Home Blog Page 366

கட் அண்ட் ரைட்டு கோவிந்து: கண்ணு செந்தில் பாலாஜி, அல்லார் கண்ணும் உம் மேலதான்!

stalin met senthil balaji - 2026
#image_title

— ஆர். வி. ஆர்

செந்தில் பாலாஜி விசயம் தெரியுமில்ல? ஆமா, அந்த கில்லாடி மந்திரிதான்….

அமலாக்கத்துறை இவுரை விசாரிக்கப் போச்சு. இவுரைப் பத்தி எல்லா விசயமும் தெரட்டி வச்சிக்கினு, “இப்பிடி இப்பிடி இருக்கு. இங்க இங்க இவ்ள போயிருக்கு. இதான் ரூட்டு. இந்த ரூட்ல நீ நிக்கிற. உன் குடும்பத்துல, உனக்கு வேண்டப்பட்டவங்க இந்த ரூட்ல வந்துகிறாங்க. இந்த ரூட்டு லாங்கா எங்க போவுது. வெவரம் சொல்லு” அப்பிடின்னு கேக்கப் போயிருப்பாங்க. அது இல்லாம, “அண்ணாத்தே, ஊர்ல யாரோ உன்னப் பத்தி தப்புத் தப்பா பேசிக்கிறாங்க. அதுல உண்மை இருக்குதா, யோசிச்சு சொல்லு. அதெல்லாம் பொய்யி. நீ உத்தமன்னு சொன்னியானா, டாங்க்ஸ் சொல்லிட்டு போயிக்கினே இருப்போம்”னு டைலாக் பேசவா செந்தில் பாலாஜிய விசாரிப்பாங்க?

அமலாக்கத் துறை கேட்ட கேள்விக்கு செந்தில் மேலயும் கீளயும் பாத்துக்கினு, தாகமா இருக்குன்னு தண்ணி வாங்கி குடிச்சிக்கினு, “என்ன கேட்டீங்க?”ன்னு கேள்விய திருப்பிக் கேக்க வச்சு, அப்பறம் கொட்டாவி விட்டுக்கினு, ‘தெரில, நாபகம் இல்ல”ன்னு சிரிச்சிக்கினே பதில் சொல்லிருப்பாரு. வேற வளி இல்லாம இவுரைக் கைது பண்ணி கார்ல ஏத்துனப்போ, இவுரு பின் சீட்டுல படுத்துகினு நெத்திலயும் மார்லயும் கை வச்சு சீட்லயே அரை உருளு உருண்டு அளுதாரு. இவுருக்கு ஆர்ட்டுல என்னவோ மக்கர் பண்ணுது, அதுனால அந்த நிமிட்லேர்ந்து டாக்டருங்க மட்டும்தான் இவருகிட்ட பேசணும். அமலாக்கத்துறை அப்பால போயிக்கணும்னு சிக்னல் குட்தாரு.

டிவி-ல பாத்தில்ல? செந்தில் கார் சீட்டுல படுத்துக்கினு இருக்காரு. அவர் வாய் அளுவுது, ஆனா கண்ணு அளுவல. மெய்யாலும் மார்ல வலி இருந்திச்சுனா வாய் மட்டும் பெரிசா அளுவும், ஆனா கண்ணுல தண்ணி வராதா, சொல்லு. நீ நடிச்சுக்கினே வாயை மட்டும் அள வச்சிரலாம். அளுவுற சவுண்டும் குட்துக்கலாம். ஆனா நடிப்புல கண்ணை அள வெக்கணும்னா, சிவாஜிக்கே கிளிசிரீன் ஊத்தணும். அதான், அளுவாத ரண்டு கண்ணையும் ஒரு கைல மூடி வச்சிக்கினு சவுண்டுல மட்டும் அளுதாரு செந்திலு. கார் சீட்டுல கொஞ்சமா பொரண்டப்ப, அவுரு போட்டிருந்த டீ சர்ட்டு மேல ஏறி வயிறு தெரியப் போச்சு. அப்ப வலியை மறந்துட்டு அவுரே டீ சர்ட்டைக் கரீக்டா புடிச்சு கீள இளுத்து விட்டுக்கினாரு. அப்பறம் பாதுகாப்பு ஆளுங்க இவுரு காலை ஆதரவா தொட்டு மெள்ள இவுரை இறக்கலாம்னு பாத்தா, அரெஸ்ட் ஆன கோவத்துல படுத்துக்கினே மெஸ்ஸி மாதிரி காலால ஓங்கி ஓங்கி உதை விட்டாரு. தத்ரூவமா இல்லபா!

எனக்குப் புரிது. யாருக்கும் நெஞ்சு வலி எப்ப வேணா வர்லாம். தூக்கத்துல வர்லாம். டான்ஸ் பண்ணும்போது வர்லாம். போலீஸ் விசாரிக்கும்போது வர்லாம். அதெல்லாம் சர்தான். உனக்கு இதயக் குளாய்ல அடைப்பு இருக்குது, பைபாஸ்னு அறுவை சிகிச்சை பண்ணத்தான் வேணும்னா பண்ணிக்க. பாரு செந்திலு, நீ நல்ல உடம்போட திரும்பி வரணும்னு யார் இப்ப நெனச்சிக்கிறாங்க? மொதல்ல உங்க வூட்டம்மா, அப்பறம் உன் குடும்பத்துக் காரவுங்க. அடுத்தது யாருன்ற? உன்னை விசாரண பண்ணிக்கிற அமலாக்கத் துறை ஆபீசருங்க. பதட்டமா இருந்துக்கினு ஆஸ்பத்திரிக்கு ஓடி வந்து உன்னை பாத்த ஸ்டாலினு, அவுரு மருமகப் பிள்ளை, மந்திரிங்கல்லாம் அவுங்க நல்லதுக்குதான் உன்னைப் பாக்க வந்துக்கினாங்க. ஏன்னு உனக்குத் தெரிமில்ல?

உன் பிரச்சினை இதான் செந்திலு. உனக்கு ஆசை இருக்கற அளவு திருப்தி கெடியாது, நிதானமும் இல்ல. உன் நிம்மதிய நீ அடுத்தவன் கிட்டயும் ஆடிட்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும் விட்டுக்கினு ஜாலியா ஏதோ பண்ணிக்கின. அவன்லாம் நீ வாள்ந்தாலும் பொளைப்பான், விளுந்தாலும் பொளைப்பான். “எனக்கு வாய்ப்பு குடுத்து எனக்கும் மேல ஒருத்தர் குந்திக்கினு இருக்காரே, அவுரும் அப்பிடித்தான இருக்காரு?”ன்னு கேட்டுக்காத. அவுங்கல்லாம் ஆடிட்டர் வக்கீல் நிம்மதியைக் கூட தன் கைல வச்சிக்கிறாங்க. சக்தியானவுங்க. நீ காரியத்தை முடிச்சு கைல கொணாந்து குடுக்கற எடுபிடி, அவ்ளதான். மாட்டுனா நீதான் மொதல்ல மாட்டுவ. அடுத்தவனும் பின்னாடியே ஜெயிலுக்கு வந்தாலும் உனக்கு என்னபா பெனிபிட்டு?

