அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால் ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.
மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகிவிட்டார். இப்போது We The Leaders ( https://wetheleader.org/ ) என்ற 2020 தொடங்கிய ஒரு அமைப்பை அரசியல் கட்சி தொடங்குமுன் ஒரு அமைப்பாக முன்னெடுக்கிறார்.
மூன்று தினங்களாக தில்லியில் கட்சித் தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினார் அண்ணாமலை. அந்நேரம் அவர் தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததாகவும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் செய்திகள் தேசிய அளவிலும் வலம் வந்தன.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது.
இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.
ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும்( ஊர்த்துவமுக ) நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள்..இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.
பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள், ( அதோமுக ) நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள்.
இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடி களைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.
அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பதும் ( த்ரியக்முக ) நட்சத்திரங்கள், அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.
இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், சமநோக்கு நாட்கள்.
இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.
நீங்களே இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று வார்த்தையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு முறையில் இருக்கும்..!!
2023 ஜூன் 25ஆம் தேதி நிலவரப்படி குற்றாலத்தில் நீர் இல்லாமல் வறண்டு போய் கிடக்கும் காட்சி
தென்காசி மாவட்டம் திருக்குற்றாலத்தில் குற்றால அருவிகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. அருவிக்கு நீர் வரத்தை அளிக்கும் மலையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அருவிகள் காய்ந்து போய் கிடக்கின்றன.
வழக்கமாக கேரளத்தில் பருவ மழை மே மாத கடைசியிலோ ஜூன் மாத முதல் வாரத்திலோ தொடங்கும். ஆனால் இந்த முறை இடையில் உருவான புயல் காரணமாக பருவமழை தொடங்குவது தாமதமானது. இதனால் உங்களின் பல பகுதிகளிலும் வழக்கமான அளவில் மழை பெய்யவில்லை.
கேரளத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை சரிவர செய்யாததால் வரட்சியை நிலவுகிறது. கேரளத்தின் பருவ மழை காலங்களில் குற்றாலத்தில் சீசன் என்று சொல்லப்படும் சாரல் சூழல் நிலவும். சாரல் மலையுடன் தென்றல் காற்றும் குளிர்ச்சியான சூழலும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து இழுக்க கூடியது. ஜூன் ஜூலை ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத காலங்களுக்கு இது போன்ற பருவநிலை நிலவுவது வழக்கம்.
ஆனால் இந்த முறை ஜூன் மாதம் முடிய உள்ள நிலையில் சீசன் கலை கட்டவில்லை. சீசனை நம்பி வியாபாரிகள் பலர் குற்றால அறிவிப்பகுதிகளில் கடைகள் போட்டிருந்தனர் அவர்களும் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் திடீரென ஒரு நாள் பெய்த மழையில் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது அன்றைய நாள் மட்டும் சில மணி நேரங்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது அதன் பிறகு மீண்டும் வறட்சி நிலவுகிறது கடந்த இரு நாட்களாக சனி ஞாயிறு வார விடுமுறை தினங்கள் என்பதால் சீசனை நம்பி வெளியூர்களில் இருந்து பலர் குற்றாலத்துக்கு படையெடுத்தனர் ஆனால் நீரின்றி வறண்டு கிடக்கும் பாறைகளை பார்த்துவிட்டு ஏமாற்றமடைந்தனர்.
மதுரை: எதிர்க்கட்சி கூட்டணியில் ,பிரதமர் வேட்பாளர் யார் என்பது கேள்விக்குறிதான் ஆனால், பாஜவில் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பது மக்களுக்கு தெரியும் பாஜக மாநில செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் மதுரை பிபிகுளம் பகுதியில், உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்ப்பை உருவாக்க வேண்டும் என , பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று கூடி உள்ளன. பாஜ வெற்றியை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நிதிஷ்குமார் அழைப்பினை ஏற்று கூடி உள்ளனர். கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பதற்காக பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என்பது சாத்தியமில்லாதது.
சட்டமன்றத் தேர்தலுக்கும், பார்லிமென்ட் தேர்தலுக்கும் ஏராளமான வித்தியாசம் உள்ளது. அதே, கர்நாடகாவில், பார்லிமென்ட் தேர்தலில் பாஜகவுக்கு தான் அதிக இடங்கள் கிடைக்கும். ஏற்கனவே, நடந்த 2006, 2014, 2019 தேர்தலில் பாஜ தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மாநிலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் மத்தியில் பாஜ ஆட்சிதான் அமையும். ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சத்தீஸ்கர் மாநிலங்களின் 30 ஆண்டுகள் வரலாற்றை பார்த்தால் பாஜவிற்கு தான் அதிக இடங்கள் கிடைத்துள்ளது என்பது புரியும்.
எதிர்க்கட்சிகள் பாஜவை வீழ்த்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு நடத்தும் இந்த கூட்டத்தில் 13 கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இருந்தாலும் இந்த எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது கேள்விக்குறிதான். ஆனால் , பாஜவில் மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்பது அனைவருக்கும் தெரியும். மோடி தான் பிரதமர் என்பதில் பொதுமக்களிடம் எந்த குழப்பமும் இல்லை.
