Home Blog Page 5605

‘Imposition of Hindi’ in Bangalore Metro signboards irks Kannadigas

bangalore - 2026

Bengaluru:

In Bengaluru’s Metro rail project, the signboards at stations that use three languages, Kannada, English and Hindi, have drawn criticism, with this being viewed as another instance of the imposition of Hindi. The chairperson of the Kannada Development Authority (KDA), which is a governmental body, has written to the MD of the BMRCL (Bangalore Metro Rail Corporation)  asking him to explain under what rules the signboards have used Hindi.

Chairman of KDA, S G Siddaramaiah told press that under the Karnataka Shops and Commercial Establishments Act, Kannada was to be given importance over the other languages. “It is only central government entities that are required to follow the three-language formula whereas all other establishments should have Kannada and another language, with Kannada in larger font,” he said.

Siddaramaiah said an incorrect view was being promoted that Hindi was the national language. Pradeep Singh Kharola, MD of Bangalore Metro, refused to comment on the issue, because the issue concerning BMRCL and the KDA.

Siddaramaiah’s letter has raised the question about who owns BMRCL, a joint venture between the central and state government. Pro-Kannada activist Vatal Nagaraj saw the hand of the Centre in the move to include Hindi in signboards. Nagaraj said Kannada had to be promoted in the state and there could be no compromise on this. “People coming from other states are welcome here, but they must also make an effort to learn the local language,” he asserted.

Now a protest campaign is running online with the hashtag #NammaMetroHindiBeda on Twitter widely.

3 நாடுகள் பயணம்: போர்சுகல் புறப்பட்டார் பிரதமர் மோடி

modi france - 2026

புதுதில்லி:

போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய 3 நாடுகளில் சுற்றுப் பயணம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தனது பயணத்தின் முதல் நாடாக போர்ச்சுகல் செல்கிறார் மோடி. இன்று காலை அவர் தில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.

முதல் நாடாக, போர்ச்சுக்கல் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் அண்டோனியா கோஸ்டாவை சந்திக்கிறார். அப்போது இரு தரப்பிலும் இருந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. பின் அங்கிருந்து அமெரிக்கா செல்லும் அவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். இது, சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் மட்டுமின்றி, அமைச்சர்கள், அந்நாட்டு தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலரையும் மோடி சந்தித்து பேசுகிறார். பிறகு அவர் 27ஆம் தேதி நெதர்லாந்து செல்கிறார். இந்தப் பயணத்தின் மூலம், போர்ச்சுகல், அமெரிக்கா, நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தியா இணைந்து செயல்படுவதற்கான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது, சுமுகமான உறவு பேணப் படுகிறது என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர், பேஸ்புக் பதிவுகளில் தெரிவித்துள்ளார்.

 

ரமலான் காலத்தில் மெக்காவில் குண்டுவெடிப்பு: ஐ.எஸ். பயங்கரவாதி கைவரிசை?

mecca grand mosque - 2026

மெக்கா:
ரமலான் நோன்புக் காலத்தில் மெக்காவில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை பயங்கரவாதி குண்டு வெடிக்கச் செய்ததில் 11 பேர் காயம் அடைந்தனர்.

சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரமானது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. ரமலான் மாதம் என்பதால் தற்போது அங்கு லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகலில் அங்குள்ள மசூதியில் ஏராளமானோர் வழிபாடு நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது, மசூதிக்கு வெளியே கடும் பாதுகாப்பு வளையத்தையும் மீறி பயங்கரவாதி ஒருவன், வெடிகுண்டுகளுடன் உள்ளே நுழைய முயற்சித்தான். அதைக் கண்ட போலீசார், அவன் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது அவன் தன்னிடம் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில், அங்கிருந்த கட்டடம் சரிந்து விழுந்தது. இந்தச் சம்பவத்தில் 11 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

கடந்த வருடமும் ஜூலை மாதம் மற்றொரு புனித நகரமான மதீனாவில் இதே போன்று தற்கொலைப்படைத் தாக்குதலை ஐ.எஸ் அமைப்பினர் நிகழ்த்தினர். எனவே, இந்தத் தாக்குதலையும் அவர்கள் நடத்தியிருக்கலாம் என்ற வகையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கூட்டுப்படையில் சவூதியும் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியானை தரிசிக்க இனி ’ஆதார்’ கட்டாயம்!

thirupathi 1 - 2026

திருப்பதி:
ஆதார் இல்லையா? அப்படி எனில், உலகுக்கு ஆதாரமான ஆண்டவன் ஏழுமலையானை இனி தரிசிக்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும். திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆதார் கட்டாயமாக்கப்பட உள்ளது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளது, பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதார் கட்டாய அறிவிப்பு குறித்து திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி சீனிவாச ராஜூ கூறியது…
திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் விரைவு தரிசன முன்பதிவு, வாடகை அறை உள்ளிட்டவற்றிற்கு புகைப்பட அடையாள அட்டை எதேனும் ஒன்றை பெற்று வந்தது. இந்நிலையில் வங்கிக் கணக்கு, பான் கார்டுடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், திருப்பதியின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. பிரேக் தரிசனத்துக்கு வரும் பக்தர்களும் ஆதார் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஆதார் எண் இல்லாவிடில், மூத்த குடிமக்களுக்கான தரிசனம், கூடுதல் லட்டு பிரசாதம், அங்கப் பிரதட்சிண டிக்கெட் இவையெல்லாம் பெற இயலாமல் இருந்தது. வேறு எந்த அடையாள அட்டை காட்டினாலும், திருப்பதி தேவஸ்தானத்தில் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல், ஆதார் ஒன்றிலேயே குறியாக இருந்தார்கள். இப்போது இந்த ஆதார் கட்டாய அறிவிப்பு, பெருமானை தரிசிக்கவும், அறைகளை வாடகைக்கு எடுக்கவும் அவசியமாகப் போகிறது. ஆண்டவன் என்றால் எளியவர்க்கு உரியவன். நடைபாதை பக்தர்கள், இலவச தரிசனத்தில் நிற்பவர்கள் என பலரும் பெருமானை தரிசித்து மகிழ்ந்தார்கள். இனி அவர்களுக்கும் அடையாளம் தேவைப்படும் நிலை உருவானாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 15)

srivaratharajar kanchi - 2026
திருத்தேர் சாத்துபடியுடன் ஸ்ரீ பேரருளாளன். பிரம்மோற்சவம் 7ம் நாள் அதிகாலை

