Home Blog Page 47

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசிய முழுமையான உரை!

pm modi with rss chief mohan bhagawat - 2026

ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசிய முழுமையான உரை…

தமிழில் / குரல்: ராமஸ்வாமி சுதர்ஸன்

மேடையில் வீற்றிருக்கின்ற, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் சர்கார்யவாஹ், மதிப்பிற்குரிய தத்தாத்ரேய ஹோஸ்போலே ஜி, மத்திய அமைச்சர் திரு கஜேந்திர ஷேகாவத் ஜி, தில்லியின் பிரபலமான முதலமைச்சர் ரேகா குப்தா ஜி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அனைத்து ஸ்வயம்சேவகர்களே, அவையில் இன்னபிற சான்றோர் பெருமக்களே, தாய்மார்களே பெரியோர்களே. நேற்று நமது மூத்த ஸ்வயம்சேவகர், மற்றும் சங்கத்தினுடைய, அனைத்துத் திருப்புமுனைகளிலும், ஏதோ ஒருவகையில் அவருடைய பங்களிப்பு இருந்திருக்கிறது.

இப்படிப்பட்ட, விஜய்குமார் மல்ஹோத்ரா அவர்களை நாம் இழந்திருக்கிறோம். நான் முதன்மையாக, அவர்களுக்கு மரியாதைகலந்த, சிரத்தாஞ்சலிகளை அளிக்கிறேன்.

நண்பர்களே, இன்று, மஹநவமித் திருநாள். இன்று, தேவி சித்திதாத்ரிக்கு உரித்தான நாளாகும். நான் நாட்டுமக்கள் அனைவருக்கும், நவராத்திரியின் பொருட்டு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாளை, விஜயதசமி மிகப்புனிதமான நாள். அநியாயத்தின் மீதான, நியாயத்தின் வெற்றி. அசத்தியத்தின் மீது, சத்தியத்தின் வெற்றி. இருளின் மீது, ஒளியின் வெற்றி. விஜயதசமி, பாரதநாட்டுக் கலாச்சாரத்தின், இந்த சிந்தனை மற்றும் நம்பிக்கையினுடைய, காலத்தை வெல்லும் அறைகூவல். இத்தகைய மகத்தான வேளையின் போது, நூறு ஆண்டுகள் முன்பாக, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நிறுவுதல், இது ஏதோ யதேர்ச்சையான விஷயமல்ல. இது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும், அந்தப் பாரம்பரியத்தின், மீள் புத்தாக்கமாகும்.

இதிலே, தேசிய விழிப்புணர்வு, அந்தந்த சமயத்திலே, அந்த காலகட்டத்துடைய, சவால்களை எதிர்கொள்ளும் வகையிலே, புதிய புதிய 6வடிவங்களிலே வெளிப்படுகிறது. இந்தக் காலகட்டத்திலே, சங்கம், அந்த அனாதியான தேசிய விழிப்புணர்வை, புண்ணியமான வடிவமாகும்.

நண்பர்களே, இது நம் தலைமுறையைச் சேர்ந்த ஸ்வயம்சேவகர்களுடைய, சௌபாக்கியமாகும். அதாவது எங்களுக்கு, சங்கத்தின் நூற்றாண்டு என்பது போன்ற, மகத்தான வேளையை, பார்க்க முடிந்திருக்கிறது. நான் இந்த சந்தர்ப்பத்திலே, தேச சேவை என்ற உறுதிப்பாட்டிற்கு அர்ப்பணித்த, கோடானுகோடி ஸ்வயம்சேவகர்களுக்கு, நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன், மனதார வாழ்த்துகிறேன். நான் சங்கத்தின் நிறுவனரும், நம்மனைவருக்கும் ஆதர்ஸமானவரும், பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஹெட்கேவரார் அவர்களுடைய சரணாரவிந்தங்களிலே, நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.

நண்பர்களே, சங்கத்தின் இந்த நூறாண்டுக்கால கௌரவமான பயணத்தின் நினைவாக, இன்று, பாரத அரசாங்கமானது, சிறப்பு அஞ்சல்தலை, மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டது. 100 ரூபாய் நாணயத்திலே, ஒருபுறத்திலே, தேசிய சின்னம் இருக்கிறது. இன்னொரு புறத்திலே, சிங்கத்தோடு கூட, வரத ஹஸ்தத்தோடு பாரதமாதாவின் சிறப்பான தோற்றம் உள்ளது. மேலும், சமர்ப்பண உணர்வோடு அவளை வணங்கும் ஸ்வயம்சேவகர்களைக் காண முடியும். பாரதநாட்டு நாணயத்திலே, பாரதமாதாவின் திருவுருவம், ஒருவேளை, சுதந்திர பாரதத்தின் வரலாற்றிலே, முதன்முறையாக நடந்தேறியிருக்கிறது.

இந்த நாணயத்தின் மேலே, சங்கத்தின் ஞானவாக்கியமும் பொறிக்கப் பட்டிருக்கிறது. ராஷ்ட்ராய ஸ்வாஹா, இதம் ராஷ்ட்ராய, இதம் ந மம.

நண்பர்களே, இன்று வெளியிடப்பட்டிருக்கும் சிற்ப்பு அஞ்சல்தலை, அதற்குமே கூட ஒரு சிறப்பம்சம் இருக்கின்றது. நாமனைவரும் நன்கறிவோம், ஜனவரி 26 அன்று, குடியரசுத்திருநாளின் அணிவகுப்பு எத்தனை முக்கியமானது என்று. 1963யிலே நைண்டீன் சிக்ஸ்டி த்ரீயிலே, ஆர்எஸ்எஸ்ஸின் ஸ்வயம்சேவகர்களும் கூட, ஜனவரி 26ஆம் தேதி தேசிய அணிவகுப்பிலே கலந்து கொண்டார்கள். மேலும் அவர்கள், அழகு மிடுக்கு பெருமிதத்தோடு, தேசபக்தியின் மெட்டுக்கேற்ப பீடுநடை போட்டார்கள். இந்தத் தபால்தலையிலே, அந்த வரலாற்றுப்பூர்வமான கணத்தின் நினைவு அடங்கியிருக்கிறது.

நண்பர்களே, சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள், இவர்கள் இடைவிடாமல் தேச சேவையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். சமூகத்தை சக்தியுடையதாக ஆக்கி வருகின்றார்கள். இதன் காட்சியும் கூட, அந்த நினைவு தபால்தலையிலே இருக்கின்றது. நான், இந்த நினைவு நாணயம், மேலும் தபால்தலையின் பொருட்டு, நாட்டுமக்களுக்கு, பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

நண்பர்களே, எந்த வகையிலே, பர்ந்துபட்ட நதிக்கரையோரம், மனித நாகரீகம் தழைக்கின்றதோ, அதே போல, சங்கத்தின் கரைகளிலும் கூட, அதன் பிரதான ஓட்டத்திலும் கூட, பல நூற்றுக்கணக்கான உயிர்கள் அதிலே தழைத்தோங்கி இருக்கின்றன. எப்படி ஒரு நதி, எந்தப் பாதையில் பெருகியோடுகிறதோ, அந்தப் பகுதியை அந்த நிலத்தை, அங்கிருக்கும் கிராமங்களை, சுஜலாம் சுஃபலாம் என்று தனது நன்னீரால், வளமையாக்குகிறதோ, அதே போல, சங்கமானது இந்த தேசத்தின் அனைத்துத் துறைகளிலும், சமூகத்தின் அனைத்துக் கோணங்களையும் தொட்டிருக்கிறது. இது, இடையறாத தவத்தின் பலனாகும், இது தேசிய நீரோட்டத்தின் பலமாகும்.

நண்பர்களே, எந்த வகையிலே, ஒரு நதி பல கிளைகளாகத் தன்னை வெளிப்படுத்துகிறதோ, அனைத்துக் கிளைகளூம் அந்தந்தப் பகுதிகளை வளமடையச் செய்கின்றதோ, சங்கத்தின் பயணமும் கூட இதைப் போன்றதே தான். சங்கத்தின் பல்வேறு அமைப்புகளும் கூட, வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளோடும் இணைந்து, தேச சேவையில் ஈடுபட்டு வருகின்றன. கல்வியாகட்டும் விவசாயமாகட்டும் சமூக நலனாகட்டும், பழங்குடிகள் நலனாகட்டும் மகளிர் அதிகாரமளிப்பாகட்டும், கலை மற்றும் அறிவியல் துறையாகட்டும், நம்முடைய அனைத்து தொழிலாள சகோதர சகோதரிகளாகட்டும், சமூகத்தின் இப்படிப்பட்ட அனைத்துத் துறைகளிலும், சங்கம், தொடர்ந்து பணியாற்றி வருகின்றது. மேலும் இந்தப் பயணத்துக்கும் கூட ஒரு சிறப்பு விஷயம் இருக்கின்றது.

சங்கம் என்ற பெரும் நீரோட்டம், அநேக கிளைகளாக என்னவோ ஆனது, பல்கிப் பெருகித் தழைத்தது, ஆனால் இவற்றுக்கிடையே, முரண்பாடோ பிரிவினையோ பிறந்ததில்லை என்றுமே ஏற்பட்டதில்லை. ஏனென்றால், ஒவ்வொரு கிளையினுடைய, பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் அனைத்து அமைப்புக்களின் நோக்கம் ஒன்று தான், உணர்வு ஒன்று தான், தேசத்திற்கே முதன்மை. Nation First.

நண்பர்களே, தொடங்கப்பட்ட நாள் முதற்கொண்டே, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம், விசாலமான நோக்கத்தைத் தாங்கிப் பயணித்தது. அந்த நோக்கம் என்னவென்றால், தேச நிர்மாணம். இந்த நோக்கத்தை நிறைவேற்ற, சங்கம் தேர்வு செய்த பாதை என்னவென்றால், அது தான், தனிநபர் உருவாக்கத்திலிருந்து தேசத்தின் உருவாக்கம். மேலும் இந்தப் பாதையில் இடைவிடாமல் பயணிக்க, தேவையான செயல்பாட்டுமுறை, என்னவென்றால், என்றும் விதிகளின்படி செயல்படும் ஷாகா.

நண்பர்களே, பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஹெட்கேவார் நன்கறிவார், அதாவது நமது தேசம் எப்போது சக்தியுடையதாய் ஆகுமென்றால், ஒவ்வொரு குடிமகனுக்குள்ளேயும், தேசத்தின் பொருட்டு கடமையுணர்வு விழிப்படையும் போது தான் என்பதை. நம்முடைய தேசம் எப்போது மேலெழும்பும் என்றால், நாட்டின் குடிமக்கள் அனைவரும், பாரதத்திற்காக வாழ்வதைக் கற்கும் போது தான். ஆகையினாலே, அவர் தனிமனித உருவாக்கலில் நிரந்தர கவனம் செலுத்தினார். அதோடு அவருடைய வழிமுறையும் கூட, மிக வித்தியாசமாக இருந்தது. பரம்பூஜ்ய டாக்டர் ஹெட்கேவார் அவர்கள்…. இது பற்றி நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம், அவர் கூறுவதுண்டு எப்படி இருக்கிறதோ, அப்படியே ஏற்றுக் கொள். எப்படித் தேவையோ, அப்படி உருவாக்கிவிடு. மக்களைத் திரட்டுவதில் டாக்டர் ஐயாவின் இந்த வழிமுறை.

இதை எளிமையாகப் புரிந்து கொள்ளவேன்றுமென்றால் குயவனை நினைத்துக் கொள்ளுங்கள். எப்படி குயவன், செங்கல்லைச் சுடுகிறார்!! அவர் பூமியின் சாதாரண மண்ணிலிருந்து பணியைத் தொடங்குகிறார். குயவன் மண்ணைக் கொண்டு வருகிறார், அதில் உழைக்கிறார், அதற்கு உருவம் கொடுக்கிறார் கொடுத்து, சுடப் பண்ணுகிறார். தானும் வெப்பத்தில் உழல்கிறார் செங்கல்லையும் சுடுகிறார். பிறகு அந்தச் செங்கற்களை ஒன்று திரட்டி, இவற்றைக் கொண்டு பெரும் கட்டிடத்தை எழுப்புகிறார்.

இதைப் போன்று தான் டாக்டர் ஐயா, மிகவும் எளிமையான மனிதர்களைத் தேர்வு செய்தார். பிறகு அவர்களுக்குக் கற்பித்தார் தொலைநோக்கை அளித்தார் உருவாக்கினார். இந்த வகையிலே, அவர் தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஸ்வயம்சேவகர்களை உருவாக்கினார். ஆகையினால் தான் சங்கம் பற்றி ஒன்று கூறுவதுண்டு. அதாவது இதிலே, சாதாரணமானவர்கள் இணைந்து, அசாதாரணமான ஆச்சரியமான பணிகளை சாதிக்கின்றார்கள்.

நண்பர்களே, தனிமனிதனை உருவாக்கும் இந்த அழகான செயல்முறை, இதை இன்றும் கூட, சங்கத்தின் ஷாகாவிலே நம்மாலே காண முடியும். சங்க ஷாகாவின் மைதானம், எப்படிப்பட்ட உத்வேக பூமி என்றால், அங்கிருந்து, நானிலிருந்து நாம் என்பதற்கான பயணம் தொடங்கி விடுகிறது. சங்கத்தின் ஷாகாக்கள், தனிமனித உருவாக்கலுக்கான யாக குண்டங்கள். இந்த ஷாகாக்களிலே, தனிமனிதனுடைய, உடல்ரீதியான, மனரீதியான மற்றும் சமூகரீதியான வளர்ச்சி ஏற்படுகிறது. சங்கத்தின் சுயம்சேவகர்களுடைய மனங்களிலே, தேச சேவைக்கான உணர்வும் உத்வேகமும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுயாய் அதிகரிக்கிறது. அவர்களுக்கெல்லாம், தியாகமும் அர்ப்பணிப்பும், இயல்பான ஒன்றாக ஆகி விடுகிறது. தற்புகழுக்காக போட்டிமனப்பான்மை, முடிவுக்கு வந்து விடுகிறது. மேலும் அவர்களுக்கு, சமூக தீர்மானம், மற்றும் சமூகப் பணியின், நற்பண்பு கிடைக்கிறது.

தேச நிர்மாணம் என்ற மகத்தான நோக்கம், தனிமனித உருவாக்கம் என்ற தெளிவான சிந்தனை, மற்றும் ஷாகா போன்ற, எளிய, உயிர்ப்புடைய, செயல்பாடு. இதுதான் சங்கத்தினுடைய, 100 ஆண்டுக்கால பயணத்தின் ஆதாரமாக ஆகியிருக்கிறது. இந்தத் தூண்களின் பலத்தால் எழுப்பப்பட்ட சங்கமானது, இலட்சக்கணக்கான ஸ்வயம்சேவகர்களை உருவாக்கியிருக்கிறது.

