Home Blog Page 42

கந்த சஷ்டி ஸ்பெஷல்; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்!

railway news - 2026
#image_title

தாம்பரம் – திருநெல்வேலி – திருச்செந்தூர் -தாம்பரம் சிறப்பு ரயில் மேலும் நெல்லை திருச்செந்தூர் இடையே முழுவதும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு இயக்கப்படுகிறது . திருச்செந்தூர் செல்ல சிறப்பு ரயில் அறிவித்துள்ளது முருகன் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்றும் பிற பகுதிகளில் இருந்து செல்லக்கூடிய பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

06135/06136 தாம்பரம் –திருநெல்வேலி திருச்செந்தூர் — தாம்பரம் சிறப்பு ரயில்
அக்டோபர் 26 ஞாயிற்றுக்கிழமை அன்று தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது .

அக்டோபர் 27 திங்கட்கிழமை அன்று திருச்செந்தூரிலிருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு மேல்மருவத்தூர் விழுப்புரம் விருதாச்சலம் அரியலூர் ஸ்ரீரங்கம் திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சாத்தூர் கோவில்பட்டி திருநெல்வேலி வழியாக செல்கிறது.

திருச்செந்தூரிலிருந்து புறப்படும் ரயில் கூடுதலாக ஆறுமுகநேரி நாசரேத் ஸ்ரீவைகுண்டம் செய்துங்கநல்லூர் ஆகிய நிலையங்களிலும் நின்று செல்லும்.
காலை நேரத்தில் திருச்செந்தூரில் நடைமேடை சிக்கல் உள்ளதால் இந்த ரயில் திருநெல்வேலியுடன் நிறுத்தப்படுகிறது . திருநெல்வேலியில் இருந்து இணைப்பு ரயில் மூலம் திருச்செந்தூர் செல்லமுடியும் அல்லது பேருந்து மூலமாகவும் செல்ல முடியும்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவிற்கு செல்லக்கூடிய பயணிகள் இந்த ரயிலை பயன்படுத்திக் கொள்ள தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தேவர் ஜயந்தி விழா; பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட தங்கக் கவசம்!

dindukkal srinivasan in devar gold avacham - 2026

மதுரை: சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசிற்கு பரிந்துரைத்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி- மதுரையில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி. அளித்தார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாவிடம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் பசும்பொன்னிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொனில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க
தேவர் சிலைக்கு, அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014 ம் ஆண்டு 3.7 கோடி ரூபாய் மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை அளித்திருந்தார்.

மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கி பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.  அ.தி.மு.க.வின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவின்
போது அவரும், தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனாவும் வங்கிக்கு நேரில் வந்து கையெழுத்திட்டு கவசத்தை பெற்று , குருபூஜை முடிந்த பின்னர் , அதனை மீண்டும் வங்கியில் ஒப்படைப்பது வழக்கம். 

ஓ.பன்னீர்செல்வம்  அ.தி.மு.க.வில் இருந்தும் , பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்ட காரணத்தால் வங்கியில் உள்ள தங்க கவசத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் இருந்து எடுக்க அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்தது. 

அதன் பின்னர், அதிமுகவின் பொருளாளராக உள்ள திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் இருந்து தங்க கவசத்தை பெற்று தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இந்தாண்டு 2025 – ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜயந்தி விழாவை முன்னிட்டும், 63-வது குருபூஜை முன்னிட்டும், இன்று தேவர் தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தேவர் நினைவிட அறங்காவலர் காந்தி மீனா ஆகியோர் மதுரை அண்ணா நகர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கையெப்பமிட்டு, வங்கி லாக்கரில் இருந்து எடுத்தனர்.

பின்னர், அந்த தங்க கவசம் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது , அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன் மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதனை அடுத்து, தங்க கவசத்தை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

எடுத்துச் செல்லப்படும் தங்க கவசம் , தேவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்து அணிவிக்கப்படும். தேவர் ஜெயந்தி விழா 30 ஆம் தேதி முடிந்த பின்னர் வருகின்ற 1- ஆம் தேதி மீண்டும் தங்க கவசம் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் , தேவர் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனால் ஆகியோர் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.

