Home Blog Page 365

தேசபக்தி மதவாதமா?

modi sengol turn - 2026
#image_title

தெலுங்கில் : பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் : ராஜி ரகுநாதன்

  • குவிந்த எதிரி நாடுகளின் வியூகங்களை அடித்துத் துரத்தி நம் தேசத்தின் பாதுகாப்பு அமைப்பை வலுவாக்குவது,
  • படைவீரர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்துவது,
  • அதிநவீன தொழில்நுட்பப் பாதுகாப்பு முறையில் பாதுகாப்புத் துறையைக் கட்டமைப்பது,
  • நாட்டின் முழுமையையும் ஒற்றுமையையும் காப்பாற்றுவது,
  • உலக நாடுகளில் தேசத்தின் கௌரவத்தை மேம்படுத்துவது,
  • தேசத்தில் சாமானிய குடிமகனுக்குக் கூட தொழில்நுட்பம் கைவசம் இருப்பது,
  • பொருளாதாரத் துறையை திடப்படுத்துவது,
  • அமைதியும் பாதுகாப்பும் ஏற்படுத்துவது,
  • விவசாய, வாணிப, வியாபாரத் துறைகளை பலப்படுத்துவது,
  • நூறாண்டு காலங்களாக தீர்க்கப்படாமல் விவாதத்திற்கு உட்பட்ட பண்பாட்டுச் சின்னங்களை புனர் நிர்மாணம் செய்வது,
  • மதங்களை தட்டிக் கொடுப்பதை விட்டு அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் முன்னேறுவதை நோக்கமாகக் கொள்வது,
  • பிறர் வசத்தில் இருந்து வெளிவந்து சுய முழுமையை சாதிப்பது,
  • மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வஞ்சனையோ சதித்திட்டமோ ஆக்கிரமங்களோ பற்றி யோசிக்காமல் இருப்பது,
  • ஒவ்வொரு முக்கியமான துறைகளிலும் நேர்மையானவர்களையும் சாமர்த்தியம் மிகுந்தவர்களையும் தேச முன்னேற்றத்தை சிந்திப்பவர்களையும் நியமிப்பது…
  • — இப்படிப்பட்ட நல்ல குணங்களை சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

இதனால் தேசம் பன்முகப்பட்ட அளவில் உலகிற்சிறந்த அற்புதமான முன்னேறும் தேசமாக வளருகிறது என்ற உண்மையை மறுக்க முடியாது.

ஆனால் தானாக முன்னேறும் பாரதத்தின் வளர்ச்சியையும் முன்னோடி நாடாக உலகில் உயர்வதையும் பொறுக்க இயலாத பகை நாடுகளும் மேல் நாடுகளும் இந்தியாவின் நிலைபெற்ற தன்மையைத் தளர்த்த வேண்டும் என்று தந்திர முயற்சிகளைச் செய்கிறார்கள்.

இவ்வாறு உறுதிப்பாட்டோடு இந்தியா வளர்ச்சி அடைந்தால் தம் மத அரசியல் இனி செல்லுபடியாகாது என்று எண்ணி பிறநாட்டு மத அரசாங்கங்களின் பண உதவியோடு இங்குள்ள மத வெறியர்களும் தீவிரவாத, பயங்கரவாத அமைப்புகளும் கலவரங்களைத் தூண்டி விடுகிறார்கள்.

தேசத்தின் போக்குவரத்து அமைப்பிகளிலும் சாலை – ரயில்வே மார்க்கங்களிலும் அழிவுகளையும் இம்சைகளையும் செய்வதோடுகூட மதத் தொடர்பான தாக்குதல்களுக்கும் கற்களை வீசுவதற்கும் முன் வருகிறார்கள்.

பதவி தாகம் கொண்ட ஊழல் தலைவர்களும் சில மாநிலக் கட்சிகளும் பிற மத தீவிரவாதிகளோடு கை கோர்த்து தேச முன்னேற்ற வாதத்தை, ஹிந்து வாதமாக பிரச்சாரம் செய்து ஹிந்துக்கள் மீது துவேஷத்தைத் தூண்டிவிட்டு அதன் மூலம் ஹிந்துவல்லாத பிற மதங்களின் உதவியைப் பெறும் நோக்கத்தில் மூழ்கியுள்ளார்கள்.

வெளிநாடுகளில் உள்ள தீவிர, பயங்கரவாதங்களின் உதவியைப் பெற்று, அவர்களின் வரவேற்பின் மூலம் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சொந்த தேம் குறித்து தீய பிரச்சாரத்தையும் அவதூறுகளையும் பரவச் செய்வதற்கும் பின்வாங்குவதில்லை.

உண்மைக்குப் புறம்பானவற்றையும் பொய்களையும் வெட்கமின்றி ஆடம்பரமாக அழுத்திக் கூறும் சாகசத்தைச் செய்கிறார்கள்.

இந்த அதிகாரப் பிரியர்களின் ஆணவம், தேசத்தின் புகழுக்கு மாசு கற்பிப்பதோடு தேசத்தின் நல்லமைப்பு ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி, இடிந்து விழும் ஆபத்தான குறிகளைக் காட்டுகிறது.

கூட்டு சேர்ந்த தேசிய எதிர்பாளர்களின் தரப்பில் நின்று பத்திரிக்கைத் துறையின் பஜனை கோஷ்டியும் உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கே முன்னுரிமையளித்து உண்மையைப் புறந்தள்ளி, குலம், இனம், வர்க்கம் போன்றவற்றின் வாதங்களையே உற்சாகப்படுகின்றன.

samavedam pic 1 - 2026
samavedam pic 1 – சாமவேதம் சண்முக சர்மா

இந்தப் பின்னணியில் தேச குடிமக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கவனித்தால்….

தேசம் துண்டு துண்டாக ஆனாலும், முன்னேற்றத்திற்கு தடை ஏற்பட்டாலும் பரவாயில்லை. தம் மதமே நாட்டை ஆள வேண்டும் என்று எண்ணும் ஹிந்துவல்லாத பிறரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தேச நலனை விரும்பும் தேச பக்திக்கு ‘ஹிந்துத்துவா’ முத்திரை குத்தி நிந்தையும் குற்றச்சாட்டுகளும் பரப்புவதற்கு தயாராகிறார்கள். கலவரங்களைத் தூண்டுகிறார்கள்.

