Home Blog Page 5642

நினைவிடம் வேண்டாம்; நினைவாக மரங்களை நடுங்கள்: அனில் மாதவ் தவே உருக்கம்!

anil madhav dave - 2026

புது தில்லி:

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே, உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவர் தனது நினைவாக மரங்களை நடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார். 60 வயதான அவர், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மோடி அமைச்சரவையில் சென்ற வருடம் தான் சேர்க்கப்பட்டு, சுற்றுச்சூழல் துறைக்கு பொறுப்பு வகித்தார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரமாக நடைபெற்றபோது, அது தொடர்பான கோரிக்கைகளை அனில் மாதவ் தவேயிடம் தமிழக அரசு கொண்டு சென்றது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பட்டு, உடனடியாக சட்டம் நிறைவேற அனில் மாதவ் தவே உறுதுணையாகவும் ஆர்வமாகவும் செயல்பட்டார்.

இந்நிலையில் தவே, 2012-ஆம் ஆண்டு எழுதப்பட்ட உயில் குறித்த விவரம் இப்போது வெளியாகியுள்ளது. தன் உடல் நர்மதா ஆற்றங்கரையில் எரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள அவர், ‘என் மேல் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள் இருந்தால், எனக்காக எந்த இடத்திலும் நினைவிடம் எழுப்ப வேண்டாம்; அதற்கு பதில், ஒரு மரம் நடுங்கள் போதும்.’ என்று உயிலில் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவரம் வெளியானதும், அவரது ஆதரவாளர்கள் கனத்த மனத்துடன் அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். தவே, ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரூ.45 கோடி பழைய நோட்டுகள் பிடிபட்ட விவகாரம்: தண்டபாணிக்கும் பாஜக,.வுக்கும் என்ன தொடர்பு?

bjpcurrenciescaptured - 2026

சென்னை:

சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனி 2வது தெருவில் தண்டபாணி என்பவருக்குச் சொந்தமான வீட்டில் சாக்கு மூட்டைகளில், ரூ. 45 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளைப் பதுக்கி வைத்துள்ளதாக போலீஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்திய போலீஸார் பணத்தைக் கைப்பற்றினர். இதில் பிடிபட்ட தண்டபாணி என்பவர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பாஜகவைச் சேர்ந்த நபர் என்று ஊடகங்களில் தகவல் பரப்பப் பட்டது. ஆனால், அவருக்கும் பாஜக.,வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், ஊடகங்கள் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியில் செய்தியை வெளியிட்டதாகவும் பாஜக., தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் யார் அந்த தண்டபாணி என்பது குறித்தும், ஊடகங்களில் வெளியான பொய்ச் செய்தி குறித்தும் பாஜக ., பிரமுகர் ஓமாம்புலியூர் ஜெயராமன் கூறியது…

மீண்டும், மீண்டும் சிலுவையில் ஊசலாடும் ஊடக தர்மம்.

இன்று காலை முதலே பெரும்பாலான தொலைக்காட்சி channelகள் சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ராமலிங்கம் &co என்ற நிறுவனத்தின் உரிமையாளர் தண்டபாணி வீட்டில் 45கோடி பெருமானமுள்ள பழைய 500, 1000ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது, அவர் பாஜக பிரமுகர் என செய்தி சொன்னனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் நம் கட்சியின் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாதிருந்தவர் இந்த தண்டபாணி. 2015ம் ஆண்டில் மரணம் அடைந்த சூளைமேட்டைச் சேர்ந்த திரு.ஆனந்தராஜ் மூலம் 4,5கூட்டங்களுக்கு வந்து, பின்னர் இக்கட்சி நமக்கு செட்டாகாது என திரும்பிப் பார்க்காமல் சென்ற இந்த தண்டபாணியைத் தான் தமிழ் தொலைக்காட்சிகள் நடுநிலையோடும், ஊடக தர்மத்தோடும், பொறுப்பும் பொது நலத்தோடும் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டு குதூகலிக்கின்றனர்.
பாஜகவின் ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், தென் சென்னை தலைவர் Dolphin ஸ்ரீதரும் பல தொலைக்காட்சி நிறுவனங்களை அழைத்து பாஜகவில் தண்டபாணி உறுப்பின்ராகக் கூட இருந்ததில்லை, தவறான தகவலை நிறுத்தவும் எனக் கூறினர். சில ஊடகங்கள் மட்டுமே தண்டபாணி வீட்டில் சோதனை பற்றி சொல்லி பாஜககாரன் என சொல்லவில்லை.