வரதன் வந்த கதை ( பகுதி 15-ல் 1 )

அத்திகிரி அமலன் அயன் முகம் நோக்கிப் பேசத் தொடங்கினான் !! பிள்ளாய் பிரமனே , பற்பல சிரமங்களை அனுபவித்தும் மனம் தளராமல் வேள்வியை நன்கு நடத்தி முடித்தாய் ! உன் தளராத உள்ளமும் உறுதியும் கண்டு பூரிப்படைந்தேன் நான் ! என்ன வரம் வேண்டுமோ கேட்டுப் பெற்றுக் கொள் ! தருவதற்கு நான் தயாராய் இருக்கிறேன் என்றான் !!

” வரம் வரய தஸ்மாத் த்வம் யதாபிமதமாத்மந :

ஸர்வம் ஸம்பத்ஸ்யதே பும்ஸாம் மயி த்ருஷ்டிபதம் கதே ”

மனிதர்கள் கண்ணால் காணக் கூடிய நிலைமையை தற்பொழுது நான் அடைந்துள்ளேன் ! (அவர்களுக்கும் ) எல்லாம் கை கூடப் போகிறது .. உனக்கு வேண்டியதைக் கேள் ! என்றான் இறைவன் ..

கண்ணெதிரே கரிகிரிக் கண்ணனைக் கண்ட கமலத்தயன், பணிவான குரலில் பரமனைப் பார்த்துப் பேசினான் ! ஐய ! வரமே என்ன வரம் வேண்டும் என்று கேட்பது விந்தையாகத் தான் உள்ளது !

எதையும் நான் என் முயற்சியால் ஸாதித்திருப்பதாக நினைக்கவில்லை .. நின்னருளல்லதெனக்குக் கதியில்லை ! அதுவே உண்மை !

பெருமானே ! அநந்த, கருட , விஷ்வக்ஸேநர் போன்ற மஹாத்மாக்கள் காணத் தக்க உன் வடிவை , நான் காணப் பெற்றேனே ! இதை விட வேறு பலன் ; வேறு வரம் ஏதேனும் உண்டோ ?!

என் பதவி நிலையற்றது. உன்னுடைய ஸ்ருஷ்டியில் எத்தனை எத்தனை ப்ரஹ்மாண்டங்கள் உள்ளனவோ ; அங்கங்கெல்லாம் எத்தனையெத்தனை பிரம்மாக்கள் உள்ளனரோ ?; யாரறிவார் ?

ஏதோ ஒரு ப்ரஹ்மாண்டத்தில், ஒரு ஸத்ய லோகத்தில் உனதருளால் தற்சமயம் நான் பிரமன் ! .. கங்கையின் மணலைப் போலே ; இந்திரன் பொழியும் மழையின் தாரைகள் போலே , எத்தனையெத்தனை பிரம்மாக்கள் இந்தப் பிரம பதவியில் இருந்துள்ளனர் என்பது எண்ணக் கூடியதன்று !!

என்னமுதினைக் கண்ட கண்கள் ; மற்றொன்றினை விரும்பாது !

உன்னிடத்தில் சொல்ல விரும்புவது ஒன்று தான் !! நீர் என்றென்றும் இங்கேயே, இக்கச்சியிலேயே எழுந்தருளியிருக்க வேண்டும் !!

” வைகுண்டே து யதா லோகே யதைவ க்ஷீரஸாகரே | ததா ஸத்யவ்ரத க்ஷேத்ரே நிவாஸஸ்தே பவேதிஹ ||

ஹஸ்திசைலஸ்ய சிகரே ஸர்வ லோக நமஸ்க்ருதே | புண்யகோடி விமானேஸ்மிந் பச்யந்து த்வாம் நராஸ் ஸதா || ”

உனக்குப் பிடித்தமான வைகுந்தத்தைப் போலே; திருப்பாற்கடல் போலே ; இங்கும் , இந்த ஸத்ய வ்ரத க்ஷேத்ரத்தில் , அனைவரும் வணங்கும் இத் திருவத்தி மாமலையில் , புண்யகோடி விமானத்தில் , உம்மை மனிதர்கள் எப்போதும் வணங்கட்டும் !

“அம்மா ! அடியேன் வேண்டுவதீதே ” என்று விண்ணப்பித்தான் பிரமன் !

எம்பெருமானும் ; பிரமனே ஸத்யமாகச் சொல்கிறேன் , அனைவருக்கும் காட்சி அளித்துக் கொண்டு , எப்பொழுதைக்குமாக இங்கேயே இருக்கப் போகிறேன் !

ஸந்தோஷம் தானே !

இந்த ஆதி யுகத்தில் , நீ கண்டிட வந்து தோன்றிய நான் ; இனிவரும் யுகங்களிலும் செய்ய வேண்டிய காரியங்கள் உள்ளன !

அவற்றைச் சொல்கிறேன் கேள் ! என்று தொடங்கினான்..

அவைகளை நாமுமறிய அடுத்த பகுதிக்குக் காத்திருப்போம் !

***

வரதன் வந்த கதை ( பகுதி 15-ல் 2 )

திருவத்தி மாமலையில் என்றென்றும் நின்று ” பின்னானார் வணங்கும் சோதியாய்” பேரருளாளன் திகழ்ந்திட வேண்டும் என்று பிரமன் இறைஞ்சிடவும் , அப்படியே ஆகட்டும் என்று திருவாய் மலர்ந்தருளினான் பகவான் !

