Home Blog Page 370

அறமற்ற வழிகளில் கட்டணக் கொள்ளை; அடாவடி வசூல்; இதுதான் அறநிலையத் துறை!

hindumunnani - 2026

பழனி திருக்கோயில் உட்பட அனைத்து பிரசித்தி பெற்ற கோவில்களிலும் கட்டண கொள்ளை அடாவடி வசூலில் ஈடுபடுகிறது அறநிலையத்துறை என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

மெல்ல மெல்ல அழகப்பா! காசு கொடுத்து பழகப்பா! என்பது போல வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல பக்தர்களிடம் காசு பிடுங்குகிறது இந்து சமய அறநிலையத்துறை.

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் எதையும் திராவிட அரசோ இதற்கு முன்னால் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசோ கட்டிக் கொடுக்கவில்லை. அனைத்து கோவில்களும் நமது முன்னோர்களான மாமன்னர்கள் கட்டிய கோவில்கள். அனைத்து கோவில்களும் தமிழக மக்கள் அனைவருக்காகவும் கட்டப்பட்டது. அனைவரும் தரிசனம் செய்து இறைவன் அருள் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு நமது முன்னோர்கள் கட்டிக் கொடுத்த கோவில்கள் ஆகும்.

போகர் சித்தரால் உருவாக்கப்பட்டு சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு வைகாபுரி மன்னனால் பராமரிக்கப்பட்டு வந்த கோவில் தான் பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி சாமி திருக்கோயில், இந்து சமய அறநிலையத்துறை தமிழகத்தில் உள்ள கோவில்களை கைப்பற்றிய போது பழனி கோயிலையும் கைப்பற்றினார்கள். அப்போது இலவசமாக தரிசனம் செய்து வந்தனர் பக்தர்கள்.

மெல்ல மெல்ல ஒரு ரூபாயில் ஆரம்பித்து இன்று கட்டணம் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தி வைத்துள்ளனர். பொது இலவச தரிசனம் கோவிலுக்கு பின்புறமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் கோவில் தரிசன கட்டணம் விசேஷ நாட்களில் ரூ.200 சாதாரண நாட்களில் ரூ.100 என்று கார்ப்பரேட் கம்பெனி போல வசூல் செய்து வருகின்றனர். தற்போதைய நாத்திக திராவிட மாடல் அரசு கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ நாட்களில் மூன்று மடங்கு கட்டணத்தை அதிகப்படுத்தி சுற்றறிக்கை விட்டுள்ளனர். அதாவது கால பூஜை என்று சொல்லக்கூடிய அபிஷேக பூஜை பார்ப்பதற்கு ரூ 1800 லிருந்து திடீரென ரூ5000 ஆக உயர்த்தியுள்ளது. ஒரு நபர் ரூ 300 டிக்கெட்டை ரூ 1000 மாக உயர்த்தி பகல் கொள்ளையில் ஈடுபடுகிறது இந்து சமய அறநிலையத்துறை.

இதனால் பாமர பக்தர்கள் தெய்வத்தின் உடைய அபிஷேகத்தை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. ரூ5000 கட்டி அபிஷேக பூஜை பார்ப்பதற்கு தமிழக மக்கள் அனைவரும் செல்வ செழிப்போடு வாழவில்லை என்பதை இந்த அரசு உணர்ந்து தான் செயல்படுகிறதா? என்கின்ற சந்தேகம் ஏற்படுகிறது. மேலும் தங்க ரதம் இதுவரை ரூ2000 ரூபாயாக இருந்ததை ரூ3000 ரூபாயாக உயர்த்தி உள்ளது.

மொத்தத்தில் இந்து சமய அறநிலையத்துறை ஏழைகளை கோயிலுக்குள்ளே நுழைய விடக்கூடாது என்பதற்கான முன்னோட்டமாக இந்த கட்டண உயர்வு இருக்கிறதா? என்கின்ற சந்தேகம் ஏற்படுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு எந்த வித கருத்து கேட்பும் இல்லாமல் கட்டண உயர்வு கோவிலை வைத்து வருமானம் சம்பாதிக்க கூடிய திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது.

