Home Blog Page 343

பழனி முருகன் கோயிலில் வெள்ளி தகடு பதிக்கும் பணி!

1783428 palani murugan temple - 2026

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில், பள்ளியறை சன்னதியில் ரூ.35 லட்சத்தில் வெள்ளித்தகடு பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பழனி முருகன் கோவில் மூலவர் சன்னதிக்கு செல்லும் வழியில் உட்பிரகாரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சண்முகருக்கு உற்சவர் மண்டபம், நடராஜர், சின்னக்குமார சுவாமிக்கு என, தனித்தனி மண்டபம் உள்ளது.

இதில், பள்ளியறை மண்டபம் முழுவதும் நன்கொடையாளர் மூலம் ரூ.35 லட்சம் செலவில் வெள்ளி முலாம் பூசிய தகடு பொருத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், அற்புத வேலைப் பாடுகளுடன் மொத்தம் 54 கிலோ வெள்ளியால் ஆன தகடு பொருத்தும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிரசித்தி பெற்ற முருகன் கோயில் சன்னதியில்,வெள்ளி தகடு பதிக்கும் பணியானது, பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது

தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை..

தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மறுஎண்ணிக்கை இன்று நடைபெற்றது மீண்டும் வாக்கு எண்ணிக்கை ஒரு மேஜைக்கு 7 பேர் கொண்ட குழுவுடன் நடைபெற்றது. கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 350 போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தென்காசி மாவட்டம் தென்காசி தொகுதியில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான செல்வ மோகன்தாஸ் பாண்டியனை விட 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. எனவே தபால் வாக்குகளையும், மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்றுகள் வரை பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டில் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிபதி, தபால் ஓட்டுக்களை மறுஎண்ணிக்கை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி தென்காசி மாவட்ட ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இன்று தபால் ஓட்டு மறு எண்ணிக்கை பணிகள் நடந்தது. இதற்காக ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல அறையில் இருந்து 4 பெட்டிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தபால் ஓட்டுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

அப்போது ஏற்கனவே பதிவு செய்திருந்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் மட்டும் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்றனர். இந்த வாக்கு எண்ணிக்கை ஒரு மேஜைக்கு 7 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கியது. இதனை கண்காணிப்பாளர் கண்காணித்து வந்தார்.

ஓட்டு எண்ணிக்கையையொட்டி பழனிநாடார் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் மற்றும் பிற வேட்பாளர்களும் வந்திருந்தனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சிறிது நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வமோகன் தாஸ் பாண்டியன், கோர்ட்டு உத்தரவுப்படி 13 ஏ, 13பி, 13சி ஆகிய மூன்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என கூறினார். இதனால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக செல்வமோகன் தாஸ் பாண்டியன் கூறும் போது, உயர் நீதிமன்றத்தில் நாங்கள் தொடர்ந்த வழக்கில் தபால் ஓட்டுக்களை மீண்டும் எண்ண வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. மறு எண்ணிக்கையின் போது தபால் ஓட்டுகள் அனுப்பப்பட்ட 13 ஏ கவர்கள், 13 பி -வாக்காளர்களின் முழு விவரம், 13 சி-யாருக்கு வாக்களித்தார்கள் என்பதற்கான ஓட்டுச் சீட்டு ஆகிய 3 பேப்பர்களையும் கணக்கில் எடுத்து கொண்டு மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று 13 ‘சி’ சீட்டுகளை மட்டுமே எண்ணப்படுகிறது. தற்போது நான் தெரிவித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என தெரிவித்தார். சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

மறு வாக்கு எண்ணிக்கையையொட்டி போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் மேற்பார்வையில், தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 350 போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.

சாத்தூர்- பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த 2 பேர் மரணம்..

IMG 20230713 140317 - 2026

சாத்தூர் அருகே குலசேகரபுரத்தில் கடந்த 6-ம் தேதி நடந்த பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த 2 பேர் இன்று உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள குலசேகரபுரத்தில் பட்டாசு தயாரிப்பதற்காக கடந்த 6-ம் தேதி ரகு ( 45), அவரது உறவினர் முகேஷ் (22) ஆகியோர் சென்றனர். அப்போது 2 பேரும் பட்டாசு தயாரிக்க தேவையான மருந்து கலவையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முகேஷ், ரகு ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் பட்டாசு ஆலை உரிமையாளர் ரகு, உறவினர் முகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் கொட்டித் தீர்த்த அதிகனமழை! திருப்பி விடப்பட்ட சென்னை விமானங்கள்!

rains weather rain women - 2026
#image_title

விழுப்புரத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக சென்னையில் லண்டன், சிங்கப்பூர் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. வெளிநாடுகளில் இருந்து சென்னை வந்த விமானங்கள் சில தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டன. 8 விமானங்கள் வானில் வட்டமடித்தபடி சில நிமிடங்கள் சுற்றின. பின்னர் அனுமதி கிடைத்ததும் தரையிறங்கின.

