பிறப்பா.. வளர்ப்பா..?!
தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எதிராக ‘வேலை’ பார்க்கும் மக்கள் தொடர்பு அதிகாரி ?!
தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நேற்று (10-11-2015) காலை நடக்க இருந்த சைல்டு லைன் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு ஊடகங்களையெல்லாம் அழைத்த மக்கள் தொடர்பு அதிகாரி, செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்க வேண்டிய மாவட்ட ஆட்சித் தலைவரையே அழைக்காமல் வேடிக்கை காட்டியிருக்கிறார்.
தேசிய அளவில் 24 மணி நேரமும் குழந்தைகளுக்காக இயங்கிவரும் சைல்டு லைன்-(1098) சேவையை தருமபுரி மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடத்தப்பட்டுள்ள கூட்டங்களைப் பற்றியும், திட்டங்களின் செயல்பாடுகளைப் பற்றியுமான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று காலை 10.40க்கு நடக்க இருப்பதாக ஊடகங்களுக்கு தகவல் அனுப்பியிருந்தார் தருமபுரி மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோ.
செய்தியாளர்களர்களும் குறித்த நேரத்திற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துவிட்டார்கள். ஆனால், மதியம் 12 மணி வரைக்கும் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்திற்க்கான எந்த அறிகுறியும் இல்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் விவேகானந்தனோ வேறு வேலைகளில் பரபரப்பாக இருந்தார். ஒன்றும் புரியாத செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சென்று, செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் ? என்று கேட்க, என்ன செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம்? என்று முழித்திருக்கிறார் மாவட்ட ஆட்சித் தலைவர். ”சைல்டு லைன் சந்திப்பு கூட்டம் என்றுமக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோவரச்சொன்னார்” என்று செய்தியாளர்கள் விளக்கிச் சொல்லவும். ”அப்படியா..? என்னிடம் ஒன்றும் சொல்லவில்லையே. சைல்டு லைன் பற்றிய தகவல்கள் என்னிடம் இப்போதைக்கு இல்லை. வெள்ளப்பெருக்குதான் இப்போது பரபரப்பாக இருக்கிறது. அதைப்பற்றி வேண்டுமானால் பேசலாம்” என்று பேசி அனுப்பியிருக்கிறார்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தியே சொதப்பும் அளவுக்கா ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி இருப்பார் என்று மக்கள் தகவல் தொடர்புத்துறை வட்டாரத்தில் விசாரித்தால், மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோ மீது பல புகார்களை அடுக்குகிறார்கள் “இது ஒன்றும் தெரியாமல் நடந்த தவறு கிடையாது. மாவட்ட ஆட்சித் தலைவரை அழைக்காமல் விட்டுவிட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரியை முன்னிலைப்படுத்தி பேட்டி கொடுக்க வைப்பதுதான் அவருடைய நோக்கம். அதன் மூலம் மற்ற துறைகளில் உள்ள அதிகாரிகளையும் சரிகட்டிக்கொள்ள பார்க்கிறார். இதை எங்களால் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சொல்லமுடியவில்லை. எதாவது எதிர்த்துப் பேசினால் நான் அமைச்சர் பழனியப்பனின் ஆள் என்று மிரட்டுகிறார். ஆட்சித் தலைவருக்குத் தெரியாமல் பல வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
இது தொடர்பாக மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோவிடம் செய்தியாளர் ஒருவர் கேட்டபோது எனக்கு ரெண்டு நாளா காய்ச்சல், உடம்பு வேற சரியில்லை. நான்கு நாளைக்கு முன்னாடியே ஆட்சித் தலைவருக்கு தகவல் சொல்லிட்டோம். ஆட்சித் தலைவருக்கும் பி.சி.க்குமான கம்யூனிகேஷன் கேப்ல இப்படி ஆகிபோச்சு. மத்தபடி ஒன்னும் இல்ல. எப்போதாவது இப்படி நடக்குறது சகஜம்தானே” என்கிறார்.
