Home Blog Page 322

பழனி முருகப் பெருமானுக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலத்தை திருட முயற்சி!

hindumunnani - 2026
  • பழனி முருகப்பெருமானுக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலத்தை திருட முயற்சி.
  • விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விவசாயத் தொழிலை விட்டு வெளியேறும் நிலை உருவாகும்
  • ஒரு அங்குலம் நிலத்தை கூட விட்டுத் தர மாட்டோம்
  • — மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்

பழனி முருகப்பெருமானுக்கு சொந்தமான 220 ஏக்கர் நிலத்தை திருட முயற்சி நட்பதாகக் குறிப்பிட்டுள்ள இந்து முன்னணி இயக்கம், இது தொடபில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

kadeswara subramaniam hindu munnani - 2026

கோயில்களில் ஆறு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற வேண்டும், கோவில் திருவிழாக்கள் எந்தவித குறையும் இன்றி விமர்சையாக நடத்தப்பட வேண்டும், மக்களின் பசி போக்குகின்ற அன்னதானம் வழங்கப்பட வேண்டும். கலை, கலாச்சாரம், பசு பாதுகாப்பு , விவசாயம் உள்ளிட்ட பல்வேறு நற்பணிகளுக்காக தங்களது நிலங்களை கோவில்களுக்காக பக்தர்கள் தானமாக கொடுத்தார்கள்.

அந்த வகையில் பழனி முருகன் கோவிலுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பக்தர்கள் தானமாக வழங்கியுள்ளனர். அதில் ஒரு பகுதியாக ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கள்ளிமந்தயம் கிராமத்தில் 220 ஏக்கர் விவசாய நிலம் பழனி முருகப் பெருமானுக்கு சொந்தமானது. இந்த நிலத்தில் கோ சாலை அமைக்கப்பட்டு பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களை வைத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பராமரித்து வரப்படுகிறது.

தற்போது முருகப்பெருமானின் நிலத்தை அபகரிக்க தமிழக அரசு சூழ்ச்சி செய்து வருகிறது. 1200 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் கோசாலை அமைந்துள்ள பழனி முருகனுக்கு சொந்தமான நிலம் 220 ஏக்கர் உட்பட சுற்றியுள்ள கள்ளிமந்தயம், தேவத்தூர், சிக்க நாயக்கன்பட்டி, விவசாய நிலங்கள் சுமார் 1200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது.

கடந்த 20/7/2023 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பழனி வருவாய் கோட்டாட்சியருக்கு முன்மொழிவுகளை வழங்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒருவேளை அரசின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விவசாயத் தொழிலை விட்டு வெளியேறும் நிலை உருவாகும். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது நன்கு இயங்கி வந்த, பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கிய ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தியது.

தற்போது கோவில் நிலம் மற்றும் விவசாய நிலங்களை அபகரித்து தொழிற்சாலை அமைக்க திமுக முயற்சிப்பது என்ன நியாயம். திமுகவின் போலி விவசாய நாடகம் அம்பலம் ஆகியுள்ளது.

விவசாயிகளின், பக்தர்களின் வயிற்றில் அடித்து கோவில் நிலத்தையும் விவசாய நிலத்தையும் திருட முயற்சித்தால் இந்து முன்னணி வேடிக்கை பார்க்காது, சட்டரீதியாகவும், ஜனநாயக ரீதியாகவும் விவசாய பெருமக்கள் மற்றும் பழனி முருக பக்தர்களை ஒருங்கிணைத்து திண்டுக்கல் மாவட்டம் இதுவரை கண்டிடாத மிகப்பெரிய போராட்டத்தை இந்து முன்னணி முன்னெடுக்கும் என்பதை அரசுக்கு எச்சரிக்கையாக சொல்ல விரும்புகின்றோம்

வாடிப்பட்டி, ஆர்டிஓ., அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்திருப்பு: உரிமையாளர்கள் புலம்பல்!

madurai vadiaptti rto office - 2026

வாடிப்பட்டி, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்திருப்பு: வாகன உரிமையாளர்கள் புலம்பல்!

