இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான முதற்கட்டப் பணிகளை நில அளவை மற்றும் செட்டில்மென்ட் துறை தொடங்கியுள்ளது.
நாடு முழுதும் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றவும், அதில் ஆதார், பான் எண் உள்ளிட்ட தகவல்களை இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் நில ஆவணங்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. முதல்கட்டமாக பட்டா, நில வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை கணினி வாயிலாக வழங்கும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து பட்டா உள்ளிட்ட நில ஆவணங்களில் உரிமையாளரின் ஆதார் எண்ணை இணைப்பதற்கு நில அளவை மற்றும் செட்டில்மென்ட் துறை முடிவு செய்தது.
இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் குறிப்பிட்டபோது, பட்டாவில் தற்போது இடம்பெறும் விவரங்கள் உரிமையாளர் குறித்த அடையாளத்தை உறுதி செய்ய இது போதுமானதாக இல்லை. எனவே பட்டா உள்ளிட்ட ஆவணங்களில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம். ஒரு நபர் பெயரில் எத்தனை சொத்துக்கள் இருக்கின்றன என்பதை அரசு சார்ந்த துறைகள் தெரிந்து கொள்ள இது உதவும்.
மேலும், நில அபரிப்பு போன்ற மோசடிகளை தடுக்கவும் இது உதவும். இதனால், புதிதாக பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போரிடம் ஆதார் விவரம் பெறும் பணிகள் தொடங்கியுள்ளது என்றனர்.
குடிமகன்களின் வசதிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தும் தமிழக அரசு, மதுவிலக்கு குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வினா எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை மாற்றியமைக்கும் திட்டம் இல்லை; 90 மிலி மதுப்புட்டிகளை அறிமுகம் செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் சமூகச் சூழலை சீரழிக்கும் இந்த இரு திட்டங்கள் குறித்து நான் கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்திருந்தேன்.
அதைத்தொடர்ந்து சமூக ஊடகங்களில் அரசின் திட்டத்திற்கு எதிராக கடும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அவற்றுக்கு அஞ்சி தான் அமைச்சர் முத்துசாமி அவரது முடிவை திரும்பப் பெற்றுள்ளார். எது எப்படியாக இருந்தாலும் அரசின் புதிய முடிவு வரவேற்கத்தக்கது.
மக்கள் நலனில் மட்டும் அக்கறை செலுத்த வேண்டிய அரசு, மது குடிப்பவர்கள் எல்லா நேரத்திலும் மது கிடைக்காமல் எப்படியெல்லாம் அவதிப்படுகிறார்கள்? 90 மிலி மது கிடைக்காததால் பலரும் அதிக அளவு மதுவை வாங்கி, பகிர்ந்து கொள்ள கூட்டாளி கிடைக்காமல் எவ்வளவு நேரம் காத்துக்கிடக்கிறார்கள்? என்பன போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த வினாக்களுக்கு விடை காண்பதற்காக தமிழக அரசு அதன் பொன்னான நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு கணக்கெடுப்பு நடத்தியுள்ளது என்று அமைச்சர் ஒருவரே கூறுவதைத் தான் பொறுப்புள்ள குடிமகனாக தாங்கிக் கொள்ள முடியவில்லை. இனி இத்தகைய தேவையற்ற வேலைகளுக்கு அரசு இடமளிக்கக் கூடாது.
மதுவால் தமிழ்நாடு மிகவும் மோசமான சீரழிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் சாலை விபத்துகளில் மதுவின் பங்களிப்பு எத்தனை விழுக்காடு? மதுவால் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் இளம் கைம்பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு? மதுப்பழக்கத்தால் ஆண்மையை இழக்கும் இளைஞர்கள் எவ்வளவு பேர்? மதுப்பழக்கத்தால் ஒவ்வொரு ஆண்டும் நிகழும் மணவிலக்குகள் எத்தனை? மதுப்பழக்கத்தால் மன நோய்க்கு ஆளாவோர் எவ்வளவு பேர்? மதுப்பழக்கத்தால் நிகழும் தற்கொலைகள் எவ்வளவு? மதுப்பழக்கத்தால் எவ்வளவு இளைஞர்கள் பணி செய்யும் திறனை இழக்கிறார்கள்? மதுவின் பயன்பாட்டால் தமிழகத்தின் மாநில ஓட்டுமொத்த உற்பத்தி மதிப்பு எந்த அளவுக்கு குறைகிறது? என்பன உள்ளிட்ட விடை காணப்பட வேண்டிய வினாக்கள் ஏராளமாக உள்ளன. அது குறித்து ஆய்வுகளை நடத்தி, அவற்றின் அடிப்படையில் மதுவிலக்குக் கொள்கையை வகுக்கலாம்.
