Home Blog Page 341

பிரதமர் மோடிக்கு பிரான்சின் உயரிய விருது!

IMG 20230714 WA0024 - 2026

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார்.

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினத்தை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பாரீசில் இன்று பாஸ்டில் தின அணிவகுப்பு நடக்க உள்ளது. இதில் கவுரவ அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்திருந்தார்.

இதை ஏற்று, பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து நேற்று பாரீஸ் புறப்பட்டுச் சென்றார். பாரீஸ் விமானநிலையத்தில் அவரை, பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன் வரவேற்றார். பிரான்ஸ் ராணுவ இசைக்குழுவினர் பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்க, பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தங்கியிருக்கும் ஓட்டல் முன்பாக ஏராளமான இந்திய வம்சாவளியினர் திரண்டு, ‘பாரத் மாதா கி ஜே’ என கோஷமிட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அதிபர் மேக்ரான் விருந்தளித்து கவுரவித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர் விருதை வழங்கினார். ராணுவ அல்லது சிவிலியன் கட்டளைகளில் இது மிக உயர்ந்த பிரான்ஸ் அரசின் கவுரவமாகும்.

இதனைப் பெறும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.கடந்த காலத்தில், கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர் உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் புகழ்பெற்ற நபர்களால் பெறப்பட்டது.

இவர்களில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அப்போதைய வேல்ஸ் இளவரசர் சார்லஸ், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், புட்ரோஸ் பூட்ரோஸ்-காலி, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலர் உள்ளிட்டோர் அடங்குவர்.

தமிழகத்தில் பெய்துள்ள மழை அளவு!

rains weather rain women - 2026
#image_title

தமிழ்நாடு, புதுச்சேரியில் 13.07.2023 காலை 0830 மணி முதல் 14.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
குருங்குளம் (தஞ்சாவூர்) 4;

வேலூர் (வேலூர்), ஊத்துக்கோட்டை, திருத்தணி (திருவள்ளூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), தஞ்சாவூர் PTO, தஞ்சாவூர், வல்லம் (தஞ்சாவூர்), சின்னக்கல்லார் (கோவை) தலா 3;

இராமகிருஷ்ணராஜுபேட்டை, திருத்தணி PTO, (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), கே.சி.எஸ். மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), மானாமதுரை (சிவகங்கை), வாலினோக்கம் (இராமநாதபுரம்), வரட்டுப்பள்ளம் (ஈரொடு), சங்கரிதுர்க் (சேலம்) தலா 2;

ஒகேனக்கல் (தர்மபுரி), காட்பாடி (வேலூர்), அம்மூர் (வாலாஜா ரயில்வே), ஆற்காடு, வாலாஜா, கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), திருவள்ளூர், செம்பரம்பாக்கம் ARG, செம்பரபாக்கம், தாமரைப்பாக்கம், பூந்தமல்லி ARG, ரெட் ஹில்ஸ், சோழவரம், பொன்னேரி (திருவள்ளூர்), சென்னை கலெக்டர் அலுவலகம், கட்டிடம், டிஜிபி அலுவலகம் (சென்னை), மேற்கு தாம்பரம் SIT ARG (செங்கல்பட்டு), வாலாஜாபாத், குன்றத்தூர் (காஞ்சிபுரம்), செங்கம், வெம்பாக்கம் (திருவண்ணாமலை), கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), பரங்கிப்பேட்டை (கடலூர்), பாண்டவையார் தலைப்பு (திருவாரூர்), நெய்வாசல் தென்பதி, வெட்டிகாடு (தஞ்சாவூர்), தல்லாகுளம், கல்லந்திரி, சித்தம்பட்டி (மதுரை), தேக்கடி, பெரியார் (தேனி), கிளானிலை (புதுக்கோட்டை), வூட் பிரையர் எஸ்டேட், அவலாஞ்சி, ஹரிசன் மலையாள லிமிடெட், நடுவட்டம், தேவாலா, அப்பர் பவானி (நீலகிரி), வால்பாறை PAPபி., வால்பாறை தாலுகா அலுவலகம், சின்கோனா, வால்பாறை PTO, சோலையார் (கோவை), பவானி, ஈரோடு (ஈரோடு), சேலம் (சேலம்), மங்களாபுரம், திருச்செங்கோடு (நாமக்கல்) தலா 1.