பிரமனுக்குக் காஞ்சியிலேயே தங்கிவிட ஆசை ! இந்த ஆரமுதைப் பருகிக் களித்தவன் ; மீண்டும் ஸத்யலோகம் செல்ல மனமில்லாதவனாய் , “வேழமலை வேந்தனிடம் ” நித்தியமும் கைங்கர்யங்களைச் செய்து கொண்டு இங்கேயே ( காஞ்சியிலேயே ) தங்கிவிடும் தன்னுடைய ஆசையை வெளியிட்டான் !

” நித்யம் நிரபராதேஷு கைங்கர்யேஷு நியுங்க்ஷ்வ மாம் ” ( ந்யாஸ தசகம் ) என்றபடி , காஞ்சியில் தேவப்பெருமாள் திருவடியிணைகளில் கைங்கர்யத்தை வேண்டினான்..

பகவானின் எண்ணமோ வேறு விதமாக இருந்தது.

நான்முகனே ! உன் பக்திக்கு மெச்சினோம். ஆனால் நீ என் கட்டளையின் படி பிரம பதவியில் அமர்ந்து , பணிகளைச் செய்து வருகின்றாய் ! நீ அங்கில்லாமல், ஸத்யலோகத்தில் உள்ளோர் , உன்னைக் காணும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். நீ அங்கே செல்வதே என் விருப்பம் ! உன்னுடைய தூய்மையான மனதில் என்றென்றும் நானுள்ளேன் ! அஞ்ச வேண்டாம் . விரைந்து உன்னுலகம் செல் !

வேள்வியில் நீ நடந்து கொண்ட விதமும் , உன் அன்பும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றன ! வேள்வியில் ஹவிர்பாகங்களை தேவர்கள் மூலமாக அல்லாது நேரடியாக எனக்கே தந்தாய் !

தேவர்கள் அதனால் வருத்தமுற்று உன்னை வினவின போது ; நீ சொன்ன பதில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று !

பொதுவாக யாகங்களில் பற்பல தேவர்களுக்கு அவி உணவு ( ஹவிர்பாகம் ) வழங்கப்படும் ! அவ்வகை யாகங்கள் பெரும்பாலும் அற்ப சுகங்களை விரும்பியே செய்யப்படும். இந்த யாகமோ , எப்பயனையும் விரும்பிடாது ; பயனளிப்பவனையே வேண்டிச் செய்யப்படுவதொன்று .. ஆதலால் பரமாத்மாவிற்கே ஹவிஸ்ஸு நேரடியாக ஸமர்ப்பிக்கப்படும் என்று சொல்லி , அவ்விதமே நீ நடந்து கொண்டாய் !

உன்னுடைய இந்தத் தெளிவிற்கு எமது பாராட்டுகள் என்று வரதன் அருளினான் !

இனிவரும் காலங்களில் தனக்குக் காஞ்சியில் செய்ய வேண்டிய சில செயல்கள் உள்ளதாக , பேரருளாளன் சொல்லியிருந்தானே ! அது என்ன என்று அறியும் ஆவலில் , நான்முகன் அரியை வினவினான் !

சொல்கிறேன் கேள் என்று ஆரம்பித்தான் இறைவன்..

முதல் யுகமான இந்த க்ருத யுகத்தில் நீ என்னைப் பூசித்தது போல், அடுத்ததான திரேதாயுகத்தில் கஜேந்த்ரன் என்னைப் பூசிக்க உள்ளான் !

த்வாபர யுகத்தில் , முன்பு உன்னால் சபிக்கப்பட்ட ப்ருஹஸ்பதி , இன்னமும் சில சாபங்களின் காரணத்தால் , என்னைத் தொழுதிட இங்கு வருவார் ..

( ப்ருஹஸ்பதியும் பிரமனும் பரஸ்பரம் சபித்துக் கொண்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும் ! )

கலியுகத்தில் ஆதிசேஷன் என்னை அர்ச்சிப்பான்..

நான் என்றென்றைக்குமாக இந்த அத்திகிரியில் நின்று கொண்டு வரந்தரு மாமணி வண்ணனாய் , ஸநாதந தர்மத்தை வாழ்வித்துக் கொண்டு , ஸஜ்ஜநங்களைக் ( நல்லவர்களை ) காத்துக் கொண்டு , ப்ருகு புத்ரியாய்த் தோன்றிடும் பெருந்தேவியுடன் கூடி, ” பெருந்தேவி மணாளனாய் ” , கலியுக வரதனாய், கண் கொடுப்பவனாய் , அடியவர்களுக்கு ஸுலபனாய் நின்று ரக்ஷித்துக் கொண்டிருப்பேன் !

எனவே அன்றோ மாமுனிகளும் , “அத்யாபி ஸர்வபூதனாம் அபீஷ்ட பல தாயினே | ப்ரணதார்த்தி ஹராயாஸ்து ப்ரபவே மம மங்களம்” || என்றருளினார் !

( இப்பொழுதும் , அனைவருடைய கண்களுக்கும் இலக்காகிக்கொண்டு , வேண்டிய வரங்களைத் தந்து கொண்டு , அடியவர் துன்பங்களைப் போக்கிக் கொண்டிருப்பவனான தலைவனுக்கு என் மங்களங்கள் உரித்தாகட்டும் )

நீ ( பிரமனே ) சித்திரை – ஹஸ்தத்தில் தோன்றிய எனக்கு , வைகாசி – ச்ரவணத்தன்று அவப்ருதமாகக்( தீர்த்தவாரி ) கொண்டு, விசேஷமாக , மஹோத்ஸவமான ப்ரஹ்மோத்ஸவத்தை நடத்தி வைப்பாய் ! என்றான் !!

பிரமனும் அவ்விதமே செய்வதாக விண்ணப்பித்து ; நல்லவிதமாக உத்ஸவத்தை நடத்தி முடித்து, தன்னுலகம் மீண்டான் !

வரதன் நினைத்துக் கொண்டான் !!

பிரமனுக்குக் கலியுகத்தில் ஆதிசேஷன் பூசிக்கப் போகிறான் என்கிற அளவிற்குத் தான் சொன்னேன் !!

என் திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதனை நானேயன்றோ அறிவேன் !!

