Home Blog Page 5645

“ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ?..”

kanchi periyava - 2026

“ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ?..”

(பெரியவாளின் அனுகிரஹத்தால் அந்த பழம் (1008) கிடைக்கப் பெற்ற தொண்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் அப்பழங்களை ‘விஷு’புண்யகாலத்துக்கு
குருவாயூர் அனுப்ப சொல்ல 14 நாட்கள் கெடாமலும்,ஒன்று கூட தாரில்இருந்து கீழே விழாமல் இருந்த அதிசய சம்பவம்)

கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
புத்தகம்-மகா பெரியவர்,
தட்டச்சு வரகூரான் நாராயணன்

சற்று சுருக்கப்பட்டது.

சென்னையிலிருந்து ஒரு முக்யஸ்தர் அன்றைக்கு ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார்.
பெரியவாளின்திருச்சந்நிதிக்கு சமர்பிக்க வேண்டும் என்பதற்காகத்தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு தார்வாழைப்பழ்ங்களைத் தன்னுடன் கொண்டு வந்திருந்தார்.

பெரியவாளுக்கு வாழைத்தார்களை சமர்ப்பித்து விட்டு,அவருக்கு
நமஸ்காரம் செய்து பிரசாதம் பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

மடத்திலேயே கைங்கர்யம் செய்யும் கிருஷ்ணமூர்த்தியை அழைத்து ‘இந்த ஒவ்வொரு தார்லயும் எத்தனை பழம் இருக்குன்னு எண்ணிச்சொல்லு’ என்றார் மகா பெரியவா.

கைகளை உதறிக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி எழுந்தார். பெரியவாளிடம், “எண்ணிட்டேன் பெரியவா ஒரு தார்ல 275 பழம்,இன்னொரு தார்ல 375 பழம்
இருக்கு” என்றார்.

“சபாஷ்..சரி..” என்று இழுத்த பெரியவா,”ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை நீ
இதுவரைக்கும்பார்த்திருக்கியோ..”என்று கிருஷ்ணமூர்த்தியைப்
பார்த்துக் கேட்டார்.

ஒரு சில விநாடிகள் கழித்து கிருஷ்ணமூர்த்தி. “இல்லே பெரியவா…இதுவரை நான் கேள்விப்பட்டதில்லே..பெரியவா உத்தரவு கொடுத்தா அப்படி
ஒரு தார் எங்கிருந்தாலும் பிடிச்சுண்டு வந்துடறேன்” என்றார்.

“ஓ…இந்தக் கேள்விக்கெல்லாம் நானே பதில்சொல்லுவேன்னு ரொம்ப ஆவலா எம் மூஞ்சியை பாத்துண்டிருக்கியா?” என்று புன்னகையுடன் கேட்ட
பெரியவா, “இதுக்கு நா பதில் சொல்ல வேணாம். இளையாத்தங்குடில மாரியம்மன் கோயில்
இருக்கு. அங்கே போ. அந்த அம்மனை தரிசனம் பண்ணு.  உனக்கு எல்லா விவரமும் தானா கிடைக்கும்” என்று பொசுக்கென்று முடித்தார் மகா
பெரியவா.

‘1008 பழங்கள் அடங்கிய வாழைத்தாரைப்பார்ப்பதற்கு இளையாற்றங்குடிக்குப்  போ’ என்று பெரியவா கட்டளை இட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை.

இளையாற்றங்குடிக்கும் காஞ்சி ஸ்ரீசங்கர மடத்துக்கும் நிறைய தொடர்பு
உண்டு.

மகா பெரியவா சொன்னபடி அடுத்த நாளே தன் குடும்பத்தோடு இளையாற்றங்குடி புறப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி. பெரியவா திருவாக்கின்படி மாரியம்மனைத் தரிசித்தார்.