  • K.V. பாலசுப்பிரமணியன்

ஜனம் டிவி.,க்கான முக்கியப் பணி இது..!

janam tv invit - 2026

உலகளாவிய அளவில இந்தியாவில் மட்டும் தான் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு தட்டுப்பாடாக இல்லாத வகையில் கிடைத்து வருகிறது.மற்ற நாடுகளை விட விலை குறைவு.நாடு முழுவதும் போக்கு வரத்து கட்டமைப்பு வலுப்படுத்த பட்டு உள்ளது.பல இஸ்லாமிய நாடுகள் பசி பஞ்சம் பட்டினி உணவு தட்டுப்பாடாக உள்ளது. இந்திய வில் உணவு தட்டுப்பாடாக இல்லை.

பல நாடுகள்ல பெட்ரோல்க்கு பதிவு செய்து டோக்கன் கொடுத்து சில நாட்களாக காத்திருக்க வேண்டும். பணம் கொடுத்தாலும் பெட்ரோல் டீசல் உடனே கிடைக்காது என்றால் கற்பனை செய்து பாருங்க அதிலயும் கள்ள மார்க்கெட் வந்தால் பல லட்சக்கணக்கான பேருக்கான பிழைப்பு என்ன ஆவது.

இப்ப சமையல் எரிவாயு உடனே கிடைக்கிறது.அதில பிளாக் மார்க்கெட் பல நாட்களாக காத்திருப்பு என்ற நிலை வந்தால் என்ன ஆவது.?

புதிய வேளாண்மை சட்டம் செயல்படுத்த பட்டு இருந்தால் விவசாயி உபயோகிக்க கூடிய வர்கள் நியாயமான விலையில் காய்கறிகள் பெற்று இருக்க முடியும்.

தமிழ்நாட்டுல திமுக ஆட்சியில எந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப் பட்டது.

இலங்கையில் சமையல் எரிவாயு கடும் விலை உயர்வு பல நாட்களாக காத்திருக்க வேண்டிய நிலை பாகிஸ்தானில் பெட்ரோல் டீசல் கடும் விலை உயர்வு.சமையல் எரிவாயு தட்டுப்பாடாக உள்ளது.

இறக்குமதி செய்ய அந்நிய செலாவணி இல்லை.உக்ரைன் போர் தொடர்வதால் பல நாடுகள்ல எரிபொருள் தட்டுப்பாடாக உள்ளது.மோடிஜியின் ஆளுமை வலிமை காரணமாக கச்சா எண்ணெய் நியாயமான விலையில் டாலர் அல்லாத வகையில் இந்திய பணமாக கொடுத்து வாங்க பல எண்ணை உற்பத்தி நாடுகள்ல ஏற்பாடு செய்து உள்ளாங்க.

எனவே தக்காளி போல பயங்கர விலை உயர்வு பணம் கொடுத்தாலும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு உடனே கிடைக்காது டோக்கன் வாங்கி காத்து இருக்க வேண்டும் கள்ள சந்தையில் எம.ஆர்.பி யை விட அதிகமாக செலவு செய்து வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தால் என்ன ஆகும் என நினைத்து பார்க்க வேண்டும்.

