Home Blog Page 5965

இந்தியாவுக்கு பூடான் பிரதமர் இன்று வருகை

 

பூடான் பிரதமர் ஷேரிங் டாப்கேகோவா மாநிலத்தில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியாவுக்கு இன்று வருகை தருகிறார்.மேலும் நாளை மறுதினம் (நவம்பர் 15) “நாகரீகத்திடம் இருந்து கற்றல்” என்ற தலைப்பில் நடைபெற்வுள்ள கருத்தரங்கில் அவர் உரையாற்றுகிறார்.

இந்தியாவின் சிந்தனைகள்’ என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு கோவாவில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பூடான் பிரதமர் ஷேரிங் டாப்கேவை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு இந்திய அறக்கட்டளை விடுத்துள்ள அழைப்பை ஏற்று, கோவாவுக்கு அவர் வருகை தருகிறார்.

கோவாவில், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், கோவா ஆளுநர் மிருதுள் சின்ஹா, கோவா முதல்வர் லக்‌ஷ்மிகந்த் பர்சேகர் ஆகியோரை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் குரோம் சேவை நிறுத்தம் ?

உலகிலேயே அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் கூகுளின் குரோம் இணைய உலாவிக்கான சேயைானது பழைய இயங்குதளங்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்படவுள்ளது.

இதன்படி வரும் 2016 ஆம் ஆண்டு முதல் Windows XP, Vista , Mac 10.6, 10.7 மற்றும் 10.8 ஆகிய இயங்குதளங்களுக்கான சேவை நிறுத்தப்படவுள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ் 10 இனை அறிமுகம் செய்யப்பட்டபின்னர் அதிகளவான கணினிகள் உட்பட மொபைல் சாதனங்களில் அவ் இயங்குதளம் பயன்பாட்டில் வந்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் புதிய இயங்குதளங்கள் ஊடான சேவையை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக 271 வீடுகள் சேதம் ஆறு பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 47 வீடுகள் முழுமையாகவும், 224 வீடுகள் சேதமாகிஉள்ளன.மழை காரணமாக, ஆறு பேர் இறந்துள்ளனர். மேலும், 18 மாடுகள் ஒன்பது ஆடுகள்; இரண்டு கன்றுக்குட்டி; 10 கோழிகள் இறந்துள்ளன; 11 பேர் காயமடைந்துள்ளதாக வருவாய் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழகமெங்கும் பெய்து வரும் கன மழை காரணமாக, உயிரிழப்பு மற்றும் ஏராளமான குடியிருப்புகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை காரணமாக, குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாத சூழலும் நிலவுகிறது.நான்கு நாட்களாக மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, 47 வீடுகள் முழுவதுமாக இடிந்து விழுந்துள்ளன;

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டோர் தரப்பில் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

போயஸ் கார்டனில் தூங்கிக் கொண்டு இருக்கும் முதலமைச்சர் நாட்டுக்கு தேவையா ? : டிராபிக் ராமசாமி

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இதுநாள் வரை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சென்று பார்வையிடவில்லை.

இந்த நிலையில் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் டிராபிக் ராமசாமி “ போயஸ் கார்டனில் தூங்கிக் கொண்டு இருக்கும் முதலமைச்சர் நாட்டுக்கு தேவையா” ? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை வீடியோ பதிவின் மூலம் எழுப்பி வீடியோவை வாட்ஸ் ஆப்பில் வெளிட்டுள்ளார்.

தற்பொழுது வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த வீடியோ இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விலையில்லா மடிகணினி வழங்கும் விழா

 மாணவர்களுக்கு விலையில்லாமடிக்கணினி

பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 209  மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லாமடிக்கணினி  வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் யூனியன் தலைவர் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமை தாங்கி மடிக்கணினிகளை வழங்கினார். முன்னதாக அவர் மாணவர்கள் மத்தியில் பேசுகையில்
மாணவர்களுக்கு ஒழுக்கம் தான் முதல் கல்வி ,முதலில் நீங்கள் ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் உங்களை சிறந்த மாணவராக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியருக்கு உள்ளது அதனால் தான் பல தூரங்களில் இருந்து உங்களை ஆசிரியர்களை நம்பி பள்ளிக்கு அனுப்புகின்றனர் மேலும் தமிழக அரசு மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கென பல விலையில்லா பொருட்களை வழங்கி வருகிறது பள்ளியில் படிக்கும் காலத்தில் பயன் பெற வேண்டும் என முன்னதகாவே மடிக்கணிகளை வழங்கி வருகிறது இதை நல்ல முறையில் பயன்படுத்தி உங்கள் கல்வி தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஹெத்சம்தாஸ், உதவி தலைமை ஆசிரியர் சந்திரசேகர், கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராமசாமி என்ற தமிழ்ச்செல்வன், ஊராட்சி கழக செயலாளர் திருமால்முருகன் மற்றும் பொன்னுத்துரை,முருகேசன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

பசங்க 2 பற்றி சூர்யாவின் நெகிழ்ச்சியான பேட்டி!