தொடர்ந்து , முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-

சுதந்திரப் போராட்ட வீரர் எம்.எல்.ஏ .எம்பி, ஆக ஒரே நேரத்தில் வெற்றி பெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 118 வது ஜெயந்தி விழா 63வது குருபூஜை விழாவை முன்னிட்டு. அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேவர் நினைவிடத்திற்கு வழங்கிய 13.5 அரை கிலோ தங்க கவசத்தை முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் புறப்பட்டு பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன்பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தியாகத்தை போற்றிட பாரத ரத்னா விருதிற்காக மத்திய அரசிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரைத்துள்ளார் என ,
தெரிவித்துள்ளார்.

கந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு!

tiruuchendur temple secrity meet - 2026

மதுரை: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு) . சந்தோஷ் ஹடிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கந்த சஷ்டி திருவிழா கடந்த 22.10.2025 அன்று யாகசாலை பூஜையுடன் தொடங்கி 27.10.2025 அன்று சூரசம்ஹார நிகழ்வு மற்றும் 28.10.2025 அன்று திருக்கல்யாண நிகழ்வுடன் முடிவடைகிறது.

இந்த திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு) சந்தோஷ் ஹடிமணி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஆல்பர்ட் ஜான் ஆகியோர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகம், சூரசம்காரம் நடைபெறும் கடற்கரை பகுதி, கோவில் சுற்றுவட்டார பகுதி மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்கள் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில்
அதுகுறித்த அறிவிப்பு பலகைகள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பயன்படும் வகையில் அனைத்து இடங்களிலும் வைக்க வேண்டும் எனவும், காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

துணை ஜனாதிபதியாக தமிழகத்துக்கு முதல்முறையாக வருகிறார் சிபிஆர்.,!

cpradhakrishnan wth pm modi - 2026

பதவி ஏற்ற பின் முதல்முறையாக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நான்கு நாள் பயணமாக தமிழகம் வருகை தருகிறார்.

27ம் தேதி முதல் சென்னை திருப்பூர் கோவை நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர் 30ம் தேதி மதுரை வந்து அங்கிருந்து பசும்பொன் சென்று, முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக சி.பி.ராதாகிருஷ்ணன் 4 நாள் பயணமாக வருகிற 27ம் தேதி தமிழகம் வருகிறார்.திருப்பூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த செப்டம்பர் 9ம் தேதி நடைபெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பின்னர் உடனடியாக பதவி பிரமானமும் செய்து வைக்கப்பட்டார். அவர் பதவி ஏற்ற முதல் முறையாக அவர் 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.

வருகிற 27ம் தேதி சென்னைக்கு வரும் அவர், தனது வீட்டில் தங்குகிறார். பின்னர், சென்னையில் அவருக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார். பாஜவினரும் அவருக்கு வரவேற்பு அளிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, 28ம் தேதி கோவை செல்லும் அவர், அங்கும் அவருக்கு நடத்தப்படும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார். மேலும் பேரூர் மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 29ம் தேதி சொந்த ஊரான திருப்பூர் செல்கிறார். அங்கும் அவருக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது.

மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார். பின்னர் 30ம் தேதி மதுரை வந்து அங்கிருந்து பசும்பொன் சென்று, முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி முன்கூட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது

இரிடியம் முதலீட்டில் இரட்டை லாப ஆசை காட்டி கோடிக்கணக்கில் மோசடி; 3 பேர் கைது!

Dhinasari Home page

விருதுநகரில் இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுகவை சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கைது செய்து விசாரணை – இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சேத்தூர் அதிமுக நிர்வாகியும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளரான பட்டுராஜன்(52,) அதிமுக உறுப்பினர் கந்தநிலா (55) மற்றும் ராணி நாச்சியார் ( 53) மற்றும் சிலர் தனியார் அறக்கட்டளை (டிரஸ்ட்) ஆரம்பித்து இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் என்று ஆசை வார்த்தை கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலரிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக பணத்தை இழந்த வெம்பக்கோட்டையை சேர்ந்த பழனியப்பன் மாவட்ட சிபிசிஐடி போலீஸில் புகார் அளித்தார்.