ஜெர்மனியில் இருந்து வந்த விமானம் சென்னையில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. சென்னையில் இருந்து புறப்பட இருந்த 12 விமானங்கள் 30 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 12.07.2023 காலை 0830 மணி முதல் 13.07.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)

BASL மணம்பூண்டி (விழுப்புரம்) 27;
RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்) 21;
BASL முகையூர் (விழுப்புரம்) 20;
RSCL-2 கேதார் (விழுப்புரம்) 15;
வேலூர் (வேலூர்) 9;
RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 8;
BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி) 7;

மரக்காணம், விழுப்புரம், RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) தலா 6;

KCS மில் அரியலூர், திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு) தலா 5;

காட்பாடி, அம்முண்டி (வேலூர்), தாம்பரம், செய்யூர் (செங்கல்பட்டு), Dscl மாதம்பூண்டி, Kcs மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), வானூர், RSCL-2 கஞ்சனூர், RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்) தலா 4;

பெண்ணாரம் (தர்மபுரி), ஆம்பூர் (திருப்பத்தூர்), பணப்பாக்கம், ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜா (இராணிப்பேட்டை), புழல் ARG (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம், NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை) மகாபலிபுரம், திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), KVK காட்டுப்பாக்கம் ARG, கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), செஞ்சி, RSCL-2 நேமூர், RSCL-3 வளத்தி, RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), KCS மில்-1 கடவனூர், DSCL திருப்பாலப்பந்தல், அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி) தலா 3;

தர்மபுரி PTO (தர்மபுரி), பொன்னை அணை (வேலூர்), அம்மூர் (வாலாஜா ரயில்வே), காவேரிப்பாக்கம், சோளிங்கர், பாலாறு அணைக்கட்டு, கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), சோழிங்கநல்லூர், சென்னை மீனம்பாக்கம், ஆலந்தூர் (சென்னை), கேளம்பாக்கம், மதுராந்தகம், திருப்போரூர், தாம்பரம் SIT ARG மேற்கு (செங்கல்பட்டு), வாலாஜாபாத், காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), ஆரணி, தண்டராம்பேட்டை, கீழ்பென்னாத்தூர், சேத்பேட்டை (திருவண்ணாமலை), RSCL வல்லம் (விழுப்புரம்), புதுச்சேரி (புதுச்சேரி), கல்லிக்குடி, தனியாமங்கலம், திருமங்கலம் (மதுரை), மானாமங்கலம் (மதுரை), பந்தலூர், கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி) தலா 2;

வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), குடியாத்தம் (வேலூர்), மின்னல் (இராணிப்பேட்டை), பூந்தமல்லி (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழக ARG, சென்னை நுங்கம்பாக்கம், ஒய்எம்சிஏ நந்தனம் ARG (சென்னை), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் (காஞ்சிபுரம்), RSCL-3 செம்மேடு, திண்டிவனம் (விழுப்புரம்), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), ஆண்டிபட்டி, வாடிப்பட்டி (மதுரை), காரியாபட்டி, விருதுநகர் (விருதுநகர்), அழகரை எஸ்டேட், பார்வூட் (நீலகிரி) தலா 1.

பொறியியல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

ponmudi - 2026
#image_title

நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கான அட்டவணையை வெளியிட்டார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது.

ஜூலை 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவு கலந்தாய்வு.

ஜூலை 28ம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

28ம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9 வரை முதல் சுற்று கலந்தாய்வு.

ஆகஸ்ட் 9ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 28ம் தேதி வரை 2ம் சுற்று கலந்தாய்வு.

A lesson in Judicial Overreach?

0
supreme court of india - 2026

By Narasimhan Vijayaraghavan

The Supreme Court has a long history of refraining from getting into the policy-making territory of the Executive branch. This principle is known as the separation of powers, and it is one of the most important checks and balances in our system of government.

The separation of powers doctrine holds that the three branches of government – the legislative, executive, and judicial – should be kept separate from each other. This is to prevent any one branch from becoming too powerful. The Supreme Court has interpreted this doctrine to mean that the Court should not second-guess the policy decisions of the Executive branch.

There are a few reasons why the Supreme Court refrains from getting into the policy-making territory of the Executive branch. First, the Court does not have the expertise to make policy decisions. Second, the Court does not have the democratic legitimacy to make policy decisions. That is where the complaint of ‘unelected tyranny’ comes in. Third, the Court’s involvement in policy-making would undermine the constitutional balance of power. It is true that there is no arithmetical accuracy to this dictum. If there is an ‘apparent constitutional breach’ courts do step in and rightly too. But, the norm is the reverse.

The recent dissents of Associate Justices Elena Kagan and Sonia Sotomayor in the Biden v. Nebraska judgment dt.30th June,2023, have huge lessons for our institutions  as well. Judicial overreach is anathema in a democratic polity. Even if the Executive was found lax or indifferent or does it’s job in a manner not aligned with the vision of a court, it is not for  judiciary to ‘make the policy’ or ‘make law’ or invent a ‘breach of constitutional convenience’. The language employed by Kagan and Sotomayor ring loud and clear and worth a listen in New Delhi too.

Justice Elena Kagan’s dissent is  a scathing rebuke of the majority’s decision to invalidate President Biden’s student loan debt relief plan. Kagan argued that the majority had “no business deciding” the case, and that its decision was “a danger to a democratic order.”

Kagan first challenged the majority’s standing to hear the case. She argued that the states that challenged the policy did not have legal standing to do so, because they had not suffered any harm from the policy. Kagan also argued that the majority had exceeded its authority by applying the “major questions doctrine” to the case. The major questions doctrine is a legal principle that allows courts to strike down government regulations that are deemed to be too important or consequential. Kagan argued that the majority had misapplied the doctrine in this case, and that its decision was therefore “a dangerous precedent.”

Kagan then turned to the merits of the case.

She argued that the majority’s interpretation of the law was incorrect. She pointed out that the law in question, the CARES Act, explicitly gave the Secretary of Education the authority to “provide forbearance, cancellation, or other relief with

respect to loans” in response to a national emergency. Kagan argued that the Secretary’s student loan forgiveness plan was clearly within the scope of this authority.

Kagan concluded her dissent by warning that the majority’s decision was “a danger to a democratic order.” She wrote that the decision “undermines the Constitution’s careful balance of power between the branches of government.” She also warned that the decision “sets a dangerous precedent for future cases.”