சரி நீ ஒரு தப்பும் பண்ணலன்னு வச்சிக்கலாம். உனக்காவும் பண்ணலை, அடுத்தவனுக்கு குடுக்கவும் பண்ணலன்னு வச்சிக்கலாம். அதத்தான் ஸ்டாலினும் சுத்தி வளச்சு சொல்றாரு. ஆனா பதட்டமா சொல்றாரு, துடிக்கிறாரு. டவுட்டு வருமா இல்லியா?

அதிமுக ஆட்சிக் காலத்துல நீ போக்குவரத்து அமைச்சரா இருந்து டிரைவரு, கண்டக்டரு, மெகானிக்குன்னு வேலைக்கு ஆள் சேக்க வாங்கின பணம் பத்தி விசாரிக்க அமலாக்கத்துறை வந்தா, திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் பதறணும்? விசாரணைல புது புது விசயமா நீ என்ன சொல்லுவ, எங்கல்லாம் கை காட்டுவன்னு ஸ்டாலினுக்கு பயம் பத்திக்கின மாதிரி தெரிதே?

ஸ்டாலினுக்கு கனிக்சனே இல்லாம, கட்சிக்காரன் எவன் எவனோ எங்கயோ வாய் தவறிட்டான், கை ஓங்கிட்டான்னு வருத்தப் பட்டு கட்சி மனுசங்களப் பாத்து அவுரு என்ன பேசினாரு? “எனக்கு கெட்ட பேரு வெக்காதீங்க. உங்களால என் தூக்கமே பூட்சு”ன்னு மைக்குல ஒரு தபா அவரே அளுதாருல்ல? இப்ப அமலாக்கத் துறை உன்னைக் கைது பண்ணிருச்சு, குடைஞ்சு குடைஞ்சு விசாரிப்பாங்கன்னு தெரிஞ்ச உடனே, “அல்லாருக்கும் சொல்லிக்கிறேன். திமுக-வை சீண்டிக்காத. தாங்க மாட்ட” ன்னு சண்டியர் கணக்கா சவால் விடறாரு. ஏன் செந்திலு? தூக்கம் போன மேட்டர்ல அவருக்கு தெரியாம எவனோ தப்பு பணணிக்கினான், அதுல அவுருக்கு ஒரு பங்கும் இல்ல. ஆனா உன் மேட்டர்ல ஸ்டாலின் இப்பிடி துள்றாரே, இதுல யாருக்கு எவ்ள பங்கு இருக்குமோன்னு ஜனங்க பேசிக்குவாங்களே?

வருமான வரித்துறை உன் வூட்டுக்கு ரெய்டு வந்தப்போ, “அவுங்க எதுக்கு வந்திருக்காங்கன்னு தெர்ல. நாங்க எல்லா கணக்கையும் வச்சிருக்கோம். நல்லா ஒத்துளைப்பு குடுப்போம். கொறை இருந்தா சொல்லுங்க. சரி பண்ணிக்கிறோம்”னு அடக்கமா பேசிக்கின. இப்ப பைபாஸ் முடிஞ்சு ரூம்புக்கு வந்துட்ட, திட சாப்பாடு சாப்பிடறன்னு ஆஸ்பத்திரி சொல்லுதுன்னு டிவி-ல நூஸ் வருது. வாயை ஓப்பன் பணணித்தான சாப்பிடுவ? அதே வாயைத் தெறந்து, “நான் உடம்பு தேறிக்கினு இருக்கேன். வெளிய வந்து அமலாக்கத் துறைக்கு நல்லா ஒத்துளைப்பு குடுப்பேன். எல்லாக் கேள்விக்கும் எங்கிட்ட பதில் இருக்குது. எனக்கு மடில கனம் இல்ல. வளில பயம் இல்ல” அப்பிடின்னு ஏன் சொல்லிக்கலை? அதையே ட்விட்டர்லயும் தட்டி விடலாமே? நீ ஏன் அந்த மாதிரி அறிவிப்பு குடுக்கல? அப்பிடிப் பேசிட்டா நீ கூட ‘தாங்க மாட்ட’ – சர்தானா ?

அமலாக்கத்துறை சட்டம் எப்பிடி ஆளை வளைக்கும், அவுங்க விசாரணை தொட்டுத்தொட்டு எங்கல்லாம் போகும், எல்லாத்தயும் நீ இப்ப புரிஞ்சிட்டிருப்ப. ஆனா நீயும் மனுசன்தான். இன்னிக்கி உன் நெனப்பு இப்பிடித்தான் இருக்கும். ‘நம்ம இருதயம் இப்ப நல்லா இருக்குது. எப்பிடியும் ஒரு நாள் ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு வந்துதான் ஆவணும். அமலாக்கத்துறை கேள்விக்கு பதில் சொல்லி ஆவணும். புது விசயம்லாம் கூட வெளிய வரும். அதுலயும் விசாரணை நடக்கும். பல வெவகாரத்துல நான் தப்பிக்க முடியாதுன்னு ஆவும். என் தப்புக்கு நான் ஜெயிலுக்கு போவணும்னா போய்க்கிறேன். ஆனா என்னை வேலை வாங்குனவன் மட்டும் சொகம்மா சுத்திக்கினு இருப்பானா?’

பாரு செந்திலு. சட்டம் ஓரமா தூங்கிக்கினு இருக்கும். அதை கைல வாங்கி சொடுக்கற ஆளு யாரு, அதை நேர்மையா நாயமா பண்ணிக்கிறானா அப்பிடின்றத பொறுத்துதான் அது வேலை செய்யும். அது நல்லா வேலை செஞ்சா, கூட்டு சதி பண்ணவன் ஒர்த்தன் மட்டுனா போதும். அவனைப் பிடிச்சு உலுக்கினா, மத்தவன் பேருல்லாம் அவன் வாயிலேர்ந்து வரும். ‘மத்தவன் மட்டும் எதுக்கு தப்பிக்கணும்’னு அவனே பாதி போட்டுக் குடுத்துருவான். இல்லாட்டியும், அவுங்க கூட்டு சதி பத்தி மத்த ஆதாரம் இருந்திச்சினா அது பேசும். ராஜீவ் காந்தி கொலை, ஜெயலலிதா சொத்துக் குவிப்பு கேஸ்ல எல்லாம் இப்பிடித்தான் கூட்டுசதி பண்ண அல்லாரும் மாட்டிக்கினாங்க.

