திராவிடம் பீகார்கள் பற்றி தவறாக பேசியதால் பீகார் மக்கள் சமூக வலைத்தளங்களில் #GoBackStalin என ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இது, முன்னர் திமுக., மோடிக்கு எதிராகச் செய்ததன் பின் விளைவு, இதுதான் கர்மா, அது தன் வேலையைச் செய்கிறது என சிலர் பதிலளித்து வருகின்றனர்.
18 June : பீகாரிகள் தமிழ்நாட்டுக்கு பிழைப்பு தேடி வர்ராங்க ~திமுக எ.வ வேலு 20 June : பீகார் முதல்வர் தமிழ்நாடு பயணம் ரத்து 21 June காலை : ஜூன் 23 பீஹார் செல்கிறார் ஸ்டாலின் 21 June மாலை : #GoBackStalin டிரெண்டிங் செய்யும் பீஹாரிகள் – என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
பீஹார் செல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில மக்கள் சமூக வலைதளங்களில் ‘கோ பேக் ஸ்டாலின்’ என்ற ‘ஹேஷ்டேகை’ பிரபலமாக்கி வருகின்றனர். இதனால் திமுக.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், ஆளும் பாஜக.,வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மதசார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம், பீஹார் மாநில தலைநகரான பாட்னாவில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை பாட்னாசெல்கிறார்.
இந்நிலையில், அவரது வருகைக்கு பீஹார் மாநில மக்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர். டிவிட்டர் தளத்தில் ‘GoBackStalin’ என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான கொடுமைகள்; பீஹாரைச் சேர்ந்த, ‘யு டியூபர்’ மணீஷ் காஷ்ய்பை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக போலீசார் கைது செய்தது; ஹிந்துக்களுக்கு எதிரான, தி.மு.க., கருத்துக்கள்; ஜாதி அரசியல்; ஹிந்தி மொழி எதிர்ப்பு ஆகியவற்றுக்காக, ஸ்டாலின் வருகையை எதிர்ப்பதாக, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதைக் கண்ட திமுக.,வினர் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.
ஸ்டாலினின் ஹிந்தி எதிர்ப்பு அரசியல், வட மாநிலங்களில் அவருக்கு எதிர்ப்பை உருவாக்கி உள்ளதுடன், பாஜக.,வுக்கு எதிராக உருவாகும் கூட்டணிக்குள்ளும் புகைச்சலை உருவாக்கியுள்ளது. திமுக.,வின் செயல்களால் கடும் பின்விளைவுகளை வட மாநிலங்களில் ஏற்படுத்தும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.