Home Blog Page 5966

தூய்மை பணியாளர்களுக்கு மிதிவண்டி

பாவூர்சத்திரம் அருகேயுள்ள குலசேகரப்பட்டி ஊராட்சியில் தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகள் அள்ளுவதற்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. குலசேகரப்பட்டி ஊராட்சி தலைவர் குறும்பலாப்பேரி இளங்கோ தூய்மை பணியாளர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும்  ஊராட்சி செயலாளர் வல்லாள மகாராஜன் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சிறுபிள்ளைத்தனமாக பேசும் கமல் – தர்ம சங்கடத்தில் ரசிகர்கள் : ராம கோபாலன்

இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் கடவுள் குறித்த நடிகர் கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் நேற்று தனது 61வது பிறந்தநாளைக் கொண்டாடினார். சென்னையில் நடைபெற்ற பிறந்தநாள் நலத்திட்ட விழாவில் கலந்து கொண்ட கமல், சகிப்புத்தன்மை குறித்த விமர்சனம், மாட்டுக்கறி விவகாரம், கடவுள் நம்பிக்கை, அரசியல் பிரவேசம் என பலவற்றைக் குறித்துப் பேசியிருந்தார்.

இந்நிலையில், கமலின் கடவுள் நம்பிக்கை குறித்த பேச்சுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சித் தலைவர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திரைப்பட கலைஞர் கமலஹாசனின் திறமையை பாராட்டுகிறோம், நேற்று அவருடைய பிறந்த நாளைக்கு நம்முடைய வாழ்த்தைத் தெரிவிக்கிறோம். நேற்று அவரது பிறந்தநாள் நிகழ்ச்சியில் அவர் பேசிய இருப்பது குழந்தைத்தனமாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது. தான் கூறிய கருத்து தனக்கே உடன்பாடு இல்லாதது என்பதை அறியாதவர், தன்னை பகுத்தறிவுவாதி என்று கூறியிருப்பது வேடிக்கையானது.

தன்னை பாராட்டி அளித்த இறை வடிவ சிலையால் எந்த பயனும் இல்லை, அதனை உருக்கி பயன்படுத்துவதாக கூறியிருக்கிறார். ஒரு கலைஞருக்கு, அந்த சிலாரூபத்தில் உள்ள கலை வடிவத்தை ரசிக்க தெரிய வேண்டமா? பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டாமா? அதில் உள்ள தங்கத்தின் மதிப்பு மட்டும் தெரிந்தால் எப்படி?! எந்தவொரு கலையைப் போற்ற வேண்டும், கலையே தெய்வீகமானது இல்லையா?

இறைவன் பற்றிய அவரது கருத்தில் எத்தனை குழப்பம் ஏன்? உலகில் எத்தனை வேறுபாடு ஏன் என இறைவனைக் கேட்பேன் எனும் கமலஹாசன், தான் எப்படியிருக்கிறாரோ அப்படியே எல்லா படங்களிலும் நடித்தால்.. எப்படியிருக்கும்.. அவருக்கே சலித்துவிடாதா? பார்ப்பவர்கள் நிலை? இவர் தசாவதாரம் எடுத்து, பத்து மாறுபட்ட வேடத்தில் நடிக்கலாம், ஆனால் உலகில் எந்த வித்தியாசமும் இருக்கக்கூடாது என்பது வேடிக்கையானது. ஐந்து விரலும் ஒன்றுபோல் இருந்தால் எதுவும் செய்ய முடியாது. இவரது படத்தில் எல்லா பாத்திரங்களும் கதாநாயகர்களாகவே நடித்தால் எப்படியிருக்கும்?

கடவுளுக்கு எல்லா மொழிகளும் தெரியும், மௌனமும் புரியும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. அப்படியிருக்க இறைவனுக்கு தமிழ் தெரியாது என்று இவராக புரிந்துகொண்டது சிறுப்பிள்ளைத்தனமானது. அதுமட்டுமல்ல இவர் வேற்று மொழியில் நடிக்கும்போது அந்த மொழியை அறிந்துகொள்வதில்லையா? அப்படி இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன். இறைவனுக்கு செய்யப்படும் வழிபாட்டு மொழியை வைத்து அரசியல்வாதிபோல பேசி குழப்புவானேன்?

