Home Blog Page 5643

மோடியின் 3 ஆண்டு கால சாதனை திட்டங்கள்

modi congratulate budet - 2026

புது தில்லி:
பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அவரின் சாதனை திட்டங்களைப் பட்டியலிட்டு பாஜகவினரும், அவர் என்ன சாதனை செய்தார் என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சியினரும் முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மோடி 3 ஆண்டுகள் சாதனையைக் கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தார்.

இது மோடியின் 3ஆண்டு கால சாதனை திட்டங்கள் என அதற்கு பதில் அளிக்கும் வகையில் மோடி ஆதரவாளர்கள் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளனர். அது…

மோடியின் 3 ஆண்டுகால
> அனைவருக்கும் வங்கி கணக்கு

> வருடம் 12 ரூபாய்ல் விபத்து காப்பீடு

> புதிதாக தொழில் தொடங்குவோர்க்கு முத்ரா வங்கி கடன் திட்டம்

> தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பறை இல்லா வீடுகளுக்கு கழிப்பறை கட்ட.மானியம்

> கேஸ் மானியம் மற்றும் இதர மானியங்கள் வங்கி கணக்கில் நேரடியாக…

> 5000 வெள்ள நிவாரணம் உட்பட

> இந்தியாவில் உத்தரபிரதேசம் அடுத்து அதிக ஸ்மாட் சிட்டி தமிழகத்தில்

> தமிழகத்திற்கு குளச்சல் துறைமுகம்

> இலங்கை தமிழர்களுக்காக மேலும் 10000 வீடுகளை கட்டிதர அறிவித்தது

> செல்வ மகள் சேமிப்பு திட்டம்

> Pradhan Mantri Awas Yojana 2022-ற்குள் அனைவருக்கும் வீடு திட்டம்

> Power Tex India Scheme Launched to Boost Powerloom Sector

> Solar Energy Scheme – Solar Plant Subsidy Scheme for Powerloom Sector

> Rashtriya Vayoshri Yojana – Assistive Living Devices Scheme for Senior Citizens

> Green Urban Mobility Scheme to Promote Green Transport System

> Pradhan Mantri Yuva Yojana – Entrepreneurship Education & Training Scheme

> Start-Up India Scheme for Women Entrepreneurs

> Pradhan Mantri Gramin Digital Saksharta Abhiyan (PMGDSA) – Making Rural India Digitally Literate

> Rs. 6000 Pregnancy Aid Scheme for Pregnant Women in India

> New Scheme for Monthly Allowance of Rs. 1500 to Unemployed & Poor

> Rs. 2 Lakh Insurance Cover Scheme for Jan Dhan Account Holders

> List of Airports Under UDAN Scheme (Udey Desh Ka Aam Nagrik)

> Indian Railways Passenger Travel Insurance Scheme Starts

> Mission Bhagiratha – Providing Safe Drinking Water to All

> Vidyalakshmi Scheme – Interest Free Loan Scheme for IIT Students

> Gangajal Delivery Scheme – Gangajal Home Delivery through Indian Post

> Gangajal Delivery Scheme – Gangajal Home Delivery through Indian Post

> Pradhan Mantri Surakshit Matritva Abhiyan (PMSMA) – Free Health Checkup for Pregnant Women

> Vidyanjali Yojana – A School Volunteer Programme/Scheme by HRD Ministry

> Pradhan Mantri Surakshit Sadak Yojana – Making Roads Safer

> Pradhan Mantri Ujjwala Yojana Assam – Free LPG for BPL Women

அரசியலப் பத்தி எதுவும் கேக்காதீங்க: ரஜினி டென்ஷன்!

rajinikanth3 - 2026

சென்னை:

சென்னையில் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். கடந்த மூன்று தினங்களாக ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, அவ்வப்போது பேசவும் செய்தார்.