கவர்னருக்கு எதிராக மதிமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் முதல்வர் ஸ்டாலினால் அதில் கையெழுத்து போட முடியாது. அப்படி போட்டாள் அது அரசியல் அமைப்பு ரீதியாக அவருக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தும். தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் தான் உள்ளன. புதிய கூட்டணியால் ஸ்டாலினுக்கு எந்த லாபமும் இல்லை.
பார்லிமென்ட் தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் துணை முதல்வர் பதவியை உதயநிதிக்கு கேட்கலாம். திமுக தலைவராக இருந்த கருணாநிதி இலங்கை தமிழர் பிரச்சனையின் போது காங்கிரஸ் கட்சியிடம் எதுவும் பேசவில்லை. அதே நேரம் 2009 தேர்தலில் வெற்றி பெற்றவுடன் வீல்சேரில் அமர்ந்து டெல்லி சென்று எத்தனை அமைச்சர்கள் பதவி தருவீர்கள், அதிகமாக கல்லா கட்டும் அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று மன்மோகன் சிங்கிடம் மிரட்டி பறித்தார். அதே போல் தான் ஸ்டாலினும் செய்வார்.
பாஜா ஆட்சிக்கு வராமல் வேறு கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தால் குழம்பிய குட்டைக்குள் எப்படி மீன் பிடிக்கலாம் என்ற ஒரே எண்ணத்தில் தான் இந்த எதிர்கட்சி கூட்டணிகள் கூட்டம் நடத்துகின்றன. ஆனால், அதற்கு வாய்ப்பில்லை. எந்த மாநிலத்தில் இந்த கூட்டணிக்கு சாத்தியம் உள்ளது.
மம்தா பானர்ஜியும், திமுகவும் கூட்டணி வைத்துள்ளனர். தமிழகத்தில் மம்தா பானர்ஜிக்கோ, மேற்கு வங்கத்தில் ஸ்டாலினுக்கோ ஒரு ஓட்டு கூட கிடையாது. அப்படி இருக்கும்போது இந்த கூட்டணி எப்படி வெற்றி பெறும். முந்தைய காலகட்டத்தில் காங்கிரஸ் பலமாக இருந்தபோது 77ல் ஜனதாவும், 89ல் விபி.சிங் தலைமையிலும், 96ல் ஐக்கிய முன்னணி பெயரில் தேவகவுடா போன்றோர் இணைந்து கூட்டணி அமைத்தனர். இவை அனைத்துமே தோல்வியை தான் தழுவின. அதே நிலைதான் தற்போதைய கூட்டணிக்கும் ஏற்படும்.
காங்கிரஸ் தன்னை தானே அழித்துக் கொண்ட கட்சி. இந்த கூட்டணியில் இணைந்திருக்கிற லல்லு பிரசாத் யாதவ், ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், சரத்பாவார், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆகியவைதான் கைகோத்துள்ளனர்.
இவர்கள் எல்லாம் மக்களால் ஏற்கனவே விரட்டியடிக்கப்பட்டவர்கள். தற்போது மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இந்தக் கூட்டணியால் பாஜகவுக்கு தான் வலு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 26ந் தேதி வருஷாபிஷேகம் நாளை மாலை “சாக்கியார் கூத்து” ஹாஸ்ய நாடகம் நடக்கிறது
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது. நாளை மாலை பாரம்பரிய நிகழ்த்துக்கலைகளின் ஒன்றான “சாக்கியார் கூத்து” ஹாஸ்ய நாடகம் நடக்கிறது.
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோயில் 108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றானது, நம்மாழ்வாரால் பாடல் இயற்றப்பட்ட திருத்தலம் என்ற சிறப்பைப்பெற்றது ஆகும்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6.ந்தேதி, 418 ஆண்டுகளுக்குப்பின்னர் சீரும் சிறப்புமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த பினன்ர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். கடந்த ஆண்டு ஆனி மாதம் உத்தரம் நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடந்ததால் , அதை கணக்கில் கொண்டு, ஆங்கில மாதத்துக்குப்பதில் தமிழ் மாதமான ஆனிமாத உத்தரம் நட்சத்திர நாளான ஜூன்.26.ம் தேதி வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறப்பைத்தொடர்ந்து நிர்மால்ய தரிசனம் நடக்கிறது. 5.30 மனி அளவில் சுவாமி கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளல், நவகலச அபிஷேகம், கணபதி ஹோமம், சுகிர்த ஹோமம் ஆகியன நடக்கிறது.
தொடர்ந்து உதயமார்த்தாண்ட மண்டபத்தில் 25 கலசங்களுடன் சிறப்பு பூஜை நடக்கிறது. பூஜையை கோகுல் தந்திரி நடத்துகிறார். பின்னர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பூதேவி, ஸ்ரீதேவிக்கு 25 கலசங்களில் பூஜை செய்யப்பட்ட புனித நீரால் சிறப்பு அபிஷேகம், கிருஷ்ண சுவாமி, ஐயப்ப சுவாமி, குலசேகரப்பெருமாள் ஆகியோருக்கு நவ கலச அபிஷேகம், தீபாராதனை ஆகியன நடக்கிறது.
மதியம் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் அலங்கார தீபாராதனையைத்தொடர்ந்து கோவில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளுக்கு ஒளியேற்றும் “லட்சதீப விழா” நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றுகின்றனர்.
