தமிழக சட்டமன்ற தேர்தல் : பாஜக பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நியமனம்
வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
***
சிந்தனை ஓட்டம் வரதனைப் பற்றியே இருந்தது. கேள்விப்பட்ட சங்கதிதான்! ஆயினும் கண்ணாரக் கண்டு உணர்வில் கலந்ததில்லை! எப்படியும் இன்று சென்றுவிடலாம். எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் ஓர் அழைப்பு! எடுத்தால்… நான் முன்னர் பணிபுரிந்த நாளிதழில் தற்போதும் பணிபுரியும் ஒரு நண்பர். கட்டாயத்தின் பேரில் தான் விருதாவாகத் தான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியதைச் சொன்னார். நான் திருமுக்கூடல் சென்று, பாலாற்றின் கரையில் பொழுது போக்கச் செல்லவதாகச் சொன்னேன்! “நீங்க கொடுத்து வெச்சவர்ண்ணா” என்ற வாசகத்தோடு முடித்துக் கொண்டார்.
***
வரதனின் விழாக் கற்பனைகள் ஒரு புறமும், கசந்த காலத்தைக் கடந்து வாழ்க்கையின் வசந்த காலத்தை எதிர்நோக்கிச் செல்லும் கற்பனைகள் ஒரு புறமுமாய்… வழக்கம்போல் பைக் பறந்து கொண்டிருந்தது. காட்டாங்குளத்தூர், மறமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் கடந்து பாலார் செல்லும் காட்டுப் பாதையினூடே தனியனாய் பயணம். ஆளரவமற்ற பகுதி என்பார்களே… அதன் வடிவத்தைக் கண்டுகொள்ளும் சாலைதான்! இடையில் இரு கிராமங்கள். ஆனாலும் அமைதியாய் அடங்கிக் கிடந்தன. காஞ்சிபுரத்தின் பழைமைச் செழுமையைக் கண்ணுக்குள் நிரப்பலாம். எல்லாம் வரதனின் ராஜாங்கம் ஆயிற்றே!
***
திருமுக்கூடல் – மூன்று ஆறுகள் கூடும் இடம்! பெருமான் அந்தக் கரையில் எழுந்தருளியதால் ‘திரு’ சேர்ந்து கொண்டுள்ளது. நீர் இன்றி ஏதோ ஆற்றின் பெயரைத் தன்னளவில் கொண்டுள்ள பாலாறு. ஒருவேளை பால் போல் வெண்மை என்பதால் வெண்மணல் சேர்ந்து வெளித் தெரிகிறதோ? இடப்புறத்தே ஓடிவந்து கலந்துவிடும் செய்யாறு மட்டும் தன்னில் நீர் தாங்கி அங்கே நிரம்புகிறது! வேகவதி ஒரு சிற்றோடையாகி அங்கே சங்கமித்து விடுகிறது.
***
திருமுக்கூடல் தலத்தைப் பற்றி என்றோ படித்தும் எழுதியும் இருக்கிறேன் என்றாலும், முதல்முறை நேரில் காணும் பரவசம்! தொல்லியல் துறைப் பராமரிப்பின் வெளித்தோற்றம் பளிச்செனப் படுகிறது. கோபுரமற்ற புகுவாசல் வெண்மைக் கற்கள் தாங்கி நெடிது நிற்கிறது! உள்ளே ஒரு பசுமைப் பூங்காவின் தோற்றம். செதுக்கப்பட்ட பாதைகள். புல்வெளி. ஈரடிக்கு வளர்ந்து பராமரிக்கப்படும் செடிகள். பூக்களைத் தாங்கி நந்தவனத்தின் அருமை காட்டுறது.
***
இரவு 8 மணி ஆயிற்று! சீவரம் பெருமாளை தரிசித்துவிட்டு, திரும்பினேன். சீவரத்தை அடுத்த பெட்ரோல் பங்கில் திரும்பினேன். யாருமே இல்லாதது போன்ற நிலை. ஆனால், ஒரு ஓரத்தில் நின்று செல்லில் சினுங்கிக் கொண்டிருந்த ஒருவர், ஒற்றை ஆளாய் எனைக் கண்டதும் அசைந்து வந்தார். அவரை மெதுவாகப் பேசிவிட்டு பிறகு வருமாறு சைகை செய்தேன். சில நொடிகளில் வந்தார். அவரை நிதானமாக வருமாறு சைகை காட்டியதாலோ என்னவோ… பெட்ரோல் நிரப்பிக் கொண்டே வெகுநாள் பழகிய சிநேகத்துடன் பேசினார்… “வண்டிங்க வந்துட்டு இருக்கு சார். வீட்ல இருந்து பேசினாங்க. கோயிலுக்கு கூட்டிட்டுப் போகணும்னு காலைல இருந்தே சொல்லிக்கிட்டிருந்தாங்க! ஆனா பாருங்க இன்னிக்குன்னு நெறய பேர் லீவு. சிலர் சாப்ட போய்ட்டாங்க. பெட்ரோல் போட ஆளில்ல. அதான் வீட்ல சொல்லி புரியவெச்சிட்டிருந்தேன். இப்பவாவது 9 மணிக்குள்ள வீட்டுக்கு போய் கூட்டிட்டு சீவரம் பெருமாளயாச்சும் பாத்துட்டு வந்துடணும்… ஆனா… நீங்க கொடுத்து வெச்சவங்க சார்…!”
