இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
ஸ்ரீ ரங்கத்தில், பல ஆண்டுகளாக சாரமுட்டில் இருந்த கிழக்கு கோபுர முதல்நிலை கொடுங்கை முன்பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனால், கிழக்கு அடையவளஞ்சான்-கிழக்கு சித்திரைவீதிக்கான வாசல் அடைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அடுத்து இந்து முன்னணி அமைப்பினர் அறநிலையத்துறை அதிகாரியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தின் கொடுங்கைப் பகுதி நேற்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதால், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஸ்ரீரங்கம் கோவிலின் கிழக்குக் கோபுர சுவரில் ஏற்கெனவே விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை, இடிந்த கோபுர கொடுங்கைப் பகுதியை முழுவதுமாக புதிதாக கட்டித்தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல், தாமோதர கிருஷ்ணன் கோபுரத்தின் ஒரு பகுதி நள்ளிரவில் இடிந்ததால், கோபுரம் பராமரிப்பு பணிக்கான மதிப்பீடு ரூபாய் 67 லட்சமாக இருந்தது தற்போது 98 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் சாரம் கட்டும் பணி தொடங்கி, இன்னும் ஒரு சில நாட்களில் டெண்டர் விட்டு, பணிகள் தொடங்கும் என்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோபுரம் சிதிலமடைந்து உடைந்து விழுந்ததால், அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கை கண்டித்து அலுவலகம் முற்றுகைப் போராட்டம் இந்து முன்னணி அமைப்பினரால் நடத்தப்பட்டது.
மதுரயில், கூட்டத்தில் சீறிப்பாய்ந்த காளையைக் கண்டு, தெறித்து ஓடிய தொண்டர்களையும், காளையையும் பாசத்தால் கட்டுப்படுத்திய அண்ணாமலை குறித்த வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது..
மதுரை மாவட்டத்தில் பாதயாத்திரையின் தொடக்க நிகழ்ச்சியில் வரவேற்பிற்காக கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை ஒன்று, அண்ணாமலை வந்து வஸ்திரம் சாற்றி பொட்டு வைத்த போது, கூட்டத்தைக் கண்டு மிரண்டு, திடீரென துள்ளிக் குதித்தது. அதனால் உடன் இருந்த கூட்டத்தினர் சற்று பின்வாங்கிச் சென்றனர். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலை உடனே அதன் அருகில் வந்து, முகத்தில் தடவிக் கொடுத்து, அதனை அமைதிப்படுத்தினார். அதன் பின் மாடு தலையாட்டியபடி அமைதியாக நின்றது. இந்தக் காட்சி சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.
‘என் மண், என் மக்கள்’ என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் தழுவிய அளவில் பாதயாத்திரை மேற்கொணடு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டத்தில் பாதையாத்திரை மேற்கொண்டார். இதில், மதுரை மேலூர் அரசு கலைக்கல்லூரி அருகே பாதயாத்திரை தொடங்கியுயது. இதில் ஏராளமான பாஜக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
பாதயாத்திரை தொடங்கும் இடத்தில் 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டுக் காளைகளைக் கட்டி வரவேற்பு அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தான் மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்றது.
அண்ணாமலை ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் வீட்டிலே ஆடுகள் வளர்ப்பினைக் கொண்டவர் என்பதும் தெரிந்த விஷயம்தான். அங்கே ஆடுகளுடன் அன்பாகப் பழகியவர், இன்று சீறும் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையையும் அச்சமின்றி அருகே சென்று அன்பாகத் தடவிக் கொடுத்து அமைதிப் படுத்தியதைக் கண்ட கட்சியினர் ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து அண்ணாமலை மேற்கொண்ட பாதயாத்திரை சந்தைப்பேட்டை பெரிய கடை வீதி, நகைக்கடை பஜார், சிவன் கோவில், செக்கடி, அழகர் கோவில் ரோடு வழியாக மேலூர் பஸ் நிலையத்தை அடைந்தது.
வழிநெடுகிலும் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பாஜக.,வினர் மட்டுமல்லாது, பொதுமக்களும் அதிக அளவில் ஆர்வத்துடன் மலர்களைத் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்று மகிழ்ந்தனர்.
அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில் 25 ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு பிரதமர் மோடி வரும் ஆக.6ம் தேதி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.
நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டம்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் மொத்தம் 1309 ரயில் நிலையங்களை ரயில்வே துறை மேம்படுத்த உள்ளது. இதன் ஒரு பகுதியாக, 508 ரயில் நிலையங்களை 24,470 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி வரும் ஆக.6ஆம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்.