ஹிந்துக்களில் பலர் உதாசீனமாகவும் ஒதுங்கியும் அலட்சியமாகவும் இருக்கிறார்கள். மேலும் சிலர் அரசியல் ஆதாயத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கும் சுயநலவாதிகளாக உள்ளார்கள். ஓட்டு போடாதவர்கள் சிலர் என்றால் இலவசங்களுக்காகவும், மதுவுக்காகவும் ஆசைப்படுபவர்கள், நோட்டுக்கு ஓட்டு விற்பவர்கள் மேலும் சிலர்.

ஒவ்வொரு பிற மத அலுவலகமும் அரசியல் செயல்பாடுகளில் மூழ்கி தம்மதத்தவரே அனைத்து துறைகளிலும் இருப்பதற்கும் அதிகாரத்தைப் பிடிப்பதற்கும் ஏதுவாக மதத்தை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் மூழ்கியுள்ளார்கள். தங்களின் மத ஆதாயத்தை அதற்குப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் ஹிந்து ஆலயங்களில் தர்மப் பிரச்சாரமோ போதனைகளோ எதுவும் நடப்பதில்லை.

அதோடு பிறமதங்களை திருப்திபடுத்துவதற்காக ஹிந்து மதத்தை பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு இருக்கும் தலைவரகள் ஆளும் அரசுகளின் கைகளில் ஆலய அமைப்பு சிக்கியுள்ளது. ஆலயத்தின் ஆதாயங்கள் அக்கிரம வழியில் அரசியல் தலைவர்களுக்கும் பிற மதத்தவருக்கும் சென்று சேர்கின்றன. ஹிந்து ஆலயங்களில் ஹிந்து மதத்தின் வளச்சிக்கோ பாதுகாப்புக்கோ எடுக்கும் முயற்சிகள் எதுவுமில்லை.

பொருளாத வலிமை இல்லாத தன்னார்வு அமைப்புகளைச் சேர்ந்த சிலர் மட்டுமே சோசியல் மீடியாவில் வாதிப்பது, ஏதாவது பரிஷத்தின் நிழலிலோ சங்கத்தின் மறைவிலோ ஒளிந்து வீண் நிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றை மட்டுமே காண முடிகிறது. ஹிந்துக்களில் சிலருக்கு இன்னுமும் பரிஷத், சங்க் போன்றவற்றின் மீது புரிதலோ சரியான அபிப்பிராயமோ இல்லை.

மறுபுறம் பீடாதிபதிகள் அரசியலில் இருந்து ஆபத்து வராமல் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே நேரத்தை செலவு செய்யவேண்டி வருகிறது. அவர்களின் பயம் அவர்களுடையது. இல்லாவிட்டால் ஏதாவது வீண்பழி சுமத்தி அரசியல் தலைவர்கள் இம்சை செய்யும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.

தேச நலன், தேச ஒற்றுமை, பாதுகாப்பு இவற்றை விரும்புபவர்கள் ஹிந்துத்துவவாதிகளாகக் கருதப்பட்டால் அனைவரும் ஹிந்துத்துவவாதிகளாகவே ஆவோம்.

பிற மதங்களின் மீது வெறுப்பு தேசபக்தி வாதமல்ல. ஹிந்துத்துவாவும் அல்ல. ஆனால் மத வெறியர்களிடம் இருந்தும் வெளிநாட்டு வியூகங்களிடம் இருந்தும் தேசத்தை காப்பாற்றுவதற்கு ஹிந்துக்கள் முன்னெழ வேண்டும். மதத்தோடு தொடர்பில்லாமல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் ஒன்றுசேர வேண்டும்.

பிற மத ஆதரிப்பு, பொறுமை, ஒற்றுமையாக வாழ்வது போன்றவை இயல்பாகவே உள்ள இந்துக்களிடம் இருந்து என்றுமே எந்த மதத்திற்கும் ஆபத்து வராது. நாட்டுநலன் ஏற்படும். இதனை ஹிந்துக்களின் ஒற்றுமையுணர்வால்தான் நிரூபிக்க முடியும்.


(ருஷிபீடம் மாத இதழ் தலையங்கம், ஜூலை 2023)


மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணத்தில் ரூ. 26 லட்சம் மொய் வசூல்!

pattabisegammeenakshi11 1619149166 tile 1649747202 - 2026

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தில் 26 லட்ச ரூபாய் மொய் வசூல் என்று ஆர்.டி.ஐ.தகவல்.! மூலம் தெரிய வந்துள்ளது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த மே 2 ம்தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த மீனாட்சி திருக்கல்யாணத்தில் கலந்துகொள்ள தமிழக முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.

பின்னர் திருமணம் நடைபெற்ற பின்பு பக்தர்களுக்கு கல்யாண விருந்து மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

இதனை தொடர்ந்து திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களிடம் கோவில் நிர்வாக சார்பாக மொய் வசூல் செய்யப்பட்டது. இதற்காக கோவில் வளாகத்திற்குள் 6 இடங்களில் மொய் வசூல் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து மதுரை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகேந்திரன் ஆர் டி ஐ மூலம் மொய் விருந்தில் கிடைக்கப்பட்ட வசூல் எவ்வளவு என கேட்டதற்கு கோவில் நிர்வாகம் அளித்த பதிலில் கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சுமார் 26 லட்சத்து 80 ஆயிரத்து 350 ரூபாய் மொய் வசூல் மூலம் வருமானம் கிடைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது..

மதுரை அருகே பரவை அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

IMG 20230628 WA0021 - 2026

மதுரை அருகே பரவை சத்தியமூர்த்தி நகர் அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகர் இந்து காட்டுநாயக்கன் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 21 ஆம் தேதி புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

IMG 20230628 WA0022 - 2026

நேற்று காலை நான்கு மணி அளவில் பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி பூஜை உடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. மாலை 5 மணிக்கு நாடி சந்தானம் அங்குராற்பனம் நடைபெற்றது. புதன்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை வேள்வியினை திருவேடகம் தேவஸ்தானம் ஜோசியர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர்‌.