***
அதே காட்டுப் பாதையில் திரும்பினேன். இரவுப் பொழுதுக்கேயுரிய வண்டுகள் பூச்சிகளின் சப்தங்கள் நிசப்தத்தைக் கடந்து கொண்டு கேட்கிறது! பாலார் ஊர் கடந்து, ரெட்டிப்பாளையம் காட்டுப் பகுதியினூடே செல்கையில், சாலையின் ஓரத்தில் இருந்த புதரில் இருந்து மர அணில் போன்ற ஏதோ ஒன்று… பைக் விளக்கின் வெளிச்சத்துக்கு அப்படியே கீழிருந்து தாவி சரியாக என் வலது தோளில் பாய்ந்து கீழே விழுந்தது! நள்ளிரவும் காட்டுப் பாதையும் தனிமையும் எனக்குப் புதிதல்ல. பொதிகை மலைப் பகுதியின் காட்டுப் பாதைகளில் சிறுவயது முதலே தனித்துச் சென்று பழகிய பழக்கம்தான்! பள்ளிப் பருவத்துக்குப் பிறகான வாழ்க்கையிலும் வருடம் பல தனித்திருந்தே கடந்து விட்டவனுக்கு, காட்டுப் பாதையில் மட்டும் தனிமைப் பயணம் அச்சத்தைத் தந்துவிடவில்லை!
செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியில் திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்ஸவம் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
பழம்பெரும் பதிப்பக உரிமையாளர் வானதி திருநாவுக்கரசு காலமானார்
சென்னை:
தமிழ்ப் பதிப்பக உலகில் முக்கியப் பங்கு வகித்தவரும் பழம்பெரும் பதிப்பக உரிமையாளருமான வானதி திருநாவுக்கரசு ஜன.19 செவ்வாய்க்கிழமை இன்று அதிகாலை 12.30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 88.
சில நாட்களாக உடல் நலம் குன்றி இருந்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை அபிராமபுரத்தில் உள்ள அவரது வீட்டில் அவர் காலமானார்.
அவரது இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை இன்று மாலை 3.30க்கு சென்னை திருவொற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் எதிரில் உள்ள தெற்கு மாட வீதி, நகரத்தார் விடுதியில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
தகவலுக்கு: டி.ஆர். ராமநாதன், 98848 09246 / 044-24996344
***
Y. Thirunavukkarasu Proprietor of Vanathi Pathippakam aged about 88yrs expired on 19/01/2016 Tuesday at 00.30am at his residence New No.6, Krishnaswamy street Abhiramapuram Chennai 600 018.
Funeral on 19/01/2016 at Nagarathar Viduthi South Mada street, opp to MSM theater thiruvottiyur Chennai 600 019 at 3.30 pm.
Contact: Son TR. Ramanathan 9884809246 / 044-24996344
ரூ.14.5 லஞ்சம் பெற்ற வருங்கால வைப்பு நிதி ஆணையர் கைது
சென்னை:
சென்னையில் ரூ. 14.5 லட்சம் லஞ்சம் பெற்ற சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில், மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையராகப் பணியாற்றி வருபவர் துர்கா பிரசாத். சென்னையில் உள்ள பிரபல கல்வி நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் உள்ள பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி செலுத்தவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து விசாரணை செய்த ஆணையர், வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கு ரூ. 25 லட்சம் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ஆணையர் துர்கா பிரசாத், ரகசிய இடத்தில் வைத்து ரூ. 14.5 லட்சத்தை லஞ்சமாகப் பெற்றதாகத் தெரிகிறது. இது குறித்த தகவல் அறிந்ததும், மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், விரைந்து சென்று லஞ்சம் பெற்ற துர்கா பிரசாத் மற்றும் அதை அளித்த நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அலுவலர் உள்ளிட்ட ஆறு பேரைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து துர்கா பிரசாத்தின் அலுவலகம், வீடு மற்றும் 18 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா இசையில் “முத்துராமலிங்கம்”
இசைஞானி இளையராஜா இசையில் பஞ்சு அருணாசலம் பாடல் வரிகளில் உருவாகும் படம் “முத்துராமலிங்கம்”.