மதுவிலக்குத் துறை அமைச்சர் அளித்த நேர்காணலில், மது குறித்த மக்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்ற முயல்வதாக கூறியிருக்கிறார். அவ்வாறு செய்ய அவர் மது நிறுவனத்தின் அதிபர் அல்ல…. மதுவிலக்குத் துறை அமைச்சர்.
அவர் நினைத்தால் தமிழ்நாட்டுக்கு ஒரு மகத்தான நன்மையை செய்ய முடியும். தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் பொதுவாக்கெடுப்பை நடத்தி, அதன் முடிவுகளை செயல்படுத்துவது தான் அந்த நன்மை. அதற்கு தயாரா? என்பதை தமிழக அரசும், மதுவிலக்குத்துறை அமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும்.
2 குரு நடந்தால், அவருக்கு பின்னால் நடக்க வேண்டும்.
3 குரு ஓடினால், அவரை தொடர்ந்து ஓட வேண்டும்
4 குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகை வைத்து கொண்டோ போக கூடாது.
5 ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க நேர்ந்தால், தவறில்லை.
6 குருவுக்கு மிக அருகில் அமர கூடாது
7 குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது. அவர்கள் சொல்வதை கவனத்துடன், பணிவுடன் கேட்க வேண்டும்.
8 குருவுக்கு முன், ஒரு கால் மேல் போட்டு கொண்டு அமர கூடாது.
9 காற்று நம் மீது பட்டு பிறகு அவர் மீது படும் படி இருக்க கூடாது. உடனேயே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடமாக பார்த்து அமர வேண்டும்.
10 குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, கையை ஊன்றிக்கொண்டு இருக்க கூடாது.
11 குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, எதிலும் சாய்ந்து கொண்டு இருக்க கூடாது.
12 குருவின் முகம் பார்த்து இருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் குருவின் முகத்துக்கு எதிரே இருக்க கூடாது.
13 குருவுக்கு மிக அருகிலோ, மிகவும் தூரத்திலோ அமர கூடாது. குரு கையை உயர்த்தி கூப்பிடும் தூரத்தில் அமர வேண்டும்.
14 குருவுக்கு முன்னால் பலர் இருந்தால், அவரவர் சௌகர்யத்துக்கு அமர்ந்து கொள்ளலாம்.
15: குரு நிற்கும் போது, அமர்ந்து இருக்க கூடாது. குருவுக்கு அமர இடம் இல்லாத சமயத்தில், தனக்கு இடம் கிடைத்தாலும் அமர கூடாது.
16 குரு ஏதாவது காரியத்தை செய்ய முனையும் போது, சிஷ்யனின் அனுமதியை பொறுத்து, தன்னால் முடிந்த வரை உதவி செய்யலாம்.
17 குரு இருக்கும் போது, அவருக்கு கீழ் உள்ள எவருக்கும் (பெரியோர்கள் ஆனாலும், தகப்பனே ஆனாலும்) காலில் விழ கூடாது
18 தன் கோத்திர பெருமையை குருவுக்கு முன் பேச கூடாது.
19 தன் குருவை தவிர அவரை விட தாழ்ந்த தகுதி உள்ள குருவை சந்திக்க கூடாது, அல்லது அவர்களை தன் குருவுக்கு இணையாக உயர்த்த கூடாது. குருவின் குருவே வந்தாலும் சரி. இது தன் குருவுக்கு அவமதிப்பு செய்ததாகும். தேவைப்பட்டால், அமைதியாக அந்த இடத்தை விட்டு அப்போதைக்கு நகர்ந்து விடலாம். அல்லது, தன் குருவுக்கு கொடுக்கும் மரியாதை கொடுக்கலாம்.
20 வாயை திறந்து கொட்டாவி விட கூடாது. அப்படி நேர்ந்தாலும் குனிந்து, வாயை கையால் மூடிக்கொள்ள வேண்டும்
21. குருவுக்கு கொடுத்ததை பெருமை பேசி கொள்ள கூடாது. குருவுக்கு செய்த சம்பாவனையை மறந்து விடுவது நல்லது.