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் வட்டார போக்குவரத்து கழக அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்குள்ள வட்டார போக்குவரத்து கழகத்தில் அதிகாரி அடிக்கடி தாமதமாக வருவதால், மிக நீண்ட நேரம் காத்திருந்து வாகன ஓட்டிகள், உரிமையாளர்கள் தங்களது வாகன உரிமத்தை புதுப்பித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக லாரி, வேன், பஸ், உள்ளிட்ட கனரக வாகனங்களும் ஆட்டோ உள்ளிட்ட இலகு ரக வாகனங்களும் தங்களது உரிமத்தை புதுப்பிப்பதற்காக காத்திருக்கின்றன.

இது குறித்து, வாகன உரிமையாளர்கள் சிலரிடம் கேட்டபோது, வாடிப்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் பணி மாறுதல் கேட்டு தொடர் விடுமுறையில் உள்ளதால், வாகன புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகள் தாமதமாவதாக அலுவலகத்தில் தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

திங்கள் கிழமை மதியம் 12 30 மணி வரை வட்டார போக்குவரத்து கழக அதிகாரி வராததால், சுமார் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் வாகன புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக காத்திருந்தது வாகன உரிமையாளர்கள் விரக்தியின் எல்லைக்கு சென்றனர். மேலும், அதிகாரி வர தாமதமானதால் பாதி வாகனங்கள் உரிமம் புதுபிக்கப்படாமலே திரும்பிச் சென்றன.

ஆகையால், இது குறித்து, சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் மாநில போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து, வாடிப்பட்டி வட்டாரப் போக்குவரத்து கழக மோட்டார் வாகன ஆய்வாளரை, நிரந்தர அதிகாரியை நியமித்து வாகனங்களை விரைவில் சோதனை செய்து ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன உரிமங்களை புதுப்பித்து வழங்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

சதுரகிரியில் ஆடி அமாவாசை முன்னேற்பாடுகள்! ஆட்சியர் ஆய்வு!

sathuragiri temple collector visit - 2026
  • சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா…
  • முன்னேற்பாடு நடவடிக்கைகளை, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு…..

திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா நடைபெற இருக்கிறது.

பிரசித்தி பெற்ற இந்த மலைக் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகின்றனர்.

ஆடி அமாவாசை நாள் என்பது முன்னோர்களுக்கு திதி வழங்கும் முக்கியமான நாளாகவும், சிவன் கோவில்களில் விளக்கேற்றி வணங்கிடும் முக்கிய நாளாகவும் இருந்து வருகிறது. சதுரகிரிமலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் சுவாமியை, ஆடி அமாவாசை நாளில் தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 12ம் தேதி (சனி கிழமை) முதல், வரும் 17ம் தேதி (வியாழன் கிழமை) வரையிலான 6 நாட்களும், பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம், வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கமாக பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை நாட்களில் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிப்பதற்காக சில ஆயிரம் பக்தர்கள் வருவார்கள். ஆடி அமாவாசையன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உடனடி மருத்துவ வசதி, பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி, பாதுகாப்பு வசதி உள்ளிட்டவைகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் செய்து வருகிறது. அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சதுரகிரிமலைக்கு செல்லும் பக்தர்களின் வசதிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

தாணிப்பாறை அடிவாரப் பகுதிகளில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கான வழிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க கூடுதல் போலீசாரை நியமிப்பது குறித்த பல்வேறு ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி, சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் உட்பட வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

எங்களுக்கு பிரியாணி தான் முக்கியம்! அமைச்சர் பேசும்போது ஆலாய்ப் பறந்தோடிய திமுக தொண்டர்கள்!

madurai murthy meeting - 2026

எங்களுக்கு பிரியாணி தான் முக்கியம் அமைச்சர் பேசும்போது பிரியாணிக்காக ஓடிய திமுக தொண்டர்கள்!