Kagan’s dissent was widely praised by legal scholars and progressives. It was seen as a forceful and principled defense of the Biden administration’s student loan forgiveness plan. The dissent also raised important questions about the role of the Supreme Court in our democracy.

And  Sonia Sotomayor went emotional in her dissent. The majority’s decision is “heartbreaking” and “profoundly wrong.” Sotomayor argued that the majority’s decision  would have a devastating impact on millions of Americans. She wrote that the decision “will leave millions of borrowers drowning in debt, unable to afford homes, cars, and other necessities.”

The majority’s decision is “based on a misreading of the law.” Sotomayor toed Kagan in holding that the  majority had misread the law in question, the CARES Act. She pointed out that the CARES Act explicitly gave the Secretary of Education the authority to “provide forbearance, cancellation, or other relief with respect to loans” in response to a national emergency. Sotomayor argued that the Secretary’s student loan forgiveness plan was clearly within the scope of this authority.

Sotomayor argued that the majority’s decision was a dangerous precedent that could be used to prevent future presidents from taking action to help struggling borrowers. She wrote that the decision “will make it harder for future presidents to use their lawful authority to address the student loan crisis.”

Sotomayor’s dissent was widely seen as a forceful and principled defense of the Biden administration’s student loan forgiveness plan. The dissent also raised important questions about the role of the Supreme Court in a democracy. She pointed out that thd majority’s decision “will have a significant impact on the lives of millions of borrowers” ;  “is based on a misreading of the law”. Sotomayor concluded her dissent by writing that “the majority’s decision is a grave injustice.” She urged Congress to act to “correct this wrong.”

The last suggestion is for US Congress to ‘make law’ to ‘correct this wrong’. Is there a lesson for us too?  The irrational exuberance of constitutional courts is flagged off in these dissents  like never before, in a matter impacting lives of millions of lives of We the People.


(Author of Constitution Making & Working, OakBridge, is practicing advocate in the Madras High Court)


மதுரை எய்ம்ஸ்: மருத்துவ பேராசிரியர் பணியிடங்களுக்கு நேர்காணல்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மனநலம், தோல் மருத்துவம், காது – மூக்கு – தொண்டை, கண் மருத்துவம், எலும்பியல் துறைகளுக்கான பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான நேர்காணலுக்கான தேதி வெளியானது.

nadurai medical science employment - 2026

தமிழிசையும் பிராமணர்களும்!

arayar sevai - 2026

தமிழிசை என்றால் குறிஞ்சி பாடிய கபிலரிலிருந்தே தொடங்கலாம்; சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய கபிலர் பிராமணர்தான். குறிஞ்சிப் பாட்டு என இருப்பதால், ஏதோ மறைந்துபோன இசை மெட்டில்தான் இப்பாடல்கள் அமைந்திருக்க வேண்டும். குறிஞ்சிப் பண்ணில் அமைந்திருக்கலாம்.

திருஞானசம்பந்தர் பாடியதும் தமிழிசைதான்.

களப்பிரர் காலத்தில் பொலிவிழந்து போயிருந்த தமிழிசை காழிப்பிள்ளையாரின் தமிழால் புத்துயிர் பெற்றதாகச் சைவ அறிஞர்கள் எழுதியுள்ளனர். சம்பந்தர் அரன் பணியைத் தொடங்கியபோது தென் தமிழகத்தில் சமணமே கோலோச்சியது.

நாதமுனிகள் தொகுத்ததும் தமிழிசைதான்.

ஸ்ரீமந்நாதமுனிகள் அஷ்டாங்க யோகம் கைவரப் பெற்றிருந்தும் நாலாயிரப் பனுவல்களைப் பரப்பும் பணியை மேற்கொண்டார்; மேலையகத்து ஆழ்வான், கீழையகத்து ஆழ்வான் என்ற தம் மருமக்கள் இருவருக்கும் அவற்றைக் கற்பித்தார். அவர்தம் தமிழிசைக் கொடையை ”காளம்வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத்தாளம்வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்தவள்ளல்” என ஸ்ரீ வேதாந்த தேசிகர் கொண்டாடியுள்ளார்.

இன்னும் சொல்லப்போனால் ஸ்ரீ நாதமுனிகள் காலத்துக்கு முன்னரே அருளிச்செயல் இசை வடிவம் பெற்றிருக்க வேண்டும் .

”தேவு மற்று அறியேன், குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே !” என்றார்

ஸாமவேதம் வல்ல மதுரகவி ஆழ்வார்; ஸ்வாமி நம்மாழ்வாருக்கு மிக அணுக்கமானவர் இந்த ஆழ்வார். இந்த ஆழ்வார் நம்மாழ்வார் காலத்திலேயே மாறன் தமிழை இன்னிசை கலந்து கானம் செய்ய ஆரம்பித்துவிட்டார் என நிரூபணமாகிறது.