இது குறித்து, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் செய்தியாளர்களிடம் பேசிய போது, தெற்கு ரயில்வேயில் 25 ரயில் நிலையங்கள் உட்பட மொத்தம் 508 ரயில் நிலையங்களுக்கு பிரதமர் மோடி வரும் 6ம் தேதி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுகிறார். ரயில் நிலையங்களில் பயணியருக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தும் வகையில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தில் இடம் பெறும். லிப்ட், நடைமேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணியர் காத்திருப்பு அறைகள், நுழைவாயில்கள் சீரமைப்பு, எஸ்கலேட்டர்கள், மல்டி லெவல் பார்க்கிங், சிசிடிவி கேமிரா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறும்.
தமிழகத்தில் முதல்கட்டமாக, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனுார், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்கள் 381 கோடி ரூபாயில் மேம்படுத்தப் படவுள்ளது. அம்ரித் பாரத் ரயில் நிலை மேம்பாட்டு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, வரும் 2024 பிப்ரவரிக்குள் மொத்த பணிகளையும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்… என்றார்.
இந்நிலையில், ஆக.6ம் தேதி அம்ரித் பாரத் ரயில் நிலைய சீரமைப்புக்காக தென்காசி ரயில் நிலையம் தடபுடலாக தயாராகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்காக முன்னேற்பாடுகளைப் பார்வையிட ஆக.3ம் தேதி நேற்று, மதுரை கோட்ட மேலாளர் ஆனந்த், ரயில்வே ஐஜி., உள்ளிட்ட அதிகாரிகள் தென்காசி ரயில் நிலையத்தில் பார்வையிட்டனர்.
ஏழாவது ஆண்டாக இராணுவ வீரர்களுக்கு ரக்ஷாபந்தன் ராக்கி… பரணி பார்க் கல்விக் குழுமம் சார்பாக ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணி தொடக்கம்
ஏழாவது ஆண்டாக பரணி பார்க் சாரணர் மாவட்டம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக இராணுவ வீரர்களுக்கு அனுப்புவதற்காக ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணி 01.08.23 முதல் பரணி பள்ளி வளாகத்தில் தொடங்கியது.
இந்நிகழ்விற்கு பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் S.மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன் தலைமை தாங்கினர். தேசிய மாணவர் படை தமிழ்நாடு இரண்டாவது பட்டாலியன் தலைமை அதிகாரி லெப்டிணன்ட் கர்னல் அருண் குமார் ஒரு லட்சம் திருக்குறள் ராக்கி தயாரிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இது குறித்து தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் C.ராமசுப்ரமணியன் கூறுகையில், “நாம் அனைவரும் நமது நாட்டின் முப்படைகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நமது வீரர்கள் இல்லாமல் நாம் ஒருபோதும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருக்க முடியாது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த நற்செயலை செய்வதில் பரணி பார்க் கல்விக் குழுமம் மிகவும் பெருமைக்கொள்கிறது.
கடந்த 2017 முதல், கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்களின் சார்பாக எல்லையைப் பாதுகாக்கும் நமது இராணுவ வீரர்களுக்கு ராக்கிகளை அனுப்பி வருகிறோம். 2017 இல் 15000 ராக்கிகள், 2018 இல் 16000 ராக்கிகள், 2019 இல் ஒரு லட்சம் ராக்கிகள் மற்றும் 2020 & 2021 இல் ஒவ்வொரு ஆண்டும் 25000 ராக்கிகள் அனுப்பப்பட்டன (கோவிட் தொற்று நோய் இருந்தபோதிலும் அனுப்பப்பட்டன).
கடந்த 2022 ஆம் ஆண்டு 1,50,000 ராக்கிகள் அனுப்பப்பட்டன. அதற்காக மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் புது தில்லி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு நேரில் அழைத்துப் பாராட்டியது மிகவும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு இந்திய, முப்படைகளுக்கு நமது மகிழ்ச்சி மற்றும் நன்றியின் அடையாளமாக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஒரு லட்சம் திருக்குறள் ராக்கிகளை தயார் செய்து வருகிறோம். திருக்குறள் எண் 766ஐ 18 இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து பதித்துள்ளோம்.” என்று கூறினார்.
இந்நிகழ்வில் பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் பிரியா, பரணி வித்யாலயா முதல்வர் சுதாதேவி, பரணி பார்க் முதல்வர் சேகர், பரணி பார்க் தேசிய மாணவர் படை அலுவலர் செல்வராசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ம்துரை சோழவந்தானில் பாஜக., மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது!
