Home Blog Page 367

லுலு மாலுக்காக பொதுச் சாலையை அடைத்த கோவை போக்குவரத்து போலீஸ்!

coimbatore lulu mall road - 2026

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக லட்சுமி மில்ஸ் முதல் புளியகுளம் செல்லும் சாலையை LULU MALL ன் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அவிநாசி ரோடு மற்றும் திருச்சி ரோட்டை இணைக்கும் முக்கியமான சாலையை அடைத்து வைத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது Cop Coimbatore உடனடியாக தலையிட்டு இதை சீர் செய்ய வேண்டும் இல்லையேல் கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பாக போராட்டம் முன்னெடுக்கப்படும்.

கோவை மாவட்டம் வார்டு எண் 24 கொடிசியாவில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலகம் அருகில் ரோட்டில் குப்பைகள் மற்றும் கட்டிடக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அருகில் இருக்கும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது Coimbatore Corporation கமிஷனர் உடனடியாக தலையிட்டு சீர் செய்ய வேண்டுகிறோம்.

  • பாலாஜி உத்தமராமசாமி, கோவை

சிதம்பரம்: மீண்டும் மீண்டும் உள்நோக்கத்துடன் மூக்கை நுழைக்கும் அறநிலையத் துறை அதிகாரிகள்!

chidambaram nataraja temple inside images - 2026
chidambaram nataraja temple inside images

சிதம்பரம் நடராஜர் கோயில் மீது கண் வைத்துள்ள திமுக அரசின் அறநிலையத்துறை அதிகாரிகள், மீண்டும் மீண்டும் அங்கே பிரச்சனையை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனி திருமஞ்சன விழாக் காலத்தை ஒட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகையை அகற்ற வேண்டும் என்று கூறிய அறநிலையத் துறை அதிகாரிகளிடம், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஞாயிறு அன்று தேரோட்டமும், ஆனி திருமஞ்சன தரிசனமும் நடப்பதை ஒட்டி, 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை கோவில் கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை என்று தெரிவித்து, கோயில் தீட்சிதர்கள் தரப்பில் அறிவிப்புப் பலகை வைக்கப் பட்டது. இதை அடுத்து சிலர் இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

உடனே, சிதம்பரம், தில்லை காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரண்யா, தாசில்தார் செல்வகுமார், எஸ்.ஐ.,க்கள் சங்கர், பொன்மகரம் மற்றும் போலீசார் என நாத்திக திமுக., அரசின் அலுவலர்கள் ஒரு படையே கோவிலுக்குள் திரண்டு வந்து, தீட்சிதர்கள் வைத்துள்ள அறிவிப்புப் பலகையை அகற்றிவிட்டு, கனகசபை மீது ஏறி நின்று பக்தர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று அடாவடியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தீட்சிதர்கள், ‘விழா நிகழ்வு முடியும் வரை பக்தர்கள் கனகசபையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை; கனகசபை மீது அறிவிப்புப் பலகை வைக்கக்கூடாது என்று சொல்ல சட்டத்தில் அனுமதி இல்லை. அறநிலைத்துறை உயரதிகாரிகள் அனுமதியுடன் தான் அறிவிப்பு பலகை வைத்துள்ளோம்’ எனக் கூறினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. வெகுநேரம் நடந்த வாக்குவாதத்துக்குப் பின் அறநிலையத்துறை அதிகாரிகளும், போலீசாரும் கோவிலில் இருந்து வெளியேறினர். அப்போது, பக்தர்கள் அளித்த புகாரால் அந்த அறிவிப்புப் பலகையை அகற்ற அங்கே வந்ததாகவும், தனது பணியைச் செய்ய விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாகவும் இது குறித்து போலீஸ் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார் செயல் அலுவலர் சரண்யா.