2டி எண்டர்டெய்ண்ட்மெண்ட் மற்றும் பசங்க புரோடைக்சன் இணைந்து தயாரித்து விரைவில் திரையில் வெளிவரவிருக்கும் பசங்க-2 (ஹைக்ஹு) திரைப்படத்தை பற்றி நடிகரும், படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா கூறுகையில்,

2டி எண்டர்டெய்ண்ட்மெண்ட் என்றால் தியா, தேவ் என் குழந்தைகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று அவர்களின் பெயரில் துவங்கப்பட்ட இந்த தயாரிப்பு நிறுவனத்தின் நோக்கம் கல்வி மற்றும் குழந்தைகள் சம்மந்தப்பட்ட அல்லது அவர்களுக்கு பயனளிக்க கூடிய திரைப்படங்களை தயாரித்து வெளிக்கொண்டு வருவதே நோக்கமாக வைத்து துவங்கப்பட்டது.

அதன் காரணமாக ஆரம்பத்தில் இருந்தே புதிய இயக்குனராக இருந்தாலும் நல்ல கதைகளை தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் துவங்கப்பட்டது. அதற்க்காக சுமார் ஐம்பது, அறுபது கதைகள் கேட்டுக் கொண்ட வண்ணம் இருந்தோம் கதைகள் சரியாக அமையாத காரணத்தால் மேற்கொண்டு எந்த முயற்ச்சியும் எடுக்காமல் அமைதிகாத்து வந்தோம் அப்போது இயக்குனர் பாண்டிராஜ் என்னை சந்தித்து கதையை சொல்லி இந்த மாதிரியான ஒரு கதையம்சம் கொண்ட திரைப்படம் உங்கள் நிறுவனம் வாயிலாக மக்களை சென்றடைவது பெருமைக்குரிய ஒன்றாக இருக்கும் என்றார்.

இது இயக்குனர் பாண்டிராஜின் துவக்கம் என்று தான் சொல்ல வேண்டும் இந்த படம் என் மூலம் வெளிவருவதற்க்கு, அதற்க்கு நான் என் முதல் நன்றியை இங்கு பதிவு செய்து கொள்கிறேன். இயக்குனர் பாண்டிராஜ் இரண்டு வருடம் குழந்தைகள் பற்றி ஆய்வு செய்து மற்றும் குழ்ந்தைகளுடன் ஒன்றினைந்து பல காட்சிகளை வடிவமைத்து அதை எங்களிடம் காண்பித்து இது போல கதையம்சம் கொண்ட திரைப்படம் உங்கள் மூலம் வரவேண்டும் என்று கூறியதின் பலன் தான் இந்த ஹைக்ஹூ(பசங்க-2).

மழலைகள் என்றாலே அழகு!!! மழலைகளின் பேச்சில் இருந்து அவர்களின் உலகம் வரை எல்லாமே அழகு என்று தான் சொல்ல வேண்டும். அவை அனைத்து நாம் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றும் கூட. குழந்தைகளின் உலகம் கால நிலைக்கு ஏற்றார் போல மாறுபவை எடுத்துக்காட்டாக என்னுடைய சிறுவயதில் நான் அனுபவித்த தருணங்கள் வேறு இப்போது இருக்கும் குழந்தைகள் அல்லது இன்னும் ஐந்து வருடத்திற்க்கு பின் வருங்கால சந்ததியினராக இருந்தாலும் சரி அவர்களின் உலகம் வேறு அதே போல் நகரங்களில் வாழும் குழந்தைக்கும் மற்றும் கிராமங்களில் வாழும் குழந்தைக்கும் உள்ள உலகங்கள் வேறு அவை அனைத்தும் நாம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று அவர்கள் கற்றுக் கொள்ள கூடியவைகள் உள்ளன.