உன் விசயத்துல, நீ தப்பு பண்ணலைன்னு வையி, நீ நிம்மிதியா இருக்கலாம். நீ தப்பு பணணிட்ட, அமலாக்கத் துறைட்ட ஆதாரமும் இருக்குது, அப்பிடின்னா நீயும் உன் கூட்டாளியும் முடிஞ்ச வரை டிராமா பண்ணிக்கினே இருக்கணும், வீர வசனம் பேசிக்கினே இருக்கணும்.

சொல்லு, நீ நிம்மிதியாத்தான் இருக்கியா? எப்பிடி ஆனாலும் பத்திரமா இருந்துக்க. அது முக்கியம் கண்ணு.


Author: R. Veera Raghavan, Advocate, Chennai

மணல் திருட்டை தடுக்க முயன்ற காவலரை இடமாற்றம் செய்த ‘சர்வாதிகாரி’யின் சட்டம் ஒழுங்கு!

IMG 20230626 WA0011 - 2026

கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் கிராமத்தில் பணிபுரிந்த துணை காவல் ஆய்வாளர் ஈஸ்வரன் தனது பணியை நேர்மையாகச் செய்த காரணத்திற்காக உடனடியாக தஞ்சை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

கோவில்களின் நகரம் கும்பகோணம், அங்கிருந்து 10 கி.மீ தொலைவில் திருவாரூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது நாச்சியார்கோயில். 108 வைணவத் தளங்களில், திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற 14 வது தலமாக நாச்சியார்கோயில் அமைந்துள்ளது. இங்கே கல் கருடன் அமைந்துள்ளது இத்தலத்துக்கு மேலும் ஒரு பெயர் சேர்க்கும் சிறப்பம்சம்.

சுற்றுலாப்பயணிகள் கணிசமாக வந்துபோகும் இந்த ஊரில் குப்பைகளை சரிவர அகற்றுவது இல்லை என்பதும், திருக்கோவிலைச் சுற்றியுள்ள மணிமுத்தா நதி என்று அழைக்கப்படும் குளத்தினையும் சரிவர பராமரிப்பதில்லை என்பதும் இந்த ஊர் மக்களின் பெரும் கவலை.

ஆட்சி மாறுகிறது. காட்சி மாறவில்லை.

நாச்சியார்கோயில் காவல் நிலைய சரகத்திற்குள் கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் தனிப்பட்ட முறையில் சில பழிவாங்கும் கொலைகள் நடப்பது தொடர்கதையாகி உள்ளது . மது, கஞ்சா போன்ற போதைப் பழக்கமும் குறைவில்லாமல் நிறைந்துள்ளது, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே பகுதியில், சில மாதங்களுக்கு முன்னர் மணல் அள்ளிய கும்பலை தடுக்கச் சென்ற காவலர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர். அவர்கள் குடவாசல் பகுதியைச் சேர்ந்த அதிகாரமிக்க அதிமுக பிரமுகரின் விசுவாசிகள் என்று தெரியவந்துள்ளது.

காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் தனது சக காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, நாச்சியார் கோவிலை அடுத்த கிராமமான வண்டுவாஞ்சேரி இரட்டை வாய்க்காலில் இருந்து 5 யூனிட் சவுட்டு மணலை சட்ட விரோதமாக அள்ளியுள்ளனர். காவல் துணை ஆய்வாளர் ஈஸ்வரன் அந்த வண்டியின் ஓட்டுனரையும், உதவியாளரையும் பிடித்து மணல் அள்ளியதற்கான அனுமதியை கேட்டுள்ளார். அந்த இருவரும் திருதிருவென்று முழிக்கவே இது சட்ட விரோத கும்பல் என்று உணர்ந்து அந்த லாரியை மடக்கி நாச்சியார்கோயில் காவல் நிலையத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார்.

லாரியின் உரிமையாளர் யார் என்று விசாரிக்கும்போது அவர் பக்கத்து கிராமமான மாத்தூர் கிராமத்தின் அதிமுக துணை பஞ்சாயத்து தலைவரும், தஞ்சை மாவட்ட சிறுபான்மை பிரிவின் துணைச் செயலாளருமான சார்லஸ் என்று தெரியவந்துள்ளது. அதன்பின் மூவரையும் கைது செய்து நாச்சியார்கோயில் சிறையில் வைத்துள்ளார் ஈஸ்வரன்.

சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய, காவல் ஆய்வாளருக்கு புகார் தேவை. அதற்காக பொறுப்பு கிராம நிர்வாக அதிகாரியாகவுள்ள சங்கர் என்பவரை தொடர்புகொண்டு எழுத்துப்பூர்வ புகார் அளிக்க உதவி ஆய்வாளர் கோரியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சங்கர் எந்த பதிலும் கூறாமல் மிக லாவகமாக இந்த விஷயத்திலிருந்து நழுவியுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் நழுவியதைப் புரிந்துகொண்ட ஈஸ்வரன், இதன் பின்னணியில் பெரும் புள்ளிகள் இருப்பதை அப்போதுதான் புரிந்து கொண்டுள்ளார்.

பிறகு என்ன செய்வது என்று யோசித்த ஈஸ்வரன், கும்பகோணம் தாசில்தார் வெங்கடேஸ்வரனை தொடர்பு கொண்டு நிலைமையை எடுத்துச் சொல்லி அவரை புகார் அளிக்கக் கேட்டுள்ளார். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் தாசில்தார், “நீதான வண்டிய புடிச்ச, நீயே கேஸ் போட்டுக்கோ” என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

அப்போதும் ஈஸ்வரன், ” நீங்க சொன்னத அப்படியே எழுதிக் கொடுங்க” என்று கேட்க, இதனால் கோபமடைந்த தாசில்தார் “உங்க இன்ஸ்பெக்டர் கிட்ட எல்லாம் பேசியாச்சு” என்று மிரட்டும் வகையில் பதில் கூறியுள்ளார்.

அப்போதும் விடாத ஈஸ்வரன், கும்பகோணம் கோட்டாச்சியர் பூர்ணிமாவைத் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்துள்ளார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கோட்டாச்சியர், “நான் பார்க்கிறேன்” என்று ஒற்றை வரியில் முடித்துள்ளார். கோட்டாட்சியரிடம் இருந்து எந்த அழைப்பும் ஈஸ்வரனுக்கு வராத நிலையில், யாரோ கொடுத்த அழுத்தத்தின் பேரில், பொறுப்பு வி.ஏ.ஓ சங்கர் வந்து, பெயர் எதுவும் குறிப்பிடாமல் ஒரு வெற்று புகாரைக் கொடுத்துச் சென்றுள்ளார்.