மத்தியில் பதினேழு கட்சி கூட்டணியாக ஆட்சியில வந்து பசையுள்ள இலாக்கா பெற போட்டி வந்தால் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு கிடைப்பதே அரிது என்ற நிலை வரும். அவங்க அவங்க இஷ்டத்துக்கு பூந்து விளையாடுவாங்க

கச்சா எண்ணை வாங்க உலக வங்கியில் கடன் கச்சா எண்ணை கொள்முதல் கடன் வட்டி என்றபழய நிலை வரும் எனவே தட்டுப்பாடாக இல்லாத வகையில நியாயமான விலையில் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு கிடைத்தால் தான் லட்சக்கணக்கான பேருக்கான அன்றாட வாழ்க்கை நடக்கும்.

எனவே சமையல் எரிவாயு பெட்ரோல் டீசல் இலங்கை பாகிஸ்தான் மற்ற பல நாடுகள்ல உள்ள நிலவரத்தை அங்குள்ள தமிழர்களிடம் பேட்டி கண்டு புதிதாக துவக்க பட உள்ள ஜனம் தமிழ் தொலைகாட்சி சேனல் மூலமாக விவாத களம் நடத்தி மக்களுக்கு உண்மை நிலை அறிய செய்ய வேண்டும்

  • ராமசாமி வெங்கட்ராமன்

–வாசகர் கடிதம்–


ஆண்டாள் கோயிலில் பாமக., அன்புமணி மனைவி, மகள் தரிசனம்!

soumya anbumani in srvilliputhur - 2026

திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவி, மகள் சுவாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் டாக்டர் சௌமியா அன்புமணி சுவாமி தரிசனம் செய்தார்.

pmk soumya anbumani in srivilliputhur temple - 2026

மதுரை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த, பா.ம.க. கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவருமான டாக்டர் சௌமியா அன்புமணி மற்றும் இவர்களின் மகள் சஞ்ஜுமித்ரா இருவரும் நேற்று இரவு திருவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

டாக்டர் சௌமியா அன்புமணிக்கு, பாமக மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா தலைமையில், பாமக கட்சியினர் சிறப்பான வரவேற்பு வழங்கினர்.

ஸ்ரீஆண்டாள் கோவில் நிர்வாகம் சார்பில், டாக்டர் சௌமியா அன்புமணிக்கு சால்வை அணிவிக்கப்பட்டு, ஆண்டாள் மாலை, கிளி மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாமக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவிலி ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்..

IMG 20230714 114231 - 2026

தமிழகத்தில் சிறப்பு மிக்க வைணவ ஸ்தலங்களிவல் முக்கிய ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா இன்று பக்தர்கள் கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க வேதபாராயண முறைப்படி கொடியேற்றத்துடன் துவங்கியது.

முன்னதாக இன்று ஜூலை 14 காலை 9:30 மணிக்கு மாடவீதிகள் சுற்றி கொடிபட்டம் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. கொடிமரம் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் முழங்க வேதபாராயண முறைப்படி கொடியேற்றம் நடைபெற்றது.தொடர்ந்து ஆண்டாள் ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி, மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

IMG 20230714 114158 - 2026

இதனையடுத்து தினமும் காலை 10 மணிக்கு மேல் ஆண்டாள், ரங்க மன்னார் மண்டபம் எழுந்தருளிலும், இரவு வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. ஜூலை 18 காலை 10 மணிக்கு கோயில் ஆடிப்பூர பந்தலில் பெரியாழ்வார் மங்கல சாசனமும், இரவு 10 மணிக்கு 5 கருட சேவையும் நடக்கிறது. ஜூலை 20 அன்று இரவு 7 மணிக்கு மேல் கிருஷ்ணன் கோயிலில் ஆண்டாள் ரங்கமன்னார் சயனசேவை உற்சவம் நடக்கிறது. ஜூலை 22 காலை 8;05 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேரோட்ட திருவிழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்யாண மண்டபங்கள். தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் செய்து வருகின்றனர்.