அப்புகாரின் பேரில் விருதுநகர் சிபிசிஐடி போலீஸார் அதிமுக நிர்வாகிகளான பட்டுராஜன், கந்தநிலா, ராணி நாச்சியார் ஆகிய மூவர் மீதும் விருதுநகர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இருடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன் சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவராகவும், சேத்தூர் பேரூராட்சி 8 வது வார்டு கழகச் செயலாளர், செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவில் சொத்து கோவிலுக்கே என்று மீண்டும் உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத் தக்கது

kadeswara subramaniam hindu munnani - 2026

தொடர்ந்து நீதிமன்றத்தில் குட்டுவாங்கும் திராவிட மாடல் திமுக அரசு…
கோவில் சொத்து கோவிலுக்கே என்று மீண்டும் உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிக்கை அறிக்கை.
 
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான கந்தகோட்டம் கோவிலின் நிதியிலிருந்து வணிக வளாகம் கட்டுவதற்கு மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக முழுவதும் எந்த கோவில் நிதியிலிருந்தும் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என்று உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியிடாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை இந்து முன்னணி வரவேற்கிறது.
 
அதே சமயத்தில் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இதுபோன்று தீர்ப்பளிப்பது இது முதல் முறை அல்ல, திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதலாக கோயிலை கபளிகரம் செய்ய எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் தடை விதித்து நாள்தோறும் இது போன்ற தீர்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தான்தோன்றித்தனமாக அசட்டையாக மீண்டும் மீண்டும் கோயில் நிதியை கபளிகரம் செய்யும் முயற்சியை இந்து சமய அறநிலையத்துறையும் தமிழக அரசும் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பது வாடிக்கையாக உள்ளது இவ்வாறான செயல் கடும் கண்டனத்துகுரியது.
 
திருக்கோவில்களுக்குச் சொந்தமான சொத்துகளையும், பக்தர்கள் அன்றாடம் செலுத்தும் காணிக்கைகளையும் திருக்கோவில்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல், வணிக வளாகம், பள்ளி கல்லூரிகள் அமைப்பது என்ற போர்வையில் கோயில் நிதியை அபகரிக்கும் முறையற்ற செயலை தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிதியிலிருந்து வணிக வளாகங்கள் கட்டக் கூடாது என்ற சுற்றறிக்கையை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று இந்து முன்னணி தமிழக அரசினை வலியுறுத்துகிறது. தவறும் பட்சத்தில் பக்தர்களை திரட்டி தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் முறையற்ற செயலை தடுக்க இந்து முன்னணி போராடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருமுடி கட்டி சபரிமலை கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபாடு!

president draupati murmu in sabarimala - 2026

இருமுடி கட்டி சபரிமலை வந்த, தனி தபால் பின் கோடு உள்ள இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல்முறையாக தனக்கென தனி அஞ்சல் பின் கோடு கொண்ட சபரிமலை ஐயப்பனை கண்குளிர தரிசனம் செய்தார்.

அவர் பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய் கிழமை கேரளா வந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள விமானப்படை தொழில்நுட்பப் பகுதிக்கு வந்த குடியரசுத் தலைவரை, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன், மேயர் ஆர்யராஜேந்திரன், அந்தோணி ராஜு எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் டாக்டர் ஏ. ஜெயதிலக் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் ராஜ்பவனுக்குச் சென்று தங்கினார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். இதற்காக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது.ஆனால் மழை உள்ளிட்ட பாதகமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் தளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி லேசாக சரிந்தபடி இருந்ததால் ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி உடனடியாக இறங்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தள்ளி சமமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி இறங்கிவந்தார்.

அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக சபரிமலை கோவிலுக்கு புறப்பட்டார்.

சபரிமலைக்கு செல்லும் முன் ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார். பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

18 படிகளில் பக்தியுடன் ஏறி சென்ற ஜனாதிபதி சபரிமலையில் ஐயப்பனுக்கு இருமுடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்துவிட்டு நெய்யபிஷேகம் செய்து வழிபட்டு மளிகபுறம் கோயிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்பினார் .ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஜனாதிபதி வந்ததால் மாதாந்திர பூஜையின் கடைசி நாளான இன்று பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலில் சனி பிரதோஷம்!

chozhavanthan pralayanada sivan temple sani pradosham - 2026

சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாதசிவாலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்திற்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது

விழாவையொட்டி சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணை நெய் திரவியம் மஞ்சள் பொடி மா பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாளித்தனர் அப்போது பக்தர்கள் “ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா”என மனமுருக வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை எம் .வி. எம் குழும சேர்மன் மணி முத்தையா, கலைவாணி பள்ளி தாளாளர் எம் .மருது பாண்டியன் ,நிர்வாகி எம்.வள்ளிமயில் மற்றும் திருக்கோவில் நிர்வாகத்தினர் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இதில் சோழவந்தான் தென்கரை முள்ளிப்பள்ளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல திருவேடகம் ஏலவார் குழலி சமேத ஏடகநாத சுவாமி திருக்கோவிலிலும் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாதர் கோவில் கீழ மாத்தூர் மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் மற்றும் சோழவந்தான் பகுதி சிவாலயங்களிலும் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது.

மதுரையில்… காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டி!

kanthara rishab shetty - 2026

மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் காந்தாரா கதாநாயகன் ரிஷப் ஷெட்டி, கதாநாயகி சப்தமி கவுடா. ரசிகர்கள் உத்ஸாகம்.

அண்மையில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் காந்தாரா சாப்டர் 1. சுமார் ரூ.700 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது இந்தப் படம்.

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி இந்நிலையில், ராமேஸ்வரம் செல்வதற்காக தனி விமானம் மூலம் மதுரை வந்திருந்தார். பின்னர் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்குச் செல்கிறார் .

மதுரை விமான நிலையம் வந்த ரிஷப் ஷெட்டியுடன் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவருடன் காந்தாரா திரைப்படத்தின் கதாநாயகி சப்தமி கவுடாவும் செல்கிறார்.

தூய்மைப் பணியாளர்க்கு தாமோதர்தாஸ் அறக்கட்டளை புத்தாடைகள் வழங்கல்!

sengottai damodardass trust free distribution - 2026

செங்கோட்டையில் தாமோதர் தாஸ் சமூக நல அறக்கட்டளை சார்பில் துாய்மை பணியாளா்களுக்கு எம்எல்ஏ.கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா புத்தாடைகள் வழங்கினார்.

செங்கோட்டை வண்டிமலச்சியம்மன் கோவில் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்து தாமோதர தாஸ் சமூகநல அறக்கட்டளை சார்பில் அறக்கட்டளை நிறுவனத்தலைவரும் 14வது வார்டு நகர்மன்ற உறுப்பினருமான பொன்னுலிங்கம்(எ)சுதன் ஏற்பாட்டில் செங்கோட்டை நகராட்சி துாய்மை பணியாளா்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை உறுப்பினா் ஜமீன்முத்தக்குமார் தலைமைதாங்கினார். பொருளாளா் லஷ்மணன் முன்னிலைவகித்தார். அறக்கட்டளை உறுப்பினா் விஷ்ணுகுமார் அனைவரையும் வரவேற்றார். செயலாளா் எல்.எம்.முரளி வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினா் கிருஷ்ணமுரளி(எ) குட்டியப்பா கலந்து கொண்டு துாய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் பொன்னாடை அணிவித்து புத்தாடைகள் இனிப்புகள் வழங்கி வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சியில் அதிமுக நகரச்செயலாளா் கணேசன், பாஜக நகரத்தலைவா் முத்துமாரியப்பன், தென்காசி பாஜக நகரத்தலைவா் சங்கரசுப்பிரமணியன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் ராஜ்குமார் தென்காசி நகரச் செயலாளர் நாராயணன் தென்காசி நகர பொருளாளர் விஸ்வநாதன் மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகேஸ்வரன் செங்கோட்டை ஒன்றியத்தலைவா் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் ஸ்ரீனிவாசன், ஓபிசி அணி மாவட்டத்தலைவா் மாரியப்பன், பாஜக நகர்மன்ற உறுப்பினா்கள் செண்பகராஜன், வேம்புராஜ், ராம்குமார் விகே புதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பரசுராமன் செங்கோட்டை நகர பாஜக துணைத்தலைவா் கேகே.சுந்தரம்
அறக்கட்டளை உறுப்பினா்கள் முத்துகிருஷ்ணன், வீராயாதவ், கண்ணபிரான், சிவா முன்னாள் நகர இளைஞரணி நிர்வாகி ஸ்ரீராம்கார்த்தி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் சமூக ஆர்வலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.