இவர்கள் பல்வேறு துறைகளிலே, தேசத்திற்கு, தங்களுடைய சிறப்பானவற்றை அளித்து வருகிறார்கள். தேசத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகத் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அர்ப்பணிப்பு உணர்வோடு, சேவை வாயிலாக, மற்றும் தேச உயர்வுக்கான உழைப்பு வாயிலாக செய்கிறார்கள்.

நண்பர்களே, சங்கம் எப்போது செயல்படத் தொடங்கியதோ, சங்கத்திற்காக, தேசத்தின் முதன்மை மட்டுமே, அதன் முதன்மையாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையிலே, எந்தக்காலகட்டத்திலே தேசத்தின் முன்பாக சவால்கள் வந்த போதெல்லாம், சங்கமானது, அந்தக்காலகட்டத்திலே தன்னைத் தானே, அர்ப்பணித்தது, சங்கம் அதை எதிர்கொண்டது. சுதந்திரப் போராட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பெருமதிப்பிற்குரிய டாக்டர் ஹெட்கேவார் உள்ளிட்ட பல தொண்டர்கள் சுதந்திரப் போராட்ட வேள்வியில் கலந்து கொண்டார்கள்.

டாக்டர் ஐயா பலமுறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சுதந்திரப் போராட்டத்தின் எண்ணற்ற வீரர்களுக்கு, சங்கம் ஆதரவு அளித்து வந்தது. அவர்களோடு இணைந்து, தோளோடு தோள் சேர்த்து பணியாற்றியது.

1942இலே, nineteen forty twoவிலே, அங்கே சிமூரிலே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டம் வெடித்த போது, அதிலே, அநேக ஸ்வயம்சேவகர்கள், ஆங்கிலேயர்களின் தீவிரமான அடக்குமுறைக்கு இரையானார்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் கூட, ஹைதராபாதின் நிஜாம் கட்டவிழ்த்த கொடுமைகளுக்கு எதிரான போராட்டம் தொடங்கி, கோவாவின் சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து தாத்ரா நகர் ஹவேலியின் விடுதலை வரை, சங்கம் பல தியாகங்களைப் புரிந்திருக்கிறது. ஆனால் உணர்வு, ஒன்றாகவே இருந்திருக்கிறது. தேசத்திற்கே முதன்மை. இலக்கு ஒன்றாகவே இருந்திருக்கிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம். நண்பர்களே, தேச சாதனையின் இந்தப் பயணத்திலே, சங்கத்தின் மீது தாக்குதல்கள், ஏதும் நடக்காமல் எல்லாம் இருக்கவில்லை.

சங்கத்திற்கு எதிராக சூழ்ச்சிகள் பின்னப்பட்டன. நாமே கவனித்திருக்கிறோம், எப்படி சுதந்திரத்திற்குப் பிறகு சங்கத்திற்கு, முடிவுகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை. பிரதான நீரோட்டத்தில் வராமல் இருக்கச் செய்யவும், அப்படி அது வருவதைத் தடுக்கவும், எண்ணில்லாத சூழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. பரமபூஜனீய குருஜியை, பொய் வழக்குகளில் சிக்க வைத்தார்கள். அவரை சிறைகளில் கூட அடைத்தார்கள்.

ஆனால், பூஜிய குருஜி சிறையிலிருந்து வெளிவந்தவுடன், அவர் மிக இயல்பாகவே கூறினார். ஒருவேளை, வரலாற்றின் ஏடுகளிலே இந்த உணர்வு, இந்தச் சொற்கள், மிகப்பெரிய கருத்தூக்கம் அளிப்பவை. அப்போது பெருமதிப்பிற்குரிய குருஜி மிக இயல்பாகக் கூறினார். சில வேளைகளிலே, நாக்கு பற்களுக்கு இடையே கடிக்கப்பட்டு விடுகிறது, நசுக்கப்பட்டும் விடுகிறது, ஆனால் நாம், பற்களை இதற்காக உடைப்பதில்லை. ஏனென்றால், பற்களும் நம்முடையவை தான், நாக்கும் நம்முடையது தான்.

உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? யார் சிறையில் துன்புறுத்தப்பட்டாரோ, யார்மீது பலவகையான கொடுமைகள் இழைக்கப்பட்டதோ, அதன் பிறகு கூட, பெருமதிப்பிற்குரிய குருஜியின் மனதிலே எந்தக் காழ்ப்பும் இருக்கவில்லை. எந்த வெறுப்பும் இருக்கவில்லை. இதுதான் பரமபூஜ்ய குருஜியுடைய, ரிஷியைப் போன்ற ஆளுமையாகும். அவருடைய இந்த சிந்தனைத் தெளிவு தான், சங்கத்தின் ஒவ்வொரு ஸ்வயம்சேவகரின் வாழ்க்கையின் வழிகாட்டியாக அமைந்தது. இது தான் சமூகத்தின்பால், ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வு நற்பண்புகளுக்கு வலுசேர்த்தது.

அந்த வகையிலே, சங்கத்தின் மீது தடைகள் விதிக்கப்பட்டாலும், சூழ்ச்சிகள் பின்னப்பட்டாலும், பொய் வழக்குகள் போடப்பட்டாலும், சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள், எப்போதுமே, காழ்ப்புணர்வுக்கு இடமே அளித்ததில்லை. ஏனென்றால் அவர்கள் அறிவார்கள், நாம் சமூகத்திலிருந்து வேறுபட்டவர்கள் அல்ல என்பதை.

சமுதாயம், நம்மனைவரிடமிருந்து தான் உருவாகி இருக்கிறது. எது சிறப்பாக இருக்கிறதோ, அதுவும் நம்முடையது தான். எது சிறப்புக் குறைவானதோ, அதுவும் நம்முடையது தான்.

நண்பர்களே, மேலும் ஒரு விஷயம். யார் காழ்ப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ, அதுதான் ஒவ்வொரு ஸ்வயம்சேவகருடைய, ஜனநாயகம் மற்றும் அரசியல் சட்டத்தின்பால் இருக்கக்கூடிய அசையாத நம்பிக்கை. தேசத்தின் மீது அவசரநிலை திணிக்கப்பட்ட போது, இந்த நம்பிக்கை தான் ஒவ்வொரு ஸ்வயம்சேவகருக்கும் பலத்தை அளித்தது, போராடுவதற்கான நெஞ்சுரத்தை அவர்களுக்கு அளித்தது. இந்த இரண்டு நற்பண்புகள் தான், அதாவது சமூகத்தின்பால் ஒற்றுமை, மற்றும் அரசியல்சட்ட அமைப்புகளின்பால் கொண்ட நம்பிக்கை தான், சங்கத்தின் ஸ்வயம்சேவகர்களுக்கு, அனைத்துச் சங்கடங்களின் போதும், நிலையான சித்தம் உடையவர்களாக ஆக்கியது. சமுதாயத்தின்பால், புரிந்துணர்வு உடையவர்களாக உருவாக்கியது. அந்த வகையிலே, சமூகத்தின் பல தாக்குதல்களையெல்லாம் எதிர்கொண்டு, சங்கம் இன்றுவரை, விசாலமான ஆலமரத்தைப் போல, உறுதியாக நிற்கின்றது.

தேசம் மற்றும் சமூக சேவையிலே, தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இப்போது இங்கே, நமது ஒரு ஸ்வயம்சேவகர், மிக அழகாக ஒரு பாடலைப் பாடினார்.

பூஜ்யத்திலிருந்து ஒரு நூறாண்டானது. பூஜ்யத்திலிருந்து, ஒரு நூறாண்டு வரை. பண்பே மன உணர்வாய், பாரத அன்னைக்கு வெற்றி உண்டாகட்டும். மனதிலே உத்வேகம் உண்டாகட்டும். பயிற்சியை மேற்கொள்கிறோம். தாய்நாட்டினை வழிபடுகிறோம்.

மேலும் அந்த பாடலின் செய்தி என்ன? நாங்கள், தேசத்தையே தெய்வமாகப் போற்றுகிறோம். மேலும் நாங்கள், தேகத்தையே தீபமாக ஆக்கும் பாடத்தைக் கற்றிருக்கிறோம். உண்மையிலேயே, இது அற்புதமானது. நண்பர்களே, தொடக்கம்முதலே சங்கம், தேசப்பற்று… மற்றும் சேவை என்பதன் பொருளாக இருந்தது. நாடு துண்டாடப்பட்ட துயரம், இலட்சோபலட்சம் குடும்பங்களை வீடில்லாதவர்களாக ஆக்கியது. அப்போது ஸ்வயம்சேவகர்கள், அகதிகளுக்கு சேவை புரிந்தார்கள். சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் தங்களுடைய குறைவான ஆதாரங்களைக் கொண்டு, அனைவருக்கும் முன்னதாய் இருந்தார்கள். இது வெறும் நிவாரணம் அல்ல, இது, தேசத்தின் ஆன்மாவினை, ஆற்றுப்படுத்தும் பணியாகும்.

நண்பர்களே, 1956லே குஜராத்தின் கட்சின் அஞ்ஜாரிலே, மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அழிவு எந்த அளவுக்கு இருந்தது என்றால், நாலாபுறங்களிலும் பெருநாசமே காட்சியளித்தது. அந்த வேளையிலும் கூட, சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் நிவாரணம் மற்றும் மீட்பில் ஈடுபட்டார்கள்.

அப்போது, பெருமதிப்பிற்குரிய குருஜி கூட, குஜராத்தின் மூத்த சங்க பிரச்சாரகரான…. வகீல் ஐயாவிடம், அவர் அந்த வேளையில் குஜராத்திலே பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அவர் என்ன எழுதினார் என்றால், மற்ற மனிதர்களுடைய துக்கத்தை அகற்றுவதற்கு, சுயநலமற்ற தன்மையோடு தாமே அந்த கஷ்டங்களைச் சுமப்பது, ஒரு உத்தமமான இதயத்தின் அடையாளமாகும்.

நண்பர்களே, தாமே கஷ்டத்தை மேற்கொண்டு மற்றவர்களின் துயரத்தைப் போக்குதல், இதுவே ஒவ்வொரு ஸ்வயம்சேவகரின் அடையாளமாகும். நினைத்துப் பாருங்கள், 1962 யுத்தகாலத்தை. சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் இரவுபகலாக விழித்திருந்து, இராணுவத்திற்கு உதவி புரிந்தார்கள். அவர்களை ஊக்கப்படுத்தினார்கள். எல்லைப்புற கிராமங்களுக்கு உதவிகளைக் கொண்டு சேர்த்தார்கள். ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி ஒன்றிலே, இலட்சோபலட்சம் அகதிகள் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து பாரதம் வந்தார்கள். அவர்களிடம் வீடில்லை ஆதாரங்களும் இல்லை. அந்தக் கடினமான வேளையிலே, ஸ்வயம்சேவகர்கள் அவர்களுக்கு உணவளித்தார்கள் ஆதரவளித்தார்கள் மருத்துவத் தேவைகளை கவனித்துக் கொண்டார்கள். அவர்களின் கண்ணீரைத் துடைத்தார்கள். அவர்களின் துயரத்தைப் போக்கினார்கள்.

நண்பர்களே, ஒருமுறை, நாமெல்லோரும் நன்கறிவோம். 1984. சீக்கியர்களுக்கு எதிராக, படுகொலை கட்டவிழ்க்கப்பட்டது. அநேக சீக்கிய குடும்பங்கள், ஸ்வயம்சேவகர்களின் வீடுகளிலே அடைக்கலம் ஆனார்கள். இதுவே ஸ்வயம்சேவகர்களின் இயல்பாக இருந்து வந்திருக்கிறது. நண்பர்களே, ஒருமுறை, முன்னாள் குடியரசுத் தலைவர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், சித்ரகூட்டிற்குச் சென்றார்கள். அங்கே அவர், நானாஜி தேஷ்முக் அவர்களின், ஆசிரமத்திலே நடைபெற்றுவந்த பணிகளைக் கண்டார்கள். அங்கே சேவைப்பணிகளைப் பார்த்தார்கள். அவர் ஆச்சரியப்பட்டுப் போனார்.

அதே போல முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணவ் முகர்ஜியும் நாகபுரிக்குச் சென்ற போது, அவரும்கூட சங்கத்தின் ஒழுங்குமுறை சங்கத்தின் எளிமை, இவற்றைப் பார்த்து பரவசப்பட்டார். நண்பர்களே இன்றும்கூட நீங்கள் கவனித்தால், பஞ்சாபின் பெருவெள்ளம், ஹிமாச்சல் மற்றும் உத்தராக்கண்டின் பேரிடர், கேரளத்தின் வயநாட்டின் பெருந்துயரம், அனைத்து இடங்களிலும், ஸ்வயம்சேவகர்கள் அனைவருக்கும் முன்பாகச் செல்வோரில் முன்னணியில் இருக்கிறார்கள்.

கொரோனா காலத்திலே உலகம் முழுவதும், சங்கத்தின் வல்லமை மற்றும் சேவையுணர்வை நேரடியாகவே கண்டு உணர்ந்தது.

நண்பர்களே, தனது இந்த நூறாண்டுக்காலப் பயணத்திலே, சங்கத்தின் ஒரு பெரும்பணி என்று சொன்னால், அது சமுதாயத்தின் அனைத்து மட்டங்களிலும்… தன்மதிப்பீட்டையும் சுயமரியாதையையும் தட்டி எழுப்பியது. இதன் பொருட்டு சங்கம், தேசத்தின் பல துறைகளிலும் பணியாற்றி வருகிறது, அவை தொலைவானவை, அங்கே செல்வது கூட கடினமானது. நம்முடைய தேசத்திலே கிட்டத்தட்ட, பத்து கோடி பழங்குடி சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள். இவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து சங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. நீண்டகாலமாக அரசாங்கங்கள் அவர்களுக்கு முதன்மையேதும் அளிக்கவில்லை. ஆனால் சங்கம் அவர்களுடைய கலாச்சாரம், அவர்களுடைய திருநாட்கள் திருவிழா மொழி, மற்றும் பாரம்பரியங்களுக்கு உச்சபட்ச முதன்மை அளித்தது. சேவாபாரதி வித்யாபாரதி ஏகல் வித்யாலய் வனவாசி கல்யாண் ஆசிரமம், பழங்குடி மக்களின் அதிகாரமளிப்பின் தூண்களாய் இவை நிற்கின்றன. இன்று நமது பழங்குடி மக்களிடம் தன்னம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது, அவர்களின் வாழ்க்கை மாறி வருகிறது.