1. 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் வரிகளில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள படம் “முத்துராமலிங்கம்”. கவுதம் கார்த்திக், கேத்த்ரின் திரேசா நடிக்கும் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர். குளோபல் மீடியா ஒர்க்ஸ் D.விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவு U.K.செந்தில்குமார். இப்படத்தின் நிர்வாக மேற்பார்வை கமுதி A.செல்வம்.
2. முத்துராமலிங்கம் படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு பாடல் எழுதும் பஞ்சு அருணாசலம்
3. கவுதம் கார்த்திக் நடிக்கும் முத்துராமலிங்கம் திரைப்படத்திலும் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.
4. பஞ்சு அருணாசலத்துடன் சேர்ந்து இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகின்றனர்.
5. நடிகர் முத்துராமனுடன் “காற்றினிலே ஒரு கீதம்”, “மயங்கினாள் ஒரு மாது”, நடிகர் கார்த்திக்குடன் “சின்ன கண்ணம்மா” “என் ஜீவன் பாடுது”, தற்போது கௌதம் கார்த்திக்குடன் “முத்துராமலிங்கம்” என முன்று தலைமுறைகளுடன் பணியாற்றியவர் பஞ்சு அருணாசலம். மேலும் நடிகர் முத்துராமன் வில்லனாக நடித்த பாயும்புலி படத்திலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல இளம் இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்களுடன் தற்போது பணியாற்றிவருகிறார் பஞ்சு அருணாசலம்.
ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க வலியுறுத்தி பேரணி சென்று முதல்வரிடம் கோரிக்கை: நாசர்
சென்னை:
ராஜீவ் கொலையாளிகள் 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி பேரணியாகச் சென்று முதல்வரிடம் கோரிக்கை வைத்து கவனத்தை ஈர்க்கப் போவதாக நடிகர் சங்க தலைவர் நாசர் பேசினார்.
இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர்சங்க தலைவர் நாசர் பேசியது:
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 7 பேரையும் 161ம் சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். அதனை வெறும் கடிதமாக கொடுக்காமல், முதல்வர் ஒதுக்கும் நேரத்தை வைத்து ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக சென்று முதல்வரிடம் கோரிக்கை வைக்க இருக்கிறோம். ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பேரணியாக திரளும் போது மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படும் என்று கூறினார்.
வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்
***
சிந்தனை ஓட்டம் வரதனைப் பற்றியே இருந்தது. கேள்விப்பட்ட சங்கதிதான்! ஆயினும் கண்ணாரக் கண்டு உணர்வில் கலந்ததில்லை! எப்படியும் இன்று சென்றுவிடலாம். எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் ஓர் அழைப்பு! எடுத்தால்… நான் முன்னர் பணிபுரிந்த நாளிதழில் தற்போதும் பணிபுரியும் ஒரு நண்பர். கட்டாயத்தின் பேரில் தான் விருதாவாகத் தான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியதைச் சொன்னார். நான் திருமுக்கூடல் சென்று, பாலாற்றின் கரையில் பொழுது போக்கச் செல்லவதாகச் சொன்னேன்! “நீங்க கொடுத்து வெச்சவர்ண்ணா” என்ற வாசகத்தோடு முடித்துக் கொண்டார்.
***
வரதனின் விழாக் கற்பனைகள் ஒரு புறமும், கசந்த காலத்தைக் கடந்து வாழ்க்கையின் வசந்த காலத்தை எதிர்நோக்கிச் செல்லும் கற்பனைகள் ஒரு புறமுமாய்… வழக்கம்போல் பைக் பறந்து கொண்டிருந்தது. காட்டாங்குளத்தூர், மறமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் கடந்து பாலார் செல்லும் காட்டுப் பாதையினூடே தனியனாய் பயணம். ஆளரவமற்ற பகுதி என்பார்களே… அதன் வடிவத்தைக் கண்டுகொள்ளும் சாலைதான்! இடையில் இரு கிராமங்கள். ஆனாலும் அமைதியாய் அடங்கிக் கிடந்தன. காஞ்சிபுரத்தின் பழைமைச் செழுமையைக் கண்ணுக்குள் நிரப்பலாம். எல்லாம் வரதனின் ராஜாங்கம் ஆயிற்றே!