22: குரு அமர்ந்த ஆசனத்தில் அமர கூடாது
23 குரு கூப்பிடாமல், நல்ல விஷயத்தை தவிர மற்ற எதுவும் அவரிடம் சென்று பேச கூடாது
24 குருவிடம் உபதேசம் பெற்று, வீடு திரும்பினாலும், அவரிடம் பழகும் விதம் கடைசி மூச்சு வரை கடைபிடிக்க வேண்டும்.
25 குரு ஒரே ஊரில் இருந்தால், அவர் கூப்பிடாமலேயே காலையும் மாலையும் அவரை பார்க்க செல்ல வேண்டும்.
26 குரு வேறு ஊரில் இருந்தால், முடிந்தவரை அடிக்கடி அவரை பார்க்க செல்ல வேண்டும். தன் கையால் அவருக்கு ஒரு வேப்பங்குச்சியாவது பல் துலக்க கொடுக்க வேண்டும்.
சாதாரண ஒரு உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெறவே நம் குடும்ப பெண்களுக்கு இவளோ தகுதி இருக்கனும் ன்னா ஒரு மாநிலத்தை ஆளும் ஒரு முதலமைச்சருக்கும், நம் தொகுதி MLA//MP களுக்கும் என்னென்ன தகுதி இருக்கணும்
2026ல் வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட முதலமைச்சர் வேட்பாளருக்கும், MLA/ MP களுக்கும் என்னென்ன தகுதிகள் இருக்கணும் வாங்க பார்க்கலாம்….!!
1) குறைந்த பட்சம் ஏதாவது ஒரு பட்டயம்/ பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும் அல்லது பொலிட்டிக்கல் சயின்ஸ் படித்தவராக இருக்க வேண்டும்
2) வயது 40-45 க்குள் இருக்க வேண்டும்
3) தாத்தா, தந்தை, மகன் யாரும் அரசியலில் இருந்திருக்க கூடாது
4) வாரிசு அரசியலில் உள்ளவருக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி இல்லை
5) துண்டு சீட்டு இல்லாமல் பேச வேண்டும்
6) இந்திய மொழிகளில் பிரதானமாக பேசக் கூடிய மொழிகளை சரளமாக பேச தெரிந்தவராக இருக்க வேண்டும்
7) சொந்த பயன்பாட்டுக்கு ஒரு கார் அல்லது ஒரு இரு சக்கர வாகனம் மட்டுமே வைத்திருக்க வேண்டும்
8) வருடத்திற்கு மின்சாரம் 3600 யூனிட் மட்டுமே பயன்படுத்தி இருக்க வேண்டும்
9) ஐந்து ஏக்கர் நிலம் மட்டும் இருக்க வேண்டும்
10) லஞ்சம், ஊழல் செய்து இருக்க கூடாது
11) சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவராக இருக்கக் கூடாது
12) கூட்டணி கட்சி இல்லாமல் தேர்தலில் போட்டியிட்டவராக இருக்க வேண்டும்
13) ஒரு வருடத்திற்கு இரண்டரை லட்சம் வருமானம் இருந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும்
14) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்திருந்தால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது
15) எந்த வழக்கும் நிலுவையில் இருக்க கூடாது
16) தன் சொந்த பெயரிலோ பினாமி பெயரிலோ மதுபான தொழிற்சாலை இருக்க கூடாது
17) முக்கியமாக ஜாதி, மதங்களை கடந்து அனைத்து மனிதர்களையும் நேசிப்பவராக இருக்க வேண்டும்
சுயாட்சி கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட தகுதியை நிர்ணயம் செய்ய முன் வருமா…!
அனைத்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள் உள்பட, மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மாதாந்திர மதிப்பூதியம் வழங்குவதற்கு முடிவு செய்யப் பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்கள்
மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள். துணைத்தலைவர்கள் மற்றும் மன்ற உறுப்பினர்கள். தாங்கள் முழுநேர மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால், தங்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என 13.04.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். இக்கோரிக்கையினை பரிசீலித்து, மாநகராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர், துணை மேயர், நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர். துணைத்தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்களின் மக்கள் நலப் பணிகளை சிறப்பிக்கும் மற்றும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்குவதற்கு ஆணையிட்டுள்ளார்கள்.
இதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு, மாதந்தோறும், ரூபாய் முப்பதாயிரம், துணை மேயர்களுக்கு ரூபாய் பதினைந்தாயிரம் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும். இதே போன்று, நகராட்சி மன்றத் தலைவர்களுக்கு ரூபாய் பதினைந்தாயிரம், துணைத் தலைவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் மதிப்பூதியம் வழங்கப்படும். மேலும், பேரூராட்சித் தலைவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம், பேரூராட்சி துணைத் தலைவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு மதிப்பூதியம் வழங்கப்படும். இந்த மதிப்பூதியம், இம்மாதம், அதாவது, 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வழங்கப்படும்.
இந்நடவடிக்கை, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் நிருவாகத் திறனை வலுப்படுத்துவதற்கு அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா நாளை ஜஊலஐ14ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேரோட்ட திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக இன்று இரவு சேனை தலைவர் புறப்பாடு நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் ஆடிப்பூர திருவிழா முதல் நாள் கடந்த 12ம் தேதி காலை சிம்ம லக்னத்தில் அங்கூரம். தேங்காய் தொட்டுநியமனம் அங்குறார்ப்பணம் மாலை 5.30 மணிக்கு மேல் 6,30் மணிக்குள் தனுசு லக்னத்தில் மிருத்ஸங்கிரஹணம்- திருப்பூரநந்தவனத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நாளை காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவினை முன்னிட்டு ஆண்டாள், ெரங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தேரோட்டம் வருகிற 18-ந் தேதியன்று காலை 11 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசன நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு 5 கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 20-ந் தேதி சயன திருக்கோலத்தில் ஆண்டாள், ெரங்க மன்னார் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சயன மண்டபத்தில் சயனிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
22-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதன் பிறகு ஆண்டாள், ரெங்க மன்னார் கீழ ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் எழுந்தருளுகின்றனர். பின்னர் காலை 8.05 மணிக்கு தேரோட்ட திருவிழா நடைபெறுகிறது.
பிரம்மாண்ட பந்தல் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்ட திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்யாண மண்டபங்கள். தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர். விழாவையொட்டி ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் தினமும் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டிய நிகழ்ச்சிகள், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர். சுகாதார ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
டாக்டர் பாஸ்கரன் அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரத்திற்குச் சென்றிருந்தோம். எங்களுடைய இனிய நண்பர் டாக்டர் பாஸ்கரன் அவர்களுடைய சகோதரர் ஆடிட்டர் பாலசுப்பிரமணியன் அவர்கள் சிதம்பரம் கோவிலை எங்களுக்குச் சுற்றிக் காண்பித்தார். என்னுடன் கலைமகள் பதிப்பாளர் திரு ராஜன் மற்றும் நாடக ஆசிரியர் திரு சி வி சந்திரமோகன் ஆகியோர் வந்திருந்தார்கள்.
டாக்டர் பாஸ்கரன் தம்பதி (சிதம்பரம் கோயிலில்)
சிதம்பரம் கோவில் நடராஜர் முன்பாக எங்களைக் கொண்டு நிறுத்தி மிக அற்புதமான தரிசனத்திற்கு ஏற்பாடு செய்தார் சிவசிதம்பரம் ஆர் பாஸ்கர தீட்சிதர். குஞ்சிதபாதம் மாலை அணிவித்து கௌரவித்தார். சிதம்பரத்தில் ஆடல் வல்லானின் சன்னதியில் மனம் உருகி நின்று கொண்டிருந்த நேரம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வசந்த கால நினைவூட்டல் ஆகும்.
சிதம்பர ரகசியம் என்று சொல்கிறார்களே! அது என்ன? என் மனது கோவிலைச் சுற்றிச் சுற்றி வந்தது.
சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. அழகிய சிலைகள் ஆயிரம் கால் மண்டபம் என எல்லாமே கண்ணுக்கு விருந்து படைத்தன.
மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது சிதம்பரம் கோயில். அதனால்தான் அதன் ஒன்பது நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கக் கூடிய ஒன்பது நவ துவார வாயில்களைக் குறிக்கின்றது. திருக்கோயிலின் முக்கிய அங்கமான விமானத்தின் மேலிருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது.இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 தடவைகள் சுவாசிப்பதைக் குறிக்கின்றது (15×60×24 = 21,600).
மேற்படி 21,600 பொற்தகடுகளை வேய, 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 72,000 என்ற இந்த எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளைக் குறிக்கின்றது. நரம்பியல் வல்லுனர் டாக்டர் பாஸ்கரன் அவர்களும் இதனை ஆமோதித்தார்!
அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஸ்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
தை மாதத்தில், வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய நன்னாளில், ஆனந்த நடனக் காட்சியை வியாக்ரபாதருக்கும், பதஞ்சலி முனிவருக்கும், தேவர்பெருமக்களுக்கும் காட்டி அருளினார் ஆனந்தக் கூத்தன். அந்த வேளையில், திருக்கயிலாயத்தில் இருந்து சிவ பெருமானுடன் மூவாயிரம் வேத பண்டிதர்களும் வந்தார்கள். அவர்களுக்கு குருவாக இருந்து நடராஜ பெருமானே வேதங்களைத் தந்தருளினாராம். ஈசனிடமே தீட்சை பெற்றவர்கள் எனும் பெருமைக்கு உரியவர்கள் ஆனதால், அந்த மூவாயிரம் பேரும் தீட்சிதர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். தீட்சை பெற்றவர்கள். அதனால் தீட்சிதர்கள்!
” தில்லைப் பெண் எல்லை தாண்டாள்” ஒரு பழமொழி. அதாவது தீட்சிதர்கள் குடும்பங்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வார்கள்.வெளியே பெண் எடுப்பதில்லை. வெளியூருக்கும் செல்வதில்லை. கொடுக்கல் வாங்கல் எல்லாமே அவர்களுக்குள்ளேயே நடந்து முடிகிறது. தில்லை நடராஜனை விட்டு அவர்கள் வேறு எங்கும் செல்ல விரும்புவது இல்லை!!
தீட்சிதர் குடும்பத்தில் பிறந்த ஆண் குழந்தை பிறந்த உடனேயோ அல்லது வளர்ந்ததுமோ ” தீட்சிதர் ” எனும் பட்டத்துக்கு கௌரவத்துக்கு வந்துவிடமுடியாது. உபநயனம் எனப்படும் பூணூல் வைபவம் முடிந்த பின்னரும் கூட தீட்சிதர் ஆகிவிட முடியாது.திருமணமாகி மாங்கல்ய தாரணம் எனப்படும் தாலி கட்டுகிற வைபவம் நடந்து முடிந்த அந்த நிமிஷத்திலிருந்துதான் அவர் தீட்சிதர் எனும் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார் ! தீட்சிதர் ஆக முக்கியமான தகுதி அவர் கிரகஸ்தராக இருக்க வேண்டும். வேதங்களை நன்றாக கற்று இருக்க வேண்டும்.
‘இவ் இருடிகளுள் நாம் ஒருவர்’ என்று இறைவனால் அருளிச் செய்யப் பெற்ற பெருமையை உடையவர்கள் தீட்சிதர்கள்.சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் “தில்லைவாழந்தணதம் அடியார்க்கும் அடியேன்” என்கிறார். சிவபெருமானே முதலாவதாகக் கூறிய திருக்கூட்டத்தினர் இவர்கள்! என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
கோவில் என்று சொன்னால் அது சிதம்பரத்தையும் ஸ்ரீரங்கத்தையும் குறிக்கும் என்பது பொதுவான கருத்தாகும். சோழ மன்னர்களின் கட்டுமான திறனுக்கு சிதம்பரம் கோவில் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.முதலாம் பராந்தக சோழ மன்னன் 9 ஆம் நூற்றாண்டில் இக்கோவிலின் சிவபெருமானின் சந்நிதிக்கு “பொன் கூரையை” வேய்ந்தான். பாண்டிய மன்னர்களில் ஒருவரான சுந்தர பாண்டிய மன்னனும் இக்கோவிலின் கிழக்கு கோபுரத்தைக் கட்டியதாக வரலாறு கூறுகிறது.
ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலத்தில் “கம்போடியா” நாட்டு அரசன் நடராஜமூர்த்திக்கு தங்கம் மற்றும் மாணிக்க கற்களைக் கொண்ட நகைகளைத் தனது நாட்டு தூதுவர்கள் மூலம் கொடுத்தனுப்பியதாக கல்வெட்டு குறிப்புக்கள் மூலம் அறிகிறோம்.
பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது.
பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் ஸ்தலங்களில் முதல் ஸ்தலமாக சிதம்பரம் உள்ளது. உலகின் மைய புள்ளியாகவும் இந்த கோவில் இருப்பதாக ஆய்வாளர்களும் சொல்கிறார்கள். சிதம்பர நடராஜரின் ஆட்டத்தில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.
