Home Blog Page 5644

மே 30 அன்று வழக்கம்போல் திரை அரங்குகள் இயங்கும்: விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

cinema saba - 2026சென்னை:

வரும் 30.5.2017 (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்ற வரும் செய்திகள் உண்மையல்ல எனவும், 30.5.2017 (செவ்வாய்கிழமை) அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து ஒரு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் R.பன்னீர்செல்வம்
சென்னை நகர திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன்,
கோவை ஈரோடு திருப்பூர் நீலகிரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும், மதுரை ராமநாதபுரம் திண்டுக்கல் தேனி விருதுநகர் சிவகங்கை மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவருமான திருப்பூர் சுப்புரமணியம்
ச்சி தஞ்சாவூர் மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் ஜோசப் பிரான்ஸிஸ்
திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் பிரதாப்
வட ஆற்காடு, தென் ஆற்காடு, பாண்டிச்சேரி மாவட்ட திரை அரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் G.சீனிவாசன்
தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் R.செல்வின்ராஜ்
ஆகியோரின் கையெப்பத்துடன் இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

உதயமானது தமிழ் திரைப்பட வர்த்தக சபை

tamil cinema saba - 2026

சென்னை:

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கும் தமிழ் திரைப்பட வர்த்தக சபை இன்று உதயமானது.

பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகஸ்தரும், திரையரங்கு உரிமையாளருமாகிய அபிராமி ராமநாதன் தமிழ் திரைப்பட வர்த்தக் சபையின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை!

health minister vijayabaskar - 2026

சென்னை:

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில், மீண்டும் அதிகாரிகள் வருமான வரி சோதனை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஏப்ரல் 7-ம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகர் சரத்குமார் உள்ளிட்டவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.

இந்த சோதனையின்போது, விஜயபாஸ்கரின் வீடுகளில் இருந்து ஆவணங்கள் பல கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது. அது குறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் நேரில் விளக்கம் அளித்தார். அவர் மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை என்றாலும், விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஏற்கெனவே நடைபெற்ற சோதனையின்போது, ஓர் அறையைப் பூட்டி சீல் வைத்துச் சென்றனர். தற்போது அந்தப் பூட்டிக்கிடக்கும் அறையைத் திறந்து சோதனைசெய்கின்றனர். சோதனையின் போது சிக்கிய ஆவணங்கள், நகைகள் சரி பார்க்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகும்!

exam hall - 2026

சென்னை:
பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகும் என தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு – எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இத்தேர்வை 11 லட்சம் மாணவ- மாணவியர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் 19-ந்தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே 19ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று முன்னதாகவே தேர்வுத் துறை அறிவித்திருந்தது. இது குறித்து இயக்குனர் வசுந்தராதேவி கூறியதாவது:-

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 19-ந்தேதி காலை 10 மணிக்கு அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்படும். அரசின் இணைய தளங்களில் வெளியிடுவதோடு மாணவ-மாணவிகளின் செல்போன்கள் வழியாகவும் தெரிவிக்கப்படும். மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். தேர்வுக்காக பள்ளிகள் மூலமாக பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு முடிவு தெரிவிக்கப்படும். தேர்வு முடிவுகள் பாதுகாப்புடன் அனைத்து மாவட்டத்துக்கு இன்று தனி வாகனங்களில் பாதுகாப்புடன் அனுப்பப்படுகிறது. முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக பள்ளிகளுக்கு 19-ந்தேதி காலை வினியோகிக்கப்படும். மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்வதற்கு 19-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

ரஜினி காந்த் பாஜக.,வுக்கு வந்தால் மகிழ்ச்சி: பொன்.ராதாகிருஷ்ணன்

pon radhakrishnan - 2026

ராஜபாளையம்:
ரஜினி காந்த் பாஜகவுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மறைந்த ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்துக்கு வந்திருந்தார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

அவரிடம் பின்னர் செய்தியாளர்கள் அரசியல் நிலவரங்கள் குறித்து கேள்விகளைக் கேட்டனர் அப்போது அவர்,

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முழு மனதுடன் வரவேற்கிறேன். அவர் பாஜக.,வுக்கு வந்தால் மிக மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

அதிமுக இணைந்தாலும், உடைந்தாலும் அதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. பிற கட்சிகளின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக., தலையிடாது. அதிமுகவின் பலவீனத்தைப் பயன்படுத்தி திமுக தன்னை மேலும் வளர்க்க நினைக்கிறது. ஆனால், தான் செய்த தவறுகளை அது மறைக்கிறது.