வழக்கின் தன்மை நீர்த்துப்போகும் என்பதை உணர்ந்த ஈஸ்வரன், மீண்டும் கோட்டாச்சியர் பூர்ணிமாவை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர், “நான் என்ன செய்யணும் இப்போ? ஏன் சும்மா சும்மா எனக்கே கால் பண்றிங்க? உங்க டி.எஸ்.பி கிட்ட பேசியாச்சு. நீங்க அவர் கிட்ட பேசிக்குங்க” என்று சற்று கடுமையான தொனியில் பதில் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், நாச்சியார்கோவில் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் தஞ்சாவூர் ஆயுதப்படைக்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டுள்ளார். இது நாச்சியார்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பொதுமக்களிடம் பேசுபொருளாகவும் மாறியது. மணல் அள்ளியவர்களுக்கு திராவிட மாடல் அரசு பாதுகாப்பாக இருப்பதாகவும், இதிலும் யார் யாருக்கு கமிஷன் போகுதோ என்றும் பேச்சு எழுந்தது.

பட்டப்பகலில் மண் அள்ளியவர்கள் மீது புகார் அளித்த தூத்துக்குடி விஏஓ., அவரது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டதும் இந்த திராவிட மாடல் ஆட்சியில்தான்! இதே ஆட்சியில் தான் சட்டவிரோத மணல் கொள்ளையருக்கு எதிராக செயல்பட்ட உதவி ஆய்வாளர் ஈஸ்வரன் மாற்றப்பட்டதும்!

இந்நிலையில், இந்தத் தொகுதியில் மணல் கொள்ளை நடத்திய சமூக விரோதிகள் ஒன்றுசேர்ந்து, கோட்டையில் முக்கிய ஆளுமையைச் சந்தித்து சால்வை அணிவித்து, சுயமரியாதையுடன் காலில் விழுந்து, தொழில் தடைபெறாமல் நடைபெற உதவியதற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே காவிரி டெல்டா பகுதியில் மணல் எடுக்க அரசு 3 மாவட்டங்களில் 12 இடங்களில் அனுமதித்துள்ள நிலையில், உள்ளூர் அரசியல் கட்சியினரும், அரசு அதிகாரிகளும் கைகோத்து மணலை கொள்ளை அடித்து காசு பார்ப்பது தெரிந்தும் திராவிட மாடல் அரசு அவர்களுக்கு ஆதவராக இருப்பது மக்களிடையே பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் “நான் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன்” என்று சொன்னது, நேர்மையாளர்களுக்கும் ஒழுங்காக வேலை செய்பவர்களுக்கும் எதிராகத்தான் என்பதை உணர்ந்து சிரிக்கின்றனர் திராவிட மாடல் அதிகாரிகளும், கட்சியினரும்!

அப்பாவி மக்கள்தான், எப்போதும் போல் திமுக.,வை தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்!

செய்திக் கட்டுரை: ஆதி

கரூரில் 2ம் வகுப்பு மாணவனின்… டிஸ்கவர் சாதனைப் புத்தக உலக சாதனை!

கரூரில் சாதனை
கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் 2-ம் வகுப்பு சாரண மாணவர் திவ்யதர்ஷன் ஆங்கிலத்தில் மிக நீளமான 10 வார்த்தைகளை 40 நொடிகளிலும், 247 தமிழ் எழுத்துக்களை 28 நொடிகளிலும் கூறிய டிஸ்கவர் புதிய உலக சாதனை நிகழ்வு.
  • கரூரில் 2-ம் வகுப்பு சாரண மாணவன் 2 புதிய உலக சாதனை!
  • ஆங்கிலத்தில் மிக நீளமான 10 வார்த்தைகளை 40 நொடிகளிலும்…
  • 247 தமிழ் எழுத்துக்களை 28 நொடிகளிலும் கூறி புதிய சாதனை!

கரூர்: கரூர் பரணி வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளியில் 2-ம் வகுப்பு பயிலும் சாரண மாணவர் திவ்யதர்ஷன் ஆங்கிலத்தில் மிக நீளமான 10 வார்த்தைகளை 40 நொடிகளிலும் 247 தமிழ் எழுத்துக்களை 28 நொடிகளிலும் கூறிய டிஸ்கவர் சாதனைப் புத்தக புதிய உலக சாதனை நிகழ்வு கரூர் பரணி பார்க் சாரணர் திடலில் நடைபெற்றது.

karur student prize2 - 2026

இந்நிகழ்ச்சிக்கு பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவர் S.மோகனரங்கன், துணை தலைவர் பத்மாவதி மோகனரங்கன், தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் C.ராமசுப்பிரமணியன் தலைமை தாங்கினர். பரணி பார்க் சாரணர் மாவட்ட துணை தலைவர் M.சுபாஷினி, பரணி வித்யாலயா முதல்வர் S.சுதாதேவி, துணை முதல்வர் R.பிரியா, பரணி பார்க் முதல்வர் K.சேகர், எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரி முதல்வர் P.சாந்தி முன்னிலை வகித்தனர்.

இந்த உலக சாதனை நிகழ்வில் டிஸ்கவர் உலக சாதனைப் புத்தக நடுவர் பாலாஜி கலந்து கொண்டு பரணி வித்யாலயா 2-ம் வகுப்பு சாரண மாணவர் திவ்யதர்ஷன் ஆங்கிலத்தில் 40 நொடிகளில் கூறிய மிக நீளமான 10 வார்த்தைகளும், 28 நொடிகளில் கூறிய 247 தமிழ் எழுத்துக்களையும் புதிய உலக சாதனைகளாக டிஸ்கவர் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்தார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணையர் முனைவர் C.ராமசுப்பிரமணியன் மற்றும் பரணி பார்க் சாரணர் மாவட்ட செயலர் R.பிரியா செய்திருந்தனர்.

தொகுதிக்குள் போகவே முடியல; பதவியே வேணாம்னு இருக்கேன்: மதிமுக., எம்எல்ஏ., மனவேதனை!

madurai road condition - 2026
  • மதுரை தெற்கு தொகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி தொடரும் அவலம்
  • மாநகராட்சி அலட்சியத்தால் தொகுதிக்குள் செல்ல முடியாத நிலையால் பதவியே வேண்டாம் என மனநிலையில் உள்ளேன்
  • மாநகராட்சி கூட்டத்தில் மனவேதனையை வெளிப்படுத்தி மதிமுக எம்.எல்.ஏ.

மதுரை: மதுரை மாநகராட்சி 19 ஆவது மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் இன்று தொடங்கி நடைபெற்றது இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி மதிமுக உறுப்பினர் பூமிநாதன் கலந்து கொண்டு தனது தொகுதியில் உட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் பணிகள் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி கோரிக்கை விடுத்து பேசினார்.