அமைச்சர் சேகர்பாபு அவர்கள் திருப்பதி போல பழனியை மாற்றி காட்டுகிறோம் என்று கூறினார். அவர் திருப்பதியில் வாங்கும் கட்டணத்தை போல உயர்த்துகிறாரே தவிர திருப்பதியில் பக்தர்களுக்கு செய்யக்கூடிய வசதிகளையோ கோவில் பராமரிப்பையோ பழனியில் செய்யவில்லை. வெறும் வாய்ச்சவடால் மட்டும் பேசி தான் திறம்பட செயல்படுவதாக மக்களை ஏமாற்றுகின்றார்.

தமிழக அரசு கட்டண உயர்வை ஏற்படுத்தாமல் அனைவருக்கும் இலவச தரிசன முறையை ஏற்படுத்தி தர இந்து முன்னணி வலியுறுத்துகிறது. இந்து முன்னணியின் வீரத்துறவி ராமகோபாலன் தனது இறுதி காலம் வரை தரிசன கட்டணத்தை ரத்து செய்வதற்காக போராடிக் கொண்டிருந்தார். இந்த விஷயத்தில் அனைத்து மடாதிபதிகளும் ஆன்மீகப் பெரியோர்களும் போராட வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

இந்த நாத்திக அரசு இதுபோன்ற தரிசன கட்டணத்தை அதிகப்படுத்தினால் கண்டிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய பக்தர்கள் கொந்தளித்து சாலையில் இறங்கி போராடக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு உடனடியாக அனைத்து கட்டணங்களையும் ரத்து செய்து அனைத்து பக்தர்களும் இலவசமாக தரிசனம் செய்ய முறைப்படுத்துமாறு இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

தென்காசி- ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை..

IMG 20230622 WA0022 - 2026

தென்காசி அருகே பாவூர்சத்திரம் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது.

பாவூர்சத்திரம் சந்தையில் பக்ரீத் பண்டிகையை யொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பழைய காய்கனி சந்தை வளாகத்தில், வியாழக்கிழமை தோறும் ஆட்டுச் சந்தை நடைபெறும். ஜூன் 29 இல் பக்ரீத் பண்டிகை நடைபெறுவதை யொட்டி வியாழக்கிழமை காலை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில், ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், திப்பணம்பட்டி,நாட்டார்பட்டி, ஆவுடையானூர், கடையம், கல்லூரணி, ராமச்சந்திரபட்டணம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை விற்பனையானது. ஆடுகளை வாங்குவதற்காக கடையநல்லூர்,மேலப்பாளையம், தென்காசி, கடையம், ரவணசமுத்திரம்,பொட்டல்புதூர்,வீராணம், புளியங்குடி, சங்கரன்கோவில் மற்றும் கேரளத்தில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் , பொதுமக்கள் குவிந்திருந்தனர்.

சுமார் ரூ. ஒரு கோடி வரை ஆடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பரபரப்பு..

IMG 20230621 WA0115 - 2026

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சாரைப் பாம்பின் வாயிலிருந்து அணில் குஞ்சை மீட்ட பாம்பு மீட்பாளரும், தாய் அணில் தனது அணில் குஞ்சை மீட்க சுற்றி சுற்றி வரும் காட்சியும் அங்கிருந்த பயணிகளை மெய்சிலிர்க்க வைத்தது.