முன்னதாக நாளை மாலை 3 மணி அளவில் “சாக்கியார் கூத்து” எனப்படும் நகைச்சுவை நாட்டிய நாடக நிகழ்சி நடக்கிறது. இந்நிகழ்வு கேரளாவுடன் குமரி இணைந்திருந்தபோது நடைபெற்றது.
குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தபின்னர் இந்த நிகழ்வு நடப்பது இல்லை. தற்போது பாரம்பரியம் மிக்க இந்தகலையை 67 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சூரைச் சேர்ந்த கலாமண்டலம் சங்கீத் சாக்கியார் இன்று நடத்துகிறார்.
வருஷாபிஷேகம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்துள்ளனர்.
இந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்கள், அங்கு வாழும் இந்திய வம்சாவளியினர் ஆகிய பலரும் மோடிக்கு அளித்த அங்கீகாரமும் மரியாதையும் மிகப் பெரியவை. டிவி அனைத்தையும் காட்டியது.
அமெரிக்கா மட்டுமல்ல, உலக நாடுகளின் பல தலைவர்களும் பிரதமர் மோடியைப் போற்றுகிறார்கள், அவரைச் சந்திக்க ஆர்வம் காட்டுகிறார்கள. தயங்காமல் அவரைப் புகழ்கிறார்கள், அதில் மகிழவும் செய்கிறார்கள். இது ஏன் நடக்கிறது?
நீங்கள் செயல்படும் துறையில் ஒரு ஜாம்பவான் வல்லுநர் இருந்தால் அவர் மீது உங்களுக்கு இயற்கையான மதிப்பு ஏற்படும். நீங்கள் ஆசைப்பட்டு ஆனால் எட்ட முடியாத உயரத்தை அவர் அடைந்தார் என்பதால் அந்த மனிதரிடம் காட்டும் பண்பான பணிவின் வெளிப்பாடுதான், நீங்கள் அவர் மீது வைக்கும் உயர் மதிப்பு. நாடுகள் கடந்து ஐன்ஸ்டீனிடம், சச்சின் டெண்டுல்கரிடம், அவர்கள் துறை மனிதர்கள் வைத்திருக்கும் மதிப்பு இதற்கு உதாரணம். அந்த மாதிரி மோடி உலக அரசியல் தலைவர்களின் போற்றுதலைப் பெற்றவர்.
மற்ற உலக அரசியல் தலைவர்கள் பலரும் செய்ய முடியாத எதை மோடி சாதித்தார்? முதலில் எளிதில் தெரிவது, ஒரு ஜனநாயக நாட்டில், அதுவும் பல மொழிகள் பேசப்படும் ஒரு நாட்டில், பல தரப்பட்ட மக்களின் அமோக ஆதரவையும் அபிமானத்தையும் பெற்றவர் மோடி. அது இரண்டு தொடர் தேர்தல்களிலும் வெளிப்பட்டது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் ஆங்கிலம் அனைவராலும் அறியப்பட்ட மொழி. ஆங்கிலம் பேசும் ஒரு தலைவர் அந்த நாடுகளில் மோடி அளவுக்குத் தமது மக்களின் அபிமானத்தைச் சமீப காலங்களில் பெறவில்லை. ஓட்டுகள் வாங்கிப் பிரதமர் அல்லது ஜனாதிபதி ஆவதை விடவும் மேலானது மக்களின் அபிமானத்தை மோடி அளவில் ஜெயிப்பது. இது போக, மோடி பற்றி உலகத் தலைவர்கள் பலருக்கும் ஒரு ஏகோபித்த கணிப்பு இருக்க வேண்டும். நாம் அதை இந்த வழியில் ஊகிக்கலாம்.
மோடி கெட்டிக்காரர், கடும் உழைப்பாளி, திறமையானவர். அரசியலில் கெட்டிக்காரர்கள் லட்சக் கணக்கில் இருக்கிறார்கள். 99.99 சதவிகிதம் அந்த குணம், அவர்கள் பிழைப்பதற்கும், அவர்களைக் காப்பதற்கும், அவர்கள் செழிப்பதற்கும் பயனாகிறது. ஆனால் ஒரு கெட்டிக்காரன் இன்னொரு கெட்டிக்காரனை அதற்காக மட்டும் பெரிதாக மதிப்பதில்லை.
அரசியல்வாதிகளின் எண்ணிக்கையில் பத்து சதவிகிதமாகவது கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். நன்கு உழைத்துத் தன்னை, தன் சுய நலத்தை, அவர்கள் பெரிதாக வளர்ப்பார்கள். இதிலும் போட்டியாளர்கள் ஒருவர் மீது ஒருவர் பொறாமை கொள்வார்கள், அவ்வளவுதான். திறமையான அரசியல்வாதிகளும் ஆயிரக் கணக்கில் உண்டு. இவர்கள் சற்று எட்ட நின்று ஒருவரை ஒருவர் ரகசியமாக மதிக்கலாம் – வெளியில் சொல்ல மாட்டார்கள்.