ஆனால் News7, கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி போன்றவர்கள் மட்டும் மீண்டும் மீண்டும் பாஜககாரன் என செய்தி ஒளி பரப்பினர். மதியம் 1மணியளவில் News7 நெல்சனை தொலைபேசியில் அழைத்து என் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தேன். ஆனால் இது வரை news7 scrollingல் நீக்கவில்லை. ஒருசில channelகள் தவிர மற்ற அனத்து சேனல்களும் பாஜக உறுப்பினர் என்றே தகவலை பரப்பி நம்மைக் கேவலப் படுத்தும் வேலையை சிறப்பாக செய்கின்றனர்.

1996ல் வைகோவை எதிர்த்து ரவிச்சந்திரன் என்பவர் MLA ஆனார். அவர் தேர்தலில் நிற்கும்போதே ஆடு திருடிய வழக்கு பதிவாகி இருந்தது. பின்னர் 2002ம் ஆண்டு வாக்கில் திமுக தலைப்பொதுக் குழு உறுப்பினர் ஆக இருந்தபோது காவல்துறையால் 2கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயுனுடன் கைது செய்யப்பட்டார். பினர் காவல்துறையிடமிருந்து தப்பி ஓடி தலைமறைவானார் ரவிசந்திரன். இதே ரவிச்சந்திரன் police உடையில் போய் வழிப்பறி கொள்ளையிலும் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வீராணம், பூச்சிமருந்து, 2G,ஹெராயின் கடத்துபவர்கள் தங்கள் கட்சியில் இருப்பது போன்று தான் பாஜகவிலும் இருப்பார்கள் என கலைஞர் தொலைக்காட்சி நினைத்துவிட்டார்கள் போலும்.

காங்கிரஸ் ஜோதிமணி, கட்சிமாறி கிஷோர் போன்றவர்களும் பாஜக பிரமுகர் என தீர்ப்பே எழுதிவிட்டனர். நம் கட்சியைச் சேர்ந்த ஒருவருடன் கிஷோர் ஒருமுறை கமலாலயம் வந்தார். ஏதோ ஒரு forgery வழக்கில் கிஷோர் மாட்டினால் அவரும் பாஜக உறுப்பினர் என சொல்வார்களா? ஏனெனில் தன் நண்பருடன் கமலாலயம் வந்துள்ளாரே?

ஏரித் திருடன், கார்னெட் மணல் திருடன், கல்விக் கொள்ளையர்கள், Media முகமூடியுடன் அலையும் திக குடும்ப வாரிசு, Bofors திருட்டு கட்சியின் கரூர் மணல் கொள்ளையனிடம் மாமூல் வாங்கும் ஜோதி, மன்னார்குடி mafiaவிற்கு PRO வேலை பார்க்கும் பச்சோந்தி யோக்யசிகாமணி போன்றோர் உரத்த குரலில், பாஜக உறுப்பினரே இல்லாத ஒருவனை பாஜககாரன் எனச் சொல்லி தம் அரிப்பை தீர்த்துக் கொள்கிறார்கள்.
நம் கட்சியின் வழக்கறிஞர் பிரிவும், IT பிரிவும் விறைந்து செயல்பட்டு பொய்யை முறியடித்து, உண்மையை ஊருக்கு உறக்க சொல்ல வேண்டும்.

ஐசிசி வருடாந்திர டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைத் தக்க வைத்தது இந்தியா

icc test ranking india number one - 2026

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒவ்வாரு வருடமும் மே மாதம் வருடாந்திர தர வரிசையை வெளியிடும். இதில் டெஸ்ட் போட்டிக்கான அணிகள் தர வரிசையில் இந்தியா 1 புள்ளி கூடுதலாகப் பெற்று 123 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இரண்டாவது இடத்தைப் பிடித்த தென்ஆப்பிரிக்க அணி 8 புள்ளிகள் கூடுதலாக பெற்று 117 புள்ளிகள் பெற்றது. இதற்கு முன் இந்தியா தென்ஆப்பிரிக்கா இடையே 13 புள்ளிகள் இடைவெளி இருந்தது. தற்போது இது 6 புள்ளியாக குறைந்துள்ளது.