அப்போது கோயிலில் இருந்த யாரோ இருவர் வாழைத்தார்களைப் பற்றி திடீரென பேசிக் கொண்டிருந்தனர். சட்டென்று இவர்கள் பேச்சு காதுகளில் விழ..ஆச்சர்யப்பட்டு சம்பாஷணை நிகழ்ந்த திசை நோக்கித் திரும்பினார்.

அவர்களிடம், “ஐயா..1008 வாழைப்பழம் இருக்கிற மாதிரி நல்ல வாழைத்தார்
வேணும். இந்த ஊரில் எங்கே கிடைக்கும்?”என்று கேட்டார்.

ஏற இறங்கப் பார்த்த ஒரு ஆசாமி தன் வலக்கையை, நீட்டி, “தோ…தெக்கால போங்க. ஒரு பெரிய கிணத்தைத் தாண்டியதும் நிறைய வாழைமரம் இருக்கிற தோட்டம்ஒண்ணு வரும் . அங்கே இருக்கிறவர்கிட்ட கேட்டுப் பாருங்க” என்று சொன்னார்.

தலையில் முண்டாசு கட்டிய ஒருவர் இவரை எதிர்கொண்டு விசாரிக்க 1008
வாழைப்பழங்கள் அடங்கிய தார் ஒன்று வேண்டும் என்று சொன்னார்.சற்று முன்  வாழைமரத்தில் இருந்து அறுத்துத் தரையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த தார்களில் இருந்து ஒன்றைத் தூக்க முடியாமல் சுமந்து வந்தார்.அவர். “இதான் சாமீ நீங்க கேட்ட 1008 பழத்தாரு..” என்று இவர் முன்பாக வைத்தார்.

உடலெங்கும் புல்லரிப்பு. மகா பெரியவாளின் தீர்க்க தரிசனத்தை நினைத்துப்
பரவசப்பட்டார்.

தோட்டத்துக்காரன் சொன்ன விலையான ரூபாய் முப்பதைக் கொடுத்து விட்டு, ஒரு ஆசாமியை கூலிக்கு அமர்த்தி பெரியவா திருச்சந்நிதியின் முன்னால் அந்த வாழைத்தாரைக் கொண்டு போய் வைத்தார்.

அதைப் பார்த்து பெரியவா புன்னகைத்தார்.

“1008 பழம் இருக்கிற தாரைப் புடிச்சுண்டு வந்துட்டே போலிருக்கு?” என்று
பெரியவா இடி இடியெனச் சிரித்தார்.

“நேத்து ஊர்ல பாக்கறதுக்குக் காயா இருந்தது. பெரியவா சந்நிதிக்கு வந்தவுடனே மஞ்ச மசேல்னு பழுக்க ஆரம்பிச்சுடுத்து” என்றார் கிருஷ்ணமூர்த்தி நெகிழ்ச்சியுடன்.

“விஷு (மலையாள புத்தாண்டு) வரப் போகிறது. இந்த தாரை ரொம்ப கவனமா குருவாயூருக்கு அனுப்பிவிடு” என்றார் பெரியவா தடாலென்று.

அப்போது பெரியவா கைங்கர்யத்தில் இருந்த சீடர்கள் “விஷுவுக்கு இன்னும் பதினாலு நாள் இருக்கே..அதுக்குள்ள இந்த தாரை இங்கே வெச்சிருந்தா அழுகி வீணாப் போயிடுமே” என்று இவர் காதருகே வந்து குசுகுசுத்தனர்.

அப்போது கிருஷ்ணமூர்த்தி சொன்னார்;

“இது குருவாயூருக்குப் போகணும்னு பெரியவா உத்தரவு போட்டிட்டாருன்னா, அது பதினாலு நாள் இல்லே… பதினாலு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது.
அன்னிக்கிப் பழுத்த பழம் போல பொலிவோட பிரகாசமா இருக்கும். பெரியவா வாக்கு என்னிக்குமே தப்பாது” என்று சொல்லி தாரைப் பத்திரப்படுத்துமாறு ஒரு சிஷ்யரிடம் சொன்னார்.