அப்போது மேயரை பார்த்து பேசிக்கொண்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதியில் பாதாள சாக்கடை, குடிநீர் ,சாலை வசதிகள் குறித்து பலமுறை மாநகராட்சி கூட்டத்தில் எடுத்து கூறி இல்லை பாதாள சாக்கடை பணிகள் பாதியிலே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஒப்பந்ததாரரிடம் பலமுறை தொடர்பு கொண்டு பணிகளை விரைவுபடுத்த கூறிய நிலையிலும் கூட ஒப்பந்ததாரர்கள் அலட்சியமாக இருப்பதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தொகுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவருகிறது தொகுதிக்குள் செல்லும்போது பொதுமக்கள் முற்றுகையிட்டு போராடக்கூடிய நிலை உள்ளது.

எனவே இது போன்ற ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கக் கூடாது என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருந்த பூமிநாதன் இதுபோன்று மக்கள் நல பணிகளை தனது தொகுதியில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சியில் போதிய அதிகாரிகள் குறைவு காரணமாக இது போன்ற பணிகள் செயல்படுத்த முடியாத நிலையில் முதலமைச்சரிடமும் மதிமுக தலைவர் வைகோ விடமும் சொல்லிவிட்டு எனக்கு பதவியே வேண்டாம் என்று சொல்லக் கடிய அளவிற்கு மனநிலை உள்ளதாக தெரிவித்தார்.

இதனால் மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் எந்தவித பணிகளும் நடைபெறாமல் இருப்பதாக மனவேதனையை வெளிப்படுத்திய சம்பவம் அரங்கேறியது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பூமிநாதன் :
தனது தொகுதியில் பாதாள சாக்கடை பணிகள் பாதியிலயே கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தொகுதி பக்கம் செல்லமுடியவில்லை இதனால் கூட்டத்தில் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளேன் என்றார்.

கோயில்களுக்கு நடப்பது உச்சகட்ட அநியாயம்: பொருமித் தள்ளிய பொன். மாணிக்கவேல்!

pon manickavel int in rajapalayam - 2026

விருதுநகர்: ராஜபாளையத்தில் உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் அமைப்பு சார்பில் சைவ பெருவிழா மற்றும் சிவனடியார்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் கலந்து கொண்டு அனைவருக்கும் அடையாள அட்டைகளை வழங்கினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

இந்து சமய அறநிலைய துறை சார்பில், கோயில் பராமரிப்பு, திருப்பணி மற்றும் ஊழியர்களின் சம்பளம் என்ற பெயரில் ஆண்டுக்கு ₹. 340 கோடி செலவு கணக்கு காட்டப்படுகிறது. இந்தத் தொகை பொது மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுக்கப்படுவது கிடையாது. பண்டைய கால மன்னர்களாலும், சிவ தொண்டர்களாலும் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு வழங்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மற்றும் வாடகை நிலம் உள்ளது. இதிலிருந்து வரும் வருமானத்தையே மாதம் ₹. 28 கோடி என்ற கணக்கில் வருடத்திற்கு 340 கோடி ரூபாய் செலவு கணக்கு காட்டப்படுகிறது.

இவ்வளவு தொகை எடுக்கப்பட்டும் அவிநாசி கோயிலின் மின் கட்டணம் செலுத்தப்படவில்லை. மற்ற மத வழிபாட்டு தலங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ₹. 2 க்கும் குறைவாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இந்து கோயில்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூபாய் 7.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது உச்சகட்ட அநியாயம். எதற்கு இந்த பாகுபாடு காட்டப்படுகிறது.

ponmanickavel - 2026

தமிழகத்தில் உள்ள கோயில்களில் 3.50 லட்சம் சிலைகள் சட்டப்படி இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளது. 1972ல் இயற்றப்பட்ட மத்திய அரசின் சட்டப்படி கோயில் சிலைகளில் தொன்மை நிர்ணயிக்கப்பட வேண்டும். மூன்றரை லட்சம் சிலைகளுக்கும் தொன்மை நிர்ணயிக்கப்படவில்லை என்ற நிலையில் பதிவு செய்யப்படாமல் உள்ளது. சட்டம் இயற்றப்பட்டு சுமார் 50 ஆண்டுகாலம் ஆகியும் இதுவரை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு உரிய பணியை முறையாக செய்யவில்லை.

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தெய்வ விக்கிரகங்கள் முழுமையாக மீட்கப்படவில்லை. பத்தில் ஒரு சதவீதம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

பல நூற்றுக்கணக்கான கோயில்கள் நலிவடைந்து உடனடியாக மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. நூற்றுக்கணக்கான கோயில்கள் பராமரிப்பு செய்யாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இவற்றை காப்பாற்றுவதற்காக சிவனடியார்களை ஒரே கொடையின் கீழ் கொண்டு வருவதற்காக முயற்சி செய்து வருகிறோம்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோயிலில் அமைந்துள்ள கோமதி அம்மன் உடனுறை சங்கரலிங்கனார் கோயில் திருப்பணியின் போது பாண்டிய மன்னர் 11 கிலோ எடை கொண்ட வெள்ளி பல்லக்கு அர்ப்பணித்துள்ளார். இந்தப் பல்லக்கு சுத்தம் செய்யப்படுவதாக தனிமைப்படுத்தப்பட்டு சிறிது சிறிதாக மொத்தமும் திருடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரை காவல்துறை ஏற்காமல் தாமதம் செய்து வந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் நான் பணியாற்றிய போது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளையும் கைது செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தேன். ஆனால் இந்த வழக்கு குறித்து இதுவரை நடைபெற்ற விசாரணை உள்ளிட்ட எந்த தகவலும் எனக்கு அளிக்கப்படவில்லை… என்று கூறினார்.

விசிக., கட்சிக் கொடிக் கம்பம், ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது கல்வீச்சு: போலீஸார் தடியடி!

madurai road side temple protest - 2026

மதுரை: மதுரை பேரையூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகள் மீது கற்களை கொண்டு தாக்குதல் , காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா மேலப்பட்டி கிராமத்தில் விசிக கொடி கம்பம் மற்றும் அம்பேத்கர் கொடிக்கம்பம் இந்த கொடி கம்பம் ஆனது நீரோடை ஆக்கிரமிப்பு பகுதியில், கடந்த 20 வருடங்களுக்கு முன்னால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அரசுக்கு சொந்தமான நீரோடை பகுதியில் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அதனை அகற்ற கடந்த பல வருடங்களாக வருவாய்த் துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் முயற்சி செய்து வந்துள்ளனர்.