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பயணிகள் நிற்கும் நிழற் கூரையில் அணில் கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து இருந்தது. இதை தனது நுண்ணுர்வால் அறிந்த சாரைப் பாம்பு கூண்டோடு அணில் குஞ்சை கவ்வி அதை முழுங்க முடியாமல் திணறியது.
நிழற்கூரைக்கு கீழே நின்ற பயணிகள் சாரைப்பாம்பு தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்ததும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சிலர் பாம்பு மிட்பாளர் பரமேஸ்தாஸுக்கும் தகவல் அளித்தனர். உடனே பரமேஸ் தாஸ்
ரயில் நிலையத்திற்கு விரைந்து சென்றார். இதனிடையே செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை ரயில் வரும் நேரம் என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த பாம்பு வேட்பாளர் பரமேஸ் தாஸ் ஏணி மூலம் மேற்கூரையில் தொங்கிக் கொண்டிருந்த சாரைப்பாம்பை மீட்டார். பின்னர் அதன் வாயில் சிக்கியிருந்த அணில் கூண்டை மெதுவாக வெளியே எடுத்தார்.கூண்டுக்குள் அணில் குஞ்சு உயிரோடு பத்திரமாக இருந்தது. உடனே அணில் குஞ்சை அங்கிருந்த நடைமேடையில் விட்டார். அப்போது அணில் குஞ்சு உயிரோடு இருப்பதை அறிந்த தாய் அணில், தனது குஞ்சு அணிலை மீட்க அங்குமிங்கும் சுற்றிச் சுற்றி வந்தது அங்கிருந்த பயணிகளை மெய்சிலிர்க்க வைத்தது.

கிடைத்த இறையை விழுங்க முடியாமல் உயிருக்கு போராடிய பாம்பு, அதன் வாயில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அணில் குஞ்சு. இரண்டையும் மீட்ட சூழலியல் ஆர்வலரும் பாம்பு மீட்பாளருமான பரமேஸ் தாசை அங்கிருந்த பயணிகள் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

மதுரை-விமான நிறுவனங்கள் விரும்பினால் 24 மணி நேர சேவை-வி.கே.சிங் பேட்டி..

images 25 - 2026

விமான நிறுவனங்கள் விரும்பினால் 24 மணி நேர சேவை வழங்கப்படும் என
மத்திய அமைச்சர் வி.கே.சிங் பேட்டியளித்தார்.

நிறுவனங்கள் விரும்பினால்,அவர்களுக்கு தேவை இருக்கும் பட்சத்தில் மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேரசேவை அளிக்க தயாராக உள்ளோம் என மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

சென்னையில் இருந்து மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

மதுரை விமான நிலைய விரிவாக்கம் செய்வதற்கான பணிகள்
நடைபெற்று வருகிறது. விரிவாகப் பகுதிக்குள் நீர்ப் பிடிப்பு பகுதி இருப்பதால் சிறிய பிரச்னை உள்ளது. இதுதொடர்பாக நிர்வாகத்துடன் ஆலோசித்து வருகிறோம். நீர்பிடிப்பு பகுதி இருப்பதால் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைப்பதற்கு முயற்சிக்கிறோம். ஓடுதளம் அமைப்பது, எப்படி உருவாக்குவது என்றும் திட்டமிடப்பட்டு வருகிறது. விமான நிறுவனங்கள் விரும்பினால் மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை அளிக்க தயாராக உள்ளோம். தற்போது கூட சென்னையில் இருந்து வந்தபோது விமானத்தில் முழுமையாக பயணிகள் இல்லை. விமான நிறுவனங்களுக்கு தேவை என்றால் இயங்குவதற்கு தயாராக இருக்கிறோம். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தேவையான அளவில் இருக்கின்றார்கள்.

இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். குறைபாடுகள் இருந்தால் உடனடியாக சரி செய்வோம் என்றார்.

வெளியில் இருந்து வந்த மதங்களால் தான் இங்கே பிரச்னை உருவானது: வள்ளலார் விழாவில் ஆளுநர் ரவி!

tn governor ravi in vallalar vllage - 2026
  • சிறுதெய்வ பெருந்தெய்வ வழிபாடுகள் இருந்த போது இங்கே சண்டையில்லை!
  • பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள்
  • புதிதாக வெளியில் இருந்து வந்த மதங்களால் தான் பிரச்னை உருவானது!
  • பத்தாயிரம் வருட சனாதன தர்மத்தின் உட்சநட்சத்திரம் வள்ளலார்!
  • நானும் வள்ளலாரின் பக்தன் தான்! : ஆளுநர் ரவி

வெளியில் இருந்து பாரதத்துக்குள் வந்த மதங்களால் தான் இங்கே பிரச்சனை உருவானது. சிறு தெய்வ பெரு தெய்வ வழிபாடுகள் இருந்த வரையில் மக்களிடம் எந்த சண்டை சச்சரவும் இருந்ததில்லை, என்று வள்ளலாரின் 200 வது ஆண்டு விழாவில் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி பேசினார்.

வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவருட்பிரகாச வள்ளலார் 200வது ஜெயந்தி விழாவில் தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “உலகின் மிகப்பெரும் ஞானியான வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழாவில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

“சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களைப் படித்தவன். வள்ளலாரின் நூல்களையும் படித்துள்ளேன். அப்போது அது எனக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. பத்தாயிரம் வருடம் சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார். அறியாமை மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக சனாதன தர்மத்தை சிலர் தவறாக நினைத்துள்ளனர்.

“அடிப்படை உண்மை என்பது “ஒரு ஈஸ்வரன், அவன் படைத்தவையான மனிதன், விலங்குகள், செடி கொடி என அனைத்தும் ஒரு குடும்பமே! இங்குள்ள நூற்றுக்கணக்கான மக்கள் உடை, தோற்றம் என வெவ்வேறாக உள்ளன. ஆனால் அனைத்தையும் தாண்டி உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பதுதான் சனாதன தர்மம்.

“சனாதன தர்மத்தை ஏற்றாலும் எதிர்த்தாலும் அவர்களும் சனாதன தர்மத்திற்குள்தான் இருப்பார்கள். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்னும் வள்ளலாரின் வரிகள் சனாதன தர்மத்தின் எதிரொலியே!

“200 ஆண்டுகளுக்கு முன் காரிருளை நீக்க வந்த ஜோதிதான் வள்ளலார். ஆங்கிலேயரின் கடுமையான சுரண்டலுக்கு நமது நாடு உள்ளான போது தோன்றியவர் வள்ளலார். நமது பாரதம் சனாதன தர்மம் நிறைந்தது.

tn governor ravi in vallalar function - 2026

“ஆயிரக்கணக்கான மார்க்கங்கள் இருந்த போதும் புதியதாக வெளிநாட்டிலிருந்து வந்த வழிபாட்டு முறையால் நமது அடையாளம் மறைந்து போனது. இந்தியப் பண்பாட்டில் சிறு தெய்வம், பெரும் தெய்வ வழிபாடுகள் இருந்தன. ஆனால், ஒருவரும் சண்டையிட்டுக் கொண்டதில்லை.

“வெளியில் இருந்து புதியதாக வந்த மதங்கள் என்னுடைய மதம் பெரிது என்று கூறிய போது தான் பிரச்னை உருவானது. பிஷப் போப், கால்டுவெல் போன்றவர்கள் நமது அடையாளத்தை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள்.

ஆன்மீகத்தில் உயர்ந்த நாடு பாரத நாடு. நமது நாட்டின் பிரதமர் பேசுவதை உலகத் தலைவர்கள் கவனித்துக் கொண்டுள்ளனர். இந்தியா வல்லரசாகி உலகத்தின் தலைமையை ஏற்கும். இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்லும் போது யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் வார்த்தையை ஏற்போம்.

வள்ளலார் சனாதனத்தைப் பற்றி தெளிவாகத் தெரிவித்துள்ளார். ஆனால் சில வேண்டுமென்றே தவறாக தெரிவிக்கின்றனர். நானும் வள்ளலாரின் பக்தர் தான் வள்ளலாரின் கொள்கையை உலகம் முழுவதும் பரப்புவோம்” என்று பேசினார் ரவீந்திர நாராயண் ரவி.