குருவாயூரில் சமர்ப்பிக்கப்படும் வரை அந்த 1008 பழத்தில் ஒரு பழம்கூட தாரில் இருந்து கீழே விழவில்லை. முனையில் கருக்கவில்லை. கொஞ்சமும் வீணாகாமல் புத்தம் புதிதாக அப்படியே இருந்தது அதிசயம்தான்.

மோடியைக் கொல்ல சதியா? : இலங்கை நிகழ்ச்சியில் ஊடுருவிய மர்ம நபர்கள் யார்?

modi in srilanka - 2026
சென்னை:

இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் மோடியைக் கொல்ல சதி நடந்ததாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை ஊடகங்கள் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளன. மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை மர்ம நபர்கள் சிலர் இந்நிகழ்ச்சிகளின் போது பின் தொடர்ந்ததாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 12ஆம் தேதி சர்வதேச வெசாக் மாநாடு, கொழும்பு பண்டார நாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருத்தினராகக் கலந்து கொண்டார். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி அரங்குக்குள் நுழைய முற்பட்டுள்ளனர். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்குள் முஸ்லிம் நபர் ஒருவர் கத்தரிக்கோலுடன் உள்ளே நுழைய முயற்சி செய்தார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அவ்வாறு அவர் நுழைந்தபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் அவரைக் கைது செய்து குருந்துவத்தை போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்த நபர் முஸ்லிம் மதத் தலைவர் போல் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தினுள் நுழைய முயற்சி செய்துள்ளார் என்று தெரிகிறது. இவர், நரேந்திர மோடி கலந்து கொண்ட கூட்டத்தில், சீன பிரதிநிதி ஒருவர் செல்லும் அனுமதி அட்டையுடன் செல்ல முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளது. இந்த நபரைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனையடுத்து அவரை மேற்படி மருத்துவ அறிக்கைக்காக அங்கொட மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாம்.

கைது செய்யப்பட்ட அடையாளங்களை வெளியிடாவிட்டாலும், அவரின் மகள் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது. இதேநேரம் அன்று பெண் ஒருவரும் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தினுள் அனுமதியின்றி நுழைய முயற்சி செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

மோடியை தாக்குவதற்காகவே இவர்கள் வந்திருக்கலாம் என்று கூறப்படுவதால், இந்தச் செய்திகள் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டில் சிபிஐ திடீர் சோதனை!

chidambaram karthi - 2026
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வீட்டிலும் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ
அதிகாரிகள் சோதனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீடுகள் உள்பட அவர்களுக்கு சொந்தமான மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சோதனைக்கான காரணம் அதிகாரப்பூர்வ வெளியாகவில்லை.

9 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் உள்ள இருவரது வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, தி ல்லி உள்ளிட்ட 14 இடங்களில் சோதனை நடந்து வருவதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.

சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த கால கட்டத்தில் ஏர் செல் மேக்சிஸ் வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்ததாக நேற்று சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். அனுமதி கொடுப்பதற்கு கார்த்தி சிதம்பரம் பல லட்சம் லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து, அவர் மீதும், இந்திராணி, பீட்டர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் மற்றும் வாசன் ஐ கேர் நிறுவனம் உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், அவர் அதில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியிருந்தார்.

இந்நிலையில், ப.சிதம்பரம் தற்போது டெல்லியில் உள்ள நிலையில், அவரது வீட்டில்
சிபிஐ சோதனை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

CBI raids residences of former Union minister P Chidambaram, son Karti in Chennai

0

chidambaram karthi - 2026

The Central Bureau of Investigation (CBI) is carrying out raids at the residences of former Union minister P Chidambaram and his son Karti Chidambaram in Chennai.

According to sources, the raids began early morning.

More details are awaited.

In April this year, the Enforcement Directorate (ED) had issued a show-cause notice to Karti Chidambaram and a firm purportedly linked to him for alleged violations of the FEMA laws to the tune of Rs 45 crore.