விழாவையொட்டி ஆண்டாள் கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் தினமும் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டிய நிகழ்ச்சிகள், பட்டிமன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து வருகின்றனர். சுகாதார ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

கோயில்களில் நாளை சனி மகா பிரதோஷ விழா!

pradosham in karur pasupathiswarar temple - 2026

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள, சிவ ஆலயங்களில் இம்மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை மாலை சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது. மிகவும் விசேஷமானது .

இந்த பிரதோஷ காலத்தில், சிவபெருமான் மற்றும் நந்திகேஸ்வரனுக்கு அபிஷேகங்கள் செய்து மாலையில் அணிவித்து வழிபட்டால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது பக்தரின் நம்பிக்கையாகும். பொதுவாக, சிவாலயங்களில் பிரதோஷமானது சோமவார பிரதோஷம், சனி மகா பிரதோஷம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மதுரை அருகே உள்ள சோழவந்தான் விசாக நட்சத்திர கோயிலான பிரளயநாத சிவன் ஆலயத்தில், சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், சனி மகா பிரதோஷ விழா கொண்டாடப்படுகிறது .

இதை ஒட்டி, இக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ்வரலிங்கம், நந்திகேஸ்வரன், சிவபெருமான் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படும்.
அதைத் தொடர்ந்து, சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயில் பிரகாரங்களில் வலம் வரும்.
இதை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசிப்பர் .

இதை அடுத்து, சிறப்பு அர்ச்சனை வழிபாடுகளும், தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, தொழில் அதிபர் எம்.வி. எம். மணி, கோயில் தக்கார் இளமதி, பள்ளி தாளாளரும் கவுன்சிலருமான டாக்டர் மருது பாண்டியன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதே போன்று, மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், பழைய சொக்கநாதர், இன்மையில் நன்மை தருவார், தெப்பக்குளம் முத்தீஸ்வரன், அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம், மேலமடை சௌபாக்கி விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ் ஆலயம், அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகிய கோயில்களிலும் சனி மகா பிரதோஷ விழா மாலை நடைபெறும்.

இதை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் ஆன்மீக குழுவினர் செய்து வருகின்றனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் (பகுதி7): 1996ல் நடந்த அதிசயம்

world cup srilanka 1996 - 2026

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கட் போட்டிகள்
பகுதி 7 – 1996 போட்டி

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்


1996 கிரிக்கெட் உலகக் கோப்பை “வில்ஸ் உலகக் கோப்பை 1996” என அழைக்கப்பட்டது. இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஏற்பாடு செய்த ஆறாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகும். இது 1996 பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை பாகிஸ்தான், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்றது. 17 மார்ச் 1996 அன்று பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்த இலங்கை இந்த போட்டியை வென்றது.

1996 கிரிக்கெட் உலகக் கோப்பை இந்தியாவில் கல்கத்தா, டெல்லி, மொகாலி, பெங்களூர், மெட்ராஸ், ஹைதராபாத், கட்டாக், குவாலியர், விசாகப்பட்டினம், பாட்னா, புனே, மும்பை, அகமதாபாத், வதோதரா, ஜெய்ப்பூர், நாக்பூர், டெல்லி ஆகிய மைதானங்களில் நடைபெற்றது.
இந்தியாவில் உள்ள இடங்கள்

மேலும் பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி, பெஷாவர், பைசலாபாத், குஜ்ரன்வாலாஆகிய மைதானங்களில் நடைபெற்றது. இலங்கையில் கொழும்பு-கண்டியில் உள்ள மைதானங்களில் நடைபெற்றது.

போட்டி தொடங்கும் முன்னரே சர்ச்சைகள் ஏற்பட்டன. 1996 ஜனவரியில் கொழும்பில் உள்ள மத்திய வங்கி மீது விடுதலைப் புலிகளால் குண்டுவீசித் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் தங்கள் அணிகளை இலங்கைக்கு அனுப்ப மறுத்துவிட்டன. இலங்கை, அணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கப்படும் என உறுதி அளித்தது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இலங்கை மைதானங்கள் பாதுகாப்பானது எனச் சொன்னது. ஒருவேளை அணிகள் இலங்கைக்கு விளையாடச் செல்ல மறுத்தால் இலங்கை அணி வெற்றிபெற்றதாகக் கருதப்படும் என அறிவித்தது. இந்த முடிவின் விளைவாக, போட்டி தொடங்கும் முன்பாகவே இலங்கை கால் இறுதிக்குத் தகுதி பெற்றது.