அதனால் இந்த படத்தை பார்க்க வரும் குடும்பத்தினர் பார்த்து விட்டு வீட்டிற்க்கு போகும் போது ஒரு நல்ல அறிவுரையை எடுத்துச் செல்வார்கள். இதில் நான் மிகவும் சாதாரணமாக நடித்துள்ளேன் இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான திரைப்படம். இதுதவிர வரும் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ஒருவிதமான அறிவுரை கேட்டுவிட்டு செல்வார்கள் என்று கூறி நெகிழ்ந்தார் நடிகர் சூர்யா.

பொது சேவை மையங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும்:ஆட்சியர்

பொது-இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்து பட்டா மாறுதல் பெற்றுக்கொள்ளும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆட்சியர் கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
இதில் ஆட்சியர் பேசியது: மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் கீழ் பட்டா மாறுதல் மற்றும் நில உட்பிரிவு செய்தல் ஆகிய பணிகளுக்கான மனுக்களை பொது இ-சேவை மையம் வழியாக இணைய தளத்தில் எளிதாக பதிவு செய்து கொள்ளும் வசதி இன்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்கு அரசு நிர்வாகங்களைத் தேடி அலைந்து கொண்டிருந்த சூழ்நிலையினை மாற்றும் விதமாக தற்போது மக்களைத் தேடி நிர்வாகம் என்ற அடிப்படையில் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 5 வகையான சான்றிதழ்களை இணைய தளம் வழி சேவை மூலம் எளிதில் பெற்றுக்கொள்ளும்முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, பொதுமக்களுக்கு தேவையான பட்டா மாறுதலுக்கு தேவையான மனு செய்வது முதல் அதற்குரிய மாறுதல் உத்தரவு பெறும் வரை அனைத்துப் பணிகளும் இனி இணையதளம் வழியாகவே செயல்படுத்தப்படும். இதற்காக அம்பாசமுத்திரம் வட்டம், முன்னோடி வட்டமாக தேர்வு செய்யப்பட்டு இதுவரை இணையதளம் மூலமாக பெறப்பட்ட 761 உட்பிரிவு அல்லாத மனுக்களுக்கும், 61 உட்பிரிவு மனுக்களுக்கும் உரிய உத்தரவுகள் இணைய தளம் வழியாகவே அனுப்பப்பட்டுள்ளன.

ஆகவே, நமது மாவட்டத்தில் பாளையங்கோட்டை வட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் தங்கள் இடத்தில் பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவு செய்தல் ஆகிய பணிகளுக்கு பாளையங்கோட்டை வட்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் 19 பொது இ-சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். எனவே, பொதுமக்கள் தேவையின்றி பல்வேறு அலுவலகங்களைத் தேடி வீணாக அலைவதைத் தவிர்த்து, இணையதள சேவையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

பெண்களுக்கான ஸ்பெஷல் மது

யாராவது ஒழுங்காக இருந்தால் நம்மாள்களுக்கு பிடிக்காதே, உடனே அவர்களையும் கெடுத்துவிட கங்கணம் கட்டிக் கொண்டு துடிப்பார்கள். ஆண்கள்தான் கெட்டு சீரழிந்து போய்விட்டார்கள் பெண்களாவது ஒழுங்காக இருக்கிறார்களே என்று கொஞ்சம் சந்தோஷப்பட்டால் அவர்களையும் சீரழிக்க பன்னாட்டு நிறுவனங்கள் வந்துவிட்டன. .  
 
சினிமாவுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அள்ளிக் கொடுத்து, அள்ளிக் கொடுத்து குடிப்பதை ஒரு சாதாரண நிகழ்வு போல் மாற்றிய நிறுவனங்கள், இப்போது பெண்களுக்கு தனி உரிமை என்ற தாக்கத்தை சொல்லி அவர்களையும் குடிக்க வைக்க புதிய வழிமுறையை கண்டுபிடிக்கின்றன. அதன் ஒரு பகுதிதான் பெண்களுக்கான பீர். இது கெடுதல் இல்லாத நல்ல பீர்.   
 
3.bp.blogspot.com SVGBix8vaXE Vjj0POgWMiI AAAAAAAAGOk uHXNN riKOg s640 biobeer - 2026
 

 
மதுவகையில் ஒன்றான பீரை நிறைய பேர் மதுவகையில் சேர்ப்பதில்லை. பீரில் ஆல்கஹாலின் அளவு மிகக் குறைவாக இருப்பதால், அது உடலுக்கு கெடுதல் செய்யாது, மாறாக உடலுக்கு நல்லது செய்யும் பானம் என்று பரவலாக பேசப்படுகிறது. ஆனால் மருத்துவ நிபுணர்களும், உணவியல் வல்லுநர்களும் இந்தக் கூற்றை ஏற்றுக் கொள்வதில்லை. 
 