முன்னதாக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி புவனகிரியை அடுத்த மருதூர் கிராமத்தில் உள்ள வள்ளலார் அவதரித்த இல்லம், கருங்குழி கிராமத்தில் வள்ளலார் தண்ணீரில் விளக்கு எரித்த இல்லம், மேட்டுக்குப்பம் கிராமத்தில் உள்ள வள்ளலார் சித்தி அடைந்த சித்தி வளாகம், வடலூரில் உள்ள அணையா அடுப்பாக மக்களுக்கு உணவு அளித்து வரும் தர்ம சாலை, சத்திய ஞான சபை உள்ளிட்ட பகுதிகளில் தனது மனைவியுடன் சென்று தரிசித்தார்.

இந்தப் படங்களை ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். அவை…

ஆளுநர் ரவி அவர்கள், மிகச்சிறந்த புனிதரும் கவிஞருமான வள்ளலார் அவர்களின் பிறந்த இடமான மருதூரில் அவருக்கு மரியாதை செலுத்தி உலகளாவிய அன்பு, தொண்டு, கருணை ஆகியவற்றின் நித்திய போதனைகளை நினைவுகூர்ந்தார்.

ஆளுநர் ரவி அவர்கள், வள்ளலார் கருங்குழி கிராமத்தில் வாழ்ந்த இடத்தைப் பார்வையிட்டார்.

ஆளுநர் ரவி அவர்கள், மேட்டுக்குப்பத்தில் உள்ள வள்ளலார் சித்தி அடைந்த இடத்தை பார்வையிட்டார்.

கர்மா: டிவிட்டரில் #GoBackStalin போட்டு பீகார் மக்கள் எதிர்ப்பு! திமுக., அதிர்ச்சி!

gobackstalin - 2026

திராவிடம் பீகார்கள் பற்றி தவறாக பேசியதால் பீகார் மக்கள் சமூக வலைத்தளங்களில் #GoBackStalin என ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இது, முன்னர் திமுக., மோடிக்கு எதிராகச் செய்ததன் பின் விளைவு, இதுதான் கர்மா, அது தன் வேலையைச் செய்கிறது என சிலர் பதிலளித்து வருகின்றனர்.

18 June : பீகாரிகள் தமிழ்நாட்டுக்கு பிழைப்பு தேடி வர்ராங்க ~திமுக எ.வ வேலு 20 June : பீகார் முதல்வர் தமிழ்நாடு பயணம் ரத்து 21 June காலை : ஜூன் 23 பீஹார் செல்கிறார் ஸ்டாலின் 21 June மாலை : #GoBackStalin டிரெண்டிங் செய்யும் பீஹாரிகள் – என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

பீஹார் செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில மக்கள் சமூக வலைதளங்களில் ‘கோ பேக் ஸ்டாலின்’ என்ற ‘ஹேஷ்டேகை’ பிரபலமாக்கி வருகின்றனர். இதனால் திமுக.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், ஆளும் பாஜக.,வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மதசார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம், பீஹார் மாநில தலைநகரான பாட்னாவில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை பாட்னாசெல்கிறார்.

இந்நிலையில், அவரது வருகைக்கு பீஹார் மாநில மக்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். டிவிட்டர் தளத்தில் ‘GoBackStalin’ என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான கொடுமைகள்; பீஹாரைச் சேர்ந்த, ‘யு டியூபர்’ மணீஷ் காஷ்ய்பை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் கைது செய்தது; ஹிந்துக்களுக்கு எதிரான, தி.மு.க., கருத்துக்கள்; ஜாதி அரசியல்; ஹிந்தி மொழி எதிர்ப்பு ஆகியவற்றுக்காக, ஸ்டாலின் வருகையை எதிர்ப்பதாக, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதைக் கண்ட திமுக.,வினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

ஸ்டாலினின் ஹிந்தி எதிர்ப்பு அரசியல், வட மாநிலங்களில் அவருக்கு எதிர்ப்பை உருவாக்கி உள்ளதுடன், பாஜக.,வுக்கு எதிராக உருவாகும் கூட்டணிக்குள்ளும் புகைச்சலை உருவாக்கியுள்ளது. திமுக.,வின் செயல்களால் கடும் பின்விளைவுகளை வட மாநிலங்களில் ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் தொடர்பில்… வாட்ஸ் அப்பின் புது அப்டேட்!

whatsapp update - 2026

‘வாட்ஸாப்’ செயலியில் நமக்கு தொடர்பு பட்டியலில் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் குரல் அழைப்புகளை தவிர்க்கும் வசதியை ‘மெட்டா’ நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த வசதியைப் பெறுவதற்கு, நீங்கள் வாட்ஸாப் செயலியை ‘அப்டேட்’ செய்து கொள்ள வேண்டும்.