ஆஸ்திரேலியா 108 புள்ளியில் இருந்து 100 புள்ளிக்கு சரிந்து 3-வது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து இரண்டு புள்ளிகள் சரிந்து 99 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
4 புள்ளிகள் சரிந்த பாகிஸ்தான் 93 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
இலங்கை 91 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் 75 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், வங்காள தேசம் 69 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும் உள்ளது.
ஜிம்பாப்வே புள்ளிகள் ஏதும் பெறாமல் 10-வது இடத்தில் உள்ளது.

“அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்!” -பெரியவா

kanchi periyava - 2026

“அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்!” -பெரியவா

(தன் பக்தர்களுக்கு இடர் வருவதை முன்கூட்டியே அறிந்து அதற்கான நிவர்த்தியுடன் அனுப்பும் அந்த மகானின் கருணை உள்ளத்தை எவ்வாறு அளவிட முடியும்)

கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவாளைப் பார்க்க வரும் கூட்டம் பெரும்பாலும் நிரந்தரமானது. யார் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்பதையும் பெரியவா நன்றாகவே அறிந்து
வைத்திருந்தார்.

அன்று கூட்டத்தில் ஒரு மூதாட்டி, பகவானின் அருட்கடாட்சத்துக்காக நின்றுகொண்டிருந்தார்.சேவை முடிந்ததும் ஒரு தட்டில் சில பழங்களை வைத்து,
அந்த அம்மையாரை எடுத்துக்கொள்ளச் சொல்கிறார்.

மிகவும் திருப்தியாகப் பழங்களை எடுத்துக்கொண்ட அந்த அம்மையார் பழத்தோடு சேர்ந்துவந்த மெல்லிய மரிக்கொழுந்து காம்பு ஒன்றை எடுத்துக் கீழே போட்டு விட்டு பழங்களை மட்டும் எடுத்துப் பையில் போட்டுக் கொண்டார்!

“அதையேன் கீழே போட்டுட்டே? அதுவும் உபயோகமாக இருக்கும்.எடுத்துக்கோ!” என்றார் மகான் சிரித்தவாறே. பெரியவா சொல்லிவிட்டாரே என்பதற்காக,அந்த
அம்மையாரும் மரிக்கொழுந்துக் காம்பை எடுத்துத் தனது பையில் போட்டு பத்திரப்படுத்திக் கொண்டார்.

“ஏன் இதை பத்திரமாக எடுத்துக்கொண்டு போகச் சொன்னார்?” என்றெல்லாம் அந்த அம்மாள் அப்போது யோசிக்கவில்லை.மகானிடம் கேட்கவும் இல்லை.

தன் ஊருக்குப் போக அம்மையார் பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டார். பஸ் புறப்பட்டதும் அப்படியொரு தூக்கம். அருகில் அமர்ந்து இருந்த பெண், தூங்கும்
அம்மையாரின் பையிலிருந்த பணப்பையைத் திருடிக் கொண்டாள்.

கண்டக்டர் வந்தார்.டிக்கெட் எடுக்க வேண்டுமல்லவா?

குரல் கேட்டு விழித்தெழுந்த அம்மையார்,பையில் பணப்பையைத் தேடினார். அது அங்கே இல்லை! பக்கத்தில் இருந்த பெண்ணின் கையில் இருந்தது.

“அது என் பர்ஸ்!” என்று இந்த அம்மையார் பதற்றத்தில் கதற…”இல்லை, இல்லை…இது என்னுடையதுதான்!” என்று பக்கத்திலிருந்த பெண் சொல்ல, அங்கே களேபரம்ஆகிவிட்டது!

பர்ஸில் இவ்வளவு பணம்தான் இருக்கிறது என்று கச்சிதமாகச் சொல்கிறாள் எடுத்தவள். எண்ணியும் வைத்திருக்கிறாள் என்பது பர்ஸின் நிஜ சொந்தக்காரிக்கு மட்டுமே தெரியும்!.

கண்டக்டரோ, யாரை நம்புவது என்று தெரியாமல் தத்தளிக்கிறார்.