நண்பர்களே, சங்கம், பல தசாப்தங்களாக பழங்குடியினத்தவர்களின் பாரம்பரியங்களை, பழங்குடிகளின் சடங்குகளை, பழங்குடிகளின் விழுமியங்களைப் பேணிக்காக்க, தனது ஒத்துழைப்பை அளித்து வந்திருக்கிறது. தனது கடமையை நிறைவேற்றி வந்திருக்கிறது. அதன் தவம் தான் பாரதத்தின் கலாச்சார அடையாளம், பாதுகாப்பாக வைத்திருப்பதில் பெரும் பங்காற்றி இருக்கிறது. நான் தேசத்தின் தொலைவுகளிலும் இருக்கின்ற, பழங்குடிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதில் ஈடுபட்டுவரும், சங்கத்தின் இலட்சோபலட்சம் ஸ்வயம்சேவகர்களையும் போற்றிப் பாராட்டுகிறேன்.

நண்பர்களே, சமூகத்திலே, பலநூற்றாண்டுகளாக, புரையோடிப்போன நோய்கள், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற உணர்வு, தவறான பழக்கங்கள், தீண்டாமை போன்ற அசுத்தம் நிறைந்திருக்கிறது. இவை ஹிந்து சமுதாயத்தின் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகின்றன. இது ஒரு மிகப்பெரிய கவலை, இதன் மீது சங்கம், தொடர்ந்து பணியாற்றி வந்திருக்கிறது. ஒருமுறை, அண்ணல் காந்தியடிகள், வர்தாவிலே சங்க முகாம் ஒன்றுக்குச் சென்றார். அவரும்கூட சங்கத்திலே, சமத்துவம் அனுசரணை சகோதரத்துவம், சமவுணர்வு, புரிந்துணர்வு, இவையனைத்தையும் பார்த்துவிட்டு மனம்திறந்து பாராட்டினார்.

நீங்களே பாருங்கள், டாக்டர் ஐயா தொடங்கி இன்றுவரை, சங்கத்தின் அனைத்து மகத்தான ஆளுமைகளும், அனைத்து சர்சங்கசாலகர்களும், ஏற்றத்தாழ்வு மற்றும் தீண்டாமைக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள். பெருமதிப்பிற்குரிய குருஜி தொடர்ந்து, ந ஹிந்து பதிதோ பவேத். இந்த உணர்வை முன்னெடுத்துச் சென்றார். அதாவது அனைத்து இந்துக்களும் ஒரே குடும்பத்தவர். எந்த ஒரு ஹிந்துவும் தாழ்ந்தவராகவோ கீழானவராகவோ இருக்க முடியாது. பூஜ்ய பாலாசாகேப் தேவ்ரஸ் அவர்களின் சொற்களும்கூட, நம்மனைவருக்கும் நினைவிருக்கும். அவர் கூறுவதுண்டு.

தீண்டாமை பாவம் இல்லையென்று சொன்னால், தீண்டாமை பாவம் இல்லையென்று சொன்னால், உலகிலே வேறு எந்த ஒன்றும் பாவமில்லை. சர்சங்கசாலக்காக இருந்த ரஜ்ஜு பையா ஜியும் சரி சுதர்ஷன் ஜியும் சரி, இதே உணர்வைத் தான் முன்னெடுத்துச் சென்றார்கள். தற்காலத்திய சர்சங்கசாலக், மதிப்பிற்குரிய மோகன் பாகவத் அவர்களும், சமத்துவத்திறகாக சமூகத்தின் முன்பாக தெளிவான இலக்கை முன்வைத்திருக்கிறார். மேலும் கிராமம்தோறும் ஒரு விஷயம் குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. அது என்னது? அவர் கூறினார், ஒரு குளம், ஒரு ஆலயம், மேலும் ஒரு மயானம். இது தொடர்பாக சங்கம், தேசத்தின் அனைத்து இடங்களுக்கும் சென்றது. எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. எந்தவொரு கருத்து மாறுபாடும் இல்லை, மனதில் எந்தவொரு காழ்ப்பும் இல்லை. இது தான் சமத்துவத்தின் ஆதாரமாகும். இதுதான் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் மனவுறுதியாகும்.

மேலும் சங்கம், இதற்கே தொடர்ச்சியாக, புதிய சக்தி அளித்து வருகிறது, புதிய ஆற்றல் அளித்து வருகிறது.

நண்பர்களே, 100 ஆண்டுகள் முன்பாக சங்கம் நிறுவப்பட்ட போது, அந்தக் காலத்தின் தேவையாக, அந்தக் காலத்தின் போராட்டம் வேறாக இருந்தது. அப்போது நாம், பல நூற்றாண்டுக்கால அடிமைத்தளையிலிருந்து விடுதலை அடைய வேண்டியிருந்தது. நம்முடைய கலாச்சார நன்மதிப்புக்களை பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்றோ, நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு, நமது பாரதம், வளர்ச்சியை நோக்கி விரைந்து கொண்டிருக்கையில், நமது பாரதம், உலகத்தின் 3ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக ஆக இருக்கும் வேளையில், நமது தேசம், மேலும் தேசத்தின் மிகப்பெரிய…. வறுமைத்தட்டு மக்கள், ஏழ்மையைத் தோற்கடித்து, ஏழ்மையை முறியடித்து முன்னேறும் வேளையிலே, நமது இளைஞர்களுக்கு, புதியபுதிய துறைகளிலே புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும் போது, உலகளாவிய ராஜரீகம் முதல் பருவநிலை கொள்கை வரை, பாரதம், உலகத்திலே தனது குரலை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்த வேளையிலே, இன்றைய சூழ்நிலையின் சவால்களும் வேறுவிதமானவை, போராட்டமும் வேறுரகமானது. மற்ற நாடுகளின் மீது பொருளாதார சார்புநிலை, நம்முடைய ஒற்றுமையைத் தகர்க்கும் வஞ்சகங்கள், மக்கட்தொகையியலை மாற்ற முனையும் சூழ்ச்சிகள், ஒரு பிரதம மந்திரி என்ற முறையிலே, நான் பணிவோடு கூறுகிறேன், எனக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது, அதாவது நமது அரசாங்கம், இந்தச் சவால்களை விரைவுகதியிலே எதிர்கொண்டு வருகின்றது. அதே வேளையிலே, ஒரு ஸ்வயம்சேவகன் என்ற முறையிலே மேலும் சந்தோஷம் அளிக்கும் விஷயம், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கமானது, இந்தச் சவால்களை அடையாளம் கண்டுகொண்டதோடு, இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலே, சிறப்பான திசைகாட்டுதலையும் அளித்திருக்கிறது.

இப்போது மதிப்பிற்குரிய தத்தாஜி கூறிய விஷயத்தை நான் என் பாணியில் விளக்க விரும்புகிறேன்.

நண்பர்களே சங்கத்தின் ஐந்து மாற்றங்கள். ஸ்வபோத். சமூக சமத்துவம். குடும்ப பிரபோதன். குடிமக்கள் நடத்தைமுறை. மற்றும் சுற்றுச்சூழல். இந்த உறுதிப்பாடுகள், ஒவ்வொரு ஸ்வயம்சேவகருக்கும், தேசத்தின் முன்பாக இருக்கும் சவால்களை தோற்கடிக்கத் தேவையான பெரும்உத்வேகங்கள்.

நண்பர்களே, ஸ்வபோத் என்றால், தன்னைப் பற்றி அறிதல். ஸ்வபோத் என்றால், அடிமைத்தன உணர்விலிருந்து விடுதலை அடைந்து, நம்முடைய மரபு குறித்து பெருமிதப்படுதல். நம் மொழிகள் குறித்து பெருமைப்படுதல். ஸ்வபோத் என்றால் சுதேசி. தற்சார்புடையவராக ஆவது. மேலும் எனது நாட்டுமக்களே ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். தற்சார்புத்தன்மை. இது ஒன்றும் மாற்று அல்ல. இது இன்றியமையாத ஒன்றாகும். நாம் சுதேசி என்ற மூலமந்திரத்தை சமூகத்தின் உறுதிப்பாடாக ஆக்க வேண்டும்.

நாம், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் இயக்கத்தினை, அதன் வெற்றிக்காக, உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்பதைத் தொடர்ந்து, ஒரு புதிய சக்தியை அளிக்கவல்ல உத்வேக கோஷமாக ஆக்க வேண்டும். முயற்சி செய்ய வேண்டும்.

நண்பர்களே சங்கமானது, சமூக சகோதரத்துவத்தை, தனது முதன்மையாகக் கொண்டு வந்திருக்கிறது. சமூக சகோதரத்துவம் அதாவது, வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு முதன்மையளித்து, சமூகநீதியை ஸ்தாபிக்க வேண்டும். தேசத்தின் ஒற்றுமையை வளர்க்க வேண்டும். இன்று தேசத்தின் முன்பாக எழும்பி நிற்கும் சங்கடங்களைப் பார்த்தால், இவை நமது ஒற்றுமை நமது கலாச்சாரம் நமது பாதுகாப்பிற்கு எதிராக நேரடித் தாக்குதலைத் தொடுக்கின்றன. பிரிவினைவாத சிந்தனை, பிராந்தியவாதம், சாதி மொழியை முன்னிறுத்தும் விவாதங்கள், அந்நிய சக்திகளால் தூண்டப்படும் பல்வேறு…. பிரிவினைவாத இயல்புகள், இவை போல, கணக்கேயில்லாத சவால்கள் சங்கடங்கள் நம்முன்னே நிற்கின்றன. பாரதத்தின் ஆன்மா எப்போதுமே, பன்முகத்தன்மையிலே ஒருமையாகவே இருந்திருக்கிறது. இந்த இழை அறுபட்டுப் போனது என்றால், பாரதத்தின் சக்தியும் பலவீனப்பட்டுப் போகும். ஆகையால் நாம் இந்தச் சக்தியை தொடர்ந்து வாழ்ந்து வர வேண்டும். அதற்கு பலமளிக்க வேண்டும்.

நண்பர்களே, சமூக சகோதரத்துவத்துக்கு இன்று, மக்கட் தொகையியலில் மாற்றம் என்ற சூழ்ச்சியால், ஊருறுவல்காரர்களால் பெரும் சவாலாகி இருக்கிறது. நம்முடைய இந்த உள்நாட்டுப் பாதுகாப்பு, மற்றும் எதிர்காலத்தோடும் தொடர்புடைய கேள்விக்குறி இது. ஆகையால் தான், நான் செங்கோட்டையிலிருந்து, மக்கட்தொகையியல் மிஷன் பற்றி அறிவித்திருந்தேன். நாம் இந்த சவால் தொடர்பாக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதை உறுதியோடு எதிர்கொள்ளவும் வேண்டும்.

நண்பர்களே, குடும்ப ப்ரபோதன். இன்று காலத்தின் கட்டாயம். சமூகவியல் ரீதியாக பல நூற்றாண்டுகளாக இருந்துவரும்…. மெத்தப்படித்தவர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பாரதத்திலே இருந்துவரும் பிராணசக்தி, இதற்கு ஒரு காரணம், அதில் இருக்கும் குடும்ப அமைப்பு. பாரதநாட்டு சமூக அமைப்பில் பலமான ஒரு அலகு என்று சொன்னால், நமது பாரத சமூகத்திலே, தழைத்தோங்கிய, பலமானதொரு குடும்ப அமைப்புமுறை. குடும்ப பிரபோதன் அதாவது, அந்த குடும்ப கலாச்சாரத்தின் ஊட்டம். இதுவே பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் ஆதாரம். இது பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் உத்வேகம். வேர்களோடு தொடர்புடையது. குடும்பங்களின் விழுமியங்கள், பெரியோர்களுக்கு மரியாதை, பெண்சக்திக்கு மதிப்பு, இளைஞர்களிடம் நற்பண்புகள், தங்கள் குடும்பம் தொடர்பான கடமைகளை நிறைவேற்றுதல், அதைப் புரிந்து கொள்ளல், அந்த திசையிலே குடும்பத்தை சமூகத்தை விழிப்புணர்வு அடையச் செய்தல், மிகவும் அவசியமானவை.

நண்பர்களே, பல்வேறு காலகட்டங்களிலே தேசம் முன்னேறிச் செல்லும் போது, அதிலே குடிமக்களின் நன்னடத்தை பெரும்பங்கு வகித்திருக்கிறது. குடிகளின் நன்னடத்தை என்றால், கடமையுணர்வு, குடிகளின் கடமைகள் பற்றிய தெரிதல், குடிமக்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும். தூய்மைக்கு ஆதரவு தேசத்தின் சொத்துக்களை மதித்தல் விதிகள்சட்டங்களை மதித்தல், நாம் இவற்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நம்முடைய அரசியல்சட்டத்தின் உணர்வு, குடிமக்கள் தங்களுடைய கடமைகளை ஆற்ற வேண்டும். நமது அரசியல் சட்டத்தின் இந்த உணர்விற்கு நாம் தொடர்ந்து சக்தியளித்து வர வேண்டும்.

நண்பர்களே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தற்கால மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது. இது ஒட்டுமொத்த மனித சமூகத்தின் எதிர்காலத்தோடு தொடர்புடையது. நாம் பொருளாதாரத்தோடு கூடவே, சுற்றுச்சூழல் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். நீர் பாதுகாப்பு பசுமை சக்தி சுத்தமான ஆற்றல், இந்த இயக்கங்கள் அனைத்தும், இந்த திசையைச் சார்ந்தவை தாம்.

நண்பர்களே, சங்கத்தின் இந்த ஐந்து மாற்றங்கள், இவை எப்படிப்பட்ட கருவிகள் என்றால், இவை தேசத்தின் வல்லமையை அதிகரிக்கக்கூடியவை. இவை தேசத்தை எதிர்கொள்ளும் பல சவால்களை தீர்க்கும் வல்லமை உடையவை. இவை 2047, இரண்டாயிரத்து நாற்பத்தி ஏழக்குள்ளாக, வளர்ச்சியடைந்த பாரதத்தின் ஆதாரமாக ஆகும்.

நண்பர்களே, இரண்டாயிரத்து நாற்பத்தி ஏழின் பாரதம், தத்வஞானம் மற்றும் விஞ்ஞானம், சேவை மற்றும் சகோதரத்துவத்தால் உருவாக்கப்பட்ட பெருமிதமான பாரதமாகும். இதுதான் சங்கத்தின் நோக்கு. இதுதான் ஸ்வயம்சேவகர்களான நம்மனைவரின் பயிற்சியுமாகும். மேலும் இதுவே நமது மனவுறுதியுமாகும்.