The agency also issued a similar notice, after over two years of investigations, to another firm M/s Vasan Health Care Private Limited, which is based in Chennai, for alleged forex violations of Rs 2,262 crore.

 

ரஜினி அரசியலுக்கு வந்தால் தோல்வி அடைவார்: சு.சுவாமி சொன்ன பின்னணி

swami rajini - 2026

சென்னை:

ரஜினி அரசியலுக்கு வந்தால் தோல்வி அடைவார்; அவருக்கென ஒரு கொள்கை கிடையாது. அவரால் அரசியலில் வெற்றி பெற முடியாது’ என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆங்கில சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியின் அரசியல் பேச்சுகள் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர், ”ரஜினிக்கென ஒரு கொள்கை கிடையாது. அவர் தமிழர் இல்லை. கர்நாடகாவில் பிறந்த மராத்திய பின்புலத்தைக் கொண்டவர். தற்போது அவரின் அரசியல் பார்வையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அரசியல் குறித்த கருத்தையெல்லாம் பேசி வருகிறார். அவர் அரசியலுக்கு வந்தால், கண்டிப்பாக தோல்வியடைவார்.” என்று விமர்சித்துள்ளார்.

முன்னதாக, திங்கள்கிழமை நேற்று சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். அப்போது, தான் அரசியலுக்கு வருவதும் வராததும் ஆண்டவன் கையில் இருக்கிறது என கூறினார்.

ரஜினிகாந்த் பேசியதைக் கேட்டபோது, அவர் அரசியலுக்கு வர தயாராகி விட்டார் என்றே தெரிகிறது என ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்து வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் என தமிழக பாஜக தலைமை கருத்து தெரிவித்த சூழலில், பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சாமி ரஜினியின் பேச்சுக்கு தன் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் ரஜினியின் அரசியல் கருத்துகள் குறித்துப் பார்க்கும் போது, சுப்பிரமணியன் சுவாமி சொன்னதன் பின்னணி நன்கு தெரியவரும். போயஸ் கார்டன் பகுதியில் தான் குடியிருக்கும் வீட்டுப் பகுதியில் தனக்கு ஜெயலலிதாவால் ஏற்பட்ட தனிப்பட்ட வெறுப்பின் காரணத்தால் அரசியல் பேசினார் ரஜினி. ஜெயலலிதாவை சமாளிக்க திமுக தலைவர் கருணாநிதியின் தயவை நாடினார். ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கருணாநிதி தனக்கு பெரும் உதவி செய்துள்ளதாகவும், செய்நன்றி மறக்காமல், அவர் இருக்கும் வரை தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் கூறினார். பின்னாளில் ஜெயலலிதாவுடன் நட்பு கொண்டாடினார்.

சென்ற பேரவைத் தேர்தல் நேரத்தில் மோடி சென்னை வந்திருந்தபோது, ரஜினியின் வீடு தேடிச் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போதும் ரஜினி தனக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை என்றார். இது போன்ற காரணங்கள் ரஜினியை நம்பகத்தன்மை அற்றவராகவே காட்டுகிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. அதையே சுப்பிரமணிய சுவாமியும் பிரதிபலித்துள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.