இப்படி அவர் பேசிய ஒவ்வொரு கருத்தும் அவருக்கே உடன்பாடாக இருக்காது என்பது அனைவருக்கும் புரியும். பிறந்த நாளில் இப்படி பேசி, தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரது பிறந்த நாளில் அவருக்கு எல்லோரும் வாழ்த்து கூறும்போது, ஏன் இப்படி பேசி தனது ரசிகர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறாரே என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

விருதைத் திருப்பித் தரும் விஷயத்தில் தெளிவாக அவர் கருத்து கூறியிருப்பதை வரவேற்கிறோம். விருது அறிஞர்களால், கலைஞனின் திறமைக்கு தந்ததாக இருக்கும்போது அதனை திருப்பி அளிப்பது என்பது விருதிற்கு நம்மைத் தேர்ந்தெடுத்தவர்களை அவமதிப்பதாகும் என்று கமல்ஹாசன் கூறியிருப்பதை வரவேற்கிறோம், பாராட்டுகிறோம்’ என ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

 

மோடியின் மனைவிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு

 பிரதமர் நரேந்திர மோடி மனைவி யசோதா பென் மோடி விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால், பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது.

திருமணம் தொடர்பான சான்றிதழ் அல்லது கணவருடன் சேர்ந்து அளிக்கும் அபிடவிட் இணைக்கப்படாத காரணத்தினால் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய பாஸ்போர்ட் அலுவலர் கான் கூறியுள்ளார். யசோதா பென் மோடி வெளிநாட்டில் வசிக்கும் குடும்ப நண்பர்களையும் உறவினர்களையும் சந்திக்க செல்வதற்காக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார்.புதிய பாஸ்போர்ட் சட்டப்படி, புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்பவர்கள், திருமணம் செய்திருந்தால், அது தொடர்பான ஆவணம் இணைக்கப்பட வேண்டும்.

பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக யசோதா பென் சகோதரர் கூறுகையில், எங்கள் குடும்ப வெளிநாட்டில் நண்பர்கள் நிறைய பேர் வசிக்கின்றனர். அவர்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதற்காக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தோம். ஆனால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார் .

மேலும் பாஸ்போர்ட் பெற, சட்ட வழிகள் ஏதும் உள்ளதா என ஆராய்ந்து வருகிறோம் என்றும் பாஸ்போர்ட் பெறுவது அடிப்படை உரிமை என பிரதமர் நரேந்திர மோடி மனைவி யசோதா பென் மோடி கூறினார்.

நொந்து போயிருக்கிற மக்கள் மீது வரி விதித்து பா.ஜ.க அரசு கஜானாவை நிரப்ப தாக்குதல் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

 விலைவாசி உயர்வால் நொந்து போயிருக்கிற மக்கள் மீது கலால் வரியை விதித்து அரசு கஜானாவை நிரப்புவது மக்கள் விரோத நடவடிக்கை என்று மத்திய அரசுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது மலிவான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி, ஆட்சியில் அமர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் சாயம் ஒன்றரை ஆண்டு காலத்திலேயே வெளுத்துவிட்டது. சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை மே 2014-ல் காங்கிரஸ் ஆட்சியின் போது 115 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ரூ.74.60 காசாக இருந்தது. டீசல் விலை ரூ.60.05 ஆக இருந்தது. தற்போது பா.ஜ.க. ஆட்சியில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 47 டாலராக குறைந்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை 60 சதவீதம் குறைத்திருக்க வேண்டிய பாரதிய ஜனதா கட்சியின் மோடி அரசு மேலும் 4 முறை கலால் வரியை விதித்து அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.16, டீசலுக்கு 40 காசுகள் கலால் வரி விதித்திருக்கிறது.

கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை கலால் வரியை 4 முறை உயர்த்திய காரணத்தினால் ரூ.20 ஆயிரம் கோடி பா.ஜ.க. அரசுக்கு கிடைத்திருக்கிறது. மக்களுக்கு போய்ச் சேர வேண்டிய பயன்களை எல்லாம் கலால் வரி விதித்து அரசு கஜானாவை நிரப்புவதைவிட மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துபவர்களுக்கு வருமான வரம்பு விதிக்கப்படுவதோடு, கார், இரண்டு சக்கர வாகனம், வீடு வைத்திருக்கிற எவருக்கும் சமையல் எரிவாயு மானியம் வழங்குவது ரத்து செய்யப்படும் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். இது ஏற்கனவே விலைவாசி உயர்வால் நொந்து போயிருக்கிற மக்கள் மீது அரசு மிகப்பெரிய தாக்குதலை தொடுத்திருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை மக்கள் மீது சுமத்தாமல் ஆண்டுக்கு 2 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக மத்திய காங்கிரஸ் அரசு வழங்கி வந்தது. ஆனால் பாரதிய ஜனதா கட்சி அரசோ அதை ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்து மக்களின் சுமையை அதிகரித்திருக்கிறது. இந்த நடவடிக்கைகளை மத்திய பாரதிய ஜனதா கட்சி மோடி அரசு திரும்பப் பெறவில்லையெனில் கடும் கொந்தளிப்பான சூழலை மக்களிடையே சந்திக்க நேரிடும் என எச்சரிப்பதாக
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பீகாரில் நிதீஷ்- லாலு கூட்டணி ஆட்சி ! : பாஜகவை விரட்டியடித்து பாடம் புகட்டிய பொது மக்கள்

பீகார் மாநில அளவிலான பாஜக தலைவர்களை முன்னிறுத்தாமல் தன்னையே முன்னிறுத்தி, ஏதோ தனக்கும், நிதீஷ் குமாருக்கும்தான் நேரடி மோதல் என்பதுபோல காட்டிக் கொண்டார் பிரதமர் மோடி. அதுவே அங்கு பாஜகவை வீழ்த்த முக்கியக் காரணம் என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு துவங்கி உள்ளது. இதில், ஓட்டு எண்ணிக்கை துவங்கிய நேரத்தில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்தது . 10 மணிக்கு மேல் நிதீஷ் – லாலு கூட்டணி 170 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க 122 இடங்களி்ல் வெற்றி பெற வேண்டும்.

மாலை 5 மணி நிலவரப்படி பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 56 இடங்களிலும், நிதிஷ்-காங்., கூட்டணி 179 இடங்களிலும், மற்றவை 6 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.

பீகாரில் தவறான முகத்தை முன்வைத்து தேர்தலைச் சந்தித்தது பாரதிய ஜனதா கட்சி. அந்தத் தவறான முகம் பிரதமர் மோ[டி. சுஷில் குமார் மோடியைத்தான் அவர்கள் முன்வைத்து தேர்தலைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் தவறான மோடியை முன்வைத்து இப்போது மண்ணைக் கவ்வியுள்ளனர்.

இது பிரதமருக்கும், ஒரு முதலமைச்சருக்கும் இடையிலான மோதலாக மாறி விட்டது. இதில் பிரதமர் வீழ்த்தப்பட்டு முதல்வர் வென்றுள்ளார். இது பிரதமருக்கு பெரும் மானக்கேடு.

ஒரு மாநிலத் தேர்தலில் இப்படி நடைபெற்றது இதுவே முதல் முறையாகும். பிரதமர் மோடி, உள்ளூர் தலைவர்களைத்தான் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பீகார் தேர்தலில் முன்னிறுத்த வேண்டும். ஆனால் அவரை நிதீஷை நேரடியாக எதிர்த்தார். அவருக்கும், நிதீஷுக்கும் நேரடி மோதல் போல காட்டிக் கொண்டார். இது தவறாகும்.

987ம் ஆண்டும் இதுபோல நடந்தது. அப்போது மேற்கு வங்கத் தேர்தலில் அப்போதைய முதல்வர் ஜோதிபாசுவை எதிர்த்து தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார் அப்போதை பிரதமர் ராஜீவ் காந்தி. அவரது பிரசாரத்தால் காங்கிரஸுக்கு 5 சதவீத வாக்குகள் கூடுதலாக கிடைத்தன. ஆனால் ஜோதிபாசு 6 சதவீத கூடுதல் வாக்குகளைத் திரட்டி வென்று விட்டார்.