அவருடைய பேச்சு, அரசியல் குறித்து இருந்ததால் கடந்த ஓரிரு நாட்களாக அவர் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம் என்று அக்கட்சித் தலைவர்கள் கூறிக் கொண்டிருந்தனர். இருப்பினும் அவர் தனிக்கட்சி தொடங்கினால் ஆதரவளிப்போம் என்று சில பெரும்புள்ளிகள் ஆலோசனையை வழங்கினர். இது குறித்து சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் ஊகங்கள் பல பரவின. நேற்று தனது பேச்சின் போது, பாஜக.,வில் இணைவீர்களா என்று கேட்ட கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என்று மழுப்பலாகக் கூறிச் சென்றார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர்,

ரசிகர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது; ரசிகர்கள் தங்களது குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும்; அரசியல் பற்றி எதையும் கேட்க வேண்டாம் என்று தெளிவாகக் கூறினார்.

அரசின் நெட்வொர்க்கையே பயன்படுத்துக: அலுவலகங்களுக்கு குஜராத் அரசு வலியுறுத்தல்

Virus Attack - 2026

குஜராத் மாநில அரசு நிறுவியுள்ள மாநில அளவிலான கணினி நெட்வொர்க்கையே அனைத்து அரசுத் துறை அலுவலகங்களும் பயன்படுத்த வேண்டுமென குஜராத் அரசு வலியுறுத்தியுள்ளது. வைரஸ் தாக்குதலின் தீவிரத்தால் இந்த அறிவிக்கையை அரசு கொடுத்துள்ளது.

நிதி தொடர்பான பிரிவுகளின் கணினிகளில் வைரஸ் தாக்குதல்கள் தொடர்வதால், குஜராத் அரசின் கீழ் இயங்கும் நெட்வொர்க்குகளில் வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல மாவட்ட அலுவலக கணினிகளிலும் வைரஸ் பரவி வருகிறது. இதில் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

காந்திநகர், கோத்ரா ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள், ஊழல் தடுப்பு துறைகள், மாவட்ட ஆட்சியர், பதிவாளர் அலுவலகங்கள், மண்டல போக்குவரத்துத் துறைகள், அரசு பொது மருத்துவமனைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கணினிகளிலும் வைரஸ் ஊடுருவியுள்ளது.

எனவே, மாநில அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப நெட்வொர்க் அமைப்பான GSWAN ஐ மட்டுமே பயன்படுத்தவேண்டுமென அனைத்துத் துறைகளுக்கும் குஜராத் அரசு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கணினிகள் மற்றும் ஐடி நெட்வொர்க்குகள் உடனே ஸ்விட்ச் ஆப் செய்யத்தக்க வகையில் ஓர் எச்சரிக்கையை அரசு வழங்கியது. மேலும், அனைத்து டிஜிட்டல் வலைப்பின்னல்களிலும் வைரஸ் தடுப்பு பதியப்பட்டுள்ளது.

இதனிடையே மாநிலத்தில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் தங்கள் நெட்வொர்க்கில் இணைய ஊடுருவல் நடந்ததாக புகார் எதுவும் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் இணைய பாதுகாப்பு மீறல்களைத் தடுக்க தங்கள் நெட்வொர்க்குகள் மேம்படுத்திவருகின்றனர்.

பணப்பரிவர்த்தனை தொடர்பான கணினி பாதுகாப்புகளில் பொதுமக்கள் தங்கள் கணினிகளில் ஏதாவது இணையதள ஊடுருவல்கள் நடந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி குற்றப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

ஓடும் ரயிலில் தகராறு: மனைவியைக் கீழே தள்ளிக் கொன்ற கணவன் கைது

murder - 2026

விஜயவாடா:

ஆந்திராவில் ஓடும் ரயிலில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, ஆத்திரத்தில் மனைவியைக் கீழே தள்ளிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் தனது மனைவி கல்பனா குமாரி ( 23)யுடன் சென்னையில் இருந்து தில்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ரயில் ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டம் கடவகுடுரு கிராமம் வழியாக வேகமாகச் சென்று கொண்டு இருந்தபோது கணவன் மனைவிக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் குமார், ஓடும் ரயிலில் இருந்து கல்பனா குமாரியைக் கீழே தள்ளி விட்டார். இதில் ரயிலின் அடியில் சிக்கிய கல்பனா குமாரி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் போலீசாருக்குக் கொடுத்த தகவலின் பேரில், ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.