இது ஒரு மாயைதான். மதுபானங்களுக்கு என்னென்ன குணங்கள் உண்டோ அத்தனையும் பீரிலும் உண்டு. இந்தியாவைப் பொருத்தவரை, வடஇந்தியாவை சேர்ந்த பெண்களிடையே பீர் குடிக்கும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. மிகப் பெரிய நகரங்களில் பள்ளி மாணவர்கள் கூட பீர் குடிக்கிறார்கள், இதற்கெல்லாம் அடிப்படை காரணம் பீர் கெடுதல் இல்லை என்ற தவறான சித்தாந்தம்தான்.
 
இந்த நிலையில் கெடுதல் செய்யாத ஆல்கஹால் இல்லாத பீரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உணவியல் நிபுணர்களுக்கு ஏற்பட்டது. அதற்கு பயோ-டெக்னாலஜி என்ற நவீன தொழில்நுட்பம் கைக்கொடுத்தது. இந்த பீரில் கொஞ்சம் கூட ஆல்கஹால் இல்லை. அதனால் எவ்வளவு குடித்தாலும் மயக்க உணர்வு, போதை போன்றவை ஏற்படாது.
 
பார்லி, மாவுப் பொருட்கள், முசுக்கொட்டைக் காய் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டே இந்த பீரை தயாரிக்கிறார்கள். பெண்கள் விரும்பி குடிக்கும் வகையில் இது தயாரிக்கப் பட்டிருப்பதால் இதற்கு பெயரும் ‘லேடி பேர்டு பயோ-பீர்’ என்று பெண்கள் சம்மந்தப்பட்ட பெயரையே வைத்திருக்கிறார்கள்.
 
2.bp.blogspot.com Elbjdj Kp o Vjj0cGml2YI AAAAAAAAGOs TEVga0AEEEI s400 Bio Beer 87102 - 2026
 
சாதாரண பீர்கள் கொழுப்புச் சத்துகளை அதிகரிக்கும். ஆனால் இந்த பீர்கள் கொழுப்பு சத்தினை சேர விடாமல் தடுக்கிறது. இதில் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது, அதனால் அல்சரைக் குணப்படுத்துகிறது. வயதான ஆண்களுக்கு ஏற்படும் மூட்டு வலியையும் தடுக்கிறது. இப்படி ஏகப்பட்ட பயன் இருப்பதால் பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் பயன்படுத்தலாம் என்கிறது கூடிய விரைவில் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

 

மார்க்ஸ் மரணத்தில் ஏங்கல்ஸ்

லகப் பொருளாதாரத்தின் பைபிள் என்று சொல்லக்கூடிய ‘டாஸ்கேபிட்டல்‘ அதாவது மூலதனம் என்ற புத்தகத்தை எழுதிய காரல் மார்க்ஸ் மறக்க முடியாத ஒரு மேதை. இவருடைய நண்பர் பிரடெரிக் ஏங்கல்ஸ்.

இவர்கள் இருவரையும் நட்புக்கு சிறந்த உதாரணமாக சரித்திரம் குறிப்பிடும். மார்க்ஸ் இறந்த போது ஏங்கல்ஸ் ஆற்றிய உரையே அதற்கு சாட்சி.

***images world engels - 2026
“இதோ இந்த மார்ச் 14-ந் தேதி மதியம் 3மணிக்கு இவன் சிந்தனையில் மூழ்கிக் கொண்டிருந்தான். அவனை நாங்கள் இரண்டு நிமிடங்கள் தனிமையில் விட்டுச் சென்றோம். திரும்பி வந்து பார்க்கையில் இனி விழிப்பே இல்லாத தூக்கத்தில் அவன் நாற்காலியில் உறங்கிப் போயிருந்தான். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பாட்டாளி மக்கள் புரட்சி வரலாற்றில் இம்மனிதனின் சிறப்பு மதிப்பிட முடியாதது.”
***
டார்வின் எவ்வாறு பரிணாம வளர்ச்சி விதியை கண்டடைந்தரோ அதுபோல் மார்க்ஸூம் மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை கண்டடைந்தான்.