நண்பர்களே, நாம் என்றைக்குமே ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். சங்கம் உருவாக்கப்பட்டது, தேசத்தின்பால் கொண்ட உறுதியான நம்பிக்கை காரணமாக. சங்கம் இயங்கியது, தேசத்தின்பால் கொண்ட அபாரமான சேவை உணர்வுகாரணமாக. சங்கம் புடம்போடப்பட்டது, தியாகம் மற்றும் தவம் என்ற அக்னியிலே. சங்கம் தழைத்தது, சாதனை மற்றும் நற்பண்புகளின் சங்கமத்திலே. சங்கம் நிற்கிறது, ராஷ்ட்ர தர்மத்தை வாழ்க்கையின் உச்சபட்ச தர்மமாக கருதுவதால். சங்கம் இணைந்திருக்கிறது

பாரத அன்னையின் சேவை என்ற பெரும் கனவால்.நண்பர்களே, சங்கத்தின் ஆதர்ஸம் என்றால், கலாச்சாரத்தின் வேர்கள் ஆழமாகவும் சக்தியோடும் இருக்க வேண்டும் என்பது தான். சங்கத்தின் நம்பிக்கை என்றால், சமூகத்தின் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் இருக்க வேண்டும் என்பதே. சங்கத்தின் இலட்சியம் என்றால், இதயங்கள்தோறும் மக்கள்சேவை என்ற ஜோதி ஒளிவிட வேண்டும் என்பதே. சங்கத்தின் கண்ணோட்டம் என்றால், பாரதீய சமூகம், சமூகநீதியன் எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும் என்பதே.

சங்கத்தின் இலக்கு என்றால், உலக அரங்கிலே, பாரதத்தின் குரல் மேலும் உரக்க ஒலிக்க வேண்டும் என்பதே. சங்கத்தின் உறுதிப்பாடு என்றால், பாரதத்தின் எதிர்காலம், பாதுகாப்பாவும் பிரகாசமாகவும் இருக்க வேண்டும் என்பதே.

நான் மீண்டும் ஒருமுறை, உங்களனைவருக்கும், இந்த சரித்திரபூர்வமான கணத்திற்கான வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். நாளை விஜயதசமி புனித நன்னாள். நம்மனைவரின் வாழ்க்கையிலும் விஜயதசமிக்கு ஒரு மகத்துவம் இருக்கிறது. நான் அதற்காகவும் கூட, உங்களனைவருக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டு, நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். பலப்பல நன்றிகள்.

விளையாட்டில் அரசியல்! பண்புகளை பஞ்சர் ஆக்கும் பாகிஸ்தான்!

asia cup cricket 2025 - 2026

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 2025 பெரும் சர்ச்சைகளுக்கிடையே நடந்து முடிந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றும் இந்திய அணி கோப்பையைப் பெறவில்லை. இதற்குக் காரணம் கிரிக்கெட்டில் பண்புகளை பஞ்சர் ஆக்கிய பாகிஸ்தான் வீரர்களின் செயல்தான்.

28.09.2025 அன்று ஆசிய கோப்பை டி20 ஆண்கள் இறுதி ஆட்டம் நடைபெற்றது. வழக்கம்போல இந்திய அணி பாகிஸ்தான் அணியை வென்றது.

நீண்ட நாள்கள் கழித்து இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் பூவாதலையா வென்றார். பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார்.

இதனால் முதலில் மட்டையாட வந்த பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் சாஹிப்சாதா ஃபர்ஹான் (38 பந்துகளில் 57 ரன்) மற்றும் ஃபகர் ஸமாந் (35 பந்துகளில் 46 ரன்) இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். இந்திய அணியில் ஹார்திக் பாண்ட்யா ஆடவில்லை. அதனால் பும்ராவுடன் ஷிவம் துபே முதலில் பந்து வீசினார்.

முதல் விக்கட் 9.4ஆவது ஓவரில் வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் விழுந்தது. அதன் பிறகு பாகிஸ்தான் அணியின் மட்டையாளர்கள் இந்திய அணியின் பந்துவீச்சில் மட மடவென ஆட்டமிழந்தனர்.

12.5 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 113 ரன் என்ற நிலையில் இருந்து 19.1 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து அந்த அணி 146 ரன் மட்டுமே எடுத்தது. குல்தீப் யாதவ் 4 விக்கட்டுகளும் பும்ரா, வருண், அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கட்டுகளும் எடுத்தனர்.

இரண்டாவதாக ஆடவந்த இந்திய அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் ரன்ரேட் கடைசி ஓவர் வரை பாகிஸ்தான் அணியின் ரன்ரேட்டை விடக் கம்மியாக இருந்தது. அபிஷேக் ஷர்மா (5 ரன்), ஷுப்மன் கில் (12 ரன்), சூர்யகுமார் யாதவ் (1 ரன்) ஆகியோர் முதல் நான்கு ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் திலக் வர்மா (69 ரன்)-சஞ்சு சாம்சன் (24 ரன்) ஜோடி மற்றும் திலக் வர்மா மற்றும் ஷிவம் துபே (33 ரன்) ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றனர்.

19ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஷிவம் துபே ஆட்டமிழக்க, ரிங்குசிங் உள்ளே வந்து ஒரு ஃபோர் அடித்து இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத்தந்தார்.

ஆட்ட நாயகனாக திலக் வர்மாவும் தொடர் நாயகனாக அபிஷேக் ஷர்மாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை

அண்மையில் நடந்து முடிந்த ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பெரும் பகை உணர்வும் வெறுப்பும் மேலும் வளர்ந்தது. பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலையை இந்திய ராணுவத்தால் இழந்த போதும் தான் பெற்ற பணத்தைக் கொண்டு மீண்டும் கட்டமைக்க தொடங்கியது. இதனால் பாகிஸ்தான் மீதான கோபம் மற்றும் வெறுப்பு இந்திய மக்களிடம் அதிகரித்தது. இதன் காரணத்தால் பாகிஸ்தானுடன் எந்தவித உறவையும் வைத்துக்கொள்ளக்கூடாது என்ற குரல் இந்தியாவில் எதிரொலிக்க தொடங்கியது.

இந்த உணர்வு விளையாட்டு போட்டிகளிலும் தலை தூக்கியது. குறிப்பாக ஒருபுறம் ராணுவத்தினர் சண்டை போட்டுக் கொண்டிருக்க மறுபுறம் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுடன் கைகுலுக்கி கொண்டு அவர்களுடன் விளையாடி மகிழ்வதா என்ற எண்ணம் இந்தியாவில் ஏற்பட்டது. இதற்காக நீதிமன்றத்தின் கதவுகளையும் சிலர் தட்டினார்கள். ஆனால் அடுத்த இரு நாட்களில் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றமே கை விரித்தது.

இத்தகைய பின்னணியில் இந்தப் போட்டித் தொடரின் தொடக்கம் முதலே இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையே பிரச்சனை இருந்து வந்தது. டாஸ் போடும்போது அணித் தலைவர்கள் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். ஆட்டம் முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் கைகுலுக்கிக் கொள்வது வழக்கம். இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் இதற்கு மறுத்துவிட்டார்.

இப்போதைய ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் பாகிஸ்தான் உள்ளது. அந்தநாட்டின் ஒரு அமைச்சர் அதன் தலைவராக இருக்கிறார். இதனால் இந்த கைகுலுக்காமல் சென்ற பிரச்சனை ஊதி பெரிசாக்கப்பட்டது. ஒரு ஆட்ட நடுவர் மன்னிப்பு கேட்கும் அளவிற்குப் பெரிசானது.

பாகிஸ்தான் அணி டி20 ஆட்டங்களில் உலகத் தரவரிசையில் எட்டாம் இடத்தில் இருந்தது. இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் பாகிஸ்தான் அணியை விட மேலிருந்தன. ஆனால் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. குருப் ஆட்டங்களின் போதும் சூப்பர் 4 ஆட்டங்களின்போதும் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோற்றுப் போனது.

இந்த ஆட்டங்களின் போது பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் இராணுவம் சமீபத்தில் நடந்த போரின்போது இந்திய அணியின் போர் விமானங்கள் 6ஐ சுட்டுவீழ்த்தியதாக சைகை காண்பித்தனர்.

இதன் உச்ச கட்டமாக இந்திய அணி நேற்று பாகிஸ்தான் அமைச்சரும் ஆசிய கிரிக்கட் கவுன்சிலின் தவரிடமிருந்து வெற்றிக் கோப்பையைப் பெற விருப்பமில்லை எனத் தெரிவித்துவிட்டனர்.

பிறரிடமிருந்து திலக் வர்மா, குல்தீப் யாதவ், அபிஷேக ஷர்மா ஆகியோர் பரிசையும் பரிசுத்தொகையையும் பெற்றுக்கொண்டனர். ஆனால் வெற்றிக்கோப்பையை ஒரு பாகிஸ்தானியரிடமிருந்து பெற மறுத்துவிட்டனர். இதனால் அந்த பாகிஸ்தானிய அமைச்சர் அந்த கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். இது இப்போது பிரச்சனையாகி இருக்கிறது.

சண்டை சச்சரவுகளிலிருந்து அமைதிக்குத் திரும்பத்தான் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் போர் அரசியலைப் புகுத்துவது சரியல்ல. ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுடன் எந்த விளையாட்டும் விளையாடுவதில்லை என முடிவெடுக்க வேண்டும் இல்லையேல் விளையாட்டில் அரசியலைப் புகுத்தாமல் இருக்கவேண்டும்.

ஒருபுறம் ஆப்ரேஷன் சிந்தூரில் பெரும் அடி வாங்கிய பாகிஸ்தான் இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பிரச்சாரம் செய்து இணையதளத்தில் பொய்களை கட்டமைத்து அதில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அரசு கட்டமைத்த பொய்களை அந்நாட்டு மக்கள் பெரும்பாலோர் நம்பவில்லை என்றாலும் சாதாரண மக்களிடம் அது கொண்டு சேர்க்கப்பட்டது. கூசாமல் பொய்களை அவிழ்த்து விட்ட பாகிஸ்தான் அரசியல்வாதிகள் பின்னாளில் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் பொய்களை தாங்களே வெளியிட்டு அம்பலப்பட்டனர்.

இந்நிலையில்தான் ஆப்பரேஷன் சிந்தூர் தோல்விக்கு அடையாளம் இல்லாமல் அழித்துவிட்ட பாகிஸ்தான் இப்போது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அனைவரும் முன்னிலையிலும் அம்பலப்பட்டும் இப்போதும் வெற்றி பெற்றதாய் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறது என்ற கருத்துக்கள் சமூக தளங்களில் பரவின. இந்தப் பின்னணியில் தான் பிரதமர் நரேந்திர மோடியும் தனது சமூக தள பக்கத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் வெற்றிக்கு இரண்டையும் முடிச்சு போட்டு பாராட்டு தெரிவித்து இருந்தார்.

இந்த சமயத்தில் பாகிஸ்தான் குத்துச்சண்டை வீரர் ஒருவர் ஒரு குத்துச்சண்டைப் பொட்டியின் அறிமுக நிகழ்ச்சியில் இந்திய வீரரிடம் 6 எனச் செய்கை காண்பித்திருக்கிறார். இவையெல்லாம் விளையாட்டில் அழகல்ல!

கிரிக்கெட் & ஆப் சிந்தூர்!

ஆசிய கோப்பை போட்டியில் பாரதம் வென்றதும், “அந்த கோப்பையை பாகிஸ்தானி மோசின் நாக்வி கையால் வாங்க மாடோம்” என்று வீரர்கள் மறுத்துவிட்டனர். மோசின் நாக்வியும் அந்தக் கோப்பையை ஆசிய கோப்பை அமைப்பிடம் கொடுக்காமல் தூக்கிச் சென்று விட்டார்.

“விட்டேனா பார் உன்னை” என்று பிசிசிஐ அந்த நாக்விக்கு எதிராக துபாய் போலீஸில் புகாரளித்தது, “பாரதத்துக்கு கொடுக்க வேண்டிய கோப்பையை நாக்வி திருடிவிட்டார். அவரை கைது செய்து கோப்பையை மீட்டுத் தரவும்” என்று. அதோடு நிற்காத பிசிசிஐ நாக்வி மீது ஐசிசியில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்யவும் ஆயத்தமானது.

‘போலீஸ் கைது செய்து உள்ளே வைத்தால் என்ன ஆவது?’ என்று பயந்த நாக்வி கோப்பையை திருப்பிக் கொடுத்து விட்டு மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்று விட்டார்.

இதையடுத்து பெண்கள் கிரிக்கெட் போட்டியிலும் பாரத அணியினருக்கு பாகிஸ்தானிகளிடம் கை குலுக்க வேண்டாம் என்று பிசிசிஐ சொல்லியிருப்பதாக செய்தி வெளியானது.

அருப்புக்கோட்டை அருகே கடத்தல்.. நால்வர் கைது..

அருப்புக்கோட்டை அருகே தந்தை மற்றும் மகனை காரில் கடத்தி
ரூ 20,000 பணம் பறித்த வழக்கில் நான்கு பேர் கைது. திருச்சுழி காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த மைக்கேல் (42). இவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த மீரா (55) என்பவரிடம் திருச்சுழி அருகே குருந்தங்குளம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மைக்கேல் மற்றும் அவரது தந்தை ஆரோக்கியசாமி ஆகிய இருவரும் காரில் வந்து தாங்கள் வாங்கிய நிலத்தின் அருகில் உள்ள சாலையில் நின்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் அவருடன் பேசி தகராறு செய்து அரிவாளால் மைக்கேல் என்பவரை தாக்கி விட்டு அவரையும் அவருடைய ஆரோக்கிய சாமியையும், மைக்கேல் காரிலேயே கடத்தி சென்றுள்ளனர்.

அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி பகுதியில் தந்தை மற்றும் மகனை விட்டு விட்டு அவர்களிடம் இருந்த ரூ 20,000 பணத்தை அந்த மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்

இது குறித்து காயம் அடைந்த மைக்கல் திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த புகாரியின் அடிப்படையில் திருச்சுழி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

திருச்சுழி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட செம்பொன் நெருஞ்சி கிராமத்தைச் சார்ந்த லெட்சுமணன் (25) வீரசூரன் (27),‌ விமல் (20)
லெட்சுமணன் (17) ஆகிய நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

ராஜபாளையம் அருகே விபத்து இருவர் பலி..

1000974593 - 2026

ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை லாரி டிரைவர் தூங்கியதால் கறிக்கடைக்குள் லாரி நுழைந்ததில் இருவர் பலியாகினர் ஒருவர் படுகாயம்மடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பாரம் ஏற்ற சென்ற லாரி அதிகாலை 5 மணி அளவில் ராஜபாளையத்தில் செங்கல் பாரத்தை இறக்கி விட்டு சொக்கநாதன் நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது காமராஜ் நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது சாலை ஓரமாக மாட்டுக்கறி கடை போடப்பட்டிருந்தது.