இந்த மூன்று குணங்களுக்கும் அப்பால், மோடியிடம் ஒரு அசாதாரண நேர்ப் போக்கும், நாட்டுக்கான அர்ப்பணிப்பும், தன்னலமற்ற சேவை உள்ளமும் தூக்கலாக இருக்கின்றன. அவருடைய பேச்சுத் திறன் மட்டுமே அவரது எல்லாக் குணங்களையும் தெளிவாக முன்நிறுத்துகிறது – இது மிக முக்கியம். இவைதான் அவருக்கான மதிப்பையும் மரியாதையும் உலகத் தலைவர்களிடம் இயற்கையாகக் சுரந்து வெளிப்பட வைக்கின்றன.
மோடி மீதான தங்களின் வியப்பையும் மதிப்பையும் தெரியப் படுத்தினால் அவர் கர்வம் கொள்ள மாட்டார், தங்களைக் கீழ் நோக்கிப் பார்க்க மாட்டார் என்று அவரைப் போற்றும் உலகத் தலைவர்கள் உணர்கிறார்கள். அப்போதும் மோடி பணிவாகவே இருக்கிறவர். மோடியின் இந்த குணாதிசயம் அவர் முக பாவத்திலும் உடல் மொழியிலும் கூட பளிச் என்று தெரிகிறது. அதனால் அந்தத் தலைவர்கள் மோடி மீதான போற்றுதலை இயல்பாகக் காண்பிக்கிறார்கள்.
பிற நாடுகளின் தலைவர்கள் மோடியிடம் இப்படி அசாதாரணமான மேன்மைகளைக் காண்கிறார்கள். ஆனால் உள் நாட்டில் ஏன் எல்லா எதிர்க் கட்சிகளும் மோடியைத் தீவிரமாக, காட்டமாக எதிர்க்கின்றன? உதாரணம்: மோடிக்கு முன்பாக காங்கிரஸின் ராகுல் காந்தி இந்த மாதம் அமெரிக்கா சென்ற போது, “நான் அன்பு பேசுகிறேன். மோடி வெறுப்பைப் பேசுகிறார். என் அன்பு வெல்லும்” என்று அங்கு கூட வழக்கம் போல் குழந்தைத் தனமாகவும் போலியாகவும் பேசினார். பாஜக-வின் மிகப் பெரிய சக்தி பிரதமர் மோடி என்று உணர்ந்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், “பாஜக-வை மீண்டும் ஆள அனுமதிப்பது தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்திற்கும், இந்தியாவின் எதிர் காலத்திற்கும் கேடாக முடியும்” என்று ஜன்னி கண்டவர் போல் நான்கு நாட்கள் முன்னர் திருவாரூர் நிகழ்ச்சியில் பிதற்றினார்.
மோடியைப் பாராட்டும் உலகத் தலைவர்கள், நம்பகத் தன்மை உடையவர்கள். அவர்கள் மோடியை ஒரு தலைவராக, ஒரு ராஜதந்திரியாக மட்டும் பார்த்துப் பிரமிக்கிறார்கள். அவர்களிடம் அரசியல் நேர்மையும் உண்டு, அந்த குணத்தை மோடியும் தனது உயர் பண்புகளால் வெளிப்பட வைக்கிறார்.
மோடியை எதிர்க்கும் இந்திய எதிர்க் கட்சித் தலைவர்களிடம் நம்பகத் தன்மை இல்லை. தாங்கள் பல வழிகளில் செழிப்பதற்கு மோடி ஒரு தடையாக இருந்து தங்களுக்குச் சொல்ல முடியாத நஷ்டத்தை ஏற்படுத்துகிறவர் மோடி என்று அவர் மீது கோபம் கொண்டவர்கள். அவர்கள் அனைவரும் அவரவர்களின் செழிப்பில் குறியாக இருப்பதால், ஒருவர் மீது ஒருவர் போட்டியும் போறாமையும் மிக்கவர்கள். ‘நானே அடுத்த பிரதமராக வரவேண்டும். அதற்கு ஏற்பாடாக, மற்ற எந்த எதிர்க் கட்சித் தலைவரையும் நான் பெரிதாக ஆதரித்து எதிர்க் கட்சிகளின் பொதுவான பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தக் கூடாது’ என்று எச்சரிக்கையாக இருந்து ஒருவரை ஒருவர் காமிரா முன்னால் அணைப்பவர்கள். ஆனாலும், முதலில் பாஜக-வைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு, அந்த வெற்றிடத்தில் தங்களுக்குள்ள ‘யார் பிரதமர்’ கணக்கைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில் அவர்கள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து மோடியை எதிர்க்கப் பார்க்கிறார்கள். ஆனால் ஒன்றுசேர்ந்து மோடியை எதிர்க்கும் போது, ‘எங்களுக்குள் அடுத்த பிரதமர் நான்தான் என்பதையும் இப்போதே ஊர்ஜிதம் செய்ய வேண்டும். இல்லை என்றால் மோடியை நீக்கிவிட்டு அடுத்தவன் பிரதமராக வர நானே உதவி செய்ததாக ஆகும்’ என்ற கிலியும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.