மொத்தம் 12 அணிகள் விளையடின. இவை இரண்டு குரூப்புகளாகப் பிரிக்கப்பட்டன. குரூப் A பிரிவில் இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள், ஜிம்பாபே, கென்யா அணிகள் விளையாடின. குரூப் B பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு நாடுகள், நெதர்லாந்து அணிகள் விலையாடின.

குரூப் A பிரிவில் காலிறுதிக்கு இலங்கை, ஆஸ்திரேலியா, இந்தியா, மேற்கு இந்தியத்தீவுகள் அணிகள் தேர்வாயின. குரூப் B பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் காலிறுதிக்குத் தேர்வாயின.

அரையிறுதிக்குள் இலங்கை, இந்தியா மற்றும் மேற்கு இந்தியத்தீவுகள், ஆஸ்திரேலியா அணிகள் நுழைந்தன. இதில் பெங்களூருவில் நடந்த இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தில் இந்தியா 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அரையிறுதி ஆட்டங்களில் இந்தியாவை இலங்கை அணியும், மேற்கு இந்தியத்தீவுகள் அனியை ஆஸ்திரேலியாவும் வென்று இறுதிப் போட்டிக்கு வந்தன. லாகூரில் நடந்த அந்த இறுதிப் போட்டியில் இலங்கை 7 விக்கட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த உலகக் கோப்பையில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்ட்ன. கென்யாவுக்கு எதிராக, இலங்கை 5 விக்கெட்டுக்கு 398 ரன்கள் எடுத்தது, இது ஏப்ரல் 2006 வரை ஒரு நாள் சர்வதேசப் போட்டியில் அதிகபட்ச அணி ஸ்கோர் என்ற புதிய சாதனையாகும்.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக கேரி கிர்ஸ்டன் ஆட்டமிழக்காமல் 188 ரன்கள் எடுத்தார். 2015 கிரிக்கெட் உலகக் கோப்பையில் முறையே 215 மற்றும் 237 ரன்களை எடுத்த மேற்கிந்தியத் தீவுகளின் முதலில் கிறிஸ் கெய்ல் மற்றும் பின்னர் மார்ட்டின் குப்டில் ஆகியோரால் முறியடிக்கப்படும் வரை, இது எந்த உலகக் கோப்பைப் போட்டியிலும் இதுவரை இல்லாத அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக மாறியது.

வினோத் காம்ப்ளியின் கண்ணீர்

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் 110,000 பேர் பார்வையாளராக இருந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு எதிரான முதல் அரையிறுதியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இலங்கை அணி தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் மலிவாக இழந்த பிறகு, அரவிந்த டி சில்வா தலைமையில் எதிர் தாக்குதலைத் தொடங்கியது.

இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் எடுத்தது. இந்தியா தனது துரத்தலை நம்பிக்கையுடன் தொடங்கியது, ஆனால் சச்சின் டெண்டுல்கரின் இழப்புக்குப் பிறகு, இந்திய பேட்டிங் ஆர்டர் சரிந்தது. 35வது ஓவரில் இந்தியா 8 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கூட்டத்தின் சில பகுதியினர் பழங்கள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை மைதானத்தில் வீசத் தொடங்கினர்.