லாரி டிரைவர் தூக்க அசதியில் கறிக்கடைக்குள் லாரியை நுழைத்து விட்டார். இதில் கறி வாங்க நின்று கொண்டிருந்த தளவாய்புரம் காமராஜ் நகரை சேர்ந்த பொன்னையா வயது 70, சுந்தரராஜபுரம் இந்திரா நகரை சேர்ந்த ஆகாஷ் வயது 16 ஆகிய இருவர் மீது லாரி ஏறியதில் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

1000974594 - 2026

மேலும் சுந்தர்ராஜபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த மணிமாறன் வயது 26 என்பவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் கிடைத்தவுடன் தளவாய்புரம் போலீசார் விரைந்து சென்று பலியானவர்கள் உடலை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் படுகாயம் அடைந்த மணிமாறன் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் .

இது தொடர்பாக லாரி டிரைவர் சொக்கநாதன் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தலைமலை வயது 38 என்பவரிடம் தளவாய்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

சென்னை சென்ட்ரல்- செங்கோட்டை ஏசி சிறப்பு ரயில் கோட்டயம் வரை..

1000974551 - 2026

ஆயுதபூஜை மற்றும் தீபாவளி விடுமுறை நாட்களில் சென்னை சென்ட்ரலில் இருந்து செங்கோட்டைக்கு அறிவிக்கப்பட்ட ஏசி சிறப்பு ரயில் கடந்த வாரம் புதன் கிழமை வியாழன் அன்று இயங்கி பயணிகள் கூட்டம் இல்லாததால் தற்போது இந்த ரயில் புனலூர் மற்றும் கொல்லம் வழியாக கோட்டயம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வரும் புதன் கிழமைக்கு பயணிகள் அதிகளவில் புக் செய்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது ‌.இந்த சிறப்பு ரயிலை இந்த ஆண்டு முழுவதும் இயக்க கேரளா எம் பி கொடிக்குன்னில் சுரேஷ் வலியுறுத்தி யுள்ளார்.இந்த விடுமுறையில் மற்றும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விடுமுறை பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

ரயில் எண்: 06121 சென்னை சென்ட்ரல் – கோட்டயம் ஏசி சிறப்பு எக்ஸ்பிரஸ் (புதன்கிழமை)

சென்னை சென்ட்ரல் : 03:10 PM
தென்மலை : காலை 07:50 மணி
புனலூர் : காலை 08:45 மணி
கொட்டாரக்கரா : 09:12 AM
குந்தாரா : 09:29 AM
கொல்லம் : 09:55 AM
காயங்குளம் : காலை 10:50 மணி
மாவேலிக்கரை : காலை 11:05 மணி
செங்கனூர் : காலை 11:17 மணி
திருவல்லா : காலை 11:28 மணி
சங்கனாச்சேரி : 11:37 AM
கோட்டயம் : 12:05 PM

1000974555 - 2026

ரயில் எண்: 06122 கோட்டயம் – சென்னை சென்ட்ரல் ஏசி எக்ஸ்பிரஸ் (வியாழன்)

கோட்டயம் : 02:05 பி.எம்
சங்கனாச்சேரி : 02:22 PM
திருவல்லா : 02:32 PM
செங்கனூர் : 02:43 PM
மாவேலிக்கரை : 02:57 PM
காயங்குளம் : 03:08 PM
கொல்லம் : 04:30 PM
குந்தாரா : 04:58 PM
கொட்டாரக்கரா : 05:12 PM
புனலூர் : மாலை 05:45
தென்மலை : 06:31 PM
சென்னை சென்ட்ரல் : காலை 11:30 மணிக்கு சென்னை சென்றடையும்.

கரூர் சம்பவம்; மதுரையில் மௌன அஞ்சலி!

madurai candle mourns - 2026

கரூரில் பிரச்சார கூட்டத்தில் “உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி

மதுரை மாவட்டம், தென்னிந்திய நடிகர் சங்கம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் கரூரில் நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில், உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் , நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா மற்றும் நடிகர்கள், நடிகைகள், குழந்தை நட்சத்திரங்கள்
கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

கரூரில் உயிரிழந்தோர் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏற்றி மதுரையில் அஞ்சலி

கரூரில் நேற்று அகால மரணம் அடைந்த குழந்தைகள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் 40 பேர் ஆத்மா சாந்தியடைய மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் தமிழ்நாடு பிராமண சமாஜம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், சோழவந்தான் தொழிலதிபர் ஆனந்தன் உட்பட பெண்கள் குழந்தைகள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக மற்றும் மத்திய அரசு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் இது மாதிரி சம்பவம் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நிகழ்வில் கோரிக்கை வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

மதுரை: ஆலயங்களில் நவராத்ரி விழா!

navarathri in madurai temples - 2026

மதுரை மாவட்ட கோயில்களில் நவராத்ரி விழா!

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், நவராத்ரியை முன்னிட்டு அம்மன் பல்வேறு அலங்காரத்தில் காட்சி அளித்தார். பட்டிவீரன் பட்டி மாரியம்மன் கோயில், மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர், கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் ஞான சித்தி விநாயகர் கோயில், வைகை காலனி, மேற்கு சக்தி மாரியம்மன் ஆலயத்தில் நவராத்ரியை ஒட்டி, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், ஜெனி நாராயணப் பெருமாள், திரௌபதியம்மன், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இன்மையில் நன்மை தருவார், பழைய சொக்கநாதர், திருவேங்கடம் ஏடகநாதர் கோயில்களில் நவராத்ரி விழா வையை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

madurai golu in hoses - 2026

இல்லங்களில் நவராத்ரி கொலு:

மதுரை மாவட்டத்தில் நவராத்திரியை முன்னிட்டு வீடுகள்,கோயில்களில் சிறப்பாக கொழு அலங்காரம் செய்யப்பட்டது. பட்டி வீரன் பட்டி மாரியம்மன் ஆலயத்தில், திருப்பதி வேங்கடாசலபதி, பத்மாவதியராக காட்சி அளித்தார். சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், அம்பாள் கடம்பவன வாசினி அலங்காரத்திலும், மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயத்திலும், சித்திவிநாயகர், வரசித்தி விநாயகர் ஆலயங்களிலும், நவராத்ரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் பகுதிகளில் உள்ள வ.உ.சி தெரு, வீரவாஞ்சி தெருக்களில் வீடுகளில் கொலு அலங்காரத்தை பொதுமக்கள் கண்டு களித்தனர்.

பண்டிகை; ஜிஎஸ்டி., சேமிப்புக் கொண்டாட்டம்; சுதேசிப் பொருள்களை வாங்கி மகிழ்வோம்!

manadhinkural - 2026
#image_title

மனதின் குரல் (126ஆவது பகுதி)
ஒலிபரப்பு நாள்: 28-09-2025
தமிழில் / குரல் : ராமஸ்வாமி சுதர்ஸன்

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் நாமெல்லோரும் ஒன்றிணைவது, உங்களனைவரிடமிருந்தும் கற்பது, நாட்டுமக்களின் சாதனைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது, உண்மையிலேயே மிகவும் சுகமான அனுபவத்தை அளிக்கின்றது.  பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் விஷயங்களைப் பகிர்ந்து மனதின் குரலை நாம் ஒலிக்கச் செய்து வருகையில், இந்த நிகழ்ச்சி 125 பகுதிகளைக் கடந்துவிட்டது பற்றித் தெரியவேயில்லை.  இன்று நமது இந்த நிகழ்ச்சியின் 126ஆவது பகுதி, இன்றைய தினத்தோடு சில சிறப்பம்சங்களும் இணைந்திருக்கின்றன.  இன்று பாரதத்தின் இரண்டு மகத்தான ஆளுமைகளின் பிறந்த நாளாகும்.  நான் தியாகி பகத்சிங், லதா தீதி பற்றித் தான் குறிப்பிடுகிறேன்.

நண்பர்களே, உயிர்த்தியாகி பகத்சிங், பாரதவாசிகள் அனைவருக்கும், குறிப்பாக தேசத்தின் இளைஞர்களின் ஊக்கத்தின் ஊற்று.  அஞ்சாமை என்பது அவருடைய இயல்பின் ஒவ்வொரு கூறிலும் நிறைந்திருந்தது.  தேசத்திற்காக தூக்குமேடை ஏறும் முன்பாக பகத்சிங் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.  நீங்கள் என்னையும் என்னுடைய சகாக்களையும், போர்க்கைதிகளைப் போல நடத்த வேண்டும் என்றும், ஆகையால் எங்கள் உயிர் தூக்கு மேடையில் அல்ல, துப்பாக்கியால் சுடப்பட்டு போக்கப்பட வேண்டும் என்று அவர் ஆங்கிலேயர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.  பகத்சிங் அவர்கள் மக்களின் துயரின் பொருட்டு மிகவும் புரிந்துணர்வு உடையவராக இருந்தார், அவர்கள் உதவிக்கு எப்போதும் முன்வந்தார்.  நான் உயிர்த்தியாகி பகத்சிங் அவர்களுக்கு மரியாதைகலந்த சிரத்தாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன்.

நண்பர்களே, இன்று லதா மங்கேஷ்கரின் பிறந்த நாளும் ஆகும்.  பாரதநாட்டுக் கலாச்சாரத்திலும் இசையிலும் பிரியம் உடைய எவரும் அவருடைய பாடல்களைக் கேட்டு, உணர்ச்சிப்பெருக்கில் நனையாமல் இருக்க முடியாது.  அவருடைய பாடல்களில் மனித உணர்வுகளைப் பிரதிபலிக்கும் அனைத்தும் இருந்தன.  அவர் பாடிய தேசபக்திப் பாடல்கள் மக்களுக்கு உத்வேகம் அளித்தன.  பாரதத்தின் கலாச்சாரத்தோடும் கூட அவருக்கு ஆழமான பிணைப்பு இருந்தது.  நான் லதா தீதிக்கும் கூட என் இதயப்பூர்வமான நினைவாஞ்சலிகளைத் தெரிவிக்கிறேன்.  நண்பர்களே, லதா தீதி, கருத்தூக்கம் பெற்ற மகத்தான ஆளுமைகளில் வீர் சாவர்க்கரும் ஒருவர், அவரை இவர் தாத்யா என்று அழைப்பார்.  வீர் சாவர்க்கர் அவர்களின் பல பாடல்களையும் கூட தனது குரலால் இழைத்திருக்கிறார்.

          சகோதரி லதா அவர்களுக்கும் எனக்கும் ஒரு அன்புறவு எப்போதுமே இருந்து வந்திருக்கிறது.  ஒவ்வோர் ஆண்டும் மறக்காமல் அவர் எனக்கு ராக்கியை அனுப்பி வைப்பார்.   மராட்டி மெல்லிசையின் மகத்தான ஆளுமையான சுதீர் ஃபட்கே அவர்கள் முதன்மையாக லதா தீதியை எனக்கு அனுபவம் செய்து வைத்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.  சுதீர் அவர்களால் இசையமைக்கப்பட்டு, உங்களால் பாடப்பட்ட ‘ஜோதி கலஷ் சல்கே’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று நான் அப்போது லதா தீதியிடம் கூறினேன்.

நண்பர்களே, நீங்களும் என்னோடு கூட இதன் ஆனந்தத்தைப் பருகுங்கள். (Audio)

எனதருமை நாட்டுமக்களே, நவராத்திரியின் இந்த வேளையில் நாம் சக்தியை உபாசனை செய்கிறோம்.  நாம் பெண்சக்தியைக் கொண்டாடுகிறோம்.  வர்த்தகம் தொடங்கி விளையாட்டுக்கள் வரை, கல்வி தொடங்கி அறிவியல் வரை எந்த ஒரு துறையை எடுத்துக் கொண்டாலும் சரி, தேசத்தின் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தங்களுடைய கொடியை நாட்டி வருகின்றார்கள்.  கற்பனைகூட செய்து பார்க்க கடினமான சவால்களையும் அவர்கள் எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.  தொடர்ச்சியாக 8 மாதங்கள் வரை உங்களால் கடலிலே இருக்கமுடியுமா, காற்றின் வேகத்திற்கேற்ப முன்னேறிச் செல்லும் பாய்மரப்படகிலே, எப்போது வேண்டுமானாலும் மோசமாகக்கூடிய வானிலை கொண்ட சமுத்திரத்திலே, 50,000 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியுமா என்று நான் உங்களிடம் வினா எழுப்பினால் உங்கள் விடை என்னவாக இருக்கும்!!  அப்படிச் செய்யும் முன்பாக நீங்கள் ஆயிரம் முறை யோசித்துப் பார்ப்பீர்கள், ஆனால் பாரதீய கடற்படையின் இரண்டு சாகஸம் நிறைந்த அதிகாரிகள், நாவிகா சாகர் பரிக்ரமா மூலம் இப்படிச் செய்து காட்டியிருக்கின்றார்கள்.  மனவுறுதி, நெஞ்சுரம் என்றால் என்ன என்பதை இந்த இரண்டு அதிகாரிகளும் இணைந்து நிரூபித்திருக்கின்றார்கள்.  ஒருவர் லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா, மற்றவர் லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா.  இந்த இரண்டு அதிகாரிகளும் இப்போது நம்முடன் தொலைபேசியில் இணைந்திருக்கின்றார்கள்.

பிரதமர் – ஹெலோ.

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – ஹெலோ சார்.

பிரதமர் – வணக்கம் ஜி.

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – வணக்கம் சார்.

பிரதமர் – என்னுடன் லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னாவும், லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபாவும் இணைந்திருக்கிறார்கள், சரி தானே?

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா, ரூபா – ஆமாம் சார் ரெண்டு பேருமே இருக்கோம். சார்.

பிரதமர் – சரி உங்க ரெண்டு பேருக்கும் நமஸ்காரம், வணக்கம்.

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – வணக்கம் சார்.

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – நமஸ்காரம் சார்.

பிரதமர் – உங்க ரெண்டு பேத்தைப் பத்தியும் நாட்டுமக்கள் தெரிஞ்சுக்க விரும்பறாங்க, நீங்களே சொல்லுங்க.

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – சார் நான் லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா.  நான் இந்திய கப்பற்படையோட ஏற்பாட்டியல் துறையைச் சேர்ந்தவ, நான் கப்பற்படையில 2014ஆம் ஆண்டு இணைஞ்சேன் சார், நான் கேரளத்தின் கோழிக்கோட்டிலேர்ந்து வர்றேன்.  எங்கப்பா இராணுவத்தில இருந்தாரு, எங்கம்மா இல்லத்தரசிங்க.  என் கணவரும் கூட இந்திய கப்பற்படையில அதிகாரியா இருக்காரு சார், என்னோட சகோதரி தேசிய மாணவர் படையில வேலை பார்த்திட்டு இருக்கா.

