Home Blog Page 5964

புதுமுக இயக்குநரிடமும் கற்றுக்கொள்கிறேன்: நாசர் பேச்சு!

புதுமுக இயக்குநர் மனோன் .எம் இயக்கியுள்ள படம் ‘கா..கா..கா..’ இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.

படத்தின் தலைப்பிலேயே ‘கா..கா..கா..’ ஆபத்தின் அறிகுறி என்று போட்டுள்ளார்கள்.

 இயக்குநர் மனோன் ஒரு பெங்களூர்த்தமிழர்.  இவர் ‘இருவர் மட்டும்’ ராகவன்,பி.வாசு, வெற்றி மாறன் ஆகிய பிரபல இயக்குநர்களிடம் பணியாற்றியுள்ளவர். பொதுவாக காகம் கத்தினால் விருந்தினர் வரவின் அறிவிப்பு என்று நம்பப் படுகிறது. இப்படத்தில் ஆபத்து வரும் அறிகுறியாக காகம் கத்துகிறது.படத்தில் காகம் ஒரு பாத்திரம் போலவே வருகிறது.

அசோக்,மேகாஸ்ரீ ,நாசர்,ஜெயசுதா,யோகிபாபு நடித்துள்ளார்கள்.இப்படம் தமிழ் தெலுங்கு என ஒரு மொழிகளில் தயாராகியிருக்கிறது.அர்பிதா கிரியேஷன்ஸ் சார்பில் கிரண் பதிகொண்டா தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா இன்று சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது.தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  தலைவர் நாசர் ட்ரெய்லரை வெளியிட  இயக்குநர்  வெற்றி மாறன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நாசர் பேசும் போது “புதுமுக இயக்குநர்கள் படம் பண்ணும் போது கனவோடு வருகிறார்கள்.அவர்களை நான் ஆதரிக்கத் தயங்குவதில்ல்லை.

இந்த மனோன் என்னிடம் நடிக்கக் கேட்டு கதை சொன்னபோது நான் எந்த அளவுக்கு அவசியம்? ஏன் நான்  நடிக்க வேண்டும்? என்றேன். அவர் அதற்குச் சரியாகப் பதில் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. .ஒவ்வொரு புதுமுக இயக்குநரிடமும்  நான் கற்றுக்கொள்கிறேன். இந்தப் புதுமுக இயக்குநரிடமும் நான் கற்றுக்கொண்டேன். எது வேண்டும் எது தேவை என்பதில் அவர் தெளியாக இருந்தார்.

நல்ல திட்டமிடல் இருந்தது. இன்று டிஜிட்டல் வந்த பிறகு எப்படி வேண்டுமானாலும்  படம் எடுக்கலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் மனோன் அப்படிப்பட்ட ரகமல்ல. அவரிடம் நல்ல திட்டமிடல் இருந்தது.தொழில் சிரத்தை உள்ளவர். முழுப்படத்தையும் திட்டமிட்டு எடுத்தார். இன்று தினசரிப் பத்திரிகையைப் புரட்டிப்பார்த்தால் 60படங்களின் விளம்பரங்கள் வருகின்றன. எதைப்பார்ப்பது என்று மக்களுக்கே குழம்புகிறது.

இருத்தாலும் இந்தப்படம் அதிலும் தனித்து தெரியும்படி வெற்றிபெற வேண்டும். சினிமாவுக்குத் தயாரிப்பாளர் முக்கியம். தயாரிப்பாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.இப்படம் நூறு நாள் ஓடவேண்டும் என்பதை விட முதலில் தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை திரும்ப எடுத்து வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். ”என்று வாழ்த்தினார்.

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் : வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் அறிவிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

நேற்று அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று மத்திய அரபிக்கடலில் நிலை கொண்டுள்ளது.

இதேபோல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலை கொண்டுள்ளது.

இது நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பல இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரை விட்டு விட்டு மழை பெய்யும். அவ்வப்போது தொடர் மழையும் பெய்யும்.

காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி நகர்ந்து வருவதால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (புயல் சின்னம்) மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு. இதன் காரணமாக இன்னும் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்.