கூட்டத்தை அமைதிப்படுத்தும் முயற்சியில் வீரர்கள் 20 நிமிடங்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். வீரர்கள் விளையாடத் திரும்பியபோது, அதிகமான பாட்டில்கள் மைதானத்தில் வீசப்பட்டன, மேலும் ஸ்டாண்டில் தீ வைக்கப்பட்டது. போட்டி நடுவர் கிளைவ் லாயிட் இந்த போட்டியை இலங்கை வென்றதாக அறிவித்தார். வினோத் காம்ப்ளி கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறியது இன்றைக்கும் மறக்கவியலாது.

சச்சின் டெண்டுல்கர் இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 523 ரன்கள் அடித்தார். அவர் இரண்டு (127 & 137) செஞ்சுரிகளையும் அடித்தார். ஆஸ்திரேலியாவின் மார்க் வா மூன்று செஞ்சுரிகளை அடித்தார்

நிலவை நோக்கி இன்று பாய்கிறது சந்திரயான்-3

chandrayaan - 2026

நிலவை நோக்கி இன்று விண்ணில் பாயுது சந்திரயான் – 3 விண்கலம். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலத்தில், ‘லேண்டர்’ கலன் தரையிறங்கும்போது, நிலவில் மோதியதில் ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டு, ஒரு பாதி தோல்வியில் முடிந்தது. அந்த விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.

தற்போது, சந்திரயான் – 3 விண்கலத்தை, 615 கோடி ரூபாய் செலவில், இஸ்ரோ வடிவமைத்துள்ளது. ஏற்கெனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால், சந்திரயான் – 3ல் ‘லேண்டர், ரோவர்’ கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட், இன்று பிற்பகல், 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இதற்கான 25 மணி நேரம் 30 நிமிட ‘கவுன்ட் டவுன்’ நேற்று பிற்பகல் 1:00 மணிக்கு தொடங்கியது.

பூமியில் இருந்து புறப்படும் ராக்கெட், 173 கி.மீ., தொலைவு உள்ள சுற்றுவட்டப் பாதையில், சந்திரயான் – 3 விண்கலத்தை நிலை நிறுத்தும். அங்கிருந்து சுற்றுவட்டப் பாதையில், 36,500 கி.மீ., தொலைவு வரை விண்கலம் அனுப்பப்படும். பின், உந்து இயந்திரம் ராக்கெட் போல் செயல்பட்டு சந்திரயான் – 3 விண்கலத்தை நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு திருப்பி நிலவை நோக்கி பயணிக்க வைக்கும்.

ஆக.23 அல்லது 24ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள லேண்டர் சாதனத்தை நிலவில் தரையிறக்க, இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்வை காண, உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.

இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், விழுப்புரத்தை சேர்ந்தவர் ‘சந்திரயான்-3’ திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளதாக செய்தி வெளியாகி கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த பழனிவேல் -ரமணி தம்பதியின் மகன் வீர முத்துவேல் (42). இவர், இஸ்ரோவின் சந்திரயான்-3 திட்டத்தை இயக்கப் போகும் திட்ட இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார்.

வீர முத்துவேல் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தார். பிறகு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தார். சென்னை சாய்ராம் கல்லுாரியில் பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கும், திருச்சி ஆர்.இ.சி., பொறியியல் கல்லுாரியில் எம்.இ., மெக்கானிக்கலும் பயின்று,சென்னை, ஐ.ஐ.டி.,யிலும் பயிற்சி பெற்றார். 2004ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘இஸ்ரோ’வில் பணிக்குச் சேர்ந்தார்.

UNIFORM CIVIL CODE :  Why we NEED?

0
uniform civil code - 2026
#image_title

A NON-DISCRIMINATORY LAW FOR A SECULAR NATION

Post-independence, the requirement of a Uniform Civil Code (UCC) for its citizens was deliberated by the makers of the Indian constitution.  However, due to the prevailing circumstances wrt personal laws, UCC was put on hold at the national level till the desired social and economic development of the nation, but it was stated in the Constitution that states were to secure the UCC for all it’s citizens as  their bonded duty.  Accordingly, UCC forms part of the directive principles of the state policy enshrined in Article 44 of the Indian Constitution.