இது தொடர்பாக விளக்கம்பெற மக்கள் தொடர்பு அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்ட செய்தியாளர் தருமபுரி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டார். ஆனால், மாவட்ட ஆட்சியர் செய்தியாளரின் கைப்பேசி அழைப்பை ஏற்கவில்லை.
மக்கள் தகவல் தொடர்புதுறையில் இருந்துகொண்டு கம்யூனிகேஷன் கேப் என்று காரணம் சொல்லி இனி என்ன என்ன வேடிக்கை காட்ட போகிறாரோ மக்கள் தொடர்பு அதிகாரி இளங்கோ…!
சிறையில் கைதி சோட்டா ராஜனுக்கு வெளிநாட்டு உணவுகள் வழங்கி கவணிக்கும் சிபிஐ அதிகாரிகள்
போலி பாஸ்போர்ட் உட்பட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜன், பாலியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு சிபிஐ காவலில் சிபிஐ தலைமை அலுவலகத்தின் தரைத்தள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.புது தில்லியிலுள்ள அவரை 10 நாட்கள் காவலில் எடுத்துள்ள சிபிஐ விசாரித்து வருகிறது.சிறையில் உள்ள சோட்டா ராஜனுக்கு, வெளிநாட்டு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன
வழக்கமாக விசாரணைக் கைதிகளுக்கு ரொட்டி, பருப்பு வகை மற்றும் ஒரு காய்கறி மட்டுமே அளிக்கப்படும். ஆனால் சோட்டா ராஜனுக்கு வெளிநாட்டு உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன. மும்பையில் இருந்தது வரை இந்திய உணவு வகைகளை உண்டு வந்த சோட்டா ராஜன், 27 வருடங்களுக்கு முன் வெளிநாடு தப்பிச் சென்ற பின், உணவுப் பழக்கத்தை முற்றிலும் மாற்றிவிட்டார்.
வேக வைத்த முட்டைகளுடன் கீரை வகைகள், பர்கர், சீஸ் சாண்ட்விச், கார்ன்பிளேக் ஆகியவற்றுடன் குளிர்ந்த காபி அல்லது ஜூஸ் ஆகியவற்றை விரும்பி உண்டு வருகிறார் சோட்டா ராஜன். எனவே, இந்த உணவு வகைகளை நட்சத்திர விடுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டு சோட்டா ராஜனுக்கு வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘ராஜனை நல்ல மனநிலையில் இருக்கும்படி கவனித்துக் கொண்டால்தான் அவரிடம் விஷயங்களைப் பெற முடியும். சிறையில் போரடித்து விடாமல் இருக்க நான்கு கான்ஸ்டபிள்களை வெளியில் இருந்தபடி பேசிக் கொண்டிருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் பலனாக கள்ளநோட்டு மாற்றுதல், தாவூத் இப்ராகிம் குறித்த தகவல்கள் போன்ற முக்கிய தகவல்கள் கிடைத்து வருகின்றன என்றனர்.
தாவூத் உள்ளிட்டோரால் சோட்டா ராஜன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அவரை அடைத்து வைத்துள்ள சிபிஐ தலைமை அலுவலகத் துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 200 தில்லி சிறப்புக் காவல்துறையினர், மத்திய பாதுகாப்புபடையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
பரவசம் தரும் பாம்புக் கணவாய்
![]() |
| பிளைட் ஆற்றுக் கணவாய் |
![]() |
| ஹேப்பி ரிவர் கேன்யன் |
![]() |
| காடிஷி டுபா அருவி |
![]() |
| காடிஷி ட்ரெய்ல் |
![]() |
| மரியெப்ஸ்காப் |
![]() |
| பாராகிளைடிங் |
சக பள்ளி மாணவனி்ன் மலத்தை அள்ள சொன்ன தமிழக அரசு பள்ளி ஆசிரியை கைது
நாமக்கல் மாவட்டத்தில் சக பள்ளி மாணவனி்ன் மலத்தை அள்ள வலியுறுத்திய தமிழக அரசு பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் அருகே ராமாபுரம் புதூரில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருபவன் சசிகரன் (வயது 7 ). அவனது சக பள்ளி வகுப்பு மாணவன் ஒருவன் மலம் கழித்ததாக கூறப்படுகிறது.