தொடர்ந்து கடம் புறப்பாடாகி திருக்கோவிலை வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ கருப்புசாமி, ஸ்ரீ முனியாண்டி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.

தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோவில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரவை சத்தியமூர்த்தி நகர் இந்து காட்டுநாயக்கன் சமுதாயத்தினர் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.

சீனா தயாரித்த உயிரி ஆயுதம்தான் ‘கொரோனா வைரஸ்’!

covid man made andrew huff - 2026

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கோவிட்-19 வைரஸ் அங்குள்ள ஆய்வகத்தில் இருந்து மக்கள் பாதிப்படைய வேண்டும் என்ற நோக்கில் வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட ஒரு ”உயிரி ஆயுதம்’ என வூஹான் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்த தகவல் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2019 இறுதியில் சீனாவின் வூஹானில் மனிதர்களிடம் ‘கோவிட்-19’ என்னும் கொரோனா வைரஸ் கண்டறியப் பட்டது. பின் சீனா மட்டுமின்றி அந்த வைரஸ் படிப்படியாக உலக நாடுகள் முழுவதும்பரவியது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு அதில் பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் வெளிப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. இதனால் சீனா இந்த வைரஸை உயிரி ஆயுதமாக பயன்படுத்த உருவாக்கி இருக்கலாம் என்று கருதப் பட்டது. இது குறித்து இந்த ஆய்வகத்தில் பணியாற்றிய பெண் ஒருவரே இது பற்றி வெளிப்படையாகத் தகவல் சொன்னார்.

இந்நிலையில் சீனா மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சி குறித்த பிரத்யேக தகவல் மற்றும் நுண்ணறிவுகளை வழங்கும் சர்வதேச செய்தியாளர் சங்கத்தின் உறுப்பினரும், சீனாவில் பிறந்த மனித உரிமை ஆர்வலருமான ஜெனிபர் ஜெங், வூஹானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் சாவோ ஷாவோ என்பவரிடம் ஒரு பிரத்யேக பேட்டி எடுத்துள்ளார். அதில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சாவோ ஷாவோ வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த பேட்டியில் சாவோ ஷாவோ கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் ஓர் ‘உயிரி ஆயுதம்’. வூஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜியைச் சேர்ந்த மற்றொரு ஆராய்ச்சியாளரும் எனது மேலதிகாரியுமான ஷான் சாவோ, என்னிடம் நான்கு கொரோனா வைரஸ் மாதிரிகளை அளித்தார். அதில் மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்களை எளிதாகவும், அதிக வீரியத்துடனும் தொற்றும் திறனாகவும் கொண்டது எந்த வைரஸ் என்பதைக் கண்டறியுமாறு கூறினார்.

2019ல் வூஹானில் நடைபெற்ற சர்வதேச அளவிலான ராணுவ விளையாட்டுப் போட்டிகளின்போது என் சக பணியாளர்கள் (வைரஸ் ஆராய்ச்சியாளர்கள்) தடகள வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றதாக தெரிந்தது. ஏன் சென்றீர்கள் என்று கேட்டபோது, வீரர்களின் உடல்நிலையை சோதிக்கச் சென்றதாகக் கூறினார்கள். வீரர்களின் உடல்நிலையை அறிய வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் தேவையில்லையே! ஆகவே, வைரஸை வீரர்களிடம் பரப்புவதற்காகவே அவர்கள் அங்கு அனுப்பப்பட்டனர் என்று ஷான் சாவோ கூறினார்.

பின்னர் 2020 ஏப்ரலில், ஷான் சாவோ முகாம்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உய்குர் முஸ்லிம்களின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக ஷின்ஜியாங்கிற்கு அனுப்பப்பட்டார். வைரஸை மனிதர்களுக்கு பரப்பி அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதைக் கவனிப்பதற்காக அங்கு அனுப்பப்பட்டதாக அவரே குறிப்பிட்டார் என்று கூறியுள்ளார். இந்தத் தகவல்கள் உலக அளவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும்(30): ஸ்மசான வைராக்ய ந்யாய..(2)

samskrita nyaya - 2026

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் – பகுதி 30 தொடர்ச்சி
தெலுங்கில் –பி.எஸ் சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

ஸ்மசான வைராக்ய ந்யாய:

ஸ்மசானம் – இறுதிக் கிரியை நடத்தும் இடம்
வைராக்யம் – துயரங்களை நீக்கும் தெளிவு

தற்காலிகமாக ஏற்பட்ட ஆவேசத்தில் எடுக்கும் முடிவுகள் அதிக காலம் நீடிக்காது. இந்த வைராக்கியத்தில் முக்கியமான மூன்று பிரசித்தியானவை. மயான வைராக்கியம், புராண வைராக்கியம், பிரசவ வைராக்கியம்.

மயான வைராக்கியம் –

இந்திய சம்பிரதாயங்களின்படி இறந்த உடலை தீக்கிரையாக்குவர். சிலர் மண்ணில் புதைப்பர். பதினாறு சமஸ்காரங்களில் அந்தியக் கிரியை இறுதியானது. ஜீவனுக்கு சேவை செய்த இயற்கையிடம் உடலைத் திரும்ப கௌரவத்தோடு சமர்ப்பிப்பது அந்தயக் கிரியையில் உள்ள சிறப்பு. தமக்கு விருப்பமானவர்களின் உடலை தகனம் செய்தவுடன், அல்லது புதைத்தவுடன் அங்கு கதறியழும் உறவினர்களைப் பார்த்து அனைவருக்குமே வைராக்கியம் ஏற்படும். உறவு, பாசம் எல்லாம் ஒரு போலி நாடகம் என்ற பாடல் கூட நினைவுக்கு வரும்.