Cabinet approves Pan-India implementation of Maternity Benefit Program

0

pm modi - 2026

The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has given ex-post facto approval to Pan-India implementation of Maternity Benefit Program which now has been extended to all districts of the country w.e.f. 01.01.2017. The Prime Minister in his address to the nation on 31.12.2016 had announced Pan-India implementation of Maternity Benefit Program.

The Maternity Benefit Program will provide compensation for the wage loss in terms of cash incentives so that the women can take adequate rest before and after delivery and not be deprived of proper nutrition.

The total cost of the proposal for the period from 01.01.2017 to 31.03.2020 including Central and State Government share isRs.12,661crore. Government of India’s share during the period 01.01.2017 to 31.03.2020 comes to around Rs. 7932 crore.

 

Objective of the Scheme

  • To provide partial compensation for the wage loss in terms of cash incentives so that the woman can take adequate rest before and after delivery of the first living child.
  • The cash incentives provided would lead to improved health seeking behaviour amongst the Pregnant Women and Lactating Mother (PW&LM) to reduce the effects of under-nutrition namely stunting, wasting and other related problems.

 

Target Group

All eligible Pregnant Women and Lactating Mothers (PW&LM), excluding the Pregnant Women and Lactating Mothers who are in regular employment with the Central Government or State Government or Public Sector Undertakings or those who are in receipt of similar benefits under any law for the time being. It has been decided to give the benefit of Rs.5000/- to PW&LM in three installment for the birth of the first live child by MWCD and the remaining cash incentive as per approved norms towards Maternity Benefit under existing programmes after institutional delivery so that on an average, a woman will get ₹ 6000/-.

 

Conditions and installments

Pregnant Women and Lactating Mothers who are eligible will receive a cash benefit of Rs.5,000/- in three installment at the following stages as specified in the table given below:

 

Cash TransferConditionsAmount

(in )

First installment·   Early Registration of Pregnancy.1,000/-
Second installment·   Received at least one antenatal Check-up (after 6 months of pregnancy)2,000/-
Third installment·   Child birth is registered.

·   Child has received first cycle of BCG, OPV, DPT and Hepatitis-B or its equivalent/substitute.

    2,000/-

 

The eligible beneficiaries would continue to receive the remaining cash incentive as per approved norms towards Maternity Benefit under existing programmes after institutional delivery so that on an average, a woman will get ₹ 6000/-.

 

Mode of cash transfer to the Beneficiaries

The conditional cash transfer scheme would be in DBT mode.

Background:

The Government of India is committed to ensure that every woman gets adequate support and health care during pregnancy and at the time of delivery and every newborn is immunized on time which is the foundation for better health of the mother and the newborn. Normally, the first pregnancy of a woman exposes her to new kinds of challenges and stress factors. Hence, the scheme intends to provide support to the mother for safe delivery and immunization of her first living child. The improved health care seeking behaviour of the PW&LM would lead to better health status for the mother and the child.

முதல் பிரசவத்துக்கு ரூ.6 ஆயிரம்: மத்திய அரசின் பெண்கள் நலத்திட்ட உதவி

modi n - 2026

முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு, பெண்கள் நலத்திட்ட உதவித் தொகையாக ரூ.6,000 வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஒப்புதல்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் வழங்கப்படும் இந்த தொகை நேரடியாக வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். மேலும், மகப்பேறு பதிவு செய்யப்பட்டவுடன் முதல் தவணையாக 1000 ரூபாயும், 6-வது மாதத்தில் அடுத்த தவணையாக 2000 ஆயிரம் ரூபாயும், குழந்தை பிறந்தவுடன் 3-வது தவணையாக 3000 ரூபாயும் வழங்கப்படும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், அசாமில் இந்திய வேளாண் கழகம் அமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக 587 ஏக்கர் நிலம் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும்: 100% மழை பெய்யும் வானிலை மையம் தகவல்


இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள்
மூலமாக மழை பெய்து வருகிறது.

இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும்,
வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையிலும்
நீடிக்கும்.

தென்மேற்கு பருவமழையானது கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்
தொடங்கி பின்னர் வடஇந்தியா முழுவதும் பரவும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றும், அப்போது
சராசரியை காட்டிலும் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமானில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை
ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு
அரபிக்கடலில் ஏற்பட்ட எதிர் சூறாவளி காரணமாக 2 நாட்களுக்கு முன்பே அந்தமான்
மற்றும் போர்ட்பிளேர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

இதனால் கேரளாவிலும் முன்கூட்டியே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் அடுத்த மாதம் வழக்கமான நாட்களிலேயே கேரளாவில் தென்மேற்கு பருவமழை
தொடங்குவதற்கான அறிகுறி தெரிவதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 100 சதவீதம் மழை பொழிவு
இருக்குமென வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழகத்தை ஏமாற்றி விட்டது.
தென்மேற்கு பருவ மழை பெய்யும்போது, நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து அணைகளும் நிரம்பும். நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான அணைகளுக்கும்
நீர்வரத்து அதிகரிக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலையில், மழை பெய்யும் போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி
அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும். இந்த ஆண்டு மழை பொழிவு
அதிகம் இருக்கும் என்று கூறப்படுவதால் குற்றாலம் சீசனும் களை கட்டும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை அதிகரிக்கும்பட்சத்தில் கர்நாடகா, கேரளாவில் உள்ள அணைகள்
அனைத்தும் நிரம்பி வழிந்து, தமிழக அணைகளுக்கும் போதிய நீர் கிடைத்து அவைகளும்
நிரம்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக முக்கிய பாசன அணையான மேட்டூர் அணைக்குத்
தென்மேற்கு பருவமழையின் போதுதான் நீர்வரத்து அதிகரிக்கும்.

பெரியவா ஒரு உப்புக் கொறவன் கதை சொல்லி-அவன் கஷ்டமும் ஒருநாள் மொத்தமா கரைஞ்சுபோகும்னு உணர்த்தின சம்பவம்

kanchi periyava - 2026

“பெரியவா,நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி
இல்லை. கும்பிடாத சாமி இல்லை.அப்படி இருக்கறச்சே இந்த
மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே,
அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்?”-ஜமீன்தார்.

(பெரியவா ஒரு உப்புக் கொறவன் கதை சொல்லி-அவன் கஷ்டமும் ஒருநாள் மொத்தமா கரைஞ்சுபோகும்னு என்று  உணர்த்தின சம்பவம்)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-01-06-2017 தேதியிட்ட குமுதம் பக்தி (இன்று வெளிவந்த)
(பெரிய கட்டுரை சுருக்கப்பட்டது)

ஒரு ஜமீன்தார் பரமாசார்யாளோட பரம பக்தர்னே சொல்லலாம்.எத்தனையோ பாழடைஞ்ச கோயில்களுக்கெல்லாம் கைங்கர்யம் பண்ணினவர். எதிர்பாராவிதமாக ஒரு சோதனை வந்து பெரிய அளவுல நஷ்டம் ஏற்பட்டு மனசு உடைஞ்சு போயிட்டார்.தெய்வம் கைவிட்டுடுத்தேன்னு ரொம்ப வருத்தப்பட்ட அவர்
சுவாமியைக் கும்பிடறதைக்கூட வெறுத்து நிறுத்திட்டார்.