இது குறித்து தீட்சிதர்கள் தரப்பில் விளக்கம் கூறிய போது, அதிகாரிகள் மற்றும் சிலர் கோவில் தேரோட்டம் மற்றும் தரிசனத்தை நிறுத்த வேண்டுமென்றே பிரச்னை செய்கின்றனர். தேர் மற்றும் தரிசனத்தின் போது, கருவறையில் உள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜரை கனகசபையில் எழுந்தருளச் செய்து பூஜை செய்து வெளியே கொண்டு வருவோம். அதற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் பக்தர்களை கனசபையில் இந்த நான்கு நாட்களுக்கு மட்டும் அனுமதிப்பதில்லை. மேலும், திருவிழாவிற்காக நடராஜருக்கு அணிவிப்பதற்காக விலை உயர்ந்த நகைகள் வைக்கப்பட்டுள்ளன. கருவறையில் இருந்து சிவகாமசுந்தரி சமேத நடராஜர் தேரில் எழுந்தருள வெளியே கொண்டு வரும் பணிகள் நடைபெறும்போது பாதுகாப்பு கருதி கனகசபை மீது பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதில்லை. இது வெகுகாலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறை. இதில் புதிதாக எதுவும் இல்லை. எங்களது பணியை செய்யவிடாமல் அறநிலையத்துறை செயல் அலுவலரும் அறநிலையத்துறை அதிகாரிகளும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனர் என்று கூறினர்.

பழனி கோயில் அறிவிப்பு பலகை அகற்றம் அதைத் தொடர்ந்து சிதம்பரம் கோயிலிலும் தங்கள் கைவரிசையை காட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் இறங்கியது ஆகிய செயல்பாடுகளால் தமிழகத்தில் ஹிந்து பக்தர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

பழநீ… நடுநிலைகள் இங்கே தேவையில்லை!

1783428 palani murugan temple - 2026

பழனி… உண்மைச் சம்பவம்.. பல வருடங்களுக்கு முன்பு.. மூலஸ்தானத்திற்கு பின்புறம்.. தற்போது உள்ளது போல் கம்பி கிராதிகள் ஏதும் இல்லாத காலம்..

கட்டண தரிசனம் ஏதும் இல்லாத காலம்.. ஆறுகால பூஜை, அல்லது முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு வருபவர்கள் மட்டுமே அவ்வழியே மூலஸ்தானம் செல்வர்…

தர்ம தரிசனம், கட்டணமில்லா தரிசனம், இலவச தரிசனம் என்று தற்போது அழைக்கப்படும் வியாபார தந்திரங்கள் இல்லாத போது.. நேர்மையான , இந்து மதம் பற்றி அறிந்த, பழனியில் Palaniandavar college of oriental culture( later named as Indian culture) கல்லூரியில் பயின்ற TNPSCயில் அப்போது கோவில் E.O தேர்வுக்கு அது கட்டாயம்..எப்போதும் வேட்டி சட்டை, திருநீறு அணிந்த நிர்வாக அதிகாரிகள் மட்டுமே பணியாற்றிய காலம்..

அந்த மூலஸ்தானத்தின் பின்புறம் கற்சுவரில் சிறிது சந்தனம் தடவி, கருப்பு தாயத்துகளை வைத்துக்கொண்டு ஒரு பாயம்மா.. கருப்பு புர்கா வேசங்கள் வராத காலம்..எம்ப்ராயடரி போட்ட ஒரு வெள்ளைத்துணியை போர்த்திக்கொண்டு.. “ பழனி பாவா, அவுலியா” என்று ஏதோ சொல்லி தாயத்து கட்டி( நம்மக்களுக்கு எங்கே வேண்டுமானாலும் கைகளை நீட்டும் வழக்கமாச்சே!) “ வியாபாரத்தை ஆரம்பிச்சது…

அப்போதெல்லாம்..இந்து முன்னனி, இந்து மக்கள் கட்சி போன்று எதுவுமே இல்லாத காலம்..

மூலஸ்தானத்திற்கு பின்புறம் அந்த தாயத்து கட்டும் வியாபாரம் கொஞ்சம் களை கட்டிய பின் தேவஸ்தான நிர்வாகம் விழித்து கொண்டது ( போட்டி பிஸினஸை பார்த்தோ என்னவோ !).. உடனடியாக அந்த பாயம்மாவை விரட்டி அந்த இடத்தில் கம்பி கிராதிகள் போட்டுவிட்டார்கள்.,

( அந்த மூலஸ்தான சுவற்றில் கைகளை இரண்டையும் விரித்து வைத்து மனதில் வேண்டுதல் வைத்து நிற்போம்.. இரு உள்ளங்கைகளும் ஒன்று சேரும்!)… தற்போது 200ரூ டிக்கட் வரிசை உள்ளே செல்லுமிடம்.. அடிவாரம் பாதவிநாயகர் கோவில் தொடங்கி.. யாணைப்பாதை, படி மண்டபங்கள் முழுவதும் அமைதி மார்க்கத்தினர் கடைகள் மட்டுமே..!

“இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி இல்லை”

என்ற இந்த அறிவிப்பு தமிழகத்தில் பிரபலமான கோவில்கள் அனைத்திலும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு பின் இருக்கும்..

பழனி கோவில் தற்போது ஒரு மாபெரும் business centre …கோவிலில் சாந்நித்யம் என்பது தேடவேண்டிய நிலைமையில்… கும்பாபிசேகம் முடிந்தபின் சகட்டு மேனிக்கு அமைச்சர் முதல் அதிகாரிகள் குடும்பம் வரை மூலஸ்தானத்திற்குள் நுழைந்த காட்சி வைரலாக சுற்றியது..

முன்பு துப்புரவு பணியில் மட்டுமே பெண்களை கோவில்களில் இருந்தனர்.. இப்போது முக்கிய பதவிகளில்.. பெண்கள்.. மாதவிடாய் காலத்திலும் உள்ளே.. அங்கே எத்தனை ஊழியர்கள் மாற்று மத்த்தினர் என்றும் தெரியாது..

மாற்று மத ஆட்கள் அமைச்சராயிருந்தாலும் உள்ளே அனுமதிக்கக்கூடாது..( திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மனோ தங்கராஜை அனுமதித்தார்கள்)

இந்த விசயத்தில் குருவாயூர் கோவிலுள்.. இந்திரா காந்தி, மன்மோகன்சிங், ஏன் யேசுதாஸைக்கூட அனுமதிக்கவில்லை… நமது கோவில்கள் கண்காட்சி கூடங்கள் இல்லை.. இதை நம்மக்கள் முதலில் உணரவேண்டும்..

நடுநிலை வாதம் பேசுவோர் இதில் நுழைய வேண்டாம்

  • முரளிநாதன் குரு

பழநி கோயிலில் நடப்பது என்ன? ஆலயங்களைப் போர்க் களமாக்கும் அறநிலையத் துறை!

1783428 palani murugan temple - 2026

ஹிந்துக்களின் புனிதமான மலைக் கோயிலான பழனி கோயிலில் ‘இந்துக்கள் மட்டும் அனுமதிக்கப் படுவார்கள்’ என்ற பாரம்பரியமான நடைமுறையைத் தெரிவித்து வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகை விவகாரத்தில் இப்போது பிரச்னை எழுந்துள்ளது. அறநிலையத்துறை அதிகாரிகளின் போக்குக்கு இந்து அமைப்புகளும் பக்தர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழக அரசின் நிர்வாகத்தில் உள்ள துறையான இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் இந்தக் கோயில் நிர்வகிக்கப் பட்டு வந்தது.

இந்தக் கோயிலிலும் மற்ற ஹிந்து ஆலயங்களில் உள்ளது போல் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தப் பலகைகள் சில மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகத் திருப்பணிகள் நடைபெற்ற போது, பணிகளுக்காக அகற்றப்பட்டன. எனினும் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் அவற்றை மீண்டும் முன்பிருந்த இடங்களில் வைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே பழனி பேருந்து நிலையம் அருகில் பழக்கடை வைத்துள்ள சாகுல் ஹமீது என்பவர் உறவினர்களை அழைத்து வந்து, மலைக் கோயிலில் ஏறுவதற்கு டிக்கெட் பெற்றுள்ளார். டிக்கெட் அளித்த பின்னர் தான், அவரது உறவினர்கள் புர்கா அணிந்துள்ளதைப் பார்த்த கோயில் நிர்வாகிகள், இங்கு தரிசனத்துக்கு வேற்று மதத்தினர் அனுமதிக்கப் படுவதில்லை எனக் கூறி, வழங்கிய டிக்கெட்டை திரும்ப பெற்றுள்ளனர்.