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்றும், இன்றும் பெய்து வரும் மழையினால் எல்லா பகுதிகளிலும் வெள்ளம் ஓடுகிறது.

இன்னும் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்பதால் சென்னையையே புரட்டி போட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. என வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் ரமணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை ,தீர்த்தவலம் நடைபெற்றது
கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது
 மாலயில்   16 வைகயான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம்,விஷ்ணு சூக்தஹோமம்,மகாலட்சுமி ஹோமம் மற்றும் 1 2 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேங்களும் தொடர்ந்து  பெருமாள் சப்பரத்தில் திருக்கோவிலையும்  தெப்பகுளத்தையும் தீர்த்தவலம் வருதல் வைபவம் நடைபெற்றது
பூஜைக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் ,ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் ,பொதுமக்களும் செய்திருந்தனர்

மழை வெள்ளத்தில் பலியான குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் : முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

 தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :–

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் வடகிழக்குப் பருவ மழையின் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டம், கெங்கதேவன்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சூடேசன் என்பவரின் மகள் சுகன்யா;

கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரத்தைச் சேர்ந்த சி.கே.வி. நாயர்; சிறுபாளையூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரின் மகன் முருகேசன்; நாஞ்சலூர் கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவரின் மகன் நடேசன்;

கலியபெருமாள் என்பவரின் மனைவி கனகம்; விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரின் மகன் கதிரவன்;

ஆகியோர் வெள்ளப்பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம், சி.கொத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகன் தங்கராசு மழையின் காரணமாக மரம் முறிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

தமிழகத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 7 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

என இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

டேக்வாண்டா போட்டி ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு

மாநில டேக்வாண்டோ போட்டிக்கு
ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவர்கள் தேர்வு
மாநில டேக்வாண்டோ போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்hரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்
நெல்லை மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் நடந்தது. பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்  லிமான் முதலிடமும், மாணவர் ஸ்ரீராம் பிரகாஇரண்டாமிடமும் மேலும் இப்பள்ளி மாணவர்கள் ஜான்லியான்ஸ், பெனி, லியான், புவனேஸ்ராஜா, மாணவி ரம்யா ஆகியோர்  மூன்றாமிடம் பெற்றனர்  இவர்கள்  கடலூரில் நடைபெறும்  மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் திருமலை, தாளாளர் அன்பரசி திருமலை, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர்  கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உட்பட பலர் பாராட்டினர்

கற்பழிப்பு சம்பவத்துக்கு ஆளான பெண் பூங்காவுக்கு இரவில் வந்தது ஏன்?: பொறுப்பான பதில் அளித்த அமைச்சர்

 

கற்பழிப்புக்கு ஆளான அந்தப் பெண் இரவு நேரத்தில் ஏன் கப்பன் பூங்காவுக்கு வந்தார்? என்று கேள்வி எழுப்பிய கர்நாடக மாநில அமைச்சர் பரமேஸ்வருக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

கர்நாடக மாநிலம் பெங்களூரில், கப்பன் பூங்காவில் 30 வயதுமிக்க பெண் பாதுகாவலர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் கப்பன் பூங்கா அருகில் டென்னிஸ் கிளப் ஒன்று உள்ளது. இந்த டென்னிஸ் கிளப்பில் உறுப்பினர் ஆவதற்காக நேற்று முன்தினம் மாலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சென்றுள்ளார். கிளப்பின் நேரம் முடிவடைந்ததால் அந்தப் பெண்ணை மறுநாள் வரும்படி கிளப் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

பெங்களூருவில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இருந்து அந்தப் பெண் வந்திருந்ததால், பெங்களூரில் தங்க முடிவு செய்ததாக தெரிகிறது. இதனையடுத்து, அருகில் உள்ள கப்பன் பூங்காவிற்கு சென்ற அந்தப் பெண் இரவு 9.30 மணி வரை அங்கு இருந்துள்ளார்.