உடலைத் துறந்தபோது நம்மோடு கூட வருவது நாம் செய்த தர்மமே என்ற குருமார்களின் சொற்களும் நினைவுக்கு வரும். உறவினர்களும் நண்பர்களும் திரும்பிப் பார்க்காமல் சென்று விடுவார்கள். அதைப் பார்க்கையில் இறை சேவையும் பரோபகாரமும் செய்து கொண்டு காலத்தைக் கழிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்துக் கொள்வார்கள்.

ஒரு கண நேரத்தில் ஏற்பட்ட கோபமோ, சோகமா, துக்கமா அதிக காலம் நீடிக்காது என்பது இறைவன் மனிதர்களுக்குக் கொடுத்த வரம். இந்த அனுபவங்கள் நம்மில் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். பல கதைகளிலும் புராண, இதிகாசங்களிலும் கூட இதைப்பற்றி படித்துள்ளோம். கேட்டுள்ளோம்.

ராமாயணத்தில் சுக்ரீவனின் கதாபாத்திரத்தை எடுத்துக் கொண்டால், ராமனிடம், “ராமா, வாலி எனக்கு அண்ணன். அவனே எனக்கு எதிரியும் கூட. நான் சுகமாக இருக்க வேண்டும் என்றாலும் உயிரோடு இருக்க வேண்டும் என்றாலும் அவன் இறந்தால் தான் நடக்கும்” என்று கூறுவான்.

ஸ்ரீராமர் வாலியை வதைத்த பின்பு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வாலி, சுக்ரீவனிடம், “அங்கதனை நீ பெற்ற மகனாக எண்ணி பார்த்துக்கொள்” என்று கூறி தன் கழுத்தில் இருந்த காஞ்சனமாலையை சுக்ரிவனுக்கு அணிவித்து, அவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே உயிரை விட்டான். அங்கிருந்த குரங்குகள் எல்லாம் ஹோவென்று அழுதன.

தாரை கண்ணீரால் கணவனின் உடலுக்கு அபிஷேகம் செய்தாள். சுக்ரீவனின் இதயம் கரைந்தது. மயான வைராக்கியம் அவனைச் சூழ்ந்து கொண்டது. ராமனிடம், “ராமா, வாலி ஒரு மகாத்மா. எனக்கு அண்ணா. அப்படிப்பட்ட அண்ணனைக் கொன்ற பிறகு எனக்கு சொர்க்க ராஜ்ஜியம் கிடைக்குமா? என்னை மகா பாபம்தான் சூழும். நான் இனி மேல் உயிரோடு இருக்க மாட்டேன். அக்னியில் குதித்து மடிவேன். உன் கட்டளைப்படி இந்த வானர வீரர்கள் உனக்கு சீதையைத் தேடுவதில் உதவி செய்வார்கள். நான் குல நாசனம் செய்த மகா பாவி” என்று துயரமடைந்தான்.

ராமனுக்குக் கூட கண்ணீர் வந்தது. இனி தாரையைப் பார்ப்போம். “ராமா, வாலியை வதைத்த பாணத்தாலேயே என்னையும் கொன்று விடு. நானும் வாலியோடு சேர்ந்து சொர்க்கத்துக்குச் செல்கிறேன். பெண்ணைக் கொல்வது குற்றமென்று எண்ணாமல் என்னைக் கொல்” என்று அழுதாள். அதன் பிறகு நடந்த கதை நாம் அறிந்ததே.

உயிருக்கு உயிரானவர்கள் மரணிக்கும் போது அந்த துயர நேரத்தில் கொந்தளித்து வரும் ஆலோசனைகளும் ஆவேசங்களும் சற்று நேரத்தில் சமநிலைக்கு வந்து விடும். வரவேண்டும். அதுவே விஷ்ணுவின் மாயை. அதுவே மயான வைராக்கியம். தன்னோடு சேர்ந்து வாழ்ந்த மனிதர் தீயில் எரிந்து சாம்பலாகும்போது யாருக்குத்தான் துக்கம் வராது?

அதன் பிறகு மறதி ஏற்பட வேண்டும். அதுதான் இயற்கை. இறந்த அன்று வீட்டில் இருந்த சூழ்நிலை பத்தாவது நாள் இருக்காது என்பதை நாம் பார்க்கிறோம். அதுவே க்ஷண காலத்தில் மறையும் மயான வைராக்கியம்.

புராண வைராக்கியம் –

இறுதித் தேர்வுக்கு முன் வைத்த பரீட்சையில் நாற்பது மார்க் எடுத்த மாணவன் தன் தவறை உணர்ந்து வரப்போகும் இறுதித் தேர்வில் கஷ்டப்பட்டு படிக்க வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்வான். அலாரம் வைத்து விடியற்காலையில் எழுந்து படிக்கத் தொடங்குவான். இரண்டு மூன்று நாட்கள் ஆன பின்பு அவனுடைய சிந்தனை மாறும். எப்போதோ வரும் பரீட்சைக்காக இப்போதே எதற்காக படிக்க வேண்டும் என்று சோம்பலாக படுத்துறங்குவான். இது ஒரு வித புராண வைராக்கியம்.

ரத்தப் பரிசோதனை முடிவைப் பார்த்ததும் சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இல்லை என்று தெரிந்ததும் உணவிலும் பழக்க வழக்கங்களிலும் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்றும் நாவை அடக்க வேண்டும் என்றும் சாப்பிடக்கூடாதவற்றை திரும்பிக் கூட பார்க்கக் கூடாது என்றும் பிரதிக்ஞை எடுத்துக் கொள்வார்கள். எத்தனை நாட்கள்? ஓரிரு நாட்கள். மீண்டும் பழைய கதை தான். இது கூட புராண வைராக்கிய நியாயத்திற்கு உதாரணமே.

ஆன்மீகப் பிரவசனம் கேட்கும் சமயத்தில் எடுத்துக் கொள்ளும் புதிய தீர்மானங்கள் வெளியில் வந்த உடனே காற்றில் பறந்து போகும். புண்ணியச் செயல்கள் மீது ஆர்வம் நிலையாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் மனித மனம் அதில் ஈடுபட விடாது. அதுவே புராண வைராக்கியம்.