அந்த சமயத்துலதான் பெரியவா கும்பகோணம் பக்கத்துல முகாமிட்டிருந்தா.அவர் அங்கே வந்திருக்கிற தகவல் தெரிஞ்சதும், மகாபெரியவா கிட்டேயே தன்னோட நியாயத்தைக் கேட்டுடுவோம்னு உடனே பெரியவாளைப் பார்க்க வந்துட்டார்.

வெறும் கையோட வந்திருந்ததுலயே, விரக்தி பட்டவர்த்தனமா  தெரிஞ்சுது.வழக்கம்போல இல்லாம ஏனோதானோன்னு தான் நமஸ்காரம் செஞ்சார். ஆனா ஆசார்யா அதை கவனிச்ச மாதிரி காட்டிக்காம,” ஏதோ கேட்கணும்னு வந்திருக்கறாப்புல தெரியறதே! என்ன கேட்கணும் ஒனக்கு? அப்படிங்கற மாதிரி அந்த ஜமீனதாரோட முகத்தைப் பார்த்தார்.

“பெரியவா,நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி இல்லை. கும்பிடாத சாமி இல்லை.அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே, அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்? மேலும் சில வார்த்தைகளை நெருப்பு மாதிரி கக்கினார்.

அமைதியா கேட்டுண்ட ஆசார்யா,”நீ இப்ப ரொம்ப விரக்தில இருக்கே.உனக்கு அட்வைஸ் பண்ணினா எடுபடாது. அதனால ஒரு கதை சொல்றேன் அப்படின்னார்.

உப்பு விக்கறவனுக்கு,உப்புக் கொறவன்னு பேர்.அப்படி ஒரு உப்புக் கொறவன் இருந்தான்.காமாட்சியோட பரம பக்தன் அவன்.கார்த்தால கண்ணை விழிச்சு எழுந்திருக்கறச்சயே காமாக்ஷினுட்டுதான் எழுந்திருப்பான்.தூங்கப் போறச்சேயும்
அம்பாள் பேரைச் சொல்லிட்டுதான் படுத்துக்குவான்.

உப்பு மூட்டைகளை கழுதை மேல் ஏத்தி சந்தை நடக்கற எடத்துக்கு கொண்டு
வருவான். பெரும்பாலும் இவன் கிட்டேயே எல்லாருமேவாங்குவதால் கொஞ்சம் நிறையவே பணம் சேரும் அந்தக் காலத்துல இப்போ இருக்கிற மாதிரி பாதை
வசதியெல்லாம் கெடையாது. ஒத்தையடிப் பாதைதான். அதனால் திருடாளும் நிறைய இருந்தா.

ஒரு நாள் சந்தை நேரம் ஆரம்பிச்சுது. சரியா அதே சமயத்துல திடீர்னு இருட்டிண்ட
வானம் ஒரு க்ஷணம் கூட தாமதிக்காம ஜோன்னு வர்ஷிச்சுது. உப்புக் கொறவனும்
பரபரப்பா உப்பு மூட்டைகளை எடுத்து நகர்த்திவைக்க நினைச்சான். ஆனா பிரயோஜனம் இல்லாதபடிக்கு மொத்த உப்பும் மழைத் தண்ணீர் பட்டு கரைஞ்சு
ஓடித்து.அவ்வளவுதான்,அப்படியே விக்கிச்சுப் போய் நின்னான் அவன்,லாபம் இல்லாவிட்டாலும் கூட முதலுக்கேன்னா மோசம் வந்துடுத்து.அவனோட விரக்தி அப்படியே கோபமா மாறித்து.அது அப்படியே காமாக்ஷிமேல திரும்பித்து.