“பாவின் இன்னிசை” என்பதற்கு ’பாவிலே பூண்ட இனிய இசை’ என உரை செய்கிறார் ஸ்வாமி நம்சீயர் அவர்கள்; ”பாவின் இன்னிசை ” என்பதற்கு ’இயலோடு சேரப் புணர்ப்புண்ட இன்னிசை’ என விளக்கம் அருளிச் செய்வார் ஸ்வாமி நம்பிள்ளை.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆடம்பரமோ, விளம்பரமோ இல்லாமல் இயல், இசை, அவிநயம் அனைத்தையும் பேணிவரும் அரங்கன் திருமுற்றத்து அடியார்களான அரையர்களும் அந்தணர்களே. ’செந்தமிழ் பாடுவார் வீதி’ என்றே இவர்களுக்கான அமைவிடம் இருந்தது திருவரங்கத்தில். ஸ்ரீ ராமாநுஜர் காலத்தில் 700 அரையர்கள் இருந்ததாக குருபரம்பரை நூல் சொல்கிறது. துருக்க கலாப காலத்தில் அழகிய மணவாளன் இல்லாத காலத்திலும் அரங்கத்தில் எஞ்சியிருந்த அரையர்கள் வெறும் கைத்தாளத்தோடு பாசுரங்களை சேவித்ததாக வரலாறு. அரையர் சேவை அரங்கம் தவிரப் பல திவ்யதேசங்களிலும் இருந்துள்ளது. இன்று இவர்களது எண்ணிக்கை அருகி விட்டது.

வில்லிபுத்தூராழ்வார் திருமகனார் ’வரந்தருவார்’ செய்த முதல் தமிழ்த்தாய் வாழ்த்து [14ம் நூற்0] :

பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்து
இருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை
நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்து ஓர் ஏன
மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்!

’வாரணமாயிரம்’ பதிகம் இல்லாமல் வைணவ மணவினைகள் முற்றுப்பெறா.

சுப்பிரமணிய ஐயர் [அபிராமி பட்டர்] பாடிய அபிராமி அந்தாதியும் தமிழிசைதான். ஆவுடையக்காள் பாட்டு, ஊத்துக்காடு வேங்கட கவியின் பாட்டுக்கள், ராமஸ்வாமி ஐயர் அவர்கள் செய்த பெரிய புராணக் கீர்த்தனை – பார்வதி சரித்திரக் கீர்த்தனை, கோபால கிருஷ்ண பாரதியார் – கவி குஞ்சர பாரதியார் – அநந்த பாரதியார் – சுப்ரமண்ய பாரதியார் பாடல்கள், பாபநாசம் சிவன் அவர்களின் எண்ணற்ற கீர்த்தனைகள், கணக்கற்ற கும்மி – கோலாட்ட – நலுங்குப் பாட்டுகள் எல்லாம் தமிழிசைதான்.

19ம் நூற்றாண்டில் இசையுலகின் சிகரமாக இருந்தவர் கனம் கிருஷ்ண ஐயர்; இவரும் தமிழ்க் கீர்த்தனைகளை இயற்றியவர். ’வேலவ’ ‘முத்துக்குமர’ எனும் முருகன் பெயர்கள் கொண்ட முத்திரைகளில் தமிழ்ப் பதங்களை இவர் இயற்றியுள்ளார். ஸத்குரு தியாகராஜ ஸ்வாமிகளின் தூண்டுதலால் அடாணா ராகக் கீர்த்தனை ஒன்றை இயற்றினார். கோபால கிருஷ்ண பாரதியார் ஆபோகி ராகத்தில் தமிழ்க் கீர்த்தனை பாடக் காரணமாக இருந்தவரும் ஸத்குரு தியாகய்யாதான். இதிலுள்ள பல தகவல்கள் டாக்டர் உ வே சா அவர்கள் கொடுத்துள்ளவையே; இட்டுக்கட்டி எழுதவில்லை.

அருணாசலக் கவிராயரிடம் தமிழ்ப் பாடம் கேட்ட வெங்கட்ராமய்யர், கோதண்ட ராமய்யர் என்ற இரு சங்கீத வித்வான்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் இராமநாடகக் கீர்த்தனைகளைப் புனைந்தார். அந்த இரண்டு வித்வான்களும் பல ஊர்களிலும் சென்று அந்தக் கீர்த்தனைகளைப் பாடிப் பிரபலப் படுத்தினர். பிற்காலத்தில் அரியக்குடி ராமாநுஜ ஐயங்கார் மேலும் மெருகேற்றிப் பாடினார்.

கோடீசுவர ஐயரின் கீர்த்தனைகள் முன்பு பாடப்பட்டன; இப்போது அவை அரிதாகி விட்டன. இவர் 72 மேளகர்த்தா ராகங்களிலும் பாடியுள்ளார். சுப்பராம ஐயர் அவர்களின் தமிழ்ப் பதங்கள் ஒருகாலத்தில் புகழ் பெற்றிருந்தன, இசைத்தட்டாகவும் வெளியாயின. ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் அவர்களின் ‘ ஆனந்தமான சங்கீதம், இதை அறிந்தவர்க்கே……’ எனும் காம்போதிக் கீர்த்தனை மிக அருமையாக இருக்கும். அண்மையில் யாரும் இதைப் பாடியிருப்பதாகத் தெரியவில்லை.

திரு நீலகண்ட சிவம் அவர்கள் 4446 கீர்த்தனைகள் தமிழில் இயற்றியுள்ளர்; ஒரு பகுதியை அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டது. இவர் நாகர்கோவில் அருகே வடிவீசுவரத்தில் பிறந்தவர்; அன்றைய ஸம்ஸ்தானங்கள் இவருக்கு ஆதரவளித்தன.

கவியோகி சுத்தானந்த பாரதியார் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவரே தவிர, அவர் பாடியது தமிழில்தான். மஹரிஷி ரமணர் எளிய தமிழில் உரையாடி, போதனைகள் செய்து, பாடலும் இயற்றியவர். செம்பை வைத்தியநாத பாகவதர் அவர்கள் அருட்பாவை இசைத்தட்டாக வெளியிட்டார், சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர். லலிதா தாஸர் இயற்றிய தமிழ்ப் பாடல்களையும் செம்பை பாகவதர் அவர்கள் பாடிப் பிரபலமடையச் செய்தார். 1940களில் தமிழிசை ஓர் இயக்கமாக உருப்பெறுவதற்கு முன்பே நடந்தவை இவை எல்லாம். செம்பை அவர்களிடம் இசை பயின்ற குருவாயூர் பொன்னம்மாள் எனும் இசை அறிஞர் திருவருட்பா பாடல்களுக்கு மெட்டமைத்து சுரக் குறிப்புகளோடு வெளியிட்டுள்ளார்.

