
நடிகர் விஷால் மாணவர்களுக்கு உதவி செய்வதாக அறிவிப்பு !

தமிழகத்தில் பிடிப்பட்ட ரூ.570 கோடிக்கு விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி.!
ஊக்க மருந்து விவகாரம்: விசாரணையில் ஷரபோவா பதிலளிக்க முடிவு
ஊக்க மருந்து உட்கொண்ட விவகாரம் தொடர்பாக, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நடத்தும் விசாரணை குழுவினரிடம், ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா பதிலளிக்க உள்ளார்.
ரஷ்ய டென்னிஸ் விராங்கனை மரியா ஷரபோவா, ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபணம் ஆனதை, கடந்த மார்ச் மாதம் ஒப்புக் கொண்டார். இருப்பினும் ஊக்கமருந்து சோதனை தடுப்புக் கழகம் தடை செய்துள்ள மெல்டோனியம் என்ற பொருள், தான் உட்கொண்ட மருந்துகளில் கலந்திருந்ததாகவும், இதனால் வேண்டும் என்றே ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலே, மெல்டோனியம் தடை செய்யப்பட்ட பொருளாக அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் தான் கடந்த சில ஆண்டுகளாக எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் அந்தப் பொருள் கலந்திருத்ததால், தான் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அவரை தற்காலிகமாக தடை செய்து சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்ய, நாளை லண்டனில் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் சார்பில் விசாரணை நடைபெற உள்ளது. அந்த விசாரணையின் போது, மரியா ஷரபோவா நேரில் ஆஜராக விளக்கமளிப்பார் என தெரிகிறது.
மெல்டோனியம் தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்ட பின், ஏராளமான வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. ஊக்கமருந்து உட்கொண்டது நிரூபிக்கப்படும் பட்சத்தில், சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால், நான்கு ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இருப்பினும் முதல் தடவை உபயோகித்திருந்தாலோ, அல்லது ஊக்கமருந்து உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், தெரியாமல் உடலில் ஊக்கமருந்து சென்றிருந்ததாலோ தண்டனைக் காலம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்திய வீரர்க்களே குற்றச்சாட்டில் சிக்காதவர்கள்: ஐ நா அறிவிப்பு
அனைத்து நாடுகளின் அமைதி படையினரின் இந்த ஆண்டுக்கான குற்றப் பின்னணி குறித்த விபரத்தை ஐ.நா., அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அமைதி படையினர் மீது எந்தவொரு பாலியல் குற்றச்சாட்டும் இல்லை. கடந்த ஆண்டும் இந்திய படையினர் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவாகவில்லை. இந்திய படையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயலாற்றி வருவதால் ஏதாவது நடந்தால் கூட உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நாடுகளின் அமைதி படையினருக்கு எதிராக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தை சேர்ந்த 2 அமைதி படை வீரர்கள் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது போன்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்றொரு வீரருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அதிக நேரம் கால்பந்து விளையாடி உலக சாதனை படைக்கும் முயற்சி தொடக்கம்
120 மணி நேரம் தொடர்ந்து கால்பந்து விளையாடி புதிய கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சி சிலி நாட்டில் நடைபெற்று வருகிறது. சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ-வில் உள்ள பழமையான கால்பந்து மைதானமானத்தில், இந்த முயற்சி நேற்று தொடங்கியது. 60 நிமிடங்களைக் கொண்டதாக ஒரு போட்டி நடத்தப்படுகிறது.
அந்நாட்டு தேசிய அணியின் கோல் கீப்பர் கிறிஸ்டோஃபர் டொஸெல்லி உள்ளிட்ட தொழில்முறை கால்பந்து வீரர்கள் மற்றும் மூவாயிரம் பேர் இந்தச் சாதனைப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். வரும் 22-ம் தேதி வரை தொடர்ந்து போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஸ்காட்லாந்தில் தொடர்ந்து 105 மணி நேரங்கள் கால்பந்து விளையாடியதே இதுவரை சாதனையாக உள்ளது குறிப்பிடதக்கது.