“காமாக்ஷி காமாக்ஷின்னு ஒன்னைத்தானே கும்பிட்டேன். இப்படி மொத்தத்தையும் நஷ்டப்படுத்திட்டயே. பக்தன் காயப்போட்ட நெல் நனையக் கூடாதுங்கறதுக்காக
வேலியெல்லாம் கட்டினார் பரமேஸ்வரன் என்று சொல்வாளே அதெல்லாம் கூட பொய்யாத்தான் இருக்கும்.ஏன்னா தாயாரான உனக்கே பக்தன் மேல் இரக்கம் இல்லாதப்போ உன்னோட ஆம்படையானுக்கு மட்டும் எப்படி இருக்கும்? அதனால இனிமே எந்த தெய்வத்தையும் நான் கும்பிடப்போறதில்லை!” அப்படின்னு வெறுப்பா கத்தினான்.

கழுதை மேல வெத்து சாக்கைப் போட்டு, வெறுங்கையோட பொறப்பட்டான்.அப்படியே போயிண்டு இருந்தவன், “டேய் பிடிங்கடா அவனை..அவன் கையில் இருக்கிற பணத்தை பறிங்கடா..!” அப்படின்னு ஒரு பெருங்குரல் (திருடன்) கேட்டதும் அப்படியே நடுங்கிப்போய் நின்னான்.அவா கையில் இருந்த அருவா அந்த இருட்டுலயும் மின்னித்து. நடுங்கின கொறவன் நம்ம உசுரு நம்மளோடது இல்லைன்னு தோணித்து அவனுக்கு.

“மரியாதையா பணத்தை எல்லாம் குடுடா”ன்னு கேட்டுண்டே, அவன் மடியில,இடுப்புல,கழுதை மேலே இருந்த சாக்குன்னு ஒரு இடம் விடாம துழாவினான் ஒருத்தன். ஊஹும் எங்கேயும் ஒரு தம்பிடிகூட இல்லை.

“ஏய் எங்கேடா ஒளிச்சு வைச்சிருக்கே பணத்தை” “பணமா? ஏது பணம்? அதான் கொண்டுபோன உப்பு மூட்டை மொத்தமும் மழையில் கரைஞ்சு ஓடிடுத்தே…அப்புறம் ஏது வியாபாரம்,ஏது காசு? படபடப்பா சொன்னான் உப்புக் கொறவன்.

“இன்னிக்கு நீ தப்பிக்கணும்னு சாமி நினைச்சுருக்கு. அதனால பிழைச்சே போ!”
அப்படின்னு சொல்லிட்டு ஓடி மறைஞ்சா திருடர்கள்.

மழை விட்டு வானம் தெளியத் தெளிய கொறவனின் மனசுக்குள்ளேயும் தெளிவு
வந்தது.இன்னிக்கு மட்டும் மழை பெய்யாம இருந்து உப்பு வித்த காசோட நாம
வந்திருந்தா,உசுரு தப்பியிருக்க முடியாமாங்கறது சந்தேகம்தான்.நாம கும்பிடற
காமாக்ஷிதான் நம்பளைக் காப்பாத்தி இருக்குன்னு புரிஞ்சுண்ட அவன். அப்படியே
அம்பாள் கிட்டே தன்னை மன்னிச்சுக்கச் சொல்லி வேண்டிண்டான்.

மகாபெரியவா கதையைச் சொல்லி முடிச்சதுமே ஜமீன்தாருக்கு தன்னோட தவறு என்னங்கறது புரிஞ்சுது.தனக்கு ஏதோ ஒரு காரணத்துனாலதான் இப்படி
கஷ்டம் வந்திருக்குன்னு புரிஞ்சு பெரியவாளை நமஸ்காரம் பண்ண்ணி  பிரசாதம்
வாங்கிண்டு புறப்பட்டார்.