வள்ளிமலை சுவாமிகளின் [அர்தநாரி] அருந்தொண்டால் திருப்புகழ் புத்துயிர் பெற்றது. தில்லி ராகவன் அவர்கள் அமைத்த பத்ததியில் திருப்புகழ் பாடும் பல குழுக்கள் இன்றும் உள்ளன. காஞ்சிப் பெரியவர் முனைந்ததால் திருப்பாவையும், திருவெம்பாவையும் பிரபலம் ஆயின.

தமிழிசை ஓர் இயக்கமாகத் தோன்றிய பின்னரும் அதற்கு ஆதரவளித்து ஒத்துழைத்தது பிராமணர்களே. இது குறித்து ஜெயமோகன் அவர்களும் எழுதியுள்ளார். அமரர் கல்கி தம் பத்திரிகை வாயிலாகத் தமிழிசைக்கு மிகச் சிறந்த ஆதரவளித்தார்.

தெலுகு – கன்னட வாக்கேயகாரர்களின் அருமையான பாடல்கள், நாயக்க மன்னர்களின் ஆட்சி இவற்றால் பிறமொழிப் பாடல்கள் முன்னணியில் இருந்தது உண்மையே. இன்றைய தென்னிந்திய இசை மரபு புரந்தர தாஸரவர்கள் அமைத்தளித்த பத்ததியைத்தான் பின்பற்றி வருகிறது. கர்நாடக ஸங்கீத மும்மூர்த்திகளுள் தியாகய்யா, தீக்ஷிதர் இருவரின் பாடல்களும் புகழ் பெற்றுப் பரவக் காரணம், அவர்கள் வறுமையையும் எதிர்கொண்டு, ஒரு சீட மரபைத் தோற்றுவித்ததுதான். அவர்கள் மேலும் பலரைத் தயார் செய்தனர்.

பத்ராசல ராமதாஸர் தெலுகு கீர்த்தனைகள் பாடியுள்ளார்; அதிகம் பிரபலமாகவில்லை. காரணம் அவர் சிஷ்யர்களுக்கு போதிக்கவில்லை. ஸத்குரு தியாகய்யா தெலுகு கீர்த்தனை பாடினார்; பிரபலமானது. காரணம் அவர் முயன்று உருவாக்கிய சிஷ்ய பரம்பரை.

சிறந்த செவிக்கினிய மெட்டு என்றால் மொழிக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சங்கராபரணம் (தெலுகுத் திரைப்படம்),ஆராதனா (ஹிந்தி) , செம்மீன் (மலையாளம்) போன்றவற்றின் பாடல்கள் தமிழரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

  • தேவ் ராஜ்

சந்திரயான் 3: நிலவில் மறுபக்கத்தில்!

chandrayaan - 2026

அம்புலிமாமா – சந்தமாமா

தயார் நிலையில் நம் இந்திய இஸ்ரோ பல சாகசங்களை செய்ய காத்திருக்கிறது. இன்று அதற்கு மிக முக்கியமான ஒரு நாள். சந்திரனுக்கு விண்கலனை அனுப்பி கொண்டு இருந்த நாம் இப்போது அதிலேயே தரையிறங்க விண்கலம் அனுப்ப திட்டமிட்டு நாள் குறித்து விரிவான ஏற்பாடுகளை செய்து இருக்கிறோம்.

நாளை மதிய வேளை சுமார் 2:30 மணி அளவில் சந்திரனில் தரையிறங்கும் விண்கலனை சுமந்து கொண்டு நம் இந்திய #LVM3 பறக்க இன்று கௌண்ட் டவுன் ஆரம்பிக்க இருக்கிறார்கள்.

இது முதல் முறையா என்றால். இல்லை. மூன்றாம் முறை, ஆதலால் இதற்கு சந்திராயன் 3 என பெயர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த உலகில் இது தான் முதல் தடவை. உலகம் இது வரை பார்த்திராத நிலவின் மறுபக்கத்தில் நாம் அனுப்ப இருக்கும் வாகனம் தரையிறங்க இருக்கிறது. அப்படி என்றால் நிலவில் முதன் முதலில் காலடி எடுத்து வைத்ததாக அறியப்படும் அமெரிக்க நீல் ஆம்ஸ்ட்ராங் அதுவும் உண்மை. அவர் தரையிறங்கியது நாம் பார்க்கும் நம்மால் பார்க்க முடிந்த நிலவின் ஒரு பக்கத்தில்.

என்ன வித்தியாசம்?

இங்கு சூரிய ஒளி உண்டு. இன்னமும் சரியாக சொன்னால் சூரிய ஒளி படும் நிலவின் ஒரு பக்கத்தில் தரை இறங்கி சாதித்தனர் அன்று. இங்கு வேடிக்கையான ஒரு சுவாரசியம் சொல்வர். அன்று அந்த அமெரிக்க விண்கலம் தரையிறங்கிய சமயத்தில். அதற்குண்டான செயல்திறன் தொழில்நுட்பம் வெறும் கால்குலேட்டர் சிப் செட்டில் என்ன இருந்ததோ அதாவது அதன் கொள்திறன் அவ்வளவு மட்டுமே இருந்தது என்கிறார்கள்.