கிராம மக்கள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அகற்ற முடியவில்லை இந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணைக்கு பின்பு கொடிக்கம்பங்களை அகற்ற நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், கொடிக்கம்பங்களை அகற்ற உள்ளதாக பேரையூர் தாசில்தார் மற்றும் டி. கல்லுப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆசிக் ஆகியோர் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து, காவல்
துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், பேரையூர் டிஎஸ்பி இலக்கியா மற்றும் ஏ டி எஸ் பி கமலக்கண்ணன் தலைமையில் 200 போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்ற பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆஷிக் தலைமையில் வருவாய் துறையினர் மேலப்பட்டி கிராமத்திற்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில், அம்பேத்கர் கொடி கம்பம் மற்றும் விசிக கட்சி கொடி கம்பத்தை அகற்றக் கூடாது எனக் கூறி, 200க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, திடீரென கிராம மக்கள் காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மீது கற்களை கொண்டு திடீரென தாக்குதல் நடத்தினர்.

இதனை அடுத்து, காவல்துறையினர் கிராம மக்கள் மற்றும் கட்சியினர் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து பேரையூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து, வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பில் அமைந்திருந்த கொடி கம்பங்களை அகற்றினர்.

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கற்களை கொண்டு தாக்கியதால், காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கோயில்களில் ஜூலை 1ல் சனி மகா பிரதோஷ விழா!

chozhavanthan pradosham - 2026

மதுரை: கோயில்களின் ஜூலை 1-ஆம் தேதி மாலை சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது. பிரதோஷமானது, திங்கள்கிழமை சோமவாரம் மற்றும் சனி மகா பிரதோஷ நாட்களில் பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று சிவன் மற்றும் நந்திகேஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் செய்வது வழக்கம்.

அதன்படி ,ஜூலை 1-ஆம் தேதி சனிக்கிழமை மாலை, கோயில்களில் சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது. மதுரை அருகே உள்ள சோழவந்தான் விசாக நட்சத்திர சலாமாக விளங்கும் பிரளயநாத சுவாமி சிவன் ஆலயத்தில், ஜூலை 1-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சனி மகா பிரதோஷ விழா வெகு சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

இதை ஒட்டி, திருக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ் லிங்கம், நந்திகேஸ்வரன் மற்றும் சிவபெருமானுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேர்ச்சனை வழிபாடுகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயில் பிராகாரத்தில் வலம் வந்து பக்தருக்கு காட்சியளிப்பர்.

இதை அடுத்து, தொழில் அதிபர் எம். வி.எம். மணி, பள்ளி தாளாளர் டாக்டர் எம். மருது பாண்டியன், கோயில் தக்கார் இளமதி ஆகியோர்கள் அன்னதானம் வழங்குவர். விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் இத்த திருக்கோவிலில் பக்தர்கள், சிவன் மற்றும் சனீஸ் லிங்கத்திற்கு விளக்குகளை ஏற்றி தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவர். இதேபோன்று, மதுரையில் இம்மையில் நன்மை தருவார், பழைய சொக்கநாதர், திருவாப்புடையார் திருக்கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயம், ஆவின் செல்வ விநாயகர் ஆலயம், ஞான சித்தி விநாயகர் ஆலயம், ஆகிய ஆலயங்களில் சனி மகா பிரதோஷ விழாவானது வெகு சிறப்பாக நடைபெற உள்ளது .

அன்றைய தினத்தில் சிவன் மற்றும் அம்பாளை தரிசித்தால், சகல நன்மைகளும் கிட்டும் என பக்தர்கள் நம்பிக்கை.
மேலும், சனி மகா பிரதோஷ அன்று சுவாமி அம்பாளை வலம் வந்து விளக்கேற்றி வழிபட்டால், துன்பங்கள் நீங்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் பிரதோஷ விழாவிற்கு குழுவினர் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

சுதந்திரமாக எந்த அடாவடி ‘எல்லை’க்கும் செல்லலாம்! என்ன சிறுபான்மையோ?!

csi bishop in nellai - 2026

தேர்தல் காலத்தில் சென்னை சத்தியமூர்த்திபவன் என்ன பாடுபடுமோ அதே நிலைக்கு ஆளாகியிருக்கின்றது நெல்லை சி.எஸ்.ஐ சபையின் அலுவலகம்

சர்ச் ஆஃப் சௌத் இண்டியா என்ற தென்னிந்திய சர்ச்சின் வரலாறு கொஞ்சம் சுவாரஸ்யமானது. கிறிஸ்தவர்களில் கத்தோலிக்கர் அல்லாதவர்கள் பிரிவினை சபைகள் (சர்ச்), அதாவது தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்பது போல இவர்களில் யார் வேண்டுமானாலும் சபை தொடங்கலாம்

போர்ச்சுகீசியர் காலத்தில் இங்கே கிறிஸ்தவம் வாடிகனின் போப்பினை தலைவராக கொண்ட இயக்கமாக பரவியது, இயேசு சபை இதில் முக்கியமானது. பின்னாளில் பிரிட்டிசார் ஆதிக்கம் பெற்றபோது அவர்கள் பின்பற்றிய சபைகளின் ஆதிக்கம்வந்தது . ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆங்கிலிக்கன், மெதடிஸ்ட் என ஏகபட்ட பிரிவுகள் உண்டு.

இந்தியாவிலும் 18ம் நூற்றாண்டில் இந்த சபையின் தாக்கம் இருந்தது, ஆளாளுக்கு வந்து குவிந்தார்கள். இந்திய மக்களின் வரிபணம் பிரிட்டனுக்கு செல்ல அதில் மிகசிறிய பகுதி இந்தியர் நலன் என இந்த சபைகள் மூலமே மதமாற்றத்துக்கு பயன்பட்டது, அதற்கு கல்வி, மருத்துவம் என சாயமடிக்கபட்டது.

இந்துக்களின் அறியாமையினை அப்படி பயன்படுத்திகொண்டார்கள், அடித்ததும் அவர்களே, அடித்துவிட்டு இருப்பதை சுரண்டியதும் அவர்களே. பின் அழாதே என கண்ணீர்துடைத்து மதமமாற்ற வந்ததும் அவர்களே!

19 நூற்றாண்டில் தமிழகம் மற்றும் இலங்கையில் ஏகபட்ட சபைகள் இருந்தன, ஆங்கிலிக்கன், மெதடிஸ்ட் சபையின் தாக்கங்களில் நிறைய சபைகள் இருந்தன‌. அந்த பெரும் சபைகளும் வலுவாக இருந்தன, காரணம் பிரிட்டனின் மதம் ஆங்கிலிக்கன் சர்ச். இந்தியாவில் இந்து மகாசபை உள்ளிட்ட அமைப்பு, முஸ்லீம் லீக் அமைப்பு தோன்றும் போது அவர்களும் சுதாரித்து தங்களுக்குள் ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள்.