கொஞ்சகாலம் கழிச்சு அந்த ஜமீன்தார் மறுபடியும் பெரியவாளை தரிசிக்க
வந்தார்.”பெரியவா நமஸ்காரம். போன தரம் நான் வர்றச்சே,என்னோட சொத்து மொத்தமும் பறிபோகப்போறது மாதிரியான சூழல் இருந்தது. ஆனா,இன்னிக்கு அந்த சொத்தெல்லாம் எனக்குப் பாரம்பரியமா வந்ததுங்கறதுக்கான
விவரங்கள் எல்லாம் என்னோட முன்னோர்கள் திருப்பணி பண்ணின ஒரு கோயில்ல இருந்த பிரமாணப் பத்திரங்கள் மூலமா தெரிய வந்துடுத்து.அதனால எல்லாமும் எனக்கே திரும்பக் கிடைச்சுடுத்து.
விரக்தியில் பேசி விட்டேன்.உங்களை சாட்சாத் பரமேஸ்வரனாவே நினைச்சுண்டு
நமஸ்காரம் பண்ணறேன். என்னை மன்னிச்சுடுங்கோ”

உப்பு கரைஞ்சுபோன கதையை ஆசார்யா அன்னிக்கு சொன்னதே உன்னோட கஷ்டமும் ஒருநாள் மொத்தமா கரைஞ்சுபோகும்னு உணர்த்தத்தானேன்னு தோணித்து எல்லாருக்கும்.

பாஜக.,வில் சேர்வது குறித்து ரஜினிகாந்த் எடுத்த முக்கிய முடிவு?

rajinikanth3 - 2026

சென்னை:

அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த், வழக்கம் போல் கழுவிய நீரில் நழுவிய மீனாக நகர்ந்து கொண்டார். இன்று அவரிடம் பாரதிய ஜனதா கட்சியில் சேருவீர்களா? என்ற கேள்விக்கும் வழக்கம் போல் ஒற்றைச் சொல் பதிலளித்து நகர்ந்து கொண்டார் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக சென்னையில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பின் துவக்கத்தில் பேசிய ரஜினிகாந்த், தம் பெயரை அரசியல் ரீதியாக சிலர் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறி, தமக்கும் அரசியல் ஆசை உள்ளது என்பதைச் சொல்லாமல் சொல்லிக் காட்டினார். தன்னை பயன்படுத்திக் கொள்பவர்கள் என அவர் குற்றம் சாட்டியது, திமுக, தமாகா, பாஜக.,வைத்தான் என ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நாங்கள் ரஜினியை அரசியல் ஆதாயத்துக்காக சந்திக்கவில்லை என கூறினார். இவரது கருத்தையே கங்கை அமரனும் பிரதிபலித்தார். ஆயினும் ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் வரவேற்போம், மகிழ்ச்சி என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஆனால் வழக்கம் போல், ரஜினிகாந்த் மேலே கையைக் காட்டி, ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டார். தாம் அரசியலில் இணைவது தொடர்பாக ஆண்டவன்தான் முடிவு செய்வார் என்றார்.

இப்படி இரண்டு நாட்களாக பரபரப்பாகக் கழிந்த ரசிகர் சந்திப்பு இன்று மூன்றாவது நாளை எட்டியது. இன்று 3-வது நாளில் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த், தனது சினிமா பட வசன பாணியில் கேள்விக்கு பதிலளித்துச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இன்று ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள், நீங்கள் பாஜக.,வில் சேருவீர்களா? என கேள்வி எழுப்பினர்.

வழக்கம் போல், ‘நோ கமெண்ட்ஸ்’ என்று பதிலளித்த ரஜினிகாந்த், தான் எப்போதும் அப்படித்தான் என்பதை செய்தியாளர்களுக்கும் சொல்லி, நிரூபித்தார்.

இனி ப்ளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு: கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

sengottaiyan education minister - 2026

சென்னை:
இனி வரும் கல்வி ஆண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று இது குறித்துக் கூறினார்.
அவர் பேசியபோது,

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகிறது. மாணவர்கள் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பாடத் திட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. அதில் யோகா மற்றும் உடற்பயிற்சிகள் பாடத்தில் சேர்க்கப்பட உள்ளன.

நூலகங்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளுக்கான நூல்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நூலகங்களுக்கு ரூ.2.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மாவட்ட நூலகங்களில் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
– என்று கூறினார்.