அந்த மலத்தை மாணவன் சசிகரனை சுத்தம் செய்ய பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி கூறியதாக கூறப்படுகிறது.
இதனை தனது பெற்றோரிடம் சசிகரன் கூறியுள்ளார். பள்ளி ஆசிரியையின் செயலை கண்டித்து அவரை கைது செய்ய நாமக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் சசிதரன் தந்தை வீராச்சாமி புகார் அளித்தார்.
இதை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆசிரியை விஜயலட்சுமியை கைது செய்ய உத்தரவிட்டார். மேலும் முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் விஜயலட்சுமியை தற்காலிக பணி இடைநீக்கம் செய்துள்ளார்.
மழையால் வீடு சேதம்
பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரி குமாரசாமிநாடார் தெருவில் வசித்து வருபவர் மாடசாமி(வயது 42) ஆட்டோ டிரைவர் . தற்போது நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் இவரது வீட்டின் ஒருபக்க சுவர் இடிந்து விழுந்துது. வீட்டில் உள்ளவர்கள் அருகில் இருந்த உறவினர் வீட்டில் இருந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, மேலும் இந்த சுவர் அருகில் உள்ள தங்கப்பாண்டிஎன்பவர் வீட்டின் சுவர் மீது விழுந்தது. இதில் அவரது வீட்டின் ஒரு சுவரும் விழுந்தது. சம்பவ இடத்தை வருவாய் துறையினர் பார்வையிட்டனர்.
அரசு கல்லூரி ஆசிரியர்கள் அலட்சிய போக்கால் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை: மறுகூட்டலில் முதல் மாணவனாக தேர்ச்சி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் இயங்கி வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த முஹம்மது அட்னான் ஹிலால்(17), தேர்வில் தோல்வி அடைந்த வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டான்.
நன்கு படிக்கும் மாணவனான ஹிலால், இயற்பியல் பாடத்தில் வெறும் 28 சதவீத மதிப்பெண்களை மட்டுமே பெற்றதாக இணையதளத்தில் முடிவுகளைப் பார்த்து கவலை அடைந்து ஆற்றில் விழுந்து கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டான்.
ஹிலாலின் முடிவால் கவலையில் ஆழ்ந்த அவரது தந்தை, மறுகூட்டல் செய்யுமாறு விண்ணப்பித்தார். இயற்பியல் விடைத்தாளை மறுகூட்டல் செய்தபோது, அதில் 48 மதிப்பெண்கள் அதாவது 70 சதவிதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹிலாலின் தந்தை, விடைத்தாளை அலட்சிய போக்காக திருத்திய ஆசிரியர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய காவல் துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாகக் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
புது மாபிள்ளையை காணவில்லை
பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்புரம் ரகுமானியபுரத்தை சேர்ந்தவ சுப்பிரமணியன் மகன் குத்தாலிங்கம் என்ற சங்கர் (29). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் ஆலங்குளம் அருகேயுள்ள குருவன்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவருக்கும் நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் கடந்த 7ம் தேதி சிவகாசியில் இருக்கும் தன் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்று வருகிறேன் என்று கூறி விட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
பெற்றோர்கள் தனது மகனை உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்களிடம் விசாரித்தும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து புகாரின் பேரில் பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தாமரைக்கண்ணன் (பொ) விசாரணை நடத்தி காணாமல் போன சங்கரை தேடி வருகிறார்.