பேச்சு முக்கியா? சாப்பாடு முக்கியமா ? பிரியாணிக்காக அமைச்சர் பி.மூர்த்தி பேசும்போதே கூட்டத்தை புறக்கணித்து பிரியாணி சாப்பிட ஒடிய திமுக தொண்டர்கள்*

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்த திமுக பூத் ஏஜெண்ட் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பத்திரபதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் இன்று நடைபெற்றது

இதில் அமைச்சர் பி.மூர்த்தி கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகளை எப்படி மேற்கொள்வது என மேடையில் அமைச்சர் பி.மூர்த்தி பேச ஆரம்பித்தவுடனே

பிரியாணி ரெடியாகியதால் அமைச்சர் மூர்த்தியின் பேச்சை கேட்காமல் கீழ்தளத்தில் பிரியாணிக்காக எழுந்து ஒடிய தொண்டர்களால் பரபரப்பானது

இதில் உச்சகட்டமாகஒருவரை ஒருவர் போட்டி போட்டு கொண்டு பிரியாணிக்காக ஒடிய தொண்டர்கள் மட்டன் பிரியாணியை ஒரு பிடித்தவாறே

அமைச்சர் பேச்சு முக்கியமில்லை பிரியாணி தான் முக்கியம் என்று அடித்து ஓடிய சம்பவம் திமுகவினரிடையே பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது

மீண்டும் வந்தார் ராகுல்! நாடாளுமன்றம் 2 மணி வரை ஒத்திவைப்பு!

new parliament buliding - 2026
#image_title

நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் மீண்டும் உள்ளே வந்தார். அதே நேரம் தொடர் அமளியால் நாடாளுமன்றம் மதியம் 2 மணி வரை ஒட்டி வைக்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, ராகுலின் தகுதி நீக்க உத்தரவை இன்று காலை மக்களவைச் செயலகம் திரும்பப் பெற்றது. வயநாடு எம்.பி.-யாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 136 நாட்களுக்குப் பிறகு ராகுல் மீண்டும் எம்.பி., யாக அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக, நாடாளுமன்றத்துக்கு வந்தார்.

இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், முன்னதாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 12 மணிக்கு அவை தொடங்கியதும், அவையில் பங்கேற்க ராகுல் வந்தார். நாடாளுமன்றம் காந்தி சிலை முன் காங்கிரஸ் எம்.பி.க்கள், ராகுல் காந்தி வாழ்க என முழக்கமிட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.

அதன்பின் ராகுல் மக்களவையில் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி!

stalin met senthil balaji - 2026
#image_title

செந்தில் பாலாஜியின் அமலாக்கத்துறை தன் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. இது தொடர்பில் செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்தனர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அங்கு அவருக்கு இதய் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.

இந்த நிலையில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி பரத சக்ரவர்த்தி செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்றும் நீதிபதி நிஷா பானு கைது நடவடிக்கை செல்லாது என்றும் தீர்ப்பளித்தார்கள்.

இதைத் தொடர்ந்து 3வது நீதிபதி கார்த்திகேயன் இந்த மனுவை விசாரித்தார். அவர் கைது நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, செந்தில்பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் தங்களது தரப்பு விவாதங்களை எடுத்து வைத்தனர்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த மனு மீது பிறப்பித்த உத்தரவில், செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்றும், வரும் 12-ம் தேதி வரை அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்றும் கூறியது.

இதை அடுத்து, இன்றே அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முடிவு செய்திருப்பதால் தொடர்ந்து 5 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்தக் காலத்திலும்… அழகரை தரிசிக்க மாட்டு வண்டி பயணம்!

bulluck cart travel to azhagar malai - 2026

சோழவந்தான்: மதுரை அருகே, சோழவந்தான் அருகே மழை வேண்டி கள்ளழகர் கோவிலுக்கு மாட்டுவண்டி பயணம் செய்தனர் பக்தர்கள்.

மதுரை, சோழவந்தானிலிருந்து பாரம்பரியமாக மாட்டுவண்டி கூட்டி, அழகர்கோவிலுக்கு கள்ளழகரை தரிசனம் காண செல்லும் கிராம மக்கள் விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டி 30 கி.மீ. மாட்டுவண்டி பயணம் மேற்கொள்ளும் கிராமமக்கள்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள சி.புதூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 2 ஆண்டுக்கு ஒரு முறை ஆடி 18 -ஐ முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்து
பாரம்பரிய முறையில் மாட்டுவண்டிகளை பூட்டி வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் அழகர்கோவிலுக்கு மாட்டுவண்டியில் சென்று அங்கேயே இரவு முழுவதும் தங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்த உள்ளனர்.

bulluck cart travel to azhagar malai1 - 2026

அழகர்கோவில் மலை மீது உள்ள ராக்காயி அம்மன் கோவில் தீர்த்தத்தில் புனித நீராடிய பின்னர், கள்ளழகர், ராக்காயி அம்மன், 18-ம் படி கருப்பசாமி தெய்வங்களை வணங்கிவிட்டு, தாங்கள் நேர்த்திகடனாக கொண்டு வந்த கோழி, சேவல்களை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டு தங்களது விரதத்தினை முடித்து சொந்த ஊர் திரும்புவது இவர்களது வழக்கமாக உள்ளது.