இதை அடுத்து சாகுல் ஹமீது அவரது உறவினர்களுடன், மின் இழுவை ரயில் கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர், இது ஒரு சுற்றுலா தலம், நீங்கள் கோயில் என்றும் இந்துக்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் படுவார்கள் என்று பலகைகள் வைத்திருந்தால் நாங்கள் ஏன் உள்ளே வரப் போகிறோம் என்றும் கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்றால் அங்கே கொடுக்கப்படும் பிரசாதம் வாங்கி சாப்பிட வேண்டும். இறைவனை தரிசிக்க வேண்டும். மேலும் இது சுற்றுலாத் தலம் அல்ல, இந்து ஆன்மிக வழிபாட்டுத் தலம் எனக் கூறினர். இதனால் வாக்குவாதம் முற்றியது.

பின்னர், இந்து அமைப்பினரை காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் மலைக் கோயிலுக்குச் செல்ல வந்த வேற்று மதத்தினரை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்க முடியாது என போலீஸார் தெரிவித்தனர்.

இத்தனை களேபரங்களுக்குப் பின்னர் பழனி கோயில் நிர்வாகம் சார்பில் இந்துக்கள் அல்லாதவர் உள்ளே வரக் கூடாது என்ற அறிவிப்பு வைக்கப்பட்டது. ஆனால், இந்தச் சம்பவத்துக்கும் அறிவிப்புக்கும் ஒரு தரப்பில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அறிவிப்பு பலகை அங்கிருந்து மீண்டும் அகற்றப்பட்டது.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தனது சமூகத் தளப் பதிவுகளில் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அதில், “பழனி முருகன் கோயில் இந்துக்களின் வழிபாட்டு தலமாகும். இது ஒன்றும் சுற்றுலா தலம் அல்ல. கடந்த நான்கு நாட்களாக முஸ்லிம்கள் கோயிலுக்குள் செல்ல எத்தனிக்கிறார்கள். உடனே அறநிலையத்துறை இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்குள் பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகையைவைத்து பின் மிரட்டலுக்கு பயந்து அகற்றியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற அறிவிப்பு பலகை எல்லா கோவில்களிலும் வழக்கமான ஒன்றுதான். பழனியை போர்க்களமாக்க முயற்சிக்கும் சேகர் பாபுவின் இத்திட்டத்தை அனுமதிக்கமாட்டோம்” எனத் தெரிவித்திருந்தார்” எனத் தெரிவித்திருந்தார்.

அது போல் இந்து முன்னணி அமைப்பும் இந்த விவகாரம் குறித்து கண்டனம் எழுப்பியிருந்தது. இந்து முன்னணி அமைப்பின் கண்டன அறிக்கை இது…

ஏற்கெனவே இந்துக்களின் கோயில்களில் பல்வேறு பிரச்னைகளையும்குழப்பங்களையும் ஏற்படுத்தி வரும் வேற்று மதத்தினரும் அவர்களுக்குத் துணை போகும் நாத்திக திமுக., அரசும் அரசுத் துறைகளும் இப்போது தமிழகத்தில் அதிகம் பேர் வரக்கூடிய பழனி கோயில் மீது கண் வைத்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாத்திக திமுக., அரசால் நிர்வகிக்கப் படும் அறநிலையத்துறையை கவனித்து வரும் அமைச்சர் சேகர்பாபுவுக்கு கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

மதுரை அருகே அதிமுக., முன்னாள் எம்எல்ஏ., காரை தீவைத்து திமுக.,வினர் அட்டகாசம்!

IMG 20230625 WA0042 - 2026

கோவிலில் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் – முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காரை தீ வைத்து எரித்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார்.

இவர் கடந்த 2001 – 2006 ஆம் ஆண்டு சமயநல்லூர் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்தார். இந்நிலையில், பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோவிலின் உற்சவ விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், கோவிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, வேல்முருகன் தரப்பினர் திடீரென முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் வீட்டின் அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தபோது, திடிரென வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்க தொடங்கி வீட்டின் ஜன்னல்களையும், டீவி, ப்ரிட்ஜ். பைக் கார்களை உடைத்தனர்.

