நன்றி!!
Madurai People still remember MGR’s good governance in Tamil Nadu Prime Minister Narendra Modi said that only if PM Modi gave good governance during MGR’s rule in Tamil Nadu, people would still remember him.
At Karupayurani TVS Higher Secondary School Madurai, he started the digital conference of small businessmen and said: MGR in Tamil Nadu has done charity to the people without selfishness, till today people keep his picture in their houses and think of him as a deity. He is still a great leader who is admired by the people.
I know very well that Ammaiyar Jayalalitha gave good governance in Tamil Nadu after her. However, he alleged that the current DMK regime in Tamil Nadu is acting without thinking about the welfare of the people. In the last 10 years, the BJP government in India has improved the industrial development, economic development, and the BJP government continues to do projects that are beneficial to the people, and if the people support the BJP, the BJP government is fighting against bribery and corruptionHe said that he can give good governance. Subsequently, Indian Prime Minister Modi went to Madurai Meenakshi Amman Temple in a vetti shirt and had darshan of Swami.
Rukmini Palanivel Rajan, chairman of the temple trustees, welcomed him with full respect. After visiting Meenakshi Sundareswar, he left for the Taj Hotel in Pasumalai. Seven layers of security will be put up in Madurai in connection with the visit of Indian Prime Minister Narendra Modi was hit More than 1000 policemen are guarding Madurai Meenakshi Amman Temple were engaged in work. Devotees are not allowed inside the temple premises from 5 pm on the occasion of the visit of Prime Minister Modi and Goddess Meenakshi to Madurai. After he finished his darshan of Swami, the devotees were allowed to enter the temple. In connection with the Prime Minister’s visit, the traffic in Madurai was changed. Tomorrow he will participate in various programs in Tuticorin, Tirunelveli district.