விவசாயம் செழிக்க வலியுறுத்தியும், மழை பொழிய வலியுறுத்தியும் இந்த பாரம்பரிய மாட்டுவண்டி பயணம் மேற்கொண்டு கள்ளழகரை வழிபட்டு வருகின்றனர். அப்பகுதி மக்கள்.

இந்தியாவில் இருதய நோய் (டி.எம்.) படிப்புகளை தோற்றுவித்த சாதனைப் பெண்மணி!

dr si padmavathi dm - 2026

சரித்திரத்தில் நாம் மறந்து போன சாதனை தமிழ் பெண்மணி ..
சிவராமகிருஷ்ண ஐயர் பத்மாவதி (20 ஜூன் 1917 – 29 ஆகஸ்ட் 2020)

1917 ஆம் ஆண்டில், இவர் பர்மாவின் ரங்கூனில்- வழக்கறிஞர் ஒருவரின் மகளாக ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். பெண்கள் பாரம்பரியமாக சமையல் அறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில்/கல்வி தெரியாத நடுத்தர வர்க்கப் பெண் ரங்கூன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார்.

ஜப்பானியர்கள் பர்மாவை ஆக்கிரமித்தபோது, அவர்கள் குடும்பம் சிறிது காலத்திற்கு கோயம்புத்தூரில் உள்ள தங்கள் பாரம்பரிய வீட்டிற்குத் திரும்பினர். 1949 இல், அவர் FRCP செய்ய லண்டன் சென்றார்,

பின்னர் ஒரு பெண் இந்திய மருத்துவரால் அன்றைய காலத்தில் கற்பனை செய்து பார்க்க முடியாத. அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் மேலும் படிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அங்கு அவர் புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் ஹெலன் டவுசிக்கின் கீழ் பயிற்சி பெற்றார்.

அதன்பிறகு, அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், அங்கு அவர் இருதயவியல் தந்தை பால் டட்லி வைட்டின் கீழ் பயிற்சி பெற்றார்.

ஒரு புகழ்பெற்ற இருதயவியல் வாழ்க்கை அமெரிக்காவில் அவருக்குக் காத்திருந்தபோது, அவர் இந்தியாவுக்குத் திரும்பி இந்தியர்களுக்குச் சேவை செய்வதில் உறுதியாக இருந்தார். அவர் 1953 இல் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார், இந்தியாவின் முதல் பெண் இதய நோய் நிபுணராக ஆனார்.

எஸ்.ஐ.பத்மாவதி இந்தியாவின் முதல் கேத்லாப் & பிரத்தியேக இருதய மருத்துவ மனையைத் தொடங்கினார். இந்தியாவின் முதல் டிஎம் கார்டியாலஜி படிப்பைத் தொடங்கினார். ஏழைகள் மற்றும் ஏழைகளுக்கு சேவை செய்வதற்காக 1962 இல் அகில இந்திய இதய அறக்கட்டளையை (AIHF) நிறுவினார். அவர் 1967 இல் மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்,

1967 இல் இந்திய அரசு அந்த ஆண்டு அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.

ஒரே நேரத்தில் MAMC, G.B.Pant Hospital & Loknayak Hospital ஆகிய 3 பெரிய கல்லூரிகளின் இதயநோய் நிபுணராகவும் நிர்வாகியாகவும் இருந்தார். அவர் 1978 இல் MAMC இயக்குநராக ஓய்வு பெற்றார்.

அவர் 1981 இல் டெல்லியில் தேசிய இதய நிறுவனத்தை (NIH) நிறுவினார். 90 வயதில், பத்மாவதி 2007 இல் ஐரோப்பிய இருதயவியல் சங்கத்தின் உறுப்பினரானார்.