‘நீட்’ தேர்வு விஷயத்தில் தமிழக மாணவர்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிலும், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் பாஜக.,வுக்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லை. அவ்வாறு இருப்பதாக சிலர் கூறுவது மிகவும் தவறானது… என்று கூறினார்.

காளீஸ்வரி நிறுவனத்துக்குச் சொந்தமான 54 இடங்களில் வருமான வரி சோதனை

IT Logo - 2026

சென்னை:
காளீஸ்வரி எண்ணை நிறுவன அலுவலகங்களில் இன்று காலை முதல் வருமான வரி சோதனைகள் நடைபெற்று வருகின்றது.

காளீஸ்வரி நிறுவனங்களுக்கு சொந்தமான சென்னை, புதுச்சேரி, மதுரை உட்பட 54 இடங்களில், 250க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள உரிமையாளர் வீடு மற்றும் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 54 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. பல ஆண்டுகளாக முறையான வருமானவரி தாக்கல் செய்யாததால் இந்த சோதனை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சமையல் எண்ணை சந்தையில் முக்கிய இடத்தைப் பிடித்தது காளீஸ்வரி நிறுவனம். காளிமார்க் குளிர்பான தயாரிப்புகளையும் இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

அமைச்சர்கள், அதிகாரிகள் என பல தரப்பு மட்டத்திலும் தொடரும் வருமான வரிச் சோதனைகளால், அண்மைக்காலமாக தமிழகம் அரண்டு போயுள்ளது.

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்: வரலாற்றில் முதல் முறையாக திருத்தணியில் 114 F பதிவு

Regional Meteorological Center 1 - 2026

சென்னை:
தமிழகத்தில் இந்தக் கோடைக் காலம் பெரும் சோதனையாகத்தான் அமைந்துள்ளது. பல இடங்களில் வெயில் கொளுத்துகிறது. தமிழக வரலாற்றில் முதல்முறையாக 114 டிகிரி ஃபாரன்ஹீட் (45.5 டிகிரி செல்சியஸ்) வெயில் திருத்தணியில் நேற்று பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் குறிப்பாக வட தமிழகத்தில் இந்தக் கோடை காலம் பெரும் சோதனைக் காலமாகத்தான் அமைந்துவிட்டது. அக்னி நட்சத்திரத் துவக்கத்தில் இருந்தே மிகக் கடுமையான வெயில் நிலவி வந்தது. மே மாதத் துவக்கத்தில் மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசி வெப்பத்தை மேலும் அதிகரித்தது.

பொதுவாக காலை நேரங்களில் கிழக்கில் இருந்து கடற்காற்று சற்றே குளிர்ச்சியாக நிலப்பகுதியை நோக்கி வீசும். ஆனால், தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து வறண்ட காற்று தமிழகத்தை நோக்கி வீசுகிறது. மேலும் மேற்கு திசை தரைக்காற்று வீசி வெப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

தென் தமிழகத்திலும் மத்திய பகுதியிலும் சில நாட்களுக்கு முன் மழை பெய்து, சற்றே நிலத்தை குளிர்ச்சிப் படுத்தியது. ஆனால், வட தமிழகம் வழக்கத்துக்கு மாறாக கடும் வறட்சியுடனும் கோடை மழை இன்றியும் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 114 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

வேலூரில் 109 டிகிரி, திருச்சியில் 108 டிகிரி, சென்னை, கரூரில் 107 டிகிரி, பாளையங்கோட்டையில் 106 டிகிரி, புதுச்சேரி, பரங்கிப்பேட்டையில் 105 டிகிரி, மதுரை, சேலத்தில் 104 டிகிரி, கடலூர், தருமபுரியில் 103 டிகிரி, காரைக்காலில் 102 டிகிரி, நாகப்பட்டினத்தில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் எனும் அளவில் வெயில் பதிவாகியுள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச அளவு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை 113 டிகிரி வெயில் பதிவானதே அதிகபட்சமாக இருந்தது. கடந்த 2003-ம் ஆண்டு சென்னை, வேலூரில் இந்தளவு வெயில் பதிவாகியிருந்தது. ஆனால், திருத்தணியில் நேற்று பதிவான 114 டிகிரி வெயிலே தமிழகத்தில் இதுவரை பதிவான அதிகபட்ச வெயில் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. திருத்தணி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பதிவாகி வரும் வரலாறு காணாத வெயிலின் காரணமாக பொது மக்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலை மேலும் 2 அல்லது 3 நாட்களுக்கு நீடிக்கும். திருத்தணியில் பதிவான வெயில், நம்மிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இதுவரையில் பதிவானதிலேயே அதிகமாகும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆங்காங்கே இன்று மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுவையில் அனல் காற்று வீசும் என்றும் வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் டிசம்பரில் வீசிய புயலினால் மரங்கள் பல வேரோடு வீழ்ந்து, வறண்ட நிலையை மேலும் அதிகப்படுத்தியதால், வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக உணரப்பட்டு வருகிறது.