‘வாட்ஸாப்’ தகவல் பரிமாற்ற செயலியை உலக, முழுதும் உள்ள கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதை ‘மெட்டா’ நிறுவனம் நிர்வகித்து வருகிறது. மொபைல் போன் வாயிலாக குறுஞ்செய்திகளை பரிமாறுவது போக வெளிநாட்டில் உள்ளவர்களை ‘மொபைல் போன்’ வாயிலாக அழைத்துப் பேசும் குரல் அழைப்பு வசதியையும் வாட்ஸாப் செயலி அளித்து வருகிறது. இதனை பெரும்பாலானவர்களும் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வாய்ஸ் சிக்னல் சரி இல்லாத போதிலும் வாட்ஸ் அப் வாயிலான கால் சரியாக இயங்குவதால், அதையே பயன்படுத்துகின்றனர். இதனால் ஐ.எஸ்.டி., அழைப்புகளுக்கான கட்டணச் செலவு முற்றிலுமாக குறைந்துள்ளது.

எனினும், வாட்ஸ் அப் வாயிலாக சில சிரமங்களையும் பயனர்கள் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் வாட்ஸாப் அழைப்புகளின் எண்ணிக்கை, அவற்றில் பலவும் ஏமாற்றுப் பேர்வழிகளால் செய்யப்படுவது இவற்றால் நொந்து போயுள்ளனர்.

அண்மையில் கூட, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வாட்ஸாப் பயனாளர்களுக்கு வியட்நாம், மலேஷியா, கென்யா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளின் எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக புகார் எழுந்தது. அவ்வாறு வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும், அவை சைபர் குற்றங்களில் ஈடுபடும் கும்பல்களிடம் இருந்து வரும் மோசடி அழைப்புகள் என்றும் மத்திய அரசு எச்சரித்தது. இந்தக் குறைபாட்டை சீர் செய்யும்படி, மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை அடுத்து, சைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ என்ற புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, பயனாளர்களின் வாட்ஸாப் தொடர்பு பட்டியலில் இல்லாத புதிய எண்களில் இருந்து அழைப்பு வரும் போது, அவை நம், ‘மொபைல் போன்’ திரையில் தெரியாது. ‘ரிங் டோன்’ ஒலிக்காது. ஆனால், ‘நோட்டிபிகேஷன்’ பிரிவில், அழைப்பு வந்த தகவல் பதிவாகிவிடும். இதன் வாயிலாக, அழைத்த எண்ணை பயனாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

வாட்ஸாப் செயலியில் உள்ள, ‘செட்டிங்க்ஸ்’ – ‘பிரைவசி’ – ‘கால்ஸ்’ ஆகியவற்றை அடுத்தடுத்து, ‘கிளிக்’ செய்து, ‘சைலன்ஸ் அன்நோன் காலர்ஸ்’ என்ற வசதியை செயல்படுத்தினால், இந்த புதிய வசதியை அனைத்து பயனாளர்களும் பெற முடியும்.


செந்தில் பாலாஜி பற்றி… பகீர் கிளப்பிய செல்லூர் ராஜுவால் பரபரப்பு!

admk protest in madurai - 2026

அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்ஷா போன்றோரின் தற்கொலை போல, செந்தில் பாலாஜியின் நாடகமும் அதற்கான ஒத்திகை தான் என தோன்றுகிறது என, அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது செல்லூர் ராஜு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்க கோரியும் , விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு போன்றவற்றை கண்டித்து, அதிமுக சார்பில் மதுரை கிராஸ் ரோடு பகுதியில் திருமலை நாயக்கர் சிலை அருகில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விடியா திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில்: “தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெறுகிறது, ஆனால் ,அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது, செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் காப்பாற்றி வருகிறார்.