இப்போது பீகாரிலும் அதுவே நடந்துள்ளது. உள்ளூர் தலைவர்களைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும். ஆனால் மோடியே நேரடியாக பீகாரில் பிரசாரம் செய்தார். அவருக்கும் நி்தீஷுக்கும்தான் நேரடி மோதல் என்பதைப் போல காட்டிக் கொண்டார். உள்ளூர் தலைவர்களை அவர் மதிக்கவில்லை. அது மிகப் பெரிய தவறாகும். மாநிலத் தேர்தலில் மாநிலத் தலைவர்கள்தான் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். மாநில முகம்தான் முக்கியமானது. அப்படிப் பார்த்தால் சுஷில் குமார் மோடியைத்தான் பிரதானப்படுத்தியிருக்க வேண்டும் பாஜக. ஆனால் தவறான மோடியை முன்னிறுத்தி வீழ்ந்துள்ளனர்.

பீகார் தேர்தல் அத்தனை எதிர்க்கட்சிகளுக்கும் பாடமாகும். இதிலிருந்து அவர்கள் பாடம் கற்க வேண்டும். நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். விதம் விதமான கூட்டணிகளால் பலம் கிடைக்காது. காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி அமைய வேண்டும் என்று இல்லை. ஆனால் ஒ்ருங்கிணைந்த கூட்டணி அவசியம் என்பதையே பீகார் தேர்தல் உணர்த்துகிறது.

இருப்பினும் காங்கிரஸ் நாடு முழுவதும் ஆதரவை வைத்துள்ளது. நாடு முழுவதும் தொண்டர்களை வைத்துள்ளது. நிதீஷ் குமார் அப்படி இல்லை. பீகாரைத் தாண்டி அவரால் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது. இதேபோலத்தான் பல பிராந்தியக் கட்சிகள் உள்ளன. அவை அந்தந்த மாநிலத்தில் பலம் வாய்ந்தவை. அவை அனைத்தும் கை கோர்க்க வேண்டும். காங்கிரஸ் அதிக மாநிலங்களில் ஆதரவு வைத்துள்ளதால் அக்கட்சி கூட்டணிக்குத் தலைமை தாங்கலாம்.

பீகார் தேர்தல் முடிவை நான் ஏற்கனவே கணித்திருந்தேன். மோடியும், ஷாவும் விரட்டப்பட்டுள்ளனர். பீகார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விரட்டியுள்ளது என்று கூறியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர அய்யர்

 

செம்மர கடத்தலை தடுக்க போலீஸ் மோப்ப நாய்களுக்கு பயிற்சி

 

செம்மரங்களை கடத்தல்காரர்கள் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது ஆந்திர அரசு .

ஆந்திர மாநிலம் சேஷால வனப்பகுதியில் இதுவரை 150–க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களை கைது செய்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல சிறப்பு படை பிரிவுகளை ஏற்படுத்தி கண்காணித்த போதும் செம்மரக்கட்டை கடத்தலை காவல் துறையினரால் முழுமையாகக் கட்டுப்படுத்த முடிவதில்லை.

கடத்தல்காரர்கள் செம்மரங்களை வெட்டி வனத்திலோ அல்லது வனத்தின் அருகிலுள்ள விவசாய நிலங்களிலோ பல அடி ஆழத்தில் புதைத்து வைக்கின்றனர். போலீசாரின் கண்காணிப்பு குறையும்போது அவற்றை வெளியே எடுத்த கடத்தி வருகின்றனர். பல அடி ஆழத்தில் புதைத்து வைக்கும் செம்மரக்கட்டைகளை சிறப்பு படை அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

எனவே காவல் துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து அதன் மூலம் செம்மரக் கடத்தலை தடுக்க தற்போது ஆந்திர அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக 2 மாத வயதுள்ள நாய்களை தேர்ந்தெடுத்து அதற்கு 6 மாத காலம் பயிற்சி அளித்து செம்மரக்கடத்தலை தடுக்கும் பணிகளில் பயன்படுத்த உள்ளனர். வனத்துறையினர் ரோந்தில் ஈடுபடும் போது உடன் பயிற்சியளித்த மோப்ப நாய்களை அழைத்து சென்றால் அவை செம்மரங்களின் வாசனையை கொண்டு பதுக்கி வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடும்.