ஸத் ஸம்ப்ரதாயமான ஸ்ரீ வைஷ்ணவத்தை வளர்க்க நம்மாழ்வாருக்கு ” மயர்வற மதிநலம் ” அருள வேண்டும் ! பூதத்தாழ்வார் என் கருட சேவையைக் கொண்டாடிப் பாடிட நான் கேட்டின்புற வேண்டும் ..

திருமங்கை மன்னன் சோழவரசன் சிறையில் , “வாடினேன் வாடி ” என்று வாடிப்போகாதிருக்க , அவருக்குச் செல்வம் தரவேண்டியுள்ளது !

விந்திய மலைக் காடுகளிலிருந்து என் குழந்தை இராமானுசனைப் பெருந்தேவியுடன் கூடி ரக்ஷிக்க வேண்டியுள்ளது !

ஆளவந்தார் என்னை வணங்கி, பூதபுரீசர் யதிராஜராம் எம் இராமானுசனை “ஆமுதல்வனிவன் ” என்று அனுக்ரஹிக்க வழிவகை செய்ய வேண்டியுள்ளது !

அமுதினுமினிய சாலைக் கிணற்றுத் தீர்த்தத்தை இராமானுசர் தர, நான் ஆசை தீரப் பருக வேண்டியுள்ளது !

திருக்கச்சி நம்பிகளிடம் எத்தனை பேச யோசித்திருக்கிறேன் ! முக்கியமாக இராமானுசருக்காக ஆறு வார்த்தைகள் பேச வேண்டுமே !

திருக்கச்சி நம்பி திரு ஆலவட்டக் காற்றின் இனிமை சுகம் காணக் காத்திருக்கிறேன் நான் !

இராமானுசரை அரையருடன் திருவரங்கத்திற்கு அனுப்ப வேண்டும் ! கூரேசனார் வரதராஜஸ்தவம் பாட நான் கேட்டிட வேண்டும் !

நடாதூரம்மாள் பால் தரப் பருகிட வேண்டும் !

பிள்ளை லோகாசார்யராய் நானே தோன்றிட வேண்டும் ! அஷ்டாதச ரஹஸ்யம் அருளிட வேண்டும் !

ஈட்டினையும் , ஸ்ரீ பாஷ்யத்தினையும் காத்து வளர்த்திட வேண்டும் !

என்னையே உயிராய்க் கொண்டும் , ச்வாஸமாகக் கொண்டும் வாழப்போகும், வேங்கடேச கண்டாவதாரர் வேதாந்த தேசிகனை அநுக்ரஹிக்க வேண்டும் !

முக்யமாக , வேறெந்த திவ்ய தேசத்திலும் இல்லாத பெருமையாக , உபய வேதங்களை ( ஸம்ஸ்க்ருத மற்றும் த்ராவிட ( தமிழ் ) வேதங்கள் ) என்றென்றும் கேட்டு மகிழ்ந்திட வேண்டும் !

“அருளிச்செயல் பித்தன் ” என்று பெயர் வாங்கிட வேண்டும் !

இத்தனை பெருமைகள் உண்டானால் கண் த்ருஷ்டி படுமே எனக்கு ??!!!!

பொங்கும் பரிவுடையவர் ஒருவர் மங்களாசாசன ச்லோகங்கள் பாடினால் நன்றாயிருக்குமே !!

விசதவாக் சிகாமணிகள் , எம்பெருமானாரின் புனரவதார பூதர் மாமுனிகள் பரிந்து மங்களாசாசன ச்லோகங்கள் பாடப் போகின்றார் ! அதனைக் கேட்க வேண்டும் !!

மொத்தத்தில் “ஸம்ப்ரதாயப் பெருமாள்” என்று நான் பெயரெடுக்க வேண்டும் !!

பேரருளாளன் சிந்திக்கலானான் !!

எத்தனையெத்தனை ஆசைகள் எனக்குள்ளே !!

க்ருதயுகத்திலேயே திட்டமிட்டு , கலியுகத்தில் அவன் ( வரதன் ) பெற்ற பெருஞ்செல்வங்கள் இவை !!

இவையனைத்தையும் சிந்தித்தபடிச் சிரித்தான் பேரருளாளன் !

இக்காரணங்கள் அன்று பிரமன் அறியாதது !! இன்று நாம் அறிந்திருப்பது !!!!

என்னே வரதனின் தனிப்பெருங்கருணை !!

வரதன் வந்த கதையே மற்ற கதைக்கெல்லாம் விதை !!

எழுதியும் , வாசித்தும் போந்த நாமே பாக்கியசாலிகள் !!

” நமக்கார் நிகர் நீணிலத்தே ” என்று அனுஸந்தித்து நிற்போம் !!

– முற்றும் –

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

Meira Kumar express her gratitude to Sonia Gandhi

meira kumar - 2026

New Delhi:

Meira Kumar express her gratitude to Sonia Gandhi for selecting Presidential Candidate.

Meira Kumar has issued the following statement to the press today:-

I would like to express my gratitude to Congress President, Smt. Sonia Gandhi and the esteemed leaders of the seventeen political parties for their unanimous decision to nominate me as the presidential candidate. It is indeed an honour.

The post of the President carries the responsibility of safeguarding and defending our constitutional principles. It embodies the diversity of our socio-political culture and the vision of our composite ideology. It transcends the considerations of caste, religion or region. The post is not symbolic; it articulates, in the fullest sense, the basis of our electoral philosophy – that capability and experience must always supersede all other considerations.

The values I hold dear – of inclusiveness, social justice and pluralism – are the values the President must uphold as the supreme representative of our nation. If these values are undermined so is our Constitution, and India can then not hope to achieve the progressive modernity envisioned by its founding fathers and reflected in the collective will of its people.

I appeal to all the honourable members of the collegium to base their decision on these cherished principles and secure them for our future generations.

சவால் என வந்தால் நரகத்தையும் விலை பேசுவாள்: ‘மாம்’

mom trailer - 2026

மாம்: திரைப்படத்தை பற்றி…

ஒருபோதும் பெண்ணுடைய வலிமையை குறைத்து மதிப்பிடவேண்டாம். ஏனெனில் சவால் என்று வந்துவிட்டால், அவள் நரகத்தையும் விலை பேசுவாள்.