இந்தக் காரணங்களால் எதிர்க் கட்சித் தலைவர்கள் காலை முன்னே வைக்க முடியாமல், பின்னே வைக்க முடியாமல், சேர்ந்தும் வைக்க முடியாமல், ஒவ்வொருவரும் தங்களின் கால்கள் பின்னி நிற்கிறார்கள். இவர்களின் வில்லத் தனமே ஒருவரை ஒருவர் கட்டிப் போட்டு நாட்டைக் காப்பாற்றட்டுமே? அந்த வினோத வகையில் இவர்களும் உலகத் தலைவர்கள் போல் மோடிக்கு உதவட்டுமே?
மிதமிஞ்சிய சொத்து சேர்ப்பு காரணமாக பிரபல கேரள யூடியூபர்களை குறிவைத்து வருமானவரித்துறை நடந்து வருகிறது.
கேரளா முழுவதும் பிரபல யூடியூபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர். சில யூடியூபர்கள் விலையுயர்ந்த நிலம், கட்டடங்கள் மற்றும் சொத்துக்களை வாங்கியதை அடுத்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானது.
கேரளா முழுவதும் பிரபல யூடியூபர்ஸ் வீடுகள் மற்றும் அவரது அலுவலகங்களில், வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனை நடத்தி வருகின்றனர். யூடியூபர்கள் பலர் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்தவில்லை என்பதால், இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
கேரளாவில் உள்ள பிரபல யூடியூப் பயனர்கள் பலர் ஆண்டு வருமானம் ரூ.2 கோடிக்கு மேல் உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
Originally, “Make Your Bed” was a speech delivered as the commencement address to the graduates of The University of Texas at Austin on May 17, 2014. It went viral. And publishers approached him to write a book with the speech as the template.
William H. McRaven is a retired United States Navy seal. He was responsible for planning and executing a wide range of operations, including the raid that killed Osama bin Laden in 2011.
McRaven retired from the Navy in 2014. He then served as the chancellor of The University of Texas System from 2015 to 2018. McRaven is a role model for many people, and he is widely respected for his leadership, his commitment to service, and his dedication to education.
In the book, McRaven shares ten lessons he learned from Navy SEAL training that he believes can help people succeed in life.
The lessons are:
Make your bed.
Never quit.
Never give up.
Find someone to help you paddle.
Be disciplined.
Be courageous.
Build a team of trusted advisors.
Never compromise your integrity.
Choose your battles wisely.
Never stop learning.
#image_title
McRaven argues that these lessons are not just for Navy SEALs, but for anyone who wants to achieve their goals in life. He writes that “the simple act of making your bed can change your attitude and start your day off on the right foot.” He also argues that “never quitting” is the key to success, and that “never giving up” is essential for overcoming challenges. Make Your Bed is an inspiring and motivating book that offers simple advice that can help people achieve their goals.
The book is full of inspiring stories from McRaven’s own life and the lives of others. These stories help to bring the lessons to life and make them more memorable.The book is a quick and easy read, yet packed with insightful information.
Just to recount a few of the inspiring stories- The story of the sugar cookie ritual: This story is about the importance of attention to detail and doing things right, even the small things. As a Navy SEAL trainee, McRaven was required to make his bed perfectly every morning. If he didn’t, he would be punished by having to perform the “sugar cookie ritual,” which involved diving into the cold waters of the Pacific Ocean and then rolling around on the beach until he was covered in sand. McRaven says that this ritual taught him the importance of doing things right, even when they’re small and insignificant.
The story of the “unsinkable” ship: This story is about the importance of never giving up, even when things seem impossible. McRaven tells the story of the USS Indianapolis, a Navy ship that was sunk by a Japanese submarine during World War II. The ship sank in the middle of the Pacific Ocean, and the survivors were stranded in the water for five days. Many of the survivors died of exposure, dehydration, and shark attacks. However, some of the survivors were able to survive by never giving up hope. McRaven says that this story is a reminder that we should never give up, no matter how difficult things may seem.
The story of the “dark moment”: This story is about the importance of finding strength in the face of adversity. McRaven tells the story of a time when he was facing a difficult challenge in his life. He was feeling lost and alone, and he didn’t know what to do. However, he eventually found the strength to overcome this challenge by reaching deep inside himself and being his very best. McRaven says that this story is a reminder that we all have the strength to overcome any challenge, as long as we are willing to dig deep and find it.
The one that resonated most with me: McRaven recounts a story from his time in Navy SEAL training. During training, there is a bell that hangs in the center of the compound. If a trainee is feeling overwhelmed or unable to continue, they can ring the bell and be removed from training.
McRaven says that he never rang the bell, even when he was faced with some of the most difficult challenges of training. He says that ringing the bell would have been a sign of weakness, and he was determined to finish the training no matter what.
McRaven says that the lesson he learned from this experience is that it is important to never give up, even when things are tough. He says that if you want to achieve your goals, you have to be willing to push yourself through the pain and the challenges.
The anecdote about the bell is a powerful reminder that we should never give up on our dreams. No matter how difficult things may seem, we should always keep fighting until we reach our goals. Truly inspirational from an inspirational leader!
If you are looking for a book to help you improve your life, ‘Make Your Bed’ is a great choice.
His latest work is Wisdom of the Bullfrog: Leadership Made Simple (But Not Easy). Watch this space for more.