இதைப் போன்றவை நமக்குப் பழக்கம்தானே. புராண வைராக்கியம் பற்றி ஒரு சுவாமிஜி ஒரு கதை கூறுவது வழக்கம்.

தன் ஆசிரமத்தில் நடந்த ஒரு ஆன்மீக முகாமிற்கு வந்த ஒரு இல்லாள் அவருடைய பிரசங்கத்தைக் கேட்டு அதன் தாக்கத்தால், “சுவாமிஜி, வரும் மாதத்தில் எங்கள் இரண்டாவது மகளுக்குத் திருமணம் நடக்க இருக்கிறது. அதன் பிறகு என் பொறுப்பெல்லாம் தீர்ந்துவிடும். இனி உங்கள் ஆசிரமத்துக்கு வந்து சேவை செய்து கொண்டு நீங்கள் கூறும் தெய்வீக பிரசங்கங்களைக் கேட்டு உய்வடைவேன்” என்று பணிவோடு கூறினாள்.

அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து அவளைப் பார்த்த சுவாமிஜி, “நன்றாக இருக்கிறாயா, அம்மா, சௌக்கியமா? உன் இரண்டாவது பெண்ணுக்குத் திருமணம் ஆனதா? ஆசிரம சேவைக்கு எப்போது வருகிறாய்?” என்று புன்னகையோடு கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி, “சுவாமிஜி, பெரிய பையனுக்கு மகன் பிறந்திருக்கிறான். அதற்காக அமெரிக்கா செல்கிறேன்” என்றாள்.

புராணம் செவிமடுத்த ஆயிரம் பேரில் ஒருவருக்கு கடவுள் மீது பற்று ஏற்படும் என்று கீதாச்சாரியன் கூறினான் அல்லவா?

சுலோகம்
மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித்யததி ஸித்தயே|
யததாமபி ஸித்தாநாம் கஸ்சிந்மாம் வேத்தி தத்த்வத:||
-7/3

பிரசவ வைராக்கியம் –

குழந்தையை பிரசவிக்கும் தாய் படும் அவஸ்தை வர்ணனைக்கு எட்டாதது. ஆண்களுக்குப் புரியாத வேதனை இது. சிலருக்கு இந்த வலி மணிக்கணக்காக இருக்கும். பிரசவ வலியில் பெண்கள் துடிதுடித்து அழும்போது மீண்டும் குழந்தையே பெறக் கூடாது என்று தீர்மானம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் பிரசவமான பின்பு குழந்தையின் முகத்தைப் பார்த்த உடனே ஆனந்தத்தில் அந்த வைராக்கியம் எல்லாம் காணாமல் போய்விடும். இது இயற்கை நியதி.

இந்த மூன்றும் புல்லில் பிடித்த தீ போல சற்று நேரம் இருந்து அணைந்து விடக் கூடியவை என்பதே இதன் கருத்து. அவ்வாறு இல்லாமல் நிலையான வைராக்கியம் ஏற்பட்ட மனிதன் சுயமாக நாராயணனே ஆவான் என்பது சாஸ்திர வாக்கு.

சிதம்பரம் கோயிலுக்கு தேவை, மத்திய அரசின் பாதுகாப்பு!

IMG 20230628 WA0001 - 2026

கடலூர் மாவட்ட காவல்துறை அரசியலைப்பு சட்டத்தை மீறும் செயலை அரங்கேற்றியுள்ளது இன்று சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் வேதனை தெரிவித்துள்ளார்கள்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பூஜைதாரர் தீட்சிதரை தாக்கியது அவரது மத உணர்வையும், அரசியல் சாசன உரிமையும் மீறும் செயலாகும். அடிப்படை மத உரிமையை மீறும் செயலாகும். கடலூர் மாவட்ட காவல்துறை அரசியலமைப்பு மீறலை செயல்படுத்தி அரங்கேற்றியுள்ளது என கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் சிவராமதீட்சிதர் மற்றும் கோயில் வழக்குரைஞர் ஜி.சந்திரசேகர் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

நடராஜர் கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராமதீட்சிதர் மற்றும் கோயில் வழக்குரைஞர் ஜி.சுந்திரசேகர் ஆகியோர்  செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தவை….

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் பெரிய வரலாற்று பிழை சம்பவம் நடைபெற்றுள்ளது. கோயில் வரலாற்றிலேயே இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது இல்லை. 

Chidambaram temple dheetchidar2 - 2026

ஆனித் திருமஞ்சன தரிசனம் உத்ஸவம் நடைபெறுவதால் மூன்று நாட்களாக கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைத்தனர். திங்கள்கிழமை காவல்துறையினர் அறநிலையத் துறையினருடன் வந்து பலகையை அகற்றி எடுத்து சென்று விட்டனர். அப்போதும் தீட்சிதர்கள் அமைதி காத்தார்கள். 

செவ்வாய்க்கிழமை காலை முதல் அதிகளவில் காவல்துறையினர் கனகசபை கதவை உடைத்து உள்ளே செல்ல அனுமதிப்போம் என அச்ச உணர்வு ஏற்படும் வகையில் தகவல்கள் வந்தது. இருந்தாலும் தீட்சிதர்கள் மன அமைதியோடு, எந்த அசம்பாவிதம் நடைபெற்றாலும் பாதுகாப்பு வேண்டும் என கேட்டு காவல்துறையில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார்கள். 

IMG 20230628 WA0000 - 2026

செவ்வாய்க்கிழமை மாலை சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதன் பிறகு நடராஜராகவே மதிக்கப்படும் பூஜைதாரர் தீட்சிதரை திட்டக்குடியைச் சேர்ந்த இந்து அறநிலையத்துறை ஶ்ரீ தேவி, கொளஞ்சியப்பர் கோயில் செயல் அலுவலர் வேல்விழி மற்றும் புவனகிரி நகர காவல் ஆய்வாளர் சரஸ்வதி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் பொன்மகரம்  மற்றும் பெண் காவலர்கள் கிழக்கு பகுதி வழியாக உள்ளே நுழைந்து பூஜைகாரர் தீட்சிதரை தாக்கி  நிலை குலைய வைத்து பூநூல் அறுபடும் வகையில் நெட்டி தள்ளி கனகசபை மீது ஏறி கீழே இறங்கியுள்ளனர். இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பான விவரங்கள் பதிவுதபால் மூலம் காவல்துறைக்கு தீட்சிதர்களால் அனுப்பப்படும். இந்த தாக்குதல் நடைபெற்றது அவரது மத உணர்வையும், அரசியல் சாசன உரிமையும் மீறும் செயலாகும். அடிப்படை மத உரிமையை மீறும் செயலாகும். 

