Home Blog Page 5962

ஓகோ இதுதான் தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் திடீர் திடீர் என உணர்ச்சி வசப்படும் காரணமா ?

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலத்து கொள்ளும் சில நிகழ்சிக்களில் திடீர் திடீர் என மிகுந்த கோபத்துடன் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் அடைந்து ஒரு சிலரை சில நேரங்களில் எப்போதாவது தாக்குதல் நடத்துவதை அனைவரும் அறிந்ததே.

அதேபோல் இன்று விஜயகாந்த் கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்க்க சென்ற போது தேமுதிக கட்சியியை சேர்ந்த பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் சிவகொழுந்து மற்றும் விஜயகாந்த்தின் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக இன்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜயகாந்த் தாக்கிய சம்பவம் பெரும்பாலன ஊடகங்களில் அடிக்கடி வெளியானது. மேலும் சமூக ஊடகங்களிலும் வைரலாக பரவியது.

அவ்வாறு முகனூலில் பரவிய விஜயகாந்த் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்தான பலரது பதிவில் பலர் பல்வேறு கருத்துகளை பதிவிட்டனர்.

தே.மு.தி.க.தலைவர் விஜயகாந்த் திடீர் திடீர் என ஒரு சிலரை தாக்குதல் நடத்தும் காரணம் குறித்து மாலிக் அன்சாரி எனும் பெயர் கொண்ட அவரது முகனூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் தே.மு.தி.க கட்சியியை சேர்ந்தவராக இருக்க கூடும் .

அந்த பதிவில் மாலிக் அன்சாரி கூறியுள்ளதாவது :-

‪#‎ ஊடகங்களுக்கு நன்றி…

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் எம் தலைவர்‪#‎மனிதநேயர்_கேப்டன்‬ அவர்கள் பஞ்சத்தில் சிக்கிய ‪#‎கடலூர்‬மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை அள்ளி தந்து ஆறுதல் கூறிக்கொண்டிருந்தார், கழக தோழர்கள் அனுப்பிவைத்த புகைப்படத்தை வைத்து தான் அறிந்துக்கொண்டோம்….

‪#‎கேப்டன்‬ அவர்கள் வழங்கிய பொருள்களை ‪#‎மக்கள்_மகிழ்ச்சி‬பொங்க வாங்கிக்கொண்டார்கள் என்று எந்த ஊடகமும் தெரிவிக்கவில்லை…
ஆனால்…

திடீர் என்று ‪#‎மக்கள்_அதிர்ச்சி‬ என்று முக்கிய செய்தி ஓடுகிறது அனைத்து ஊடகங்களிலும்…

காரணம் ‪#‎கேப்டன்_அடித்தாராம்‬…

அள்ளி தந்தை காட்டாத ஊடகம்…

ஆறுதல் சொன்னபோது காட்டாத ஊடகம்…

இப்போது காட்டுகிறது “கேப்டன் அடித்ததால்”…

மக்களின் உயிரை காப்பாற்றிய போது காட்டவில்லை…

எங்கள் எம்எல்ஏ உயிரை பணயம் வைத்து கேப்டன் அவர்கள் Action செய்த உடன் காட்டுகிறான் ஊடகம்…

கேப்டன் அவர்களின் தொண்டு உள்ளத்தை உலகத்திற்கு காட்ட உயிரையும் பணயம் வைக்க தயங்காதவர்கள் ‪#‎தேமுதிகவினர்‬… ‪#‎நன்றி‬…மாலிக் அன்சாரி. என கூறியுள்ளார்.

ஓகோ இதுக்குதான் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலத்து கொள்ளும் சில நிகழ்சிக்களில் திடீர் திடீர் என மிகுந்த கோபத்துடன் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசம் அடைந்து ஒரு சிலரை சில நேரங்களில் எப்போதாவது தாக்குதல் நடத்தும் காரணமா ? சூப்பரோ சூப்பர்‬…
இதுவும் நல்லா வழியா தானே இருக்கு‬…!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிப்பதாக பகல் கனவு காண்கிறது : குஷ்பு கடும் தாக்கு

தமிழகத்தில்பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடிப்பதாக பகல் கனவு காண்கிறது. அது நடக்கப்போவதில்லை. தமிழகத்தில் எப்போதும் பாரதிய ஜனதா கட்சி காலூன்றவே முடியாது என்று அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

குஷ்பு மேலும் கூறியதாவது நேருவின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக அறிவித்தார்கள். குழந்தைகளிடம் நவபாரத சிற்பி நேரு என்று கற்றுக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது மத்திய, மாநில அரசுகள் குழந்தைகள் தினத்தையே கொண்டாடுவதில்லை.