தொடர்ச்சியாக, பொன்னம்பலத்தின் காரை பெட்ரோல் ஊற்றி எறித்ததோடு, அருகில் இருந்த வீடுகளையும் கற்களால் எறிந்து உடைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில், பொன்னம்பலத்தின் உறவினர்களான பழனிக்குமார். வேல்விழி, சுப்பையா, விஜய் ஆகிய 4 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், மற்றொரு தரப்பான திருப்பதி என்பவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் தாக்குதல் நடத்திய திமுக கிளை செயலாளர் வேல்முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாகினர்.

கோவில் விழாவில் மரியாதை அளிப்பதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கார் எரிப்பு, வீடுகள் உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சத்திரபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கோவில் விழாவை முன்னிட்டு், காவல்துறையினர் பாதுகாப்பு பணியல் ஈடுபடுத்தப்பட்ட நிலையிலும், முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு கார் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கிராமத்தை சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்
பட்டுள்ளனர்.

கோவில் – வழிபாட்டுத் தலம்; சுற்றுலாத் தலம் அல்ல!

hindumunnani - 2026

கோவில் வழிபடும் இடம். சுற்றுலாத் தலமல்ல என்பதை கோவில் நிர்வாகம் கவனித்தில் கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார் . அவரது அறிக்கை:

சில நாட்கள் முன்பு பழனி கோவிலில் இந்து அல்லாதோர் வர அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகையால் விமர்சனம் எழுந்தது.

இதுபோன்ற அறிவிப்பு பல பிரபல கோவில்களில் பல ஆண்டுகளாக இருக்கிறது.

வேற்று மதத்தினர் இறைவனை வழிபட விரும்பினால் அவர்கள் கோவிலில் உள்ள பதிவேட்டில் இறைநம்பிக்கை உடன் வழிபட உறுதியை எழுத்து பூர்வமாக அளித்து விட்டு செல்ல அனுமதிப்பதும் நடைமுறையில் உள்ளது.

கோவில் காட்சி பொருளோ, சுற்றுலா இடமோ அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

அதே நேரத்தில் இந்து சமயம் அனைவரையும் அரவணைக்கவே விரும்புகிறது. இன்று ஜப்பான், இத்தாலி உள்பட பல வெளிநாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகம் வந்து முக்கியமான கோவில்களில் வழிபாடு நடத்தினார்கள் என்பதை பார்க்கிறோம்.

கூட்டத்தோடு கூட்டமாக வருபவர்களை என்ன செய்ய முடியும் என கேள்வி எழலாம். அவர்கள் இந்து சமய சின்னத்தோடு வருவதும், கோவிலில் தரும் பிரசாதமான விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றை எவ்வாறு ஏற்கிறார்கள் என்பதிலிருந்து தெரிந்துவிடும்.

அதே சமயம் கோவிலில் நுழைந்து கோவிலின் புனிதத்தை கெடுக்கும் உள்நோக்கம் கொண்ட வேற்று மதத்தினர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வகை செய்ய வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒரு முஸ்லிம் குடும்பம் பிரியாணி சாப்பிட்டதும், ஒரு பெருமாள் கோவிலில் கிறித்துவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டது சமூக ஊடகங்களில் வைரலானது. இதுபோன்ற செயல் தற்செயலாக நடந்தது எனக்கூற முடியாது. திட்டமிட்டு கோவில் புனிதத்தை கெடுக்க செய்கின்றன செயலாகத்தான் பார்க்க முடியும். இப்படி அத்துமீறுபவர்கள் தண்டிக்க வேண்டும் ‌.

அதுபோல மலைக்கோவிலுக்கு போவதற்கு வைத்துள்ள இழுவை ரயில் வசதி பக்தர்களுக்காக தான். அதில் வேற்று மதத்தினர் பொழுது போக்கிற்காக ஏறி பக்தர்களுக்கு இடையூறு செய்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் தான் பழனியில் அந்த அறிவிப்பு பலகை வைக்க நேரிட்டது.

எனவே இந்துக் கோவில் பாதுகாப்பு புனிதம் காக்க வேண்டிய கடமை கோவிலின் நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத் துறையின் உள்ளது என்பதை உணர்ந்து சேயல்பட வேண்டும் என்று இந்து முன்னனி சுட்டி காட்டுகிறது.