தேவகி சபர்வால் கணவர் ஆனந்த் மற்றும் இரு அழகான பெண் குழந்தைகள் ஆர்யாவுடனும் பிரியாவுடனும் மன மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். ஆனால் ஏனோ ஒரு தாயுள்ளத்தின் உண்மையான மனமகிழ்ச்சியை தான் இன்னும் உணரவில்லை என்பது அவருக்குப் புரிகிறது. ஆரியாவால் தன் தந்தையிடம் காட்டும் நெருக்கத்தை தன் தாயிடம் காட்ட இயலவில்லை. ஒரு மகள் தன்னுடைய தாயின் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பெறுகிறாள், ஆனால் ஒரு தாய் தன்னுடைய மகளின் வாழ்வில் அத்தணை முக்கியத்துவம் பெறுவதில்லை என ஆர்யா திடமாய் நம்புகிறாள். வார்த்தைகளால் சொல்லாவிடினும், ஒரு தாய்க்குத் தானே தெரியும் தன் மகளை பற்றி என்று, தேவகியும் தன் மகள் ஒரு நாள் புரிந்துகொள்வாள் என பொறுமையாகக் காத்திருக்கிறாள்.  இந்த சூழலில் திடீரென நடந்த ஒரு கொடூரமான நிகழ்வு, இருவருக்குமிடையேயான உறவில் சரி செய்ய முடியாத ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தி விடுகிறது. தேவகி முன் இருப்பது, சரி எது தவறு எது என்பதல்ல. எது தவறு எது சரியல்ல என்பதே. இந்த போராட்டத்தில், தேவகி தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், கிடைக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பும், எடுக்கும் முடிவுகளும் மட்டுமே, அவளுக்கு தன் மகள் ஆர்யாவின் அன்பைப் பெற்று தரும்.  

கதாபாத்திரங்களைப் பற்றி:

ஸ்ரீதேவி கபூர்

ஸ்ரீதேவி கபூர் முக்கிய கதாபாத்திரமான தேவகி சபர்வாலாக நடித்துள்ளார். இரு அழகான பெண் குழந்தைகளின் தாயாய், ஒரு வேலைக்கு போகின்ற வயதான பெண்மணியாய் உலா வருகிறார். அவளுக்கு புரிதலுக்கும், அனுதாபத்திற்கும் உள்ள வேறுபாடு நன்றாகத் தெரியும். தேவகிக்கும் ஆர்யாவுக்கும் இடையே இருக்கும் இந்த உள்ளார்ந்த அடிப்படை பதற்றத்தை எவ்வளவு முயன்றும் குறைக்க முடியவில்லை. இந்த நேரத்தில், ஆர்யாவின் வாழ்வில் ஏற்பட்ட அந்த கொடூர சம்பவம், அவளைப் புரட்டிப் போட்டு விட, தேவகி அத்தனை எதிர்ப்புகளையும், தடைகளையும் எதிர்த்துப் போராடி தன் மகளின் அன்பை பெறுகிறாள்.

அக்ஷய் கண்ணா

மேத்யு பிரான்சிஸ், எனும் ஒரு குற்றபிரிவு காவல்துறை அதிகாரியாக அக்ஷய் கண்ணா களமிறங்குகிறார். ஒரு குற்றவாளி விடுதலையானால் அடையும் வெறுப்பை விட, வேறு யாராவது தன் வேலையை செய்தால் அதிக வெறுப்படைபவர். நேர்மையும், சுய நீதியும் கொண்ட மேத்யு, தன் வாழ்வின் மிக கடினமான, ஒரு சவாலான ஒரு வழக்கோடுப் போராடிக் கொண்டிருக்கிறார். தன் வாழ்நாளில் முதன் முறையாக ஒரு குற்றத்தைத் தன்னால் நிரூபிக்க முடியவில்லை என்பதை அவர் உணர ஆரம்பிக்கிறார்.

அத்னான் சித்திக் 

தேவகியின் கணவர், ஆனந்த் சபர்வாலாக அத்னான் சித்திக் வாழ்ந்திருக்கிறார். தன்னுடைய மனைவியின் மீதும், இரு மகள்களின் மீதும், நிபந்தனையற்ற நிறைவான அன்பு செலுத்தும் ஒரு மனிதர். அந்த துயர சம்பவம் நிகழ்ந்த போது, தன் மகளுக்கு ஒரு நம்பிக்கையாய், பலமாய், தைரியம் சொல்லித் தேற்றி  வருகிறார்.

 சஜல் அலி:

ஆர்யா சபர்வாலாய் சஜல் அலி நடித்துள்ளார். எளிதில் உணர்ச்சி வசப்படும் ஆர்யா, தன் தந்தையிடம் பேரன்பு கொண்டிருகிறாள். தன்னுடைய தங்கை, பிரியாவை அன்புடன் வரவேற்கும் ஆர்யாவால், ஏனோ தன்னுடைய தாயை ஏற்று கொள்ள முடியவில்லை. உற்சாகமாகவும், கொஞ்சம் முரட்டு புத்திசாலித் தனத்துடனும் வலம் வரும் ஆர்யா, அந்த துயர சம்பவத்திற்கு பின் உடைந்து, நொறுங்கிப் போகிறாள். நம்பிக்கையைத் தேடித் தன் வாழ்வின் மீதியையும் தொலைத்துக் கொண்டிருக்கிறாள்.

ரீவா அரோரா:

தேவகியின் இளைய மகள் பிரியா சபர்வாலாய் ரீவா அரோரா வருகிறார். இந்த துறுதுறு சுறுசுறு அழகி, அனைவரது கண்களையும் கவனத்தையும் கவர்ந்து, கலகலப்பூட்டும் ஒரு பைங்கிளி. பிரியா குடும்பச் சூழலில் ஏதோ ஒரு அசௌகரியம் நிலவுவதைப் புரிந்துகொண்டு, சிரிப்பையும், சந்தோஷத்தையும் மீட்க முயற்சிக்கிறாள்.