சோழவந்தான் பகுதிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையாக வருகை புரிந்தார். அவரை பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மணி என்ற முத்தையா தலைமையில், பாஜக தொண்டர்கள் மேளதாளத்துடன் அதிர்வெட்டிகள் முழங்க வரவேற்றனர்.
முன்னதாக, சோழவந்தான் அருகே ஊத்துக்குளி, தென்கரை ஆகிய இடங்களில் பாஜக தொண்டர்கள் மாலை அணிவித்து அண்ணாமலையை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, சோழவந்தான் நகரில் முக்கிய வீதி வழியாகச் சென்று சோழவந்தான் அய்யவார் பொட்டலில் அவருக்கு, பாஜக தொண்டர்கள் மீண்டும் வரவேற்பு கொடுத்தனர்.
பாஜக தலைவர் அண்ணாமலை சோழவந்தானுக்கு வருகை தருவதை முன்னிட்டு சோழவந்தான் நகரில் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பாஜக., தொண்டர்கள் அண்ணாமலை மீது பூமாரி பொழிந்தனர். ஏராளமான பெண்கள் பூத் தூவி அண்ணாமலையை வரவேற்றனர்.
என் மண் என் மக்கள் யாத்திரை ( அண்ணாமலை) மதுரை மாநகர் பயணம் விவரம்
வடக்கு தொகுதி நடை பயணம் நாளை சனிக்கிழமை (05-08-23) காலை 9 மணி இடம்: ரிசர்வ் லைன் நான்கு முனை சந்திப்பு, அம்மன் உணவகம் அருகில்
மத்திய தொகுதி நடை பயணம் நாளை சனிக்கிழமை (05-08-23) மாலை 4 மணி இடம்: வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை
தெற்கு தொகுதி நடைபயணம் நாளை சனிக்கிழமை(05-08-23) மாலை 5:30 மணி இடம் : விளக்குத்தூண் காமராஜர் சிலை
06-08-23 ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சிகள்
மேற்கு தொகுதி நடை பயணம் ஞாயிற்றுக்கிழமை (06-08-23) 4 மணி இடம்: ஜல்லிக்கட்டு ரவுண்டானா ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
மாபெரும் பொதுக்கூட்டம்
ஞாயிற்றுக்கிழமை (06-08-23) மாலை 5.30 மணி இடம்: பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் எதிரில்
நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் நடைபெறும். எனவே மதுரை மாநகர் பாஜகவை சார்ந்த அனைவரும் தவறாது குறித்த நேரத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.. – மதுரை மாநகர் பாஜக
இளம் தமிழக செஸ் வீரரான ஜி.எம். குகேஷ், இந்தியாவின் முதல் தரவரிசை செஸ் வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத் தள்ளி டாப் 10ல் இடம்பெற்று அசத்தியுள்ளார்.
2023 செஸ் உலகக்கோப்பைப் போட்டி பாகுவில் நடைபெற்று வருகிறது. முதல் சுற்றில் 81 வீரர்கள் நாக் அவுட் ஆன நிலையில், தமிழக இளம் வீரரான குகேஷ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் தன்னை எதிர்த்து விளையாடிய மிஸ்ட்ராடின் இஸ்கண்ட்ரோவை வீழ்த்தினார். இதை அடுத்து அவர் உலக தரவரிசை பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் முதல் முறையாக உலக தரவரிசை பட்டியலில் 100 இடங்களுக்குள் நுழைந்திருந்தார் குகேஷ். அடுத்த 15 மாதங்களிலேயே தன் அபாரத் திறமையால் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.
இதற்கு முன் இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே முதல் 10 இடங்களுக்குள் இருந்திருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து தற்போது 17 வயதான குகேஷ் 3வது இந்திய வீரராக மாறியுள்ளார். 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்த் 1986-ற்கு பிறகு 37 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர் 1 வீரராக இருந்து வருகிறார்.