நள்ளிரவு திடீர் மின்வெட்டால் அவதிப்பட்ட சென்னை!

power cut - 2026

சென்னை:

சென்னை மாநகரில் சுமார் 95 சதவீத பகுதிகளில் நேற்று நள்ளிரவில் திடீர் என மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் வெயிற்கால புழுக்கத்தில் சென்னை மக்கள் பெரும் அவதிப்பட்டனர். மின்நிலைய மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த திடீர் மின்வெட்டால், சென்னையின் முக்கியப் பகுதிகளான நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், ராயப்பேட்டை, வியாசர்பாடி, கொளத்தூர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர் என சென்னை மாநகரின் 95 சதவீத பகுதிகள் இருளில் மூழ்கின. மின் துண்டிப்பால் வெயிற்கால வேனற் புழுக்கத்திலும் இரவு வெளிச்சம் இல்லாமலும் சென்னை மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பின்னர், மின்மாற்றியில் ஏற்பட்ட பழுது சரிசெய்த பின்னர் மீண்டும் மின்சாரம் விநியோகிக்கப்பட்டதாக மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் தாற்காலிகமாக வாபஸ்!

TNSTC buses indefinite strike - 2026

சென்னை:

போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களுடன் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், தங்கமணி, செங்கோட்டையன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொழிற்சங்கங்த்தினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில் முதற்கட்டமாக ரூ. 1000 கோடி வழங்க அரசுத் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்குப் பிறகு ரூ. 250 கோடி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாம். எனவே, தொழிற்சங்கங்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.

முன்னதாக, ஒய்வூதிய பலன்கள் உட்பட, தங்களுக்கு சேர வேண்டிய, ரூ 7,000 கோடி நிலுவைத் தொகையைக் கேட்டு போக்குவரத்து தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தத்தை துவக்கின.

இதனிடையே, போக்குவரத்துப் பணியாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அரசு பஸ் போக்குவரத்துக் கழகப் பணியாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு எதிராக செந்தில் குமரய்யா என்பவர் மனுதாக்கல் செய்தார்.

அதில் போக்குவரத்துப் பணியாளர்களின் வேலைநிறுத்தம் சட்ட விரோதமானது. அவர்கள் மீது எஸ்மா சட்டத்தை பயன்படுத்த வேண்டும். இதனை அவசர வழக்காகக் கருதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் முரளிதரன், சேஷசாயி ஆகியோர் முன்பு, இன்று மாலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்துப் பணியாளர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும். வராதவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள், தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தாற்காலிகமாக வாபஸ் பெறுவதாகக் கூறியுள்ளன.

விஜி என்கிற விஜயபாஸ்கர பட்டர்!

viji battar horz - 2026

ஸ்ரீவில்லிபுத்தூரில் நம் ஆப்தராயிருந்த விஜி பட்டர் என்கிற விஜயபாஸ்கர பட்டர் இன்று காலை பரமபதித்தார் என்று நண்பர் ஒருவர் தெரிவித்தார். மனதுக்கு மிகவும் வலி தந்த செய்தியாயிருந்தது. அவரின் ஐம்பத்தியோராம் அகவையில் அரங்கன் அழைத்துக் கொண்டான்!

எப்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றாலும், அவருடைய இல்லம் சென்று, அவரைப் பார்க்காமல் வந்ததில்லை. இருபது வருடங்களுக்கும் மேல் பழக்கம்! ஆண்டாள் ஆலயத்தின் அர்ச்சகராக இருந்தவர். ஸ்ரீநிதி பிரஸ் என வைத்துக் கொண்டு, பெருமாள், ஆண்டாள், ரங்கநாதர் படங்களை அழகாக அச்சிட்டுக் கொண்டிருந்தார்.