மழை வெள்ள நிவாரண உதவி கேட்டால் தமிழகஅரசு போலீஸ் தடியடி நடத்துவதா? ராமதாஸ் கண்டனம்
மழை வெள்ள நிவாரண உதவி கேட்டால் தமிழகஅரசு போலீஸ் தடியடி நடத்துவதா? ராமதாஸ் கண்டனம்
தமிழகத்தில் கனமழையில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவிகள் கேட்டு சாலை மறியலில் கடலூர் மாவட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். போலீஸாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய தமிழக அரசு, அப்பணிகளை செய்யாததால் எழுந்துள்ள எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு 5 நாட்களாகியும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. கடலூர் மாவட்டத்தில் 500&க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கின்றன.
அந்த பகுதிகளில் இயல்பு நிலையை ஏற்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து அழைத்து வரப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்ட மக்களின் நிலை வன்னி கம்பி வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட தமிழர்களின் நிலையை விட மிக மோசமாக உள்ளது என்பது தான் உண்மை.
ஒரு நிவாரண முகாமில் 2000 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தால், அவர்களில் 500 பேருக்கான உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பால் கூட வழங்கப்படுவதில்லை என்பதால் பச்சிளம் குழந்தைகள் பசியில் துடிப்பது பரிதாபமாக உள்ளது. வெள்ளம் வடிந்த பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படாததால் அங்குள்ள மக்களால் இயல்பாக வாழ முடியவில்லை.
மழையால் ஏற்பட்ட வெள்ளமே இன்னும் வடியாத நிலையில், வீராணம் ஏரியில் பெருகி வரும் நீரை மாவட்ட நிர்வாகம் அவசர அவசரமாக திறந்து விட்டிருக்கிறது. வீராணம் ஏரி நீரை முறைப்படுத்தி திறந்து விட்டிருந்தால் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திருக்கலாம்.
ஆனால், சற்றும் பொறுப்புணர்வு இல்லாமல் வீராணம் ஏரி நீர் திறந்து விடப்பட்டதால் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நிலைமை மோசமடைந்திருக்கிறது. அவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான துணிசிராமேடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி சிதம்பரம் – காட்டுமன்னார்கோவில் சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
போராட்டம் நடத்திய மக்களிடம் அதிகாரிகளை அனுப்பி பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு, காவல்துறையினரை அனுப்பி தடியடி நடத்தியிருக்கிறது.
போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத் திறனாளி ஒருவரை காவல்துறை உயரதிகாரி ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கி, மிதித்து கைது செய்து அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழ்ந்த இடத்தை விட்டு அகதிகளைப் போல தங்கியிருப்பதும், எந்த நேரத்தில் பாம்புகளும், நச்சுப் பூச்சிகளும் கடிக்குமோ? என அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பதும், தாங்களும் பசியில் வாடி, தங்களின் குழந்தைகளும் பசியில் துடிப்பதைக் கண்டு வேதனைப்படுவதும் யாருக்கும் நேரக்கூடாத கொடுமைகள் ஆகும்.
இந்த துயரங்கள் எல்லாம் நாளுக்கு ஒரு மாளிகையில் வாழும் ஆட்சியாளர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அதனால் தான் உணவும், பாலும் கேட்டு போராட்டம் நடத்தியவர்களை கண்மூடித்தனமாக தாக்க வைத்துள்ளனர். எதிர்ப்புக் குரல் எழுப்பும் மக்களை தடி கொண்டு அடக்குவதற்கு பதிலாக அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மீண்டும் வருகிறார் தர்மதுரை: ரஜினி படத் தலைப்பில் விஜய் சேதுபதி!
சலீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஸ்டுடியோ 9 புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் RK சுரேஷ் தயாரிக்கும் படம் “தர்மதுரை”. இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார்.
இடம் பொருள் ஏவல் படத்திற்கு பிறகு இயக்குனர் சீனு ராமசாமி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார், ஒளிப்பதிவு- சுகுமார், இசை- யுவன் சங்கர் ராஜா.
இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதையடுத்து, முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இப் படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு டிசம்பர் 15 ம் தேதி முதல் தொடங்க உள்ளது.