குஜராத் அரசின் 120 கணினிகள் ரான்சம்வேர் வைரசால் செயலிழப்பு

Virus Attack - 2026
குஜராத் அரசுக்குச் சொந்தமான 120 கணினிகளில் ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கணினியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தகவல்கள் அழிந்துபோனதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிப்புக்குள்ளான கணினிகளில் இருந்த தகவல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. எனினும் அந்த கணினிகளில் முக்கியமான தகவல் ஏதும் இல்லை என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் தனஞ்ஜெய் திவேதி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கணினிகளும் அணைக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலக பணிகளும் முடக்கிவைக்கப்பட்டது என்று குஜராத்தின் மெஹ்சானா மாவட்ட ஆட்சியர் அலோக் பாண்டே கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை (NIA) உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகளை பயன்படுத்தி உலகின் சுமார் 150 நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கணினிகளில் ‘ரான்சம்வேர்’ வைரஸ் மூலம் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க அந்தந்த நாட்டு அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வைரஸ் தாக்குதல் ஏற்படும் கணினிகளில் சேமித்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் வான்னகிரை (Wannacry) என்ற பெயருடன் வருவதால், இந்தப் பெயரில் வரும் எந்தவிதமான தகவலையும் திறக்கவோ, படிக்க முயற்சிக்க வேண்டாம். இந்த பெயருடைய கோப்புகளை திறக்கும் போது, நமது தகவல்கள் அனைத்தையும் அந்த வைரஸ் அழித்து விடும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது.

பிரதமர் போட்டியில் நான் இல்லை: அதற்கான திறமையும் எனக்கில்லை: நிதிஷ் குமார் பளிச் பதில்

modi nithish - 2026

பாட்னா:
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் இன்று பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ”பீகார் மக்களுக்காகப் பணியாற்றவே நான் நியமிக்கப்பட்டுள்ளேன். தேவையில்லாமல் பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடப் போவதாக பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். எனக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை. பிரதமர் ஆகும் திறமை எனக்கு இல்லை. மோடிக்கு அந்தத் திறன் இருந்ததால்தான் அவர் 2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆனார். 2019 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் மக்கள்தான் முடிவு எடுப்பார்கள்’ என்றார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “நான் தொடர்ந்து தேவையில்லாமல் இலக்காக்கப்படுகின்றேன். எங்களுடையது ஒரு சிறிய கட்சி. நான் ஒன்றும் முட்டாள் கிடையாது. எங்களுடைய கட்சியின் தேசியத் தலைவர் ஆனால், நான் பிரதமர் பதவிக்கான போட்டியாளர் என்பது பொருள் இல்லை” என்றார்.

மேலும், “மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்ற நிதிஷ் குமார், என்னுடைய வாழ்க்கையில் எம்.பி.யாக, மத்திய மந்திரியாக, இப்போது முதல்-மந்திரியாக மக்களுக்காக பணியாற்றுகிறேன். இப்போது பீகாரில் மகா கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு அளித்து உள்ளனர், என்னுடைய பணியை நேர்மறையான முறையில் செய்து வருகின்றேன்” எனவும் கூறினார் நிதிஷ் குமார்.

பாரதீய ஜனதாவிற்கு எதிரான கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்பீர்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்குத்தான் பிரதமர் ஆகும் திறமை என்னிடம் கிடையாது என கூறினார் நிதிஷ்குமார்.

அரசியல் ஆதாய சந்திப்பா அது? ரஜினியுடனான சந்திப்பு குறித்து கங்கை அமரன் வியப்பு!

gangai amaran - 2026

சென்னை:

சென்னை ஆர்.கே. நகர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட போது கங்கை அமரன் ரஜினி காந்தை நேரில் சந்தித்தார். இது அரசியல் ஆதாயத்திற்கான சந்திப்பில்லை என்று ரஜினிக்கே தெரியும் என்று கூறிய கங்கை அமரன், அது அரசியல் ஆதாய சந்திப்பா என வியப்பு தெரிவித்துள்ளார்..

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது ‘ஆதாயத்திற்காக சிலர் என்னை அணுகுகின்றனர். அவ்வாறு அணுகும் போது நான் ஆதரிப்பதில்லை’ என்று கூறினார்.

ரஜினியின் இந்தக் கருத்து குறித்து இமையமைப்பாளர் கங்கை அமரன் கூறியதாவது:

ரஜினியை நம்பி இருக்கக் கூடிய ரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார். ஒரு பிரபலமான மனிதர் சுத்தமாக இருக்க விரும்புவது தவறு இல்லை. ஆன்மீகம் கலந்த ஓர் அரசியல்வாதி நமக்கு வேண்டும். அவர் அரசியலுக்கு வருவது போலத்தான் அவரது பேச்சு உள்ளது.