 
அரசியல், மதம், அறிவியல், கலை இவற்றை அடையும் முன் உண்ண உணவு, உடுத்த உடை, குடிக்க நீர், இருக்க இடம் ஆகியவற்றை மானுடம் பெற வேண்டும் என்று இவன் உலகுக்கு சொன்னது எளிய உண்மைதான். ஆனால் அதோடு முதலாளித்துவ அடிப்படையிலான உற்பத்தி முறையும், அது யாருக்கு பணிந்து செல்கிறது என்ற உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொள்வதில் தான் இவனுக்கு விருப்பம்.
 
முதலாளித்துவ சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்து விட்டு பாட்டாளி வர்க்கத்தை அரியணையில் அமர வைக்க அரும்பாடுபட்டான். போராட்டம் எனும் ஆயுதம் கொண்டு தன் இறுதிமூச்சு உள்ளவரை உழைத்தான்.
 
எத்தனை பேர் வேண்டுமானாலும் இவன் மீது குற்றம் சுமத்தலாம். பழி போடலாம். ஆனால் அவன் பாட்டாளிகளை நேசித்தான். உழைக்கும் மக்களுக்காக உயிர் கொடுத்தான். மார்க்ஸ் பிறக்கும் போது யூதனாக பிறந்தான். புரட்சிக்காரனாக வளர்ந்தான். போராளியாக இவன் பெயர் நிலைத்து இருக்கும். அவன் எழுத்துக்களும் அப்படி தான்.”
 
இப்படி தனது நண்பனுக்காக ஏங்கல்ஸ் ஓர் உணர்ச்சிப்பூர்வ உரையாற்றினர்.
 
உலக பொருளாதாரத்தின் சூத்திரம் சொல்லும் புகழ்பெற்ற ‘டாஸ் கேபிட்டல்’ புத்தகம் இன்று பல பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த புத்தகத்தை தன் உயிரினும் மேலான நண்பர் ஏங்கல்ஸூக்கு அர்ப்பணித்திருந்தார், மார்க்ஸ்.
நட்பிலும் சரி, மார்க்ஸ் – ஜெனி காதலிலும் சரி, தொழிலாளர்கள் வாழ்விலும் சரி சரித்திரம் படைத்த மாமனிதர் காரல் மார்க்ஸ்!!  

தீபாவளிக்கும் ஒரு சுற்றுலா உண்டு

2.bp.blogspot.com P5 6FOjHvcs Vj TUsPE bI AAAAAAAAGQw 9VxbZdXvhF4 s640 lord krishna with gopinis wall hanging AI41 l - 2026

திருவிழாக்கள் என்றுமே சுற்றுலாவாசிகளை ஈர்ப்பவைதான். அதிலும் தீபாவளி போன்ற ஒரு பெரும் விழா சுற்றுலாவாசிகளை வசீகரிக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம். தீபவாளியும் வசீகரிக்கிறது. இதன் வசீகரிப்பால் வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் இந்தியா வருகிறார்கள். 
 
திருவிழா நடைபெறும் இடத்திற்கு சென்று அவர்களின் பழக்க வழக்கங்களை கண்டுகளிப்பது மரபு வழியாக வந்த பழக்கம். அந்த பழக்கத்தை இன்றும் கடைப்பிடிக்கிறார்கள். அது இன்று சுற்றுலாவாக அவதாரம் எடுத்திருக்கிறது.

3.bp.blogspot.com VVWQTN4G46w Vj YKl tDSI AAAAAAAAGSI XlWhVb shYY s320 15730135717 813405f777 b - 2026

இந்தியப் பெண்களின் பாரம்பரியப் பழக்கம் தான். இப்படி வெளிநாட்டு பயணிகளை இந்தியா கொண்டு வந்து சேர்க்கிறது. அந்தக் கலையின் பெயர் ‘மதுபாணி’. இது ஒரு சுவர்ச் சித்திரம். நம்மூரில் பெண்கள் திருவிழாக்களின் போது வீட்டு வாசலில் பெரிது பெரிதாக கோலம் போட்டு அசத்துவார்களே, அப்படி வட இந்தியப் பெண்கள் சுவர்களில் ஓவியம் வரைந்து அசத்தும் கலைதான் மதுபாணி சித்திரங்கள். 
 
2.bp.blogspot.com DI k33v5vYg Vj UDH mGAI AAAAAAAAGQ4 Mj8TU - 2026
 
நமது பெண்கள் கோலம் என்ற அரிய கலையை கிட்டத்தட்ட மறந்து போய்விட்டார்கள். ஆனால், பீஹார் பெண்கள் பாரம்பரியத்தை மறக்கவில்லை. அதை அவர்கள் வெளிநாடு வரை கொண்டு போய்விட்டார்கள். நாம் நமது பாரம்பரியத்தை தொலைத்து நிற்கிறோம். 
 