(Writer is author of several books and practicing advocate in the Madras High Court)
வள்ளலார் பற்றி பேச திராவிட கும்பலுக்கு என்ன தகுதி இருக்கிறது? திராவிடவாதிகள் வள்ளலாரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:
வள்ளலார் கருத்துக்கள் சனாதன தர்மத்தின் உச்சம் என தமிழக கவர்னர் ஆர். என். ரவி அவர்கள் பேசியதற்கு இந்துமுன்னணி பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது . அதே சமயம் அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வரை எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
உண்மையில் எதிர்ப்பு கருத்து தெரிவிப்பவர்கள் நோக்கம் வள்ளலாரை போற்றுவது இல்லை, கவர்னரை தூற்றுவதும் இந்து தர்மத்தை பழிப்பதும். மாட்டுக்கறி பிரியாணி விருந்து நடத்தியவர்கள் ஜீவகாருண்மே தவ வாழ்வு என்ற வள்ளலாரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
சனாதனம் என்றால் ஆதியும் அந்தமும் இல்லாதது. என்றும் நிலைத்து எல்லாவற்றையும் உள்ளடக்கியது.
நாத்திகம் என இறை நம்பிக்கையை எதிர்த்து பேசும் இவர்களை இஸ்லாமியர்களும் கிறித்துவர்களும் ஏற்றுக் கொள்கிறார்களா? இவர்கள் மதமற்றவர்கள் எனக் கூறிக் கொண்டாலும் இவர்களின் நாத்திகவாதத்தை அவர்கள் ஏற்க மாட்டார்கள். அப்படி நாத்திகத்திற்கு ஆதரவு தெரிவித்த கோவையை சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞரும் முஸ்லிம் மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார் என்பதை தமிழகம் மறக்கவில்லை. ஆனால் இந்து தர்மமான சனாதன தர்மம் ஏற்றுக் கொள்கிறது.
வள்ளலார் வாழ்க்கை அற்புதமான ஆன்மிக செய்தி. அவரது வாழ்வில் சென்னை திருவொற்றியூர் வடிவுடையான் அவரது பசியாற்றி அற்புத நிகழ்வும், அங்கு வாழ்ந்த சித்தர் இவர்தான் மனிதர் என்று போற்றியதும் வள்ளலார் பெருமைக்கு எடுத்துக் காட்டு ஆகும்.
வள்ளலார் கையொப்பமிடும்போது திருச்சிற்றம்பலம் என எழுதியே கையொப்பம் இட்டுள்ளார்.
ஆன்மிகத்தின் ஒவ்வொரு நிலையையும் எடுத்துக்காட்டியுள்ளார். அது ஆன்மிகத்தின் வழி ஆகும். ஒருவன் நேரடியாக ஆன்மிகத்தின் உச்சத்தை அடையமுடியாது. படிப்படியாக உயர அவர் வழிகாட்டி உள்ளார்.
கன்னியாகுமரியில் வள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை வைத்தது தமிழக அரசு. ஆனால் திருவள்ளுவரின் ஒரு குறளையாவது பின்பற்றுகிறது என்று கூற முடியுமா? அது குறித்து பீட்டர் அல்போன்ஸ் கேள்வி எழுப்பியபோது அப்போதைய முதல்வர் கருணாநிதி, நாம் பின்பற்றும் வள்ளுவர் கருத்திற்கு சிலை வைப்பதனால் ஓரடியில்கூட வைக்க முடியாது என்றார்.
அதாவது கிராமங்களில் கூறுவார்களே படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்று, அதுபோல இந்த திராவிட நாத்திகக் கூட்டம் மக்கள் கொண்டாடும் வள்ளலாருக்கு விழா எடுப்பது கண்துடைப்பு.
வள்ளலார் சிவ சின்னமான திருநீறு பூசிய தெய்வீக முகமண்டலத்தை அலங்கோலம் படுத்தி மதமற்றவராக மக்களை குழப்ப அவரது ஆன்மிக அற்புத வாழ்வை கொச்சைபடுத்துகிறார்கள். இது வள்ளலாரை போற்றுகின்ற பக்தர்களுக்கு வேதனையை அளிக்கிறது.
இந்த நாட்டில் தோன்றிய எல்லா மகான்களும் காட்டிய நெறி ஒன்றே. அதன் வழிகள் வேறாக இருக்கலாம். இறுதியில் இறைவனோடு ஐக்கியமாதலே முக்தி.
சென்னை திருவல்லிக்கேணியில் முஸ்லிம் அமைப்பினர் வள்ளலாரை களங்கப்படுத்தி துண்டறிக்கை இந்துக்களிடம் கொடுத்தபோது, அதனை தட்டி கேட்டது இந்து முன்னணி. ஆனால் இந்த திராவிட அரசு நியாயம் கேட்ட 9 இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போட்டது. ஆனால் கவர்னர் வள்ளலாரை பெருமைப்படுத்தினால் பொங்கி எழுகிறார்கள். இதுதான் இரட்டை வேடம்.
எனவே திராவிடவாதிகள் வள்ளலாரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
வள்ளலாரின் 200வது ஜெயந்தியை தமிழகம் கொண்டாடும் இவ்வேளையில் திராவிட அரசியல்வாதிகள் பேசுவது அநாகரிகம் என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்டுகிறது.