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – ஜய் ஹிந்த் சார், நான் லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா பேசறேன், நான் கப்பற்படையில 2017ஆம் ஆண்டு கப்பற்படை படைக்கலக் கண்காணிப்புப் பிரிவுல சேர்ந்தேன்.  எங்கப்பா தமிழ்நாட்டைச் சேர்ந்தவரு, எங்கம்மா புதுச்சேரியைச் சேர்ந்தவங்க.  எங்கப்பா இந்திய விமானப்படையில பணியாற்றினாங்க, உண்மையில இராணுவத்தில சேரணுங்கறதுக்கான உத்வேகத்துக்கு எங்கப்பா தான் காரணம்.  எங்கம்மா இல்லத்தரசியா இருக்காங்க.

பிரதமர் – சரி தில்னா, ரூபா, உங்க ரெண்டு பேர் கிட்டேர்ந்தும் நான் தெரிஞ்சுக்க விரும்பறது என்னென்னா, சாகர் பரிக்ரமாவில உங்க அனுபவம் எப்படி இருந்திச்சுங்கறதை நாட்டுமக்கள் கிட்ட பகிர்ந்துக்கணுங்கறது தான்.  மேலும் இது ஒண்ணும் சுலபமான விஷயம் இல்லை, பல கடினங்கள் வரும், பல இடர்களை எதிர்கொள்ள வேண்டி வந்திருக்கும்னு நான் புரிஞ்சுக்கறேன்.

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – ஆமாம் சார்.  நம்ம வாழ்க்கையையே மாத்தி அமைக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வாழ்க்கையில ஒருமுறை தான் கிடைக்கும் சார்.  இந்த உலகம் சுற்றி வருதல்ங்கறது எங்களுக்கு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு சார், இதை இந்திய கப்பற்படையும், இந்திய அரசாங்கமும் தான் அமைச்சுக் கொடுத்தாங்க.  இந்தப் பயணத்தில நாங்க சுமார் 47,500 கிலோமீட்டர் தூரம் படகுல பயணிச்சோம்.   நாங்க 2024ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதியன்னைக்கு கோவாவை விட்டுப் புறப்பட்டு, 2025ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதியன்னைக்குத் திரும்பி வந்தோம், இந்தப் பயணத்தை நாங்க நிறைவு செய்ய நாங்க எடுத்துக்கிட்டது 238 நாட்கள் சார், இந்த 238 நாட்கள்லயும் நாங்க ரெண்டு பேர் மட்டும் தான் அந்தப் படகுல இருந்தோம் சார். 

பிரதமர் – அம்மாடியோவ்!!

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – அப்புறம் சார், இந்தப் பயணத்தை மேற்கொள்ள நாங்க மூன்று ஆண்டுகள் தயாரிப்புகள்ல ஈடுபட்டோம், திசையறிதல் தொடங்கி தகவல்தொடர்பு, அவசரகாலக் கருவிகளை எப்படி இயக்குவது, எப்படி டைவிங் செய்வது, படகுல ஏதாவது அவசரநிலை ஏற்பட்டாலோ, மருத்துவ அவசரநிலை உண்டானாலோ எப்படி அதை சமாளிக்கறது, இது எல்லாம் பத்தி எங்களுக்கு இந்திய கப்பற்படை பயிற்சி அளிச்சாங்க சார்.  மேலும் இந்தப் பயணத்திலேயே மிகவும் நினைவில் கொள்ளத்தக்க விஷயம்னு சொன்னா, அது நம்ம பாரதத்தோட கொடியை, பாயிண்ட் நெமோவில பறக்கவிட்டதுதான் சார்.  சார் இந்த பாயிண்ட் நெமோங்கறது உலகத்திலேயே மிகவும் தொலைவான இடத்தில இருக்கு, அதுக்கு இருக்கறதிலேயே பக்கத்தில யாராவது மனிதன் இருக்காருன்னு சொன்னா, அவரு சர்வதேச விண்வெளி நிலையத்தில தான் இருக்காரு, அந்த இடத்துக்கு பாய்மரப்படகுல பயணிச்ச இந்திய நாட்டைச் சேர்ந்த, முதல் மனிதர்கள், ஆசியப்பகுதியின் முதல் மனிதர்கள், உலகின் முதல் மனிதர்கள்னா அது நாங்க தான் சார், இது எங்களுக்கு பெருமிதமான விஷயம் சார்.

பிரதமர் – அடேங்கப்பா, பலப்பல நல்வாழ்த்துக்கள் உங்களுக்கு.

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – தேங்க்யூ சார்.

பிரதமர் – உங்க சகா ஏதோ சொல்ல விரும்பறாங்க போலிருக்கே!!

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – சார், பாய்மரப்படகுல உலகத்தைச் சுத்தி வந்தவங்களோட எண்ணிக்கைன்னு பார்த்தா, எவரஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடிச்சவங்களை விட ரொம்பக் குறைவு.  மேலும் பாய்மரப்படகுல தனியா சுத்தி வந்தவங்கன்னா, அவங்க எண்ணிக்கை விண்வெளிக்குப் போனவங்களோட எண்ணிக்கையை விடவும் ரொம்பவே குறைவு.

பிரதமர் – அட, இத்தனை சிக்கலான பய்ணத்துக்கு ரொம்பவே குழுப்பணி அவசியம், அங்க குழுவுல நீங்க ரெண்டு அதிகாரிகள் மட்டும் இருந்திருக்கீங்க.  நீங்க இதை எப்படி சமாளிச்சீங்க?

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – ஆமாம் சார், இப்படிப்பட்ட பயணத்தில நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா உழைக்க வேண்டியிருந்திச்சு, லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா சொன்னா மாதிரி, இதை சாதிக்கறதுக்கு ரெண்டு பேர் மட்டுமே இருந்தோம், நாங்க தான் படகை ரிப்பேர் செய்யறவங்க, என்ஞ்சின் மெக்கானிக்கும் நாங்க தான்.  மேலும் பாய்மரத்தை சமாளிப்பது, மருத்துவ உதவியாளர், சமையல்காரங்க, சுத்தம் செய்யறவங்க, டைவ் செய்யறவங்க, திசையறியறவங்க, எல்லாத்தையுமே நாங்களே செய்துக்க வேண்டியிருந்திச்சு.  இதை சாதிக்கறதுக்கு இந்திய கப்பற்படையோட மிகப்பெரிய பங்களிப்பு இருந்திச்சு.  எங்களுக்கு அனைத்துவிதமான பயிற்சியும் கொடுக்கப்பட்டிச்சு.  ஆக்சுவலா சார், நாங்க நான்கு ஆண்டுகளா ஒண்ணா கடல்பயணம் மேற்கொண்டு வர்றோம், எங்களுக்கு பரஸ்பர பலங்கள் பலவீனங்கள் பத்தி நல்லாத் தெரியும்.  ஆகையினால, எங்க படகுல இருந்த கருவிகள் பழுதாகலைன்னா, அதுக்குக் காரணம் எங்களோட குழுவா செயல்படக்கூடிய உணர்வு தான்னு நான் எல்லார் கிட்டயும் சொல்லுவேன்.

பிரதமர் – நல்லது, பருவநிலை மோசமாகும் போது, ஏன்னா கடல் உலகம் எப்படிப்பட்டதுன்னா, எப்ப பருவநிலை எப்படி இருக்கும்னு சொல்லமுடியாது இல்லையா, அந்தச் சூழலை நீங்க எப்படி கையாண்டீங்க?

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – சார், எங்க பயணத்தில மோசமான சவால்கள் நிறைய இருந்திச்சு.  குறிப்பா தென்கடல் பகுதியில எப்பவுமே பருவநிலை மோசமா இருக்கும்.  நாங்க மூன்று சூறாவளிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்திச்சு சார், எங்க படகு வெறும் 17 மீட்டர் நீளமானது, இதோட அகலம் வெறும் 5 மீட்டர் தான்.  சில வேளைகள்ல அலைகள்னு சொன்னா, மூன்று அடுக்கு கட்டிடம் உயரத்துக்கு வரும் சார், மேலும் நாங்க ஏகப்பட்ட வெப்பம், ஏகப்பட்ட குளிரை சமாளிக்க வேண்டியிருந்திச்சு சார், அண்டார்டிகாவுல நாங்க பயணிச்சுட்டு இருந்தப்ப, வெப்பநிலை ஒரு டிகிரி செல்ஷியஸா இருந்திச்சு, காத்து மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில வீசிட்டு இருந்திச்சு, இந்த இரண்டையும் நாங்க எதிர்கொள்ள வேண்டி வந்திச்சு.  குளிர்லேர்ந்து தற்காத்துக்க நாங்க 6லேர்ந்து 7 அடுக்குகள் உடைகளை ஒண்ணா அணிஞ்சோம், மொத்த தென்கடல் பகுதியில பயணிச்ச வேளையில இப்படி 7 அடுக்கு உடைகளை அணிஞ்சுதான் பயணிச்சோம் சார்.  சில வேளைகள்ல நாங்க கேஸ் அடுப்பு மூலமா எங்க கைகளுக்கு சூடு ஏத்திக்குவோம் சார், சில வேளைகள்ல, சுத்தமா காத்தே வீசாத போது, நாங்க கப்பற்பாயை கீழ இறக்கி மெதுவா பயணிச்சோம்.  இந்த மாதிரியான சூழ்நிலைகள் தான் எங்க பொறுமையை சோதிக்கற மாதிரி இருக்கும். 

பிரதமர் – எப்படியெல்லாம் கஷ்டங்களை எதிர்கொள்றாங்க நம்ம நாட்டுப் பெண்கள்னு கேட்கும் போது மக்களுக்கு ஏக ஆச்சரியமா இருக்கும்.  சரி இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, நீங்க பல்வேறு நாடுகள்ல தங்கியிருப்பீங்க, அங்க உங்களுக்குக் கிடைச்ச அனுபவம் என்ன, பாரதநாட்டுப் பெண்கள் ரெண்டு பேரை பார்க்கும் போது, அவங்க எப்படி உணர்ந்தாங்க, சொல்லுங்களேன்!!

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – சரி சார், எங்களுக்கு நல்ல அனுபவமா இருந்திச்சு, நாங்க எட்டு மாதங்கள்ல நான்கு இடங்கள்ல தங்கினோம், ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து, போர்ட் ஸ்டேன்லி மற்றும் தென்னாப்பிரிக்கா சார்.

பிரதமர் – ஒவ்வொரு இடத்திலயும் சராசரியா எத்தனை நாள் தங்க வேண்டியிருந்திச்சு?

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – சார் நாங்க 14 நாட்கள் தங்கினோம் சார் ஒவ்வொரு இடத்திலயும்.

பிரதமர் – ஒவ்வொரு இடத்திலயும் 14 நாட்களா?

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – கரெக்ட் சார்.  மேலும் சார், நாங்க உலகத்தோட ஒவ்வொரு மூலையிலயும் இந்தியர்களைப் பார்த்தோம் சார், அதுவும் ரொம்ப சுறுசுறுப்பாவும், ரொம்ப தன்னம்பிக்கையோடும் இருந்தாங்க, பாரதத்தோட பேருக்கு பெருமை சேர்த்திட்டு இருந்தாங்க சார்.  எங்க வெற்றியை அவங்க தங்களோட வெற்றியா நினைச்சாங்கன்னுதான் எங்களுக்குப் பட்டிச்சு சார்,  ஒவ்வொரு இடத்திலயும் எங்களுக்கு பலவகையான அனுபவங்கள் கிடைச்சுது, எடுத்துக்காட்டா ஆஸ்ட்ரேலியாவுல, மேற்கு ஆஸ்ட்ரேலிய பாராளுமன்றத்தோட அவைத்தலைவர் எங்களை அழைச்சாரு, எங்களுக்கு ரொம்பவே ஊக்கமளிச்சாரு சார்.  எப்பவுமே இந்த மாதிரியான விஷயங்கள் தான், நமக்கு ரொம்ப பெருமைப்பட வைக்கும் சார்.  அதே போல நாங்க நியூசீலாந்துக்குப் போன போது, அங்க மாவுரிகள் எங்களை வரவேத்தாங்க, நம்ம பாரதநாட்டுக் கலாச்சாரத்துக்கு ரொம்ப மரியாதை கொடுத்தாங்க சார்.  மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னென்னா, போர்ட் ஸ்டேன்லீங்கற ஒரு தொலைவான தீவுல சார், அது தென்னமெரிக்காவுக்குப் பக்கத்தில இருக்கு, அங்க வெறும் 3500 மக்கள் தான் வசிக்கறாங்கன்னாலும், அங்கயும் நாங்க ஒரு குட்டி இந்தியாவைப் பார்க்க முடிஞ்சுது, அங்ககூட 45 இந்தியர்கள் இருந்தாங்க, அவங்க எங்களை அவங்க வீட்டுல ஒருத்தரா நினைச்சு நடத்தினாங்க சார்.

பிரதமர் – பலே, உங்களை மாதிரியே ஆக நினைக்கற நம்ம தேசத்தோட பெண்களுக்கு நீங்க என்ன செய்தி அளிக்க விரும்பறீங்க?

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – சார், நான் லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா பேசறேன் இப்ப.  யாராவது மனசை ஊன்றி உழைச்சாங்கன்னு சொன்னா, இந்த உலகத்தில இயலாத விஷயம்னு ஒண்ணும் இல்லைன்னுதான் நான் உங்க மூலமா சொல்லிக்க விரும்பறேன் சார்.  நீங்க எங்கிருந்து வர்றீங்க, எங்க பிறந்தீங்க, இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.  எங்க ரெண்டு பேரோட ஆசையும் என்னென்னா, பாரதத்தோட இளைஞர்களும் பெண்களும் பெரியபெரிய கனவுகளைக் காணணும், அனைத்துப் பெண்களும், பாதுகாப்புத் துறையில, விளையாட்டுக்கள்ல, சாகஸங்கள்ல ஈடுபட்டு தேசத்துக்குப் பெருமை சேர்க்கணுங்கறது தான் சார்.

பிரதமர் – தில்னாவும் ரூபாவும் பேசினதைக் கேட்ட பிறகு, நீங்க எத்தனை பெரிய சாகஸத்தை செஞ்சிருக்கிங்கன்னு நினைக்கும் போது, எனக்கு ஒரே புளகாங்கிதமா இருக்கு.  என் தரப்பிலேர்ந்து உங்க ரெண்டு பேத்துக்கும் பலப்பல நன்றிகள்.  கண்டிப்பா உங்களோட உழைப்பு, உங்க வெற்றி, உங்களோட சாதனை எல்லாம் தேசத்தோட இளைஞர்களுக்கும், தேசத்தின் பெண்களுக்கும் பெரிய கருத்தூக்கமா இருக்கும்.  தொடர்ந்து மூவண்ணக் கொடியோட பெருமைக்கு பெருமை சேர்த்துக்கிட்டே இருங்க, உங்க அனைத்து எதிர்கால முயற்சிகளுக்கும் என்னோட ஏராளமான நல்வாழ்த்துக்கள்!!