தென்னிந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த லண்டன் மிஷனெரி சங்கம் (LMS), மதுரை அமெரிக்கன் மிஷன், மற்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் அமெரிக்கன் மிஷன் சபை, போன்றவைகள் ஒன்று சேர்ந்து தென்னிந்திய ஜக்கியச் சபை – (S.I.U.C) என்று ஓர் அமைப்பை உருவாக்கி இருந்தன. இது சில காலம் நீடித்தது

இந்நிலையில் இந்திய சுதந்திரம் நெருங்கிற்று, இந்தியா பிரிவினையில் சிக்கி பெரும் குழப்பத்தில் ஆழ ஆரம்பித்தது. இந்தியாவுக்கு பிரிட்டிசார் சுதந்திரம் கொடுத்துவிட்டு வெளியேறபோகின்றனர், இனி இங்கே கிறிஸ்தவ ஆட்சி இல்லை என்றதும் சபைகள் ஒன்று கூட தொடங்கின‌.

இனி இந்து ஆட்சிதான் வரும், சபைகள் அதிகம் ஆதிக்கம் செலுத்தமுடியாது என அவை ஒன்றாகின‌. அந்நேரம் இலங்கைக்கு சுதந்திரம் இல்லை என்பதால் இலங்கை கணக்கில் எடுக்கப்படவில்லை. மாறாக தென்னிந்தியாவின் சபைகளெல்லாம் ஒன்றாக தொடங்கின, வடக்கே இந்தியா பாகிஸ்தான் பிரிவினை உச்சத்தில் இருந்ததாலும் அங்கே காலமெல்லாம் அணல் வீசியதாலும் சபைகள் தாக்கம் இல்லை.

சபைகள் பெருகியது தென்னகத்தில் அதுவும் தமிழகத்தில்தான் அதிகம். இப்படி ஆங்கிலிக்கன், மெதடிஸ்ட் ஆகிய சபைகள் சேர்ந்து தென்னிந்திய சர்ச் (சபை) என ஒன்றை 1947ல் உருவாக்கின‌. இந்திய சுதந்திரத்தின் ஒருமாதம் கழித்து இது நடைமுறைக்கு வந்தது, அன்று இவைகளின் அதிபர்களாக பிரிட்டிஷார்தான் இருந்தார்கள்.

நாட்டைவிட்டு அவர்கள் செல்லும்போது இப்படி உருவாக்கி உள்ளூர் பக்தர்களிடம் கொடுத்துச் சென்றார்கள். தென்னிந்திய சபையின் ஐக்கியத்தில், ஆர்காட் லூத்தரன் சபை (ALC), தமிழ் நாடு இவாஞ்சலிக்கல் லூத்தரன் சபை (TELC), செவந்த்டே அட்வென்டிஸ்டு சபை, இரட்சணிய சேனை சபை (Salvation Army), பெந்தேகோஸ்தே சபை, போன்றவைகள் இணைவதற்கு முன்வரவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது. அவை இன்றும் தனியாக உண்டு.

இந்த தென்னிந்திய சபையின் ஒரு மண்டலம் நெல்லையில் உண்டு, இதற்கு தனி பிஷப் உள்ளிட்ட அதிகாரம் உண்டு. இந்தியாவில் வாடிகன் போப்பின் சபைக்கு அடுத்து மிகபெரிய சபை இதுதான், அவ்வகையில் இந்த சபைக்கு சொத்து அதிகம், அதுவும் பிரிட்டிசார் முதலில் காலூன்றிய நெல்லை பக்கம் சொத்து மிக அதிகம். இதனால் அடிக்கடி பெரும் சர்ச்சைகளும் வரும்,அது அடிதடியாகும்.

நெல்லை நீதிமன்றத்தின் பெரும் வழக்குகள் இந்த சபை சொத்துக்களை சார்ந்ததாக இருக்கும். இப்படி சொத்து இருப்பதால் அரசியலில் யார் ஆதிக்கம் செலுத்துவார்களோ அவர்கள் கரம் அடிக்கடி நுழையும். சில வருடங்களுக்கு முன்பு விவி வைகுண்டராஜன் கரங்களும் உள்ளே இருந்தன எனும் அளவு இது அரசியல் நிரம்பிய சபை. ஏகபட்ட சொத்துக்கள் கல்வி நிறுவணங்கள் உண்டு என்பதால் அரசியல் ஆதரவும் அங்கே அவசியம் அது இயல்பே!

இப்போது நெல்லை எம்பி கரம் இருக்கின்றது என்கின்றார்கள். அடிக்கடி அடிதடி நடப்பதெல்லாம் அங்கே வாடிக்கை, ஆச்சரியம் என்னவென்றால் ஒரே சாதி ஒரே மதம் ஒரே பைபிள் ஒரே வழிபாடு. ஆயினும் அடிதடி என்பது சொத்து நிர்வாகம், செல்வாக்கு , அதிகாரத்தில் நடக்கும். அவர்கள் ஆன்மீகத்தை விட அது வலுவானது.

இப்போது வழமை போல் மறுபடியும் மோதிக் கொள்கின்றார்கள், பாதிரி தாக்கப்பட்டிருக்கின்றார். சென்னை சத்தியமுர்த்தி பவன் அருகிருக்கும் வேட்டிகடை, செருப்புகடைக்கு அங்கே கூட்டம் நடக்கும் நேரம் நலல வியாபாரம் நடக்கும், அப்படி இப்போது நெல்லை மருத்துவமனைகள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றன‌.

இதெல்லாம் அரசு தலையிட்டு தீர்க்க வேண்டியவிஷயங்கள். அவை ஆன்மீக நிலையமாக அல்ல, பள்ளி கல்லூரி என கல்வி நிலையங்கள் எனும் வகையில் முன்பு அண்ணாமலை பல்கலைகழகம் , அழகப்பா பல்கலைகழகம் என கையில் எடுத்த அரசு இந்த கல்வி நிலையங்களை கருத்தில் கொண்டால் நல்லது. ஆனால் சிறுபான்மை என்பதால் செய்யமாட்டார்கள், தமிழக இயல்பு அது!

அவர்களின் வழிபாட்டு இடம் பற்றி யாரும் பேசமுடியாது, தமிழக சட்டம் அதற்கு அனுமதிக்காது, ஆனால் கல்வி நிலையங்கள் முக்கியமானவை. அரச சம்பளத்தில் இயங்குபவை என்பதால் அரசு முயற்சிக்கலாம், அதை காட்டி அவர்கள் மோதும்போது அது சரியானதாகவும் அமையும்!