கடலூர் மாவட்ட காவல்துறை அரசியலமைப்பு மீறும் செயலை செயல்படுத்தி அரங்கேற்றியுள்ளது. இது சிதம்பரம் கோயில் வரலாற்றில் கருப்பு தினமாகும். இதற்கு உரிய வகையில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 

காவல்துறையே பூஜைகாரரை தாக்கும் அளவிற்கு சம்பவம் நடைபெற்ற பிறகு என்ன சொல்வது. பொதுதீட்சிதர்கள் மீது ஒன்றரை ஆண்டுகளாக தமிழகஅரசு நிறைய இடையூறு செய்து வருகிறது. பொய் புகாரின் அடிப்படையில்

மனித உரிமை மீறல்கள், கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் தீட்சிதர்கள் அனைவரும் அச்ச உணர்வில் உள்ளார்கள். 

இனிமேல் தீட்சிதர்கள் சுதந்திரமாக தங்கள் கடமையையும், மத  பூஜைகளை செய்வது என்றால், அவர்களுக்கு மத்திய பாதுகாப்பு படை போலீஸார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தீட்சிதர்கள் சொன்ன சொல்லை மீறுபவர்கள் அல்லர்.

புதன்கிழமை முதல் கனகசபை மீது பூஜை நேரங்களைத் தவிர பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழக்கம்போல் அனுமதிக்கப் படுவார்கள். அரசாணை பொறுத்த வரை தீட்சிதர்கள் சார்பில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது… என்றார்கள்…

இதன் அடிப்படையில் பார்த்தால்….

சிதம்பரம் விவகாரத்தில்….

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு செயல் படுகிறது என்றால்… 

சட்டத்தை பாதுகாக்க வேண்டிய மாநில அரசின் காவல்துறை அதிகாரிகளே சட்டவிரோதமாக கதவை உடைத்துக் கொண்டு படியேறி தகராறு செய்திருக்கிறார்கள் என்றால்…

மாநில அரசின் காவல்துறையையோ மாநில அரசையோ நம்புவதற்கு இல்லை. எனவே மத்திய அரசின் பாதுகாப்பு சிதம்பரத்துக்கு தேவைப்படுகிறது என்பது தெரிய வருகிறது.

ஏற்கனவே தில்லை சிதம்பர நாதனையும் திருவரங்க நாதனையும் ஏதோ செய்வோம் என்று கொள்கை முழக்கமிட்டவர்கள் இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் தங்கள் கொள்கைகளை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

எனவே உள்நோக்கத்துடன் இந்துக்களின் கோயில்களை நிர்மூலமாக்கி, கொள்ளையடித்துக் கொண்டு  வரும் நாத்திக திமுக அரசின் கொள்கைகளை செயல்படுத்துவதை எதிர்க்க வேண்டும் என்றால் மத்திய அரசு தலையிட வேண்டும் என்பதை கோருவதைத் தவிர வேறு வழி இல்லை. எனவே ஆளுநர் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த அல்லது வழிபாட்டு முறைகளைச் சேர்ந்தவர்களை, தங்கள் கொள்கையை செயல்படுத்துவது என்ற பெயரில் அரசாட்சிக்கு வந்த பிறகு நசுக்குவதும் சொல்லவியலாத கொடுமைகளை இழைப்பதும் திமுக அரசின் திட்டமாக இருப்பதால்… 

அரசுத்துறை கேள்விக்கு இடமாகிறது.

 எனவே தீட்சிதர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு படை சிதம்பரம் கோயிலுக்குள் பாதுகாப்புக்கு இறங்க வேண்டும்.

நாத்திக திமுக அரசின் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும், தமிழக அரசின் ஆட்சியாளர்களுக்கு அடியாட்களாக அதிகாரபூர்வ அங்கீகாரம் பெற்ற படை போல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காவல் துறையினருக்கும் கடிவாளம் போட வேண்டுமென்றால்…. மத்திய அரசின் தலையீடு சிதம்பரம் திருவரங்கம் போன்ற தலங்களுக்கு முக்கியமாகிறது

மதுரை பேருந்து நிலைய குறைபாடுகள்: ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய இணையமைச்சர் உத்தரவு

IMG 20230627 WA0039 - 2026

மதுரை பேருந்து நிலையத்தில் குறைபாடுகள்- ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப மத்திய இணையமைச்சர் மாநகராட்சி ஆணையாளருக்கு உத்தரவு.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை பெரியார் பேருந்து நிலைய மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டு அதி நவீன வசதிகளுடன் மிக பிரம்மாண்டமாக இதன் கட்டுமான பணிகள் நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 2021ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

57 பேருந்துகள் நிறுத்தும் அளவில் பேருந்து நிலையமும், 450 கடைகள் இயங்கும்படி வணிக வளாகமும் கட்டப்பட்ட நிலையில் முதல்கட்டமாக பேருந்து நிறுத்தம் முழுமையாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தினை மத்திய சமூகநீதித்துறை இணையமைச்சர் நாராயண சுவாமி, மாநகராட்சியின் ஆணையாளர் பிரவீன்குமாருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது பேருந்து நிலையத்தில் கழிவறை, குடிநீர் வசதி முறையாக இல்லாமல் இருந்தது. மேலும் பேருந்து நிலையத்தின் தடுப்புகள் உடைந்து இருந்தன. இதனை பார்வையிட்ட அமைச்சர் நாராயணசுவாமி பேருந்து நிலைய கட்டிட பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரருக்கு நோட்ஸ் அனுப்ப மாநகராட்சி ஆணையரிடம் உத்தரவிட்டார்.

தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.
மதுரை பெரியார் பேருந்து நிலைய வணிக வளாக கட்டிடப் பணிகள் 2 மாதத்திற்குள் நிறைவடைய உள்ளதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1500 கோடி ரூபாய்க்கு மதுரையில் பணிகள் நடந்துள்ள நிலையில், 170 கோடி ரூபாய்க்கு மேல் கட்டப்பட்ட பெரியார் பேருந்து நிலையத்தின் பணிகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும் கட்டிடப் பணிகளை முறையாக பராமரிக்காத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்ப மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாள் ஒன்றுக்கு 20 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வரும் சூழலில் ஒரே ஒரு கழிவறை மட்டுமே இருக்கிறது, குடிநீர் வசதி போதியதாக இல்லை பயணிகளின் அடிப்படைத் தேவையான இரண்டையும் அதிகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மதுரை மெட்ரோ ரயில்; விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15ல் தாக்கல்!

IMG 20230627 WA0040 - 2026

மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை ஜூலை 15ல் தாக்கல் செய்யப்பட உள்ளதாக திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தகவல் தெரிவித்துள்ளார்.

மதுரை மெட்ரோ ரயில்வே திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் குறித்து திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தலைமையிலான அதிகாரிகள் குழு திருமங்கலம், தோப்பூர், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திட்ட இயக்குநர் அர்ச்சுனன் கூறுகையில்,

“மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மண் பரிசோதனை உள்ளிட்ட 90 சதவித பணிகள் முடிவுற்றநிலையில் திட்ட அறிக்கையின் இறுதிக்கட்ட குறித்து ஆய்வு மேற்கொண்டோம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள மாசி வீதிகளில் தேரோட்டம் பாதிக்கப்படாத வகையிலும் மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி உள்ள பகுதிகளில் பழமையான கட்டிடங்கள் சேதம் அடையாத வகையிலும் ரயில் நிறுத்தத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

வைகை ஆறு முதல் கோரிப்பாளையம் வரையும் சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் சற்று தாமதமாகும். வைகையாற்று பகுதிகளில் பாறை பகுதிகளில் மெட்ரோ பாதை அமைப்பதால் எந்தவித அச்சமும் இன்றி மெட்ரோ ரயில் பாதையில் இயக்கப்படும். ஜூலை 15 அன்று விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம்” என்றார்.

சிதம்பரத்தில் அறநிலையத் துறை அத்துமீறல்: பாஜக., அஸ்வத்தாமன் கண்டனம்!

chidambaram logo compressed - 2026

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை விடாப்பிடியாக மீண்டும் மீண்டும் மேற்கொண்டு வரும் அத்துமீறலுக்கு பாஜக மாநில செயலர் அஸ்வத்தாமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில்…..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலைய அபகரிப்பு துறையின் அத்துமீறலை வன்மையாக கண்டிக்கிறேன் !

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் நடராஜர் கோவிலையும், அதன் சொத்துக்களையும் அபகரிக்க தமிழக அரசும், அறநிலைய அபகரிப்பு துறையும் முயற்சி செய்கிறது . அத்துமீறி உள்ளே நுழைந்து அராஜகம் செய்கிறது.

இத்தனை காலமாக நடராஜர் கோவிலும் அதன் சொத்துக்களும் பாதுகாப்பாக இருக்கிறது என்று சொன்னால் அது தீட்சதர்கள் வசம் இருப்பதால்தான். ஒருவேளை அந்த திருக்கோவில் அறநிலைய அபகரிப்பு துறை வசம் வந்திருக்குமேயானால், அதன் சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு, கோவில் சிலைகள் வரை திருடப்பட்டிருக்கும். மயிலாப்பூரில் ‘மயில் சிலை’ வரை, இந்த அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்ததால் தானே களவு போனது ?! தமிழகத்தில் பல கோவில்கள் அறநிலையத் துறையின் அபகரிப்பின் கீழ் வந்த பிறகே சிதைந்து போனது. இது வரலாறு.

நடராஜர் கோவிலும் நடராஜர் கோவில் சொத்துக்களும் அதன் நகைகளும் பாதுகாப்பாக இருப்பது, அறநிலையத் அபகரிப்பு துறையின் கண்களுக்கும், திமுகவின் கண்களுக்கும் உறுத்தலாக இருக்கிறது .எனவே அந்த கோவிலை அபகரித்துக் கொள்ள கடந்து துடிக்கிறது.

உச்ச நீதிமன்ற ஆணையையும் மதிக்காமல் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது. தமிழக அரசும், அறநிலைய அபகரிப்பு துறையின் அதிகாரிகளும் தங்களுடைய அபகரிப்பு எண்ணத்தை கைவிட்டு உடனடியாக நடராஜர் கோவிலில் நடத்துகிற அத்துமீறலை கைவிட வேண்டும்… என்று தெரிவித்துள்ளார்.

‘ரீல்ஸ்’ விட்ட #ஷர்மிளா உண்மைக் கதை; கமல் ஏன் கார் கொடுத்தார்?

sharmila coimbatore driver and kamalhasan - 2026

கோவை, பெண் பஸ் டிரைவர் ஷர்மிளா ஒரு சர்ச்சையை ஏற்படுத்திவிட்டு, ஓட்டுநர் பணியிலிருந்து விலகிய நிலையில் சகமல் அவரைப் பாராட்டி, அவருக்கு கார் வழங்கியுள்ளார். இது, ஒரு விளம்பரத்துக்காக கமல் இவ்வாறு செய்வதாக ஒரு தரப்பும், கமல் சத்தமின்றி உதவிகளைச் செய்து வருவதாக மற்றொரு தரப்பும் சமூக வலைதளத்தில் கம்பு சுத்திக் கொண்டிருக்கின்றனர்.