அப்போது அங்கே தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம், அந்தப் பூங்காவின் காவலர்கள் இருவர் பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போது, பூங்காவில் இருந்து வெளியே செல்வதற்கு அந்தப் பெண் வழி கேட்டுள்ளார். இதனையடுத்து, காவலர்கள் இருவரும் அந்தப் பெண்ணை, வழி காட்டுவதாக கூறி மரங்கள் அடர்ந்த இடத்திற்கு அழைத்து சென்று பலவந்தமாக கற்பழித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் நள்ளிரவு 2 மணியளவில் கப்பன் பூங்கா போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், பெங்களூரூ கப்பன் பூங்காவின் காவலர்கள் இருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.

அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கப்பன் பூங்கா போலீசார், குற்றம்சாட்டப்பட்ட இரு காவலர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:–

பெங்களூரு கப்பன் பூங்காவில் வைத்து ஒரு பெண்ணை 2 காவலாளிகள் கற்பழித்து உள்ளனர். அந்த காவலாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கற்பழிப்பு சம்பவம் நடந்திருக்க கூடாது. அந்த பெண் டென்னிஸ் விளையாட வேண்டும் என்று கூறி, இரவு 9.30 மணியளவில் கப்பன் பூங்காவுக்கு வந்துள்ளார்.

இரவு 9.30 மணியளவில் ஒரு பெண் கப்பன் பூங்காவுக்கு வந்தது ஏன்? என்பது ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூருவில் நடக்கும் கற்பழிப்பு சம்பவங்களை தடுக்க அனைத்து நடவடிக்கையும் அரசு எடுத்து வருகிறது. என அம்மாநில அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.

இந்த நிலையில், இரவு 9.30 மணியளவில் டென்னிஸ் விளையாட வேண்டும் என்று கப்பன் பூங்காவுக்கு அந்த பெண் வந்தது குறித்து பிரச்சனையாக இருக்கிறது என்று அம்மாநில பரமேஸ்வர் கூறியதற்கு பல்வேறு மகளிர் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெண்கள் எந்த நேரத்தில் வேண்டுமானலும் சுதந்திரமாக வெளியே வரலாம். இரவு 9.30 மணிக்கு கப்பன் பூங்காவுக்கு வந்தது குறித்து அமைச்சர் பரமேஸ்வர் பேசியது கண்டனத்திற்குரியது என்று மகளிர் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, கர்நாடக பா.ஜனதா மேல்–சபை உறுப்பினரும், நடிகையுமான தாரா கூறுகையில், “பெண்கள் நள்ளிரவு 12 மணிக்கு நகைகள் அணிந்தபடி தனியாக சென்றுவிட்டு வீட்டிற்கு பத்திரமாக திரும்பி வந்ததால்தான் நாம் முழு சுதந்திரம் அடைந்து இருக்கிறோம் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால், ஒரு பெண் இரவு 9.30 மணியளவில் கப்பன் பூங்காவில் நின்றது பிரச்சனையாக இருக்கிறது என்று அமைச்சர் பரமேஸ்வர் பேசி இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

பெங்களூர் உள்பட மாநிலத்தில் பெண்கள் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டு வருகிறார்கள். இது கர்நாடக அரசு மற்றும் காவல்துறை தோல்வி அடைந்திருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. இரவு 9.30 மணியளவில் கப்பன் பூங்காவுக்கு செல்வது தவறு என்றால், பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டியது தான். கர்நாடகத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை,“ என்கிறார்.

பெங்களூரில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நடந்த மூன்றாவது பாலியல் பலாத்கார சம்பவம் இது. முன்னதாக, கால்சென்டரில் வேலை செய்துவரும் 22 வயது இளம்பெண் இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

அமைச்சருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த அதிமுகவினர் இருவர் நீக்கம்

புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் அதிமுக நிர்வாகி மற்றும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கெங்கையம்மாள் சொக்கலிங்கத்தை அமைச்சர் விஜய பாஸ்கர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்பட்டது

அதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடத்தினர்.இதனால் ஜாதிக் கலவரம் வெடித்தது பல பகுதிகளில் போக்குவரத்து இடையூறுகள், கல்வீச்சு என காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கும் இடையில் பெரும் பிரச்னை உருவானது. அதனால் முத்தரையர் சங்க நிர்வாகி செல்வகுமார் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற 1,525 பேரை கைது செய்த காவல்துறையினர்.
நேற்று கைது செய்தனர்.