லெஃப்டினண்ட் கமாண்டர் தில்னா – தேங்க்யூ சார்.

பிரதமர் – பலப்பல நன்றிகள்.  வணக்கம்,  நமஸ்காரம்.

லெஃப்டினண்ட் கமாண்டர் ரூபா – வணக்கம் சார்.

நண்பர்களே, நம்முடைய புனித நாட்கள், பண்டிகைகள் எல்லாம் பாரதத்தின் கலாச்சாரத்தை உயிர்ப்போடு வைத்திருக்கின்றன.  சட்பூஜை இப்படிப்பட்ட ஒரு புனிதமான நாள், இது தீபாவளிக்குப் பிறகு வருகிறது.  சூரிய தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தப் பெரும்புனித நாள் மிகவும் விசேஷமானது.  இதிலே நாம் அஸ்தமனம் ஆகும் சூரியனுக்கு நீரால் அஞ்சலி செலுத்துகிறோம், அவனை வழிபடுகிறோம்.  சட் என்பது தேசத்தின் பல்வேறு பாகங்களில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை, உலகெங்கிலும் இதைக் கொண்டாடுவதைப் பார்க்கலாம்.  இன்று இது ஒரு உலகளாவிய பண்டிகையாக ஆகி வருகிறது.

நண்பர்களே, பாரத அரசும்கூட, சட் பூஜை தொடர்பாக ஒரு பெரிய முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  சட் பெரும் நாளை, யுனெஸ்கோ அமைப்பின் Intangible Cultural Heritage List, அதாவது கலாச்சார மரபுப் பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் பாரத அரசு ஈடுபட்டிருக்கிறது.  சட் பூஜை எப்போது யுனெஸ்கோவின் பட்டியலில் இடம் பெறுமோ, அப்போது உலகின் அனைத்து இடங்களைச் சேர்ந்த மக்களும் இதன் பெருமை மற்றும் தெய்வீகத்தன்மையை அனுபவித்து உணர்வார்கள். 

நண்பர்களே, சிலகாலம் முன்பாக, பாரத அரசின் இப்படிப்பட்ட முயற்சிகள் காரணமாக கோல்காத்தாவின் துர்க்கா பூஜையும் கூட யுனெஸ்கோவின் இந்தப் பட்டியலின் அங்கமாக ஆனது.  நாம் நமது கலாச்சார ஏற்பாடுகளுக்கு இப்படிப்பட்ட உலகளாவிய அடையாளத்தை அமைத்துக் கொடுத்தோமேயானால்,, இவை பற்றி உலகம் அறிந்து கொள்ளும், புரிந்து கொள்ளும், இவற்றிலே கலந்து கொள்ள முன்வரும்.

நண்பர்களே, அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று காந்தி ஜயந்தி வருகிறது.  காந்தியடிகள் எப்போதுமே சுதேசியைக் கைக்கொள்வதன் மீது அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறார், இவற்றிலே காதி மிகவும் முக்கியமானது.  துரதிர்ஷ்டவசமாக சுதந்திரம் கிடைத்த பிறகு, காதியின் ஒளி சற்று மங்கிப் போனது ஆனால், கடந்த 11 ஆண்டுகளில் காதியின் மீது தேசத்தின் மக்களுக்கு ஈர்ப்பு அதிகரித்துவிட்டது.  கடந்த சில ஆண்டுகளிலே காதியின் விற்பனையில் விறுவிறுப்பு கூடியிருக்கிறது.  அக்டோபர் மாதம் 2ஆம் தேதியன்று, ஏதாவது ஒரு காதிப்பொருளை நீங்கள் கண்டிப்பாக வாங்குங்கள் என்று நான் உங்களிடம் விண்ணப்பம் செய்து கொள்கிறேன்.  பெருமையோடு கூறுங்கள், இது சுதேசிப் பொருள் என்று.  இதை சமூக ஊடகத்தில் #Vocal for Local என்ற ஹேஷ்டேகில் பகிருங்கள்.

நண்பர்களே, காதியைப் போலவே நமது கைத்தறி மற்றும் கைவினைப்பொருள் துறையிலும் கூட கணிசமான அளவு மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது.  நமது பாரம்பரியமும், நூதனமும் ஒருங்கே பயணித்தால், அற்புதமான விளைவுகள் ஏற்படுத்த முடியும் என்பதற்கு சான்றாக, இன்று நமது தேசத்திலே பல எடுத்துக்காட்டுக்களை நம்மால் காண முடியும்.   யாழ் நேச்சுரல்ஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு உதாரணம்.  இங்கே அஷோக் ஜகதீசன் அவர்களும், பிரேம் செல்வராஜ் அவர்களும் கார்ப்பரேட் வேலையை உதறித் தள்ளிவிட்டு, ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டார்கள்.  இவர்கள் புல் மற்றும் வாழையின் நார்களால் யோகா பாயைத் தயாரித்தார்கள், தாவர வண்ணங்களால் துணிக்கு வண்ணம் சேர்த்தார்கள், 200 குடும்பங்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலைவாய்ப்பை அமைத்துக் கொடுத்தார்கள். 

ஜார்க்கண்டின் ஆஷீஷ் சத்தியவ்ரத் சாஹூ அவர்கள், ஹோஹர் பிராண்ட் வாயிலாக பழங்குடியினத்தவரின் நெசவு மற்றும் துணிகளை உலக மேடை வரை கொண்டு சென்றார்.  இவருடைய முயற்சியால் இன்று ஜார்க்கண்டின் கலாச்சார மரபு, பிற நாடுகளைச் சேர்ந்த மக்களின் கவனத்தைக் கவர்ந்து வருகிறது.

பிஹாரின் மதுபனி மாவட்டத்தின் ஸ்வீட்டி குமாரி அவர்களும் கூட, சங்கல்ப் கிரியேஷனைத் தொடங்கினார்.  மிதிலா ஓவியங்களை இவர், பெண்களின் வாழ்வாதாரத்திற்கான சாதனமாக ஆக்கினார்.  இன்று 500க்கும் அதிகமான ஊரகப் பெண்கள் இவரோடு இணைந்திருக்கின்றார்கள், தற்சார்புப் பாதையில் நடைபோடுகிறார்கள்.  வெற்றியின் இந்த அனைத்துக் கதைகளும், நமது பாரம்பரியங்களில் வருமானம் ஈட்டுவதற்கு எத்தனை வழிகள் மறைந்திருக்கின்றன என்பதையே நமக்குக் கற்பிக்கின்றன.   

என் மனம்நிறை நாட்டுமக்களே,

அடுத்த சில நாட்களில் நாம் விஜயதசமியைக் கொண்டாட இருக்கிறோம்.  இந்த முறை விஜயதசமி, மேலும் ஒரு விஷயம் காரணமாக மிகவும் விசேஷம் நிறைந்தது.  இந்த நாளன்று தான் ராஷ்ட்ரீய சுயம்சேவவக சங்கம் 100 ஆண்டுகள் முன்பாக நிறுவப்பட்டது. 

ஒரு நூற்றாண்டின் இந்தப் பயணம் எத்தனை அற்புதமானது, வரலாறு காணாதது, உத்வேகம் அளிக்கவல்லது!!  இந்த நாளிலிருந்து 100 ஆண்டுகள் முன்பாக, ராஷ்ட்ரீய சுயம்சேவக சங்கம் நிறுவப்பட்ட போது, தேசம் பலநூற்றாண்டுக்கால அடிமைத்தளைகளில் சிக்கியிருந்தது.  இந்த பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான அடிமைத்தனம் காரணமாக, நமது சுயமரியாதைக்கும், தன்னம்பிக்கைக்கும் ஆழமான காயம் ஏற்பட்டிருந்தது.  உலகின் மிகத் தொன்மையான நாகரிகம், தனது அடையாளத்தைத் தொலைத்து விட்டுத் அதைத் தேடுவதில் தவித்துக் கொண்டிருந்தது.  

நாட்டுமக்கள் தாழ்வு மனப்பான்மைக்கு இரையாகியிருந்தார்கள்.  ஆகையால் தேசத்தின் விடுதலையோடு கூடவே, தேசத்தின் கருத்தியல் அடிமைத்தனத்தனத்திலிருந்தும் விடுதலை பெற்றாக வேண்டியது மிக மகத்துவமானதாக இருந்தது. 

இந்த நிலையில்தான், பெருமதிப்பிற்குரிய டாக்டர். ஹெட்கேவார் அவர்கள், இந்த விஷயம் குறித்து ஆழமாக ஆலோசித்த பிறகு, இந்த பகீரதப் பணியை நிறைவேற்றும் பொருட்டு, அவர் 1925ஆம் ஆண்டு, விஜயதசமி நன்னாளில் ராஷ்ட்ரீய சுயம்சேவக சங்கத்தை நிறுவினார். 

டாக்டர் ஐயா காலமான பிறகு, பெருமதிப்பிற்குரிய குருஜி அவர்கள், தேச சேவையின் இந்த மகா வேள்வியை முன்னெடுத்துச் சென்றார்.  பெருமதிப்பிற்குரிய குருஜி கூறுவதுண்டு – ராஷ்ட்ராய ஸ்வாஹா, இதம் ராஷ்ட்ராய இதம் ந மம, அதாவது, இது என்னுடையது அல்ல, இது தேசத்தினுடையது என்று.  இதிலே சுயநலத்திற்கு அப்பாற்பட்டு, தேசத்திற்காக அர்ப்பணிக்கும் உணர்வினை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான உள்ளெழுச்சி அடங்கியிருக்கிறது. 

குருஜி கோல்வால்கர் அவர்களின் இந்த வாக்கியம் தான், இலட்சக்கணக்கான சுயம்சேவகர்களுக்கு, தியாகம் மற்றும் சேவையின் பாதையைக் காட்டியது.  தியாகம் மற்றும் சேவையின் இந்த உணர்வும், ஒழுக்கப் பாடமும் தான், சங்கத்தின் மெய்யான பலம். 

இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 100 ஆண்டுகளாக, களைப்படையாமல், தடைப்படாமல், தேச சேவையில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றது.  ஆகையால் தான், தேசத்தில் எங்கே இயற்கைப் பேரிடர் ஏற்பட்டாலும், ஆர்.எஸ்.எஸ்ஸின் சுயம்சேவர்கள் அனைவருக்கும் முன்னதாக அங்கே சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. 

இலட்சோபலட்சம் சுயம்சேவகர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு முயற்சியிலும், தேசத்துக்கே முதன்மை என்ற இந்த உணர்வு தான் எப்போதும் முதன்மையானதாக இருக்கிறது.  தேசச் சேவை என்ற மாபெரும் வேள்வியிலே, தங்களைத் தாங்களே அர்ப்பணம் செய்து வரும் ஒவ்வொரு சுயம்சேவகருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் அர்ப்பணம் செய்கிறேன்.

என் கனிவான நாட்டுமக்களே, அடுத்த மாதம் அக்டோபர் 7ஆம் தேதியன்று, மகரிஷி வால்மீகியின் பிறந்தநாள்.  மகரிஷி வால்மீகி, பாரதநாட்டுக் கலாச்சாரத்தின் எத்தனை பெரிய ஆதாரம் என்பது நம்மனைவருக்கும் நன்கு தெரியும்.  இந்த மகரிஷி வால்மீகிதான், நமக்கெல்லாம் பகவான் இராமன் பற்றிய அவதாரக் கதைகளை, இத்தனை விரிவான முறையிலே அறிமுகம் செய்து வைத்தார்.  அவர் மனித சமுதாயத்திற்கு இராமாயணம் போன்றதொரு அற்புதமான நூலினை அளித்தார்.

நண்பர்களே, இராமாயணத்தின் இந்தத் தாக்கத்திற்கான காரணம், அதிலே பொதிந்திருக்கும் பகவான் இராமனின் ஆதர்சங்களும், நற்பண்புகளும் தான்.  பகவான் இராமன், சேவை, சமத்துவ மனப்பான்மை மற்றும் கருணை ஆகியவற்றால் அனைவரையும் அரவணைத்தார்.  ஆகையால் தான், மகரிஷி வால்மீயின் இராமாயணம் இராமன், அன்னை சபரி, நிஷாத்ராஜ் என்ற குகன் ஆகியோரோடு தான் நிறைவாகிறது.  அந்த வகையிலே நண்பர்களே, அயோத்தியிலே இராமனுக்கு ஆலயம் அமைக்கப்பட்ட போது, கூடவே குகனுக்கும், மகரிஷி வால்மீகிக்கும் கூட ஆலயம் எழுப்பப்பட்டது.  நீங்களும் அயோத்தியிலே இராமலீலையை தரிசனம் செய்யுங்கள், மகரிஷி வால்மீகி, நிஷாதராஜன் குகனுடைய ஆலயத்திற்கும் தரிசனம் செய்து வாருங்கள் என்று உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

என் உளம்நிறை நாட்டுமக்களே, கலை, இலக்கியம், கலாச்சாரத்தின் மிகச் சிறப்பான விஷயம் என்னவென்றால், இவை எந்த ஒரு வரம்பிற்குள்ளும் கட்டுப்பட்டு இருக்காது.  இவற்றின் நறுமணம், அனைத்து எல்லைகளையும் தாண்டி, மக்களின் மனங்களைத் தொட்டு வருடிவிடும்.  தற்போதுதான், பாரீசில் ஒரு கலாச்சார நிறுவனமான சௌந்தக் மண்டபா, தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்தது.  இந்த மையமானது, பாரதநாட்டு நடனத்தை வெகுஜனங்களுக்கு விருப்பமானதாக ஆக்குவதிலே பரவலான பங்களிப்பை அளித்திருக்கிறது.  இதை மிலேனா சால்வினீ அவர்கள் தான் நிறுவினார்.  இவருக்கு சில ஆண்டுகள் முன்பாகத் தான் பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவிக்கப்பட்டது.  நான் சௌந்தக் மண்டபாவோடு இணைந்த அனைவருக்கும் பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன், வருங்காலத்தில் உங்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும், என் நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

நண்பர்களே, இப்போது நான் உங்களுக்கு இரண்டு சிறிய ஒலிக்குறியீடுகளை இசைக்க இருக்கிறேன், இவற்றைக் கவனமாகக் கேளுங்கள் – #Audio Clip 1

இப்போது இரண்டாவது ஒலிக்குறிப்பை இசைக்கிறேன், கேளுங்கள் –

#Audio Clip 2

நண்பர்களே, இந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான பூபேன் ஹஜாரிகா அவர்களின் பாடல்கள் உலகெங்கிலும் பல்வேறு நாடுகளை இணைக்கின்றது என்பதற்குச் சாட்சியாக இருக்கின்றது.  இதிலே பூபேன் தா அவர்களின் மிகப் பிரபலமான பாடலான மனுஹே-மனுஹார் பாபே, இதனை இலங்கையைச் சேர்ந்த கலைஞர்கள் சிங்கள மொழியிலும், தமிழிலும் மொழியாக்கம் செய்திருக்கிறார்கள்.  நான் உங்களுக்கு இவற்றின் ஒலிக்குறிப்புக்களைத் தான் இசைத்தேன்.  சில நாட்கள் முன்பாக அசாமிலே அவருடைய நூற்றாண்டு விழாவிலே கலந்துகொள்ளும் பெரும்பேறு எனக்குக் கிடைத்தது.  இது உள்ளபடியே நினைவில் கொள்ளத்தக்க ஒரு நிகழ்ச்சியாக எனக்கு அமைந்தது. 