சிறப்பு வேடத்தில் நவாசுதீன் சித்திக்:

தயாசங்கர் கபூர், சுருக்கமாக – டிகே என எல்லோராலும் அழைக்கப்படும் வேடத்தில், நவாசுதீன் சித்திக் மிளிர்கிறார். தார்யகஞ்ச்சின் மிக நெருக்கடியானப் பகுதியில் தூசிபடிந்த ஒரு சிறிய அலுவலகத்திலிருந்து கொண்டும், ஒரு ஆபத்தான ஸ்கூட்டரில் பயனித்துகொண்டும், சிறிய அளவிலான துப்பறியும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு துப்பறியும் நிபுணர். நகைச்சுவையான இவர், உணர்ச்சிவயப்பட்டு தன்னுடைய சக்திக்கு மீறிய ஒரு வழக்கில் தன்னை இணைத்து கொள்கிறார்.

தயாரிப்பாளர் – போனி கபூர்

எல்லோராலும் வெகுவாக பாராட்ட பெற்ற மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் தயாரிப்பாளர். இந்திய திரையுலகின் “நூற்றாண்டு கண்ட இந்திய சினிமா” விழாவில் சேகர் கபூரால் இயக்கப்பெற்ற இத்திரைப்படம், சிறந்த நூறு படங்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கபட்டு கௌரவிக்கப்பட்டது.

வணிக நோக்கில் வெற்றியென்பது மட்டுமில்லாமல், ஆக்கப்பூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைக்கும் திரைப்படங்களைத்  தயாரிப்பது அவரது தனித்திறமை. ராஜ்குமார் சந்தொஷி இயக்கத்தில், 2000ல் இவர் தயாரித்து வெளிவந்த ‘புகார்’, திரைதுறையின் உயரிய விருதான,  இரண்டு தேசிய விருதுகளை வென்றது.

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் 2002ல் வெளிவந்த “கம்பனி”, பரிந்துரைக்கப்பட்ட பதினோரு பிரிவுகளில், ஆறு பிரிவுகளில் விருதுகளைத் தட்டிச் சென்றது.  இத்திரைப்படம், 2004ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்டின் திரைப்பட விழாவிலும், நியூயார்க்-ஆசிய திரைப்பட விழாவிலும், வெகுவான பாராட்டுகளையும் பெற்றது. அவர் தயாரித்து 1997ல் வெளிவந்த “ஜுடாய்” ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம். இவர் தயாரிப்பில் 2005 ல் வெளிவந்த “தி காமெடி”, “நோ என்ட்ரி”  மாபெரும் வசூலை வாரி குவித்தது. 2009 ல் சல்மான்கானை கதாநாயகனாக நடிக்க வைத்து அவர் தயாரித்த “wanted” அனைத்து முந்தைய சாதனைகளையும் முறியடித்து, இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.  100 கோடியும், அயல்நாடுகளில் சுமார் ரூ. 26  கோடியும் விற்பனையாகி வசூல் சாதனை படைத்தது.

போனி கபூர் அறிமுகப்படுத்திய பல நடிகர்கள், இன்று ஹிந்தி திரையுலகின்  முன்னணி திரை நட்சத்திரங்களாக உலா வருகின்றனர். அவர் “வோஹ் சாத் தின்” மூலம் அணில் கபூரையும், “கோயி மேரே தில் சே பூச்சே” மூலம் இஷா தியோலையும், “ப்ரேம்” மூலம் சஞ்சய் கபூரையும், தபுவையும் அறிமுகப் படுத்தியுள்ளார்.  அவருடைய ஆரம்ப காலங்களில் தயாரித்த “ஹம் பான்ச்”, மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அம்ரிஷ் பூரி, ஹிந்தி திரை உலகில் தங்களை நிலைப்படுத்தி கொள்ள பெருமளவில் உதவியது. முப்பது திரைப்படங்களுக்கு மேல் தயாரிப்பாளராக தன்னை நிலை நிறுத்திகொண்ட போனி கபூரின் சமீபத்திய படைப்பான “மாம்” வரும் ஜூலை 7ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இத்திரைப்படம் அவரது மனைவியும் பழம்பெரும் நடிகையுமான ஸ்ரீதேவியின் 300வது திரைப்படம் மட்டுமல்ல, ஸ்ரீதேவியின் 50 ஆண்டுகாலத் திரையுலக வாழ்க்கையின் முத்தாய்பாகவும் அமைகிறது.

தயாரிப்பாளர்: சுனில் மன்சந்தா

சுனில் மன்சந்தா “மேட் பிலிம்ஸ்” நிறுவனத்தின் உரிமையாளர். இந்நிறுவனம் சின்னத்திரைக்கு உயர்தரமான விளம்பரதாரர் நிகழ்சிகளைத் தயாரித்து வழங்கி வந்தது. சுனில் அவருடைய பால்ய நண்பரான முகுல் ஆனந்துடன் இணைந்து இந்நிறுவனத்தை 1991 ஆம் ஆண்டு துவக்கினார். இருவரும் இணைந்து வாசகர்கள் இதுவரை கண்டிராதப் பல பிரபலமான, புதுமையான  நல்ல நிகழ்சிகளை தயாரித்து பெயர் பெற்றனர். ஆயினும் 1997 ல் நண்பர் முகுல் ஆனந்தின் திடீர் மறைவுக்கு பின், தனித்திருந்து  எல்லாவற்றையும் கவனித்து கொண்டு இந்நிறுவனத்தை வானளாவிய  வளர்ச்சிக்கு இட்டுச் சென்றார்.  கடந்த 20 ஆண்டு காலத்தில் 1500 விளம்பரதாரர் நிகழ்சிகளையும், 8 முழு நீள திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்ட இந்நிறுவனத்தின் “பா” 2009ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைத் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

ஆர்வமும் ஆளுமைத் திறனும் ஒருங்கே இணைந்த சுனில், 2012ம் ஆண்டு “மேட் ஸ்டுடியோசை” துவக்கினார். இந்நிறுவனம் இதுவரை கண்டிராத, ஈடுஇணையற்ற பல புதுமையான தொழில் நுட்பங்களையும், தேவையான அத்தனை உபகரணங்களையும், ஏற்பாடுகளையும், திரைப்படத் தயாரிப்பு என்ற ஒற்றை சாளரதுக்குள் கொண்டு வந்து சாதனை படைத்தது. இன்றும் மேட் ஸ்டுடியோஸ் திரைப்படத் துறைக்கு தேவையான வாடகை உபகரணங்கள் வழங்கும் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கிறது.  இந்நிறுவனம் தயாரித்த தேரே நாம், சீனி கம், பா போன்றவை மிக பெரிய வசூலை தந்தது.