காந்தி, நேரு, வல்லபாய் பட்டேல் போன்ற தலைவர்கள் எல்லாம் வேற்றுமையில் ஒற்றுமை, சகிப்புதன்மை போன்றவற்றை சொல்லித் தந்தார்கள்.

ஆனால் இப்போது சகிப்புதன்மை குறைந்து விட்டது. பிரதமர் மோடி லண்டனுக்கு சென்று சகிப்பு தன்மையை பற்றி பேசுகிறார். அங்கு திரண்ட கூட்டம் அங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்த நாட்டுக்குத்தான் ஓட்டு போடுவார்கள். ஆனால் அவருக்கு ஓட்டுப்போட்ட இந்திய மக்களிடம் சகிப்புத்தன்மை பற்றி அவரால் பேச முடியவில்லை.

பாரதிய ஜனதா கட்சி மீது இந்தியா முழுவதும்பொது மக்கள் நம்பிக்கை இழந்து விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவதாக அந்த கட்சி கூறுவது பகல் கனவாகும். தமிழகத்தில் காலூன்றவே முடியாது என்று குஷ்பு கூறினார்.

சட்ட மன்ற உறுப்பினர் சிவகொழுந்தை சரமாரியாக தாக்கிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தேமுதிக கட்சியியை சேர்ந்த பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் சிவகொழுந்து மற்றும் விஜயகாந்த்தின் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனரை தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுமக்கள் மத்தியில் சரமாரியாக இன்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளை பார்க்க சென்ற போது பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் சிவக்கொழுந்துவை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் திடீரென சரமாரியாக அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விஜயகாந்த் பிரச்சார வாகனத்தின் ஓட்டுனரையும் விஜயகாந்த் கோபத்தில் உதைத்தது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்பட்டது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று பண்ருட்டி பெரியகாட்டுப்பாளையம், விசூர் ஆகிய இடங்களுக்கு சென்று வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் அப்பகுதி மக்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கடலூர் மாவட்டம் பெரியகாட்டுப்பாளையம் கிராமத்திற்கு வந்த விஜயகாந்த் மழை பெய்ய ஆரம்பிக்கவே அவசர அவசரமாக நிவாரண பணிகளை முடித்துவிட்டு தன்னுடைய பிரச்சார வாகனத்தில் ஏறினார். அப்போது மாவட்ட செயலாளரும், பண்ருட்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான சிவகொழுந்து விஜயகாந்த் பின்னாலேயே அதே வாகனத்தில் ஏறப்போனார்.

இதில் கடுப்பாகிப்போன விஜயகாந்த் சிவகொழுந்து தலையில் பளீர்…. பளீர்… என்று நான்கு வைத்துவிட்டு, நாக்கை நாக்கை கடித்துக்கொண்டு அதன்பின் கோபம் குறையாத அவர், ”சீக்கிரம் வண்டியை எடுடா” என்று வாகனத்தி ல்இருந்த ஓட்டுனரை காலால் உதைத்ததும் வேன் விர் என்று கிளம்பியது. இதைப்பார்த்த கட்சிக்காரர்களும், பொதுமக்களும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

விஜயகாந்த்திடம் சிவகொழுந்து அடி வாங்கியிருப்பதால் அடுத்து அண்ணனுக்கு அமைச்சராகும் யோகம் இருக்கிறது என்று சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிவகொழுந்தின் ஆதரவாளர்கள் பரவலாக பேசினர்.

பொதுவாக விஜயகாந்த் பொது இடங்களில் கோபப்பட்டு கட்சியினரை அடிப்பது வழக்கமாக ஒன்றுதான். அதேபோல் செய்தியாளர்களிடமும் பாயக் கூடியவர்..