More than 70 years have elapsed but the issue of bringing in UCC is still hanging in balance causing social irritants.  It is surprising that in secular nation like India, there exist various personal laws across the communities which allow them to follow different rules  with respect to marriage, divorce, inheritance, adoption, succession, etc causing social imbalances in the society, especially the women as they have been discriminated in such rights. 

It is ironic that some age-old  citizens from outside India tour India to marry 12-14 years old girls for the duration of their stay in India under the umbrella of “Traveller Marriage”, a woman cannot adopt a child and have no right to property on the unfortunate death of her husband, men can have plural marriages, etc.    Therefore, this is the high time to introspect these issues and right time to bring in UCC.

The non-implementation of UCC appears primarily due to political and religious considerations which is against the secular fabric of India.  Another factor against the UCC often quoted is the provision of the constitution to the right to religion of choice in the shadow of personal laws.  There have been instances where the Honourable Supreme Court while dealing with various complex cases has strongly advocated the need for UCC.  The issue has also been deliberated at a national level and at present, there exists a conducive political and social environment towards the implementation of the UCC.

UCC will benefit all citizens irrespective of caste, clan, colour, creed, religion, gender, etc and abolish all existing Hindu, Muslim, etc personal laws.  Today there are tremendous improvements in social, education, health , infrastructure fields and there is all-round development, prosperity, and awareness among society and especially the younger generation.  Therefore, the implementation of UCC merits serious consideration as this will provide equal rights to its citizens, promote national integration, promote gender equality, women empowerment with respect to marriage, divorce, succession, inheritance, adoption, maintenance, etc in a secular nation of ours.

ONE NATION ONE LAW FOR THE NATIONAL GROWTH

In general, secularism refers to the separation of religion from political, economic, social and cultural aspects of life.  Thus, religion is considered a purely personal matter and it emphasizes the dissociation of the state from religion.  In this background, the requirement of a Uniform Civil Code (UCC) for all its citizens was deliberated by the makers of the Indian constitution.  However, due to the prevailing circumstances, UCC was put on hold till the desired social and economic development of the nation, but states were required to secure to it’s people the Uniform Civil Code. Accordingly, UCC forms part of the directive principles of the state policy enshrined in Article 44, Part 4 of the Indian Constitution.

More than 70 years have elapsed but the issue of bringing in UCC is still hanging.  It is surprising that in a secular nation like India, various personal laws dominate over the constitution wrt marriage, divorce, inheritance, adoption, succession, etc causing social imbalances in the society, especially the women as they are deprived of many such rights. It is pitiable that there are provisions like traveller marriage, they cannot adopt a child and have no right to property on the unfortunate death of their hhusband. Further men can marry four times, but women have no such rights.  Therefore, this is high time to introspect on these issues and bring in UCC at the earliest.

The non-implementation of UCC appears to be due to political and religious considerations which is against the spirit of the secular fibre of India.  Another factor against the UCC often quoted, is the provisions of the constitution about the right to religion of choice in the shadow of personal laws.  In this connection it is pertinent to mention, that there are number of instances where the Honourable Supreme Court itself, while dealing with various complex cases has strongly advocated the need for UCC. 

Today there are tremendous improvements in social, educational, and economic conditions of the people and there is all round prosperity, and enhanced awareness among society, especially the younger generation.  The issue has been deliberated at various levels and forums and it is felt that, today a conducive political and social environment exists towards the implementation of the UCC.  Therefore, the implementation of UCC merits serious consideration as this will provide equal rights to its citizens, promote national integration, promote gender equality and lead to women empowerment  with respect to marriage, divorce, succession, inheritance, adoption, maintenance, etc in a secular nation of ours.

In view of the foregoing, the implementation of UCC in secular India is the need of the hour and must be implemented at the earliest for all it’s citizens irrespective of caste, clan, colour creed, religion, gender, etc.