லாபத்தை எதிர்ப்பார்ப்பவர்கள் வர வேண்டாம் என்று ரஜினி சொல்லி இருக்கிறார். இது சூசகமாக, மறைமுகமாக அரசியலுக்கு அவர் வரப்போவதற்கான அறிகுறி. அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். என் அருமை நண்பர் அரசியல் பிரவேசத்திற்கு என் வாழ்த்துகள்.

பாஜகவில் ரஜினி சேருவாரா என்பது குறித்து இப்போது பேச வேண்டியது இல்லை. அவர் தனது வாழ்வில், தமிழகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாஜகவில் நான் சேர்ந்து வேட்பாளராக நின்ற போது என்னை அழைத்து ரஜினி பாராட்டினார். அரசியல் பற்றி பல விஷயங்களை பேசினார். அவரே இப்போது அரசியலுக்கு வந்தார் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஆர். கே. நகர் தொகுதியில் நான் வேட்பாளராக நின்ற போது, நான் ரஜினியை சந்தித்தது அரசியல் ஆதாயத்திற்காக அல்ல என்பது ரஜினிக்கே தெரியும். சந்திப்பின் போது எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நானும் அவரிடம் கேட்கவில்லை என்று கூறினார் கங்கை அமரன்.

 

மீண்டும் கணினி வைரஸ் தாக்கும் அபாயம்: அச்சத்தில் உலக நாடுகள்!

Virus Attack - 2026

மீண்டும் அலை அலையாகத் தொடரக்கூடிய இணையத் தாக்குதலுக்கு தாம் இலக்காகிவிடுவோமோ என்ற அச்சத்தில் அரசாங்கங்களும், தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன.
கடந்த வெள்ளி அன்று, உலகு எங்கும் லட்சக்கணக்கான கணினிகளை வைரஸ் தாக்கியது. கணினி வைரஸின் பரவலால், கணிசமான தாமதம் ஏற்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் கூறுகின்றன. நிலைமை மீண்டும் கட்டுக்குள் வந்தாலும், இந்தத் தாக்குதலை ஒரு அபாயகரமான எச்சரிக்கை மணியாகக் கொள்ள வேண்டும் என்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இதனால் மீண்டும் கணினி வைரஸ் தாக்கக்கூடுமோ என்ற அச்சத்தில் உலக நாடுகள் பல இருப்பதாகக் கூறப்படுகிறது.

***

கணினி தொழில் நுட்ப வரலாற்றிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரும் சைபர் தாக்குதலை ஒரு Ransom ware கடந்த இருநாட்களில் நிகழ்த்தியுள்ளது. 48 மணி நேரத்தில்150 நாடுகளுக்கு பரவி சுமார் 2,30000 கணினிகளை போட்டு புதைத்திருக்கிறது இந்த வைரஸ், கணினிகள் மட்டுமல்லாமல் மருத்துவமனைகளின் MRI Scanners, Blood Storage refrigerators போன்றவற்றையும் தாக்கி ஆளும் அரசுகளை அலற செய்ததிருக்கிறது. Fedex, LATAM Airlines , National Health Service of Britain, Minitry of internal affairs – Russia மற்றும் இதே போன்ற 100 அதிமுக்கிய உலக நிறுவனங்களையும் கதற வைத்துள்ளது இந்த வைரஸ்,