இந்த நிலையில் கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஒரு வார காலம் கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்துக்கு சென்று யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டு நேற்றுதான் சென்னை திரும்பியிருந்தார் விஜயகாந்த்.

இந்நிலையில் மீண்டும் கோபத்துடன் சட்ட மன்ற உறுப்பினரை விஜயகாந்த் தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

365 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 48 பாலங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில், தமிழகத்தில் முழுவதும், 365 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பாலங்களை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் 41 ஆற்றுப் பாலம் மற்றும் மூன்று மேம்பாலம்; மூன்று ரயில்வே மேம்பாலம்; ஒரு ரயில்வே கீழ் பாலம் ஆகியவை 365 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாடகர் கோவனை விடுதலை செய்யக்கோரி புது தில்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட மூடு டாஸ்மாக்கை மூடு பாடலைப் பாடிய பாடகர் கோவனை விடுதலை செய்ய வலியுறுத்தி புது தில்லியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு பொறுப்பாளரும், பாடகருமான கோவன் தேசத்துரோக வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு அண்மையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி அவர் பாடிய பிரசார பாடலில் பிரச்னைக்குரிய கருத்துக்கள் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கோவனை விடுதலை செய்யக்கோரி நேற்று டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தெற்காசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பயிலும் சுமார் 50 மாணவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் தமிழ்நாடு இல்லத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.ஆர்ப்பாட்ட மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்தின் உள்ளே நுழையாதபடி அவர்களை சற்று தூரத்தில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அப்போது தமிழக அரசுக்கு எதிராக மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. நடைபெற்ற போராட்டத்தில் புது தில்லியில் படிக்கும் இலங்கையை சேர்ந்த சில மாணவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் தென்மேற்கு கடற்கரை பகுதியில் கடும் நிலநடுக்கம் : சுனாமி தாக்கியது

தென் மேற்கு ஜப்பானில் மகுரா ஒரு நகரில் இருந்து 100 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் நிலநடுக்கம் உருவானது.

தென்மேற்கு கடற்கரை பகுதியில் இன்று காலை ஏற்பட்ட கடும் நிலநடுக்கம் 7 ரிக்டரில் பதிவானதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் நகனோ ஷிமா தீவுகள், சத்சுனான் தீவுகள் மற்றும் சகோஷிமா மாகாணம் உள்ளிட்ட பகுதிகள் குலுங்கின.

நிலநடுக்கம் காரணமாக கசோஷிமா மற்றும் சத்சுனான் தீவுகளில் சுனாமி எச்சரிக்கை விடப் பட்டது. அதை தொடர்ந்து அங்கு சிறிய அளவில் சுனாமி அலைகள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் சிறிது நேரத்தில் அங்கு சுனாமி எச்சரிக்கை விலக்கி கொள்ளப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம், உயிர்சேதம் மற்றும் காயங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை.

2011-ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பான் வடகிழக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் அதை தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். புகுஷிமா அணு உலை வெடித்து கதிரியக்கம் வெளியானது என்பது குறிப்பிட தக்கது.

முதலமைச்சர் ஜெயலலிதாவை முகனூலில் அவதூறாக சித்திரித்து புகைப்படத்தை வெளியிட்ட வழக்கறிஞர் கைது

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை முகனூலில் அவதூறாக சித்திரித்து புகைப்படத்தை வெளியிட்டதாக கூறி நீலகிரியைச் சேர்ந்த வழக்கறிஞரை போலீஸார் 13-11-2015 நேற்று கைது செய்தனர்.

உதகையைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் ஸ்ரீதர். இவர், உதகை ஸ்ரீதர் என்ற பெயரில் முகனூல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளார். ஸ்ரீதர் கடந்த 10-ஆம் தேதி தனது முகனூல் பக்கத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சித்திரித்து புகைப்படம் வெளியிட்டு தீபாவளி வாழ்த்துச் செய்தியைப் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, உதகை நகர அதிமுக செயலாளர் டி.கே.தேவராஜ் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், ஸ்ரீதர் மீது அவதூறு, பெண்களை இழிவுபடுத்துதல், வன்கொடுமை உள்ளிட்ட நான்குக்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், ஸ்ரீதரை உதகை போலீஸார் வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்ரீதரை, உதகை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் ஸ்ரீதர் பார் கவுன்சிலில் உறுப்பினர் இல்லையென்றும் கூறப்படுகிறது. அதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தைகளை ஊனமாக்கும் குமட்டல் மாத்திரை

ஒரு பெண்ணின் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் என்பது கர்ப்பம் தரிப்பதுதான். அந்த பெண்ணை மட்டுமல்லாது, அவளின் குடும்பத்தையே சந்தோஷப் படவைக்கும் சங்கதி. அந்த கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் ஏற்படும் குமட்டலும் வாந்தியும் அந்த மகிழ்ச்சியான தருணத்தை மறக்கடித்துவிடுகிறது. 
 
 
4.bp.blogspot.com SDFPzQvlvFo Vi9lvQ0UrfI AAAAAAAAGKo DzPn pSocI8 s640 Women who took thalidomide while they were pregnant during the late 1950s gave birth to babies with malformed limbs - 2026
 
கர்ப்பிணிகளுக்கு இம்சைதரும் இந்த குமட்டலை கட்டுப்படுத்துவதற்காக 1957-ல்‘தலிடோமைட்’ என்ற மாத்திரை அறிமுகப்படுத்தப் பட்டது. தொடக்கத்தில் கர்ப்பிணிகளுக்கு வரப்பிரசாதமாக கருதப்பட்ட இது சிறிது காலத்திலேயே மோசமான விளைவுகளை தரத் தொடங்கியது. 
 
இந்த மாத்திரையை உபயோகித்த தாய்மார்களின் குழந்தைகள் பெரும்பாலும் கை கால் ஊனத்துடன் பிறந்தன. 1950-களின் இறுதியிலும் 60-களின் தொடக்கத்திலும் 46 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்புக்குள்ளாயின. இது தவிர கணக்கில் வராத குழந்தைகளின் எண்ணிக்கை ஏராளம். 
 
மாத்திரையின் வீரியம் கண்டு 1961-ல் இதன் உபயோகம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. சிறிது காலம் கடந்தப் பின் வேறு சில நோய்களுக்கு ‘தலிடோமைட்’ கொடுக்கத் தொடங்கினர். கேன்சர் நோய்க்கும் வலி நிவாராணியாகவும் அது பயன்ப்பட்டது.
 
இந்த மாத்திரை குழந்தைகளை ஊனப்படுத்த என்ன காரணம் என்று இங்கிலாந்தில் இருக்கும்அபிர்தீன் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அதன் முடிவில் தலிடோமைட்மாத்திரை ரத்தக் குழாய்களை அதிகமாக பாதிக்கிறது என்று கூறியது.
 
ஒரு பெண் கர்ப்பம் ஆக ஆரம்பித்த முதல் மூன்று மாதங்களுக்குத்தான் குமட்டல், வாந்தி போன்ற தொந்தரவுகள் அதிகம் இருக்கும். அப்போதுதான் இந்த மாத்திரையை அவர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு கை கால்கள் வளர தொடங்கும் நேரம். எனவே, தலிடோமைட் நேரடியாக அதை பாதிக்கிறது. அதனால்தான் பிறக்கும் குழந்தைகள் கை கால் வளர்ச்சி இன்றி பிறக்கின்றன என்று கண்டறிந்தார்கள். இருந்தாலும் தொழுநோய்களுக்கு தலிடோமைட்பாதுகாப்பாக பயன்படுத்தலாம் என்று கூறியது. 
 
2.bp.blogspot.com lvJlc2zwICM Vi9l R7oe7I AAAAAAAAGKw pED9zrFI1j8 s640 061205 1jpg - 2026
 
இந்த மாத்திரை குழந்தைகளை அரைகுறையாக பிறக்க வைப்பது மட்டுமல்ல. வேறு சில கேடுகளையும் உருவாக்குகின்றன. மலச்சிக்கல், நரம்பு பாதிப்பு, கால்களில் உள்ள ரத்த நாளத்தில் ரத்தம் உறைந்து போதல் போன்ற கோளாறுகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானிகள் இந்த மருந்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்கிறார்கள். 
 