இந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக செயல்பட்டு, ஜாதிக் கலவரத்தை உருவாக்கியதாக கூறப்படும், அதிமுக முக்கிய நிர்வாகிகள் இருவர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடு களுக்கும் முரணான வகையில் செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கறம்பக்குடி ஒன்றிய முன்னாள் செயலாளர் எம்.சொக்கலிங்கம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சி.கெங்கையம்மாள் ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர் என அறிவித்துள்ளார்.

தமிழக அரசு செலவிட்ட வெள்ளத் தடுப்பு நிவாரண நிதி ரூ. 600 கோடியில் ஊழல் : மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு நிவாரண பணிக்காக தமிழக அரசு செலவு செய்ததாக கூறப்படும், 600 கோடி ரூபாயில், ஊழல் நடந்துள்ளதா என, மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார் .

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அந்த மாவட்ட பகுதிகளை நேற்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கடலூர் புதுப்பாளையம், குறிஞ்சிப்பாடி கல்குணம் கிராமம் ஆகிய இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பார்வையிட்ட ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது வடகிழக்கு பருவமழை கடுமையாக இருக்கும்’ என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. அதனால் தான், இத்தனை பெரிய பாதிப்பு. ஏரிகள், கண்மாய்கள், ஆற்றுபடுகை களை பொதுப்பணித் துறை மூலம் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுத்துஇருக்க வேண்டும் ஆனால், செய்யவில்லை.

அமைச்சர் பன்னீர்செல்வமோ, மற்ற அமைச்சர்களோ, அதிகாரிகளோ, கொடநாடு சென்று, முதல்வரை சந்தித்தாவது, நிவாரண பணிகளுக்கு உடனடியாக ஏற்பாடு செய்திருக்கலாம். கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள், கொள்ளிடம் ஆற்றுப் படுகையில், வெள்ளத் தடுப்புப் பணிக்காக, 600 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது’ என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

நிவாரண நிதியை முறையாக செலவு செய்திருந்தால், மக்களை காப்பாற்றி இருக்கலாம். வெள்ளத் தடுப்பு நிதியில், ஊழல் நடந்துள்ளதா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல் பாகுபாடின்றி, நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். மருவாயில் தரைப்பாலத்துக்கு மேல் தண்ணீர் சென்றதை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின், பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையத்தில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து உதவிகளை வழங்கினார்.

இதுபற்றி தனது முகனூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஸ்டாலின், கடந்த சில தினங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 30க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்திருக்கிறார்கள். மரணம் அடைந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பருவத்தில் மழை பெய்யும் என்று தெரிந்திருந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கு எவ்வித சாக்குபோக்கும் கூறி அ.தி.மு.க. அரசு தன் கடமையில் இருந்து தப்பிக்க முடியாது.

மழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்குச் சென்று வெள்ளசேதப் பகுதிகளை பார்வையிட்டேன். தங்கள் துயரங்களை மக்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள். வடகிழக்கு பருவமழை வரும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் முன்கூட்டியே எச்சரித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத அ.தி.மு.க. அரசின் மீது மக்கள் ஆத்திரமாக இருக்கிறார்கள். அடிக்கடி வரும் இந்த வெள்ள சேதங்களை தடுக்க ஒரு நிரந்தர தீர்வை காணமுடியாத அ.தி.மு.க. அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை காண முடிந்தது.

அ.தி.மு.க. அரசோ, இதுவரை ‘வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக’ 600 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக சட்டமன்றத்திலேயே அறிவித்துள்ளது. ஆனால் அந்த பணிகள் எங்கே நடைபெற்றன?. அதன் பிறகும் ஏன் இவ்வளவு வெள்ளசேதங்கள் ஏற்பட்டது?. ஆகவே, வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக செலவு செய்த 600 கோடி ரூபாய் குறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், தங்கள் பயிரை இழந்த விவசாயிகளுக்கு போதிய நஷ்டஈடும் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வளவு மோசமான வெள்ள சேதங்கள் ஏற்படவிட்டு அமைதி காத்த அ.தி.மு.க. அரசின் பொறுப்பற்ற போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் அவரது முகனூல் பக்கத்தில் கூறியுள்ளார்.