அப்போதுதான் அந்த அம்மையாருக்குப் பெரியவா மரிக்கொழுந்து காம்பைப் பத்திரமா எடுத்துக்கொண்டு போகச் சொன்னது ‘பளிச்’சென்று ஞாபகத்துக்கு வந்தது.

“கண்டக்டர் சார்…அந்த பர்ஸில் வேறொரு வஸ்து இருக்கிறது.அது என்னவென்று இந்தப் பெண்ணைச் சொல்லச் சொல்லுங்கள்.

திருடியவளிடமிருந்து இதற்கு எப்படிப் பதில் வரும்?.

“நான் சொல்கிறேன்….மரிக்கொழுந்தின் சிறிய காம்பு ஒன்று உள்ளே இருக்கிறது. வாசனை உள்ளது மரிக்கொழுந்து. வேண்டுமானால் அந்த பர்ஸைத் திறந்து பாருங்கள்..தெரியும்!” என்றார் அம்மையார்.

கண்டக்டர் புதியவளிடமிருந்து பர்ஸை வாங்கிப் பார்க்க..உள்ளே,அந்த மரிக்கொழுந்து காம்பு பத்திரமா இருந்திருக்கிறது.

பிறகென்ன -திருடியவள் தன் தவறை ஒப்புக்கொண்டாள். அம்மையாரின்
வேண்டுகோளுக்கிணங்க அவள் மன்னித்து விடப்பட்டாள்.

தன் பக்தர்களுக்கு இடர் வருவதை முன்கூட்டியே அறிந்து அதற்கான நிவர்த்தியுடன் அனுப்பும் அந்த மகானின் கருணை உள்ளத்தை எவ்வாறு அளவிட முடியும்

குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனைக்கு தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

0

images 15 - 2026இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ கோர்ட் விதித்த மரண தண்டனையை எதிர்த்து இந்தியா தொடர்ந்த வழக்கில் சர்வதேச கோர்ட் இன்று (மே 18) தீர்ப்பு வழங்கி உள்ளது

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவுக்கு ராணுவ கோர்ட் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, அவரை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால், அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்டது.

இதையடுத்து, ஜாதவுக்கு விதித்த மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச கோர்ட்டில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச கோர்ட், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. அதன்பின்னர் கடந்த 15-ந்தேதி விசாரணை தொடங்கியது. அப்போது, ஜாதவ் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும், கேலிக்கூத்தாக விசாரணை நடைபெற்றதாகவும் இந்தியா தரப்பில் வாதிடப்பட்டது. வியன்னா ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி பாகிஸ்தான் செயல்பட்டிருப்பதால், ஜாதவை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்தியா வேண்டுகோள் வைத்தது.
பாகிஸ்தான் தரப்பில் வாதாடும்போது, குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இந்தியாவின் முறையீடு தேவையற்றது என்றும், தவறான நோக்கம் கொண்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனைக்கு தடை விதித்து சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு. இறுதி தீர்ப்பு வரும் வரை மரண தண்டனையை நிறுத்தி வைத்து சர்வதேச நீதிமன்றம் உத்தரவு.

குல்புஷன் ஜாதவ் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு!

 

 

 

 

 

 

 

இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரி குல்புஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்து இருந்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் நிறுத்திவைத்தது.

 

 

 

பலுசிஸ்தான் பகுதியில் உளவு பார்த்ததாக இந்திய கடற்படையின் முன்னாள் வீரர் குல்புஷனை மார்ச் 3ஆம் தேதி கைது செய்ததாக பாகிஸ்தான் காவல்துறை அறிவித்தது.

 

அவருக்கு தூக்கு தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

ஆனால் இந்த வழக்கை இந்தியா சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

 

இந்தியா தரப்பில் வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆஜராகி வாதாடினார். குல்புஷன் ஜாதவ் கடத்தப்பட்டார் என்று சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா ஆவணங்களை சமர்பித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஒரு உளவாளிக்கு கருணை காட்ட முடியாது என்று கூறியுள்ளது.

 

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச நீதிமன்றத்தில் 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது.

 

தி ஹேக்கில் உள்ள பீஸ் பேலசில் நீதிபதி ரோனி ஆபிரஹாம் தீர்ப்பை வாசித்தார்.