இந்த ஆண்டு சுனில், போனி கபூருடன் இணைந்து “மாம்” தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல்

ஜீ குழுமத்தின் அங்கமான இந்நிறுவனம், உலக அளவில் திரைப்பட விநியோகம், மற்றும் கையகபடுத்துதல் போன்ற துறைகளில் தன்னை ஈடுபடுத்திள்ளது. இந்தியாவின் முன்னணி சின்னத்திரை சேனல்கள், ஊடகம், மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களை உள்ளடக்கிய ஜீ லிமிடெட் 169 நாடுகளில், சுமார் 95 கோடி வாசகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறது. ஜீ ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பாலிவுட் படங்களை மட்டுமில்லாமல், சர்வதேச மொழிகளில் வெளியிடப்படும் பல்வேறு படைப்புக்களையும் கையகப்படுத்தி விநியோகித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான வெளியீடுகளில் முக்கியமாக மோஹித் சூரி இயக்கும் ஹாப் கேர்ள்பிரண்ட் திரைப்படமும், ரவி உத்யவர் இயக்கும் “மாம்” திரைப்படமும் இடம் பெற்றுள்ளது.

 

இசை அமைப்பாளர்: ஏ ஆர் ரஹ்மான்

இந்த இசைமேதை, இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தனிஇசை தயாரிப்பாளர், இசைக்கலைஞர், கொடையாளர் போன்ற பன்முக பரிமாணங்கொண்ட மாமனிதர். இந்திய சாஸ்த்ரீய சங்கீதத்தை, மின்னணு சாதனங்களின் மூலமும், பாரம்பரிய இசைக்குழுவுடனும் சேர்ந்து உலக இசையுடன் இணைத்துப் பெருமை சேர்த்தவர்.

இரண்டு அகடெமி விருதுகள், இரண்டு கிராமி விருதுகள், ஒரு பாப்தா விருது, ஒரு கோல்டன் க்ளோப் விருது, நான்கு தேசிய விருதுகள், பதினைந்து பிலிம் பேர் விருதுகள், மற்றும் பதினைந்து தென்பிராந்திய பிலிம் பேர் விருதுகளைப் பெற்றவர். இந்திய அரசால் 2010ம் ஆண்டு உயரிய தேசிய விருதான “பத்ம பூஷன்” கொடுத்து கௌரவிக்க பட்டவர்.  டைம் பத்திரிகை 2009ம் ஆண்டு, உலகின் முதல் நூறு செல்வாக்குடைய மனிதர்களுள் ஒருவராய் இவரை இணைத்து கொண்டது. இவரை 2011ம் ஆண்டு “சாங் லைன்” என்ற ஆங்கிலேய இசை பத்திரிகை, “நாளைய உலகஇசையின் அடையாளச்சின்னம்” என  கௌரவித்து மகிழ்ந்தது.

இந்திய அளவிலும், உலக அரங்கிலும் திரைப்படதுறையில் மிகவும் பிரபலமான, ஒரு இசை வல்லுநர். இந்திய திரையுலக இசையை மாற்றி அமைத்ததோடு மட்டுமல்லாமல் பல திரை படங்களின் மேலான வெற்றிக்கும் வித்திட்டிருக்கிறார். ரஹ்மான் ஒரு தலை சிறந்த மனிதநேயமிக்கவர், பண்பாளர், கொடையாளர், பல்வேறு நல்ல காரியங்களுக்காக தன்னுடைய பங்களிப்பு மட்டுமின்றி பணம் திரட்டவும் உதவி வருகிறார்.

இயக்குனரின் குறிப்பு:

விளம்பர பட இயக்குனரான, ரவி உத்யவர் “மாம்” என்ற இத்திரைப்படத்தின் மூலம், ஸ்ரீதேவி, நவாசுதீன் சித்திக், மற்றும் அக்ஷய் கண்ணா ஆகியோரை இயக்குகிறார். ஒரு உணர்வுப்பூர்வமான திகில் நிறைந்த இத்திரைபடம், ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையேயான உறவின் நெருக்கத்தை ஆராய்கிறது.

நான் முதல்முறையாக போனி கபூரை சந்திக்கும்போது, “இந்த கதை ஒரு சிறு விதையாய் எங்கள் மனதில் இருந்தது” என்கிறார் ரவி. வெகுநாளாய் நான் இதைப் பற்றி ஒரு படம் இயக்க ஆவலாய் இருந்தேன். ஏனென்றால் உறவுமுறைகளும், அதனூடே பிணைந்து இருக்கும் சிக்கல்களும், எனக்கு மிகவும் முக்கியமாகப் பட்டது. எப்போதுமே மனித உறவுகளுக்குள் இருக்கும் சங்கேத மொழிகளும், உதிர்க்கப்படாத வார்த்தைகளும், அவை பேசப்படாமலேயே ஏற்படுத்தும் புரிதல்களும், தாக்கங்களும்  மனித வாழ்வின் சிக்கல்களைப் பறைசாற்றும் மௌன கவிதைகளாகவே என்னை ஈர்த்தது.