சிதம்பர ரகசியம் யாருக்கும் தெரியாத ஒரு சவால்!! இந்த உலகத்தையே சுழல வைக்கும் அற்புதம்!! அண்ணாந்துப் பார்க்கும் ஆகாயம் கண்ணுக்கு நீலமாகத் தெரிந்தாலும் அது உண்மையில் வெட்ட வெளி!!
சிதம்பரம் என்றாலே அனைவரின் நினைவிற்கு வருவது “சிதம்பர ரகசியம்” என்ற சொல்வழக்காகும். இதன் உண்மையான பொருள் “சித்” எனும் அறிவு “அம்பரம்” எனும் வெட்டவெளியில் கலக்கும் போது நாம் ஒன்றுமில்லாதவர்கள் எனும் வாழ்க்கை தத்துவத்தை விளக்குவதுதான் சிதம்பர ரகசியமாகும். அதனால் தான் இக்கோவிலில் மூலவர் சந்நிதியில் வெட்டவெளியைத் திரையிட்டு மறைத்து, அதற்கு தீபாராதனை காட்டப்பட்டு, பிறகு திரையை விலக்கி வெட்ட வெளித் தத்துவத்தைப் பக்தர்களுக்குக் காண்பிக்கின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்கள் மற்றும் பாடல் பெற்ற ஸ்தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது…சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெறுகின்றனர். நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தைச் சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் ஸ்லத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது.
இங்குள்ள 4 கோபுரங்களும் சிற்பக் களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோரின் உருவங்கள் சிலைகளாக உள்ளன.
தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தைப் பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு.அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்குத் தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம்.
சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை ‘மூத்த நாயனார்’ என்கிறார்கள்.
நடராஜர் இருக்கும் பொன்னம்பலம் என்று சொல்லக்கூடிய சித்சபை, நந்திகேஸ்வரர் இருக்கக்கூடிய கனக சபை, மூன்றாவது கொடி மரத்துக்கு மேல் எதிரில் நடன சபை, நான்காவதாக பேரம்பலம் என்று சொல்லக்கூடிய தேவசபை. கோவில் உற்சவ மூர்த்திகள் நகை ஆபரணங்கள் இருக்கக்கூடிய இடமாகும். ஐந்தாவது ராஜசபை எனும் ஆயிரம் கால் மண்டபம் என ஐந்து சபைகள் உண்டு,” கனக சபை இருக்கும் இடம்தான் மக்கள் நின்று வழிபாடு செய்யக்கூடிய இடம்.
சிவண்ணா என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் கன்னட சூப்பர்ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுதீர் சந்திர பாதிரியுடன் புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளார்
சிவராஜ் குமாரின் பிறந்தநாளான நேற்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கான்செப்ட் போஸ்டர் ஒன்றின் மூலம் வெளியிடப்பட்டது.
தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் எஸ்சிஎஃப்சியின் (சுதீர் சந்திரா பிலிம் கம்பெனி) இந்த பான் இந்தியா திரைப்படத்தை விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தைத் இயக்கிய கார்த்திக் அத்வைத் இயக்குகிறார்.
‘சிவண்ணா எஸ்சிஎஃப்சி01’ (#ShivannaSCFC01) என்று அழைக்கப்படும் இத்திரைப்படம் அதிக பொருட்செலவில் வலுவான தொழில்நுட்ப கூட்டணியுடன் உருவாகிறது. ‘விக்ரம் வேதா’ மற்றும் ‘கைதி’ புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
இன்று வெளியிடப்பட்டுள்ள டாக்டர் சிவராஜ் குமாரின் கான்செப்ட் போஸ்டர் மூலம் இத்திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் என்பது அறிய முடிகிறது. சிவராஜ் குமாரின் கெட்டப்பும் போஸ்டர் வடிவமைப்பும் படம் பற்றிய ஆர்வத்தை உருவாக்குகிறது.
தென்னிந்திய திரைப்பட துறையை சேர்ந்த பிரபல நடிகர்கள் இப்படத்தில் நடிக்க உள்ளார்கள். இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
வத்திராயிருப்பு அருகே, அணைப் பகுதியில் யானைகள் நடமாட்டம்… பொதுமக்கள், விவசாயிகள் கவனமாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்…..
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள கோவிலாறு அணை பகுதியில், யானைகள் நடமாட்டம் காணப்படுவதால், இந்தப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கவனமாக இருக்குமாறு வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு பகுதியில் உள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் யானை, புலி, மான், மிளா, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.