இங்கிலாந்தில் உள்ள பிரிங்க்டனை சேர்ந்த ஜான் ராபர்ட் இவருக்கு 48 வயது ஆகிறது. இவருக்கு காது வளரவே இல்லை. இவரின் தாயார் இவர் கருவில் இருக்கும் போதுதலிடோமைட் மாத்திரையை உட்கொண்டாராம். 
 
ராபர்ட்டுக்கு இப்போது கண்களும் சரியாக தெரிவதில்லை. கண்ணாடி போட வேண்டும். கண்ணாடி போட காதுகளும் வேண்டுமே அது இல்லாததால் தனது டிஜிட்டல் கேமரா வழியாகவே அனைத்தையும் பார்க்கிறார். 
 
ஒரு நோய்க்கு தரும் மருந்து மற்றொரு நோய்க்கு காரணமாவது ஆங்கில மருத்துவத்தின் எழுதப்படாத விதி.
 
4.bp.blogspot.com Zx5BjXBahZA Vi9mPUw - 2026
 

 

பண்ணை வீட்டில் ஒருநாள்

ரபரப்பான இந்த உலகில் இருந்து விலகி, விளைநிலங்களுக்கு நடுவே… கறவை மாடுகளுக்கு மத்தியில்…வித்தியாசமாக விடுமுறையை கழிக்க நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது, சுர்ஜீவன். அழகான தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட ஓலைக்குடிசை வீடுகள் நமக்காகவே காத்திருக்கின்றன.

3.bp.blogspot.com 0uroo3rVgjQ VjIHAaYU 4I AAAAAAAAGLU qHr8RVysk I s640 surjivan resort1 - 2026
 

 

மார்பிள் தரையிலும், பளிங்கு படிகளிலும், கிரானைட் அறைகளோடு வாழ்ந்து பழகியவர்களும் சாணம் மெழுகிய மண் தரை வித்தியாசமான அனுபவத்தைத் தரும். பண்ணை வீடுகள் எப்படி என்ற அனுபவத்தை உணர்வுப் பூர்வமாக உணரலாம்.

வெறுமனே பண்ணை வீட்டில் தங்குவதோடு இந்த பயணம் முடிந்து விடாது… நம்மூர் மாட்டு வண்டிகள் போல் ஒட்டகங்கள் பூட்டிய வண்டிகளில் வலம் வரலாம். விவசாய வேலைகளை பார்வையிடலாம். பாறைகள் மீது ஏறலாம். ‘பாராகிளைடிங்’ பண்ணலாம். இப்படிப்பட்ட சாகஸங்களும் இங்குண்டு.
3.bp.blogspot.com xinFai6YHq4 VjIHPagjEBI AAAAAAAAGLc bhswIf0GGlc s640 surjivan resort hut2 - 2026
 
மேலும் பண்ணையில் விளையும், ஃப்ரெஷ் காய்கறி, வாசனைப் பொருட்களோடு தயாரான ரொட்டிகளையும் சாதத்தையும் சாப்பிட்டு மகிழலாம்.
போக்குவரத்து நெரிசலும், மக்கள் கூட்டமும் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று நினைப்பவர்கள் இங்கிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள குர்கான் நகருக்கு சென்று வரலாம். நாட்டிலேயே சிறந்த ஷாப்பிங் மால்கள் இங்கு இருக்கின்றன. இந்தப் பண்ணை வீடுகளில் தங்க குளிர்காலமே சிறந்தது.
எப்படி போவது?
ஹரியானா தலைநகர் சண்டிகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் மானேஸர் என்ற ஊரில் இந்த பண்ணை வீடுகள் இருக்கின்றன. சாலை வழியாக 6 மணி நேரத்தில் சென்று சேரலாம்.
எங்கு தங்குவது?
சுர்ஜீவன் பண்ணை வீடுகள் தங்குவதற்கு ஏற்ற இடம். ஒருநாள் இரவு தங்க ரூ.5,000-ல் இருந்து கட்டணம் பெறப்படுகிறது.