Jai Hind

A Book a Week -6

0
arthur c brooks - 2026

       By    Narasimhan Vijayaraghavan


A perfect fit for those in ‘retirement’ or ‘retiring’. Learn to know that there is no word ‘retirement’ in Japanese lexicon. True. Here is a book that dwelled into how we can be engaged in a more fruitful and productive life, by pivoting when need to, from before ‘retirement’. A lovely book from someone who practices what he preaches to ‘live happily ever after’.

Professor Arthur C. Brooks is a renowned Harvard professor known for his expertise in economics, public policy, and social entrepreneurship. Born on May 21, 1964, in Spokane, Washington, Brooks has made significant contributions to academia and the public sphere.

Brook’s works have gained widespread recognition and influence, reaching audiences beyond academia. Some of his notable publications include “The Conservative Heart: How to Build a Fairer, Happier, and More Prosperous America” and “Love Your Enemies: How Decent People Can Save America from the Culture of Contempt.” These books reflect his emphasis on bridging political divides and finding common ground.

He now teaches the popular course on Harvard campus on ‘Happiness’. Brooks in ‘FROM STRENGTH TO STRENGTH FINDING SUCCESS, HAPPINESS, AND DEEP PURPOSE IN THE SECOND HALF OF LIFE’ digs deep into the second half of life of all of us. He calls the first one, pervaded by ‘strivers’ as ‘fluid intelligence’ when it is a flow. The second half, he calls it ‘crystallized intelligence’ which we ought to proactively tap into for a ‘fuller, better, productive life’ contrary to popular perception of retiring into the woods and sunset. Fascinating construct with research and data from authentic sources.

The bestselling author and popular Atlantic columnist ponders a way to “get off the hamster wheel of success and accept inevitable professional decline with grace.”

Drawing from his media columns and research, Brooks approaches the conundrum of the later-life career striver from a social science angle and presents the bounty of his analysis through advice and encouragement.

He begins with an idea that many professionals find personally devastating: that the majority will peak in their careers much earlier than they’d imagined, like entrepreneurial tech founders who experience creative declines in their early 30s. He examines the problem with psychologists and, most notably, career professionals feeling the pinch of dissatisfaction while remaining hooked on the pursuit of smoothly unabated career advancement.

Brooks shows how this process of decline can bruise pride and elicit fear, and he investigates how it can also be difficult to comprehend and even more challenging to accept, as it contradicts our innate instinct to continue creating successful ventures. In accessible, affable prose that also incorporates spirituality, including teachings of ancient Indian and Buddhist philosophers, Brooks discusses the psychology and addictive allure of satisfaction.

It may suffice to draw the reader into this opener. The book begins with Brooks telling the story of someone well known (he does not identify him) melting down on a plane because he felt like all his work had been for nothing. Having been at the top of his game, in his later years he knew he no longer measured up to that standard and judged his past accomplishments by his present ability. This is a warning. Brooks follows this anecdote with a chapter demonstrating that most people hit their decline much sooner than they recognize professionally.

The bad news is that the decline comes sooner than we would expect. The good news is that it is a particular type of decline. In general, younger people tend to be more adaptable and experience a higher degree of fluid intelligence.

Senior citizens among us have a whole new life ahead of us. It is not meaningless to say sixty is new forty. It is. It can be. If we choose to exploit our crystallized intelligence and not worry about the dissipation of fluid intelligence from aging.

The book has brilliant nuggets and vignettes to communicate the message with a cutting edge and razor-sharp intellect with experience in ‘living as he says’. The eastern and Indian philosophical connect is alluring to us, born and brought up in the culture.

It is undeniably a worthy read. You may be a ‘striver’ or one who had ‘strived’ with ‘fluid intelligence’. The message is : you can continue ‘striving’ with  lived experiences and wizened wisdom a.k.a.   ‘Crystallized intelligence.


(Author of multiple books and practicing advocate in the Madras High Court)