மதுரையில் தோண்டப்படும் சாலைகளால் பொதுமக்கள் கடும் அவதி!

madurai road condition - 2026

மதுரையில் மாநகராட்சி சார்பில், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிக்காக சாலைகள் ஆங்காங்கே தோண்டப்படுகிறது அவ்வாறு தோண்டப்படும் சாலைகளை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களால், சரிவர மூடப்படாமல் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அடிக்கடி சாலையில் தோண்டப்பட்ட மணலில் சிக்கி பயணிகள் அவதியுறுகின்றனர்.

மதுரை மேலமடை மருது பாண்டியர் தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக, பல இடங்களில் ஹாலோ பிளாக் கற்களைப் பெயர்த்து சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் சாலையில் தோண்டப்படும் பள்ளங்கள் மற்றும் குழிகள் சரிவர மூடப்படுவது இல்லையாம். இதனால், அவ்வழியாக செல்லும் நான்கு சக்கரம் மற்றும் இரு சக்கர வாகனங்கள் தோண்டப்பட்ட குழிகள் சிக்கி, அடிக்கடி அவதியூறும் நிலை ஏற்படுகிறது.

இது மட்டுமல்லாமல், மதுரை அண்ணாநகர் மேலமடை வீரவாஞ்சி தெரு, மதுரை மேலமடை வள்ளலார் தெரு ,காதர் மொய்தின் தெரு, அன்பு மலர் தெரு, ஜூபிலிடவுன் சாலைகளில், பள்ளங்கள் தோண்டப்பட்டு, மாநகராட்சி ஒப்பந்ததாரர்களால், சரிவர மூடப்படுவதில்லையாம்.

இதனால் ,இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருவோர் சாலையில் தடுமாறி விழுகின்ற நிலை ஏற்படுகிறது. இது குறித்து, மதுரை மாநகராட்சி சம்பந்தப்பட்ட அலுவலருக்கு புகார் தெரிவித்தும், தோண்டப்படும் சாலைகளை சரிவர மூட உத்தரவு பிறப்பிக்க, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

இது குறித்து ,மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் உரிய நடவடிக்கை எடுக்க இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனித் திருமஞ்சனம்; சித்திர சபை, தாமிர சபைகளில் நடராஜர் சிறப்பு அபிஷேகம்!

anithirumanjana homam at nellai tamra sabai - 2026

இன்று நடராஜர் ஆனி மாத திருமஞ்சனத்தை முன்னிட்டு திருக்குற்றாலம் சித்திர சபை மற்றும் நெல்லை தாமிர சபை நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.

தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் நிகழ்வே திருமஞ்சனம். ஆனியில், உத்திர நட்சத்திரத்தில் ஆடல்வல்லான் நடராஜப் பெருமானுக்கு செய்விக்கப் பெறும் அபிஷேக நிகழ்வே, ஆனித் திருமஞ்சன விழாவென சிறப்பிக்கப் படுகிறது. பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு பெருமானுக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.

ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி திருநெல்வேலியில் உள்ள தாமிர சபையில் காலை முதலே சிறப்பு யாகங்களும் நடராஜருக்கான சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. திருக்குற்றாலம் சித்திர சபையிலும் அதே போல் சிறப்பு அபிஷேகமும் தீபாராதனைகளும் நடைபெற்றன.

திருகுற்றாலம் ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேக அலங்காரம்
திருகுற்றாலம் ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேக அலங்காரம்

சிதம்பரம், திருவாவடுதுறை உள்ளிட்ட நடராஜப் பெருமான் சிறப்புற விளங்கும் சிவத் தலங்களில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனி திருமஞ்சன விழா மிகப் புகழ்பெற்றது. நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான இரண்டு விழாக்களில் ஒன்று மார்கழி திருவாதிரை. மற்றது ஆனி உத்திர திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். ஆனி – மார்கழி மாதங்களில் மட்டுமே நடராஜர் வீதி உலா வருவார்.

இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் நடைபெறுகிறது. இங்கே ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம். பகல் ஒரு மணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். ஆனி திருமஞ்சன நாளுக்கு முந்தைய நாள் நடராஜர் தேரில் எழுந்தருள்கிறார்.