ஆட்சியை மாற்றிய மாணவர்கள் : உலகில் வேறு எங்கும் இப்படியொரு புரட்சி நடந்ததில்லை

 
மாணவர்கள் நினைத்தால் ஆட்சியை கூட மாற்றமுடியும் என்று உலகுக்கு உணர்த்திய நாடு இந்தியா. இந்த புரட்சி நடந்தது அசாம் மாநிலத்தில்.

1971-இல் நடந்த இந்திய பாகிஸ்தான் போரின் முடிவில் கிழக்கு பாகிஸ்தான் ‘பங்களாதேஷ்’ என்ற புதிய நாடாக உருவானது. போர் உச்ச கட்டத்தில் இருந்த போது ஏராளமான பங்களாதேஷ் வாசிகள் அசாமில் அகதிகளாக குடியேறினர். குடியேறியவர்கள் போர் முடிந்தும் அவர்களின் தாய்நாட்டிற்கு திரும்பவில்லை.

லட்சக்கணக்கான அகதிகள் இந்தியாவிலே தங்கிவிட்டதால் மண்ணின் மைந்தர்களான அசாமியர்களுக்கு வேலை கிடைப்பதில் பாதிப்பு ஏற்பட்டன. அதனால், அகதிகளாக வந்தவர்கள் மீண்டும் அவர்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையோடு உருவானதுதான் ‘அனைத்து அசாம் மாணவர் சங்கம்’.
a
இந்த மாணவர்கள் போராட்டம் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரம் அடைந்து, ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது. அகதிகள் அனைவரும் அடையாளம் கண்டு தாக்கப்பட்டார்கள். சுமார் 20 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். மாணவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் 7 ஆண்டுகளாக அனைத்து கல்லூரிகளும் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன.
மாநில அரசால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லை. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் மாநிலம் வந்தது. இந்த நிலையில் 1983-ம் ஆண்டு அங்கு சட்டமன்ற தேர்தல்கள் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதே வேளையில் அகதிகளாக வந்திருந்த 30 லட்சம் பேரும் அசாம் மாநில வாக்காளர் பட்டியலில் சேர்க்கப் பட்டிருந்தனர்.
இவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டுத்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், மீறி நடத்தினால் தேர்தலை புறக்கணிப்போம் என்று அசாம் மாணவர் சங்கம் அறிவித்தது. ஆனால், இதையெல்லாம் இந்திய அரசு காதில் வாங்கவில்லை. ராணுவ அடக்குமுறையோடு தேர்தலை நடத்தியது.
தேர்தலை புறக்கணிக்குமாறு மாணவர் சங்கம் எச்சரிக்கை விட்டது. வெறும் 32 சதவிகித வாக்குகளே பதிவானது. பெரும்பாலான வாக்குசாவடிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. தேர்தல் நடந்த 109 தொகுதிகளில் 91 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது.
அரசுக்கு எதிரான மாணவர் போராட்டம் தீவிரமடைந்தன. தினமும் சராசரியாக 25 பேர் கொல்லப்பட்டனர். 1984-ல் இந்திரா காந்தி மறைவிற்கு பின், பிரதமராக பொறுப்பேற்ற ராஜீவ் காந்தி, அசாம் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக மாணவர் சங்கங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். அதன்படி 10 லட்சம் பேர்களின் வாக்கு பறிக்கப்பட்டது. காங்கிரஸ் பதவி விலகியது.
20100827271704101
மீண்டும் 1985-ல் தேர்தல் நடத்தப்பட்டது. ‘அசாம் கனபரிஷத் கட்சி’, மொத்தம் உள்ள 126 தொகுதிகளில் 66 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. 66 பேரில் 65 பேர் திருமணம் ஆகாத இளைஞர்கள். அனைவரும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
உலகில் வேறு எங்கும் இப்படியொரு புரட்சி நடந்ததில்லை. மாணவர்களின் போராட்டத்தால் ஆட்சியை மாற்றி காட்டியதும் இல்லை. 

அசாம் கன பரிஷத் தேர்தல் அரசியலை ஏற்று ஆட்சிக்கு வந்ததும் பரிதாபமாக சீரழிந்து போயின. அதன் பின்னடைவுகளிலிருந்து அசாம் மக்கள் இன்னும் மீட்கப்படவில்லை.