43,200 முறை பலாத்காரம் செய்யப்பட்டதாக பாலியல் தொழிலில் சிக்கிய இளம்பெண் ‘‘திடுக்’’ தகவல்

 இளம்பெண்களை கடத்தி வலுக்கட்டாயமாக, பாலியல் தொழிலில் ஈடுபட வைப்பது ஆண்டுதோறும் மெக்சிகோவில், அதிகரித்து வருகிறது. கடந்த நான்காண்டுகளாக, தினந்தோறும் குறைந்தபட்சம் 30 பேராவது என்னை பலாத்காரம் செய்திருப்பார்கள் என்று மெக்சிகோ நாட்டின் டெனன்சிங்கோ பகுதியைச் சேர்ந்த பெண், ‘‘திடுக்’’ தகவல் கூறியிருப்பதோடு, சுமார் 43,200 முறை தான், பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறியிருப்பது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்டு தற்போது வழக்கறிஞராக பணியாற்றி வரும் கர்லா ஜெசிண்டோ என்ற 23 வயது பெண் சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்ள்ளதாவது:
வசதியான வாழ்க்கை ஏற்படுத்தித் தருவதா
க ஆசை காட்டி என்னை ஒருவன், டிலாக்ஸ்கலா மாகாணத்தில் உள்ள டெனன்சிங்கோவிற்கு அழைத்து சென்றான். மெக்சிகோவில் அங்குதான் பாலியல் தொழில் அதிகளவில் நடைபெறுவது எனக்குத் தெரியாது.

என்னை அழைத்துச் சென்றவனுடன் 3 மாதங்கள் தங்க வேண்டியதானது. அங்கு சென்ற பின்னர், நிலைமையை புரிந்து கொண்டேன். அங்கிருந்து தப்பிப்பது கனவிலும் நினைக்க முடியாதபடியாக இருந்தது. அதன்பின், பாலியல் தொழிலில் என்னை அவன் தள்ளினான். நான்காண்டுகளாக நான் பட்ட துயரங்கள், உலகில் எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது. காலை 10 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு வரை நரக வேதனை நீடிக்கும். பலமுறை சங்கிலியால் அடித்து, கீழே தள்ளி ஏறி மிதித்தும் என்னை கொடுமைப்படுத்தினர். இவ்வாறு கர்லா கூறியுள்ளார்.

ஆண்டு தோறும், 20,000 பெண்கள் பாலியல் தொழிலுக்காக மெக்சிகோவிற்கு கடத்தப்படுகிறார்கள் என சர்வதேச புலம்பெயர் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பிரபலமான பாலியல் பெண்களில் 10 பேரில் ஒருவர் டெனான்சிங்கோவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகஅரசு வழங்கிய அரிசி பையில் புழு !

 கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கிய நிவாரண அரிசி பையில் புழு இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை முடுக்கி விடுவதற்காக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் குழு கடலூர் வந்து, மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கடலூர், கெடிலம் ஆற்று நீர் உள்ளே புகுந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த புருஷோத்தமன் நகர் பகுதி மக்கள் அங்குள்ள கே.என்.சி கல்லூரியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை முதலில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள் அமைச்சர் குழுவின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி பைகளை நிவாரணமாக வழங்கினார்.

அதை வாங்கிய பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து, அந்த அரிசி பையை திறந்து பார்த்தபோது, அரிசிக்குள் ஏராளமான புழுக்கள் இருந்ததை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இது எங்களுக்கு எதுக்கு? நீங்களே எடுத்துகிட்டு போங்கள் என்று அதிமுக கட்சிக்காரர்களிடம் அரிசி பைகளை திருப்பி கொடுத்தனர்.

இதனால் அப்பகுதியில் கட்சிக்காரர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.