சோதனை சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களில் செம்மரம் கடத்தப்பட்டாலும் போலீஸ் மோப்ப நாய்கள் கண்டறிந்துவிடும். இந்த நாய்களுக்கு ஹைதரபாத் அருகிலுள்ள விகாரபாத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இன்னும் 8 மாதத்தில் இந்த நாய்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் என்று ஆந்திர காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார்

 

முதலமைச்சர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் தங்கியிருந்து அரசு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை சென்னை திரும்பினார்.

கோடநாட்டில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்ட அவர் மாலை சுமார் 4 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் தனது போஸ் இல்லத்துக்கு சென்றடைந்தார்.

முன்னதாக கடந்த மாதம் அக்டோபர் 14 ஆம் தேதி சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோயம்புத்தூர் சென்ற ஜெயலலிதா, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு சென்றார்.

சுமார் 3 வார காலம் அங்கிருந்தபடியே, முதலமைச்சர் ஜெயலலிதா அரசுப் பணிகளை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார்

 

முதலமைச்சர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் தங்கியிருந்து அரசு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை சென்னை திரும்பினார்.

கோடநாட்டில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை புறப்பட்ட அவர் மாலை சுமார் 4 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் தனது போஸ் இல்லத்துக்கு சென்றடைந்தார்.

முன்னதாக கடந்த மாதம் அக்டோபர் 14 ஆம் தேதி சென்னையில் இருந்து தனி விமானத்தில் கோயம்புத்தூர் சென்ற ஜெயலலிதா, பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோடநாடு சென்றார்.

சுமார் 3 வார காலம் அங்கிருந்தபடியே, முதலமைச்சர் ஜெயலலிதா அரசுப் பணிகளை கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம்

கீழப்பாவூர்  நகர 7 வது வார்டு காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசாரக்கூட்டம்  7 வது வார்டு தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது ,தியாகி வெள்ளப்பாண்டி நாடார் ,ஆறுமுக நயினார் ,முன்னாள் நகர தலைவர் சிவ சுப்பிரமணியன் ,சிவ சுப்பிரமணியன் முதலியார் ,காவை மாடசாமி ,சுப்பையா ,சங்கரநயினார் ,ராமர்,ஆகியோர் முன்னிலை வகித்தனர் வார்டு செயலர் கார்த்திக் செல்வன் வரவேற்றார் ,நகர தலைவர் சிங்க குட்டி (எ)குமரேசன்  தொகுபுரையாற்றினார் ,மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.டி.பி காமராஜ் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார் ,மாநில கலை இலக்கிய அணி தலைவர் ஆலடி சங்கரையா விழப் பேருரையாற்றினார் மற்றும் வட்டார தலைவர் எஸ்.ஆர்.பால்துரை,மாவட்ட பொதுச்செயலாளர் பொன் கணேசன் ,வெய்கை ரமேஷ் மாயவன் ,ராமகிருஷ்ணன் ,மாவட்டசெயலர் ஆறுமுகபாண்டி, வர்த்தக காங்கிரஸ் சுப்பிரமணியம் ,வட்டார தலைவர் தங்க ரத்தினம் ஆகியோர் உரையாற்றினார் ,நிகழ்சியில் கவுன்சிலர் ஐயாதுரை,வழக்கறிஞர் ஆனந்த்,குமார்,பாலசுபிரமணியன் ,மாரியப்பன் ,வடிவேல் முருகன்,ஆறுமுகச்சாமி உள்பட  பலர் கலந்துகொண்டனர் முடிவில் நகர காங்கிரஸ் செயலாளர் ஆறுமுகப் பாண்டி நன்றி கூறினார்

ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவில்

கீழப்பாவூர்  ஸ்ரீ ருக்மணி ஸ்த்யபாமா ஸமேத ஸ்ரீ வேணுகோபல கிருஷ்ண ஸ்வாமிதிருக்கோவிலில் தீபாவளி  அன்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ,தீபாராதனை மற்றும் பிரசாத விநியோகம் நடைபெறவிருக்கிறது  பூஜைக்கான ஏற்பாடுகளை அர்ச்சகர் ரவி பட்டாச்சாரியார் செய்து வருகிறார்