 

 

 

அதில், குல்புஷன் யாதவை கைது செய்தது இன்னும் சர்ச்சைக்குள்ளாகவே இருக்கிறது.

 

ஆனால், குல்புஷன் யாதவ் இந்தியர்தான் என்பதை பாகிஸ்தானும், இந்தியாவும் ஒத்துக்கொண்டுள்ளது. குல்புஷன் யாதவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த வழக்கு நியாயமானதே.

 

வியன்னா ஒப்பந்தத்தின்படி, குல்புஷனுக்கு சட்ட உதவிகளை பாகிஸ்தான் அளித்து இருக்க வேண்டும். ஆதலால், குல்புஷன் யாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை நிறுத்திவைக்கிறேன் எனத் தீர்ப்பளித்தார்.

ரஜினியிடம் என்ன இருக்கிறது? அவர் அரசியலுக்கு ஏன் வர வேண்டும்? : கட்ஜு

katju - 2026

ரஜினியிடம் என்ன இருக்கிறது; அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஏன் விரும்புகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு.

ரஜினி காந்த் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்க, மார்கண்டேய கட்ஜுவோ, தனது பேஸ்புக் பக்கத்தில், வேறுவிதமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் ஒன்றும் இல்லை கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது முகநூலில் பதிவு செய்த கருத்துகள்:

தென்னிந்தியர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். ஆனால், தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மீது முட்டாள்தனமான குருட்டு பக்தியை மக்கள் வைத்திருப்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

1967-68களில் நான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது, ஒருமுறை எனது தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து ‘சிவாஜி கணேசன்’ நடித்த படத்தை பார்க்கச் சென்றேன். அப்போது, படத்தின் துவக்கத்தில் சிவாஜியின் காலை மட்டும் காட்டும்போது, ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

இப்போது, ஏராளமான தென்னிந்தியர்கள் ரஜினிகாந்த் மீது பைத்தியமாக உள்ளனர். அவர் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கூட சிலர் கூறுகின்றனர். அப்படி ரஜினியிடம் என்னதான் இருக்கிறது?

வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதார குறைபாடு, விவசாயிகளின் துயரம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு ஏதேனும் தீர்வுகள் வைத்துள்ளாரா? அவரிடம் ஒன்றுமே இல்லை என்றே நான் நினைக்கிறேன். பிறகு ஏன் அவர் அரசியலுக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் தலையிலும் எதுவும் இல்லை.” என்று கட்ஜு தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக ரசிகர்களை சந்தித்து வருகிறார். அவரது முதல் நாள் பேச்சைக் கொண்டே, அவர் அரசியல் பயணம் மேற்கொள்வார் என செய்திகள் வெளியாகின. தொடர்ந்து, தினமும் அவரது அரசியல் பிரவேசம் குறித்த செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அவர் நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு, ரஜினி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ரஜினி தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அவர் 7 கோடி தமிழர்களை ஏமாற்ற மாட்டார் என்று அவரது நண்பர் ராஜ பகதூர் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்: அரசு முறை துக்கம் அனுசரிப்பு

anil madhav dave - 2026

புது தில்லி:

மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் அணில் மாதவ் தவே இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் அனில் மாதவ் தவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக மோடி அமைச்சரவையில் இடம் பெற்றார். பதவியேற்று 1 ஆண்டு கூட நிறைவடையவில்லை. 60வது வயதில் உடல் நலக்குறைவினால் மரணமடைந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அனில் மாதவ் தவே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பெரும் பங்காற்றியவர். உடல் நலக் குறைவினால் சிகிக்சை பெற்று வந்த போதும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று ஆர்வமுடன் செயல்பட்டவர் அமைச்சர் தவே.

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அனில் மாதவ் தவே உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.

உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் தொடர்பாக நியமிக்கப்பட்ட பல்வேறு குழுக்களில் பணியாற்றியுள்ளார் அனில் மாதவ் தவே. எம்காம் பட்டதாரியான இவர் ஆஸ்பெஸ்டாஸ் கூரை இல்லாத நகரத்தை உருவாக்க வேண்டும் என்று பாடுபட்டவர்.

அனில் மாதவ் தவே உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்.

மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே இன்று காலமானார். உடல் நலக்கோளாறு காரணமாக அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அனில் மாதவ் தவே உயிரிழந்ததற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தவேயின் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொன். இராதாகிருஷ்ணன் இரங்கல்
மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தேசப் பணிக்காக தன் குடும்பத்தை விட்டு முழு ஈடுபாடுடன் பணியாற்றியவர். முழுமையான அர்ப்பணிப்பு, சிறந்த சிந்தனை, பிரச்சனையை எளிதில் புரிந்து கொண்டு தீர்வு காணுதல் ஆகியவை அவரது சிறப்பு இயல்பு. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது ஒரே நாளில் 3 முறை அவரை சந்தித்திருந்தேன். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடந்திட தனது முழு ஆதரவையும் வழங்கி, இவ்வாண்டு ஜல்லிக்கட்டு நடைபெற தமிழர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அவரின் இழப்பு பேரதிர்ச்சியை தருகிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது சார்பாகவும், நம் தமிழ் சொந்தங்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் புண்ணிய ஆன்மா நற்கதியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

இந்நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் தேசிய துக்கம் அனுசரிக்கப் படுகிறது. தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும், அவரது இறுதிச் சடங்கு முடியும் வரையிலும் நாடு முழுதும் அனைத்து அலுவலகங்கள், கட்டடங்கள் அனைத்திலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப் படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

சிலர் படுக்கைக்கும் ஜாலிக்குமே சினிமாவுக்கு வருகிறார்கள்: ராய் லட்சுமி

17 1495028592 raai lakshmi - 2026

சென்னை:
சிலர் படுக்கைக்கும், ஜாலிக்குமே சினிமாவுக்கு வருகிறார்கள் என்று அதிரடியாகக் கூறியுள்ளார் நடிகை ராய் லட்சுமி. பாலிவுட்டில் அவர் நடித்துள்ள ஜூலி 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார். இந்தப் படத்தில் இவரின் அரை நிர்வாணக் காட்சிகள் பெரிதும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளதாக பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப் படுகிறது.
இந்நிலையில் ஜூலி 2 பற்றியும் திரையுலகம் குறித்தும், ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

Raai Laxmi Hot Topless Pics Julie 2 - 2026

சினிமாவில் அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், எனக்கு அந்த பிரச்னை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள், முன்னேறத் துடிக்கும் நடிகைகளை தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். சிலர் சினிமாவுக்கு வருவதே சூதாட, ஜாலியாக இருக்க, நடிகைகளுடன் படுக்கதான். அவர்களால் சினிமா துறையின் பெயர் கெடுகிறது. வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் படம் எடுப்பவர்கள் நடிகைகளுடன் படுக்கையை பகிர்ந்து தனிப்பட்ட தேவைகளை தீர்த்துக் கொண்டால் அவர்களின் படைப்பில் ஏதாவது தாக்கம் இருக்குமா? இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் பிரபலமான நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். அவர்கள் அதை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கவும் செய்கிறார்கள் என்றெல்லாம் கருத்து கூறியுள்ளார் இந்தப் பேட்டியில்!

rai - 2026

 

நீதித்துறையின் நடவடிக்கை, நீதிபதிகளின் செயல்பாடு மிகுந்த கவலை அளிக்கிறது: ராம.கோபாலன்

rama gopalan - 2026

சென்னை:
நீதித்துறை நடவடிக்கை, நீதிபதிகளின் செயல்பாடுகள் மிகுந்த கவலை அளிப்பதாக, இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

1994ஆம் ஆண்டு இந்து முன்னணியின் மாநில தலைவர் அட்வகேட் ராஜகோபால் கொலைசெய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஐவர் சமீபத்தில் உச்சநீதி மன்றத்தால் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். இவ்வழக்கில் நடுநிலையாளர்கள் மனதில் எழும் கேள்விகள் ஊடகத்தின் மூலம் தேசத்தின் முன் வைக்கிறோம்.

23 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதி மன்றம் இதில் தலையிட என்ன அவசியம் வந்தது?