ஒரு முறை திருவரங்கம் நம்பெருமாளின் அதே அளவு படத்தைக் கொடுத்தார். நம்பெருமாள், தாயாரின் அருமையான சேம் சைஸ் படம் அது. வெகு ஆசையுடன் வாங்கி வந்து பிரேம் போட்டு இல்லத்தில் பிரதானமாக மாட்டி வைத்தேன். அதுகுறித்து பேஸ்புக்கிலும் குறிப்பிட்டிருக்கிறேன். ஒவ்வொரு நாள் பொழுது விடியும் போதும், அந்த அரங்கன் முகத்தில்தான் அந்தரங்கப் பார்வை பதியும். அப்படியே, படத்தைக் கொடுத்த புண்ணியவாளர் விஜி பட்டரும் நினைவுக்கு வந்துவிடுவார்.

ஆண்டாள் கோயில் குறித்த கட்டுரை, படங்கள் அவரிடமிருந்து கேட்டுப்பெற்று, மஞ்சரி, சக்திவிகடன், தினமணி வெள்ளிமணி, தீபம் இதழ்களில் ஆசையுடன் பிரசுரித்திருக்கிறேன். ஆண்டாள் ஆலயத்துக்கு யாராவது செல்வதாக அடியேனிடம் சொல்லி, யாராச்சும் தெரிந்தவர் இருக்கிறார்களா என்று கேட்டால், உடனே விஜி பட்டர் எண் கொடுத்து, பாருங்கோ என்பேன். அடியேன் பெயர் சொல்லிக் கொண்டு செல்பவர்களுக்கு நன்கு ஸேவை செய்து வைப்பார். இனி யாராவது கேட்டால், அந்த ரங்கமன்னாருக்குதான் அடியேன் சிபாரிசு ஓலை எழுதிக் கொடுத்தாக வேண்டும்!

அடியேனை விட பத்து வயது மூத்தவர் என்றாலும், அண்ணா என்றே வாய் மலர விளிப்பார். அந்தக் குரல் வெகு வசீகரமாயிருக்கும்! அண்மைக் காலத்தில் அவருக்கும் பத்திரிகை தனியாகச் செய்ய வேண்டுமெனும் ஆசை வந்துவிட்டது..

விசாரித்தார். ஆர்.என்.ஐ.யில் பத்திரிகை பதிவு செய்வது, தலைப்பு கொடுப்பது என வழிகாட்டினேன். அவர் பத்திரிகைக்காக கொடுத்த தலைப்பில் ஏற்கெனவே யாரோ பதிவு செய்திருந்ததால், அவர் விரும்பிய ஆயன் – டைட்டிலை விட மனசில்லை அவருக்கு! தனிச்சுற்றுக்கு மட்டும் என்று சொல்லி ஓர் இதழை அச்சிட்டார். அதுவும் கடந்த ஏப்ரலில்தான்! பிடிஎஃப் வடிவை அனுப்பி வைத்தார். கட்டுரைகள் எப்படிப் போடவேண்டும், லே அவுட் இத்யாதிகளை சொன்னேன். சரிண்ணா.. பண்றேன் என்றார்.

ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு முன்னமேயே மஞ்சள் காமாலை கண்டு நோய் வாய்ப் பட்டார் என்று இன்றுதான் அடியேனுக்கும் தெரிந்தது. செங்கோட்டை சுந்தர்ராஜப் பெருமாள் கோயில் அர்ச்சகர், இளவல் ரங்கராஜன் வருத்தத்துடன் சொன்னான்… இரு மாதங்களாக இருந்து, மதுரை அப்பல்லோவில் காட்டி, பின் சரியாகாதுபோய், சென்னை அப்பல்லோவுக்கு இருபது தினங்களுக்கு முன்னர் வந்து, இன்று காலை பரமபதித்தார் என்று தெரியவந்தது. சென்னையில் இருந்த தகவல் தெரிந்திருந்தால் ஓடிப்போய்ப் பார்த்திருப்பேன்…! அந்த சந்தர்ப்பத்தை ரங்கமன்னனார் அடியேனுக்கு வழங்கவில்லை!

ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூராள் சொல்லி வைத்தாள்…
எத்தனை முறை எழுதினும் களைத்திராது நம் கரங்கள்!
இந்த
ஆயனுக்காக இவ்வண்ணா கண்ட கனா என்னவோ
ஓயாமல் ஒழியாமல் ஓர் இதழுடன் ஒடுங்கிப் போனான்!
மாயன் ஏனிந்த மாயம் புரிந்தானோ!