95 வயது வரை, (ஆண்டு 2015), பத்மாவதி ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்தில் ஐந்து நாட்கள், ஏழை மற்றும் தேவைப்படும் இந்தியர்களுக்கு, அதிநவீன இருதய சிகிச்சையுடன் சேவை செய்தார்.அதே ஆண்டு 2015 இல் அவர் ஓய்வு பெற்றார் ..

இந்திய அரசாங்கம் 1992 இல் S.I. பத்மாவதிக்கு இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமக்கள் விருதான பத்ம விபூஷனை வழங்கியது.

பத்மாவதி மற்றும் அவரது சகோதரி ஜானகி (நரம்பியல் நிபுணர்) இருவரும் தனிமையில் இருந்து,(இருவருமே திருமணம் செய்து கொள்ளவில்லை ) ஜானகி-பத்மாவதி அறக்கட்டளையைத் தொடங்கினர், தங்கள் முழு சம்பாத்தியத்தையும் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி ஏழை மக்களுக்கு உயிர் காக்கும் இதய அறுவை சிகிச்சைக்கு பணம் வழங்குவதற்காகத் தொடங்கினார்கள்.

இதயவியல் துறையில் ஏழைகளுக்கு சேவை செய்வதில் தனது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த பிறகு, எஸ்.ஐ.பத்மாவதி 2020 இல் தனது 103 வயதில் கொரோனாவால் காலமானார்.

இவற்றையெல்லாம் சாதித்து, ஏழை இந்தியர்களுக்குத் தரமான இருதய சிகிச்சை அளித்து, கடைசியில் தன் செல்வம் அனைத்தையும் தன் சக குடிமக்களுக்குக் கொடுப்பதில், இந்த மனிதரின் புனிதமான பெண்மணியின் உறுதிப்பாடு, தொலைநோக்கு, புத்திசாலித்தனம் மற்றும் உறுதியான உறுதியை கற்பனை செய்து பாருங்கள்.

இன்று மருத்துவம் படிப்பது என்பது .. :படிப்பவர்களின் கேள்வியே USMLE (United States Medical Licensing Examination) அல்லது PLAB (The Professional and Linguistic Assessments Board test, or the PLAB test, helps us to make sure doctors who qualified abroad have the right knowledge and skills to practise medicine in the UK) மூலம் நான் எவ்வாறு பெறுவது? நான் என்ன சம்பளம் பெற முடியும்? வாழ்க்கைத் தரம்? குடியுரிமை?

இப்பேர்ப்பட்ட சிறப்பான பெண்மணி ஒருவர் 1917 இல் பிறந்து 103 வயது வரை வாழ்ந்து – இன்று நாம் அண்ணாந்து பார்க்கும் DM (doctorate of Medicine) போன்ற இருதய நோய் மருத்துவத்திற்காக படிப்புகளை இந்தியாவில் உருவாக்கிய சிறப்பான பெண்மணி

(இந்த பெண்மணி இரண்டு ஆண்டு முன்பாக காலமாகி இருக்கிறார்! ஐநூறு தமிழ் சேனல்களில்… ஒரு சேனல் சீரியல் நடிகை தூக்கிட்டு செத்த அதே நேரம் – எல்லா ஊடகங்களும் பாய்ந்து குதித்து பல செய்திகளை வெளியிட்ட நேரம் அது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்!)

விஷயம் சாதனை / தமிழன் என்பதெல்லாம் சும்மா .. இன்று இவரை பற்றி அறிந்து கொண்டோம் .. அவர் நினைவுகளைப் போற்றுவோம்!

— விஜயராகவன் கிருஷ்ணன் —

சொரிமுத்து ஐயனார் கோயில் ஆடி அமாவாசை விழா துவக்கம்..

images 25 - 2026

பிரசித்தி பெற்ற சொரிமுத்து ஐயனார் கோயிலில் ஆடி அமாவாசை விழா இன்று கால்நாட்டுடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்று விரதத்தை துவக்கினர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சொரிமுத்து ஐயனார் கோயிலில் கால் நாட்டு நிகழ்ச்சியுடன் 10 நாள் ஆடி அமாவாசை திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்தையனார் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசை திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வர்.