அதிமுக இன்னும் ஒராண்டில் ஆட்சிக்கு வர போகிறது, திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராக உள்ளனர்” என பேசினார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில்:

அதிமுகவில் இருந்து செந்தில் பாலாஜி சென்றார் எனும் தகுதியை இழந்து விட்டார். டாஸ்மாக்கில் ஒரு நாளுக்கு ஒரு கோடி என 2 வருடத்தில் 7,200 கோடி ரூபாயை ஊழல் செய்து உள்ளார் .

செந்தில் பாலாஜி, ஊழல் குறித்து கேட்ட நமக்கே நெஞ்சுவலி வருகிறது, ஊழல் செய்த செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வராதா?, சென்னை மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் முதல்வர் கலைஞர் கோட்டம் திறக்க திருவாரூர் சென்று விட்டார். முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் பெயரை கலைஞர் நாடு என மாற்றுவார், தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் ஸ்டாலின் கோபமாக இருக்கிறார்கள், அதனால் தான் குடியரசு தலைவர், பீகார் முதல்வர் கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்கு வரவில்லை, செந்தில் பாலாஜி வாயை திறந்தால் முதல்வர் வீட்டுக்கு போய் விடுவார்.

செந்தில் பாலாஜியை தொடர்ந்து, அடுத்ததடுத்து ரெய்டுகள் வரும், அதிமுக – பாஜக கூட்டணியை ராஜ்நாத் சிங் சென்னையில் நிகழ்ச்சியில் உறுதி செய்து விட்டார், அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் ஒரு பைசா கூட மின்சார கட்டணம் உயர்த்தவில்லை, திமுக ஆட்சி வீட்டுக்கு போகும் வரை அதிமுகவினர் உறங்க கூடாது” என பேசினார்.

இறுதியாக நிறைவுறையாற்றிய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜு பேசுகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள் படும் துன்பங்கள் தெரிகிறதா? தெரியவில்லையா?, கருணாநிதி காலம் தொட்டு திமுக பொய்யை சொல்லியே ஆட்சிக்கு வந்துள்ளது, கருணாநிதி காலத்தில் நம்முடைய ஜீவாதார உரிமைகளை விட்டு கொடுத்தார், தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது, புதுவிதமாக கஞ்சா மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது, தமிழகத்தில் 3,600 பார்கள் லைசென்ஸ் இல்லாமல் நடந்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வசமாக மாட்டி கொண்டார், செந்தில் பாலாஜி தன்னை பாதுகாத்து கொள்ள நெஞ்சுவலி என ,சொல்லவில்லை,

அண்ணாநகர் ரமேஷ், சாதிக் பாட்ஷா போன்றோரின் தற்கொலை போல, செந்தில்பாலாஜியின் நாடகமும் அதற்கான ஒத்திகை தான் என தோன்றுகிறது. பைபாஸ் சர்ஜரிக்கு 3 நாள் ஓய்வு போதும். ஆனால், இவர்கள் 3 மாதம் ஓய்வு கேட்பதை பார்த்தால் சந்தேகமாக தான் இருக்கிறது, அமைச்சர் பி.டி.ஆர். சொன்ன 30,000 கோடி விவகாரம் தான் இப்படி சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. பி.டி.ஆர். மனசு வைத்தால் ஸ்டாலின் குடும்பமே ஜெயிலுக்கு போவது உறுதி.

அமைச்சர் தங்கம் தென்னரசு காலத்திலாவது மின் கணக்கு மாதம் தோறும் எடுக்கப்படுமா என்றால், அதுவும் நடக்காது என்று அவரே தெரிவித்து விட்டார். இந்த ஆட்சியில் சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது, இந்த ஆட்சியில் கலெக்டருக்கு கூட பாதுகாப்பு இல்லை. அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள்.