ஒரு தாய்க்கும் அவளது குழந்தைக்குமான உறவு என்பது வாழ்நாள் வரை நீடிக்கும் ஒரு பந்தம். அதற்கு ஒரு சோதனை ஏற்படும் போதோ, அல்லது களங்கம் ஏற்படும் போதோ, ஒரு தாயானவள் எப்பாடுபட்டேனும் அதனை பாதுகாக்கத் துணிகிறாள். இதனை நான் ஆழ்ந்து ஆராய விரும்பினேன். ஒரு தாயின் குணாதிசியங்கள் இப்படித்தான் இருக்கும் என்பது உண்மையானால், இரத்த சம்பந்தம் இல்லாத தாய் என்றாலும் இப்படிதானோ? உதிரத்தை பகிராமல், இதயத்தைப் பகிர்ந்தாலும் இத்தனைப் பாதுகாப்புணர்ச்சியும் பரிவும் ஒரு தாயுள்ளத்துக்கு உண்டோ?

வடஇந்தியா மாறிக்கொண்டிருக்கிறது என்றாலும் கூட, பெரும்பாலும் ஆண்களின் மேலாதிக்கம் வலுவாகவே இருக்கிறது. ஒரு பெண் அமைதியாக வாழ்வதற்கே இங்கு இருமடங்குப் பலமாக போராடவேண்டியுள்ளதால் என்னுடைய கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும் வட இந்திய நகரங்களான தில்லியுலும் நொய்டாவிலும் அமைத்திருக்கிறேன்.  இந்த கதாபாத்திரங்களின் வழியேதான் நான் இந்த கதையை உங்களோடு பகிர்ந்து கொள்ள போகிறேன். இதன் மூலம், நீங்களும் கதாபாத்திரங்களாகவே மாறி, அவர்களோடு சேர்ந்து உணர்வுகளை புரிந்து கொள்ளவும், அழுகையும், சிரிப்பும், கோபமுமாக பயணிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஜூலை 7 முதல் ‘மாம்’

[su_youtube_advanced url=”https://www.youtube.com/watch?v=f-Cn9-5DvPE” width=”720″ autoplay=”yes”]

31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி38

pslv38 - 2026

சென்னை:

29 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட 31 செயற்கைக்கோள்களைச் சுமந்து கொண்டு ‘பி.எஸ்.எல்.வி., – சி 38’ ராக்கெட் இன்று விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. – சி 38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட் – 2 செயற்கைக்கோளை இன்று காலை 9:29க்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை 5:29க்கு துவங்கியது.

பூமியைக் கண்காணிக்கும் கார்ட்டோசாட் செயற்கைகோளுடன் ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து 29 செயற்கைக்கோள்களும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

மேக் இன் இந்தியா திட்டம் மூலம் அறிவியல் ரீதியில் சிறப்பான முன்னேற்றத்தை நாடு எட்டும் என அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இது குறித்து தனது டிவிட்டர் பதிவில் பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்தியில்,

பி.எஸ்.எல்.வி., – சி 38 ராக்கெட் மூலம், ‘கார்ட்டோசாட் – 2’ செயற்கை கோளை, இன்று காலை (23.06.2017)ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, வெற்றிகரமாக இஸ்ரோ நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது   மகிழ்ச்சி அளிக்கிறது. பிஎஸ்எல்வி ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயலால் இந்தியா உலக அரங்கில் நிமிர்த்து நிற்பதுடன், ஒவ்வொரு இந்தியரையும் பெருமை அடைய செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை… என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

மனு தாக்கல் செய்தார் ராம்நாத் கோவிந்த்: பிரதமர் மோடி உள்பட 20 மாநில முதல்வர்களும் பங்கேற்பு

presidential-candidate-ramnath-kovind

புது தில்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், பாஜக.,வின் வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார் ராம்நாத் கோவிந்த். அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் பிரதமர் மோடி உள்பட, 20 மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பா.ஜ.க. சார்பில் பீகார் மாநில ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ.க.வின் தாழ்த்தப்பட்டோர் பிரிவான தலித் மோர்ச்சாவின் தலைவராக இருந்த அவருக்கு, பெரும்பாலான கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. அவரை எதிர்த்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமார் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு 17 கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. இதனால் இத்தேர்தல் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரது வேட்பு மனுவை எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தலா 50 பேர் முன்மொழியவும், வழி மொழியவும் வேண்டும். அதற்கேற்ப முன்மொழிவோர், வழிமொழிவோர் என 4 குழுக்களாக பா.ஜ.க. தலைமை பிரித்திருந்தது. ஒவ்வொரு குழுவிலும் தலா 60 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றிருந்தனர்.

பா.ஜ.க. குழுக்களில் இடம் பெற்றிருந்த அனைவரும் நேற்று தில்லிக்கு வரவழைக்கப்பட்டு, இன்று காலை நாடாளுமன்ற நூலக கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் வந்ததும், வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வு தொடங்கியது. பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் புடைசூழ ராம்நாத் கோவிந்த் தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியான நாடாளுமன்ற தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து முன்மொழிபவர்கள், வழிமொழிபவர்களின் மனுக்கள் வழங்கப்பட்டன. இதற்கான முதல் குழுவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். கட்சித் தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் 2-வது குழுவினரும் மனுக்களை கொடுத்தனர். மூன்றாவது குழுவில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளத் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். அவரை வழிமொழிவதற்கான 4வது குழுவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இவ்வாறு 4 குழுக்களாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதும், அனைவரும் ராம்நாத் கோவிந்துக்கு கை குலுக்கியும், மலர் கொத்துகள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தக் குழுக்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட 20 மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றனர். காஷ்மீர் முதல்வர் மெகபூபா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோரும் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.

முன்னதாக, ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து அறிவிப்பு வெளியிட்ட ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் பிஜு ஜனதாதளம் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக்கும் கலந்து கொள்ளவில்லை.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம், அடுத்த மாதம் 24ஆம் தேதி முடிவடைகிறது. அடுத்த மாதம் 17ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல், வருகிற 28ஆம் தேதி முடிவடைகிறது.

பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்துக்கு பாஜக., கூட்டணியில் இடம்பெறாத அ.தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. முன்னதாக, ராம்நாத் கோவிந்த் வேட்புமனு தாக்கல் செய்யும்போது, உடன் இருக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பல்வேறு முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று தில்லி சென்றார்.