ஆனி உத்திர நாளில்தான் சிவபெருமான், திருவாசகம் தந்த மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் உபதேசம் செய்தார். எனவே இந்த நாளின் வைகறைப் பொழுதில் உபதேசக் காட்சி விழா நடைற்றது. ஆவுடையார்கோயிலில், இந்த ஆனி திருமஞ்சன விழா முக்கியத் திருவிழா. மாணிக்கவாசகர் இந்நன்னாளில் வெள்ளித் தேரில் மாட வீதி உலா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

“என்ன..? ஃப்ளைட்ட பிடிக்கணுமா? அதுதான் உண்மையா?” ஸ்டாலின் சொன்ன காரணம்; சமூகத் தளங்களில் கேலி!

stalin press meet - 2026

“விமானத்தைப் பிடிக்க நேரமாகி விட்டதால், பாட்னாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்கவில்லை, நேராக விமானத்தில் வந்து தான் சாப்பிட்டேன், இது தான் உண்மை” என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுடன், சமூகத் தளங்களில் கேலியும் கிண்டலும் தூள்பறக்க வைத்துள்ளது.

பீஹார் மாநிலம் பாட்னாவில் வெள்ளிக்கிழமை அன்று அந்த மாநிலத்தின் முதல்வர் நிதீஷ்குமார், பாரதத்தின் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள மற்றும் இல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களைத் திரட்டி ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். மகா கட்பந்தன் என்ற பெயரில் ஏற்கெனவே பாஜக., கூட்டணிக்கு எதிராக ஒரு கூட்டணியைக் கண்டு களம் கண்டவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் திமுக., தலைவரும், தமிழக திமுக., அரசின் முதல்வருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்தக் கூட்டம் முடிந்த பின் அனைவரும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பிலும் பங்கேற்று பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில்களை அளித்தனர். ஆனால் தமிழ் மாநில முதல்வர் ஸ்டாலின், தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் மட்டும் இதில் பங்கேற்காமல் முன்னதாகவே வெளியேறினர்.

இதன் பின்னர், சென்னை வந்திறங்கிய மு.க. ஸ்டாலின், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விவரங்களை தெரிவித்தார். அப்போது பாட்னாவில் செய்தியாக சந்திப்பில் பங்கேற்காமல் முன்னதாகவே திரும்பியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முதல்வர், ‘விமானத்தை பிடிக்க எனக்கு நேரமாகி விட்டது. மதிய உணவுக்கு பின்னர் தான் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருந்தனர். எனவே மதிய உணவு கூட சாப்பிடாமல், விமானத்துக்கு அவசரமாகி விட்டது என வந்து விட்டேன். காரணத்தைச் சொல்லி விட்டுதான் வந்தேன். விமானத்தில்தான் மதிய உணவை சாப்பிட்டேன். இதுதான் உண்மை’என்று அழுத்திச் சொன்னார்.

அவர் கூறிய விளக்கம் பலரது நகைப்புக்கும் உள்ளாகியிருப்பதுடன், சமூகத் தளங்களில் கேலிக்கும் உள்ளானது. முதல்வர் ஸ்டாலின், திமுக., பொருளாளர் டி.ஆர்.பாலு உட்பட எட்டு பேர் தனி விமானத்தில் பாட்னா சென்றனர். பயணியர் விமானத்தில் செல்லவில்லை. தனி விமானத்தில் அவர்கள் சென்றதால், அவர்கள் விருப்பப்பட்ட நேரத்தில் சென்னை திரும்ப முடியும். ஆனால், பயணியர் விமானத்தில் சென்றால்தான் விமானத்தைப் பிடிக்க, குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டும். தனி விமானத்தைப் பொறுத்தவரை விமான நிலையத்தில் எவ்வளவு நேரம் நிற்கிறதோ, அதற்கேற்ப கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்; அவ்வளவு தான். நேரக் கட்டுப்பாடு எதுவும் கிடையாது.