இவர்களது ஆட்சியில் எந்த துறையும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை, மாவட்ட ஆட்சியர் தள்ளி விடப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எப்படி பேணி காக்கப்படுகிறது என, தெரிய வருகிறது, அதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் சுதந்திரமாக செயல்பட்டு வந்தார்கள், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும், ஆகஸ்ட் 20 ல் மதுரையில் நடைபெறும் மாநாடு அதிமுகவிற்கு புகழை சேர்க்கும்” என பேசினார்.

உலகுக்கு இந்தியா அளித்த பரிசு யோகா: பிரதமர் மோடி பேச்சு!

modiji doing yoga in us - 2026

ஒட்டு மொத்த உலகிற்கும் இந்தியா அளித்த பரிசு யோகா என ஐ.நா. தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா நிகழ்ச்சிக்கு தலைமையேற்றுப்பேசிய போது, பாரதப் பிரதமர் நேரேந்திர மோடி அழுத்தமாகக் கூறினார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்து, இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு, பிரபல தொழிலதிபர்களுடன் சந்திப்பு என, அடுத்தடுத்து தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

நியூயார்க் நகரின் ஐ.நா. தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகோ நிகழ்ச்சியில் 180 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியபோது…

யோகா என்பது வாழ்க்கையின் நெறிமுறை, இந்தியவின் மற்ற பாரம்பரியத்தை போலவே, யோகா சக்திவாய்ந்தது. காப்புரிமைகள் மற்றும் ராயல்டி ஆகியவை இல்லாதது. உங்கள் வயது, பாலினம் மற்றும் உடற்பயிற்சி நிலைக்கு ஏற்றது. அனைத்து இன மதங்களுக்கும் பொதுவானது. ஒட்டு மொத்த உலகிற்கும் இந்தியா அளித்த பரிசு யோகா. அமைதியான உலகம் தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க யோகாவின் சக்தியைப் பயன்படுத்துவோம் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இலக்கை நனவாக்க ஒன்றிணைவோம்.” என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஐக்கியநாடுகள் சபை தலைவர் கசபா கொரேஷி, நடிகர் ரிச்சர்ட் கெரே, நடிகர் எரிக் ஆடம்ஸ், கிராமி விருது பெற்ற ரிக்கி கெஜ், இந்திய உணவுக்கலை நிபுணர் விகாஸ் கண்ணா, ஜெய் ஷெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஐ.நா .,தலைமையகத்தில் பிரதமர் மோடி பங்குபெற்ற யோகா நிகழ்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் அதிகளவில் பங்கேற்றனர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

செந்தில் பாலாஜியை பதவி நீக்கக் கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்!

DINDUKKAL ADMK PROTEST - 2026

திண்டுக்கல்: தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை, பதவியை நீக்க கோரி, திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது .

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் நத்தம் இரா விசுவநாதன் தலைமை வைத்தார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீ. சீனிவாசன் முன்னிலை வைத்தார் .

கண்டன ஆர்ப்பாட்டத்தை, முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் துவக்கி வைத்து பேசியது:

அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவின் கருவூலமாக செயல்படுகிறார். திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்குலைவு, பெருகிவரும் லஞ்சம் ஆகியவை மக்களை வெகுவாக பாதித்துள்ளது. திமுக தேர்தலின் போது, சொன்ன வாக்குறுதிகளை காக்க தவறி விட்டதாக குற்றம் சாட்டினார் .

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக மாவட்ட நிர்வாகிகள் , முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நிலக்கோட்டை சி. பாலசுப்ரமணியன், ஒன்றிய நகர மற்றும் இதர அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசைக் கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கக் கோரியும், அதிமுக தொண்டர்கள் கோசமிட்டனர். ஆர்ப்பாட்டத்தை ஒட்டி, திண்டுக்கல் நகரில் போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.