கோவை பகுதியின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என ஷர்மிளா, சில மாதங்களுக்கு முன்பு தனியார் பேருந்து கம்பெனியில் ஓட்டுநராகப் பணியில் சேர்ந்தார். இளம் வயதில் பேருந்தை லாகவமாக இயக்கும் அவரது வீடியோக்கள் ரீல்ஸ்களாகவும், வீடியோக்களாகவும் சமூக வலைதளங்களில் வைரலானது. அதன்பின் பல்வேறு இயக்கத்தினர், சங்கத்தினர், கட்சியினர் அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்து பரிசுகளையும் கொடுத்து பப்ளிசிட்டி தேடிக் கொண்டார்கள். குறிப்பாக, ஷர்மிளா நன்றாகவே மீடியா வெளிச்சத்தைத் தேற்றிக் கொண்டார்.

கோவை பாஜக., எம்.எல்.ஏ., வானதி ஸ்ரீனிவாசனும் ஷர்மிளா இயக்கும் பேருந்தில் பயணித்து பப்ளிசிட்டி மேனியாவில் கரைந்தார். அவரைத் தொடர்ந்து, கனிமொழி எம்.பி.,யும் பயணித்து ஷர்மிளாவை வாழ்த்தினார். கனிமொழி பயணித்த போது பயிற்சி நடத்துநர் ஒருவர் அவரிடமும் உடன் வந்தவர்களிடமும் டிக்கெட் கேட்டதாகவும் இதனை விரும்பாத ஓட்டுநர் ஷர்மிளா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும்,தொடர்ந்து பேருந்து நிறுவன அதிபரிடம் இப்பிரச்னையை எழுப்பிவிட்டு பணியிலிருந்து அவர் விலகியதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், ஷர்மிளாவுக்கு கமல் பண்பாட்டு மையம் சார்பில் கமல்ஹாசன் ரூ.12 லட்சம் மதிப்பிலான புதிய காரை பரிசாக வழங்கி, “ஷர்மிளா ஒரு ஓட்டுநராக மட்டுமே இருந்துவிட வேண்டியவர் அல்ல; பல்லாயிரம் ஷர்மிளாக்களை உருவாக்க வேண்டியவர் என்பதே என் நம்பிக்கை. வாடகைக் கார் ஓட்டும் தொழில் முனைவராக தனது பயணத்தை அவர் மீண்டும் தொடர்வார்” எனக் கூறினார். கமல்ஹாசனின் இந்தச் செயல் சமூகத் தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

சமூகத் தளங்களில் பல்வேறு கருத்துகள் இது குறித்து உலாவருகின்றன. அவற்றில் ஒன்று இது…

coimbatore sharmila driver22 - 2026

#ஷர்மிளா #உண்மை #கதை

கோவையில் கலைஞர் மகள் கனிமொழி பயணம் செய்த பெண் ஓட்டுநர் ஷர்மிளா பேரூந்தில் கனிமொழியுடன் சேர்த்து மொத்தம் 6 பேர்கள் டிக்கெட் எடுக்கவில்லை. பெண் நடத்துநர் அன்னத்தாய் கனிமொழியிடம் டிக்கெட் எடுங்கள் என்று சொன்ன பிறகே 6 பேருக்கு 20ரூ வீதம் 120 ரூபாய்க்கு டிக்கெட் எடுத்து உள்ளனர்.

நான் கெஸ்டாக (விருந்தினராக)அழைத்து வந்தவரிடம் நீ எப்படி டிக்கெட் கேட்கலாம்? என ஓட்டுநர் ஷர்மிளா நடத்துநர் அன்னத்தாயிடம் தகராறு செய்துள்ளார். கெஸ்டாக அழைத்து வந்தவர்களுக்கும் சேர்த்து 120 ரூபாய் கொடுத்து ஷர்மிளாவே டிக்கெட் வாங்கி இருக்கலாம். அப்படி வாங்கி இருந்தால் நடிகர் கமலிடம் இருந்து இந்த 12 லட்சம் ரூபாய் கார் கிடைத்திருக்காது.

பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு கார் பரிசளித்த நடிகர் கமல் அதே பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்த அன்னத்தாயை பாராட்ட மனம் வரவில்லை. காரணம் அந்த பெண் நடத்துனர் ரீல்ஸ் போட்டு தம்பட்டம் அடித்து பிரபலமாகாதவர் என்பதாலோ?!

தனக்கு வேலை செய்ய விருப்பம் இல்லாமல் அப் பணியில் இருந்து தாமே விலகிக் கொண்ட ஷர்மிளா தன்னை அப் பணியில் இருந்து நீக்கி விட்டனர் என்று நாடகம் ஆடி மக்களிடம் அனுதாபம் தேடிக் கொண்டார். தனக்கு பணி வழங்கி கௌரவித்த முதலாளி மீது வீண் பழி சுமத்தினார்.

ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்துவரும் மணிமாறன் அவர்களின் பொதுநல சேவையைப் பாராட்டி ரஜினிகாந்த் அவர்கள் ஆம்புலன்ஸ் பரிசளித்ததை மீடியாக்கள் இவ்வாறு பெரிதுபடுத்தவில்லை.

சங்ககிரியைச் சேர்ந்த செல்வமணி என்ற ஒரு ஏழை பெண்மணி ஒருவர் 19 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர் ரீல்ஸ் வீடியோ போடாததால் அவரை வாழ்த்த யாரும் சொல்லவில்லை.

தமிழ்நாட்டில் முதல் பெண் ஓட்டுநர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த #வசந்த #குமாரி அவர்கள் 22 ஆண்டுகள் அரசு பேருந்தை விபத்து இல்லாமல் ஓட்டி ஓய்வு பெற்றவர். இவரை பாராட்ட வானதி சீனிவாசன், கனிமொழி, கமல் இவர்களுக்கு மனம் வரவில்லை.

சேலத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற இளம்பெண் மேட்டூர் முதல் ஈரோடு வரை தனியார் பேருந்தை இன்றும் ஓட்டி வருகிறார்.

மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலைக்கு வந்து பேருந்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்து #ஷர்மிளா நான் தான் தமிழ்நாட்டிலே முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்று பொய் சொல்லி நடித்து அலைந்தவளை காரி துப்பாமல் கார் பரிசளித்து இருப்பது தவறான செயல்.