***
திருமுக்கூடல் – மூன்று ஆறுகள் கூடும் இடம்! பெருமான் அந்தக் கரையில் எழுந்தருளியதால் ‘திரு’ சேர்ந்து கொண்டுள்ளது. நீர் இன்றி ஏதோ ஆற்றின் பெயரைத் தன்னளவில் கொண்டுள்ள பாலாறு. ஒருவேளை பால் போல் வெண்மை என்பதால் வெண்மணல் சேர்ந்து வெளித் தெரிகிறதோ? இடப்புறத்தே ஓடிவந்து கலந்துவிடும் செய்யாறு மட்டும் தன்னில் நீர் தாங்கி அங்கே நிரம்புகிறது! வேகவதி ஒரு சிற்றோடையாகி அங்கே சங்கமித்து விடுகிறது.
***
திருமுக்கூடல் தலத்தைப் பற்றி என்றோ படித்தும் எழுதியும் இருக்கிறேன் என்றாலும், முதல்முறை நேரில் காணும் பரவசம்! தொல்லியல் துறைப் பராமரிப்பின் வெளித்தோற்றம் பளிச்செனப் படுகிறது. கோபுரமற்ற புகுவாசல் வெண்மைக் கற்கள் தாங்கி நெடிது நிற்கிறது! உள்ளே ஒரு பசுமைப் பூங்காவின் தோற்றம். செதுக்கப்பட்ட பாதைகள். புல்வெளி. ஈரடிக்கு வளர்ந்து பராமரிக்கப்படும் செடிகள். பூக்களைத் தாங்கி நந்தவனத்தின் அருமை காட்டுறது.
***
இரவு 8 மணி ஆயிற்று! சீவரம் பெருமாளை தரிசித்துவிட்டு, திரும்பினேன். சீவரத்தை அடுத்த பெட்ரோல் பங்கில் திரும்பினேன். யாருமே இல்லாதது போன்ற நிலை. ஆனால், ஒரு ஓரத்தில் நின்று செல்லில் சினுங்கிக் கொண்டிருந்த ஒருவர், ஒற்றை ஆளாய் எனைக் கண்டதும் அசைந்து வந்தார். அவரை மெதுவாகப் பேசிவிட்டு பிறகு வருமாறு சைகை செய்தேன். சில நொடிகளில் வந்தார். அவரை நிதானமாக வருமாறு சைகை காட்டியதாலோ என்னவோ… பெட்ரோல் நிரப்பிக் கொண்டே வெகுநாள் பழகிய சிநேகத்துடன் பேசினார்… “வண்டிங்க வந்துட்டு இருக்கு சார். வீட்ல இருந்து பேசினாங்க. கோயிலுக்கு கூட்டிட்டுப் போகணும்னு காலைல இருந்தே சொல்லிக்கிட்டிருந்தாங்க! ஆனா பாருங்க இன்னிக்குன்னு நெறய பேர் லீவு. சிலர் சாப்ட போய்ட்டாங்க. பெட்ரோல் போட ஆளில்ல. அதான் வீட்ல சொல்லி புரியவெச்சிட்டிருந்தேன். இப்பவாவது 9 மணிக்குள்ள வீட்டுக்கு போய் கூட்டிட்டு சீவரம் பெருமாளயாச்சும் பாத்துட்டு வந்துடணும்… ஆனா… நீங்க கொடுத்து வெச்சவங்க சார்…!”
***
அதே காட்டுப் பாதையில் திரும்பினேன். இரவுப் பொழுதுக்கேயுரிய வண்டுகள் பூச்சிகளின் சப்தங்கள் நிசப்தத்தைக் கடந்து கொண்டு கேட்கிறது! பாலார் ஊர் கடந்து, ரெட்டிப்பாளையம் காட்டுப் பகுதியினூடே செல்கையில், சாலையின் ஓரத்தில் இருந்த புதரில் இருந்து மர அணில் போன்ற ஏதோ ஒன்று… பைக் விளக்கின் வெளிச்சத்துக்கு அப்படியே கீழிருந்து தாவி சரியாக என் வலது தோளில் பாய்ந்து கீழே விழுந்தது! நள்ளிரவும் காட்டுப் பாதையும் தனிமையும் எனக்குப் புதிதல்ல. பொதிகை மலைப் பகுதியின் காட்டுப் பாதைகளில் சிறுவயது முதலே தனித்துச் சென்று பழகிய பழக்கம்தான்! பள்ளிப் பருவத்துக்குப் பிறகான வாழ்க்கையிலும் வருடம் பல தனித்திருந்தே கடந்து விட்டவனுக்கு, காட்டுப் பாதையில் மட்டும் தனிமைப் பயணம் அச்சத்தைத் தந்துவிடவில்லை!
செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியில் திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்ஸவம் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.
ஜனவரி 20 முதல் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனு அதிமுக விநியோகம்
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான விருப்ப மனுக்கள் நாளை மறுநாள் முதல் வழங்கப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-:
நடைபெற உள்ள தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பொதுத் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்றவர்களுக்கான மனுக்கள் தலைமைக் கழகத்தில் ஜனவரி 20 ஆம் முதல் வழங்கப்படும்.மேலும், இந்த மனுக்கள் பிப்ரவரி 3 ஆம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படும்.உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பு மனு ரூ. 11, 000
தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற அதிமுகவினர் தலைமைக் கழகத்தில் கீழே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம், கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
கட்டணம் விவரம்: தமிழ் நாடு ரூ. 11,000, புதுச்சேரி ரூ. 5,000, கேரளா ரூ. 2000. என்று வெளியிப்பட்ட அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மதம் பிடித்த யானை மிதித்து மூதாட்டி பலி
திருவனந்தபுரம்:
சபரிமலை கோயிலில் மதம் பிடித்த யானை மிதித்து, மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலையில் மகர விளக்கு ஜோதி தரிசனத்தை முன்னிட்டு ஐயப்பனைத் தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். ஜோதி தரிசனம் முடிந்து, தற்போது படி பூஜைகள் நடந்து வருகின்றன . நேற்று மாளிகைபுரத்தம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சிக்காக வல்லபன் என்ற யானையை அலங்கரித்து நிறுத்தி இருந்தனர். அந்த நேரத்தில் டிராக்டர் ஒன்று அதிக சத்தத்துடன் வந்தது. அதன் சத்தத்தைக் கேட்டதும் யானை திடீரென மிரண்டு ஓட்டம் பிடித்தது. யானை பாகன் அதனைக் கட்டுப்படுத்த முயன்றும் அவரால் இயலவில்லை.
இந்நிலையில், யானை சன்னிதானத்தில் தறிகெட்டு ஓடியது. யானை மிரண்டு ஓடியதைக் கண்டு பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சன்னிதானத்தில் நின்று கொண்டிருந்த இலகுமன்பாறையைச் சேர்ந்த மூதாட்டி பேபி (68) என்பவரை யானை மிதித்து, தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த பேபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி , திருச்சூரைச் சேர்ந்த இருமோன்(44) என்பவர் படுகாயம் அடைந்தார்.
தகவல் அறிந்து வந்த வனத்துறையினரும், கால்நடை மருத்துவர்களும் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி யானையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கடந்த ஆண்டு இந்த யானைக்கு மதம் பிடித்ததால் இந்த ஆண்டு சன்னிதானத்திற்கு அழைத்து வர வேண்டாம் என்று தேவஸ்தான ஊழியர்கள் எச்சரித்திருந்தும் யானையை அழைத்து வந்ததாலேயே இச்சம்பவம் நிகழ்ந்தாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
பழம்பெரும் எழுத்தாளர் லா.சு.ரங்கராஜன் காலமானார்
சென்னை:
பிரபல காந்தியவாதியும், பழம்பெரும் எழுத்தாளருமான லா.சு. ரங்கராஜன் சென்னையில் இன்று காலமானார்.
மகாத்மாவின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் நூறு தொகுதிகளாகக் கொண்டு வந்த பணியில் அமரர் கே. சுவாமிநாதனுடன் இணைந்து உழைத்தவர். `மகாத்மா காந்தி படைப்புகள் – ஒரு சிறப்புத் தொகுப்பு` என தமிழில் 5 தொகுதிகளை வழங்கியவர். கணையாழி கி.கஸ்தூரிரங்கனின் நெருங்கிய நண்பராக இருந்தவர். பாரதமணி உள்ளிட்ட காந்திய இதழ்களில் அதிகம் கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறந்த எழுத்தாற்றல் மிக்க லா.சு.ரங்கராஜன்,
தேசியக் கண்ணோட்டத்தில் பெரும்பாலான இதழ்களிலும் கட்டுரைகளை எழுதிக் குவித்தவர். கலைமகள், அமுதசுரபி, விஜயபாரதம், கல்கி, தினமணி உள்ளிட்ட பல்வேறு இதழ்களிலும் எழுதியுள்ளார். குறிப்பாக, தீபாவளி மலர்களில் வருடம் தவறாமல் இவருடைய கட்டுரைகள் இடம்பெறும்.