அதனோடு ஒப்பிடுகையில் இன்றைய வானளாவிய அசுர வளர்ச்சி மிக பிரமாண்டமானது என்பதில் அணு அளவிலும் சந்தேகம் இல்லை.

இங்கு மற்றோர் கேள்வியும் முன் வைக்கப்படுகிறது. 1969 பிறகு ஏன் மீண்டும் அமெரிக்கா நிலவிற்கு மனிதனை அனுப்ப முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என கேட்பவர்களும் உண்டு.

அவ்வளவு ஏன் ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே நிலவில் கால் வைத்ததாக சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை ஹாலிவுட் பாணியில் செட் போட்டு இங்கேயே எடுத்துவிட்டு கதை விட்டு கொண்டு இருக்கிறார்கள் என்றெல்லாம் புரளி பேச ஆரம்பித்து அமெரிக்காவே கதி கலங்கி நிற்கும் நிலையெல்லாம் ஏற்பட்டுருக்கிறது. கால் வைத்த சமயத்தில் படம் பிடிக்கப்பட்ட காமெரா எது? படமாக்கப்பட்ட சுருள் எங்கே என்றெல்லாம் கேள்விகள் பிறக்க

அமெரிக்கா முதல் முறையாக வாய் திறந்தது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த படச்சுருள் காலத்தால் அழிந்து போனது என ரத்தின சுருக்கமாக முடித்து உலகிற்கு அதிர்ச்சி அளித்தார்கள் அந்த சமயத்தில் உலகமே மிரண்டு தான் போனது.

இந்த சமயத்தில் தான் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றான ட்ரான்ஸ்பாமர்ஸ் சீரிஸ் வெளிவாகி சக்கை போடு போட்டது எல்லாம் நடந்தது.

தற்போது நம் விஷயத்திற்கு வருவோம். இந்த உலகில் நமக்கு முன்பாக கிட்டத்தட்ட நான்கு ஐந்து நாடுகள் சந்திரன் மீது கொண்ட மோகத்தால் தங்களுடைய விண்கலனை அங்கு அனுப்ப வெற்றிகரமாக தரை இறக்கி ஆய்வுகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். நாம் அப்படி தரையிறக்க அனுப்பியபோது தான் நமது கலத்தில் இருந்து பிரியும் வரை எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்தது.

கட்டக் கடைசியில் நிலவின் மேற்பரப்பில் மோதினார் போல் தரையிறங்கி செயலிழந்தது. இதற்கு காரணம் (சாஃப்ட்வேர்) மென்பொருள் பிழை என பின்னாளில் கண்டறியப்பட்டது. இதனோடு அனுப்பிய சுற்றுவட்டப் பாதையில் இயங்கிடக்கூடிய செயற்கை கோள் மிக நல்ல முறையில் இயங்கியது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. இஃது சந்திராயன் 2 ஏவப்பட்ட நாள் இதே போன்றதொரு ஜூலை மாதம் 22 ஆம் தேதி, 2019 ஆம் ஆண்டு.

சந்திரனுக்கு நாம் முதன் முதலில் ஆய்வுக்கென்று விண்கலம் நவம்பர் 8,2008 ஆம் தேதியன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது, இஃது அதே ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி வாக்கில் நிலவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில் சென்று மோதும் படி வடிவமைக்கப்பட்டு அதனையும் வெற்றிகரமாக செய்து முடித்தது.

இந்த மோதலின் போது தான் அங்கு கிளம்பிய தூசி மற்றும் புழுதியில் இருந்து தான் நிலவில் தண்ணீர் இருப்பதை ஆதாரபூர்வமாக நம்மவர்கள் நிரூபித்ததும் காட்டினார்கள் அதுதான் முதல் தடவை நமக்கு நிலவுடனான நேரடி பரிச்சயம். உலகிற்கும் அதுவே முதல் முறையான நீர் இருப்பதற்கு உண்டான ஆதாரமும் கூட அத்தோடு கூட நிலவுக்கு விண்கலம் அனுப்பி வெற்றி கண்ட நாடுகளின் பட்டியலில் நாம் நான்காவதாக இணைந்தோம்.

சரி இதனால் எல்லாம் என்னமாதிரியான பலாபலன்கள் உண்டு உலகிற்கு?

அல்லது நமக்கு என்ன மாதிரியான அறிவியல் பூர்வமான ஆதாயங்கள் ? என்பன போன்ற கேள்விகள் சகஜமான ஒன்றே.

இந்த உலகம் தோன்றின காலத்தில் இருந்த தட்பவெப்ப நிலை அதன் தோற்றம். உயிரி சூழல் போன்றனவற்றை அறிவியல் பூர்வமான அறிந்து கொள்ள இவையெல்லாம் உதவும் என்கிற கோட்பாடு ஒன்று உண்டு.

இந்த உலகில் மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப் பெரிய உயிரினங்களாக அறியப்படும் டைனோசர்கள் முற்று முழுதாக அழிந்ததன் காரணம் என்ன என்பதை ஊகிக்க அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பலரும் பல்வேறு விதமான முயன்று கொண்டு இருக்கிறார்கள். அவை வாழ்ந்தது நிஜம். புதைப்படிவ ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் அழிந்ததன் காரணம் குறித்து பலருக்கும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. நிலத்தில் வாழ்ந்தவை மட்டுமே இறந்தன ஆனால் கடலடியில் இருப்பவை அப்படியே இருக்கின்றன என்பது போன்ற கோட்பாடுகளும் உண்டு.