திமுகவிடம் நிதி பெற்று கட்சி நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சி & கூட்டணி கட்சிகள் கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது கேலிக்கூத்து – இவர்களை நோக்கி மக்கள் கேட்கும் கேள்விகளை இந்து முன்னணி முன் வைக்கிறது என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:
மதுரை திருப்பரங்குன்றத்தில் அறநிலையத்துறை கண்காணிப்பில் ஆலயங்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை என்ற குழு ஏற்பாடு செய்துள்ளது. இத்தகைய கூட்டத்தை பார்த்து பக்தர்கள் கேட்கும் கேள்விகளை இந்து முன்னணி மக்கள் முன் வைக்கிறது.
வருமானம் உள்ள கோவில்களை விதவிதமாக திட்டம் போட்டு சுரண்டுவதைதான் இதுவரை இந்து சமய அறநிலையத்துறை செய்து வந்துள்ளது. சிதிலமடைந்த கோவில்களை பற்றி சிறிதும் கவலைப் பட்டது உண்டா?
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஆயிரக்கணக்கான சுவாமி விக்கிரகங்கள் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. பல நூறு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறையில் புகார் பதிவு செய்யக்கூட இல்லையே ஏன்?
விக்கிரகங்கள், தங்க கவசம் முறைகேடு முதலிய பல வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஆட்சி மாறியவுடன் காட்சி மாறியது. குற்றத்தில் ஈடுபட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருடன் வலம் வருகின்றனர். சிலை திருட்டு, சிலை கடத்தல், தங்க ரதம், தங்க கவசம் முறைகேடுகள் முதலிய வழக்குகள் என்னவாயிற்று?
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தொடர்ந்து கோவிலில் உள்ள விக்ரகங்கள் சமூகவிரோதிகளால் திட்டமிட்டு சேதப்படுத்துவது நடைபெறுகிறது. காவல்துறை ஒவ்வொரு முறையும் பிடிபடும் சந்தேகத்திற்கு இடமான நபர்கள்மனநிலை சரியில்லாதவர் என வழக்கு முடிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை கோவில் பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் எடுக்கவில்லை ஏன்?
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் விக்கிரகம் உடைக்கப்பட்ட போதும் அந்த இடங்களை பார்வை இடுவதற்குக்கூட வரவில்லை. காரணம் வருமானம், விளம்பரம், திமுகவின் சுய தம்பட்டம் மட்டுமே இத்துறை அமைச்சரின் நிர்வாகம் என கருதுகிறாரா?
இந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சை படுத்தும் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ஏன்?
ஏராளமான கோவில் நிலங்கள் சட்டவிரோதமாக தனியாருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தினசரி செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததாக எந்த தகவலும் இல்லை. இந்த சட்டவிரோத செயலுக்கு துணை போவது இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் என்பதற்கு முகாந்திரம் உள்ளதா?
கோவில் தரிசனகட்டண முறைகேடு குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. சூரசம்காரம், திருவண்ணாமலை கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களில் ஏராளமாக பக்தர்கள் வருகையை பயன்படுத்தி சினிமா தியேட்டர் போல ஆயிரக்கணக்கில் கட்டணத்தை உயர்த்தியும், போலி டிக்கெட்கள் மூலம் பிளாக் டிக்கெட் விற்ற முறைகேடுகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பின்பும் வெட்கமில்லாமல் இந்து சமய அறநிலையத் துறை அமைதியாக இருந்தது ஏன்? இந்த தில்லுமுல்லு செய்வதே அந்த துறை அதிகாரிகள் என்பதாலா?
திருக்கோவில் கணக்கு நிர்வாகம் செய்ய மட்டுமே உரிமை உடைய இந்து சமய அறநிலையத் துறை, கோவில் வழிபாடு, பூஜை முறைகள், திருவிழாக்களில் போன்ற எல்லா ஆகம முறைகளை ஏன் சிதைக்க முற்படுகிறது? கோவிலை அழிப்பது திராவிட அரசியல் என்ற கொள்கையின்படியா?
கோவில் நிதியில் திருமண திட்டம் என்ற பெயரில் நடத்தப்பட்ட திருமண நிகழ்விலும், கோவில் நிதியில் நடத்தப்படும் எந்த துவக்க விழாவிலும் கோவிலுக்கு வந்து முதல்வர் நடத்தவில்லை? ஆன்மிக நம்பிக்கை இல்லை என்றால் இதில் முதல்வரின் பெயர் ஏன் கோவில் கல்வெட்டில் இடம்பெற வேண்டும்? அதற்கு சொந்த நிதி கொடுத்தாரா? இல்லை அரசின் நிதியை வாரிக் கொடுத்தாரா? இந்து சமய அறநிலையத் துறையின் பெயரால் திமுக விளம்பரம் தேடுகிறது என்பதுதானே உண்மை?
பிரபல கோவில் உள்ள ஊர்களில் பக்தர்களின் வாகனங்கள் நுழைய நகராட்சி கட்டணம் வசூலிக்கிறது. ஆனால் நாகூர், வேளாங்கண்ணி போன்ற வேற்று மதத்தினர் இடங்களில் எந்த வசூலும் இல்லை. இந்துக்கள் இந்துக்களாக இருக்க வரியா? இதனை இந்து சமய அறநிலையத்துறை தட்டி கேட்டுள்ளதா?