  • பிரம்மரிஷியார்

சிஎஸ்ஐ., பிஷப்பை அடித்து ஓட ஓட விரட்டிய நெல்லை திமுக., எம்.பி. ஞானதிரவியம் ஆட்கள்!

nellai csi bishop attach - 2026

நெல்லை CSI அடிதடி: நெல்லை சிஎஸ்ஐ அலுவலகத்தை பூட்டு போட்ட நெல்லை திமுக., எம்பி., ஞான திரவியம் *மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீடியோ வெளியிட்ட பாதிரியார் காட்ப்ரே நோபுள் மீது திமுக., குண்டர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் பாதிரியார் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து திமுக., எம்.பி., உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மண்டல சி.எஸ்.ஐ., கிறிஸ்துவ டயோசீசின் பிஷப் ஆக பர்னபாஸ் செயல்படுகிறார். மண்டல நிர்வாகப் பணிகளை கவனிக்கும் லே செயலராக ஜெயசிங் என்பவர் உள்ளார். இவரது ஆதரவோடு பிஷப் ஆனவர்தான் பர்னபாஸ். இருப்பினும் பொறுப்புக்கு வந்த பின் இருவரும் தனித்தனி குழுக்களாக செயல்பட்டனர்.

திருநெல்வேலி தி.மு.க., – எம்.பி. ஞானதிரவியம், சி.எஸ்.ஐ.,யில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவர் லே செயலரின் ஆதரவாளர். மண்டல கல்வி நிலவரக் குழு செயலராகவும் ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளராகவும் இருந்த எம்பி.,யை, அந்தப் பொறுப்புகளில் இருந்து நீக்கி பிஷப் பர்னபாஸ் அண்மையில் உத்தரவிட்டார்.

சி.எஸ்.ஐ. மண்டல கல்வி நிலவரக் கூட்டம் கடந்த மே மாதம் 25ம் தேதி நெல்லையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி மண்டல பேராயர் பர்ணபாஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருநெல்வேலி திமுக., எம்.பி. ஞானதிரவியம் உள்ளிட்ட மண்டல நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் காரசாரமான விவாதம் கடுமையாக நடந்து கொண்டிருந்தது. அப்போது, திமுக., எம்.பி. ஞானதிரவியம் எழுந்து, மண்டல நிர்வாகிகளை கண்டபடி திட்ட ஆரம்பித்தார்.

இதையடுத்து, ஆத்திரமடைந்த மண்டல நிர்வாகி ஒருவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேள்வி எழுப்ப, மயிரப் புடுங்கிட்டு இருந்தேன் என்று அநாகரீகமான வார்த்தைகளை பிரயோகித்தார் திமுக., எம்.பி. ஞானதிரவியம். இது, மண்டல நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதை அடுத்து, அங்கு ஞான திரவியம் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்கு பூட்டு போட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், திமுக., எம்.பி. ஞானதிரவியத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிரியார் பிஷப் காட்ஃப்ரே நோபல் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று இந்தப் பிரச்னை தொடர்பாக லே செயலர் ஜெயசிங் மற்றும் எம்.பி., ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் திருநெல்வேலி ஹைகிரவுண்ட் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., அலுவலகம் முன் கூடினர்.

காலை 11:00 மணிக்கு, பிஷப் பர்னபாசின் ஆதரவாளரான, காட்ப்ரே நோபுள், சிலருடன் சி.எஸ்.ஐ., அலுவலகம் வந்தார். அவர் சி.எஸ்.ஐ., உறுப்பினராக இருந்தாலும், ஜே.எஸ்.எம்., என்ற தனி திருச்சபையின் பிஷப் ஆக செயல்படுகிறார். அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ளார்; தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார்.

அவர் தி.மு.க., – எம்.பி., ஞான திரவியத்தை விமர்சித்து முன்னர் வெளியிட்டிருந்த வீடியோவில் தி.மு.க., தலைமை, எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அடுத்து வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும் சில குறிப்பிட்டிருந்தார். இதனால் எம்.பி., ஞானதிரவியம் ஆதரவாளர்கள் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தனர்.

இந்நிலையில், ஞாயிறு காலை சி.எஸ்.ஐ., அலுவலகத்திற்கு வந்த காட்ப்ரே நோபிளை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது. அவரது சட்டையை கிழித்து ஓட ஓட விரட்டி அடித்தனர். கிழிந்த சட்டையுடன் அவர், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் புகார் செய்தார். பின், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், திமுக., எம்பி., ஞான திரவியம் மற்றும் லே செயலாளர் ஜெயசிங் மற்றும் சொத்து நிர்வாக அதிகாரி மூன்றடைப்பு ஜான், ஆடிட்டர் மைக்கேல் உட்பட 33 பேர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத போதகர் கார்பரே நோபில் அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் திமுக., எம்பி., ஞான திரவியம் மீது 147, 294 b, 323, 109, 506( 1) என 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்

சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப் படுத்தத் துடிக்கும் அறநிலையத் துறை: போராட்டம் வெடிக்கும்!

hindumunnani - 2026

சிதம்பரம் நடராஜர் கோவிலை கையகப்படுத்த துடிக்கும், தமிழக அரசின் செயல்பாட்டை இந்துமுன்னணி வன்மையாக கண்டிக்கிறது; இந்து முன்னணி போராட்டம் நடத்தும் என்று அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கை:

அனைத்து கோவில்களிலும் திருவிழா காலங்களில் தரிசன நேரங்களில் மாற்றம் ஏற்படுவதும், பக்தர்களின் கூட்டத்திற்கு ஏற்றவாறு தரிசன நிகழ்ச்சிகளை மாற்றியமைப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் ஆனி திருமஞ்சன தரிசனத்தை முன்னிட்டு கனக சபையிலிருந்து தரிசனம் செய்வதில் மாற்றம் செய்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு செய்ததை அரசு நிர்வாகம் தவறாக சித்தரித்ததையும் கோவிலில் அத்துமீறி நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்திய செயலானது
கண்டிக்கத்தக்கதாகும்.

கோவிலில் பிரச்சனைகள் ஏற்படும் போது, தீக்ஷிதர்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர, கோவிலுக்குள் பலத்தை காட்டுவதும் பக்தர்களை தள்ளிவிடும் செயலானது. வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயல்களால் கோவிலை புனிதமாக கருதி காப்பாற்றிவந்த தீக்ஷதர் பரம்பரையின் நன்மதிப்பானது கேள்விக் குறியாக்கியுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலை தீக்ஷிதர்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நிர்வகித்து வருகிறார்கள் எனவே சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகும் கூட, இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் சர்ச்சையை ஏற்படுத்துவதும், கோவில் அமைதியின்மையை ஏற்படுத்தி பக்தர்களுக்கு இடையூறு செய்து வருவதையும், தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்.தொடந்து பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் இந்து முன்னணி போராட்டம் நடத்தும்..