அதுபோலவே இந்த உலகை மிகப் பெரிய அளவிலான விண்கல் ஒன்று மோதிட. மோதிய வேகத்தில் நம் பூமி பந்தில் இருந்து பிரிந்தது தான் இந்த நிலவு என்கிற கோட்பாடும் ஒன்று உள்ளது. அந்த சமயத்தில் எழுந்த புழுதி மண்டலம் தான் சூரிய கதிர்கள் இந்த பூமி மீது விழாமல் தடுத்திட அதனால் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தினால் உயிரி சுழல் முற்றாக குலைந்து பல்வேறு தாவர இனங்கள் அழிந்து அது சார்ந்த தாவிர உண்ணிகளும் மடிந்தன என்கிற ரீதியிலான கோட்பாடுகளும் உள்ளன.

இவை சரி என்றால் அப்படி அந்த விண்கல் நம் பூமி மீது மோதிய இடத்தில்.மோதிய வேகத்தில் உருவான பள்ளம் தான் பசிபிக் பெருங்கடல் பகுதி என்கிறார்கள். அல்லது அந்த இடத்தில் இருந்து பிரிந்தது தான் தற்போதைய நிலவும் என்றும் ஒரு சாரார் வாதிடுகிறார்கள். அதன் பொருட்டே நம்மவர்கள் நிலவின் நீர் மூலக்கூறுகள் மீது தனி கவனம் செலுத்துகிறார்கள்.

இந்த இடத்தில் ஓர் ஆச்சரியமான ஆராய்ச்சி தகவல் ஒன்று உண்டு. அது இந்த பூமியில் தண்ணீர் இருந்தது இல்லை. அதாவது இந்த பூமியில் உண்டானது இல்லை.வெளியே இருந்து தான் வந்திருக்கிறது எனும் கூற்றும் உண்டு. அது போலவே தண்ணீர் மூலக்கூறுகளில் ஞாபக நினைவகங்கள் உண்டு என்பதையும் அறிவியல் நமக்கு எடுத்து சொல்லி அதிர்ச்சி அளித்திருக்கிறது. இவையெல்லாம் ஓர் மைய புள்ளியாகஎங்கோ ஓரிடத்தில் நம் இந்திய இதிகாச புராணங்களில் கூறப்படும் விஷயங்களோடு ஒத்துப் போகிறது. இன்று வரை நமக்கு #பகீரத_பிரயத்தனங்களாக தெரியும் சங்கதிகள் நமக்கு முன்பாக நம் முன்னோர்களுக்கு நன்கு பரிச்சயமான சமாச்சாரமாகவே இருக்கிறது.

இவையெல்லாவற்றுக்கும் விடை தேடவே இந்த விண்வெளி பயணம். அதன் ஓர் பகுதியாக இந்த சந்திராயன் சீரிஸ் பயணங்கள்.

இதனை அடுத்து நாம் நிலவில் தரையிறங்க போகும் ககண்யான் திட்டம் செயல்படுத்த இருக்கிறார்கள். இத்திட்டத்திற்கான விண்வெளி வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகளும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன என்பதை நம்மில் பலரும் அறிந்திராத விஷயங்களாகவே இருக்கிறது.

இப்படி இந்த திட்டத்தில் தேர்வு செய்து அவரது பயிற்சி காலத்தில் இருந்த ஒருவர் தான் நம் இந்திய முதல் முப்படை தளபதி திருவாளர் திரு பிபின் ராவத் பயணம் செய்து ஹெலிகாப்டரை இயக்கிய விமானியும் கூட இது விபத்தில் சிக்கி அதில் பயணித்த அனைவரும் மரணித்த சமயத்தில் இவர் மாத்திரம் இரண்டு நாட்களுக்கு தாக்கு பிடித்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதையும் இந்த சமயத்தில் நாம் நினைவு கூறுவோம்.

நாளை மதியம் ஏவப்பட உள்ள நம் இந்திய சொந்த தயாரிப்பு சந்திராயன் 3 வெற்றிகரமாக பயணிக்க பல சோதனைகளை கடந்து சாதிக்க எல்லாம் வல்ல இறையருளை பிரார்த்திப்போம். ஓர் வகையில் இது நமக்கான தவம். தரமான சம்பவங்களுக்கு காத்திருப்போம்.

வாழ்க பாரதம்.

  • ஜெய் ஹிந்த் ஸ்ரீராம்

அரசியல்… பாடி லேங்குவேஜ் மட்டுமில்லே… சகபாடி லேங்குவேஜும் கூட!

dmk bjp speeches - 2026

திமுக காரன் ஒரு லெவல் வரைக்கும் பொறுமையா இருப்பான்! ஆடு ஆடா இருக்கணும்! ரொம்ப ஆடினால் பிரியாணி போட்ருவோம்!”– தி.மு.க பிரமுகர் இப்படிப் பேசியதற்கு வேறு யாராவது பா.ஜ.க மாநிலத் தலைவராக இருந்தால் எப்படி REACTION கொடுத்திருப்பார்கள்?

சும்மா ஒரு ஜாலியான கற்பனை!

அமரர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி:– “விநாச காலே விபரீத புத்தி என்பார்கள்! பகவான்தான் இப்படிப் பேசுபவர்களுக்கு நல்ல புத்தியைத் தரணும்னு வேண்டிக்கறேன்!”

(அந்தப் பக்கம்:- “யோவ் ஐயரே? என்ன நக்கல் உடறியா? எவன் நாசமாப் போவானு பாத்துடலாமா? இறங்கி ரோட்டுக்கு வந்து பாருடா ஆரிய வந்தேறி!”)