2.bp.blogspot.com yfOx9x6 0T4 Vj WDyatBEI AAAAAAAAGR0 jRb wyLUDek s640 Madhubani Painting Based on kands of Ramayana will be on Display from 13 October at DLF Place Saket 3 - 2026
 
சுவரில் சித்திரம் வரையும் கலையானது ஆதி மனிதர்களிடமிருந்து ஆரம்பித்து இன்றளவும் வாழ்ந்து வரும் கலை. தொடக்கத்தில் தகவல் தெரிவிப்பதற்காக தோன்றியதே இந்தக் கலை. இன்று பீஹார் பெண்கள் அதை அழியாமல் வளர்த்து வருகிறார்கள். பீஹாரிலுள்ள மிதியா கிராமத்துப் பெண்கள் தங்களது முன்னோர்களின் பழக்கமான சித்திரம் தீட்டுவதை இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் ராமாயணம், மகாபாரதத்தில் வரும் காட்சிகளையே சித்திரமாக வரைகிறார்கள். 
 
1.bp.blogspot.com MKtddE67A6Q Vj UQSB04RI AAAAAAAAGRA ToDR2P3yZDQ s640 A%2Bwedding%2Bscene%252C%2Bmadhubani%2Bpainting - 2026
 
பொதுவாக தீபாவளிக்கு சில நாட்கள் முன்பு தங்கள் வீட்டுச் சுவர்களை இத்தகைய ஓவியங்களால் பெண்கள் அலங்கரிக்கிறார்கள். இதை இறைவழிபாடாக கருதுகிறார்கள். இந்த ஓவியங்களில் இருக்கும் கலை நுணுக்கங்கள் வியப்பளிக்கிறது. அதிலும் ஜித்வர்பூர் மற்றும் ரண்டி கிராமங்களில் வரையப்படும் மதுபாணி ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை.
 
1.bp.blogspot.com RxcX3Augt9E Vj UezF0 RI AAAAAAAAGRI 3NSu7UcR1so s640 d1b4a9b2e0967f3599e7460dd7a40328 - 2026
 
இந்த ஓவியங்கள் இயற்கை வண்ணங்களை பயன்படுத்தியே வரையப்படுகின்றன. செயற்கை வண்ணங்களை உபயோகிப்பதில்லை. சுவரில் நன்றாக ஒட்டவேண்டும் என்பதற்காக மரப்பிசினும், வண்ணங்கள் எல்லாம் வெள்ளாட்டுப் பாலில் கலந்தும் வரையப்படுகின்றன. அதனால்தான் இந்த ஓவியங்கள் பழமை மாறாமல் மிளிர்கின்றன. 
 
3.bp.blogspot.com 7KJOzBF1eEM Vj - 2026
 
மதுபாணி மற்றும் மிதிலா வகை சித்திரங்கள் எப்போது வரையத் தொடங்கினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஆரம்பத்தில் சுவரில் மட்டும் வரையப்பட்ட இந்த சித்திரங்கள் பலரும் காணவேண்டும் என்பதற்காக திரைச்சீலைகளில் வரையப்பட்டது. ஆனாலும் வெளிநாட்டினர் இவற்றைப் பார்பதற்காக இங்கு வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 
 
3.bp.blogspot.com jqX1nDCz7vk Vj U 9VuWnI AAAAAAAAGRY x23SOgbNhP4 s320 madhubani wall art - 2026
 
தீபாவளியன்று அனைத்து விட்டு சுவர்களிலும் இந்த ஓவியங்கள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு அழகில் மிளிர்வது கண்கொள்ளக்  காட்சி. நீங்களும் ஒருமுறை இந்த கிராமங்களுக்கு போய்ப்பாருங்களேன்.
 
 
3.bp.blogspot.com dSEE5nZw8xk Vj VTAV3WfI AAAAAAAAGRg tCOZP Xy Q s640 madhubani paintings 17 - 2026

3.bp.blogspot.com cThrtFWOl6M Vj VZBbx1RI AAAAAAAAGRo 7bZFQhM24so s640 madhubani painting bihar india 10635920 - 2026

3.bp.blogspot.com 2bI0z1V2Mn8 Vj VdTSViVI AAAAAAAAGRw HHiKBf5O1FE s640 madhubani art - 2026
 

அனைவருக்கும் 
இனிய
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்!