அப்படி இருக்க, பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விரும்பி இருந்தால், அவர் அங்கேயே இருந்திருக்கலாம். ஆனால் அந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொள்ள அவருக்கு தயக்கம் அல்லது விருப்பமில்லாமல் இருந்திருக்க வேண்டும் அந்த காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் இப்போது சமூகத்தலங்களில் பேசப்பட்டு வருகின்றன அதே நேரம், பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்ப்பதற்காக அவர் கூறும் காரணமும் விளக்கமும் ஏற்புடையதாக இல்லை என்பதுடன், அந்தக் காரணம் தான் உண்மை என்ற ரீதியில் அழுத்தம் திருத்தமாக பேசுவது அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைக்காலமாக திமுகவின் இந்தி எதிர்ப்பு அரசியல் மற்றும், திமுக.,வினர் பீகார் மக்களுக்கு எதிராக கேவலமான முறையில் பேசி வரும் பேச்சுக்கள் அனைத்தும் வடக்கே ஊடகங்களால் பெருமளவில் வெளியிடப்பட்டு பீகார் மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. எனவே இந்த கூட்டத்திற்கு வரும் முன்னர் கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டக் பதிவு செய்து ட்விட்டர் பதிவில் ஃப்ரண்ட் ஆனது.

அதற்கு முன்பு திமுக அரசால் அமைக்கப்பட்ட கருணாநிதி நினைவுக் கோட்டத்திற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கடைசி நிமிடத்தில் வராமல் தவிர்த்துவிட்ட பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் குறித்தும் கேள்வி எழுந்தால் அதற்கும் பதில் அளிக்க வேண்டி இருக்கும்.

ஹிந்தி விரோத ஹிந்து விரோத திமுக உடனான கூட்டணி குறித்து பீகார் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில் திமுகவை கூட்டணியில் வைத்துக்கொண்டு பத்திரிகையாளர் சந்திப்பை எதிர்கொள்வதில் நிதீஷ் குமார் மற்றும் வடமாநில அரசியல் தலைவர்கள ஆகியோரும் பெரும் சங்கடத்தை எதிர்கொள்ள நேரிடும். இந்த காரணத்தினாலேயே அவர் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்து விட்டு வெளியேறியிருக்க கூடும் என்ற கருத்துக்கள் உலா வருகின்றன.

சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்!

chidambaram anithirumanjana ther - 2026

தில்லை சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தேரோட்ட விழா இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் நிகழ்வே திருமஞ்சனம். ஆனியில், உத்திர நட்சத்திரத்தில் ஆடல்வல்லான் நடராஜப் பெருமானுக்கு செய்விக்கப் பெறும் அபிஷேக நிகழ்வே, ஆனித் திருமஞ்சன விழாவென சிறப்பிக்கப் படுகிறது. பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு பெருமானுக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.

சிதம்பரம், திருவாவடுதுறை உள்ளிட்ட நடராஜப் பெருமான் சிறப்புற விளங்கும் சிவத் தலங்களில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனி திருமஞ்சன விழா மிகப் புகழ்பெற்றது. நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான இரண்டு விழாக்களில் ஒன்று மார்கழி திருவாதிரை. மற்றது ஆனி உத்திர திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். ஆனி – மார்கழி மாதங்களில் மட்டுமே நடராஜர் வீதி உலா வருவார். இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் நடைபெறுகிறது. இங்கே ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம். பகல் ஒரு மணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். ஆனி திருமஞ்சன நாளுக்கு முந்தைய நாள் நடராஜர் தேரில் எழுந்தருள்கிறார்.

பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் ஆனித் திருமஞ்சன உத்ஸவத்தை முன்னிட்டு, பக்தர்களின் கரகோஷத்தோடு தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். நாளை (ஜூன் 26) மகாபிஷேகம் நடைபெறுகிறது.

ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த ஜூன் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் துவங்கியது. ஜூன் 25ம்தேதி 9-ம் நாளான இன்று(ஜூன் 25) கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு 5 தேர்கள் புறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ, சிவா என கோஷமிட்டு வடம் பிடித்து தேர்களை இழுத்தனர். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இன்று மாலை கீழவீதி தேர்நிலையை அடைகின்றன.

தேர்களுக்கு முன்பாக ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்திச் சென்றனர். திருவிளக்கு முன்பு சிவ பக்தர்கள் சிவவாத்தியங்களை முழங்கி நடனமாடிச் சென்றனர்.