கோவில் நகைகள் உருக்கி தங்க பிஸ்கெட்களாக வங்கியில் வைப்பு வைக்கும் திட்டம் குறித்து முழு வெள்ளை அறிக்கை ஏன் சமர்ப்பிக்க மறுக்கிறது? நகைகளில் இருந்த செம்பு, முத்து, பவழம், வைரம், வைடூரியம் போன்றவை என்ன செய்தது?
கோவில் நகைகள், சுவாமி விக்கிரகங்கள், கோவிலில் உள்ள வெள்ளி, செம்பு போன்ற அசையா சொத்து விவரம் எங்கே?
உற்சவர் சுவாமி திருமேனிகளை பத்திரப்படுத்துகிறோம் என பாதுகாப்பு பெட்டகம் வைக்கப்படுகிறது. மாதந்தோறும் விழாக்கள் நடைபெற்றன. அதற்கு ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் தயவை நாடி நிற்கும் நிலையை ஏற்படுத்தவே இந்த நடைமுறையை கொண்டு வந்துள்ளதா?
வக்ஃப் வாரிய ஊழியர்களுக்கு அரசின் நிதி செலவு செய்யப்படுகிறது. மசூதி வருவாயிலிருந்து எந்த வருமானமும் அரசுக்கு இல்லை. ஆனால் கோவில் நிதியில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு சம்பளம், வாகனம், ஏ.சி. அறை, காபி ஸ்நாக்ஸ் செலவு வரை செய்யப்படுவது ஏன்? கோயில் வருமானத்தில் பெரும்பகுதி இதற்கே செலவு செய்யப்படுகிறது. இது மத பாரபட்சம் இல்லையா?
ஆலயங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வருவதற்கு முன்பும் நிர்வாகம் சீராக நடைபெற்று தான் வந்தது. இங்கு ஒன்றும் அங்கொன்றும் புகார் இருந்தது உண்மை தான். ஆனால் அரசு துறையில் பெரிய ஊழல் துறை என்ற நிலையை இந்து சமய அறநிலையத் துறை தொடர்ந்து தக்க வைத்துள்ளது என்பது உண்மை தானே?
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல நூறு கோவில்களை காணவில்லை, ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்களை காணவில்லை என்பதை அந்த துறையே ஒப்புக்கொண்டு உள்ளது. இந்நிலையில் கோவில் பாதுகாப்பு என்பது இந்து சமய அறநிலையத் துறையால் எப்படி சாத்தியம்?
அரசியலும் இந்து விரோத போக்கும் இந்து கோவில்களில் ஆமை புகுந்த வீடுபோல இந்து சமய அறநிலையத் துறை நுழைந்த பின்னர் கோலோச்சி நிற்கிறது. இப்படி ஆயிரக்கணக்கான முறைகேடுகளை ஆதாரத்துடன் எடுத்துக்காட்ட முடியும். எனவே இந்து சமய அறநிலையத்துறையை கலைத்து விட்டு சுதந்திரமான சட்டபூர்வமான அதிகாரம் கொண்ட வாரியம் அமைத்து அதன் கட்டுப்பாட்டில் கோவில்கள், கோவில் சொத்துக்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதே இந்து முன்னணி கோரிக்கை. கோவிலை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதல்ல. கோவில் சிறப்பாக நிர்வகிக்கப்பட வேண்டும். கோவில் அரசு அதிகாரிகள் என்ற போர்வையில் கொள்ளைக்காரர்களின் வேட்டை காடாகக் கூடாது.
திமுகவிடம் நிதி பெற்று கட்சி நடத்தும் அதன் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி கோவில் பாதுகாப்பு மாநாடு நடத்துவது, பிரச்சினையில் இருந்து மக்களை திசை திருப்ப தான். இந்துக்கள் ஏமாளிகள் அல்ல. சிலரை பலகாலம் ஏமாற்றலாம். பலரை சிலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். இறைவனின் தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பதை கவனத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இந்து முன்னனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
2023 ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. எழுத்தாளர் உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், எழுத்தாளர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருதும் வழங்கப்பட உள்ளன. அவர்களுக்கு தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சிறந்து விளங்கிய சிறுகதை, கவிதை, கட்டுரைகளுக்கான இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் கீழடி அகழாய்வை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்ட ‛ஆதனின் பொம்மை’ என்ற நாவலுக்காக அதனை எழுதிய உதயசங்கருக்கு பால சாகித்ய புரஸ்கார் விருதும், திருக்கார்த்தியல் சிறுகதை ஆசிரியர் ராம் தங்கத்திற்கு யுவ புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாஹித்ய அகாதெமியின் விருது பெற்றவர்களுக்கு ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி தமது டிவிட்டர் பதிவில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
"ஆதனின் பொம்மை' தமிழ் நாவலுக்காக சாஹித்ய அகாடமி பால புரஸ்காருக்கு தேர்வான திரு.உதயசங்கர் & 'திருக்கார்த்தியல்' சிறுகதை தொகுப்புக்காக யுவ சாஹித்ய புரஸ்காருக்கு தேர்வான திரு.ராம் தங்கத்துக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" – ஆளுநர் ரவி@PMOIndia@HMOIndia@MinOfCultureGoI
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) June 23, 2023