images 26 - 2026

இந்த ஆண்டு ஆக. 16இல் ஆடி அமாவாசை வருவதையடுத்து இன்று கால் நாட்டுடன் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது. கால்நாட்டு நிகழ்ச்சி அய்யனார் கோயில் பரம்பரை அறங்காவலர் சங்கர் ஆத்மஜன் தலைமையில் கால்நாட்டு நடைபெற்றது. முன்னதாக கால் நாட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார், தளவாய் மாடசாமி, தூசி மாடசாமி, பட்டவராயர், இசக்கியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

கால்நாட்டைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி 10 நாள் விரதத்தைத் தொடங்கினர். மேலும் விரதம் இருக்கும் பக்தர்கள் கோயில் பகுதிகயில் குடில்கள் அமைத்து தங்கி விரதம் இருந்து ஆடி அமாவாசை அன்று தங்கள் விரதத்தை நிறைவேற்றி நேர்த்திக்கடன் செலுத்துவர்.

கால் நாட்டு நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நண்பர்களின் பூமி!

friendship day - 2026
  • ஜெயஸ்ரீ எம்.சாரி, நாந்தேட்.

காலச்சக்கரம் விரைவாக சுழல்கின்றது. ஆம்! 23 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து மஹாராஷ்டிர மாநிலத்தில் சேவாகிராம் சந்திப்பில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தது இன்றும் மனதில் நிழலாடுகிறது. புதிய சூழ்நிலை, புது கலாச்சாரம், புது வாழ்வியல் முறை என அனைத்துமே புதுமையாய். நொடிகளை நகர்த்துவதே பெரிதாய் இருந்தது.

உள்ளூர் மொழியான மராட்டியும் வராது, இங்கு பரவலாக பேசப்படும் ஹிந்தியும் சரளமாக வராது.

என் வீட்டின் ஹாலில் பொருத்தியிருந்த தொலைபேசியில் அழைப்புகள் வரும் போதெல்லாம் நான் அடுத்த அறைக்கு படையெடுத்தேன். என் வீட்டிற்கு வருவோர்களின் ஹிந்தி தெரியுமா, ரொட்டி இட வருமா?,” – என்னும் இரண்டு அதிமுக்கிய கேள்விகளுக்கான என் பதில்கள் முறையே ‘ தோடா தோடா மாலும், தோடா தோடா ஆதா ஹை,’ என இருந்தன.

இதற்கிடையில் என் மராட்டிய சகி என்னை ஒரு மராட்டி நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கு எனக்கு ஒன்றும் விளங்க வில்லையென்றாலும் மராட்டியப் பெண்களின் உற்சாகம், கலகலப்பான சுபாவம், அவர்கள் செய்து கொண்ட ஸ்டைல் முதலியவற்றால் எனக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. நான் நான்கு சுவற்றில் இருந்து வெளியில் வந்ததே ஒரு திருப்தியாய் இருந்தது.

நாட்கள் கடந்தன. கடவுளின் அருளால் என் இரண்டு மகன்கள் பிறந்த பிறகு நான் என் நட்பு வட்டத்தின் விட்டத்தினை பெருக்கிக் கொள்ளத் தொடங்கினேன்.
என்னுடைய நட்பு வட்டத்தில் அனைவருமே இணைந்தனர். சிறார்கள் என் மொழிப் பிரச்சனையை, வார்த்தைகளின் உச்சரிப்பை திருத்தினர். என் வயதுடையோரோ பல விஷயங்களில் எனக்கு உதவினர். ஆண் நண்பர்களோ என்னை மராட்டியில் அவர்களுடன் பேச உற்சாகப்படுத்தினர். பெரியவர்களோ மராட்டிய – தமிழ் கலாச்சாரம் பற்றி நிறைய கலந்துரையாடினர்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் சில இடங்களில் வசித்ததிலும் அங்கெல்லாம் அருமையான தோழமை வட்டம் எனக்கு கிடைத்தது.

இவ்வாறு, எனக்கு அமைந்துள்ள நட்பினால் நான் இந்த நண்பர்களின் பூமியில் என் வாழ்க்கையை அருமையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். என் வருங்காலத்திலும் இப்படியே தொடரும் என்று என் நண்பர்களின் பூமியே எனக்கு நம்பிக்கை அளிக்கின்றது.

‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ – என்ற நம் கனியன் பூங்குன்றனாரின் வார்த்தைகளில் தான் எத்தனை வலிமை!! எத்தனை உண்மை!! வாழ்க நம் பாரத திருநாடு!!!!
அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்!