Wannacry, or WCRY, Wannacrypt என்ற பெயரில் பரவி வரும் இது ஒரு Ransomware , ஆம் உங்கள் கணினியில் நுழைந்த அடுத்த நொடி உங்கள் கோப்புகள் அத்தனையும் (Including hidden Videos , Photos ) என்க்ரிப்ஷன் என்ற பெயரில் லாக் செய்து 300 டாலர் தந்தால் தான் கடத்திய பைல்களை விடுதலை செய்வேன் என்று பிணைய தொகை கேட்கும் மிரட்டல் பேர்வழி தான் Ransomware, ஆனால் 300 டாலர் மட்டுமல்ல மூன்று நாட்கள் Deadline சொல்லி அலறடிக்கிறது இந்த ரேன்சம்வேர், மூன்று நாட்களுக்கு பிறகு பிணையத்தொகை 600 டாலர் தந்தால் தான் கோப்புகள் விடுதலை நடக்கும். இதையும் தராவிட்டால் உங்கள் கோப்புகள் அனைத்தையும் நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடும், மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தைத்தான் இந்த வைரஸ் உள்நுழைகிறது, மெயில்கள் மற்றும் மெசேஜ்கள் இணைப்புகள் மூலம் மற்றும் இணைய டவுன்லோடிங் மூலமும் சில நாடுகளில் பரவியுள்ளது. இந்த இரண்டு நாட்களில் மட்டும் இந்த கடத்தல்களுக்கு கிடைத்த பிணையத்தொகை வசூல் 33000 டாலர்கள், Bitcoin மற்றும் Wallets வழியாக இந்த தொகை செலுத்தப்படுவதால் இதை யாருக்கு போகிறது என்பதை கூட இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை!

கணினி தொழில் நுட்ப வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு மிகப்பெரும் தாக்குதல் இது என Europol நேற்று பிபிசி யில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது, இந்த வைரஸை அழிக்க Kill switch இருந்தாலும் இன்னும் 24 மணிநேரத்தில் Kill switch எதுவும் இல்லாத முறையில் இந்த வைரஸ் வடிவமைக்கப்பட்டு “ என்ன யாராலயும் அழிக்க முடியாது” என எந்திரன் சிட்டியாய் இது பரவும் என்பதுதான் தொழில்நுட்ப உலகையே அதிர செய்துள்ள தற்போதைய செய்தி , இப்போதைக்கு எல்லா நாடுகளும் கையை பிசைந்து கொண்டு செய்வதறியாமல் தவிக்கின்றன, கையை பிசைவது மட்டுமே எப்போதும் செய்யும் இந்தியா இந்த பஞ்சாயத்து நிழலில் துண்டை விரித்து படுத்திருக்கிறது. ஆகவே நண்பர்களே உங்கள் கணினி , மொபைல் எந்த நொடியும் தாக்குதலுக்கு ஆளாகலாம் , அதை தவிர்க்க நீங்கள் செய்யவேண்டியது மெயிலில் வரும் தேவையற்ற இணைப்புகளை தொடாதீர்கள், வாட்சப் , மெஸ்சேன்ஜ்ர் எல்லாமும் சேர்த்துதான்.

ஜியோவின் ’ஐடியா’வால் ’ஐடியா’வுக்கு ரூ.404 கோடி வேட்டு!

ideacellular - 2026

மும்பை:

ரிலையன்ஸ் ஜியோவின் அட்டகாச அதிரடி ஐடியாவால், ஆதித்யா பிர்லா குழுமத்தின் ஐடியாவுக்கு ரூ.404 கோடி கடந்த நிதியாண்டில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது!

தொலைத்தொடர்பு நிறுவனமான ஐடியா நிறுவனம் 2016- 2017 ஆம் நிதியாண்டில் ரூ.404 கோடி நஷ்டமடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜியோ சேவை தொடங்கப்பட்டது முதல் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதில் ஐடியாவும் ஒன்று.

இந்நிலையில், 2016- 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை ஐடியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.  இதே நேரம் கடந்த 2015-16ம் நிதியாண்டில், இந்நிறுவனம் ரூ. 2,714 கோடி லாபம் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதியாண்டு 2017ன் நான்காவது காலாண்டில் மொத்த நஷ்டம் ரூ.325.6 கோடி என்றும், வருமானம் 13.7 சதவீதம் குறைந்துள்ளது என்றும் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ளது.