நண்பர்களே, பூபேன் ஹஜாரிகா அவர்களின் நூற்றாண்டினை அசாம் கொண்டாடிவரும் வேளையிலே, சில நாட்கள் முன்பாக ஒரு துக்ககரமான சம்பவமும் நடந்தது.  ஜுபீன் கர்க் அவர்களின் அசந்தர்ப்பமான இறப்பும் நம்மை சோகத்தில் ஆழ்த்தியது.

ஜுபீன் கர்க் அவர்கள் ஒரு பிரபலமான பாடகர், நாடெங்கிலும் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.  அசாமின் கலாச்சாரத்தின் மீது அவருக்கு பெரும் ஈடுபாடு இருந்தது.  ஜுபின் கர்க் அவர்கள் நமது நினைவுகளில் என்றென்றும் நீங்காதிருப்பார், அவருடைய இசையானது, வருங்காலத் தலைமுறைகளையும் சொக்க வைக்கும்.

ஜுபீன் கர்க், ஆசில்

அஹோமார் ஹமோஸக்ருதிர், உஜ்ஜால் ரத்னோ……

ஜனோதார் ஹ்ருதயாத், தேயோ ஹ்ருதாய ஜியாய், தாகிபோ.

[மொழியாக்கம் : ஜுபீன் அசாமிய கலாச்சாரத்தின் கோஹிநூர் வைரமாகத் திகழ்ந்தவர்.  உடல்ரீதியாக அவர் நம்மைவிட்டு மறைந்தாலும், அவர் என்றென்றும் நம் இதயங்களில் நீங்காதிருப்பார்]

நண்பர்களே, சில நாட்கள் முன்பாக நம்முடைய தேசத்தின் ஒரு மகத்துவம்வாய்ந்த சிந்தனையாளரும், கருத்தியல்வாதியுமான எஸ். எல். பைரப்பா அவர்கள் காலமானார்.  பைரப்பா அவர்களுடன் எனக்கு தனிப்பட்ட தொடர்பும் இருந்தது, எங்களுக்கு இடையே பல சந்தர்ப்பங்களில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆழமான உரையாடலும் நிகழ்ந்திருக்கிறது.  அவருடைய படைப்புகள், இளைய தலைமுறையினருக்குப் பாதை வகுத்துக் கொடுத்தது.  கன்னடத்தின் பல படைப்புகளின் மொழியாக்கமும் இப்போது கிடைக்கிறது.  நம்முடைய வேர்கள் மற்றும் கலாச்சாரத்தின் மீது நாம் பெருமைப்படுவது எத்தனை முக்கியமானது என்று அவர் நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார்.  எஸ். எல். பைரப்பா அவர்களுக்கு என்னுடைய உணர்வுபூர்வமான நினைவாஞ்சலிகளை நான் அர்ப்பணம் செய்கிறேன், இளைஞர்களே, அவருடைய படைப்புக்களை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். 

எனதருமை நாட்டுமக்களே, வரவிருக்கும் நாட்களிலே ஒன்றன்பின் ஒன்றாக பண்டிகைகளும், சந்தோஷங்களும் நம் வீட்டுக் கதவுகளைத் தட்ட இருக்கின்றன.  ஒவ்வொரு புனித நாளின் போதும், நாம் பொருட்களை வாங்குகிறோம்.  மேலும் இந்த முறை பார்த்தால், ஜிஎஸ்டி சேமிப்புக் கொண்டாட்டம் வேறு நடந்து வருகிறது.

நண்பர்களே, ஒரு உறுதிப்பாட்டோடு நீங்கள் உங்களுடைய பண்டிகைகளை மேலும் சிறப்பாகக் கொண்டாட முடியும்.  இந்த முறை பண்டிகைகளின் போது, சுதேசிப் பொருட்களை மட்டுமே வாங்கிக் கொண்டாடுவோம் என்று நாம் மனவுறுதிப்பட்டால், நமது பண்டிகைகளின் ஒளிவெள்ளம் பலமடங்கு பெருகிவிடும் என்பதை நீங்களே பார்க்கலாம்.  உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம் என்ற மந்திரத்தை, பொருட்களை வாங்கும் போது நினைவில் கொள்ளுங்கள்.  நம் தேசத்தில் தயாராவதை மட்டுமே நான் வாங்குவேன் என்று நீங்கள் தீர்மானம் செய்து கொள்ளுங்கள்.  நம் நாட்டுமக்களின் தயாரிப்புகளை மட்டுமே வீட்டுக்குக் கொண்டு வருவேன் என்று உறுதி மேற்கொள்ளுங்கள்.   நம் நாட்டுமக்களின் உழைப்பு இருக்கும் பொருட்களையே பயன்படுத்துவேன் என்று உறுதிப்படுங்கள்.  இப்படி நாம் செய்தோம் என்று சொன்னால், நாம் பொருட்களை மட்டும் வாங்கவில்லை, நாம் ஏதோவொரு குடும்பத்தின் நம்பிக்கையை வீட்டுக்குக் கொண்டு வருகிறோம், யாரோவொரு கைவினைஞரின் உழைப்புக்கு மரியாதை அளிக்கிறோம், யாரோ ஒரு இளைஞரின் தொழில்முனைவுக்கு இறக்கை அளிக்கிறோம் என்று கொள்ளுங்கள்.

நண்பர்களே, பண்டிகைகள் காலத்தில் நாம் அனைவரும் நமது வீடுகளிலே தூய்மையைப் பேணுவோம் ஆனால், தூய்மை நம் வீடுகள் என்ற நான்கு சுவர்களுக்கு உள்ளே மட்டும் அடங்குவது அல்ல.  வீதிகள், குடியிருப்புப் பகுதிகள், சந்தைகள், கிராமங்கள் என அனைத்து இடங்களிலும் தூய்மையைப் பேணிக்காப்பது என்பது நம்மனைவரின் பொறுப்பாகும்.

நண்பர்களே, நம்முடைய தேசத்திலே எப்போதும் விழாக்கள் நிறைந்திருக்கும் என்றாலும், தீபாவளி ஒரு மகாவிழாவாகவே கருதப்படுகிறது; வரவிருக்கும் தீபாவளிப்பண்டிகைக்கும் உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.  இதோடு கூடவே, நான் மீண்டும் ஒரு விஷயத்தை உரைக்கிறேன், நாம் தற்சார்பு உடையவர்களாக ஆக வேண்டும், தேசம் தற்சார்பு உடையதாக ஆக வேண்டும் என்றால் இதற்கான பாதை சுதேசியை நாம் முன்னெடுத்துச் செல்வதிலே தான் இருக்கிறது.

நண்பர்களே, மனதின் குரலில் இந்த முறை இம்மட்டே.  அடுத்த மாதம், மீண்டும் புதிய விஷயங்கள்-கருத்தூக்கங்களோடு நாம் சந்திப்போம்.  அதுவரை, உங்கள் அனைவருக்கும் பலப்பல நல்வாழ்த்துக்கள்.  பலப்பல நன்றிகள்.

கரூரில் அதிர்ச்சி; விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு; தலைவர்கள் இரங்கல்!

karur tvk meting vijay speech - 2026

கரூரில் நடைபெற்ற நடிகர் விஜயின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்ட விஜய், அடுத்ததாக கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர். விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே, கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அப்போது, சிலர் மயங்கி விழுந்தனர். இதனைப் பார்த்த விஜய் தனது பிரசார வாகனத்தில் இருந்து  தண்ணீர் பாட்டில் எடுத்து கூட்டத்தினரிடம் வீசினார்.  பிறகு, விஜய் தனது உரையை தொடர்ந்தார்.

விஜய் உரையை முடித்துவிட்டுக் கிளம்பும் போது, தொண்டர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், சிக்கிய பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். ஆனால் அவர்களில் பலர் உயிரிழந்த நிலையில் தான் மருத்துவமனைக்கு வந்ததாக மருத்துவர்கள் குறிப்பிட்டனர். பலர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.

பிரதமர் மோடி இரங்கல்: தமிழ்நாட்டின் கரூரில் ஓர் அரசியல் பேரணியின் போது நிகழ்ந்த துயரமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த நிகழ்வில், தங்கள் அன்பிற்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்கள் மன வலிமையைப் பெற விரும்புகிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு: கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான நெரிசல் சம்பவத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டது என்பது மனதை வாடவைக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

முதல்வர் அறிக்கை: இன்று (செப்.,27) கரூரில் நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன். விலைமதிக்க முடியாத அந்த உயிரிழப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியுள்ளது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் மகேஷ், மா.சுப்பிரமணியன் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும், திருச்சி, சேலம் மற்றும் திண்டுக்கல் கலெக்டர்கள், மருத்துவக் குழுக்களுடன் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ஒரூ.1 லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைப்பு: இந்த துயர சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும். நான் இன்றிரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன், – இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் : கரூர் அரசு மருத்துவமனைக்கு பலரது உடல்கள் இறந்த நிலையிலேயே கொண்டு வரப்பட்டுள்ளன. இவர்கள் பிரசாரக் கூட்டத்திலேயே உயிரிழந்தனர். மருத்துவமனையில் உள்ளவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. 45க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் சம்பவ இடத்தில் இருந்து இன்னும் சடலங்கள் வரலாம் என்றும் அச்சத்தில் உள்ளோம் – இவ்வாறு கூறினார்.

பாஜக., முன்னாள் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை:
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.

உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

விஜய் எக்ஸ் தள பதிவு: இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன். – என்று நடிகரும் தவெக தலைவருமான விஜய் X தளத்தில் பதிவு செய்துள்ளார்.

கரூர் கூட்டத்தில் விஜய் பேசி கொண்டிருக்கும் போதே நெரிசல் ஏற்பட ஆரம்பித்து விட்டது. பலர் மயக்கம் அடைய தொடங்கிவிட்டனர். வீடியோ காட்சிகள் தெளிவாக காட்டுகின்றன. கூட்டத்தில் கதறல் சத்தம் கேட்டதும் தண்ணீர் பாட்டில் தூக்கியெறிந்த விஜய், அதன்பிறகு சுமார் 10 நிமிடங்கள் பேசினார். உடனடியாக சுதாரித்து பேச்சை முடித்துவிட்டு முழுமையாக உதவியிருந்தால் இவ்வளவு பெரிய துயர நிலை ஏற்பட்டிருக்காது என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படலாம்!

கரூரில் 36 பேர் பலியான சம்பவம் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ‘புஷ்பா-2’ திரைப்பட ரிலீஸின்போது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதேபோல் விஜய்யும் கைது செய்யப்படலாம். முன்னதாக தவெக பிரச்சார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என உயர் நீதிமன்றம் கூறியிருந்தது

கரூரில் நாளை முழு கடையடைப்பு : கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், துயரத்தில் பங்கேற்கும் விதமாக கரூரில் நாளை முழு கடையடைப்பு – தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருக்கிறார்.

உதவி எண்கள் :கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விபரங்களை தெரிந்து கொள்ள, தொடர்பு கொள்ள வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள்.. DOT 04324 256306 ./ Watsapp 7010806322

ஸ்ரீவிலி 108 வடபத்ர சாயி கோவில் புரட்டாசி பெருந்திருவிழா..

1000971439 - 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான வடபத்ர சாயி பெரிய பெருமாள் கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா விமர்சையாக நடைபெற்றுவருகிறது.முக்கிய விழாவாக செப்டம்பர் 29-ம் தேதி திருக்கல்யாணமும், அக்டோபர் 2-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தில் நடைபெறும் திருவிழா பிரம்மோற்சவம் ஆகும். இந்தக் கொடியேற்றத்துடன் தொடங்கி, பிரம்ம தேவர் பெருமாளுக்கு எடுத்த விழாவாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒவ்வொரு நாளிலும், பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
திருவிழாவின் முக்கிய அம்சமாக பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் வேதங்கள் முழங்க, கருடக்கொடி தங்கக்கொடிமரத்தில் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து 9 நாட்களுக்கு, தினமும் காலை மற்றும் மாலையில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பிரம்ம தேவர் திருப்பதிக்கு வந்து பெருமாளுக்கு விழா எடுத்ததில் இருந்தே இந்த விழா கொண்டாடப்படுகிறது, இது பிரம்மோற்சவம் எனப்படுகிறது.
பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டு பெருமாளின் தரிசனத்தைக் கண்டு மகிழ்கின்றனர்.

1000971467 - 2026

புரட்டாசி மாதத்தில் நடைபெறும் இந்த திருவிழா, பொதுவாக புரட்டாசி மாதத்திலேயே தொடங்கி வெகு சிறப்பாக நடைபெறும்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு கடந்த புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் செப்டம்பர் 29-ம் தேதி திருக்கல்யாணமும், அக்டோபர் 2-ம் தேதி செப்பு தேரோட்டமும் நடைபெறுகிறது.

108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்), பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் அவதரித்த சிறப்புக்குரியது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு புரட்டாசி பிரம்மோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஶ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாளுக்கு விஷேச திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு கருடக் கொடியேற்றம் நடைபெற்றது.

பிரமோற்சவ விழாவில் தினசரி இரவு பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். இதில் 5-ம் நாள் விழாவான செப்டம்பர் 28-ம் தேதி தங்க கருட சேவையும், 29-ம் தேதி மாலை 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 30-ம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது.

9-ம் நாளான அக்டோபர் 2-ம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்பு தேரோட்டம் நடைபெற உள்ளது. அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். வெங்கட்ராமராஜா மற்றும் உறுப்பினர்கள், செயல் அலுவலர் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.