இந்த மாதம் இறுதியில் பைட் தரவரிசைப் பட்டியலை வெளியிடும் போது உலகின் 9-வது செஸ் வீரராகவும், முதல் இந்திய செஸ் வீரராகவும் குகேஷ் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் 2750 செஸ் புள்ளிகளை வேகமாக அடைந்த மேக்னஸ் கார்ல்சனை பின்னுக்கு தள்ளி, குறைந்த வயதில் 2750 தரவரிசை புள்ளிகளை கடந்த இளைய செஸ் வீரராக மாறினார் குகேஷ். தொடர்ந்து உலகின் நம்பர் 1 தரவரிசை வீரரையும் தோற்கடித்த குகேஷ், அதைச் செய்த இளம் வயது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
சென்னையைச் சேர்ந்த சிறுவனான குகேஷ் 2019-ல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது இளைய வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். தற்போது உலக தரவரிசை பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 10வது இடத்திலும், இந்திய தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்திலும் நீடிக்கிறார்.
அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல், ராஜபாளையம் வழியாக மின்சார இரயில் இஞ்ஜின் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில்,
01-10-2023 முதல் ராஜபாளையம் வழியாக கீழ்க்காணும் ரயில்கள் மின்சார இரயில் இஞ்சின்கள் கொண்டு இயக்கப்படும்: 1) பொதிகை அதிவிரைவு வண்டி (12661/12662) 2) சிலம்பு அதிவிரைவு வண்டி (20681/20682)
இனி சென்னை முதல் செங்கோட்டை வரை முழுவதும் மின்சார இஞ்ஜின்களோடு இயக்கப்படுவதால் பயண நேரம் குறையும், தாமதங்கள் தவிர்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது செங்கோட்டையில் இருந்து டீசல் எஞ்சினுடன் கிளம்பும் பொதிகை விரைவு ரயிலுக்கு மதுரையில் மின்சார இஞ்சின் மாற்றப்பட்டு, சென்னைக்குச் செல்கிறது. அதுபோல் செங்கோட்டையில் இருந்து டீசல் எஞ்சினுடன் கிளம்பும் சிலம்பு ரயிலுக்கு விருதுநகரில் வைத்து மின்சார எஞ்சின் மாற்றப்பட்டு சென்னை செல்கிறது. இனி அக்டோபர் முதல் தேதி முதல் முழுதும் மின்சார இஞ்சினில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கான உப மின் நிலையம் அமைக்கும் பணிகள் செங்கோட்டை மற்றும் ராஜபாளையம் ரயில் நிலையங்களில் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் – செங்கோட்டை ரயில் பாதை ஏற்கெனவே மின்மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது செங்கோட்டை முதல் தாம்பரம் வரை திருநெல்வேலி வழியாகச் செல்லும் சிறப்பு விரைவு ரயில் மின்சார இஞ்சினுடன் இயக்கப்பட்டு வருகிறது.
The English Teacher: A Poignant Exploration of Love, Loss, and Renewal
— Janaki Balasubramanian —
“Never has the magical storyteller of imaginary Malgudi woven tragedy and humor so deftly together.”
R. K. Narayan’s 1945 novel The English Teacher is a moving and beautifully written exploration of love, loss, and renewal. The novel tells the story of Krishna, an English teacher in the fictional town of Malgudi, who is deeply in love with his wife, Susila. ” He feels distraught when Susila passes away unexpectedly. He struggles to come to terms with her death, and he finds it difficult to connect with his young daughter, Malathi.
Over time, Krishna begins to heal. He finds solace in his work, and he begins to develop a closer relationship with Malathi. He also starts to write about his experiences, and this helps him to come to terms with his grief.
The English Teacher is the third of the trilogy that began with Swami and Friends, and The Bachelor of Arts. The English Teacher is a deeply personal novel for Narayan, who dedicated it to his own wife, Rajam, who died in 1939. The novel is full of love and loss, but it is also a story of hope and renewal. Narayan’s writing is lyrical and evocative, and he captures the beauty and complexity of human emotions with great skill.
One of the most striking things about The English Teacher is the way that Narayan explores the theme of love. Krishna’s love for Susila is all-consuming, and it is this love that sustains him through his grief. However, Narayan also shows that love can be painful. When Susila passes away, Krishna experiences such overwhelming grief that he fears it may swallow him.
The English Teacher is also a story about loss. Susila’s death is a devastating blow to Krishna, and it takes him a long time to come to terms with it. However, Narayan shows that loss can also be a catalyst for change. Krishna’s grief forces him to confront his own mortality, and it leads him to a deeper understanding of himself and the world around him.
“The English Teacher” is not just a story of loss and sorrow; it is also a journey of self-discovery and spiritual awakening. Narayan deftly explores the themes of life and death, the afterlife, and the quest for meaning. Krishna’s yearning to communicate with his departed wife leads him to explore the realm of spirituality. He finds solace in the teachings of the venerable sage, Emerson.