சி.பி.ராதாகிருஷ்ணன்:- “எனது இனிய நண்பர் மரியாதைக்குரிய ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்துக்கு இத்தகைய பேச்சைக் கொண்டு வருகிறேன்! ஒரு திருமண விழாவில் கூட அவரது மனம் குளிர்விக்கப் பேசியவன் அல்லவா நான்? அவர் நல்லுள்ளத்தோடு தமது கட்சிக்காரரை திருத்தி எங்களுடைய பணியை சுலபமாக்கி விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!”

(அந்தப் பக்கம்:- “இன்னா, இன்னா ராங் காட்டினு கீறே? என்னை இன்னாத்துக்குய்யா என் தலீவரு திருத்தணும்? பட்டா, ஓடிடு! இந்த குசால் வேலை எல்லாம் கோயமுத்தூரோட வச்சிக்க!”)

பொன்னார்:- “பெருந்தலைவர் காமராஜரை அடியொற்றி அரசியல் தொடங்கியவன் நான்! அவர் காட்டிய தேசியத்தை – அஹிம்சையை மனதில் சுமப்பவன் நான்! காமராஜரை போலவே பொதுவாழ்வுக்காக குடும்ப வாழ்வைத் தியாகம் செய்தவன் நான்! என்னை பிரியாணி போடப் போவதாக சொல்வது அமைதியை விரும்பும் தமிழ் மண்ணுக்கு உரிய பாரம்பரியம் அல்ல என்பதை மெத்தப் பணிவன்போடு கழகத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்!”

(அந்தப் பக்கம்:- “அடிங் கொய்யால! உன் காமராசரையே குப்புறப் போட்டு கும்மியடிச்சவங்க நாங்க! இன்னா, காமராஜ் அது இதுன்னு கமால் காட்றியா எங்களாண்ட? 71 தேர்தல்ல அவர் குடியிருந்த வாடகை ஊட்டையே – “ஏழைப் பங்காளன் பங்களாவைப் பார்த்தியா?”-னு போஸ்டர் போட்டு எலீக்சன்ல அவருக்கு ஃபீஸை புடுங்கி விட்டவங்க! காமராசராவது கழுதை முட்டையாவது போவியா?”)

தமிழிசை அக்கா:- “இப்படி பிரியாணி போடுவது என்றெல்லாம் பேசுவது அறிஞர் அண்ணா கற்றுத் தந்த கடமை – கண்ணியம் – கட்டுப்பாட்டுக்கு உகந்ததுதானா என்பதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் சிந்தித்து தமது கட்சிக்காரருக்கு எடுத்துக் கூறித் திருத்த வேண்டும்! எனது திருமணமே கலைஞர் தலைமையில்தான் நடந்தது என்று கூறிக் கொண்டு – அவர் தலைமையில் அவரது மகள் போன்ற பாசத்தோடு திருமணம் செய்விக்கப்பட்ட என்னை – கலைஞரின் தமிழைக் கற்றவர்கள் இப்படி எல்லாம் “பிரியாணி போடுவது”- என்றெல்லாம் பேசுவது சரிதானா என்று யோசிக்க வேண்டும்! நான் அவர்கள் வீட்டுப் பெண்களை நினைத்தே வருந்துகிறேன்…”

(அந்தப் பக்கம்:- “இன்னாமே இன்னா? அவ்வளவு ரோசம் கீறவங்க உங்க அப்பன் குமரி அனந்தனுக்கு ஊடு வேணும்னு எங்க தலீவரண்ட வந்து ஏன் பிச்சை எடுக்க உடறீங்க? நாங்க போட்ட பிச்சைதான் உங்க அப்பனுக்கு ஊடு தெரிஞ்சிக்க! கரு… சி! பரட்…”)

இப்போது FAST FORWARD செய்து அண்ணாமலைக்கு வருகிறோம்! இது கற்பனை அல்ல – நிஜம்! எதார்த்தம்!

அண்ணாமலை: “ஆர்.எஸ்.பாரதி அண்ணன் பேச்சுக்கும் அவர் வயசுக்கும் பொருத்தமில்லாம பேசறாரு! என்னை வெட்டி பிரியாணி போடறேங்கறாரு! ஆனா ஒரு விஷயம்ணா! இது காட்டுல அருவாள் பிடிச்ச கை! கிளுவ மரத்தை வெட்டின கை! நாளைக்கு கூட காலையில ஒன்பது மணியில் இருந்து மதியம் வரைக்கும் காட்டுல விவசாயம்தான் பார்க்கப் போறேன்! கிளுவ மரத்தை வெட்டப் போறேன்! யார் வெட்டினாலும் அருவாள் வெட்டும்! அதுவும் விவசாயி வெட்டினால் நல்லாவே வெட்டும்!”

(அந்தப் பக்கம்:- “….”..”….” கப்சிப்!)

இதுதான் ஆன் தி டாட் பதில்!

இதுதான் இதுவரை அவர்கள் கண்டிராத பா.ஜ.க! அதனால்தான் திராவிட மாடல் அண்ணாமலையைக் கண்டாலே பதறுகிறார்கள்!

(அதே அண்ணாமலைதான் ஆதிசங்கரர் முதல் மத்வாச்சாரியார் போன்ற மகான்கள் – அண்ணாமலையின் வார்த்தையில் விஸ்வ குருக்கள்- பாரதத்தை இணைத்தார்கள் – ஒரு அரசு உத்தரவு போட்டு ஒன்றுபட்ட பாரதம் உருவாகவில்லை என்பதை நயம்படவும் எடுத்துக் கூறுவார்!)

எந்த வார்த்தையை எந்த வார்த்தையால் சந்திப்பது என்ற வித்தை தெரிந்த இளைஞன்!

கிளுவை மரமும் வெட்டுவார் – கீதை விளக்கமும் சொல்லுவார்!

கற்பனை : முரளி சீதாராமன்