இந்த வழக்கில் குற்றவாளிகள் என கீழ்க்கோர்ட் முதல் சென்னை உயர்நீதி மன்றம் வரை தண்டனை வழங்கி, தண்டனையை உறுதி செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்வதானால், எல்லா வழக்குகளையும் உச்சநீதிமன்றமே நேரில் விசாரிக்கலாமா?

23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வழக்கை காவல்துறை விசாரிக்க முடியுமா? அப்படியே விசாரித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தினாலும் அதற்கான ஆதாரங்களை எப்படி திரட்டுவார்கள் என்பதை உச்சநீதி மன்ற நீதிபதிகள் கவனத்தில் கொண்டார்களா?

இந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த கற்பக விநாயகம் உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் வாதாடி விடுதலை வாங்கிக்கொடுத்துள்ளார். ஒரு கிரிமினல் குற்றவாளி, அதிலும் மத அடிப்படை பயங்கரவாதிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி வாதாடுவது, நீதிபதியின் மாண்பிற்கு ஏற்ற செயலா? இப்படி கிரிமனல் வக்கீலாக செயல்படுவதானால், இவரது நீதிபதிக்கான அரசு சலுகை, அரசின் நிதி உதவிகளை திரும்ப ஒப்படைப்பதுடன், இனி எந்த நிலையிலும் இவர் நீதிபதி அல்லது நீதியரசர் என்ற பெருமைமிகு குறியீட்டை இவரது பெயருக்கு முன் போட்டுக்கொள்ள அனுமதிக்கூடாது இல்லையா?

இவர் பணத்திற்காக குற்றவாளிகள் தரப்பில் வாதாடியிருப்பதால், இவர் நீதிபதியாக செயல்பட்டது குறித்த ஐயம் எழுகிறது. சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்த ஒருவர், பணத்திற்காக வாதாடுவாரேயானால், இதில் உள்நோக்கம் இருப்பதாக எண்ணத் தோன்றுகிறது.இவரால் தீர்ப்பு வழங்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதி மன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

மேலும், இனி இவரை ஓய்வு பெற்ற நீதிபதி என்ற மதிப்பில் சமூக பிரச்னைகளில் விசாரணை செய்ய கமிஷன் போடும்போது நியமித்துவிடக்கூடாது என மாநில, மத்திய அரசுகளை, உச்சநீதி மன்றத்தை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இந்த வழக்கில் இரண்டு கொலை குற்றவாளிகளுக்கு மத்திய அமைச்சராக இருந்த குர்ஷித் அலம்கான் வாதாடியிருக்கிறார். மத்திய அமைச்சராக பொறுப்பில் இருந்தவர், நடுநிலையாக செயல்படுவேன் என எடுத்துக்கொண்டு பதவி வகித்தவர், தற்போது பதவியில் இல்லாதபோது, குற்றவாளிகளுக்கு, அதிலும் கிரிமினல் குற்றவாளிகளுக்கு வாதிட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அலம்கானின் செயல்பாடு, குற்றவாளிகள் முஸ்லீம்கள் என்பதால் வாதிடுகிறார் என்றால், ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் இதுவரை நூற்றுக்கணக்கனோர் ஈவுஇரக்கமின்றி இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். மதுரையில் தொடர்ந்து வெடிகுண்டுகள் வெடிக்கப்பட்டும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், குற்றவாளிகள் என நீதிமன்றங்களால் தண்டனைப் பெற்றவர்கள் நிரபராதி என விடுதலை ஆகும்போது, குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு இது ஊக்கம் கொடுப்பதாக இது அமையும் என எச்சரிக்கிறோம்.

மக்கள் நீதித்துறையின் மீது வைத்துள்ள நம்பிக்கை பொய்த்துவிட்டால், அது பெரும் ஆபத்தாக முடிந்துவிடும். நீதித்துறையின் நடவடிக்கை கண்ணிய குறைவாகவும், நீதிபதிகளின் பேச்சு, செயல்பாடு அவர்கள் வகிக்கும் பதவியின் மாண்பை குலைப்பதாகவும் இருந்து வருகிறது. ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான நீதிமன்றத்தின் மீது மக்கள் பெரு நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால், இன்றோ அது கேள்விக்குறியாகி வருகிறது என்பதை இந்து முன்னணி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

உச்சநீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மீது தமிழக அரசு காலதாமதப்படுத்தாமல் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.