Through his interactions with Emerson, Krishna questions the conventional beliefs about life and death. Later, he delves into the mysteries of existence. This phase of the novel takes readers on a thought-provoking expedition into the realms of metaphysics and philosophy. Further inviting them to ponder the nature of reality and the significance of human connections.
“The English Teacher” is a masterpiece that blends the beauty of storytelling with profound philosophical musings. R K Narayan has keen understanding of human nature. His ability to delve into the depths of the human psyche have created a timeless work that continues to resonate with readers across generations.
Through the life of Krishna, Narayan weaves a tale that transcends the boundaries of time and geography. He invites readers to reflect on the essence of life and the impermanence of all things. The novella serves as a gentle reminder that amidst the trials and tribulations of life, the pursuit of knowledge, love, and art can provide solace and bring profound revelations.
As we immerse ourselves in the pages of “The English Teacher,” we not only encounter a captivating story but also embark on a transformative journey of introspection and self-discovery.
அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் , உள்ள ஏ.எம்.எம். கவுண்டர் பள்ளி வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை 218வது நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவ சிலைக்கு கவுண்டர் மகாஜன சங்கம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மகாஜன சங்க தலைவர் விஜயன், செயலாளர் அழகப்பன் , பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன், ஆகியோர் தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் சுற்று வட்டார உறவின்முறை சங்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன் பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் நினைவு தூனில் வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்டத் தலைவர் பார்த்திபன், செயலாளர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பாட்டாளி மக்கள் சார்பில் மாவட்டத் தலைவர் செல்லம்பட்டி முருகன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் பிரபு, மாவட்ட பொருளாளர் சரோஜினி, முன்னாள் மாவட்ட தலைவர் அழகுராஜா, ஒன்றிய செயலாளர்கள் முருகன், ஈஸ்வரன், முன்னிலையில் மாவட்ட துணைத் தலைவர் ராமசந்திரன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சோழவந்தான் தொகுதி தலைவர் சங்கிலி முருகன், செயலாளர் சக்கரபானி, ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இதேபோன்று, அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் ஒன்றியச் செயலாளர் சேது சீனிவாசன் தலைமையில் மாவட்டச் செயலாளர் முருகேசன், மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், மாவட்ட பொருளாளர் துதி திருநாவுகரசு ஆகியோர் முன்னிலையில் ஒன்றியச் செயலாளர்கள் ஜோதிமுருகன், முத்து கிருஷ்ணன், சேகர், அவை தலைவர் அய்யாவு, ஒன்றிய துணைத் தலைவர் முனியசாமி, வர்த்தகர் பிரிவு பெருமாள், மாவட்ட இலக்கிய அணி சேகர், புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளர் பாலமேடு அய்யாவு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
திருத்தங்கல் காவல் நிலையம் முன்பு, பாஜக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஆலாஊரணி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ் (55). இவர் விருதுநகர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். மேலும் நிலம் வாங்கி, விற்பனை செய்யும் புரோக்கராகவும் இருக்கிறார்.
இந்த நிலையில், திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவருக்கு 5 ஏக்கர் நிலம் வாங்கி கொடுப்பதாக கூறிய சத்யராஜ், அவரிடம் 51 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு நிலத்தை வாங்கி கொடுக்காமல் கால தாமதம் செய்து வந்தார். இது குறித்து ஈஸ்வரன் திருத்தங்கல் காவல் நிலையத்தில், கடந்த மாதம் புகார் தெரிவித்தார்.
வழக்குபதிவு செய்த போலீசார், பண மோசடியில் ஈடுபட்டதாக சத்யராஜை கைது செய்தனர். பண மோசடி வழக்கில் சிறைக்கு சென்ற சத்யராஜ், ஜாமீன் எடுத்து சிறையிலிருந்து வெளியே வந்தார். நேற்று இரவு திருத்தங்கல் காவல் நிலையத்திற்கு வந்த சத்யராஜ், திடீரென்று தனது வேஷ்டியில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவரது ஆடையில் குபீரென்று தீப்பிடித்தது.
தீப்பிடித்த ஆடையை தூக்கி எறிந்துவிட்டு காவல் நிலையத்திற்குள் சத்யராஜ் ஓடினார். அங்கிருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். சத்யராஜ் உடலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். காவல் நிலையத்தின் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பாஜக நிர்வாகி சத்யராஜ் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண மோசடியில் கைது செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஒருவர், காவல் நிலையத்திற்கு முன்பாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சிவகாசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.