வரும் 22-ம் தேதி பிசிசிஐ தலைவர் தேர்தல்: தலைவராகிறார் தாகூர்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தோ்தலுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த சஷாங் மனோகர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அப்பதவிக்கு வரும் 22-ம் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பீகார் கிரிக்கெட் சங்கம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பி.சி.சி.ஐ தேர்தலுக்கு தடை விதிக்க கோரியது.
கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக ஓய்வு பெற்ற நீதிபதி லோதா கமிட்டி பரிந்தரைத்தவர்கள் போட்டியிடுவதால் தேர்தலுக்கு தடை விதிக்க பீகார் கிரிக்கெட் சங்கம் வலியுறுத்தியது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து ஏற்கனவே விசாரணை நடத்திய நீதிபதிகள் அமர்வை அணுக உத்தரவிட்டு பி.சி.சி.ஐ தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இதனால் திட்டமிட்டப்படி வரும் 22-ம் தேதி பிசிசிஐ தலைவர் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. தற்போதைய செயலாளர் அனுராக் தாகூர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
பெட்டி பெட்டியாக பணம் பெற்ற திமுக தலைவர் கருணாநிதியை காப்பாற்றவே கொலை ! : வைகோ
திருமணமான ஒரே நிமிடத்தில் மணப்பெண்ணை விவகாரத்து செய்த மணமகன்
சவுதி அரேபியாவில் திருமணமான ஒரே நிமிடத்தில் மணப்பெண்ணை, மணமகன் விவகாரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த இந்த திருமணத்தின் போது, திருமண நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தாமல் மணமகள் தனது தோழிகளுடன் போனில் எஸ்.எம்.எஸ் செய்துசெய்துள்ளார். இதை பார்த்து கோபமடைந்த மணமகன், மணமகளை விவகாரத்து செய்துள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் ஒரு மணிநேரத்திற்கும் எட்டு விவாகரத்துகள் நடைபெறுகிறது. விவாகரத்து செய்பவர்களில் 50 சதவிகிதம் பேர் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 232 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எல்லா தொகுதிகளிலும் பெரிய அளவில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 232 தொகுதிகளில் நேற்று முன்தினம் பதிவான வாக்கு பெட்டிகள் அனைத்தும் மத்திய துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள 68 வாக்குப்பதிவு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு மையத்திலும் 14 டேபிள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சோழிங்கநல்லூர் தொகுதியில் மட்டும் 24 டேபிள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு டேபிளில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்படும். சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை சுற்றி துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். 2வது அடுக்கில் மாநில ஆயுதப்படை போலீசாரும், 3வது கட்ட பாதுகாப்பில் சாதாரண போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
வாக்குப்பதிவு மையத்திற்குள் வரும் ஏஜென்டுகள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. மின்தடை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கும். வாக்கு எண்ணிக்கையில் 9629 அரசு ஊழியர்கள் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையிலும் ஒரு மைக்ரோ அப்சர்வர் என மொத்தம் 3,971 மத்திய அரசு ஊழியர்கள் இருப்பார்கள். மத்திய-மாநில அரசு ஊழியர்கள் என மொத்தம் 13,592 பேர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுகிறார்கள். வழக்கமாக தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஆனால், இந்த முறை தபால் வாக்கு மற்றும் மின்னணு எந்திரத்தில் பதிவான வாக்குகள் இரண்டுமே காலை 8 மணிக்கு எண்ணப்படும்.
ஆனால், கடைசி ரவுண்டு வாக்குகள் மின்னணு எந்திரத்தில் எண்ணி முடிக்கப்படுவதற்கு முன் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், காலை 9 மணிக்கு, 232 தொகுதியிலும் முதல் ரவுண்ட் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு முன்னணி நிலவரங்கள் தெரியவரும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினர். மறுவாக்குபதிவு: தென்காசி தொகுதியில் மட்டும் 56வது பூத்தில் 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாதிரி வாக்கு நடைபெற்றபோது பதிவான 52 வாக்குகள் அதில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதை மத்திய தேர்தல் பார்வையாளர் கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த பூத்தில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளார். அதனால் அந்த பூத்தில் இன்று மறுவாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட வாய்ப்புள்ளது…