மேலும் திருவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதிகள் மேகமலை புலிகள் சரணாலயமாகவும், சாம்பல்நிற அணில்கள் சரணாலயமாகவும் இருந்து வருகிறது. இதனால் வனப்பகுதிக்குள் செல்பவர்களுக்கு வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கோவிலாறு அணை உள்ளது.
இந்த அணைக்கு திருவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வார்கள். மேலும் இந்தப் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்களும் உள்ளன. விவசாயப் பணிகளுக்காக அந்தப்பகுதி மக்கள் அணைப் பகுதிக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், கோவிலாறு அணைக்கு செல்லும் பிரதான சாலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் தென்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளிலும் யானைகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கவனமாகவும், எச்சரிக்கையாக இருக்கும் படியும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் விவசாய நிலப்பகுதிகளுக்குள் யானைகள் வருவதை தடுத்து, அவை அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் செல்வதற்கான ஏற்பாடுகளையும் வனத்துறையினர் செய்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும். ஏழை எளியவர்களுக்கு எதிரான மது விற்பனை எதுவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக வரவேற்கப் போவதில்லை என்று சௌமியா அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார்.
மதுரை, திருமங்கலத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகத்தின் முக்கிய நிர்வாகியுமான சௌமியா அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:
பசுமைத்தாயகம் நாளான ஜூலை 25ஆம் தேதி 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்க வேண்டும் என்பது பசுமைத்தாயகம் நிறுவனத்தின் தலைவர் விருப்பத்திற்கு இணங்க இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் ஒரு நிகழ்ச்சியாக இன்று மதுரை திருமங்கலத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து காலநிலை, அவசரநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடக்கவிருக்கிறது.
இதில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். அதை எப்படி ஆவணம் செய்வது, பின்னர் அதை எப்படி ஐக்கிய நாடுகள் அவையில் சமர்ப்பிப்பது போன்ற விஷயங்களை பேசவிருக்கிறோம்.
மகளிர் உதவித் தொகை நிபந்தனை குறித்த கேள்விக்கு:
அது அரசாங்கத்தின் முடிவு. நிர்வாக காரணங்களால் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதை சட்டரீதியாக நாம் பின்பற்ற வேண்டும்.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு:
கண்டிப்பாக கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் குறித்த கேள்விக்கு:
பாமக தலைவரும் தேர்தல் வாக்குறுதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதனை செவ்வனே செயல்படுத்த வேண்டும்.
மது பாக்கெட் குறித்த கேள்விக்கு:
மதுவிலக்குக்கு எதிரான கட்சி பாமக. பசுமைத் தாயகம் என்றாலே நாங்கள் சமுதாய வளர்ச்சியை முக்கியமாக பார்க்கிறோம். ஏழை எளியவர்களுக்கு எதிரான மது விற்பனை எதுவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக வரவேற்கப் போவதில்லை.
நெடுஞ்சாலைத்துறை வேலையின் போது மரங்கள் வெட்டப்படுவது குறித்த கேள்விக்கு:
சென்னையில் ரயில் நிலையத்தில் மரத்தை வெட்டும்போது பெரிய போராட்டம் நடத்தி இருக்கிறோம். அதற்கு அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள், ஒரு மரம் வெட்டும்போது அதற்கு இணையாக 10, 20 அல்லது 100 மடங்கள் கூட நடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு மரத்தை எடுத்தாலும் பசுமைத் தாயகம் என்று போராட்டம் செய்யும். செங்கல்பட்டில் ஒரு இடத்தில் பெரிய ஆலமரத்தை எடுத்ததற்கு, அதை வேறு ஒரு இடத்தில் நடப்பட்டு அதற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறோம்.
குவாரிகளில் கனிம வளம் கொள்ளையடிப்பது குறித்த கேள்விக்கு:
நெய்வேலி கடலூரில் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி இருக்கிறோம். காவேரி காப்போம், வைகை காப்போம் என கனிம வளங்கள் மற்றும் நீர் வளங்களை பாதுகாக்க எல்லா முயற்சிகளையும் பசுமைத் தாயகம் முன்னெடுத்து நடத்தி வருகிறது. எங்களுடைய தேர்தல் அறிக்கையை படித்தாலே தெரியும் எதுவாக இருந்தாலும் இதை நாங்கள் குறிப்பிட்டு தெரிவித்திருக்கிறோம்.. என்றார்.